All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சந்தியா , சூர்யா வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்தவள் நேரம் தாழ்த்தாமல் ராஜேஷ்க்கு அழைத்தாள்
முதல் ரிங்கில் போனை எடுத்தவன் , சொல்லு சந்தியா சூர்யாவோட புது ப்ராஜெக்ட் டாகுமென்ட் கைக்கு வந்துடுச்சா, அத எப்போ எனக்கு அனுப்ப போற என ராஜேஷ் கேட்க
இப்போது சந்தியாவுக்கு சற்று எரிச்சலா இருந்தது..
என்ன ராஜேஷ் எப்போவும் உனக்கு ப்ராஜெக்ட் பிசினஸ் தானா அவன் கிட்ட என் நால பேச கூட முடியல ஏதோ சந்தேகம் வரல சூர்யாவுக்கு இல்லைனா இன் நேரம் என்ன உயிரோட விட்டு வைப்பானா…என சந்தியா ராஜேஷிடம் புழம்ப
ஹாஹாஹா கூல் பேபி …. நீ மாட்டினாலும் உனக்கு உதவ தான் அந்த பொண்ணு இருக்காளே அப்புறம் என்ன , ராஜேஷ் சமாதனம் செய்தான்
“இல்லை , ராஜேஷ் அவன் மதிகிட்ட இருந்த போன் கூட வாங்கி வச்சுட்டான் இனி அவள வச்சு நாம தப்பிக்க முடியும்னு எனக்கு தோன்றல..என சந்தியா நடந்த எல்லாவற்றையும் சொல்ல
நடந்த அனைத்தையும் பொறுமையாக கேட்ட ராஜேஷ் ” என்ன சொல்லுற சந்தியா அப்போ தப்பு எங்கையோ நடந்துருக்கு சந்தியா , அவனுக்கு உன்மேல சந்தேகம் வந்துர்ச்சு நினைக்கிறன் சொல்ல
” ராஜேஷ் … என சந்தியா அலறிவிட்டாள்..”
” ஆமா சந்தியா இல்லைனா சூர்யா மதியே இவ்வளோ இறுக்கி பிடிக்க வேண்டியே அவசியம் ..என்ன கிடக்கு..”
ராஜேஷ் அப்பிடி சொன்ன உடனே தான் சந்தியாவிற்கு நிம்மதி ஆனாது அதுக்கு அவள் ” இல்லை ராஜேஷ் அவனுக்கு என் மேல கோபம்.. நான் மதியே அவனை கல்யாணம் பண்ண சொன்னதுக்கு,,”
” ஆர் யு ஸூர்.. சந்தியா.. “ ராஜேஷ் உறுதியாக கேட்க
” ஹ்ம்ம் ஆமா ராஜேஷ்..”
” எதுக்கும் நீ கொஞ்சம் கவனமா இரு….”
” சரி ராஜேஷ் நீ சொன்ன மாதிரி கவனமா இருக்கேன்…. அப்புறம் அந்த புது ப்ராஜெக்ட் பத்தி என்னனு பார்த்து உனக்கு சொல்லுறேன்….என அவள் போனை வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை சூர்யா வீட்டை திரும்பி பார்த்துவிட்டு அவள் வீட்டுக்கு கிளம்பினாள் ”
இங்கே சூர்யாவுடன் மதி சண்டை போட்டு கொண்டு இருந்தாள்
” சந்தியா வெளியே சென்றவுடன்.. அவள் சென்று விட்டாளா இல்லை இன்னும் நிற்கிறாளா என மதி வேகமாய் சென்று எட்டி பார்க்க சந்தியா கிளம்பி செல்வது தேறியே அப்போது தான் அவளுக்கு நிம்மதியான மூச்சி வந்தது அதே வேகத்துடன் அவள் சூர்யாவிடம் வந்து எழுந்துரிங்க மிஸ்டர் சூர்யா இப்போ எதுக்கு அவ கிட்ட அப்பிடி சொன்னிங்க சூர்யா.. “
” அறைக்கு வந்து உறங்க ஆரம்பித்தவனை.. தலைஅனை கொண்டு தட்டி எழுப்பி.. இவ்வாறு கேட்க “
சூர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை ஹே மதி இப்போ எதுக்கு என்ன எழுப்பின தூங்க விடு ப்ளீஸ் என வான் உறங்க போக
” அது எல்லாம் அப்புறம் தூங்கிக்கலாம் நீங்க முதல நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க , ஏன் அப்பிடி சொன்னிங்க”
மெல்ல எழுந்து அமர்ந்தவன் என்ன ,எப்போ சொன்னேன் என அவன் கேட்க
“அதான் சந்தியா கிட்ட என அவள் சொல்ல”
சிறுது நேரம் அமைதி ஆனவன்… ஏதும் சொல்லாமல் மீண்டும் படுக்க போக.
“நான் கேட்டுகிட்டு இருக்கேன் நீங்க படுக்க போன என்ன அர்த்தம் அவள் கேட்டது பதில் சொல்லாமல் அவன் திரும்பி படுக்க , அவன் அருகில் நின்று இருந்த மதி தடுமாறி.. அவன் மீது விழுந்தாள்
இதை இருவரும் எதிர்பார்க்கவில்லை அவர்கள முகத்தில் தெரியே….
சூர்யா மெல்ல.. அவள் பக்கத்தில் திறம்ப அவள் படப்படப்பில்.. தன் கண்களை மூடி கொண்டாள்.. ..[ கடவுளே.. என்ன பண்ண போறான் இவன் என்று படபடப்பாக இருந்தது அவளுக்கு ] அவனோ .. இது ஏதும் அறியாமல் அவள் முகத்தில் இருந்த முடியே மெதுவாக ஒதிக்கி விட்ட படி அவளை மேலும் நெருங்கி ” ஹ்ம்ம் என்ன தெரியனும் என் பொண்டாடிக்கு”
” ஹ்ம்ம்..” அது ,அவளுக்கு இன்னுமே சூர்யா மாறிவிட்டான் என்று நம்ப முடியவில்லை அதுலயும் இன்றைக்கு அவன் பேசியது கேட்ட பின்பு இந்த சந்தேகத்தை கேட்டுவிட வேண்டும் என்று தான் அவளுக்கு தோன்றியது “
[ஏனென்றால் அவளை அவனின் ஒவ்வரு செயலும் பதித்து இருந்தது , ஏனோ காரணம் இல்லாமல் அவனை பிடித்து தொலைத்து அவளுக்கு ஆனால் எங்கே அவள் சென்று சொன்னாள் அவன் தவறாக எண்ணி விடுவானோ என்கிற தயக்கம் அவளை தடுத்து நிறுத்தியது ]
” ம் சொல்லு…” என அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து கேட்க
” அவள் கண் திறக்காமலே,” நீங்க தூங்க போறதுக்கும் , நான் வரதுக்கும் என்ன சம்பதம் எதுக்கு சந்தியா கிட்ட அப்படி சொன்னிங்க அவ நம்மள பத்தி என்ன நினைச்சு இருப்பா”
” என்ன நினைச்சா எனக்கு என்ன…நான் என் வைப் தானே கூப்பிட்டேன் அதுவும் நமக்கு நடுவுல வர அவளுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை நானும் குடுக்கல இத நீ புரிஞ்சுக்கணும் மதி சற்று எரிச்சல் உடன் சூர்யா சொல்ல
அவனது கோபம் கண்டு காணமல் மதி ‘ ஏன்…” கேள்வியே கேட்டாள்
” ஏன்னு உனக்கு தெரியாதா ”
“இது தான் சமயம் என்று மதி, இப்போ இப்பிடி சொல்லுறிங்க ஆனா நீங்க அவளை தானே காதாலிச்சிங்க அவள் உங்கள ஏமாத்தின உடனே அவளை தண்டிக்க முடியாமல் தானே என்னை அந்த பாடு படுத்துனிங்க , இப்போ வந்து என் பொண்டாட்டி அப்பிடி இப்பிடி சொன்னா எத நான் நன்புறது , ஆதங்கத்துடன் மதி கேட்டு விட
அதை கேட்டு சூர்யா , என்ன சொன்னா இவள் மனம் குளிரும் , அதானே முதல் எபிசோட்ல இருந்து வில்லனாவே நம்மள காட்டிகிட்டு இப்போ நான் தான் டி உன் ஹீரோன்னு சொன்னா எப்பிடி நம்புவா என்று யோசித்தான் , மறுப்பக்கம் தன் மீதே அவனுக்கு வெறுப்பாக இருந்தது , இருந்தாலும் அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டியே நிலையில் அவன் இருக்க , மெல்ல அவளிடம் பேச ஆரம்பித்தான்
மதியும் அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஆவலுடன் அவன் முகம் பார்த்து இருக்க
என்ன என்ன சொன்ன இவள் மனம் குளிரும் என்று சூர்யாவுக்கு யோசனையாக இருந்தது.. மறுப்பக்கம்… அந்த தன் மீதே….வெறுப்பாக இருந்தது..
இருந்தாலும் விளக்கமா சொல்ல வேண்டியே நிலையில் அவன் இருக்க “ சூர்யா மெல்ல அவளுக்கு விளக்கம்..கொடுக்க ஆரம்பித்தான் .
மதியும் அவன் என்ன சொல்ல போகிறான் என்று… கண் மூடி அவன் அணைப்பில்.. இருந்த படி கேட்க ஆரம்பித்தாள்
அவள் தன்னை விட்டு விலகாமல் இருந்ததை பார்த்து.. சூர்யா மனதுக்குள் சிரித்த படி, மதி நான் சொல்லுறத சரியாய் புருஞ்சுக்கணும் என்ன ??”
” ஹ்ம்ம், சரி சொல்லுங்க “ அவள் சொல்லிவிட
சூர்யா தொடர்ந்தான்
” சந்தியா மேல எனக்கு கோபம் மதி அவள் என்ன காதலித்து ஏமாற்றிவிட்டாள் , என்று எல்லாம் இல்லை. அவ என் கிட்ட பணம் சொத்து நேரடியா கேட்டு இருந்தா நான் குடுத்து இருந்துர்ப்பேன் ஆனா அவள் அதை என்கிட்டே இருந்து பறிக்க காதல்ன்னு ஒரு வார்த்தை சொன்னா அப்புறம் அதே காதல் பெயரை சொல்லி , என்னையே ஆழம் பார்த்து என் முதுகு பின்னாடி குத்தினாள் பாரு அங்கே தான் எனக்கு அவ வேல வெறுப்பு வந்துருச்சு அது மட்டும் இல்லாம அவ உன்னையும் யூஸ் பண்ணினது அதவிட எனக்கு இருந்தது, ஹ்ம்ம் அப்புறம் அவள் உன்ன படுத்தினது, நீ அவளை குருட்டு தனமா நம்பினது கூட உன் மேலையும் கொஞ்சம் வருத்தம்…அது எல்லாம் தான் என்ன இப்பிடி உன் கிட்ட நடக்க வச்சது ”
அவன் வருத்தம் என்று சொன்ன உடன் ,, மதி…எதுக்கு வருத்தம் என தன் கண்ணை திறந்து பார்க்க…
அதை பார்த்த சூர்யா , ”
பின்ன அவ என்ன சொன்னாலும் எதை பற்றியும் யோசிக்கமா சரின்னு எல்லாத்துக்கும் சொல்லுவியா நீ என்ன எதுன்னு விசாரிக்க மாட்டியா அப்புறம் என்ன படிச்ச பொண்ணு நீ….என அவன் சற்று கோபமாக கேட்க…
அதை கவனித்த,மதி…இன்னைக்கு இப்பிடி பேசுறிங்க…. ஆனா அன்னைக்கி எப்பிடி நடந்துகிட்டிங்க…இதுக்கு நீங்க என்ன கொன்று போட்டு இருக்கலாம் இருந்தது எனக்கு.. எவ்வளோ அழைத்தேன் தெரியுமா உங்களுக்கு “
அவளின் வேதனை புரிந்த சூர்யா அவள் இடம்,. ” சாரி டி ஏதோ அவள் மேல உள்ள கோபத்துல அப்பிடி செய்துட்டேன்….இனிமேல் இப்பிடி நடக்காது ”
” ஹ்ம்ம் யாருக்கு வேணும் உங்க சாரி பூரி எல்லாம் முன்னாடியே சொல்லி இருந்தா நான் உங்களுக்கு உதவி செய்யாமலா போய் இருப்பேன் ”
” அதான் சொன்னேனே டி.. முன்னவே சொல்லி இருந்த நீயே கோப பட்டு ப்ளான சொதப்பி இருப்ப அவ தப்புச்சு வேற ப்லான்னோட வந்து இருப்பா அத தவிர்க்க தான்..”
” அப்போ நீங்க என்ன அன்னைக்கி என அவள் ஆரம்பிக்க..”
” அவள் எதை சொல்ல வருகிறாள் என்று அவனுக்கு புரிந்துவிட்டது…”
” ஹே லூசு, எதுக்கு எதை டி முடிச்சுட்டு போடுறவ.. நான் என்ன அவ்வளோ மோசமானவனா உன் அனுமதி இல்லாம உன்ன எடுத்துகிட்டது நீ என் வைப் என்கிற உரிமை நால தான்
அவனது பதில் அவளை சற்று சமாதனம் படுத்தியது இருந்தாலும் அவனிடம் அதை காட்டிகொள்ளாமல் ,ஹ்ம்ம் நீங்க செய்தது அப்பிடித்தானே என அழுதே விட்டாள் “
” ச்சு வேணாம் மதி, ப்ளீஸ் வேணும்னா அதுக்கும் சேர்த்து சா…..??”
மதி, வேகமாய் அவன் வாய் மேல் கை வைத்து ”சாரி எல்லாம் கேட்க வேண்டாம் , புரியுது உங்க நிலைமை இப்போ உண்மை தெரிஞ்சே என்னக்கே இப்பிடி இருக்கும் போது அனுபவிச்ச உங்களுக்கு எப்பிடி இருந்து இருக்கும் ,இனி நடந்து முடிஞ்சது பத்தி பேச வேண்டாம் நடக்க போறத பார்போம் என அவள் சொல்ல”
” ஒ , பார்க்கலாமே என்று அவன் அவளை இறுக்கி அணைக்க…”
மதி.. ” சூர்யா என்ன பண்ணுறிங்க விடுங்க”
” நீ தானே டி சொன்ன”அவனும் அவளை விடாமல் சொல்ல
” என்னது நான் சொன்னேனா என்ன சொன்னேன்”மதி அதிர்ந்து போய் கேட்க
“ஐயோ , கடவுளே நான் எத பத்தி சொன்னேன் நீங்க என்ன பண்ணுரிங்க , விடுங்க ப்ளீஸ்”என கெஞ்சினாள்
“ஓகே ஓகே கூல் சிறிது நேரம் கழித்து மதி என் மேல உனக்கு கோபம் இல்லையே”என சூர்யா வருத்தமாக கேட்க”
“கோபமா எதுக்கு” மதி புரியாமல் கேட்க
நடந்த அனைத்துக்கும் திரும்ப அவன் மன்னிப்புப் கேட்க ஆரம்பிக்க..”
மதி, ” ஐயோ போதும் மறுபடியும் மொதல இருந்தா நான் போறேன் நீங்க தூங்குங்க என அவள் எழ போக…”
“ஹே அதுக்கு எதுக்கு டி போற நீயும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் ல….”சூர்யா அவளை போகவிடாமல் தடுக்க
” அது சரி வேலை கிடக்கு ,நீங்க தூங்குங்க நான் போய் அதை முடிக்கிறேன்”என சொல்ல
” ஹ்ம்ம் வேண்டாம் மதி என அவன் சிறு பையன் அடம் பிடிப்பது போல் அவளை விட மறுக்க”
மதி” என்னம்மா இது இப்பிடி பண்ணுரின்களே ம்மா சரி என்று அவளும் அவன் கேட்ட படி உறங்க ஆரம்பிக்க, சூரியாவும், அவள் முகம் பார்த்து கொண்டே உறங்கி போனான் ” அவன் உறங்கி விட்டான் என்று உறுதி படுத்தியே பிறகு அவள் எழுந்து மற்ற வேலைகளை பார்க்க
சென்றாள்.
இங்க சந்தியா தனது வீட்டுக்கு வந்து காரை செட்டில் விட்டுவிட்டு யார் இடமும் பேசாமல் தனது அறைக்கு வந்து யோசித்தாள் என்னதான் ,சூர்யா மதிகிட்ட இருந்து போனை வாங்கினால் ஏன் தனக்கு தெரியே படுத்தவில்லை ,ஒருவேளை மதி நம்மகிட்ட இருந்து ஏதும் மறைக்கிறாளோ என அவளுக்கு தோன்றியது ,ஹ்ம்ம் இது சரி வராது , நாம இனி சூர்யாவை விட மதி மேல் தான் ஒரு கண்ணு வைக்கணும் என அவள் முடிவு செய்தாள் .
சந்தியா யோசித்த படி தன்னுடையே அறையே அளந்த படி இருந்தாள் ,அதற்க்குள் அவளது அம்மா வந்து ,ஏண்டி சந்தியா இங்கே என்ன பண்ணிட்டு இருக்க, ஆமா அந்த மதி பொண்ணு போன் ஏதும் பண்ணினாள எதுக்கு கேட்குறேனா ரொம்ப நாளாச்சு அவ பேசி
அதை முடிவு செய்யவேஅன்று இரவு.. அவள் மதிக்கு அழைக்க அவளது போன் சுவிச் ஆப் என்று வந்தது.. பிறகு சிறிது நேரம் கழித்து அவள் சூர்யாவை அழைக்க
” ஹலோ சொல்லு சந்தியா..”
” சூர்யா நான் முக்கியமா மதி கிட்ட பேசணும் கொஞ்சம் அவள் கிட்ட குடேன் “
” ஒரு நிமிடம் கழித்து , என்ன விஷயம்…”அவன் கேட்க
” என்ன விஷயம் சொன்னாதான் குடுப்பியா … ப்ளீஸ் கொஞ்சம் மதி கிட்ட குடு அவகிட்ட ஒரு முக்கியமான விசையம் பேசணும் என அவள் கெஞ்ச..”
