All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிகழ்நொடி கதை திரி

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
||வணக்கம் தோழமைகளே உங்கள் அணைவருக்கரும் என் இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடம் அணைவருக்கும் இனியதாகட்டும்||

நிகழ்நொடி
தகிக்கும் பெண்மை தீயில் ஜெனித்தது
அவன் மீதான அவளின் காதல்

அவள் ராமனின் சீதையில்லை
கண்ணனின் ராதையுமல்ல
குருதியின் ஊற்றில் ராவணியாய்
மலர்ந்தவள் நிகழ்த்தும் நொடிகளில்
தொடருமா அவள் மீதான அவனின் காதல்

நிகழ்-01

1555222239816.jpg

" தீதும் நன்றும் பிறர்தர வாரா"
1982 நவம்பர் 15 தீபாவளி அன்று விடிகாலை நான்கு மணியை எட்டும் நேரமிருக்கும்.. சித்திரங்குடி ஊரின் எல்லையிலிருந்த நெர்சிங் ஹோமில் அந்தப் பத்துக்குபத்து ரூமில் உயிரை கையில் பிடித்தபடி 23 மூன்றே வயதான நர்முகிலினி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்..

"ஏய் !!!... இந்தாம்மா உம் பிரச்சணை தானிப்ப என்ன?... உம் புள்ளையை பிரசவிக்கிறதுக்கு உனக்கெதுக்கு இத்தாம் பெரிய வீம்பு?"

3 மணி நேரத்துக்கு முன் அக்கம் பக்கத்து வீட்டுக்காரரின் உதவியால் பிரசவ வலியில் இங்கே கொண்டு வந்து சேர்கப்பட்ட நர்முகிலினிக்கு இப்போது மொத்தமாக குழந்தை வெளியே வர ஆயத்தமாயிருக்கும் தருணத்தில் ஆரோக்கியமான தன் குழந்துயை பிரசிவிக்காது அது தரும் மரணவலியையும் பல்லை கடித்து கொண்டு தாங்கி மருத்துவர்களையும் படித்துக் கொண்டிருந்தாள்.

"இவ்ளோ கேக்குறனே இந்தம்மா எதுக்காவது அசங்குதா பாரூ" நர்ஸ் பயங்கரமாய் எரிச்சல் பட்டு முகத்தை சுளிக்க.

"நர்ஸ் எனக்கு என்னமோ இப்படியே போன இது சரிபடுபட்டு வரும் என்று தோனை போய் வெளலீ இவங்க சொந்தக்காரங்க யாராச்சும் நின்னா அழைச்சிட்டு வந்து இவங்களை வழி படுத்த சொல்லுங்க ...இல்லையா இடத்தை காலி பன்றதுக்கு என்ன பன்னுமோ அதை பன்னுங்க" பொருமை இழந்த அந்த மருத்துவமனையின் குழந்தை பிரசவ மருத்துவர் காரசாரமாய் கூறிவிட

"டாக்டர்...அதுவந்து!!! இந்தம்மா வாசுகி மெடத்தோட பிரண்ட்டு
என்று நர்ஸ் தயங்கி தயங்கி எதோ கூறவரவும் அதை கையமர்த்தி தடுத்த பிரபாகரனோ


நெற்றியை அழுந்த தேய்த்தபடி..."என் பொண்டாட்டிகிட்ட நா சொல்லிக்குறேன்; இவங்க புடிக்குற வீம்புக்கு இவங்களுக்கோ குழந்தை உயிருக்கோ முன்னபின்னே எதுவுமானாளும் அதுக்கும் நாம தானே பதில் சொல்லியாகனும்"...

"நீங்க போய் நான் சொன்னதை செய்யுங்க"...என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் போதே


"என்னாச்சுங்க எதுக்காக இப்படி எல்லாம் சொல்றீங்க பிரசவலியில அவ புருஷன் கூடயில்லாதால தான் அவ இப்படி எல்லாம் நடந்திட்டிருக்கா பாவம் அவளுக்கு அவர் மட்டும் தானே; ஆனா நீங்க இப்படி பொருமையில்லாம நடந்துக்குவீங்கனு நான் கொஞ்சம் கூட நினைக்கலை" தன் தோழி படுத்தும் பாட்டை அங்கிருந்த சிலர் மூலியமாய் அறிந்து மருத்துவ மணைக்கு விரைந்து வந்திருந்த வாசுகி அந்த ஹாஸ்பிட்டலுக்கே சொந்தக்காரி அப்படியிருக்க அவளின் இந்த கோபத்தில் அங்கிருந்த செவிலியர்கள் டென்சனாய் கைகளை செய்வதறியாது பிசைய பிரபாகரனோ

"அதுக்கில்ல வசு இவங்க தன்னோட சேர்த்து தன் குழந்தையின் உயிரையும் எடுத்திட்டிருக்காங்க....ரெண்டு உசிரை கையாலாகாத தனமாய் காவு கொடுக்க வேண்டி வந்திருமேனு ஆதங்கமாருக்கு" என்று மனதில் மண்டிய எரிச்சலை மனதோடே அடக்கி கொண்டு மடக்கமாய் பேசிய பிரபாகரனால் மனைவியை எதிர்த்து தன்னிச்சையாய் முடிவு எடுக்க மூடியாதே அவனது வளமான எதிர்காலம் அவளாகிவிட்டாலே.

"நர்மி ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குற உனக்கு என்ன அண்ணா வராதது தானே பிரச்சணை...அவரு எங்கிருந்தாலும் நானே தேடி கூட்டிட்டு வாரேன் நீ தாமதிக்க தாமதிக்க உங் குழந்தையை நீயே படுத்துற மாதிறி ஆகிடும் சொன்னா கேலு"

நர்முகிலினி அழுத்தமும் பிடிவாதமும் நிறைந்தவள் தான் ஆனால் கண்டதுக்கு என்று இல்லாமல் ஞாயமான காரணத்துக்காய் தான் அது மேலோங்கும் ஆனால் இப்போது அதை பெரிதுபடுத்தும் நேரமல்லவே தோழியின் உள் வலியறியாது உடல் வலியை அறிந்த வாசுகியை வெறுமையாய் பார்த்த படி முடியாது என்று தலையை ஆட்டியபடி

"என்னை விட்டுறு பீளிஸ் டீ" என்ற வார்தையை மட்டும் வேதனை தோய்ந்த குரலில் சொன்ன நர்முகிலினியை கண்டு அவளுக்கு ஏடாகூடமாய் எதுவும் நடந்தைவிடக் கூடாது என்று மனதுக்குள் பயந்து கொண்டிருந்த வாசுகி

"ஓஹோ அவ்வளோ அழுத்தம் ல உனக்கு சரி என் முடிவையும் கேலு நீ விருப்பட்டாலும் விருப்பப்படலனாலும் குழந்தையை பிரசவிச்சுத்தானாகனும் வேந்தன் அண்ணா எங்கிருந்தாலும் இங்க நிட்க வைக்குறேன், ஆனா மாட்டேன்னு நீ இப்படியே பிடிவாதம் பிடிப்பியா இருந்தா என் பொணத்தை தான் பாப்ப" என்று அங்கிருந்த கூரான ஆயுதத்தால் தன் கையை கிழித்துக் கொள்ள அங்கிருந்த அணைவரும் ஒரு கணம் அதிரச்சியாகி மறு கணம் அந்த காயத்துக்கு மருந்திட போக பிரபாகரன் முதற் கொண்டு அணைவரையும் தடுத்து நிறுத்திய வாசுகி தோழியை மட்டும் அழுத்தமாய் சம்மதத்துக்காய் பார்த்து கொண்டிருந்தால்.

அந்த நிமிடத்தில் தன் காதல் கணவன் கூட அவளின் நினைவில் இல்லை முழுக்க வியாபத்திருந்தது தன் தோழி மற்றும் அவள் வாழ்க்கை மீதான அக்கறையில் தன் வாழ்வையும் பணையம் வைக்க துணிந்த வாசுகியின் நட்பு எத்தனைக்கு பேருக்கு கிடைத்துவிடும் அந்த வேதனையையும் தாண்டி உள்ளத்தில் தன்னுடை நாட்பு நாட்டிய கர்வக் கொடியை மனதில் சேமித்தபடி துணிந்தே சாவுக்குளிக்குள் போக தன் சம்மதத்தை தெரிவித்தால் நர்முகிலினி.

##########################################################

2003 அக்டோபர் 23 திபாவளி

""ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.....


நடந்ததை எண்ணி கவலைப்பட்டால்
அவன் மடையன்,
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால்
அவன் மடையன்,
ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால்
அவன் மூடன்,
போடா வருவது வரட்டும் என்பவனே
நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே,
அட இன்றும் இல்லை நாளை இல்லை
இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும்
முடிவும் இல்லை,
அட இன்றும் இல்லை நாளை இல்லை
இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும்
முடிவும் இல்லை ஹோஹோஹோ"".....


அந்த புளுதிபறக்கும் நகரத்தின் பிரதான பஸ்டான்ட் அருகில் காலை எழுமணிக்கே பாடலை உறக்க ஒலிக்கவிடபடுடிருந்த சின்னஞ்சிறு ரோட்டோர டீக்கடையில் எழுபது வயது மதிக்கத்தக்க அப்துல் ஜலீல் பாய் தன் கரகரப்பான குறலில் எட்டு கட்டையில் பாடல் வரிகளை உற்சாகத்தோடு சத்தமாய் பாடியபடி கடைக்கு வரும் கஷ்டமர்களுக்காக டீ ஆத்தி கொண்டிருந்தார்.

"அச்சோ பசில சிறுகுடலை பெருகுடல் திண்ணுதே" வயிற்றை தடவி கொண்டிருந்த மோஜோ (மோகனஜோதியப்பன்)

"யோவ் இருக்க பசிக்கு ஒரு சட்டி சோறு கிடைக்க வழீலனு அவனவனிங்க நொந்திட்டிறுக்க காலைலயே ஏன்யா மனுசனை சோதிக்கிற முதல்ல உன் சத்தத்தையும் பாட்டு சத்தத்தையும் (கு)கொறைய்யா காது கிழியிது"...என்று அந்த டீக்கடைகார முதியவரிடம் எரிச்சலாய் கடுகடுத்தவனுக்கு மாறாக அவரோ

"ஆஆங்...என்னாது வட வேணூமா ஆ அதுக்கென்ன இந்தா எடுத்துக்கோ".... என்று சுட்டு வைத்திருந்த வடையொன்றை அவன் கைகளில் திணிக்கவும் தான்

விலுக்கென்று நிமிந்த மோஜோ "அட ஜலீல் பாய் ஒனக்கு ஸ்பீக்கரவுட்டோஹஇது தெரியாம நா வேற ரொம்ப நேரமா கத்திட்டே இருந்திருக்கேனே" என்ற எண்ணத்தில் முழித்தாலும் கையில் கிடந்த வடையை தன் வாயுக்குள் தள்ள அவனது கை துடித்தாலும்

"பாய் இப்போ என் கிட்ட சேஞ்ச் இல்ல என் மச்சான் வந்ததும் தரவா"

"என்னதூ காசு இல்லையா!!!!!"

"அட கெழவா தப்பா கேட்டாலும் சரியா சொல்றானே" என்று திருதிரு என்று முழித்த மோஜோ வடையை தன்னை முளியை கண்டு முறைத்த பாயிடம் திரும்பி கொடுத்துவிட்டு

தளா கொடுமையில் அங்கிருந்த பைப்பில் சுருங்கி வறண்டு தூசி படர்ந்து கிடந்த தன் முகத்தினை அலசுவதோடு மட்டுமல்லாது தன் வயிற்று பசியை கட்டுபடுத்த நீரையும் வயிற்றுக்குள் மடக்குமடக்கு என்று நிரப்பி கொண்டான்

"யாரூப்பா தம்பி நீ உன்னை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு ஆனா ஞாபகம் தான் வர மாட்டேங்கிது"

பெரியவர் ஒருவர் அக்கிலில் மடித்து வைத்த திருந்த பத்திரிகையை எடுத்து பெஞ்சில் அப்படியுமிப்படிமாய் ரெண்டு தடவை தூசு தட்டியபடி அமர்ந்து தன் இடது கையால் வெள்ளை முறுக்கு மீசையை முறுக்கிக் கொண்டு யோசிக்க

"என்னைய பாத்திருக்கிறாருனா அப்ப யாரோ தெரிஞ்சவனாத்தானிருக்கும் காலைல டிபன் இல்ல டீக்குனாலும் உசார் பன்னிட வேண்டியது தான்" என்று ஆர்வ கோலாறாய்

அவர் முகத்தை அப்போது தான் நன்கு கவணித்தவன் இவர் நம்ம பழைய வாடனாச்சே என்று பின்னோக்கி யோசித்தவனுக்கு

சின்ன வயசில் தன்னையும் தன் நண்பனையும் அடித்ததுக்கு பழிவாங்கலாய் அவருக்கு எதிராய் மரத்திலிருந்து கல்லெரிந்தது நெற்றியை பிளந்ததில் ஆரம்பித்து அவர் தங்களை படுத்தியது அதற்கு மீண்டும் தாங்கள் செய்த பழிக்கு பழி ரத்ததுக்கு ரத்தம் போன்ற சம்பவங்குமு நினைவுக்கு வர...

