செம சூப்பர் யுடி. ஷிவ்வா இப்படி புகழ் கிட்ட நடந்துகிட்டது! நம்ப முடியவில்லை வில்லை வில்லை! புகழ்ல அக்கறையா தூக்கிவிட்டது, வியர்வையை அன்பா துடைச்சுவிட்டது, பாசமா அணைச்சுகிட்டு எல்லார்கிட்டேயும் அவன் மனைவின்னு கம்பீரமா சொன்னது. நம்பமுடியாத இன்ப அதிர்ச்சி தான். ஏன் ஷிவ் திடிர்ன்னு இப்படி நடந்துகிட்டான்.ஒருவேளை புகழ் சொன்ன மாறி யாராச்சும் மந்திரிச்சுட்டாங்களோ! புனைபெயர் வச்சு கூப்பிட்றான், அழகின்னு வேற செல்லமாக கூப்பிட போறதா சொல்றான்! ஷிவ் தானா இது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியா ஒரேயடியா கொடுத்தா எப்படி ஷிவ் ?உன் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலயே ராசா!
ஷிவ் புகழ் கேரக்டர் பார்த்து மாறுவான்னு தெரியும், ஆனா இப்படி ஒரே நாள்ல மாறுவான்னு எதிர்ப்பாக்கில்லை. இன்னிக்கு யுடில புகழ்க்கு மட்டும் மயக்கம் வரல, படிச்ச எனக்கும் தான், ஷிவ்வோட இந்த அதிரடி மாற்றத்தை பார்த்து மயக்கம் கம்மிங். அந்த பிளாக் சீட்டா இந்த பிளாக் பியூட்டி பக்கம் சாய்ந்த ரீசன் என்னவோ?
புகழ் கோலம் போடும் போது, மல்லி பூ பறிக்கும் போது, பாடும்போதுன்னு அவள ரசிச்சது(?), அப்புறம் அவளை உரிமையோட பாக்குறது, மத்தவங்ககிட்ட விட்டு கொடுக்காததுன்னு லைட் ஆ ஷிவ் மேல டவுட் தான். ஆனால் இப்படி அவன் திடிர் மாற்றத்திற்குக்கான காரணம் என்னவா இருக்கும் ?
ஷிவ் புகழ்ல கல்யாணம் பண்ணத்துக்கு ஏதாவது பெரிய பின்புலகாரணம் இருக்குமோ?
இன்னிக்கு புகழ் பாடிட்டே சமைச்சது சூப்பர். அவளுடைய க்யூட் இன்னோஸன்ஸ் யாருக்கு தான் பிடிக்காது. அதான் அவளை அந்த அயல்நாட்டவர்வர்களுக்கும் பிடித்து போனதில் ஆச்சரியமில்லை.
இந்த சம்யுக்தா எதற்காக அதிர்ச்சி ஆகுறா? இதில் வசந்த்தின் அவளின் மேலான காதல் வேறு ஒருபக்கம் , கைகூடுமா? அவனும் ஏதோ பிளான் பண்ணி இருக்கான் போலவே. சம்யுக்தாவ வேற அதில் கூட்டு சேர்க்க பாக்குறான். எதிரிகள் ஒன்று கூடினால் மட்டும் கருங்சிறுத்தையை தாக்க முடியுமா என்ன. அதிலும் அவன் நிழலில் இருக்கும் புகழ்லை நெருங்கதான் முடியுமா.
புதன்கிழமையை எதிர்பார்த்து அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வைட்டிங்.