அப்பிடி என்ன முக்கியமா பேச வேண்டி கிடக்கு என்று அவனும் மதியே அழைத்து போனை குடுத்தான்
போனை கையில் வாங்கியே மதி
யாரு என்று சைகையில் கேட்க…” அவனும் சந்தியா என்று சொன்னான்..” எரிச்சலுடன் அவளும் அலைபெசியே வாங்கி
” சொல்லு சந்தியா..என்ன விஷயம்…”என அவள் கேட்க
” டி மதி நான் சொல்லுறத கவனமா கேட்டுக்கோ பதில் பேசாத ஆமா இல்லைன்னு மட்டும் சொல்லு என்ன.. “
சந்தியாவின் பேச்சை கேட்டு
மதிக்கு உடம்பில் ஒரு வித நடுக்கம் வர,, அதை சமாளித்து கொண்டு ”, சரி சொல்லு சந்தியா,என்ன விசையம்”
” அது நெஜமாவே அவன் போன வாங்கி வச்சுடானா”,என அதி முக்கியான கேள்வியே கேட்க
மதி சூர்யாவை பார்த்து கொண்டே” ஆமா அவர் தான் உனக்கு எதுக்கு போன்னு வாங்கி வச்சுகிட்டாறு”
மதியின் பதில் கேட்டு சந்தியா அதிர்ந்து போனாள் பிறகு
” ஏன்னு , உனக்கு சொன்னான…”என அவள் கேட்க
” இல்லை,ஏதும் சொல்லல என கோபமா பார்த்துட்டு உன் வேலையே மட்டும் பாருன்னு சொல்லிட்டு போயிட்டாரு என சோகமா இருப்பது போல் மதி பதில் சொல்ல
அதுக்கு சரிடி அதவிடு இன்னும் ஒரு முக்கியமான விசையம் இப்போ அவனுக்கு ஒரு புது டெண்டர் கிடைக்க இருக்கு அதைபத்தி தெரியுமா உனக்கு”இப்போது சந்தியாவின் குரலில் குழைவு வந்து இருந்தது.
” இல்லை , தெரியாது சந்தியா”இது மதி
சந்தியாவுக்கு சாதகமாக ஒரு பதிலும் மதி இடம் இருந்து வராது எண்ணி . அவளுக்கு மதி மேல் கோபம் வர ஒரு கட்டத்திற்கு மேல்… ” ஏய் அப்புறம் எதுக்கு டி நீ அங்கே இருக்க எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லுற என்ன அவனோட கொஞ்சி… என மேலும் சில தகாத வார்த்தையே அவள் பிரயோகிக்க..” இவை அனைத்தும் கேட்ட மதிக்கு உடல் கூசி போய்விட்டது பிறகு மதிக்கும் கோபம்
” சந்தியா வார்த்தையே பார்த்து விடு.. என்ன சொன்ன நான் என்ன பன்னுறேனவா… நீ சொல்லுற பார்த்தா எனக்கு தப்பா ஏதோ தோன்றுதே அவரோட கம்பெனி விசையத்த தெரிஞ்சுக்க தான் என்ன அவ்வளோ பேசி கம்பெல் பண்ணி கல்யாணம் செய்துக்க சொன்னியா என பொட்டில் அறைந்தது போல் மதி கேள்வி கேட்டே விட்டாள் நீ தப்பா ஏதோ செய்ய சொல்லுற மாதிரி இருக்கே இதுக்கு தான் என்ன நீ கம்பெல் பண்ணி சூர்யாவ கல்யாணம் பண்ணிக்க சொன்னியா..
இப்போது சந்தியா மதியின் கேள்வியில் அதிர்ந்து போய் விட்டாள்
மதி கோப படுவாள் என்று தெரிந்த சந்தியவிக்கு அவள் சரியான காரணம் கொண்டு அவள் மேல் கோபம் கொள்ள சந்தியவிக்கு அது அதிர்ச்சியே தந்தது.. இவளுக்கு எப்பிடி தெரிந்தது சரியா எல்லாமே சொல்லுறாலே ஒரு வேலை குத்துமதிப்பா கேட்குறாளோ என யோசித்தாள் பின் சுதாரித்து…என்ன மதி நான் உனக்கு இப்பிடி எல்லாம் செய்வேனா நீ என் பிரெண்ட் டி நான் என்ன அவ்வளோ மோசமானவளா அழுது விடுபவள் போல் சந்தியா பேச
அதை கேட்ட மதிக்கு இந்த பேச்சு இப்பிடி பேசி தானே என்ன ஏமாற்றினா.. இன்னும் இப்படியே பெசுறாலே இவ திறந்தவே மாட்டாளா என இருந்தது அதை எதையும் வெளி காட்டாமல்… ஹ்ம்ம் சரி இப்போ எதுக்கு போன் பண்ணின சந்தியா, இந்த ப்ராஜெக்ட் பத்தி தெரிஞ்சுக்க தானா மேலும் மதி சந்தியாவை துருவி கேட்க
மீண்டும் சந்தியா… அதிர்ந்விட்டாள் இல்லை இவளுக்கு ஏதோ தெரிஞ்சுருக்கு இல்லைனா இவள் இப்பிடி பேசுறவ கிடையாதே, நாம என்ன சொன்னாலும் இவள் நம்புவாளே, இன்னைக்கி பார்த்து இப்பிடி பெசுறாலே கடவுளே பக்கத்துல அந்த கடன்காரன் வேற இருப்பானே, என கொஞ்சம் நேரம் என்ன பண்ணலாம் என யோசித்த பிறகு பொறுமையாக இல்லை மதி உன் கிட்ட பேச முடியலையே தான் போன் பண்ணினேன் நான் அப்புறம் பேசுறேன்.. உடம்ப பார்த்துக்கோ.. என்ன என அவள் போனை கட் செய்துவிட்டு.. ராஜேஷுக்கு அழைத்தால்…
” சொல்லு… சந்தியா என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க”
” ஆமா நான் இப்போ அவ கிட்ட பேசினேன்.. அவ எல்லாம் தெரிஞ்ச மாதிரி என் கிட்ட கோப பட்டா.., என பட படவென நடந்ததை சொல்ல…”
ராஜேஷ் நிதானமாக” ஹே லூசு நல்லா கவனி அவ கேஸ் ல தான் சொல்லிற்க்கா நீ பாட்டுக்கு அவகிட்ட உளறி ஏதும் வச்சுடாதே அப்புறம் நம்ம பிளான் எல்லாம் அவ்வளோ தான்…:”
இல்லை ராஜேஷ்.. எனக்கு ஏதும் சரியா படல… “
” சச்சு… சந்தியா, சரி நாளைக்கு நீ சூர்யாவ போய் பாரு அவன நல்லா கவனி உனக்கு ஏதும் மாற்றம் தெரிஞ்சா எனக்கு சொல்லு அதுக்கு அப்புறம்.. என்ன பண்ணலாம் யோசிப்போம்..
அதுக்குள்ள சூர்யா முந்திகிட்டா .
“மாட்டான் அப்பிடியே எதாவுது செய்தா… நாம.. மதி ஓட கதையே முடிச்சுற வேண்டியது தான், என ராஜேஷ் கூலாக சொல்ல
ராஜேஷ்…..?? என சந்தியா தான் அதிர்ந்து போனாள்
” ஏன் உன் ப்ரெண்ட்னு பயமா இருக்கா..”
” இல்லை.. ஆனா.. “ அவளுக்கு மதியே வைத்து நிறையே காரியம் சூர்யாவிடம் சாதிக்க வேண்டியே இருந்தது இவன் இவ்வாறு சொல்லவும் அவளுக்கு என்ன செய்வது என்று
தோணவே இல்லை இருந்தும் ராஜேஷ் சொல்லுவதை கேட்டு கொண்டாள்
” இந்த ஆனா ஆவானா கதை எல்லாம் நமக்கு தேவை இல்லை சந்தியா.. நம்ம டார்கெட் சூர்யாவை முன்நேர விட கூடாது அத மட்டும் பாப்போம்… அதுக்கு தடையா யாரு வந்தாலும் நமக்கு எதிரி தான்…. மதி நமக்கு உதவி பண்ணுவான்னு நாம நம்பினோம்… ஆனா வேலைக்கு ஆகல சூர்யாவோட கவனம் மதி பக்கம் இருக்கான்னு பாரு அப்பிடி எதும்னா நாம ஈஸியா சூர்யாவ மட்டும் இல்லை அவன் பிசினஸ் எல்லாத்தையும் முடக்கி விடலாம்..
ஏன்னா எவ்வளோ பெரியே ஆளா இருந்தாலும் இந்த காதல்ன்னு வந்துட்டா அதுக்கு முன்னாடி குழந்தை மாதிரி தான்.. புரியுதா சந்தியா.. நீ நாளைக்கு போய் சூர்யாவ பாரு.. இப்போ போய் நிம்மதியா தூங்கு…என ராஜேஷ் போன் வைத்துவிட..
சந்தியா ஒரு வித நிம்மதி உடன் உறங்க சென்றாள்….
இங்கே சந்தியாவுடன் பேசி முடித்த மதிக்கு என்னோ கோபம் குறையே மறுத்தது… அப்பிடியே அங்கே இருந்த சோபில் தொப் என அவள் விழ… ‘
சூர்யா , என்ன ஆச்சு மதி எதுக்கு உன் முகம் எல்லாம் இப்பிடி என்னமோ மாதிரி இருக்கு, அவன் பதட்டமாக கேட்க
ஹான் ஒன்னும் இல்லைங்க என அவள் எழ போக சூர்யா.. அவளை தடுத்து… அவள் கையில் ஒரு பைல் கொடுத்துதான்… “
” அதை பார்த்த மதி.. என்ன இது…”
” சந்தியா இதுக்காக தானே உன் கிட்ட பேசணும் சொன்னா நீயே இத அவ கிட்ட கொடுத்துட்டு………”
மதி அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து விட்டு..” என்ன பார்த்தா.. உங்க ரெண்டும் பேருக்கும் எப்பிடி தெரியுது இல்ல எப்பிடி தெரியுதுன்னு கேட்குறேன் உங்க போதைக்கு நான் ஊறுகாயா “ அவள் பொரிந்து தள்ள
” ஹே கூல் கூல் இப்போ எதுக்கு டி இவ்வளோ கோபம்,..”
” பின்ன.. உங்களுக்கு அவ கஷ்ட படுறது பிடிக்கலைனா நீங்களே போய் கொடுக்க வேண்டியது தானே நான் என்ன உங்க ரெண்டு பேருக்கு நடுவுல இன்டர் மிடியெடரா என சந்தியா மேல உள்ள கோபத்தை அவன் இடம் காண்பிக்க”
அவள் கோபத்தை ரசித்த படி.. ” மேடம் கொஞ்சம் மலை இறங்குங்க நான் அவளுக்காக ஒன்னும் சொல்லல உனக்காக தான் சொன்னேன் எனக்கு என்னமோ அவளுக்கு உன் மேல சந்தேகம் வந்து இருக்கு நினைக்கிறன் அதை உறுதி செய்ய தான் இப்போ இந்த போன் நினைக்கிறன்…”
” அவ என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை என மதி சொல்ல “
” ஆனா எனக்கு இருக்கு மதி “ சூர்யா கவலை உடன் சொல்ல
” என்ன என்ன சொன்னிங்க… “
” இல்லை என் பிரச்சனையே காக நீ எதுக்கு அவள் கிட்ட மாட்டிகிட்டு அவஸ்த்த படனும் அதான்… “
” ஒ உங்க அக்கைரைக்கு ரொம்ப நன்றி.. எனக்கு தூக்கம் வருது.. கொஞ்சம் என் கையே விட்டா நான் போவேன்.. என நக்கலாக அவள் கையேயும் அவனையும் மாறி மாறி பார்க்க.. “
” சாரி மதி என்று அவன் கையே விட்ட உடன் வேற ஏதும் பேசாமல், அவன் அவளையே பார்க்க, அவளோ எழுந்து சென்று.. படுத்து உறங்கி விட்டாள்”
” சூர்யா ஒரு பெருமூச்சுடன், ‘ ஹ்ம்ம்,இவளும் நான் சொல்லுறத கேட்டுக்க மாட்டா… அவளும்… இவள சும்மா விட மாட்டா…. இப்போ என்ன பண்ணுறது… என அப்பிடியே அமர்ந்த படி உறங்கியும் ..விட்டான் ‘
காலை
முக்கியமா மீட்டிங் இருப்பதால்….சூர்யா மதியே அழைத்து மதி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ கால் டாக்ஸில போயிக்க முடியுமா வரும் போது கூட.. என கேட்க
” சரிங்க நான் பார்த்துகிறேன் நீங்க போய்ட்டு வாங்க… என மதியும்.. அவன் உடன் சேர்ந்து காலை உணவை முடித்து விட்டு பாட்டியே பார்த்து கிளம்புவதாக சொல்லி விட்டு மதி கிழே வர.. அதுக்குள் சூர்யா கிளம்பி சென்று இருந்தான்.. “
இவளும்.. , தனக்கு தேவையானதை எடுத்து வைத்துகொண்டு மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டாள்…
ஆபீஸ்க்கு வந்தவன் ஜோர்ஜை அழைத்து கொண்டு தனது கேபின்க்கு சென்றான்..
ச்சபா.. என சூர்யா தனது இருக்கையில் அமர்ந்து ஜோர்ஜ் இடம் இன்றையே மீட்டிங் பத்தி பேசி கொண்டு இருக்க..
அவனும் சூர்யாவுக்கு பதில் சொல்லி கொண்டு இருக்க..
ஜோர்ஜே குரலில் இருந்த வித்தியாசம் அறிந்து சூர்யா அவனை நிமிர்த்து பார்த்த இப்போ எதுக்கு டா.. இந்த சிரிப்பு…
சூர்யா அப்பிடி கேட்ட உடன்.. ஜோர்ஜ் மேலும் விழுந்து விழுந்து சிரிக்க…
அதை காண சகிக்காமல்.
“ டேய் இப்போ சிரிக்கிறத நிறுத்த போறியா இல்லை ” என சூர்யா கடுப்புடன் கேட்க
” ஹாஹா….. முடியல மச்சி.. என மேலும் சத்தமாக சிரிக்க”
” உன்ன என சூர்யா அவன் மேல் ஒரு பைல் எடுத்து எறிந்தான்”
” அதை கையில் தட்டிவிட்டு சிரிப்பை நிறுத்தி விட்டு சூர்யாவிடம் என்ன டா முகத்துல….தொசந்த் வாட்ஸ் பல்பு எரியுது என்ன எல்லாம் சரி ஆகிடுச்சா என ஜோர்ஜ் கேட்க.”
” எருமை மாடே இதுக்கு தான் இப்பிடி சிரிச்சியா ச்சை அது எல்லாம் ஒன்னும் இல்லை, லைட்டா என சூர்யா சொல்ல…”
”அடப்பாவி “
இந்த வார்த்தை சொல்லி முடிக்கையில் சந்தியா வந்து கேட்டுவிட.. சந்தியா அப்பிடியே அதிர்ந்து நின்று விட்டாள், அப்போ இவன் காரமாக தான் மதி நம்ம கிட்ட எல்லாத்தையும் மறச்சுட்டா, அவள் என்னை ஏமாத்திட்டா அவளை சும்மா விட கூடாது ராஜேஷுக்கு இப்போவே சொல்லனும் என அந்த இடத்தை விட்டு நகர்ந்து போக.
அதை ஜோர்ஜ் கவனித்து விட்டான்… மச்சி உனக்கு வேலை வந்துருச்சு போல??
என்ன டா வேலை என்ன சொல்லுற, சூர்யா புரியாமல் கேட்க ஜோர்ஜிடம்
ஹ்ம்ம், உன் ஆருயிர் காதலி உன்,மனைவியே தூக்கும் திட்டத்துக்கு ரெடி ஆகிவிட்டாள் அதை சொன்னேன்..
இப்போது.அதிர்வது சூர்யாவின் முறை ஆனது,” டேய் என்னடா சொல்லுற இது உண்மையா… “
” உண்மை தான் பாஸ்… நேத்தே நியூஸ் வந்துருச்சு…”
” ராஸ்கல் என்னதான் வேணுமா அவனுக்கு இவளுக்கும் ..ஏண்டா என்னை நிம்மதியா இருக்க விடமாட்டாங்களா என்று சூர்யா கோபத்தில் காத்த… “
“டேய் கொஞ்சம் பொறுமையா இரு…. இப்போ ஆவேச படுறதுல அர்த்தம் இல்லை, மதி எங்க.. வீட்லையா”
“இல்லடா இன்னைக்கி ஏதோ முக்கியமான ஆபரேஷன் இருக்கு சொன்னா அதான் அவளை தனியா கிளம்ப சொல்லிட்டேன், நானும் உன் கிட்ட பேசிகிட்டே சீக்கிரம் கிளம்பி… ஒ…. ஷிட்…
என சூர்யா அவசரமாக கிளம்பி வெளியே செல்ல போக..
ஜோர்ஜ் கிளம்பியவனை தடுத்து , என்னடா ஆச்சு எதுக்கு எங்க இப்போ நீ கிளம்புற…..