"ஓ ஸ்சோரி ஓல்ட் மேன் நேத்து தான் நான் டெல்லிலருந்து வந்திருக்கன் என்றவனோ" சந்தேகமாய் தன்னை நோக்கி கொண்டிருந்த அந்த வாடனின் பார்வையில் ஓட்டமும் நடையுமாய்
அங்கிருந்து நகர்ந்தவனுக்கு பின்னாலயே மோஜோ என்ற தன் பெயரை கண்டு பிடித்து கூப்பிட்டது கேட்டாலும் நின்றால் இவனென்ன ஏழரை கூட்டு வானோ என்று நினைத்தபடி வந்தவனுக்கு அப்போது தான்
தன் நண்பனின் நினைவு வந்தது


"இந்தா வேலை எதோ எடுத்துட்டேனு சொல்லிட்டு போனவனெங்க ஆளையே காணும் எங்க போய் தொலைஞ்சானோ"

************
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்னும் கொஞ்ச நேரத்துல பூஜைக்கு கோயில்ல நின்னாகனும் இந்த நேரத்துக்குள்ள இந்த வணி எங்க போய் தொலைஞ்சாலோ"

"இனியா!!!!" ரூமைக் நோக்கி குரல் கொடுத்துவிட்டு வாசலையே கவலையாய் பாத்து கொண்டிருந்த வாசுகியை நோக்கி

"என்னம்மா" என்றபடி கத்தி கொண்டு வந்த பதின் மூன்று வயதேயான இனியன் பூஜை ரூமில் தன் சப்தத்தில் அமைதியாய் தியாணித்து கொண்டிருந்த தகப்பன் கோபமாய் அவனை கண்டு முறைக்கவும்,

"ஸ்சாரிப்பா"என்றவன் விலுக்கென்று ஓடிவந்து கீழே மூச்சு வாங்கியவன் "என்னம்மா நான்தான் ஏட்கனவே களம்புறதுக்கு தயாரத்தானே நிக்குறன் அப்புறமும் ஏன் கூப்பிட்டே இருக்க" என்று படபடத்தவனது வாயில் ஒரு போடு போட்ட வாசுகி

"டேய் நான் உனக்கு எதவாது இப்போ சொன்னனா; உன் அக்கா எங்கடா போகும் போது எதாவது சொல்லிட்டு போனாலா கோவில்ல ஏற்பாட்டு வேலையிருக்கு எங்க கூட வானு கூப்பிட்டப்பவும் அப்பரமா வரேனு இழுத்து போத்து தூங்கிட்டு தானே இருந்தா இப்போ எங்கடா ஆளையே கானோம்"

"அவளா நீ போனதுக்கப்ரமும் அதே வேலைய தான் அவ பாத்திட்டிருந்தா அப்பா தான் ஆப்பிஸ் ல எதோ ப்பைலாம் ரொம்ப முக்கியமானது அங்கிருக்கவங்க கிட்ட நம்பிக்கையா எடுத்துட்டு வர சொல்ல முடியாது நீ போய் வாங்கிட்டு வானு மணியண்ணாவோட (கார்டிரைவர்) அனுப்பி வச்சாரூ"

"நானொரு வேலை சொய்ய சொன்னா செய்ய துப்பில்லை அப்பா சொன்னோன மட்டும் கலம்பிட்டால அவ வரட்டும்" என்று நொடித்து கொண்டு நின்ற தாயின் கையை இழுத்தவன் அதோ வந்துட்டாமா நாலு வார்த்தை நல்லா கேலு என்று

இனியன் சொன்ன படி "எஞ்சோய் மைடியர் சிஸ்டர்" என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டான் வீட்டினுள் நுழைந்த பதினட்டுவயது பருவமங்கையவளின் மதி முகமோ ஒளியிழந்து சோக கீதம் வாசித்தபடி உள் நுழைய"

"வணி என்னம்மா ஆச்சு என்று வாசுகி அவளின் தலையை ஆதுர்யமாய் தடவியபடி கேட்கவும்"

"ஒன்னுல்லமா என்றவளை தாய் நம்பாமல் தன்னையே உற்று நோக்குவது புரியவும் நம்ம வீட்டுக்கு வர்ர வழீல *** ரோட்டிருக்குல அங்க நேத்து ஒருத்தரை என்கவுன்டர் பன்னினதா காலைல ஹெட்லைன் நீவ்ஸாலாம் போச்சே அந்த
ரோட்டாலோ போகாதேனா இந்த மணியண்னா வேர ரூட் மாத்தினா லேட்டாகும் லேட்டா வந்தா அப்பா திட்டுவாரூனு சொல்ல சொல்ல அதே ரூட்டால கூட்டிவந்திட்டாரூ"


"வணி ரோட்டுனா இந்த மாதிரி ஆயிரமாயிரம் நடக்கத்தான் செய்யும் எல்லாத்துக்கும் நீ பயந்திட்டேருந்த உன் வாழ்கைய நீ சந்தோசமா வாழமுடியாது கண்ணா"

வணி சின்ன வயசுலிருந்தோ ஏனோ மிகவும் சென்சிட்டிவ் பத்திரிகை முதற் கொண்டு வாய் மொழியால் கூட அவள் வன்முறை,கொலை, மரணம் அது சம்மந்தபட்ட கதைகளை சம்பவங்களையோ பார்க்கவோ கேட்கவோ மாட்டாள் ஆரம்பத்தில் சிறியவள் தானே என்று அதை பெரிது படுத்தாமல் விட்டது தப்பாகி போனது என்று இப்போது தாமதமாய் கவலை பட்ட வாசுகியின் முகத்தை கண்டு

"ம்மா கவலைபடாத இந்த பயங்கல்ல இருந்து எப்படியாவது நான் மீண்டிருவன் என்றவள் இதை அப்பாக்கிட்ட குடுத்திடு" என்று பைலை தாயின் கைகளில் திணித்துவிட்டு ரூமுக்குல சென்றவை வாயிலிலேயே மறித்த இனியன்

"உன்னைய நம்ப முடியலையே நீ வேணானு சொல்லி மணி அண்ணன் அந்த பக்கமா கூட்டிட்டு வந்தாராக்கும்...அப்படி லாம் நடந்தா நீ அந்த இடத்துலயே கத்தி கூப்பாடு போட்டிருக்க மாட்ட" கேலியாய் தமக்கையை அளவிட்டவன் மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்த வணி

"டேய் கடுகு சைசுல இருந்திட்டு ஸ்சேர்லாக் வேலை பாக்குறதா நினைப்பா வழிய விடு இல்ல சாய்ந்தரம் நிலத்துல கொளுத்த வேண்டிய பட்டாச உன் டவுஸ்சருக்குள்ள கொளுத்தி போட்டிறுவன்" என்று விட்டு வேகமாய் தன் ரூமுக்குள் நுழைந்து கொண்டு தாப்பாளிட்டுக் கொள்ளவும்"

"இவ பன்னாலும் பன்னுவா அம்மா!!! என்ன இந்த ராட்சசிகிட்டருந்தை காப்பாத்து"

*************

"கடற்கரையோரம் வீழாக் கோலமாய் ஜொலித்த அந்த கோவிலின் வெளிவாசல் வரைக்கும் மிதி வண்டியை தள்ளி கொண்டு போன பொழிலன் விரகு கட்டுக்களை எடுத்துக் கொண்டு கோவிலினுள் போக எத்தனிக்கவும்"

"டேய் தம்பி அங்கேயே நில்லுடா" என்று உள்ளே இருந்து வெளியே ஓடிவந்த குருக்கல் ஒருத்தர்

கசங்கி நலிந்திருந்த அவனது உடைகளையும் உழைத்து கருத்துப் போன தேகத்தையும் வைத்து இருபத்தி ஒரு வயது நிரம்பி நின்ற இளைஞன் அவனை ஒரு மாதிரி பாத்தபடி

"என்னடா தம்பி நீ இங்க புதுசு போல நீ என்னத்தை கொண்டு வந்தாலும் வாசல்லயே எங்களை கூப்பிட்டுத் தரனுமே ஒழிய இந்த உள்ளேலாம் வர்ர வேலை வச்சுக்க கூடாது இந்த கோவில் ரொம்ப சாஷ்திரசம்பிரதாயம் கூடின கோவில்"

"கோவிலுக்குள் ஏன் வர கூடாது....எதுக்கு இப்படி சொல்லாரு இந்த ஐயா" என்று அவனுக்கு அப்போது காரணம் சரியாய் விளங்க வில்லை சொன்ன படி விரகுகட்டுக்களை

ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அவர் தந்த காசை பெற்று கொண்டவன்

காசு தரும் போது அதை நேரடியாய் தராமல் கீழே வைத்து எடுக்க சொன்னதும் தான் நின்ற இடத்திட்கும் அவருக்கும் விரகுகட்டுக்கும் மஞ்சத் தண்ணி தெளித்து உள்ளே செள்வதையும் கண்டு குழம்பி நிற்க அவனது தோளை தட்டிய முதியை என்னத்தம்பி இதுவரைக்கு பாக்காத ஒன்னை பாத்திட்டிருக்க மாதிரி நிக்குற அவங்க பெரியாக்கள் நம்ம நிழல் பட்டாலும் தீட்டுன்னு சொல்லுறவங்க கோவிலுக்குள்ள நீ மறந்தும் கூட போயிடாதப்பா சாமி குத்தமாம்" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட பாட்டியின் குரலில் இருந்தது ஆதங்கமா ஆற்றாமையோ அதில் உள்ள நிதர்சணம் புரிபட

பசிக்களைப்பில் பல தூரம் மிதிவண்டி ஓட்டி வந்ததால் களைத்துப் போய் சோர்வில் தலை கிறுகிறுக்க அங்கு சற்று கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருந்த மரத்தடியில் ஓய்வாக போய் அமர்ந்தவன்

"என்னும் கொஞ்ச நேரத்துல இந்த பட்டாசு பார்சலையும் அந்த அண்ணாச்சி சொன்ன வீட்டுக்கு கொடுத்திட்டா காசு வாங்கிட்டு ராத்திரி சாப்பாடுனாலும் சாப்பிட்டிரலாம்" என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தன் முதுகில் எதோ உறுத்துவது தெரியவும் திரும்பி பார்த்த பொழிலன் அப்போது தான் அதை கவணித்தான் சற்று பழுபட்டிருந்த கோவிலுக்கு சொந்தமான சாமி சிலை சரிந்து கவணிப்பற்று கிடந்தது அதை நிமிர்த்தி கிடையாய் வைத்தவன்.

"என்ன சாமி என்னைத்தான் உள்ள வரக் கூடாது அப்படி சொல்லி வெளீல அனுப்பிட்டாங்கனு பாத்தா உன்னையுமா நான் உள்ள வந்தா உனக்கு தீட்டினாங்களே இப்போ நீ வெளீல என் பக்கத்துல உட்காந்திருக்க பரவால இதுவும் நல்லாத் தானிருக்கு" என்று புண்ணகைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு மறு புரம் அமர்ந்திருந்த வணி...

