ஹாய் சிஸ், வாவ்! செம செம செம சூப்பர் ஸ்டோரி. இந்த கதையை நான் படிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம்தான் ஆகுது.அதுக்குள்ள எனக்கு பிடித்த ஸீன்ஸ ஒரு பத்து பதினஞ்சு வாட்டி படிச்சிட்டேன். என் ஹிஸ்டரி ஸ்கிரீன்ஷாட் கீழ குடுத்துருக்கேன், பாருங்க எவ்ளோவாட்டி ரிபிடட் மோட்ல படிச்சிருக்கேன்னு. அவ்வளவு தூரம் ஷிவ் புகழ் என்னை அட்ராக்ட் பண்ணிடாங்க. இப்போ மறுபடியும் ஒருவாட்டி படிச்சிட்டு இருக்கேன். அந்த அளவுக்கு இந்த கதைக்கு நான் ரொம்ப அடிட் ஆயிட்டேன் .இந்த கதையில எனக்கு ரொம்ப பிடிச்ச ஸீன்ஸ் ஷிவ் புகழ் கல்யாணம், ஷிவ் வீட்டுக்கு புகழ் வந்தபோது அவன் ஆராய்ச்சியா பாக்குறது, மல்லிகைபந்தல் ஸீன், இப்போ ஆபிஸ் ஸீன்.
ஷிவ் - என்னதான் அவன் புகழ்ல கொடுமை படுத்தினாலும் அவனை வெறுக்க முடியலை. அவன்கிட்ட என்னமோ மாய மந்திரம் இருக்கு பா. ஒருவேளை அவனுடைய ஆளுமை திறன் , கம்பீரம், அழகு, அவனுக்கு சொந்தமானவங்களை யார்கிட்டயும் விட்டு கொடுக்காத உரிமை குணம் இதெல்லாம் தான் அவன் பக்கம் இழுக்குதோ. அவன் சொடக்கு போட்டு கூப்பிட்டுற மேனரிசம் இருக்கே செம மாஸ். நான் இப்பல்லாம் அடிக்கடி இப்படி தான் சொடக்கு போட்டு ஷிவ்வ அப்பப்ப நினைச்சு பாத்துக்கறேன்.
புகழ் - செம சூப்பர் கேரக்டர். புகழுக்கு நிகர் புகழே. " அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை, அவளுக்கு யாரும் நிகர் இல்லை, அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை, ஆனால் அது ஒரு குறை இல்லை ". அவ குணத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை . நிச்சயம் ஷிவ் அவ நல்ல குணத்தை விரைவில் அறிந்து கொள்வான். இப்பவே உரிமை உணர்வுவோட தான் அவளை பாக்குறான். சீக்கிரம் அவள புரிந்து ஏத்துகிட்டு அவ காலை குணப்படுத்தி அவளை தைரியசாலியா தன்னம்பிக்கை மிக்கவளா மாத்துவான்னு நினைக்கிறேன்.
புகழ்! நீ அந்த மல்லி பூ கிட்ட பேசும்போது தான் தெரியும் நீ இவ்ளோ பேசுவனு. அப்புறம் மல்லி பந்தல்கிட்ட 'பிடிக்காத
அத்தை மகன அடிச்ச மாதிரி எங்க உன்னையும் அடிச்சுடுவாங்களோன்னு மாட்டிப்புட்டேனே மாட்டிப்புட்டேனேன்னு' பயந்து மனசுக்குள்ள புலம்பறதா நினைச்சு வெளியே ஷிவ் கிட்ட உளறிட்டியே மா! உன்கிட்ட ரொம்ப பிடிச்சதே உன்னோட அந்த வெள்ளந்தி குணமும், சிரிச்ச முகமும் தான் .
புகழ் ஷிவ் எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு ராஜேந்திரன் சுகுணாவையும் பிடிக்கும். இவங்கள கதையோட இன்னொறு ஹீரோ ஹீரோயினா தான் பாக்குறேன். அன்பு, பாசம், குணம், அவங்களுக்குள்ள இருக்கும் அன்யோன்யம்,புகழ்ல அவங்க பார்த்துக்கும் விதம்ன்னு எல்லாத்திலும் சிறந்து விளங்கும் அழகிய தம்பதிகள்.
என் பிரண்ட் சொல்லி தான் நான் இந்த கதையை படிக்க ஆரம்பிச்சது. அவளுமே இந்த கதையை ரிபிடட் மோட்ல தான் நிறையவாட்டி படிச்சிருக்கா.உங்கள் எழுத்து நடையும், கதை மாந்தர்களும் தான்
கதையை நான் திரும்ப திரும்ப படிக்க காரணம் . ஒவ்வொரு காட்சியும் நீங்க சொல்லிருக்கும் விதம் கதையோட ஒன்றி போகவைக்குது. கண்டிப்பா இந்த கதையை நீங்க முடிச்சதும் புத்தகமாக வெளியிடனும் சிஸ். அப்போதான் நான் புக் வாங்கி வச்சு நினைக்கும் போதெல்லாம் படிக்க முடியும். ஷிவ் மற்றும் புகழ்லோட என் லைப் லாங் டிராவில் பண்ண முடியும்.
அப்புறம் இப்பல்லாம் எப்போடா புதன் ஞாயிற்றுக்கிழமை வரும், இன்னும் மூணு நாள் இருக்கே, நாலு நாள் இருக்கேன்னு கஷ்டப்பட்டு நேரத்தை ஓட்டி பதிவுக்காக ஆவலா வைட் பண்ணிட்டு இருக்கேன்.நீங்க நைட் யுடி போட்றதால எப்ப நைட் முழிப்பு வந்தாலும் அன்னிக்கு யுடி போட்ற நாள்ன படிச்சுட்டு தான் மறுபடி தூங்குறேன் . ஒரு ரெண்டு வாட்டி என் கனவுல கூட கதை பத்தி வந்திருக்கு. இப்போ புரிஞ்சுருக்கும் எவ்வளவு இந்த கதையோட தாக்கம்
எனக்குள்ள இருக்குன்னு. என் மனசுல நீங்கா இடம் பெற்றவர்கள் ஷிவ் அன்ட் புகழ். இனி அவங்க எப்போ வருவாங்கன்னு தினமும் ஆவலுடன் வைட்டிங்.
பாண்டியவனத்து சிறகொடிந்த கிளி சுபிட்சத்தில் எல்லா சுபிட்சமும்பெற்று சிறகை விரித்து சுதந்திரமாக கணவனின் துணையோடு உயரப் பறப்பது எப்போது?
பைனல் டச் அபவுட் திஸ் ஸ்டோரி இன் மை ஸ்டைல்
நெருப்பு போன்ற ஷிவ்,
கருப்பு அழகி புகழ்,
இவர்கள் மேல்
வெறுப்பு கொண்ட வசந்த், சம்யுக்தா, விமன்யா, வசுந்தரா,
நாங்கள் தான் பெரிய
பருப்பு என்று இருக்கும் பாண்டியவனத்து மக்கள், புகழ் எங்கள்
பொறுப்பு என்று அவளை பாதுகாக்கும் ராஜ் சுகுணா தம்பதியினர் ன்னு
என்
விருப்பத்திற்குறிய இந்த
சிறப்பு மிக்க கதையின் அடுத்த அடுத்த விறுவிறுப்பான சுவாரசியமான பதிவிற்காக எப்பொழுதும் மிக ஆவலாய் காத்திருக்கும் நான்.