All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தலக்குண்டின் ரகசியமும்!!" கதை திரி

Status
Not open for further replies.

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 34

இடி மின்னல் சூறாவளி என மொத்தமாய் தாக்கியதில் பிஞ்சு பீசுவாங்கி போன காய்ந்த ரொட்டிப்போல் மாதவனும் ஷங்கரும் நட்ட நடுவீட்டில் தலை மீது கை வைத்து வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்தனர்.

'சோதனை வேதனை; இன்னும் ரெண்டு நாளு நாம உயிரோட இருந்தோம்னா அது மிகப்பெரிய சாதனை' அவர்கள் மைண்ட் வாய்சோ ரைமிங்காக வேறு பேசி இன்னும் வெறுபேற்றிவிட்டது.

"த்தா ச்சை இந்த வெலங்காத வெங்காய மூளை வேற நேரம் காலம் தெரியாம என்னையே வாரி விடுதே" மாதவன் மெல்ல புலம்ப

"மச்சா மாதவா எனக்கு என்னவோ நாளைக்கு காலைல நம்ம பொணத்தை நாமளே ஆவியாகி பார்க்குற மாதிரியெல்லாம் தோணுதுடா. இந்த பொம்மை பேய்கிட்ட இருந்து நாம எப்புடிடா தப்பிகிறது. அது நம்மல என்னன்னவோ பண்ண சொல்லுதேடா"

பயத்தில் வலிப்பு வந்த பல்லிப்போல் மாதவனோடு ஒட்டியபடி ஷங்கர் கேட்ட

"இனிமே பண்ண என்ன இருக்குடா. அந்த பேய் சொல்லுறத செஞ்சா எங்க அப்பன் அந்த மீசக்காரன் கைகாள நாம சாவோம். கேக்கலனா அந்த பேய் அடிச்சு சாவோம். மொத்தத்தில நம்ப சாவு உறுதியாகி போச்சு. இனி பொலம்பி ஒன்னும் ஆவப்போறது இல்ல. அந்த பேய் சொல்றத செஞ்சுபுட்டு போவ வேண்டியதுதான்"

பயம் ஒரு புறம் இருந்தும் அவர்கள் சிக்கி இருக்கும் சிச்சுவேஷனை கப்பென பற்றிய மாதவன், பேய் கூறுவதை செய்வதென்ற முடிவுக்கு வந்தான்.

"ஆனா மச்சா நம்மகிட்ட வேலைய குடுத்துபுட்டு அந்த பொம்ம எங்கடா போச்சு?" தங்களுக்கு வேலை கொடுத்தப் பின் ஜூமாக்கா ஜூம் என பொம்மை காணாமல் போய்விட அதை வைத்தே ஷங்கர் கேட்டிருந்தான்.

"நம்ம நிலையே சொல்றதுக்கில்ல இதுல அது எங்க போனா நமக்கு என்னடா வந்துச்சு. பேசாமா உக்காருடா" கடுப்பில் மாதவன் கத்தியபின்னரே அமைதியானான் ஷங்கர். பொம்மை சொன்னதை செயல்படுத்த இரவு வரும் வரை காத்திருக்க துவங்கினர் நண்பர்கள் இருவரும்.

இவர்கள் இங்கே பேயுடைய பிளானை எக்சிகியூட் செய்ய காத்திருக்க, அங்கே கேசவனும் அவருடைய பிளானை அன்று இரவு செய்ய அனைத்தையும் தயார் செய்துவிட்டார்.

இங்கு ரெண்டு கேங் அரவிந்த் கேங்குக்கு எதிராக கிளம்பியது தெரியாமல் நம் அரவிந்த் பெத்த முத்தோ, அவன் காதலியுடன் என்றும் இல்லாத திருநாளாய் இன்று கடலையை வறு வறென வறுத்து முடித்து ரொமேன்ஸ் கட்டத்திற்குள் காலை வைத்திருந்தான்.

"வீராம்மா! என்னடி செய்ற" தன் போனோடு ஐக்கியமாகியிருந்த வீராவின் கையை மெல்ல பிடித்து தன் காந்த குரலால் தன் காதலியை அழைத்தான் சித்து.

அவன் குரல் என்றும் இல்லாது இன்று வீராவின் மனதிற்குள் ஏதோ மாயாஜாலம் செய்ததில் அமைதியாக இருந்தாள். சித்துவோ தன் ஒரு கையை எடுத்து அவளின் தலையை மெல்ல கோதியவாறு முன்னே தொங்கிய முடியை அவளுடைய காதின் பின்னே ஒதுக்கிவிட்டான்.

அவனுடைய செய்கையில் வீராவின் இதயம் படபடவென அடித்துக் கொள்ள, அவள் காதுகள் இரண்டும் வெட்கத்தில் சிவந்தே போனது.

முன்பு நடந்த நிகழ்வுகளில் உஷாராகியிருந்த சித்து, இன்று பூஜை வேலை கரடியாக வேறு யாரும் தங்களை டிஸ்டர்ப் செய்யக் கூடாதென கதவை சாவி போட்டு பூட்டி என எல்லா முன்னேற்பாடையும் பக்காவாக செய்து வந்திருந்தான்.

எனவே அவனின் இன்றைய ரொமான்ஸில் யாரும் குறுக்கே வரவில்லை. வீராவும் அவனுடைய கைகள் காட்டும் மாய வித்தையில் சிக்கி கிறங்கி போய்விட்டாள்.

அவள் அசந்த நேரம் பார்த்து பசக்கென நெற்றியில் மென்மையாக ஒரு முத்தத்தை கொடுத்து சிறப்பாக தன் கணக்கை துவங்கி கொண்டான் அரவிந்தின் செல்வமகன்.

கைகளால் அவள் கன்னத்தை வருடியபடி அடுத்த முத்தத்தை அவளின் இரு கன்னங்களில் இறக்க, என்னையும் எடுத்துக் கொள்ளேன் என கூறுவதைப்போல் துடித்து வைத்தது வீராவின் உதடுகள்.

இதற்குமேல் தாங்காது என மெல்ல அவளின் இதழோடு இதழை பொறுத்திவிட்டான் சித்தார்த். மெல்ல மெல்ல அவளின் சிப்பி இதழ்களை அவன் இதழ்கள் சுவைத்து வைக்க, அவனுடைய ஒரு கை அவளின் தலையை தாங்க மற்றொரு கையோ அவளின் இடையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

மூச்சு கூட விட முடியாத அளவுக்கு முத்தத்தை தந்து வீராவை திணறடித்தான் சித்து. இத்தனை நாள் அவனிடம் இருந்த இந்த காதல் மன்னனை எங்கே வைத்திருந்தான் என ஆச்சரியப்படும் வண்ணம் இருந்தது சித்துவின் செய்கை எல்லாம்.

சில நிமிடங்கள் நீடித்த அந்த அழகிய காதல் முத்தம் நிறைவுறும் நேரம் சரியாக வீராவின் அறை கதவை யாரே தட்டும் சத்தம் கேட்க, காதலியோடு முத்தத்தில் திளைத்திருந்த சித்துவுக்கு முதலில் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அந்த சத்தம் வீராவின் காதுக்களில் விழுந்துவிட, சித்துவை தன்னிலிருந்து பிரித்து தள்ளினாள்.

"ஏன்டி தள்ளிட்ட! வாடி"

காதல் பித்து முத்தியதில் ஏக்கத்தோடு பிதற்றிய சித்துவின் மண்டையில் நங்கென கொட்டி நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தாள் அவன் காதலி. அதன்பின்னரே சுற்றி நடப்பது மண்டைக்கு உரைத்தது சித்துவிற்கு.

தன் முன்னால் கைகளை கொண்டு உதட்டை துடைத்த வீராவை கண்டு வந்த சிரிப்பை அடக்கிய சித்து "ஏன் பேபி உதட்டை துடைச்ச" என ஒரு மார்க்கமாய் பேசியவன் மீண்டும் அவள் உதட்டில் ஒரு சிறு முத்தத்தை வைத்து லேசாய் அவள் உதட்டை கடித்து விட்டு கதவை நோக்கி ஓடிவிட்டான்.

தான் அசந்த நேரத்தில் ஒரு காதல் காவியத்தையே தன் காதலன் நிகழ்த்தியதில் "சித்து!" என கோவத்தில் வீரா கத்த, அவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி அவளை மீண்டும் சிவக்க செய்தபடி சித்து கதவை திறந்தான்.

அலமேலுவுடன் வெளியே சுற்றிவிட்டு வந்திருந்த கதிர்தான் கதவை தட்டி இருந்தான். 'நல்லவேளை கிஸ் சீன் முடிஞ்ச அப்புறம் என் மச்சான் வந்தான். இல்லனா இன்னைக்கு நாம மொக்க வாங்கிருப்போம்'

மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்ட சித்து "கதிர் குட்டி என்னடா தோப்புலா நல்லா சுத்தி பாத்தியா" என அவன் தோளில் கைப்போட்டு அப்படியே அவனை தன்னோடு அழைத்து சென்றுவிட்டான். அவன் காதலி இன்னும் அவன் அளித்த முத்தத்திலிருந்து வெளி வரவில்லை என அவனுக்கு புரியவே அவளை தனியாக விட்டு சென்றான்.

அவன் நினைத்தபடியே வீராவும் கதிர் சித்துவோடு சென்றதை நினைத்து நிம்மதி அடைந்தாள். ஏனெனில் அவள் தற்போது இருக்கும் நிலையில் யாரையும் பார்க்கும் எண்ணம் இல்லை அவளுக்கு. சித்து சென்றபின் இவ்வளவு நேரம் அவன் நிகழ்த்திய சித்து விளையாட்டுகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து இம்சை செய்ய, அந்த சுகநினைவுகளோடு அமைதியாக ஒன்றிவிட்டாள் நம் அதிரடி நாயகி.

இத்தனை நாட்கள் கம்முனு இருந்துவிட்டு இப்போது கும்முனு ஒரு முத்தத்தை போட்டுவிட்டு வந்த சித்துவின் நிலையை சொல்லவா வேண்டும். ஐயா வெட்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு கன்றாவியான எக்ஸ்பிரஷனை முகத்தில் வைத்தபடி மனதிற்குள் விங்சே இல்லாமல் வானத்தில் பறந்துக் கொண்டிருந்தான்.

எதிரில் மிதந்து வந்த அரவிந்தையும் கண்டுக் கொள்ளவில்லை, நட்ட நடுவீட்டில் ஒரு லிட்டர் சோகத்தை முகத்தில் வழியவிட்டு உக்காந்திருந்த அந்த டூ இடியட்சையும் சட்டை செய்யவில்லை. இன்று சித்துவுக்கும் வீராவுக்கும் ரொமாண்டிக் நாளாக நகர அப்படியே சந்திரனும் பூமியில் தன் ஜாகையை பெட்சீட் விரித்து போட்டுவிட்டான்.

"டேய் மாதவா இன்னைக்கு ராத்திரி அந்த பேய் நம்மல பண்ண சொன்ன காரியத்தை அதுவே செஞ்சு இருக்கலாமேடா. நாம எதுக்கு நடுவுல" ஷங்கர் அவன் மனதில் இருந்ததை கேட்டு விட்டான் மாதவன் கேட்கவில்லை அதுமட்டுமே வித்தியாசம்.

அவனுக்கும் அந்த சந்தேகம் மனதை பிரான்டியதுதான். ஆனால் அதை அந்த பேயிடம் யார் கேட்பது.

"ஏன்டா நானும் உன்கூட தானே இருக்கேன். எனக்கு மட்டும் என்ன ஜோசியமா தெரியும். இல்ல அந்த பொம்ம பிசாசுட்டு போய் கேக்குட்டா. நானே அந்தப் பொம்மை சொன்னதை எப்படி செய்யுறதுன்னு குழப்பத்துல இருக்கேன் நீ வெந்த புன்னுல வேல பாச்சாம அந்த பிளான எப்படி எக்சிகுயூட் பண்றதுன்னு எதாவது ஐடியா வந்தா சொல்லு"

அலுத்து போய் மாதவன் பேச 'அதுவும் சரிதான். யோசிப்போம் எதாவது ஐடியா வரும்' என ஷங்கர் அப்படியே அமைதியாகி அவன் இத்தனை நாள் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருந்த அவன் மூளையை பயன்படுத்த ஆரம்பித்தான்‌.

'இப்படி பண்ணலாமா ச்சே ச்சே அது சரியாவராது‌. ம்ம் இல்லை இப்படி பண்ணலாமா' காற்றில் கையை ஆட்டி ஆட்டி கணக்கு போடும் தன் நண்பனை பார்க்கையில் தான் மாதவனுக்கு பயத்தில் இன்னும் வயிறு கலக்கியது.

"மச்சா புடிச்சுட்டேன்டா" அமைதியாக இருந்த இடத்தில் திடீரென ஷங்கர் கத்தியதில் ஒரு நிமிடம் மாதவனின் இதயம் நின்று துடித்தது.