"ச்சே இந்த வீட்டுல நிம்மதியா என் உணர்வுகளை கூட வெளிகாட்ட முடியலை எப்போ பாத்தாலும் வணி வணி என்னுட்டே " என்று தன் கையிலிருந்த டயரியிலிருந்த பேப்பர்களை கிழித்த வணி அவற்றை மொத்தமாய் பிடித்து சுற்றியபடி "ஸ்சோரி சரண் உங்க மனசுல அந்த பழைய காதலி இருப்பானு தெரியாம உங்க மேல என் ஆசையை வழத்துகிட்டது என் தப்புத்தான் உங்க மேல நான் கொண்ட காதல் எங் கூடவே மறைஞ்சு போகட்டும்"

அந்த பருவ வயதில் தனக்கு பூத்த முதல் காதல் அதுவும் ஒரு தலை காதல் அப்போதே கருகிப் போனதை எண்ணி கண்ணீர் சிந்தியவள் எப்போதும் போல தன் மனதின் கஷ்டம் போக்கு வழியாய் அந்த சரணை பற்றி எழுதிவைத்திருந்த தன் எழுத்துக்களை எல்லாம் எறிக்க ஆரம்பித்தால் அதே போல இனியும் அவனை பற்றி எந்த ஆசைகளும் தன்னுள் எழுந்துவிடக் கூடாது என்று முற்றும் எழுதி அவள் செய்த காரியம் சம்மந்த மே அல்லாமல் வீசியக்காற்றில் அதிகமாய் கொழுந்துவிட்டெரிய படக் கென்று அவளின் சிறு நெருப்பு பொறி சுடவும் மொத்தமாய் கையை விட்டு விட

எக்கிருந்தோ எரிந்து கொண்டிருந்த பேப்பர் அதே நிலையில் அவன் கைகளில் விழுந்து அவன் முழங்கை சர்ட்டில் பட்டு எரிய

"ஆஆ..அம்மா!!!!" எரிச்சலில் கையை ஆட்டிய படி செய்வதறியாமல் அவன் துடிக்கவும் தான் அவள் அவனை கண்டால்

"ஐய்யய்யோ நான் வேணும் என்று செய்யலை" என்று கொளுத்தி வைத்த குச்சியை வீசி விட்டு அவன் மேல் அங்கே கோயில் வாயிலில் உள்ள வைத்திருந்த மஞ்சல் கலந்த நீரை அவசரமாய் அவன் மேல் தீயை அணைத்தவள் அவசரமிகுதியில் தூக்கி எரிந்ததோ வாகாய் அவன் பட்டாசு கூடைக்குள விழுந்து தன் கடமையை படபட என்று வெடிக்க தொடங்கிய பட்டாசுகளில் காட்டியது "

எமளாந்தி கொண்டிருந்த வணியும் பொழிலனும் வெடி சப்தத்தில் பயத்தோடு அடித்துபிடித்து சற்றுத்தூரம் தள்ளி ஓடிவந்து நின்ற படி

"ஏங்க அறிவு இல்லையா உங்களுக்கு முதல்ல எங் கையில ல கொளுத்தி போட்டீங்க அது கூட பரவால்ல இன்னைக்கு ராத்திரி கஷ்டமருக்கு கொடுக்க வேண்டி ய பட்டாசையும் கொளுத்தி போட்டுட்டீங்க இப்போ நான் அண்ணாச்சிட்ட போய் என்ன பதில் சொல்வேன்"

"ஸ்சாரிங்க இந்த பக்கம் இருட்டாருந்ததுல உங்களை கவனிக்கல"

"எதுக்கிப்ப என் கலரைகிண்டல் பன்றீங்க"

"நனொன்னும் அப்படி சொல்லலை உங்க கையில பட்டிருக்க காயத்துக்கு முதல்ல பர்ஸ்டைட் போடனும் அந்த பக்கம் நிக்குற மணி அண்ணேட்ட சொன்னா வந்து என்று தட்டு தடுமாறிய கூப்பிட்டவளை முறைத்தவன்

"அது பரவால விடுங்க என் தீந்து போன பட்டாசுக்கு இப்ப என்ன செய்றது"

"சரியான கூமுட்டையா இருப்பான் போல கையில அவ்ளோ பெரிசா தீப் புண் வந்திருக்கு அதை கவணிப்பான்னா அதை விட்டிட்டு பட்டாசு பட்டாசு என்னுட்டு" பிறந்ததிலிருந்து பணக்கஷ்டமே என்னவென்று தெரியாமல் வளந்த அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும் ஒரு நாள் வாழ்வாதாரத்துக்கு அவன் படும் கஷ்டம்.

அங்கு திடீர் என்று அந்நேரம் கேட்ட பட்டாசு சத்தத்தில் மளமள என்று ஆட்கள் கூடிவிட்டனர் ..

வந்தவர்களோ என்ன ஏது என்று தெரியாமல் ராஜா வீட்டு கண்ணு குட்டியாய் தோற்றமளித்த வணியை விட்டு பொழிலனை பிடித்து அவனேதோ அவளோடு வம்பு பண்ணியதை போல பிரச்சணையை கலப்ப ஆரம்பித்துவிட்டனர் ஒருவனது ஏழ்மை தோற்றம் ஒன்றே அவனை இந்தளவுக்கு மற்றவர்களை வெறுக்கவோ அல்லது பிழையான கணிப்புகளுககு உட்பட வைக்குமோ என்ற கேள்வியை பொழிலன் உணர்ந்து நாள் அன்று

அது அப்படியிருக்க உள்ளே தன் தோழி நர்முகிலினி மற்றும் அவளது வயிற்றிலிருந்து பூவுலகம் காணமலே தாயோடு சென்ற அந்த குழந்தை காணமல் போய் இறந்துவிட்டதாய் செய்தி கிடைத்த அவளின் கணவன் வேந்தன் என்று மொத்தமாய் வேருடைந்து போன தன் தோழியின் குடும்பத்தை நினைத்து கண்ணீர் மல்க அவர்களுக்கான ஆண்டுத்துவசம் செய்து கொண்டிருந்த வாசுகி தன்னருகில் நின்ற மகளை எதற்காக கூப்பிட திரும்பிய போது தான் அவள் அங்கு காணமல் போக பதட்டத்தில் பயந்து வெளியில் வந்த போது கூட்டமாய் கூட பக்கத்தில் யாரோ ஒருத்தனை அடி பொளந்து கட்டியிருக்க அங்கே மற்றவர்களை தடுத்து நிறுத்தி ஏதோ பேச விளைந்த தன் மகளை நோக்கி அங்கு என்ன நடந்தது என்று உண்மை காரணம் அறியாமல் தன்னுடைய மன சிந்தனைகளில் மட்டுமே ஆழந்திருந்த வாசுகி எதுவும் கூறாத கோபமாய் தன் மகளை இழுத்து கொண்டு அவ்விடம் விட்டு சென்றுவிட்டார்....

அவனது கண்களையே ஆழ்ந்து பாத்து கொண்டே போன வணியின் மனது மொத்தமும் குற்ற உணர்வில் துடிதுடித்துப் போக அவனோ வலியில் துடிதுடித்து கத்தி கொண்டிருந்தான்

அந்த ஆவேசத்துக்கு பின்னால் ஒரு காரணமிருந்தது ஏன் என்றே தெரியாமல் பிடிவாதமாய் தனக்கும் சேயுக்கும் மரணததை தேடிய தோழியை நினைத்து சதாசர்வ நேரமும் மன அழுத்த்தோடு இருந்த வாசுகிக்கு மூன்று வருடம் தொடர்ந்து குழந்தை கருவிலேயே நிலையில்லாமல் அழிந்தழிந்து பிறகு பிறந்தவள் தான் இந்த வணி நர்முகிலினி தனக்கு மகளாய் வர வேண்டும் என்று வாசுகி வைத்த வேண்டுதல்கள் வீண்போகாது அச்சில் வார்ததை போல தோழியின் சாயலின் ஜனித்த மகள் தங்களின் பாவகணக்கை தீர்கவும் தீர்க்கப்படவும் பிறந்தவள் அன்று அந்நேரம் அத்தாய் அறிந்திருக்கவில்லை.

#########################################################
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15 வருடங்களுக்கு பிறகு .....

தன் கையிலிருந்த அந்த புது கோட் சூட்டிலிருந்து புதிய ஆடைக்கே உன்டான அந் நறுமணத்தினை நன்கு ஆழ்ந்து உள்ளிழுத்தபடி நின்றிருந்தவன் அவற்றை அணிந்து முடித்து கண்ணாடியில் முகம் நோக்கினான் கருகரு என்று படர்ந்து வளர்ந்த முடியை ஜெள்வைத்து ஒடுக்கமாய் இழுத்த முடியும் சோல்ட் என்ட் பெப்பர் தாடியுமாய் கருநிறமாய் இருந்தாலும் கம்பீரமாய் இருந்த தன்னை ஒரு முறை ரசித்தவனது இதழ்கள் தானே மொழிந்து கொண்டது "நீ ராஜாடா".....

என்று விட்டு சிரிப்போடே சொல்லி விட்டு திரும்பியவனுக்கு அந்த ராஜ ரசணைக்கு வித்திட்டவளோ முதுகு காட்டியபடி அவனது அறை வாசலில் கருநிற சேலையில் கம்பீரமாய் நின்றிருந்தபடி போனில் கான்பிடன்சியலாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தால்

அவன் அமைதியாய் அவளை நோக்கி தன் நடையை எட்டி வைக்கவும் அவனது வருகை உணர்ந்து சரியாய் திரும்பியவளின் அருகில் நூலளவு இடை வெளியில் நின்றவனை கண்டு போனை ஹோல்ட் செய்து கேள்வியாய் என்ன என்று நோக்கவும்

"இல்ல நீங்க கடத்திட்டு வந்த பையனை நான் ரெடியாக்கி கூட்டிட்டு வந்துட்டேன் ராணியாரே அவரு நீங்க சொன்னபடி ரெடியாகிருக்காரானு பாத்து உத்தரவிட்டா அடியேன் அடுத்த வேலையை பாப்பேன்"

என்று அவளை நோக்கி தன் வயிற்று பக்கமாய் வலது கை மடித்தபடி பணிவாய் குணிய போக அவனது நோக்கமறிந்தவளாய் ஒற்றை விரலால் அவனை தடுத்து நிறுத்து விட்டவள்

"ம்ம் உன் பணிவு எந்தளவுக்குனு எனக்கு தெரியும்" என்று விழிகளில் கேலியையும் முகத்தை சீரியசாகவும் வைத்தபடியே "இப்படி கூத்து காட்டி நேரத்தை வீணடிக்காத எல்லாரும் நமக்காகதான் காத்திட்டிருக்காங்க வெளியே வா"

"ஏன் ஸ்சார் எனக்கு வேலை இல்ல என்றீங்க நான் தான் படிச்சிறுக்கனே உங்க கம்பணீல என்ன வேலைனாலும் நான் செய்றேன்"

"நீ சிறுவர் சீர் திருத்த பள்ளீலருந்து வந்தவன் தானே எதுக்காக அங்க போயிருப்ப நல்லது செஞ்சுட்டா போயிருப்ப எதாவது திருட்டு கிருட்டுனு பன்னிருப்ப இருபது வயதில் வெளிவந் பின்னும் எங்கே போனாலும் நீ தப்பு செஞ்சவன் , நீ என்ன ஜாதி, நீ ஒரு தீட்டு உன்னை நம்ப முடியாது" என்று துரத்திய அத்தனை குரல்களும் அவளோடு இணைந்து நடர்ந்து கொண்டிருந்த வீர பொழிலனின் காதுகளில் அச்சு பிசகாது இப்போதும் கேட்டது.

இங்கு இதுவரை அவனை துரத்திய அவதூறு எல்லாம் வெறும் மாயை பணம் தான் அதன் காரணகர்த்தா என்று நிறுபித்து அவன் தாழ்ந்து போன இடத்தில் நிமிரல் நடையோடு கூட்டிவந்திருந்தாள் அவனை கவர்ந்த வந்த இராவணி


நிகழும்....

https://srikalatamilnovel.com/community/threads/நிகழ்நொடி-கருத்துதிரி.730/page-3#post-118608
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொல்ல மறந்துட்டேன் மக்களே நிகழ்நொடி கதைக்கான பதிவு வாரத்தில் வெள்ளி மற்றும் புதன் ரெண்டு‌ நாட்களும் இரவு வேளையில் பதிவிடப்படும்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்ளே எல்லோரும் எப்படிருக்கீங்க .... கதையோட அப்டேட் நேத்து வந்திருக்கனும் தளம் வேலை செய்யலை காலை ல போட நேரமில்ல இப்போ தான் விட்டுக்கு வந்தேன் ...புரிஞ்சுக்கோங்க மக்களே கதையை வாசிச்சிட்டு நல்லதோ கெட்டதோ உங்க கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்களேன் பிளீஸ்1555608041891.jpg..

தாய்மொழி போலே நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
தாமதமாய் உன்னை கண்ட பின்பும்
தாய்மடியாய் வந்தாய் நான் தூங்கவே

நிகழ்-2


வருடா வருடம் பிராண்ஸ் நாட்டின் ப்பாரிஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட திருவிழாவில் பற்பல உலக பிரபலங்கள் சினிமாவை நேசிக்கும் மக்கள் இளைய மற்றும் புதிய கலைஞர்களால் அந்த பிரம்மாண்டமான அரங்கமே நிரம்பி வழிந்தது.

"என்னால இப்பையும் இதை நம்பமுடியலை பிரம்பிப்பா இருக்கு இந்த பிரம்மாண்டத்துல நானும் ஒருவனா அங்கம் வகிக்கிறேனு நினைக்கும் போது"

"வீரா நீங்க போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு" ராவணி.

