ஹாய் ராஜிக்கா…
தேடி தொலைத்தேன் உன்னை…!!
கெளதம் பார்த்திபன் - தேனாண்டாள்
கெளதமின் காதலின் தேடலில் தொலைந்த போனோம் என்று தான் சொல்லணும்...
கெளதம் முதல் சந்திப்பில் சிறு சலனம் ஏற்பட்டு தேனுவின் குழந்தைதனமான பேச்சில் கவரப்பட்டு அவள் மேல் காதல் கொண்டு உடனே முறையாக திருமணம் செய்து.. தன்னவள் ஆக்கி காதலில் மூழ்கி… அவளுக்காக அவள் முகம் பார்த்து செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவர்கிறான்… அவள் பிரிவை கேட்கும் போது கூட அவளுக்காக பிரிந்து அவளின் நினைவில் எந்த இடத்தில் தன்னுடைய காதல் பொய்த்து போனது என தவித்து... பின் தொழிலில் திசை திருப்பி செல்கையில் மீண்டும் தன்னவளை கண்டு அவளின் காதலுக்காக தவிப்பது… அவள் காதலை மறுத்தும் அவளுக்காகவே அவள் கேட்ட. அனைத்தும் நிறைவேற்றி… தேனுவின் குடும்பத்தை கண்டு மகிழ்ந்து தனக்கும் இதுபோல் குடும்பம் வேண்டும் என்று ஏங்குவதும்… தன்னவளுக்காக மாப்பிள்ளை என்று வந்தவனை கண்டு பொறாமை கொண்டு தன் இயல்பை தொலைத்து… அதற்கும் தன்னையே நொந்து தவிப்பதும்… அவள் குடும்பத்திற்கு முன் தன்னையே குற்றவாளியாக காட்டி இறுதிவரை தேனுவிற்காகவே என்று தன் காதலை நிலைநாட்டி தன்னவளின் காதலையும் பெற்றுவிட்டான்…
தேனு யாருக்கும் கிடைக்காத பொருள் தனக்கு கிடைத்தால் கொண்டாடி மகிழ்ந்து மெல்ல மெல்ல சலித்துவிடும் அது போல உலகம் போற்றும் ஒருவன் தன்னிடம் காதலை சொன்னவனின் காதலை உணராமல்… அவன் காதலில் திளைத்து… நாளாக நாளாக குடும்பத்தின் மேல் உள்ள பாசத்திலும், கௌதமின் வாழ்க்கை முறை கண்டு பயந்து... காதலுக்கும் ஈர்ப்புக்கும் குழம்பி கௌதமின் காதலை தூக்கியெறிந்து விட்டு செல்கிறாள்… தன் குடும்பத்தை கண்ட மகிழ்ச்சி இருந்தாலும் தன் திருமணத்தை மறைத்த குற்றவணர்வில் தவித்து… கெளதமின் அருகாமைக்காக ஏங்கி… அவன் வருகிறான் என்ற செய்தி கேட்டு அவனை காண சென்று அடையும் அவமானம்… பின் கெளதம் தனக்கும் நெருக்கமானவன் என்று காட்டிட செய்யும் செயல்கள் அதில் இருந்த அவள் காதலை உணரவில்லை… இறுதியில் தன் காதலை உணர்ந்து, தவித்து அவன் மறுத்தும் அவனின் குழந்தைதனம் மாறாமல் அவள் பணியிலே அவனை ஒருவழி ஆக்கி தன்னவனிடம் சேர்ந்துவிட்டாள்…
அந்த காதலின் பரிசாய் இரு செல்வங்கள்…
அழகான நிறைவு… சொந்த மண்ணில் தொழில் துவங்கி அங்கேயே செட்டில் ஆனது நல்ல விஷயம்… அதிலும் கெளதம் ஜன்னல் கம்பியில் முட்டிக்கொள்வது சிரிப்பை அடக்க முடியல…
காதல், ஏமாற்றம், வழி, தேடல், தவிப்பு என அனைத்திலும் மூழ்கடித்து உங்களின் பாணியில் அழகான காதல் கதை தந்ததற்கு நன்றி ராஜிக்கா…
(பி. கு.சின்ன பிள்ளை கமெண்ட் அஜஸ்ட் பண்ணிக்கோங்க ராஜிக்கா...ஹிஹி..)