All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிகழ்நொடி கதை திரி

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

"தன்னை கூட்டிவர வேண்டாம் என்று மனைவி போனை அணைத்துவிட்டாலே"... அது ஒன்றே மனதில் பற்றி எறிய அங்குமிங்குமாய் அலைப்புறும் மனதினை அடக்க முடியாது போக நடை பயின்ற வீரபொழிலன் அப்படி அந்த டயரியில் என்ன தானிருக்கும் என்றவாறு அதை கைகளில் தூக்கி கொண்டு வாசலில் அமர்ந்தான்...

"வீர பொழிலன் என் வாழ்க்கை" ஆரம்பத்திலேயே அவள் தன் வாழ்கையே இவன் தானென்று குறிப்பிட்டுத்தானே அந்த டயரியே எழுத ஆரம்பித்திருந்தாள் அப்போதே அவளின் மனதின் காதல் அந்த மூடனுக்கு புரிந்திருக்க வேண்டாமா...

"முதல் முதலாய் ரத்தம் சிந்திச் சென்ற அந்த பையனின் கண்களின் வலி உடலின் வலியை விட அதிகமாய் இருந்ததாலோ எண்ணமோ என் உறக்கங்களை பிடித்துக் கொண்டான அவன் மீதான என் குற்ற உணர்வில்,

உருவ,அந்தஸ்த்து வேற்றுமையில் சமூகம் அவனை ஒதுக்கிய போது இறக்கமும் அழுகையும் ஒரு சேர மனதினை நனைத்தது மீண்டும் அவனது கண்கள் தான் நினைவில் எழுந்தது நீயும் மறைமுகமாய் அதற்கு காரணமாகி விட்டாய் என்று‌ சொல்லும் போது,

மருத்துவ பள்ளியிலே என் சுய மிளந்து நான் தொலைந்து கொண்டிருந்த போது பசி என்ற சொல்லிற்காய் சுடுதண்ணியையும் கடுச் சொற்ஙளையும் வாங்கி கொண்டு இன்னொரு ஒரு உயிரின் பசியை அவன் தீர்த்த காட்டுசி ஒரு‌ நாள் என் கண்களில் பட்டபோது....மீண்டும் அந்த கண்கள் குற்ற சாட்டியது என் மனதுக்குள் நீ இந்த ஞாயத்தை எனக்கு இழைக்க தவறிவிட்டாய் என்று,

முழுதாய் என் படிப்பிற்குள் தொலைத்துவிட்டேன் என் கனவுகளை என்று எண்ணி கோளையாய் நான் ஓடிவிட நினைத்த போதும்..
யாதொன்றும் இல்லாத நிலையில் உன் கணவுகளை நீ மீட்டிக் கொண்டிருந்தாய் ...உன்னால் முடிந்த ஒன்று எண்ணால் முடியாதா என்று என்னை நீ சிந்திக்க செய்ய முதல் நொடி,

திருமணப் பந்தத்தில் என் அன்பு அப்பா பார்த்த மாப்பிள்ளையை பார்த்துமே அவனது முகம் சில நொடி கூட கருத்தில் பதித்து பார்க்க கூட முடியாது என் மனதின் ஓரத்தில் கேள்வி கேட்டு நின்றது உன் கண்கள்,

பொய்யாய் உன் வாழ்வில் காதல் என்னும் நிழல் கொண்டு உள் நுழைந்தேன் உன் கண்களுக்கு பதில் சொல்ல

ஒரு பெண்ணாய் உன் வளர்ச்சியின் பின் நான் மட்டுமிருக்க சுயநலம் கொண்டேன்,

தனித்து ஓட பயந்த என் சிறகுகளை உன் சிறகளுக்குள் மறைமுகமாய் நான் இணைதேன்

பொய் பிழைதான் அன்பே அதன்‌ முடிவில் நலன் மட்டுமே உள்ளடக்கம் என்றால் துணிந்தே இக் காரியதில் இசைந்தேன் ...சுயநலமான இந்த உலகில் நிலைத்து வாழ".....

அதோடு அந்த டயரியில் அந்த கோர்வை எழுதாது நிறுத்தபட்டிருந்தது.

அவளின் வார்தைகளின் ஓசை முரண்பாடான அர்தத்தை கொடுத்தாலும் அவள் மேல் காதல் கொண்ட கணவனாய் அவன் ஆழ்ந்து வாசித்திருந்தால் அதில் அவளுக்கே விளங்காது போன காதல் அவனுக்கு விளங்கியிருக்கும்.

"மோஜோ நான் ஜித்துவை மகாம்மா கிட்ட விட்டிட்டு வந்திருக்கேன் .... அங்க படம் பிரீமியர் என்னும் இரண்டரை மணி ரேரத்துக்குள்ள ஆரம்பிச்சிரும் நீ எங்க சார்புல போய் அதை கண்கானிச்சுக்குறியா.. அது தொடங்கி முடியிற நேரத்துல எந்த மாற்றமும் இருக்க கூடாது ...நான் வீராவை கூட்டிட்டு வரேன்"

அவர்களுக்குள் ஆரம்பித்திருந்த பனிப்போரை புறிந்தவனாய் மறு பேச்சின்றி மோஜோ கலம்பி சென்றுவிட வீட்டு மொட்டை மாடி‌யில் வெறிச்சோடி இருந்த அமாவாசை வானை இலக்கற்று வெறித்தபடியிருந்த வீரபொழிலனது மனம் தன்னவளின் காதல் பிழைத்து போனதே என்று உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்க அங்கே இன்னொரு புறம் தன் உருவாக்கத்தில் வெளியாகும் படைப்பைக் கூட பார்க்க தோன்றாது யாருக்கோ வந்த விருந்தாக நின்றிருந்தான்.

"வீரா......" என்று அவனது தோளின் மேல் கரம்பதித்தவளிடமிருந்து அழைப்பு மென்மையாக அதே நேரம் அழுத்தமாக வெளிவர அது அவளது உறைந்த நின்ற அவனது உயிரினை தீயில் பட்ட மெழுகாய் உருக்கி எடுத்தது இருந்தும் அவனிடம் பதிலும் இல்லை அசைவுமில்லாது போக

"வீரா மீடியா பேப்பர்னு ஸீபிரெட் ஆஆகுற நியூஸஸ் நல்லதோ கெட்டதோ நம்ம வேலைய நாம‌ கவணிச்சிட்டு அதை தாண்டு வாழ்றது வாழ பழகு அப்ப தான் முன்னேரனும்னு‌ எனக்கு சொல்லித் தந்ததே நீங்க அப்படி இருக்க எதுக்காக இப்படி துவண்டு போய் இருக்கீங்க"...அவனை தன் பக்கமாய் திருப்பி அவள் இவ்வாறு இப்படி கேட்கவும்.

"ஏன் ராவணி உன் குற்ற உணர்வை போக்குறதுக்கு காதலை மையமா வச்சு என்னை கல்யாணம் செஞ்சுட்ட"....அவனோ வேறு கோணத்தில் கேட்டு மொத்தமாய் அவளை அதிர்ச்சியாக்கினான்.

"வீரா....என்னாச்சு உங்களுக்கு ஆர் யூ ஓலீ ரைட்..” என்று நெறுங்கியவளிடமிருந்து விலங்கி நின்றவனை கண்டு கண்கள் சுருங்க
“நமக்குனு ஒரு வாழ்க்கை அதுக்கு அழகான அச்சாரமா நம்ம பையன்னு நம்ம குடும்பம் முழுமையானதுக்கு அப்ரமா எதுக்கு இந்த அபத்தமான கேள்வி...? நாம வேணுன்னா உங்களுக்கான பட பிரீமியர் முடிஞ்சதும் பேசிக்கலாம் இப்போ கலம்புங்களேன் பிளீஸ் ".. இன்று அங்கு நடந்தேறப்போகும் நிகழ்வுக்காய் அவனை விட மறைமுகமாயும் திவிரமாயும் அவள் காத்திருந்து அந் நாளும் மலர்ந்நுவிட அதன் தாற்பறியம் அறியாத கணவனோ அதைவிட அறியாமையில் விளக்கம் கேட்டு நிற்கிறான்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு தானே மனைவியை கண்டு இகழ்சியாய் உதட்டை சுளித்தவனோ
"அதுசரி இந்த படம் உன் புரொடக்சன்ல உருவானதுல..அதான் பதர்ர..
கோபமாய் இடை நிறுத்தியவள்..

"வீரா வந்து விழுந்த வார்த்தைகளை திரும்ப எடுக்க முடியாது பார்த்து பேசுங்க".... கோபமாய் சொன்னவளை கண்டு கேலியாய் உதட்டை சுழித்தவனா அதான் உன்‌ டயரி அது நிறைய பேசியிருக்கே என்று அவளின் மேல் அதை விட்டெறிய எப்போதோ அவள் தூக்கிப்போட்ட டயரி ஆயிற்றே இது இதெப்படி இவன் கையில்
எங்கோ ஒரு தவறு நடக்கிறது அதை ஊகித்து அவள் கண்டு பிடிக்க முன்னராக அவனது பேச்சுகள் கூரிய ஆயுதங்களாய் அவளது அன்பை சோதிக்க என்றே விழுந்தன.

"சொல்லு.... வைபவ் வார்தைக்கு வார்த்தை ராவணி உன்னை காதலிக்கலை அது உன் மேல பரிதாபப்பட்டு அவ வச்ச பாசமினு சொன்னப்போ கூட அவனை அடிச்சு துவைச்சுட்டு உன் மேல இருந்த நம்பிக்கையில தானே இத பத்தி ஒரு வார்த்தை கேட்காம இருந்தன்"......


"ஆனா உன் பரிதாபத்தையும் இறக்கத்தையும் பாசம்னு பிச்சைவாங்கிட்டே இந்த வாழ்க்கையை ஆரம்பிச்சிறுக்கேனு தெரியவந்தப்போ உடம்பெல்லாம் எரியிது ....அந்நைக்கு பகிரங்கமா சுதந்திரமா வாழ்ந்த என் வாழ்க்கை இன்னைக்கு அந்தஸ்த்துக்கு அடிமாயாகி தொலைஞ்சிறுச்சு.." தன் கோபத்தை சுவற்றில் குற்றி தீர்த்து ரத்தம் வர நின்றவனது பேச்சில் அவளது மனமும்தான் ரத்தகண்ணீர் வடிக்கிறது அவள் காதல் என்ற சொல்லின் அர்த்தம் அப்போது சொல்லும் போது வேண்டு என்றால் சந்தர்பத்திற்காக சொல்லியிருக்கலாம் ஆனால் அதன் பின் அவன் மேல் அன்பு கொண்டு தானே தன்னை ஊணோடு உயிராக அவள் சமர்பித்தால் அவனிடம் ..

அவளை பொறுத்த வரை காதல் என்று எதைச் சொல்ல வருகிறான் இவன் என்ற ஆதங்கமே நிரம்பியிருந்தது ...அன்பின் பரிநாமம் காதலெனில் தன்னுடைய அன்பை எப்படி கலங்கபடுத்திட முடியும் எந்த வகையில் பிழைத்து போயிருக்கும்

"எதுக்காக இவ்வளோ கேட்டும் கல்லாட்டம் இருக்க வாயை திறந்து பதில் சொல்லேன்.... உன் முகத்துல இருக்க அமைதி என்னை பயமுறுத்துது" ...

உணர்ச்சி வசப்பட்ட பொழிலனது வார்தைகளை தன்னிலையடைந்தவளுக்கு அதை ஜீரணிக்க முடியவில்லை... எட்டுவருட அவர்களின் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று.


சில நொடி தன்னை நிலைபடுத்தி வந்த கண்ணீரை உள்வாங்கிக் கொண்டவளோ .....

"ஸ்சோ ....பேச வேண்டியதெல்லாம் பேசிட்டிங்களா மிஸ்டர் வீரபொழிலன்...... அவனை பெயரிலேயே தள்ளி நிறுத்தி தீட்சான்யமாய் பேச ஆரம்பித்தவள்...

"நீங்க மட்டுமில்ல நானுந்தான் நம்பிட்டிருந்தன் இந்த உலகத்துல எம் புருஷன் அவர் மட்டும் தான் என்னை நல்லா புரிஞ்சு வச்சவர்னு

ஆனா இப்போ தானே தெரியிது அவருக்கு பாசத்துக்கும் கருணைக்குமே வித்தியாசம் தெரியாதுனு...ஸ்சோ சேட் ல"...

கொஞ்சம் கொஞ்சமாய் காரசாரமாய் அவளது பேச்சு தொணி ஏற தொடங்கியது கண்ணின் வெம்மை அவளது உறவுக்கு அவள் நேர்மையாய் தான் இருந்தாள் என்பதை வலியுறுத்த.

அவனது சேர்ட் கோலரை பிடித்து தன்னருகில் நெறுங்கச் செய்தவள் அவனது கண்களையே ஆழ்ந்து பார்த்த படி....

"பதினேழு வயசுல இருந்தே பிஸ்நஸ் அது இது எங்க அப்பா கூடயும் தாத்தா கூடயும்வேலைய கத்திட்டிருக்கும் போதும் சரி நானே தனிச்சு அதை ஆரம்பிச்சதுக்கு அப்பரமும் சரி எத்தனையோ பேர் தெரிஞ்சும், தெரியாமலும் என்னால பாதிக்கபட்டிருக்காங்க, சில நேரம் பரிதாபட்டு அவங்களுக்கு உதவி செய்திருக்கேன் அதை இல்லேனு மறுக்கல, ஆனா சில நேரம், அதை தூசு மாதிரி கடந்து போய்ட்டே இருந்திருக்கன்....ஆனா அவங்கள்ள யாருக்கும் என் வாழ்கையையும் சரி, ப....கைளையும்‌ சரி நான் வேற யார் கூடயும் வெறும் இறக்கத்துக்கும் கருணைக்காகவும் பங்கு போடலை".....

"பாப்பா.....!!!!!....ஏண்டி இப்படி பேசுற" அதிர்ந்து போன வீரபொழிலன் அவசரமாக விரைந்து அவளது வாயை மூடிவிட அதில் வெளிப்பட்ட நடுக்கமே சொல்லாமல் சொல்லியது அவளை நேசிக்கும் அவனது இதயத்திலும் பேச்சிலும் அவளை கலங்கபடுத்தி கேட்க அவனால் முடியவில்லை என்பதை‌.

அவனை இதில் நாளில்லாத அளவில் தன்னோடு பலம் கொண்ட‌ மட்டும் இழுத்தனைத்துக் கொண்டு அவனுள் புதைந்தவளின் வெம்மை அவளின் வதனங்களிலிருந்து வெளிப்படுத்தாத காதலை போலவே தன் செயல்களில் விளக்கியது,

சண்டை போட்டு உறவினை வெட்டி எறிந்திட ஆயிரம் காரணங்களும் ஒரு நொடியும் போதும்... ஆனால் எனக்கு வேண்டியது அவனுடனான பிரிவினை இல்லை ஒரு முறை விட்டு யுகம் தாண்டி கிடைத்த வரத்தை தன்னிடத்தே தக்க வைத்துக் கொள்ள பிடிவாதமாய் நின்றது அவளின் மனம் .. அதே நேரம் அவளது சீண்டபட்ட தன்மானமும் பற்றி எறியாது கனலாய் ஒரு ஓரம் புகைந்து கொண்டிருந்தது.

அவனது இருபாதங்களும் அவளது பாதங்கள் ஏறிக் கொள்ள தனது பாதங்களில் தன் தலைவியின் பாரத்தை சுமந்து தாங்கியபடி அவளை தன்‌பிடியின் சிறையில் அவனது கைகள் மூடி வளைத்து பிடித்திருக்க தூர ஆம்பித்த மழைசாரலில் நனைந்த படி பின்னோக்கி நகர்ந்தான் அவள் அதில் நனைந்துவிடக் கூடாது என்று.

அவளோ அவனையே ஆழப் பார்தபடி அசைய மறுத்த்தால் “பார்வைகள் குற்றம்‌சாட்டி ஞாயம் கேட்க...இதழ்களோ அவனிடம் சண்டை போட்டு விடக்கூடாது என்று இறுக மூடிக் கொண்டிருந்தது..
இவ்வளவு நேரமாய் அவளை சாடிய அவன் தான் இப்போது ஒரு நொடி தளர்ந்து போனான் அருகாமையில் அவளின் அமைதி அவனுள் அவளுக்காக இருக்கும் வக்கீலை தட்டி ஞாயம் கேட்டது... அவசரபட்டாயோ மூடா என்று போர் கொடி காட்ட.

கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த அவளிடம் தானாகவே அவனது இதழ்கள் முனுமுனுத்தது “மன்னிக்க மாட்டாயா”..என்றவன் தன்னுடைய நெற்றி மூக்கு இதழ்களை அவளோடு உரசிக் கொள்ளும் நெறுக்கத்தில் அவளின் முகம் மேல் குணிந்து தன் முகத்தை சாய்ந்திருக்க..

அங்கே வன்மையான யுத்தம் ஆரம்பிக்காது நெறுக்கத்தின்‌ வழியே மென்மையாய் தங்கள் மனதினை மௌணத்தின் பாசையில் பகிர்ந்து கொண்ட இருவரது அமைதியினை உடைந்தத மழையின் வேகமானவருகை

இந்த எட்டுவருடத்தில் கையிலெடுக்கலாத வன்மையில் அதை முற்றுப் பெறச் செய்திருக்க.

முத்தமிட்டு தன் தேடலை அவன் சீக்கிரத்திலேயே முடிக்கும் அளவுக்கு நடந்து கொண்ட‌ பெண்ணவளின் தீவிரத்தில் அவன் யோசனையில் விலகிய போது உணர்வுகள் துடைத்த முகத்தோடு எழுந்தவள் அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் பழைய காயம் இருந்த அதே இடத்தை அங்கிருந்த கண்ணாடி குவலையை உடைத்து காயப்படுத்திக் கொள்ள...

“ஏய் பைத்தியமாடி ஏன் இப்போ கையை கிழிச்சு கிட்ட” கர்ஜித்து கத்தியபடி அவன் அவளை நோக்கி ஓடிய போது...

“கிட்டவராதே அங்கயே நில்லு” அவனை விலக்கி நிறுத்தியவள் “எனக்கு நீ தேவையில்லாம கேள்வி கேட்கும் போது உள்ளுக்கு ஏற்கனவே வலிச்சு முடிஞ்சிறுச்சு....இது ஜஸ்ட் உனக்கான டெமோ தான்
“உங்கூட நடந்து முடிஞ்ச சம்மவத்தையும், இதையும் உன் கணக்குள எப்படி வேனா எடுத்துக்கோ....ஐ நெவர் மைன்ட் பட் உனக்கு பொண்டாட்டியா வலைஞ்சு குடுக்குற இந்த ராவணியால ஆப்பிசியலா எதுக்கும் சலிஞ்ச்சு போக முடியாது கெட் ரெடி ப்போர்‌ யுவர் மூவி பிரிமியம்”

தன் வலியை அவனுக்கு கொடுத்த திருப்தியில்
கபோட்டில் அவனுக்காக எடுத்து வைத்திருந்த கோட் ஷுட்டை எடுத்து கட்டிலில் விட்டெறிந்நவள் கடகடவென்று தன் மாற்று உடைகளை கைகளில் எடுத்துக் கொண்டவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டால்.

பெண் என்பவள் சரியாக ஒரு கடலைப் போன்றிருப்பாலாம். சில நேரங்களில் புயலைப் போன்றிருப்பவளோ இன்னும் சில நேரங்களில் அமைதியாகவும் இருப்பாள். கடலில் அலைகள் எழுந்து வருவதைப் போல் ஒரு பெண்ணின் மாறுதல்களும் எந்த நேரத்தில் வருமென்று சொல்ல முடியாது
மனைவியின் மாறுதல்களில் மலைத்துப் செய்வதறியாது விலகியவளையே வெறித்தபடி உறைந்து போய் இருந்த வீரபொழிலனின் மனதில் என்றோ படித்த பேர்னாட் ஷாவின் இவ்வரிகள் தன் முன்னே உருப்பெற்ற உலவும் மனைவி வழியே அது நிஜம் தான் என்று நம்ப தோன்றியது.

**************
அங்கே அந்த தியேட்டர் வலாகத்தில் நடக்க இருந்த சினிமா பிரீமியருக்காய் சினிமா விஐபி , ஸ்பான்சர்ஸ், மீடியா, உடன் ராவணியின் அழைப்பை ஏற்று எக்ஸ்.எம்மல்யேவும் வைபவின் தந்தையுமான திருநாவு , சுபாஷ் உடன் அவளது தந்தை,‌தாய்,தம்பியார் என்று அங்கே கூடியிருந்தனர்.
“அண்ணா...பொழிலு அண்ணும் மேடமும் என்னும் வந்து சேரலையானு கேள்வி மேல கேள்வியா வந்திட்டிருக்கு” மோஜோவின் காதுக்கருகில் அவர்களது யுனிட்டை சேர்ந்த பையன் முனுமுனுக்க “அவங்களுக்கு தாண்டா கோல் பன்னிட்டேயிருக்கேன் ரெண்டு பேர்ல ஒருத்தரும் எடுத்து துளையிறாங்க இல்ல”
அது அப்படியிருக்க தங்களுக்கு ரிசவ் செய்ய பட்ட சீட்டில் தந்தையின் அருகில் அமர்ந்திருந்த மைதிலி...

