All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் " வெண்மதியே என் சகியே "...!!! - கதை திரி

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI - 6




11452


b8712eb6d8ce883f0b58fb1c6702cb84.jpg

” பயப்பட…ஒன்னும் இல்லைன்னு சொல்ல மாட்டேன் கவனமா இருக்கணும் அவ்வளோ தான்” அப்புறம் இன்னும் ஒரு விஷயம் சொல்லணும் இல்லை கேட்கணும்.. “



” என்ன . ..”



” அது நாளைக்கு நான் ஹோச்பிடல் எப்போவும் போல போகணும் அதுக்கு எனக்கு அனுமதி வேணும் “.. என தியங்கிய படி கேட்க..



” ஹ்ம்ம்.. அது அப்புறம் யோசிக்கலாம்.. இப்போ எனக்கு பதில் சொல்லு எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்ததிச்ச.”



” சந்தியா.. உங்களுக்கு எதோ பிரச்னை சொன்ன அதை சரி.. பண்ண . தான்….



” ஹாஹா எனக்கு பிரச்சனை .. ரொம்ப சந்தோசம் .ஆமா எனக்கு என்ன பிரச்சனை.. என நக்கலாக. கேட்க..”



” அப்போது தான்.. மதி,. சிந்தித்தாள் .. ஆமா என்ன பிரச்சனை….என குழப்பத்து உடன் அவனை நிமிர்ந்து பார்க்க…. “



” என்ன ஆச்சு மதி… ஒன்னும் புரியலையா…’



” இல்ல அது.. “ சத்தியாமாக அவளுக்கு என்ன பதில் சொல்லுவதேன்றே தெரியிவில்லை



” அவ மேல அவ்வளோ நண்பிக்கையா.. உனக்கு.. ஒரு வார்த்தை

என்கிட்ட வந்து விசாரிக்கணும் கூட உனக்கு தோணலையா”



மதிக்கு இப்போ நடக்கும்….விஷயம்…. சற்று விவகாரமாக தெரிந்தது .என்ன சொல்லுறான் இவன் என அவனை பயத்துடன் பார்த்தாள்





” இல்லை அப்பிடி இல்லை. நான் உங்கள பார்த்து ; பேசனும்ன்னு. சந்தியா கிட்ட சொன்னேன் ஆனா அவ உங்க கிட்ட எல்லாம் சொல்லி விட்டதா சொன்னாலே.. அதுனால..



” சந்தியா சந்தியா… சந்தியா.. என அவன் கையில் இருந்த. கண்ணாடி க்ளாசை. தூக்கி எரியே

அதைக்கண்டு மதி..அதிர்ந்து…போய் நின்றாள் நல்லா கேட்டுக்கோ… உன் பெயரு கூட எனக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் தெரியும்”



” அப்போ நீங்க ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்திச்சிங்க…. “



” உன்னை வேண்டாம் சொன்ன அடுத்து அடுத்து பெண்கள்.. லிஸ்ட் ஏறவா அதை தடுக்க தான் . . ஆனா நீ விஷயம் தெரிஞ்சவளா இருப்பேன்னு நினச்சு உன் மேல கோபம் ”



“ என்ன விஷயம் ??” அவளுக்கு பயத்தில் அடிவயிற்றில் எதோ பிசைவது போல் இருந்தது



” ஹ்ம்ம் நல்ல கேள்வி இந்த கல்யாணம் என்னை பற்றி என் தொழில் ரகசியத்தை தெரிஞ்சுக்க தான் முதல் காதல் நாடகம் தோல்வி அடைந்தது இப்போ இது கல்யாணம் நாடகம் உன்ன வச்சு… “

” நீங்க சொல்லுறத பார்த்தா நான் எதுக்கு இந்த கல்யாணம் நாடகம் எதுக்கு உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னா டிடெக்டிவ் வச்சு தெரிஞ்சுக்கலாமே நீங்க அபாண்டமா… சந்தியா மேல பழி போடுறிங்க .. “ அப்போவும் அவள் சந்தியாவை விட்டு கொடுக்காமல் பேச



“ சூர்யா அவளை பார்த்து இதுக்கு பெயர் தான் நட்பா.. என கேலி செய்ய”



” மதி அவனை பார்த்து முறைத்தாள் “

” கோப படாத..என் அருமை பொண்டாட்டி டிடெக்டிவ் நால என் படுக்கை அறை வரைக்கும் வர முடியாது இல்லையா அதுக்கு இந்த ஏற்பாடு.. “

” நீங்க சொல்லுறத பார்த்த உங்க பத்தி நான் அவ கிட்ட சொல்லத்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்கேன் மாதிரி இருக்கு..என .கோபமா கேட்க..”

” பரவாயில்லை உனக்கு கூட கோபம் வருது…”

” மிஸ்டர்.. வார்த்தை அளந்து பேசுங்க..’

” எதுல.. அளந்து பேச.. அதையும் நீயே சொல்லிடு…அப்புறம் நீ சொல்லுறதான் சரி.. நீ அவளுக்கு என்ன பத்தி சொல்ல தான் இந்த கல்யாணம்.. என் பற்றி மட்டும் இல்லை இனிமேல் இருந்து நம்மள பற்றி.. சேர்த்து… “





” நம்மள பற்றி.. “





” அதாவுது நம்ம உறவை பற்றி… “

அவனது பேச்சு….அவளை முகம் சுளிக்க.. வைக்க..

அதை கவனித்த….சூர்யா. என்ன இதுக்கே முகம் சுளிக்கிற இப்பிடி ஒரு திட்டம் போட்டு இருக்காங்க தெரிஞ்ச அப்போ.. எனக்கு.. உன் சந்தியா மேல உன் மேலையும் கூட தான் அருவெறுப்பு இருந்தது.. ஆனா…



” இப்போ மட்டும் நான் நல்லவ ஆகிட்டேனா.. “





” நல்லவளா .. நீயா.. அதை இனிமேல் நான் தானே.. சொல்லணும்.. என பேசியே படி அவளை நெருங்க..
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனின் நெருக்கம் அவளை மேலும் கலவரம்ஆக்கியது…..மெல்ல பின்னல் நகர.. . அவன் அவளைபோடுற்படுத்தாமல்.. முன்னேறினான்…

” அங்கயே நிலுங்க.. மிஸ்டர். சூர்யா… .நீங்க பண்ணுறது சரிஇல்லை.”

” நான் இன்னும் ஏதும் பண்ணவே இல்லையே…”

அவனின் செய்யலை எப்பிடி தடுப்பது…. தெரியாமல்.. மதி.. ”நீங்க சந்தியாவுக்கு துரோகம் பண்ணுரிங்க… அவள..காதலிச்சு… …

” காதலா அதுவும் அவளை இதுவும்.. அவளோட கட்டு கதைலஒண்ணா… ஆனா.. மதி… தப்பு.. செய்தது என்னவோ அவள் தான் ஆனால் அதுக்கு தண்டனை உன் வழியா தான் அவளுக்குகிடைக்க போகுது… “

” என்.. என்ன சொல்லுரிங்க என பின் மேலும் வாங்கியே படி..மதி கேட்க ..

இனி சொல்லுறதுக்கு என்ன இருக்கு எல்லாம் செய்யல பாடு .. தான் என்று சொல்லிவிட்டு. சூர்யா.. அவளை நெருங்கி.. விட..

மதி.. அவன் இடம் இருந்து விட பட முடியாமல்…… ” சூர்யா.. நீங்கதப்பு பண்ணுரிங்க.. .. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல ..”

” ஆனா எனக்கு பிடிச்சு இருக்கே என அவளை… தூக்கி கொண்டு கட்டிலை நெருங்க.. மதி.. அவன் இடம் இம்முறை .. கெஞ்சினாள்

சூர்யா கொஞ்சம் பொருங்க.. நான் சொல்லுறத கேளுங்க.. “

அவன் ஏதும் காதில் வாங்காமல்…. அவளை கட்டிலில் கிடத்தி..அவள் மேல் படர… மதி அவனை தன் பலம் கொண்டு.. பிடித்துதள்ளினாள் சந்தியாவின் திட்டம்.. சூரியாவின் என்னத்தைதெரிந்து கொண்ட.. பின்….இதற்க்கு ஒரு முடிவு காணாமல்..அவனுடன்.. இணையே.. அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல்போனது ஆனால் அதை ஏதும் உணரும்நிலையில்..அவன்….இல்லை.. பெற்றோர் மறைந்த பின்.. மதி..தன்னோட ஆசை கனவு எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு புதைத்தாள் அவள் எண்ணம் முழுவதும் படிப்பில் இருந்ததால், அவள் மனதிலும். தன் திருமணம்.. இப்பிடி தான் நடக்கவேண்டும். தன் அவனுடன்.. கூடல் இப்பிடி தான் நடக்கவேண்டும் என்கிற கனவு. இருந்தது அந்த கனவு இன்று தன்தோழியால் உடைந்து சிதறியது… …

அவனை தடுத்து பார்க்க. அவன் மேலும் பலம் கொண்டு.. அவள் உடன் ஒன்றினான்..இனி ஒன்றும் செய்யத நிலையில் கண்ணீர் உடன் அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஒத்து உழைத்தாள் .

தன் தேவையே முடித்து கொண்டு.. சூர்யா அவளை இறுக்கிஅணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்தான்….

ஆனால் அவள் தூக்கம் இன்றி. விடியல் காக வெறுப்பு உடன்..கண்ணீர் வழியே காத்து கொண்டு இருந்தாள்

சூர்யா இவ்வாறு நடந்து கொள்ளுவான்… என்று அறியாத..சந்தியா தன்னோட அடுத்த திட்டது உடன் நிம்மாதியானஉறக்கம்..உறங்கி கொண்டு இருந்தாள்………………..

இங்கே மதி தரையில் அமர்ந்து தன்… இறந்து போன பெற்றோர் இடம் தனக்கு நடந்த கொடுமை.. மனதுக்குள் சொல்லி அழுதுகரைந்து கொண்டு இருந்தாள் ……” ஏனம்மா நீ என்ன தனியவிட்டுட்டு போன… நீங்க இருந்து இருந்தா… எல்லாரும் என்னை..இப்பிடி வச்சு விளையாடி இருக்க மாட்டாங்க தானே….. பாரும்மா.. உன் பொண்ணு.. இன்னைக்கு என் நிலைமையே இருக்கான்னு பாரு தோழின்னு ஒருத்தியே நம்பி இன்னைக்கு என்ன எவ்வளோபெரியே பாவம் செய்யே வச்சுட்டா.. பாருமா… நீங்க அப்போவே சொன்னிங்க... யாரையும் நம்ப வேண்டாம்ன்னு ..எனமனதுக்குள் அழுது தவித்து…கொண்டு இருந்தாள் பிறகு.. ஒருமுடிவோடு தான் எப்பிடியோ மதி உறங்கி.. போனால்……. ….

இனி…

விடியே காலையில் . எழுந்த…மதி.. சூரியாவின் பிடியில் இருந்து. மெல்ல விலகி…அவன் முகத்தை பார்த்தாள்….” செய்றதுஎல்லாம் செய்துட்டு எப்பிடி நல்லவன் மாதிரி.. தூங்குரான்பாரு…. உன்னை… அவன் கழுத்து வரை.. கொண்டு சென்றகையே.. மீண்டும்.. எடுத்துவிட்டு குளிக்க. சென்றுவிட்டாள்.

சிறிது நேர்மை கூட.. அவள் அந்த அறையில் நிற்கவில்லை..

வெளியே வந்தவள்.. கொஞ்சம் நேரம் பூஜை அறையில் நின்று…. கடவுள் இடம்.. இனி சூர்யாவின்…. கோபம் .. சந்தியாவின் திட்டம் அனைத்தையும் சமாளிக்க…. ..தனக்கு கூட… இருந்து…உதவிசெய்யவேண்டும் என வேண்டினாள் பிறகு பானும்மா இடம்வந்து…. அன்றையே தினம் எனன் என்ன செய்யே வேண்டும் என்று.. கேட்டு தெரிந்து கொண்டாள் பாட்டி என்ன மாதிரிஉணவு சாப்பிடுவார் சூர்யா என்ன சாப்பிடுவான் என கேட்க..

பானும்மா.. எல்லாம்.. மதிக்கு சொல்ல.. மதி.. அவர்சொல்லுவதை கவனமாக.. கேட்டு கொண்டு… அவருடன்இணைந்து எல்லாம் செய்து முடித்தாள்…..

” பானும்மா. எல்லாம் முடிந்தது.. நான் போய்.. பாட்டிக்கு சாப்பாட்டு.. மாத்திரை கொடுத்துட்டு வரேன்….என பாட்டிஅறைக்கு சென்றாள்

அங்கே… மரகதம் .. எதோ.. ஒரு.. புத்தகம்.. படித்த படி.. அமர்ந்துஇருந்தார்…..

” குட் மோர்னிங் பாட்டி…. “

” வா மா.. மதி.. என்ன இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்டே… ..”

” என்னது இது.. சீக்கிரமா.. பட்டி.. மணி.. ஏழு…..

” அது இப்போ நீ இங்க வர..நேரம் ஆனா…

” பாட்டி ‘ [ எவ்வளோ கவனிச்சுற்காங்க…. இப்போ என்ன சொல்லி சமாளிக்க…. என திணற…” ]

” என்னமா… சூர்யா.. ஏதும் கோபமா பேசிட்டானா ரொம்பநேரமா பூஜை ரூம்ல நின்று இருந்தியே…”

” ஹ்ம்ம்.. இதுக்கு தான…” அது எல்லாம் ஒன்னும் இல்லை.. பாட்டி.. அவர் ஏதும் சொல்லல.. நீங்க எதையும் நினச்சு வருத்தபட்டு உடம்ப கெடுத்துகாதிங்க பாட்டி . எனக்கு அம்மா அப்பாயாபகம் வந்துருச்சு…., வேற ஒன்னும்.. இல்லை.. இப்போ நீங்கசாப்டுங்க…. நேரம் ஆச்சு பாருங்க..”

“சரிமா. என அவள் பேச்சில் சமாதனம் ஆனவர்…சிறிது நேரம்கழித்து.. சூர்யா.. சாப்டாணாம..

” இல்லை பாட்டி அவர் இன்னும் எழுந்துகவே… இல்லை…. “

“என்னது.இன்னும் எழவே இல்லையா…..என ஆச்சரியத்து உடன்.. கேட்க…

” ஆமா பாட்டி…. “

” சரிம்மா.. அவன்… எழுந்துடான பாரு..அப்பிடியே… நீயும் போய்சாப்பிட்டு…

சரி பாட்டிம்மா.. என அவருக்கு மாத்திரைகளைகொடுத்துவிட்டு.. கிழே வந்தாள்

அங்கே…சூர்யா… கிளம்பி… கொண்டு இருக்க…

அவள் வருவதை…பார்த்தவன்…

என்ன பாட்டி கிட்ட… பத்த வச்சாச்சா..



***************************
hai friends itho adutha epi pottuten padichu unga comments sollunga
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
31_12_2019-new_year_2020_19881627_161325752.jpg



HAPPY NEW YEAR TO ALLLLL FRIENDS , SISTERS
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

images


!! 7 !!
என்ன பாட்டி கிட்ட… பத்த வச்சாச்சா..



அவனது கேள்வி புரியாமல், மதி “ என்ன என்ன சொன்னிங்க இப்போ



ஹ்ம்ம்.. என்ன பத்தி பாட்டி கிட்ட பத்த வச்சாச்சா கேட்டேன்…



இப்போது அவன் சொல்ல வருவது மதிக்கு புரிந்து விட.. மதி அவனை கோபமாய் முறைத்து..

மிஸ்டர் சூர்யா…. நான் ஒன்னும் உங்கள மாதிரி ரொம்ப நல்லவ.. கிடையாது.. என்ன எதுன்னு விசாரிக்காம . சம்பந்தமே இல்லாம பேச வாய்ப்பு கொடுக்காம அவங்கள தண்டிக்கிறதுக்கு

பரச்சனை உங்களுக்கும் எனக்கு சந்தியாக்கும்மட்டும் தான்.. இதுல பாட்டியே.. கஷ்ட படுத்த நான் யோசிக்க கூட மாட்டேன்.. அதுவும்.. அவங்க.. இருக்கிற நிலைமைல…. . இப்போ கொஞ்சம்.. நகருங்க… எனக்கு ஹோச்பிடல் கிளம்பனும் நேரம் ஆச்சு.. என தனது கைபையில் அவள் எல்லாம் எடுத்து வைக்க

‘ ரொம்ப சந்தோசம் ,பிறகு நிதானமாக ஆமா நீ இப்போ ஹோச்பிடல்…போக போறதா ..யார்…சொன்னது…” அவன் கேட்க



” என்னது.. “ அவள் அதிர்ந்தாள்



” ஆமா.. இங்க இருந்து நீ எங்கையும் வெளியே போக கூடாது.. போகவும் முடியாது உனக்கு.. ஏதும் தேவைன்னா.. பானும்மா.. கிட்ட சொல்லு அவங்க செய்து கொடுப்பாங்க.. இல்லைனா. எனக்கு ஒரு மெசேஜ்.. அனுப்பு .. நான் .. . உதவுறேன்… “



இதுக்கு என்ன அர்த்தம்.. என கோபமாய்..மதி கேட்க…



” ம்… இங்கே நீ ஒரு கைதி மாதிரி தான் இருந்த ஆகணும் அர்த்தம்.. அப்பிடி நீ வெளியே போக.. நினச்சா…”



” நினைச்சா…???…”



” நினைக்க மாட்ட…. என அவள் கன்னத்த தட்டி விட்டு நகர்ந்து விட்டான்…..”

இங்கே மதி.. அப்பிடியே.. அதிர்ந்து போய்.. அமர்ந்து இருந்தாள் எவ்வளோ நேரம் அப்பிடி இருந்தாளோ அப்போது தான்… சந்தியா விடம் இருந்து அழைப்பு வந்தது அதை எடுக்க பிடிக்காமல் மதி அப்பிடியே ஏதோ யோசனையில் அமர்ந்து இருந்தாள் மீண்டும் அழைப்பு வர

அதை எடுத்து பார்த்த மதிக்கோ.. அடங்காத கோபம் மனதுக்குள்… ” பாவி.. பாவி உனக்கு பிரெண்டா… இருந்தத விட.. வேற என்னடி உனக்கு பாவம்.. செய்தேன்.. என்ன இப்பிடி ஒருத்தன் கிட்ட மாட்டி விட்டுட்டியே இதுக்காக தான என்கிட்டே அன்னைக்கி அப்படி பேசின என சந்தியாவை.. திட்டியே.. படி…… போனை.. எடுத்து” ஹலோ சொல்லு.. சந்தியா…”



” டி மதி எங்க போயிட்ட போன் எடுக்க எதுக்கு இவ்வளோ நேரம் சரி அத விடு சூர்யா….. ஆபீஸ் வந்தாச்சு….. அங்கே.. .. ஒரு டெண்டர்.. பைல்….. மறந்துட்டு வந்துடார என்ன..” என அவ்வளோ அன்பாக சந்தியா பேச



அவளது பேச்சை கேட்டு மதிக்கு “ என்ன இவ்வளோ சீக்கிரம் ஆபீஸ் போயிட்டானா எப்பிடி.. இருக்காது… .. என அவள் அறை இருந்து வெளியே எட்டி பார்க்க அங்கே சூர்யா இருந்த.. தடம், தெரியவில்லை எங்கே அவன்.. என நினைத்த படி நிற்க…



இங்கே சந்தியா.. . ஹெலோ ஹெலோ. மதி. இருக்கியா….” என கத்த



” ஹான் இருக்கேன் சொல்லு சந்தியா, என்ன விஷயம் ”



” அதான் அந்த பைல்… மறந்துட்டு வச்சுட்டு.. வந்துடாரு. சொன்னேன்ல .



