All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயைத் தீண்டினால்! - கதைத் திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மன்னிக்கவும் மன்னிக்கவும்

@everyone

தீயைத் தீண்டினால் கதையோட கடைசி எபி.. போஸ்ட் ஆகலை..

குழப்பத்திற்கு மன்னிக்கவும் இதோ போஸ்ட் செய்து இங்கு லின்க் தருகிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 24


(பொருளடக்கம்)

பித்ரு தோஷம் நியாயமோ!

அவர் வினை அவரவர்

அனுபவித்திடலகாதா!


தன் முன்னால் நின்றுக் கொண்டு.. சூர்யா இறந்துவிட்டான் என்றுக் கூறியதைக் கேட்ட சோமேஸ்வரனுக்கு திக்கென்று இருந்தது. அதே நேரத்தில் விதார்த்தும் மைதிலியும் வந்துவிட.. அவர்கள் அழைத்தும், சூர்யா திரும்பியும் கூடப் பார்க்காமல் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து.. சோமேஸ்வரனின் கால்கள் தானே பின்னே சென்றன.


சூர்யா நெருங்கி வரவும்.. சோமேஸ்வரன் “இல்லை நீ பொய் சொல்லுறே..” என்ற கத்தினார். மழை நின்று காலைப் பொழுது தொடங்கும் வேளை வந்திருக்கவும், அவரது குரல் அந்த மலையெங்கும் எதிரொலித்தது. அதுவே அவருக்கு பீதி கிளப்பவும், உடல் நடுங்க.. நின்றிருந்தவருக்கு.. சூரியன் ஒளியைப் பரப்பி.. வெளிச்சத்தைக் கொண்டிருக்க.. அவருக்கு ஏனோ இருட்டிக் கொண்டே போவது போல் இருந்தது. கண்கள் சொருக.. மயக்கம் போட்டு விழுந்தார்.


சோமேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்ததும்.. அவரை நோக்கி ஓடிய சூர்யா அவரது கழுத்து நாடியில் விரலை வைத்துப் பார்த்தான். பின் மணிக்கட்டை பிடித்துப் பார்த்தவன், “என்ன சோமேஸ்வரன் உங்க கிட்ட இருந்து நான் இன்னும் நிறையா எதிர்பார்த்தேனே.. அவ்வளவுத்தானா உங்க தைரியம்! ஆவி என்று பயமுறுத்துவது என்றால் எப்படியிருக்கும்.. என்று இப்போ புரிந்ததா!” என்றுவிட்டு அவரது தோளில் தட்டிவிட்டு எழுந்தவன், திரும்பி விதார்த்தை பார்த்து “வாங்க ஒரு கை பிடிங்க..! வெறும் மயக்கம் தான்” என்று அழைத்தான்.


ஆனால் விதார்த்தும்.. மைதிலியும் இன்னும் திகைப்பில் இருந்து நீங்காது நிற்கவும், சூர்யா ‘இவர்களுக்கு என்னவாகிற்கு’ என்பது போல் பார்த்தான். பின் தெளிந்தவனாய் “ஓ! நான் மிஸ்டர் சோமேஸ்வரனுக்கு சொன்னதை நீங்களும் நம்பிட்டிங்களா! அது அவரைப் பயமுறுத்த அப்படிச் சொன்னேன். ஹெ கைய்ஸ் லுக் அட் மை ஹன்ட்! முதல்ல இவ சித்தப்பா கிட்ட இருந்து சராமாரியா அடி வாங்கினேன். அப்பறம் குண்டடி, அந்த கையோட.. மைதிலியை காப்பாத்தா மண்ணை வாரிப் போட்டேன். அந்த சுரங்கப்பாதையில் இருந்து வரும் போது.. இவர் அந்த உண்டியலை ஓங்கி அடித்தார்.. நல்லவேளை கையால் தடுத்தேன். இல்லைன்னா நான் பொய்யா சொன்னது உண்மையாலுமே நடந்திருக்கும். அப்படியொரு அடி.. என்னால் கையை தூக்கவே முடியலை. இந்த ஒத்த கையை வச்சுட்டு.. எப்படி இவரோட சண்டை போடறது. ஆள் தான் பழசு.. ஆனா அடி ஒண்ணும் இடி மாதிரி விழுது. கையில கூரா கட்டை வேற வச்சுருந்தார். அதுதான் பொய் சொல்லி பயமுறுத்தி பார்த்தேன். வொர்க் அவுட் ஆகிடுச்சு..” என்றுத் தோள்களைக் குலுக்கினான்.


உடனே அவனிடம் வந்த மைதிலி.. தனது கரங்களை கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தாள்.


“இப்படியா பொய் சொல்லுவீங்க! நான் பயந்தே போயிட்டேன்.” என்று அவனது மார்பில் அடிக்கவும், ஒரு கையால் அவளை எளிதாக அடக்கியவன், தன்னுடன் அணைத்துக் கொண்டான். விதார்த் இன்னும் குழப்பத்துடன் சூர்யாவை பார்க்கவும், சூர்யா “இந்த விசயத்தை எல்லாம் முடிச்சுட்டு நாம் கண்டிப்பாக பேசலாம் ஸார்..” என்று கண்ணடித்தான்.


இரு வாரங்களுக்கு பிறகு..


தோள்பட்டையில் சிறு பான்டேஜ்ஜும்.. புறங்கையில் எலும்பு முறிந்ததின் பயனாக அசைவு கொடுக்காமல் இருக்க தகடு வைத்து கட்டப்பட்ட கட்டுமாக அந்த மலைக்காட்டின் முதலில் இருந்த மலையின் உச்சியில் நின்றிருந்த சூர்யா சுற்றிலும் பார்த்தான். இதுவரை நான்கு மலைகளில்.. இடி தாங்கியை பொருத்தியிருந்தார்கள். மற்ற மலைகளிலும் பொருத்தும் வேலை சிறிது சிறிதாக நடந்துக் கொண்டிருந்தன. பத்து நாட்களுக்கு முன்.. சூர்யாவும் விதார்த்தும்.. அவர்களுடன் சில ஊர் மக்கள் சென்று மனு கொடுத்ததின் பயனாக.. இவ்வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன மேலும் அவன் நின்றுக் கொண்டிருக்கும் இந்த மலையில் முருகர் கோவில் ஒன்று சிறிதாக கட்ட அஸ்திவாரம் போடப்பட்டது. அடுத்த வாரத்தில் இருந்து அதன் பணிகள் தொடங்கும்! மேலும்.. அடுத்து இருந்த செங்குத்து பாறைகளால் ஆனா மலை. அடுத்து சேற்றுகுழிகள் அதிகமாக இருந்த மலை.. என்று ஆபத்தான மலைகள் கண்டறிப்பட்டு ஆபத்தானது என்று போர்ட் மாட்டப்பட்டு.. கம்பி வேலிகள் போடும் வேலைகளும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.


பத்து நாட்களுக்கு முன்.. ஊர்மக்களுடன் பேசியதை நினைத்துப் பார்த்தான்.


தன்னுடன் விதார்த் மற்றும்.. அவனது நண்பர்களுடன் மைதிலியை அழைத்துக் கொண்டு அனைத்து மக்களையும் சந்திக்க.. ஏற்ற இடமாக ரேஷன் கடையை தேர்ந்தெடுத்தான். அங்கு தான் மக்கள் அனைவரும் கூடுவார்கள். அவர்கள் பேசுவதையும் தவிர்த்து போக முடியாது என்று நினைத்தான்.


அங்கிருந்தவர்களுடன் பேச வேண்டும் என்றுக் கூறியதும்.. அவர்கள் மைதிலியை வெறுப்புடன் பார்த்ததைப் பொருட்டாக எடுக்காமல் சூர்யா பேச ஆரம்பித்தான்.


“நான் மைதிலியின் ஹஸ்பென்ட்! மைதிலி உங்க கிட்ட சில விசயங்களைப் பேச விரும்புற.. ப்ளீஸ் அவ என்ன சொல்கிறானு கேளுங்க! முழுவதுமாக கேட்ட பின் நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி..” என்றான்.