"டேய் நாரப்மயலே எதுக்குடா இப்ப உயிரே போன மாதிரி கத்துர"

"ஐயோ மச்சா எனக்கு ஒரு ஐடியா தோனுது சொல்றேன் கேளு. பேசாம உன் வீட்டு ஆளுங்க திங்கிற சோத்துல மருந்த வச்சுட்டா என்னடா. நம்ம நினைச்ச வேலை சட்டுனு முடிஞ்சிடும்ல"

எதோ அதிசயத்தை கண்டுபிடித்ததை போல் ஷங்கர் பேசுவதை கேட்டு மாதவனுக்கு அவனை அப்படியே அடிக்கலாமா இல்லை தூக்கி போட்டு மிதிக்கலாமா என்ற எண்ணம் தான் வந்தது.

"டேய் உனக்கு கைப்புடி அளவாவது மூளை இருக்கா இல்ல அதையும் வறுத்து எதுவும் திண்ணுட்டியா. மருந்து கலந்தா அந்த சோத்த நீயும் நானும் சேந்து தானேடா திம்போம். இதுல எங்கருந்து அந்த பொம்ம சொன்னதை செய்யிறது. கூறுகெட்டவனே வேற எதாவது யோசிச்சு சொல்லுடா"

உக்கிரமாக பேசிய மாதவனை முறைத்த அவன் நண்பன் "ஆமா இவனுக்கு மட்டும் மூளை முக்காக்கிலோ இருக்கு பாரு. அவனும் ஒன்னத்தையும் யோசிச்சு கிழிக்க மாட்டான், பரதேசி நாம ஒரு ஐடியா சொன்னாலும் நொட்டை சொல்லுறது"

தன் ஐடியாவை மாதவன் ஏற்றுக் கொள்ளாத காண்டில் காட்சில்லாவைப் போல் பொசுங்கித் தள்ளிய ஷங்கர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். வெகு நேரம் அதுஇதுவென கண்டதையும் போட்டு யோசித்து இந்த டூ இடியட்ஸ் குரூப் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது‌.

"எலேய் ஷங்கரு இது எல்லா நமக்கு ஒத்து வராதுடே. ஒரு பிளானு இருக்கு, அறுத பழைய பிளானா இருந்தாலும் இது கொஞ்சம் சரிபடும்"

தீவிரமாய் பேசிய நண்பன் அந்த பிளானை சொன்னதும் ஷங்கரே காரித்துப்பிவிட்டான். ஆனால் கைவசம் வேறு பிளானும் இல்லாத காரணத்தால் இதுலையே இருவரும் பிக்ஸாகி அதற்கு தேவையான சாமான்களை தயார் செய்துவிட்டு, தக்க சமயத்திற்காய் காத்திருந்தனர்.

வழக்கம் போல் நம் சித்தார்த் வீட்டில் இன்றும் இரவு உணவு ஜகஜோதியாய் நடைபெற, இங்கே நம் சித்துவோ வீராவை கண்களால் காதல் செய்து காதல் மன்னனான கியூபிட்கே டப் கொடுத்தபடி இருந்தான்.

'ஐயோ எல்லாரும் சட்டுப்புட்டுனு தின்னுட்டு எடத்தை காலி பண்ணுங்களே' இவர்களுக்கு மத்தியில் இப்படி மனதிற்குள் புலம்பியபடி அமர்ந்திருந்தது வேறு யாரும் இல்லை நம் டூ இடியஸ்தான்.

ஒருவழியாக டைனிங் டேபிளில் டிராமா எல்லாம் முடிந்து ஒவ்வொருவராய் இடத்தை காலி செய்து, அவரவர் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர். இப்போது தான் அந்த டூ இடியட் நண்பர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. தங்கள் பிளானை எக்சிகியூட் செய்ய, வீட்டில் மட்டுமல்லாது ஊரே தூங்கும் வரை காத்திருந்து நடு இரவிலே தங்கள் வேலையை செய்ய ரெடி ஆகிவிட்டனர்.

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 35

குண்டூசி விழுந்தால் கூட பட்டென சத்தம் கேட்டுவிடும், அந்த அளவு மிக மிக அமைதியாக இருந்தது ஊர் வத்தலகுண்டு. அதை வைத்தே கூறிவிடலாம் அங்கே நேரம் தற்போது நள்ளிரவை நோக்கி நகர்ந்துவிட்டதென.

இந்த அர்தஜாமத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் பயத்தில் வேர்த்து வழிந்தபடி பூனை நடைப்போட்டு அந்த இருட்டில் செடி கொடிகளுக்கு இடையே பதுங்கி பதுங்கி வந்தது. நல்ல தடிதடியாக பார்ப்பதற்கு எதோ ஆம் ரெஸ்லிங் போட்டிக்கு பதிவு செய்ய வந்ததைப் போல் இருந்தது இந்த கும்பல்.

அப்படியே கொஞ்சம் உத்து பார்த்தால் அந்த கும்பலில் ஒவ்வொருவரின் காலும் தையத்தக்கா என கதகளி ஆடியபடி வருவதை நாம் காணலாம். இதை எதையும் கண்டுக்காமல் அவர்களுக்கு முன்னால் எதையோ சாதிக்க போகும் வெறியை கண்ணில் தேக்கி வைத்து வந்தார் நம் பக்கத்து ஊர் பெரிய மனிதரான கேசவன்.

என்னதான் நம் கேசவன் கேமரூனின் டைட்டானிக் கப்பலின் அளவுக்கு ஒரு பெரிய பிளானை போட்டு வந்திருந்தாலும், அவருடைய பருப்பு எல்லாம் நம்ம சைக்கோ பொம்மையிடம் வேகாமல் போகபோகிறதென பாவம் அவருக்கு தெரியாதே.

சொந்த ஊர் பக்கத்து ஊர் என சுத்துபட்டு பதினெட்டு பட்டியிலும் இந்த வீட்டின் எஸ்டிடி தெரிந்த அனைவரும் கேசவன் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த வேலைக்கு வர மாட்டோம் என சொல்லிவிட மதுரையிலிருந்து ஆட்களை இறக்கியிருந்தார் மனிதர்.

அப்படி வந்திருந்த தடி தாண்டவராயன்களுக்கு வந்தவுடன் இந்த வீட்டின் சிறப்புகள் காதுகளுக்கு வந்தும், 'நாம பாக்காத பேயா, நம்ம ஊருல இல்லாத பிசாசா. வாங்கடா போவோம்' என வீரவசனம் பேசி வந்திருக்க, உண்மையில் நம் மினி அரண்மனையை நேரில் கண்டு நடுங்கி விட்டனர்‌.

கேசவன் அவர் கையில் வைத்திருந்த சாவியை போட்டு அந்த வீட்டின் பின்வாசல் கதவை திறக்க போக

"ஐயா! காலைல இருந்து எனக்கு என்னவோ சகுணம் எதுவும் சரியாவே படலைங்க. இந்த ஊட்டுக்குள்ள போவ வேணாமே. பேசாம இப்படி பண்ணலாமா.. நாம எல்லாரும் இப்ப போயிட்டு பொறவு வருவோமா?"

திட்டு விழும் என நிச்சயமாக தெரிந்தும் கடைசி முயற்சியாக கேட்டு வைத்தார் கேசவனின் கணக்குப் பிள்ளை. திட்டு வாங்குவதை விட உசுரு முக்கியம் இல்லையா.

"யோவ் கணக்கு என் வாய நல்லா கெளராதயா. கதவ தெறக்க முன்ன இப்படி அபசகுணம் அது இதுன்னு பேசுற. பேசாம உன் திருவாய மூடிட்டு உள்ள வரியா இல்ல உன்ன மொதல்ல காலி பண்ணிட்டு நான் உள்ள போகவா"

கேசவன் கடுங்கோவத்தில் கத்திவிட்டு கதவை திறந்து அசால்டாக தன் லெப்டு லெக்கை வைக்கும் நேரம்

'ஆத்தா மாரியாத்தா காளியாத்தா உள்ள என்ன நடந்தாலும் என்னமட்டும் காப்பாத்திவிட்டுறு ஆத்தா. அப்படி மட்டும் பண்ணிட்டன உனக்கு நான் தீ மிதிச்சு கெடாவே வெட்டுறேன் ஆத்தா' கணக்கு மனதிற்குள் மினி வேண்டுதலையே போட்டுவிட்டார்.

இப்படி வரும்போதே அமளிதுமளியுடன் ஒரு அணி உள்ளே நுழைய, வீட்டிற்குள் இருக்கும் அந்த டூ இடியட்ஸ் கூட்டனியோ தங்கள் மொக்கை பிளானை எக்சிகுயூட் செய்ய தக்க பிராப்பர்டிஸோடு தயாராகி இருந்தனர். இதில் வெற்றி யாருக்கு என சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

காதல் மயக்கத்தில் நல்ல உண்ட மயக்கமும் சேர கவுந்தடித்து தூங்கியபடி சொர்கத்துக்கு டிராவல் செய்துக் கொண்டிருந்தான் நம் ஹீரோ. முதலில் இந்த வீட்டில் கவுக்க வேண்டிய விக்கெட் அவன்தான் என தெரிந்ததில் அந்த அறையை தேர்வு செய்து வந்திருந்தான் மாதவன்.

சித்துவை ஆஃப் செய்ய தன் முதுகிற்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த தன் பிராப்பர்ட்டியை எடுத்து பார்த்து எச்சிலை முழுங்கி வைத்தான்‌.

"மச்சான் ரொம்ப யோசிக்காதடா ம்ம் ஆரம்பி" இதில் ஹஸ்கி வாய்ஸில் சங்கர் வேறு ஏத்தி விட

'அப்பனே முருகா ஈஸ்வரா இந்த வேலைய சக்சஸ் பண்ணிவிடுப்பா' ஊரில் தூங்கியிருந்த தெய்வத்தை எல்லாம் அழைத்து தன் கையை பார்த்தான். அதில் இருந்தது ஒரு சிறிய கர்ச்சீப்.

இந்த இரண்டு பேரின் மூளைக்கும் தோன்றிய பிளான் வேற ஒன்னும் இல்லை மயக்கமருந்து தெளித்த கர்ச்சீப் தான். எல்லாம் பல நூறு படங்களை பார்த்து வைத்ததில் வந்த ஐடியாதான் இதுவே. ரொம்ப மொக்கையாக இருந்தாலும் இந்த இருவரின் மூளைக்கு இந்த பிளான் வந்ததே உலக அதிசயம் எனும் போது சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை.

சரி வேலையை ஆரம்பிப்போம் என நாலு அடி தள்ளி நின்றுபடி அந்த கர்சீப்பை சித்துவின் முகத்தில் வைத்து அமுக்கி நசக்கு நசக்கு என அவன் முகத்தில் நாலு வாட்டி தேய்த்து வேறு எடுத்தான் மாதவன்.

ஆனால் சித்துவோ "ஆஹா ம்ம்ம்..." என தூக்கத்திலே மூச்சை இழுத்துவிட்டு சினுங்கி, அவன் எதிர்பார்த்ததிற்கு மாறாக வேற ரியாக்ஷன்னை தர மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் செய்த வேலையில் அவன் தூக்கத்திலிருந்து எழுவது போல் தெரிய, இதற்குமேல் இருப்பது ஆபத்து என பயந்து இருவரும் தங்கள் அறைக்கே மீண்டும் ஓடிவிட்டனர்.

"என்னடா அவன் மயங்கவே இல்ல. என்ன எழவடா வாங்கிட்டு வந்த கடையில சரியாத்தான குடுத்தான்" பதற்றத்தில் மாதவன் கத்தினான்.

"மச்சான் நான் சரியா தான்டா வாங்கிட்டு வந்தேன். ஒரு தடவைக்கு நாலு தடவை கேட்டு பாத்துதான் வாங்குனேன். ஒருவேளை அந்த கடக்காரன் எதும் ஏமாத்தி இருப்பானோ" சங்கர் தன் போக்கில் சொல்லி நிறுத்த,

"என்னத்த சரியா வாங்கிட்டு வந்தியோ" என திட்டிய படி மாதவன் அந்த கரசீப்பை மோந்து பார்க்க அவன் உபயோகப்படுத்தும் பெர்ஃப்யூமின் வாசனை அமோகமாக அதில் வந்தது.

அதில் குழம்பிய மாதவன் திரும்பி மேசையை பார்த்தான். அங்கே அவன் பயன்படுத்தும் பெர்ஃப்யூம் பாட்டில் பல் இளித்தபடி இருந்தது. அங்கே அந்த பெர்ஃப்யூம் பாட்டிலை தவிர வேறெதுவும் இல்லாமல் இருக்க, குழம்பிப்போய் கீழே இருந்த டிராகளை திறந்து பார்த்தான் மாதவன். அவர்கள் வாங்கிய மயக்கமருந்து ஸ்ப்ரே அதில் பத்திரமாக தூங்கிக் கொண்டிருந்தது‌.