“ப்பா நீ செய்யுறது கொஞ்சம் கூட ஞாயமே இல்ல..இந்த ராவணி தனக்காக எவ்வளவு விளக்கம் சொன்னாலும் இப்போவுமே அவங்களை சுத்தமா பிடிக்கலை அப்படியிருக்க இதுக்க நீங்க வாறதே தப்பு இதுல என்னை வேற கட்டாயபடுத்தா உட்கார வச்சிறுக்கீங்களே”

இங்கே வந்தில் இருந்தே முகத்தை தூக்கி வைத்தபடி அடிக்குரலில் நச்சரித்துக் கொண்டிருந்த மகளை நோக்கி தீர்க்கமான பார்வையோடு...”ஜஸ்ட் ஸ்டாபிட் மைதிலி டோன்ட் பீ சில்லி ...எனக்கு எங்க வரனும் வரக்கூடாதுனு தெரியும்.இங்க வரும் போது எதுக்கு நைட் டைம்ல பொண்ணை விட்டிட்டு வரனும்னு நெனச்சுட்டு தான் கூட்டிட்டு வந்தேன் பிடிக்கலைனா கலம்பி மோய்ட்டேயிரு எனீனை தொந்தரவு பன்னாதே”...

“பல நாட்களுக்கு பின் எரிச்சலாய் வந்து விழுந்த தகப்பனின் வார்தைகளில் அவள் அமைதியாகிப்போனால்”..

அப்போது எதேர்சையாய் அவள் திரும்புகையில் இனியன் அவர்கள் அருகில் இருப்பதை கண்டு “ஹலோ மிஸ்டர் ஊர்ல போய் கேசை கண்டு பிடீங்கனா...அதெல்லாம் விட்டிட்டு படம் பாக்க வந்திருக்கீங்க உங்களை நம்பி இந்த கேசை ஒப்படைச்சவன் மட்டும் கையில கிடைச்சான் அவ்வளோ தான்” தகப்பனது காண்டை அவளோடு தோழமையில் அடிக்கடி பேசிவிட்டு சென்ற இனியன்‌மீது வெளிபடுத்தப்பட “இது நல்லா இருக்கே கேக்க அப்போ வீட்டுக்கு போயா உங்க. அப்பா கழுத்தை தான் நீங்க பிடிக்கனும்” அவளுக்கு நக்கலாகவே அதற்கு பதில் அழித்தவன் அங்கு இடம் முழுக்க இருள் சூழபட்டு திரை ஆன் செய்யவும் அமைதியானான்...

“இதெல்லாம் விருப்பம் இல்லாட்டியும்....வணி சொன்ன ஒன்னுக்காக இந்த படத்தை பார்க்க ஒரே ஆர்வமா இருக்கு” வாசுகி சொல்லவும் பிரபாகரன்
“வணிம்மா சொன்ன ஒன்னா அதென்ன இதை பத்தி நீ எனக்கு சொல்லலை”
பிரபாகரன் அப்படி கேட்டதும் “சிறித்துக் கொண்டே வாசுகி சொன்னார் அங்கே உருவாயிருக்கிறது என் நர்முகிலியின் கதை என்று...

நிகழும்...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-10
7853


3d அனிமேசன் டெக்னாலஜி விஷுவல்சில் படம் இனிதே மறைந்த ராவணியின் தாத்தாக்கு நன்றி செலுத்தியபடி திரையில் ஒளிர ஆரம்பித்தது கதையின் ஊடே முடிந்து போனதென்று நினைத்தது எல்லாம் மீண்டும் வெளிச்சப்படுத்தப்படும் என்ற சிறு குறிப்போடு ..

நீலகிரியில் ஜகனகிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் வளங்காப்புக் காட்டின் வழி வந்த பகுதிகளில் ஒரு சிறிய

வனப்பரப்போடு இணைந்து கொண்ட கிராமம் தான் இந்த முல்லையம்மை பெரும்பாலும் பற்பல மூளிகை மரங்கள் கட்டிடத்துக்கு உபயோகபடுத்தும்‌ சில பாறை வகைகளும் அதிகம விளைந்து இருந்த இந்த வனாந்தர பிரதேசத்தில்,

ஒரு குறித்த தமிழ் பழங்குடி இனத்தைச் சார்ந்த மக்கள் அவர்களின் மூதாதேயர் சோழர்கள் காலத்தில் ரகசிய போராளிகளாய் வேலை செய்த புகழ் அழிந்து பிரிட்டிஷ் காலத்தில் கூலி வேலையாட்களாய் மாற்றபட்டு சுரங்க வேலை கட்டிட வேலை என்று அங்குமிங்கும் நாடோடியாய் அடிமை வாழ்கை வாழ்ந்து தங்களின் அடையாளம்‌ துறந்திருந்து அதன் தாக்கம் தாங்க இயலாத நிலையில் தப்பித்து ஒழிந்து வாழ அண்டிய அவர்களை தன்னோடு அரவணைத்து கொண்ட அக்காட்டு பகுதியை தாயாய் நினைத்து முல்லையம்மை என்று அழைத்தனர்.

நாட்டிற்கு சுகந்திரம் கிடைத்தும் அவர்களுக்கான அங்கிகாரம் கிடைக்காமல் முடக்கப்பட்டு ஆங்காங்கே வயிற்று பிளைப்புக்காக மீண்டும் கூலி வேலைக்கும் வீட்டு வேலைகளுக்குமே அவர்கள்‌ போக ஆரம்பித்திருந்தனர் ஆனால் இம்முறை இந்திய‌‌ முதலாளிக்கு கீழ்.

மாற்றம்‌ முதலாளி தானே ஒழிய வேலையில் இல்லை என்பதை அந்த பேதை மக்கள் நாள் கடந்தே உணர்ந்தனர் அப்படி பட்ட சூழ்நிலையில் தான் மூலிகை வைத்தியத்தை கற்று தேர்ந்து அங்கிருப்வர்களுக்கு ஏதும் என்றால் இயற்கை மருத்துவம் பார்த்து குணப்படுத்தும் காண்டீபனுக்கும் , பக்கத்து பட்டனத்தில் உயரிய குடும்பமா போற்ற பட்ட ஒரு பெரிய வீட்டுக்கு ஆயா வேலைக்கு செல்லும் பாரிஜாத்திற்கும் ஒற்றை வாரிசாய் அதுவும் பெண்களுக்கு உரிய பாதுகப்பு இல்லாத அந்த பிரதேச சூழலிலில் பெண்பிள்ளைகளை வளர்பதையே கையில் தீப்பந்தம் ஏந்தி சுமப்பதை போல பயந்து குதித்து அழிக்கவா இல்லை துளைக்கவா என்று‌‌ துடிக்கும் பெற்றவர்களுக்கு நடுவில்.. அதிசய வரமாய் பிறந்த தங்களின் மகளை தலையில் வைத்து கொண்டாடி மகிழும் பெற்றோருக்கு மகளாய் பிறந்தவள் தான் நர்முகிலினி.

"ஏண்டா பொட்டப்பிள்ளைக்கு இம்புட்டு சொகந்திரம் குடுக்குறே .. கழுதை நாளைக்கு பின்னாடி யாராச்சும் ஒருத்தனுக்கு கல்லாணம் கட்டிக் குடுத்தப்ராமா இதி மாறி இருக்க நெனைச்சா கஷ்டந்தேன் படுவா"... அவர்களது வீட்டுப் பெரியவர்களே சலித்துக் கொண்டனர்.

இவற்றை பெரிதுபடுத்தாத காண்டீபன் அதிகமாய் பெண் தெய்வ வழிபாட்டில் நாட்டம் கொண்டவன் தன் மகளை அதனாலயே உயரத்தில் தாங்கினான் கணவன் எவ்வழியோ தானும் அவ்வழி என்று பாரிஜாலமும் அமைந்து விட.

சிறு பட்டமூச்சியாய் கவலையற்றவளாய் உலாவிக் கொண்டிருந்த நர்முகிலினியின் வாழ்க்கை பாதை அவள் பருவயதை எட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் வேறு கோணத்தில் மாற ஆரம்பித்தது.

ஏன் என்றால் பெண்ணாதிக்கம் பெயரளவிலிருந்தாழும் வேலை ரீதியில் கொடிகட்டி பறந்த ஆணாதிக்க வணீககர்கள் வட இந்தியா தென் இந்தியா என்று அங்காங்கு வணிகம் புரிவது அதிகரித்த தருணத்தில் மூலிகை மரங்களையும் , கட்டிடக்கட்களையும் வியாபாரத்திற்காகய் சேகரிக்க வந்தவர்கள்

தங்களின் வேலைப்பழுவிற்கு வடிகாலாகவும் உடல் பசி தேவைகளை தீர்கவும் இப்புனிதமான இடத்தை நாடி கலங்கபடுத்த ஆரம்பித்தனர்

அதற்கு காரணம் வேறு யாருமில்லை எல்லா இடங்களிலும் அமைப்புகளுக்குள்ளும் சில கறுப்பாடுகளும், துரோகிகளும் புதைந்து இருப்பதை போல அவர்கள் இனத்துக்குள்ளேயே இருந்து காசு பாக்க நினைத்த சில வஞ்சகர்கள் இவர்களின் பெண் மோகத்தை அறிந்து வயதுக்கு வந்த தங்கள் சாதிசன கண்ணியர்களை பிடித்து பேசி மயக்கியோ இல்லை வற்புறுத்தி தூக்கியோ அவர்களுக்கு விருந்தளித்து கைமாறாய் தங்களின் வயிற்றை நிரப்பிக் கொண்டனர் நாளடைவில் அதில் கிடைத்த பணத்தில் மோகம் அதிகரிக்க அதே தங்களின் பிரதான வாடிக்கையாக போலிசிடம் பிடிபடாத வண்ணம் நடத்த ஆரம்பித்தனர்.

"ஏண்டி எங்க வயிற்றில மகளா வந்து பிறந்தே".. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது கரைந்து புலம்பும் அந்த கண்ணியர்களினதும் அப் பெற்றோரின் அழுகுரல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது இந்த பெண் கொள்ளையாளர்களிடம் இருந்து தங்கள் பிள்ளைகளை காப்பதற்கு சிலர் அவர்கள் வயதுக்கு வந்த உடனே பெரிய வயது வித்தியாசமாய் இருந்தாலும் பரவாயில்லை தங்களின் பெண்ணின் மானம் கற்பும் களங்கபட்டுவிடக் கூடாது என்று அச்சபட்டு அவர்களை வெளியூர் மாப்பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து அங்கிருந்தே அனுப்பி வைத்த முடிந்தளவு முயன்றனர்...

"நான் போகமாட்டேன் உங்க கூடத்தான் மா இருப்பேன்" என்று பெற்றோரின்‌ காலைகட்டிக் கொண்டு அழுத சிறுமிகளின் கண்ரீர் துளிகளை மண் மட்டுமே உள்வாங்கியதே ஒழிய மரத்துப்போன அங்கிருப்பவர்களின் மனதுகள் அசையவில்லை.

தினம் தினம் நடக்கும் இந் நிகழ்வுகள் அந்த பதின்வயது நர்முகிலினியின் மனதில் ஆழப்பதிந்து பற்பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே வருகிறது..

"ஏன்ப்பா மங்கையை அவங்கப்பாம்மா கல்யாணம் கட்டி கொடுத்திட்டாங்க...?" இனி அவ ஸ்கூல் வர மாட்டேனு அழுதுட்டு போறத பாக்க கஷ்டமாயிருந்திச்சு" என்று ஒரு நாள் கேட்டால்...

"மறு நாள் கலையரசி அக்கா ஏன் நடக்க‌முடியாம முனங்கி படுத்திருந்தாங்க...எதுக்கு அந்த காத்தப்பன் தாத்தா உடம்புக்கு முடியாம இருக்கவங்கள செத்துப்போனு திட்டுறாரூ".... நாளுக்கு நாள் அவள் கேள்விகளில் குடைந்து எடுக்க துடங்க.. எப்படி இந்த அவளங்களை அவளுக்கு புரியவைப்பது என்று‌ தயங்கியபடி காண்டீபனும் பாரிஜாதமும் வாயடைத்து நின்றிருந்தனர்

"கண்ணம்மா நீ இந்த விசியசங்கள்ல மூளைய குடுக்காத உன் கவணம் மொத்தமும் படிப்புலத்தானிருக்கனும்"..காண்டிபன்‌மகளின் தலைவருடி அவளை சமாளித்தாலும்‌..

"என்னங்க இப்போ சில காலமா நடக்கிறதெல்லாம் பாத்தா எனக்கு பகீருனு இருக்கு ...கேக்குற அவலக்குரல்ல என் வீட்டிலயும் ஒரு பொண்ணிருக்காளேனு தான் என் மனசு போட்டு அடிச்சிக்கிது நம்ம பொண்ணும் இங்க நடக்கிறதை புரிஞ்சிகிட்டு வர ஆரம்பிச்சிட்டா பேசாம இவ சமைஞ்சதும் நாமளும் யாருக்காச்சும் நல்ல பையனுக்கு கல்யாணம் கட்டி குடுத்திடலாம்" ...அடுப்பங்கரையில் சோறுக்கு கஞ்சிவடித்தபடி சொன்ன‌ மனைவியின்‌ .. எண்ணப்போக்கை பார்த்து‌..

"ஏன்லே நீ வேற‌ நம்ம பொண்ண பாக்குறேலே பையனாட்டம் தா தன்னை நெனைச்சுட்டு தைரியமா சுத்தி வருது அதுனாச்சும் படிச்சு முடிச்சு நம்ம இனத்தோட பெயரை வெளியாளுக்கு தெரியபடுத்திடிச்சுனு அங்கி காரம் வாங்கிடிச்சினு வை கேக்க நாநியில்லேனு நம்ம ஊரு பொண்ணை மேய நினைக்குற பயலுக எல்லாம் பின்வாங்குவானுங்க"...அடுப்புக்கு விரகு வெட்டி எடுத்து கொண்டு வந்து சொன்ன காண்டிபனை கண்டு..

"உங்க தையிரியத்தையோ நம்பிக்கையையோ நான் குறை சொல்லலை பிறந்தாலும் முகில் ஒரு பெண்ணா பிறந்திட்டாலே நானென்த்த செய்வேன் பெத்தவயிறு அடிச்சுக்குது...நாளைக்கு பின்....." என்று எதையோ சொல்வ வந்து வாயிலடித்தபடி வாயை மூடிக் கொண்ட பாரிஜாத்தை நோக்கி...

"ஏய்...கழுதை நீ மட்டும் பேச வந்ததை முடிச்சிறுந்த கொண்ணு பொழிப்போற்றிருப்பேன் என்று கர்ஜித்த காண்டிபன் "என் உடம்புல உசிர் இருக்க வரைக்கும் எம் பொண்ணுக்கு பாதுகாப்பை நான்‌கொடுப்பேன்" ... சொன்னதுக்கு இணங்க அவன் தன் பெண்ணிற்கு தெரிந்தும் தெரியாமலும் காவலாய் உறுதுணையாகத்தான் நின்று கொண்டு தானிருந்தார்....

காற்றிலாடும் கதைகளை கண்களில் காண நேர்ந்ததைப் போல தகப்பனோடு விறகு வெட்ட உதவிக்கு போயிருந்த நர்முகிலினி வீடு திடும்பி கொண்டிருந்த போது மண்ணில் விழுந்த புளியம்பழங்களை பொறுக்கிக்‌ கொண்டு வந்தவேலை புதருக்கு அப்பால் கேட்ட சப்தத்தில் அதன் அருகில் சென்றவள் முழுதாய் விதிர்த்து போனால் பார்க்க கூடாத கருமத்தை கண்டு விட்ட பயத்தில் வியர்த்து விறுவிறுத்து உள்ளுக்கு எதோ எல்லாம் செய்ய ஓட்டமும் நடையுமாய் விட்டிற்கு விரைந்தவள் இதை பற்றி தாய் தகப்பனிடம் எப்படி வாய் திறப்பது என்று கூட தெரியாது அடங்கி ஒடுங்கி போயிருந்தாள்...

"பாவம்.... மதியழகி" அவளின்‌ வயது ஒட்டிய தோழமையின் அந்த முனங்கள் முறட்டுதனமான சப்தம் காதை பொத்திக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டு அவற்றை விரட்டியடிக்க நர்முகிலினி பெறும் பாடுபட்டால் பாடத்தில் கவணம் செலுத்த முடியவில்லை யாருடனும்‌ பேச்சுக் கொடுக்க முடியாது அவளின் குழந்தை மனதை அந்தக் கொடூர காட்சி பயமுறுத்தி இருந்தது ... இதில் அடுத்து வந்த நாட்களில் அவளும் பூப்பெய்திவிட சந்தோசமாய்‌ வாழ்த்திவிட்டு செல்ல வேண்டியவர்களோ எச்சரிக்கையாய் சொல்லிவிட்டுப் போனார்கள்...இவற்றை எல்லாம் கேட்டு கூட்டுப் புளுவை போல ஒடுங்கி கொண்டு போனவளை கண்டு

காண்டீபனுக்கு இருந்த தைரியம் பாரிஜாதத்துக்கு இல்லை போழும்..

"என்ன பாரிஜாலம் இப்பலாம் நீ ஒரே பதட்டமா இருக்க மாதிரி‌ இருக்கே"...

அவர் வேலை செய்யும் பெரிய பணக்கார வீட்டாரான குணநீலகண்டனின் மனைவி லீலாவதி பாரிஜாலத்தை அக்கறையாய் விசாரித்தார் பதினைந்து வருடமாக இவள் இங்கே வேலை செய்தால் வந்த அக்கறை தான்‌ இது...

சொல்லமா வேண்டாமா என்று முதளாலியம்மால் முகத்தை‌யோசனையாய் பார்த்த பாரிஜாலம்‌

"அதுவந்தும்மா எங்கப்பக்கம் நடக்குற நடப்புகள் உங்களுக்கு தெரியும்ல... எம் பொண்ணும் அப்டி இப்டீனு தள்ளிவந்து தள்ளிவந்து ஒருமாதிரி‌ வயசுக்கு வந்து தொலைஞ்சிட்டா பதினெட்டாகுது இந்த மாசத்துல இருந்து .. எத்துனை கழுகண்ணு அவ மேல விலுமோனு ஒரு‌ பக்கம் பயமாருக்கு அவளை கல்யாணம் கட்டி அணுப்பி வச்சிடலாம்னா படிப்பு அது இதுனு எம் புருசன் கேக்குறாரே இல்ல"...

"நம்ம பயம்லாம் நம்ம ஆள்பிளையாலுத்கு தெரியவா போகுது ..இப்போ பாரு எங்க வீட்டிலயும் ஒத்த பொண்ணுனு வாசுகியை அவங்கப்பா ஆம்பிளை பிள்ளை மாதிரி‌ வளக்கனும்னு தொழிலை பாத்துக்க தகுதி வளரனும்னு ஒயாம அவளை வாங்கு வாங்கிட்டிருக்காரு".... தலையில் அடித்துக் கொண்டவரை கண்டு ...

அப்போ தன்‌ கணவனை அழைத்து இவர்கள் மூலயமாய் எடுத்து சொல்லக் கேட்க வைப்பது நடவாது என்பது புரிய...

"ஆ..அப்படியா"... என்ற‌தலையாட்டலோடு நகர எத்தனித்தவரை..

லீலாவதியின் குரல் தடுத்தது என்ன பாரி திரும்பியும் யோசனையில மூழ்கிட்ட.." ஒரு வேலை உங்க விட்டுகாருக்கு ஐயா ஏதும் அறிவுரை சொன்னா மரியாதை நிமித்தம் கேட்டுக்குவாறுனு கேட்க நினைக்க இந்தம்மா என்னத் தன் பொலம்பல சொல்லுதேனு நினைச்சு மௌணமாகிட்டியா?" .....ஆட்களின் முகத்தை வைத்தே மனதை கணக்கு போடுவதில் புலி என்பதை லீலா நிறுபிக்க‌..

"ஆமாங்கமா...தலையாட்டமா வேண்டாமா என்று தயக்கத்தோடு மெதுவே தலை சொறிந்த பாரிஜாலத்தை கண்டு சிறித்தவாறே..

"நீ வேற எம் புருஷன் எப்போ பாத்தாலும் பாரதி பெரியார் பெண் கல்வி முன்னேற்றம்னு தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க குடும்பத்துக்கெல்லாம் பஞ்ஞாயத்து பண்ணி வச்சு ஐயா சாமி நீங்களானு....அவரு வர்ரதுக்கு முன்னமே சொந்தக்காரங்க காது தூரம் ஓடுறாங்க அப்படி பாத்தா உம் புருஷன் ‌பரவாலயே" என்றவரை கண்டு தொங்கி போனது பாரிஜாலத்தின்‌ முகம் ...

"உம்‌ பொண்ணு படிப்புல கெட்டீனு சொன்னேல அவளை கூட்டிட்டு நிறந்திறமா இங்கயே வந்திடு வேலைபாக்குறவங்க தங்குற கொட்டாயில நீயும் தங்கிக்கோ ...ஐயாகிட்ட நான் இதை சொன்னேன்னா.. அவ மேல் படிப்புக்கு அவரேதும் பாத்து செய்வாரூ"....

அவர்கள் வீட்டில் பாரிஜாலத்தை மாதிறி நீண்ட நாட்களாய் பழக்கபட்ட நம்பிக்கைக்குறிய விசுவாசி யாரூமில்லை ஆட்களை நன்கு கணக்கிட்டு எடை போடும் லீவாதிக்கு அது நன்கு தெரிந்தேயிருந்தது ஆனால் என்ன கேட்டாலும் மாலை ஆறுமணிக்கு பின் மகள் கணவன் என்று‌ பாரிஜாலம் கெஞ்சி மன்றாடி சென்றுவிடுவாள்

அதனால் தான் இப்போது லீலாவதி இரண்டுபக்கத்திற்கும் இசைவாய் யோசணை பாரிஜாலத்துக்கு எடுத்துக் கொடுத்தார்...

"அந்த மனுசன் வேர அந்த ஆயூர்வேதத்த தொழிலையும், மண்ணையும் விட்டிட்டு எங்கயாச்சும் வரமாட்டேன்னு ஏடாகுடமா பேசிடக் கூடாது ...காளியம்மா தாயே நீ தாங் கருணை காட்டனும்" மனதிற்குள் சாமியிடம் வேண்டுதல் வைத்தபடி ..