அவர்கள் அமைதியாக நிற்பதே அனுமதியாக ஏற்றுக் கொண்டு மைதிலி “நான் இதுவரைக்கும் இதைக் கேட்டதில்லை. ஆனால் கேட்கணும் என்று நிறையா தரம் நினைச்சுருக்கேன். நினைச்சுட்டே இருக்க கூடாதுனு இப்போ தான் எனக்கு புரிஞ்சுது.” என்றவள் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.


“என் தாத்தா.. உங்க மூதையர்களுக்கு செய்த.. கொடுமைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” என்றதும்.. அங்கிருந்தவர்கள்..


“அட போ! இத சொல்ல தான் வந்தியா!”


“தளுக்கா மன்னிப்பு கேட்டுட்டு வந்துட்டா.. என் பாட்டி தற்கொலை செய்திருச்சு தெரியுமா!”


“என் தாத்தா.. இந்த இடமெல்லாம் நம்மளோட சொத்தா இருந்திருக்க வேண்டியதுனு சில இடங்களைக் காட்டும் போது.. எங்களுக்கு எப்படியிருக்கும் தெரியுமா..”


“இப்போ என்ன அதுக்கு மன்னிப்பு கேட்டு.. ஜெயிலுக்கு போறீயா..” என்று பல குரல்கள் ஆத்திரத்துடன் வந்தன.


இம்மாதிரி பேச்சுகள் வரும்.. என்று சூர்யா முதலிலேயே கூறித் தான் மைதிலியை அழைத்து வந்தான். ஆனாலும்.. இப்பேச்சுக்கள் அவளைப் பாதித்தது. கண்களை இறுக்க மூடி நின்றிருந்தவளைப் பார்த்த சூர்யா மெல்ல காயம் படாத கரத்தை உயர்த்தி யாருக்கும் தெரியாமல் அவளது முதுகில் வருடிக் கொடுத்தான். அவளுள் திடம் பெறுவதை உணர்ந்தாள்.


அனைவரும் அவளைத் திட்டி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தாள். பின் நிமிர்ந்த மைதிலி "செய்த தப்பிற்கு ஜெயிலுக்கு போய் தான் தண்டனை அனுபவிக்கணும் என்றில்லை. வாழ்ந்தே அனுபவிக்கலாம். நாங்க வாழ்ந்து அழிந்ததை நீங்க பார்த்துட்டு தான் இருந்திருப்பீங்க!" என்றவள் சிறு பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு தொடர்ந்து பேசினாள்.


"அறுபது வருஷத்துக்கு முன்பே என் குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்தாங்க.. அதுக்கு பிறகு உங்க கிட்ட இருந்து அநியாயமா பறித்த நிலபுலன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து.. செல்வ நிலையில் ரொம்பவே தாழ்ந்தோம். அப்பறம் முப்பது வருஷத்துக்கு முன்னாடி.. மறுபடியும் மாறன் ஆவி எங்களை மட்டுமில்லாம உங்களையும் பயமுறுத்துச்சு! அதனால பணம் இல்லைன்னாலும் நிம்மதியாக இருக்கலாம் என்றுப் பார்த்தால் அதுவும் முடியலை. நாலு வருஷத்துக்கு முன்னாடி ஆதிகேஷன் என்ற ஜோசியர் வந்து.. குலதெய்வம்.. பூஜை.. பழி வாங்க துடிக்கும் மாறனின் ஆத்மா, எங்களோட அழிவு என்று இன்னும் பயமுறுத்தினார். அதுக்கு தகுந்த மாதிரி.. முதல்ல என் பெரியப்பா பேமலி எங்களை விட்டுப் போனாங்க.. அப்பறம் என் சித்தப்பா இறந்தார். கல்யாணமான ஆண்கள் அவங்க மனைவியுடன் சரியா வாழுலை. அப்பறம் இப்போ இந்த நாலு நாளுக்கு முன்.. ஒரே இரவில் அத்தை பேமலியும் விட்டுட்டு போயிட்டாங்க! தாத்தா இடிப்பாட்டுல சிக்கி இறந்துட்டார். அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து ஹாஸ்பெட்டல அட்மிட் ஆகிருக்கார். இரண்டு நாள் விடாம பெய்த மழையால் எங்களோட மாளிகை பின் பக்கம் முழுவதும் சரிந்திருச்சு! இப்போ நானும் வீடில்லாமல் தான் நிற்கிறேன்." என்றாள்.


அங்கு நின்றிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில்.. சிறு திருப்தியும் நிலவியது.


மைதிலி தொடர்ந்து "இந்த நிலைமையில் எனக்கு கிடைத்த ஒரே அதிர்ஷ்டம் என் கணவர் சூர்யா! நான் இவருடன் நல்லபடியா வாழ ஆசைப்படரேன். உங்களால் எங்க குடும்பம் சுமந்த பாவங்களை இறக்கி வைக்க ஆசைப்படறேன். தப்பு செய்தா.. மன்னிப்பு கேட்கணும், நான் மன்னிப்பு கேட்டுட்டேன். தண்டனை அனுபவிக்கணும், அதையும் அனுபவிச்சுட்டோம், அடுத்து பிராய்சித்தம் செய்யணும். அந்த பிராய்சித்தத்தை செய்து பாவத்தை கழிக்க நினைக்கிறேன்.”


“நம்மைப் பயமுறுத்திட்டு இருந்த மாறனின் ஆவி பொய் என்று என் ஹஸ்பென்ட் கண்டுப்பிடித்தார். அந்த ஜோசியர் தான்.. அந்த மலைக்காட்டில் தங்க பெட்டியை தேட.. ஆவியா நடிக்க ஆளை ஏற்பாடு செய்திருக்கிறார். அதையும் என் ஹஸ்பென்ட் தான் கண்டுப்பிடித்தார். இப்போ அவங்க தலைமறைவாக்கியதையும்.. அவங்களை போலீஸ் தேடிட்டு இருக்கிறதும் உங்களுக்கு தெரியும்.”


“முப்பது வருஷமா தேடியும் அந்த பெட்டி கிடைக்கலை. அந்த பெட்டிகளை மாறன் எழுபது வருஷத்திற்கு முன்னாடி புதைத்திருக்கிறார். இத்தனை வருஷத்துல.. மண்ணோடு மண்ணா ஆழமாக உள்ளே போயிருக்கும் என்பது என் ஹஸ்பென்ட்டோட கணிப்பு! அது சையின்டிவ்விக்கா ஃப்ரூவ் ஆகிக்கு! அந்த பெட்டியை எடுக்கணும் என்றால் மலையை புரட்டி போட்டா தான் முடியும். அதுக்கு பூகம்பம் தான் வரணும்.” என்று இகழ்ச்சியாக சிரித்தாள்.


பின் தொடர்ந்து “ஆனா அதுக்குள்ள அந்த மலைக்காட்டில எத்தனையோ உயிர்கள் பலி போயிருச்சு! எங்க அழிவோட சின்னமா அந்த அழகான மலைக்காடு இருக்கு! அதை மாத்தலானு இருக்கேன். மலைகள் என்றாலே முருகன் தான்! அதனால அங்கே சின்ன முருகர் கோவில் கட்டலானு நினைக்கிறேன். அதே மாதிரி அங்கே.. இடி தாங்கிகளை வைக்க கவுர்மென்ட் கிட்ட மனு கொடுக்கலானு இருக்கேன். அந்த மலைகளையும் கவுர்மென்ட் அன்டர் கன்ட்ரோல்லா கொண்டு வர மனு கொடுக்க போறேன். இதுக்கு நீங்கெல்லாம் ஒத்துழைக்கணும்.” என்றாள்.


பின் தொடர்ந்து “இவங்க அதை கவுர்மென்ட்டிடம் சரியாக சேர்ப்பாங்க!” என்று விதார்த்தையும் அவர்களது நண்பர்களையும் காட்டினாள்.