” அதுக்கு…”



” அது வேற ஒன்னும் இல்லடி.. நீ அந்த பைல.. எடுத்து அதுல இருக்கிற விவரம் எல்லாம் சொன்ன நான் இங்க ஒரு டுப்ளிகாடே பேர் ரெடி பண்ணிருவேன் என்ன.. இனி கிளம்பி வந்து வாங்க எல்லாம் நேரம் இல்லை. இன்னும் ஒரு மணி நேரத்துல.. அது நால தான் சொல்லுறேன்.. நீ அந்த பைல்.. எடுத்து விவரம் விவரம் எனக்கு சொல்லு டி ”



மதி..” இப்போ மிஸ்டர் சூர்யா எங்கே சந்தியா’



” அது……… சூர்யா.. மீடிங்க விஷயமா பேசிகிட்டு இருக்காரு..”



” ஒ…”



” சரி இரு.. நான் பைல் தேடி.. எடுத்துட்டு சொல்லுறேன்.. ‘என அவள் இடம் பேசி விட்டு.. போனை வைத்தாள்



ஆனால். மதியின் மனது , ஆபீஸ் போயிட்டானா இவ்வளோ சிக்கிராமாகவா இல்லை வாய்ப்பே அவன்.. இங்க தான் இருக்கிறான் என.. சொல்ல…. .. .அவளின் மனம் சொன்னது போய் இல்லை என்று அவளது எண்ணத்தின் நாயகன் சூர்யா.. அவர்களது அறைவாசலில் நின்று கொண்டு இருந்தான்…

பாதி தூரம் சென்ற பின்..
எதோ மறந்து விட்டதே என்று ஓரமாய்.. காரை நிறுத்துவிட்டு.. தனது பாக்கை.. திறந்து பார்த்த சூரியாவுக்கு.. அப்போது தான் ஞாபகம் வந்தது நேற்று. இரவு டெண்டர் பைல் ரெடி செய்துவிட்டு.. அதை மறந்துவிட்டு வந்துவிட்டோம் என்று… .. மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வர.. அப்போது தான். சந்தியா. சூர்யாவுக்கு அழைத்தாள் .



” என்ன.. சந்தியா”



” எங்கே இருக்க சூர்யா..”



” அவள் இடம் விஷயத்தை.. சொல்ல… விரும்பாமல்.. ஹ்ம்ம் ஆபீசெக்கு தான் வந்துடு இருக்கேன்.. நீ எதுக்கு போன பண்ணின இப்போ ”



” நீ .. எப்போ… ஆபீஸ் வரன்னு கேட்க தான் சூர்யா..”



” என்ன புதுசா அக்கறை….. “



” இல்லை.. . அது..’



” சரி விடு.. இன்னும் அரை மணி நேரத்துல வந்துர்வேன்.. என போனை வைக்க.. சூர்யா வீட்டை.. நெருங்க சரியாக இருந்தது….



நேரம் ஆகிவிட்டதே என்று.. வேகமாய் உள்ளே வந்தவனுக்கு.. இவளது பேச்சை கேட்டு .. கோபத்தில்.. உடல் நடுகியது.. நேத்து என்னமோ நல்லவ மாதிரி நேற்று அவ்வளோ பேச்சு பேசினா என்னையே கேள்வி மேல் கேள்வி கேட்டா இப்போ அந்த நாய் கிட்ட டெண்டர் விவரம் சொல்ல போறாளா இவள.. என.. உள்ளே செல்ல நினைக்கும் போது தான்.. சந்தியா.. மீண்டும் அவளை அழைத்தாள் என அப்பிடியே நின்று விட்டான்….

……………

சொல்லு சந்தியா..

” என்னடி.. பைல் எடுத்துடியா…”



சந்தியாவின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த படி ” ஹ்ம்ம் எடுத்துட்டேன்…” என மதி சொல்ல



வெளியே நின்று கொண்டு இருந்த சூரியாவுக்கோ இவளை.. கொன்றுவிட்டால் தான் என்ன என்று வந்தது.



மதி தனது கையில் இரண்டு பைல்களை.. வைத்து கொண்டு…. . அதில் இருந்த விவரங்களை.. பார்த்து கொண்டு இருந்தாள்



சந்தியா. ” ஹப்பா டா சீக்கிரம் விவரம் சொல்லுடி நேரம் ஆச்சு..”



” எதுக்கு இவாளோ அவசரம் சந்தியா.. இரு.. நீ மொதல டெண்டர் கம்பெனி.. பத்தி சொல்லு.. நான் சரியா … இருக்கான்னு பார்த்து சொல்லுறேன்.. என்ன ஏன்னா என் கைல … நாலு.. பைல் இருக்கு அதுல எதுன்னு எனக்கு தெரியாதுல அதான் கேட்டேன் ”

” ஒ சரி இருடி சொல்லுறேன்.. நல்ல கேட்டுக்கோ ..என ஒவ்வரு விவரம் சொல்ல..
மதி எல்லாவற்றையும்.. சரி பார்த்தாள் ..

” என்ன மதி.. பார்த்துட்டியா…”

” ஹ்ம்ம்.. பார்த்துட்டேன்.. இப்போ உனக்கு என்ன வேணும் ” என தனது கோபத்தை அடக்கியே படி கேட்க..



” மதி.. அதுல எவ்வளோ அமௌண்ட் போட்டுருக்கு அது மட்டும் போதும் சீக்கிரம் சொல்லு சூர்யா வரதுக்குள்ள ” என அவசர படுத்த

சந்தியாவின் வார்த்தை கேட்ட மதி“என்ன என்ன சொன்ன சூர்யா… வா…” மதி யூகித்து விட்டாள் சந்தியா.. போய் சொல்லுகிறாள் என்று.. … ஆனால் இப்போது கோப படுவது. சரி இல்லை என்று….. .. அதில் இருந்த அமௌண்டை.. விட.. சற்று … அதிகமாக சொன்னாள் ’



” சந்தியா.. என்ன டி மதி இவ்வளோ அதிகமா சொல்லுற..”



” என்ன சந்து என் மேல நன்பிக்கை.. இல்லையா…. உனக்கு சந்தேகம்.. தோனுச்சினா நீயே சூர்யா கிட்ட போய் கேட்டுக்கோ.. என மதி சொல்ல..’



” அதுக்கு இல்லடி அமௌன்ட் கூட இருந்ததா அதான் யோசிச்சேன் உன்ன நம்புறேன் , உன்ன நம்பாம யார நம்புவேன் சொல்லு , சரி நேரம் ஆச்சு நான் போன வைக்கிறேன்..”





” அவளுக்கு ….பதில் சொல்லிவிட்டு…. மதி தரையில் அமர்ந்து .. .. ஏன் சந்தியா இப்பிடி பண்ணின.. நான் உனக்கு எனன் செய்தேன் அப்பிடி.. .. இப்பிடி ஒரு பாவ செயலுக்கு என்ன.. செய்ய வச்சுட்டியே ஐயோ அம்மா அப்பா.. என்ன இப்பிடி தவிக்க விட்டுவிட்டு போயிடிங்களே என கதறி அழ…”



இத கேட்ட சூர்யா.. . அதிர்ந்து விட்டான்.. என்ன இவள் அப்பா அம்மா இல்லையா……..அப்போ.. சந்தியா…?????? ”


” அவளுக்கு… பெற்றோர்கள்….இல்லை என்று….கேட்ட .. அவனுக்கு.அதிர்ச்சி தான்..

அப்போ சந்தியா.. இவளுக்கு என்ன வேணும்.. என யோசித்த படி…

இதை எல்லாம் யோசிக்க இப்போ… தனக்கு நேரம் இல்லை என்று வேகமாய் உள்ளே சென்று.. பைல் தேடுவது போல் நடிக்க

அவன் வருவதை பார்த்து மதி மெல்ல எழுந்து அந்த இடத்தை விட்டு வெளியே செல்ல போக



சூர்யா. , ஏய் நில்லு என் பைல் எங்கே…..



அவளோ அவனை திரும்பி பார்க்காமல் ” எந்த பைல்….”

” அதான்.. உன் அருமை தோழிக்கு.. விவரம் எல்லாம் கொடுத்தியே அந்த… பைல் எங்கே..”

” அவனது பதில் கேட்டு , “ராஸ்கல் அப்போ…. இங்கே தான் இருந்து இருக்கான் இவன….என மனதுக்குள் .. திட்டித்தீர்த்து விட்டு அந்த பைல் எடுத்து அவன் கையில் கொடுக்க…. ..”

அதை வாங்கி எல்லாம் சரியா இருக்க என்று பார்த்தவிட்டு.. அவள் இடம் .. இந்த டெண்டர் மட்டும் என் கைவிட்டு போச்சுன்னா… உன் உனக்கு அப்போ தெரியும் நான் யாருன்னு…

” அவனை முறைத்துவிட்டு.. மதி நகர.. .போக. அவளை ஒரே பிடியாக…பிடித்து இழுத்து…..இந்த திமிர் என்கிட்டே ஆகாதடி “

” ஸ்ஸ் .. விடுங்க மிஸ்டர் சூர்யா… .”

” அப்பிடி எப்பிடி….நீ சொன்ன நான் விடணுமா என மேலும் இருக்க. மதி.. வேதனையில் இன்னும் முகம் சுழித்தாள் அப்போது தான் அவளை காப்பாற்றும் விதமாக சூரியாவின் போன் அலறியது…

ஜோர்ஜ் தான் அழைத்து இருந்தான்…..’

‘ சொல்லு ஜோர்ஜ்…”

” என்னது சொல்லா டேய் மீட்டிங் இருக்கு ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு எவ்வளோ நேரமா உனக்கு போன் ட்ரை பண்ணுறேன் , நீயும் வருவ வருவன்னு பார்த்தா…மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் வந்து சேறு.. என சொல்லிடுவிடு அவன் போனை வைத்துவிட…

சூர்யா அவளை முறைத்த படி…. ஒரே தாளாக.. கட்டிலில் தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.



***********************************

hai friends ellarukum pongal nalvazthukkal , itho epi potuten padichu sollungaa dears...
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
!! 8 !!
flat,1000x1000,075,f.jpg



சூர்யா அவளை முறைத்த படி…. ஒரே தள்ளாக கட்டிலில் தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் தள்ளிவிட்டு சென்ற வேகத்தில் மதி

பிடி இல்லாமல் கட்டிலில் சென்று விழுந்தாள் விழுந்தவள் மெல்ல எழுந்தவளுக்கோ , இன்னி என்ன எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்குமோ சந்தியா நால எண்ணி.. மனம் வாடினாள் மதி…பிறகு மெல்ல எழுந்து சென்று அடுத்து என்ன செய்வது என்று அந்த வீட்டையும் பாட்டியையும் சுற்றி வந்தாள் .

இங்கே 20 நிமிடத்துக்குள்… கான்பெரென்ஸ் ஹாலுக்கு நுழைந்தவன்… முதலில் தேடியது சந்தியாவை தான் ..

அவன் தேடுவதை பார்த்து பின்னால் வந்த ஜோர்ஜ்.

” யார தேடுற.. சூர்யா நீ “

சந்தியாவ தேடுரன்னா… அவ இப்போ இங்க இல்லை… “



” எனன் சொல்லுற.. ஜோர்ஜ்..”



” ஹ்ம்ம் சொல்லுறாங்க சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு , தமிழ் தானே டா பேசுறேன் நான்…’

அவனது நக்கல் பேச்சில் சூர்யா அவனை முறைக்க…



” சரி சரி.. ரொம்ப முறைக்காத… வா என அவனுடன் பேசியே படி…மீட்டிங்….நடக்க இருக்கு அறைக்கு சென்று அமர.. பின்னால் என்றைக்கும் இல்லைதா சந்தோசத்துடன்….சந்தியா.. உள்ளே வந்தாள்

அதை கவனித்த…. ஜோர்ஜ்……. ” டேய் சூர்யா.. என்ன டா பட்சி.. முகத்துல ஆயிரம் வட்ஸ் பல்பு எரியுது….இப்போ எந்த ஈளிச்சவாயான் சிக்கினான் தெரியலையே ”



சூர்யா ,” ஆமா நானும் பார்த்தேன் ஒரு வேலை அவளுக்கு ஏதும் இந்த டெண்டர் கிடைக்கும் எண்ணத்தில் இருப்பாளோ என்னவோ..



சூர்யாவின் பேச்சை கேட்ட ஜோர்ஜ் அதிர்ந்து ” என்னடா சொல்லுற….. அவளுக்கு எப்பிடி நம்ம டெண்டர் நாம எல்லாம் சரி பார்த்து தானே வச்சோம் அப்புறம் எப்படி



பதறாத ஜோர்ஜ்.. அப்பிடி ஏதும் நடக்காது…நடக்கவும் விட மாட்டேன்.. வேடிக்கை மட்டும் பாரு, என சூர்யா மீடிங்கில் கவனம் செலுத்த



” என்னமோ சொல்லுற.. ஏதும் நாளும் பார்த்து செய்யு டா ராசா… என ஜோர்ஜ் பொலம்ப ”



” ஹ்ம்ம் சரி டா. “

சிறுது நேரத்தில்.. டெண்டர் ஏலம் நடக்க ஆரம்பிக்க….


சந்தியா.. ஒரு வித எதிர்பார்ப்பு உடன் அமர்ந்து இருந்தாள் அதை கண்டும் காணாமல்.. சூர்யா.. இருக்க…

” சூரியாவுக்கு போட்டியானா.. எதிர் கம்பெனி…. தன்னுடையெ.. டெண்டர் தொகையே சொல்ல.. அதை கேட்ட பின் தான் சூர்யா. தன்னுடையே தொகையே சொன்னான் .



”சூர்யா சொன்ன தொகையே கேட்டு அங்கே இருந்த சந்தியாவின் முகம் இருண்டது இந்த முறையும் தவறு

எப்பிடி நடந்தது….அதே நிலை உடன்.. அவள்.. அங்கே அமர்ந்து இருந்த.. அந்த புதியவனை பார்க்க…

அவன் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிந்தது, இந்த தடவையும் கோட்ட விட்டுட்டியே சந்தியா என அவன் கண்ணாலையே கேட்டு வைக்க

அவன் இடம் சந்தியா.. மன்னுச்சுடு.. கேசவ்……. என பார்வையால் கெஞ்சினாள் அவன் இவளை திரும்பி கூட பார்க்காமல் விறுடென்று எழுந்து சென்றுவிட்டான்…



கடைசியில் சூர்யா நினைத்த படி.. டெண்டர் அவன் கைக்கு வந்து விட



ஜோர்ஜ் , “ எப்பிடி டா , நடந்தது ,இது நீ வந்த அப்போ என்னமோ சொன்ன இப்போ இங்க என்னமோ நடந்துகிட்டு இருக்கு “



” ஹ்ம்ம் அப்பிடி தான்….” என சூர்யா கண்ணடித்து சொன்னான்



சந்தியா மனதுக்குள்.. , இது எப்பிடி நடந்தது.. மதி ஒரு வேலை தன் இடம் போய் சொல்லி விட்டாலோ.. இப்போ எனக்கு தெரிஞ்சே ஆகணுமே.. என்று அவள் தன் முகத்தை இயல்பாக வைத்துகொண்டு சூர்யா அருகே சென்றாள்



” சூர்யா எனக்கு ரொம்ப சந்தோசம் இந்த டெண்டர் நமக்கே கிடைச்சதுக்கு எனக்கு அப்போவே தெரியும்.. உனக்கு தான் வெற்றின்னு..” என அவள் போக்கில் பேசி கொண்டே போனவளை





“ ஒரு நிமிஷம் சந்தியா ஒரு சின்ன திருத்தம் இந்த ப்ராஜெக்ட் எனக்கு கிடச்ச வெற்றி நமக்கு இல்லை…அதாவுது எனக்கு உனக்கு கிடச்ச ப்ராஜெக்ட் இல்லை. புரிஞ்சதா…”

சந்தியா, ” அவனின் இந்த பேச்சால் அவள் முகம்.. இருண்டு போனது ’



ஜோர்ஜ்.., ” அப்பிடி சொல்லுடா என் சிங்க குட்டி… இவளுக்கு சரியான பதில் உன் நால மட்டும் தான் கொடுக்க முடியும் என வாய் வர இருந்த வார்த்தையே…. மென்று….விழுங்கினான்…”



‘ என்ன சூர்யா இப்பிடி பேசுற… நான் நம்ம ப்ராஜெக்ட் சொன்னதுல என்ன தப்பு…’

” ஹான்.. அது.. நம்மது சொல்ல இன்னும் நம்மக்கு நேரம் வரலைன்னு சொல்ல வந்தேன்….என அப்போதைக்கு அவள் வாய் அடைக்க அவள் தந்திரத்தை அவன் அவளுக்கே சொல்ல..”

சந்தியா., ” மனதுக்குள்..ஹப்பா டா.. இன்னும் நம்மள நம்புறான். , சரி சூர்யா நான் கிளம்புறேன்.. முக்கியமான வேலை இருக்கு…..



” சரி சந்தியா கிளம்பு , நேரம் ஆச்சு , ஜோர்ஜ் வா. நாமளும் கிளம்பாலாம்….”



ஜோர்ஜ்…” சரி சூர்யா..”



” சந்தியா, மனதுக்குள் இவன அப்புறம் வந்து பேசிக்கலாம் சீக்கிரம் ” இப்போ கேசவ போய் சமாதனம் செய்யணும்.. மதி கிட்ட.. அமௌண்ட் எப்பிடி மாறிச்சுன்னு கேட்கணும் என அவசரமாக கிளம்பி சென்றாள் ’

அவள் எங்க போக போகிறாள்….என்று சூர்யா யூகித்து விட…

அவன் ஜோர்ஜ் இடம்.. சரி மச்சி நானும் வீட்டுக்கு கிளம்புறேன் டா…’ என்று சொன்னவனை

இப்போது ஜோர்ஜ் அதிரிச்சி.. உடன் பார்க்க..

” ஏன் டா இப்பிடி முழிக்கிற..’

” பின்ன .. நல்ல நாள் கூட பார்க்காமல் கம்பனியே கட்டி அழுவ இப்போ என்னனா வந்து முனு மணி நேரத்துக்குள வீட்டுக்கு போறேன்னு சொல்லுற அதான் யோசிக்கிறேன் ”

” டேய் ,’ ரொம்ப யோசிக்காத , இப்போ சந்தியா மதிக்கு போன் பண்ணுவா அவ எப்பிடி தனிய சமாளிப்பா….. அதான் நானும் கூட இருந்தா நல்லா இருக்குமேன்னு ” என சொன்னவனை ஜோர்ஜ் மேலும் கிளுமாக பார்த்து

” ஹ்ம்ம் அது சரி ரொம்ப தான் டா அக்கறை….அதான் நானும் பார்த்தேன்..”