"அவருகிட்ட கேட்டாந்து சொல்லவா" என்று கோரிக்கையோடு பாரிஜாலம் வேலைகளை கவணிக்கத் தொடங்க..
 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகளது மனது‌‌ முதிர வேண்டும் பயம் குடி‌ கொள்ளக் கூடாது என்று நினைத்த காண்டிபன் புத்தக படிப்பறிவு இல்லாவிட்டாலும் தான் கேட்டுத் தாண்டி வந்த இதிகாச கதைகளிலும் நிஜத்தில் போராளிகாளாய் சாதித்த பெண்களையும் அவர்களின் வீரத்தை பற்றியும் சுவாரசியமான கதைகளினால் ஒவ்வொரு இரவும் உணவு முடிந்ததும் நர்முகிலினி உரங்கச் செல்லுமுன் அவற்றை கீதை மாதிரி ஒப்பித்தே உறங்க வைக்க அனுப்பினார்..

இளம் மனது விதை நிளம் போன்றதல்லவா அது உடனே பலன் காட்டாத போதும் உள்ளுக்குள் ஆழமாய் இறங்கி சரியான சந்திர்பத்தில் செயல்விடைகளாய் துளிர்விட்டு வெளிவர அவளுக்கிருந்து அவை காத்திருந்தன.

மாசுமறுவற்று‌ பால் நிலவு போல அழகில் ஜொலித்த நர்முகிலினி அந்த அழகு தான் தனக்கு பங்கம் விளைவுக்குமோ என்று தாய் ஒரு நாள் கேட்தும்

"அது தான் பிரச்சனைனா ...நீ கவலை பட தேவையில்லைம்மா"...சும்மா வாய் பேச்சாக இவள் சொல்கிறாள் என்று‌ பார்த்தால்.

மற்றைய பெண்கள் அழகுக்கான வெண்மை நிறத்திற்கு மஞ்சள் பூச பள்ளி நேரம் தவிர்த்து கரி அழுக்குகளை வீம்புக்கு முகத்தில் பூசியபடி தகப்பனோடு வெளி வேலைகளை பார்பவள் உடையிலும் பாவாடை தாவணியை தவிர்த்து ஆண்களனியும் சர்ட்டும், பாவாடையுமாய் அணைந்திருந்தால் கழுத்தில் ஒரு காலியம்மன்‌‌டாலரும் காதின் இருமருங்கிலும் பொட்டளவு தோடு மட்டுமிருக்க அவளின் விரிந்த நெற்றியில் சிறுகீறாய் திரூநீற்று கீற்றை தாண்டி பொட்டிறுக்காது தாய்தந்தையை தவிர்த்து மற்ற வெளியாட்களிடம் இறுக்கமும் கோவமும் நிறைந்த முகத்தை முகமூடியாய் அணிந்து தன் கண்ணித் தன்மையை காக்கின்ற அதே நேரம் தன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றுவதிலேயே குறிக்கோளாயிருந்தவள் கிட்ட தட்ட முழுமதி தன்னை கிரகணத்துல் மறைத்ததை போலத்தான் தன்னை செதுக்கி கொண்டு வந்திருந்தால்.

மொய்க்க நினைத்த ஒன்று‌ ரெண்டு‌ கழுகளும் அவளுக்கு துணையாய் முன்னும் பின்னும் அழைந்த தகப்பனை‌ கண்டும் அவளது தாய் வேலை‌ செய்யும் பெரியவிட்டாரின் ஆதரவு இவர்களுக்கு‌ உண்டென்பதாலும் அவளை விட்டு வைத்திருந்தனர்...

"ஏ ஆத்தா உன்னா ஆரு அந்தம்மாகிட்ட இதெல்லாம் சொல்லி புலம்ப சொன்னது ....அப்போ உனக்கு இந்த காண்டீபன் மேல நம்பிக்கை இல்லையா"‌‌.

"அப்பிடில்லைங்க அந்த பட்டணத்துல படிச்சா நம்ம பொண்ணு திறமை என்னும் அதிகமாகுனு அவங்க சொன்னாங்களே" ....எந்த பாயிண்டிலிருந்து ஆரம்பித்தால் கணவனை மடக்கலாம் என்று தெரிந்து வைத்திருந்த பாரிஜாலம் கணவனிடம் தொடர்ந்து இதை நச்சரித்து வர..

" இங்க பாரு பாரி நாம எம்புட்டு கஷ்டப்பட்டாலும் நம்ம பொண்ணு இங்கே ராணியாட்டம் வாழ்ற ஆனா அங்கப்போனா உங்க வீட்டம்மாளுக்கு எப்படியும் வேலைக்காரி மவளாத்தானே அவளை நடத்துவாங்க அப்ப நம்ம புள்ளை மனசு பாடுபடாத"...

"கூலுக்கும் மீசைக்கும் ஒறே நேரத்தில ஆசப்படக்கூடாதுங்க...உங்க பொண்ணு சமூகத்து மக்களை பெருமை படுத்த முன்னேரனும்னா அவளுக்கான‌ சில தியாகங்களை அவ செய்றதுக்கு கஷ்டப்படத்தானே வேண்டும்"...

மகளின் பாசதந்தையாய் காண்டிபன் கணிக்க பாரிஜாதமோ நல்லது கெட்டது என்று நாளும் யோசிக்கும் தாயாய் யோசித்தார்..

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும் என்பர் அப்டீ இருக்க கணவனது திடத்தை கரைத்து தன் வழிக்கு கொண்டு வர மனைவியால் எப்படி முடியாது போய் விடும் தன் மகளை அங்கு அழைத்துச் செல்ல பாரிஜாலம் சாதித்து இருந்தார்...

ஆனால் தன்‌ மகள் அங்கு வேலைக்காரி மகள் என்று யாரும் அழைப்பதை கேட்க திவணி இல்லாத காண்டிபனோ "இங்க பாரூ புள்ள நானாங்கயே இருந்திடுரன் ....உங்க பெரியம்மா வீடு பாதுகாப்பானதுல நீ கண்ணமாவை பத்திரமா பாத்துக்கோ".....

கணவன் இதை சொன்னதே பெரிது என்று‌ மகளை கூட்டிக் கொண்டு அவர் பட்டனதிற்கு கலம்ப அப்பாக்கு தப்பாத மகளாய் அவள் பிடிவாதம் பிடித்தாள்.

"கண்ணம்மா அப்பா சொன்னா கேப்பேல ....நீ அங்க போய் நல்லா படி நம்ம சமூகத்துல மட்டுமில என்னும் பெரியவங்க சமூகத்துல இருக்க பொம்புளப்புள்ளைங்க கூட வீட்டுக்குள்ள கூண்டு கிளியா தன்னோட அறிவை முடக்கிட்டு ஒழிஞ்சிறுக்க இந்த காலத்துல நம்மாளுங்கல்ல இருந்து நீ போய் முன்னேரனும்னா ...உன் வாழ்கையில இந்த மாற்றம் அவசியம் தான் சொன்னா புரிஞ்சுக்கோவென்"...தகப்பன் பேசி சம்மதிக்க வைத்தார் என்றால் அப்படி கெஞ்சவும் வேறு வழியின்றி...

"சரிங்கப்பா"....என்று தலையாட்டி கண்ணீரோடு தந்தையை விட்டு பிரிந்து செல்ல மனதேயில்லாது ஒத்துக் கொண்ட செல்ல மகள் தன்னை தயார் படுத்த அவர்கள் அவளுக்கு மூன்று மாசம்‌அவகாசம் கொடுத்திருந்தனர்..

அதற்கிடையில் அந்த அயோக்கிரது ஆட்டம் வேறு இடத்தில் பதுங்கியிருந்த இக்குடியினரின் இளம் தலைமுறை போராளிகளின் காதுகளுக்கு சேர்ந்துவிட...

"என்ன தைரியம் அந்த தே...பசங்களுக்கு கையில காசு‌ பணம் புளங்குது என்ற திமிர்லயும் இவங்களை தொட்டா கேட்க யாரூம் வர்ரமாட்டாங்கன்ற தெம்பிலயும் அந்த வெளியூர் நாய்ங்க... நம்ம சனத்து பொம்புளைப் புள்ளைங்க மேல கையவச்சிட்டு அலையிறானுங்க..இது தெரியாம நாம இவ்ளோ நாள் அவனுங்களை சும்மா விட்டு வச்சிறுக்கம் "... அந்த கூட்டத்திலிருந்த இளைஞன் கோபமாய் அங்கிருந்த மரத்தில் கையை ஓங்கி அடித்தபடி வேகமா சிந்தித்தவன்..

தன் கொள்ளைக் கும்பல் கூட்டாளிகளை ஒன்று திரட்டி முல்லையம்மை கிராமத்திற்கு செல்ல பயணமானான்... முறுக்கு மீசையும் தீவிரமான கூர்ந்த கண்களும் , கறுத்து முறுக்கேறிய உடலோடும் இருபதிகளின் ஆரம்பத்தில் இருந்த அந்த இளைஞசன் போராளியாய் வராது அதெற்கெல்லாம் காரணமாய் இருந்த வஞ்சகர்களை கண்டு பிடித்து அலசி எடுக்க இறை தேடும் கழுகின் ரூபத்திலேயே அங்கு வந்திருந்தான்...

திட்டமிட்டப்படி ஆட்களை அடையாளப்படுத்தி அவன் கணக்கிட்டு ஒவ் வொரே அயோக்கியனாய் வேட்டையாட ஆரம்பித்த வேலையில்

குறித்த ஒருநாள் ஒரு இளம் பெண்ணவள் ஒருத்தி புதற்குள் எதையோ கண்டு பயந்து விழுந்து ஓடுவதை கண்டு புருவம் சுருக்கி அந்த இடத்திற்கு விரைந்தவன் ....

அங்கு லீலையில் சல்லாபித்த காமக் கொடூரனை கண்டு ஆக்ரோசத்தில் கொதித்து எழுந்து அவர்கள் மீதான உயிர் பலி வேட்டையை அன்றிலிருந்தே அமைதியாய் ஆரம்பித்திருந்தான்.....

இடையில் இது தெரியாது மகளுக்கு காவலாய் போன காண்டீபனோ அன்று‌ புலியம் பழம் பொறுக்கி கொண்டிருந்த மகள் எதனால பயந்ததை மட்டும் கவணித்தவர் அப்போது சந்தேகத்திற்கிடமாய் வெளிபட்ட இவன் மேல் பயம் எழ அதுவரை யாருக்காவும் காவல் துறைக்கு கம்பிளையினுக்கு போகாதவன் தன் மகளுக்கு எதுவும் இவனால் குந்தகம் வந்துவிடுமோ என்று காவலதிகாரியிடத்தில் அவனை பிடித்துக் கொடுத்துவிட்டான்....

விதி‌ முதல் முறை அங்கு விளையாடியது...

சரியாய் அது நடந்து மூன்று நாட்கள் கழிந்த நிலையில்..

இரவு படபட என்று வேகமாய் தட்டப்பட்ட கதவுகளின் சப்த்தத்தில் பயந்து எழுந்த மூவரும் வேர்த்து விதிர்விதிர்த்து போயிருந்தனர்.

"அப்பாரூ....இதென்ன சத்தம் " மகள்‌ தகப்பனோடு ஒண்டிப் போய் நிற்க ...

"பாரி நீ கண்ணம்மாவை கூட்டிட்டு அந்த மூலை பக்கமா நில்லு.."....

"என்னங்க...எனக்கு பயமாயிருக்குங்க நீங்க போய் கதவை திறக்காதிங்க"....‌

"மரவீடும்மா இது அவனுங்க தட்டுற தட்டுல என்னும் கொஞ்ச நேரத்துல கதவு கையோட வந்திடும் நீ முதல்ல சொன்னதை செய்"...மனைவியை துரிதப்படுத்தியபடி
கதவை காண்டிபன் திறந்த நொடி வந்த விழுந்த உதியில் தரையில் அம்போவென கத்திக் கொண்டு விழுந்திருந்தார்...

ஒற்றையாளாய் அதுவும் ருத்திர மூர்த்தியாய் வேந்தன் அங்கே நின்றிருந்தான்.

"ப்பா......!!!!" தாயின் கையை உதறிக் கொண்டு ஓடிவந்து தந்தையை கீழிருந்து எழுப்பியவளால் அவரை மீண்டும் அடிக்க‌ தூக்கிய அவனது கைகள் மிரண்டு விழித்து கண்ணீர் கசிந்த அந்த மாண் விழியவளது கண்களின் மிறட்சியில் அப்படியே தனக்கு வந்த கோபத்தை அடக்க காற்றில் வேகமாய் கைகளை விசிறவனது கோபத்தின் அளவு அவனது சிவந்த கண்களில் தெரிந்தது அதை கண்டு பயந்து பாரிஜாலம்‌‌.

"தம்பி....என் புருஷனையோ எம் பொண்ணையோ எதுவும் பண்ணிடாதிங்க"...அவனது கால்களில் வீழ்ந்து மன்றாட தகப்பனை அடித்தவனை கோபம் போய் சீற்றம் அதிகரிக்க பார்த்த சிறியவள் அவனந்த நேரத்தில் நிலைக்காக வைத்திருந்த மரக்கட்டையை எடுத்து அவன் மேல் வீச தலையில் பதம் பார்த்தது....

"ஏய்......ஏண்டி இப்படி பன்ன பதரியபடி கத்திக் கொண்டு‌ எழுந்த பாரிஜாலம் முதல் முறையாய் அடிக்க அசறாது அவனையே கோபயாய்‌‌ பார்த்தால் ......

"ஏங்க அறிவில்ல உங்களுக்கு உதவி செய்ய வந்தவனை போலிஸ் இடம் பிடித்துக் கொடுத்தது இல்லாமா...உம் பொண்ணு அவன் மேல கைவச்சிறுக்காலே ...நல்லவனா இருந்தாலும் கோபத்துல அவன் முறடன் காட்டுத்தனமா உன் பொண்ணுகிட்ட அவன் ஏதும் பன்னிவச்சா நீ என்னய்யா பன்னுவீரு".....

வேந்தனை காண்டீபன் போலிஸ்சில் மாட்டிவிட்டதும் ஏன் என்ன என்று தெரியாது தன் மேல் விழுந்த கம்பளைண்டிற்கு ஞாயம் கேற்க கோப முற்ற அங்கு சென்ற வேந்தனை பற்றி அறிந்து அவர்கள் வீட்டிற்கு அவனது நண்பர்களும் ஊர்தலைவரும் ஏதும் அசம்பாவிதம் தங்களுக்குள் நடந்துவிடாதிருக்க சரியாக அந்நேரம் வந்து சேர்ந்து இரு வரையும் பாதுகாப்பாய் பிரித்து அவரவர் ஞாயத்தை ஒருவருக்கொருவர் தெறிந்து கொள்ள வழி வகுத்தனர் .

அதனால் தான் இப்போது காண்டிபனது காதிற்குள் அந்த பெரிசு இவ்வாறு கிசுகிசுத்து
பய‌‌ முறுத்திக் கொண்டிருந்தது....

விடயம்‌ தெரிந்ததும் தகப்பனை அடித்த கோபம் தீர்ந்ததாலும் தங்கழுக்காய் தான் இவர்கள் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்ற உண்மை தெரிந்ததும்‌ தகப்பனை தடுத்து பிரியசித்தமாய் தானே அவனது தலை காயத்திற்கு நர்முகிலினி மூலிகை இலைச்சாற்றை பிழிந்து கட்டுப்போட்டுக் கொண்டிருந்தால்.

இதுவரையும் எத்தனையோ ஊர் ஊராய் பயணித்திருக்கிறான் எத்தனையோ விதமான பெண்களை தாண்டியிருக்கிறான் ...

பெண்களை பார்த்தால் மண்ணையோ விண்ணையோ பார்க்கும்‌ ராமர் ரகமும் இல்லை , கோபியரோடு கொஞ்சி விளையாடும் கண்ணன்‌ரகமும் இல்லை அழகை ரசிக்கலமே என்று சொல்லும் அந்த இரண்டிட்கும் இடைபட்ட இளைஞனில் ஒருவன் தான் வேந்தனும் ஆனால் அவனது ரசணை எப்போதும் கழுத்துக்கீழே தாண்டாது அதே நேரத்தால் ஒரு பெண்ணை அத்து மீறியும் நோக்காத கட்டுப்பாட்டை அவன் தனக்குள் வைத்திருந்தான்.

வெளிப்புறத்திண்ணையில் கட்டுப்போட்டுக் கொண்டிருந்தஅவளது விழியில் தன்னை அறியாது நிலைத்துப் போயிருந்த வேந்தன் ...

மிறட்சி,கோபம்,கணிவு என்று இந்த இடைபட்ட நேரத்துக்குள் மூவகையான உணர்வுகளை பிரதிபலித்த இச் சிறியவள் வேந்தனது மனதில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள்.

மன்னிச்சிடுங்க தம்பி .....? என்று கரம் கூப்பியபடி வேந்தனது எண்ணத்தை களைத்து பேச்சை ஆரம்பித்த காண்டீபன்...

"நீங்க என்‌ பெண்ணை தாக்க வந்திட்டீங்களோனே நினைச்சுத்தான் தம்பி...என்று தயங்கிவரை பேசா வேண்டாம் என்று தடுத்தவன் ‌‌....

"நர்முகிலினியை ஓரக்கண்ணால் பார்த்த படி இப்போ தான் அந்த உண்மை எனக்கும் புரிஞ்சிது" ...என்று நிறுத்தி எழுந்தவன் "இனி என்னால உங்களுக்கு எந்த பிரச்சிணையும் வராது என்று கலம்ப"‌‌.....

முதல் முதலாய் அறுகில் இருந்தபடி வெளியாடவன் தன்‌ விழகளை இப்படி ஊடுறி பார்க்கவும் சட்டென்று எழுந்து தந்தையின் அறுகில் சென்று நின்று கொண்ட நர்முகிலினி.... மன்னிப்பை மட்டும் அவனிடம் கேட்கவில்லை....

(கவலைபடாதே நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வீரபொழிலனாயிரு, வேந்தனாயிரு என் மன்னிப்பு மட்டும் உன்னே சேராது...பாவம் டா நீ....)

"தம்பி தம்பி இவங்க மேல இருக்க கோபத்துல..ஊரை விட்டு போயிடாதிங்க ஒருத்தனில்லேனா இன்னொருத்தனால எங்க ஊருக்கு பிரச்சணை வரத்தான் செய்யுது"..என்று மன்றாடிய ஊர்தலைவருக்கும் இரண்டு மகள் இருந்தனர்...

"எங்களை இருனூ சொன்னா மட்டும் போதாதே எங்க அண்ணாத்தை தங்கிரதுக்கு இடமில்லாம தானே இப்படி அவமானபட்டான்"... அவர்களிலிருந்து சிறிய வயதேயான பொடிசு ஒருவன் பெரியவரிடம் தினுசாக கேட்க...

"ஏம்பா இங்க நாங்க என்ன அடுக்கு மாட மாளிகையா கட்டி வச்சிறுக்கம்.. இனித்தான் எதாச்சும் ஏற்படு பண்ணனும்" என்று பெரியவர் நிறுத்த ..

"அப்போ உங்க வீட்டுல நாங்க தங்கிக்கவா"...நக்கலாய் மீண்டும் கேட்ட பொடிசின் கூற்றில் ..."குச்சி சைசில இருந்திட்ட இவனாட்டம் தாங்க முடியலை" மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியாது தலைவர் முகம் போன போக்கை பார்த்து

மற்ற‌ மூன்று பெரிய இளந்தாரி பயலுகளும் சிறிக்க..

"டேய்‌‌ சுப்பு வாயை மூடுடா" என்று சிரியவனை அதட்டிய வேந்தனது கூற்றில் மற்றவர்கள் தாங்களாகவே வாயை மூடிக் கொள்ள.. "நீங்க ஏற்பாடு பன்னுர வரைக்கும் நாங்க ஊர் எல்லையில கூடாரம்‌ போட்டிருக்கம்" சொன்ன வேந்தன் விடை பெற்று நகர எத்தனிக்க .....

"தம்பீ...எம் பொண்ணு நாளைக்கு அவம்மாக்குட பெரிய வீட்டுக்கு வேலை பார்க்க போயிடும் நீ எங்க கூடவே தங்கிக்க" காண்டீபன் தானே முன் வந்து இதை சொன்னார்....

"இவனையா....ஐயோ புத்தி கெட்ட மனுசன்" ...சராசரி மனைவியாய் தலையில் அடித்துக் கொண்ட பாரிஜாலத்தை காண்டிபன் கண்களால் அடக்க நர்முகிலினி எதுவும் சொல்லாமல் கைகளை கட்டிக் கொண்டிருந்தாள் தகப்பன் வாக்குக்கு அவள் எப்போதும் சம்மதம் தான்..."

"அப்புறம் என்னப்பா நம்ம காண்டீபனே சொல்லிட்டான் ... நாளைல இருந்து தங்கிக்கோங்க காண்டிபனும் உங்களை மாதிரி ‌நம்ம ஊரூ மேல அக்கறை உள்ளவன் என்ன பொண்ணு விசியத்துல பொசுக்குனு அவசரபட்டுட்டான்"... அப்பாடி தனக் கொரு வேலை மிச்சம் என எண்ணிக் கொண்டு அவசரமாய் குறுக்கிட்ட தலைவரை மேலிருந்து கீழாய் ஒரு பார்வை பாத்த வேந்தனை கண்டு அவர் எச்சில் முழுங்கியபடி அமைதியாக ..

சில நிமிடம் யோசித்த வேந்தன் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டான்.....

***
வைரம் ஜொலிக்க அது பட்டைத் தீட்டப்பட்டாகத்தானே வேண்டும் நர்முகிலினிக்கு அப்படி பட்ட காலமாய் அமைந்தது அவள் பட்டணத்துக்கு செல்ல எத்தனித்த காலம்...

நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாய் சொந்த ஊரில் நின்றவள் பிளைக்கப்போன இடத்தில் குணிந்து பணிந்து பல இடங்களில் அடங்கிப் போக வேண்டியிருந்தது...