பதற்றத்தில் அந்த அரை போதை ஆசாமி மயக்கமருந்து ஸ்ப்ரேவுக்கு பதில் சென்டை அடித்து வைத்திருக்கிறது என கால தாமதமாக அப்போதுதான் புரிந்து கொண்ட மாதவன்

'ஐயோ ராமா! ஒரு மொக்க பிளானு இதக்கூட சரியா செய்ய துப்பில்லாத ஒரு கூமுட்டைய வச்சுகிட்டு இன்னைக்கு ராத்திரிய நான் எப்படி கடத்த போறனோ' என மனதிற்குள் அழுது வெளியே தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டான்.

"டேய் மாதவா என்னடா உக்காந்துட்ட, அந்த கடை மருந்து சரியில்லை போல வேற கடைக்கு போய் மருந்து வாங்கிட்டு வந்து வேலைய ஆரம்பிப்போம் வாடா. நேரமாகுது பாரு" என்று வேற கூப்பிட ரத்தக்கண்ணீரே வந்துவிட்டது மாதவனுக்கு‌.

"சங்கரு ராசா என் உசுரு ஏற்கனவே இப்பவோ அப்பவோனு ஊசலாடிட்டு இருக்கு. அதை நீ மொத்தமா முடிச்சு விட்டுட்டு போயிடாதடா"

சங்கரிடன் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியேவிட்டான் மாதவன். ஆனால் பார்த்திருந்த நம் அரைவேக்காடு சங்கருக்கு ஒன்னும் புரியாமல் போக தலையை செறிந்தபடி நின்றான்.

'இதுக்கு மேல இவனை நம்புனா வேலைக்கு ஆவாது. நேரத்தை கடத்தாம நாமலே வேலைய பாப்போம்' என முடிவெடுத்து அந்த மயக்கமருந்து பாட்டிலையே தூக்கி சித்துவின் அறைக்கு சென்று சேர்ந்தான் மாதவன். அதேப்போல் வெற்றிகரமாக அவன் முகத்தில் அந்த ஸ்ப்ரேயை அடித்து அவனை மயங்க செய்து, வீட்டிலிருந்த மற்றவர்களையும் மயங்க செய்தான் கடைசியாக.

"அப்பாடா ஒரு வழியா எல்லாரு மயங்கிட்டாங்க. மச்சான் எல்லாம் சரி இப்ப இவங்க எல்லாரையும் பொம்மை சொன்ன எடத்துக்கு எப்புடிடா கூட்டிட்டு போறது"

"வேற எப்புடி எல்லாரையும் எங்க கார்லையே தூக்கிப் போட்டுட்டு போவ வேண்டியதுதா..."

சங்கரின் கேள்விக்கு பதில் சொல்லும் போதுதான் மாதவனின் மண்டையில் காலையில் அவன் தந்தை அவர்கள் காரை சர்வீசுக்கு அனுப்பிய நினைவு உதயமாக அவன் பேச்சு அப்படியே நின்றது.

பொம்மை வேறு அவன் குடும்பத்தில் இருக்கும் நண்டு நத்தை முதற்கொண்டு அனைவரையும் அள்ளிப்போட்டு வர சொல்லியிருக்க 'இப்ப என்னடா செய்யிறது?' என்றாகிவிட்டது மாதவனுக்கு.

'ஒரு மனுஷனுக்கு ஒருதடவை கண்டம் வந்தால் பரவால்ல. ஒவ்வொரு தடவையும் கண்டாமா வந்தா எப்புட்ரா' மீண்டும் மாதவனின் மைன்ட் வாய்ஸ் இது.

மயக்கமருந்தின் இபெக்ட் இன்னும் இரண்டு மணி நேரமே தாக்குப்பிடிக்கும் என்பது வேறு தக்க சமயத்தில் ஞயாபகம் வந்து மாதவனின் வயிற்றில் புளியை கரைத்தது.

"ஐய்யோ அம்மா என்ன விட்டுரு"

"இனி இந்த பக்கமே நான் வரமாட்டேன்"

"ஐயோ யாராவது என்ன காப்பாத்துங்களே!"

என அந்த நேரம் பல அகோர குரல்கள் மாதவனுக்கும் சங்கருக்கும் கேட்க அடித்து பிடித்து எழுந்து சத்தம் வந்த திசைக்கு சென்று பார்த்தனர். அங்கே சில தடியன்கள் பிளஸ் கேசவன் அவரின் கணக்கு என மொத்தம் பன்னிரண்டு பேர் பலத்த அடியுடன் தரையில் கிடக்க, இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

வீரவசனம் பேசிவந்த நம் கேசவன் இப்படி தரையில் செத்த தவளை போல் கிடக்க காரணம் என்னவென சில மணித்துளிகள் முன்னே சென்று பார்ப்போமா மக்களே!

இங்கே வீட்டினுள் கேசவன் காலை வைக்கும் நேரம் ஊரின் கடைக்கோடியில் இருந்த பொம்மைக்கு டிரிங் என காலிங்பெல் அடித்ததைப்போல் உள்ளே வந்தவர்கள் தெரிந்துவிட்டனர். இப்படி அத்துமீறி தன் வீட்டிற்கு வருவோரை சும்மா அனுப்பும் வழக்கம் நம் பொம்மைக்கு இல்லையே. எனவே அதுவும் தன் வேலை ஆரம்பித்தது.

வீட்டின் பின்கதவை ஒட்டியே சமையல் அறை இருக்க, முதல் ஆயுதமாக அங்கிருந்து சப்பாத்தி கட்டை ஒன்று பறந்து வந்து டங்கென ஒரு தடியனின் தலையை பதம் பார்க்க, விளையாட்டு அமோகமாக ஆரம்பமாகியது.

அதில் பின்னால் இருந்தவர்கள் பதறி அங்கிருந்து போகிறோம் என அலற, "அதெல்லாம் முடியாது எல்லாரும் ஒன்னாத்தான் போவனும்" என அலறிய குரல்களை கண்டுக்கொள்ளாது அலேக்காக உள்ளே தள்ளி சென்றார் நம் கேசவன்.

அப்படி உள்ளே வந்தவர்கள் முன்னே சடாரென புகை போன்ற ஒரு கரிய உருவம் வந்து குதிக்க, "ஆஆஆ....." என அலறியபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஓடிவிட்டனர்.

ஏன் இவ்வளவு நேரம் தைரியமாக வந்திருந்த நம் கேசவனே பயத்தில் உயிரே போவதைப் போல் அலறியடித்து ஓடிவிட்டார். ஆனால் என்ன செய்ய காலம் கடந்துவிட்டதே! நம் பொம்மைக்கு உள்ளே வந்தவர்களை அப்படியே வெளியே அனுப்பும் பழக்கம் என்றுமே இல்லை எனும்போது அவர்கள் தலை எழுத்தை யாரால்தான் மாற்ற முடியும்!

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 36

பொம்மையின் கைவண்ணத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் மூஞ்சி முகரையெல்லாம் வீங்கி விழுந்து கிடக்க, 'இவனுங்க யாருடா இடையில மலமாடு கணக்கா கெடக்குறானுங்க' என கடுப்பாய் பார்த்து வைத்தான் மாதவன்.

அவனை சுற்றி, அந்த மாளிகையை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்னவென மாதவனுக்கு புரியவில்லை என்றாலும் எதோ பெரிய விஷயம் இதுக்கு பின்னால் இருக்கென அவனுக்கு புரிந்துதான் இருந்தது.

"ஹாஹாஆஆ.... மாதவன் இங்க என்ன பண்றீங்க, தூங்கலையா. ஆமா யாரு இந்த கும்பல் நம்ம வீட்டுக்கு நடுவுல மல்லாக்க படுத்து கெடக்குறாங்க"

கீழே கிடந்தவர்களை பார்த்திருந்த மாதவனுக்கு அருகில் ஒரு குரல் கேட்க, அந்த குரலை கேட்டு அதிர்ந்த மாதவன் பழைய இரும்பு பீரோவின் கதவை போல் தன் தலையை மெல்ல திருப்பி பார்த்தான்.

அங்கே தூக்ககலக்கத்தில் கொட்டாவி விட்டுக் கொண்டு கண்ணை தேய்த்தபடி நின்றிருந்தான் நம்முடைய ஹீரோ சித்தார்த். அவனை பார்த்ததும் மூளை நரம்புகள் எல்லாம் ஸ்தம்பித்துபோய் நின்று விட்டான் மாதவன்.

'யாரு சாமி இவன் என்ன செஞ்சாலும் அசராம வந்து நிக்கிறான். மயக்கமருந்து அடிச்சு முழுசா ஒரு மணி நேரம் தான் இருக்கும். அதுக்குள்ள எந்திருச்சுட்டான் ஒருவேளை நாம இவன்மேல பாவம் பாத்து மருந்த கம்மியா அடிச்சிட்டமா?'

மைண்ட் வாய்சில் மாதவன் அதிர்ந்த நேரம் சித்துவின் பின்னால் மெல்ல வந்த அவன் நண்பன் சங்கர், சித்துவின் தலையில் ஒரு கட்டையை வைத்து டமாலென அடித்து அவனை மீண்டும் மயக்கமடைய செய்தான். அதனை வாயை பிளந்து பார்த்த மாதவன் மயங்கி விழுந்த சித்துவை தன் கையில் தாங்கியபடி

"டேய் சங்கரு ஏம்லே அவன் மண்டைய கட்டைய கொண்டு அடிச்சு? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட போவதுடா. அப்புறம் போலீசு கேசு ஆகிபுடும்டா" சித்துவிற்கு எதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் மாதவன் பதறினான்.

"பின்ன என்னடா நாமலே நம்ம உசுர அந்த சைத்தான் பொம்மட்ட இருந்து காப்பாத்த போராடிட்டு இருக்கோம். கொப்பமவனே இவன் என்னடான்னா மயக்கமருந்து அடிச்சும் எந்திரிச்சு வரான். எது பண்ண போனாலும் 'நான்தான் கௌசிக்னு' வந்து நிக்கிறான். மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்கான் உன்ற மாமா மவன்" மாதவனை சிறுதும் சட்டை செய்யாது குமுறினான் சங்கர்.

"அப்புறம் உன்ற மாமன் மவனுக்கு ஒன்னும் ஆவாது ராசா. நம்ம செத்து மேல போனாலும் அவன் திவ்யமா இருப்பான். வேணும்னா பாரு இந்த மயக்கத்தில இருந்தும் கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு உக்காந்துக்குவான். ஆனா அதுக்குள்ள வீட்ல இருக்க எல்லாரையும் நாம அங்க எப்படி பேக்கப் பண்ணி கொண்டு போறதுன்னு சொல்லித் தொல"

சங்கர் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. அரவிந்த் எனும் மனிதர் ஊருக்கே விபூதி அடித்து ஆட்டையைப் போடும் திறன் கொண்டவர் எனும்போது, அவருடைய புயூர் பிளட்டில் வந்த சித்து அவருக்கு சற்றும் சளைத்தவன் இல்லையே.

எனவே இவன் எழுவதற்குள் எல்லாரையும் கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவு செய்தான் மாதவன். ஆனால் எப்படி என்பதுதான் மிக குழப்பமாக இருக்க, தன் முன்னால் கிடந்த தடியன்கலை பார்த்தான்.

சற்று யோசித்தவன் பின் திரும்பி சங்கரை பார்த்தான். மீண்டும் தடியன்கலை பார்த்து, டூ டூ சார் போர் எனக் காற்றிலே ஒரு கணக்கை போட்டு ஒரு முடிவுக்கு வரும் நேரம் அவன் முகம் ஆயிரம் நிலவின் பிரகாசத்தை பெற்றுவிட்டது.

"ஹாஹாஹா..." மனதிற்குள் சிரிப்பதாய் நினைத்து வெளியே சிரித்து வைத்த தன் நண்பன் மாதவனை தற்போது பயத்துடன் பார்த்தான் சங்கர்.

இங்கே நடக்கும் குழப்பத்தில் மாதவனுக்கு எதுவும் ஆகிவிட்டதோ என ஒரு நிமிடம் பயந்துவிட்டான் அவன். ஆனால் தன் சிரிப்பை நிறுத்தாத மாதவனின் மூளைக்கும் ஒரு விசித்திர யோசனை வந்துவிட, அதை அப்படியே லபக்கென கேட்ச் செய்து விட்டான். அது அப்படி என்ன பெரிய லாட்லபக்தாஸ் யோசனைன்னு இப்போ பார்ப்போம்!

*****************

"மச்சா முடியலைடா மூச்சு வாங்குது. இன்னும் எவ்ளோ தூரம்டா இருக்கு. இப்படி பாதை யாத்திரையாவே கூட்டிட்டு போறியே, ஒரு வாடகை ஆட்டோவாவது புடியேன்டா"

ரேபிஸ் வந்த நாய் போல் மூச்சு வாங்கிய சங்கர் 'என்ன விட்டா நான் இப்படியே ஓடிருவேன்' என்ற நிலையில் இருந்தான். அவன் இப்படி அலறுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஊரின் வடக்கு கடைசியில் இருக்கும் இவர்கள் மினி அரண்மனையிலிருந்து தென் கடைசியான ஊரின் எல்லைவரை, கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் நடக்கவைத்தே கூட்டி வந்தால் அவனும் தான் என்ன செய்வான்.