பின் மைதிலி “கண்டிப்பா சேர்ப்பாங்க! இவங்களுக்கு இந்த ஊருக்கும் மட்டுமில்ல.. நான் பேசிட்டு இருந்த விசயத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு. இவர் வேற யாருமில்லை. மாறனின் கொள்ளு பேரன் தான் இவர்!” என்றதும்.. அங்கிருந்தவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.


தற்பொழுது விதார்த் முன்னே வந்து.. அவனது பாட்டி.. தனது அன்னையான மாறனின் மனைவியுடன் எவ்வாறு தப்பி வந்தார் என்றுக் கூறியதைக் கூறினான். தப்பித்து வந்து வாழ்க்கையை ஓட்டிய அவர்களது தலைமுறை வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். அவனது பாட்டி கூறியதின் பேரில் இங்கு வந்து பார்த்த பொழுது.. அவனது தாத்தாவின் ஆவி.. என்றுக் கூறி.. யாரோ ஏமாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அது யார் என்றுக் கண்டுப்பிடிக்க தலைமறைவாக இருந்ததாகவும், பின் சூர்யாவின் உதவியுடன் கண்டுப்பிடித்தாக கூறினான். அவனும் சோமேஸ்வரன் மற்றும் பெட்டியை பற்றிய விசயத்தை மறைத்தான்.


விதார்த் மாறனின் கொள்ளு பேரன் தான் என்று ஊர்ஜீதமானதும்.. அந்த ஊர் மக்கள் அவனைச் சுற்றி நின்று ஆவலுடன் பேசினார்கள். அதில் இருந்தே.. இன்னும் மாறன் அங்கு ஒரு கதாநாயகனாக விளங்குவது அனைவருக்கும் புரிந்தது.


பின் விதார்த் “இது ஜமீன் குடும்பத்தின் அதிகாரத்தின் மேல் இருந்த எதிர்ப்பு, வெறுப்பின் பிரச்சினையாக தான் ஆரம்பித்தது. அதுல இந்த ஊரோட நலன் தான் இருந்துச்சு! ஆனா இந்த பிரச்சினை முடியும் போது.. இதுல ஊர் பிரச்சினை மட்டும் இருக்கட்டும் என்று விரும்பறேன். ஒருவேளை.. ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவங்க.. இன்னும் உங்க மேலே அதிகாரத்தை செலுத்திட்டு இருந்தா.. என் முடிவு வேறாக இருந்திருக்கும். ஆனால் மைதிலி சொன்ன மாதிரி.. அவங்க நிறையா தண்டனை அனுபவிச்சுட்டாங்க! அதுனால பழிக்கு பழி வாங்குவது.. இன்னும் வெறுப்பை காட்டுவது என்பது வேண்டாமே.. அதற்கு பதிலாக.. இப்போ மைதிலி கூறியதை போலவும்.. இன்னும் இந்த ஊருக்கு பல நலன்கள் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அதற்கான செலவை டிரஸ்ட்டிடம் இருந்தும்.. கவுர்மென்ட்டிடம் இருந்து வாங்கி தர நாங்க முயல்கிறோம்.” என்றான்.


உடனே அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்தார்கள். விதார்த்தின் கையைக் குலுக்கி.. நன்றி கூறினார்கள். ‘இது என் ஐடியா இல்லை..’ என்று மறுத்தான். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. திகைப்பும் குழப்பமுமாக சூர்யாவையும் மைதிலியையும் பார்த்தான். அவர்கள் அவனைப் பார்த்து சிரித்தவாறு நின்றார்கள்.


சதீஷ் என்னதிது என்பது போல் சூர்யாவை பார்த்தான். அதற்கு சூர்யா “இன்னும் இந்த மக்கள் மாறவே இல்லை. ஒன்று யார் பின்னால் போகணும்.. இல்லை.. அவங்களை கொண்டாடணும்.” என்றுச் சிரித்தான். அப்பொழுது அவனை யாரோ உற்றுப் பார்ப்பது போன்று இருக்கவும், தலையை திருப்பிப் பார்த்தான். ரேஷன் கடைக்கு அருகில் இருந்த வீட்டில் இருந்த பெரியவர், கை தடி ஊன்றியவாறு தள்ளடியவாறு வெளியே வந்தார். அவரது பார்வை சூர்யாவின் மேல் தான் இருந்தது. உடனே சூர்யாவிற்கு இங்கிருப்பது சரியில்லை என்றுத் தோன்றவும், அங்கிருந்து மைதிலியை அழைத்துக் கொண்டு சென்றான்.


அதற்கு பிறகு அவர்கள் திட்டமிட்டபடி வேலைகள் கடகடவென நடந்தது. சோமேஸ்வரன் எடுத்து வந்த பையில் இருந்த.. தங்கங்களை அவர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை. ஒரு பெட்டி கிடைத்தது என்பதை அனைவரிடமும் இருந்து மறைத்தார்கள். அப்பணம் சரியாக மக்களை சென்றயைடைய வேண்டும் என்பது ஒரு காரணம் என்றாலும்.. ஒரு பெட்டி கிடைத்தது தெரிந்தால்.. மற்ற பெட்டிகளும்.. அங்கு தான் இருக்கும் என்று யாரும்.. வந்து விடக் கூடாது என்பது மற்றொரு காரணம்! எனவே தான் சூர்யா முதலில் கூறியதையே கூறினார்கள்.


புதிதாக நிறுவனம் ஒன்றை தொடங்கி டென்டர், மற்றும் நிதியுதவி என்கிற பெயரில் அந்த தங்கங்கள் இந்த ஊரின் வளர்ச்சி பணிக்கும்.. நலத் திட்ட உதவிகளுக்கும் பயன்படும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும்.. அன்று வெடி வெடித்தது மற்றும் பலத்த மழையின் காரணமாக அவர்களது ஜமீன் மாளிகை பின் பகுதி முழுவதுமாக சரிந்து விழுந்தது.


அந்த இடிந்த மாளிகையை சீரமைப்பது என்பது கடினமான காரியம் ஆகும். எனவே சூர்யாவின் யோசனையின்படி அந்த மாளிகையில் இருந்த வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள், சன்னல்கள், மர அலமாரிகள், பொருட்கள், மேசை நாற்காலிகள்.. போன்ற பழம் பொருட்களில் அதிகம் சேதமாகாத பொருட்களை மட்டும் சேகரித்து அதைக் கொண்டு அவர்களது குத்தகை நிலத்தில் அந்த மர வேலைப்பாடு கொண்ட கதவுகள் மற்றும் சன்னலை பொருத்தி.. வீடு கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. வீடு கட்டுவதற்கும்.. குத்தகை நிலத்தை சொந்தமாக வாங்குவதற்கும்.. மேலும் அங்கு விவசாயத்தை அவர்களே பார்ப்பதற்கும்.. தேவையான பணத்திற்கு மட்டும் அந்த பெட்டியில் உள்ள தங்கத்தை பயன்படுத்திக் கொண்டான்.


ஒரு வீடு மைதிலின் பெயரிலும் நிலம் அவனது அண்ணன் பெயரிலும் எழுதி வைக்க ஏற்பாடு செய்தான். ஏதேதோ நடந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்த மைதிலியின் அண்ணன் கார்த்திகேயன் அந்த நிலத்தில் விவசாயம் பார்த்தும்.. சிறு மில் ஒன்று கட்டி அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினான். அவனின் பிரிவில் வாடியிருந்த அவனது மனைவி.. அவளது தந்தையின் பேச்சை மீறி.. கார்த்திகேயனுடன் வந்துவிட்டாள். வீடு கட்டி முடிக்கும் வரை.. மூன்று அறைகள் கொண்ட சிறு பண்ணை வீட்டில்.. மைதிலியும்.. அவளது அண்ணன் மனைவியுடனும் வசித்தார்கள். சூர்யா.. அந்த கைக்கட்டுடன்.. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வருவது.. என்று இருந்தான். ஒருநாள் கூட முழுவதுமாக தங்கவில்லை. அவன் கூறியவைகளை செயல்படுத்த விதார்த்துடன் அலைந்துக் கொண்டிருந்தான்.