அதில் மனது சோர்வுற்று தந்தையை பார்க்க விட்டால் போதும் என்று அவள் ஊருக்கு வர எத்தணிக்க ...தாயோ அவளை கரைத்து கொட்டிய படி வந்தார்...

"அம்மா வரவர எங்கூட அடிக்கடி சண்டை போடுற...உனக்கு இப்போலாம் பிடிக்குறதில்லையா"..‌பொறுக்க முடியாது வெடித்த மகளை அரவணைத்த தாய் "அதுக்கு இல்ல கண்ணு அங்க வெளியூர் பசங்க புதுசாருக்காங்க பொட்டப்புள்ளைய எதுக்குனு தான்" ....

"எப்போ பாத்தாலும் ஏம்மா நீ பயந்தே சாகுற.... அங்க எங்கப்பாருக்காரு அப்றம் வந்தவங்க நம்ம பாதுகாப்புக்கா வந்த நம்ம ஆட்கள் தேவையில்லாம அவங்க மேல சந்தேகம் வளர்காதே" ....

தாயிற்கு புத்தி மதி சொல்லியபடி ஊருக்கு போனவளுக்கு தந்தை மூலமாய் ஒரு அதிர்ச்சியில் ஏண்டா அங்கு போனம் என்று இருந்தது.

நிகழும்...

 

ஶ்ரீகலா

Administrator
ரைட்டர் மேடம், என்னாச்சு??? கதை இன்னும் முடிக்கலை... போட்டியில் இருந்து கதையை எடுத்துவிடவா???
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-11

அந்த ஊரின் ஏறிக்கரையில் இருந்த கற்களில் வேந்தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்து சிறித்தபடி அவர்களை வேடிக்கை பார்க்க அவனது கூட்டத்தில் இருந்த இளசுகள் நீரிற்குள் துள்ளிகுதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்...

அழுத்தமான கால் நடைகளோடு யாரோ கோவமாக அவனருகில் வருவது உணர்ந்தவன் நொடி தாமதியாது தற்காப்பாய் திரும்பி எழும்பவும் அங்கு அவனோடு பேச வந்திருந்த நர்முகிலினியின் நடை அவனது நெஞ்சோடு முட்டுபட்டு தடைப்பட்டுவிட தீச்சுடர் பட்டாட் போல விலகி நின்றாள்...

"நீங்க எங்க இங்க வந்தீங்க" அந்த கடுமையான ஆண்மகனுக்கும் அவளை அருகில் கண்டதும் ஒருவித மென்மை எட்டிப்பார்த்தது ஆனால் அது அவளிடம் இல்லை போலும்..

"வேந்தன் உங்க கிட்ட இருந்து நான் இதை கொஞ்சம் கூட எதிர்பாக்கலை ....என்று எடுத்த எடுப்பிலே பொறிய ஆரம்பித்தாள்

"நீங்க வேணா கொலை கட்டபஞ்சாயத்து திருட்டுனு உங்க கூட்டத்தோட சிறப்பா பன்னுங்க...எதுக்காக எங்கப்பாவை உங்க கூட சேர்த்துட்டு போற வேலைலாம் வச்சுக்குறீங்க " ...அவள் தன்னிடம் திடீர் என்று ஏன் வந்ததும் வராததுமாய் சீற ஆறம்பிக்கிறாள் என புரியாது நின்றிருந்தவன்...

"ஓஹோ அதுவா விஷயம் என்று இழுத்தவன் "அநியாயத்தை தட்டி கேட்க யாரும் யார் கூடயும் போகலாம் நீங்க வாங்கனும் நான் சொல்லலை நீங்க வர்ராதிங்கனும் சொல்லலை" வேணும் என்றே அவளை தெளிவாய் குழப்பிவிட்டவன்..

"தம்பிகளா சீக்கிரமா குளிச்சுமுடிச்சுட்டு போய் சாப்பிடுங்க அங்க உங்க அண்ணி நர்முகிலினியோட அம்மா அதாவது எங்க அத்தை பாரிஜாலம் பாத்து பாத்து நமக்குனு ஆட்டுக்கால் சூப், கோழி கறி, வஞ்சிற மீன் வருவல், சோறுனு சமைச்சு வாழை இலை சகிதமாய் பறிமாறுரதற்காக எடுத்து வச்சிட்டு காத்திட்டிருக்காங்க" வேண்டும் என்றே நர்முகிலினியின் வெப்ப சதவீதத்தை எழுப்பி விட ஏற்ற இறக்கத்தோடு சொன்ன வேந்தன் தன் தோளில் இருந்த துண்டை பிடித்து ஆட்டியபடி முன்னேறி நடக்க....

"அண்....அண்ணியா.....!!!!" கண்களை சுருக்கியவள் கோபத்தோடு அவன் முன் வந்து நின்று ....

"வீட்டில தங்க இடம் குடுத்தோம்னு மடத்தை பிடிக்க பாக்குறீங்களா?.."

"ஆமா அந்த வீடே மடத்துல இருந்து பிச்சு வச்ச கதவை நாலு சுவத்துக்கு அறைஞ்சு வச்சாப்புல தானிருக்கு நீ என்னடான்னா அந்த தம்பிக்கு அப்படி சொல்லுற" அவளின் பேச்சை கேட்டுவிட்டு வழியில் தன் சைக்கிளை மிதித்து கொண்டு போன ஒரு பெரிசு அவளை கலாய்த்தபடி நகர்ந்தது...

"ஏய் தாத்தா உனக்கென்ன வாய் கொழுப்பா..மூட்டு வலீனு மருந்து கேட்டு வீட்டுபக்கம் வருவேல அப்போ இருக்கு.." கோபத்தில் அந்த ஆளை பாத்து கத்தியவள் தன் அருகில் வாயை மூடி சிறிப்பை அடக்கி வந்த வேந்தனை கண்டு சினம் பொங்க...

"நானும் ஊருக்கு வந்ததுல இருந்து பாத்திட்டே தானிருக்கன் எங்கப்பாரூ நடவடிக்கை எல்லாம் எக்கசக்கமா மாறிப்போய் கிடக்குது...நிச்சயமா அதுக்கு எல்லாம் நீங்க தான் காரணமாருக்கும்..." என்று சொல்லிக் கொண்டே வந்தவள் அவன் எதோ சொல்ல வருவதையும் கேட்காமல் வந்த விதத்தில் அங்கு அவளது அலறல் கேட்டது சில நொடிகளில் "ஆஆ...." என்றபடி

அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த தரையில் மறைவாக வைக்கப்பட்டிருந்த வலைபொறியில் சிக்கிவிட்டதனால்...

"மன்னிச்சிடுங்க இந்த பக்கமா நேத்து முந்த நாளா வெளியூர் காரன் ஒருத்தன் எங்களை வேவுபாக்க வந்து போனதா கேள்விபட்டதால நாங்க அவனை பிடிக்குறக்காக வச்ச பொறி இது..ஆனா துரதிஷ்டவசமா நீங்க மாட்டிக்கிட்டீங்க"

அவனது இடுப்பில் மறைவாக சொறுகியிருந்த சிறிய கத்தியை எடுத்து அவன் அதை அறுக்க முட்படுகையில்...

"நினைச்சேன் இதுக்கும் நீங்க தான் காரணாமாருக்கும் எப்போ நீங்க எப்போ எங்க ஊருக்குல வந்தீங்களோ அப்போல இருந்து..வந்து போன இடத்துக்கும் நம்பிவர முடியலை" அவள் அவனை சாடும் போதே...

"அடியாத்தே..என்ன நர்மீ இப்படி வலையில சிக்கின மொசக்குட்டி மாதிரி இருக்கே ... நம்ம ஊர்காரனுவளுக்கே தெரியும் இது ல வலை பொறியிருக்கது உனக்கு தெரியாதா அட கிறுக்கி மவ".....இடுப்பில் குடத்தோடு அவர்களை தாண்டி போன எதிர்வீட்டு பவளக்கொடி அக்கா கொக்களித்து சொல்லிவிட்டு போனால்....

"ஷப்பா....!!!" ‌புகைச்சலோடு அவள் பல்லைகடிக்கும் போதே அவன் வலையை அறுத்த அறுப்பில் அவனது கைகளில் பூங்குவியல் கொத்தாய் விழுந்தால் அவள்..

தந்தை தவிர்த்து அவளது உடலில் முதல் முதலாக ஒரு ஆடவனின் ஸ்பரிசம் தொடுகை அது ஏற்படுத்திய அதிர்வில் மிளகாய் அறைத்து பூசிய எரிச்சலோடு திமிறி குதித்தவள் கிஞ்சிதமும் தாமதிக்காது இடியென அறையை அவனது கன்னத்தில் பதித்துவிட்டு அங்கிருந்து விறுவிறு என்று நகர்ந்துவிட்டால்.

எத்தனையோ வெளிச்சண்ணைடைகளில் அடி கொடுக்கும் போது அடிவாங்கியிருக்கிறான் தான் ஆனால் அவனின் சொந்த தாய் கூட அவனை அடிக்க கை ஓங்கியதில்லை ..முதல் முதலாய் ஒரு பெண்ணிடம் வாங்கிய அடி இது ஆண் என்ற அவனது அகங்காரம் அவனுக்குள் சீண்டப்பட அவள் அடித்துவிட்டு போன கன்னத்தில் கைகளை வைத்தபடி நின்றிருந்தான் அவன் நினைத்தால் அதற்கான பதிலளிடையை கொடுக்க சில நொடி போதும் தான் காக்க வந்த ஊருக்குள் ஒரு பொண்ணுக்கு தன்னாலே ஒரு கேடு வரக்கூடாது என்று அப்போது அமைதிகாத்தான்.

"பொறுக்கி ....ரவுடீ...காட்டுப்பையன்"..அவனது கரங்கள் தன்னை விழாது தாங்குவதற்காக தான் தொட்டது என்பதை யோசிக்க கூட முடியாது சிறிய வயதிலிருந்து தாண்டிவந்த சம்பவங்கள் மனதில் நிறைந்திருக்க வசை மழையை அவன் மீது விடாது பொழிந்தபடி இருந்தால் நர்முகிலினி...

***********
வேறொரு ஊரில் சற்று நில வளங்களோடு பரந்து விரிந்திருந்த அந்த வீட்டில் சுற்றுமுற்றும் நிறைய வேலையாளிகள் பரபரப்பாய் வேலைகள் செய்தபடி இருக்க அந்த வீட்டின் பின் புறமாய் மாட்டுக் கொட்டகை வைக்கோல் என்று அடுக்காக இருக்க , இன்னொரு புறம் நிரம்ப இருந்த மறம் செடிகளோடு பறவைகள் வந்து போவதற்கான பறவை வீடுகள் சிறு குவளையில் அரிசி நீர் என்றும் அதை தாண்டி வேறு புறம் தரையில் க செத்தள் மிளகாய்கள் காயபோடபட்டு அந்த வீட்டின் பின்வாசல் படியில் சோறுபிடிகலை உருட்டிக் கொண்டிருந்த அந்த வீட்டுக்கு தலைவியும் அந்த தனக்காரரின் மனைவியுமான நாச்சியம்மாள்..

"டேய் சுப்பு உன் அண்ணாத்த அந்த பக்க போனவனுக்கு இந்த ஆத்தாவ வந்து பாக்கனும்னு கொஞ்சம் கூட நினைப்பேயில்லயா டா"... அவர் அருகிலிருந்த அந்த சிறுவனது கைகளில் அந்த உருண்டைகளை கொடுக்க அதை நல்லாக வாயில் அடைந்த அவன்...

"அண்ணாத்தயோட கண்ணு அதேன் நான் உங்க வந்தேன்..." என்று சொன்ன அவனது தலையில் செல்லமாய் கொட்டுவைத்தவர்..

"அவனுக்கு என்னடா கேடு இந்த வீட்டுக்கு ஒத்த ஆண்வாரிசு ..... அவன் நினைச்சா நெறைய பேருக்கு இங்க இருந்தே அவனப்பார பேசி சாமிளிச்சு சோறு போட முடியாதா உதவ முடியாத ...அப்படி இருக்க ஒரு வேல கஞ்சிக்கும் சோத்துக்கும் நாடோடியா திரியிறானாமே"...

அந்த தாய் மனம் தன் மகனை நினைத்து வருத்தபட்டுக் கொண்டது என்றுப் போல அவன் அவன் தாத்தா சுப்பு நடந்த பிரச்சணைகளில் வணிகத்துக்காக சிங்கப்பூர் பர்மா என்று உழைத்து வந்து இங்கே வியாபாரம் ஆரம்பித்த அது வளர அது அவரது இரு மகன்களான நாகேந்திரனும் நளேந்திரனும் சமபங்கான உழைப்போடு நல்ல படியாய் எடுத்து நடத்தி வந்தாலும் திருமணத்தின் பின் உறவு முறையில் சிக்கல் வந்து விடக் கூடாது என்று தொழிலை பிறித்துக் கொண்டு வேறு வேறு இடமாக வாழத் தொடங்கியிருந்தனர் .....

அப்படி இருக்க மூத்தவன் நாகேந்திரன் தன் மனைவி நாச்சியார் ஒற்றை மகன் என்று சந்தோசமாய் தான் இருந்தார்... சிறுவயதில் இருந்து புத்தகம் வாசிப்பதை அவர் மகனுக்கு கற்று கொடுக்கும் போது தான் அவன் வரலாற்று புத்தகங்களில் ஆர்வத்தோடு தேடி படிக்க ஆரம்பித்தவன் அதிலிருந்து தங்களது வம்சாவளியை பற்றி அறிந்த போது அதில் எத்தனை பேர் பிளைப்பின்றி அடையாளமின்றி தூர தூர சென்று சேர்ந்தது தெரியவந்தது.... அகிம்சைவாதியான நாகேந்திரனுக்கு போர் குணத்தோடு மகன் வளர வளர பேச ஆரம்பிக்கவும் அதை அவர் தடுப்பதற்காக மகனுக்கு வகுத்த வரைமுறைகளை எல்லாம் ஒரு கட்டத்தில் கோபத்தோடு எடுத்து தகர்த்தவன் சொத்தும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இளைஞன் பராயத்தில் வெளியேறியவனை கோபத்தில் அவரும் கூப்பிடவில்லை அவனும் ரோசத்தோடு வரவில்லை.

"ஆத்தா...எதுக்கு சோத்தை கையில வச்சுட்டு காணா காணுறீங்க" என்று அவற்றை யோசித்த நாச்சியம்மாளின் கையில் இருந்து சோற்றை மீண்டும் வாங்கி வாயில் அடைத்துக் கொண்ட சுப்பு "சொல்ல மறந்திட்டேன் அடுத்த மாசம் நம்ம ஊர் சிவராத்திரி பூசை வருதில்ல அங்க உங்களை பாக்க அண்ணாத்தை வராராம்" என்று தன் வயிறு நிரம்பிய குதுகலத்தோடு சொல்லி முடித்தவனது வார்தைகள் கேட்டதும் அவர் அடைந்த சந்தோஷம் இருக்கே....

"நாச்சி....எம்புட்டு நேரமா கூப்பிடுறேன் காது கேக்குதில்லையா" வீட்டினுள்ளே இருந்து வந்த நாகேந்திரனின் சப்தத்தில் அவர் வந்து கொண்டது தெரிய ...

"ஆத்தாடி பெரிய ஐயா வந்துட்டாரூ....நானப்படியே கலம்பிக்குறேன் ஆத்தா" சாப்பிட்ட கைகளை கழுவ கூடா இல்லாது நக்கியபடி எகிறி குதித்து ஓடியிருந்தான் அந்த சிறுவன்.

***********
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னங்க நீங்களா இப்படி முடிவெடுத்தது பாரிஜாலம் கணவனை போட்டு வறுத்தெடுக்க ...

"நீங்க வர்ரதுக்கு முன்னம் நம்ம ஊரூ காலி கோவிலுக்கு சாமி கும்பிட போயாருந்தேன்மா அங்க இருக்க நம்ம பூசாரி ஐயா கலைவரும் போது இந்த பையன் தான் பொண்ணுக்கு மணாளன்னு சொன்னாரூ"..

"அப்பாரூ என்னதிதூ நீங்களுமா வாக்கு அது இதுனு ..சுத்த மூட நம்பிக்கைதனமா அம்மா மாதிரி கதை சொல்றீங்க..என் மனசு முழுக்க எப்படியாச்சும் டாக்டராகனும் அது மட்டும் தான்ப்பா நிலையா இருக்கு"..மகள் தகப்பனது கோரிக்கை நிராகரித்தால் ....

தாயோ "அந்த பையன் என்ன தான் ஊருக்கு உதவ வந்தாலும் திருட்டையும் கட்டப் பஞ்சாயத்தையும் தானே வேலையா செய்றவன் அவனுக்கு நம்ம பொண்ணை கட்டி வைக்க ..நீங்களா இப்படி சொன்னது"... தன் அதிருப்தியை வெளிகாட்ட

மனைவி மகளை கண்டு.."எம் பார்வையிலும் அந்த தம்பி அப்படி தான் இருந்தான் ஆனா அவனிங்க வந்ததில இருந்து ஒரு துறும்பு அநியாயம் கூட நடக்கலை வெளீயூர்ல இருந்த வாலாட்டினவங்க கொட்டம் எல்லாம் இப்போ அடங்கி ஒடுங்கி இருக்குனா அது வேந்தன் தம்பியாலதானே நடந்திச்சு" ...

"அவருகிட்ட எம் பொண்ணு பாதுகாப்பா ராணி மாதிரி வாழ்வா யாருகிட்டயும் வேலை காரியா அவ போக தேவையில்ல" ‌ இறுதி வாக்கியங்களை அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார் ... அது தெரியாத நர்முகிலினிக்கோ,

"அப்பா நாங்க இல்லாத சமையமா பாத்து இவரு உங்களை ஏதும் மூளைசலவை பண்ணீட்டாரா".... வேந்தனுக்கு தன்னை திருமணம் செய்து வைக்க போவதாக கூறிய தந்தையின் கூற்றில் முழுசாக என்னுமே அதிர்ச்சி போகாது நர்முகிலினி பல ஆயிரம் தரவை தந்தையிடம் இப்படி கேட்டிறுப்பால்..

ஊர் ஊராய் இருக்கும் ஏழை மக்களுக்கு தான் இவர்கள் திருடிவந்த செல்வத்தை தேடி தேடி பங்கிட்டு கொடுத்தாலும்...அதற்கென்று ஊர் மெச்ச அரசாங்க ஆதரவில் வேலை செய்பவர்களாகி விடுவார்களா என்ன... நாளை பின்னே உன் கணவன் என்ன வேலை பாற்கிறான் என்று யாரூம் கேட்டால் பெறுமையாய் சொல்லிக் கொள்வதற்கு" .....ஒரு பெண்ணாய் அவனை பற்றி அறிந்த விடயங்களெல்லாம் அவளுக்கு அவனோடான திருமணத்திற்கு அது நெரிஞ்சி முள்ளாய் குத்தியது பத்தொன்பது வயதிலும் தன் வாழ்வை பற்றி தெளிவாய் யோசித்தால் ஆனால் அவள் யோசித்து என்ன பலன் தலையை உலுக்கி அந்த எண்ணத்தை போக்க நினைத்தவளது எண்ணம். தந்தையின் உறுதியின் முன் அதெல்லாம் புஸ்வானமானது...

காண்டிபனது வேண்டுதலுக்கினங்க வேந்தனுக்கும் நர்முகிலினிக்குமான திருமணம் அவர்களின் ஊர் பூசாரியின் தெய்வ வாக்குபடி நன்நாள் பார்த்து குறிக்கபட்டு அவ்வூர் மக்கள் புடைசூழ நடத்தப்பட ஆயத்தமாயிருக்க வேந்தனுக்கு சார்பாய் அவனின் சகாக்கள்‌ மட்டுமே நிறைந்திருந்தனர்.

அதில் பலியாடு போல அவனுக்கும் அவளுக்கும் நடக்க இருந்த கல்யாணத்தில் முக இறுக்கத்தோடு அவன் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள் நர்முகிலினி...

அதை கவணித்தும் கவணியாது அமர்தலாய் மலர்ந்த முகத்தோடு இருந்த வேந்தனோ,

"என்னங்க ஐயா ஹோம குண்டம் ரொம்ப சுடா இருக்கு போலையே அடுப்பு தனலை அதிகமா அள்ளிப் போட்டிட்டீங்களா என்ன இம்புட்டு உக்கிரமான வெம்ம காத்து பக்கத்துல வீசுதே"...பேச்சு பூசாரிடம் இருந்தாலும் பார்வை அவளை பாத்திருக்க...

"அப்படி ஏதும் இருந்தா இந்தால் மடியில தூக்கி போட்டு நீங்களாச்சும் எண்ணைய காக்க கூடாதா"... அவனுக்கும் பூசாரிக்கும் கேட்காது அவனுக்கு மட்டும் கேட்க முனுமுனுத்தவளின் பெண் மனம் முள் மேடையில் அமர்ந்திருப்பதை போல தவித்திட.

விரும்பிய பெண்ணின் தகப்பனே முன் வந்து கேட்டால் அவன் எதற்கு வேண்டாம் என்று சொல்ல வேண்டும் அவள் மனதில் கூட வேறு நேசமில்லை என எண்ணியவன் காலபோக்கில் தன் காதலாள் அவளை மாற்றலாம் எனும் குருட்டு நம்பிக்கையில் அவள் எப்படி தான் மறுத்து அடம்பிடித்த போதும் சிறு சுயநலத்தோடு அமைதி காத்தான் அவனுக்கு வேறு அவளுக்கு குடுக்க வேண்டிய கணக்கு பாக்கி இருக்கிறதே.