பார்ப்பதற்கு வத்தலக்குண்டின் இந்த கிராமம் சிறிய ஊராக தெரிந்தாலும் அதன் பரப்பளவு சற்று அதிகம்தான். அதுவும் இவர்கள் வருவது ஊரின் சார்ட்கட்களை பிடித்தே. அப்படியும் ஐந்து கிலோமீட்டரை தொட்டுவிட்டது தூரம்.

தனியாக நடந்து வந்திருந்தால் ஒருவேளை இந்த தூரம் எதுவும் பெரிதாய் தெரிந்திருக்காதோ என்னவோ, இவர்கள் வருவதோ ஒரு மினி படையுடன் எண்கையில் கொஞ்சம் சிரமமாக போனது.

ஆமாம் நம் மாதவன் மூளையில் அத்தி பூத்தது போன்ற உதித்த அந்த யோசனை பெரிதாக ஒன்றும் இல்லை. அங்கு அடிவாங்கி கிடந்த அப்ரசென்டுகளை பிடித்து, வீட்டிலிருந்த அவன் குடும்பத்து ஆட்களை ஆளுக்கு ஒரு ஆளாக அவர்கள் கையில் கொடுத்து தூக்கிக் கொண்டு வர வைத்துவிட்டான்.

அவன் சொல்லும் பேச்சை அவர்கள் மீறினால், எங்கிருந்து அடிவிழுகிறது என தெரியாமல் இவ்வளவு நேரம் அடி வாங்கியது போல் இனியும் தர்ம அடி விழும் என பயமுறுத்தி அந்த ஆட்களை அழைத்து வந்திருந்தான்.

பணத்திற்காக இவ்வளவு தூரம் வந்திருந்த ஆட்கள், இப்போது உசுரை மட்டுமாவது காப்பாத்தி ஊர் போய் சேர மாதவன் சொன்னதிற்கு எல்லாம் தலையை ஆட்டி அவன் சொன்ன வேலையை செய்ய ஒத்துக் கொண்டனர். அதன்படி இப்போது சித்து, வீரா, கதிர், கார்மேகம் மற்றும் அலமேலு என வீட்டிலிருந்த ஐவைரயும் ஐந்து நபர்கள் தூக்கிக் கொண்டு வந்தனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் பொம்மையின் உபயத்தால் கேசவன் ஏரில் மிதந்து வந்ததுதான்.

"ஏன் மச்சான் இந்த ஆளு கேசவன பறக்க வச்சு கூட்டியார மாதிரி, அந்த பொம்ம இவங்களையும் தூக்கிட்டு போயிருக்க வேண்டிதானேடா‌. ஏன்டா நம்ம ஜீவன வாங்குது" சங்கர் தன் புலம்பலை தொடர்ந்தபடி வந்தான்.

"டேய் சங்கரு! உன் திருவாய மூடிட்டு கொஞ்சம் பேசாமதா வாயேன்டா. உன் பேச்சு சத்தத்தை கேட்டு ஊருல இருக்க எவனாவது முழிச்சு தொலைக்க போறான். அப்புறம் நம்ம பண்ற வேலைய பாத்து ஒடனே போலீசுக்கு போன போட்டுப்புடுவான்"

மாதவனின் அதட்டலில் "நீ வேற ஏன்டா நம்ம நிலைமை தெரியாத மாதிரி பேசுற. ஊருகாரனுங்க முழிக்க முன்னாடி உன்ற மாம மவன் முழிச்சுப்புடுவானோன்னு எனக்கு பக்கு பக்குங்குதுடா. அதான் வேகமா போயி சேர ஒரு வண்டி கிண்டி புடிச்சு இருக்கலாம்னு ஒரு கவலைல சொன்னேன்டா"

சங்கர் சொன்னதில் நியாயம் இருக்கவும் "அது என்னவோ சரிதான்டா. ஆனா நான் இந்த நடுராத்திரில வண்டிக்கு எங்கடா போவேன்" என பாவமாய் கையை விரித்தான் மாதவன்.

இவர்களை எப்படி மயக்கமடைய செய்வது என்பதிலையே முழு கவனத்தையும் வைத்த நம் டூ இடியட்ஸ் எப்படி டிராவல் செய்ய போகிறோம் என பிளான் பண்ணாது விட்டுவிட்டனர்‌.

அதன் வெளிப்பாடாக இப்போது தஸ்சு புஸ்சென வாயில் மூச்சை வெளியேற்றியபடி, ஒரு வழியாய் அவர்களை பொம்மை வர சொல்லிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இடம் வேறு எதுவும் இல்லை, பல உயிர்களை காவு வாங்கியிருக்கும் அந்த ஊர் எல்லையில் இருக்கின்ற தண்ணீர் இல்லா வட்டகிணறு தான்.

"அந்த பொம்மை பேய் சொன்ன எல்லை கெணத்துக்கு வந்தாச்சு. இதுக்கு மேல எங்கடா போறது" என்னவோ பேய் தான் செய்யப்போவது அனைத்தையும் மாதவனிடம் சொல்லிவிட்டு செய்வதைப் போல் சங்கர் அவனிடம் கேட்டு வைத்தான்.

இவர்கள் எல்லாரையும் இந்த கிணற்றிற்கு அருகே கொண்டு வர சொல்லி பொம்மை பேய் சொல்லியிருக்க அதே போல் சரியாக வந்துவிட்டனர். அதற்குமேல் எங்கே போகவென தெரியாது இவர்கள் முழித்து நிற்கும் நேரம்

"டேய் சொல்லாக்குட்டிகளா! வந்துட்டீங்களா. சபாஷ்டா சபாஷ்! என் வேலைய சரியான ஆளுங்கள நம்பிதான் தந்திருக்கேன்னு இப்ப நம்புறேன். இப்ப என்ன பண்றீங்க அப்படியே அந்த கெணத்துக்கு உள்ள எறங்குங்க. நான் இருக்க இடத்துக்கு வரதுக்கு வழி தானா தெரியும்"

திடீரென அசரீரியாக வந்து பொம்மை சொல்லி செல்ல மாதவனுக்கும் சங்கருக்கும் மாரடைப்பு வராத குறைதான். ஏனெனில் இந்த வட்டக்கிணறு எத்தனை உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என கண்கூடாக கண்டவர்களே இருவரும்.

அப்படி இருக்க இந்த பொம்மை பேய் இவர்களை உள்ளையே நுழைய சொல்லியதில் இருவரும் திடமாக நின்றது அதிசயமே. ஆனால் இந்த கிணற்றின் பூலோகம் தெரியாத அந்த ஐந்து அப்ரசென்டுகள் அவர்கள் கையில் இருந்தவர்களுடன் கடகடவென கிணற்றில் இறங்கிவிட்டனர். அவர்கள் சென்றதை பார்த்து அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்று உறுதி செய்த பின்னரே இந்த இருவரும் உள்ளே இறங்கினர்.

என்னே அதிசயம் இத்தனை நாட்கள் முள்ளும் புதறுமாய் கிடந்த பாளும் கிணறு, இப்போது இவர்கள் செல்லும் அளவுக்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாது அங்கே இரண்டு ஆட்கள் உள்ளே நுழையும் அளவு பெரிய துவாரம் அந்த கிணற்றின் அடியில் இருந்தது.

இது எல்லாம் அந்த பேயின் வேலை என உணர்ந்த மாதவனும் சங்கரும் ஆவென வாயை பிளந்தனர். ஏனெனில் அவர்கள் பார்த்த செட்டப் அப்படி. அந்த துவாரத்தின் உள்ளே சென்றால் எதோ ஒரு குகையை போன்ற அமைப்பாய் தெரிந்தது. மேலும் இவர்கள் எங்கே போக வேண்டும் என வழிகாட்டும் வண்ணம் ஆங்காங்கே தீபந்தங்கள் சொறுகபட்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இவர்கள் உள்ளே நடக்க, ஒருவழியாக பொம்மை இருந்த இடம் வந்து சேர்ந்தது. கலர்கலராக தரையில் கலர்பொடிகள் கொட்டியிருக்க, அந்த அசிங்கத்தை சற்று உற்று பார்த்தால் தெரிந்தது அது கோலத்தின் கேவலமான வெர்ஷன் என.

எதோ பில்லி சூனிய பூஜை நடக்கும் இடம் போல் சில பல செட்டப்புகள் வேறு. அதை கண்டு பயமாக வந்தது நண்பர்கள் இருவருக்கும்.

அந்த அகண்ட இடத்தில் ஒரு ஈ கொசு கூட இல்லை. அது வேறு இன்னும் அமானுஷ்யத்தை கூட்ட, வெளியே சொல்லவில்லை என்றாலும் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

ஆனால் அதை எதையும் கண்டுக் கொள்ளாத அந்த ஐந்து அப்ரெசென்டுகளோ தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையின் ஒரு பாகமாக அந்த ஐவரின் கை கால்களை எல்லாம் கட்டி போட்டுவிட்டு, மாதவன் சங்கர் இருவருக்கும் ஒரு பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு அப்படியே வந்தவழி கிளம்பிவிட்டனர்.

"ஆஹா ஆஹா டேய் அலமேலு மவனே மாதவா! எனக்கு இருக்க புத்தில கொஞ்சூண்டு உனக்கும் இருக்கும் போல ஜமாய்ச்சிட்டடா"

அங்கு சென்டராய் ஜம்மென அமர்ந்திருந்த பொம்மையின் பேச்சில் வந்த கோவத்தை மென்று முழுங்கி மாதவன் நிற்கும் நேரம்

"எலேய் மாதவா! அப்புறம் இன்னோரு விஷயத்தை நான் முன்னையே சொல்லன்னு நெனச்சேன், ஆனா மறந்துட்டேன். எனக்கு சில பல பொருள் தேவைபடுது, அப்புடியே போயி அதை சட்டுப்புட்டுனு ரெண்டு பேரும் வாங்கிட்டு வாங்கடா" என ஒரு லிஸ்டை எடுத்துவிட்டது.

அதை கேட்ட மாதவனுக்கும் சங்கருக்கும் 'இவ்ளோ தூரம் மறுபடியும் போயிட்டு வரனுமா' என கண் ரெண்டு நட்டுவிட்டது. அந்த பேயை கொள்ளும் அளவு மனதுக்குள் கோவம் வந்தது இருவருக்கும். ஆனால் அதை அந்த பொம்மை பேயிடம் காட்ட முடியாதே. எனவே தங்கள் கண்ணிலிருந்து வராத கண்ணீரை துடைத்தபடி மீண்டும் வெளியே சென்றனர்‌.

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 37

சொறசொறப்பான பாறை சுவர்கள், அதில் ஆங்காங்கே சிறு ஓட்டையில் தீப்பந்தம் சொறிகியிருக்க, அந்த பந்தத்தின் வழியே நல்ல வெளிச்சமாய் இருந்தது அந்த இடம்.

அந்த பந்தம் இல்லையென்றால் நல்ல கும்மிருட்டாய் இருக்கும் என பார்த்தாலே கண்டுக் கொள்ளலாம். இப்போது சற்று சுற்றி பார்த்தால் தெரிந்தது அது ஒரு குகையென.

இந்த காலத்தில் இப்படி ஒரு இடமா என நாம் ஆச்சரியப்படும் போதே சில நபர்கள் அங்கு நம் சித்து அண்ட் கோவை கட்டி வைத்துவிட்டு சென்றிருக்க,

யாரும் இன்னும் மயக்கத்திலிருந்து எழவில்லை. அதேநேரம் இவர்கள் எதற்கு இங்கு வரவைக்கப்பட்டனர் என தெரியவில்லையே, பார்ப்போம் என்னதான் நடக்கபோகிறதென.

"ஐயோ! அம்மாஅஅ.. என்ன இது உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இப்புடி வலிக்குது. ஆஆஆ.. தலை என்ன வின் வின்னுனு தெரிக்குது"

மெல்லிய குரலில் முனகியபடி உடலை நெளித்து வளைத்து மீதமிருந்த மயக்கத்தையும் விரட்டியபடி எழுந்தான் அரவிந்தின் தவப்புதல்வன் சித்து.

அவன் தலையில் நச்சுனென்று அடித்ததால் தான் இப்படி தலை உடல் எல்லாம் வலிக்கிறது என அப்போதுகூட உணரவில்லை அந்த அரைவேக்காடு. மயக்கம் கலைந்த சற்று நேரம் கழித்தே அவனுடைய சுற்றுப்புறத்தை நன்கு கவனித்தான்.

"என்னடா இது நாம பெட்ரூம்ல தானே நைட் படுத்து தூங்குனோம். இது என்ன இடம்னே தெரில, எதோ குகை மாதிரி இருக்கு. இங்க எப்புடி வந்தோம்"

சத்தமாக புலம்பியபடி தன் கையை தலைக்கு கொண்டுப் போக பார்க்க, கையை அசைக்க முடியவில்லை. அப்போதுதான் புரிந்தது அவனை யாரோ கடத்திவந்து கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள் என.