டேய் மதியே தனியா ஹோச்பிடல் போக சொன்னேன் டா.. இப்போ அவள் அங்க போயிட்டாளா கூட தெரியலையே.. “ பதட்டமாக சொல்லவும்
” ச்சபா.. இவனோட ஓவர் தொல்லையா போச்சே, கோபபட்டாலும் ஓவரா கோப படுறான் ,கொஞ்சினாலும் ஓவரா இருக்கு என ஜோர்ஜ்.. தலையில் கைவைத்து அமர்ந்துவிட”
” ஏய் என் பிரச்சனை உனக்கு காமிடியா இருக்கா.. இப்பிடி ஒரு ப்ரொப்லெம் இருக்குன்னு முன்னாடியே சொல்ல வேண்டியது தானே டா“
” பொறு கொஞ்சம் முச்சு வாங்கிகிட்டு பேசு… அதுக்கு இப்போ நீ இவ்வளோ அவசரமா போகனுமா.. மொதல.. சந்தியாவுக்கு… மதி வேலை பார்குற இடம் தெரியாது அப்பிடியே தெரிஞ்சாலும் மதி ஒன்னும் சின்ன புள்ளை கிடையாது…. அடுத்தது… மதிக்கு நீ இங்க இருந்தே போன் பண்ணலாம், விஷயம் என்னனு தெரிஞ்சுகிட்டு அப்புறம் அங்கே போகலாம் என ஜோர்ஜ் பொறுமையாக எடுத்து சொல்ல…
சூர்யாவின் பதட்டம் இப்போது கொஞ்சம் குறைந்தது….” நீ சொல்லுறதும் சரி தான் ஜோர்ஜ் இரு போன் பண்ணுறேன்… என அவள் போன் நம்பரை டயல் செய்துவிட்டு அவள் போன் எடுதுப்பதர்காக காத்து இருக்க… “
நீண்ட நேரம் ரிங் பிறகு.. மதி இடம் இருந்து பதில்; இல்லை.. சூர்யா மீண்டும் அவளை தொடர்பு கொள்ள முயன்று கொண்டு இருந்தான்…
“ஆனால் மதி போனை எடுத்தாளா இல்லை சந்தியா ராஜேஷ் சதியில் மாட்டி கொண்டாளா அடுத்து சூர்யாவின் நிலை என்ன,அவனின் நடவடிக்கை என்னவோ… “
எல்லாம் கேட்டுவிட்டு வந்த சந்தியாவுக்கு மதி மேல் கொலை செய்யும் அளவிற்க்கு கோபம் வந்தது , எவ்வளோ தைரியம் இருக்கணும் அவளுக்கு எனக்கு உண்மையா இருடின்னா , இவன் கூட சேர்ந்துகிட்டு எனக்கே துரோகம் பண்ணுறியா மதி , இன்னையோட உன் கதை முடிஞ்சது , என அவள் ராஜேஷ்க்கு அழைத்து எல்லா விசையத்தை சொன்னாள்,
அதை கேட்ட ராஜேஷ் உடனே , சந்தியா நான் அவள தூக்க சொல்லி ஆள் அனுப்பிட்டேன் நீயும் கிளம்பி நம்ம இடத்திக்கு வந்துரு , இன்னைக்கு சூர்யாவுக்கும் மதிக்கும் சூர்ய- அஸ்தமம், சொல்லி விட்டு அவன் வில்லன் சிரிப்பை சிரிக்க, சந்தியாவும் சந்தோசமாக அங்கே இருந்து கிளம்பினாள்.
இங்கே மீண்டும் மீண்டும் மதிக்கு போன் முயன்று கொண்டே இருந்த சூர்யாவை
” டேய் நீ கடுப்ப கிளப்பத.. எனக்கு வர கோபத்துக்கு உன்னை.. “ என சூர்யா கோபத்துடன் சொல்ல
” ஹே நான் என்ன டா பண்ணினேன் நானா உன்ன மதியே தனியா அனுப்பிவிட சொன்னேன்,என்ன முறைக்குற நல்லா
இல்லை ஆமா சொல்லிட்டேன்..” என ஜோர்ஜ் சொல்ல
அதை கேட்டு சூர்யா கவலையுடன் ” இல்லை,ஜோர்ஜ் முன்னவே சொல்லி இருந்தா நான் அவளை தனியே விட்டு இருப்பேனா எல்லாம் உன் நால தான் டா வந்தது….” இது சூர்யா
” அது சரி சொல்லுவ டா இன்னும் சொல்லுவ இதுக்கு மேலையும் சொல்லுவ “
என ஜார்ஜும் மதிக்கு போன் செய்த படி சூர்யாவிடம் பேசி கொண்டு இருக்க ஆனால் அவள் இடம் இருந்து பதில் வரவே இல்லை சிறிது நேரத்தில் அது சுவிட்ச் ஆப் என்று வர
இப்போது ஆண்கள் இருவற்குள் பதட்டம் கூடியது.. டேய் போன் சுவிட்ச் ஆப் டா என சூர்யா அலறினான்.
ஜோர்ஜ் உள்ளுக்குள் பதறினாலும் மதிக்கு ஏதும் ஆகி இருக்காது என்று நம்பினான் ஆனால்,ஏன் அவள் போன் எடுக்கவில்லை என்கிற
குழப்பம் மட்டுமே இருக்க…அவனோ சூர்யா மீட்டிங் அப்புறம் பார்க்கலாம் நீ கிளம்பு முதல நான் இதோ வந்துடுறேன்..” என ஜோர்ஜ் அவசரமாக கிளம்ப
” சூர்யா, ஜோர்ஜ் இடம் இப்போ நீ எங்க டா போற “
” ம்.. வந்து சொல்லுறேன் நீ கிளம்பு நேரம் கடத்துறது மதிக்கு நல்லது இல்லை… நீ கிளம்பு என சூர்யாவின் பதில் எதிர்பார்க்காமல் அவன் சென்று விட… “
சூர்யாவும் கிளம்பினான், முதலில் அவள் வீட்டில் இருக்கிறாளா என
வீட்டிக்கு அழைத்து கேட்க பாணும்மாவிடம் இருந்து இல்லை என்று பதில் வந்தது.. “ அதை கேட்ட சூர்யாவுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை, கார் சீட்டில் அப்பிடியே சோர்ந்து போய் சாய்ந்துவிட்டான், மனதுக்குள் அவனையும் அறியாமல் ஒருவிதமான பயம் அவனை தழுவி கொண்டது. அக்கம்பக்கத்தில் எங்கையாவுது தென் படுகிறாளா என தாமதிக்காமல் தேட ஆரம்பித்தான், ஆனால் அவள் தான்
கிடைக்கவில்லை, அதுலயே அவனுக்கு பித்து பிடித்தது போல் ஆகிவிட்டது நேரம் ஆக- ஆக அவனுக்கு பயம் தான் கூடியது, மனதுக்குள்
சிட் எங்க டி போன மதி.. கொல்லாத எங்க இருந்தாலும், என்கிட்டே வந்துடி என புழம்பியே படியே ஹோச்பிடல் சென்று பார்த்தான் அங்கையும் ஒப்ரேசன் முடிந்த உடன் சென்று விட்டதாக அவனுக்கு தகவல் கிடைத்தது
சூர்யா மேலும் பதட்டம் ஆனான் என்னது கிளம்பி போயிட்டாளா என் .. எங்கே என ஹோச்பிடலில் இருந்து வெளியே வந்த அவனுக்கு ஜோர்ஜ் இடம் இருந்து போன் வர அதை எடுத்து
சொல்லுடா ஜோர்ஜ்…
” என்னடா மதியே பார்த்துட்டியா… “ஜோர்ஜ் கேட்க
இல்லை எங்க போனா என்ன ஆனானே தெரியலை டா என கோபம்
கவலை கலந்த குரலில் சூர்யா சொல்ல…”
” அவனின் நிலை புரிந்துகொண்ட ஜோர்ஜ், மேலும் ஏதும் நண்பனை போட்டு படுத்தாமல் நேரடியாக விசயத்துக்கு வந்தான்,சரி சரி சூர்யா இப்போ நீ எங்க இருக்க சொல்லு”
” ஹோச்பிடல் என்டரன்ஸ் ல இருக்கேன்… ஏன் ? “
” ஒ , ‘ அப்போ நீ உடனே கிளம்பி… நான் சொல்லுற இடத்துக்கு… போய் அங்க சந்தியாவ பிக் அப் பண்ணிக்கோ.”
” என்ன,அவளையா டேய் என்ன விளையாடுறியா இங்க மதியே
காணோம் தேடிக்கிட்டு நொந்து போய் இருக்கேன் இந்த நேரத்துல அவள போய் பிக் அப் பண்ணணுமாமே பிக் அப் அறிவு கெட்டவனே எனக்கு இருக்கிற கோபத்துல உன்ன கொண்ணுடுவேன் பார்த்துக்கோ “சூர்யா கோபதில் கத்த
” டேய் டேய்.. உன் கோபத்தை குப்பைல கொண்டு போய் போடு முதல நான் சொல்லுறத கேளு மத்தது எல்லாம் தானா தெரியும் உனக்கு,, நீ வீடு திரும்பும் போது மதி வீட்டுல இருக்கும் சொன்னத செய் அப்புறம் உன் இஷ்டம்…என்ன சொன்னா சூர்யா கேட்பான் என்று தெரிந்த ஜோர்ஜ் சரியாக மதி பெயரை சொல்லி அவனை அந்த இடத்தில இருந்து கிளப்பி விட்டான்… “
சூர்யா மனதுக்குள் ஜோர்ஜை திட்டி தீர்த்த படி..சந்தியாவை பார்க்க சென்றான்ஜோர்ஜ் சொன்ன இடத்தில சந்தியாவும் நின்று கொண்டு இருக்க.. அங்கே சூர்யாவின் வரவை சற்றும் எதிர் பார்க்காத அவள் அதிர்ந்து போய் நின்றாள்.
இவன் எங்கே இங்க வரான், ஐயோ என அவளுக்கு இருக்க.
அவள் நின்ற தோற்றமே ஏதோ பிழை செய்தது போல் சூர்யாவுக்கு தோன்றியது எதையும் வெளி காட்டிகொள்ளமல், என்ன சந்தியா இந்த பக்கம் என்று காரை விட்டு அவளை ஆராய்ந்த படி இறங்கினான்
அவளோ ஏதோ பேயே கண்டத்து போல் நிற்க, அதை கவனித்த சூர்யா நிதானமாக.
என்ன சந்தியா, நான் கேட்டுகிட்டு இருக்கேன் நீ அமைதியா இங்க தனியா நிக்கிற வா நான் உன்ன வீட்டுல ட்ரோப் பண்ணுறேன் என்று சொல்ல
அப்போதுதான் நிதனதிற்க்கு வந்தது போல் ஹான்… இல்லை சூர்யா நீ கிளம்பு இங்க பக்கத்துல கொஞ்சம் வேலை இருக்கு அதான், இங்கே நிக்கிறேன், அவளும் சொன்னாள்
”பரவாயில்லை சந்தியா நானும் வெயிட் பண்ணுறேன்.. என அவனும் பிடிவாதமாய் நிற்க..
சந்தியா.. கடவுளே என்ன கொடுமை இது நாம ஒன்னு நினைச்சா இங்க ஒன்னு நடக்குதே என நினைத்த படி, இது சரி வராது இவன் இப்போதைக்கு கிளம்ப மாட்டான் என அவளும் அவனிடம் சரி சூர்யா வா கிளம்பலாம்…
“ஏதோ வேலை இருக்கு சொன்ன.. “ என அவன் கேட்க
” அது.. இப்போதைக்கு முடிகிற மாதிரி தெரியல நான் அப்புறமா போன் பண்ணி சொல்லிக்கிறேன் என அவனுடன் கிளம்பினாள் பிறகு ஏதோ யோசித்துவிட்டு சூர்யா , நீ கார்ல இரு நான் போன் பண்ணிட்டு வரேன்“, என சந்தியா சொல்ல
” ஏன் இப்பிடியே நின்று பேச வேண்டியது தானே” சூர்யா சொல்ல”
“இல்லை சூர்யா இங்க சிக்னல் சரியாய் கிடைக்கள அதான் என அவனுக்கு பதில் சொல்லிவிட்டு தன் போனை எடுத்து கொண்டு…நகர்ந்து விட்டாள்”
சூர்யா,..’ அவள் சென்றதை பார்த்துவிட்டு.. ஜோர்ஜ்க்கு போன் செய்தான்.. ‘
உடனே போன் எடுத்த ஜோர்ஜ்” சொல்லு டா.. “
” டேய் இப்போவாது சொல்லு மதிக்கு என்ன ஆச்சு’
ஹ்ம்ம் உனக்கு இப்போ நான் சொன்னா அதை தாங்கிகிற அளவுக்கு பொறுமை கிடையாது அதுனால நீ அந்த வீனா போனாவள மட்டும் நான் சொன்ன இடத்துல விட்டுட்டு வீட்டுக்கு கிளம்பு நாம அப்புறம் பேசுவோம்… என ஜோர்ஜ் பேசினது போதும் என்று போனை வைத்துவிட்டான்….
இங்க இவனுக்கோ.. என்ன சொல்ல வரான் இந்த ஜோர்ஜ்…. என யோசித்து கொண்டு இருக்கும் போதும் அங்க சந்தியா இவனை கவனத்த படி… ராஜேஷுக்கு அழைத்தாள்
போனை எடுத்த ராஜேஷ், சொல்லு சந்தியா.. நாம போட்ட பிளான்.. எல்லா கரெக்டா போய்ட்டு இருக்கு நீ எப்போ இங்க வர… “ என கேட்க
சந்தியா இங்கே பதட்டத்தில்” ஐயோ… ராஜேஷ்.. நீ மொதல அவளை விட்டுரு “
” ஏய் என்ன விளையாடுறியா .. “இப்போது கோபத்தில் கத்துவது ராஜேஷின் முறை ஆனது
” இல்லை ராஜேஷ்.. சூர்யாவுக்கு ஏதோ தெரிஞ்சுருக்கு.. அவன் என்ன பின் தொடர்ந்து வந்துடான் இனி மதிக்கு எதும்னா நம்ம தான்னு நம்மள சும்மா விட மாட்டான் ராஜேஷ்.. “
” சிட்.. எப்பிடி டி.. கண்டுபிடிச்சான்.. “
” தெரியல ராஜேஷ். ஆனா இப்போ மதியே ஏதும் பண்ணிடாதே.. அவளை விட்டுரு.. இல்லை நாம காலி… இங்க சூர்யா எனக்காக வெயிட் பண்ணுறான் ராஜேஷ்.. நான் இப்பிடியே வீட்டுக்கு போயிடுறேன்.. நீயும் யாருக்கும் சந்தேகம் வரதுக்குள்ள அங்க இருந்து.. கிளம்பிட்டு… நான் போன வைக்கிறேன்.. என சந்தியா ராஜேஷ் இடம் பேசிவிட்டு.. சூர்யாவிடம் போகலாம் சூர்யா.. “
” ஹ்ம்ம் சரி, என காரை கிளப்பினான் அவனுக்கு சந்தியாவை கொலை செய்யும் அளவுக்கு கோபம் இருந்தாலும் ஜோர்ஜின அறிவுரை படி மற்றும் மதியின் நிலையே எண்ணி, கோபத்தை. சந்தியாவிடம் காட்டாமல் இருக்க.. ” ஜோர்ஜ் சொன்ன இடத்தை நோக்கி.. கார் வேகமாக செல்ல
இப்போது சந்தியா முடிவுக்கே வந்துவிட்டாள் அப்போ இவனுக்கு தெரிந்து இருக்கு மதியே நாங்க தான் கடத்தி இருக்கோம்ன்னு ,ஒஹ் காட்.. என அவள் அமர்ந்து இருக்க.
சூர்யா அவளை திரும்பி..பார்த்து..என்ன சந்தியா.. ஏசி அதிகம் வைக்கணுமா.. “
” அ .. அது ஒன்னும் இல்லை சூர்யா.. கொஞ்சம் .ஒரு மாதிரி இருந்தது அதான் என்று வாய்க்கு வந்த பொய்யே சொன்னாள்”
” சூர்யா மனதுக்குள்.,’ பேசு டி பேசு ஆனா என் மதிக்கு மட்டும் ஏதும் ஆகினா அந்த நிமிஷம்.. உனக்கு கடைசி நிமிஷம்..என நினைத்த படி.. அதிக ஆள் நடமாட்டம்.. இல்லாத இடத்தில.. சார் நெருங்க..
” சந்தியா, அவசரமாக அவனிடம் திரும்பி, சூர்யா இங்க நிறுத்திடுங்க நான் இங்க இருந்தே கிளம்புறேன்.. “
” ஏன் சந்தியா நீ போக வேண்டியே இடம் இது இல்லையே..”
” இல்லை நான் இங்கயே இறங்கிடுறேன்..என அவள் சொல்ல.. “
” சரி என சூர்யாவும்.. அவளை அங்கயே..இறக்கிவிட்டு கொஞ்சம் தூரம் சென்று காரை நிறுத்தி அவள் என்ன செய்கிறாள்.. என்று பார்த்தான்..”
” அவன்.. நினைத்த படி.. சந்தியா அவனை கவனித்து கொண்டு இருந்தாள் அவன் இன்னும் செல்லாமல் இருப்பதை பார்த்த சந்தியா… வேகமாக ஒரு ஆட்டோ பிடித்து அந்த இடத்தை விட்டு சென்றாள்”
இப்போது சூர்யா மதி வீட்டுக்கு வந்து விட்டாளா என்று அவளுக்கு போன் செய்யே இப்போவும் அது சுவிட்ச் ஆப் என்று தான் வந்தது..
” ச்சே , மதி மதி …. எங்க டி போன.. என்று சிறிது நேரம் கண்ணை மூடி அப்பிடியே சீட்டில். சாய்ந்து கொண்டான்…பிறகு ஜோர்ஜ் சொன்னது போல் மதி வீட்டுக்கு திரும்பி இருந்தால்.. அதையும் போய் பார்த்துர வேண்டியது தான்.. என சூர்யா தனது காரை வேகமாக வீட்டுக்கு திருப்பினான்
அங்கே மதி என்ன நடந்தது எப்பிடி நான் மயக்கம் போட்டு விழுந்தேன், இங்கே வரை எப்பிடி வந்து சேர்த்தேன் பெருமாளே.. எவ்வளோ யோசிச்சும் ஒண்ணுமே புரியே மாட்டேங்குதே என தலையே பிடித்து கொண்டு அவள் அறையில் அமர்ந்து யோசித்து கொண்டு இருந்தாள், தலைவலி வேற பாதி அவள் உயிரை எடுத்தபடி இருந்தது, காலையில் நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்தாள் ஆனால் உடல் சோர்வு அவளை ரொம்பவும் படுத்த “ஏதும் யோசிக்காத மதி பேசாமல் அமைதியா கண்ண மூடி சாஞ்சுக்கோ என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்
அப்போது வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த.. சூர்யாவை பார்த்து பாணும்மா , என்ன சூர்யா ஏதும் பிரச்சனையா. உன் முகமே சரி இல்லையே அப்போதும் வந்து ஏதும் சொல்லாமல் போயிட்ட இப்போ இப்பிடி வந்து நிக்கிற என்ன தான் ஆச்சு.. “
பாணும்மா மதி எங்கே… “ சூர்யா கேட்க
” ரூம்ல இருக்க ப்பா” அவர் சொல்ல
அவ்வளோ தான் மேலும் ஏதும் சொல்லாமல்..வேகமாய்.. மதி இருந்த ரூம்க்கு போய் கதவை திறக்க.. அங்கே மதி கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்
அங்கே சூர்யா நிற்ப்பதை பார்த்து‘ சூர்யா என அவள் எழ போக அதுக்குள் சூர்யா அவளை நெருங்கி இழுத்து அணைத்து கொண்டு… எங்க டி போன?