இந்த இரு வாரத்தில்.. இத்தனை விசயங்களும் நடந்துவிட.. சிறு பெருமூச்சுடன் அதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது ‘சூர்யா’ என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தான். அங்கு விதார்த்தும் மைதிலியும் நின்றிருந்தார்கள்.


மைதிலியை பார்த்ததும் சூர்யா “ஹாய் பொண்டாட்டி!” என்றான்.


மைதிலி “எப்போ வந்தீங்க? நான் ஹாஸ்பெட்டல் போய்.. அப்பாவை பார்த்துட்டு இப்போ தான் வரேன்.” என்றாள்.


சூர்யா “ம்ம்! அப்பா எப்படியிருக்கிறார்?” என்றுக் கேட்டான்.


மைதிலி “விஷம் கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியேறுமாம். விஷம் மூளைக்கு எட்டுவதற்குள் கூட்டிட்டு வந்துட்டோம் என்றாலும்.. நரம்புகள் மூலம்.. மூளைக்கு போகாமல் இருக்க ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு! ஆனா சரியாகிருவார் என்றுத் தான் சொல்றாங்க..” என்றாள்.


சூர்யா “அவரோட மனநிலை எப்படியிருக்கு! நான் வந்த போது.. நாம் சொன்னதை நம்பலை.. இன்னும் அப்படித்தான் சொல்லிட்டு இருக்கிறாரா?” என்றுக் கேட்டான்.


மைதிலி “இல்ல! இப்போ அமைதியா இருக்கிறார். அதுக்கு ஊர் சனங்க கிட்ட சொன்னதை அவரும் ஏற்றுக்கிட்டார் என்றுத் தானே அர்த்தம்! இனி தங்கம், பெட்டி, புதையல் என்றுப் போக மாட்டார் என்று நம்பறேன்.” என்று பெருமூச்சை இழுத்துவிட்டாள்.


சூர்யா “உன் அத்தை அதுக்கு பிறகு.. கான்டெக்ட் செய்தாங்களா?” என்றுக் கேட்டான்.


மைதிலி “இல்லை! ஆதிகேஷன் என்கிற ஜோசியன் பேச்சை கேட்டு ஏமாந்திருக்கோம் என்று அன்னைக்கே வீட்டை விட்டுப் போனவங்க! இந்த நிலத்தை வாங்கிறோம் என்றதும் வந்தாங்க.. ஆனா நீ கேட்ட கேள்வியில் திரும்பியும் கூடப் பார்க்காம போனவங்க. அப்பறம் வரவேயில்ல! போலீஸில் பிடித்துக் கொடுத்திருவேன் என்று நீ மிரட்டினதில் பயந்துட்டாங்க..” என்றாள்.


சூர்யா “தட்ஸ் குட்!” என்றவன், “அத்தை ஒகே தானே?” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “அம்மா முகத்தில் இருக்கிற நிம்மதியை நான் இதுவரை பார்த்து இல்ல! தேங்க்ஸ் சூர்யா..” என்றாள்.


பின் சூர்யா விதார்த்திடம் “சோமேஸ்வரன் எப்படியிருக்கிறார்?” என்றுக் கேட்டான்.


விதார்த் “ஃபோன் போட்டு கேட்டேன். இன்னும் அவர் யார் என்ற ஞாபகம் வராமல் தான் இருக்கிறார். ஆனா அந்த முதியோர் இல்லத்தில்.. எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்துட்டு இருக்கிறார். நான் ஏதோ செய்யணுமேனு அடிக்கடி புலம்பரார்.” என்றான்.


அதற்கு சூர்யா “குட்! பிராய்சித்தம் தேடட்டும்.” என்றான்.


உடனே விதார்த் “அவருக்கு எல்லாம் ஞாபகம் வந்திருச்சுன்னா?” என்கவும், சூர்யா “செய்த தப்பிற்கு தண்டனை அனுபவிக்க வேண்டியது தான்.. அவரோட சிருஷ்யப் பிள்ளைகளோட அனுபவிக்கட்டும். அவங்களையும் பொய் வழக்கு போட்டு.. ஆந்திரா ஜெயில் தானே வைத்திருக்கோம்.” என்றான்.


அதற்கு விதார்த் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான்.


அதைப் பார்த்து புன்னகைத்த சூர்யாவின் பார்வை சீரமைத்த அந்த அம்மன் கோவிலின் மேல் சென்றது. பின் சற்று தொலைவில் அமைந்துள்ள அவர்களது நிலத்தில் புது வீட்டிற்காக அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.


சூர்யா “மில்லில் பார்டனர்ஷீப்பிற்காக நான் சொன்ன டீலரை கார்த்தி பார்த்தானா?” என்றுக் கேட்டான்.


மைதிலி “இன்னைக்கு காலையில் தான் போயிருக்காங்க..” என்றாள்.


சூர்யா “நான் நேத்தே போக சொன்னேனே..” என்றான்.


அதற்கு மைதிலி “கார்த்தியோட வைஃப்பும் வரேன்னு சொன்னாளாம். அவன் சொதப்பி வச்சுருவான்னு அண்ணிக்கு பயம்..” என்று புன்னகைத்தாள்.


சூர்யா “ம்ம்! அவனுக்கு அவங்களிடம் பயம்!” என்று முறுவலித்தான்.


அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த விதார்த்தின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அவர்களது இதமான மனநிலையை மேலும் இதமாக்க தென்றல் காற்று அவர்களைக் கடந்து சென்றது. மூவரும் அதை இரசித்து அனுபவித்தார்கள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 25


(பொருளடக்கம்)

தீயைத் தீண்டினால்!

அத்தீ அவனுள் பற்றி எரிந்து..

முழுவதையும் ஆக்கிரமிக்குமோ!


தீயைத் தீண்டினால்!

அத்தீ இருளை அகற்றி..

ஒளியைப் பரப்புமோ!


தீயைத் தீண்டினால்!

அத்தீ தீயதை எரிக்குமோ!

நல்லதை வழி நடத்துமோ!




சிறிது நேரம் அப்படியே நின்ற பின்.. சூர்யா சிறு முறுவலுடன் “விதார்த் ஸார்! நாம் இப்போ பேசலாமா! என்கிட்ட என்ன கேட்க நினைச்சீங்க? ஆக்சுவலா மைதிலிக்கு என்கிட்ட கேட்க கேள்வி உண்டு. அதையும் இப்பவ சொல்லி.. எல்லாத்தையும் இத்தோட முடிச்சுரலானு பார்க்கிறேன்.” என்றான்.


விதார்த் சிரித்தவாறு “நீ மைன்ட் ரீடிங்கும் செய்வியா..” என்றுவிட்டு “வாட் ஹெப்ன்ட்டு டு யு?” என்றான்.


சூர்யா “எந்த விசயம் என்று பர்டிக்குளரா சொன்னீங்க என்றால்.. எனக்கு பதில் சொல்வதற்கு ஈஸியா இருக்கும்.” என்றான்.


விதார்த் “எல்லா விசயமும் தான்! இந்த விசயத்தில் நீ ரொம்ப ஓவரா இன்டர்பியர் ஆனா மாதிரி இருக்கு! இது சாதாரணமா நல்லது நடக்கணும். எல்லா விசயமும் நியாயப்படி நடக்கணும்.. என்கிறதாலே வந்த.. வேகமும் விவேகமும் இல்லை. உன்கிட்ட ஒரு ஃபயர் தெரிந்தது! ஒரு வெறி தெரிந்தது! அதுக்கு காரணம் இருக்கு? அது என்ன?” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்ட சூர்யா தலைகுனிந்து மெல்ல சிரித்தான்.