"ஆமாடா மச்சான் நாம இருக்க சீட் தூரமாருக்கு எப்படா அங்க போலானு இருக்கு" தங்களுக்கு ரிசவ்ட் பன்னியிருந்த சீட்டை நோக்கி கைகாட்டியபடி

"அங்க பார்ரா நான் இவ்வளவு நாளா நம்ம ஊரு சேட்டு பொண்ணுங்க தான் இம்புட்டு வெள்ளையா இருப்பாங்கனு பாத்தன் ப்ளைட்ல ஏரும் போது இங்க வந்தப்போ பாத்த பொண்ணுங்களையும் விட இங்க இருக்கவளுங்க ஊஜால வெள்ளையா இருக்குமச்சா" என்று பொழிலன் அருகில் அரங்கை ஆவென்று பாத்தபடி நடை போட்ட மோஜோ சலசலக்க ஆரம்பிக்க

"இங்க இருக்கவனுங்க வேற சோடிசோடியா சுத்துறானுங்க....இவன் கூட நாம மட்டும் அனுமார் மாதி சுத்திட்டிருக்கம் ம்ம் இல்லை இவன் சுத்த வைக்கிறான்"
நிமிடத்துக்குள் அவன் மனது உள்ளே தனக்குள் வேறு புலம்பி கொண்டது

அப்படியிருக்க பேச்சில் குறுக்கே நுழைந்ததால் மோஜோவை முறைத்த ராவணியின் முறைப்பை ஏன் என்று அறியாத மோஜோவோ

"ஓஓ நீயும் இங்கத்தானிருக்கல்ல சாரிம்மா நீயும் தான் வெள்ளை ஆனா ரிட்டன் ப்ளைட்ல ஏர்ர முதல்ல எதாவது
கிரிஸ்டீனாவுக்கோ ஜூலியாவுக்கோ ஹாஸ்பாண்டா அபிலாக மா நம்ம ஊர்பக்கம் போய் சேரமாட்டான்ட்டா இந்த மோஜோ"

"த்தூ ஏண்டா இப்படி அல்ப்பத்தானமா பேசி என் மானத்தை வாங்குற" நண்பன் பேச்சில் ராவணி தன்னைவிடாது முறைக்கவும்

"ஹலோ ராவணி உங்க முறைப்பெல்லாத்தையும் இந்த பயன்கிட்ட வச்சுக்கோங்க ஐயா யாரூனு தெரியும் ல இந்த படத்துக்கே நாங்க தான் ஹிரோவாக்கும்" இல்லாத கோலரை தூக்கிவிட்டபடி தங்களுக்கு ஒதுக்கப் பட்ட சீட்டில் மோஜோ அமர.

"நான் யாரூனு தெரியனும்மா சார் சம்பளம் வாங்க ஆப்பிஸ் பக்கம் வருவீங்கல்ல" ராவணி அவனிடம் கேலியாய் வினவவும் திருதிரு என்று முழித்த மோஜோ "கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ.....சும்மாவே சம்பளத்துல பெண்ட்டிங் வைப்பா இதுக்குமேல பேசினா'!!! வாயில் அடித்துக் கொண்டவன்'"

என்று அவளை கண்டு இழித்து சமாளிக்கவும் அந்த பயம் இருக்கட்டும் என்று எச்சரித்துவிட்டு மேடையை நோக்கிய ராவணியின் மனதில் இனம் தெரியாத சஞ்சலம் பற்றியிருந்தது அதை தன்னருகிலிருந்த இருவருக்கும் காட்டாது அவள் சாதரணமாய் தன்னை வைத்திருக்க முயன்று கொண்டிருக்கும் போதே தன் நண்பனுக்கும் ராவணிக்கும் நடுவிலிருந்து சிரித்துக் கொண்டிருந்த வீரபொழிலனின் எண்ணம் பட்டாசால் அறிமுகமாகி அதே பட்டாசின் அதிரடியோடு தன்னை கவர்ந்த பட்டவளினை நினைத்து பிண்ணோக்கி நகர்ந்தது.

###########

"மகாம்மா!!!" என்று வாசலிருந்தே சந்தோசமாய் கத்திக் கொண்டு ரமணி மெஸ்சிற்குள் உள் நுழைந்தான் வீரப்பொழிலன்.

மகாம்மா அவர் வாழும் அழகிய சித்திரம் ஆணாய் பிறந்து பெண்ணாய் மறுஜென்மம் எடுக்கும் திருநங்கைகள் சாதரணமாய் நமக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரத்தையும் தனக்கான அடையாளத்தையும் பெருவதே பெரிய வெற்றி போல் எண்ண வேண்டிய கசப்பான நடைமுறைகளை தகர்த்தெறிந்து தன் சமையல் திறமை மற்றும் கைத்தரி நெய்தலை அடிப்படையாக தன் பயணத்தை ஆரம்பித்தவர் இன்று இந்த ஐம்பது வயதில் அன்றாட பிழைப்புக்கு கஷ்டப்படும் பலருக்கு தன்னால் முடிந்த வேலைகளைவாய்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலமைக்கு முன்னேறிவிட்டார் அவர்களில் ஒருவன் தான் இந்த வீர பொழிலனும் அன்று குழுமியிருந்து அடித்து துன்புறுத்திய மக்கள் கூட்டத்திடமிருந்து அவனை ரட்சித்த தேவதை இவர் தான்..

"பொழிலு பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா தம்பி" கையிலொரு பையோடு உள்ளேருந்து அவனை நோக்கி வரவேற்று வாழ்த்திய மகாம்மாவை புண்ணகையோடு "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா" என்றும் போல இன்றும் காலில் விழுந்தான் .... தாய்தந்தை பெயர் முகம் அறியாதவன் தாய் என்று முதல் முதலாய் போற்றுவது இவரைத்தான்..

"நீ உன் வாழ்க்கையில சகலமும் பெற்று தீர்கமான ஆயுலோடு இப்படி சிரிச்ச முகமாயிருக்கனும்" .... என்று அவன் தலையில் தன் இரு கைகளையும் வைத்து ஆசிர்வதித்தவர் தன் கையிலிருந்த பையை கொடுத்து இத போய் மாத்திட்டு கோவிலுக்கு போய்ட்டு வடா என்கவும்

"எம்மோவ் இதைவிட நான் வேற எந்த கோவிலுக்கு போறது" எப்போது போல இன்றும் சொல்லிறார் என்றுவிட்டு பையினை திறந்தவன் "என்னம்மா இது இந்த முறை வேட்டிசட்டைலாம் " அதிசயமாய் பாக்கவும் "உன்னை இப்படி பாத்தது இல்லை ல அதான் சரி நீ போய் உடுத்திட்டு அம்மா சொல்லை கேக்குறவனா இருந்தா கோவிலுக்கு போயிட்டு வா"

"இவங்க இப்படி எல்லாம் பிடிக்கலைனா கட்டாயபடுத்த மாட்டாங்களே" என்று குழப்பமாய் தலையை சொறிந்த பொழிலன் அவர் பேச்சை தட்டவிரும்பாது அதை அப்படியே செய்ய ஆயத்தமானான்
:
:
"டேய் மோஜோ என்னத்தைடா இவ்வளவு நேரமா பன்னித் தொலைக்குற வந்து துளையேண்டா" தன் பைக்கின் அக்சிலேட்டரை முறுக்கியபடி தங்களின் வாடகை குடியிறுப்பின் வெளிபுறமிருந்து வீரபொழிலன் காட்டு கத்தவும்..

வர்ரேன் இருடா என்று தானும் வேட்டி சட்டை சகிதமாய் கையில் ஒரு பையை வைத்த படி வீட்டுக்கதவை மூடிவிட்டு வெளியே வந்தான் மோஜோ..

இருவரும் எப்போதும் இணைந்தே இருப்பவர்கள் மட்டும் இல்லை இருவருக்குமே பிறந்த நாள் ஒன்று தான் அதனால் தனக்கு வாங்கியதை போல அவனுக்கும் மகிம்மா கொடுத்திருப்பார் என்று தெரியும்

ஆனாலும் "அது என்னடா கையில என்னடா இம்புட்டு பெரிய பையு வெயிட்டாருக்கும் போல... எனக்கு ஏதும் கிப்ட் ஏதும் வாங்கிறுக்கியா என்ன" சாதரண தொணியில் கண்ணடித்து குறும்பாய் கேட்ட நண்பனை கண்டு பேய் முளி முழித்த மோஜோ "உண்மை தெரிஞ்சா ஒரேடியா சாத்துவானே என்னைய...

அதற்குள் அவருகளை தாண்டி போன அவர்களின் காலணி ஆட்கள் சிலர் என்னடா பொழில கல்யாண மாப்பிள்ளையாட்டம் ஜோரா இருக்க சொல்லாம கொள்ளாம கல்யாணம் வச்சிராதடா" என்று நக்கலாய் சொல்லெ கொண்டு போகவும்

"இவனுங்க வேர நேரம் காலம் தெரியாம காபாலிஸ்வரா என்னைய காப்பாத்து" அவர்களின் காலணியின் எல்லை சாமியை வேண்டி கொண்டு நின்ற மோஜோவை விசித்திரமாய் பாத்த வீரபொழிலன் உன் முளியை பாத்தா எதோ சரியில்லை போல இருக்கே"..

"அப்படிலாம் ஒன்னுமில்லையே எதோ மறந்திட்டேனு யோசிச்சிட்டே இருக்கன்...... ஆன் இப்ப தான் ஞாபகம் வந்திச்சு வெயில் ரொம்ப அதிகாமாருக்கு கூலிங் கிளாஸ் போட்டா நல்லாருக்கும்ல" என்று வாயில் வந்ததை உலறி சமாளித்தவனை முறைத்த பொழிலனோ

"டேய் இன்னைக்கு தான் வெயிலே இல்லாம மழைக்கு இருட்டு கட்டிருக்கு உலர்ரேனு தெரியுது மூடிட்டு வண்டீல ஏறுடா" என்றபடி வண்டியை கலப்பிய பொழிலனின் வண்டி ரெஜிஸ்டர் ஆப்பிசில் நிறுத்தவும்..

எதுவும் தெரியாத நல்ல பிள்ளை போல "ஏண்டா மச்சான் கோவிலுக்குதானே போறேனு சொன்ன இங்க வந்திருக்க"

"தெரில்லடா மகாம்மா தான் இங்க வர சொன்னாங்க எதோ வேலையாம் முழுசா சொல்லி முடிக்க முதல் போன் சிக்னல் இலுலாம கட்டாகிறுச்சு"

அதற்குள் அவர்களை நோக்கி வந்த ஆப்பிஸ் ஸ்டாப்ஸ் அவனின் நண்பர்கள் சுத்துவட்டாரங்களும் அவனை கையில் பிடித்து கொண்டு "ஹாப்பி பர்த்டேடா மச்சான்... இருந்தாலும் குசும்ப அதிகம் ஒரு வார்தை இதை பத்தி எங்க கிட்ட சொன்னியா நீ" அவர்கள் கேலியும் கிண்டலுமாய் வினவ

"ஏண்டா அதுக்காக உங்களுக்கு நான் என்ன போஸ்ட்டரா அடிச்சு ஒட்ட முடியும் பிரண்ட்ஸ் நீங்க இதை கூடவா தெரிஞ்துக்க மாட்டீங்க" அவர்கள் தன் பிறந்த நாளை பற்றி கூறுகின்றனர் என்று பொழிலன் நினைக்க....

"அது என்னவோ வாஸ்தவம் தான் என்று அதற்கு அமோதித்தவர் இனி உன்னை வா போனு கூப்பிடலா இல்ல ஸ்சாருனு கூப்பிடுறதா"

என்னடா உலர்ரீங்க மொத்தமா என்று கடுப்பான பொழிலனுக்கு அப்போது தான் உறைத்தது

"ஆமா நீங்களாம் எங்கடா இங்க ஏதும் விஷேசமா என்ன?"

"நீ கூப்பிடலாட்டி என்னடா உங் கல்யாணத்துக்கு நாங்க வராம போயிடுவாமா.....ஏண்டா என்னுமா இந்த விசியத்துல எங்க கிட்ட கெத்தை மெயிண்டன் பண்ணனும் என்று நினைக்குற"......

என்று சிரித்தபடி டேய் மோஜோ அந்த மாலையை மாப்பிள்ளைக்கு போடுவோம் என்று மோஜோ கையிலிருந்த பையிலிருந்து மாலை பெற்றவர்கள் அவன் கழுத்தில் இட்டு உள்ளே தரதரவென்று இழுத்துட்டு போக....

"மாப்பிள்ளையா!!!!....கல்யாணமா??? என்னடா மொத்தமா சேந்து குழப்புறீங்களே உலர்ரீங்க"....