” என்ன டா..

” நேத்து கடு கடுன்னு நீ இருந்தத இப்போ மட்டும் அக்கறை எங்க இருந்து பொங்குது…”

” அக்கறையும் இல்லை சக்கரையும் இல்லை… இவ ஏதும் உலரிற கூடது இல்லை அதுக்கு தான் நான் போகணும் சொல்லுறேன் ”

” அதானே பார்த்தேனே… உன்ன திருத்த முடியாது…” என ஜோர்ஜ் தன் தலையில் அடித்து கொண்டே சொல்ல

” போதும் டா நான் கிளம்புறேன் என சூர்யா கிளம்பி சென்று விட்டான் ’

” சூர்யா போவதை பார்த்து ஜோர்ஜ்.. , கடவுளே.. அந்த பொண்ண இவன் கிட்ட இருந்து நீ தான் இல்லை இல்லை இதுங்க ரெண்டு பெரும் கிட்டயும் இருந்து நீ தான் காப்பாற்றனும் என வேண்டிக்கொள்ள…”

ஆனால் இறைவனுக்கே வெளிச்சம்.





வீட்டில் மதி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வரு அறையாய் சென்று பார்த்து , அங்கே கிடந்த பொருட்களை அடிக்கி வைத்து கொண்டு வந்தாள் , அதை பார்த்த பானு , என்ன மதி ம்மா நீ இவ்வளோ வேலையும் இன்னைக்கே செய்யனுமா என்ன கொஞ்சம் நேரம் ஓய்வு எடுக்க வேண்டமா போம்மா அவர் சொல்ல



“ ஐயோ பானும்மா, அது எல்லாம் ஒன்னும் இல்லை , எவ்வளோ நேரம் தான் சும்மா இருக்கிறது அதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் எடுத்து வைக்கிறேன் , இனிமேல் வீட்டுல தானே இருக்க போறேன் [ அவளது குரலில் இனி தனது மருத்தவ பணியே தொடர முடியாத வேதனை இருந்தது ] பெரியவருக்கு வேண்டி பொறுத்து கொண்டாள் .



பானுவும் அவளை அவள் போக்கில் விட்டுவிட்டார் , சரி ம்மா உன் இஷ்டம் , அதுக்காக ரொம்ப நேரம் வேலை செய்யம போய் கொஞ்சம் நேரம் தூங்கும்மா



“’சரி பானும்மா என மாலை வரை ஒரு அளவிற்க்கு எல்லாம் மாற்றி வைத்தாள் .





வீட்டுக்கு வந்த சூர்யா , தன் அறைக்கு சென்றவன்.. அங்கே மதியே

தேட அவள் அங்கே இல்லை….

” எங்கே போனா இவ இப்போ என நினைத்த படி….”

உடையே மாற்றிவிட்டு பாட்டி ரூம்க்கு போய் பார்க்க அங்கையும்.. அவளை காணவில்லை…….

அவன் வந்ததை கவனித்த பாட்டி….. ” என்ன சூர்யா…, ” யார தேடுற…”

” யாரையும் தேடல.. பாட்டி. சும்மா தான் ” என அவன் பொய் சொல்ல அவன் கண்கள் மதியே தான் தேடி கொண்டு இருந்தது அதை கவனித பாட்டி

” சூர்யா யார் கிட்ட பொய் சொல்லுற ,நீ மதியே தான் தேடுறன்னு தெரியும்…”

” அதுவந்து பாட்டி…, ‘

” அவ… பூஜை ரூம்ல இருக்கா… அதுவும் இல்லாம…இன்னைல இருந்து சரியா ஒரு மண்டலம் அதாவுது 48 நாள் அவ விரதம் இருக்க போறா என்று புதியே தகவலை அவர் சொல்ல ”



” என்னது விரதமா.. எதுக்கு.. ‘அவன் அதிர்ந்து போனான்



” ஹ்ம்ம் அது ஒண்ணுமில்லை உங்க ரெண்டு பெரும் கல்யாணம் தடை இல்லாமல் நடந்த.. விரதம் இருக்கிறேன் வேண்டிகிட்டாலாம் அதுனால மதி இனி என் ரூம்ல தான் இருப்பா இப்போ உனக்கு எதாவுது வேலை இருந்தா நீ போய் உன் வேலை பாரு… என அவனை விரட்ட…”

‘ சூர்யா மனதுக்குள் இது என்ன புது கதை விரதம் அது இதுன்னு என யோசிக்க.. அப்போது மதி தான் பூஜை முடித்துவிட்டு பிரசாதம் எடுத்து கொண்டு வந்தாள்

வந்தவள் சூரியாவை பார்த்து அப்பிடியே நிற்க

மரகதம்.. ” வா மதி பூஜை முடிஞ்சதா….”



அவனை.. பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தாலும்.. , பிறகு அவன் பக்கம் திரும்பாமல்.. பாட்டி இடம்…. ..” முடிந்தது பாட்டிம்மா… அதான் உங்களுக்கு பிரசாதம் எடுத்துட்டு வந்தேன்…..”



அமைதியாய் அவளையே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவன் இப்போது அவளை பார்த்து பிரசாதம் பாட்டிக்கு .மட்டும் தானா. என கேலி செய்யே



கடவுளே.. பாட்டி முன்னாடி… வம்பு .இழுக்குரானே… ஹ்ம்ம் நீங்க இந்த நேரத்துல வந்து இருப்பிங்கன்னு தெரியாது. இருங்க இதோ உங்களுக்கும் எடுத்துட்டு வரேன் என்று வெளியே செல்ல.



“ஒரு நிமிஷம் மதி நானும் உன் கூடவே வரேன் என எழுந்து பாட்டிடம் சொல்லிவிட்டு அவள் பக்கம் திரும்ப



மதி மனதுக்குள் , என்னது இவனும் கிழ வரனா ஐயோ இப்போ என்ன சொல்ல போறானே தெரியலையே நாம டெண்டர் அமௌண்ட் மாத்தி… தானே .சொன்னோம்.. . ஒரு வேலை டெண்டர் கிடைக்கலையோ என நினைக்கையில் அவள் .இதயம். வெளியே வந்து விடும் போல் துடித்து கொண்டு இருந்தது…

ஆனால் ஏதும் சொல்ல முடியாமல்.. அவன் உடன்.. கிழே வந்து கிட்சென் நோக்கி செல்ல சூர்யாவும் அவளை தொடர்ந்து கிட்சென் சென்றான்,

மதி.. பொறுக்கமாட்டாமல்… , அவன் இடம் இப்போ எதுக்கு .பின்னாடியே.. .வரிங்க.. பிரசாதம் தானே எடுத்துட்டு வந்து தர மாட்டேனா , அங்க ஹால்ல போய் உட்காருங்க



” ஹ்ம்ம் அதுக்கு இல்லை.. நீ என் மேல இருக்கிற தீவிர காதல்ல பிரசததுல விஷம்… கலந்துட்டா நான் என்ன பண்ணுறது…”



” எனன் எனன் .சொன்னிங்க..” அவள் முறைக்க



” ஏன் தமிழ் தெரியாதா உனக்கு இல்லை ஒரு தடவ சொன்னதான் புரியாதா ”

” ச்சீ. உங்க கிட்ட போய் பேசினேனே பாருங்க என்ன சொல்லணும்.. “

“ பறிகு ஏதும் பேசாமல்.. அவனுக்கு பாயசம்…. ஊற்றி கொடுத்துவிட்டு தன்னோட. வேளையில் .முழ்கிவிட

.சூர்யா. சாப்பிட்டு கொண்டே கிட்சேனில் இருந்த ஸ்லாபில் அரம்ந்த படி ஹ்ம்ம்.. இப்போ இந்த நாடகம் எதுக்கு.. என மெல்ல ஆரம்பித்தான்…



‘ அவனின் கேள்வியில்.. மதி.. மனதுக்குள்… அதானே பார்த்தேன் என்ன டா எலி.. இல்லை இல்லை புலி ஜீன்ஸ் போட்டுட்டு. ஓடுதேன்னு ..இது தான் விஷயமா…, என நினைத்த படி.. அவன் பக்கம் திரும்பாமல் இது நாடகம் எல்லாம் இல்லை.. நெஜமாலுமே நான் விரதம் தான் இருக்கேன்



“அப்பிடியா., ” அதுக்கு இப்போ என்ன அவசியம் .. வந்தது. தான் என் கேள்வி…???



” ஹ்ம்ம் .. நீங்க உங்க.. இந்த பனி போரல்ல.. ஜெயிக்கணும்..காக…. தான் நான் விரதம் இருக்கேன் ” அவளும் நக்கலாக சொல்ல



.அவளின். நக்கல் ..பதில் அவன் கோபத்தை கிளறி விட… ஒரே எட்டில்.. அவளை… .நெருங்கி அவளது தலை முடியே கொத்தாக பற்றி அவன் முகம் அருகில் இழுத்து இந்த நக்கல் எல்லாம் என்கிட்டே வேண்டாம்.. .மரியாதையா. இந்த நாடகத்துக்கு… சுபம் போட்டுவிடு…

அவன் பிடித்ததில் வலி எடுத்தாலும் அவும் அசராமல்

” இல்லை என்றால்…” அவனுக்கு பதில் சொல்ல



” நான் மனுசன இருக்க மாட்டேன்..”

” முடியாது….மிஸ்டர்……சூர்யா…”

” அதையும் பார்க்குறேன்… டி… ” என சொல்லிவிட்டு.. அவன் அந்த இடத்தை விட்டு சென்று விட…

” மதி.., முடிவு எடுத்து விட்டாள் , இனி உன்னை என்ன நெருங்க விட மாட்டேன்… சூர்யா…. இந்த பிரச்சனைக்கு…. ஒரு முடிவு தெரியும் வரை…”



” ஆனால்., அவளது இந்த சபதம்.. அன்று இரவுக்குள்.. ஆட்டம் காண போவது …தெரியாமல் போனது தெரிந்து இருந்தாள் நடக்க இருக்கும் விபரித்ததை தடுத்து இருந்திர்க்கலாம் .. எல்லாம் விதி விட்ட வழி .


****************************************************


Hai friends itho next epi .,... potuten padichu unga comments sollunga commentt box la , naan regluar update podanumnaaa enaku health issue vanhute irukkanum polaaaa ippo health issue naala veetuku vantha gapla intha epi...
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
!! 9 !!

novemberfullmoon2.jpeg



எல்லாம் வேலையும் முடித்து விட்டு.. மதி..

பானும்மா … நீங்க போய் தூங்குங்க நான் போயிட்டு பாட்டியே பார்த்துட்டு அவங்க கூடவே படுத்துகிறேன்….

” சரிம்மா ….அப்போ தம்பி….??” என அவர் தயக்கமாக கேட்க

” அவரு அவர் ரூம்ல படுத்துபாறு ம்மா,எப்போவும் போல “

” ஏன் மதி.. நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்கு மாட்டியே…”

” அது எல்லாம் மாட்டேன் பாணும்மா நீங்க சொல்லுங்க…”

” அது இப்போ எதுக்கும்மா இந்த விரதம் எல்லாம்…, கொஞ்சம் நாள் போனதுக்கு அப்புறம் இருந்துகாலாமே..”

” என்னவென்று சொல்லுவாள் மதி கொஞ்சம் நேரம் அமைதிக்கு பின் அவளே மெல்ல நீங்க சொல்லுறது புரியுது ம்மா ஆனா அம்மா இருக்கும் பொது வேண்டிக்கிட்டது. அதான்…”

” அப்போ சரி ம்மா.. நான் போய் தூங்குரென்..”

” ஹ்ம்ம்.. “

பானு சென்று விட மதி.. அங்கே இருந்த சேரில் போததென்று அமர்ந்து மனதுக்குள் சூர்யாவை திட்டிதீர்தாள்… ” கருமம் கருமம் இன்னும் என்ன எல்லாம் பொய் பேச வைக்க போறனோ இவன் தெரியல கருமம் இவன்னேல்லாம். ஒரு மனுஷன்… ச்சே பிறகு எதோ தோன்ற சுற்றிலும் பார்த்த படி ஆத்தி நல்ல வேலை இதை அவன் கேட்ககல இல்லை நான் மனுஷன் இல்லைடி உன் புருசன்னு வெட்டி டைலாக் பேசி இருப்பான் , என்னடா இப்பிடி இருக்க அவள் செய்ததுக்கு எனக்கு தண்டனையா இது தான் விஷயம் சொல்லி இருந்தா நான் உனக்கு.. உதவி இருக்க மாட்டேனா ஏண்டா இப்பிடி பண்ணுற , நான் நீ நினைக்கிற மாதிரி தப்பான.. பொண்ணு இல்லைடா…. என்ன நம்பி தான் தொலையேன்.. என கத்தி சொல்லுவேண்டும் போல் இருந்தது மதிக்கு ஆனால்… அதை நம்ப வேண்டியவனோ இவளை இன்னும் எப்பிடி வதைக்கலாம் என்று.. யோசித்து கொண்டு இருந்தான்…



சூரியாவை.. எப்பிடி சமாளிப்பது…என்று..

வழி தெரியாமல் யோசனையில் இருந்தவள் நேரம் போனது தெரியாமல் இருக்க , பிறகு மதியும் வரது வரட்டும் பார்த்துக்கலாம் என உறங்க சென்றாள் அவன் அறைக்கு சென்று தனக்கான தலையணை போர்வை எடுக்க போக அப்போது தான் கவனித்தாள் சூர்யா அங்கே இல்லாததை அவளுக்கோ பகிர் என்று இருந்தது

” எங்கே போனான்.. இந்த நேரத்துல…என அறை எங்கும் பார்வையால் தேட ஆனால் அவன் இருக்கும் சுவடு கூட தெரியவில்லை”, அப்போ அவன் இங்க இல்லை அவன் வரதுக்குள்ள நாம பாட்டி ரூம்க்கு போய்விட வேண்டியது தான் என அவள் யோசித்து கொண்டுஇருக்கும் போதே



கதவு தாழ் போடும் சத்தம் கேட்க.. மதி பதறி. திரும்பி பார்த்தாள்…

கதவு அருகே தன் இரு கைகளையும் கட்டியே படி கதவின் மேல் சாய்ந்து கொண்டு அவன் நின்று இருந்தான்..

அதை பார்த்த மதி,

சூர்யா.. ப்ளீஸ் கதவ திறந்து விடுங்க, எதுக்கு இப்போ தாழ் போடுறிங்க நான் போகணும் ”

” முடியாது..” என அவன் சொல்ல

” சூர்யா சொல்லுறத கேளுங்க கதவை திறந்து விடுங்க…”

” ஏன் “

” பாட்டி ரூம்க்கு போகணும்..”

” எதுக்கு”

” எதுக்கா அதான் நான் சொன்னேனே . விரதம்ன்னு , திரும்ப நீங்க இப்பிடி பண்ணினா எப்பிடி.. “

” விரதம் நடகாத உன்னை முடிக்க சொன்னதா எனக்கு ஞாபகம் ”

” இது நாடகம் . இல்லை.. சூர்யா..நம்பினாலும் சரி நம்பாட்டி போனாலும் சரி…. வழி விடுங்க.. நான் போகணும்……”

” முடியாது… முடிஞ்சா நீயே போயிக்கோ… என அவன் வழி மறைத்து நிற்க.”

மதியோ அடுத்து என்ன செய்வது என அவனை முறைத்தபடி நின்று இருந்தாள்

” மெல்ல சூர்யா அவளை அடி எடுத்து வைக்க…”



அடுத்து என்ன என்பது அவளுக்கு புரிந்து விட ” வேணாம் சூர்யா.. கிட்ட வராதிங்க….”

” ஹ்ம்ம் நான் அப்பிடி தான் வருவேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ. பண்ணிக்கோ.. மேலும் அடி எடுத்து வைத்து முன்னேற…”

மதி.. அங்கே இருந்த டேபிள்.. மேல் மோதி நின்றுவிட்டால்…எப்பிடி இவன தடுத்து நிறுத்த….என அவள் மூளை வேகமாய் வேலை செய்தது. . அப்போது தான் அவள் கண்ணில் அந்த குர்மையான கத்தி பட்டது.. வேகமாய். நகர்ந்து சென்று அதை கையில் எடுத்து.. வைத்து கொள்ள…”

” அதை பார்த்த…சூர்யா . ஹே என்னடி பண்ணுற.. கிழ போடு. மதி.. “:

” மாட்டேன் மிஸ்டர் சூர்யா.. இன்னும் ஒரு அடி எடுத்து வச்சிங்கனா….”

” என்ன என்னை கொன்னுடுவியா …என நக்கலாக கேட்க..”

” இல்லை என்னை நானே அழிச்சுபேன் ” என அவள் முடிவாக சொல்ல..

அவள் எதோ தன்னை நெருக விடாமல்.. செய்வதற்காக தான் இவ்வாறு செய்கிறாள்….என்று சூர்யா அவளை அலட்சிய. படுத்திவிட்டு. இன்னும் நெருங்க ..”

மதி, இந்த முறை.. உறுதியாக…, போதும் சூர்யா.. இன்னும் ஒரு அடி.. எடுத்து வச்சா…”

” உன்னால ஆனத பாருடி என்று.. அவனும்.. அவள் பேச்சை.. கேட்காமல் முன்னேற….”

மதி ஒரு முடிவோடு கத்தியே தன் பக்கம் திருப்பி வைத்து கொண்டால்..

ஆனால்.. அவன் அதுக்கும் அசைந்து கொடுக்கவில்லை..

” வேண்டாம்..சூர்யா.”

” மதி.. விளையாடாம நான் சொல்லுறத கேளு ?? “

” ஹ்ம்மும்.. இவன் கேட்க மாட்டான்….என சூர்யா சுதாரிக்கும் மதி தன் வயிற்றில்..கத்தியே..இறைக்கி விட்டு இருந்தாள் ..அம்மா மாஆஅ என்கிற அலறல் உடன் ”

” மதி ஈஈஇ………….என சூர்யா அலறி அப்பிடியே.அவளை தாங்கி பிடித்து கொள்ள….

…அந்த நிலையிலும்.. நான் தான் சொன்னேனே.. கிட்ட வரதிங்கன்னு நீங்க தான் என்ன நம்பாம கேட்கல , நானும் மனுசி தான் சூர்யா என அவன் மடியில் மயங்கி விட்டால்..

அவள் சொன்னதை செய்வாள் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத சூர்யா அப்பிடியே அவளது நிலையே பார்த்து உறைந்து விட…

அவன் சத்தத கேட்டு… பானும்மா மரகதம் பாட்டி உடன் அவன் அறை கதவை தட்ட…

சூர்யா வேகமாய் சென்று கதவை ..திறந்தான்…

என்ன ஆச்சு சூர்யா என மரகதம்.. பாட்டி உள்ளே வர. அங்க மதி ரத்த வெள்ளத்தில். மயங்கி கிடந்தால்..

அதை பார்த்த பாட்டி..,” ஐயோ கடவுளே என்ன டா ஆச்சு மதிக்கு எப்பிடி இவ்வளோ ரத்தம். ..சீக்கிரம் தூக்கு டா ஹோச்பிடல் போக.. என அவசர படுத்த..