அதிர்ந்து போனவன், மீண்டும் தன்னை சுற்றி பார்க்க, அவன் மட்டுமில்லாது வீரா, கதிர், அவன் அத்தை அலமேலு, மாமா கார்மேகம் என அனைவரும் இருக்க

"குடும்பத்தோட கடத்திருக்கானுங்க, யாரு பாத்த வேலைடா இது. ஏய் யாராவது இருக்கீங்களா. யாருடா எங்களை கடத்திட்டு வந்து கட்டிப்போட்டு வச்சிருக்கறது. நான் தூங்கிட்டு இருந்த நேரத்தை யூஸ் பன்னி எல்லாரையும் தூக்கிட்டு வந்துட்டீங்க, அதான் என்ன பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியலை. இப்ப கண்ணு முழிச்சிட்டேன் தைரியம் இருந்தா வெளிய வாங்கடா.

எவ்ளோ நேரம் இந்த சிங்கத்தை சிறு கூண்டுல அடச்சு வைப்பீங்க. சிங்கம் கூண்ட உடைச்சிட்டு வெளிய வந்தே தீரும்டா. என் கட்ட மட்டும் இப்ப அவுத்து விடல இந்த இடத்துல ஒரு பிரளையமே வெடிக்கும்டா"

தன்னை சுற்றி யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆஉவென தன் இஷ்டம் போல் சித்து கத்தி கொண்டிருக்க

"தா ச்சை வாய மூடுடா என் வென்று. தொடப்பகட்டைக்கு பேரு பட்டுக்குஞ்சம்னு சும்மாவா சொன்னாங்க. சிங்கமாம்ல சிங்கம் இதை சிங்கம் மட்டும் கேட்டா உன்னை செருப்பு பிய்ய பிய்ய அடிக்கும்டா" என பழக்கப்பட்ட கரகர குரல் ஒன்று கேட்க சைடு வாக்கில் இருந்து வந்தது.

குரல் வந்த திசை பக்கம் தன் தலையை திருப்பி பார்த்தான் நம் நாயகன். அங்கே ஒரு அசிங்கமான கோலத்தின் இல்லை இல்லை அலங்கோலத்தின் நடுவில் நம் நாயகனை பெத்த ரத்தினம் காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

"நைனா நீயா...!"

அதிர்ச்சியில் ஆந்தைப்போல் கண்கள் விரிய, வாயை பிளந்தான் மகன். சித்துவின் வாய் பேச்சை நிறுத்தியிருக்க மூளையோ அதற்கு மாறாய் அதிவேகமாய் வேலை செய்தது. முடிவில் அவன் கண்கள் இப்போது தன் தந்தையை சந்தேகக் கண்ணோடு பார்த்து வைக்க, வாயோ

"யோவ் நைனா என்னயா இது எல்லாம் உன் வேலைதானா. நான் அப்பவே நெனச்சேன்யா, இந்த மாதிரி கோக்குமாக்கான வேலை எல்லாம் உன் ஒருத்தனாலதான் பாக்க முடியும்னு. இப்ப எதுக்குயா எல்லாரையும் இங்க இழுத்துட்டு வந்து கட்டிப்போட்டு வச்சிருக்க"

கோவத்தில் சித்து காட்டுகத்து கத்த, அரவிந்தோ கூலாகவே இருந்தார். சித்து பேசி முடிக்கட்டும் என நினைத்தாரோ என்னவோ, மகன் பேசி முடித்தவுடன் தந்தை ஆரம்பித்தார்.

"என்ன பேசி முடிச்சிட்டியா மை சன். இப்ப நான் சொல்றதை கேக்குறியா. முதல்ல நீ சொன்ன பாத்தியா அது எதுவும் உண்மையில்லை‌. என் குடும்பத்தை நானே கடத்த நான் என்ன லூசாடா.

அதுபோக இந்தா கீழ இருக்கு பாத்தியா இந்த கோலத்துல இருந்து எந்திரிக்க முடியாம நானே காலைல இருந்து கெடக்குறேன். இதுல நான்தான் உங்கள எல்லாம் கடத்த போறனா வயித்தெரிச்சல கெளப்பாதடா"

அரவிந்த் தன் வாயிற்குள் எதையோ அரைத்துக் கொண்டே கடுப்பில் பேச, 'இந்தாளுக்கு எங்க போனாலும் திங்க தீனி மட்டும் எப்புடி கிடைக்குது' என அவர் பேசியதை விடுத்து அவர் கையில் இருக்கும் தீனியயை அவர் மகன் குறி வைத்தான்.

"நைனா எனக்கு ஒரு டவுட்டு. நீ இங்க வந்து மாட்டிக்கிட்டேன்னு சொல்ற. ஆனா எப்புடியா நீ எங்க போனாலும் திங்கறதுக்கு மட்டும் கரெக்டா உன் கைக்கு கெடைக்குது. என்ன இவனுக்கு எதுவும் தெரியாது நம்ம கலர் கலரா என்ன ரீல் சுத்துனாலும் நம்புவான்னு அடிச்சு விடுறியா" நியாயமாய் தான் கேட்டு வைத்தான் மகனும்.

"ப்ச் இவன் ஒருத்தன். என்கூட சோத்துக்கு சண்டைக்கு வரதே இவனுக்கு பொலப்பா போச்சு" சத்தமாய் புலம்பி சலித்துக் கொண்ட அரவிந்த்

"டேய் நா பெத்த கூறுகெட்ட குக்கரு! என்ன எதோ ஒரு சக்தி இங்க அடைச்சு வச்சிருக்குடா‌. நானும் காலைல இருந்து ஏதேதோ செஞ்சு பாக்குறேன் இந்த எடத்தை விட்டு வெளியே வரவே முடில. அதான் இதுக்குள்ளையே உருண்டுட்டு இருக்கேன்‌. ஆனா ஒன்னுடா அது நல்ல சக்தினு நெனைக்கிறேன்‌. ஏன்னா நான் திங்க கேக்குறதை எல்லாம் அது டான் டான்னு கொண்டு வந்து குடுக்குதுடா. சோ நீ கவலைப்படாத மவனே நமக்கு டைம்க்கு கேக்குற டிஸ் எல்லாம் வந்துரும். சாப்டுட்டு ஜாலியா இருக்கலாம்"

தின்பதற்கு நல்ல சோறு தீனி என வகைவகையாய் போட்டதால் தன்னை அடைத்து வைத்திருந்த பொம்மைக்கு நல்ல சக்தி என அரவிந்த் சர்ட்டிபிகேட் வாசிக்க,

"யோவ் யோவ் தகப்பா உனக்கு அறிவு இருக்கா இல்லையாயா. உன்ன காலைல இருந்து இங்க அங்க அசைய விடாம மந்திரம் போட்டு வச்சிருக்காங்க. திங்க சோறு போடவும் தப்பிக்க கூட பாக்காம நல்லா வயிறு முட்ட தின்னுட்டு விருந்து கொண்டாடிட்டு இருந்துருக்க.

நானே நம்ம குடும்பத்தை பார்சல் கட்டி தூக்கிட்டானுங்களேன்னு பதறி போய் இருந்தா, நீ என்னமோ என்னையும் மாமியார் வீட்டுக்கு வந்த மாதிரி விருந்து கொண்டாட சொல்ற. உன் மனசுல என்னதான்யா நினைச்சிட்டு இருக்க"

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சித்து வெறியாகிவிட்டான் அவன் தந்தையின் பேச்சில். பின்னே இருக்காதா அரவிந்திற்கு வேணால் இது அவருக்கு நன்கு தெரிந்த ஊராக இருக்கலாம், ஆனால் நம் சிட்டியில் வளர்ந்த சித்துவிற்கோ வந்ததிலிருந்து நடந்ததை பார்த்ததில் இது படு பயங்கர ஊராகதான் தெரிந்தது.

இதில் குடும்பத்துடன் அதுவும் அரவிந்தின் ஆவியையே ஒருவர் கேட்ச் பிடித்து அடைந்திருக்கிறார் எனில் நமது நிலைமை கவலைக்கிடம் என நினைத்து விட்டான். இவர்களை எல்லாம் ஆட்டி வைப்பது மனிதன் அல்ல ஒரு பொம்மை என தெரிந்தால், அதுவும் இவர்களை போல் ஒரு மொக்கை பீஸ்தான் என தெரியும் போது சித்துவின் நிலை என்ன ஆகுமோ.

"சரி அதைவிட்டுட்டு, உன்னை என்னை நம்ம எல்லாரையும் இங்க கட்டி போட்டு வச்சது யாரு அதையாவது சொல்லித்தொல"

"ஐம் வெரி சாரி மை சன். நானும் ரொம்ப நேரமா அதையும் டிரை பண்ணி பாத்துட்டேன், என்னை கடத்துனது யாருனே கண்டுபிடிக்க முடியல. என் சக்திய மீறின பெரிய சக்தியா இருக்குடா மவனே"

அரவிந்த் பாவமாய் கையை விரித்துவிட, 'இதுக்குமேல இந்த ஆள நம்புனா கதைக்கு ஆவாது கூண்டோட பரலோகம் போக வேண்டியதுதா. நாமளே எதாவது முயற்சி பண்ணுவோம்' என நினைத்த சித்து தன் கையில் கட்டப்பட்டிருந்த கயிரை அவுக்க பார்க்க

ம்ஹூம் அதுவோ ஒரு இஞ்ச் கூட அசையவில்லை. 'என்னடா பரமேந்திரா இது நமக்கு வந்த சோதனை' என குழப்பத்தில் சித்து சோர்ந்து போய் அமரும் நேரம் வீரசுந்தரி மயக்கத்திலிருந்து எழுந்து விட்டாள்.

சித்துவை போல் அவளும் தன்னை சுற்றி கவனித்துவிட்டு, அவர்கள் கடத்தப்பட்டதை உணர்ந்தவள்

"சித்து இது என்ன இடம், எப்படி நாம இங்க வந்தோம்?"

படங்களில் எப்போதும் கேட்படும் டயலாக்கை வரிமாறாமல் வீராவும் அப்படியே கேட்டு வைத்தாள். சித்துவும் அவன் எழுந்தது முதல் இப்போதுவரை அவன் கண்டவற்றை அவளிடம் கூற, வீரா அரவிந்தை அப்போதுதான் கவனித்தாள்.

"ஐயோ அங்கிள்! நீங்களும் இங்கதான் இருக்கீங்களா. உங்களை காலைலிருந்து நம்ம ஏரியா பக்கமே காணோம்னு உங்க புள்ளைட்ட அப்பவே சொன்னேன். எங்க இவர் நீங்க பக்கத்துல எங்கையாவது போயிருப்பீங்க வந்திருவீங்கன்னு சொல்லிட்டு விட்டுட்டாரு. இப்ப நம்ம குடும்பத்துல எல்லாத்தையும் தூக்கிட்டாங்க. யாரா இருக்கும் அங்கிள். உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா"

வீரா சித்து கேட்ட அதே கேள்வியை கொஞ்சம் மாற்றி கேட்டு வைக்க, தற்போதும் அப்பாவி போல் கையை விரித்தார் அரவிந்த்.

எங்கே இருக்கோம் எப்படி வெளியே போவது என எதுவும் தெரியாமல் சித்து வீரா இருவரும் முழிக்க, அரவிந்த் அதை பற்றி கவலைப்பட்டதுப் போல் எல்லாம் தெரியவில்லை. அவர் எப்போதும் போல் ஹாயாகவே அமர்ந்திருந்தார்.

அதேநேரம் தன் கையில் கட்டியிருந்த கயிற்றை அசைத்து பார்த்த வீரா, ஏதேதோ செய்து இரண்டு நிமிடத்திற்குள் அவிழ்த்துவிட்டாள்.

பெண் தானே என சற்று அசால்ட்டாக அந்த மாதவனின் அப்பரசென்டீஸ் வீராவை குறைத்து மதிப்பிட்டு கயிற்றை ஏனோதானோவென கட்டி சென்றிருக்க, அது அவள் கையை இரண்டு அரக்கு அரக்கியதில் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது.