எப்போதும் அவன் இடம் இருந்து சற்று விலகி இருக்கும் மதி.. இன்று. ஏதும் தோன்றாமல்.. அவன் அணைப்பில் இருந்த படி.. ‘ தெரியலை சூர்யா.. “ என சோர்ந்து போய் சொன்னாள்
என்ன தெரியலையா. உன் போன் என்ன ஆச்சு.. எவ்வளோ நேரமாக உன் போன்க்கு ட்ரை பண்ணினேன் நீ எடுக்கவும் இல்ல அப்புறம் ஸ்விட்ச் ஆப் வேற..’அவன் கோபமாக கேட்க
” அது சார்ஜ் காலி ஆகிர்ச்சு..சூர்யா.. “
” எப்பிடி டி வீட்டுக்கு வந்த.. “ அவனால் இன்னும் நம்பவும் முடியவில்லை
” ஹ்ம்ம். தெரியலை பா.. ஆபரேஷன் முடிச்சுட்டு வெளியே வந்து ஸ்டாப் ல நின்னுட்டு இருந்தேன் லைட்டா தலை வலிக்கிற.. மாதிரி இருந்தது ஒரு காபி சாப்பிடலாமே..காபி ஷாப் போனது மட்டும் தான் ஞாபகம் இருக்கு அதுக்கு அப்புறம் ஏதும் ஞாபகம் இல்லை.. சூர்யா.. “
அதை கேட்ட சூர்யா.. கோபத்தில் சந்தியா.. உன்ன..”
” என்ன சொல்லுறிங்க சூர்யா.. சந்தியக்கும் இதுக்கும் என்ன சம்பதம்.”
” இவ்வளோ நடந்ததுக்கு காரணம் அவள் தான் மதி.. உன்ன வச்சு.. என்ன மறுபடியும் மடக்க ஒரு பெரியே திட்டம் போட்டு இருக்கா “
” என்ன சொல்லுறிங்க நீங்க” மதி இப்போது அதிர்ந்து போய் தன் கணவனை பார்த்தாள்.
என்ன சொல்லுறிங்க,என மதி அதிர்ந்து போய் கேட்க அவளுக்கு சந்தியா இன்னும் தன்னை கடத்தி கொல்ல பார்ப்பாள் என்று நம்ப முடியவில்லை பணத்துக்காக இவ்வளோ மட்டாமாக கூட ஒருத்தர் இறங்கி போவாங்களா என்று இருந்தது மதிக்கு சூர்யாவை விட்டு விலகி நின்று என்ன நடந்தது சூர்யா என அவள் கேட்க
சூர்யா எல்லாவற்றையும் அவளுக்கு.. விவரமாக சொல்ல ஆரம்பித்தான் அதை கேட்டுக்கொண்டு இருந்த மதிக்கு அதிர்ச்சி , உடல் சோர்வு எல்லாம் சேர்த்து அவள்..மீண்டும் மயங்கி சரிந்து விட்டாள்
என்ன சத்தம் என்று திரும்பி பார்த்த சூர்யா அதிர்ந்து போனான் கிழே மதி மயங்கி கிடந்தாள் பார்த்த சூர்யா மதி என அலறியே படி வேகமாக அவள் அருகே சென்று என்ன ஆனது இவளுக்கு என்று..அவளை தூக்கி தன் மடியில் அவள் கன்னத்தை தட்ட மதி இடம் எந்த ஒரு அசைவும் அவனின் எண்ணம் எல்லாம் சந்தியா அவளை ஏந்தும் செய்துவிட்டாளா என்று இருந்தது அப்படி மட்டும் எதாவுது நடந்து இருக்கட்டும் சந்தியா உன்னை சும்மா விட மாட்டேன் மனதில் நினைத்து கொண்டான் இப்போது மதி தான் தனக்கு முக்கியம்… என்று அவளை அள்ளிக்கொண்டு ஹோச்பிடளுக்கு சென்றான்….
அங்கே டாக்டர் ராம், சூர்யா மதியே அள்ளிக்கொண்டு ஓடி வருதை பார்த்து பதறி போய் என்ன ஆச்சு சூர்யா மதிக்கு மோர்னிங் நல்லா தானே இருந்தா என கேட்க
“ இல்லை டாக்டர் என்னன்னு தெரியலை பேசிகிட்டே இருக்கும் போது அப்படியே மயங்கிட்டா “என அவன் சொல்ல
“என்னது மயங்கிடாளா, இப்பிடி அவள படுக்க வைங்க அப்பிடியே நீங்க கொஞ்சம் வெளியே இருங்க சூர்யா” என சொல்லிவிட்டு அவளை பரிசோதிக்க அவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது
எதற்கும் அதை உறுதி செய்யே வேண்டுமே என்று மதிக்கு சில டெஸ்டுகள் எடுக்க அவர் நினைத்து போல் மதி கர்பமாக இருப்பது உறுதியானது
அதை பார்த்த அவருக்கு மிகவும் சந்தோசம் எங்கே தோழியின் அன்பு என்ற வலையில் விழுந்து தன்னோட வாழ்கையே பால் ஆகிக்கிகொள்ளுவாளோ என்று கவலையில் இருந்தவருக்கு அவளின் திருமணம் ,இப்போது குழந்தை என விசையங்கள் அவரை நிம்மதி அடையே செய்தது,
அதே சந்தோசத்துடன் இதை சூர்யாவுக்கு சொல்ல வெளியே போக நகரும் போதும் மதிக்கு மேல மயக்கம் தெளிந்தது அவரை பார்த்து , அங்கிள் நான் எப்பிடி இங்கே என பேட்டில் இருந்து மெல்ல எழுந்த படி கேட்டாள்
டாக்டர் ராம் மதி எழுந்து அமர உதவி செய்த படி , இப்போ எப்பிடி ம்மா இருக்க..
” ம் பரவா இல்லை அங்கிள் எதுக்கு நீங்க இவ்வளோ அவசரமா போறீங்க.. “
” ஹ்ம்ம் நீ கர்ப்பமா இருக்க.. அதை சூர்யா கிட்ட சொல்ல.. போறேன் “
” அதுக்கு இப்போ அவசரம் இல்லை அங்கிள்.. ,” என மதி நிதானமாக சொல்ல..
” அவருக்கு இப்போது தூக்கிவாரி போட்டது என்னமா மதி இப்பிடி சொல்லுற.நீ “
” ஆமா அங்கிள்.. என அவள் சந்தியா செய்த வேலைகளை பற்றி அவருக்கு சுருக்கமாக சொல்ல.. “
அதை கேட்ட அந்த பெரியவரோ அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டார் ஒரு பெண் இப்பிடி எல்லாம் கூட செய்வாளா என்று தோன்றியது அவருக்கு பிறகு,அவர் எது எல்லாம் நடக்கக்கூடும் என பயந்தாரோ கடைசியில் அது தானே நடந்து இருக்கு
இவ்வளோ நாளா ஏன்ம்மா என்கிட்டே இவ்வளோ நடந்து இருக்கு சொல்லவே இல்லை , சரி அத விடு இப்போ என்ன செய்யாலாம்னு இருக்க நீ”
இப்போதைக்கு நான் இப்பிடி இருக்குறத அவர் கிட்ட சொல்லாமல் இருக்கணும் அங்கிள் அதுக்கு உங்க உதவி வேணும் எனக்கு., மதி அவரிடம் கெஞ்ச
அவரும் அவளின் நிலைமையே புரிந்துகொண்ட..” நான் சொல்லாமல் இருப்பேன் ஆனா நாள் ஆக-ஆக எப்பிடியும் தெரியே வருமேம்மா. அப்போ என்ன பண்ணுவ
அது அப்போ பார்த்துக்கலாம் அங்கிள்..ஆனா இப்போதைக்கு நீங்க சொல்லாதிங்க, என்று அவள் சொல்ல..
” சரிம்மா.. பார்த்துக்கோ என சொல்லிவிட்டு.. அவர் வெளியே வர…”
” அங்கே சூர்யா…. அவர் வருவதை பார்த்து… அவர் அருகில் சென்று. மதிக்கு என்ன ஆச்சு. டாக்டர்.. “
” நத்திங் சூர்யா, இந்த மயக்கம் சரியா சாப்பிட்டாம இருந்த நால வந்தது இந்த பொண்ணு என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா நீங்க பார்த்துகோங்க சூர்யா என்று அவர் சொல்லிவிட்டு சென்று விட்டார்…”
சூர்யா அவளை சென்று பார்த்து ,” ஹே என்ன டி ஆச்சு உனக்கு டாக்டர் என்னமோ சொல்லிட்டு போறாரு ..”என கேட்க
” ஹ்ம்ம் மதியம் சாப்பிடல அதுக்கு தான் அப்படி சொல்லிட்டு போறாங்க அங்கிள்அப்பிடி சொல்லிட்டு போறாங்க அங்கிள்”
நிஜமா, சாப்பிடாத மயக்கம் தானே வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே வேணும்னா..இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு காலைல போகலாமா..” சூர்யா கேட்க
” மதி அவசரமாய் ஐயோ வேண்டாம் நாம இன்னைக்கே போயிடலாம் என்னால இங்க எல்லாம் இருக்க முடியாது ..”
” ஹஹா நீ எல்லாம் என்ன டாக்டர் ஹோச்பிடல்ல இருக்க இப்பிடி புழம்புற”
” டாக்டரா எனக்கு இங்க இருக்க பிடிக்கும் ஆனா பேசண்டா எனக்கு இங்க இருக்க பிடிக்கல “, என அவள் முகம் சுளிக்க.
” சரி சரி , ரொம்ப புழம்பாத நாம கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம் நீ ரெஸ்ட் எடு நான் போயிட்டு பில் செட்டில் பண்ணிட்டு வந்துறேன் . என்று சூர்யா வெளியே சென்று விட்டான்.”
மதி, அவன் போய்விட்டான் என்று உறுதி படுத்திகொண்டு , ’’ஸ்ஸப்பா என தன் வயிற்றில் கை வைத்து சாரி டா செல்ல குட்டி , நீங்க என் வயிற்றுக்குள்ள இருக்கிங்கன்னு அம்மானால கண்டே பிடிக்க முடியலை டா பட்டு , இப்போதைக்கு உன் வரவ பத்தி உன் அப்பா கிட்ட சொல்ல முடியாத நிலைல இருக்கேன் , இன்னும் கொஞ்சம் நாள் தான் குட்டி கண்ணா எல்லா பிரச்சனையும்.. சரி ஆனா உடனே உன்னை பத்தி உங்க அப்பா கிட்ட சொல்லிடுறேன் ,சரியா இப்போ சமத்து. பிள்ளையா இருக்கணும் என்ன என்று பேசி கொண்டே மதி உறங்கி விட்டாள்”
” பணத்தை கட்டிவிட்டு உள்ளே வந்தவன் அப்பிடியே நின்றுவிட்டான் பின்ன உறங்குபவள் அவனது உயிர் அல்லவா . மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்து இன்னும் கொஞ்சம் நாள் தான் மதி இன்னும் கொஞ்சம் நாள் தான் இந்த சந்தியா ராஜேஸ்க்கு ஒரு வழி பண்ணிட்டு, உன்னை விட்டு எங்கையும் போக மாட்டேன் உன்னை எந்த அளவுக்கு காயே படுத்தினேனோ அத விட அதிகமா உனக்கு அன்பை மட்டுமே கொடுக்க போறேன் மதி…ஐ ப்ராமிஸ் யு மதி… என் வேலை முடிக்கிற வரைக்கும்…உன் பாதுகாப்புக்கு இப்போ எதாவுது வழி பண்ண வேண்டுமே… என அவள் விழித்து இருப்பது போல் அவன் பேசி கொண்டே போக அவள் இடத்தில மெல்ல அசைவு தெரியே சூர்யா மெல்ல அவள் தூக்கம் களைந்துவிடாமல் விலகி அமர்ந்தான்
அவள் விழிக்கும் வரை அங்கயே அமர்ந்து ஆபீஸ் வேலைகள் எல்லாம் முடித்தான் பிறகு மதியின் பாதுகாப்பு பற்றி என்ன செய்யே வேண்டும் என்று சூர்யாஅந்த அறையில் அங்கும் இங்கும் நடந்த படி யோசித்து கொண்டு இருந்தான் கொஞ்சம் நேரம் கழித்து.. ஜோர்ஜ் இடம் பேசி அடுத்து என்ன செய்ய வேண்டும்.. என்று அவனுக்கு மெயில் அனுப்பி முடிக்க…மதி எழ சரியாக இருந்தது
எழுந்தவள்.. அங்கே சூர்யா இன்னும் இருப்பது தெரியே வர…… ” ஆச்சர்யத்தில் அட , மிஸ்டர் சூர்யா.. நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க ஆபீஸ் போகல..”
அடிப்பாவி இன்னும் உனக்கு நான் மிஸ்டர் சூர்யாவா… இத மொதல மாத்தணும் , என மனதுக்குள் நினைத்தபடி அது வந்து மிச்செஸ் சூர்யா.. ஆழ்ந்த..உறக்கத்துல இருந்ததுனால அவங்க முழிக்கிற வரை காத்து இருந்து கையோட அழைச்சுட்டு போகலாம் மிஸ்டர் சூர்யா நான் இங்கே வைடிங்…” என சூர்யா அவளை பதில் சொன்னான்.
” என்னது என்க்காகவா.. அப்போ ஆபீஸ்..”
” ஆபீஸ் வேலை எல்லாம் இங்க இருந்தே பார்த்துட்டேன் ம்மா இப்போ நாம வீட்டுக்கு போக வேண்டியது தான் கிளம்பலாமா ”என மெல்ல அவள் இறங்க உதவினான்
” ஹ்ம்ம்.. சரி[ மனதுக்குள் இது என்ன புதுசா… இந்த உருகு உருகுராரு புதுசா ஏதும் பிளான் .. ச்சே ச்சே.இப்போ எல்லாம் நல்லா தான் பேசுறாரு.. நாமலே ஏன் போட்டு குழம்பிக்கிட்டு… என்று நினைத்து கொண்டே….இருந்தவள்..”
அவள் கண்முன் சொடுக்குகிட்டவன் “ஹலோ மேடம் ,என்ன யோசனை.. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமா வேண்டாமான்னா என்று சூர்யா கேலி செய்யே….”
” கடவுளே…, அது எல்லாம் ஒன்னும் இல்லை போகலாம் என அவள்
ஒரு அடி எடுத்து வைக்க , அதில் மீண்டும் தடுமாறினாள்
சூர்யா, அவள தாங்கி பிடித்து.. ” ஹே, என்ன ஆச்சு மறுபடியும் தலை சுத்துதா வேணும்னா இன்னைக்கு தங்கிட்டு காலையில கிளம்பலாமா “
” ஐயோ வேண்டாம் வேண்டாம் நான் நல்லா தான் இருக்கேன் நாம இப்போவே கிளம்பலாம்…” மதி அடம் பிடிக்க
” சரி.. ஆனா ஒரு கண்டிஷன் உனக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி இருந்தா நாம திரும்ப ஹோச்பிடல் வரணும் அப்போ.. அடம் பிடிக்க கூடாது என்ன என அவன் சொல்ல..”
” இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்று.. .மதியும் அவன் சொல்லுக்கு சரி என்று தலை ஆட்டி வைத்தாள்.. “
” ஹ்ம்ம் வா போகலாம்.. என்று சூர்யா அவளை அழைத்து கொண்டு டாக்டர் ராம் இடம் சொல்லிவிட்டு கிளம்பினான் “
” வீட்டுக்கு சென்ற சூர்யா ,மதி காரில் இருந்து இறங்க உதவி செய்ய அதுக்குள் பானும்மா வெளியே வந்து ‘ தம்பி என்ன ஆச்சு மதிக்கு??
மரகதம் பாட்டியும் ஏன்டா ப்பா என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல நீ எங்க போக வர கூடாவா வீட்டுல சொல்லிட்டு போக கூடாதுன்னு இருக்காஎன அவர் கேட்க.
மதி அவசரமாய் ” பாட்டி அது எனக்கு…”
” நீ பேசதம்மா.. உனக்கு உடம்பு சரி இல்லைன்னு எனக்கு தெரியும். அதுக்கு இந்த பையே எந்த ஹோச்பிடல் அழைச்சுட்டு போனான்னு ஒரு
வார்த்தை சொல்லிட்டு போனா எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ல
” பாட்டிம்மா சாரி.. இனி இப்பிடி நடக்காம. பார்த்துகிறேன்…”என சூர்யா கெஞ்ச
” ம்ம் பார்க்காலாம் பார்க்காலாம்… இப்போ சொல்லு மதிக்கு என்ன என்னாச்சு.”
” சரியா சாப்பிடதா நால வந்த மயக்கம் தானாம் பாட்டி வேற ஒன்னும் இல்லை சரி பாட்டி ஒரே கச கசன்னு இருக்கு நான் இப்போ வந்துறேன் நீங்க மதிகிட்ட பேசிகிட்டு இருங்க என சூர்யா சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான்
” அவன் போய்விட்டான் என்று பார்த்த பாட்டி மதி கையே பிடித்து நீ சொல்லும்மா என்ன ஆச்சு சூர்யா சொல்லிவிட்டு போறது உண்மையா வெறும் பசி மயக்கம் தானா ஆனா எனக்கு வேற மாதிரி தோன்றுதே ம்மா..”