சூரிய ஏதும் பேசாமல் அவர் சொன்ன படி. வேகமாய் செயல் பட்டான் . மதியே தூக்கி கொண்டு காரில் பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு பாட்டி பார்த்துகோங்க.. என சொல்லி வேகமாய் காரை கிளப்பி கொண்டு போகும் வழியிலே. டாக்டர்க்கு தகவல்…சொல்லி விட..

நொடி ஒருதரம் .. பின்னாடி திரும்பி மதியே பார்த்த படி வண்டியே இன்னும் வேகமாய் ஓட்டினான்….மனதுக்குள்.. ” என்ன காரியம் டி பண்ணிட்ட…பொலம்பியே படி வர…

ஒரு வழியா ஹோச்பிடல்.. வந்து சேர வேகமாய். சூர்யா.. அவளை அள்ளி கொண்டு.. உள்ளே ஓடினான்.. அங்கே. .டாக்டரும் மதியே பார்த்து.. பதறிவிட்டார்

அவன் இடம்.. என்ன ஆச்சு சூர்யா, எப்பிடி இது நடந்தது என கேட்க

” டாக்டர் கேள்வி அப்புறம் கேளுங்க மொதல.. அவளை காப்பாற்றுங்க.. ரத்தம் ரொம்ப போய் இருக்கு,மூச்சு பேச்சு கூட இல்லை என அவன் சொன்ன உடன்

மேலும் சூர்யா விடம் ஏதும் கேட்காமல் .. .. வேகமாய் சிகிச்சையே ஆரம்பித்தார்….

அதற்குள் ஜார்ஜ் விசையம் கேள்வி பட்டு உடனே கிளம்பிவந்து விட்டான் வந்தவன் , சூர்யாவிடம் டேய் சூர்யா.. என்ன டா ஆச்சு.. மதிக்கு

‘ கத்தி குத்திருச்சு டா..” சலனமே இல்லாம சூர்யா பதில் சொல்ல

ஜார்ஜ் தான் இதை கேட்டு அதிர்ந்து போனான்

” என்னது, கத்தி . எப்பிடி டா நீ எங்க போயிருந்த அப்போ…’

” அது… ? “ எப்படி சொல்லுவான் எல்லாம் அவனது விளையாட்டு புத்தியால் வந்த வினை என்று

சூர்யா பேச ஆரம்பிக்கும் முன் , அங்கே சந்தியாவும் சூர்யா மதிக்கு என்னாச்சு…..என அவசரமாக வந்து சேர்ந்தாள் அவனின் மொத்த கோபமும் சந்தியாவின் மேல் திருபியது, எல்லாம் இவளால வந்தது அவளை பார்த்து தான் சொல்ல வந்த விஷயத்தை.. விட்டு… அமைதி ஆகிவிட்டான்….

ஆனா சந்தியா உள்ளுக்குள் என்ன இது மதி செத்து போயிட்டா நாம எப்பிடி இவன.. தோற்கடிக்கிறது என யோசிக்க பிறகு நடந்தது என்னவேன்று தெரியே வேண்டுமே என்று மீண்டும் சூரியாவை பார்த்து அதே கேள்வி கேட்டு வைத்தாள்

சூர்யா அவளை பார்த்து நீயல்லாம் ஒரு ஆள் உனக்கு எல்லாம் நான் பதில் சொல்லனும்மா என்கிற எண்ணத்தில்.. அமைதியாய் நின்று கொண்டு இருந்தான்…

அவனது முழு எண்ணம் மதியே சுற்றி இருந்தது

இரண்டு மணி.. நேரம் கழித்து வெளியே வந்த…டாக்டர்

ஒன்னும் பிரச்சனை மிஸ்டர் சூர்யா.. மதி இப்போ செப்.. கத்தி இன்னும் கொஞ்சம் ஆழமா.. போய் இருந்தாள் கூட காப்பாற்றுவது கஷ்டமா போயிருக்கும் . அவன் பின்னால் நின்று கொண்டு இருந்த சந்தியாவை பார்த்து அவர்.. மதி.. பற்றி வேற ஏதும் பெரிதாய் தெரிந்தது போல் காட்டி கொள்ளவில்லை..அதை கேட்ட சூர்யாவுக்கு அப்போது தான் மூச்சே வந்தது

பிறகு டாக்டரிடம் , நான் அப்போ மதியே பார்கலாமா…..” கேட்க

” ஹ்ம்ம்.. பார்க்கலாம்.. ஆனா கொஞ்சம் பொருங்க. ஜெனரல்.வார்ட்க்கு மாத்தின பிறகு பார்த்துக்கலாம் ப்ளாட் ரொம்ப லாஸ் ஆகிருக்கு…. அதுனால.. கொஞ்சம்… மயக்கம்.. . பார்த்துகோங்க எமெர்ஜென்சி ன்னா என்ன கூபிடுங்க என சொல்லிவிட்டு அவர் சென்று.. விட…

சிறிது நேரத்தில் மதி.. வேற ரூமுக்கு மாற்ற பட்டால்….

சூர்யா, மரகதம், ஜோர்ஜ்…பானும்மா.. சென்று அவளை பார்க்க… சந்தியா.. துள்ளத குறையாய்.. ஒரு ஓரத்தில் அவளை மற்றும் அவளை சுற்றி இருந்தவர்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தால்..

பிறகு அவள் கிளம்பி சென்று விட….

ஜோர்ஜ்.. பாட்டியே சமாதனம் செய்து.. வீட்டுக்கு அனுப்பிவைத்தான்…

சூர்யா.. மதி அருகே.. ஒரு சேர். போட்டு உட்காந்து அவள் கண் விழிப்பதற்காக காத்து… கொண்டு இருந்தான்..

அவனை பார்க்க ஜோர்ஜ் வர…

சூர்யா அவனை பார்த்து.. நீ கிளம்பு ஜோர்ஜ்..

எப்போதும் ஜோர்ஜ்… இருக்கும் இடம்.. கேலி சிரிப்புமாய் இருக்கும்.. ஆனால்.. இன்று சூர்யா.. இப்பிடி சொல்லவும்.. அவனுக்கும் கோபம் வந்துவிட்டது..

” போதும் டா ரொம்ப பேசாத . உன்னை இப்பிடி விட்டுட்டு போய் நான் ஒன்னும்.. கிழிக்க போறது இல்லை.. சும்மா இரு..”





” அதுக்கு இல்லைடா. “

” பேசாம இருடான்னு உன்னை சொன்னேன்..” என ஜோர்ஜ்..திட்ட…

அதன் பின் சூர்யா அமைதி ஆகிவிட்டான்…

ஜோர்ஜ் எதாவுது பேசவேண்டுமே…என்று.. ” இப்போ சொல்லுடா என்ன நடந்தது….. “

அவன் கேள்வியில் சூர்யாவிற்கு குற்ற உணர்வு தோன்ற…. நடந்தது எல்லாவற்றையும்… ஒன்று விடாமல். சொல்லி முடித்தான்…

” அடப்பாவி டேய் அறிவு இருக்கா உனக்கு.. அந்த புள்ளை கேட்டதுள்ள. என்னடா தப்பு இருக்கு நீ மதி கிட்ட எல்லாம் பேசலையா… “

‘ சூர்யா ஏதும் பேசாமல் தலை நிமிராமல்.. இருக்க..

”அதை பார்த்து ஜோர்ஜ் பேசுடா நல்லவனே. இப்போ பேசு…. சந்தியா மேல இருக்கிற வெறுப்புல.. இந்த புள்ளையே தற்கொலைக்கு துண்டிவிட்டுடியே டா….பாவி….”

சூர்யா, ” ஐயோ அப்பிடி சொல்லாத ஜார்ஜ்… நான் மதி இப்பிடி பண்ணுவான்னு.. நினைச்சு கூட பார்க்கால டா. ..அவ ஏதோ.. விளையாட்டுக்கு..

” மடையா.. விளையாட்டா .. அவ்வளோ தடவ சொல்லி பார்த்து நீ அப்பிடி செய்து வச்சு இருக்க உன்னை எல்லாம் என்ன பண்ணலாம் டா ”

” என்ன என்னவேணும்னாலும்.. பண்ணிக்கோ டா.. ஆனா எதுனாலும் மதி கண் முழுச்ச பிறகு டா.. என வேதனையில் சூர்யா சொல்ல…”

அவனின் வேதனை , ” ஜார்ஜை, பாதித்தது வேண்டாம் டா. போதும்.. ரொம்ப..-வருத்த படாத எல்லாம் சரி ஆகிடும் டா…விடு… இனிமேல் ஆச்சும் பார்த்து நடந்துக்கோ….. ரெண்டு பெரும் மோதல.. பேசுங்க.. அப்புறம் ஒரு நல்லா முடிவா எடுங்க... ”

நல்ல முடிவை இருவரும் பேசி எடுப்பார்களோ .. ??? இல்லை



***************************************************************
சின்ன எபி தான் பிரெண்ட்ஸ் படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi - 10

ரெண்டு பெரும் முதல பேசுங்க அப்புறம் ஒரு நல்லா முடிவா எடுங்க... ” என ஜோர்ஜ் சொல்ல


” இல்லடா அவ மேல எனக்கு ஒரு துளி கூட கோபம் கிடையாது டா, ஆனா ரொம்ப வருத்தம் இருந்தது அதுவும் இப்போஇல்லைடா நான் கொஞ்சம் கோபமா நடந்துகிட்டா தான் அவ சந்தியா பற்றி தெரிஞ்சுப்பா அதுவும் இல்லாமல் சந்தியாவஎதிர்க்க நடிப்பா இல்லாம இயல்பா இருக்கனும் நினைச்சேன் ஆனா இப்பிடி ஆகிடுச்ச" என சூர்யா சொல்ல


” நல்லா நினைச்ச போ , சரி விடு இனி நடக்க வேண்டியது என்ன பாப்போம்” என ஜோர்ஜ் சமாதனம் சொன்னான்"

” கொஞ்சம் நேரம் சென்று மதி இடம் இருந்து முனங்கும் சத்தம்வர”அவள் நினைவுக்கு திரும்பி விட்டாள் என்று

சூர்யா விரைந்து அவள் அருகே சென்று பார்த்தான் அடுத்துஅவள் சொன்ன வார்த்தை கேட்டு கண் கலங்கி வெளியேசெல்ல போக
ஜார்ஜ் , அவனை பிடித்து நிறுத்தி எங்கே போற இப்போ” என சூர்யாவை பார்த்து கேட்க


” விடுடா என்ன நா போறேன் என்னால எல்லாருக்கும் கஷ்டம் தான் அது இப்போதான் புரியுது அவ முழிக்கும் போது நான் இங்க இருக்க விரும்பல என சூர்யா சொல்ல ”


"அதுதான் ஏன்னு கேட்டேன் இவ்வளோ நேரம் அவ கூட தான் இருப்பேன்னு சொன்ன இப்போ எங்கே போற அப்பிடி என்ன சொல்லிச்சு மதி..” ஜோர்ஜ் கேட்க


"நான் அவள எந்த அளவுக்கு.. காயே படுத்தி இருக்கேன்னு இப்போ தான் டா புரியுது , இப்போ கூட கிட்ட வராத சூர்யாசொல்லுறா டா , எ .. என் நால அத தாங்கிக்க முடியல டாஎவ்வளோ கேவலமா நடந்து இருக்கேன்னு இப்போ நினச்சா எனக்கே என்ன பிடிக்கல டா, அவ மனசுல நான் இப்போ எந்த இடத்துல இருக்கேன்னு நினைக்கிற அப்போ மனசு எல்லாம் கிடந்தது வலிக்குது டா"

” ப்பூ .. இவ்வளோ தானா ஒன்னும் இல்லை கொஞ்சம் நேரத்துலஅவளே சரி ஆகிடுவா நீ இங்கயே இரு…என ஜார்ஜ் சொல்ல


” வேண்டாம் டா. வா கொஞ்சம் நேரம் வெளியே நிற்ப்போம் எனக்கு இங்கே ஒரு மாதிரி மூச்சி முட்டுற மாதிரி இருக்கு .எனசொல்ல..


” ஹ்ம்ம்

சரி வா ” என ஆண்கள் இருவரும் வெளியே நிற்க..பானும்மா மதி அருகில் அவள் கண் விழிக்க காத்துகொண்டுஇருந்தார்..


மதி கண் விழித்துவிட முதலில் தான் எங்கே இருக்கிறோம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை உடம்பில் இருந்த வழியால் மெல்ல தன் கண்களை சுழற்றி பார்க்க அவள் இருப்பது ஹோச்பிடல் என்று புரிந்தது, காயாத்தின் வலி அப்போது தான் அவளுக்கு உரைத்தது .
அங்கே பானும்மா அவள் அருகில் நின்று கொண்டு இருந்தார் அதை பார்த்த அவள்


” பாணும்மா நா. நான் எப்பிடி இங்க.” என மெல்ல அவள் எழ போக
அதை தடுத்த பானும்மா ”அது நீ தான் மதி சொல்லணும் நல்லா தானே பேசிட்டு போன அப்புறம் எப்பிடி கத்தி குத்துற அளவுக்கு அப்பிடி என்ன நடந்தது உங்களுக்குள்ள ”

” அது…வந்து பானும்மா “



” அவள் என்ன சொல்ல போகிறாள்.. என்று ஒரு விதபதட்டத்துடன் சூர்யா வெளியே நின்று கேட்க



” பானும்மா., போர்வை எடுத்துக்கும் போது சைடு டேபல் லஇருந்த கத்தியே பார்க்க மறந்துட்டேன் காலைலயே எடுத்து வைக்க நினைச்சேன் ஆனா நான் மறந்துட்டேன் அதுஎப்பிடியோ குத்திடுச்சு ” அவள் சொல்லிமுடிக்க

” நம்புற மாதிரி சொல்லணும் மதி…. ” என டாக்டர் ராம் சரியாக வந்து சேர்ந்தார்


‘ அங்கிள்…” அவளோ அவரை கலவரத்துடன் பார்க்க


‘ அங்கிள். தான் மா உன்னை இப்பிடி…ஒரு நிலைமைலதிரும்பவும் பார்ப்பேன்னு எதிர்பார்கல….”


” இல்லை அங்கிள்..நான் சொன்னது தான் நடந்தது ” என அவள் பிடியில் உறுதியாக இருக்க, அவள் சமாளித்து விடுவாள் என அவரும்


” சரிம்மா நம்புறேன் என பேசிவிட்டு அவளை ஒரு முறை செக்அப் செய்துவிட்டு”


” இப்போ நோர்மலா இருக்கே மதி”



” அங்கிள் நான் எப்போ வீட்டுக்கு போகலாம்”


” ஹ்ம்ம் , நீயும் ஒரு டாக்டர் இந்நேரம் உனக்கே தெரிஞ்சு இருக்கும் உன் ஹெல்த் கண்டிஷன் இருந்தாலும்.. சொல்லுறேன்.. இன்னும் ஒரு வாரம் கழிச்சு.. போகலாம்… இப்போ ரெஸ்ட் எடு..”

” ஹ்ம்ம் “ [ இன்னும் ஒரு வாரமா எப்பிடி இங்க தங்க போறேன் ] என்று இருந்தது மதிக்கு




” அப்போது தான் உள்ளே வந்த சூர்யா அவளை பார்த்த படிஅப்பிடியே நின்று இருந்தான் ”[ அவன் முகமோ வேதனையில் இறுகி போய் இருந்தது ]
அவன் அப்பிடி பார்த்த மதிக்கு மனதுக்குள், கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ என தோன்றியது, இப்போ நமக்கு சேர்த்து தானே வலிக்குது ” என அவனை பார்க்காமல் முகத்தை திருப்பி கொண்டாள் ”
அந்த ஒதுக்கம் அவன் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.. இருந்தும்..




” சாரி மதி..என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்..”
அவன் அப்பிடி சாரி சொல்லிவிட்டு சென்று விட்டது மதிக்குபிடிக்கவில்லை இருந்து தன் இடம் சண்டை போடுவான் என்றுஎதிர்பார்த்தவளுக்கு அவன் அமைதியாக சென்றுவிட்டதுஏமாற்றமே அந்த ஏமாற்றம் கோபமாக மாறி




” ஹ்ம்ம் எப்பிடி பேசுவான் அவனுக்கு தான் நம்மள பார்த்தாலேஆகாதே அவனுக்கு நம்மள பழி வாங்கணும் ,நல்லா வாய்க்கு வந்தத பேசணும் அப்புறம் சண்டையா போடணும் , சந்தியாவ தானே பிடிக்கும் அவனுக்கு , அவள கஷ்ட படுத்த விரும்பாம தானே நம்ம இப்பிடி வதக்கி எடுக்குறான்…. போடா போஇன்னும் என்ன டிசைன்ல எல்லாம் உனக்கு ஆப்பு வச்சு இருக்காளோ அவ கண்டுபிடிச்சு வந்து என்ன கொலையா கொல்லுவேல அப்போ பேசிக்கிறேன் உன்ன என அவனைமனதுக்குள் திட்டி தீர்த்தாள்.




வெளியே வந்த சூரியாவோ ஜோர்ஜ் இடம் ” பாருடா சாரிசொன்ன முகத்த திருப்பிகிட்டா எனக்கு எப்பிடி இருந்ததுதெரியுமா நான் பண்ணினது தப்புதான் அதுக்காக முகத்தை திருப்பிறகிறதா” என சிறுவன் போல் நண்பன் இடம் புகார் வாசிக்க


நண்பன் சிறுவன் போல் புகார் செய்வதே வைத்தே அவனின் மனம் புரிந்து விட நிம்மதியாக



” டேய் விடுடா, சந்தியா பண்ணின தப்புக்கு நீ மதியேபடுத்தினா உன்ன அந்த புள்ள சும்மா விட்டதேபெருசு…..ஆனாலும் ரெண்டு பெரும் தானேஅனுபவிக்கிரிங்கே…அந்த புள்ளைக்கும் கஷ்டமா தானே டாஇருக்கும் கொஞ்சம் விட்டு பிடி…..இப்போ புழம்பி என்ன ஆக போகுது சொல்லு , இனிமேல் இத எப்பிடி சரி பண்ணுறது மட்டும் யோசி


” என்ன ஜோர்ஜ் சொல்லி காட்றியா “


” இல்லடா சொல்லி காட்டல. உன் தப்ப சுட்டி காட்டுறேன்… முன்னாடியே நான் சொன்ன மாதிரி செய்து இருந்தா இந்நேரம்சந்தியா மாதிரி விஷ பூச்சியெ ரெண்டு பெரும் சேர்ந்து சமாளிச்சுர்க்கலாம் , மதிக்கும் இப்பிடி ஆகி இருக்காது .
ஜோர்ஜ் சொல்லவது உண்மை தான் என இப்போது தன் தவறஉணர்ந்து ” நீ சொல்லுறது சரி தான் டா… என்ன மன்னிச்சுடு டாஜோர்ஜ்…” என சூர்யா ஜோர்ஜ் இடம் மன்னிப்பு கேட்க
” டேய் அடி வாங்க போற நம்மகுள்ள எதுக்கு இந்த சாரி சாரி சரிடா நீ போ மதி கிட்ட , என ஜோர்ஜ் சொல்ல


” வேண்டாம் டா திரும்ப அவ.. முகம் திருப்பினா நான் தாங்கமாட்டேன் நேத்து அவ பாட்டி ரூம்க்கு போக பிடிக்கமா தான்நான் அப்பிடி நடந்துகிட்டேன் இப்போவும் அவ என்னஅவோயிட் பண்ணின , அவளென்ன அவைட் பண்ணினாலே எனக்கு கோவம் தான் வருது ,அதுனால வேண்டாம் டா.”