"டேய் மோஜோ அந்த பைக்குள்ள அதுவா வச்சிறுந்த என்னடா நடக்குதிங்க"..... என்று பரபரத்து திமிரியவனை அவர்கள் ரெஜித்தாருக்கு பக்கத்தில் நிட்க வைக்கவும் ஒரு மென்மையான கரங்கள் அவனது கரங்களை பற்றியது...
:
:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நம்ம வணி வர வர பன்னுறது எதுவுமே சரி இல்லைங்க....டாக்டருக்கு படிச்சு ஹாஸ்பிட்டலை பாத்துக்க சொன்னா ... எதோ உப்புக்கு சப்பா பெயருக்கு ஐஞ்சு அரை வருசம் இருந்திட்டு.. தாத்தா மாதிரி பிஸ்நஸ் அது என்னோட ப்யூச்சர்"...

.........

"அப்படி சொல்லி நம்ம கூட சண்டை போட்டிட்டு வீட்டை விட்டு கோவிச்சுட்டு போனவ இன்னைக்கு வருவா நாளைக்கு வருவானு பாத்தா ஆளே திரும்பலை எல்லாம் எங்கப்பாவும் நீங்களும் அவளுக்கு கொடுத்துவைச்ச செல்லம் தான்"...

பிரபாகரனிடம் வசுந்தரா குறைபட்டுக் கொள்ள "ஏன் வசு அவ தான் அப்பவே சொன்னாலே தனக்கு டாக்டர் படிப்பு வேணாம் என்று நீ தான் கட்டாயபடுத்தின படிக்கவும் வச்ச"...

"டாக்ட்டராகனும் அதுவும் குழந்தை பேறு டாக்டராகனும் என்றது நர்முகியோட கணவு லட்சியம் அவளோட வாழ்கையும் ஆசையும் தடமாறி காணல் நீராகி போனதை இன்னைக்கு கூட தாங்கிக்க முடியலை"....ஆற்றாமையில் பழைய நினைகளில் அவள் புலம்பவும்.... திடீர் என்ற அந்தப் பெயரை கேட்டதும் தன்னையுமறியாது பிரபாகரனுக்கு முகம் கடினமாய் மாறிப்போனது ....வசுந்தரா சரியாக கவணிக்கவில்லை என்றதும் சற்றென்று தன்னை நர்மலாக மாற்றிய பின்பே மூச்சு வந்தது.

"இங்க பாரூ வசு நர்முகிலினி மாதிரி ராவணி இருக்குறதால அவங்க ரெண்டும் பேரும் ஒருத்தராகிட முடியாது.... ராவணியோட வீக்னஸ் உனக்கு தெரியாதா எவ்வளவு நாள் மெடிக்கல் எக்ஸ்பரிமண்ட் கிளாஸஸ் ஒத்துவராம டிப்ரெசன், மயக்கலாம் வந்து உடம்பு சரில்லாம போயிருக்கு"

வசுந்தராவல் அதை மறுக்கவும் முடியவில்லை ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை தன் தோழியின் ஆசைகளை மகள் மூலம் நிறைவேற்ற துடித்தவளுக்கு தாயின் கோணத்திலிருந்து தன் பெண்ணுக்கும் மனம் உண்டு என்பதை புரிந்து கொள்ள தவறியது யாரின் பரிதாபம்...

"வசு பிள்ளைங்க கிட்ட நம்ம ஆசையை திணிக்க நினைச்சா விளைவு மோசமகிடும்...அதனால தான் சொல்றன் வணியை அவ போக்குலயே விடு கோபம் குறைஞ்சதும் வீடு வந்து சேந்திடுவா" ...

"தாத்தா அங்க எல்லாம் சரி தானே... அக்கா மாமாவை சம்மதிக்க வச்சிட்டாங்களா"


.........

"அப்ப சரி நான் கலம்பிட்டிருக்கன்... இதோ வந்திர்ரன்" ....

.........

"அவங்களா புருசனும் பொண்டாட்டியுமா சேர்ந்து ஹால்ல உட்காந்து ஏதோ பேசிட்டிருக்காங்க.... ஏதோ என்ன அக்கா பத்தி தான்" கருநீல நிற சர்ட்டும் வெள்ளை பட்டு வேட்டியோடு எங்கோ தயராகி வெளியே வந்த மகனை கண்டு...

"இனியா .... என்னாடா காலேஜ்ல ஏதும் விசேசமா என்ன?"

பிரபாகரன் கேட்க இனியனோ வசுந்தராவை பாத்தபடி "ஆமா இன்டர் காலேஜ் கலிச்சுரல் பங்சன்"

"என்னடா நீ முதல்லயே சொல்லமாட்டி சீக்கிரமா சாப்பாடு எடுத்து வச்சிருப்பனே வெறும் வயித்தா கலம்பாம சாப்டிட்டு போடா" வசுந்தரா கலம்பிய மகனுக்கு காலை உணவை தட்டிலெடுத்து வைக்க விரையவும்..

"வேணாம்மா இப்பவே ரொம்ப லேட்டாகிறுச்சு நான் வெளியவே சாப்பிட்டுக்குறன்"

என்றவன் அடுத்த கணம் தன் ரேஸ்பைக்கோடு சுர்ரென்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்...

இவன் போற அவசரமே சரியில்லையே என்று பிரபாகரன் யோசித்து சில நொடி இருக்காது அவன் ராவணிக்கு பாத்து வைத்திருந்த மாப்பிள்ளை வைபவ்வின் அண்ணனும் பிரபாகரனின் காலேஜ் நண்பனின் பையனுமான கிஷோரின் நம்பரில் இருந்து போன் வந்தது..

"எப்படியிருக்கீங்க கிஷோர்" என்று சந்தோசமாய் பேச ஆரம்பித்த பிரபாகரனின் முகம் மறுபக்கம் கேட்டவிடயத்தில் மொத்தமாய் இருண்டு போனது

"எ...ன்..ன நிஜமாவா சொல்றீங்க" என்று பதறியவருக்கு தனக்குள் எழுந்த சந்தேகத்திற்கு அப்போது தான் விடை விளங்கியது"

கணவனது முகத்தையும் அதில் மாறும் அவனது உணர்வு பிரதிபலிப்புகளையும் கண்டு கொண்ட வசுந்தராவோ பதட்டமாய் "யாரூக்கு என்னாச்சுங்க" என்று ஆரம்பித்தவர் என் பொண்ணுக்கு எதாச்சும் பிரச்சணையா? ஒரு வித பயத்தோடு கணவன் முகம் பார்க்க...
:
:

திடிர் என்று தன்னை பற்றிய மென்மையான கைகளின் சொந்தக்காரியையும் அவளது கோலத்தையும் கண்டு அதிர்ந்த பொழிலனுக்கோ ஆறு வருடங்களுக்கு முன்பு இவளை பார்த்த ஞாபகம் அவனது ஞாபத்திரையில் மீண்டது.. கூடவே மனதில் எச்சரிக்கை உணர்வு எதோ தவறு நடக்க போகிறது என்று அடித்துக் கொள்ளவதை பரைசாற்ற

சற்று ஆட்கள் இல்லாத பக்கமாய் தள்ளிவந்து பேச ஆரம்பத்த இருவரின் அருகில் நின்றிருந்த மோஜோவுக்கு நன்கு தெரியும் அவர்கள் வேலை செய்த டூரிசியம் கம்பணியை விலைக்கு வாங்கிய புது எம்டி தான் இந்த ராவணிபிரபாகரன் என்று....ஒரு வாரமாய் வெளியூருக்கு வெளிநாட்டவர்களுக்கு துணையாக போய் இன்று விடியட்காலையில் ஊர் மீண்டிருந்த பொழிலனுக்கு புது எம்டி வந்த கதை தெரிந்தாலும் அது இன்னார் என்று இந்த நொடிவரை தெரிந்திருக்கவில்லை.

"என்னோட கையை விடுங்க நீங்க ... இதெல்லாம் என்ன ஏற்பாடு" என்று தன் முழு உயரத்துக்கும் இறும்பாய் இறுகி நின்ற அவனது இந்த கேள்வியை ஏற்கனவே எதிர்பாத்தவளாய் ...

"இங்க பாரூங்க மிஸ்டர் வீர பொழிலன் நேரடியாவே சொல்றேன் நாம கல்யாணம் பன்னிக்க போறாம்"

"ஏதோ கடலை முட்டாய் சாப்பிடலாம் வானு சொல்றா இவ"

அவளது நேரிடையான பேச்சில் அவனுக்கு மண்டைக்குள் மத்தளமடிக்காத குறை "வெயில்காலத்தால பித்தம் கூடி சித்ததிற்குள்ள ஏறிடிச்சோ...ஏம் பொண்ணு நீ நல்லா தானே இருக்குற?"

"நல்லா இருக்கிறதால தான் நான் காதலிக்குற உங்களையே கல்யாணம் பன்னிக்கனும், உங்க கூடவே என் ஆயுள் காலம் முழுக்க வாழனும் அதுக்காக தான் இங்க நொடி உங்க கையை பிடிச்சிட்டு நிக்கிறேன் என வசனம் பேசியவளை கண்டு..

"டேய் பொழில் எதாச்சும் கனவுகினவு கண்டபடியிருக்கியாடா" தனது தலையை உலுக்கி தன்னை நிலை படுத்தி கொண்டவனது செயலில் ...

அவளின் முகத்தில் புண்ணகை அரும்ப படபடக்கும் இதயத்தோடு நின்றிருந்தவள் பட்டென்று சொல்லியேவிட்டாள்

"நிஜமாத்தான் சொல்றன் ஐ லவ் யூ வீரா"


மோஜோவுக்கு அதை கேட்டுநெஞ்சு வலி வராத குறை




" உண்மையிலேய இந்தம்மா இவணை காதலிக்குதோ ஆனா அப்படி நடக்க வாய்ப்பே இல்லையே" அவனது நண்பன் அவனுக்கு உயர்வு தான் இருப்பினும் படிப்பு அழகு அந்தஸ்த்து பின்புலம் என்று மலைக்கும் மடுவுக்கும் உண்டான வித்தியாசத்தில் இப்படி இது சாத்தியம் என்று பலவாறு யோசித்தவனுக்கு அப்போது தான் அது உரைத்தது ஆப்பிசில் காலடி எடுத்து வைத்த முதல் நாள் தொடக்கம் வீரபொழிலனை பற்றி அடிக்கடி தன்னிடமும் அப்பிசியலாகவும் விசாரித்தபடியிருந்தாளே.

சம்மந்தபட்டவனோ புரியாத மொழி படத்தை பார்பவன் போல

"எதுக்கு இந்த பைத்தியக்காரத்தனம் ... முதல்ல நீங்க யாரூ நான் யாரூனு தெரியும் ல பாத்ததே சில நொடி தான் இதுக்குல காதலாம் கத்திரிக்காயாம் படிச்ச பொண்ணு தானே நீங்க சென்ஸ் இல்ல " அவன் காச்மூச்சு என்று கத்தும் போது கூட அவனை அசராது பார்த்தவளை கண்டு

"என்ன?,....... எதுக்கு இப்படி வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டிருக்கீங்க?... எதையும் கூலாய் பொறுமையாய் தன் வாழ்வில் ஹாண்டில் பன்ன என்னுபவன் முதல் முதலாய் அதுவும் ஒரு பெண்ணிடம் இன்று தான் சிடுசிடுக்கிறான்.

கையில் தாலியோடு அவர்களை நோக்கியபடி "கல்யாணம் என் தலமையில தான் நடக்க போது .... உங்கம்மா நான் இந்த கட்டிக்க சொன்னா முடியாதுனு மறுப்பியா"

மகாம்மா வந்த சில நொடிகளிலே எமோசனலாய் அவனுக்கு செக் வைக்க...

"மகாம்மா இவ தான் சின்னப் பொண்ணுனா நீங்களுமா?"

"கழுதை வயசாகுது கல்யாணம் பன்னிக்கோனா உன்னை நீயே செல்ப்டிப்பன்ட் பன்னி தாழ்த்தி யோசிச்சுட்டு வெளிய நாங்க கேக்குறப்ப எல்லாம் சமாளிச்சு நலுவுறது ....ஆமாடா கல்யாண ஏற்பாடெல்லாம் சரிவரட்டும் அதுவரையும் உங்கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுனு நான் வணிம்மாவை தடுச்சு வச்சிருந்தது...

"வணிம்மாவா!!!....எல்லாம் யோசிச்சீங்களே மகாம்மா உங்களுக்கு கூட என் மனசை பத்தி கேட்கனும் அதில யாராச்சும் இருக்காங்களானு கேக்கனுமானு கூட தோணலைல...நீயுமாடா மோஜோ"....குற்றம் சொன்ன பொழிலனின் கூற்றில்

மூவரும் திடுக்கிட்டுவிட்டனர் அசரபட்டுவிட்டமோ என்று

ராவணியோ அவனை தவிப்போடு பாத்து நிற்க

"நீ யாரையாச்சும் விரும்பியிருந்தியாடா" உள்ளுக்குள் ஒரு சிறு திகிலோடு கேட்ட மகாம்மாள் ராவணி எண்ணி கவலை கொள்ள

"நானா காதலா போங்கம்மா நீங்க வேற.... அப்படி எதுவும் எனக்கிருந்தா என்னாகிறுக்கும் அதையில நான் சொல்ல வந்தன்...