” பாட்டி.. என மதி அதிர்ந்து விழிக்க…”
” உன் வயச கடந்து தானே நானும் வந்து இருக்கேன் எனக்கு புரியாதா “
” அது வந்து பாட்டி… .. என அவள் திணற…”
” பரவாயில்லை. மதி உனக்கு சொல்லும் பொது சொல்லு டா.. ஆனா கவனமா இரு என்ன போ போய் ரெஸ்ட் எடு.. என மரகதம் அவளை அனுப்பி வைத்தார்”
” மதி.. ஏதும் பேச முடியாமல் எழுந்து சென்றாள்”
அங்கே இருந்து போனவளை பார்த்த பாணும்மா ,பாட்டிடம்,”என்னம்மா இதுங்க ரெண்டும் இப்பிடி இருக்குதுங்க,”
” ஹ்ம்ம் அது தான் பானு… பாப்போம் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் எத்தனை.. நாளைக்குன்னு..”என சொல்லிவிட்டு யோசனை உடன் அமர்ந்துவிட்டார்”
அறைக்கு வந்த மதி, பாட்டியே எப்பிடி மறந்தோம்.. நாளைக்கு விடிந்த உடனே அவங்க கிட்ட உண்மையே சொல்லிடனும்… அப்போ தான் எனக்கு நிம்மதி. என முடிவு செய்த படி மருந்தின் வேகத்தில்.. மீண்டும் படுத்து உறங்கிவிட்டாள்…”
குளித்து முடித்து தன் உடையே மாற்றி கொண்டு வெளியே வந்தவன்.. மதி உறங்குவதை பார்த்து அவளுக்கு போர்வையே சரியாக போர்த்தி விட்டு வெளியே வந்தான்…”
பாணு, ” தம்பி சாப்பாடு.. எடுத்து வைக்கவா…”
” ஹ்ம்ம் எடுத்து வையிங்க பாணும்மா,ரொம்ப பசிக்குது” அவன் சொல்ல
” சிறுது நேரத்தில் சாப்பிட்டுவிட்டு நாளை விடியல் தனக்கு எப்பிடி இருக்க போகிறது என்று யோசித்த படி அவனும் சென்று உறங்கிவிட்டான் இனி… சந்தியா ராஜேஷை. சூர்யா என்ன செய்யே போகிறான் சந்தியா சூர்யாவிடம் இருந்து எப்பிடிதப்பிக்க போகிறாள்
விடிந்ததும் சூர்யா முக்கியமான வேலையாக கிளம்பிவிட போகும் போது அவன் பானுவிடம் மதியே எழுப்ப வேண்டாம். அவள் எழுந்துரிக்க போது எழட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
வெகு நேரம் கழித்து மதி எழுந்து மெதுவாக தன் காலை வேலையே முடித்துவிட்டு பாட்டியே பார்க்க சென்றாள்.
அங்கே மரகதம் ஏதோ புத்தகம் படித்த படி மதி வருவதை பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்… அவருக்கும் தெரியும் எப்பிடியும் மதி தன் இடம் பேச வருவாள் என்று.
“பாட்டி”, என மதி அறை வாசலில் தியங்கியே படி நிற்க
மரகதம், “வாம்மா மதி ஏன் இவ்வளோ தயக்கம்..என்று அவர் சொன்னது தான் தாமதம்
மதி” பாட்டி என்று அவர் இடம் ஓடி சென்று அவர் மடியில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்காத மரகதம் பதறிவிட்டார்… ” அய்யோ மதி என்ன என்னமா ஏன் இவ்வளோ அழுகை, உடம்புக்கு வேற ஏதும் பிரச்சனை இல்லையே என்று கேட்ட படி, அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க..
மதி தேம்பி கொண்டே” என் என்ன மன்னிச்சுடுங்க பாட்டி.. ந… நான் ஏதும், வேணும்னு பண்ணல பாட்டி என்று அவள் சொல்ல
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாத மரகதம்” மதி இடம் மதி முதல அழுகையே நிறுத்திட்டு என்ன நிமிர்ந்து பார்த்து என்ன நடந்ததுன்னு சொல்லுமா.. என்று கொஞ்சம் அதட்டல் கலந்த குரலில் கேட்க..”
அதில் கொஞ்சம் தெளிந்த மதி..” பாட்டி முதல நீங்க என்ன மன்னிக்கணும்.....என்று ஆரம்பித்து சூர்யாவை..கோவிலில் சந்தித்தது.. , சந்தியாவின் கெஞ்சல் அடுத்து அவசரமாக தனக்கும் சூர்யாவுக்கும் நடந்த திருமணம் , சூர்யாவின் கோபம் அதுனால தான் தற்கொல்லைக்கு முயன்றது என எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்”
”மதி சொன்ன அணைத்து விசையத்தை கேட்ட பாட்டி அதிர்ச்சியில் அட கடவுளே , அந்த வீனா போனவ பேச்சை கேட்டா இந்த பையே இவ்வளோ வேலை பண்ணினான் இது தெரியாம இவ்வளோ நாள் இவன் வேலை விசையமா வெளியே போறான் வராண்ணுல நினைச்சுகிட்டு இருக்கேன் முன்னவே தெரிஞ்சு இருந்தா அவ சகவாசம் இல்லாமல் பண்ணி மாட்டேன் என கோபத்தில் சூர்யாவை அவர் திட்ட ஆரம்பிக்க..”
” தப்பு செய்தவள் சந்தியா ஆனா திட்டு வாங்குவது சூர்யாவா அதை
கேட்க சகிக்க முடியாதவளாய் ,மதி அவசரமாக ” ஐயோ பாட்டி அவங்க மேல எந்த தப்பும் இல்லை எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான் அவளுக்கு நான்,உதவி பண்ணினேன் தப்பா,நினைச்சுகிட்டு இவ்வளோ செய்துட்டாங்க, ..நீங்க கோப பட்டு.. அவர ஏதும் சொல்லிவிடாதிங்க..என்று பதத்துடன் சொல்ல..”
அதை கேட்ட. மரகதம் சிரிக்க ஆரம்பித்தார்…,’ நல்லா இருக்கு டி ம்மா உன் நியாயம்.அவன ஒன்னும் சொல்ல கூடாதா.. சரிதான்… அவன் பண்ணின வேலைக்கு அவன ஒரு தடவையாவுது திட்டியே ஆகணுமே,உன்னை போட்டு இவ்வளோ மாசமா படுத்தி எடுதுற்கான் “
” பாட்டி, அவர் நிலைமை அப்பிடி அவர் இடத்துல யாரா இருந்தாலும் அப்பிடி தான் செய்து இருப்பாங்க என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே , அவளுக்கு குமட்டி கொண்டு வர மதி வேகமாக எழுந்து குளியல் அறைக்கு ஓடினாள் சிறுது நேரம் முன்னாடி சாப்பிட்டது எல்லாம் வெளியே வந்துவிட அவள் அப்பிடியே தலையே பிடித்து கொண்டு தரையில் சரிந்து அமர்ந்துவிட்டாள்….”
மதி என்னம்மா ஆச்சு ,என்று மரகதம் அவள் பின்னால் எழுந்து வர அங்கே மதி தன்னை சமாளித்து கொண்டு மெதுவாக எழுந்து ஒன்னும் இல்லை பாட்டி கொஞ்சம் வாமிட் தான். ..”
” கடவுளே பாட்டியோட ஞாபக சக்தி இவ்வளோ அபாரமா இருக்கே என்று நினைத்த படி அ. அது வந்து பாட்டி..என அவள் சொல்லுவதுக்குள் திணற..
மரகதம்.. ” என்னம்மா ,உடம்புக்கு. ஏதும் இல்லையே.. என்று பதத்துடன் கேட்க..
” அது எல்லாம் இல்லை.. பாட்டி... நீங்க .. நீங்க..வந்து.அது என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் முகம்… சிவந்து..விட…
அவள் என்ன சொல்ல போகிறாள். என்று மரகதம்.. புரிந்து கொண்டார்…”
சந்தோஷத்தில்,அம்மா டி. மதி.. உண்மை தானே நீ சொல்ல வந்தது… என அவள் கரம் பிடித்து கொண்டு கேட்க.. “
” ஹ்ம்ம் உண்மை தான் பாட்டி நேத்து தான் கன்பார்ம் பண்ணினேன்…”
” அப்பிடியா பாரு இந்த சூர்யா இத கூட என் கிட்ட சொல்லாமல் ஆபீஸ் போயிட்டானே.. வரட்டும் அவன் பேசிக்கிறேன் பாணு சீக்கிரம் இங்க வா” என அழைக்க
” சூர்யா என்று சொன்ன உடனே மதி திடுக்கிட்டு அவரை பார்த்து ஐயோ ,பாட்டி இது அவருக்கு இன்னும் தெரியாது என்று சொல்ல. “
” என்னது…??? “பாட்டி அதிர்ந்து போய் கேட்க
“ஆமா பாட்டி… இப்போ வரைக்கும் நான் இத அவர் கிட்ட சொல்லவே இல்லை”
” ஏன் மதி உனக்கும் சூர்யாவுக்கும் மறுபடியும் ஏதும் பிரச்சனையா என்று அவள் இடம் கேட்க..”
” அப்பிடி எல்லாம் ஏதும் இல்லை பாட்டி.. நீங்க முதல வாங்க இப்பிடி உட்காருங்க என அவரை அழைத்து கொண்டு அங்கே கிடந்த சோபாவில் அமர செய்தாள் மதி, பிறகு அவர் கால் அருகே தரையில் அமர
அதை பார்த்த மரகதம், பதறி போய், என்னம்மா மதி இது கிழே போய் உட்காந்துகிட்டு எழுந்திரி முதல என மதி அவர் சொல்ல..”
இல்லை பரவாயில்லை.பாட்டி ம்மா.. நான் இப்பிடியே உட்கந்துக்கிறேன்..இப்போ..நான் சொல்ல போறத நீங்க பதட்டமடாம.. நிதானமா கேட்கணும் சரியா “ என மதி சொல்ல
” மதி எ..என்னமா விஷயம்… ஏன் இவ்வளோ பீடிகை போடுற நீ விஷையத்தை சொல்லு ?? “பாட்டி கேட்க
” பாட்டி இப்போ தானே சொன்னேன் நீங்க உணர்ச்சி வச படகூடாதுன்னு ,சரி நான் விசையதுக்கு வரேன் என்று மதி.. ,” சூர்யா தன்னை வந்து சந்தித்தது கல்யாணம் பேச்சை எடுத்து அதுக்கு சந்தியா அவளை சம்மதிக்க வைத்தது என ஆரம்பித்து.. இதோ இப்போ வரைக்கும் நடந்ததை. எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்…”
எல்லாத்தையும் கேட்டு முடித்த மரகதம்.. அப்பிடியே அதிர்ச்சி உடன்
தனது நெஞ்சில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார் அவரது நிலைமையே பார்த்த மதி. பாட்டி.. பாட்டி என்று அவரை போட்டு மதி உலுக்க.
அப்போது தான் . ஹான்.. என்னம்மா என்ன சொன்னே”
” உங்களுக்கு என்ன ஆச்சு.. பாட்டி.. ஏன் இப்பிடி வேர்க்குது.. இருங்க முதல உங்க பிபி. செக் பண்ணுறேன்.. என்று சொல்லிவிட்டு…..அவள் எழ போக..
மரகதம் அவளை தடுத்து..வேண்டாம் மதி.. உட்காரு.. . இவ்வளோ நடந்து இருக்கு… ஏன் மதி இத என்கிட்டே அப்போவே …. அந்த பையே வேற அவள நம்பி இவ்வளோ வேலை பார்த்து இருக்கானா என்று அவர் கோபம் சூர்யாபக்கம் திரும்பியது
மதி பயந்து விட்டாள். எங்கே அவர் சூர்யாவை தண்டித்து விடுவாரோ என்கிற கவலையில் அவசரமாக , ” இல்ல பாட்டி அவர் மேல எந்த தப்பும் இல்லை.. எல்லாம் அந்த சந்தியா தான் கரணம்.. அவருக்கு என் மேல வெறும் வருத்தம் தான் அதுவும் இப்போ இல்லை நீங்க அவர ஏதும் சொல்லிடாதிங்க,அவளின் பதட்டம் பார்த்த…
பாட்டி.. ” உனக்கு அவன் இவ்வளோ அநியாயம் பண்ணி இருக்கான் நீ என்னடான்னா அவனுக்கே சப்போர்ட் பண்ணுறியே மதி.. “அவர் கவலையுடன் மதிடம் கேட்க
” அப்பிடி இல்லை பாட்டி.. தப்பு அவர் மேல இல்லாத போது நீங்க ஏன் அவர் மேல கோப படனும்….ப்ளீஸ் பாட்டி.. நீங்க அவர ஏதும் சொல்ல கூடாது.. அதுவும் இல்லாம.. நான் இப்பிடி இருக்கேன்னு நீங்க இப்போதைக்கு.அவர் கிட்ட சொல்ல கூடாது.. இப்போ கூட அவர்.. இந்த பிரச்சனை. பத்தி தான் பார்க்க போயி இருக்காங்க பாட்டி.. நீங்க. தான் இப்போ எனக்கு உதவி பண்ணனும்….”
அதுவும் சரி தான் என்று மரகதம் பாட்டிக்கும் தோன்ற… சரி மதி ஆனா.. “
” நீங்க கேட்க வரது புரியது.. பாட்டி கொஞ்சம் நாள் மட்டும் தான் அதுக்கு அப்புறம் நானே சொல்லிடுறேன், என்ன நீங்க நம்பலாம்….என அவள் உறுதியாக சொன்னாள்”
“ சரி மா நீ,ஏதும் பண்ணினாலும் பார்த்து பண்ணு.. இப்போ நீ ஒரு உசுரு கிடையாது அத மனசுல வச்சுக்கோ… ம்மா… மதி. சரியா.. “
” சரிங்க பாட்டி.. நீங்க என் பக்கத்துல இருக்கும் போது எனக்கு என்ன கவலை..என்று அவர் காலில் விழுந்துஆசிர்வாதம் வாங்க…
அதற்குள் பானு அங்கே வந்துவிட்டார்..அம்மா என்ன வர சொன்னிங்களே…”
வா வா பாணு ஆமா வர சொன்னேன்.. நீ சீக்கிரம் போய் நான் சொல்லுறத எல்லாம் இன்னைக்கு சமையலுக்கு….செய்துடு.. என அவர்… காரம் , இனிப்பு என்று வகை வகையாய்…சொல்ல….
“அதுவா பாணு, நம்ம வீட்டுல குட்டி..மதி இல்லை குட்டி சூர்யாவோ வர போறாங்க… அதான் என அவர் சொல்ல..”
” பாணுவும்,..மதி ரொம்ப சந்தோசம் மதி.. என அவரும் வாழ்த்தும் சொல்ல..”
பிறகு ,மரகதம்,பாணுவிடம் மதி பற்றின பிரச்சனையை சொல்லி.. அவரையும் எச்சரிக்கை செய்தார்… சூர்யாவிடம் விசையத்தை. மறைக்க முடிவு செய்தார்கள் இந்த மூவரும் ஆனால்.. விதி என்ன முடிவு செய்து இருக்கிறதோ யாருக்கு தெரியும் …??
இரவு உணவு பாணு செய்ய…உதவ சென்ற மதியே அவர் தடுத்து விட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் மதி மீண்டும் மரகதம் அருகே சென்று அவருடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்தாள்…”
அப்போது என்ன பாட்டி… வாசனை ஆள.. தூக்குது..என்று சூர்யா அங்கே வர. மதி அன்று இன்று பதறியே படி.. எழ
” இன்னும் இவ மாறவே இல்லையா.. என்று இருந்தது சூர்யாவுக்கு..”
மகரதமோ, அவள் வேகமாய் எழுந்திரிப்பதை.. மதி.. மெதுவா எழ கூடாதா கவனம் மதி என்று அவர் குரலில் கண்டிப்புடன் வர..
சூர்யா ,” என்ன பாட்டி ஆச்சு அவளுக்கு ஏன் அவ பார்த்து எழனும் …”
“ம்ம் முடியாம இருந்தால டா நேத்து முழுவதும்.. இப்போ இப்பிடி எழுந்து மறுபடியும்.. எதுனா வந்தா என ஆகுறது அதுக்கு தான் அப்பிடி சொன்னேன்… தப்பா”என அவர் அலட்டிகொள்ளாமல் சொல்ல
”சரி தான் பாட்டி நீங்க சொல்லுறது என்று சொல்லிவிட்டு மதியே அவன் பார்க்க :
அவளோ.,. இவன் பக்கம் திரும்புவேனா என்று நின்று கொண்டு இருந்தாள்.. மனதுக்குள்.. மரகதம் இடம்.. நூறு முறை நன்றியே சொல்லிக்கொண்டு இருந்தால்…”
“சரி சரி சூர்யா போய் முதல கை கால் அலம்பிட்டு வா நேரம் ஆச்சு சாப்பிட.. என பாட்டி சொல்ல
அவருக்கு ஏதோ புரிவது.. அங்கே இருந்து நகர்ந்துவிட்டார்.. இப்பொது மதி மட்டும் சூர்யா அங்கே நிற்க..
” ஹ்ம்ம்கும்.. என்ன பேச்சை காணோம். ”
” அது எல்லாம் ஒன்னும் இல்லை நீங்க போய் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க நேரம் ஆச்சு என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட.. “[ இந்த விசையத்தை எப்பிடி சமாளிக்க போறோம் என்கிற யோசனையுடன் இருந்ததால் அவளால் சூர்யாவுடன் சரியாக பேச முடியவில்லை]
என்ன ஆச்சு இவளுக்கு என அவன் அளவை பற்றி நினைத்த படி இரவு உடையே மாற்றிவிட்டு.. டைனிங் ஹாலுக்கு வந்து சாப்பிட அமர்ந்தான்..
என்ன பாட்டி விசேசம் அப்போவே கேட்டேன் இவளோ ஐட்டம் இருக்கு
இன்னைக்கு “
” சும்மா தான் சூர்யா நீ சாப்பிட்டு. அவர் அமைதியாக சாப்பிட, பானும்மா எல்லாருக்கும் பரிமார..”
அப்போது சூர்யா என்று அழுத படி சந்தியா அங்கே வந்து சேர்ந்தாள்……….
அனைவரும் இரவு உணவு சாப்பிடு கொண்டு இருக்கும் பொது தான் அங்கே சந்தியா சூர்யா என்று அழுத படி வந்து சேர்ந்தாள்..
அவள் வருகையே மதி மரகதம் எதிர் பார்க்காததால்.. அதிர்ந்து சூர்யாவை பார்க்க…
சூர்யாவோ… இதுக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பதம் இல்லை என்று சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருக்க..