” சூர்யா என்ன சொல்ல வருகிறான் என்று ஜோர்ஜ்க்கு புரிந்து விட, சூர்யா இப்போ தான் நீ மதிகிட்ட இருக்கணும் இல்லைனாஉங்க ரெண்டு பேருக்குள்ள இடைவெளி இன்னும் கூடும் சூர்யாநீ போ நான் கிளம்புறேன்… உன் தங்கச்சி வேற பயந்துகிட்டு இருப்பா.... போய் விஷயத்தை சொல்லணும் என அவனுக்கு சொல்லிவிட்டு ஜோர்ஜ் கிளம்பினான்.



அவனை வழி அனுப்பி வைத்துவிட்டு சூர்யா.. மதி இருந்தஅறைக்கு செல்ல.. அங்கே மதி பாணும்மா இடம்.. பேசி கொண்டு இருந்தாள் அவன் வருவதை பார்த்து ”மதி மனதுக்குள் இவன் இன்னுமா இங்க இருக்கான் போகலையா என்கிற எண்ணமே அவள் மனதுக்கு இதம் தந்தது ஆனால் ஏதும்பேசாமல் இருந்தாள் [பேசினால் எங்கே திட்டுவானோ என்கிற பயம் அவளுக்குள்]


சூர்யாவும் அமைதியாக நின்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான்
இருவரும் பேசட்டும் என்று பானும்மா ” தம்பி நீங்க மதி கிட்டபேசிகிட்டு இருங்க நான் போய் சாப்பிட எதாவுது வாங்கிகிட்டுவரேன் என்று நகர”

பானும்மா என் கிட்ட சொல்லுங்க என்ன வேணும் னு நீங்கஇருங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன் என்று சூர்யா சொல்ல..


இல்லை தம்பி நீங்க இருங்க நானே போய் வாங்கிட்டு வரேன்.. என்று சொல்லிவிட்டு சென்று விட…
அங்கே ஒரு வித அமைத்து நிலவ…யாரு முதலில் பேசுவதுஎன்ன பேசுவது…என இருவரும் அமர்ந்து இருக்க..வேற வழி இல்லாமல்….


சூர்யா தான் ஆரம்பித்தான் .. இப்போ எப்பிடி இருக்கு…..

மதி அவனை முறைத்தபடி ” இத கேட்க இவ்வளோ நேரமாஉனக்கு என நினைத்து கொண்டே அவனுக்கு பதில்சொன்னாள் .ஹ்ம்ம் அப்பிடியே தான் இருக்கு
அவளின் பதில் புரியாததுனால்


” என்ன என்ன சொன்ன..”அவன் கேட்க


” ஏன் உங்களுக்கு தமிழ் தெரியாதா .. இல்லை நான் சொன்னதுதான் புரியலையா இருந்தாலும் சொல்லுறேன் வலி அப்பிடியேதான் இருக்கு போதுமா..”


” முன்பு மாதிரி நிலவரம் இருந்து இருந்தால் சூர்யாவின் பதில்வேறு மாதிரி இருந்துர்க்கும்.. ஆனால் இப்போது அவளதுபேச்சில் தெரிந்த கோபம்பதில் சொன்ன விதம் ஏனோஅவனுக்கு பிடித்துவிட தன்னை மறந்து சிரித்துவிட்டான்…”

” அவன் சிரிப்பது விழிவிரித்து பார்த்து கொண்டு இருந்தால்….இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா என்கிற எண்ணத்துடன்…. “


“சிரித்து கொண்டே என்ன என அவன் கேட்க…”


“ செகண்ட் டைம்.. “ என அவள் சொல்ல..
என்ன சொல்லுறா இவ, எதுக்கு செகண்ட் டைம் புரியாமல்


“நீங்க சிரிக்கிறது செகண்ட் டைம் என மதி சூர்யாவை பார்த்து சொன்னாள் ”


“நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க”


“அப்பிடியா” என சூர்யா கேட்க [ சிரித்தே ரொம்பா நாட்கள் ஆனது போல் தான் இருந்தது சூர்யாவுக்கும் ]


“அப்பிடி தான்” மதியும் பதில் சொன்னாள்
ஏதோ நினைவு வந்தவனாக , ஏன் மதி இப்பிடி பண்ணின என அவன் கேட்க


” ஏன் உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் சூர்யா”என மதி பதில் கேள்வி கேட்க


” அதுக்கு இப்பிடி தான் பண்ணுவியா உனக்கு எதாவுது ஆகிஇருந்தா , இன்னும் அவன்னால் அதை நினைத்து பார்க்க முடியவில்லை


“வேற என்ன பண்ண சொல்லுரிங்க கத்தியே எடுத்து உங்களகுத்தி இருக்கனும்மா ”பட்டென்று கேட்டுவிட்டாள்”

“அடிப்பாவி அப்பிடி ஒரு நல்ல என்னமா உனக்கு” என சூர்யா பயந்தது போல் நடிக்க

“ஹாஹா சும்மா சொன்னேன்” அவன் கேலி செய்கிறான்

” இனி இப்பிடி பண்ணாதே மதி… “ படு சீரியஸ் அக அவன் சொன்னான் .


*****************************
hi friends , ellarum eppidi irukinga safe ah veetula irupinga namburen , sorry for the late updates intha covid issue naala online classes kuduthu tight pannitaanga work ahh . epi padichu unga cmt sollunga dears .
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi - 11





இனி இப்பிடி பண்ணாதே மதி... " படு சீரியஸ் அக அவன் சொல்ல..

" பண்ண மாட்டேன் எவ்வளோ வலிக்குது, இனி இத பத்தி நினைச்சு கூட பார்க்க மாட்டேன்,எப்பிடி தான் இந்த லூசுங்க தற்கொல்லை எல்லாம் பண்ணிக்கிதுன்களோ "

" அதான் லூசுன்னு சொல்லிட்டியே , அதுங்க இப்பிடி தான் பண்ணும் நீயும் இனி இந்த மாதிரி லூசு தனம் பண்ணதஅப்புறம் மதி...என சூர்யா ஏதோ சொல்ல ஆரம்பிக்க.."

பேசி கொண்டு இருக்கும் போதே சூர்யா மதியே நெருங்கிஅமர்ந்து அவள் கையே எடுத்து தன் கைக்குள் வைத்த ரொம்ப பயந்துட்டேன் மதி என சொல்லி கொண்டு இருக்க

" சட்டுன்னு கதவை திறந்து சந்தியா உள்ளே நுழைந்தாள்,

வந்தவள் சூர்யா மற்றும் மதி இருந்த நிலையே பார்த்து அப்பிடியே அதிர்ந்து போய் நிற்க.


"அவளை பார்த்து மதியின் உடல் கோபத்தில் இறுக ஆரம்பித்தது அதை சூரியவினால் நன்றாக உணர முடிந்தது ஆனால் இப்போது அவள் உணர்ச்சி வச பட கூடாது என்று ஆறுதலாக அவள் கையே பற்றி நான் பேசிக்கிறேன் நீ அமைதியாக இரு என்று மெதுவாக அவள் மட்டும் கேட்க அவன் சொன்னான்."

பிறகு சந்தியாவை பார்த்து , "என்ன சந்தியா இந்த பக்கம்" என சூர்யா கேட்க

இன்னும் அதிர்ந்து அவர்களையே பார்த்த படி நின்று இருந்த சந்தியா அவனது கேள்வியில் அப்போதான் சுயநினைவுக்கு வந்தாள் அவளால் தான் பார்த்ததை இன்னும் நம்ப முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ஆனால் இப்போது சூர்யா கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என அவர்கள் இருவரையும் பார்த்த படி, மதி எப்படி இருக்கான்னு பார்த்து போக வந்தேன் சூர்யா" என அவள் சொல்ல

"ஒ, பார்த்தாச்சுல , கிளம்பு" என சூர்யா அவளை விரட்ட

அதை போருக்க மாட்டாமல், " என்ன சூர்யா இப்பிடி பேசுற , நான் அவ கிட்ட நலம் கூட விசாரிக்க கூடாதா, இப்பிடி கேட்குற" என சந்தியா வறுத்த படுவதுபோல் பேச

நீ இவ்வளோ பேசுறதே எங்களுக்கு போதும், என அவன் மனதுக்குள் நினைத்துவிட்டு உனக்கும் சேர்த்து நானேபேசிட்டேன் சந்தியா, நீ கிளம்பு" என சூர்யா சொல்ல

" இல்லை வந்து.."
என சந்தியா பேச முயல

சூரியாவோ அவளை பேச விடுவேனா என்று, உன்ன கிளம்ப சொன்னேன் என அவன் கடுமையான குரலில் சொல்ல , அதற்கு மேல் அங்கே நிற்க அவளுக்கு என்ன பைத்தியமா, போகும் போது மதிக்கு கண் ஜாடையில் போன் எடுக்கும் படி சொல்லிவிட்டு சென்று விட்டாள்"

அதை கவனித்த மதிக்கு மேலும் ஆத்திரம் தான் வந்தது ஆனால் தன் இயலாமை அவளை தடுத்து எல்லாம் யோசித்து கொண்டே மெல்ல படுக்க எண்ணி அவள் நகர முயல அதை பார்த்த சூர்யா அவளுக்கு படுக்க உதவினான்"

இப்போது மதிக்கு தான் சங்கடமாய் போய் விட்டது, அவனை தடுத்து , இல்லை பரவாயில்லை நான்... நானே?"

அவள் சங்கட படுகிறாள் என்று புரிந்து கொண்டு அதை வெளிகட்டிக்காமல் , பேசாமல் படு என அதட்டி அவளை சரியாக படுக்க வைத்தான்"

"ஏதும் பேசாமல் அவளும் படுத்தாள் , பிறகு கண்கள் மூடியே படியே அவள் போக்கில் அவனிடம் பேச ஆரம்பித்தாள், என முதல் முதலில் சூர்யா இடத்தில மனம் திறந்து பேச ஆரம்பித்தாள் , சூர்யாவுக்கும் அவளை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது என அவள் பேச விட்டான் ,

எனக்கு சந்தியாவ ரொம்ப பிடிக்கும் சூர்யா, சின்ன வயசுல இருந்தே அவள் எனக்கு ரொம்ப க்ளோஸ் எதுனாலும் அவ கிட்ட தான் முதல சொல்லுவேன் பக்கத்துக்கு வீடு வேற சொல்லவே வேண்டாம் அவகூடவே இருந்த நாட்கள் அதிகம் அப்பா – அம்மா என்ன விட்டுட்டு போன அப்போ கூட இவ என்ன பார்த்துகிட்டா, எங்கே வீட்டுல தனியா விட பயந்துகிட்டு அவ கூடவே என்னை கூட்டிகிட்டு அவ வீட்டுக்கு போனா ,

ஆனா அவள் வீடு சொந்தகள் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சஉடனே நான் நான் ஹோச்டேல் போய்டுறேன் சொன்னேன் அவள் தான் எனக்காக பேசி எல்லார் வாயே அடைச்சா ,அங்கிள் கிட்ட மேல படிப்பு பத்தி கேட்டேன் அவர் தான் சந்தியாக்கு கூடதெரியாம பார்ட் டைம் ல டாக்டர்க்கு படிக்க சொன்னார் , அவர் ஏன் அப்பிடி சொன்னார்னு இப்போ தான் எனக்கே புரியுது, அவ கிட்ட சொல்லாம ப்ராக்டிஸ் எல்லாம் ராம் அங்கிள் உதவி ஓடபண்ணினேன், நான் எப்போ கோவில் போனாலும், என்னோட முதல் பிரத்தனை அவளுக்காக தான் இருக்கும் ஆனா அவ என்ன வச்சு ,உங்கள இப்பிடி என கண்ணீர் வழியே அவள் சொல்ல"

அதை காண சகிக்காமல் , போதும் மதி இன்னொரு நாள் இத பத்தி பேசுவோம் , இப்போ கொஞ்சம் நேரம் தூங்கு என சூர்யா சொல்ல

"இல்லைங்க , நான் பேசணும்" என மதியும் அவள் பிடியில் நிற்க

"வேண்டாம் தூங்கு என அவள் உறங்கும் வரை காத்து இருந்து பானும்மா இடம் வந்த உடனே அவர் இடம் சொல்லிவிட்டுபாட்டியே பார்க்க வீட்டுக்கு கிளம்பினான்...

போகும் வழியில் மதி பேசினதும் ஜோர்ஜ் சொன்னதும் தான்நினைவுக்கு வந்தது அவன் சொன்ன மாதிரி முன்பே மதி இடம் பேசி இருக்க வேண்டுமோ என இப்போ தான் அவனுக்குஉரைத்தது தனது முட்டாள் தனத்தின் உச்சகட்டம் இதுவென்று இனி மதியே சந்தியாவிடம் காக்கும் கடமையும் தனக்கு இருக்குஎன முடிவு செய்தான்....

வீடிற்கு வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று குளித்து முடித்து , மதிக்கு தேவையானதை ஒரு பேக்ளில் எடுத்துவைத்து கொண்டு இருந்தான்...

அவன் வந்ததை கவனித்த மரகத்கம் பாட்டி , அவனை தேடி அறைக்கே வந்தார், அவரை பார்த்த சூர்யா , " என்ன பாட்டி இன்னும் நீங்க தூங்கலையா" என அக்கறையுடன் விசாரிக்க

அவரோ அவனை முடிந்த மட்டும் முறைத்து, நிம்மதியா தூங்குற மாதிரியா வேலை பார்த்து வச்சு இருக்க நீ எப்பிடி டா இருக்கா மதி, என அவர் கோபத்தில் அவனை வறுத்து எடுக்க

அவரது ஒவ்வொரு கேள்வியில் சூர்யா வாய் அடைத்து போய் நின்றான்

அதை பார்த்த அவர் , அவன் இடம்..." என்ன நடந்தது சூர்யா, அன்னைக்கு ? "

அவரது கேள்வியால் சூர்யா மேலும் தடுமாற" பாட்டி அது, என்னவேன்று சொல்லுவான்"

அவன் சொல்ல மாட்டான் என்று , சரி நான் ஏதும் கேட்கல... , ஆனா ஒன்னும் மட்டும் தெளிவா சொல்லிடுறேன் சூர்யா.....இனி மதிக்கு இது மாதிரி நடந்தா உன்ன சும்மா விட மாட்டேன் தெரிஞ்சுக்கோ" என அவர் எச்சரிக்க

" பாட்டி நான்..." என சூர்யா எதோ சொல்ல போக அவர் அவனை தடுத்து"

"எல்லாம் எனக்கு தெரியும் சூர்யா உங்க வயச தான் நானும்கடந்து வந்து இருக்கேன் , அந்த பொண்ணு உன்ன கண்டாலே பயந்து நடுங்குறதும், நீ அவளை போட்டு மிரட்டுறதும், நான்கவனிக்காமல் இல்லை.. எல்லாம் எனக்கு தெரியும்.... இனி ஏதும் இதுபோல நடந்தால்?? நடக்காத்துன்னு நம்புறேன், பார்த்துக்கோ என சொல்லிவிட்டு சென்று விட.."

" அவர் சென்றதை பார்த்து கொண்டு இருந்த சூர்யா அருகில் கிடந்த சோபாவில்

" ஸ்ஸ் ஷப்பா.... என விழுந்தான், பிறகு தனது தலை முடியே கோதியே படி அவ்வளோ வெளி படையாவா நடந்துகிட்டேன்.... கடவுளே என தலையில் கைவைத்து யோசித்தான் பிறகு கவலை வேண்டாம் பாட்டி இனி உங்க இல்லை என் மதிக்குஏதும் வராமல் நான் பார்த்துக்குவேன் என்று நினைத்து விட்டுஹோச்பிடளுக்கு கிளம்பி சென்றான்..."

"அங்கே, மதி... மருந்தின் வேகத்தால்...உறங்கி கொண்டு இருக்க.. அதே அறையில் மற்றொரு பக்கத்தில் ஒரு சிறியே கட்டில் இருக்க அதில் பானும்மா உறங்கி கொண்டு இருந்தார்

அதை பார்த்த சூரிய மெல்ல மதியின் உறக்கம்கலைந்துவிடாமல் அவள் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தான்

அவளின் நிலையே பார்த்து மனதுக்குள் ஆயிரம் முறைமன்னிப்பு கேட்கொண்டு இருக்க அப்போது தான் மதியின் செல் அலறியது....

அவன் அதை எடுப்பதற்குள் மதி விழித்து விட

நீ இரு நான் போன் எடுக்கிறேன் மதி என்று சொல்லிவிட்டுஅதை எடுத்து பார்த்தவன் முகம் கோபத்தில் மாறியது அவனை பார்த்த மதிக்கு புரிந்துவிட்டது அழைப்பது யாரு என்று அவளும் " ஹம் ச்சு... இவ எதுக்கு இப்போ இந்த நேரத்துக்கு போன்பண்ணுறா...என அவள் எரிச்சலுடன் முனக

சூர்யா, மதிடம் , போனை காட்டி பேசுறியா இல்லை கட் பண்ணட்டுமா மதி" என கேட்க

வேணாம் மிஸ்டர் சூர்யா இப்பிடி கொடுங்க போன் கட் பண்ணினா திரும்ப திரும்ப கூப்பிடுவா , அதுக்கு பேசிட்டு போயிரலாம் என அவள் சொல்ல..

