sivanayani
விஜயமலர்
மிக மிக அழகான ஆழமான அற்புதமான அலசல் சாந்தி. இந்தத் திருப்பு முனை அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும். இல்லை என்றால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும். இன்று பதிவு போட்டுவிட்டேன் பாருங்கள் புரியும்.எப்படி இருக்கீங்க சிவா? மிக மிக மனதை வருத்திய வேதனையான பதிவு...
உத்தியின் காவியத்தில் அவனை சந்தேகப்பட்டு சமர்த்தியே காரை ஓட்டி கொண்டு போய் விபத்து ஏற்பட்டு அது தானே சிவா.. அதனால் குழந்தை பிறந்து, உத்தி குழந்தையை தூக்கி அணைத்தவுடன் குழந்தை அழுமே அந்த காட்சியை மறக்கவே முடியாது வேதனையிலும் வேதனை...
தனக்கோ தன்னை சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு வேதனை என்றால் முதலில் ஆறுதலுக்கு தன் நெருங்கிய சொந்தத்தை தான் தேடுவோம் அது போல் அவ்வியும் உத்தி சமர்த்தி நிலை கண்டு தன் நெருக்கமானவளை தேடி வந்து அழைத்து சென்று விட்டான்... உத்தி கண்விழித்தவுடன் அவ்வியை கண்டு கோபமடைந்து அவனை அடித்ததில், உத்தி தன் நிலை தவறி தன்னை அடித்ததை அவ்வி உணர்ந்து அவனை திருப்பி தாக்காமல்... அப்பப்பா! அருமையான புரிதல் சிவா.. அவ்வியின் இந்த பாசமும் பிணைப்பும் போதுமே அவன் மிக மிக நல்லவன் என்பதை காட்ட...
இதில் அவர்கள் நிலையை கண்டு அவ்வி படும் வேதனை யாரையும் உருக வைத்து விடும்... இதை புஷ்பா பார்ப்பாரா? இந்த நிகழ்ச்சியினால் அவ்வியின் மேல் உள்ள எதிர்மறை எண்ணம் மாறுமா? அதனால் தான் இந்த நிகழ்வை இதில் கொண்டு வந்தீர்களா சிவா? இந்த நிகழ்வு இவர்கள் வாழ்க்கைக்கான திருப்பு முனையா? காத்திருக்கிறோம் பதிலை எதிர் நோக்கி...