"இருந்தாலும் பொழிலு உனக்கு வாய் கொழுப்பு அதிகம்டா உனக்குலாம் இப்படி ஒருத்தி தேடி வாரதே தேவ புண்ணியம் அதுவும் கல்யாணம் மாலையோட வந்துநிக்றா இந்த அவசர குடுக்கை இன்னைக்கு என்ன பன்னி துளைய போறானோ.... காபாலீஸ்வரா சீக்கிரமா இவனுக்கு இந்த கல்யாணத்தை முடிச்சு வைங்க அப்போ தான் என் ரூட்டு கிளியராகும்"

"எதுக்கு மகாம்மா என்னை முறைக்குறீங்க கல்யாணம் என்றீங்களே எங்க இவங்களோட அப்பாம்மா".....

"அவங்க வரலை வரவும் மாட்டாங்க".... ஒருவித முக இறுக்கத்தோடு சொன்ன ராவணியின் அழுத்தத்தை போக்குவிதமாக அவளது தாத்தா

" என்னோட பேத்தி கல்யாணத்தை நானே நடத்திவைக்குறன்"....

"தாத்தா நானும் இருக்கேன்" என்று குரல் கொடுத்த படி தக்க சமயம் வந்து சேர்ந்த இருவரையும் கண்டு....

"சரிதான் குடும்பமா கூட்டு சேந்து யோசிப்பாங்க போல" சமீப காலமாய் அவனுக்குள் மிகுந்து போன தாழ்வுமனப்பான்மை அந்தஸ்த்து வசதி சாதி என்பவற்றால் பட்ட கேலியும் கிண்டலும் அவனது மனதில் இத் திருமணத்திற்கு முட்டுகட்டையாய் பெரும் சதி செய்தது..

"இவனுக்கு அமைதியா பேசிட்டேருந்தா சரிவராது" என்று புரிந்து கொண்ட ராவணி தன் அதிரடிதான் இப்போது சரி வரும் என்று உணர்ந்து கொண்டால் ...

"வீரா நீங்க விரும்பினாலும் விரும்பலாட்டியும் இன்னைக்கு இங்க இந்த கல்யாணம் நடக்கும் ..... இல்லைனு ஏதும் தகராரு பன்னீங்கனா....நீங்க என்னை காதலிச்சு கைவிட்டீங்கனு...இங்கையே கலாட்டா பன்னி பேப்பர் மீடியானு பக்கம் பக்கமா கிளிக்க வைப்பன்..... உங்களை மாதிரி கஷ்டபட்டு சீர்திருத்த பள்ளீலருந்து வெளியேரி வர்ரவங்களுக்கு ஹெல்ப் பன்ன நீங்க ஆரம்பிக்க நினைக்குற ட்டிரஸ்ட்டுக்கு எந்த பாங்கிலயும் லோன் சேங்சனாகமா பன்னி மொத்தமா ஆப் பன்னிடவா"

என்று அவள் சீரிய அதே நொடி" மனதுக்குள் மானசீகமாய் அவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்...

அவளது பணபலத்தில் இப்போது சொன்னதை அரங்கேற்றிவிட்டால் அவன் கட்டிவைத்த கோட்டையாவும் இடிந்துவிடுமே அதில் தங்கியிருக்கும் மற்றவர்களின் நல்ல எதிர்காலத்தை எண்ணிப் பார்த்தவன் ஏககடுப்போடு தான் அவளை அன்று திருமணம் செய்தான் விசயம் அறிந்து பிரபாகரனும் வசுந்தராவும் வந்த போது எல்லாம் கைமீறியிருந்தது....

*****************
 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"Best first feature film" என்ற வகையில் அங்கு நடத்த போட்டியில் கலந்து கொண்டு பரிசை தட்டியவரது படத்தின் பெயரை கூறிவிய தொகுப்பாளினி.... "வீரப்பொழிலன் ராவணி" என்று தட்டுத்தடுமாறி அவனுடைய பேரை உச்சரித்து பரிசை வாங்க மேடைக்கு அழைத்தனர்.

தன் கணவன் பெயருக்கு பின்னால் இனிசியலாய் ஒலிக்கப்பட்ட தன் பெயரில் அதிர்ந்த ராவணி மனதிற்குள் இனம் காணமுடியாமலிருந்த எதோ ஒரு தவிப்பு மறைந்து இதமான குளிர்மை பரவசபடுத்துவதை உணர்ந்தவள் அதை ஆராய்ந்தை பார்க்க நேரமில்லாதவளாய் நொடியில் மனதுக்கு கடிவாளமிட்டுக் கொள்ள...

"டேய் என்னை சொல்லிட்டு நீ அந்த வெள்ளக்காரியை பேனு பாத்திட்டிருந்தது போதும் உன் பெயரை தான் கூப்பிடிருக்காங்க எழுந்து போடா" என்று இலக்கற்று தன் சிந்தனைக்குளிருந்த நண்பனை மோஜோ இடிக்கவும்....

"வீரா!!!" ..... என்று பல்லைகடித்த மனைவியின் குரலில்

"வாயை மூடுடா குரங்கு" என்று மோஜோவை முறைத்த பொழிலன் துள்ளலாய் ஸ்டேஜிற்கு நடைபோட்டான் நடை உடை என்று சிறுசிறுவிடயங்களையும் உன்னிப்பாய் அவனுக்காக பாத்து பாத்து அவனை முழுமையாக்கி அனுப்பியிருந்த அவளின் முயற்சி பிடிவாதம் அந்த ஒன்றிற்காகத் தான் இந்த போட்டியில் அவன் கலந்து கொண்டதே

ஆனால் இப்போது முதல் வெற்றி சுவைத்த மகிழ்வில் தன் வயித்துக்குள் பட்டாம் பூச்சி பறந்ததை விடவும் கைகள் குளிர் ஜொரம் வந்தது போல் ஜில்லென்று இருக்க பரவசமாய் நின்றிருந்தவனுக்கு

பல வருடங்களுக்கு பின் அந்த போட்டியில் ஒரு இந்தியரின் படம் ஜெயித்து முன்னேரி நிக்கிறது என்று அவர்கள் சொல்லும் போது அந்த பரவசம் பசியில் உணவுக்கு தவமிருந்தவனுக்கு தேனாமிர்தமே கிடைத்தது போல ரெண்டு மடங்காய் உயர்ந்து தித்திப்பாய் இருந்தது.

"போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு" என்று சுருக்கமாய் வேறு எதுவும் வலவக்காமல் மனைவி சொன்னதையே மேடையில் திருப்பி சொன்னவன் மனைவியை வச்ச கண் வாங்காது பார்க்க ....

அவளும் அப்படியே தான் அவனது கண்களுக்குள் தன்னை தொலைத்திருந்தாள் ஆனால்...என்றோ ரத்தகாயங்களோடு துடித்த அவனை மீட்கும் வழி தெரியாது போகும் போது ஆரம்பித்த அவளின் குற்ற உணர்வு... இவ்வளவு நாட்கள் தாண்டியும் மனதில் நெரிஞ்சி முள்ளாய் உருத்தி கொண்டிருந்ததுக்கு இன்று தான் மருந்திடபட்டு சரியாக்கபடுவதைப் போல அவள் உணர்ந்தால்...

குற்ற உணர்வுக்கு காதல் என்று முகமூடி அணிந்து அதன் வழியே அவன் பால் அவள் நெறுங்க ... ஒதுக்கத்தின் விளிம்பில் நின்றவனோ பெண்ணவளின் அன்பின் போதையில் தன் பெயரின் அருகிலும் அவளை நெறுங்க வைத்தான்....

விணையும் விதியும் ஒரு சேர கைகோர்தது பரபமத ஆட்டத்தினை ஆரம்பிக்க வேண்டிய நேரம் கைகூடியது என்று அதில் பகடக்காயாய் அவர்கள்....

நிகழும்..

https://srikalatamilnovel.com/community/threads/நிகழ்நொடி-கருத்துதிரி.730/
 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்கா சீக்கிரமா வந்திட்டேனு கோபிச்சுக்காதிங்க போனவாரம் சில காரணங்கால் இணைய தளம் வர முடியவில்லை.. அதற்கு ஈடாய் இந்த வாரம் அடுத்தடுத்து சீக்கிரமாய் பதிவிட்டு விடுகிறேன்..

நிகழ்-3

6867


தான் வாங்கிய அவார்ட்டை ஒரு வித சந்தோசத்துடன் நோஞ்சிடு அணைத்த வாக்கில் கீழறங்கி தன்னுடைய இருக்கையை நோக்கி வந்து கொண்டிருந்த வீரபொழிலன் மனதிற்குள்

"இது என்னை விட பாப்பாக்கும் மோஜோக்கும் தான் அதிகமா சொந்தம்" என ஆசையோடு அவர்களது கையில் கொடுத்து அழகு பாத்திட என்னி அவசர எட்டுக்களோடு அவன்

அவளோ அவனது மனதின் ஓட்டத்தினை கவவணிக்க மறந்தவளாய் ஏதோ பரபப்போடு போனை உயிர்பித்து பேச துடங்கிய படி மோஜோவிடம் ஏதோ சுருக்கமாய் கூறிவிட்டு வீரபொழிலனிடம் கூற வேண்டும் என்று கூட நினைவில்லாமல் அவசரமாய் அங்கிருந்து வெளியேறிவிட்டால் .... எதிர்திசையில் அதை கவணித்து புருவம் சுருக்கிய வீரபொழிலன்

"மோஜோ பாப்பாக்கு எதுவும் பிரச்சணையாடா அவசரமா கலம்பி போறாங்களே" பதற்றமாய் கேட்ட தொணியில்

"அப்படி எதுவும் இல்லை நீ உட்காரு மொதல்ல அந்த கருப்பு சொக்கா காரன் உட்கார சொல்லி சைகை காட்டுறான்"

நண்பனை இழுத்து பக்கத்தில் அமர வைத்துவிட

"டேய் பாப்பா ஏண்டா பாதியில கலம்பி போனா?... அதுவும் நான் அவார்ட்டு வாங்கிட்டு திரும்பி வர்ரத்துக்குள்ளாரயே"....ஏக்கம் பாதி ஏமாற்றம் பாதியாக கேட்டவனது மனநிலையை உணர்ந்த மோஜோ
"அதை நீயே கேலு".. என்றுவிட்டு வெகுசிறத்தையாய் விழாவை பார்வையிடுபவனை போல பாவலா செய்ய

அவசரமாய் பாக்கெட்டிலிருந்து தன் போனை எடுத்து வீரபொழிலன் அவளுக்கு அழைக்க போக முன்பாகவே அவளது போனிலிருந்து அழைப்பு வந்துவிட

"பாப்பா....எதுவும் பிரச்சணையாடா உனக்கு எதுக்கு அவசரமா கலம்பி போன" எடுத்த மறுநிமிடம் அவன் படபடக்க

தனக்கான அந்த தவிப்பு சுகமாய் அவளை வருட

"மன்னிச்சுடுங்க வீரா காலைலயே உங்க கிட்ட சொல்லிருக்கனும் ....நாம ஒப்பந்தம் பன்ன இருந்தமே **** ஏஜன்சி காரணுங்க நாளைக்குனு வச்ச மீட்டிங்கை இன்னைக்கு மாத்திட்டானுங்க" ...

"மாத்திட்டானுங்களா எப்பயும் கம்பணி ஈமெயிலை நான் செக்பன்னாம படுக்க போறதில்ல(அவன் தான் அவர்களது கம்பணியில் அவளுக்கு பீயே)...."அப்படியிருக்க நேத்து ஈவ்னிங்கும் செக்பன்னிட்டு தானே விட்டேன்"

என்று யோசித்தவனுக்கு நேற்று இரவு நேரம் தாண்டியும் மனைவி அவர்களது மடிக்கணனியோடு குடும்பம் நடத்தியபடி சோபவோடு ஓரம்கட்டி அமர்ந்திருந்தது ஞாபகம் வந்தது

"கொப்பன் மவளே நேத்தும் அதை தூக்கிட்டு என்னைய விட்டத்தை வெறிக்க விட்ட .... இன்னைகும் சொல்லாம கொள்ளாம கலம்பி என் ஆசையில அரை டசின் மண்ணை கொட்டிட்டு மன்னிப்பு வேற" ...