அதை சூர்யாவும் அமோத்திதான், நீ சொல்லுறது சரி தான்என்று போனை அவள் இடம் கொடுக்க

அதை வாங்கி மதி பேச ஆரம்பித்தாள் " சொல்லு சந்தியா என்ன இந்த நேரத்துல"

" அது எல்லாம் அப்புறம் சொல்லுறேன் முதல சூர்யா எங்க டி..."என சந்தியா கேட்க

அவள் அப்பிடி கேட்கவும் மதி சூர்யாவை திரும்பி பார்த்தாள்.. அவன் என்னவென்று கேட்க, அவள் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்து விட்டு அவனை பார்த்து கொண்டே

" ஹ்ம்ம் அவர் தூங்கிடாரு சந்தியா" என பொய் சொன்னாள்

"ஒ அதுக்குள்ளவா" என சந்தியாவுக்கு ஆச்சரியம்

" சந்தியா மணி என்னனு பார்த்தியா இப்பிடி கேட்குற.. சரி நீஎதுக்கு இப்போ போன் பண்ணின அத சொல்லு முதல, மதி நேர விசையதுக்கு வந்தாள் "

" என்ன டி இப்பிடி கேட்குற , உனக்கு எப்பிடி இப்பிடி ஆச்சு நான் கிடந்தது பதறிக்கிட்டு வந்து பார்க்க வந்தா அவன் எ,நான் உன்னை பார்க்கவே விடல எப்பிடி ஆச்சுண்ணு கேட்டா அதுக்கும் அவன் கிட்ட பதில் வரல நான் என்னன்னு தான் எடுத்துகிறது , சரி நீ சொல்லு இதுக்கு காரணம் சூர்யா தானே, எனக்கு தெரியும் அப்போவே அவன் உன் மேல கோபமா இருக்கும் போதே நீ ஒரு வார்த்தை மட்டும் சொல்லு மதி

நாளைக்கே போலீஸ் கிட்ட ஒரு கம்பளைன்ட் குடுத்துவிடலாம் என சந்தியா சொல்ல

மதிக்கு சந்தியா பேச –பேச கோபம் தான் கூடியது, மெல்ல தன்னோட குரல் உயர்த்தி ,போதும் சந்தியா நிறுத்து இதுக்கு காரணம் அவர் இல்லை நான் தான் என்னோட கவன குறைவு, ஒருத்தர் மேல என்ன விசையம் தெரியாம இப்பிடி பழி போடுறது தப்புண்ணு உனக்கு தோணலை, நீ பேசுறது பார்த்தா உனக்கு சூர்யா எதுளையாவுது மாட்டிக்கணும் போல என அவள் சந்தியாவிடம் போட்டு வாங்க

மதியின் கேள்வியில் சந்தியா சுதாரித்து கொண்டாள் , " ஆஹா சந்தியா இப்பிடி இவ கிட்ட உளறுவ , என தனக்கு ஒரு குட்டு வைத்துவிட்டு , இல்லை மதி என்னதான் சூர்யா மேல எனக்கு காதல் இருந்தாலும் நீ தான் எனக்கு முதல,உன்மேல உள்ள அக்கறையில பேசிட்டேன் அது தப்பா என குழைந்து பேச

"அப்போ உனக்கு சூர்யா மேல அக்கறை இல்லையா சந்தியா" என மதி அவளுடையே அடுத்த கேள்வியில் சந்தியாவை மடக்க"

இப்போது சந்தியா மனதுக்குள் இவளிடம் இப்போது பேசியது தப்போ என்று நினைத்தாள் , "ஹான் அது வந்து அக்கறையும் ரொம்ப இருக்கு தாண்டி அவன் மேல எனக்கு காதலும் ரொம்பவே இருக்கு... மதி அதுக்காக உன்னை நான் விட்டுகொடுக்க முடியுமா.. என அவள் போய் மேல் போய்சொல்லிக்கொண்டே போக....

மதிக்கு இப்போது தன் மேலையே வெறுப்பு வந்து விட்டது எப்படி பட்ட பிறவி இவள் , இப்பிடி தானே அவனுக்கும் இருந்து இருக்கும் இப்பிடி பச்சையாய் பொய் பேசுக்கிறாள் இவள்.....ச்சீஎன்று ஆனது மதிக்கு இதற்க்கு மேல் அவள் இடம் பேசினாள் எங்கே தன்னை மறந்து கோப பட்டுவிடுவோமோ கத்தி விடுவோமோ என்கிற பயத்தில்... எனக்கு தூக்கம் வருது சந்தியா நான் போனை வைக்கிறேன் அப்புறம் பேசலாம். என அவள் பதில் சொல்லும் முன் கால் கட் செய்துவிட்டு போனை தூக்கி ஏறியே போக."

"ஹே ஹே என்ன பண்ணுற மதி என சூர்யா அவசரமாக அவளை தடுத்து... போனை வங்கி வைத்தான்"

"அவளோ விடுங்க சூர்யா என்ன.. அவள தான் என் நாளா ஏதும் பண்ண முடியல அட்லீஸ்ட் இந்த போனையாவுது உடைச்சு என் மனச தேத்திக்கிறேன்... என சிறு விசும்பலுடன் சொல்ல"

சூர்யா சமாதனம் செய்த படி , மதி இங்க பாரு.. இப்போ நீ அழறது உனக்கு தான் ஆபத்து ப்ளீஸ் அழாத ,உன் ஹெல்த் இப்போ சரி இல்லை ... என அவன் சொல்ல

"மதி கொஞ்சம் நேரம் கழித்து தேம்பி கொண்டே . நான் என்ன பண்ணுறது இவள , இப்பிடியே விடவும் முடியாதே, இப்பிடியே விட்டா இன்னும் என்ன எல்லாமா பண்ணுவாளோ அதுக்கு நான் எப்பிடி துணை போறது , எனக்கு உடம்பு எல்லாம் கூசுது சூர்யா"

அவளது கேள்வியில் இப்போது சூர்யா அவ திருந்த மாட்டா மதி அவளுக்கு பெருசா எதையாவுது யோசிக்கணும் , என சூர்யா கோபத்தில் சொல்ல

" அடுத்து என்ன பண்ண போறீங்க நான் எதாவுது உதவி பண்ணனும்மா சொல்லுங்க எதுனாலும் சரி பண்ணுறேன் " என மதி உறுதி அளிக்க

அதை கேட்ட சூர்யா தேங்க்ஸ் ம்மா நீ என்ன புரிஞ்சுகிட்டதுக்குஅடுத்து என்ன பண்ணனும் நான் அப்புறம் சொல்லுறேன் நீ இப்போ தூங்கு நேரம் ஆச்சு.."

ஹ்ம்ம் இல்லைங்க எனக்கு தூக்கம் வரல.. நீங்க தூங்குங்க நான் வேணும்னா இப்பிடி சேர்ல உட்கந்துக்கிறேன் என அவள்சொல்ல.." மதி கிழே இறங்க போக

அவளை தடுத்த சூர்யா , " என்னது நீ சேரலையா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு , என அவன் கோபத்தில் கேட்க

"இல்லை நீங்க எப்பிடி தூங்குவிங்க" மதி அக்கறையாக கேட்க

"எனக்கும் தூக்கம் வரல....' சூர்யா சொல்லிவிட

"அப்போ என்ன பண்ணுறது இப்போ"

"ம் நம்மள பத்தி பேசலாம்.. , என முதல் முறையாய் அவள் இடம் தன்னை பற்றி சொன்னான்... "

" சின்ன வயசுல இருந்தே நான் படிச்சது எல்லாம் வெளிநாடு தான் அப்பா அம்மா இறந்த பிறகு பாட்டி என்ன வெளிநாடு அனுப்பி வச்சுடாங்க படிப்பு முடிச்சுட்டு இங்க வந்த அப்போ தான் சந்தியா ஓட அறிமுகம் நம்ம கம்பெனில தான் வேலை பார்த்துட்டு இருந்தா அப்போ புரியல கொஞ்சம் நாள் கழிச்சு.. அப்பா ஓட பிசினஸ் எடுத்து நடத்துற சமயம்...சந்தியா கிட்ட எல்லாம் சொல்லுவேன் மறுநாள் ஆபீஸ் போனா எனக்கு கிடச்சடெண்டர் எல்லாம் கையே விட்டு போய்டும்.. எப்பிடின்னுயோசிக்கிறது குள்ள அவ என் மனச டைவேர்ட் பண்ணிடுவாஅப்பவும் இதே ஜோர்ஜ் தான் என்ன , என் பிரச்சனையே சரிபண்ணினான் அவன் என்ன எச்சரிச்சான் ஆனா நான் தான் அவள் மேல இருந்த நண்பிக்கைல ஜோர்ஜ் சொல்லுறத கேட்கல அப்போ தான் என் லைப மொத்தமா மற்றிடுச்சு கம்பெனி லாஸ் ஆகா ஆரம்பிச்ச அந்த சமயம் சந்தியா கிட்ட ஆறுதல் தேட அவஎனக்கே தெரியாம என் முதுகு பின்னாடி குழி பறிச்சு இருக்கான்னு தெரியே வந்தது . மொத்தமா நொறுங்கிபோய்டேன்... அப்போது அவ உன்ன உபயோக படுத்த போறன்னு தெரியவர எனக்கு உன் மேலையும் கோபம்.. , ஆகா மொத்தம் எல்லாம் பெண்கள் மேலும் ஒரு வித வெறுப்பு. அது நால தான் நான் உன் கிட்ட அப்பிடி நடந்துகிட்டேன் ஜோர்ஜ் சொன்னான் உன்கிட்ட விசயத்த சொல்ல சொல்லி ஆனான் நான் தான் நீ சந்தியாவோட பிரெண்ட் அவளை மாதிரி தான் இருப்பன்னு உன்னை நம்பாம ஏதோ ஏதோ செய்து உன்னை இப்பிடி படுக்க வச்சுட்டேன்
என வருத்தமாக சொல்லி முடிக்க.

மதிக்கு அவன் வருத்த பட பிடிக்காமல்.. , ' ச்சே ஏன் இப்பிடிஎல்லாம் பேசுறிங்க இப்பிடி நடக்க நானும் ஒரு காரணம்...எல்லாம் சரி ஆகிடும்.. ப்ளீஸ் நீங்க சங்கடபடாதிங்க...பார்த்துக்கலாம்.. என அவள் சொல்ல." என இருவரும் ஸ்வீட் நதிங்க்ஸ் போல் பேசி கொண்டு இருந்தார்கள்

"ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் மதி என்ன புரிஞ்சிகிட்டதுக்கு என்று பேசியே படி சூர்யா மணியே பார்க்க அது விடியே காலை நான்கு என்று காட்டியது, அட பாவி விடிஞ்சு போச்சா"

" என்ன சொல்லுரிங்க.."என மதியும் மெல்ல எழுந்து அமர்ந்தாள்

" ஆமா மதி.. மணி இப்போ நாலு..."

" அவ்வளோ நேரமாவ பேசினோம்...

"ம். நேரம் போனதே தெரியல" என அவன் சொல்ல

" ஆமாங்க.."

" சரி நீ ரெஸ்ட் எடு.. , "

" ஹ்ம்ம் இல்லை இன்னைக்கு அங்கிள் வந்த உடனே வீட்டுக்கு போக கேட்கணும். என மதி.. சொல்ல

" ஏன் என்ன ஆச்சு."சூர்யா கேட்க

" பெட் ல இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு, இத ஹோச்பிடல் அட்மொச்பியர் எனக்கு சுத்தமா பிடிக்கல"

" ஒ சரி அப்போ நான் பேசிட்டு வரேன் என அவ டாக்டரைபார்க்க சென்றான் .

**********************************

dear friends thanks for valuable comments , ippo varaikkum comments pannina elalrukum ennoda thanks , keep supporting me , mudinja alavu regular updates kudukka try pannuren.
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI - 12


சூர்யா டாக்டர் ராம் மதியே வீட்டிற்க்கு அழைச்சுட்டு போவதை பற்றி பேச போனான் அங்கே டாக்டர் ராம் அவனை பிடி-பிடி என திட்டி ஒரு வழி செய்துவிட்டார்

“என்ன சூர்யா பேசுறிங்க, அவ ஹெல்த் கண்டிசன் தெரியுமா உங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆழமா கத்தி இறங்கி இருந்தால் கூட அவ இப்போ நம்ம முன்னாடி உட்காந்து பேசிட்டு இருக்க மாட்டா, என் பொண்ணு மாதிரி அவ மாதிரி என்ன என் பொன்னே தான், கண்ணு கருத்துமா அவளை பார்த்துகிட்டது இப்பிடி பார்க்க தானா, என கேள்விகள் கேட்டு சூர்யா அமைதியாகி விட்டான்

இருந்தாலும் மதி தன்னிடம் கேட்க முதல் உதவி அதை செய்தே ஆக வேண்டுமே என டாக்டர் ராம் இடம் பேசி.. ஒரு வழியாக.. சூர்யா மதியே வீட்டுக்கு அழைத்துவந்து விட்டான்.. சூர்யா.

வீட்டுக்கும் சந்தியா மதியே பார்க்க வர, சூர்யா அவளை பார்க்கவிடாமல் தடுத்துவிட்டான்.

அதுவே சந்தியாவின் மனதில் சந்தேகத்தை தூண்டியது என்னமோ தப்பு நடுக்குது, இவன் எதுக்குமே மதி கிட்ட பேச விட மாட்டேன்கிறான் ஒரு வேலை நம்மள பத்தி ஏதும் சந்தேகம் வந்து இருக்குமோ என்னும் எண்ணம் தோன்றியது இதுங்கள கொஞ்சம் விட்டு பிடிப்போம் என சந்தியா முடிவு செய்தாள்.

கொஞ்சம் நாள் செல்ல,மதியின் காயம் ஒரு வழியாக சரி ஆகி இருந்தது இப்போ மெல்ல நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

ஒரே அறையில் இருந்தாலும் சூர்யா அவள் இடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தான்அதையும் மதி கவனிக்க தவறவில்லை

இவன் ஏன் இப்பிடி இருக்கான் நம்ம கிட்ட பேசணும்னா மட்டும் காசு கேட்பான் போல, ஹோச்பிடல நாம இருந்தா மட்டும் தான் பேசுவான் போல என அவள் எண்ணி கொண்டு இருக்க

சூர்யாவோ அவளிடம் பேசவில்லை என்றாலும் அவனின் மொத்த கவனமும் அவள் மேல் வைத்து இருந்தான் அவனின் , எண்ணம்மோ அவனையும் மீறி தறிகெட்டு ஓடியது ,அது சந்தியாவிடம் எவ்வளோ நாட்கள் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் தடுமாறாத மனம் மதியே பார்த்த உடன் ஆட்டம் கண்டுவிட்டது அதன் விளைவு தான் சூர்யா அன்று மதி இடம் நடந்து கொண்டதற்கு காரணம், இன்று அப்பிடி ஏதும் நடந்து விடுமோ.. என்கிற பயத்தில் சூர்யா மதியே பார்த்தும் பார்க்காதது போல் தள்ளியே இருந்துவிட்டான், பேசுவதையும் குறைத்து கொண்டான் அவனின் பயம் எங்கே தன்னையும் மீறி மதியே காயே படுத்திவிடுவோமோ என்று அவளை கண்டும்காணாமல் இருந்துவிட்டான்



ஆனால் அவனை கவனித்து கொண்டு இருந்த மதி அவனை வேறு விதமாக புரிந்து கொண்டாள்

மனதுக்குள் ஏன் இப்பிடி இருக்கான் மறுபடியும் வேதாளம்.. முருக மரம் ஏறி விட்டதோ என்கிற எண்ணத்தில் அவள் உள்ளம் கிடந்தது பதறியது….இருந்தாலும் இதை ஏதும் அவள் காட்டிகொள்ளாமல். இயல்பாக இருப்பது இருந்தாள் இப்படியே நாட்கள் மெல்ல நகர

அன்று, வழக்கம் போல் மதி.. தன் வேலைகளை பார்த்து கொண்டு இருக்க வேகமாய் சூர்யா வீட்டுக்கு திரும்பி வந்ததை பார்த்து..

அவன் வந்த வேகத்தை பார்த்து மதி பயந்து தான் போனால் என்று சொல்லலாம் இருந்தும் அதை வெளி கட்டிக்காமல் அவனிடம் , என்ன ஆச்சு.. ஏன் திரும்பி வந்துடிங்க.,ஏதும் மறந்து வச்சிடிங்களா என கேட்க..

” அவன் , தனது வாட்சில் மீண்டும் ஒரு முறை நேரத்தை பார்த்துவிட்டு சீக்கிரம் கிளம்பு மதி , நேரம் ஆச்சு நாம இப்போ முக்கியமான ஒரு இடத்துக்கு போகணும் என அவளை அவசர படுத்த ”

அவள் வந்த இத்தனை நாட்களில் ஒரு முறை கூட அவன் அவளை வெளியே அழைத்து போனதும் இல்லை அவளையும் வெளியே செல்ல அனுமதித்ததும் இல்லை நிலைமை அப்படி இருக்க இன்று திடீர் என்று வேலையே கிளம்பு என்று சொன்னால் அவள் என்ன தான் செய்வாள் .

“ஏன் எங்க போறோம் நாம” என மதி கிளம்பாமல் கேட்க

“முதல நீ போய் கிளம்பு போற வழில சொல்லுறேன் என் அவளை விரட்ட

“இதுக்கு மேல் நின்னா பதில் வராது என்று தெரிந்ததால் மதியும் வேறு வழி இல்லாமல் அவனுடன் கிளம்பினாள் …”

” போகும் வழியில் சொல்லுவேன் என சொன்னவன் அதற்க்கு பிறகு வாய் திறக்காமல் வர... மதி தான் என்ன விஷயமா இருக்கும் என்று.. அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தாள்...…

ஹ்ம்ம் அவன் இடத்தில இருந்து பதில் வர வில்லை

அப்பொதுதான்.. அவள் பார்த்தாள் இது டாக்டர் ராமின் ஹோச்பிடல் செல்லும் வழி என்று இங்கே எதுக்கு இப்போ என்று அவனை பார்க்க அதற்க்குள் பார்கிங் ஏரியா வந்து விட

அவனோ, இறங்கு மதி” என சொல்ல

என்ன நடக்கிறது என்று புரியாமல் , மதி சூர்யாவிடம் கேட்டே விட்டாள், இப்போ நாம இங்கே எதுக்கு வந்து இருக்கோம் மிஸ்டர் சூர்யா,யாருக்கு என்ன ஆச்சு இப்போ , எனக்கு கூட செக் அப் அங்கிள் வேண்டாம் அன்னைக்கே சொல்லிட்டாங்களே, இப்போ எதுக்கு இங்கே, அவளுக்கு பதறியது.

“அவளின் பதட்டம் புரிந்து,ஹே யாருக்கும் ஏதும் இல்லை நீ வா சொல்லுறேன் என அவளை டாக்டர் ராம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான், அவரும் அந்த நேரத்தில் மதியையும் சூர்யாவையும் பார்த்து குழம்பி , வாங்க என்ன ஆச்சு மதி உனக்கு மறுபடியும் ஏதும் ..தையல் போட்ட இடம் ஏதும் ?

அதற்க்குள்



சூர்யா , சார்,மதிக்கு ஒன்னும் இல்லை, நாங்க இங்கே உங்கள பார்க்க வந்தது இனி எப்போவும் போல் மதி ஹோச்பிடல் வருவாள் வேலைக்கு வருவா சொல்லிட்டு போக தான் என சொல்ல


அவரோ,மதியே பார்த்து , என்னம்மா

மதி.. தனக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பதம் இல்லாதது போல் அமர்த்து இருந்தாள்

” என்னமா இது.. சூர்யா சொல்லுறது உண்மையா”

” எனக்கு ஏதும் தெரியாது அங்கிள் அவர் இப்போ தான் எனக்கே சொல்லுறாரு,எதுனாலும் அவர்கிட்டையே கேளுங்க என சொல்லிவிட்டு அங்கே வைத்து இருந்த பேப்பர் வெயிட் வைத்து அவள் விளையாட ஆரம்பிக்க ”

இப்போ ராம் சூர்யாவை பார்த்தார் ,சொல்லுங்க சூர்யா எதுக்கு இப்போ இந்த திடீர் முடிவு

” ஆமா சார் , இப்போதான் மதிக்கும் தெரியும், மதி ஹோச்பிடல இருந்த அப்போ தான் தோன்னிச்சு எனக்கே இந்த ப்ரோபேசன் எவ்வளோ முக்கியமானதுன்னு ஏதோ ஏதோ காரணத்துக்காக அவள வேலையே பார்க்க வேண்டாம் சொன்னேன் ஆனா இப்போ அப்பிடி இல்லை அதுனால இனி மதி கண்டிப்பா வருவா டாக்டர் , ஏதோ கொஞ்சம் குழப்பம் அதான் நீங்க என்ன நம்பலாம்.. ”

” டாக்டர், அவனது பேச்சில்.. மகிழ்ந்து ரொம்ப சந்தோசம் சூர்யா”

” ஓகே டாக்டர் மதி இப்போவே வேலையே ஆரம்பிக்கட்டும் நான் ஈவ்னிங் வந்து அழைச்சுட்டு போறேன் என்று சொல்லிவிட்டு மதியிடம் விடைபேற்று செல்ல..