"வாவ் வீராம்மா சூப்பர்மா. மயக்கத்திலிருந்து எழுந்திருச்ச உடனே கை கட்டையெல்லாம் கழட்டி போட்டுட்ட. பாருடா என் உதவாக்கரை மவனே, என்ற மருமவட்ட இருந்து இதெல்லாம் கத்துக்கோ"

சித்துவை டம்மி பீசாக்காக்கும் வேளையில் அரவிந்த் கால இடம் பார்க்காது இறங்கிவிட

"யோவ் தகப்பா அந்த கோலத்துல அடைபட்டு கெடக்குறப்பக்கூட உன் வாய் அடங்கமாட்டேங்குதுல. நீ இப்புடியே பேசிட்டு இருந்த உன்ன அடச்சு வச்ச அந்த மந்திரவாதியோ இல்ல வேற எந்த சக்தியோ அதை வச்சே உன்ன ஜென்மத்துக்கும் இந்த இடத்தைவிட்டு நகரவிடாம நானே செஞ்சிருவேன் பாத்துக்க"

சித்து தன் பங்கிற்கு அவனும் ஆரம்பித்துவிட்டான். இத்தனை நாட்களில் இவர்களை அடக்கும் விதம் தெரிந்து வைத்திருந்த வீராவோ

"ரெண்டு பேரும் வாய மூடுங்க. முதல்ல இங்கயிருந்து தப்பிச்சு போவோம். மீதிய எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என டைமிங்கில் இருவரையும் ஆஃப் செய்துவைத்தாள்.

சித்துவின் கட்டை அவிழ்த்துவிட்டு கதிரை சென்று அவள் பார்க்க மற்ற இருவரையும் சித்து சென்று பார்த்தான். மயக்கத்திலிருந்து மற்ற மூவரும் எழுந்தபின் இவர்கள் இருவரும் தங்களுக்கு தெரிந்தவற்றை நடந்ததை கூறி அங்கிருந்து அனைவரையும் கிளப்ப முற்பட்டனர்.

இவர்கள் யாரும் அங்கே ஒரு மூலையில் மயக்கத்தில் கிடந்த கேசவனை கவனிக்கவில்லை. எனவே இவர்கள் மட்டும் வெளியே கிளம்ப பார்த்தனர்.

ஆனால் இவர்கள் வந்ததிலிருந்து இப்போதுவரை செய்த அனைத்தையும் அரவிந்தின் கோலத்திற்கு அருகிலேயே இருந்த பொம்மை படம் பார்ப்பதைப்போல் பார்த்து என்ஜாய் செய்ததை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லைதான்.

பார்க்க குளவிகல் போல் இருந்தாலும், குத்துகல்லை போல் நச்சென ஸ்ராங்காய் பேஸ்மெண்ட் போட்டு அமர்ந்திருருக்கும் நம் பொம்மையை தான்டி எல்லோரும் எப்படி வெளியே போக போகிறார்கள் என பார்க்கலாமே!

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 38

"ஏ மச்சா! அந்த பொம்மை பேய் எதுக்குடா இந்த இடத்தை சூஸ் பண்ணி இருக்கும். ஒருவேளை அது ஃபிரண்ட் பேய்க்குலாம் பார்ட்டி கீர்ட்டி எதுவும் வைக்கப்போவுதோ.

ஆனா ஒன்னுடா அது பார்ட்டி பண்ணுதோ இல்லையோ நம்மல நல்லா வச்சு பண்ணுதுடா. ஏன்டா இந்த பொருளை எல்லாம் நாம முன்னாடி வரப்பவே எடுத்துட்டு வர சொல்லிருக்கலாம்ல. இல்ல அதால இதையெல்லாம் கொண்டார முடியாதா நம்மல ஏர்லையே பறக்கவிட்ட ஆளுதானே அது. இப்ப எதுக்குடா நம்மல இப்புடி பல மைல் நடக்க விடுது"

சங்கர் தன் மனம் கேட்காமல் அவன் கையில் இருந்த பொருட்களை பார்த்து பொருமியபடி மாதவனுடன் அந்த குகைக்குள் வந்துக் கொண்டிருந்தான்.

"நான் என்னத்தடா கண்டேன். நானும் உன்கூட தானே சுத்திட்டு இருக்கேன். அந்த பேய் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சா இந்நேரம் அதுக்கு டேக்கா குடுத்துட்டு நேக்கா ஊரைவிட்டு ஓடிருக்கமாட்டேன். கடுப்ப கெளப்பாம பேசாம வாடா"

பேசியபடி இல்லை இல்லை புலம்பியபடி வாயிலை தான்டி உள்ளே இருவரும் வர, அப்போது தூரத்தில் மெல்ல சில குரல்கள் கேட்டது.

"டேய் மச்சா, உன் குடும்பத்து ஆளுவ எல்லாம் முழிச்சிட்டாங்க போலடா எதோ பேச்சு சத்தம் கேக்குது" என்றான் சங்கர். இருவரும் உள்ளே வர வர சத்தம் சற்று வேகமாகவே கேட்டது.

"சித்து தம்பி என்னப்பா நடக்குது நம்மல சுத்தி, நம்மள எதுக்காவ இங்கன கடத்தி கொண்டாந்து வச்சிருப்பானுவன்னு நினைக்கிறீய?"

"தம்பி நம்மல கடத்துன கட்டலைப் போனவன் யாரா இருக்கும்யா. எப்புடியா இங்கன இருந்து வெளியே போறது"

"தம்பி ஒருவேளை நம்ம மலைல பூதம் இருக்கு பொதையலு இருக்குன்னு பொறலி கெளம்புச்சே அதனால எதுவும், ஊருகார பயலுவ எவனாவது இந்த வேலைய பாத்திருப்பானுவலோ"

"யாரா இருந்தாலும் என் கையில கெடைக்கட்டும் கொளவி கல்லுல தேங்காய நசுக்குற மாதிரி என் கையி இடுக்குல வச்சு அரக்கிப்புடுறேன். பெரிய குடும்பத்து மேலையே கைய வக்கிறானுவனா எவ்ளோ தெகிரியம் இருக்கனும்"

கார்மேகம் மற்றும் அலமேலுவின் குரல்கள் மாற்றி மாற்றி கேட்க, பொம்மையின் இரண்டாவது டாஸ்க்கை முடிக்க சென்றிருந்த மாதவன் மற்றும் சேகர், உள்ளே வந்ததில் இவர்கள் காதில் இது எல்லாம் விழுந்து வைத்தது‌.

"என்னலே உங்க ஆத்தா நம்மல கட்டைல போவ சொல்லுது. அந்த பேய் கையில சாவ முன்னாடி உன் அம்மா கையில சிக்கி செத்துருவோம் போலையேடா"

சங்கர் பீதியுடன் பேசியபடி வந்தான். மாதவன் சொல்லவில்லை என்றாலும் அவன் முகத்திலும் ஒரு மரண பீதி இருக்கத்தான் செய்தது.

கடத்தியவர்கள் யாரென தெரியும் முன்னாலே இவ்வளவு கொலை வெறியில் இருப்பவர்கள், கடத்தியது இந்த இரண்டு டம்மி பீசென தெரிந்தால் என்ன ஆகுமோ என பயந்திருந்தனர்‌. அதுவும் மாதவனுக்கு அவன் தந்தையை எண்ணி வயிற்றை கலக்கியது உண்மையே.

ஊரார் சொத்துக்கு ஆசைப்படாத நியாயமான மனிதரான கார்மேகத்திற்கு அவர் பெத்த முத்தே தங்களை கடத்தியது என தெரிந்தால் பெல்ட்டை எடுத்து விலாசி விடுவாரே, அந்த பயமும் சேர்ந்தது. ஆனால் இதற்குமேல் பின்வாங்க முடியாதே. அப்புறம் பொம்மையிடம் இருவரும் வாங்கிகட்ட வேண்டும் என்பது தெரிந்து‌ இருவரும் என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என முன்னேறி சென்றனர்.

உள்ளே மாட்டி எப்படி வெளியே போவது என தெரியாமல் குழம்பிபோய் நின்றிருந்த அனைவருக்கும் கொஞ்சம் தொலைவில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் வந்ததில், அந்த வழியே உற்று பார்த்தனர்.

எப்படியும் அவர்களை கடத்தியவர்களே வருவார்கள் என்ற நம்பிக்கையில் பார்க்க, நம் டூஸிடியட்ஸை கண்டதும் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு விதமாய் மாறியது. அதுவும் கார்மேகத்தின் முகம் ‌நாலு டாபர்மேனை அவுத்து விட்டதைப் போல் உர்ரென ஆகிவிட, அதை பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கிய படி வந்தான் மாதவன்.

"ஏன்டா நாசமா போன எடுபட்ட பயலே! இது எல்லாம் உன் வேலதானா. உனக்கு இந்த சொத்துமேல அப்புடி என்னலே வெறி. அப்பைல இருந்து இந்த சொத்து பத்து மேல உனக்கு ஒரு கண்ணுதானல. அது முடிவுல இப்புடி வூட்டுல உள்ள எல்லாரையும் கடத்துற அளவு போயிட்டியா. நீயெல்லாம் வெளங்குவியாடா வென்னமவனே"

அவன் உள்ளே வந்தும் வராததுமாய் கார்மேகம் அவன் மேல் பாய, 'நானாயா நானா' என மாதவனின் மனதிற்குள் இருந்த குழந்தை கையை காலை நீட்டி கதறி அழுக, வெளியே கரண்ட் அடித்த காக்கா போல் உரைந்து நின்றுவிட்டான் மாதவன்.

"என்னலே நான் இந்த கத்து கத்துறேன் எதையோ முழுசா முழுங்குன மாதிரி அப்புடியே நிக்கிற"

கோவத்தில் வெறி பிடித்ததுப்போல் கார்மேகம் மாதவனிடம் கத்திவிட்டு சங்கரிடம் திரும்பினார் "எலேய் சங்கரு இங்க என்னதான் நடக்குதுன்னு நீயாவது சொல்லி தொலைடா பைத்தியக்காரா"

கார்மேகம் எவ்வளவு கத்தியும் மாதவனும் சங்கரும் பிடித்து வைத்த பிள்ளையாரை போலவே நின்றனர். இவர்கள் கலவரத்தில் கலக்காத சித்துவோ, என்றும் இல்லா திருநாளாய் இன்று தன் மூளையை உபயோகப்படுத்தினான்.

'இவனுங்க ரெண்டு பேரையும் பார்த்தா கடத்தி பணம் பறிக்கிற கும்பல் மாதிரி தெரியலையே. நாம பழகுன வரைக்கும் பார்த்தா இதுங்க ரெண்டும் டம்மி பீசுங்க. அதுமட்டும் இல்லாம நம்ம நைனாவையே லாக் பண்ற அளவுக்கு எல்லாம் இவனுங்க ஒர்த்து இல்ல. இங்க வேற என்னமோ நடக்குது. முதல்ல இவங்கள எல்லாரையும் வீட்டுக்கு பத்திரமா அனுப்பி வச்சிட்டு நைனாவ வேற காப்பாத்தனும். சோ சித்து வேகமா வேலைய பாருடா' தனக்கு தானே பேசி ஒரு முடிவுக்கு வந்த சித்து

"அங்கிள் நாம எது பேசறதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இங்க எதுவும் பேச வேணாம். மொதல்ல இந்த இடத்தை விட்டு வெளியே போவோம். மாதவன் வெளிய போக வழிய நீங்கதான் வந்து காமிக்கனும் வாங்க"

மற்ற யாரையும் பேசவிடாது அனைவரையும் அங்கிருந்து அவசரமாய் வெளியே நகர்த்தப்பார்த்தான் சித்து. ஆனால் இவ்வளவு நேரம் அமைதியாக நடந்த அனைத்தையும் பார்த்திருந்த பொம்மை 'ம்ம் இவ்ளோ தூரம் நான் கஷ்டப்பட்டு உங்களை எல்லா அள்ளி போட்டு வந்தா தப்பிக்கவா பாக்குறீங்க. பாக்குறேன் எப்புடி போறீங்கனு' என சீரியல் வில்லி போல் தன் ஆட்டத்தை ஆட தயாராகியது.

குகை‌ வாயிலை நோக்கி அனைவரும் திரும்பி நடக்க தொடங்கிய நிமிடம் "நில்லுங்க" என தன் கட்டை குரலில் கத்தியது பொம்மை.

கேட்ட சத்தத்தில் சித்து திரும்பி பார்க்க அங்கே அவன் தந்தை மட்டுமே கோலத்தின் நடுவே அமர்ந்திருந்தார்‌. வந்த சத்தத்தை கண்டுக்காமல் எல்லாரையும் வெளியேற்ற எண்ணி சித்து "ஏன் நிக்கிறீங்க முன்னால போங்க" என கடிந்தபடி நகர்ந்தான்.

ஆனால் மீண்டும் "எலேய் அரவிந்து மவனே நான் நிக்க சொல்லிட்டே இருக்கேன் எங்கடா போற நில்லுடா" என சித்துவை பாய்ண்ட் அவுட் செய்து பொம்மை கூப்பிட, அனைவருக்கும் தூக்கிவாரி போட டபக்கென திரும்பி பார்த்தனர்.