அவற்றை எண்ணியபடியே வேந்தன் அவளது மென்மையான சங்கு கழுத்தினில் தாலி கட்டும் போது அவனுடைய கைகள் அவளது உடலில் அழுத்தமாக ஒரு முறை உறசிக் கொள்ள அவளது மேனியில் பிரதிபலித்த அதிர்வில் அவளுக்கில்லாத சிலிர்ப்பு அவனது உடலில் பரவியது.

எதற்காகவுமே தளராத அவனது மனதின் உறுதி இப் பெண்ணவளின் விடயத்தில் மட்டும் சற்று ஆட்டம் கண்டது அந் நொடி,

ஆனால் மாறாக அவளுக்கு திருமணத்தில் தொலைந்து போன தன்னை மீட்க தான் உயிராய் நேசித்த தந்தை கூட முயலாதது பெறும் ஏமாற்றமாய் இருந்தது.

"ஹேய் ..எங்க வேந்தண் அண்ணாத்தைக்கு கல்யாணம் டோய் ....." அவனோடு இருந்த அந்த கூட்டத்திற்கு அவன் தானே அரசன் அப்படி இருக்க அமர்களமில்லாது அவனது திருமணத்தை நடத்த விட்டு விடுவார்களா அவர்கள்...."

ஆட்டமும் பாட்டமுமாக கலைகட்டியது அவர்களின் மகிழ்ச்சி

"பாத்தியா என் மந்திரி கூட்டத்தை ".... மீசையை முறுக்கியபடி மனைவியிடம் சொல்லியவனை மேலும் கீழும் இகழ்சியாய் பார்த்தவள்..

"மந்திரி கூட்டத்துக்கும் மந்தி கூட்டத்திற்கும் எங்களுக்கு நல்லாவே வித்தியாசம் தெரியும்"

இப்படி சொன்னவளை வெட்டவா குத்தவா என்று முறைத்தவன் தன் கோபத்தை சபையில் காட்டினால் அங்கிருப்பவர்களுக்குள் சலசலப்பு வந்துவிடும் என்று அமைதிகாத்தான்.

பின்னர் அந்நாளின் அந்திநேர எக்ஸ்பிரஸ்சில் அவளது தகப்பன் தாயோடு அவளையும் அழைத்துக் கொண்டு அவனது ஊர்ரான சித்திரங்குடியிற்கு கொஞ்சம் வெளிப்புறமாய் தன்னவளுக்கென்று நதிக்கரையை அண்மைத்த பகுதியில் மரங்களால் அவன் கட்டிய வீட்டிற்கு அவளோடு வாழ கூட்டி வந்திருந்தான் இதுவரை அவன் எப்படி இருந்தாலும் இனி அவளை வைத்துக் கொண்டு ஊர்ராய் அலைய முடியாதே அதான் தன் சொந்த ஊரிலேயே வந்திவிடுவோம்,

அதை நினைத்து அந்த வீட்டிற்குள் மனைவியோடு முதன் முதலாய் கால் வைத்தவனது சந்தோசம் பொசுக்கு என்று போனது அவள் கேட்ட முதல் கேள்விலேயே..

"இந்த மரத்தை எல்லாம் எங்க கொள்ளை அடிச்சீங்க" வீட்டை கண்களால் சுற்றி அலசியபடி படி கேட்ட மனைவிக்கு அவன் என்னத்தை சொல்வான் அவளை எண்ணி ஆசையாய் வடித்த கற்பனையாவற்றையும் கல்லெறிந்து கலைத்துவிட்டாளே புரியாத ராட்ஷஷி என்று அவன் அவளை தீயாய் பார்த்து முறைத்திருக்க,

"இது எங்கண்ணாத்தை பட்டணத்துக்கு மரக்கறி , வெங்காயம் , அரிசினு மூட்டைங்களை கொண்டு போய் வித்திட்டு வந்து சேமிச்சு வச்சிறுந்த கைகாசை போட்டு ... எங்க ஊர் தேக்குமர பண்ணையார் நீலகண்டன்ட்ட இருந்து வாங்கி கொன்னாந்தது‌‌... உங்களை எங்கண்ணாத்தைக்கு காண்டிபனய்யா கல்யாணம் பன்ன கேட்டப்போ‌ ஒரு நாலுமாசம் அவகாசம் கேட்டதே இதை கட்டி முடிக்கிறதுக்கு தான் அண்ணி".. சிறியவன் சுப்பு சிறித்தவாரே கூற.

குழந்தையவனின் விகல்பமில்லா பேச்சில் அவனை நம்பியவள்

"ஒஹோ.....பரவாயில்ல நானொன்னும் திருட்டு வீட்டில் இருக்கலை" குத்தலாய் கூறியபடி அங்கு சென்றமர்ந்தவளிற்கு படிப்பு ஆசை பாதியிலே தடைபட்டுப் போனது என்பதே என்னும் அவன் மேல் கோபத்தை கிளப்பியது...

"மாப்பிள்ளை அவ படிப்பு இனி மேல தொடருமான்ற ஏக்கத்தில தான் இப்படி எல்லாம் நடந்துக்குறா.. ...ஒத்த பொண்ணுனு செல்லமா வளத்திட்டேன் அவளை கோபிச்சுக்காதீங்க"....என்று வேந்தனிடம் மகளது போக்கு கணவனோடு ஒட்டுதலில்லாதிருப்பதை அவதானித் காண்டிபன் அவனிடம் வந்து பெண்ணை பெற்ற தந்தையாய் கவலையோடு கேட்ட போது...

"சில வேலை அவ பேசுறதை கேட்கும் போது ரொம்ப கோபம் வருதூ....ஆனா அதை நா பாத்துக்குறேன் என்றவன்

"இதை கேட்க கூடாதுனு தான் இருந்தேன் ...அவ சொல்லுற மாதிரி என் போக்கு நான் பன்ற வேலைங்க தெரிஞ்சும் நீங்க எதுக்காக என்னை மாப்பிள்ளையா ஏத்துகிட்டீங்க"...

அவளது நச்சரிப்புகளாலயே மாமனாரிடம் அவன் கேட்க வேண்டி தோன்றியது
"எலே நாச்சி சேதி தெரியுமா உன் பையன் தன்னோட வீரதீர சாகசத்துக்காக போன இடத்துல, நம்ம கீழ் சாதி சனத்துக்குள்ள இருந்து ஒருத்தியை கல்யலாணம் கட்டினானாமே"

ஊஞ்சலில் ஆடியபடி மனைவியை ஊடுறிவியவருக்கு அவரின் முகம் குழப்பத்தில் நிறைந்த போதே தெரிந்தது தான் சொல்லும் வரை அந்த செய்தி நாச்சியம்மாளுக்கு‌ தெரியாது என்பது‌.

"என்னம்மா உனக்கே தெரியலையா...அதுசரி அவன் நம்ம வீட்ட விட்டு போனானோ சாதிசானத்தை என்ன உறவையே வேனானு தரையில போட்டு புதைச்சிட்டானே"... மகனை எண்ணி அவர் மனம் கோபத்தில் வெதும்பியது....

ஐயா கூப்பிட்டு அழைச்சிருந்தேலா வக்கில் ஷேசாஸ்திரி வாயில் வெற்றிலையை மென்றியபடி வாசலில் குரல் கொடுக்க..

"வாங்கோ ஷேசா வந்து இங்க உட்காரூங்கோ" என்று வக்கீலை எழுந்து வீட்டின் உள்ளே கூட்டிச் சென்று அமர வைத்த நாகேந்திரன் "நாச்சி நம்ம வக்கீலுக்கு குடிக்க ஏதாச்சு கொண்டு வா , பலகார்ததோடே என்று மனைவிக்கு கட்டளையிட்டு அவர் உள்ளே அனுப்ப ...

"இந்த நேரத்துல எதுக்காக இந்த லாயர் வந்திருக்காரு".. தந்தை பிள்ளையின் செயல்கள் அடுதடுத்து அவருக்கு புதிராகவே அமைந்தது..

"ஐயா நீங்க சொன்ன மாதிரியே மெட்ராஷுல இருக்க உங்க பேர்ல இருக்க கட்டிடத்தை அங்க இருக்க உங்க பாட்னர் குணநீலகண்டன் ஐயாட்ட வித்திடுறதுக்கான பத்திரம் எல்லாம் இதுல இருக்கு என்று அவற்றை வக்கீல் நீட்டிய போது..

"இதெல்லாம் சரி வேந்தன் பேர்ல இருக்க சொத்தை திரும்பி அவன்கிட்ட இருந்து எழுதி பத்திரத்தை தாயார் படுத்த சொன்னே அதெல்லாம் எங்க"

தயங்கிய ஷேசாஸ்திரி "உங்களுக்கு இருக்கதோ ஒரே பையன் நீங்க எதுக்கும் யோசிச்சு இது மீடிவு எடுக்கலாமே" என்று தயங்கினார் ...

"எனக்கு எதை எப்படி பண்ணும்னு தெரியும் ..நீர் சொன்ன வேலையை மட்டும் பாரும் என்றவர் பட்டுக்கத்திரி திரித்தாற் போல பேச்சை முறித்ததும்‌..

"சரிங்க ஐயா" அதற்க்கான பத்திரங்களையும் பணிவாய் எடுத்து கொடுத்த வக்கீல் அதன் பின் எதுவும் கேட்கவேயில்லை...

தன் மனம் போல அமையவில்லை என்று தந்தையே மகனது அங்கிகாரத்தை பறித்தார்...அவன் போல நானில்லையே என்று அவர்‌ யோசிக்கும் காலமும் வரும்..

நிகழும்....
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-12

வேந்தனை சுற்றி இருப்பத்தி நான்கு மணி நேரமும் அவனது கூட்டங்கள் புடை சூழ்ந்து நேரத்துக்கு ஒரு நேரம் புதுசு புதுசா திட்டங்கள் தீட்டுவதும் சண்டை பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது ஆயுதங்களை புதிது புதிதாக கண்டு பிடித்து கூறுவது என்று ஒரே போர்கூடத்திற்குள் வந்து மாட்டிக் கொண்டது போல இருந்தது அவளுக்கு‌..

"டேய் பிகார் பக்கமா அவனுகளை தாக்க போகும் போது கூட பொதுமக்களோ அவனுங்க பொண்டாட்டி புள்ளைங்களோ இருந்தா அவசரபட்டு எந்த சம்பவமும் செஞ்சிடாதீங்க .....தனியா சிக்க வைக்க ஏதும் பன்னினப்புறமா தான் அவனுங்க தலை இறங்கனும் ..." லோடு ஏத்திக் கொள்ள இருந்த வண்டியில் இருந்த அவனது குழு பசங்களுக்கு வேந்தன் அறிவித்தல் குடுத்து கொண்டிருக்க.....

"அச்சோ ......கேட்கும் போதே நெஞ்சு பிசையிது" அவனது வன்முறை அவளுக்கு கலவரத்தை உள்ளுக்குள் ஏற்படுத்தியது...

"என்ன அம்மலு...உம் மாமென் மேல லுக்குலாம் அதி பயங்கரமா இருக்கும்"

"எந்த இடைவெளியில் இவன் பக்கத்தில் வந்தான்" தரையில் அமர்ந்திருந்த நர்முகிலினியின் கையிலிருந்த தட்டில் பருப்பும் சாதமும் இருக்க"....

"ஓடுறது ....தாவுறது...தவ்வுறதுனு வகைவகையா உம் மாமா மாக்கெட்டில இருந்து கொன்னாந்து போடுறதோடு சமைச்சு வேற வைக்குறேன்.. நீ என்னடான்னா.... இப்படி பருப்பும் சோரையும் பிசஞ்சிட்டிருக்க" ... அவளின்‌ முன்னே சம்மனக்கால் போட்டு உட்காந்த வேந்தன் தாடையில் கை ஊன்றி அவளை கேட்க...

"அடுத்தவன் வாழ்கையை அழிச்சு வந்த காசுல இருந்து எனக்கு ஒத்த பைசாவும் வேண்டாம்...இது நான் ஊருல இருக்க ரைஸ்மில்கு வேலைக்கு போய் சாம்பாதிச்ச காசுல பொங்கி சாப்பிடுறது"....திமிறாய் அவனிற்கு பதிலளித்தவள் உணவை உட்கொள்ளாது கீழே வைத்துவிட்டு எழ....

"ச்சுசூ....என்ன இருந்தாலும் பொண்டாட்டி சமையல் பிரமாதமா தான்யா இருக்கு அதிலும் அவ கை பட்டு பெசஞ்ச இந்த சாதம்‌... சும்மா தேனாமிர்தமா இருக்கே"... நீ வேனா போ உன் சாப்பாடை நான் சாப்பிடுறேன் என்ற பாவணையில் அவளது தட்டில் இருந்து ஒவ்வொரு பருக்கையையும் தேன் துளியாட்டம் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்ட வேந்தனை கண்டு..

"வந்த நாள இருந்து நானும் திட்டிபாத்திட்டேன் ....சண்டைபிடிச்சு பாத்திட்டேன் இவனெதோ எங்கிட்ட மட்டும் புத்தன் மாதிரி நடந்துக்குறான் ....

"நீ என்ன தான் எங்கிட்ட நடிச்சாலும் உங்க கூட அடுத்த கட்டத்துக்கு நா வரவே மாட்டேன்"..

அவளது பேச்சை கேட்டவன் "அம்மலூ நீ மனுசங்களோட தொழிலையும் உருவத்தையும் எடைபோட்டு நடக்குறவ நான் மனசை எடைபோட்டு நடக்குறவன்...."என‌ நிறுத்தியவன்....

"உனக்கு என்ன பிரச்சணை மேல் படிப்பு படிக்க போகலைனு தானே நா...படிக்க வைக்குறேன்‌‌ படிக்குறியா"

வேந்தன் தன் பொறுமையை இழுத்துபிடித்தபடி கேட்க அதற்கும் அவன் மனையாட்டி வெங்கல கடைக்குள் பூந்த யாணையை போல கிட்சனுக்குள் சட்டி சாமான்களை கடகட என்று உருட்டி புறட்டியவள் ‌‌இம்‌ முறை பேசாது அவனை வெறுப்பேத்தினால்..

அப்படியிருந்து அடுத்தடுத்து வந்த நாட்களில்

"ஹேய்‌... அம்மலூ.....உனக்கு ஒரு புடிச்ச விசயம் கொண்டாந் திருக்கேன்"......வீட்டிற்குள் குதுகலாமாய் ஓடி வந்தவன்

நிலத்திலிருந்த பாயில் கால்களை சுருட்டி வையிற்றினை பிடித்துக் கொண்டிருந்த மனைவி கண்களில் வில ஈணமாய்‌‌ வலியில் முனங்கி கொண்டிருந்த மனைவியை கண்டு

"அம்முலு என்னாச்சுமா...." பதறியபடி அவளை தொடலாம வேண்டமா என்று‌‌ சில நொடி‌ யோசித்தவன் ஆபத்துக்கு பாவமில்லை என்று தூக்க போனவனது கைகளை அந்த வலியிலும் தட்டி உதறியவள் தொடத என்னைய"...

"பைத்தியமா நீ இந்த நேரத்துல கூடவா இப்படி நடந்துக்குவ உன் உடம்புக்கு என்னாச்சு".....மனம் பதற கேட்ட அவனது கண்களில் வெளிப்பட்ட அலைப்புறுதலை முதல் முதலாக கண்டவள்... அதெல்லாம் ஒன்னுமில்ல மாசத்துல மூனு நாள் வாராது தான் இது"... மெல்லிய குரலில் சொன்னவளை

"என்னது மாசம்‌‌ மாசமா உடம்பு சரில்லாம வருமா இதை எதுக்கு குணப்படுத்தாம இருக்க வா டாக்கடர் கிட்ட போகலாம்"... அடமாய் அவளது கைகளை பிடித்தெழுப்பியவனது கரங்கள் முதல் முதலாய் தாலிகட்டியதுக்கு பின் இன்று தான் அவள் மேனியை உறசுகிறது ஆனால் அவளோ இம்முறை கோபம் கொள்ளவில்லை....

"யோவ் மக்கு மண்ணாங்கட்டி இதொன்னும் வியாதி கிடையாது ஹாஸ்பிட்டலுக்கு போய் குணப்படுத்த....."என சிறு இடைவெளிவிட்டு‌ சிறு சங்கடத்தோடு...

" இருபத்தெட்டு நாளுக்கொருக்கா வர்ர பீரியட்ஸா தான் இது...மொத மூனு‌ நாள் அப்பப்போ இப்படி எனக்கு வலிக்கும் இது எனக்கு மட்டுமில்ல எல்லா பொண்ணுகளுக்கும் பொது"....

"இப்படி எல்லாம் இருக்குனு ஆத்தா எனக்கு சொல்லி வலக்களையே....ரொம்ப புத்தகம் வாசிச்சம் பயாலஜி புக்க மறந்திட்டமே" தாமதித்து வருந்தியவனது முகபாவங்களை கண்டு...

"எனக்கொரு டவுட்டு ஸ்சார் பள்ளிகூட படிப்பிலையும் அவுட்டோ"...‌ அந்த வலியிலும் அவனை சுவாரசியத்தோடு டாமேஜ் பண்ணியவலை கண்டு...

"அம்முணி ஆயிரம் புத்தகம் சொல்லித்தராத படிப்பை அனுபவம் சொல்லி தருமாம் அப்படி பாத்தா ஐயாவும் படிச்சவன் தான் ...என்ன பொண்ணுங்க விசியத்தில முன்ன பின்ன அனுபவமில்ல ..அதான் நீ வந்துட்டேல இந்த அனுபவத்தை கத்துக்குறேன்"....

"என்...னதூ".....

"இதோ வரேன் பொறு"‌என எழுந்து சென்றவன் அக்கம் பக்கத்தில் தேடிபிடித்து ஒரு முதியை கூட்டிவந்திருந்தவன் இந்த பாட்டி எதோ எதோலாம் சொல்லுறாக உன்னுமே புரியிது மொதல்ல இந்த வாட்டிக்கு தேவையானதை அவங்களே ஒத்தாசையா செஞ்சு தருவாங்க ...அடுத்து வர்ர ‌மாசத்துல இருந்து நான் கவணிச்சுக்குறேன் என்று தாயின் அக்கறையோடு சொல்லிவிட்டு அறக்கியவன் அங்கயே இருந்து முதியையின் ஒவ்வொரு வேலைகளையும் சமையல்களையும் அடிக்கடி வந்து நோட்டமிட்டு தெரிந்து கொண்டு அவளுக்கு தேவையானவற்றை சிரத்தோடு செய்த

அவனில் முதன் முதலாக தன் தந்தை காண்டிபனின் சாயலை உணர்ந்தால்‌‌.

அதனால் கனிந்திருந்த அவளின் மனதின் வெளிப்பாடு ஒரு வாரம் அமைதியாய் அவனோடு வம்பு வளர்க்காது இருந்தால் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று‌ நினைத்தவன் அன்று கொண்டு வந்த சப்ரைசை அவளுக்கு இன்று கைகளில் கொடுத்து நினைத்து அவன் அறையின் மேசையிலிருந்த அவளின் புத்தகத்துல் அவற்றை வைத்துவிட்டு‌

"ஹேய் இதென்னடீ மேசையில தேவையில்லாத மூட்டை எல்லாம்...என்று அறைக்குள்ளேயிருந்து அவன் சப்தம் போட ...

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ...மிஸ்டர்‌ காத்தவராயன்‌ இது ஒன்னும் மூட்டை கிடையாது என் புத்தகப் பை"

"அட நானென்ன மோ உங்கம்மா குடுத்துவிட்ட பலகாரப்பையினு‌ நெனைச்சேன் சரி பரவாயில்லை அதென்ன ஏதோ காகிதம் எல்லாம் அந்த பைக்குள்ளால இருந்து விழுக வேணாமானு‌ நிக்குது"

அவன் எதை சுட்டி காட்டுகிறான் என்று‌ முதலில் புரியாது அவள் அதை எடுத்து பார்த்தால்...

மெட்ராசுல இருக்க ****மெடிக்கல் காலேஜுல் சேர்ந்து கொள்வதற்கான அட்மிசன்‌ பேப்பர் தான் அது .....

இதெப்படி‌ என் பைக்குள்ள வந்திச்சு பலவாறு யோசித்தவளது கண்கள் அதை ஆரத்தளுவி ஆராய்ந்து பார்த்தது அவள் ஆசைபட்ட‌ மருத்துவத்தை படிப்தற்கான வழி வகை கைகளில் இருக்கிறது என்றதும்

தாளின் மேல் பக்கத்தில் நர்முகிலினி வேந்தன்‌ என்று அவள்‌ பெயர்‌ பொறிக்கப்பட்டிருக்க இதை செய்தது அவளது கணவனோ என்று‌ அவனின் முகத்தை அவள் பாத்திருக்க எதுவும் தெரியாத பாவணையில் அவனை கண்டதும் குழப்பமாக இருந்தது

"இது உங்க வேலையா" அவளின் சுருங்கிய புருவங்களில் தன் இதழ்களால் ஊர்வலமிட்டு "ஆமாடி‌‌ என்‌ செல்ல அம்முலு" என்று அவனுக்கு சொல்ல வேண்டும் போல இருந்தது... ஆனாலும் அவளது மனைவியின் வயதும் கனவும் அவனை அப்படி செய்யவிடாது தடுக்க.

"ம்ஹிம் நானெதுக்கு உன்னை படிக்க வைக்க அனுப்பனும் இங்க உக்காந்து மாமனை பாத்துக்குவது எப்படீனு யாராச்சும் படிப்பு சொல்லி தந்தாங்கனா வேனா அனுப்புறன்"...

அவளுக்குள் விடுமுறையில் இருந்த வேதாளத்தை அவன் விடாப்பிடியாக இழுத்துவிட...

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு‌ உங்களுக்கு சமைச்சு போட்டு‌ அடுப்பங்கரையில குலல் ஊதிட்டு‌ கெடப்பேனு நெனைச்சா அதுக்கு நான் ஆள் இல்ல"

என்று பொறிந்தவளை கண்டு கொள்ளாது அவன் காது குடைந்தபடி அதற்கு பதிலேயின்றி வெளியேறிவிட்டான்....