பின் நிமிர்ந்து “நீங்களே புரிஞ்சுருப்பீங்கனு நினைச்சேன். ஆனா என் வாய் வழியா கேட்டு டிக்ளேர் செய்துக்க நினைக்கறீங்க! ஆல்ரைட் சொல்றேன். நீங்க அப்ரோச் செய்து தான்.. நான் இந்த விசயத்தில் இன்டர்பையர் ஆனேன். அதுல எந்த வித டவுட்டும் வேண்டாம். மைதிலியை பார்க்கிறதுக்கு முன்னாடி நீங்க கலெக்ட் செய்த விபரங்களை கேட்டேனே.. நினைவிருக்கா.. அதை எல்லாம் படித்ததும்.. எனக்கு இங்கே வந்து பார்க்கணும் என்றுத் தோணுச்சு! இந்த ஊர் மக்கள் கிட்ட இருந்து அபகரிச்சதா சொன்ன.. நிலங்களைப் பார்த்தேன். நாலைந்து பெண்கள் ஒரே நேரத்தில்.. குதித்து தற்கொலை செய்த.. கிணற்றைப் பார்த்தேன். அப்பறம் ஒரு தாத்தாவை மீட் செய்தேன். அவர் நாலு வயது பையனா இருக்கிறப்போ.. மாறனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததை அவர் பார்த்திருக்கிறார். மாறன் கூட இருந்த இரண்டு பேர். மலையில் இருந்து குதித்து இறந்ததையும் பார்த்திருக்கிறார். மாறன் மற்றும் இன்னொருவரின் உயிர் பிரிந்த தருணத்தையும் பார்த்திருக்கிறார். அவர் கண்ணீரோட நா தளுக்க கூறியது.. இன்னும் என் நெஞ்சுக்குள்ள தங்கியிருக்கு! அந்த மனப்பாரத்துடன் இந்த மலைக்காட்டிற்கு வந்தேன். அதோ அங்கே தெரியற செங்குத்து பாறை மலையிற்கு போனேன். அங்கே தான் மாறனையும் அவனோட ஆட்களையும் கட்டி வச்சு அடிச்சே கொன்னாங்க!” என்றவனிடம் சில நிமிடங்கள் பேச்சு இல்லை. அந்த மலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.


மைதிலி மெல்ல “சூர்யா” என்கவும், திரும்பிப் பார்த்து சிரித்தவன், தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.


“அங்கே போனதும்.. அந்த தாத்தா சொன்ன விசயங்களுக்கு உருவம்.. வந்த மாதிரி இருந்துச்சு! என் முன்னே அவங்களை கட்டிப் போட்டு வச்சுருக்க..! இரத்தம் சொட்ட சொட்ட தலைகுனிந்து அமர்ந்திருந்த மாதிரி இருந்துச்சு! மாறன் தன்னோட வலியை கூடக் காட்டாம.. பல்லை கடிச்சுட்டு.. கழுத்து நரம்பு தெறிக்க கண்களில் வெறியோட பார்த்துட்டு இருந்தார்.” என்றவனின் கண்களும் சிவந்தன.


அவனது நிலை கண்டு திகைத்த மைதிலி “சூர்யா..” என்று ஓங்கிய குரலில் அவனது தோளின் மேல் கையை வைத்தாள்.


சூர்யாவின் முகம் மெல்ல புன்னகையை தத்தெடுக்க.. “ஐயம் ஒகே மைதிலி!” என்றுவிட்டு மீண்டும் அந்த மலையை பார்த்தவன்.. “இப்படி மாறனோ வலியை என்னோட வலியாக எடுத்துக்கிட்டதும்.. மாறனோட ஆவி எனக்குள்ள புகுந்திருச்சு..” என்றுத் தோள்களைக் குலுக்கினான்.


மைதிலியும் விதார்த்தும் அதிர்ச்சியுடன் சூர்யாவை பார்க்கவும், மைதிலியின் தலையில் செல்லமாக கொட்டிய சூர்யா “நான் ஆவி புகுவதற்கும்.. சாமியாடுவதற்கும்.. ரிஷன் ஒண்ணு சொன்னேன் நினைவிருக்கா..! ஒரு விசயத்தில் ரொம்ப தீவிரமா.. ஈடுபடும் போது.. அந்த விசயத்திற்குள்ள நம்மை இழுத்திரும்.. அதனால் அந்த விசயத்தோட வாழுவோம். இதை ஸ்ப்லிட் பர்ஷனாலிட்னு சொல்வாங்க! மூளை நாம் சொல்ற பேச்சை கேட்காம.. நரம்புகளுக்கு இடுகிற கட்டளை என்றும் சொல்லலாம். எனக்குள்ள திடீர்னு ஏதோ எரிய மாதிரி இருக்கும். நீங்க சொல்வது ரொம்ப சரி விதார்த்.. சின்ன பொறி.. ஒன்று தோன்றும்.. அது கட்டளையிடுகிற மாதிரி பேசுவேன். செய்வேன். அது தெரிந்து கஷ்டப்பட்டு.. என் கன்ட்ரோலுக்கு கொண்டு வருவேன்.” என்றான்.


உடனே மைதிலி “சூர்யா..” என்று கதறியபடி.. அவனது மார்பில் விழுந்தாள். தனது மார்பில் விழுந்து.. அடைக்கலமானவளை.. ஒரு கையால் தன்னுடன் இறுக்கி அணைத்த சூர்யா “இந்த விசயம் எல்லாம் சரியாகும் போது.. தானே சரியாகிரும் மைதிலி..” என்று அவளுக்கு ஆறுதல் தந்தான். தனது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.. என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது.


இந்த விசயத்தில் சிறிதும் கூட சம்பந்தமில்லாத சூர்யா.. கேள்விப்பட்ட விசயங்களும்.. பார்த்த விசயங்களும்.. கண்டுப்பிடித்த விசயங்களும் மெல்ல தீண்டி தீண்டி.. தீயை மூட்ட.. அது அவனுள் ஜீவலையாய் கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருப்பதை.. மாறனின் இரத்த வாரிசான விதார்த் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அடுத்த நாள் ஊருக்கு நடுவே சிறு மருத்துவமனை கட்டுவது தொடர்பாக மேயர் அலுவகத்திற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த.. சூர்யாவுடன் மைதிலியும் கிளம்பினாள்.


சூர்யா “நீங்க எங்கே வரே?” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “என் அம்மா.. என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க.. கல்யாணமாகியும்.. பிறந்த வீட்டில் இருக்கிறது சரியில்லையாம்.” என்றாள்.


சூர்யா “என் அப்பாவும் அம்மாவும் தான்.. என்னை வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிச்சு.. உன் கிட்ட என்னைத்த தார வார்த்து கொடுத்தாச்சே..” என்றுத் தன்னையே கிண்டல் செய்துக் கொண்டான்.


அதற்கு மைதிலி “எனக்கு இந்த இடம் போரடிக்குது. எனக்கு சென்னை டிராபிக்கை பார்க்கணும். கூட்ட நெரிசலை பார்க்கணும். மெரினா கடற்கரை அலையில காலை நனைக்கணும். என்னோட வாரிசுக்கு அதைத் தான் புதுசா காட்ட போறேன்.” என்றாள்.


சூர்யாவின் முகத்தில் மென்னகை மலர்ந்தது.


“ஏன் இந்த திடீர் முடிவு.. இந்த இடமும்.. இந்த ஊரும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு தெரியும். அதுவும்.. இப்போ தான் இந்த ஊர் சனங்க.. உன் கூட நல்லா பழக ஆரம்பிச்சுருக்காங்க..! இதைத் தான் நீ எதிர்பார்த்தே! உங்களோட மாளிகை விழுந்திருச்சு.. ஆனா அதே பர்னீச்சர்ஸ் யுஸ் செய்து.. சின்னதா.. அந்த மாளிகையோட மினியேச்சர் மாதிரி கட்ட சொல்லியிருக்கேன். அதுல நீ இளவரசி மாதிரி வாழணும் என்றுத் தானே ஆசைப்பட்டே! மனைவியோட ஆசையை நிறைவேற்றுவது தான்.. புருஷனுக்கு அழகு! அதனால புதுசா தோன்றியிருக்கிற.. இந்த..” என்று அவன் கூறிக் கொண்டிருக்கையில் இடைப்புகுந்த மைதிலி..