மதி , அங்கிள் ஒரு நிமிஷம் இதோ வரேன்.. என்று சொல்லிவிட்டு சூர்யாவின் பின்னால் வந்து. ” ஏன் இப்பிடி திடிருன்னு. ஒரு முடிவு..

” எல்லாம் உன் நல்லதுக்கு தான் மதி..சரி நான் கிளம்புறேன் ஏதும் எமர்ஜென்சினா போன பண்ணு . என சூர்யா மதிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே மதியின் மற்றொரு தோழி அங்கே வந்துவிட்டாள் ”



ஹாய் மதி. எங்க டி போன இவ்வளோ நாள் உன்ன ஆளையே காணோம் எங்கே எல்லாம் தேடுறது என்று அவள் அருகில் , இருந்த சூர்யாவை கவனிக்க மறந்துவிட்டாள்

மதி, ” ஹ்ம்ம் நல்ல இருக்கேன் டி , நீ இன்னுமா இங்க வொர்க் பண்ணுற…”

” பின்ன நம்ம சோம்பேறி தனத்துக்கு எல்லாம் இந்த ஹோச்பிடல் தான் செட் ஆகும் வெளியே வேற இடத்துக்கு போன ரெண்டு நாள் என்ன ரெண்டு மணி நேரம் கூட தாங்காது . ம் அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. கிஷோர் இந்தியா திரும்பி வந்துதான் டி… தெரியுமா.

” மதி.., யாரு கிஷோர் ” என கேட்க

அடிப்பாவி.. , என்ன இப்பிடி சொல்லுற கட்டின்னா உன்ன தான் கட்டிப்பேன் சொல்லிக்கிட்டு திரிவானே அவன் தான்

இதை கேட்ட சூர்யா ..அதிர்ந்து போய் விட்டான் ஒரு வேலை மதி அந்த கிஷோரை தான் விரும்புகிறாளோ என்று நினைக்க…இப்போது ” இவனுக்கு சந்தியாவுக்கு காக தான் இவளை திருமணம் செய்த விஷயம் மறந்து போய்விட்டது .. ” மனதில் சொல்ல முடியாத வலி எடுக்க.. சூர்யா அப்பிடியே நின்று இருந்தான்…

மதி… ஏதோ கடைம்மைக்கு ஒ ” என்று சொன்னாள்

அவளது இந்த செயலும் சூர்யாவை காயே படித்தியது.. அப்பிடியே தளர்ந்து போய் அருகில் இருந்த சாரில் அமர்ந்துவிட்டான்… ஆனால். இருவரும் பேசுவதை மட்டும் கேட்டு கொண்டு இருந்தான் வேற ஏதும் சிந்திக்காமல்.. அவனுக்கு சந்தியா மேல் கோபத்தின் அளவு இப்போது கூடி கொண்டே போனதே தவிர..குறைந்த பாடு இல்லை, இந்த சந்தியா மட்டும் எந்த ஒரு குளற்படி பண்ணாமல் இருந்து மதியே நல்ல முறையில் சந்தித்து இருந்தால் , எவ்வளோ நன்றாக இருந்து இருக்கும் என்கிற எண்ணம் அவனுள் எழுந்தது.

” என்னடி ஒ மட்டும் சொல்லுற.. நீயும் நல்ல ஜாப்ல இருக்க, அவனும்.. யு எஸ் வரைக்கும் போய் படிச்சுட்டு வந்துதான்.... இப்போ அப்புறம் என்ன உனக்கு..

”அதுக்கு நான் என்ன பண்ணனும் வர்ஷா , ”

” என்னடி இப்பிடி பேசுற யாருக்கோ வந்த விருந்து மாதிரி..”

” ஆமா.. நான் அன்னைக்கி சொன்னதான் இன்னைக்கும் சொல்லுறேன் எனக்கு அப்பிடி ஒரு எண்ணம் வந்ததே கிடையாது.இனியும் வர போவதும் கிடையாது.. என அவள் சொல்லி முடிக்கும் பொது அங்கே கிஷோர் வந்துவிட்டான்..”

” ஹாய் பேபி…, என்ன பத்தி தானே பேசிகிட்டு இருக்கீங்க.. என இளித்த படி நிற்க..”

வர்ஷா, ” ஆமா கிஷோர் உன்னோட ட்ரிப் எப்பிடி இருந்தது.”

” இது தான் வாய்ப்பு என்று.. கிஷோர் பாதி உண்மை. மீதி போய் என அள்ளி விட்டான்… வர்ஷா அவன் சொல்லுவதை வாய்க்குள் வண்டு போகாத குறையாய் நின்று கேட்டு கொண்டு இருக்க.. மதி.. மட்டும் இந்த கொசு தொல்லை தாங்கலையே என்கிற எண்ணத்தில் நின்று கொண்டு இருந்தாள் ”

” இப்போ கிஷோர் அவள் இடம் திரும்பி.. மதி நீ மிஸ் பண்ணிட்ட தெரியுமா இந்த ட்ரிப் நீயும் வந்து இருந்த எவ்வளோ நல்லா இருந்து இருக்கும் தெரியுமா.. அவள் உடலில் பார்வை அலையே விட்டபடி சொன்னான் , இவை அனைத்தும் பார்த்து கொண்டு இருந்த சூர்யாவை இன்னும் ஆத்திர படுத்தியது இருந்து பொறுமையாக அமர்ந்து இருந்தும் என்னதான் நடக்கிறது என கவனித்தான்

கிஷோரின் பேச்சை கவனித்த மதிக்கு.. இவன அறைந்தால் தான் என்ன அளவுக்கு.. கோபம் வந்தது ஆனால்.. அவள் அப்பிடி செய்யவில்லை. அதற்க்கு பதில், வந்து இருந்து இருக்கலாம் மிஸ்டர் கிஷோர் ஆனா பாருங்க நான் முன்னவே சொன்ன மாதிரி ஊருல இருந்த எங்க மாமாவும் பாட்டியும் வந்துட்டாங்க அவங்கள கவனிக்கிறத்துக்கே எனக்கு நேரம் போதவில்லை பார்த்துகோங்க இதுல எங்க ட்ரிப் க்கு நான் வர..

” என்னது மாமா பாட்டியா ” என அவளோ நேரம் கோபத்தில் அமர்ந்து இருந்த... சூர்யா நம்ப முடியாமல் நிமிர்ந்து பார்த்தான்.. இது என்ன புது கதை என்பது போல்

கிஷோர் அவள் சொல்லவதை நம்பாமல் பார்த்தான்..

மதி, அவனை முறைத்த படி என்ன நம்ப முடியலையா அதோ அங்கே உட்காந்து இருக்காங்க என அவள் சூர்யாவை கை காட்ட என்னோட மாமா , ஹான் அப்புறம் இன்னும் ஒரு விசையம் சொல்ல மறந்துட்டேன் எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகி இன்னையோட ஒரு மாசம் ஆகிவிட்டது என அவள் கூலாக சொல்ல

என்னாது கல்யாணமா , கிஷோர் மற்றும் வர்ஷா அதிர்ச்சியில் அப்பிடியே நின்றுவிட., சூர்யா மட்டும் இன்ப அதிர்ச்சியில் மிதந்து கொண்டு இருந்தான் ,வேற என்ன வேண்டும் அவனுக்கு இது போதுமே. சந்தோஷத்தில் யானை பலம் வந்தது என தான் சொல்ல வேண்டும் , அதே மனநிலையில் மதி அழைக்கும் முன்னே அவனே அவள் அருகில் சென்று கிஷோரை முறைத்த படி , மதி நாளைல இருந்து நீ இங்கே வரலாம் இப்போ நாம கிளம்பலாம் , எனக்கும் ஒரு மீட்டிங் இருக்கு ,டைம் ஆச்சு போலாமா ,என அவன் சொல்ல.

” சரிங்க நான் அங்கிள் கிட்ட போய் சொல்லிடு வரேன்.. ” என மதியும் சொல்ல

” அது எல்லாம் நான் சொல்லிட்டேன் நீ கிளம்பு… என்று அவன் சொல்ல..”

“சரிங்க என்று அவனுடன் கிளம்பிவிட்டாள்.. வர்ஷாவிடம் சொல்லிவிட்டு.

கார்குள் அமர்ந்த உடன் வேகமாய் சூர்யா பக்கம் திரும்பியே மதி

” ஐ .. ஐ ஆம் சாரி மிஸ்டீர் சூர்யா ”என படபடத்தாள்

” எதுக்கு ”என சூர்யா விசயம் தெரிந்தும் தெரியாதது போல் கேட்க

“இல்லை உங்க பெர்மிச்சன் இல்லாம உங்கள மாமான்னு சொன்னதுக்கு”

“ஹாஹா பரவாயில்லை ஆமா யாரு அவன் என்ன பிரச்சனை”சூர்யாவுக்கு கிஷோரின் இன்னுமும் கடுப்பை கிளப்பியது

” உப்ஸ், அதுவா அது ஒரு பெரியே கதை..”என மதி சொல்ல

‘ சும்மா சுருக்கமா சொல்லு தெரிஞ்சுக்கிறேன்…”என சூர்யாவும் விடாமல் கேட்க

” இவன் எங்க கூட தான் படிச்சான்.. தான் ரொம்ப அழகுன்னு இவனுக்கு நினைப்பு.. . அதுவும் இல்லாம எனக்கு இவனுக்கும் எப்போவ்மே ஒரு போட்டி இருக்கும்.. மார்க் விசயத்துல இருந்து போஸ்டிங் வரைக்கும்.. அதுல என் மேல கொஞ்சம் கடுப்பு.. அந்த கடுப்பு சரி பண்ண தான் இந்த கல்யாணம்.. என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயம் படுத்தினான். நான் அங்கிள் கிட்ட இத பத்தி பேசினேன் அவர் தான் .. இவனுக்கு வெளிநாட்டு ட்ரிப் க்கு அனுப்பி வச்சார் அவன் வரதுக்குள்ள எனக்கும் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு , இவனுக்கும் சந்தியாவ்கும் பெரிசா ஒன்னும் வித்தியாசம் இல்லை இவன் ஆண் அவள் பெண் அவ்வளோ தான் ரெண்டும் பணம் பிசாசுங்க என மதி சுருக்கமா சொல்லி முடித்தாள்

” ஒ , ஆமா அது என்ன மாமா கதை..” அவள் சொல்ல மறந்ததை நினைவு படுத்தினான்

‘ கடவுளே.. எல்லாம் போட்டு வாங்குறானே , அத எப்பிடி சொல்ல இவன் கிட்ட என நினைத்து கொண்டே.., ‘ இல்ல அத மட்டும் கேட்காதிங்க.. என மதி சொல்ல. ”

” இல்லை மதி நீ சொல்லி தான் ஆகணும் அப்போது தான் இவன் உன்னை தொல்ல பண்ணாம பார்த்துக்க முடியும் நீ சொல்லு, சூர்யா கேட்க

” மதி தயங்கியபடி , வேற வழி இல்லாமல். அது.. அது வந்து இவன் டோர்சேர் தாங்காம நான் ஒரு நாள் போய் சொல்லிட்டேன்.. அதாவுது.. எனக்கு ஒரு அத்தை பையன் இருக்கிறதா அவன் இப்போ வேற ஊருல வேலை பார்த்துகிட்டு இருக்கிறதா அவுங்களுக்கு எனக்கும் தான் கல்யாணம் சொல்லிவச்சு இருந்தேன் , இ .. இப்போ ..? ” அவள் திக்கி திணறி சொல்லி முடிக்க .

தான் எப்படி உணர்கிறோம் என்று சூர்யாவால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை , எந்த மாதிரியான உணர்வு இது , இதயத்துக்குள் இதமான வலி பரவுவதை உணரத்தான் தான் உணர்வது போல் மதியும் தன்னை பற்றி புரிந்து கொண்டு உணர்வாளா என்கிற எண்ணத்துடன் இதை கேட்டு கொண்டு இருந்தா சூர்யா இப்போ தான்

” இப்போ சொன்ன மாதிரி வந்து கை பிடிச்சுடேனா மதி….” என கேட்டு விட்டு காரை கிளப்பினான்.

அவள் சூர்யா என்ன சொன்னான் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வர முன் மதியே வீடு வாசலில் விட்டுவிட்டு கிளம்பிவிட்டான் அவன்.

ஆனால் மதி தான் இப்போ குழம்பி போய் விட்டாள்” என்ன சொன்னான் இவன் ஏன் அப்பிடி சொன்னான் என்ன சொல்ல வந்தான் என்று தவியாய் தவித்து கொண்டு இருந்தாள் , அவளது இதயம் அவனது வார்த்தையில் வழக்கம் போல் இல்லாமல் இன்றைக்கு அதிவேகமாக துடிக்க ஆரம்பித்தது , அவன் விட்டு சென்ற இடத்திலே அப்பிடியே நின்று அவள் யோசிக்க யோசிக்க , ஒன்றும் புரியாமல் ஐயோ இப்பிடி கடைசில என்ன எஸ்.ஜே . சூர்யா மாதிரி ஐயோ கடைசில இப்பிடி என்ன எஸ். ஜே . சூர்யா மாதிரி புழம்ப வச்சுட்டு போயிட்டானே இந்த சூர்யா என மதி தலையே பிடித்து கொண்டு தோட்டத்தில் இருந்த பெஞ்சில் படுத்து உறங்கி விட்டாள்.


************
hi friends , ellarum eppidi irukinga , itho next epi pottachu padichu eppidi irukkunu solunga, ithu varaikum comments pannina ellarum thank you

 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI -13


எவ்வளோ நேரம் உறங்கினாலோ திடிருன்னு எதோ தோன்ற மதி, விழுது தனது கைகடிகாரத்தில் நேரத்தை பார்க்க அது மாலை ஆறு மணி என காட்டியது , அட கடவுளே இவ்வளோ நேரமாகவ இங்கயே தூங்கி இருக்கோம் என வேகமாய் எழுந்து வீட்டினுள் சென்று முகம் கழுவிவிட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி அவளுக்கு பிடித்தமான விநாயகரைவணக்கிவிட்டு டின்னெர் ரெடி செய்து , முடித்தாள்…

அப்போது சூர்யா வர, மதி அவனுக்கு உணவு பரிமாறிவிட்டு… மரகதம் பாட்டிக்கு உணவு மற்றும் மருந்தைஎடுத்துக்கொண்டு.. அவர் அறைக்கு சென்றாள்

அங்கே அவள் , பாட்டி , இன்னைக்கு நான் கிழ இருக்குற ரூம்லையே படுத்துக்கிறேன் நீங்க தூங்குங்க”

“அதை கேட்ட மரகதம் மனதுக்குள் சிரித்துவிட்டு”, ஏன் ம்மா..இந்த பாட்டி கூட இருக்க பிடிக்கலையா”

“ஐயோ பாட்டி [ பெரியவர் தப்பாக எடுத்துகொண்டாரே என்கிற பயத்தில் ]அப்பிடி எல்லாம் இல்லை, நான் இங்கயேபடுத்துக்கிறேன், என அவள் அழுது விடுபல் போல் சொல்ல

பாட்டி சிரித்தே விட்டார் ” ஹாஹா.. சும்மா சொன்னேன் டி ம்மா , நீ போ” அவர் சொல்ல

“இல்ல பாட்டிமா நான்…இங்கயே”என மதி சொல்ல

“அது எல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீ கிழே போ ம்மா.” என அவர் மதியே விரட்டினார் அவருக்கும் பேரன் அவனது மனைவி உடன் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்கிற ஆசை தான்

” சரி பாட்டிம்மா. என அவர் இடம் சொல்லிவிட்டு கிழேசூரியாவின் அறைக்கு வந்தாள்….!!

அங்கே சூர்யா அவள் வருவதை பார்த்துவிட்டு, பதட்டாமாகஅமர்ந்து இருந்தான்……

இன்றைக்கும் அவள் பாட்டியின் அறைக்கு தான்… சென்றுஉறங்க போகிறாள் ஆனால் தன்னால் தடுத்து நிறுத்தமுடியவில்லை…. அவன் மனதுக்குள் நம்பு மதி.. உன் அனுமதி இல்லாமல் நான் உன்னை ஒன்னும் செய்யே மாட்டேன் இங்கயே இருந்துவிடு மதி, எனக்கு நீ பக்கத்துல இருந்தா போதும் . எனஅவளிடம் மனதுக்குள் கேட்டு கொண்டான்…

ஆனால் அவன் அறியேவில்லை அவன் மனைவி அவன் தவிப்பை தீர்த்துவிட்டாள் என்று….

அறைக்குள் வந்தவள் வழக்கம் போல் படுக்கையே சரி செய்துவிட்டு குளிக்க உடைகளை எடுத்து செல்ல அதை பார்த்த சூர்யா

” ஒரு நிமிஷம் மதி…” என அவளை தடுத்து நிறுத்தி

என்ன என்பது போல் அவள் அவனை பார்க்க

சிறு யோசனைக்கு பிறகு ‘ மது அ .. அது [எவ்வளோவோ பிசினஸ் மீட்டிங்கை கையாண்ட அவனால் இன்று மனைவி இடத்தில பட்டென்று பேச முடியவில்லை அவள் தவறாக எண்ணி விட்டாள் ] நீ இங்கயே ஏன் படுத்துக்க கூடாது” ஒருவழியாக சொல்லிவிட்டான்

” அதை கேட்ட அவள் ஒன்றும் சொல்லாமல் அவனை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்துவிட்டு குளியலறைக்குள் சென்று புகுந்து விட்டாள்

” அவளது செயலை பார்த்து இருந்த சூர்யா.. ” என்ன இவ ஏதும் சொல்லாமல் போய்டா, யோசித்து கொண்டே அவனதுவேலையே பார்த்து கொண்டு இருந்தான்….”

வெகுநேரம் தனது வேளையில் மூழ்கி இருந்தவன் அவள் உறங்கிவிட்டாளா என திரும்பி பார்த்தவன் அங்கே மதி இருக்கும் தடையம் கூட இல்ல எங்க போனா இவ , அப்போதான் குளியலறையில் தண்ணி விழும் சத்தம் கேட்டது , நேரத்தை பார்த்தவன் , இந்த நேரத்தில் இவ்வளோ நேரமாகவா குளிக்கிறா அவள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வராமல் இருக்க இப்போது அவனுக்கு பதட்டம் கூடியது ” என்ன பண்ணுறா இன்னும் மறுபடியும் நான் சொன்னதுக்கு ஏதும் அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை , ஐயோ கடவுளே என அவன் பதறி அடித்துக்கொண்டு எழுந்து பாத்ரூம் கதவை தட்ட ..