"அண்ணி...அண்ணி‌ உங்களுக்காக ஊர்ல இருந்து காண்டிபன் ஐயா ஏதோ அக்கா கொடுத்துவிட்ட கவர்னூ கொடுத்துட்டு வர சொன்னாரு நீங்க இல்லைனு உங்க மேஜையில இருக்க பையில அதை எடுத்து வந்து வச்சுட்டு போனேன் பாத்தீங்களா"

அவள் சந்தேகபட்டு விட கூடாது என்று சுப்பு மூலியமாய் அவளுக்கு இதை கூறவைத்து அவன் இதை நம்ப வைத்தான் அவன்...

"நான் மெட்ராஸ் கிளம்பனும் ...." எனக்காக வாசுகி இதை அவங்கப்பாகிட்ட சொல்லி செஞ்சிறுக்கா" ....

"அந்த புள்ளைக்கு உனக்கு கல்யாணமானது தெரியலை அதான் அப்படி செஞ்சிறுக்கு"

"ஆமா தெரியாது....தான் ஆனா நீங்க எதுக்கு இப்போ இப்படி சொல்றீங்க"

"பின்ன என்ன அம்மடி... புருஷன் சம்பாதித்தியத்துல நானிதை படிக்கிறேனே இதை செய்றீங்களானு என்னை நீ கேட்டிருந்தா கூட யோசிச்சுறுப்பன் ஆனா வேற யாரோ சொன்னாங்கனு கேட்கிற என்னால எல்லாம் அனுப்ப முடியாது" நான்கு நாட்கள் அழ்ந்த யோசணையின் பின் தன்னிடம் வந்து நின்ற மனைவியிடம் அவன் இப்படி சொல்லி மறுக்கவும் ...

"உங்க காசுல அதுவும் அந்த அடி தடி கொலை கொள்ளைனு சம்பாதிச்ச காசுல போய்‌ படிக்கிறதுக்கு ...‌நான் பிச்சை எடுத்துனாலும் படிச்சுக்குவன்"

"அடிச்சேனு வையு பல்லு தெரிச்சிடும்" கோபமாய்‌‌ கண்கள் சிவக்க அவளை நோக்க முன்னேறியவன் கோபம் வந்தாலும் வார்த்தை வெளியிட்டாலும் அவளை நோக்கி கை யை கூட
தூக்கவில்லை ....

"எப்படி எல்லாம் பேசுகிறாள் ராட்சஷி"

"என்மேல கை வைப்பீங்களா...?" அவள் ஆங்கரமாய் கேட்டபடி மல்லுக்கட்ட நின்றாள் அவனிடம் சண்டை போடும்‌ எண்ணத்தில் அவள்‌ வரவில்லை ஆனால் அவளின் லட்டிசிய பாதைக்கு அவன் சிகப்பு கொடி காட்டியதும் "கோபம் வந்ததூ தான் அடிமைபடுத்தப்படுகிறமோ என்ற‌ எண்ணம் தலை தூக்க....

என்ன தைரியம் வந்ததோ அவளுக்கு அவனை தாண்டிச் சென்று பையினுள்‌ தன் உடைகளை எடுத்துக் கொண்டு‌ வெளியே வர அவளென்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்த வேந்தன் தன்னை விட்டு போக மனைவி எத்தனித்துவிட்டாளோ என்று மனதிற்குள் சிறு தவிப்பு‌ கூட இதயம் தடதடவென்ளு அடித்துக் கொண்டது தான் இந்த படிப்பை கொடுக்க வைத்தால் ஏற்றுக் கொள்ள‌மாட்டால் என்று தானே சுத்திவளைத்து அவள் தோழி பெயரை எல்லாம் வைத்து இதை செய்ய ஒரு சிறு பிரச்சணையில் பிரிவினை எதிர் நோக்க துணிந்துவிட்டாலா அந்த சிறுபெண் என்று தோன்றியது.

ஆனால் அவளோ அவனுடைய அறையிலிருந்த ஆயுதங்கள் பிளான் பேப்பர்கள் அது அணைத்தையும்‌ ஒரு மூட்டையில் தூக்கி சுமந்து வந்து நடு ஹோலில் தொப்பென தூக்கி போட்டவள்....

"இதெல்லாத்தையும் நீங்க தலை மூழுகிட்டு‌ ... இதனோட நிழல் கூட இல்லாம உங்க வாழ்கையை வாழ உங்களால முடியும்... சம்பாதிக்க முடியும்னா என் படிப்பு மட்டுமில்ல என்னைக் கூட உங்ககிட்ட தர்ரேன்"

*********
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்று வருடத்திற்கு பின்

ஒரு மாதிரி அந்த பட்டணத்திலிருந்த பிரபல மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தால் நர்முகிலினி அதுவும் பெறும் போராட்டத்தோடு தான்

காலேஜ் போக ஆரம்பித்தால் பெண் பிள்ளை என்று பல இடங்களில் ஆண்களோடு சமத்துவப் போராட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது, படிப்பிலும் போட்டிகளிலும் மதிப்பெண் அதிகம் பெற்றுவிட்டால் அதை வென்று கழிப்போட தெரியாத கோளைகள் அவளினை பட்டிக்காட்டு பெண் என்றும் ஜாதி என்றும் சமூகரீதியில் கேலிக்குள்ளாக்கி கழிப்படைந்தனர்.

இதில் கொடுமை என்னவென்றாள் அதை மாணவர்கள் செய்தால் வயது பிழை என்கலாம் மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் தெய்வத்திற்கு முன் நிலையிலிருக்கும் ஆசான்களே பார்சியாலிட்டி பார்த்தால் ஞாயம் எங்கே போகும்!...

என்ன இருந்தாலும் கீற்றொளியை வேண்டும்மானால் பத்துகைகளுக்குள் மறைத்து கொண்டு பார்கலாம் ஆனால் வெளிப்படும் சூரிய ஒளியை ஆயிரம் கைகளானாலும் மறைத்திட முடியாதே.

"இங்க பாரூம்மா நான் அப்பாருக்கூட கொஞ்ச இருந்திட்டு வரப்போறன் பாவம் ஒத்தையாள அங்க இருந்து கஷ்டப்படுறாரூ..போன மாசம் கூட ஜுரம் வந்து முடங்கிப்போனவர நீமட்டும் தான் போய் பாத்திட்டு வந்த"...‌ அந்த பெரியவிட்டின் சமையல் அடுக்களையின் பின் வாசல் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த தாய் பாரிஜாதத்தை நர்முகிலினி வாய் ஓயாது கேட்டுக் கொண்டே இருந்தால்‌...

"அதேனே பாத்தேன் இம்புட்டு நாள வாய திறக்காம இருக்கியேனு ...ஏண்டி கழுத வயசாகிது கட்டிகிட்ட புருசனை போய்‌ பாத்து சேந்து வாழுவியா அதைவிட்டிட்டு அப்பாரை பாக்க போறேன் ஆட்டுக்குட்டியை பாக்க போறென்னு... "

தாயினை அவள் முறைத்தபடி பேச ஆரம்பிப்பதற்குள் மீண்டும் அவரே இடையிட்டு

"இங்க பாரூ முகில் பெரியம்மா ... சொன்னது உனக்கு மறந்து போச்சா என்ன?.... சித்திரங்குடி பக்கமா இருக்க அவங்க அண்ணன் பொண்ணுக்கு கல்யாணமாம் ஒத்தாசைக்கும் வேலைகளுக்கும் அவங்க பக்கத்தில இருந்து போக யாருமில்லேனு சொல்லி கேட்டவங்களுக்கு ஒத்தாசைக்கு நாம தானே போயாகனும்"...

"அதுக்குத்தான் இங்க எவ்ளோ பேரு இருக்காங்க...என்‌‌ நீயுமிருக்கியே மா" ..எதிர்த்து வாயாடிய மகளை கண்டு முறைத்த பாரிஜாலம் ..."ஏண்டி நீ படிக்கிறதுக்கு நமக்கு இடம் கொடுத்து உதவி செஞ்சவங்களுக்கு உதவி செய்றது உன் கடமையில்லையா இதத்தான் உன் அப்பாரூ சொல்லித் தந்தாரா"...

"நீ.... ரொம்ப மோசம் ...ஆவுனா என் அப்பாரை வம்புக்கு இழுக்குற...இனி‌ வேனுன்னா பொண்டாட்டி சொன்னதை செய்ய முடியாம அவளை மெட்ராஷுல விட்டிட்டு ஊர் மேயப்போன உன் மருமகனை இழு" கழுத்தை நெடித்துக் கொண்டு உம்முனாம் மூஞ்சியாய் அங்கிருந்து எழுந்து நகர்ந்த நர்முகிலினியை ஒரு குரல் தடுத்தது.

"இஸ்...ஸ் நர்மி இங்க பாரூ...ஓய்"... அவளின் இடபக்கமாக யாரோ உஸ்சு உஸ்சு என்க...

"இப்போ என்ன உனக்கு பன்னனும் அந்த பெரிய வீட்டின் இடது பக்க அறையிலிருந்து வந்த சப்தத்துக்கு‌‌ உரியவரை அறிந்தவளாய்‌ நின்ற இடத்தைவிட்டு நகராத நர்முகிலினி இப்படி கேட்டு நிற்கவும்..

"நேத்து அப்பா அட்வைஸ் பன்ன ஆரம்பிக்க தப்பிக்கனுமேனு இந்தியாவில கூட மருத்துவத்துல உலக ரீதியா சாதிச்ச பெண் இருப்பாங்களானு திமிரா கேட்டு வச்சிட்டன்.. நீ தேடிவந்து சொல்லாட்டி உனக்கு பனிஸ்மண்ட் உண்டுனு எனக்கே அவரு ரிவட் அடிச்சிட்டு போனப்பவும் நான் அதை மறந்திட்டேன் ஆனா அவரு மறக்கமா வந்து நின்னுட்டு என் உசிரை‌ வாங்கிறாரூ சொல்லு சொல்லுனு ..தெரிஞ்சத்தானே சொல்லுறதுக்கு"...மெல்லிய குரலில் புலம்பிய வாசுகியின் குரலில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு நர்முகிலினி நின்றிருக்க....

"என்ன நர்மி வாயை மூடிட்டு சிரித்கிறியா...சத்தமேயில்ல இங்கத்தான் நிக்குறியா".. அடுத்தடுத்து படபடத்த வாசுகை கண்டு

"மன்னிச்சிடு என்னால முடியல ஹா..!!ஹா...ஐயோ உன் தொல்லை தாங்க முடியலை....தினமும் உனக்கு அறிவு மழை பொழியுற அய்யாவோட பாடும், அதில தப்பிக்க நீ பன்னுற பேச்சு சாதுர்யத்துல நீயே மாட்டிக்கிறதும் நாளாந்தும் சுவாரசியம் ஏறிட்டே போகுது"...

"நர்மி....சிணுங்கியபடி பல்லை கடித்த வாசுகிக்கு..

"சரி ..இப்போ என்ன பிரச்சணை அப்படி இந்தியாவுல மருத்துவத்துல சாதிச்சவங்க யாராச்சும் இருகாங்க பெண்கள்ள அது தானே"...

"ம்ம்ம்...."...இழுத்து பாவாமாய் குரல் எழுப்பிய வாசுக்கு ஆபத்பாந்தவளாய்

ஆனந்த்பாய் கோபாலவ் ஜோஷி

"ஏது பக்..ஷியா..???" கடைசி பேர் சரியாய் காதில் விழுகாது பசி மயக்கத்திலிருந்த வாசுகியை யாரும் திட்டினாலும் பராவியில்லை என்று ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஒரு கொட்டு வைத்த நர்முகிலினியை....

"ஏண்டி கொட்டின" என்று பாவமாய் தலையை தடவிக் கொண்டு கேட்ட வாசுகிக்கு

பதிலாய்.."நான் சொல்லுறதை முழுசாத்தான் கேளேன் அது ஜோசி" என்று நின்று நிறுத்தி எடுத்து கூறியவள் தொடர்ந்தாள்..

"இந்த ஆனந்த்பாய் கோபாலவ் ஜோஷி அவங்க தான் முதல் முதலா நம்ம நாட்டில மேற்கத்தேய மருத்துவத்தை படிச்சவங்களும், 1887இல் முதல் இந்திய பெண் மருத்துவர் அமேரிக்காக்கு சுற்று பயணம் மேற் கொண்டவர்னு அவங்களுக்கு பெருமை உண்டு"....

"ஓஹோ .....அப்பவே இப்படியிருக்காங்களா பாரேன்...இது தெரியாம போச்சு நாடிமேல் கைவைத்து அப்பாவியாய் கேட்ட தோழியை கண்டு" தலையை குழுக்கி..."ஐயா பாவம்மா நீ பாவமானு கூடிய சீக்கிரம் பட்டிமன்றம் போடலாம் " என்று கேலி செய்தபடி தலையை குலுக்கிவிட்டு நகர்ந்துவிட ....

அவற்றை எல்லாம் மறைவாய் நின்று‌ சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருந்த குணநீலகண்டனுக்கு ..

அவர் மகளிடம் வினவிட்டு போகும் கேள்விகளுக்கெல்லாம் விடை அவளிடமிருந்து சீக்கிரம் வந்துவிடும் ஆனால் இத்தனைக்கும் அசுவாரசியமாய் கூறுபவள் அசட்டுத்தனமாய் தன்னை பார்த்து சிறிப்பதை பார்த்து நிச்சயம் இவளுக்கு யாரோ உதவுகின்றனர் அந்த நபர் யாரா இருக்கும் என்று ஆர்வமாய் தேடிக் கொண்டிருந்தவர் காத்திருந்து நர்முகிலினியை பிடித்தார்..

"இந்தம்மா பொண்ணு இங்க வா ... தன் ஈசி ச்சாரிலிருந்தபடி அவளை எடை‌ போடும் பார்வையோடு கூப்பிட்டு கேட்க..?".

"ஏங்க இவ நம்ம பாரிஜாலத்தோட பொண்ணுங்க ..." என்று தமையனது வீட்டிற்கு எடுத்துட்டு போக தட்டு தாம்புள்யம் அதில் பழங்கள் என்பவற்றை ஒழுங்கு படுத்தியவர் ....

"முகில் கொண்டு போய் சேகர் அண்னன் கிட்ட கொடுத்துட்டு உள்ள வா வேலையிருக்கு" என்று அவளிடம் வேலையே ஏவிவிட்டு போக.

"வாசுகி கலம்பிட்டியாடி " மகளை அழைத்தபடி வீட்டிற்குள் செல்ல...

"தன்னை ஏன் பெரிய ஐயா விசார்த்தார்" என கேள்வியாய் அவரை பார்த்தபடி தட்டுக்களை கைகளில் எடுத்துக் கொண்டவளை கண்டு..

" உனக்கும் வாசுகிக்கும் ஒரு வயசா?" என்று வினா எழுப்ப?"...

ஆமாங்க ஐயா என்றாள் பணிவோடு

"அப்போ நீ காலேஜ் போக ஆரம்பிச்சிறுக்கனுமே...?" என்று‌ யோசணையாய் புருவம் உயர்த்தியவரை கண்டு

ஆமாங்கம்யா நான் இப்போ மெடிக்கல் காலேஜ்ல செக்கண்ட் இயர்....

" அடடே பரவாலேயே....உன் ஆம்பிசன் என்னம்மா.."

இதை அவர் கேட்டதும் ஆர்வமானவள்

"எனக்கு குழந்தை நல மருத்துவராகனும் ...நானே சொந்தமா ஹாஸ்பிட்டல்‌‌ கட்டனும் அதில் எங்கப்பாவை தலமையில இருக்கவச்சு வசதியில்லாதவங்குளுக்கு இலவசமா மருத்துவம் கொடுக்குனும்...எங்க மக்களுக்கான அடையாளத்தை தெரியபடுத்தி எங்களால சாதிக்க முடியனும் என்றதுக்கு‌ என்னால முடிஞ்சத பன்னிடனும் கூட...பாவாகாருவுக்கும் அதை புரிய வைக்கனும்"...

கண்களில் கனவு மின்ன அடுக்கி கொண்டு போனவளது பேச்சிலிருந்த நம்பிக்கை ஒளியை உணர்ந்து சுவரசியமாய்‌ குணநீலகண்டன் கேட்டுக் கொண்டிருந்தவர் ஏதோ தோன்ற ... "அது சரி யாரூ அந்த அந்த பாவாரூ ?"....‌பெரியவர் இடைநிறுத்தி அவளை இப்படி கேட்கவும் தான் கடைசியில் தன்னையறியாது அவள் தன் கணவனை பற்றி பேசியிருக்கிறோம் என்பதை உணர்ந்தவளோ வெட்கத்தில் கோபத்திலும் ஒரு சேர முகத்தில் பிரதிபலித்தை அந்த பெரியவரால் தெளிவாய் புரிந்து கொள்ள முடியவில்லை..அவளும அதற்கு‌மட்டும் என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாய் நின்ற நேரத்தால்..

"ஏய் முகில் நீ என்னும் தட்டுத் தாம்பாளத்தை கொடுக்கலையா இங்க உள்ளுக்குள்ள முடிக்க வேண்டிய எத்தனை வேலைங்க இருக்கு" அதிகாரமாய் கட்டளை குரலிட்ட லீவதியின்‌ பேச்சு குணநீலகண்டனுக்கு எரிச்சலாய் இருந்தது...

லீலாவதியின் குடும்பத்தினர்‌ பரம்பரை பணக்காரக்கள் என்பதால் மேல் தட்டுவர்கத்துக்குரிய அதிகாரமும் திமிரும் அவர் நல்ல குணங்களை தாண்டியும் அதிகம் ஊரியிருந்தது.... உயர் தட்டு வர்கம் என்றாலும் தன் தந்தை தலையீடு இன்றி முழுக் முழுக்க தன் முயற்சியில் முன்னேறிய இவர் தன் மகளையும் தன்னைப் போல் வளர்ப்திலேயே அதிகம் குறிக்கோளாய் இருக்க வாழ்கையில் சாதிக்க நினைக்கும் இச் சிறிய பெண் அவரை கவர்ந்திருந்தாள்.

"நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?" .. பாரதியின் வாக்கு அவரினுள் ஊறிப் போன ஒன்றாகிப் போனதாலோ என்னமோ இவளது படிப்புக்கு தன்னால் முடிந்த உதவியை கேட்டுச் செய்ய வேண்டும் என எண்ணி வைத்துக் கொண்டார்

"நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா...?"

நாடுவிட்டு நாடு தாவும் பறவைகளுக்கு தஞ்சம் கொடுக்கும் சரணாலமாய் திகழ்ந்த அந்த சித்திரங்குடியிற்கு கல்யாண வீட்டு கும்பலோடு நர்முகிலினி வேலைக்காக சென்றிருந்தாள் ...

இடையில் கீழே விழுந்து தாய் பாரிஜாத்திற்கு கால் சுழுக்கு வந்துவிட அவரை தந்தையிடம் அனுப்பிவிட்டவள்
"வாக்கபட்டு வந்த இடத்துக்கே திரும்பி வர்ரமே ....இந்த மனுஷன் இப்போ எங்க போயிருப்பாவ என்ன செய்வாக" எண்ணமிட்டபடி தாயின் வேலைக்கு பொறுப்பாய் வந்திருந்தால் அவள் தனக்கு திருமணம் ஆன சங்கதியை அங்கிருப்பவர்களுக்கு சொல்லவில்லை தாயையும் சொல்லிவிடாது மறைத்தால் வாசுகி உட்பட.

"நர்மி எங்க வீட்டு ஆட்களெல்லாம் சரியான போருடி ...எனக்கு அவைங்க பேச்சு சுத்தமா ஒத்துவருதில்லை உங்க கூடவே இருக்கேன் அம்மா கூப்பிட்டா காட்டிக் குடுத்திடாதே.." அவளுக்கு முன் பின்னும் சுற்றி திரிந்த வாசுகியை ...

"என்ன வாசு .... உனக்கென்ன புத்தி கெட்டுப் போச்சா இவ கூட சுத்திட்டிருக்க...போ போய் உள்ள வேற சோலிக் கழுதையிருந்த பாரூ".... அவளின் ஆச்சி விரட்டிவிட...

"இந்த ஆச்சி தொல்லை முடிவுக்கு வர்ர நாள் எப்பன்னு பாத்திட்டே தானிருக்கன் வாயை திறந்தா வங்காளம் விரியும்"... ஆச்சியை வசைபாடியபடி செல்லும் வாசுகியை பார்ப்பவள் இங்கே நின்றால் அடுத்தகணமே இந்த பெரியவர் வாயில் தான் தான் வெத்திலை பாக்குப்போல அறைபட்டு விடுவோம் என்று‌ புத்திசாலித்தனமாய் எண்ணமிட்ட நொடியில் மின்னலென பறந்துவிட்டால்...

அந்நேரம் தான் அவ்வீட்டு பக்கத்தில் ஏதோ ஒரு சந்தின் வழியாக இரு பையன்கள் எதோ சிறிய ஒரு துணிப் பையிற்குள் நகையை அள்ளி முடிந்து சட்டை பையிற்குள் போட்டவர்கள் மதில் ஏறி குதித்து போவதை கண்டு குழப்பமாய் புறுவம் உயர்த்தி யோசித்தவள்...

"யாரிவனுங்க...? தெரியாத இடத்துல வந்து இதை எப்படி‌‌ யாரிடம் சொல்வது" தெரியாது யோசித்துக் கொண்டே வந்தவள் வாயிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த ஒரு உருவத்தோடு மோதி நின்றால்....

"மன்னிச்சிடுங்க".... அவள் மட்டுமில்லாது கணீர் என்ற ஒரு ஆண்குரலும் ஒரு மன்னிப்பை கேட்டதும் அவளது கண்கள் நிமிர்ந்து அவனை நோக்கியது"..