'சத்தம் மட்டும் கேட்குது ஆளுங்க யாரும் இல்லையே' என உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே தைரியமாய் காட்டிக் கொண்ட சித்து

"யாருயா அது ஒழிஞ்சு நின்னு பேசறது. தைரியம் இருந்தா என் முன்னாடி நின்னு பேசுங்க பாப்போம். இந்த சித்தார்த் யாருன்னு தெரியாம இப்புடி பண்ணீட்டிங்கனு நினைக்கிறேன். இதோட எங்களை விட்டீங்கனா போனா போகுதுன்னு பேசாம போவேன். இல்ல நடக்குறதே வேற"

தான் இருக்கும் நிலையை மறந்து சித்து கத்த, வீரா கடுப்பில் அவன் முதுகிலே ஒரு அடியை போட்டு "ஐயோ சித்து உங்க வாய கொஞ்சம் மூடுங்க. நாம என்ன நிலமைல இருக்கோம் இந்த இடத்துல கூட வாய அடக்க மாட்டீங்களா" டைமில் அவனை அடக்கினாள் வீரா.

"ஹாஹாஹா... வீரசுந்திரி பேருக்கு ஏத்த மாதிரி நல்ல தைரியமா அழகா இருக்கம்மா. என் இரத்தத்தின் இரத்தமாச்சே. அதான் இவ்ளோ அறிவாளியாவும் இருக்க"

இப்போது அந்த குரல் கூறியதை கேட்டு அனைவரும் குழம்பி போயினர்‌. அதுவும் அவர்களின் ரத்தம் என சொல்லியதில் வீராவே குழம்பிவிட்டாள். ஏனெனில் அவளுக்கு நினைவு தெரிந்தது முதல் அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை எனும் போது எங்கிருந்து இந்த புது ரத்த பந்தம் வந்தது என புரியவில்லை.

"இங்க பாருங்க நான் யாரு என்னன்னு தெரியாம உங்க இஷ்டத்துக்கு உளறாதீங்க. மொதல்ல நீங்க மறைஞ்சு நிக்கிற இடத்தை விட்டுட்டு எங்க முன்னால வந்து எதுக்காக இப்படியெல்லாம் பண்ணீட்டு இருக்கீங்க. உங்களோட மோட்டிவ் என்ன, உங்களுக்கு என்னதான் வேணும்.

இது எல்லாத்தையும் ஒன்னொன்னா சொல்லிடுங்க அது எங்களால செய்ய முடியிற விஷயமா இருந்தா நாங்க செஞ்சு தரோம். இல்லைனா எங்களை அதாவது நீங்க அடைச்சு வச்சிருக்குற எல்லாரையும் போக விடுங்க. நான் குறிப்பாக யாரை சொல்றேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்"

அரவிந்தையும் சேர்த்து விடுவிக்கும்படி சற்று அழுத்தியே வீரா சத்தமாய் சொல்லி நிறுத்த, இவ்வளவு நேரம் நடக்கும் கூத்தை தேமே என பார்த்திருந்த அரவிந்த்

"என் மருமவளா கொக்கா நம்ம மேல நிறைய பாசம் இருக்கு நம்ம மருமவளுக்கு. என்ன பத்தி எவ்ளோ யோசிச்சு பேசுறா. நான் பெத்த தண்டகருமமும் இருக்கே அவன் மட்டும் தப்பிச்சா போதும்னு கெளம்ப பாக்குறான். இவன பெத்ததுக்கு ஒரு அம்மி கல்ல பெத்திருந்தா வகை வகையா சட்னியாவது அரைச்சு தின்னுருப்பேன். கூறுகெட்ட கிறுக்கன் இவன பெத்து நான் என்ன சுகத்த கண்டேன்"

சித்து கேட்கவேண்டும் என்றே சத்தமாய் அரவிந்த் சலித்துக் கொள்ள 'இந்தாளு வேற நேரம் காலம் இல்லாம நான்சிங்ல பேசி நம்மட்ட மல்லுக்கு நிக்கிது. இப்ப சத்தமா திட்டக்கூட முடியலையே' என மனதிற்குள் பொறுமி தள்ளினான்.

"வீரா அந்தாள வாய மூட சொல்லுடி இல்ல யாரு இருக்காங்க என்னனுலா நான் பாக்க மாட்டேன் பாத்துக்க" சித்து வீராவிடம் பல்லை கடித்தான்.

"ந்தா டேய் தவளை வாயா அங்க என்ற மருமவட்ட என்னடா பல்ல கடிக்கிற. எதுவா இருந்தாலும் நேரா என்கிட்ட டீல் பண்ணுடா என் வெண்ணமவனே"

சித்தவிடம் சண்டைக்கு வாடா என புல்பாமில் நின்றார் அரவிந்த். முழுதாய் ஒருநாள் அவர் பிள்ளையிடம் வம்பிழுக்காது இருந்தது வேறு அவர் மனதை பிராண்ட களத்தில் குதித்தார் மனிதர்.

'இவங்க ரெண்டு பேரும் இத்தனை வருஷம் எப்படி ஒரே வீட்டுல இந்த அடிதடிக்கு நடுவுல உயிரோட இருந்திருப்பாங்க' என வீராவிற்கு இந்நேரம் ஒரு பெரிய சந்தேகமே வந்துவிட்டது.

அப்போது எல்லாம் சண்டை வரும் போது தந்தை மகன் யாராவது ஒருவர் சூழ்நிலைக்கு ஏற்ப பாதியில் கழன்டு கொள்ளுவது வழக்கம். ஆனால் வீரா வந்ததில் இருந்து பஞ்சாயத்து பண்ண ஒரு ஆள் கிடைத்த குஷியில், தந்தை மகனின் வாய் தகராறு வாய்க்கால் தகராறாக மாறியது பாவம் வீரா அறியவில்லை.

கதிருக்கோ 'ஐயோ போச்சு ஆரம்பிச்சிட்டுடாங்களா!' என அந்த இடத்தின் பயத்தோடு சேர்ந்து இவர்கள் செயல் மேலும் பயத்தை தந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் சித்துவின் பொறுமை எருமைமீது ஏறிவிடும். அதற்குள் அரவிந்தை எப்படி அடக்க என் ஒன்றும் புரியாது முழித்தாள் வீரா. அவள் கண்ணை காட்டி இவ்வளவு நேரம் கெஞ்சி பார்த்தும்விட்டாள். ஆனால் பலன் இல்லையே.

அவள் அப்படி முழித்திருக்கும் நேரம் "ஏய் அரவிந்தா வாய மூடுடா! எப்ப பாரு ஓட்ட பானைல ஓலைய விட்ட மாறி நசநசன்னு பேசிட்டே இருக்க. என்ன என்னன்னு நினைச்சீங்க அப்பன் மவன் ரெண்டு பேரும்" என பொம்மையே பொறுமை இழந்து கத்த

யாருக்கும் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. அப்போது வரை அமைதியாக நின்றிருந்த மாதவன்

"பேசறது வேற யாரும் இல்லை அந்த பொம்மைதான். எல்லாம் கொஞ்சம் கீழ பாருங்க" என இப்போது காட்ட பார்த்த அனைவருக்கும் 'ஏதே இதுவா' என ஆகிவிட்டது.

"என்னலே கலர் கலரா கதை கட்டுற. பொம்மை போய் எங்கையாவுது பேசுமா பையித்தியகார" கார்மேகம் மாதவனின் பிதற்றல் கேட்டு அவன் மீது பாய போக

"ஐயோ அப்பா நீ என்ன கொன்னே போட்டாலும் அதுதான் உண்மை" என பாவம் போல் சொல்லி நின்றான். அப்போதும் யாரும் நம்பாத பார்வை பார்க்க "அட உன் மவன் சொல்றது நெசந்தான் கார்மேகம்" என டைமில் பேசி மாதவன் கூறியது உண்மை என புரூவ் செய்தது பொம்மை.

இனி அந்த அரை லூசு மரபொம்மையின் ஆட்டத்தை எப்படி அனைவரும் எதிர்க்கொள்ள போகிறார்களோ இறைவனுக்கே வெளிச்சம்.

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 39

அந்த குகையில் காற்று வீசும் சத்தம் கூட கேட்கவில்லை, அவ்வளவு அமைதி இல்லை இல்லை பேரமைதி. அந்த அளவு அங்கிருந்த ஒவ்வொருவரின் கண்களும் வியப்பில் விரிந்திருந்தன.

அரவிந்தோ தன் அருகிலேயே இருக்கும் பொம்மையின் வாய் மட்டும் அசைவதை ஒருவித திகிலுடன் பார்த்திருந்தார். அந்த குகையில் எப்போதும் நிறைந்திருக்கும் அமானுஷ்யத்தை விட இப்போது இந்த பொம்மை பேசுவதே பெரிய அமானுஷ்யமாய் தெரிந்தது.

"என்னடா எல்லா பயலும் எதோ காணாத அதிசயத்தை கண்ட மாதிரி பப்பரப்பான்னு பாக்குறீங்க. இங்க என்ன ஆட்டகாரியா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுறா"

பொம்மை பேசுவதை கண்டு இன்னும் திறந்த வாயை மூடாது ஆஆவென எல்லோரும் அதே பொசிஷனில் நின்றனர்.

"இவனுங்க இப்படியே அதிர்ச்சியிலையே இருந்தா நாம எப்ப வேலை கழுதைய முடிச்சு வூடு போயி சேர.

அடச்சை வாய மூடுங்க எல்லாரும். வாய்க்குள்ள கொசு ஈன்னு எதாவது போய் குட்டி போட்டுற போவுது. எனக்குன்னே வருவாய்ங்க போல" என சத்தமாகவே புலம்பிய பொம்மை மாதவன் சங்கரின் புறம் அறுவது டிகிரியில் தன் தலையை மட்டும் திருப்பியது.

"எலேய் வெளங்காத பயலுவளா, அங்க நின்னு நீங்க யாரு வாயலே வேடிக்க பாக்குறீங்க. வாங்கடா வந்து நான் சொல்றத சட்டுப்புட்டு செய்யுங்க. அப்பதான் இங்க இருக்குற எல்லாரும் உசுரோட வூடு போயி சேரமுடியும்"

அரவிந்தின் நக்கல் தொனி சற்றும் மாறாது அப்படியே அதே டோனில் ஜெராக்ஸ் அடித்ததைப்போல் பொம்மை பேசி வைக்க

'இது யாருடா இது, நம்ம பக்கத்துலையே இருந்திருக்கு நமக்கு இவ்வளவு நேரம் தெரியல. பேசறதுல இருந்து எல்லாத்துலையும் நமக்கே டப் காம்படீஸன் குடுக்கும் போலையே. டைம்க்கு கவுண்டராவும் அடிச்சு விடும் போலையே. இப்படியே போனா இந்த அரவிந்தோட பேன் பேசு என்னாகுறது' என மனதிற்குள் ஜர்க்காகிவிட்டார் மனிதர்.

இப்போது இவர்கள் இங்கு மாட்டியதை விட தன் வாய்க்கு ஒரு ஆள் போட்டியாக வந்துவிட்டாரே என்பதே அரவிந்தின் மிகப்பெரிய கவலையாக மாறியது.

"யோவ் மாதவா இந்த பொம்மையாருயா. அது பேசுது. அதவிட அது உன்கிட்ட எதோ வேலை எல்லாம் செய்ய சொல்லுது. வாய தொறந்து இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுயா"

சித்து மாதவனிடம் நேராக பாய்ந்தான். சித்துவின் கேள்விக்கு மாதவன் பதில் சொல்லும் முன் பொம்மையிடமிருந்து பதில் வந்தது.

"டேய் அரவிந்து பெத்த மவனே! அவன்ட்ட என்னடா கேள்வி அவன வேலை செய்யவிடு. உனக்கு எது தெரியனும்னாலும் என்கிட்ட கேளுடா. ஏன்னா உங்க எல்லாரையும் இங்க கொண்டார வச்சதும் நான்தான், இங்க இனிமே நடக்க போற எல்லாத்துக்கு காரணமும் நான்தான்"

பொம்மை சுயவாக்குமூலம் தந்து பாயிண்டரை அதன்புறம் திருப்ப,

"ஏய் பொம்மை நீயே சுய வாக்குமூலம் தந்தா நான் சும்மா விட்டுருவனா. இங்க என்ன நடக்குதுன்னு சொல்லி தொலை. இதுக்கு மேல என்னால பொறுமையாலாம் இருக்க முடியாது. அப்புறம் என் பேரு சித்தார்த் சும்மா அரவிந்து மகன்னு சொல்லாத கடுப்பாவுது" போயும் போயும் ஒரு பொம்மைக்கு போய் பயப்படுறதா என பொங்கி எழுந்தான் சித்து.

"ஹப்பா சரிடா சித்தார்த்தா சொல்லுறேன் கேளு. அதுக்கு முன்னாடி என்கிட்ட பேசும்போது மரியாதையா பேசி பழகு. ஏன்னா நான் வெறும் பொம்மை இல்ல உன்னோட கொள்ளு பாட்டி அதாவது உன்னோட அப்பன் அரவிந்தோட அப்பத்தா. என்ற பேரு கண்ணாத்தா"

தன் பேரை பெருமையுடம் சொல்லி நிறுத்தி பொம்மை பெரிய குண்டை தூக்கிப் போட, அங்கிருந்த அனைவருக்கும் ஒருநிமிடம் ஒன்றும் புரியவில்லை.