எதிர்பாராத நேரத்தில் அன்பை பொழிபவள் அவளை அவன் எதிர்பாக்கும் நேரத்தில் அம்போவென விட்டுவிடுகிறாள் .... "ஏன் பொழிலு இவளை புரிஞ்சுக்குறதுக்குள்ளயே நீ அரை கிழவனாயிடிவியோ " மனதுக்குள்ளேயே புலம்பி கொண்டிருந்தவனை

"வீரா....!"....அவள் அழைத்து பார்க்கவும்

"ம்ம் இருக்கன்....இருக்கன் சொல்ல வேண்டியதை சொல்லி முடிங்க" குழந்தையின் கோபத்துக்கு இணையாய் கடுகடுத்தவனை மனம் கேளாவிடினும்

"உங்களுக்கு இன்னைக்கு முக்கியமான டேய் ல அதனால தான் உங்களையும் துணைக்கு இருக்க மோஜோவையும் டிஸ்டர்ப் பன்ன விருப்பமில்லாம நானே நேரடியா மீட்டிங் அட்டன்ட் பன்ன வந்திட்டன்... ஈவண்ட் முடிஞ்சதும் நீங்க வெளிய போய் எங்கயாச்சும் சுத்திபாருங்க்க ஹெல்ப்புக்கு யாராயாச்சும் ஹோட்டல்ல இருந்து அனுப்ப சொல்லியிருக்கன் அவனே உங்களை நேரடியாய் போன் பன்னி பேசுவான்"

........

மறுப்புக்கு அவன் எதுவும் பேசமால் அமைதியாய் இருக்கிறான் என்றதுமே கோபமாய் இருக்கிறான் என்று உணர்ந்தவள்

"வீரா ... நானிப்ப மீட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டன் உள்ள போய்ட்டிருக்கன் இப்படியே உம்முனு என்னை விஷ் பன்னாம அனுப்ப போறிங்களா என்னை"

"ஓல் தி பெஸ்ட்...." என்ற வாழ்துக்களோடு போனின் இணைப்பை துண்டிக்கபட்டு மறுபக்கம் அவளுக்கு போனில் உய் என்ற இறைச்சல் சப்தம் கேட்க அது மனதிற்குகு சுணக்கமாய் இருந்தாலும் அவளோ வேலையை கவணிக்க வேண்டிய கட்டாயத்தில் அவற்றை புறம் தள்ளி சென்றுவிட்டால்.

"வா மச்சி கலம்பலாம்...இங்க உட்கார்ந்து இருந்து இனி என்னத்தை பன்னம் போறம்" கொஞ்ச நேர அமைதியின் பின் விட்டேந்தியாய் கேட்ட பொழிலனின் கூற்றில்

"இப்போ எதுக்கு இஞ்சி திண்ண குரங்கு மாதிரி முகத்தை வச்சினு இருக்க வணிம்மா உனக்காக தானே இப்படி பன்னாங்க" மெதுவாய் நண்பனுக்கு எடுத்து சொல்ல வாய் திறந்த மோஜோவை முறைத்தபடி.

"டேய் ஜிங்சாங்,......வாயை மூடிட்டு கலம்பி வர்ரியா இல்ல நான் மட்டும் கலம்பி போகவா" என்று எழும்பி விரு விரு என்று வெளியேறி போனவனை மூச்சு வாங்கியபடி தொடர்ந்து வந்த மோஜோ "ஏண்டா எந்த டிரைனை நிப்பாட்ட இந்த நடைநடக்குற கொஞ்சம் மெதுவாத்தான் நடையேன்"....

**************

"என்னய்யா புது இன்ஸ்பெக்ட்டரு அன்னைக்கு *** ஊர்ல நடந்த கலவரத்தை யாரூக்கும் சேதவராம அடக்குறன் சமாளிக்குறேனு போய்யு.... அங்க இருக்க சின்ன பயலுகளுக்கு சப்போர்ட்டா பேசி நீ ஒரு அரசாங்க அதிகாரின்றத மறந்து பொங்கினியாமே கேள்விபட்டன்"....

மறங்கள் கூட காய்ந்து சருகாய் பறக்கும் ராஜஸ்தானை ஒட்டி இருந்த அந்த பிரதேசத்தில் சூரியனின் வெப்பக் கதிர்வீச்சுகள் சக்கையாய் புளிந்தபோதும்
கையில் லத்தியோடு திறண்டிருந்த மக்கள் கூட்டத்தினரை விலக்கி கொண்டு சச்சரவுகளையும் கட்டுப் படுத்தி கொண்டு தேர்தலுக்கு முன் கடைசியாக அங்கு நடைப்பெற்று கொண்டிருந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவனை நக்கலாய் அந்த ஊரை சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி கேள்வி கேட்க

பிறரை முட்டாளாக்கி எண்ணி பேச நினைப்பவர்களிடம் வாய்பேச்சை வளர்ப்பதே முட்டாள் தனம் என்று எண்ணிவிட்டு அவற்றை கேட்டும் கேட்காத அலட்சியத்தோடு அமைச்சர் காரில் ஏறி சேப்பாய் நகர்ந்ததும் சேப்பாய் நகர்ந்ததும் பிரச்சணை இன்றி மக்கள் கூட்டத்தையும் களைந்த பின்பு
ஜீப்பில் வந்து ஏறிக் கொண்டான் இனியவேலுப் பிரபாகரன்

அலைஸ் இனியன்

"என்னய்யா நான் அவ்வளவு பேசுறேன் ....நீ அழுத்தமா வாய மூடிட்டு வர்ர என்ன வடநாட்டுக்காரன் என்னை பேசி அவமதிக்க நெனைக்குறானு நினைக்குறியோ எங்க அம்மா காஞ்சிப்புரம்யா"... நல்ல தமிழிலேயே இருந்தது
பேச்சு ...

"ஓ...அப்படியா ஸ்சார் சிறப்பு" என்றுவிட்டு தன் போனில் எதோ குறுஞ்செய்தியை தட்டச்சு செஞ்சு விட்டு நிமிர்ந்த இனியனுக்கு அவ்வளவு கடுப்பாக இருந்தது இந்த ஒருவாரமும் இங்கு வந்து சேர்ந்ததில் இருந்து

"நாப்பத்தஞ்சு ஆகுது....இருபது வருசத்துக்கு மொத ஊர் ஊரா என்னையும் இப்படி தான் மாத்திகிட்டே இருந்தானுங்க" ... ஜீப்பில் ஏறி கொண்டு அதை களப்பி மூத்த அதிகாரியும் அந்த ஊர் ஐஜியுமான சுபாஷ்தாக்கூர் இனியனது தோளை தட்டிக் கொண்டு ஜீப்பை களப்ப. அவனோ போனை மட்டும் நோண்டிக் கொண்டிருந்தான்.

"அப்போ இளம் ரத்தம்ல நீ மாத்தினாலும் இதே கோபத்தை என் கடமையில காட்டுவன்னு நான் ஞாயமா காட்டுவன்னு சுத்திட்டிருந்தன் ஆனா அப்போ தெரியல அவனுங்க அனுபவ அரக்கனுங்க...

"இவம் பேச்சை நான் கேட்கவே இல்லை....ஆளே இல்லாத கடையில யாரூக்கு டீ ஆத்துரான்...வாயை மூடுறானா பாரூ தொனதொனுட்டு" நெற்றியை அழுத்தி தேய்த்த படி இனியனை ஓரக்கண்ணால் கவணித்தபடி தன் பேச்சை தொடர்ந்த சுபாஷ்

"கடைசில இப்போ நீ போஸ்டிங் இருந்த அடையாளமே தெரியாம இந்த வறண்ட காட்டு ஊருல நடக்க பிராசாரத்துக்கு காவலா விட்டிருக்கானுங்களே.....இதான் யதார்த்தம் காவல்சட்டைகாரன்னான நீயுய் சமயத்துல மேல் அதிகாரத்தோட பொம்மலாட்டத்துக்கு இசைஞ்சு ஆட வேண்டி இருக்கும்"........

இனி மூடிட்டிருந்தா இந்தால் தொடர்ந்திட்டேருப்பான் மனதில் எண்ணியபடி

"ஸ்சார் வயசாகிருச்சுனா இப்படிலாம் பேசி தொணதொணக்க தோனும் ஆனா எனக்கு இந்த கதைலாம் ரொம்ப நாளா கேட்டு கேட்டு முடியலை.... .....அதுக்கு வேற ஆளை பாத்துக் கோங்க".... அவனது பேச்சில் சிறித்த படி. "ஆஹா...அது சரி தான் நீ இப்ப நீ வெயில வெந்து ரொம்ப சூடாயிருப்ப போய் உன் எட்குவார்ட்டஸ்ல ரெஸ்டெடு" என்று ஜூப்பை அங்கிருந்த போலிஸ் எட்குவாட்டஸ் பாகிங்கில் நிப்பாட்டி விட்டு....

"ரொம்ப நன்றி கை எடுத்து கும்பிடு போட்ட இனியன்" விறு விறு என்று நடையை கட்டினான்

"என்னைய இங்க டிரான்ஸ்பர் பன்னது கூட பரவாயில்லை... ஆனா போயும் போயும் இந்த பிளேடுக்கு அஸ்டிட்டன்டா போட்டு....இப்படி என்கூட பேசியே ஊசிரை வாங்குறான்" என்று மனதில் நினைத்துக் கொண்டு இறங்கி போகும் அவனை நோக்கி

"மிஸ்டர் இனியன்.....சில தொணதொணப்புகளுக்கு பின்னாடி பல அர்தங்களிருக்கலாம் பல நாள் கழியனும் போலவே அது உனக்கு புரியிறதுக்கு" .....புண்ணகை மாறாது ஊடகமாய் பேசிவிட்டு நகர்ந்த அவரை கண்டு ....

தலையை குலுக்கிவிட்டு நகர்ந்துவிட்டான்

****************
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உலக நாடுகளில் பல இடங்களில் தங்கள் கிளைகளை பரப்பியிருந்த பிரபல டூரிஸ்ட் ஏஜென்ட் நிறுவணத்தின் ஒப்பந்த தாரிகளோடு உத்தியோக பூர்வ சந்திப்பை ராவணி ஆயத்தம் செய்து வைத்திருந்த ஹொட்டல் வழாகத்துல் உள் நுழைந்தனர் .

"சரியான மண்டகசாயம் புடிச்சவன் வண்டியில இறக்கிவிடுறேனு சொன்னவனையும் தண்டசெலவினு அனுப்பி விட்டு ஒரு கிலோமிட்டர் தூரத்துக்கு நடத்தியே இழுத்து வந்திட்டான்" மேல் மூச்சு வாங்க தொன தொன என்றபடி புருபுருத்தபடி வந்த மோஜோவின் தூசு போல தட்டி கணக்கெடுக்காது வந்த வீரபொழிலனது கண்கள்

கான்பிரன்ஸ் ஹால் ரூமின் கண்ணாடி வழியே தனித்திருந்த போதும் சிறிதும் தளர்வின்றி அங்கிருப்பவர்களுக்கு ப்ரொஜெக்டரில் இருக்கு தங்களது கம்பணி சார்பாய் அமைத்த திட்டத்தை விளக்கி கொண்டிருந்தால்.

"பாப்பா வர்ரவரைக்கும் இங்க வெளியவே காத்திட்டிருப்போம்டா" மனைவியை கண்டவுடன் அவளது வேலையின் நேர்தியினில் மனதினுள் இதுவரையிருந்த சுணக்கம் பனி போல விலகியதை அவன் உணராமலே நின்றிருக்க

"ஆஹா......அற்புதம் ஆபாராம்......!!!" என்று ரசித்துக் கூறி மோஜோ மெச்சிய விதத்தில் .

"ஆமாம்டா பாப்பா பேச்சுலயும், முகத்துலயும் இருக்க கெத்தை பாத்தா எனக்கே பொறாமையா இருக்கு" அவன் தன் மனைவியை புகழ்கிறான் என்றி எண்ணிக் கொள்ள

மோஜோவோ காதிற்குள் ஹெட்செட்டை சொறுகியபடி "எப்படியும் இவன் கருப்ன்னசாமி போல காவலுக்கு அவளை பாத்திட்டே கால்கடுக்க நின்னிட்டே தானிருக்க போரான்....... ஆனா நம்ம பாடிஇதுக்கு மேல தாங்காதுப்பா".... வெளி ஹால் வழாகத்தோடிருந்த பேக்கரி சைட் டேபில் ச்சாரில் ஏற்கனவே அமர்ந்துவிட்டான் அதனால் வீர பொழிலன் பேசியது அறைகுரையாகவே அவனது காதில் விழுந்து துளைந்தது

"மச்சி நம்ம ஊர்ல துணிக்கு வைக்குற பேர்ரை எல்லாம் இந்த வெள்ளக்கார பய புள்ளைங்க இந்த சொ(சி)வப்பு கலர் கேக் துண்டுக்கு வச்சிறுக்கான்பா....