“ஆனா எனக்கு என் புருஷன் தான் முக்கியம்! வேற எதுவும் எனக்கு தேவையில்லை.” என்றாள்.


மைதிலி தொடர்ந்து “நீ என்னைப் பார்க்கும் போது.. நான் கிட்டத்தட்ட உன் நிலையில் இருந்தேன். ஆனா வேற மாதிரி அவ்வளவுத்தான் டிப்ரென்ஸ்! அந்த மாதிரி நேரத்தில்.. நீ எனக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருந்து என்னை எப்படிச் சரிச் செய்தேனு எனக்கு தெரியும். உன்னோட செயல்களில் காதல் கொட்டி கிடக்கும். ஆனா இது எப்படி சாத்தியம் சூர்யா! நேத்து விதார்த் கிட்ட பேசும் போது.. மைதிலிக்கும் கேள்விகள் இருக்குனு சொன்னே! ஆனா நான் கேட்ட கேள்விக்கு நீ அப்பவே பதில் சொல்லிட்டே.. நான்தான் அப்போ நம்பலை. இப்போ நம்பறேன். நீ சூர்யா தான்! நீ மாறன் மாதிரி இருக்கிறவன் தான்! நீ மாறனோட நல்லெண்ணத்தின் வாரிசு தான்! நீ மாறனின் ஆத்மா செய்ய நினைத்த செயல்களைச் செய்யும் அவனின் ஆத்மா தான்! ஆனா எனக்கு தெரிஞ்சுக்க வேண்டியது வேற..” என்றுச் சிறுத் தயக்கத்துடன் கூறினாள்.


சூர்யா என்ன என்பது போல் பார்க்கவும், “நீ என்னை நிஜமாலுமே லவ் செய்தேனு தெரியும். ஆனா எப்படி? பிகாஸ்.. என்னைச் சுற்றி பயங்கரமான பிரச்சினை இருந்துச்சு.. நானும் உன் மேலே காதலா உருகி வழியலை. உன் மேலே சந்தேகப்பட்டுட்டே இருந்தேன். ஆனா என்னை ஏன் லவ் செய்தே?” என்றுக் கேட்டாள்.


அதைக் கேட்டு குபீர் என்றுச் சிரித்த சூர்யா “நல்லவேளை.. இதை நாம் பேரன் பேத்தி எடுத்த பிறகு கேட்காம விட்டியே!” என்றுக் கிண்டலடிக்கவும், மைதிலி கையை ஓங்கிக் கொண்டு வந்தாள். குனிந்து தப்பித்தவன், அவளது இடுப்பை வளைத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டு.. “ஆமா நான் உன்னிடம் பிரெண்ட்ஷீப் வைக்க தான் வந்தேன். லவ் செய்ய வரலை. ஆனா எப்படி மாறனோட பையர் பத்தக்கிச்சோ.. அதே மாதிரி.. உன்கிட்ட இருந்த பையரும் என்கிட்ட பத்திக்கிச்சு!” என்றான்.


மைதிலி வியப்புடன் பார்க்கவும், சூர்யா “அன்னைக்கு உன் ரூமிற்கு வந்து உன் கண்கள் என்னை டிஸ்டர்ப் செய்தது என்றுச் சொன்னேனே.. அதெல்லாம் என் நெஞ்சில் இருந்து வந்த வார்த்தைகள்! நீ மேரேஜ் செய்துக்கலாம் என்றுச் சொன்னதும்.. விடாம பிடிச்சுக்கிட்டேன். அப்பறம் உன்னோட ஒவ்வொரு செயலும் பிடிச்சுது. நீ செம இன்டிலிஜென்ட் தெரியுமா! அதுவும் பிடிச்சுது.” என்றுச் சிரித்தான்.


பின் சூர்யா தொடர்ந்து “ஆனா கொஞ்ச நாள் பொறுடா! இங்கே முடிக்க வேண்டிய விசயங்கள் நிறையா இருக்கு!” என்கவும், மைதிலி “முடியாது. இந்த சூழ்நிலையும்.. மனநிலையும் உனக்கு மாறணும். கொஞ்ச நாளைக்கு.. இந்த விசயங்களை விதார்த்தை பார்க்க சொல்லியிருக்கேன். அவர் எல்லாம் பார்த்துப்பார். நாம நம்ம வாழ்க்கையை பார்க்கலாம். அப்பறம் அப்பப்போ வந்து பார்த்துட்டு போகலாம்.” என்று அவனது தோளில் சாய்ந்தாள்.


தனது தோளில் சாய்ந்தவளை.. அந்த கையால் அணைத்தவன், “இதுவும் நல்லா தான் இருக்கு..! ஆனா என் மனசு மறுபடியும் என் பேச்சை கேட்காம இங்கே வரத் துடிச்சா என்ன செய்வே?” என்று விடை தெரிந்துக் கொண்டே நமட்டுச் சிரிப்புடன் கேட்டான்.


மைதிலியும் அவனது சிரிப்பின் அர்த்தம் புரிந்து “இப்படிச் செய்வேன்.” என்று குதிகாலை எம்பி அவனது இதழில் முத்தமிடவும், அவளது இதழ்கள்.. அவனது வலிய உதடுகளிடம் சிக்கிக் கொண்டன.



அனல் 26


(பொருளடக்கம்)

இன்னும் மர்மங்கள் உண்டாம் கேளீரோ!

அதை செங்கொடி சேயோன் அறிவான் காணீரோ!



எழுபது வருடங்களுக்கு முன்..


வியர்க்க விறுவிறுக்க.. மாறனோட சேர்த்து.. நான்கு பேரும்.. மலைப்பகுதியின் கரடுமுரடான பாதையில் தோளில் கனமான பெட்டியை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் விரைவாக நடந்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேரும் பெட்டிகளை சுமந்தவாறு பின்னே.. யாரும் பின் தொடர்கிறார்களா என்றுப் பார்த்தவாறு ஓடிக் கொண்டிருந்தார்கள்.


மாறன் முன்னால் சென்றுக் கொண்டிருக்க.. அவனுக்கு பின்னால் வந்தவன், கால் தடுமாறி விழுந்தான்.


மாறன் பதட்டத்துடன் திரும்பவும், மற்றவர்களும் விழுந்தவனிடம் சென்றார்கள்.


விழுந்தவன் மூச்சு வாங்கியவாறு “மாறா.. இனி என்னால ஒத்த அடி கூட எடுத்து வைக்க முடியாது. நாக்கு வேற வறண்டு கிடக்கு! இனியும் இந்த பெட்டியை தூக்கிட்டு ஓடினா.. வாயில நுரை தள்ளி நான் செத்துருவேன்.” என்றான்.


அவன் கூறியதைக் கேட்ட மாறனுக்கு அவனின் நிலை புரிந்தது. அவனின் மட்டுமில்லை. மற்றவர்களின் நிலையும் அதே தான்! ஆனால் அவர்களை வெறிப் பிடித்தாற் போன்று துரத்தி வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையில் மாட்டினாலும்.. அவர்களின் சாவு உறுதி! ஆனால் இந்த பெட்டி மட்டும் அவர்களைத் துரத்திக் கொண்டிருப்பர்களிடம் கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.


எனவே மாறன் “நம்மளைத் துரத்திட்டு வந்துட்டு இருக்கிறவங்க கையில் நாமும் மாட்டக் கூடாது. இந்த பெட்டிகளும் மாட்டக் கூடாது. அதுனால.. இந்த பெட்டியை இங்கே எங்கவாது மறைச்சு வச்சுட்டு ஓடிருவோம்.” என்று யோசனை கூறினான்.