சந்தியாவோ. அவனது இந்த செயலில் அவனை கோபத்துடன் பார்த்தாள்.அவனோ அவளை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை இல்லை- இல்லை நிமிர்ந்து பார்க்காதது போல் நடித்தான்…. அவன் தன்னை பார்க்க மாட்டான் என்று உணர்ந்த சந்தியா வேறு வழி இன்றி… அவளே … மீண்டும் வராத கண்ணீரை வரவழைத்து கொண்டு .. சூர்யா என்று அழைக்க..
சூர்யா… சொல்லு சந்தியா என்ன இந்த நேரத்துல இங்க வந்து இருக்க.. ஆபீஸ் விசயம்னா அது நம்ம காலையில கூட பேசலாம், இப்போ நீ கிளம்பு “ என சொல்லிவிட
” என்னது என்ன பார்த்தா இவனுக்கு ஆபீஸ் விஷயமா பேச வந்த மாதிரி தெரியுதா என்று நினைத்து கொண்டு.. ” என்ன சூர்யா இப்பிடி பேசுறிங்க.. நான் உங்கள பார்த்து நம்மள பத்தி பேச வந்தேன்.. ‘ அவள் நம்ம என்ற வார்த்தையே அழுத்தி சொல்ல
“மதியோ., சூர்யாவை ,என்ன இது என்பதுபோல் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்…அவளுக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை , இப்போது சந்தியா சூர்யாவை தனக்கு வேண்டும் என்று கேட்டாள் அவளுக்கே விட்டு குடுத்துவிட்டு போய் விட வேண்டுமா இல்லை என் கணவன் என்கிற உரிமையே எடுத்துக்கொண்டு சண்டை போட வேண்டுமா எனஅவனை பார்த்து கொண்டே இவள் யோசிக்க
சூர்யா , ‘ மனதுக்குள்.. இப்போவாது வாயே திறக்கிராளா பாரு.. நம்மள பத்தி பேசணும் ஒருத்தி ராத்திரி பொழுதுல வந்து நிக்கிறா அவளை கேள்வி கேட்டோம் ஏன் உட்காந்து இருக்கேன் என் சட்டையே பிடிச்சு என்னடான்னு இதுன்னு. கேட்டோம் அதுவும் இல்லை.. என்ன பொண்ணு இவ, அந்த அளவுக்கா என்ன மேல வெறுப்பு இவள வேற மாதிரி தான் டீல் பண்ணனும் முதல இருக்கிற இந்த ஜந்துவ என்னன்னு கேட்குறேன் என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தி முடித்துவிட்டு நிதானமாக சந்தியாவை பார்த்து சொல்லு என்ன பேசணும் அதுவும் இந்த நேரத்துல என்று கேட்க..
அவனது செயலை பார்த்த சந்தியாவுக்கோ, இவன என்ன செய்தால் தகும் , என்று இருந்தது இருந்தாலும் தான் வந்த வேலை ஆகா வேண்டுமே என தன் கோபத்தை.. கட்டுக்குள் கொண்டு வந்து அவனுக்கு பதில் சொன்னாள் ” என்ன சூர்யா இது நான் உங்க கிட்ட தனியா பேசணும் அதுவும் இப்போவே எனக்காக இது கூட செய்யே மாட்டிங்களா.. “
” ஹ்ம்ம் ....சிறிது யோசித்துவிட்டு சரி வா என்று அவளை அழைத்து கொண்டு ஆபீஸ் ரூம்க்கு சென்றான்..”
இங்கே மரகதம்.. என்ன மதி இது இப்போ எதுக்கு இவ இங்க வந்து இருக்காலாம். உனக்கு ஏதும் தெரியுமா என்று கேட்க..”
” மதியோ இல்லை பாட்டி.. எனக்கு இதுக்கும் எந்த சம்பதம் இல்லை.. என்று ஆபீஸ் ரூமை பார்த்து கொண்டே பதில் சொன்னாள்”
மரகதமோ.. ” இப்போதான் ஒரு சந்தோசமான செய்தி கேட்டு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன் அதுக்குள்ள மூக்கு வேர்த்த மாதிரி வந்துடா, ஏன் தான் இவன் இப்பிடி மாறி போனானோ அப்போவே இவகிட்ட பேச்சு வார்த்தை வச்சுக்காத டா சொன்னேன்.. இப்போ என் குலத்தை நாசம் பண்ணிடுவா போல தெரியுதே…. என்று அவர் புழம்ப ஆரம்பிக்க..
மதி வேகமாய் அவர் பக்கம் திரும்பி பாட்டி உணர்ச்சி வாசப்படாதிங்க உங்க உடம்புக்கு அது ..என அக்கறையாய் சொல்ல..
” ஆமா ரொம்ப முக்கியம் பாரு இது, உங்க ரெண்டு பேரையும் சந்தோசமா வாழ வச்சுட்டு, இப்போ வந்து நிக்கிறாலே இவளையும் ஒரு கை பார்க்காம போய் சேர மாட்டேன் , நீ கொஞ்சம் சும்மா இரு ”என மதியே அரட்ட
அதற்குள் பேசியது போதும் என்று சூர்யா மற்றும் சந்தியா வெளியே வந்தார்கள் சரி சந்தியா அதோ அங்கே இருக்கிற ஏதும் வேணும்னா???
” நான் உங்க கிட்டயே வந்து கேட்டுகிறேன் சூர்யா என கொஞ்சலாக சொல்ல “
அவனோ.” மதியே பார்த்து கொண்டே ஹ்ம்ம். ஹ்ம்ம் , சரி போய் தூங்கு …நேரம் ஆச்சு என்று சொல்லிவிட்டு நகர. “
சந்தியா. ,தங்களை மதி கவனிக்கிறாள் என்று உணர்த்துகொண்டு ஒரு நிமிஷம் சூர்யா… என அவன் அருகில் வந்தவள் அவன் கையே பிடித்து எனக்கு தெரியும் சூர்யா என்ன நீங்க புரிஞ்சுப்பிங்க, என்ன
மன்னிக்கவும்.. உங்களால தான் முடியும் அதே சமயம்.. என்ன மறக்காம இருக்கிறதுக்கு.. உங்களால மட்டும் தான் முடியும். என்று அவன் கைகளுக்குள் அவள் முகத்தை புதைத்து கொண்டு பேச,
சூர்யாவுக்கோ.. ” என்ன நடிப்பு டா சாமி….” என்று அவன் கையே வேகமாய் உருவி கொண்டான்..
” சூர்யா “என மீண்டும் சந்தியா அழைக்க
” போ சந்தியா, போய் தூங்கு, எனக்கும் தூக்கம் வருது.. “என நகர போக
அவனுடன் எப்பிடியாவுது ஒட்டிகொள்ளவேண்டும் என வாங்க சூர்யா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்.. “என சொல்ல
அதைகேட்டு சூர்யா நக்கலாக” ஹாஹா அது சரி.. என் வீட்டுல நான் தூங்க போக நீ எனக்கு ஹெல்ப் பண்ணுறியா ரொம்ப சந்தோசம் ஆனா சந்தியா எனக்கு போக வழி தெரியும் நீ கிளம்பு.. என்று அவன் சொல்லிவிட்டு தனது அறைக்கு வந்துவிட்டான்.
அங்கே மதி தலையானை மற்றும் உடைகள் எல்லாம் எடுத்து ஒரு பேக்கில் அடிக்கி வைத்துகொண்டு இருந்தாள் பக்கத்துக்கு அறைக்கு போவதுகாக
அதை பார்த்த சூர்யா , அவளிடம் என்ன இந்த நேரத்துல ரூம் கிளீன் பண்ணுற போல, எதுக்கு உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்க
மதி[ மனதுக்குள் ஒரு முடிவுடன் செயல் பட்டாள், அதாவுது சந்தியா திருந்தி வந்ததால் சூர்யா அவளை ஏற்றுகொண்டால் மதி சூர்யாவை விட்டு பிரிந்து சென்றுவிடுவதாக ,குழந்தை பத்தி யோசிக்கபோது தான் அவளுக்கு பதறியது பிறகு அவங்களுக்கு சந்தியா வந்துட்டாள அவ எவ்வளோ வேணும்ன்னா அவருக்கு குழந்தைகள பெத்து குடுப்பா, ஆனா எனக்கு உறவுன்னு இருக்கிறது இந்த குழந்தை மட்டும் தானே, அப்பிடி நடந்தா நாம குழந்தை விசையம் அவருக்கு சொல்லாமலே இங்க இருந்து கிளம்பிடனும் – அவள் அப்பிடி நினைக்கும் போதே இதயத்தில் வலிப்பது போல் இருந்தது, தவறு செய்கிறோமா என்கிற எண்ணமும் சேர்ந்து தோன்ற ச்சே ச்சே ரொம்ப நால அவர் கூடவே இருந்துட்ட நாள கொஞ்சம் கஷ்டமா தெரியுது போக போக தானா சரி ஆகிடும் என அவளே தனக்கு சமாதனம் சொல்லிகொண்டாள் ]
மதி முன் சொடுக்கிட்டவன் ,ஹே உன்னை தான் கேட்குகிறேன், இந்த நேரத்துல எதுக்கு இதெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்கே.
” அதான் உங்க சந்தியா உங்கள்கே உங்களுக்குன்னு உங்களுக்கு வந்தாச்சுல இனி என்ன ஏதுன்னு அவ சொல்லுவா அவ..கிட்டயே போய் கேட்டுக்கோ என்று சொல்லிவிடலாமா என நினைத்த மதி பிறகு ஏதும் சொல்லாமல் பக்கத்துக்கு அறைக்கு சென்றுவிட்டாள் “
“இவனோ அடிப்பாவி கடைசில இதுக்கு தான் இவ்வளோ நேரம் அமைதியா இருந்தாளா இது தெரியாம நான்.. டேய் சூர்யா இவள இப்பிடியே விட்டா சந்தியக்கு ரூட் மேப் கிடைத்துவிடுமே எதாவுது செய் என அவன் யோசித்தான் அடுத்த நிமிடம் அவள் சென்ற அறைக்கே போய் கதவை திறக்க நல்ல வேலை அவள் தாழ் போடாமல் விட்டு இருந்தாள், அங்கே மதி உடல் சோர்வால் படுத்த உடனே உறங்கி விட்டதால் இவன் வந்தது அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.
” ஹ்ம்ம்.. மனுசனோட தூக்கத்த இல்லை புருஷன் என் தூக்கத்த கெடுத்துட்டு எப்பிடி தூங்குரா பாரு என அவள் அருகே சென்று அவனும் படுத்து அவளை. அணைத்து கொண்டு உறங்க ஆரம்பிக்க..”
மதிக்கோ தன் மேல் ஏதோ உறுவது போல் தோன்ற என்னவா இருக்கும் என்று பயத்தில் அலற போக பட்டென்று சுதாரித்த சூர்யா, “ ச்சு.. மதி.. நான் தான் டி.. கத்தாதே, பேசாம தூங்கு”
” இவன் தானா என அவன் வார்த்தையில் அமைதியாக சிறுது நேரத்தில் எழுந்து அவன் இடம் இருந்து விலகி.. இங்க ஏன் வந்திங்க முதல போய் உங்க ரூம்ல படுங்க நான் தூங்கனும்“
” நீ மட்டும் தூங்கினா போதுமா நான் தூங்க வேண்டாமா.. “என அவன் கேட்க
” அதுக்கு ?? “இவள் சொல்ல
” நீயும் வா அங்கே”
” அது எல்லாம் முடியாது என் நால அங்கே எல்லாம் வர முடியாது.. ” என மதி உறுதியாக சொல்ல..
” அப்போ என் நாலையும் அங்கே போக முடியாது என்று சூர்யா முடிவாக சொல்ல”
” அதுவா அப்பிடி கேளு செல்லம் என்று மீண்டும் அவள் அருகே நெருங்கி அமர்ந்து நீ பழமொழி எல்லாம் கேட்டது இல்லையா..”
” நீங்க அங்க போய் தூங்குறதுக்கும் பழமொழிக்கும் என்ன சம்பதம் அவள் அவன் மேல் இருந்த கடுப்பில் கேட்க”
” இருக்கும்மா சொல்லுறத கேளு..”அவனும் பேச ஆரம்பித்தான்
” சரி சொல்லுங்க.. “
” குட், ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்திய “ என சூர்யா சொல்ல
இதை கேட்ட மதி அவனை பார்த்து முறைத்து.. ” நீங்க ராமனா என்று கேட்டாள்
ச்சீ ச்சீ . கேட்ட வார்த்தை எல்லாம் பேசாத டார்லிங்.. என்ன பார்த்தா உனக்கு ராமன் மாதிரியா தெரியுது ஆனாலும் பாரு உன் பதி பக்திக்கு ஒரு அளவு இல்லாம போச்சி என்று சொன்னவனை மதியால் முறைக்க மட்டுமே முடிந்தது இருந்தாலும் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இப்போ என்ன சொல்ல வந்திங்கலோ அதை சட்டுன்னு சொல்லிட்டு கிளம்புரிங்களா நான் தூங்கனும் என மதி மீண்டும் அவள் பாட்டை பாட ஆரம்பிக்க.
இவ ஒருத்தி என சூர்யா சுதாரித்து.. ” இரும்மா சொல்லுறேன். என அவளை மேலும் நெருங்கி , உட்காந்து அவள் விலகாத படி அணைத்த சூர்யா அவள் காதோரம் மெதுவா நான் ராமன் இல்லைடி அதே மாதிரி நீயும் சீதை இல்லை புரிந்ததா“
” அப்போ என்ன நீ ராவனன்னா . என மதி அவனிடம் இருந்து விலக மூயற்சி செய்தபடி கேட்க..”
” ஹ்ம்ம் ஆமா இராவணன் தான் ஆனா நீ இப்போவும் சீதை இல்லை என் மண்டோதரி என்று சொல்லியே படி மேலும் முன்னேற…
மதி” சூர்யா என்ன பண்ணுறிங்க விடுங்க என்று அவள் சொல்லி முடிக்கும் முன்
சந்தியா ” சூர்யா என்று அழைத்து வைத்தாள் ” உறக்கம் வராமல் உலாத்தி கொண்டு இருந்தவள் அங்கே சூர்யா மதியே தேடி செல்வதை பார்த்துவிட்டாள், நம்ம வந்தது புரிஞ்சுக்கிட்டு மதி தனியா போறா ,இவன் எங்கே போறான் அதுவும் மதி கூட[ அட பக்கி நல்ல கேள்வி கேட்ட போ ] என அவளும் அவனை தொடர்ந்து வந்து அவனை அழைத்தாள்
அவள் குரல் கேட்டு மதி வேகமாய் அவன் இடம் இருந்து விலகி ப்ளீஸ் போயிடுங்க சூர்யா அவ ஏதும் நினைச்சுக்க என்று சொல்லி முடிக்க சூர்யா அவள் கன்னத்தில் அறையே சரியாக இருந்தது “
” அம்மா என்று அலறுடன் மதி அவனை பயத்துடன் பார்க்க
அங்கே சூர்யா, கோபத்தின் உச்சியில் இருந்தான், அவள் முன் ஆள்காட்டி விரலை நீட்டி ” வாயே திறந்த கொன்னுடுவேன் டி பேசாத வந்து பேசிக்கிறேன் உன்னை என எழுந்து சென்று கதவை திறந்தான்
” அங்கே சந்தியா இவனை பார்த்து இங்க என்ன பண்ணுற சூர்யா என என்று அபத்தமான கேள்வி கேட்க”
அவனோ அவளை முறைத்துபடி ,” ம்ம், என்ன விஷயம், சந்தியா “
” இல்லை நீ தூங்கிடியான்னு தூங்கிடியான்னு பார்க்க வந்தேன்”
” நீ கொஞ்சம் தள்ளுனா நான் கதவை சாத்திட்டு தூங்குவேன் கொஞ்சம் நகரியா ”என்று சொல்லிவிட்டு அவன் பட்டு என்று கதவை அடைத்து விட்டு, மதிடம் தனது சண்டையே தொடர சென்றான்”
இங்கே வெளியே… நின்றுகொண்டு இருந்த சந்தியா அவமானம் பட்டு தனக்கு ஒதிக்கி கொடுத்த அறையே நோக்கி சென்றாள்
இவை அனைத்தும் மரகதம் பாட்டி கண்ணில் இருந்து தப்பவில்லை அவர் மனதுக்குள்,” பையன் ஸ்டெடியா தான் ஆனா இவ எதுக்கு இப்போ வந்து இருக்கா தெரியலையே யோசித்துவிட்டு
பானும்மாவிடம் ” எதுக்கும் இவ மேல ஒரு கண்ணு வை, இவ எப்போ விஷத்த கொட்டுவான்னு நமக்கு தெரியாதுல மதியே கொஞ்சம் இவ இருந்து தள்ளியே வை.. என்று அவர் சொல்ல.
சரிங்க அம்மா நான் பார்த்துகிறேன்..என பாணு சொன்னார்
இங்கே சந்தியா அவளுக்கு கொடுக்க பட்ட அறையில் குறுக்கே – நெடுக்கே நடந்த படி யோசித்தாள் நாம வந்தா அவன் கவனம் நம்ம மேல திரும்பும்ன்னு நினைச்சா யோசித்தாள், அவன் என்ன மதி மதின்னு அவள் பின்னலையே திறிரான் விட மாட்டேன் இத இப்பிடியே இதுக்கா நான் ராஜேஷ்கிட்ட இருந்து விலகி வந்தேன்..
நாம்ம ஒன்னு நினச்சு இங்கே வந்தா இங்க இவன் மதி..மதின்னுஅவ பின்னாடியே சுத்துறான் இதுக்கு தான் நான் ராஜேஷைவிட்டுட்டு இங்க வந்தேனா எப்பிடி இவன் கவனத்த நம்ம பக்கம்திருப்புறது ஹ்ம்ம் எப்புடி….?? என யோசிக்க அப்போது தான் ஒன்று அவள் ஞாபகத்திற்கு வந்தது அதாவுது இப்போ நாம அவன் அறைக் கதவை தட்டும் போது கோபமா கதவை திறந்தானே அவன் அப்போ மதிக்கு,அவனுக்கும் ஏதோசண்டை போல இது வச்சே அவன
சரி கட்டிவிடலாம் என சந்தியா நினைக்க[ பாவம் அவள் அறியேவில்லை.. இது சூர்யா மதிக்குள் வழக்கம் போல் நடப்பது ஒன்று என்று ] என எப்பிடி எல்லாம் மதியே இங்க அடிமை படுத்தி வேலை வாங்க வேண்டும் ,சூர்யாவை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று மனதில் ஒரு திட்டத்தை போட ஆரம்பித்தாள் அந்த முட்டாள்.