மிக அறுகில் அவளோடு உரசியபடி நின்றவன் அவளை கண்டு தாமரை இதழாய் முகம் மலர அதில் தான் காண்பது கணவா என்று விழி விரித்தவளின் விழிகளுக்குள் தன் இதழ்களால் கவிதை எழுத ஆசை பட்டவன் சுற்றி வர இருந்த ஆட்களை கண்டு "அம்முலு அப்ரமா உன்னை கவணிச்சுக்கிறேன்டி" அவளுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு தேனாய் இனிக்கும் குரலில் சொன்னவன் உறைந்திருந்த அவளை விலக்கிச் சென்றான்...

"வாங்க ஸ்சார் வாங்கோ....வாங்கோ" லீலாவின் அண்ணன் அல்லக்கைகளோடு அவன் போட்ட சப்தத்தில் மனைவி மகன்களும் வெளியே வந்து ராஜ மரியாதையுடன் கும்பிடு போட்டுக கொண்டு வந்திருந்த வேந்தனை வரவேற்க"

"ஆங்....என்று வாயை பிழந்து நின்ற நர்முகிலினி பின்னால் முன்னாள் சுற்றி வேறு யாரையாவது அவர்கள் கூப்பிடுகின்றனவா என்று‌ சரிபார்தவளை".....

"அடி ஆத்து ...வூட்டை சுத்தி பாத்து கணா கண்டது போதும் போய் தம்பிக்கு ஜூஸ் எடுத்துட்டு வா" .... அந்த வெத்திளைக்கிழவி கத்தியும் கணவனை விசித்திர ஓவியம் போல பாத்திருந்த நர்முகிலினி அசையவில்லை "நர்மி....நீயாடி இப்படி நிக்குறது நம்ப முடியலை" தோளியின் தோளை இடித்த வாசுகி வாயை பொத்தி கிளுக்கென்று சிரிக்கவும் அதில் சுரணை வந்த நர்முகிலினி..

"ஓய் வசூ எதுக்கு என்னைய பாசமா பாக்குறாங்க (முறைக்குறாங்க) அப்படி இங்க என்ன நடந்திச்சு இப்போ"

"என்னத்த நடந்திது நீ இப்படி புதுசா என்ட்டரியான‌ மினிஸ்டர் பையனை டாவு விட்டிருந்தது தான் நடந்தது"

முகில் ..... இம்முறை லீலாவதி அழைக்க இதோ வரேன்மா... தோளியில் தலையில் கொட்டு வைத்தவள்....

"சொல்லுங்கமா நான் என்ன‌‌ செய்யனும்" பணிவாய் விளித்து நிற்க இந்த...தம்பி இப்போ வந்ததுல இருந்தி திரும்பி போர வரைக்கும் நீ தான் அவருக்கு வேண்டியது எல்லாம் கவணிச்சுக்கனும்"....

உணவில்லாமலே புறையேறியது நர்முகிலினிக்கு "என்..னம்மா சொன்னீங்க...?"

"முகில் உன் காது நல்லாத்தேனே திடீர்னு ஏன் இப்படி நடந்திக்கிரியோ இன்னைக்கு இங்க வந்தாரே அவரு தான் இந்த தொகுதியோட எம்.எல்.யே கல்யாணவீட்டுக்கு எல்லாம் போகாதவர் எங்க வீட்டு கல்யாணத்துக்கு தான் முதல்ல வாராது உண்ணை நம்பி தான்மா வேலைகளை கவனிக்க போறேன் என் அவர் கூறிவிட்டு அகலவும்...

"நாடும் சட்ட சபையும் கெட்டு போயிடிச்சுனு எப்படி எல்லாம் நான் தெரிஞ்சுக்கனும்மா...தலையளடித்துக் கொண்ட நர்முகிலினியின் கண்களை விரும்பியே அவனை எங்கெங்கு என்று தேடிக் கொண்டிருக்க

"யாரை நர்மி தேடுற எம்.எல்.யே ஸ்சாரையா"....அவளை கண்டு புருவம் உயர்த்திட அதற்கு அசடு வழிந்த நர்முகிலினி "ஏம்‌‌ நர்முகிலினி உங்க வீட்டாட்கள் நல்லா தெரிஞ்சு தான்‌ சொல்றாங்களா இவரு உம்மேலயே எம்.எல்..யேவா...முகத்தை பாத்தா அப்படி தெரியலை"....

"உன்னை பாத்தாலும் தான் இப்படி பேசுறவ மாதிரி தெரியலை".... என்னாலாய் இல்லாத திருநாளாய் தோழியின் நடத்தை வித்யாசத்தி வாசுகி தன் சிறிய‌ மூளையை குடைந்து யோசித்தவள் ....."நர்மி உனக்கு இவரை தெரியுமா" என்று திரும்பினால் ஆளையே காணோம்..


*******

"ஸ்சார்.....ஸ்சார்...." என்று எட்டு கட்டை சுரத்தையில் கூப்பிட்ட நர்முகிலினியின் கைகளில் வைத்திருந்த தட்டில் பலச்சாறு குவலை ,டீ, இட்லி , தோசை நான்கு வகை கெட்டிச்சட்னி என்று ஐட்டம் ஐட்டமாக பரப்பியிறுக்க‌....

"இவரது வயிறா வேற ஏதுமா.....நம்மலை பழிவாங்கனே தேடிவந்தாங்களாருக்கும்"...

"என் கணவன் ஒரு கொள்ளை கூட்டத்திற்கு பாஸ்னு கேக்குறவங்களுக்கு பெறுமையாய் சொல்றேன்" அன்று அவளுரைத்த வார்த்தைகளே அசரீதியாய் அவள் காதில் கேட்டது....சரியாக அந்த நேரம் உள்ளுக்குள் இருந்து கதவின் தாட்பாழும் திறந்து கொள்ள‌....

"உள்ளே வச்சுட்டு போங்க" வேந்தனது குரலில் உள்ளே முன்னேரியவள் எங்கே ஆளையே காணும் என்று வைத்துவிட்டு நிமிர்ந்த போது ரூம் தாப்பாழிட்டு மூடி வாயிலேயே அறக்காது நின்ற வேந்தனது கண்கள் மனைவியை உச்சி முதல் உள்ளம் கால் வரை ஆசையாய் தளுவிக் கொண்டு உலாப்போக...

"அந்த பார்வையின் தீக்கத்தில் அவன் தொடமாலேயே அவனது ஸ்பரிசம் அவளை தீண்டுவது போல எதே எதே எண்ணமும் உணர்வுகள் பிரபாகம் எடுக்க நொடியில் தன்னை தெளிந்து கொண்டு ‌...







"சாப்பாடு வச்சாசுங்க ஐயா" போலி பணிவோடு அறக்க முற்பட்டவள் கதவிலிருந்து விலாகாதிருந்த வேந்தன்

"இப்போ சொல்லவா நீ எம்.எல்.யே பொண்டாட்டீனு" அவனது குரலில் அது கோபமா ஆதங்கமா என்று புரியாது‌..

"நீங்க எதுவும் சொல்லத் தேவையில்லை போனவரு போனதாவே இருங்க... என் படிப்புத்தான் எனக்கு முக்கியம்"..

"சரி போ...." அன்று போல‌ இன்றும் அவளை வெறுமையோடு வெளியே அனுப்பினான் அவளது கணவன்.

நிகழும்...
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-13

அன்று பார்த்தோடு சரி அவளது கணவனை கண்டாள் இல்லை மனது ஒருபுறம் அவனது பேச்சுகளுக்கும் அக்கறைக்கும் இப்போது எல்லாம் அலைபாய்ந்திட "வெட்கங்கெட்ட மனதே விட்டிட்டு போனவரை பற்றி நினைக்காதே" என அப்படி தோன்றும் எண்ணங்களை அடக்கி வெற்றியும் கண்டிருக்கிறாள் நர்முகிலினி...

"ஏன் இப்படி...? யோசித்தபடியே தன் மார்க் ஷீட்டோடு அவளது காலேஜ் ஸ்டாப் ரூமிற்கு வெளியே நின்று கொண்டு எக்கியூஸ்மி ஸ்சார் என்று‌‌ மரியாதை நிமிர்தம் தட்டி விட்டு ‌பதிலுக்கு பார்க்க உள்ளோ இருந்து வாங்க என்று பதில் கிடைத்ததும் உள்ளே சென்றால்...

அங்கே பிரபாகரன் தன் இளங்கலை பட்டத்தை முடித்து மருத்துவ பயிற்சிகளை முடித்துக் கொண்டு வைத்தியராக மட்டுமில்லாது அந்த காலேஜில் பகுதி நேர பேராசிரியராக அவன் வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஆறுமாசம் முடிந்திருக்க

வேலை முடிந்து கலம்ப தயார் நிலையில் இருந்தவனோ அவளை பார்த்ததும்...

"வாங்க நர்முகலினி...என்ன விஷயம்..." ஆராய்சியாய் பார்தவனை

"இந்த முறையும் என் பிராக்டிகல்ஸ் ல பிரொப்போமன்ஸ் பத்தாதுனு திரும்பியும் ரிப்போர்ட்டல மார்க் பன்னிருக்கீங்களே ஸ்சார்"

"நான் உங்க நிலவரம் என்னமோ அதைதானே பதிந்தேன்"..

"எப்படி ஸ்சார் நீங்க சொன்னதில் இருந்ததே இந்த பாடத்து பிராக்டிக்கல்ஸ்சுக்கா நாள் நேரமில்லாம மினக்கெடுறன் நீங்க சொன்ன மாதிரி பவனேந்திரன் ஸ்சார் கிட்ட கூட நோட்ஸ் டவுட்ஸ்னு படிச்சு தானே வந்திட்டிருக்கேன் நீங்க வேனும்னா இங்க பாரூங்க" என்று அவள் அதற்கு ஆதாரங்கள் காட்ட வேண்டாம் என்று தடுத்தவன்...

அவள் எவ்வளவு கஷ்டபட்டு முயற்சி செய்தாலும் அவளிடம் முன்னேற்றமில்லை என்று சாமார்தியமாய் மட்டம் தட்டிக் கொண்டிருந்தான் பிரபாகாரன்.

அவன் பதியும் புள்ளி விபரங்கள் அவள் நல்லா ஸ்கோர் பன்னும் பாடங்களுக்கும் பிராக்டிக்கல்சுக்கு கரும்புள்ளியாக அமைய ஆரம்பித்து அவள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாற இன்று எப்படியேனும் இதற்கு தீர்வு தெரிந்துவிட வேண்டும் என அங்கே வந்திருந்தவளை.

"இங்க பாரூங்க மிஸ் இது ஒன்னும் வணிகத்துறையோ, பொறி இயலோ இலுல திஸ் இஸ் மெடிக்கல் காலேஜ் .....உங்க பிராக்டிக்கல்ஸ்சும் தியேரெட்டிக்கல் நொலேஜ் கூடனும்னா ... நாங்க சொல்றதை நீங்க செய்து தான் ஆகனும்"

ஆசிரியரிடம் வாய் சவடால் விடக் கூடாது எதிர்த்து கேட்க கூடாது என்று அவளை சுற்றி உள்ளவர்கள் மூளைச்சலவை செய்தாலோ என்னமோ அமைதியாக அதை கேட்டு நின்றிருந்தவளை

"கோ ஹேட்... முயற்சி ‌பன்னுங்க" இன்றும் இறக்கமில்லாது பிரபாகரன் வெளியில் கைகாட்டினான்.

"சரி ஸ்சார் என்று வாயை மூடிக் கொண்டவளுக்கு எங்கே பிழைக்கிறது என புரியவில்லை முன்னர் மருத்துவம் படித்த மாணவர்களிடமும், மற்றைய பாட பேராசிரியர்களிடமும் கேட்ட படி பார்த்த போது எல்லாம் அவர்கள் தன்னை பாரட்டி நீ சரியாய் செய்கிறாய் என்று பாரட்டி சொல்லியிருக்க இவர் மட்டும் ஏன் ஒரு ஊக்கம் கூட அழிக்காமல் இப்படி சொல்கிறாரே???..." அமைதியாய் அங்கிருந்து வெளியே செல்ல முட்பட்ட நர்முகிலினியின் முகபோக்குகளை கவணித்து கொண்டிருந்த பிராபகரன்,

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இது தான் சரியான சமையம் என்று நினைத்து..

"ஹேய் மிஸ் நிள்ளுங்க" என்று போன அவளை நிப்பாட்டி...."

நாளைக்கு பவனேந்திரன் ஸ்சார் பிறைவட்டா நடத்துர ட்டியூசனில் ஸ்பெசல் கிளாஸ் அரேஞ் பன்னி நடத்துராராம் உங்களை வந்து பெயரை கொடுத்து அதை அட்டன்ட் பன்ன சொன்னாரு....அவருக்கு தன் மாணவங்க பின்னடைவில போய்கிட்டே இருக்கிறது பிடிக்கலைனு வேற சொல்லி அனுப்பினாரு"...

என்று அறிவித்து விட்டு கலம்பிவிட்டான் பிரபாகரன் ...சரி என்று தலையாட்டியவள் அங்கு தனக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியாமலே கலம்ப நினைத்திருந்தாள்.

"என்ன பிரபா சொல்லுறே.... அங்க அவள் நாளைக்கு வருவாளா" பெண்பித்து பிடித்த அந்த பேராசிரியர் கண்களில் மிளிர்வோடு ஆர்வம் பொங்க கேட்க ...

"ஆமா ஸ்சார் இது தான் உங்களுக்கு நல்ல சந்தர்பம்........நீங்க போற இடத்து ஆள் குறைவா இருக்கனும்....இவளுக்கு ஏதும் நடந்தா கேட்க வர கூட யாருமில்ல இருந்தாலும் உங்களுக்கு பிரட்சனை வரக்கூடாதுனு தான் நானுங்களுக்கு இதை சொல்றேன்"...

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி வைத்த திருப்தியோடு நின்றிருந்த பிரபாகரன் விகாரமாய் சிறித்துக் கொண்டான்...

"அவளை தொட்டால் தான் அந்த வேந்தன் கொதித்து எழுவான்.... அதன் பின்னர் தான் நினைத்தை ஒவ்வொன்றும் நடக்க ஆரம்பிக்கும்".......

********
வீட்டிலிருந்து வரும் போதிலிருந்தே அவ்வளவு தடங்கள் அப்படி இருக்க ஆசான் என்று இவனை நம்பி வந்தால் தன் ஸ்டூடன் என்று அடியாட்களை துனைக்கு கூட்டிவந்து அவள் மீதான தன் காம பசியை தீர்க்க நினைக்கும் மிருகனாய் போனானே இவன்...

அவனது தொடுகை தன் மீது சிறு கீட்டாய் பட தொடங்கியிருந்த போதே அவ்வளவு தாட்சான்யமாய் அவனை உருத்துவிளித்தவள் கைநீட்டி அடிக்கவில்லை அவ்வளவு தான்

அந்த அணல் தெறிக்கும் பகல் வேலையில் வியர்த்து விறுவிறுத்து விழுந்து எழுந்து காயங்களோடு வக்கிர புத்தியோடு தன் மீது கைவைக்க நினைத்தவர்களின் எண்ணத்தினை ஏதோ ஒரு கட்டத்தில் தெளிவாய் புரிந்து திமிறி அவர்களின் மேல் மண்ணை வாறி அள்ளிபோட்டு தள்ளிவிட்டவள் உயிரையும் மானத்தையும் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தாள்...

இரண்டு தடிக்காத்தவராயன்கள் அவளை சுற்றி அந்த பகுதியில் தேடிக்க கொண்டிருக்க

தாகத்தில் வறண்ட தொண்டையும் பயத்தில் அடைத்த நெஞ்சும் சதி செய்ய அவளின் கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழு இழந்தது...

"டேய் அந்த சிறுக்கி அங்க இருக்கா வா போய் பிடிக்கலாம்"

சோர்ந்தவள் மீண்டும் ஓட நினைக்க மடக்கி பிடித்து வந்துவிட்டனர் அவர்கள்...

"டேய் என்னை விடுங்கடா ....ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசமாக்க நினைப்பவனுக்கு துணை போகதீங்க"

அவள் கத்த கதற அவர்களின் முதலாளியிற்கு சொந்தமான ஓர் இடத்தில் அவளை கொண்டு வந்து கை, வாய் கால் என்று கட்டிப்போட்டு அடைது வைத்தனர்.

டேய் இவளை பிடிச்சாச்சுனு சொல்லி பாசை கூட்டிட்டு வா அங்கிருந்த மூன்றாமவனை அந்த இருவரில் ஒருவன் கட்டளையிட்டான்..

அந்த கடைக்குள் சுற்றி நிறைய சாக்கு பொதிகள் கிடந்தன அவ்வளவும் இளவு பஞ்சு மூட்டை அதில் சிலவற்றை விறுவிறுவென துக்க ஆரம்பித்தவர்கள் ஒரு இடத்தை குறிவைத்து அதில் மெத்தையை போல பரப்பி பெட்சீட் ஒன்றை விரித்துப்போட்ட விதத்திலேயே தெரிந்தது இதுக்கு முன் இதில் இவர்கள் கரைதேர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்று...

பேதையவளுக்கோ, "ஐயகோ இறைவா இது என்ன சோதனை....அவள் ஊரில் இளம் பராயத்தில் பார்த்து பயந்த அவலங்கள் இன்று அவளுக்கே நடக்க போகிறாதா....தனக்காக பின் தன் படிப்புக்காக என கணவனை கூட நெறுங்க விடாது அவனுக்கு அள்ளி விருந்தளிக்க வேண்டிய தன் கற்பை பொக்கிசமாய் காத்து அணைப்போட்டு நின்றது.... இன்று யாரோ ஒரு பொறுக்கியிடம்....ச்சே‌..!!!!"..

நினைக்கும் போதே அவளது மனமும் உடலும் கூசி கண்கள் குளம் கட்டியது ....

இந்த நொடி அவளின் தந்தைக் கூட அவளின் நினைவுகளுக்கு வரவில்லை ஊரில் நடக்கும் அனியாங்களுக்கு தன் கைகளால் பதில் சொல்லும் அவளவன் தான் நினைவுக்கு வந்தான்....

"என்னங்க...." தாயை தேடும் குழந்தையாய் அவளோ அவனை நினைக்க

அங்கு அவனுடைய அம்மலுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாமலே தன்னை விருந்தினராய் அழைத்திருந்த ஒரு பின்னடைவில் இயங்கி கொண்டிருந்த ஒரு பள்ளிக்கூட விளையாட்டு போட்டியிற்கு அந்த ஊர் வழியை தாண்டி செல்ல விளைந்திருந்தான் வேந்தன்...

பாதுகாப்புக்கு என்று வர எத்தனித்தவர்களை அவன் மறுத்துவிட்டான் அதற்கு காரணம் அங்கு உள்ள சிறு மாணவர்களை பாதுகாப்பென்று அவனை மொய்த்து நிற்கும் ஆட்களை கண்டு பயம் கொள்ளவோ தன்னிடமிருந்து பின்னடைந்தோ நடந்து கொள்ள கூடாது..எளிமையாய் இருக்க வேண்டும் என்று தானே ஜூப்பை ஓட்டி வந்திருக்க

வேந்தனது மனதில் அன்று முழு நாளும் ஏனோ மனைவியின் எண்ணமே ஆக்கிரமித்து ஆண்டது..

"அம்மலூ....."அவள் உள்ளத்துக்குள்ளே அவனை நினைத்து அழைத்தது அவனின் காதுகளுக்கு நெறுக்கத்தில் அழைத்தது போல இருந்ததோ பிரேக் அடித்து வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டான்...

அவன் நின்றது அவள் அடைத்து வைக்கபட்ட இடத்திற்கு மிக அருகாமையில் தான் ஆனால் விதி அங்கே விளையாடியது போலும்.

"இதேடா வம்பா போச்சு இன்னைக்கு புறா அம்மலு நினைப்பா இருக்கே பேசாமா இந்த விழாவுக்கு போறதைவிட்டு அவளை ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடலாமோ"... நெஞ்சம் முழுவதும் ஏதோ ஒரு உணர்வு போட்டு தவிப்பை கொடுத்தது....

தன் ஜீப்பை நிப்பாற்றி அவன் விட்ட இடம் ஆட்கள் நடமாட்டம் குறைந்த குருகல் நெடுகளான மரங்கள் நிறைந்த இடமாய் இருக்க...

"இது சரிபட்டு வராது அம்மலூவை போய் பாத்திட்டே வந்திடாலாம்"..

யாருமில்லை தானே வண்டியை சுற்றி வந்த வழியிலேயே கலப்பிவிடலாம் என அவன் திருப்பிய போது ...

பெரிய ஹோரோன் சப்தத்தை எழுப்பி...

"யோவ் ....அறிவில்ல இந்த பக்காம வாகனம் வரும்னு நெனைப்பில்லாம வண்டியை யூட்டன் எடுத்திட்டு கலம்புற" ...

ஒரு நாற்பது வயது மதிக்க தக்க ஒருத்தன் தலையை வெளியே விட்டு வேந்தனோடு கத்தினான்...

"ஷ்சோ.....இவ்வளவு நேரமில்லாம இப்போ எங்கிருந்து வந்தான் இவன்" ஜுப்பிலிருந்து தானும் தலையை நிமிர்த்திய வேந்தன் "மன்னிச்சிடுங்க ஸ்சார் நான் வண்டியை ஓரம் கட்டுறேன் நீங்க கலம்பி போங்க"

என்றதும் அவனது முகத்தை கண்டு வண்டிக்குள் இருந்த ஆள் வேறு யாருமில்லை சாட்ஷாத் அந்த ப்ரொப்பர்சரும் கயவனுமான பவேனேந்திரன் தான்.

"ஐயா....நீங்க பேசினது நம்ம தொகுதி எம்.எல்யோ வேந்தன் ஸ்சாருக்கு"...