உள்ளே இருந்து பதில் ஏதும் வரவில்லை…

சூர்யா மேலும் பயந்துவிட்டான், கதவை மேலும் ஓங்கி தட்டி ” மதி கதவ திற டி… அன்னைக்கு எதோ கோபத்துல அப்பிடிசெய்துட்டேன், அதுக்காக ஒரு தடவ நீ பட்டது போதும் நானும் அனுபவிச்சது போதும் இனி ஒரு முறை உன்னை அப்பிடி பார்க்கிற சக்தி எனக்கு இல்லை.. ப்ளீஸ் கதவ திற மதி,கதவை திற ”

அவன் அவ்வளோ சொல்லியும் எதுக்கும்.. பதில் வராமல் போகவே சூர்யா வேறுவழி இல்லாமல்… கதவின் லாக்கை உடைத்து உள்ளே சென்று விட்டான் அங்கே கதவு பட்டு எனதிறக்கும் சத்தம் கேட்டு மதி கிழே கிடந்த புடவை எடுத்துபேருக்கு சுத்தி கொண்டாள் , அவள் பயத்துடன் அவனை பார்த்து
,”எ.. என்ன வேணும்.. இப்போ எதுக்கு உள்ளே வந்திங்க அதுவும் இப்பிடி கதவை இப்பிடி உடைச்சு”

வந்தவன் அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்து பார்த்து அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று நிம்மதி ஆனான் ,அவ்வளோ நேரம் இருந்த பயம் இப்போது கோபமாய் மாறியது

” ஏய் நீ மொதல உள்ள என்ன பண்ணிட்டு இருந்த. இவ்வளோநேரம்.. “ அவன் கோபத்தில் கேட்க

” அவனது கேள்வியில் இப்போது மதிக்கு கோபம் வந்து விட்டது, ,” ஹ்ம்ம் பாத்ரூம்க்குள்ள, என்ன பண்ணுவாங்களாம் , கதகளி, குச்சிபுடியா ஆடுவாங்க என கோபத்தில் கேட்க

“ அதுக்காக இவ்வளோ நேரமா.. வா” அப்போது தான் அவள் ஒருகையால் புடவை நழுவி விடாமல் பிடித்து இருந்தாள் மற்றொரு கையே. பின்னாள் வைத்து இருந்தாள் எதையோ மறைப்பது போல்..” அதை கவனித்து விட்டவன் “, மதி அது என்ன உன் கையில என்ன மறைக்கிற” என சூர்யா கேட்க

” ஆ . அது ஒன்னும் இல்லை.. நீங்க மொதல இங்க இருந்துவெளியே போங்க.. “ மதி அவனை விரட்ட

” ஏய் உண்மையே சொல்லு உன் கைல என்னனு ” அவனுக்கு மீண்டும் பயம் தொற்றி கொண்டது பேசிக்கொண்டே அவன் முன்னேற

அவளோ பின்னால் நகர்ந்து ” ஐயோ , என் கைல ஏதும் இல்லை இதோ ஓயன்மென்ட் தான் என கையில் மறைத்து வைத்து இருந்த மருந்தை காட்டி, சொன்னா புரிஞ்சுகோங்க தையல்போட்ட இடத்துல… மறந்து போட்டுட்டு இருந்தேன் அதுக்குள்ளநீங்க அவசர பட்டு.. உள்ள வந்தா நான் என்ன பண்ணுறது…”பேசியே படி அவனை வெளியே அனுப்புவதில் அவள் இருக்க..

அவனோ ஆழமாக மூச்சு ஒன்றை இழுத்து விட்ட படி ” உப்ப்ஸ் அவ்வளோ தானே நான் வேற என்ன என்னமோ நினச்சுட்டேன் என சூர்யா சொல்ல

மதி அவனை குழப்பமாக பார்த்து.. ” என்ன நினைச்சிங்க “ என கேட்டள்

“இல்லை அது நான் நீ நம்ம ரூம்லையே இரு சொன்னதுக்குகோப பட்டு. அன்னைக்கு மாதிரி “ அவன் திணற

“அன்னைக்கு மாதிரி குத்திப்பேன்னு நினைச்சிங்களா” மதி கேலியாக கேட்க

“ஆமா , நான் நினைச்சதுல ஒன்னும் தப்பு இல்லையே அவனும் படபவென பேச

“அதான் ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சுரிச்சுல இப்போவாது வெளியே போங்க நான் மருந்து போட்டுட்டு வருவேன் , போங்க வெளியே என அவள் சொல்ல”

“உனக்கு உடம்பு சரி இல்லை , அதுக்கு நான் தான் கரணம் ,அதே மாதிரி உன்னை பார்த்துக்கிறதும் என் பொறுப்பு ” என சம்பதம் இல்லாமல் சூர்யா சொல்ல

அதுக்கு..இப்போ என்ன பண்ணனும்கிரிங்க”மதி இப்போ குழப்பத்துடன் கேட்க

“ஹ்ம்ம் நான் இப்பிடியே இருக்கேன் நீ மருந்த போட்டு சேலை சரி பண்ணிட்டு வா சேர்ந்தே போகலாம்” சூர்யா சொல்ல

தான் சரியாதான் கேட்டோமா என்னது இங்கயே நீங்களா எனமதி அலறியே விட்டாள் ”

” ஆமா…” சூர்யா அவன் பிடியில் நிற்க

” என்ன விளையடுரிங்களா மொதல வெளியே போங்க “மதியும் அவனை அனுபுவதுலையே இருக்க

” முடியாது..” என சூர்யா பிடிவாதாம் பிடிக்க

” சூர்யா ஏன் இப்பிடி பண்ணுரிங்க” என அவள் அழும் குரலில் கேட்க

” நிச்சியமா தப்பான எண்ணத்துல இல்லை உன் ஹெல்த் கண்டிஷன் நினைச்சு தான் சொல்லுறேன்”

” எனக்கு ஒன்னும் இல்லை நீங்க மொதல போங்க.. என்ன பார்த்துக்க எனக்கு தெரியும்..”

அவள் சொன்னால் கேட்க மாட்டாள் ,” முடியாது என சூர்யாஅங்கயே சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டான்… “

” அப்பிடி நிற்பது பார்த்து மதுக்கு அவஸ்தையாய் போய்விட அவள் அவன் இடம் கெஞ்சினாள்”

” அவனும்…நான் போக போறது இல்லை… வேணும்ன்னா நான்திரும்பிக்கிறேன்.. நீ உன் வேலையே முடி..என சொல்லிவிட்டுசுவர்ப்பக்கம் திரும்பி கொண்டான்…”

அவனை ஒன்றும் செய்யே முடியாமல் வழக்கம் போல் மதி அவனை மனதுக்குள் இம்சை இம்சை என அர்ச்சனைசெய்துகொண்டே…” தையல் போட்ட இடத்தில அவன் திரும்பி விடுவானோ என்கிற பயத்தில் அவசர அவசரமாக மருந்து போட்டு புடவையே சரியாக கட்டிவிட்டு போகலாம் என சொன்னாள்.

சூர்யா, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு எவ்வளோ நன்பிக்கை டி உனக்கு என் மேல அப்பிடியே கடிச்சு முழுங்கிடுவேனோ உன்னை என நினைத்துகொண்டே..” ஹ்ம்ம் வா என ஒற்ற சொல்லை சொல்லிவிட்டு அவள் அழைத்து கொண்டு வெளியே வந்தான்…

பிறகு அவன் தன் வேலையே பார்க்க அமர்ந்துவிட…. மதி ஏதும் பேசாமல் அமைதியாக அவனை பார்த்த படி அங்கே இருந்த கட்டிலில் படுத்து கொண்டாள் [ முதல பார்த்த சூர்யாவுக்கும் இப்போது இருப்பவனுக்கும் எவ்வளோ வித்தியாசங்கள் , இது தான் இவனோ , கோபம் ஒரு மனுசன எப்பிடி எல்லாம் மாத்தி வச்சுருது , இன்னைக்கு நமக்க எப்பிடி பதறுறான் லைட்டா நல்லவன் தான் இவனும் , சந்தியா மட்டும் சரியா இருந்து இருந்தா இவன் நமக்கு நல்லவிதமா அறிமுகம் ஆகி இருப்பான் - இப்பிடி அவள் எண்ணங்கள் முழுவதும் அவனே ]

அவனின் அசைவு தெரிந்து மதி பட்டென்று மற்றோரு பக்கம் திரும்பி படுத்து கொண்டாள் - அவளது மனம் ஏனோ தவறு செய்தது போல் படபடவென அடித்துக்கொள்ள கண்களை இறுக முடிக்கொண்டாள்

அவள் பாட்டி அறைக்கு சென்று விட்டாலோ என திரும்பி பார்த்தவனுக்கு ஆச்சரியம்…” மதி” என அவன் அழைக்க..

அவன் அழைக்கிறான் என தெரிந்த மதி அவன் பக்கம் திரும்பாமல்..” வேலை இருக்கு தானே சொன்னிங்க அதபாருங்க… இங்க என்ன பேச்சு வேண்டி கிடக்கு, எனக்கு தூக்கம் வருது.. என தூங்குவது போல் கணங்களை இறுக்கி மூடிகொண்டாள் ”

” அதை பார்த்த சூர்யா.. தேங்க்ஸ் என சத்தமாக சொல்லிவிட்டுஅவனோட வேளையில் மூழ்கிவிட்டான் மணி இரண்டு ஆகிவிட்டது வேலை பார்த்தது . போதும் என எழுந்து சென்றுபடுத்துவிட . ஏதோ ஒன்று அவனை தூங்க விடாமல் செய்து கொண்டு இருந்தது, என்னவென்று புரியாமல் தவித்தவனுக்கு.. ” ஹ்ம்ம்கும் இது சரி வராது என மதியே அனைத்துகொண்டான்….. .”

” அவனின் நெருக்கம் உணர்ந்து மதி அவனை விட்டு விலக…”

” மதி… ப்ளீஸ்… “சூர்யா சொல்ல

” அவனது குரல் என்ன மாயம் செய்ததோ… அவளும் ஏதும்சொல்லாமல் விட்டுவிட்டாள் ”

இந்த ஒரு மாதத்தில் மதியும் சூர்யாவும். ஓர் அளவுக்கு.. நல்ல புரிதல் இருந்தது சந்தியாவின் நோக்கம் அறிந்து..பின் மதிஅவனுக்கு உதவி செய்யே முன் வந்து இருந்தாள் அதுக்கு எந்தஅளவுக்கும் போக அவள் ரெடியாக இருந்தாள்”

முன்பு மாதிரி.. சூர்யாவும்.. அவள் இடம் கோபம்படுவதுவில்லை என்றாலும்.. அவனது பார்வை… அவள் எங்குசென்றாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்…

அது தெரிந்து இருந்தும் மதி.. மனதுக்குள் எதுக்கு இப்பிடி பார்த்துவைக்கிறான் இதுக்கு என் சண்டை கூட போட்டு தொலைக்கலாம்…..என்று இருந்தது.அவளுக்கு ..

அடுத்து அடுத்து சந்தியா அவன் தொழில் சம்பதமான தகவல்தெரிந்து கொள்ள.. மதியே தேட..

அவள் பிடியில் சிக்காமல்.. அவளுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள் மதி..

இது சூர்யாவுக்கு தெரியே வர. சூர்யா மதி இடம்.. வேண்டாம் மதி.. அவள் ரொம்ப மோசாமான கூட்டத்தொட சேர்ந்து இருக்கா இது நால உனக்கு ஏதும் பிரச்சனை வந்தா..

” என்ன இப்பிடி பேசுறிங்க.. எனக்கு எதும்னா நீங்க பார்த்துக்க மாட்டிங்களா.. , நான் பார்த்த சூர்யாவா இது.. என அவள் சொல்ல..”

” உசுர கூட உசுர கூட எடுத்துவிடுவேன் மதி உனக்கு சந்தியா ஏதும் செய்தானா.. “

” சூர்யா , “ என்ன இது இப்படி எல்லாம் பேசுறிங்க மதி பயந்து போய் கேட்க

” இங்க பாரு மதி , நம்ம கல்யாணம் நடந்த சுழல் சரி இல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனா இனி வரும் காலம் நான் உனக்குநல்ல ஹஸ்பண்ட இருக்க முயற்சி பண்ணுறேன் புரியுதா, இந்த ஜென்மத்துக்கு நீதான் என் வைப் அதுல எந்த ஒரு மாற்றம் இல்லை, இதுக்கு மேல எனக்கு எப்படி சொல்லுறது தெரியலை அவள் விசையத்தில் உன்னை பலி கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை “

” ஹ்ம்ம்.. , சரி வாங்க சாப்பிட “

” நீ எடுத்துவை மதி நான் வந்துறேன்..” என அவன் சொல்ல

” சரி வாங்க ” என அவள் சென்று விட்டாள்

சூர்யா தன்னுடையே வேலையே முடித்துவிட்டு சாப்பிட வந்து அமர்ந்தான் பாட்டி சாப்டாங்கலா மதி, என அவன் கேட்”

அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்த படி ,அவங்க அப்போவேசாப்டாங்க.. நீங்க சாப்டுங்க ,” மது சொல்ல

” நீ.. ?? “என அவன் கேட்க

” இனி தான் நீங்க முதல சாப்பிடுங்க..” சாப்பாடு பரிமாறியே படி மதி சொல்ல

” இனி எப்போ நீ சாப்பிட உட்காரு சேர்ந்தே சாப்பிடலாம் என அவளுக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்து அவனே பரிமாறினான் ”

” சரி என அவளும் அமர்ந்துவிட அப்போ பார்த்து சரியாக சந்தியா அங்கே வந்து சேர்ந்தாள்

” சூர்யா.. என அழைத்து கொண்டே

அவளது குரல் கேட்டு மதி பட்டேனே எழுந்துவிட…”

சூர்யா அவள் கையே பற்றி ,”சாப்பிடும் பொது பாதிலஎழுந்துக்க கூடாது மதி உனக்கு தெரியாதா உட்காரு,”

மதி அவன் கையில் இருந்து தன் கையே விலக்கியேபடி ”இல்லைங்க சந்தியா வந்துடா , அவள் பார்த்து எதாவுது தப்பா..”என சொல்ல

” இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு இங்க ஒன்னும் நாம ஒன்னும் ரோமன்ஸ் பண்ணல அவள் வந்து பார்த்து எரிச்சல் பட” அவன் எரிச்சலில் சந்தியாவின் பேரை சொல்லி.. சூர்யா தன் மன குறையும் சொல்லிவிட… [ இதுக்கு பேரு தான் சந்து அடி சாக்குல சிந்து பாடுறதா ராசா நீ நடத்து ]

அவனது பேச்சில், அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது ” என்ன பேசுறிங்க சூர்யா.. பேசாம சாப்டுங்க.., உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க என்ன சொல்லணும்.. ” என பேசி கொண்டு இருக்கும் போதே சந்தியா இவர்களை தேடி.. டைனிங் ஹால்கே வந்துவிட்டாள் ”

வந்தவள் நேரா மதியே பார்த்து, என்ன மதி பண்ணுற , என கேட்க

சூர்யா மதிக்கும் மட்டும் கேட்டு குரலில்..” சாப்பிடறதுகண்ணுக்கு தெரியலையா இவளுக்கு என நக்கலாக அவன் சொல்ல..

மதி , அவள் முன்னாடி சிரித்து வைக்க கூடாது என்று அவனைபார்த்து முறைக்க.

அதை பார்த்த சூர்யா ” இப்பிடி பார்த்து என் வாயே ,மட்டும் அடை. அவள ஏதும் சொல்லுறியா , ப்ரெண்ட் மேல இருக்கும் கரிசம் கொஞ்சம் புருஷன் என் மேலையும் காட்டுமா.. எனமுணுக்க

” சூர்யா போதும் “ மதி அவனை அதடின்னாள்

” சரி சரி.. ” என எங்கே அவள் எழுந்துவிடுவாள் என்று அவள் கையே விடாமல் பிடித்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தான்….”

” அதை கவனித்துவிட்டாள் சந்தியா , என்ன இது புதுசா என நினைத்து கொண்டே என்ன மதி இப்போ எல்லாம் உன்னை பார்க்கவே முடியல ”

அவள் கவனிக்கிறாள் என்று மதி சூர்யா கையில் இருந்து தன் கையே உருவிகொள்ள முயன்றாள்

அவனோ இது தான் சாக்குன்னு என்று இன்னும் இறுக்கி பிடித்து கொண்டே மதி அந்த வெண்டைக்காய் கூட்டு இன்னும் கொஞ்சம் வை நல்ல இருக்கு.. இந்த ரசம் இன்னும் கொஞ்சம் போடு.. சூப்பரா இருக்கு.. என சப்பு கொட்டி பெருமை பேசி கொண்டே சாப்பிட்டு இருந்தான்.

சந்தியா ஒருத்தி அங்கே இல்லைது போல் அவன் நடக்க அதை பார்த்த

அவளுக்கோ கோபம் தலைக்கு ஏறியது அவள் மதியே பார்த்து பல்லை கடித்து படி , எங்கே டி உன் போனை எவ்வளோ தடவ ட்ரை பண்ணினாலும். லைன் கிடைக்க மாட்டேங்குது, சுவிட்ச் ஆப்னே வருது

” அது..? “ மதிக்கு இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என யோசிக்க

சூர்யா டக்கென்று
,” அவளுக்கு எதுக்கு போன் மதி.. நான் தான் அதை அவ கிட்ட இருந்து வாங்கி வச்சுட்டேன்.. ஏதும் உனக்கு பேசணும்னா என் நம்பெர்க்கே இனி கால் பண்ணு…. என அவன் சொல்ல .”

“சந்தியா அதிர்ந்துவிட்டாள் இது என்ன இவன் இப்பிடி பண்ணுறான்… ” ஒரு வேலை இவனுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துர்ச்சோ.. என யோச்கிக்க.

” அதை யூகித்தவன் போல்.. என்ன சந்தியா என்ன யோசனை..”

” ஆ.. இல்லை… , சூர்யா.. நீ ரொம்ப பிஸியா இருப்ப…. உன்ன அடிக்கடி தொல்லை எப்பிடி.. “

” அது என் கவலை சந்தியா நீ இனி மதி கிட்ட பேசணும்னா இதுதான் ஒரே வழி சரி சரி எனக்கு தூக்கம் வருது.. நீ கிளம்பு , மதி நீவா “ அவன் எழுந்துகொள்ள

” மதிக்கு இப்போது தூக்கி வாரி போட்டது.. என்ன இவனுக்குதூக்கம் வரதுக்கும் எதுக்கு என்ன கூப்பிடறான் “

” சந்தியாவும் அதே எண்ணத்தில் அவனை.. பார்த்து. ஏன்மதியே எதுக்கு இப்போ நீ கூப்பிற்ற சூர்யா…”

” சந்தியா , உனக்கு எல்லாம் சொல்லணும் அவசியம் இல்லைஇது எனக்கும் மதிக்கு சம்பதமான விஷயம்.. நீ கிளம்பு.. எனசூர்யா சொல்ல.. “

” அவளும் வேற வழி இல்லாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி கிளம்பி சென்றாள் ”

தொடரும்
…………………………….!!!!

hai friends itho next epi padichu unga cmts sollunga
 
Status
Not open for further replies.
Top