உன் திட்டம் எல்லாம் என் இடம் செல்லாது என்று அங்கே சூர்யாமுடிவு செய்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது கூட தெரியாமல்சந்தியா இருக்க
இங்கே அவன் மதி இடம் என்ன சொன்ன இப்போ சொல்லுடி.. என்று திரும்பி கோபமாய் கேட்ட படி கதவை சாத்திவிட்டு வரஆனால் பதில் சொல்ல வேண்டியவளோ உடல் சோர்வால் மட்டும் அவனின் கோபத்தின் மேல் இருந்த பயத்தால் அவன் சந்தியா இடம் பேசிவிட்டு வருவதுக்குள் படுத்து உறங்கிவிட்டாள்.
சூர்யாவோ, அப்படியே சிறுது நேரம் நின்று அவளை பார்த்துவிட்டு மீண்டும் அவள் அருகே சென்று படுத்துவிட்டான் அவன் மனம் காலையில் நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தது.
ஆபீஸ் சென்றவன் முதலில் ஜோர்ஜை அழைத்து , நான் சொன்ன வேலை என்ன ஆச்சு என்று அவன் இடம் கேட்க
” எல்லாம் பக்கவா ரெடியா இருக்கு சூர்யா என ஜோர்ஜ் சொல்ல
” அப்போ இப்போவே கிளம்பலாமா என ஜோர்ஜ் இடம் சூர்யாகேட்க “
” கிளம்பாலாம் டா என ஜோர்ஜ் தன்னோட சில பைல்களை,எடுத்து கொண்டு, சூர்யாவுடன் பேசியே படி நடக்க“
அதை பார்த்து கொண்டு இருந்த சந்தியா ” என்ன டா இதுஎன்னைக்கும் இல்லாத அதிசயமா இருக்கு ரெண்டும் சேர்ந்து வெளியே ஒரே சமையத்துல போகுது அப்பிடி எங்கே போறாங்க என்று அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே இருவரும்சார் பார்கிங்கை நெருங்கிவிட்டார்கள்..
பின் சற்று நேரத்தில் சுதாரித்து.. சந்தியா தனது வேலையேஅங்கே இருந்தவர்கள் இடம் செய்ய சொல்லி கொடுத்து விட்டுஅவசரமாய் கிழே சென்று வேகமாய் தனது காரை கிழப்பி கொண்டு அவர்களை பின் தொடர்ந்தாள்…….அவர்கள் சென்றஇடத்தை பார்த்த சந்தியா அப்பிடி அதிர்ந்து போய் காரை நிறுத்தினால் காரணம் அது ராஜேசின் ஆபீஸ் ,இங்கே எதுக்கு வந்தானுங்க இவனுங்க ரெண்டு பெரும், நம்மள பத்தி ஏதும் விசையம் தெரிஞ்சு இருக்குமோ என்கிற பயத்தில் அவர்கள்பின் தொடர்ந்து உள்ளே சென்று பார்க்க அங்கே சூர்யா கோபத்தில் ராஜேஷை அடி வெளுத்து வாங்கி கொண்டு இருதான் , எவ்வளோ தைரியம் இருக்கணும் டா என் மனைவி மேல கை வைக்க உன்னை, அடி பின்னி எடுக்க ,ஜோர்ஜோஅதை அமைதியாய் அமர்ந்து தனது டாபில் படம் பிடித்து கொண்டு இருந்தான்…
ஒரு கட்டதில். ராஜேஷ் வலி தாங்க முடியாமல் போதும் சூர்யா,என்ன விட்டுரு நீ என்ன சொன்னாலும் நான் அதைகேட்டுகிறேன்.
அதை கேட்ட அவனை நம்பாமல் சூர்யா ஒரு பார்வை பார்க்க..
அவனோ சத்தியம் சூர்யா என்ன நம்பு என அவன் இடம் கெஞ்ச, உயிர் போற மாதிரி வலிக்குது இப்போ போய் நான் பொய் சொல்லுவேனா.
அப்பிடியா சரி இதுல இந்த பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போடு அப்போ உன்னை நம்புறேன், என சூர்யா ராஜேஷ் இடம் அந்த பைல குடுக்க
அதை வாங்கி படித்த ராஜேஷ் அதிர்ந்துவிட்டான் இவ்வளோ காலமாக அவன் உழைப்பில் உருவாக்கியே அவனது கம்பெனி தனக்கு தருமாறு சூர்யா கேட்டு இருந்தான் மற்ற இருதொழிழ்கள் இருந்தும் சூர்யா குறிப்பாக இதை மட்டும் கேட்கிறான் என்றால் அதில் வரும் லாபம் என்றுவென்று தெரியாமலா இருப்பான் தன்னோடு மற்ற பிஸினெஸ்க்கும்அது தான் அஸ்திவாரம் அதுவ இல்லை என்றால் தன் நிலைமைஎன்ன என்று எண்ணி பார்த்தவனுக்கு உடல் வலியே விடமனதில் வலி கூடியது
அவன் சூர்யாவின் காலை பிடித்து மன்றாடினான், தன்னைவிட்டுவிடும் படி..
சூர்யாவோ அவனை அலட்ச்சியம் செய்துவிட்டு, அப்போஎனக்கு நீ பண்ணியது நான் உன்னை இப்பிடியே விட.. மனசு வரலையே என கோபத்தில் கேட்க
ராஜேஷ் மனம் நொந்து விட்டான் இவனை பற்றி தெரிந்து இருந்தும் ஒரு பெண்ணின் பேச்சை கேட்டு விட்டான், இவன்இடம் மோதியதி தப்போ ,தன்னிடம் மோத வருவான் என்று கணித்து வைத்து இருந்த ராஜேஷ் இவ்வளோ சீக்கிரத்தில்அவன் வருவான் என்று நினைத்து பார்க்கவில்லை , இப்போஎன்ன பண்ணுறது அவன் கேட்ட படி எழுதியும் குடுக்கவும்முடியாது அதை சமயத்தில் தன் உயிரையும் விட முடியாதுஎன்கிற பட்சத்தில்…இப்போது சூர்யாவிடம். நான் வேணும்னாஇனி உன் வழிக்கே வரமாட்டேன்னு எழுதி குடிக்கிறேன் சூர்யா அதுக்கும் மீறி நான் எதாவுது செய்தால் அப்புறம் நீ என்னசெய்தாலும் எனக்கும் சம்மதம் என கடவென ராஜேஷ் சூர்யா குடுத்த மற்றொரு ஸ்டாம்ப் பேப்பரில் தான் சொன்னதை எழுதிகையெழுத்தும் போட்டு கொடுத்தான்.
அதை வாங்கி படித்தவன் ஹ்ம்ம் நம்புறேன் , என்ன ஜோர்ஜ்போகலாமா ன்று மீண்டும் ஒரு முறை திரும்பி ராஜேஷை எச்சரித்து விட்டு அந்த இடத்தில இருந்து நகர்ந்தான்…
இதை அனைத்தும் சந்தியா வெளியே நின்று பார்த்து கொண்டு இருந்தாள் ஆனால் உள்ளே சூர்யா ராஜேஷ் இடம் என்ன பேசினான் என்று தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை..
இருந்து அவர்கள் செல்லும் வரையில் இவள் காத்துகொண்டு இருந்தாள்
சூர்யா ஜோர்ஜ் உடன் அங்கே இருந்து கிளம்பிவிட
அதுவைரையில் மறைந்து இருந்த அவள் வேகமாய் கதவை திறந்து கிழே அடிவாங்கி விழுந்து கிடந்த ராஜேஷ் அருகில்போய் நின்றாள்
ராஜேஷ் என்று அவள் கோபமாய் அழைக்க
“வலியில் தரையில் சுருண்டு கிடந்தவன் அவள் குரல் கேட்டுமெல்ல நிமிர்ந்து பார்த்தான்”
அவளோ அடிப்பட்டு கிடக்கிறான் என்று கூட பொருட்படுத்தாமல் எல்லாம் சொல்லிட்டியா ராஜேஷ் சூர்யா கிட்ட “என கேட்டாள்
வலியில் துடித்துக்கொண்டு இருந்த ராஜேஷ் அவளது கேள்வி புரியாமல் சந்தியா , என்ன சொல்லுற நீ, எதை சொன்னேன் எல்லாம் இருக்கட்டும் முதல என்ன ஹோச்பிடல் அழைச்சுட்டு போ வலில எனக்கு உயிரே போயிடும் போல என அவன் சந்தியாவிடம் கெஞ்ச
சந்தியா அவனை கோபமாய் முறைத்து, இப்போ என்ன நீ செத்தா போயிட்ட முதல என் கேள்விக்கு பதில் சொல்லு, அப்புறம் பார்க்கலாம் உன்னை ஹோச்பிடல் அழைச்சுட்டு போறதா இல்லை அடக்கம் பண்ண அள்ளிட்டு போறதான்னு ,
அவளின் இந்த ஒட்டாத பேச்சு, அவனை மேலும் காயே படுத்தியது இருந்தும் வலியையும் தாங்கிக்கொண்டு என்ன டி தெரியனும் உன்னக்கு இப்போ கேட்டு தொலை என சொல்ல
” ஹ்ம்ம் இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, அவனுக்கு எப்பிடி நீ தான்னு தெரிஞ்சது… என்ன பத்தி என்ன எல்லாம் அவன் கிட்ட சொல்லி தொலைச்ச, சந்தியா அவன் அருகில் மண்டியிட்டு கோபத்தில் கத்த
” ஏய்.. நான் உன்னை பத்தி ஏதும் சொல்லல அதுவும் இல்லாம, இன்னும் கொஞ்சம் நாள்ல நமக்கு கல்யாணம் நடந்தாலும் சூர்யா நம்மள சும்மா விடமாட்டான் , அதுக்காக தான் அவன்கிட்ட உன்னை பத்தி சொல்லல என சொல்லி கொண்டு இருக்கும் போதே..
சந்தியா அவனை இடைமறித்து என்னது நம்ம கல்யானமா இந்த ஜென்மத்துல அது நடக்கவே நடக்காது இனி எனக்கு எல்லாமே சூர்யா தான் எப்போ உன்னால சூர்யாவை ஒன்னும் பண்ண முடியலையோ அப்போவே நீ செல்லா காசா ஆகிட்ட அதுவும் அவன் கேட்டான்னு எழுதி வேற குடுத்து இருக்க இனி நீ எனக்கு வேண்டாம் அந்த சூர்யாவை எப்பிடி என் பக்கம்திருப்புறதுன்னு எனக்கு தெரியும் இனி நீ என்ன இனி தொந்தரவு பண்ணாதே என அவன் பதில் சொல்லுமுன் சந்தியா பொரிந்து தள்ளிவிட்டு சென்று விட்டாள்
ராஜேஷ்க்கோ பெருத்த அவமானமாக போய்விட்டது, ஒரு பெண் என்னவெல்லாம் பேசிவிட்டாள் இவளுக்காக தானே அவன் தன் நிலையே விட்டு கிழே இறங்கினான் , இதோ இப்போ கூட இவளுக்காக தானே அவன் தன் நிலையே விட்டு கிழ் இறங்கினான் , இப்போ கூட அவள் மேல் வைத்த அன்பினால் தானே அவன் வழியே சுமப்பது ஆனால் இவளோ அன்று அவன் வேண்டாம் என்று தன் இடம் வந்தாள் இப்போ நான் வேண்டாம் என்று அவன் இடம் மீண்டும் செல்லுகிறாள் , இதெல்லாம் சகிச்சுகிறதுக்கு நான் ஒன்னும் சூர்யா இல்லை விட மாட்டேன் டி உன்னை இதுக்கெல்லாம் நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும் என கோபத்தில் கத்தினான் அவனது சத்தத்தை கேட்ட, வேலைஆட்கள் வந்து அவனது சந்தம் கேட்டு ஹோச்பிடல் அழைத்து சென்றாகள்..
ராஜேஷிடம் எழுதி வாங்கி வந்த பின் சூர்யா தனது வேளையில் மூழ்கிவிட்டான் அப்போதான் ராஜேஷ் ஆபீசில் வேலை பார்ப்பவரில் ஒருவர் அவனுக்கு அழைத்து சந்தியா பேசி சென்றதை பத்தி சொல்ல நடந்ததை கேட்ட சூர்யா மேலும் இறுகி போய் அமர்ந்து இருந்தான்
அங்கே வந்த ஜோர்ஜிடம் நடந்ததை சூர்யா சொல்ல அதைகேட்டு ஜோர்ஜ் எனக்கு என்னமோ அவ உன்னை தேடிஇன்னைக்கே வருவா தோணுது டா சூர்யா.
ஆமா எனக்கும் அப்பிடி தான் தோணுது அதான் என்ன பண்ணுறது யோசிக்கிறேன்,
டேய் சூர்யா எது வேணுமாலும் பண்ணிக்கோ ஆனா என் தங்கச்சிக்கு மட்டும் எதுனா தலை வலியே குடுத்த மவனேஉன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.பார்த்துக்கோ “ ஜோர்ஜ் மிரட்ட
” ஹாஹாஹா , என்ன டா மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு, ”
” பின்ன அந்த புள்ள மனசு கஷ்ட பட்டா …. நான் மனுசனாஇருக்க மாட்டேன் இப்போவே சொல்லிட்டேன்.. சிக்கிரம் இவஉங்க வாழ்கையில இருந்து துரத்தி விட பாரு.. அதான் உனக்கும் மதிக்கும் நல்லது என்று மீண்டும் ஜோர்ஜ் அவனுக்கு யாபகம் படுத்தினான்.
நீ சொல்லுறதும் சரிதான் டா ஆனா உன் தங்கச்சி சும்மா இருந்தாலே போதும் எனக்கு இந்த சந்தியாவை பார்த்தாலோ இல்ல அவள் குரல் கேட்டாலோ என்னைவிட்டு விலகி போறதுலையே குறியா உன் தங்கச்சி
இந்த செய்தி ஜோர்ஜ்க்கு புதிது , என்னடா சொல்லுற என அவன் கேட்க
சூர்யா கவலையுடன் , ஆமா டா என்று சொன்னான்
அதைகேட்டு , ஜோர்ஜ் சூர்யாவிற்க்கு ஆறுதலாக , என்ன நடந்தாலும் நீ மதியே விட்டு குடுத்துராத டா சொன்னான்
நடந்தை அனைத்தையும் நினைத்து பார்த்தவனுக்குசந்தியாவின் வரவு அதிர்ச்சியே கொடுக்கவில்லை ஆனால் மதி சொன்னது தான் அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை மனதுக்குள் நான் என்ன அவளுக்கா தாலி கட்டி இருக்கேன்எப்போ பாரு அவ இருக்கா , அவ அப்பிடி நினைப்பா இப்பிடி நினைப்பா அது-இதுன்னு பேசிகிட்டு இதுக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும் மதி என உறங்கிக்கொண்டு இருந்தவளின் மூக்கை செல்லமாய் பிடித்து ஆட்டினான் அவள் தூக்கம் கலையாமல் இதுக்கு பதில் நீ சந்தியாவை இவள் இடத்தில நெருங்க விட கூடாது என்கிற முடிவில் உறுதியாகஇருந்தான்… இப்பிடி பலத்தையும் நினைத்த. அவனேஅறியாமல் உறங்கி விட்டான்…
இரவு வெகு நேரம் தூங்காதது நாள் காலையில் தாமதாமாக அவன் எழ மதி அதுக்குள் கிளம்பிவிட்டு இருந்தால்ஹோச்பிடளுக்கு.
இவ்வளோ சீக்கிரம் எங்கே கிளம்பிட மதி என அவன் கேட்க
ஹ்ம்ம் ஹோச்பிடளுக்கு தான் போவேன் வேற எங்கே போக, நேரம் வேற ஆச்சு என்று அவனுக்கு பதில் சொல்லியே படி தலை வார.. “
” நேரம் இருக்கே.. என்று கேட்டவனின் முகம் பார்க்காமல் பதில் சொல்ல அதை சூர்யா கவனித்து விட்டான் ஒ மேடம் என் முகத்தை பார்க்க மாட்டாங்களோ நீ பார்க்களைனா என்ன நான் பார்ப்பேனே என்று எழுந்து அவள் அருகே செல்ல..
மதி, வேகமாய் எழுந்து நான் கிளம்புறேன் நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க சூர்யா என்று சொல்லிவிட்டு கதவு அருகே போக.அதற்குள் சூர்யா அவளை எட்டி பித்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து இருந்தான்..” எங்க டி போற”
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மதி, சூர்யா என்ன இது விடுங்க நேரம் ஆச்சு எனக்கு இது விடுங்க நேரம் ஆச்சு , சூர்யா, விடுங்க என்ன சேலை கசங்கிட போகுது என திக்கிதினறியேபடி சொல்ல
” ஹ்ம்ம் வேற மாத்திக்கலாம் , என்று அவன் வேலையே தொடங்கியே படி அவள் இடம் ஏன் டி நேத்து அப்பிடி பேசின..”
” அவனை முன்னேற விடாமல் தடுத்த படி உள்ளத்த தானே சொன்னேன்….”மதியும் கோபமாய் சொல்ல
“என்னத்த டி உள்ளத சொன்ன, நீன்னு அவளா தான்அன்னைக்கி.. என் கிட்ட காதல சொன்னா நான் அதை ஏத்துக்கவும் இல்லை ”
” அதை சமயம் மறுக்கவும் இல்லை தானே..என்று மதி எடுத்துகொடுக்க..”
” ஹாஹா , அப்பிடி இல்லை முடியாதுன்னு சொன்னேன் டி அவ கேட்டா தானே அப்புறம் ஒரு நாள் வந்தா என்கிட்டே ஏதோ ஏதோ பேசி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா… “
” நீங்களும் வேண்டாம் வெறுப்பா வீராப்பா அவள் பேச்சைகேட்டு அவளை பழி வாங்க என்ன கல்யாணம் பண்ணிக்கவந்துடிங்க. என்ன எதுன்னு விளக்கம் கேட்கமா.”