வண்ணக் கணவிட்டுக் கொண்டிருந்த பவனேந்திரன் இப்போது போதாத குறைக்கு கிடைத்த இடைவெளியில் மதுவை வேறு அருந்திவிட்டு போதை ஏற வந்திருப்பதால்...

"நானே அந்த சின்ன உரசலுக்கே சுதாரிச்சு தப்பிச்சு போன பூங்குயில எப்போதடா ஆட்கொள்வோம் பரபரப்பில இருக்கேன்...யாரிவன் நந்தியாட்டம் அவனை ஓரம் கட்டி போக சொல்லுடா"....விரததாபத்தில் திமிராய் சொல்லிவிட்டிருக்க

தலையில் அடித்துக் கொண்ட அந்த டிரைவர் ‌

"மன்னிச்சிடுங்க ஸ்சார்" வேந்தனுக்கு தன் முதளாலி சார்பில் தானே மன்னிப்பு கேட்டவன் வண்டியை முன்னெடுத்து சென்றுவிடுகிறான்...

இது நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே அங்கே நர்முகிலினியை அடைத்து வைத்திருந்த இடத்தினில் நின்ற இருவரில் சற்று புளுக்கமாய் இருக்கிறது என்று அந்த கடையின் பின் புற ஜன்னலை திறந்துவிட்டு நின்றான் ஒருவன் பெயர் மணி...

"ஏய் ...பொண்ணு சும்மா அழுது புலம்பி ஆங்க இங்கனு ஓடி ஆர்பாட்டம் பன்ற வேலையெல்லாம் வச்சுக்காத... எங்க அடியோட ஐயாக்கூட சேர்த்து உன்‌ உடம்பை புண்ணாக்காம ஒத்துழைச்சீனா உனக்கு தான் நல்லது"

அவளுக்கருகில் நின்ற தடியன் பல்லான் அவளை எச்சரிக்க அப்படி பேசிய நாக்கினை துண்ணடித் தெறியும் வெறியே எழுந்தது‌...செய்யும் வழியின்றி அதையும் அவள் கண்ணீரில் கழித்திருந்த வேலையில் தான்

திறக்கபட்ட ஜன்னல் அருகே இருந்த வில்வ மறத்திலிருந்து ஓர்‌ பாம்பு கிளைதாவுகையில் தவறி ஜன்னலருகே விழுந்தது அப்போது அதனோடு சாய்ந்து ன சிகரட்டை பத்த வைத்தபடி நின்றிருந்த அடியால் அவனை அது கொத்தி பதம் பார்த்துவிட

"ஸ்..ஆஆஆஆஆ...." அதிர்ச்சியில் அலறல் போட்டவனின் கையிலிருந்த சிகரெட்டும் தீக்குச்சியும் சிதறி வில அந்த பாம்பும் முழுதாக உள்ளேயே வந்து விழுந்தது.

"டேய் மணி ஏண்டா கத்துர "... பல்லன் அவனை பாத்தூ சிடுசிடுத்த கடுப்பில்...."நாகபாம்பு கடிச்சா கத்தாம தூள்ளி விளையாடவாட சொல்லுறே" முதலை விட இப்போது தான் அவன் கூட கத்திவைத்தான்...

"கபோதி பயலே ஜன்னலை திறந்து பாம்பை உள்ளே விட்டதும் இல்லாம .. சத்தம் போட்டு ஊரை கூட்டுறியே கையில் கிடைத்த பொருளை அவன் மேல வீசி எறிந்து கேவலமாய் தீட்டியபடி நிலத்தில் விழுந்த பாம்பை பிடிக்க முயற்சிக்க ...

அந்த மணி கையிலிருந்து விழுந்த சிகரட்டிலும் தீக்குச்சியிலும் இருந்த தீப்பொறி அங்கே சுற்றியிருந்த இளவம் பஞ்சு மூட்டைகளிலும் பட்டு பற்றி எறிய தொடங்க ஆரம்பித்து ஜகஜோதியாய் செவ்வனே தன் வேலையை செய்து...

"அறிவு கெட்ட பேமாணி மூளையை என்ன ஆடமானம் வச்சிட்டு வந்து தொலைஞ்சியா .... பஞ்சுக்கடைக்குள்ள சிகரெட் புடிச்சு தொலைச்சிருக்க"....மணியினை மீண்டும் வய்து கொண்டிருந்த அந்த‌ பல்லனை கண்டு

"எப்போ பார்த்தாலும் என்னை திட்டுறதையெ வேலையை பாப்பா இப்போ தப்பிச்சு போற வழியை பாப்போம் வாடா" மணி பாவாமாய் அலறினான்...

அவர்கள் பதற்றத்தில் நர்முகிலினியின் கைகால் கட்டை கலற்ற முயற்சித்து அறைகுறையில் விட்விட்டனர் எரியும் அந்த கடைக்குள் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டிய தேவை அதிகரித்ததும்..

அப்போது தப்பித்து ஓட முனைந்த அவர்களில் ஒருவனான மணி ஏற்கனவே விச பாம்பு கடியினால் தளர்ந்திருந்ததாலோ என்னமோ வசமாக நெறுப்பு எறிந்து கொண்டிருந்த பக்கத்தில் அவனது காலை இடறிவிட்டு தள்ளியிருந்தாள் நர்முகிலினி.

ஆத்திரம் அறிவற்றது, விவேகத்துடன் கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரமாம் அது மெல்ல அவளுள் துளிர்விட்ட வேகத்தில் அறைகுறையாய் அவிழ்திருந்த தன் கால்கட்டை கட்டிய கைகளில் மூலம் விடுத்தபடி அவள் எழவும்

"ஏய் அவனை ஏண்டி தள்ளிவிட்ட"
கொதித்தெழிந்த அந்த பல்லனோ வெளியேற முன்பு இப்படி செய்த அவளை அடித்து காயபடுத்தி கூந்தல் முடியை கோபத்தகொடு கொத்தாக பற்றி இழுத்துக் கொண்டு நெறுப்பில் தள்ளி விட்டு போக எத்தனித்தான்

கேடு நினைப்பவனுக்கே கேடு தின் விளையும் என்பதிற்கினங்க அவளுக்கு அவன் பேசிய விஷப்பேச்சுகளுக்கு அந்த நாகப்பாம்பு தன் மேல் பட எத்தனித்த அவனது கால்களை சுற்றி வலைத்து பதம் பார்க்க அவனையும் எட்டித் தள்விட்டு பாம்பிடமிருந்து வெகு சிரத்தையாய் கட்டபட்ட கைகளை விடுவித்த படி தீயிலும் பாம்பிலும் சிக்காது வெளியே நர்முகிலினி தப்பித்து ஓடிவந்து விடுகிறால்

"பாஸ் அங்க பாரூங்க அங்க நம்ம கடை தீப்பத்தி எறியிது"... இவை நடந்து முடிந்திருந்த நேரம் காரில் வந்து சேர்ந்த பவனேந்திரனுக்கு அந்த டிரைவர் சொல்ல ...‌ பற்றியிருந்த போதை எல்லாம் பக்கென்று இறங்க

"டேய் அப்போ அவனுங்களுக்கும் அந்த பொண்ணும் என்னடா ஆயிறுக்கும்" அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அலறலாய் எரியும் அந்த இருவரின்‌ சப்தம் கேட்க அங்கிருந்து ஓடிய‌ நர்முகிலினியை கண்டு கொண்ட பவனேந்திரன்.."அவ தப்பிச்சுட்டு அவனுகளை மாட்டிவிட்டுட்டா நீ போய் பக்கத்தில இருக்க ஆளுங்களை துணைக்கு கூட்டியா இவ வெளிய போய் ‌ உளறினா நம்ம சங்கதி மொத்தமும் நாரிடும் "...

தப்பித்த பின்னும் அவளுக்கு விடுதலை இல்லை போலும்

"ஏய் எங்கடி ஓடுற நில்லு...."வண்டியிலிருந்து இறங்கி சுற்றியிருந்த முற்செடி நிறைந்த கரடு முறடான‌ பகுதியிற்குள் வில்லத்தனமாய் தன்னை துரத்திக் கொண்டு வந்த பவநேந்திரனை கண்டு மீண்டும் தன்னை காத்துக் கொள்ள வேகமெடுத்து ஓடிட அவள் உடலில் இருந்த சக்தி அதற்கு இடம் கொடுக்கவில்லை போலும் அவளது சுடிதார் நுனியை எட்டி பிடித்து அந்த கயவன் அதனை கிழித்தபடி பற்ற ஆரம்பித்ததும் இனி இங்கிருந்து தன்னால் ஓட முடியாது பிரச்சினையை கண்டு ஓடி ஓடி அவள் மனம் சோர்ந்து தைரியம் இழந்தது தான் மிச்சம் இனி ஓடிப் பயனில்லை அவனிடமிருந்து தன் மானமும் கற்பும் பறிக்கபடுவது நிறுத்தபட வேண்டும் நினைத்தவளுக்கு ரெண்டே ரெண்டு தீர்வு தான்,

ஒன்று;

அவள் மரணித்து மண்ணில் வீழ்வது உயிர் போன பின் அவன் பிணந்தின்னி கழுகாய் அவ் உடல் தன்னை நெறுங்கினாலும் அதை பார்ப்பதற்கு அவளிருக்க போவதில்லை

மற்றொன்று;

சேயுக்கு பிறப்புக் கொடுக்கும் மாதவர் தமக்கே தனித்துள்ள உள்ள வலிமையை படித்து தேர்ந்தவள் தன் செயலியினில் அதை மீட்டெடுத்து அவனை மண்ணில் வீழ்த்த வேண்டும்.

கிழிந்த அவளின் ஆடை காற்றிலே ஆட கசிந்த அவளின் ரத்தம் கதிரவன் வெம்மையில் எறிந்திட ஓடிய தன் கால்களை முன்பின்னுமாய் நிலத்தினில் ஊன்றி ஓர் திர்வு எடுத்துக்க கொண்டதன் விளைவாய் நிமிர்ந்து பார்த்தாள் அந்த பவநேந்திரனை ...

கண்ணியர் அழுகையிலே நிறைந்த காதும் , மான் விழிகளிலே தென்படும் மிறட்சியின் கண்ணீர் துளிகளிலும் கலி கொண்டு ஆடியவன்...

முதன் முதலென ரௌத்திரம் பேசிய பெண்ணவளின் கொளுத்திடும் பார்வையினில் சில நொடி ஸ்தம்பித்து நின்றான்..

தன் மேல் அழுத்தமாய் படற‌ வந்த அந்த கொடியவனது கைளை தட்டி தன் பலங் கொண்ட மட்டும் கால்களால் அவனை எட்டி உதைந்து கீழே தள்ளி விழுத்திய நர்முகிலினியின் உள்ளே விழுத்து எழுந்ததால் அவளின் ஆழ்மனதில் உறைந்திருந்த போராளிப்பெண்.

கணப்பொழுது தவிர்க்காது அங்கே தரையில் கிடந்த கற் பாறையை அவன் மண்டையிலே ஓங்கி இடியென இறங்கி மீண்டும் மீண்டும்‌ ராட்ஷச தனமாய் அவனை தாக்க ஆரம்பித்தவலை

கண்டு முதல் முதலாய் பவனேந்திரன் கதறினான் நிலைகுலைந்து உயிரின் நொடிகளை உணர்ந்த சில நொடிகளும்

அந்த பவனேந்திரனின் அந்த ரத்தம் மண்ணில் சேர்ந்து உயிர் விண்ணை எட்டும் மட்டும் அவளின் உக்கிரம் தீரவில்லை....

**********
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்னங்க சொல்றீங்க ‌‌..... நர்முகிலினி இன்னைக்கு காலேஜ் வரலையா".... அவளுடைய காலேஜ் மொத்தமும் அவளை பற்றி கேட்டுப் பாத்து தேடியாகிவிட்டது மதியம் தாண்டிய வேலையும்

"இப்படி காலேஜுக்கும் போகாமா வீட்டுக்கும் போகாமா அவ எங்க போயிருப்பா".. கவலையாய்‌ யோசித்திருந்தபடி வாசுகியில் வணிக கல்லூரியின் வெளிப்புறமாய் அவள் வரவுக்காய் காத்திருந்த வேந்தனை கண்டு புருவம் சுளித்து "இவர் ஏன் என்னை கூப்பிட்டு அழைச்சார்" என்றபடி அங்கு வந்து சேர்ந்த வாசுகி...

"ஸ்சார் என்னை கூப்பிட்டிருந்தீங்களா"..என்க

நெற்றியில் யோசனையாய் கைவைத்தபடி நின்றிருந்தவன்....

"ஆமாங்க......உங்க தோழி நர்முகிலினி எங்க போய்ருக்கானு‌ ஏதும் உங்களுக்கு சொல்லிட்டு‌‌ போனாங்களா அவங்க உங்க வீட்டிலயும் இல்ல காலேஜுலயும் இல்லை ".....எடுத்த எடுப்பிலேயே இப்படி ஆரம்பித்தவனை ஒருவித அதிர்வோடு பார்த்த வாசுகி..

"பிளீஸ்...சொல்லுங்க"..

"அவளுக்கு நீங்க யார் ஸ்சார்?...என்றவள் அந்த கண்களில் வெளிபட்ட அலைப்புறுதலையும் பதற்றத்தையும் கண்டு என்ன‌ நினைத்தாளோ

"அவளை பாட விசியமா பவனேந்திரன் ஸ்சார் பாக்க வர சொல்லிருந்தாருனு போக இருக்கிறதா நேத்து சொன்னா காலைல சீக்கிரமா நான் காலேஜுக்கு வந்தால அவ கிளம்ப லேட்டாகும்னு எங் கூட இன்னைக்கு கலம்பலை"என்கவும்...

அவள் கேட்ட பந்தத்திற்கு பதிளலியாது

"எந்த இடத்திற்கு வர சொன்னாங்கனு போனா?"

வாசுகி சொன்ன இடத்தில் தன் பசங்களை தேட விட்டவனுக்கு பதிலாய்,

"அண்ணாத்த அப்படி அந்தாலோட பிறைவட் கிளாஸஸ் ஏதும் இன்னைக்கு நடந்ததுக்கு தடமேயில்ல என்றார்கள் அவர்கள்..."

பவனேந்திரனின் வீட்டு விலாசத்தை தேடி போயிருந்த போது அங்கு அவன் இல்லாது போக கொஞ்சம் நகரத்துக்கு வெளிப்புறமாய் இருந்த வீட்டு பக்கம் அவனை தேடிக் கொண்டு ஆட்களோடு போய் இருந்த வேந்தன் தன் மனைவி சம்பந்தபட்ட விடயம் என்பதால் எந்த போலிஸ் உதவியையும் உள்ளே எடுக்காது தனியே கலமிறங்கினான்.

"நீங்க கேட்டிங்களே ஃப்ரொப்பசர் பவனேந்திரனுக்கு சொந்தமான இன்னொரு வீடு அது தான்...அதோ அங்க நிக்குறது தான் அவரோட டிரைவர் முத்து அவனை கேட்டா அவர் இப்போ எங்க போயிருப்பாருனு சொல்வான்" தகவல் ஆழித்தவருக்கு நன்றி சொல்லிவிட்டு கலம்பிய முத்துவை வலைத்துபிடித்த போது தான் இதயமே துடிப்பு நிறுத்தம் செய்யும் அளவுக்கு அவன் மூலியமாய் மனைவிக்கு நடக்க இருந்த அநியாங்கள் தெரிந்தது...

இவ்வளவு நாளாய் யாரூக்காக வேந்தன் அடிதடிகளை விட்டிருந்தானோ‌ அவளுக்காகவே ... அந்த முத்துவை சாவடி அடித்தபடி

"தரங்கெட்ட நாய்களே.....ஏண்டா இப்படி பன்ன நினைச்சீங்க இப்போ எங்கடா என் நர்மி ....எங்கடா அந்த ** பய"....

வலியில் துடித்தபடி அவங்களை அந்தாலு துரத்திட்டு அந்த ரோட்டுக்கு அங்கால இருக்க வெட்ட வெளி பக்கமா ஓடினான் ...நான் நெறுப்புக்குள்ள எரிஞ்ச மணியையும் பல்லாவையும் காப்பாத்தி ஆட்களை கூட்டிட்டு வர இங்க வந்திட்டேன்....

"அண்ணா இவனை எங்க கிட்ட விடுங்க நாங்க பாத்துக்குறோம்...இப்போ அண்ணியை தேடுவோம்" ருத்திர மூர்தியானவனை கட்டுபடுத்தி அவன் கூட இருந்தவர்கள் முத்து சொன்ன இடத்திற்கு போய் சேர்ந்ததும் அந்த பிரதேசத்தை அலசி ஆராய்ந்தனர் விடயம் குணநீலகண்டனின் காதுகளுக்கு எட்டிவிட அவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்....

"நர்மீமா....அம்மலூ....அண்ணி"... அந்த வெட்டவெளி முழுக்க அவளது பெயர் பலவிதமாய் உச்சரிக்கபட்டு அழைக்கபட்டது...

சுற்றி எதிரொலித்த சப்தங்கள் எதுவும் அவளது காதினில் எதிரோளிக்கவில்லை அங்கிருந்த மறத்தோடு ஓட்டிச் சாய்ந்து கால்களை கட்டிக் கொண்டு ஒடுங்கியிருந்தவளது இதயத்தின் துடிப்பின் வேகசராசரி சீராகவில்லை உஷ்னமான மூச்சுக்குறைய வில்லை சிதைந்து கிடந்தவனின் உடலை வெறித்த கண்களோடு ஒருவித இறுக்கத்தோடு இருந்தவளது கண்ணீர் சுரப்பிகளிலிருந்து சிறுதுளி நீர் கூட வெளியேறவில்லை அதன் பின்னர்...

"அம்மலூ..என் அம்மலூ" சிலையாய் சமைந்திருந்தவளது தோற்றத்தில் ஆடவன் அவன் கண்கள் அவளுக்காக கண்ணீர் துளிகளை நனைத்தது ...

அவள் மட்டுமே மனம் முழுக்க நிறைந்திருந்ததாலோ என்னமோ விழுந்து அடித்துக் கொண்டு தன்னவளை நோக்கி ஓடிய வேந்தன் கீழே கிடந்த பவநேந்திரனின் உடலில் கால் தடக்குப் பட சரியாய் அவளினை எதிர்நோக்கி குப்பர விழு அவள் கால்களை கட்டிக் கொண்டு முகத்தை குறுக்கி வைத்திருந்தவள்

ஏற்கனவே ரத்தத்தில் முக்குளித்த கல்லினில் அடிபட்டு ரத்த காயத்தோடு தன் முகத்துக்கு நேரே எழுந்த தன் கணவனை கண்ட நொடி தலையை பிடித்துக் கொண்டு அறண்டு கத்தினாலே ஒரு கத்து அவ்வளவு நேரமாய் அடக்கிவைத்த பயம்,தனிமை,தவிப்பு பதற்றம் இது எல்லாம் வெடித்தெழுந்து இக்கத்தலினால் மறங்களிலிருந்த பறவைகள் எல்லாம் அந்த ஆவேசத்தில் சிறகடித்து பயந்து சென்றிருந்தன

வேந்தனது கண்கள் கீழே கிடந்த பவனேந்திரனை அப்போது தான் கண்டு கொண்டது மெல்லிய மனம் படைத்த தன்னவலையே கொலை செய்ய வைத்திருக்கிறான் என்றால் எப்பேர் பட்ட கொடும்பாவத்தை அவன் மனைவிக்கு இழைக்க விளைந்திருக்க வேண்டும்......கோபம் தலைக்கேறியது செத்த பாம்பை எத்தின தடவை தான் சாகடிக்க முடியும்...

கத்திய மனைவியின் சப்தத்தில் திரும்பி அவளை நோக்கினால் முகம் கைகால்கள் என்று கீழேவிழுந்து அடிபட்ட காயங்களும் , அடிவாங்கி கன்றிய மற்றும் கீறல் காயங்களோடு நலுங்கி கிழிந்த உடையும், கலைந்த கேசமுமாய் உயிர்பிழந்த சித்திரமாய் இருந்தவளை கண்டு நரம்பிழந்த வீணையானவன் தன் சேர்டை கலற்றி அவளை சுற்றி போர்த்தி விட்டவன் இறும்பாய் முறுக்கேறியிருந்த அவளது உடலின் தன்மையை உணர்ந்த போதோ

உடல் நடுங்கியது, நெஞ்செல்லாம் புயல்வீசிட இதற்கு காரணமானவனை அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை என்ற தவிப்பும் தன் மனைவியை காக்கும் வகையற்று போனெனே என்று அவனும் அவளுக்கினையான துன்பத்தை அந்நேரம் மனதில் சுமந்திட.

"அம்மலூ அவளது கன்னத்தை அவன் கைகளில் ஏந்தி தலையினை ஆதுர்யமாய் வருடியவன் ... உன் வேந்தன் வந்திருக்கேன் ஏதாச்சும் பேசிடி நீ இப்படி இருக்கிறதை பாத்தா பயமாருக்கு"

அவர்களது சப்தத்தில் அங்கே அவனோடு தேடுதலில் ஈடுபட்டவர்களோடு குணநீலகண்டனும் சம்பவ இடத்துக்கு விறைந்து வந்திட....

அவனது குரலிலும் ஸ்பரிசத்திலும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் நிலைக்கு திரும்பி கொண்டிருந்தவள்...

வந்த ஆடவர்களை கண்டதும் காலையில் கடந்துவந்த பிரச்சனைகள் மீண்டும் அவளது கண்களின் படமாய் விரிய கணவனை கூட சட்டை செய்யாமல் ஏதோ பூதத்தை கண்ட குழந்தை போல கண்முன் தெறியாது எழுந்து ஓட ஆரம்பித்தால்...

அவள் தன் கர்ப்பை துணிந்து நின்று காப்பாத்திவிட்டால்.... ஆனால் மனதளவில் மென்மையான அவளால் தனக்கு நடக்க நேர்ந்த அனீதியினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

நிகழும்...
 
Status
Not open for further replies.
Top