அதற்கு இன்னொருவன் “நல்ல யோசனை தான்! ஆனா அந்த கொடூரன்.. அவனோட மாளிகையிலேயே.. யாருக்கும் தெரியாம.. சுரங்கப்பாதை அமைச்சு.. கோயில்ல வெளியேற மாதிரி செய்திருக்கான். அது இருந்தானால தான் நாம் தப்பித்து வந்தோம். அவன் கண்ணுல இது சிக்காம போகுமா..” என்றுக் கேட்டான்.


மாறன் “தெரியாத இடத்தில் மறைச்சு வைக்கணும்.” என்று யோசிக்கும் போதே.. சறகுகளில் கால் வைத்து ஓடி வரும் சத்தம் கேட்கவும், மீண்டும் ஓட ஆரம்பித்தார்கள். சிறிது தொலைவு ஓடியிருந்த நிலையில்.. காற்றில் சில்லென்ற உணர்வை உணர்ந்தார்கள். அது கொண்டு அருகில் நீர் நிலை இருப்பதைக் கணித்த மாறன்.. மற்றவர்களை அங்கு அழைத்துக் கொண்டு ஓடினான். அவன் நினைத்தது போல்.. அங்கு நீர்வீழ்ச்சி ஒன்று இருந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்த மாறனின் நண்பர்கள் தோளில் சுமந்த பெட்டிகளை கீழே இறக்கி வைத்துவிட்டு தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.


தாகத்தை தணித்தவாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த மாறனின் கண்களில்.. நீர்விழும் இடத்தில் சிறு குகை போன்று இருப்பது கண்ணில் பட்டது. அந்த குகை பாதியளவு நீர்வீழ்ச்சியால் விழும் நீர் கொண்டு நிறைந்து இருந்தது. உடனே மாறன் சிறிதும் யோசிக்காது.. நீரினுள் பாய்ந்தவன்.. நீர்வீழ்ச்சியின் வீரியத்தைத் தாங்கிக் கொண்டு அதைக் கடந்து சென்று.. குகைக்குள் நுழைந்தான். அவனது நண்பர்கள் அவனைப் பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில கணங்கள் ஆகியும்.. மாறன் வெளி வராதிருக்கவும்.. மற்றவர்கள் நீரினுள் பாய தயாராக இருக்கும் போதே.. மாறன் வௌியே வந்தான்.


வந்தவன் அவர்களிடம் வந்து முகத்தில் வழிந்த நீரை துடைத்தவாறு “அந்த குகைக்குள்ள உள்ளே சின்ன சமதளம் இருக்கு! இப்போதைக்கு அந்த இடத்தில் இந்த பெட்டியை மறைச்சு வச்சுரலாம். அவங்க கிட்ட இருந்து தப்பித்ததும் வந்து எடுத்துட்டு போய் நம்ம ஊர் சனங்க கிட்ட கொடுத்திரலாம்.” என்றுத் திட்டமிட்டான்.


அதன்படி ஒவ்வொரு பெட்டியாக அவனது நண்பர்கள் எடுத்து தர.. மாறன் உள்ளே சென்று வைத்துவிட்டு வந்தான். இன்னும் ஒரு மலையை கடந்தால்.. தப்பித்து விடலாம் என்று நினைத்து ஓடிக் கொண்டிருந்தவர்கள் பிடிப்பட்டார்கள். பெட்டிகள் எங்கே என்றுக் கேட்டு அடித்து துன்புறுத்திய போதும்.. அவர்கள் வாயைத் திறக்கவில்லை.


மக்களின் நலனுக்காக.. அதிகாரம் பிடித்த ஜமீன்தாரின் ஆணவத்தை அவரது சொத்தை அபகரித்து சிறிதெனும் ஆட்டுவித்து அவரை கதிகலங்க வைத்த அவர்களின் உயிர் அங்கேயே பிரிந்தது.


இன்று..


பத்து மாதங்களுக்கு பிறகு..


ஐந்து மாதக் கர்ப்பிணியான மைதிலி முகத்தில் சிணுக்கத்துடன் நின்றிருந்தாள்.


சூர்யா “சொன்னா கேளு.. நீ மலையேற கூடாது. அது மட்டுமில்லாம அங்கே செம கூட்டம்! கும்பாபிஷேகம் முடிந்ததும் முதல் ஆளா நான் கீழே இறங்கி வந்தரேன்.” என்றான்.


மைதிலி “அம்மா, அப்பா, அண்ணி, அண்ணன், என் மாமனார், மாமியார், என் நாத்தனார் என்று எல்லாரும் அங்கே இருக்காங்க.. இப்போ நீயும் போறே! நான் மட்டும் தனியா இங்கே இருக்கிறதா..” என்றுச் சிணுங்கியவள், “வின்ச் வச்சுருக்க வேண்டியது தானே.. நான் அதில் வந்திருப்பேனே!” என்றாள்.


அதற்கு சூர்யா “வின்ச் ஹெலிகாப்ட்டர் எல்லாம் வேஸ்ட் மதி! வா உன்னை கையில் ஏந்திட்டு வேணுன்னா போறேன்.” என்று கரங்களை விரித்துக் கொண்டு வரவும், மைதிலி வெட்கத்துடன் அவனது மார்பில் கையை வைத்து தள்ளிவிட்டாள்.


பின் அங்கிருந்த பெரியவர்களிடம் மைதிலியை ஒப்படைத்துவிட்டு… மலையின் படியேறியவனின் மனதில்.. வின்ச் ஒன்றை கட்ட முடிகிறதா என்றுப் பார்க்கணும். மைதிலிக்காக மட்டுமில்லை. வயதானவர்களும் முருகனை தரிக்க வேண்டும் என்று எண்ணங்கள் ஓட.. வேகமாக படியேறினான்.


முருக பெருமாளின் சன்னதிக்கு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. சுற்றியிருக்கும் ஊர் மக்கள் முழுவதும் அங்கு திரண்டிருந்தார்கள்.


சற்றுத் தள்ளி காவலர்களுக்கு என்றுப் போடப்பட்டிருந்த சிறு மேடையில் நின்றிருந்த சூர்யா சுற்றிலும் தெரிந்த மலைக்காட்டை பார்த்தான். ஒன்பது மாதங்களுக்கு முன்பு வரை.. இந்த மலைக்காடு அச்சுறுத்தும்.. பல பயங்கரங்களையும் மர்மங்களையும் உள்ளடக்கிய காடாக தெரிந்தது. தற்பொழுது சந்தன மணம் கமழ.. முருகனின் வீடு போன்று.. இந்த காடு தெரிகிறது. சூர்யாவிடம் இருந்து நீண்ட நிம்மதி பெருமூச்சு வந்தது.


அவனது அருகில் நின்றிருந்த விதார்த் “என்ன சூர்யா! இப்போ நிம்மதியா?” என்றுக் கேட்டான்.


அவனுக்கும் சூர்யாவை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. மைதிலி கூறியது போல்.. இங்கிருந்து அழைத்து சென்றவள்.. அவனையே சுற்றி சுற்றி வந்து.. சூர்யாவின் முழு கவனத்தையும் தன் மீது வைத்துக் கொண்டாள். பின் மைதிலி.. கர்ப்பமாகவும்.. சூர்யா அவளை கையில் வைத்து தாங்கினான். இவ்வாறு இருவர் தற்பொழுது இன்னொருவர் என்று அவர்களது உலகமாக இருக்கவும்.. சூர்யாவின் மனநிலையும் சரியானது. அதனால் அவனைச் சுற்றியிருப்பர்களும் சந்தோஷப்பட்டார்கள். எனவே விதார்த் அவனிடம் நிம்மதியா என்றுக் கேட்டான்.


அதற்கு ஆம் என்று தலையை ஆட்டிய சூர்யா.. முகத்தில் இருந்த சிரிப்பு மாறாது. “ஆனா இன்னும் இரண்டு விசயம் தெரியலையே..” என்றான்.


விதார்த் சிரித்தவாறு “நீ விட மாட்டியே! உன் துப்பறியற புத்தி சும்மா இருக்காதே! என்ன விசயம்?” என்றுக் கேட்டான்.