"ஏய் பொம்மை என்ன சொல்ற நீ, நீ என்னோட கொள்ளு பாட்டியா. அப்ப அந்த பொம்மைக்குள்ள என்ன பண்ற? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு சும்மா அடிச்சு விடாத. உண்மைய சொல்லு"

அந்த பொம்மை சொல்வதை சித்து நம்பவில்லை. எனவே உடனே மறுப்பு தெரிவித்தான். அதற்கு பொம்மை சித்துவிடம் பதில் சொல்லாது அரவிந்தை பார்த்து பேசியது.

"டேய் அரவிந்தா உன் புள்ளயைய நீ கூறுகெட்டவன் கிறுக்கன்னு திட்டுறதுல தப்பே இல்லடா. நான் முழுசா பேசறதை கேக்காம எப்படி பேசறான் பாரு"

பொம்மை அந்த கோலத்தை பார்த்து பேச, அங்கிருந்த சித்து வீரா கதிரை தவிர மற்ற அனைவரும் முழித்து வைத்தனர் இந்த பொம்மை யாரை பார்த்து பேசுகிறதென புரியாமல். அதுவும் சித்து பொம்மை தன்னை டேமேஜ் செய்ததில் கடுப்பில் இருந்தான்.

"ஆமா இந்த பொம்மை யாருட்டடா பேசுது" சேகர் சரியான நேரத்தில் மாதவனிடம் கேள்வியை எழுப்ப "தெரியலையேடா" என்றான் அவனும்.

இதை கேட்ட பொம்மை "இதா இருக்கானே உன்ற மாமன் அரவிந்த், அவன்ட்டதான்டா பேசுறேன். இரு உனக்கும் அவன காட்டுறேன்" என ஏதோ ஜூம்மந்தகாளி என மந்திரம் போட காலை ஆட்டியபடி எதையோ வாயில் போட்டு அதக்கும் அரவிந்தின் உருவம் அனைவர் கண்ணிலும் தெரிந்தது.

"அண்ணா..." அலமேலுவின் ஆச்சரிய குரலில் அரவிந்த் திரும்பி பார்க்க, அங்கிருந்த அனைவரின் முகமும் அவரின் புறம் இருப்பதை கவனித்தார். அதுவும் அவர் தங்கை அலமேலு அவரிடம் ஓடி வந்தார். ஆனால் அந்த கோலத்தினுள் அவரால் உள்ளே நுழைய முடியாது போனது.

"ஐயோ அண்ணா நீயா. நீ எப்புடி இங்க? ஐயோ என்னால உள்ள வர முடியலையே. உன் புள்ள சித்து நீ செத்துட்டன்னு சொன்னான். நீ எப்புடிணா இங்க. உன்ன இத்தினி வருஷம் கழிச்சு பாத்தும் உன்கிட்ட வர முடியிலையே"

அழுதபடி அலமேலு அரவிந்தின் முன் மண்டியிட்டு புலம்ப, தன் தங்கையை கண்டு அரவிந்தின் உள்ளமும் உருகிவிட்டது. அவர் கையில் வைத்திருந்த தீனையை ஓரமாக வைத்தவர்

"அலமேலு பாப்பா அழாதடா. அண்ணனால நீ அழறத பாக்க முடியலைடா. எனக்கு ஒன்னும் இல்ல. இங்க பாரு நல்லாதான் இருக்கேன்"

அரவிந்தால் அலமேலு அழுவதை தாங்கமுடியாது பாசமலராக டயலாக்கை அள்ளிவிட, சித்து வீரா இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்து வைத்தனர். ஆனால் நம் பொம்மை பொறுமையை இழந்தது.

"டேய் உங்க அண்ணன் தொங்கச்சி நாடவத்தை அப்புறம் வச்சிக்கிங்க. இப்ப ரெண்டு பேரும் வாய மூடிட்டு அமைதியா உக்காரனும் புரிஞ்சதா" அதட்டலாக பொம்மை பேச

"ஏய் இந்தா பாரு பொம்ம, நீ என் பாட்டியோ இல்ல யாரா வேணா இருந்துட்டு போ. ஆனா என் தங்கச்சிட்ட பேசறப்ப இடையில வந்த, இந்த கட்டு எல்லாத்தையும் பிச்சி போட்டு வந்து உன்னை தூக்கி போட்டு பொலந்துருவேன் பாத்துக்க" வெளியே வரமுடியாது இருந்தாலும் வாயை மட்டும் குறைக்காது தன் பங்குக்கு தானும் எகிறி வைத்தார் அரவிந்த்.‌

"நீ சரிபட்டு வரமாட்டடா, இந்த வாய வச்சிக்கிட்டு தானே இந்த பேச்சு பேசுற. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்டா மொதல்ல"

கோவமாய் மீண்டும் ஆக்குபாக்கு வெத்தலை பாக்கு என ஒரு மந்திரத்தை பொம்மை போட, ரயில் தண்டவாளத்தில் கல்லை போடட்து போல் பேசிக் கொண்டிருந்த அரவிந்தின் வாய் அதியசமாய் மூடி கொண்டது.

"ம்ம்ம்... ம்ஹூம்..." என அரவிந்த் எவ்வளவு முயற்சித்தும் அந்த வாயை திறக்க முடியாது போகவே, வெறியாகிவிட்டார் மனிதர். சோறு இல்லாமல் கூட அரவிந்த் இருந்துவிடுவார், ஆனால் வாயை பேசாமல் அவரால் ஒரு நொடிக்கூட உயிர்வாழ முடியாதே. அப்படி இருந்தும் பொம்மையின் வேலையால் அரவிந்தின் வாய் வெற்றிகரமாய் பூட்டப்பட்டது சில நிமிடங்களுக்கு.

"இங்க பாருங்க நான் பேசி முடிக்கிற வரை யாரும் வாய திறக்க கூடாது. இல்ல இந்தா இருக்கான் பாரு, என் பேரன் அரவிந்து அவன் நிலைமைதான் உங்களுக்கும்"

எல்லோரையும் பார்த்து முன்னமே வார்னிங் கொடுத்து ஆரம்பித்தது பொம்மை. அந்த பேய் பொம்மை தங்களை எதுவும் செய்து விடுமோ என பயந்தே ஒருவரும் வாயை திறக்கவில்லை. எனவே பொம்மை தன்னுடைய கதையை துவங்கியது.

"நான் யாருன்னா இந்தா இருக்காங்கள அரவிந்து அலமேலு, இவங்க அப்பன பெத்தவ. நம்ம குடும்பத்துக்கு வந்த ஒரு சாபத்தால இந்த பொம்மைக்குள்ள அடப்பட்டு அந்த வீட்டுள ஒரு அறைக்கு உள்ளையே இத்தினி வருஷமா மாட்டிட்டு இருந்தேன். என் பேத்தி என் ரத்தம் வீரசுந்தரி வந்தா, அவ கையு பட்டு அந்த மந்தர கட்டு அத்துப்போய் சுதந்திர பறவையா நான் வெளிய வந்துட்டேன்"

பொம்மையில் இருந்த பாட்டியின் பேய், தலையும் புரியாது வாலும் புரியாது பாதி கதையின் சுருக்கத்தை மட்டும் கூற ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வாயை திறந்து அந்த பேயிடம் கேட்கப்போய், பேய் அரவிந்தின் வாயை அடைத்ததைப்போல் நம்மை எதேனும் செய்துவிடுமோ என பயந்து ஒரு மூச்சை கூட யாரும் சத்தமாய் வெளியேற்றவில்லை.

ஆனால் எதற்கும் பயப்படாத அஞ்சாநெஞ்சம் கொண்ட நம் வீராதான் முதலில் தன் சந்தேகத்தை பாட்டி பேயிடம் கேட்டாள்.

"பாட்டி நீங்க சொல்றது எங்களுக்கு சுத்தமா புரியலை. நான் எப்படி உங்க ரத்தம்னு சொல்றீங்க. அது போக அப்படி உங்கள அடச்சு வைக்கிற அளவு இந்த குடும்பத்துக்கு என்ன சாபம். அப்புறம் எதுக்கு எங்க எல்லாரையும் இங்க கொண்டு வந்து கட்டிப்போட்டு வச்சீங்க"

அங்கிருந்தவர்களின் மனதை அரித்த கேள்வியை பார்த்து பக்குவமாய் கேட்டு வைத்தாள் வீரா.

"அது எல்லாம் தெரிய முன்னாடி நான் அடப்பட்டு இருக்க இந்த பொம்மைக்கு உள்ள இருந்து வெளிய வரனும். அப்பதான் நான் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியும், அதோட முக்கியமான ஒரு விஷயம். நான் வெளிய வந்து சில பல வேலைய செஞ்சு முடிச்சாதான் நாம எல்லாம் இங்க இருந்து உயிரோடவே போக முடியும்"

வீரா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது பொம்மை வெளியே வர ஒரு பிட்டை போட்டது. ஆனால் ஊரை அடித்து உலையில் போடும் நம் வீராவோ அது கூறியதை நம்பாமல் சந்தேகத்தோடு பார்த்து வைக்க

"என்ன வீராம்மா நீ என்ன சந்தேகமா பாக்குற. இந்த பாட்டி சொன்னத நீ நம்பலையா. இத்தினி வருஷமா இந்த பொம்மைய விட்டு வெளிய வர முடியாம நான் தவிக்கிறது எனக்குத்தான் தெரியும்‌. நான் பெருசா என்ன கேக்குறேன் நான் இந்த பொம்மைய விட்டு வெளிய வந்து இந்த பூமியை விட்டு சொர்க்கத்துக்கு போயி என்ற புருஷனோட இருக்கனும்னு தானே ஆசைப்படுறேன். இது ஒரு தப்பா, அதுக்கு நீங்க என் குடும்பம் எனக்கு உதவி பண்ண மாட்டீங்களா"

பாட்டி தன் வாயிசில் ஒரு வண்டி சோகத்தை கொண்டு பேசி அனைவரின் இரக்கத்தையும் சம்பாதிக்க பார்க்க, கேட்ட வீராவுக்கு மனசுசே உருகிவிட்டது.

'அச்சோ பாட்டி பேசறதை கேட்டாலும் பாவமாதான் இருக்கு. சரி போற போக்குல ஒரு சமூக சேவைதானே, பாட்டிக்கு பண்ணிவிட்டு போவோம்' என முடிவெடுத்த வீரா

"சரி பாட்டி நான் உங்களுக்கு உதவி பண்றேன். ஆனா நீங்க அதுல இருந்து வெளிய வந்த அப்புறம் உங்க எஸ்டிடி ஜாகிரபி எல்லாத்தையும் சொல்லிடனும், அதோட எங்க எல்லாரையும் பத்திரமா இந்த இடத்துலே இருந்து கொண்டுப்போய் நம்ம வீட்டுலையே விட்டுடனும். அது உங்களுக்கு ஓகேயா"

பாட்டி பேயிடம் வீரா டீல் பேச, அவள் கேட்ட அனைத்திற்கும் சரி சரியென தன் பொம்மை மண்டையை ஆட்டி வைத்தது. அப்படி என்ன செய்து பாட்டியை பொம்மைக்குள்ளிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என வீரா கேட்க

"அது வேற ஒன்னும் இல்ல தாயி, ரொம்ப வேணாம் உன்னோட ரத்தம் ஒரு ரெண்டே ரெண்டு சொட்டு மட்டும் இந்த பொம்மை மேல விட்டீன்னா நான் வெளியே வந்துப்புடுவேன்"

அப்பாவி போல் பாட்டி பேய் பேசி நிறுத்த,

"எதே! ரத்தமா. ஏய் கெழவி இங்க பாரு நீ யாரா வேணா இருந்துட்டு போ. இந்த குடும்பத்து வரலாறு பூலோகம் எல்லாம் எனக்கு தேவையே இல்ல. நீ ஏற்கனவே செத்து போய்ட்ட இனி நீ எக்கேடு கெட்டு போனாலும் எனக்கு கவலையே இல்ல. என் வீராவோட ரத்தம் வேணுமாம்ல ரத்தம், ஒரு மண்ணும் தரமுடியாது நீ ஆனத பாத்துக்க"

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சித்து பொங்கிவிட்டான். அரவிந்தால் பேச முடியவில்லை என்றாலும் விட்டால் பாய்ந்துவிடுவேன் என்ற நிலையில்தான் அவரும் இருந்தார். பின்னே ஆசை காதலியின் ரத்தத்தை யாரென்றே தெரியாத ஒரு பேய் கேட்டால் தந்துவிடுவானா நம் அரவிந்தின் புதல்வன்.

இல்லை ஆசை மருமகளை பேயின் டீலுக்கு ஒத்துக் கொள்ள தான் விடுவாரா நம் அரவிந்த். எனவே வேகமாக எதிர்த்து நின்றார்கள் தந்தையும் மகனும். இவர்களை மீறி பாட்டியின் பேய் என்ன செய்ய போகிறதென பார்ப்போமே!

-ரகசியம் தொடரும்

 
Status
Not open for further replies.
Top