” அதுக்கு தான் சாரி சொன்னேன்ல டி, “
” யாருக்கு வேணும் உங்க சாரி போங்க அதான் அவவந்துட்டாள, தூங்க போறதுக்கும் ஹெல்ப் எல்லாம் பண்ணுறேன்னு வேற சொல்லுறா போய் அவளையே என்ன வேணுமோ கேளுங்க செய்வா. என்ன விடுங்க இப்போ.. என்று அவன் இடம் விலக போக “
அவனோ,, ” ஒ ஹோ இது தான் சங்கதியா.. மேலும் அவளைஇறுக்கி அணைத்த படி.. . ஹே அப்பிடி எல்லாம் நீ சொல்லலாமா, அவ லவ் சொன்ன பொது கூட அவ கிட்ட நின்னுபேச மாட்டேன் ஆனா நான் உன் கிட்ட கோபத்துல இருந்தாஅப்போ. கூட என் நால நல்ல புள்ளையா இருக்க முடியலை ஏன் .நீ யோசிக்கலை பொண்டாட்டி “
” அவன் எதை சொல்லுகிறான் என்று மதிக்கு. புரிந்து..விட..ச்சே.. இந்த மனுஷனுக்கு வேற வேலை இல்லை.. பேச்சை பாரு..மனதுக்குள் நொந்து கொண்டாள்.இருந்தும் ஏன் என்று அவளும்திரும்ப அதை கேள்வி கேட்க..:”
” ஏன் னா யு ஆர் மை பெட்டெர் ஹல்ப் அண்ட் ஐ அம் இன் லவ் வித் யு பொண்டாட்டி என்று அவளுடன் கட்டிலில் சரிதான்நேற்று தடை பெற்ற ஒன்று இன்று எந்த ஒரு தடை இல்லாமல்நிறைவேற சூர்யா அவள் இடத்தில் தன் தேடலை முடித்துவிட்டு விலக மதியின் அலைபேசி அலறவும் சரியாக இருந்தது யார் .. என்று எடுத்து பார்த்தவள் ஐயோ அங்கிள் தான், நான் அப்போவே லேட் ஆச்சுனு சொன்னேன் கேட்டிங்களா இப்போ உங்கனால அவர்கிட்ட நான் தான் திட்டுவாங்க போறேன் என மதி , சூர்யாவிடம் சண்டை போட, ஆரம்பிக்க
” சச்சு இப்போ என்ன டி ஆச்சு , டாக்டர் ராம் அங்கிள் தானே என்று அவன் சிரிப்பை அடக்கியே படி கேட்க”
” ஆமா, அங்கிள் இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்இருக்குன்னு சொன்னாக அதுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன்சொல்ல சொல்ல கேட்கமா. யு ராஸ்கல்.. என அங்கே இருந்ததலையணையே எடுத்து அடிக்க..தொடங்க நின்ற அலைபேசிமீண்டும் அலறியது அவளோஅதை எடுக்காமல் சூர்யாவைபயத்தோடு பார்த்தாள், டாக்டர் ராம்க்கு மதி செல்லம் பிள்ளைதான் ஆனால் வேலை என்று வந்துவிட்டால், அவருக்கு எல்லாம் நேரத்தோடு நடக்க வேண்டும், அதுனாலயே என்னவோ மதிக்கு அவர் மீது பயம் கலந்த மரியாதையை இருந்தது”
” இவ்வளோ தானே இங்க குடு நான் பேசிக்கிறேன் என அவன் போன் எடுத்து அவரிடம் , அவளுக்கு வேண்டியே பதில் சொன்னான் அவன் பேசி கொண்டு இருக்கும் போதே மதி அவன் இடம் இருந்து நழுவி.. மீண்டும் குளியல் அறைக்கு சென்றாள்
டாக்டர் ராம் இடம் பேசி முடிக்க மதி மறுபடியும் ரெடி ஆகிவிட்டு இருந்தாள், அதை பார்த்த சூர்யா ஹே எப்போ டி. போன..“என கேட்க
” சூர்யா ப்ளீஸ் என அழுது விடுபவள் போல் சொல்ல. “
” ஓகே ஓகே கூல் இரு நானும் கிளம்பி வரேன் உன்னை ட்ரோப் பண்ண. என்று அவனும் ரெடி ஆகி வர இருவரும் சேர்ந்து மதி ஹோச்பிடளுக்கு கிளம்பினார்கள்..
மதியின் கையே பிடித்து அழைத்து கொண்டு சூர்யா வெளியே வர மதி.. ”
அதை பார்த்து மதி,எனக்கு நடக்க தெரியாதா என்ன கையே விடுங்க என அவள் சொல்ல
” அது எங்களுக்கு தெரியும் கொஞ்சம் பேசாம வரியா , அப்புறம் வெளியே என்ன நடந்தாலும் நீ கண்டுக்க கூடாது நான் சொல்லுற படிதான் செய்யனும் சரியா என அவன் அதட்ட..”
இதுக்கு மேல் பேச அவளுக்கு என்ன பைத்தியமா ,அவன் சொன்னதுக்கு எல்லாம் தஞ்சாவூர் பொம்மை போல் சரி சொல்லிக்கொண்டே பேசாமல் அவனுடன் வந்தாள்
வெளியே வந்தவன் ,நேராக பாணுமாவிடம் நேராக சென்று மதிக்கு நேரம் ஆச்சு பாணும்மா எங்களுக்கு சீக்கிரம் சாப்பாடு பரிமாறுங்க என சூர்யா சொல்ல
அப்போதுதான் அங்கே ஏதும் தெரியாதது போல் வந்த சந்தியா, அவனிடம் ,என்ன சூர்யா இவ்வளோ நேரம் கழிச்சி வந்து கால்ல சுடு தண்ணி ஊத்தின மாதிரி வந்து நின்னா அவங்க எப்பிடி எல்லாம் சீக்கிரம் செய்வாங்க என்ன அவள் ஆரம்பிக்க [ பின்ன காலையில் இருந்து அவனுக்காக காத்துகொண்டு இருப்பவள் அல்லவா , அதோடு சேர்த்து மரகத்தம் பாட்டிடம் திட்டு வேறு வாங்கி கட்டிகொண்டாள் அந்த கோபத்தை இப்பிடி தானே காட்ட முடியும்
அதிகாலை சூர்யா ஜோக்கிங்க்கு வருவான் அவனை பேசி சரி கட்டலாம் என எப்போது போல் பத்து மணிவரையில் உறங்குபவள் இன்று பார்த்து அவனுக்காக தன்னுடையே தூக்கத்தை தியாகம் செய்து வெளியே வந்து பார்த்தவளுக்கு அவன் எழுந்து வந்தது போல் தெரியவில்லை கொஞ்சம் நேரம் பொறுத்து இருந்து பார்த்தவளுக்கு காக்க பொறுமையின்றி சூர்யா அறையே நோக்கி அடி எடுத்துவைக்க அதுக்குள் மரகதம் அவளை பார்த்துவிட்டார்,எப்போதும் தன்னுடையே உணவை அவருடையே அறையிலே எடுத்துகொள்பவர் சந்தியா வந்தவுடன் ஹாலில் அவளை கவனிக்க அமர்ந்துவிட்டார், இது அவர் ஒரு இரவில் எடுத்த முடிவு, இவள் அவனை பார்க்க போக அவரோ, “சந்தியா எங்க போற இந்த நேரத்துல, கேள்விகள் கேட்டு படுத்தி எடுத்துவிட்டார்”
சந்தியா ,”[இந்த நேரத்துல கிழவி தூங்காம என்ன பண்ணுது,”என மனதுக்குள் நினைத்தப்படி “ அதுவந்து பாட்டி சூர்யா இவ்வளோ நேரம் தூங்க மாட்டாரே அதான் என்ன ஆச்சுண்ணு பார்க்க ..அதுவும் இல்லாம இந்த மதியே பாருங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம, தூங்குறா போல, எழுந்து வேலை எல்லாம் பார்க்காம நல்லா பட்டு மெத்தை கிடைச்ச மிதப்புல தூங்குறா அதான் என்னன்னு பார்த்துட்டு வரலாம்ன்னு
அவளது பேச்சு பிடிக்காமல் மரகதம் பட்டென்று “ அவ என்ன ஓசி சோறா ம்மா சாப்பிடறா , சீக்கிரமாவே எழுந்து பூஜை எல்லாம் முடிச்சுட்டு சூர்யாவை கவனிக்க போய் இருக்கா வர நேரம் ஆக தான் செய்யும் முடிச்சு ,அதுமட்டும் இல்லை சூர்யாக்கு மதி பக்கத்துல இருந்து எல்லாம் செஞ்சாத்தான் அவன் சும்மா இருப்பான் இல்லை மதி இங்கே அடுத்த வேலை பார்க்க முடியாது என சூர்யா மனசில் மற்றும் அவனது வீட்டில் மதி எந்த இடத்தில இருக்கிறாள், சந்தியா எந்த இடதில் இருக்கிறாள் என்று அவர் பேச்சில் உணர்த்தி விட
அதை கேட்ட சந்தியாவின் முகம் விழுந்து விட்டது மனதுக்குள் பாட்டியே ,”ஏய் கிழவி, பேசு எவளோ வேணும் நாளும் பேசு இன்னும் கொஞ்சம் நாள் உன் ஆட்டம் என்று பொய்யான மனகொட்டையே கட்டினாள் அவள்”
அவளது எண்ணம் ஓட்டத்தை கணித்த பாட்டி அவளிடம், நீ இப்பிடி உட்காரு சந்தியா அவன் வரும் போது வருவான், அவர் சொல்ல
அதைகேட்டு அவரை எதிர்த்து பேச முடியாமல், சூர்யா என்ன செய்கிறான் என பார்க்கவும் முடியாமல் அவஸ்த்தை உடன் காத்து கொண்டு இருக்க , அவனோ மதிக்கு நேரம் ஆச்சு என வந்து நின்றான் இவளை கண்டுகொல்லாமள்
“ பானும்மா..சீக்கிரம்’அவன் சொல்ல
” இதோ தம்பி எல்லாம் ரெடி சாபிட்ட வாங்க என அவர் சொல்ல..”
” வா மதி “
இதை எல்லாம் பார்த்துகொண்டு இருந்த சந்தியாவுக்கு கடுப்பு ஏறியது ஒரு வேலை தன்னை வெறுப்பு ஏத்துறான் நினைக்கிறேன் என நினைத்து விட்டு இருந்தாலும் விட்டு கொடுக்க மனமில்லாமல்.. அவன் அருகே சென்று உட்கார போனவளை தடுத்து
” சந்தியா நீ அங்கே உட்காரு. இங்க மதி தான் உட்காருவா. சோ..ப்ளீஸ் என அவனுக்கு எதிர் இருக்கும் சேரை அவன் காட்ட, சந்தியாவின் அவமானத்தால் சிவந்துவிட்டது
இது எல்லாம் மதி மெளனமாக வேடிக்கை பார்த்து கொண்டு நின்று இருந்தாள்
இப்போது சூர்யா மதியே பார்த்து, ‘உட்கார சொன்னேன் மதி.. நேரம் ஆச்சு அப்புறம் சாப்பிடம கிளம்புறது எங்கையாவுது போய் மயங்கி விழ வேண்டியது.. என அவன் அதட்ட..
“மதி வேகமாக அவன் அருகில் அமர்ந்துவிட்டாள்”
அவனோ தட்டலில் சாப்பாடு எடுத்து வைத்து அதில் கொஞ்சம் போல் எடுத்து அவள் வாய் அருகே எடுத்து செல்ல அவளோ சந்தோசம் கலந்த அதிர்ச்சி உடன் பார்த்தாள்
சந்தியாவோ கோபத்தின் உச்சியில் அவன் செய்வதை பார்க்க சகிக்காமல், “ சூர்யா அவ என்ன சின்ன குழந்தையா..ஊட்டிவிட உங்க லெவல்ல இருந்து கிழ இறங்கதிங்க என வார்த்தையே சந்தியா கொட்ட
அதைகேட்டு மதிக்கு கண்கள் சட்டென்று கலங்கிவிட்டது ,
அதை பார்த்த சூர்யா. அவள் முன்னாடி அழுது வச்சுராத டி என மதியே பார்வையால் அதட்டியே படி சூர்யா அவளுக்கு உணவு ஊட்டிவிட.. [ மனதுக்குள் மதி, ஏன் இப்பிடி பண்ணுறாரு எல்லாம் இந்த மனுஷன் நால வந்தது . கோபத்தை கூட தாங்கிக்கலாம் இப்பிடி செய்தா . ச்சே.. ] அவளும் மனதுக்குள் பொருமியே படி சாப்படு முடிக்க சூர்யா அவளை தொடர்ந்து அதே தட்டில் தனக்கும் பரிமாறி சாப்பிட்டு விட்டு கிளம்பினான்..
பிறகு எதோ யோசனை தோன்றி , “சந்தியாவை அழைக்க”
சத்யாவோ அவன் அழைத்த சந்தோஷத்தில் சொல்லு சூர்யா, என்று அவன் அருகில் ஓடி சென்றாள்
ஒன்னும் இல்லை எப்போ நீ உங்க வீட்டுக்கு போக போற என்று சூர்யா கேட்க
அந்த வார்த்தை கேட்டு அவள் காதுக்குள்.. எதையோ காய்ச்சி ஊத்தினது போல் இருந்தது அவளுக்கு ,இருந்தும் சமாளித்துவிட்டு அவனிடம் எதையோ ,” என்ன சூர்யா நான் தான் நேற்றே சொன்னேனே ,இந்த நிலைமைள்ள நான் அங்கே போக முடியாதுன்னு ,வீட்டுல அம்மாக்கு பதில் சொல்ல முடியாதுன்னு”
சொன்ன தான் , ஆனா நீ இங்க இருக்கணும்னா யார்கிட்டயும் பேச கூடாது,சரின்னா இங்கே இரு இல்லைனா, இப்போவே இங்க இருந்து கிளம்பிட்டு, அப்புறம் என் லெவல் என்னன்னு என்னக்கு தெரியும்
நீ சொல்லணும் அவசியம் இல்லை என மரகதம் போல் அவனும் வெண்மதிய கொண்டாட, சந்தியாவுக்கு சப்பென்று ஆகிவிட்டது, எலியும் பூனையா இருந்தவங்க எப்பிடி இப்பிடி மாறினாங்க என்கிற குழப்பமும் வேறு என அவள் யோசிக்க
அவள் முன் சொடுக்கிட்டவன், சொன்னது புரிஞ்சதா, சூர்யா கேட்க
“ம்ம் சரி சூர்யா” என்று சொல்லியவளுக்கு மனதுக்குள் மதிமேல் மேலும் வன்மம் கூடியது, “ இரு மதி ,நீன்னா அவனுக்கு உசுராமே , அந்த உசுர எப்பிடி பிரிக்கிறதுன்னு என்னக்கு நல்லாவே தெரியும் செய்யுறேன், அப்போ இந்த சந்தியா யாருன்னு [ அவள் தான் மதி-சூர்யா திருமணத்துக்கு கரணம் என்று மறந்துவிட்டாள்-அப்பாவி சந்தியா]
[அவள் தான் இங்க மதி வருவதற்கு கரணம் என்று மறந்துவிட்டாள் ]
சூர்யா அவளை அழைத்து ஹோச்பிடலில் சென்று விட்டு அங்கே இருந்தே அவனது ஆபீஸ் சென்று விட்டான்..
இன்றையே விடியல் சந்தியாவுக்கு அடுத்து அடுத்து.. ஏமாற்றத்தை கொடுக்க அவளோ வெறுப்பின் எல்லைக்கே சென்று விட்டாள்
ஆனாலும் மதி தன் இடம் தனியாக மட்டும் தருனதுகாக காத்து கொண்டு இருந்தால்…
சந்தியாவின் ஒவ்வரு முயற்சி செய்யே அதை சூர்யாவும் பாட்டியும் எப்பிடியாவுது கண்டிபிடித்து சரி கட்டிவிடுவார்கள் கடைசியில் மூக்கு உடை படுவது சந்தியாவாக தான் இருக்கும்
இது சரி வராது , என சந்தியாவும் வேறு ஒரு நாள் காக காத்து கொண்டு இருந்தாள் அந்த வெகுதூரத்தில் இல்லை என்று விதி மதியே சிரித்தது
இதோ சந்தியா சூர்யா வீட்டுக்கு வந்து நான்கு வாரங்கள் ஓடிவிட்டது இதில் சந்தியாவின் அம்மா அவளை எங்கே இருக்கிறாள் என்று தினமும் போனை போட்டு ஒருபக்கம் படுத்தி எடுக்க,
அவளோ வேலை விசையமாக வெளி ஊரில் இருக்கிறேன் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று போக்கு காட்டிக்கொண்டு இருந்தாள்
EPI-21
மதியின் வயிற்றில் குழந்தை வளர்ச்சியும் எந்த தடை இல்லைமல் இருந்தது , அவள் ஒல்லியாக இருப்பதால் வயிறு தெரியவில்லை, இருந்தாலும் சூர்யா சொன்னது போல் அவளை கொண்டாடினான், இவள் தான் அவன் அன்பு மழையில் திண்டாடி போனால் தன் மேல் கோபம் இருந்த போது கூட அவனுக்காக யோசித்தாள் இப்போ சொல்லவா வேண்டும் அன்றைக்கு சந்தியாவுக்காக சூர்யாவை விட்டுக் குடுப்பதை பற்றி மறந்தே போனாள்
இருவரும் காதலை சொல்லி கொள்ளவும் இல்லை அதை பற்றி கேட்டு கொள்ளவும் இல்லை.. இருக்குறதே போதும் என்று இருந்துவிட்டார்கள்.. [ இதுக்கும் சேர்த்து தான் காலம் தான் பதில் சொல்லவேண்டும் இல்லை சொல்ல வைக்க வேண்டும் பாப்போம்..அந்த நாளும் வெகு தூரதில் இல்லையோ என்னவோ ]
இங்கே இன்னும் ஒரு ஜீவன் சந்தியா மீதி கொலைவெறி உடன் காத்து இருப்பது பாவம் அவள் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.