அதற்கு சூர்யா “முதலில் மைதிலியின் தாத்தா, அவளது பாட்டி.. அவங்களோட ரிலேட்டிவ்ஸ் எப்படி செத்தாங்க? ஒரு பெட்டி தான் கிடைச்சுருக்கு.. மற்ற பெட்டி எல்லாம் தண்ணியில் அடிச்சுட்டு போயிருக்கும் என்று நினைக்கறீங்களா? இதுதான் என்னோட இரண்டு கேள்விகள் இதுக்கு பதில் கிடைச்சா முழுசா.. நிம்மதியடைஞ்சுருவேன் ஸார்!” என்றான்.


விதார்த் சிறு எரிச்சலுடன் “இதோ அந்த முருகன் கிட்டவே கேளு.. பதில் கிடைக்கும்.” என்றுவிட்டு “இங்கே வந்து உன்கிட்ட நின்னதே தப்பு! இதை மட்டும் மைதிலி கேட்டா.. என்னை வறுத்தெடுத்திருவா..” என்று முணுமுணுத்தவாறு மேடையில் இருந்து இறங்கி சென்றான்.


சூர்யாவின் பார்வை அந்த கோவிலின் மீது நிலைத்தது.


புதிதாக கும்பாபிஷேகம்.. செய்யப்பட்ட கோபுரம் வெயில் பட்டு பளபளத்தது. அதில் இருந்த கும்பம் வெள்ளைப்பட்டு துணியால் சுற்றப்பட்டு.. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகில் சேவல் கொடி காற்றில் பறந்துக் கொண்டிருந்தது. அதையே சில நிமிடங்கள் சூர்யா பார்த்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது.. அந்த கோபுரம் சேவல் கொடியும் மறைய.. அதற்கு பின்னால் இருந்த மலைப்பகுதி அவனது கண்ணிற்கு தெளிவாக தெரிந்தது. சூர்யா தொடர்ந்து நன்றாக உற்றுப் பார்த்தான். அங்கு.. ஒரு உருவம் நிற்பதைப் பார்த்தான். போக போக மங்கலாக தெரிந்த உருவம்.. தெளிவாக தெரிந்தது.


சூர்யா மனதிற்குள் சிரித்துக் கொண்டான். இன்னும் அந்த மாறன் பிம்பம் தன்னை விட்டு போகவில்லையா.. என்று எண்ணும் போதே.. அந்த உருவமும் அவனுடன் சேர்ந்து சிரித்தது. அந்த உருவம் சிரிக்கவும்.. சூர்யா திடுக்கிட்டு அந்த உருவத்தைப் பார்த்தான்.


கட்டுக்கோப்பான உடற்கட்டுடன்.. காவி வண்ணத்தில் முண்டாசும், மல்லு வேட்டியும் கட்டியிருந்த அந்த உருவத்தின் கையில் வேல் ஒன்று இருந்தது. அந்த வேலை பிடித்திருந்த கரம் சற்று நீட்டி தரையில் அழுத்தமாக ஊன்றியிருக்க.. கால்களை சற்று அகற்றி வைத்தவாறு நின்றிருக்க.. மற்றொரு கை அதன் இடுப்பில் இருந்தது. அதன் நெற்றியில் இருந்த திருநீறு வரை சூர்யாவிற்கு நன்கு தெரிந்தது.


பின் சூர்யா பார்த்துக் கொண்டிருக்கைலேயே வேலை ஒரு கையால் பிடித்தவாறு.. திரும்பி மலையேறியது. சூர்யா மெல்ல கண்களை மூடி நின்றான். இதுவும் வெறும் மாயை தான்.. எனக்கு தனக்கு தானே கூறிக் கொண்டான். மூடிய அவனது இமைகளின் மேல்.. மழைத்துளிகள் துளிர்த்தது. அப்பொழுது அவனது நெற்றியில் அழுத்தமாக ஒரு கரம் ஈரத்துடன் படிந்தது. கூடவே திருநீறு மற்றும் சந்தனத்தின் நறுமணத்தையும் அவனது நாசி உணர்ந்தது. அப்பொழுது திடுமென தோன்றிய அதிர்வில் இமைகளை திறந்துப் பார்த்தான். அங்கிருந்த மற்றவர்களும்.. அதே போல் தான் திருதிருவென பார்த்தார்கள்.


அப்பொழுது அங்கிருந்த மேடையில் நின்றிருந்த காவலர் கையில் இருந்த மைக்கில் “மக்களே! கவலைப்படாதீங்க.. பக்கத்துல இருக்கிற மலையில் இடியிறங்கியிருக்கலாம். இடிதாங்கி இருப்பதால்.. உங்களுக்கு ஒன்றும் ஆகாது. இந்த மலையிலும் இரண்டு இடிதாங்கிகள் இருக்கின்றன. அதனால் நீங்கெல்லாம் சேஃப் தான்!” என்று அறிவித்தார். அவர்களும் வரிசையில் நின்று முருகரை தரிசிக்க.. காத்திருந்தனர்.


சூர்யா மெல்ல திரும்பிப் பார்த்தான். நான்கைந்து மலைகள் தள்ளியிருந்த மலையின் மேல் அவனது பார்வை கூர்மையாக படிந்தது. அவனது முகத்திலும் மெல்லிய சிரிப்பு! சற்று முன் வந்தது.. இடி இல்ல பூகம்பம் என்று அவனது உள்ளுணர்வு கூறியது.


பொதுவாக மலைகள் இருக்கும் இடத்தில் பூகம்பம் ஏற்பட்டால்.. அவ்வளவு அதிர்வை ஏற்படுத்தாது. எனவே அதை இடி என நினைத்தனர்.


சூர்யாவின் பார்வை அந்த மலையை விட்டு அகலவில்லை. அப்பொழுது விதார்த் “சூர்யா..” என்று அழைத்து “மைதிலி உனக்கு ஃபோன் போட்டாளாம் நீ எடுக்கலையாம். உடனே எனக்கு ஃபோன் போட்டுட்டா..” என்றான்.


உடனே சூர்யா “ஆத்தி! நான் கீழே போறேன்.” என்று மேடையில் இருந்து இறங்கி.. படியை நோக்கி ஓடினான். அவனது ஒரு கை சட்டை பாக்கெட்டில் இருந்தது. பாக்கெட்டில்.. மைதிலிக்காக திருநீறு பாக்கெட்டும் சந்தனமும் இருந்தது.


சூர்யா பார்த்த மலையில் தான் பெரிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. அந்த நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டும் இடத்தில் இருந்த சிறு குகையின் வழியாக சற்றுமுன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக மாறன் மறைத்து வைத்திருந்த பெட்டிகள் இரண்டும்.. நீரால் வெளியே அடித்து வரப்பட்டது. அதன் கனம் தாங்காமல்.. இருபது அடி ஆழம் கொண்ட அந்த நீர்நிலையின் அடிப்பகுதியில் உள்ள மணலில் தங்கியது. சற்று தள்ளி.. ஒரு வருடத்திற்கு முன்.. இவ்வாறு வெளியே வந்த பெட்டியும் இருந்தன.


பழைய நினைவுகள் வந்த பின்பும்.. வராதது போல் ஒரு வாரமாக நடித்துக் கொண்டிருந்த.. சோமேஸ்வரன்.. அன்று காலை உணவு உண்ட முதியவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் யாருக்கும் தெரியாமல்.. மதிற்சுவர் ஏறிக் குதித்து.. தப்பித்து ஓடிக் கொண்டிருந்தார்.


தீமை உண்டெனில்..

நன்மையும் உண்டு!

துன்பம் உண்டெனில்..

மகிழ்ச்சியும் உண்டு!

இருள் உண்டெனில்..

வெளிச்சமும் உண்டு!

ஆன்மா உண்டெனில்

கடவுளும் உண்டு!


கடவுள்..

தீமையை விளைவித்தால்!

துன்பத்தை கொடுத்தால்!

இருளை உண்டாக்கினால்!

கயவர்களுக்கு..!

 
Status
Not open for further replies.
Top