"இரு...இரு.....நீ என்னத்தை இப்ப அற்புதம் அபாரம்னு பீத்தின"... பொழில் வேகமாய் யூட்டன் அடித்து பார்கவும் மோஜோவ இருந்த தோரணையில் தன் தலையில் அடித்துக் கொண்டு அவனது காதிலிருந்த ஹெட்செட் வயரை கலட்டி விட

"எதாச்சும் பேசினியாடா எங்கூட" என்ன மொறைக்குறான் ரொம்ப நேரமா தனியா பேசிருப்பானோ

"மச்சி உனக்கு பசி எடுக்கும்ல நான் வேணா உனக்கும் இந்த ரெட் வெல்வட் கேக்கை ஓடர்பன்னவா....பேரர் " என்று கத்தியவனது வாயில் மூடிவிட்டு... அடிச்சேனு வையு கேக்கு கலருக்கு மூஞ்சை வந்திடும் கம்முனு இரு" என்றதும் மோஜோவோ நண்பனால் கேக்குக்கு பங்கம் வந்திவிடுமோ என்று ஒரு எட்டில் வாயிற்குள் வாகாய் அடைந்து கொள்ள

"திண்ணுறதை பாரூ எருமை.....ஏண்டா ஊர்ல ஊசிபோய் ஊருகாவான பன்னை கூட ஒரு வாரமா வச்சு திண்ண பசங்கடா நாம ... எதுக்குடா உனக்கு இந்த தண்டச் செலவு"

"எப்போ பாரூ எண்ணையில போட்ட கடுகு மாதிரி இப்படி கண்டதுக்கும் கஞ்சத்தனம் பாத்து...வெடிச்சுனே இருக்குரதால தாண்டா கையில சம்பளக்காசு மொதக் கொண்டு ஒத்த காசு நிக்குதில்ல" ....

தனக்கு மேலாக கத்திய மோஜோவை பார்த்து பெருமூச்சொன்றை விட்ட வீரபொழிலன் என்ன நினைத்தானோ அவனோடு மேலதிகமாய் வாயாடாமல் அருகில் அமர்ந்து விட்டான்.

மறுபக்கம் மீட்டிங் ஹாலிற்குள் ராவணியினது விளக்கங்களை முற்று முழுதாக கேட்டு முடிந்ததும் தங்களுக்குள் கலந்துறையாடிக் கொண்ட வெளிநாட்டவர்கள்

"ஓகே... மிஸஸ் ராவணி உங்க ஐடியா ஸ்கீம் எங்களுக்கு புடிச்சிருக்கு .. எங்க டிராவல்ஸ்க்கு வர்ர மெடிக்கல் கஸ்டமர்களுக்கும் உங்க கம்பணியையே நாங்க அப்ரூ பன்னி கொடுக்கிறோம் ஆனா அங்க அவங்களுக்கு சௌகரியம் இல்லாத அல்லது திருப்தி இல்லை உங்க டிராவல்ஸ் மூலமான சேவைனு முறையீடு எதுவும் வந்தா நாங்க இமிடியட்டா உங்க கூட உண்டான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டி வந்திடும்"

இந்தியாவை நோக்கி மெடிக்கல் விசாவில் தங்கள் நோய்களை குறைந்த காசு செலவீடில் குணமாக்க ஒரு பகுதியினரும் , ஆயுர் வேத வழியில் குணமாக்க என்று ஒரு பகுதியினரும் வருகை தருவது தற்போதைய நாட்களில் அதிகரித்து வர அதில் இருக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ள ஆசைபட்ட ராவணி தென் இந்தியாவிற்குள் பல் வேறு பகுதிகளில் இதற்கென்று சிறப்பாக இயங்கும் மருத்துவ நிலையங்கள் பல வற்றோடு இதனை அடிப்படையாக கொண்டு ஒப்பந்தம் செய்து வைத்தன் பிராகரம் தன் கம்பணி மூலமாய் நாடுவிட்டு நாடு வந்து உள்நாட்டு விபரம் தெரியாமல் தடுமாறிட விரும்பாத பேசண்ட்களுக்கான சகல வசதிகளையும் தாங்களே ஏற்படுத்தி கொடுத்து வழி நடத்தும் ஸ்கீம் என்று இதனை ஆரம்பித்திருந்தாள்

"நிச்சயமா உங்க நம்பிக்கையை எங்க கம்பணி காப்பாத்தும்" என்று கண்களில் நேர்மையோடு உறுதியாக கூறிய ராவணியை கண்டு மெச்சுதலாய் அவர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதும் அவளுக்கு கிடைத்த மகிழ்சிக்கு ஈடு இணையே இல்லை இந்த திட்டம் வெற்றிகரமாய் அமைய வேண்டும் என்பதை விட அவளது மனது அமையும் என்று தனக்கு தானே நம்பிக்கையாய் சொல்லி கொண்டது..

அன்று தனக்கான பணத்தின் பின்புலம் உறுதியாக இருந்தும் கூட தாத்தாவிடம் கடனாய் தான் தன் கம்பணியை ஆரம்பிப்பதற்கான முதலீட்டை பெற்று அதனை கைபற்றி ஆரம்பித்திருந்தால் நாளடைவில் அதை கொடுத்து தீர்த்திருந்தாலும் தனியாளாய் தான் தனித்தெடுத்த முடிவுக்காக உற்றார், நண்பர்வட்டாரங்கள் என்று தெரிந்த எத்தனையோ பேர் அவளை மட்டம் தட்டியிருக்கின்றனர், எதிர் மறையை விதைத்து இருக்கின்றனர் அது கொடுத்த தாக்கம் இந்த நாள் முதற் கொண்டு அவளுல் கொஞ்சம் கூட குறையவே இல்லை

அதனை நினைத்து பார்த்ததும் கடினமாய் இறுகிப் போனது அவளது முகமும் மனதும்.

தன் கைகளில் இருந்த ஒப்பந்த பத்திரத்தை பார்த்து கொண்டவளோ

"யார் என்ன வேணா சொல்லிட்டு போகட்டும் என் கம்பணிக்கான வளர்ச்சியும் அங்கிகாரத்தையும் தனியாள என்னால உருவாக்க முடியும்"

தனக்கு தானே அழுத்தம் திருத்தமாய் சொல்லிக் கொண்டு அந்த கோப்பை நெஞ்சோடு கட்டியணைத்துக் கொண்டு அங்கிருந்து
வெளியேரிவளது கால் இடரியது அப்போதே அவள் சுதாரித்திருக்க வேண்டும்

அதே நேரம் ஒப்பந்தாரிகள் வெளியேர ஆரம்பித்ததும் மனைவி வரப் போவதை கணித்து அருகில் செல்ல எழும்பிய வீரபொழிலனது கண்கள் சந்தேகத்தில் சுருங்கி கால்கள் யோசணையோடு தடைபட்டு நின்றது .

"யாரிவ ரொம்ப நேரமா வாசல் பக்கமா அங்கிட்டும் இங்கிட்டுமா சுத்திட்டிருக்கா.....இப்போ ராவணி வர்ர திசையை பாத்திட்டிருக்க மாதிரி வேற இருக்கு" ஷெப் உடையில் கையில் எதோ கரண்டி கத்தி அடங்கிய டிரேயை கழுவும் இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் முதுகு காட்டியபடி சற்று இருளாய் இருந்த இடத்தில் வந்து நிற்க சந்தேகத்துக்கு உரியவளை அங்கிருந்த மற்றவர்கள் சந்தேகப்படவில்லை ஏன் என்றால் அவள் நின்ற பக்கத்தருகில் தான் கிச்சனினலிருந்து கிளீனிங் செக்சன் நோக்கி செல்லும் வழி இருந்தது

"ஏதோ தப்பாயிருக்கு" வேக எட்டுக்களோடு வீரபொழிலன் செல்லுவதற்கு முன்பே வேகமாய் வெளியேறி கொண்டிருந்த ராவணியின் பைலை எடுத்துக் கொண்டு அவள் வேகமாய் அந்த ஹொட்டலது பின் வாசலின் குப்பை போடும் வழியில் ஓட்டமும் நடையுமாய் செல்ல இதை எதிர் பார்க்காது அதரிந்த ராவணி அவளை துரத்தி கொண்டு ஓடினால் அந்த பக்கத்தில் குறித்த அந்த இந்நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவை என்பதை அந்த புதியவள் தெரிந்து வைத்திருப்பால் போலும் .... பைலை கீழ வீசி விட்டு அருகில் வந்த ராவணியின் காலினை இடறிவிட்டு அவளை தடுமாற செய்த அவளின் வயிற்று பக்கம் குறிவைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வேகமாய் எடுத்து தாக்க முனைய நொடியில் எதோ நல்ல நேரமாய் பாக்கத்திலிருந்த நிலை சுவற்றில் கையை ஊன்றி தட்டு தடுமாறி தள்ளி போன ராவணி எதிர்பாக்காத இந்த தாக்குதலில் என்னும் அதிகமாய் திகைத்தாலும் மீண்டும் தாக்க வந்தவளிடம் சுதாரித்து அவளது கையை மடக்கி பிடித்து சுவற்றோடு முன்பக்கமாய் தன்‌ பலம் கொண்ட மட்டும் தள்ளிப் பிடித்தபடி கையிலிருந்த கத்தியை வாங்க போறாட

"பாப்பா எங்க இருக்க நீ"....சத்தமாய் குரல் கொடுத்தபடி ராவணியை தேடி அங்கு வந்து சேர்ந்த வீரபொழிலனின் குரலில் இவ்ளோ நேரம் இருந்த சுய தைரியம் மறந்து...

"வீரா நானிங்க காபேஜ் பக்கத்துல இருக்கேன் சீக்கிரமா இந்த பக்கம் வாங்க".... அவனது தைரியத்தில் தன் பதட்டத்தை அவள் வெளிபடுத்திய நொடி

அவளின் கவணம் சிதறி பிடி தளர நொடி தவறாது அதை பயன்படுத்திய புதியவள் ராவணியின் கைகளிலிருந்து சுற்றி நெழிந்து பிடியிலிருந்து வெளிவந்தவள் கையிலிருந்த கத்தியிலினால் அவளது வலது முழங்கை பக்கத்தை பதம் பார்க்க

அதுவும் ஆழமாய் போக முதல் பொழிலன் அருகே விரைந்து வந்து விட்ட உதையோடு கீழே விழுந்த அந்த புதியவளை நோக்கி

"தன் மனைவியை காயபடுத்தியதும் பெண்ணவள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க தோனாது டேய் யாரூடி.... நீ எதுக்குடி உனக்கு இந்த வன்மம்" .....அவளை மேலும் ஏறி மிதி மிதி என்று அடி பிண்ண எத்தனித்த பொழிலனின் கால்களை வாரி அவனையும் கீழே விழுத்தியவளோ...

கேட்ட சத்தங்களில் விபரீதம் உணர்ந்து உள்ளிருந்து காவலர்களும் மற்றவர்களும் வந்து சேர முன்பே

"வீரா....வலிக்குதுடா".... ஈணமாய் ரத்தம் சொட்டிய கைகளை பிடித்துக் கொண்டு முனங்கிய போதும் ராவணி தன் மனதுக்குள் அவளது முகத்தை அழுத்தமாய் பதிக்க முனைந்தால் ...

பார்க்க மாநிறத்தில் கிட்டதட்ட இருபது இருபத்தைந்திற்கு இடைபட்ட வயது மதிக்க தக்க அவளொரு இந்தியவோ அல்லது இலங்கை நாட்டையோ தான் சேர்ந்தவாளாகத்தான் இருக்க வேண்டும்

"ஏய் ராவணி இப்ப வேணா என்கிட்ட இருந்து தப்பிருக்கலாம்..... என்னைக்கு இருந்தாலும் நீ அநியமா எங்களுக்கு பன்ன பாவத்துக்கு... என் கையால தண்டனை கொடுத்து வலிக்க வைப்பேன் உன்னை" என்று சீறிய சீரலோடு அந்த பெண்ணவள்

அங்கு இங்கு என்று ஏறி சுவற்றினை பற்றி எகிரி குதித்து அவளை சுற்றிவளைத்தவர்கள் யாரிடமும் அகப்படாது சாமர்தியமாய் தப்பித்து ஓடிவிட்டால்

மனைவின் துடிப்பிலும் தடுமாற்றத்திலும் நிதானம் இழந்து நின்ற வீரபொழிலனாலும் பிடிக்க முடியாது போனது அவளை ...

#######


||உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன||

#######

நிகழும்.....

https://srikalatamilnovel.com/community/threads/நிகழ்நொடி-கருத்துதிரி.730/page-5#post-131841
 
Status
Not open for further replies.
Top