ஹாய் மை டியர் லவ்லி ஷாந்தி டியர் எப்படி இருக்கீங்க. உங்க கருத்து பார்த்து அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன்யா. ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் போதாது போதாது போதாது்.
"எதிரிகளின் அடுத்த நடவடிக்கையை கண்காணிக்க தவறி விட்டார்களா?" நல்ல கேள்வி... ஆனா ஃபன்கூவின் அடுத்த நடவடிக்கை என்னவா இருக்கும்னு இவங்களுக்கும் ஊகிக்க முடிந்திருக்காது இல்லையா ஷாந்தி. ஏதாவது நாட்டிற்கு ஆபத்து வரும் என்று பயந்துதான் அவங்கைள கொல்லவே முயன்றான். ஆனா இவர்கள் நினைத்த விளையாட்டு திசை திரும்பியதால் தான் விளையாட்டு திசை மாறிப் போனது. இதில் இதங்கனை சிக்கக் கூடாது என்பதால்தான் அவசர அவசரமாக அவளை வேற்று நாட்டுக்கு அனுப்ப முயன்றான். அதற்குப் பிறது அவர்களை ஒரு கை பார்க்க இவன் நினைத்திருந்தான்... ஆனால் இத்தனை விரைவில் ஃபன்கூவை மீட்க சதி நடக்கும் என்பதை ஊகிக்க யாராலும் முடிந்திருக்காதில்லையா.
"பிரதமர் அவ்விமானத்தில் செல்லும் போது அந்த அளவிற்கா பாதுகாப்பின்மை... " செம கேள்வி ஷாந்தி.
இங்கே கனடாவிற்கு இங்கிலாந்து பிரதமர் வரும்போது பாதுகாப்புப் பற்றி அந்தளவு யோசிக்க மாட்டார்கள். ஏன் என்றால், கனடா மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இடம் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களோடு இருவர் துணைக்கு வருவார்கள். அவ்வளவும்தான் அவர்களின் பாதுகாப்பு. தவிர ஹமில்ட்டன் விமான நிலையம், பியர்சன் போன்று பெரியதல்ல. அது ஆரம்பத்தில் தனியார் விமானநிலையமாக இருந்தது.. அண்மையில்தான் அதை சர்வதேச விமானநிலயமாக மாற்றியிருந்தார்கள். ஆனாலும் அதிகளவு தனியார் விமானங்கள் இங்கேதான் வந்திறங்கும். யாரும் இந்த விமானநிலையம் தீவிரவாதிகளின் வசம் செல்லும் என்று யோசித்திருக் கமாட்ார்க்ள. அவர்்களோடு வந்து காவலர்களாலும் எதுவும் செய்திருக்க முடியாது.
நீங்கள் சொல்வது ஒன்று சரி, அவருக்குப் பாதுகாப்பாக வந்தவர்களைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதை யோசிக்கவில்லை. நிச்சயமாக அதைத் திருத்தி விடுகிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி.