All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தலக்குண்டின் ரகசியமும்!!" கதை திரி

Status
Not open for further replies.

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 24

"ஐயா! ஐயா!
கார்மேகம் ஐயா!
கார்மேகம் ஐயா!"

வாசலில் யாரோ கார்மேகத்தை கூப்பிடும் குரல் கேட்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தனர் கார்மேகம் அலமேலு தம்பதியினர். அது‌ கிராமம் ஆதலால் அதிகாலையில் எப்போதும் விரைவாகவே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் தான் அலமேலு மற்றும் கார்மேகம் இருவரும். இன்று ஏனோ வெகு நேரம் உறங்கி விட்டனர்.

அதோடு எழுந்த நேரம், யாரோ நன்றாக போட்டு அடித்தது போல் உடல் வலி வேறு இருந்தது. அந்த வீட்டில் தங்கியிருந்த முதல் நாளே இப்படி ஆகியிருக்க கார்மேகத்திற்கு 'இங்கு எதுவோ சரியில்லை' என அவர் மனது கூறியது.

ஆனால் அதை எல்லாம் ஆராய நேரம் இல்லா காரணத்தால் இருவரும் அவசர அவசரமாக எழுந்து தங்கள் வேலைகளை பார்க்க கிளம்பினர். கார்மேகம் வெளியே வந்து அந்த நபரிடம் என்னவென்று கேட்ட நேரத்தில் அலமேலு குளித்து தயாராகி ஹாலிற்கு வந்தார்.

அங்கே இருந்த சோஃபாவில் சுருண்டு படுத்திருந்த அவர் மகன் மாதவனை கண்டு "இவன் என்ன ஹாலுல படுத்து தூங்கறான். எவ்ளோ பெரிய வீடு இருக்க இவனுக்கு தூங்க ஒரு ரூமா இல்லை. எந்திரிக்கிட்டும் பேசிக்கிறேன்" என்றவாறு சமயலறைக்கு சென்றார்.

தான் சத்தம் செய்வது மாதவன் ஒருவனுக்கே கேட்கிறது என தனக்கு ஒரு அடிமை கிடைத்த குஷியில் மரப்பொம்மை இரவு முழுவதும் 'டமால் டுமீல்' என கதவில் இடித்து அவனை கலவரப்படுத்தி எண்டர்டெயின்மெண்ட் ஆகிக் கொண்டது. அதன் தொல்லை நீங்கி இப்போதுதான் கண் அயர்ந்தான் மாதவன். அது எங்கிருந்து அலமேலுவுக்கு தெரியப்போகிறது.

அலமேலு சமையல் அறைக்குள் நுழைந்தவுடனே ஆவென வாயை பிளந்து விட்டார். காரணம் அவர் அண்ணன் மகன் அங்கு சமைத்து கொண்டிருந்ததே. அவன் லாவகமாக சட்னியை தாளிப்பதை பார்த்து வேகமாக அவனை நெருங்கினார்.

"ஐயோ! சித்து ஏம்ப்பா இந்த வேலை எல்லாம் நீ செஞ்சிகிட்டு இருக்க. நான் சீக்கிரம் எந்திரிச்சிருவேன். இன்னைக்குதான் கொஞ்சம் தாமதமாகிருச்சு. அத்தை நான் வந்து இதையெல்லாம் செய்யமாட்டனா. ஆம்பள புள்ள உனக்கு எதுக்குப்பா இந்த வேலைலாம்"

உரிமையாக கோபித்துக் கொண்டு அலமேலு கேட்க "வாங்க அத்தை. இந்தாங்க காபி எடுத்துக்கோங்க" என பிளாஸ்கை அவரிடம் நீட்டிவிட்டு

"அத்தை சமைக்கிறதுல என்ன ஆம்பள புள்ளை பொம்பள புள்ளனு பிரிச்சு சொல்றது. எல்லாரும்தானே சாப்பிடுறோம் அப்ப சமைக்கிறதும் எல்லாருமே சமைக்கிலாம் அத்தை தப்பில்லை. அதுமட்டும் இல்லாம எனக்கு ஊர்ல தினமும் சமைச்சு பழக்கம் தான்"

என்றுமில்லாமல் சித்து அன்று அறிவாய் பேசி வைக்க "பேசுடா மகனே பேசு! என் தங்கச்சியை இன்னும் இம்ப்ரஸ் பண்ண தானே இந்த டயலாக் எல்லாம்" கவுண்டரை வாயிலே வைத்தபடி அருகில் நின்று கேரட்டை கொறித்துக் கொண்டிருந்தார் அலமேலு உள்ளே நுழையும் போது தானும் உள்ளே நுழைந்திருந்த அவன் தந்தை.

ஏற்கனவே காலையில் நடந்ததிலே அரவிந்தின் மேல் கொலை வெறியில் இருந்த சித்தார்த் அவரை சட்டையே செய்யாது அவன் அத்தையை பார்த்திருந்தான்.

"என்னப்பா சொல்ற ஊருலையும் நீதான் சமைப்பியா? ஏன் உங்க அம்மா என்ன செய்வாங்க? நானும் கேக்க மறந்துட்டேன் பாரு. உங்க அம்மா எங்கப்பா?"

"அம்மா என் சின்ன வயசுலையே இறந்துட்டாங்க அத்தை. அப்போல இருந்து அப்பாதான் எனக்கு எல்லாம். அவருதான் வீட்டில சமைக்கிறதும், அப்படியே அவருட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து ஒரு அஞ்சு ஆறு வருஷமா நான்தான் அத்தை சமைக்கிறேன். சோ எனக்கு பழக்கம் தான்"

அலமேலு கேட்ட கேள்விக்கு பாவம் போல் பதில் தந்து முகத்தை சோகமாய் வைத்து நின்றான் சித்து.

அவன் பர்பாமென்ஸில் விழுந்த அலமேலுவும் 'பாவம் என் அண்ணனும் அவர் பையன் இவ்ளோ வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க போல. இனி இங்க இருக்க நாளுக்கு எல்லாம் நாமதான் அவனை நல்லா பாத்துக்கணும்' என பீலாகிவிட்டார்.

"ஆமாப்பா கால சாப்பாட்டுக்கு என்ன செஞ்ச?" ஆர்வத்துடன் அலமேலு கேட்க

"சமைக்க என்ன இருக்குன்னு பாத்தேன் ரவைதான் இருந்தது. அதான் கிச்சடி செஞ்சு சட்னி வச்சுட்டேன் அத்தை" ஹோட்டல் சர்வர் போல் மெனுவை ஒப்பித்தான் சித்து. அதை கேட்டு அலமேலு முகம் பிரகாசம் ஆனதென்றால் அரவிந்தின் முகமோ பேயறைந்தார் போல் ஆனது.

"என்னாது கிச்சடியா? கலர் கலரா கிச்சடினு பேரு வச்சாலும் அது உப்புமா தானேடா. கிரகம்புடிச்சவனே எனக்கு உப்மா புடிக்காதுன்னு தெரிஞ்சும் எதுக்குடா அதை பண்ணி தொலைச்ச? ஐயோ! உப்புமா தின்னா என் ஆத்மா எப்படிடா சாந்தி அடையும். பெத்த தகப்பனுக்கு உப்புமாவ போட்டு வயித்திலையே அடிக்கிறியே நல்லா இருப்பியாடா நீ எல்லாம்"

ஹைபிச்சில் தன் உயிர் போவதைப் போல் அரவிந்த் கதறி தீர்க்க, சித்து கூலாக தன் காதுகளை குடைந்தபடி அவரை கவனிக்காமல் "அத்தை சமையல் வேலை அவ்ளோதான். இனி நமக்கு இங்க வேலை இல்லை, வாங்க நாம போலாம்" என அவன் தந்தையை சட்டை செய்யாது நக்கலாக சிரித்தபடி வெளியேறினான்.

காலையில் நடந்த சம்பவத்திற்கு அரவிந்தை எப்படி‌ பழி தீர்ப்பது என வெறி பிடித்து மூளையை கசக்கி பிழிந்து யோசித்த சித்துவின் மண்டையில் நச்சென இந்த ஐடியா உதயமாக

'மாட்டுனயா தகப்பா! இன்னைக்கு உன்னையும் எப்படி‌ கதற விடுறேனு பாரு நைநா. அப்படி கதற விடல நான் சித்தார்த் இல்லைடா' என பாட்சா ஸ்டைலில் பஞ்ச் எல்லாம் பேசி சபதம் எடுத்தப் பின் இந்த உப்புமாவை கிளறி வைத்திருக்கிறான் மகன்.

சென்னையில் என்றால் இன்னேரம் ஒரு பிரளயமே வெடித்திருக்கும். ஆனால் அவர்களுடன் இப்போது அத்தை குடும்பமும் இருக்க, அரவிந்த் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

'சரி பிடிக்காத உணவு ஒரு வேலை பட்டினி கிடப்போம்' என்ற வார்த்தைகள் எல்லாம் அரவிந்தின் அகராதியில் மிகப் பெரிய கெட்ட வார்த்தைகள். மூன்று வேளை உணவு ஆறு வேளை திண்பண்டங்கள் என சாப்பிட எதாவது இல்லை என்றால் அவர் ஜீவன் முக்தி அடையாதே. எனவே விதியை நொந்தபடி ஒரு ஒரு கவளம் உப்புமாவை விழுங்கும் போதும் விஷத்தை முழுங்குவதை போல் முழுங்கி வைத்தார்‌ மனிதர்.

காலை நேரம் தந்தை மகன் இருவருக்கும் இப்படி ஏகபோகமாக கழிய, இடையில் மாட்டிக் கொண்டது என்னவோ மாதவன் தான். அலமேலு தன் அண்ணன் மகன் புகழ் பாடி பாடியே அவனை கழுவி‌ ஊற்றிக் கொண்டிருந்தார்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல் அந்த வீட்டின் அமானுஷ்யம் அவனோடு விளையாடுவது மட்டும் இன்றி அவன் தாயும் வெந்த புண்ணில் வேலை பாச்சினால் பாவம் அவனும்தான் என்ன செய்வான். ஆனால் அந்த வீட்டில் நடக்கும் எந்த விஷயத்திலும் பாதிக்கப்படாது சுற்றி திரிந்து கொண்டிருந்தனர் நம் அரவிந்த் அண்ட் கோ.

உணவை உண்டு முடித்த மாதவன் விட்டால் போதுமென வீட்டை விட்டு ஓடிவிட்டான் அவன் நண்பனை காண. அந்த பெரிய அரச மரத்தடியில் விதியே என பாவமாய் அமர்ந்திருந்தான் மாதவன்.

"என்ன மாதவா, எப்படி இருக்க? மெட்ராஸ்ல இருந்து உன் மாமா குடும்பம் வந்திருக்காமே. அவங்களோட நீ தலைவரு ஐயா உன் அம்மா எல்லாரும் பெரிய வீட்ல இருக்கீகலாம். நம்ம ஊரு பூரா இதான் இப்ப பேச்சு. என்னடா இவ்ளோ கேக்குறேன் அமைதியா இருக்க?"

மாதவனின் நண்பன் ஷங்கர் ஆர்ப்பாட்டமாய் பேச மாதவன் ஒரு வார்த்தைக் கூட பதில் உரைக்கவில்லை.

"எலேய்! எலேய் மாதவா!" மாதவனை பிடித்து அவன் நண்பன் உளுக்கி எடுத்த பின்னர், கனவில் இருந்து முழிப்பதைப் போல் எழுந்த மாதவன் "ஆன்.. நீ எப்படா வந்த ஷங்கரு?" என்றான் அப்பாவியாய்.

"சரியாபோச்சு இவ்ளோ நேரம் நான் பேசுனது அப்ப உன் காதுல உழல அப்படித்தானே. அதவிடு ஊருல இருந்து உன்ற மாமன் மகன் வந்திருக்காப்ளல, பாக்க நல்ல வெள்ளையா அழகா இருக்காராமே. நம்ம முக்கு வீட்டு பெரிய கிழவி சொன்னுச்சு. அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வக்கிறது. நானும் தெரிஞ்சிப்பேன்ல"

கிராமத்தில் புதிதாய் யார் வந்தாலும் அறிந்து வைத்து கொள்ளும் கிராம மக்களின் இயல்பில் ஷங்கர் கேட்டு வைக்க, மாதவனோ "ஏன்டா நானே நொந்து போயி வந்திருக்கேன்‌. நீ வேற கடுப்புகல கெளம்புற" நொந்து போன குரலில் கூறினான்.

"ஏன்டா என்ன ஆச்சுது. இப்படி சொரத்தையே இல்லாம பேசற?"

"அத ஏண்டா கேக்குற. நாங்க அந்த பெரிய வீட்டுக்கு போனதுல இருந்து அங்க நடக்கிறதே எனக்கு ஒன்னும் சரியாப்படலடா ஷங்கரு" மாதவன் அவன் அங்கு போனதில் இருந்து இப்போது நடந்த வரை அனைத்தையும் சோகமாக சொல்லி முடித்தான்.

அதை கேட்ட அவன் நண்பனும் அதிர்ந்து போனான். "டேய் நீ சொல்லுறத வச்சு பாத்தா அந்த வீட்டுல கண்டிப்பா பேய் இருக்குனுதான் எனக்கு தோனுது. இப்ப என்னடா பண்ணுப் போற?" அரண்டுப் போய் கேட்டான் அவன்.

"அதான்டா ஒரு முடிவு எடுத்திருக்கேன். இன்னைக்கு என்ன ஆனாலும் அந்த வீட்டு பக்கமே போவே கூடாதுன்னு" மாதவன் கூறியதை கேட்டு தானும் ஆமோதித்த ஷங்கரும் அவனை அன்று அவன் வீட்டிலே தங்கிக் கொள்ளும்படி கூறி அழைத்து சென்றான்.

இரவு நேரம் சித்தார்த் வீட்டில் அனைவரும் உணவு உண்டுக் கொண்டிருந்தனர். அன்றைய நாள் முழுவதும் அந்த வீட்டை சாரி மினி சைஸ் அரண்மனையை சுற்றி பார்க்கவே நேரம் சரியாக இருக்க, அடுத்து வரும் நாட்களில் தோப்பு வயல் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தனர்.

"என்ன அத்த மாதவனை காணோம்?" என சித்து தான் அவன் இல்லாததை கண்டு கேட்டான்.

"அவன் பயலுவ கூட எங்கயும் ஊர சுத்திட்டு இருப்பையான் வந்திருவான். நீ சாப்பிடுயா" அலமேலு ஒரு காரணத்தை கூறி அவனை உண்ண செய்தார். ஆனால் அனைவரும் உண்டு பிறகு வெகு நேரம் ஆகியும் அவன் வராததால் அவர்கள் வீட்டிற்கு ஏதும் சென்றிருப்பான் என எண்ணிய அலமேலு கதவுகளை அடைத்துவிட்டு உறங்க சென்றார்.

மாதவனும் அங்கே ஷங்கரின் வீட்டில் ஷங்கரோடு மொட்டை மாடியில் படுத்துவிட்டான். "ஷங்கரு என்னவோ பயமாவே இருக்குதுடா" வானத்தை பார்த்து படுத்தபடி மாதவன் கூற

"ஏலேய்! ஏன்டா பயந்து சாவற. இப்ப நீ என் வீட்டில இருக்க அதனால பயப்படாம தூங்கு. அப்புடியும் பயமா இருந்தா இந்தா என் கைய புடிச்சிக்க" ஆறுதலாய் பேசிய ஷங்கரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு தூங்க சென்றான் மாதவன். அம்புட்டும் பயம் வேறென்ன செய்வான் பாவம் அவனும்.

நடுநிசி நேரம் யாரோ மாதவனை பிடித்து இழுப்பதைப் போல் இருக்க, அவன் நண்பனின் கையை இறுக பிடித்துக் கொண்டான். ம்ஹீம் விடவேயில்லையே! சிறிது நேரத்தில் அவன் உடலே காற்றில் மிதப்பது போல் இருக்க மாதவன் அவன் பிடித்த நண்பன் கையை மட்டும் இன்னும் இறுக்கி கொண்டான்.

"ஹாஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹா..." யாரோ சிரிக்கும் குரல் சத்தமாக கேட்க நல்ல உறக்கத்தில் இருந்த நண்பர்கள் இருவரும் அடித்துப் பிடித்து எழுந்தனர்‌.

அவர்கள் இருவரின் உறக்கமும் நன்றாய் போய்விட அவர்கள் இருந்த இடத்தை அதிர்வாக சுற்றிப் பார்த்தார்கள். ஏனெனில் அவர்கள் தூங்கிய இடம் ஷங்கர் வீட்டு மொட்டை மாடியாய் இருக்க இப்போது ஒரு அறையில் மெத்தையில் இருவரும் இருந்தனர்‌. அப்போதுதான் புரிந்தது அவர்கள் இருப்பது பெரிய வீடென.

"என்னடா இது மாதவா நாம எங்கூட்டு மொட்ட மாடில தானே தூங்குனோ. இப்ப என்னடா பெரிய வீட்டுல இருக்கோம்" துடிக்கும் இதயத்துடன் ஷங்கர் கேட்க

"நான்தான் சொன்னேன்லடா இங்க எதுவும் சரியில்லனு. ஐயோ இப்ப பேச நேரம் இல்ல வா மொதல்ல இங்கருந்து வெளிய போவோம். அப்பொறம் பேசிக்கலாம்" அலறினான் மாதவனும்.

இருவரும் அதன்படி வேகமாக அங்கிருந்து இறங்கி ஓட அந்த வீட்டின் கதவு நான் திறக்க மாட்டேன் என ஸ்ட்ராங்காக இருந்தது. எவ்வளவு நேரம் முயன்று பார்த்தும் திறப்பேனா என்றது.

"ஐயோ இந்த கதவ தெறக்க முடியலையே. பாவிப் பயலே! உருப்புடுவியாடா நீயெல்லாம். உன்கூட பிரண்டா பழவுன பழக்கத்துக்கு என்ன காவு வாங்க பாக்குறியே. நீ இந்த வீட்டு பய அதனால கஷ்டப்படுற.

என்ன எதுக்குலே இங்க வந்து சிக்கவச்ச. என் வூட்டுக்கு வந்து தூங்குனியே அதோட விட வேண்டியது தானே. என் கைய கம் போட்டு ஒட்டானாப்ல எதுக்குடா புடிச்சிட்டு தூங்குன வெளங்காதவனே. இப்ப பாரு அந்த பேயி கொத்தா சேத்து என்னையும் அலேக்கா தூக்கிட்டு வந்திருச்சு"

பயத்தில் அழுதபடி ஷங்கர் புலம்ப "ஹாஹாஹா... நமக்கு இப்ப இன்னொரு அடிமை சிக்கிருச்சு" என மரபொம்மை ஷங்கரை கண்டு சிரிக்க, அதன் வெடிச்சிரிப்பில் நண்பர்கள் இருவரும் வெடவெடத்துப் போய் நின்றிருந்தனர்.

அந்த நேரம் யாரோ மாதவன் தோளை தொட "ஐய்யய்யோ! என்ன விடு! என்னைய விடு! காப்பாத்துங்க!" என யாரோ அவனை கதற கதற கற்பழிப்பதைப் போல் கத்தியபடி ஓட அவன் கண்ணத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது.

அறை விழுந்த அதிர்வில் அவன் அப்படியே திரும்பி பார்க்க அங்கே அவன் தந்தை கார்மேகம் மாதவன் ஷங்கர் இருவரையும் கொடூரமாக முறைத்தபடி நின்றிருந்தார்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 25

காரிருள் சூழ்ந்த அமாவாசை இரவு நேரம்‌. நிலா இருந்தாலே பலர் இரவில் அஞ்சி நடுங்குவர். அப்படி இருக்க அந்த அமாவாசை இருட்டு மனிதர்களை பயம் கொள்ள செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு போன் கால் வர வீட்டினுள் சிக்னல் கிடைக்காத காரணத்தால் அதை தூக்கிக் கொண்டு பேசுவதற்கு அந்த இருட்டில் வந்து நின்றார் கார்மேகம்.

போன் பேசி முடிக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. பேசி முடித்த பின்னரே அவர் சுற்றுப்புறத்தை கவனித்தார்‌. சலக் சலக் என்றொரு சத்தம் கேட்க அவர் மனதில் பக்பக்கென்றது. அதோடு ஒரு நிழல் உருவம் தூரத்தில் இருந்த மரத்தை ஒட்டி தெரிய திக்கென்றது. நேரம் செல்ல செல்ல அந்த சத்தம் அவர் அருகில் வருவதைப் போல் இருக்க தைரியமான மனுஷன் அவருக்கே மனதிற்குள் அல்லு விட்டது.

காலையில் சாப்பிட்டதுக்கு நேர் மாறாக இரவு உணவுக்கு அலமேலு சப்பாத்தி இடியாப்பம் பன்னீர் பட்டர் மசாலா என வெரைட்டியாக சமைத்து வைத்ததை ஒரு பிடி பிடித்திருந்த அரவிந்த் அந்த வழியில்தான் வாக்கிங் வந்திருந்தார்.

"ஹப்பா சாப்பாடுனா இது சாப்பாடு. என்னா ருசி என்னா ருசி! என் தங்கச்சி கைப்பக்குவமே தனிதான். இந்த பய ஆக்குற சோத்த தின்னு செத்து போயிருந்த என் நாக்கு இப்பதான் மறுபடியும் உயிர் பொழைக்குது"

அர்விந்த் இப்படி கூறியதை மட்டும் அவர் மகன் சித்தார்த் கேட்டிருக்க வேண்டும், அவரை பழி தீர்க்கிறேன் என அடுத்த நாளும் உப்புமாவையே கிண்டி வைத்திருப்பான். அவர் புலம்பலை அவன் கேட்காததால் தப்பினர் அந்த வீட்டில் இருப்பவர்கள்.

இப்படி தன் போக்கில் சத்தமாய் தனக்கு தானே பேசியபடி அரவிந்த் வர அப்போதுதான் அங்கிருந்த கார்மேகத்தை கண்டு "அடடா மாப்ளயும் இங்கதான் இருக்காப்பலையா. இந்தா வரேன்" என்றவாறு அருகே சென்றார்.

அவர் எப்போதும் போல் வேகமாக நடந்து வர சலக்கு சலக்கு என சருகுகள் மிதிப்படும் சத்தத்தை கேட்டு திக்கென்று ஆக மெல்ல திரும்பி பார்த்தார் கார்மேகம். ஆனால் அப்படி பார்த்தாலும் அங்கு வந்த அரவிந்துதான் அவர் கண்ணுக்கு தெரிந்துவிடுவாரா. என்னதான் மனம் பதறினாலும் வெளியே கெத்து மாறாமல் 'இனி வெளிய நிக்காம, அப்படியே உள்ள போயிடு கார்மேகம்' என நினைத்தவர் வீட்டிற்குள் ஓடிவிட்டார்‌.

"என்ன மச்சான் அதுக்குள்ள உள்ள போயிட்டாரு? அட கிருக்கு பயபுள்ள இன்னு கொஞ்ச நேரம் இருந்திருந்தா பேசிட்டு இருந்திருக்கலாம்"

உள்ளே அறக்கப் பறக்க கார்மேகம் ஓடியதே தன்னால்தான் மற்றும் அரவிந்து பேசினால் அது கேட்டு அவர் பதில் தரமுடியாது என்ற பேஸிக் சென்ஸ் கூட இல்லாது நின்றார் நம் பேய் அங்கிள் அரவிந்த்.

"மச்சானு இல்ல. ஊருல நைட் எல்லா பையலும் தூங்கிருவானுங்க நமக்கு ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணுமே, என்னா பண்ணுறது" பலமாக யோசித்த அரவிந்திற்கு கன நேரத்தில் ஒரு ஐடியா தோன்றிட

"அட ஆமால்ல நம்ம ஏன் இங்க இருக்கனு, நம்ம ஊரு தான்டுனா பக்கத்து ஊருல நைட்டு கடை இருக்கும்ல. அங்க போயி வேணுங்கறத தின்னுட்டு, நைட் ஷோ பாத்துட்டு அப்படியே ஊரை சுத்திட்டு வருவோம். இப்ப என்ன கெட்டு போச்சு" என ஜெட் வேகத்தில் பறந்திட்டார் அந்த அரைகிருக்கு ஆலம்பனா.

'அடங் கொப்புரானே! இந்த வீடு சாதாரண வீடு இல்லை போலையே. இங்க நம்ம புத்திக்கு அம்புடாத என்னவோ நடக்குது. அலமேலு சொன்ன காரணத்துக்காக இங்க வந்து தங்குனது தப்பா தெரியுதே'

இங்கு வேகமாக அறைக்கு ஓடிய கார்மேகமோ நன்றாக பயந்து விட்டார் மனிதர். அதே பயத்தோடு தான் தூங்கவும் சென்றார். அவர் முகத்தை பார்த்தே எதோ சரியில்லை என புரிந்து கொண்ட அலமேலு, என்னவானது என்று கேட்டதற்கு எதுவுமில்லை என கூறி ஒருவாறு சமாளித்து படுத்துவிட்டார். ஆனால் மனம் ஒரு புறம் பயத்தில் துடித்துக் கொண்டிருக்க, தூக்கமும் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து பார்க்க வெகு நேரம் கழித்தே தூக்கமும் வந்தது.

அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நேரம் 'டமார்' என்றொரு சத்தம் ஹை டெசிபலில் கேட்க, தூக்கம் பறந்து போனது. அப்படியே அலறியடித்து எழுந்தார் மனிதர். மணியை பார்க்க பணிரெண்டு என்றது. 'என்ன மணி பணெண்டா ஆவுது. சகுனமே சரியில்லையேடா கார்மேகோ'

அவர் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கும் நேரம் வீட்டின் உள்ளே யாரோ அலறும் சத்தம் கேட்க கார்மேகத்தின் இதயம் ஒரு நொடி நின்றேவிட்டது. அதோடு இப்போது எதோ பேச்சு சத்தம் வேறு கேட்க, மெல்ல திரும்பி பக்கத்தில் அவர் மனைவி அலமேலுவை பார்த்தார். 'கும்பகர்ணன் தங்கச்சிடா நானு' என்பது போல் ஆழ்நித்திரையில் ஆழ்ந்திருந்தார் அரவிந்தின் அக்மார்க் தங்கச்சி.

'இவ தூங்குனா இடியே உழுந்தாலும் எந்திரிக்க மாட்டாளே. இவள இப்ப எழுப்புனா ஏந்திரிக்கவும் மாட்டா, இப்ப என்னடா பண்ணுறது கார்மேகோ. வெளிய வேற சத்தம் போவபோவ அதிகமா கேக்குது. இப்ப வெளிய போயி பாக்குலாமா வேணாமா'

மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி பார்த்தவர் ஒரு ரூபாய் காயின் ஒன்றை எடுத்தார். 'பூவா தலையா போட்டு பாக்கலாம். பூ உழுந்தா கழுதை என்ன சங்கதின்னு போய் ஒரு கை பாத்துட வேண்டியதுதான். இதே தலை உழுவட்டும் எவன் செத்தா எனக்கென்னன்னு அப்புடியே போர்வைய இழுத்து போர்த்தி படுத்துபுடலாம்'

கண்ணை மூடி ராத்திரி தூங்கும் கடவுளை எல்லாம் எழுப்பி 'எப்பா ஆண்டவா நல்ல முடிவா குடுப்பா' என காயினை அவர் சுண்டிவிட, அந்த காயினோ குதித்தால் தலைகீழாகத்தான் குதிப்பேன் என பூவாக விழுந்தது.

'என்னங்கடா இது ஒரு விஷயமு நாம நெனச்சாப்புல நடக்காது போலவே. சரி போயி என்ன நடக்குதுன்னு பாத்துபுட வேண்டிதான்'

மனதில் உள்ள மிச்ச சொச்சம் இருந்த தைரியத்தை எல்லாம் திரட்டி கொண்டு, கட்டிலில் இருந்து எழுந்து வந்து மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் பாம்பு போல் வெளியே நீட்டி பார்த்தார். ஆனால் சத்தம் ஹாலில் கேட்பது போல் இருக்க பிடிமானத்துக்கு செவுத்தை பிடித்து முன்னே சென்றார் கார்மேகம்.

ஹாலிற்கு சென்று பார்த்தால்தான் தெரிந்தது, அங்கு சத்தம் எழுப்பி அவரை சிறிது நேரத்தில் கலவரப்படுத்தியது அவர் சீமந்தபுத்திரன் மாதவன் என. அந்த நொடி வந்தே கோபம் கார்மேகத்திற்கு

"அட கொப்பமவனே! மனுஷன மரண பீதி ஆக்குனது நீதானா, இருடா வரேன். இன்னைக்கு இருக்குடா ஒனக்கு" என வீராவேசத்துடன் சென்று படார் என விட்டார் ஒரு அறை. மாதவனின் காதில் கொய் என்று ஒரு சத்தம் விடாமல் கேட்டது.

இவ்வளவு நேரம் பேய் பயத்தில் இருந்த மாதவன் ஷங்கரை கார்மேகத்தின் அறைதான் நிஜ உலகிற்கு கொண்டுவந்தது. அறை விழுந்த கன்னத்தை பிடித்தபடி "என்ன ப்பா? எதுக்கு என்ன அடிச்ச?" பாவமாய் கேட்டு நின்றான் மகன்.

"என்ன நொன்னாப்பா. ஏன்டா முண்டங்களா விளையாட உங்களுக்கு வேற நேரங்காலமில்ல. இப்புடியாடா நடுவீட்டுல ராக்கோழி கணக்கா குய்யோ முய்யோனு கத்திட்டு இருப்பீங்க. மனுஷன நிம்மதியா தூங்க உட கூடாதுன்னே இப்புடிலாம் பண்றீகளா"

கார்மேகத்தின் கண்கள் ரெண்டும் சிவந்து பெரிதாக தெரிய அதோடு அவர் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கியபடி மாதவன் ஷங்கர் இருவரையும் திட்டிக் கொண்டே செல்ல, கார்மேகத்தை எதிர்த்து பேச முடியாது தங்கள் விதியை நொந்த
படி நின்றனர் இருவரும்.

"இங்க பாருங்கடா இதுதான் மொதலும் கடைசியும் இதுமாதிரி இன்னொருக்கா எதாவது கிருக்குதனம் பண்ணிக்கிட்டு இருந்தீங்க வீட்ட விட்டு தொறத்திப்புடுவேன். போய் படுங்கடா"

மனதில் இருந்த பயம் எல்லாம் திட்டுகளாக வெளிவந்த பின்னரே சாந்தமாகி தூங்க சென்றார் கார்மேகம். இதில் மாதவன் ஷங்கர் இருவரின் இமேஜ் தான் டோட்டல் டேமேஜ்.

'வீட்டை விட்டு தொறத்துவியா, அதப் பண்ணுயா மொதல்ல. நிம்மதியா தூங்க கூட முடில' என மனதிற்குள் புலம்பினாலும், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது மனதில் மரண பீதியை வைத்துக் கொண்டு தூங்க சென்றனர் நண்பர்கள் இருவரும்.

இரவு பொழுது இப்படி அக்கப்போராய் கழிய, "எவன் உசுரோட இருந்த என்ன செத்த எனக்கு என்ன. என் டுயூட்டிய பாக்க இந்த வந்துட்டேன்" டமால் என கரெக்ட் டைம்க்கு வந்து குதித்தார் மிஸ்டர்.சன் காட்.

முதல்நாள் போல் இல்லாது அன்றைய காலை நேரம் எந்த அமர்க்களமும் இன்றி அமைதியாக செல்ல, கார்மேகம் தான் அவர் மகனை முறைத்து தள்ளிவிட்டார். பின்னே இருக்காதா அவரையே கொஞ்ச நேரம் மரண பீதியில் கதறவிட்டு விட்டானே பாவி சண்டாளன். உணவு நேரம் முடிந்து கார்மேகம் வெளியே சென்றுவிட மற்ற அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் சித்துவிற்கு நீண்ட நாள், அதாவது லாஸ்ட் டூ டேஸாக இருந்த சந்தேகம் கப்பென கபாலத்தில் உதயமாக, அப்படியே அதை அவன் அத்தையிடம் கேட்டான்.

"அத்தை எனக்கு ஒரு சந்தேகம். கேட்டா பதில் சொல்லனும்" என ஆரம்பிக்க அரவிந்த் அலர்ட் மோடுக்கு தாவினார் தன் அருமை மகன் என்ன கேட்க போகிறான் என கேட்க

"கேளுடா தங்கம்" அலமேலு கிரீன் சிக்னல் தர தன் கேள்வியை முன் வைத்தான் சித்து‌.

"அதாவது அத்த உங்க பேரு அவ்ளோ அழகா அலமேலுவள்ளினு வச்ச தாத்தா, என் அப்பாக்கு மட்டும் எப்படி அரவிந்துன்னு ஒரு பேர வச்சாரு" சித்து பாயிண்டாய் கேட்க அரவிந்துக்கு பக்கென்றானது.

'இவன் எதுக்கு இப்ப இத கேக்குறான்' என அவர் ஸ்டன்னாகி நிற்க "ஐயோ உனக்கு இது தெரியாதா தங்கம். என் அண்ணன் பொறந்தப்ப வச்ச உண்மையான பேரு அரவிந்த் இல்ல" அரவிந்த் அலர்ட் ஆகி அவர் தங்கையை ஆஃப் பண்ண பார்க்க, முடியவில்லையே.

அரவிந்தின் முகம் போன போக்கை வைத்தே இதில் ஏதோ இருக்கிறது என புரிந்து போனது சித்துவுக்கு. "சொல்லுங்க த்தை சொல்லுங்க" அலமேலுவை இன்னும் தூண்டினான் சித்து.

"வேணாம் தங்கச்சிமா! வேணாம்" ஸ்லோ மோஷனில் சித்து உக்காந்திருந்த சோபாவின் அருகில் நின்றிருந்த அரவிந்த் அவர் தங்கையின் புறம் ஓடிவர,

'ஆஹா நல்ல எண்டர்டெயின்மெண்ட்' என வீராவும் கதிரும் சித்துவோடு ஜாலியாக பார்த்திருக்க, அரவிந்து ஸ்லோ மோஷன் முடியும் முன் "உன் அப்பாவோட உண்மையான போரு அழகர்சாமி தங்கம்" பட்டென பானையை அரவிந்தின் தலையில் உடைத்தார் அவர் அருமை அன்பு தங்கச்சி.

"என்ன அழகர்சாமியா" சித்தார்த் சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க "அட ஆமா தங்கம்" என்றார் அலமேலு. சித்தார்த்தால் அவன் சிரிப்பை கொஞ்சம் கூட அடக்கவே முடியவில்லை. ஆனாலும் முயன்று கட்டுப்படுத்தி அவன் அத்தையிடம் பேசினான்.

"அழகர்சாமி எப்படி அரவிந்த்சாமி ஆனாரு அத்த. அதை சொல்லுங்க" தந்தையை கலாய்க்க நல்ல ஒரு சான்ஸ் கிடைக்க கப்பென பிடித்தான் பையன்.

"அதுவாயா, என் அண்ணன் என்ன மாதிரி இல்ல ரொம்ப மாடர்ன். சின்ன வயசுலையே புத்தகம் எல்லாம் படிக்கும். அதுல வந்த பேருதான் இது. அண்ணனுக்கு அழகர்சாமின்ற பேரு புடிக்கல அதான் அரவிந்த்சாமின்னு வைக்க சொல்லி அப்பாட்ட சண்டை போட்டு மாத்திக்கிச்சு. இப்ப தெரிஞ்சிக்கிட்டியா!

அட நான் ஒருத்தி பேசிட்டே இருந்ததுல வேலைய மறந்துட்டேன் பாருங்க. நீங்க பேசிட்டு இருங்க நான் மதிய சமையலுக்கு வேலைய ஆரம்பிக்கிறேன்"

முழு கதையையும் அலமேலு சொல்லி முடித்து கிளம்பிவிட "மிஸ்டர்.அழகர்சாமி!" என சித்து அவன் தந்தையை பாத்து அன்பாக இழுத்து கூற வாழ்க்கையை வெறுத்தார் மனிதர். இதோடு வீராவும் கதிரும் சேர்ந்து "அங்கிள் நெஜமாவே உங்க பேரு அழகர்சாமியா" என்று வேறு கேட்டு சிரிக்க

'குவா குவா' என அரவிந்தின் மனதிற்குள் ஒரு குழந்தை கதறியது. அது வேறு ஒன்றும் இல்லை நம் அரவிந்துக்குதான் குழந்தை மனசே. அதான் அவருள் இருந்த குழந்தை நொந்து நூடுல்ஸ் ஆனதில் கத்தி கதிறயது. ஆனால் அது எதுவும் வெளியே கேட்கவில்லையே!

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 26

சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள், நடுநடுவே மா, கொய்யா மரங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே இருந்தது அக்காட்சி. அதை எல்லாம் வாயை பேவென பிளந்து பார்த்து வைத்தான் நம் சித்து.

'ஆத்தாடி ஆத்தா இவ்வளவும் நம்மளதா! இந்த நைனா வசதியா வாழ்ந்தேன் வசதியா வாழ்ந்தேன்னு பெரும பீத்தும் போதுகூட இவ்ளோ வசதின்னு கனவுலகூட நான் நெனச்சு பாக்கலையே பரமா. இந்த தென்னந்தோப்பே பல ஏக்கர் இருக்கும் போலையே. சித்து செம லாட்டரி அடிச்சிருக்குடா உனக்கு' சிந்துவின் மைன்ட் வாய்ஸ் இது.

இன்று மதியம் பொழுது போகாமல் அனைவரும் அமர்ந்திருக்க "மாமா வீட்டுலையே இருக்க போர் அடிக்குது. நாம இந்த ஊரை சுத்தி பாக்கலாமா" என கதிர் வந்து கேட்ட பின்னே வெளியே செல்ல முடிவெடுத்தான் சித்து.

எனவே மாலை வேலை இந்த தோப்பை சுற்றி பார்க்கலாம் என கார்மேகம் கொடுத்த ஐடியாவின்படி சித்து அன்ட் கோ இங்கே கிளம்பி வந்திருக்க, அவ்வளவு பெரிய தோப்பை அவர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அதுவும் ஆனந்த அதிர்ச்சியாக இருக்க திக்குமுக்காடி போய் நின்றான் அரவிந்தின் பிள்ளை.

"தம்பி இது பத்து ஏக்கர் தென்னந்தோப்புபா. அப்புறம் அந்தா தெரியுது பாருங்க சின்ன மலை ஒன்னு" தொலைதூரத்தில் தெரிந்த குன்று ஒன்றை காட்டி கார்மேகம் கேட்க பால் விளம்பரத்திற்கு வரும் மாடு போல் பல்லைகாட்டி ஆம் என தலையாட்டி வைத்தான் சித்து.

"அந்த மலையையும் சேத்து ஒரு ஐம்பது ஏக்கர் வரும்ங்க. எல்லா அரவிந்து மச்சானுக்கு உங்க தாத்தாரு எழுது வச்சது. அது போவ பக்கத்து ஊருல தோப்பு வீடுன்னு ஒரு இருவது ஏக்கரு இருக்குப்பா"

கார்மேகம் அடுக்கிக் கொண்டே செல்ல தலை சுற்றி போனான் பையன். அவன் கண்கள் இரண்டும் சந்திரமுகி ஜோதிகாவை போல் 'அவ்வளவும் எனக்கா எனக்கா' என கேட்காமல் கேட்க, அதை அருகில் நின்று பார்த்திருந்த அரவிந்துக்கு கடுப்பாக இருந்தது.

"இங்க என் மருமவள பாரு எவ்ளோ கெத்தா நிக்கிறா. ஆனா நான் பெத்தத பாரு மண்டைய மண்டைய ஆட்டிக் கிட்டு மாடு மாறி நிக்கிறத. இவன என்னன்னு நான் பெத்தேனோ ச்சே. இவன் பண்றத பாத்து என் மாப்புள என்னைய கேவலமா நெனச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல"

சித்துவை கழுவி ஊத்திய அரவிந்த் அவர்தான் தன் பிள்ளையை அப்படி அருமை பெருமையாக வளர்த்தவர் என்பதை எப்போதும் போல் மறந்துவைத்தார்.

"எம்மா வீரா இங்க கொஞ்ச வாடாம்மா" என்க "என்னா அங்கிள்" மெல்ல கேட்டவாறு அவர் அருகே வீரா செல்ல

"எம்மா அந்த பைய பொடனிலையே நாலு சாத்து சாத்தி இழுத்துக் கிட்டு வாமா. என் மாப்புள்ள இவன் வெறிக்க வெறிக்க நிலத்தை பாக்கறத வச்சு சொத்த ஆட்டையப்போட வந்த களவானி பயன்னு நெனச்சிக்க போறாரு"

கோவமாக அரவிந்த் கூறினாலும் அதை கேட்டு சிரித்த வீரா "இருங்க அங்கிள் ந்தோ உடனே போய் இழுத்துட்டு வந்திடுறேன்" என கார்மேகம் அசந்த நேரம் இவனை தனியே இழுத்து வந்திருந்தாள்.

"ஐயோ வீராம்மா ஏன்டி என்ன இழுத்துட்டு வந்த. நான்தான் மாமாட்ட பேசிட்டு இருந்தேன்ல. அவரு என்னை பத்தி என்ன நெனப்பாரு" முகத்தை தூக்கி வைத்து கொண்டு சித்து கேட்டான்.

"அவரு நெனக்கிறது இருக்கட்டும், உங்க மூஞ்சில ஏன் சித்து பத்தாயிரம் வாட்ஸ் பல்ப்ப சுட்சு போட்டு விட்டாப்பல பிராகசமா எரிஞ்சது. என்னமோ விட்டா இப்பவே சொத்த புடுங்கிட்டு ஓடுற மாதிரியே நின்னுட்டு இருந்தீங்க. அதை பார்த்தா மட்டும் அவரு உங்கள ரொம்ப பெருமையா நெனப்பாரு பாருங்க"

"அவ்ளோ பங்கமாவா தெரிஞ்சிது" வீராவிடம் எதிர் கேள்வி சித்து கேட்டு வைக்க "ஆமா ரொம்பவே பகிரங்கமா தெரிஞ்சுது"

வீரா சொன்னதும்தான் சொத்தை கண்டு அரைபோதையில் இருந்த அந்த பரங்கி மண்டையனின் புத்தியில் நச்சென உரைத்தது. அதன்பிறகு "கெத்த விடக்கூடாதுடா சித்து! கெத்து கெத்து" என தனக்குள் கூறிக்கொண்டு சுற்றி முடித்து வீடு வந்து சேர்ந்தனர் அரவிந்த் கோஷ்டி.

மாலை மங்கி கதிரவன் அவன் டாட்டா பாய்பாய் சொல்லி சென்றுவிட இரவு நேரத்தில் அந்த வீட்டிலிருந்த அனைவரும் உறங்க சென்றனர். இங்கோ மூளையை முட்டுச்சந்தில் கலட்டி வைத்து வந்திருந்த நமது கும்பல் அவர்கள் சொத்தை அவர்களே எப்படி கொல்லை அடிப்பது என பிளான் போட கூட்டத்தை கூட்டி விட்டனர்.

அறையில் உள்ள லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு, வட்டமாய் அமர்ந்து நடுவே ஒரு மெழுகுவர்த்தியை பற்றவைத்து பேயை வரவைப்பது எப்படி என அரைகுறையாய் நூறு நாள் கிளாசை அட்டென்ட் செய்து வந்ததைப் போல் ஒரு செட்டப்பை செய்திருந்தனர்.

"சித்து எதுக்கு எல்லாரும் இப்ப ஒன்னா உக்கிந்திருக்கோம்"

"மாமா எனக்கு தூக்கம் வருது எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க"

"டேய் மவனே இப்பவே சொல்லிபுடுறேன், இந்த வீடு நெலம் தோப்பு எல்லாத்தையும் வித்துக்க அப்புடியும் இல்லையா இந்த வீட்டுல இருக்க பித்தளை அண்டு குண்டா எதவேனா திருடி வித்துக்க. ஆனா ஊர்ல நான் உழைச்சு ரத்தத்தை வேர்வையா சிந்தி சம்பாரிச்சு என் காசுல வாங்குன பிராப்பர்டிய மட்டும் தொடாதடா மகனே"

சித்தார்த் பேச ஆரம்பிக்கும் முன்னரே அனைவரும் அவர்களின் பங்குக்கு ஒவ்வொன்று கூற, அரவிந்த் விவரமாய் தனக்கு தேவையானதை அவன் காதில் போட்டு வைத்தார். இதில் ஹஸ்கி வாய்ஸ் வேறு.

"சப்பா.. கொஞ்ச நேரம் வாய மூடுங்க. கதிரு ஒரு ஃபைவ் மினிட்ஸ் நீ தூங்க போயிறலாம்"

அனைவரின் வாயையும் அடைத்த சித்து "நான் பிஸ்னஸ் ஆரம்பிக்க உன் நைனாவோட எந்த எடத்தை விக்கலாம்னு டிசைட் பண்ணிட்டேன்"

அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் அவன் இரண்டு கண்களும் பிரகாசமாய் மின்னியதை கேவலமாய் பார்த்தாலும், சித்து விற்க முடிவு செய்திருப்பது எந்த இடம் என தெரிந்துக் கொள்ள மற்றவர்களும் ஆர்வமாகி தாங்களும் அதே குட்டையில் விழுந்த மட்டை என அப்பட்டமாய் நிரூபித்தனர்.

"இன்னைக்கு கார்மேகம் மாமாட்ட எல்லா பிராப்பர்ட்டி டீடெயில்ஸும் வாங்கிட்டேன். வாங்குனதுல எந்த இடம் இருக்கிறதுலையே ஒன்னுத்துக்கும் உதவாத வேஸ்ட் லாண்டுனு நோட் பண்ணிட்டே வந்தனா

அப்படி நோட் பண்ணுனதுல என் கிரைன் அந்த வேஸ்ட் லாண்ட் எதுன்னு டிஸ்கவர் பண்ணிருச்சு" தன் தோளில் தானே பெருமையாய் தட்டிக் கொண்ட சித்து

"கேட்டா நீங்களே என்ன எப்புடி பாராட்ட போறீங்க பாருங்க" என்றான் பீடிகையாய்.

"டேய் வெண்ண வெட்டி மொதல்ல எடத்த சொல்லுடா. அது தேறுமா தேறாதான்னு நான் சொல்றேன்" இடையில் அவனின் பெருமையை கத்திரிக்கோல் இல்லாமலே அவன் தந்தை வெட்டிவிட வீராவும் கதிரும் வேறு அவருக்கு ஆமாம்சாமி போட்டனர்.

"ப்ச் யோவ் தகப்பா என்ன முழுசா சொல்லவிடுயா. விடாம குறுக்க குறுக்க பேசுன கொறவலைய கடிச்சு துப்பிருவேன் பாத்துக்க" கத்திவிட்டான் சித்து. பின்னே என்ன பேசினாலும் என்டு கார்டு போட்டால் அவனும்தான் என்ன செய்வான்‌.

"சரி கேப் விடாதா கண்டினியூ கண்டினியூடா"

"நீங்க இப்புடி என்னை பேசவிடாம பண்ணிட்டு இருந்தா நான் எப்படி சொல்ல வந்தத சொல்ல முடியும் மிஸ்டர். அழகர்சாமி" சித்து சரியான இடத்தில் அரவிந்தை அடிக்க

"டேய் டேய் யார பாத்துடா அழகர்சாமின்ன"

"ஆன் செவுத்த பாத்து. கேக்குற கேள்விய பாரு கேனை மாதிரி. வேற யார சொல்லுவேன். உன்னதான் தகப்பா அழகர்சாமி அழகர்சாமி. உன் பேரு அதானே"

வழக்கம் போல் பேச ஆரம்பித்த டாப்பிக்கை விட்டு சண்டையையை ஒரு டாப்பிக்காக மாற்றி தந்தை மகன் இருவரும் இறக்கிவிட பார்த்திருந்த வீராவுக்கும் கதிருக்கும் 'என்னடா இது' என்றாக

"கதிரு இதுசரிப்பட்டு வராது. இவங்க ஆரம்பிச்சிட்டாங்க நாம இப்படியே பிச்சிட்டு ஓடிறலாம். இல்ல நம்ம காது ரெண்டும் காவால முக்குன காக்கா மாதிரி இழுத்துக்கும். வாடா கதிரு" டைம் பார்த்து பிச்சிக்கோ என தப்பிக்க பார்த்த அக்கா தம்பி இருவரையும் கண நேரத்தில் கண்டுக்கொண்ட தந்தை மகன் கூட்டணி கப்பென பிடித்துவிட்டது‌.

"நான் இன்னும் முடிக்கல அதுக்குள்ள எங்க போறீங்க ரெண்டு பேரும்" பிட்ஸ் வந்த லேப்ரேடரை போல் மூச்சு வாங்கியபடி மகன் கேட்டு வைக்க "அதானே!" என தந்தையும் சிங்சாங் அடித்து ஒத்து ஊதினான்.

"அங்கிள் சித்து நீங்க ரெண்டு பேரும் சண்டைய முடிச்சு ஒரு முடிவுக்கு வரதெல்லாம் நடக்கற காரியமா. எங்கள‌ பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா ம்ம். எங்களை விட்டா இப்புடியே தெரிச்சு ஓடிருவோம்"

நொந்து போய் வீரா கூறியதிற்கு "அச்சோ என் செல்லம் உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணீட்டனா. சாரி செல்லம் ஒரே ஒரு ஃபைவ் மினிட்ஸ் தா எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுறேன் பிராமிஸ் காட் பிராமிஸ்" சித்து அவன் தலையில் அடித்து சத்தியம் செய்து உத்திரவாதம் தந்தப்பின்னரே மீண்டும் அமர்ந்தாள் வீரா.

"ஓகே ஆரம்பிக்கலாமா" ஒரு நோட்டு பேனாவை எடுத்து எதோ ராக்கெட் விடும் விஞ்ஞானியின் ரேஞ்சுக்கு பில்டப்பை கொடுத்து ஆரம்பித்தான்.

"பர்ஸ்ட் இந்த வீடு உசுரே போனாலும் இந்த வீட்ட விக்கமாட்டேன். ஏனா சென்னைக்கு மொத்தமா டாட்டா சொல்லிட்டு இனி நாம வாழப்போறதே இந்த வீட்டுலதான்" முதல் குண்டை போட்டு மங்களகரமாய்‌ ஆரம்பித்தான் பையன்.

"செகன்டு அந்த தென்னந்தோப்பு. அதுல இருக்க தேங்காய வித்தாலே நாம மாசாமாசம் தங்க திங்கனு எதுக்கும் பிரச்சனை வராது. சோ அதுவும் நோ.

அடுத்து மிச்சமீதி இருக்கிறது எல்லாம் நான் ஆராஞ்சு பார்த்ததுல எல்லாம் அக்ரிகல்ச்சரல் லேண்டு. லீஸ்க்கு விட்டோ இல்ல ஆள் வச்சு வேலை செஞ்சோ கூட நான் பொழச்சுக்குவேன்" என சித்து நிறுத்த

"டேய் முண்டம் இந்த வெங்காயத்துக்காடா இவ்ளோ பில்டப்பு. மொத்தத்துல தண்டமா வாழப்போறததான் இவ்ளோ டீடெயிலா சொல்ரியா" நக்கல் செய்து வைத்தார் அவன் தந்தை.

"யோவ் தகப்பா உன் திருவாயை கொஞ்ச நேரம் மூடிட்டி நான் சொல்ல வரத முழுசா கேளுயா. நான் இப்ப விக்கிறதுக்கு ஐடியா பண்ணி வச்சுருக்கிற இடம் நம்ம ஊர் அவுட்டர்ல இருக்கே அந்த பாலுங்கெணறு அப்புறம் அதுல இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கே அந்த சின்ன மலை அந்த வேஸ்ட் லேண்டதான்"

சித்து சொல்லி முடித்த நேரம் இவ்வளவு நேரமும் இவர்கள் குழுவில் சைலண்ட் பார்ட்னராக இருந்த மரபொம்பையின் ஹார்ட் நிஜமாகவே விரிசல் விட்டுவிட்டது.

"அடப்பாலபோனவனே அதை எதுக்குடா விக்கிறதுக்கு முடிவு பண்ணுன அதுக்கு மத்த எல்லா சொத்தையும் வித்தா கூட என் மனசு ஆறிருக்குமே" என புலம்போ புலம்பென புலம்ப அதன் புலம்பலை கேட்கத்தான் நாதியில்லாது போனது.

"த்தூ இந்த வெளங்காத பிளான போட்டுட்டு என்னா பில்லடப்பு. ஏன்டா வெளக்கெண்ண அந்த இத்துப்போன எடத்தை எவன்டா வாங்குவான். அதுப்போக அந்த பாலுங்கெனத்துல அடிக்கடி பொணம் வேற கிடக்குதா ஊருல நான் ரவுண்ட்ஸ் வரப்ப ஆளுங்க பேசிக்கிட்டாங்கடா. இந்த வேலைதான் பாக்கபோறன்னு சொல்லிருந்தீனா நான் என் ஜோலிய பாத்துட்டு இந்நேரம் போயிருப்பேன். வந்துட்டான் உருப்புடாத செக்கு வந்தது ஜக்குன்னு"

சித்துவின் உருப்படாத ஐடியாவை கேட்டு காறி துப்பி கழுவி ஊத்தி கிளம்ப பார்த்த அரவிந்தை இழைத்துப் பிடித்த சித்து

"ஐயோ நைனா எத்தனை தடவை சொல்றது நான் சொல்றத முழுசா கேளுன்னு. நீ சொல்றது எல்லாம் எனக்கும் தெரியும் நானும் கேள்விப்பட்டேன். அதான் எல்லாத்துக்கும் சேத்து செமையா ஒரு பிளான் போட்டுட்டேன்" என மீண்டும் ஆரம்பித்தான்.

"நான் விசாரச்சதுல கொஞ்ச ஆளுங்க என்ன சொன்னாங்கனா அந்த மலை இருக்குல்ல மலை அதுல பெரிய புதையல் பொதஞ்சு இருக்காம். அந்த புதையல தேடி எடுக்க நிறைய பேர் டிரை பண்ண, போறவங்கல எல்லாரையும் அங்க காவலுக்கு இருக்க ஒரு பூதம் அடிச்சு அந்த கேணில போடுதாம். அது உனக்கு தெரியுமா?"

சித்து கதை கூறுவதைப் போல் சீரியசாக சொல்ல "அப்புடியா?" வாயை பிளந்து அரவிந்த் கேட்டு வைக்க, அவன் சொன்னதை அரவிந்த் நம்பியதில் வெற்றி சிரிப்பு சிரித்தான் சித்து.

அடுத்த நொடியே அவன் சிரிப்பை ஆஃப் செய்வது போல் "அப்படின்னு ஊர்ல புரளிய கெளப்பிவிட்டு அந்த இடத்தை விக்கப்போறீங்க அதானே சித்து? இதுக்கு இவ்ளோ நேரம் இந்த இழுவை. வா கதிரு நாம தூங்க போலாம்" என வீரா சித்துவின் வாயை அடைத்து கதிரோடு அவள் அறைக்கு ஓடிவிட்டாள்.

'எப்புட்ரா ஒரு செகண்ட்ல கண்டுபிடிச்சா' என வீராவின் அறிவை கண்டு சித்து அரண்டு போய் பார்க்க

'என் மருமவளுக்கு இருக்க அறிவுக்கு அவ எங்கையோ இருக்க வேண்டிய ஆளு, இவன் கூட குப்பை கொட்டனும்னு அவ தலைல எழுதிருக்கு என்ன பண்றது' என வீராவின் அறிவை புகழ்ந்து நின்றார் அரவிந்த்.

"என்னாது புரளிய கிளப்பிவிட போறாங்களா? என் புராப்பர்டியா இருக்க ஒரே கிணறு அது இல்லாம நான் என்னடா பண்ணுவேன்" என மூலையில் மூக்கு சிந்திக் கொண்டிருந்தது பொம்மை.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 27

வெஞ்சாமரம் வைத்து வீசுவதை போல் குறைவில்லாமல் காற்று சுழன்று வந்து முகத்தை மோத அந்த காலை வேலையில்தான் தூக்கம் நன்றாக கண்களை சுழற்றிக் கொண்டு வர 'ஆஹா இதுவல்லவோ சுகம்' என இழுத்துப் போர்த்தி தூக்கத்தை தொடர்ந்தான்‌ ஷங்கர்.

இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த ஷங்கர், இப்போதும் தான் நல்ல தூக்கத்திற்கு சென்றிருந்தான்‌.

'நான் தூங்காதப்ப ஊருல ஒரு பயலும் தூக்கக்கூடாதுடா' என்ற நல்லெண்ணம் கொண்ட மரபொம்பையோ அவன் காலை வேளையை கெடுக்க தடதடதடவென கப்போர்ட்டை பிடித்து ஆட்டு ஆட்டென ஆட்ட அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தான் ஷங்கர். அருகில் அவன் உயிர் நண்பனாகிய மாதவன் படுத்திருக்க, அவனை பார்த்து திடுக்கிட்டு போன ஷங்கர், அவன் இவ்வளவு நேரம் தூங்கிய இடத்தை ஒருமுறை சுற்றி பார்த்தான்.

"ஆஆஆஆ......" என பார்த்தவுடன் அலறிவிட்டான்.

அவன் அலறலில் நல்ல தூக்கத்தில் இருந்த மாதவனும் "அம்மா........" என அலறிக் கொண்டு எழுந்தான்.

ஒன்றாக ஆரம்பித்த இருவரின் அலறலும் ஒரே புலோவில் சென்று முடிய ஷங்கரை முறைத்து "ஏலே எருமை கணக்கா ஏன்டா கத்துன?" மாதவன் பதறும் இதயத்துடன் கேட்டு வைத்தான்.

"எருமை கணக்காவா, எலேய் நானா இருக்கவும் கத்துனதோட நிறுத்துனேன். வேற யாரா இருந்தாலும் இந்நேரம் பயத்துல இந்த வீட்டையே ரெண்டா ஆக்கிருப்பாங்க" பயந்தில் முகம் எல்லாம் வெளுத்திருக்க திக்கி திணறி கூறி வைத்தான் அவன்.

"ப்ச் என்னடா ஷங்கரு சொல்லுற. கொஞ்ச புரியிராப்லதான் சொல்லே" ஷங்கரின் அலப்பறையில் தன் தூக்கம் கெட்ட காண்டில் கடுப்படித்தான் மாதவன்.

"டேய் மாதவா! நான் உன்கூட தூங்கிட்டு இருக்கேன்டா" ஷங்கர் கூற

"ஆமாண்டா என்கூட தானே இருக்க அப்ப என்னோட தான் தூக்கிருக்க. அதுக்கா கத்துன" சலித்து கொண்டான் மாதவன்.

"டேய் வெளக்கெண்ண நான் சொல்றது உனக்கு புரியலையா. நான் நேத்து நைட்டு நான் எங்கூட்டுல படுத்திருந்தேன். இப்ப இந்த பெரிய வீட்டுல உன்கூட தூக்குறேன்‌. இப்பயாவது நான் சொல்றது புரியுதா"

கைக்கால்கள் எல்லாம் பிட்ஸ் வந்த காக்கா போல் உதற பதறிப்போய் கேட்டு வைத்தான் ஷங்கர். அப்போதுதான் மாதவனுக்கும் நினைவு வந்தது. முதல்நாள் இரவு இவர்கள் இருவரையும் அந்த பொம்மை கடத்தி வந்ததில் பயந்துபோன ஷங்கர் இன்றும் தூங்க வரேன் என்ற மாதவனிடம்

"இனி உன் சாகவாசமே வேண்டாம்டா" என நேற்றைய இரவே நடுரோட்டில் வைத்து பெரிய கும்பிடாய் போட்டு கழட்டிவிட்டு போய் அவன் வீட்டில் படுத்து விட்டான்‌. ஆனால் விடிந்து பார்த்தால் மாதவனோடு பெரிய வீட்டில் இருந்தால் அவனும் பயப்படாமல் என்ன செய்வான்‌.

நேற்று இரவு அரவிந்த் அண்ட் கோ போட்ட பிளானில் வெறியாகி நாக்அவுட் ஆன மரபொம்மை தன்னைதானே செல்ஃப் மர்டர் செய்து கொள்ள நினைக்க, கடைசியில் என்ன நினைத்ததோ காற்றிலே பல கணக்குகளை அழித்து அழித்து போட்டு பார்த்துவிட்டு 'இது ஒர்க்அவுட் ஆகும்' என அது ஒரு பிளானை முடிவில் போட்டது.

அதனால் அதன் வேலை எல்லாவற்றையும் முடிக்க மாதவனோடு ஷங்கரையும் லிஸ்டில் இணைத்து "இவனுங்கள ஓவர் டைம் பாக்கவச்சாவது என் வேலைய முடிச்சு காட்டுறேன்டா. அரவிந்தா நீயா நானானு ஒரு கை பாத்துரலாம்டா" இப்படி சவால்விட்டு ஷங்கரை பொம்மை அள்ளி வந்ததை பாவம் இருவரும் அறியவில்லை.

காலையிலே பொம்மை இப்படி ஒரு வேலை பார்த்ததில் வெலவெலத்துப் போய் ஹாலில் அமர்ந்திருந்தனர் இருவரும். அந்த நேரம் பார்த்து மொத்த குடும்பமும் அங்கேயே இருக்க திடீரென எப்போதும்போல் டமார் என்றொரு சத்தம் கேட்டது. எல்லாம் நம் மரபொம்மையின் வேலைதான். பொழுதுபோகாமல் கபோர்டுக்குள் உருண்டு கொண்டிருந்தது.

அந்த சத்தம் கேட்டு" அது என்ன சத்தம் அலமேலு?" என்றார் கார்மேகம்.

"தெரியலையேங்க. வெளிய எதாவது மட்ட எதுவும் உலுந்திருக்கும்" அலமேலு இவ்வாறு பதில் சொனன்வுடன் "என்ன சத்தம் அத்தை மாமா எனக்கு ஒன்னுமே கேக்கலையே" என நம் சித்து சொல்ல வீரா கதிரும் ஆமோதித்தனர். அங்கிருந்த ஷங்கர் இதை கவனித்துபின் மாதவனை தனியே இழுத்து வந்தான்.

"டேய் மாதவா உள்ள நடந்ததை கவனிச்சியா. நமக்கு உன் அப்பா அம்மாவுக்கு கேட்ட அந்த சத்தம் ஊருல இருந்து வந்த உன் மாமா குடும்பத்துல யாருக்கும் கேக்கலடா"

ஒருவித ஆர்வத்துடன் பரபரப்பான குரலில் ஷங்கர் கூறி வைக்க "அதுக்கு இப்ப என்னடா பண்றது. நமக்கு கேட்ட மாதிரி அவங்களுக்கும் கேக்கனுமா" அந்த பொம்மை இவர்களை மட்டும் வைத்து செய்வதில் கடுப்பில் கத்தினான் மாதவன்.

"ப்ச் அதில்லடா நான் சொல்றத முழுசா கேளு. நம்மல போட்டு வாட்டுற மாதிரி அவங்ககிட்ட அந்த பேயால அதோட வேலைய காட்டமுடிலையோன்னு எனக்கு தோணுதுடா" கண்களில் ஒருவித ஒளியுடன் ஷங்கர் கூறி நிறுத்த

"அதுக்கு என்ன பண்ணலான்னு சொல்ற?" சுரத்தை இன்றி கேட்டான் அவன்.

"நாம எங்க வீட்டுக்கு போனாலும் அந்த பேய் நம்மல இங்க தூக்கிட்டு வந்திருது. வேற எங்க போனாலும் அது நம்மல விடாதுன்னுதான் எனக்கு தோணுது‌. அதோட இந்த பெரிய வீட்ல அந்த பேயால உன் மாமா மகன எதுவும் பண்ண முடியல. அதனால அவன் கால்ல கைல உழுந்தாவது அவன் ரூம்ல தங்கிகலாம்டா. அதுதான் நமக்கு பாதுகாப்புனு எனக்கு தோணுது"

வீரமாக பேச்சை ஆரம்பித்திருந்த ஷங்கர் விட்டா அழுதுருவேன் என்பதை போல் மூஞ்சை வைத்து சொல்லி முடித்தான். அவன் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட மாதவனுக்கு அவன் நண்பன் கூறியதில் இருந்த உண்மை புரிய அவனும் ஒப்புக் கொண்டான். அதைவிட்டா அவனுக்கு வேற வழியும் இல்லையே. எனவே ஸ்ரைட்டாக சித்துவின் காலில் விழும் முடிவை எடுத்தனர் நண்பர்கள் இருவரும்.

அதே நேரம் சித்து வீரா கதிர் எக்டாரா பீசாக அரவிந்த் கூட்டணியான நம் கொல்லை கும்பல் ஊர் சுற்ற கிளம்புகிறோம் எனற் பேரில் புரளியை கிளப்பிவிட கிளம்பிவிட்டது.

"மாமா புரளிய கிளப்பிவிடறேன்னு செல்லி கிளம்பி வந்துட்டோம். ஆனா இதை எப்படி செய்ய போறோம்"

சித்துவின் கையை பிடித்து ஆட்டியபடி நடந்து வந்துக் கொண்டிருந்த கதிர் ஆர்வத்துடன் கேட்க, சித்து தன் பின்னால் திரும்பி பார்த்தான். வீராவும் அரவிந்தும் அவர்கள் தனியாக கதைப் பேசிக் கொண்டு வந்தனர்‌.

"கதிர் நீ ஒருத்தன்தான்டா இந்த மாமாவ மதிக்குற. அங்க பாரு உங்க அக்காவையும் என் அப்பாவையும் ஜாலியா பேசிட்டு வராங்க. நாம எவ்ளோ பெரிய புராஜக்ட்ட முடிக்க வந்திருக்கோம்னு கொஞ்சகூட பொறுப்பே இல்லடா ரெண்டு பேருக்கும்"

அவர்களுக்கும் கேட்க வேண்டும் என சத்தமாகவே சொல்லி வைத்தான் அரவிந்தின் மகன். ஆனால் வீராவும் அரவிந்தும் பேச்சை நிறுத்துவதைப் போல் தெரியவில்லை.

"மாமா நீங்க சொன்னது அவங்களுக்கு கேக்கலன்னு நினைக்கிறேன். பாருங்க இன்னும் பேசிட்டே வராங்க. அங்கிள்‌ அக்கா நம்மல எவ்ளோ பெரிய வேலையா மாமா கூட்டிட்டு வந்திருக்காரு நீங்க என்னன்னா பேசிட்டே வரீங்க. நாங்க பேசுறது உங்க காதுல விழுதா இல்லையா" பின்னால் திரும்பி பார்த்து மாமனுக்காய் மச்சான் அவன் நியாயம் கேட்க

"எல்லாம் கேக்குது கேக்குது‌. இது ஊருல இல்லாத அதிசய பிளானு. இதை செய்ய இதுக்கு நாலு பேரு. நானெல்லாம் எவ்ளோ பெரிய ஆளு என்ன வச்சு சில்லறை வேலை பார்க்க போறான் என் புள்ள. இவனும் இவன் பிளானும் சொதப்பாம இருந்தா சரி" ஆரம்பத்திலையே அபசகுனமாய் வாயை வைத்தார் அரவிந்த்.

"யோவ் நைனா இன்னும் தொடங்கவே இல்ல அதுக்குள்ள வாய வச்சு தொலக்காத. என் பிளானுக்குலாம் ஒன்னும் கொறச்சல் இல்ல அத எப்படி எக்சிகுயூட் பண்றேன்னு பாருங்க" தன் பிளானை தானே பெருமையாய் பேசி சித்து முன்னே சென்றான்.

நம் குரூப் ரொம்ப நேரமாக நடந்து சென்று கொண்டிருக்க வீராவுக்கு கடுப்பாகியது "சித்து கொஞ்ச நில்லுங்க. நாம என்ன பல மைல் பாதயாத்திரையா போறோம். நிக்காம போய்கிட்டே இருக்கீங்க. என்னால இதுக்கு மேல நடக்க முடியாது" கால் வலியெடுக்கவே ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டாள் வீரசுந்தரி.

"ஆமா மாமா எனக்கும் கால் வலிக்குது" கதிரும் அமர்ந்துவிட

"டேய் சித்து பையா இவ்ளோ தூரம் நடந்து போயி என்னா தான்டா பண்ண போற. சொல்லித் தொலையே எங்க போறோம்னாவது தெரிஞ்சுக்கிறோம்" அரவிந்தும் பொறுத்தது போதும் என கேட்டு விட்டார்.

அரவிந்த் வாழ்வில் இவ்வளவு பொறுமையாக எல்லாம் இருந்ததே இல்லை. அப்படியும் மனிதர் அமைதியாக வந்தார் என்றால் எங்கு வாயை திறந்தால் சொத்தைதான்னு அவன் பிள்ளை வந்து நிற்பானே. அந்த அமைதியும் டாட்டா பாய்பாய் சொல்லி அதற்கு மேல் நிற்காது ஓடிவிட "எனக்கு இப்ப தெரிஞ்சே ஆகனும்" என்றுவிட்டார்.

"நாம ஊருக்கு வந்த அன்னைக்கு ஒரு கெழவிட்ட அட்ரெஸ் கேட்டு வந்தோமே ஞாபகம் இருக்கா. அவங்கலதான் இப்ப பாக்க போறோம்" எல்லாரும் ரவுண்டு கட்டிய பிறகு சித்து கூற "எதுக்கு" என்றார் அவன் தந்தை.

"நைனா சிட்டில ஒரு விஷயம் பரவனும்னா அதுக்கு ஒரு வீடியோ எடுத்து சோசியல் மீடியால அப்டேட் பண்ணனும்‌. இதுவே இந்த மாதிரி வில்லேஜ்ல ஒரு வதந்தி பரவனுனா அதுக்கு இந்த மாதிரி ஒரு பாட்டிய புடிச்சா போதும். நீ வேணா வந்து பாரு அந்த பாட்டியால இந்த நியூஸ் எப்புடி தீயா பரவுதுனு"

தன் பிளானை கூறிய சித்து சாதனை படைத்த சாருகான் போல் போஸ் கொடுத்த நிற்க "ஐடியா தேற வாய்ப்பு இருக்கு. சரி போஸ் கொடுத்தது போதும் வாங்க போலாம்" அவனை அப்படியே ஆஃப் செய்து இழுத்து சென்றாள் அவன் காதலி.

"பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க. பாட்டி கொஞ்ச வெளிய வாங்களே!" அந்த கிழவியின் வீட்டில் பூட்டு தொங்குவதை கூட கவனிக்காது கத்திக் கொண்டிருந்தான் அந்த பகல் நேர பைத்தியகாரன்.

"அங்கிள் உங்க புள்ள எதுக்கும் தேறமாட்டார்னு சொல்லுவீங்கல்ல அது நூறு பர்சண்ட் உண்மை அங்கிள். அங்க பாருங்க பூட்டி இருக்க வீட்டுக்கு முன்னாடி நின்னு கத்தறத" அவன் கத்துவதை பார்த்து தலையிலே அடித்துக் கொண்ட வீரா அரவிந்திடம் புலம்பினாள். அப்போது சரியாக அந்த வழியாக வந்தான் ஒருவன்.

சித்து அங்கு கத்திக் கொண்டிருக்க தனியே நின்றிருந்த வீராவிடம் வந்து "நீங்க மெட்ராஸ்ல இருந்து வந்த அந்த பெரிய வீட்டு ஆளுவதானே. பெரிய கெழவி வீட்ல நீங்க என்ன செய்றீக" என்றான்.

"ஆமாங்க நாங்க ஊர்ல இருந்து வந்தவங்கதான். அது நாங்க இந்த ஊருக்கு வந்த அன்னைக்கு பாட்டி தான் எங்களுக்கு அட்ரெஸ் சொன்னாங்க. அப்ப டைம் இல்ல அதான் அப்படியே போய்ட்டோம். இப்ப சும்மா இருந்தோம் அதான் பாட்டிய பாத்துட்டு போலாம்னு வந்தோம்" வீரா அவன் ஆர்வத்தை கவனித்தவாறே பதில் கூற சித்துவுன் வந்து இணைந்து கொண்டான்‌.

"ஆனா பெருசு வீட்ல எல்லாரும் ஒரு விஷேசத்துகாவ வெளியூர் போயிருக்காவ. நீங்க ஒரு ரெண்டு நாள் சென்டு வந்தியன்னா அவக வந்துடுவாக"

பாட்டி ஊரிலே இல்லை என்ற தகவலை அவன் கூறி நிற்க 'எடுத்த எடுப்பிலேயே என் நைனா வாய வச்சுது. எதுவுமே வெளங்கமாட்டுதே. இந்த கெழவி எப்ப வந்து நான் எப்ப என் பிளான் ஆரம்பிக்க' முகம் எல்லாம் சோர்ந்து போக நொந்துவிட்டான் சித்து.

சித்துவின் தொங்கி போன முகத்தை பார்த்து 'இவரு தேறமாட்டாரு. இதுக்கு மேல இவரை நம்புனா கதைக்கு ஆகாது நம்மலே இத டீல் பண்ண வேண்டியதுதான்' என களத்தில் குதித்தாள் வீரா.

"அண்ணா உங்க பேரு என்ன?" வீரா தன் என்கொயரியை ஆரம்பித்தாள்.

"பாண்டித்துறை‌. ஊர்ல எல்லா பயலும் பாண்டின்னுவாக. ஏம்மா கேக்குற" என்றான் அவன் எதார்த்தமாக.

"உங்களுக்கு எப்படி பாட்டி ஊருக்கு போனது தெரியும். நீங்க இங்க பக்கத்து வீடா?" அடுத்த பிட்டை போட

"இல்ல தாயு என் வீடு இன்னும் ஐஞ்சு தெரு தள்ளி இருக்கு. அதுபோக இந்த கெழவி வீடுன்னு இல்ல இந்த ஊருக்குள்ள என்ன நடந்தாலும் எனக்கு தெரியாம போகது. எல்லாம் எனக்கு அத்துப்படி" தன் பெருமையை அள்ளி விட்டான் அந்த பாண்டி‌.

"ஓஓஓ... சூப்பர் அண்ணா. அப்ப நீங்க இந்த ஊர்ல பெரிய ஆளுதான் போல" ஒரு பக்கெட் ஐஸ் தண்ணியை அவன் தலையில் ஊற்றிய வீரா கொஞ்ச நேரம் இதுஅதுவென பேசி அவனிடம் குளோஸ் ஆகிவிட்டாள்.

"அப்புறம் அண்ணா இந்த ஊர் அவுட்டர்ல ஒரு மலை இருக்குதாம் அதுல ரொம்ப பெரிய புதையல் இருக்குதாமே பக்கத்து ஊருக்கு நேத்து கொஞ்ச திங்க்ஸ் வாங்க போனப்ப சிலர் பேசிக்கிட்டாங்க" மெதுவாக மெயின் பிட்டை போட்டாள் திருடர் சங்க அண்டர்வேல்ட் குயின்.

"என்னாது புதையலா?" அதிர்ச்சியில் வாயை பிளந்தான் அவன்.

"ஆமா அண்ணா அதுவும் அந்த புதையல எதோ ஒரு பெரிய சக்தி பாதுகாத்துட்டு வருதாம். அங்க யாராவது போனா அவங்கல கொண்ணு அந்த கெணத்துல போட்டுட்டு இருக்காமே. அந்த இடத்தோட உன்மையான சொந்தக்காரங்க வந்தா அந்த சக்தி புதையலை அவங்கல எடுக்க விடும் அப்படின்னு சொன்னாங்க. உண்மையா அண்ணா இவ்ளோ தெரிஞ்ச உங்களுக்கு இது தெரிஞ்சு இருக்குமே"

இவள் பேச பேச 'என்ன அப்படியும் இருக்குமோ. அதான் அந்த கெணத்துல நிறைய பொணம் கெடந்துதா?' என எண்ணிய பாண்டி

"ஆமா தாயு. இது உங்களுக்கு தெரிஞ்சு போச்சா. இது பல நாளா இங்க நடக்குது. எத்தனை பொணம் அந்த கெணத்துல இருந்து எடுத்துருக்காங்க தெரியுமா" தனக்கு தெரியவில்லை என்றால் தன்னோட கெத்து என்னாவது என இப்படி அடித்துவிட்ட பாண்டி 'மொதல்ல போயி நாலு பேருக்கிட்ட சொல்லனும்' என சிந்தித்து "சரி தாயு சோலி நிறைய கெடக்கு நான் அப்புடியே கெளம்பறேன்" என வதந்தியை கிளப்ப புரப்பட்டுவிட்டான்.

இவ்வளவு நேரம் வீரா பேசியதை ஆவென பார்த்திருந்த சித்து "எப்படி வீரா செல்லம் கலக்குற" என ஆச்சரியப்பட்டு கேட்க

"சித்து உங்க ஐடியா எல்லாம் ஓகேதான். அதேநேரம் வில்லேஜ்ல பாட்டினு இல்ல யார்ட்ட சொன்னாலும் அந்த நியூஸ் பரவிரும். இப்ப இவரு போய் எப்படி பரப்புரார்னு மட்டும் பாருங்க" வீரா தன் பாயிண்ட் ஆஃப் வீயூவை கொட்டிவிட்டு கதிரை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

"ஹையோ என் மருமகளுக்கு என்னா பிரைனு. என் மருமவட்ட இருந்து நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு‌. இப்ப புரியுதா அவ இல்லாம உன்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு" அரவிந்த் தன் பங்கிற்கு அவனை கலாய்த்து விட்டு செல்ல,

'அப்ப உண்மையாவே நமக்கு மூளை வளர்ச்சி பத்தலையோ' போகும் அவர்களை பார்த்து எண்ணும் அளவுக்கு சித்தார்த்தின் மூளை ஸ்டன் ஆகி விட்டது.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 28

"உன் குத்தமா என் குத்தமா
யார நானும் குத்தம் சொல்ல
பச்சஞ்பசு சோலையிலே
பாடி வந்த பைங்கிளியே"

வானத்தில் இடிக்கும் இடி தங்கள் தலையின் மீது விழுந்ததைப் போல் கண்ணத்தில் கையை முட்டுக் கொடுத்து வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தனர் மாதவனும் ஷங்கரும். எதுக்கு இப்படி உக்காந்திருக்காங்கனு பாக்குறீங்களா? வேற ஒன்னும் இல்லைங்க வெளிய ஊரு சுத்த போயிருந்த நம்ம சித்து அண்ட் கோக்காக தான் இவங்க வெயிட்டிங்.

இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி வீட்டுக்குள்ள பாட்ட போட்டுவிட்டுட்டு நம்ம அலமேலு அம்மா இரவு உணவுக்கு சமைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் காலையில் சித்து அறையிலே டேரா போட்டுவிடலாம் என பேசி வந்து பார்க்கும் நேரம் சித்து டாட்டா பாய்பாய் சொல்லி வீட்டை விட்டு கிளம்பிவிட அவன் எப்போதுடா வருவான் என நொடிக்கு ஒருதரம் தெருவை பார்த்து வைத்தான் மாதவன்‌.

"வேலை இல்லாத வெட்டி பயலுவலா ஏன்டா நடு வாசல்ல நாய்கணக்கா காவகாத்துட்டு உக்காந்து கெடக்குறீங்க. உங்க மூஞ்ச பாத்துட்டு வெளிய போனா போற வேலை உருப்புடுமாடா"

காலையில் கார்மேகம் வெளியே போகும்போது நாலு வாங்கு வாங்கி சென்றும்கூட அந்த இடத்தைவிட்டு அசைவேனா என அமர்ந்திருக்க திட்டிய படிதான் வீட்டைவிட்டு வெளியேறினார் அவர்.

"மாமா நாளைக்கு நாம எங்க போலாம். இந்த ஊருக்குள்ள நடந்து நடந்து கால் வலிக்குது மாமா அதுக்கு எதாவது பண்ணுங்க பிளீஸ்"

இன்று நடந்து நடந்து தன் கால் நொந்துபோனதில் கதிர் சித்துவிடம் கம்ப்ளைன் செய்தபடி வர அவனுக்கு சித்து எதோ பதில் அளிக்க என உள்ளே எண்ட்ரி கொடுத்தனர் நம் சித்து அண்ட் கோ. ஆனால் காலையில் இருந்து இவர்களுக்காய் வாசலில் காவல் இருந்த இரண்டு நண்பர்களையும் திரும்பியும் பார்க்காது உள்ளே சென்றுவிட, அடுத்த நொடி அவர்களும் உள்ளே வந்தனர்‌.

"என்ன தம்பி ஊரை நல்லா சுத்தி பாத்தீங்களா" இவர்கள் வரும் நேரம் அறிந்து காபி கோப்பையுடன் வந்தார் அத்தை அலமேலு.

"ம்ம் நல்லா சுத்தி பாத்தோம் மா. நல்லா பச்சைபசேல்னு மொத்த ஊரும் உங்களை மாதிரியே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு" வீரா ஒன்றுக்கு இரண்டாய் பெருமை பீத்தி அலமேலுவின் வீக் பாய்ண்டில் அடிக்க அவர் முகம் பூரித்து போனது.

"என் ராஜாத்தி நீயும் ரொம்ப அழகுடா" வீராவின் முகத்தை வழித்து திருஷ்டி எடுத்த அலமேலு "உனக்கு சாயங்காலம் சாப்பிட என்ன வேணும் சொல்லு நான் செஞ்சு தரேன்" என அடுத்து ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டிஸ்கஸனுக்கு செல்ல

"நானும் வரேன் ரெண்டு பேரும் சேந்தே செய்யலாம்" வீராவும் அவரோடு பேசியபடி சமையலறைக்கு சென்றுவிட்டாள்.

'ஐயோ ஸ்கோர் பண்றாலே. எங்கருந்துதான் இப்படியெல்லாம் பேச கத்துக்கிட்டாளோ. ம்ம் நைனா சொல்ற மாதிரி என் வீரா செல்லத்துக்கு ஆண்டவன் அறிவை அள்ளிதான் குடுத்துருக்கான்'

வீராவை பச்சையாக சைட் அடித்து வாயில் ஜொல்லு ஊற்ற அமர்ந்திருந்த சித்துவை கண்டு 'இது தேறாத கேஸு' என அரவிந்த் எப்போதும்போல் அவர் தங்கை என்ன ஸ்நேக்ஸ் செய்கிறார் என பார்க்க கிட்சன் உள்ளே புகுந்துவிட்டார்‌.

"சித்து சித்து சித்து" வீராவின் நினைப்பில் அரைபோதையில் அமர்ந்திருந்த சித்துவை மாதவன் பிடித்து உழுக்க

"ஆன் என்ன என்ன ஆச்சு. ஓஓ.. மாதவன் நீங்களா? எதுக்கு என்ன கூப்பிட்டீங்க" தூக்கத்திலிருந்து எழுந்ததுப்போல் தன் கனவிலிந்து வெளிவந்து கேட்டான் சித்தார்த்.

"சித்து நான் உங்ககிட்ட பேசனும் கொஞ்ச வெளிய வரீகளா" மாதவன் அழைத்தவுடன் ஒத்துக் கொண்டு வெளியே வந்தான் சித்து.

"சித்து நீங்க உங்க ரூம்ல தனியா தானே படுத்திருக்கீங்க நாங்களும் உங்க ரூம்ல படுத்துக்கட்டுமா? நாங்க உங்கள தொந்தரவு பண்ணவே மாட்டோம். கீழ தரைலகூட படுத்துகிடுறோம் பிளீஸ்" கண்களில் ஒரு கூடை பயத்தை நிறைத்து வைத்து சித்து சம்மதம் சொல்லி விடுவான் என்ற நம்பிக்கையை மனதில் வைத்து பார்த்து நின்றன அந்த மூளை வளர்ச்சி இல்லா இரண்டு ஜந்துக்களும்.

"எதுக்கு?" ஒரே கேள்வியில் நண்பர்கள் இருவரையும் முழி பிதுங்க வைத்தான் சித்து‌.

"அது அதுவந்து சித்து மச்சான் நாங்க எங்களுக்கு இந்த வீட்டுல தனியா படுக்க பயமா இருக்கு மச்சான். பிளீஸ் முடியாதுனு மட்டும் சொல்லாதீங்க எங்கள பாத்தா பாவமா இல்லையா?" ஜீவனே இல்லாததை போல் நின்றிருந்த இருவரையும் கண்ணை கூர்மையாக்கி கொண்டு பார்த்தான் சித்து.

'ம்ஹீம் இவனுங்க எதுக்கு நம்ம ரூம்க்கு வரனுன்னு சொல்லுறாங்க. இவனுங்கல பாத்தா அவ்வளவு ஒன்னும் ஒர்த்தாவும் தெரியல. சரி என்னதான் பண்ணுறானுங்கனு பாக்கலாமே' இல்லாத மூளையை போட்டு கசக்கி பிழிந்து யோசித்த சித்து

"உங்கள பாத்தாலும் கொஞ்ச பாவமாதான் இருக்கு. சரி இன்னைக்கு வந்து என் ரூம்ல தங்கிக்கோங்க நான் அலோவ் பண்றேன்" பெரிய மனிதன் தோரணையில் போனால் போகிறதென அவன் சொல்லி வைக்க இவர்கள் இருவருக்கும் அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வந்தது.

காக்கை குருவிகள் ஆடுமாடென அனைத்தும் அதனதன் கூட்டுக்குள் சென்றுவிட நிலவு மகள் மெல்ல பூமியை ஆட்சி செய்ய எழுந்து வந்தாள். அமாவாசை முடிந்து ஒரு இரண்டு நாட்களே ஆன நிலையில் நிலவு சிறு பிறையென வானில் தோன்றி மறைந்துவிட்டாள். என்றும் போல் இல்லாது அன்று அந்த நள்ளிரவு நேரத்தில் ஆந்தைகள் அலறியபடி ஊருக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

அந்த சத்தத்தை கேட்டு பெரிய வீட்டின்முன் நின்றிருந்த மாதவன் ஷங்கர் இருவரும் "ஐயோ தூங்க போவாம வெளிய நின்னது நம்ம தப்புடா" என அலறிக் கொண்டு வீட்டினுள் ஓட அங்கு எப்போதும் போல் டம்டம் என பொம்மையின் சத்தம் வேறு.

அதற்குமேல் தாமதிக்காது சித்துவின் அறை வாயிலுக்கு ஓடி கதவை திறக்க, சித்து கட்டிலில் காலாட்டியடி படுத்து போனை நோண்டிக் கொண்டிருந்தான். இவர்கள் கதவை திறந்த ஓசையில் திரும்பி பார்த்தவன் "வாங்க மாதவன் வாங்க" என மரபொம்மை மாடுலேஷனிலே அழைக்க மாதவன் அப்படியே பிரீஸ் ஆகி நின்றுவிட்டான்.

இதை புரியாத ஷங்கர் வேகமாய் உள்ளே சென்று "ரொம்ப தேங்க்ஸ் பாஸு. உங்க உதவிய நான் மறக்கவே மாட்டேன்" என்று சித்து எதோ வள்ளல் பரம்பரையில் வந்த தர்மபிரபுவை போல் எண்ணி பேச

அவனும் கூச்சமே இல்லாது "எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் புரோ. இது எல்லாம் எனக்கு சாதாரணம்" என தன் பங்கிற்கு தன்னுடைய பெருமையை அவன் அள்ளி விட்டு படுத்தே விட்டான் அவன் வரலாறு தெரியாமல்.

இங்கோ இன்னும் அதிர்ச்சியில் உறைந்த காக்கா போல் நின்றிருந்த மாதவனை கவனித்த ஷங்கர்தான் "இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலும் மாடு மாதிரி அசைப்போட்டுட்டே நிக்கிறது. வாடா உள்ள அதான் பாஸ் நம்ம இங்க தங்க சரினுட்டாரே" அவனை இழுத்து கதவை சாற்றி உள்ளே வந்தான்.

மாதவன் ஒரு திகிலோடே உள்ள வந்து பார்க்க என்னே ஆச்சரியம் வெளியே கேட்ட சத்தம் துளியும் சித்துவின் அறைக்குள் கேட்கவில்லையே. அதை உணர்ந்த ஷங்கர் அவன் நண்பனிடம் கூற, அதை அப்போதுதான் உணர்ந்த மாதவனும் சற்று ஆச்சரித்தோடு 'இவனுக்கு எதாவது சக்தி எதுவும் இருக்குமோ' என எண்ணியபடி அமைதியாக வந்து ஷங்கரின் அருகில் படுத்துவிட்டான்.

அவர்கள் உள்ளே சென்று சிறிது நேரம்தான் இருக்கும் எல்லோரும் நன்றாக உறங்கி விட்டிருந்தனர். ஏன் அந்த மரபொம்மையின் சத்தம் கூட சவுண்ட் புரூப் போட்டதைப்போல் சித்துவின் அறைக்குள் எட்டிக்கூட பார்க்கவில்லை.

அப்படி இருக்கும் போது தான் திடீரென ஒரு சத்தம் கேட்டது "ம்ம் ம்ஹீம்" என எங்கோ ஒரு முனகல் சத்தம், அதோடு "ஹாஹாஹா.." என்ற சிரிப்பு சத்தமும் கேட்க தூங்கிக் கொண்டிருந்த மாதவன் எழுந்து அவன் அருகிலிருந்த ஷங்கரையும் சேர்த்து எழுப்பினான்.

"டேய் ஏன்டா எதுக்கு தூங்குன என்ன எழுப்பிவிட்ட. ரெண்டு நாள் கழிச்சு இப்பதான் நான் நிம்மதியா தூங்குனேன் அது உனக்கு பொறுக்கலையா" தூக்கம் பறிபோனதில் அவுத்துவிட்ட டாபர்மேன் மேலே வந்து பாய்வதை போல் வள்ளென விழுந்தான்.

"ஐயோ நெலமை தெரியாம இவன் வேற. டேய் டபரா தலையா இப்ப தூக்கம் ரொம்ப முக்கியமா உன் வாய மூடிட்டு நல்லா காத வச்சு கேளு. யாரோ பேசுற சத்தம் கேக்குதுடா"

கோவமாக ஆரம்பித்த மாதவனின் குரல் இறங்கி போய் ஒலித்தது. அதன்பின்னர் ஷங்கரும் தன் காதுகளை ஷார்ப்பாக்கி உற்று கவனிக்க அவன் காதுகளிலும் அது விழுந்தது.

"ஆமாண்டா எனக்கும் அந்த சத்தம் கேக்குது இரு எங்கருந்து வருதுன்னு கவனிப்போம்"

மாதவனும் ஷங்கரும் அவர்களின் காதுகளை சத்தம் வரும் திசையை நோக்கி செலுத்த, அந்த முனகல் சத்தம் வேறெங்குமிருந்து வரவில்லை நம் அரவிந்து பெத்த அழகு பிள்ளியிடமிருந்துதான் வந்திருந்தது.

"ஏய் செல்லம் எங்க போற மாமாட்ட வாடி"

"இன்னும் ஒரே ஒரு இச் மட்டும். ம்ஹீம் பத்தாது இன்னொன்னு தா"

நேரில் ரொமாண்ஸ் பண்ண துப்பில்லாத அந்த பக்கி தூக்கத்தில் அவன் காதலியுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது‌. அவன் முனகுவதை குளோஸப்பில் போய் ஆளுக்கு ஒருபுறமாய் நின்று கேட்ட மாதவனும் ஷங்கரும் அப்படியே ஸ்லோ மோஷனில் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து வைத்து அப்படியே அவர்கள் படுத்திருந்த பாயில் வந்தமர்ந்தனர்.

"டேய் மாதவா பேச்சு சத்தம் வேற எங்கையும் இருந்து வரலடா உன் மாமன் மகனுட்டிருந்துதான் வருது. பரதேசி தூக்கத்துல அவன் ஆளுகூட பல்லை காட்டிட்டு இருக்கான் போல. ச்சை இந்த வீட்டுல நமக்கு நிம்மதியான தூக்கம் இனிமே கெடக்காதுனு தோனுதுடா. ஐயோ...."

ஷங்கர் அவன் மனக்குமுறலை கொட்டி தீர்க்க மாதவனும் தலையில் துண்டை போட்டு அமர்ந்துவிட்டான். அங்கு அந்த சித்து பைத்தியமோ இன்னும் கனவில் பினாந்திக் கொண்டுதான் இருந்தான்.

"அச்சோ வெளியோ போனா பேய் தொல்ல. இங்க வந்தா உன் மாமன் மவன் தொல்ல. நமக்கு இனி நிம்மதியான தூக்கமும் இல்லடா" ஷங்கர் புலம்புவதை நிறுத்துவதைப்போல் தெரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் சித்து வாயை மூடிவிட அதன்பின்னரே தங்கள் விதியை நொந்த படி தூங்கினர் இருவரும்.

நள்ளிரவு நேரம் முன்றொருநாள் இருவர் வந்ததைப் போல் இரண்டு உருவங்கள் அந்த பெரிய வீட்டில் எல்லா அறையிலும் விளக்குகள் அணைந்துவிட்டதா என நோட்டம் விட்டபடி நின்றிருந்தது‌. எல்லாம் சரியாக இருக்கிறதா என சரிபார்த்தபின்

"எலேய் வெளக்கு எல்லா அணைஞ்சு போச்சுடா. வா நாம போய் நமக்கு சொன்ன வேலைய செய்ய ஆரம்பிப்போம்"

அவர்களுக்குள் பேசியபடி அந்த இரு உருவங்களும் மெல்ல மெல்ல முன்னேறி சென்று அந்த வீட்டின் பின்கதவோரம் நகர்ந்தது. அந்த கதவில் கைவைத்து தள்ள என்ன அதிசயம் கதவு இவர்களுக்காகவே திறந்து வைத்ததைப் போல் படாரென திறந்துக் கொண்டது‌.

உள்ளே யாரும் தென்படுகிறார்களா என தலையை மட்டும் விட்டு எட்டிப் பார்த்தது அந்த இரு உருவமும். அந்த இரு உருவத்திற்கு பின் மூன்றாவதாக ஒரு உருவமும் இவர்களை ஆரம்பத்திலிருந்து கவனித்து பின்தொடர்ந்து வந்து இவர்களுடனே எட்டியும் பார்த்து.

அது வேறு யாராக இருக்க முடியும், நமது நைட் வாட்ச்மென் அரவிந்த்தான் அந்த மூன்றாவது. எப்போதும் போல் காத்தாட காற்றில் பறந்து டைம் பாஸ் பண்ணிக் கொண்டிருந்த மனிதரின் கண்களில் இவர்கள் விழ

'யாருடா இவனுங்க. நம்ம வீட்டுல என்ன பண்ணுறானுங்க. சரி என்னதான் செய்றானுங்கனு பாப்போமே' என பாலோ செய்து வந்திருந்தார் மனிதர்.

அது தெரியாத அந்த இரண்டு உருவங்களும் "யாரும் பாக்கலை வா உள்ள போலாம்" என்று வீட்டினுள் நுழைந்தது பின்னால் நமது அரவிந்துடன்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 29

நள்ளிரவு நேரம் அந்த பெரிய வீட்டின் ஈ எறும்பு கூட நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் இரு களவானிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்க நம் அரவிந்தும் அவர்களை பாலோ செய்து வந்திருந்தார்.

இருளில் மெல்ல அந்த இரண்டு உருவங்களும் சுற்றுப்புறத்தை கவனித்தபடி நகர்ந்து ஹாலை வந்தடைய, அதில் ஒருவன் அங்கிருந்த டேபிளை தெரியாமல் இடித்துவிட்டான். அவன் இடித்த அதிர்வில் அதிலிருந்த ஒரு ஜாடி கீழே விழப்போக, அது விழுவதற்குள் மற்றவன் பிடித்துவிட்டான்.

"டேய் மெல்ல வாடா எதாவது பொருள தள்ளிகிள்ளி விட்டு சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பிப்புடாதடா. வீட்டு ஆளுங்க பாத்தா வந்த சோலிய பாக்கமுடியாம போறதும் இல்லாம தர்ம அடி வாங்க வேண்டி போயிரும்டா. அமைதியா வா"

மற்றவன் மெல்ல தன்னுடன் வந்தவனை கடிந்துக் கொள்ள "ஆமாமா, அப்புறம் என் புள்ளையும் ஏந்திச்சு வந்துருவான் உங்களால ஒன்னும் ஆட்டையப்போட முடியாது. அதனால நீ மெதுவா போடா ஊதா சட்டை. உன்னோட தோஸ்த் மஞ்ச சட்டை சொல்றத கேளுடா"

தன் பங்கிற்கு அரவிந்த் அந்த வீட்டின் ஓனரே அவர்தான் என்பதை மறந்துபோய் கத்த அது எல்லாம் வீணாக காற்றோடு கலந்ததுதான் மிச்சம். வேறு எந்த பலனும் இல்லை‌.

"அண்ணே இந்த வீட்டுல அப்புடி நாம என்னாத்த தேடி வந்திருக்கோம். நம்மல எதுக்காவ இங்க அனுப்பி வச்சாவ"

அந்த ஊத சட்டைக்காரன் தன் சந்தேகத்தை கேட்க "அது இன்னான்னு எனக்கும் தெரில‌. இந்த வூட்டு பெரிய ஐயா ரொம்ப வருஷத்துக்கு முன்னையே தவரிட்டாருல.

அவரு ரூம்ல தான் தொலவி பாக்க சொன்னாவ. அங்க எதாவது வித்தியாசமான கடுதாசி பாண்டு பத்திரம் இப்படி என்ன இருந்தாலும் எடுத்தார சொல்லிருக்காவ. அந்த ரூம்பு எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சு போய் பார்த்தா மட்டும் போதும் வாடா"

மஞ்சள் சட்டைக்காரன் கூறியதை கேட்டு ஊதா சட்டைக்காரன் மண்டையை ஆட்ட, அரவிந்தின் ஆறாவது அறிவு அடுத்த நொடி ஆக்டிவேட் ஆகியது‌.

"என்னங்கடா இது என் அப்பன் ரூம்ல என்ன புதையலா இருக்கப் போவுது அந்த ரூம்ல தேட போறீங்க. அதுக்கு என் புள்ளை பர்ச சுட்டுருந்தா கூட அஞ்சு பத்து தேறும். அங்க இருக்க பத்திரத்தை வச்சு என்னடா பண்ணப்போறீங்க"

அவர்களுக்கு கவுண்டர் கொடுத்தபடி அவர்களை தன்னுடைய புல் கண்காணிப்பில் வைத்தபடி தொடர்ந்து சென்றார் நமது அரவிந்தும்.

அங்கே வந்திருந்த திருடர்கள் இருவரும் சரியாக சொல்லி வைத்தார்ப்போல் அரவிந்தின் தந்தை மற்றும் தற்போது அரவிந்தின் அறையாக இருக்கும் மரபொம்பை இருக்கும் அறையை திறக்க

"டேய் திருட்டு பாய்ஸ் எப்புட்ரா என் ரூம்மு உங்களுக்கு தெரியும். சரியா போய் திறக்குறீங்க. புடிக்கிறேன் கண்டுப்புடிச்சு உங்களை முடிக்கிறேன்டா"

கையை நம்பியார் போல் தேய்த்துக் கொண்டு இருவரும் அந்த அறையில் எதைதான் திருடப்போகிறார்கள் என பார்க்க கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டே நோட்டம் விட்டார்.

அங்கிருந்த ஒவ்வொரு அலமாரியாக திருடர்கள் தங்கள் தேடுதல் வேட்டையை தொடர, சில அலமாரிகளை சாவி இன்றி திறக்கமுடியாது ஊதா சட்டைக்காரன் முழித்து வைத்தான்.

"அண்ணே அந்த செல்பை எல்லா சாவி இல்லாம தெறக்க முடில அண்ணே. இப்ப சாவிக்கு என்ன பண்றது?" அப்பாவியாய் அவன் கேடக

"ம்ம் நான் போய் என் புள்ளை தங்கச்சி மச்சான்னு எல்லாரையும் எழுப்பி விடுறேன் அவங்கட்ட சாவிய வாங்கி தொலவு.

பேசறான் பாரு கேனக்கிறுக்கன் மாதிரி ஒரு வீட்டுக்கு திருட வந்திருக்கோம்னு ஒரு டீடிக்காஷன் இல்ல. திருட எக்யுப்மெண்ட் எல்லாத்தையும் கொண்டு வராம இங்க வந்து புலம்புறான். இவன்லாம் என்னத்த திருடி ச்ச ச்ச இதெல்லாம் எங்கிருந்து தேறும். என்னதான் இருந்தாலும் என் மருமக வீரா மாதிரி எல்லாராலையும் எக்ஸ்ப்பர்ட் ஆகிட முடியுமா"

ஊதா சட்டைக்காரனை பார்த்து அரவிந்த் அவனை மேலும் கலாய்த்து வைக்க, அங்கு தேடுதல் வேட்டை இன்னும் முடிந்தபாடில்லை.

"எலேய் இந்த கம்பிய வச்சு திருகி தெறடா. நீ வேற இருக்க வேதனை பத்தாதுன்னு இவன் வேற"

மஞ்சள் சட்டைக்காரன் சலித்துக் கொண்டு ஒரு கம்பியை எடுத்து நீட்ட அதை வாங்கி திறக்கமுடியாத கதவுகளை நெம்பிக் கொண்டிருந்தான் ஊதா சட்டை. எவ்வளவு நேரம்தான் இவர்களை வேடிக்கை பார்ப்பது அரவிந்தின் வயிறு வேறு என்னை கவனியேன் என கத்த

"சரி கொஞ்ச ஸ்நாக்ஸ சாப்பிட்டுக்கிட்டே வேடிக்கைய கண்டினுயூ பண்ணுவோம்" அவர் அறையில் பதுக்கியிருந்த சிப்ஸை எடுத்து கொறித்த ஆரம்பித்துவிட்டார்.

"அண்ணே இந்த அலமாரிய மட்டும் என்ன செஞ்சும் தெறக்க முடியல அண்ணே"

மரபொம்மை இருக்கும் அலமாரியை தம்கட்டி ஏதேதோ செய்து பார்த்தும் திறக்க முடியாது அவன் கூற "ஏலேய் எனக்கு உதவ வந்தியா இல்ல உவத்திரம் பண்ண வந்தியா. ஏன்டா என் ஜீவன வாங்குற"

மஞ்ச சட்டை திட்டியபடி தானும் திறந்து பார்க்க, ம்ஹீம் அந்த கதவை அசைக்கக்கூட முடியவில்லை. எல்லாம் உள்ளே இருக்கும் நம் மரபொம்மையின் வேலைதான்‌.

இவர்கள் திணறுவதை கண்டு கடுப்பாகிய மூளையை அடுகு கடையில் வைத்திருக்கும் நம் அரவிந்த் சிப்ஸை நொறுக்கு நொறுக்கென வாயில் அதக்கிக்கொண்டு இவர்கள் இருவர் முன்னும் சென்று நின்றார்.

என்னதான் இவர் உருவம் யாரின் கண்ணிற்கும் தெரியாது போனாலும் அவர் கையில் இருக்கும் சிப்ஸு பாக்கெட்டு அந்த இருவர் கண்ணும் நன்றாகவே தெரிந்தது. இதில் சிப்ஸை அவர் வாயில் அறைக்கும் சத்தம் வேறு.

காற்றில் மிதக்கும் சிப்ஸு பாக்கெட் அதோடு அதை உண்ணும் சத்தத்திலே அந்த இருவருக்கும் உடலில் இருந்த பாகம் எல்லாம் வழுக்கி விழுந்தததை போல் ஆக,

'இவனுங்க இதுக்கு சரிபட்டு வரமாட்டானுங்க' என தானே அந்த அலமாரி கதவையும் திறந்துவிட்டு "இப்படிதான் கதவை திறக்கனும்டா கிறுக்கனுங்களா. அதவிட்டுட்டு என்னங்கடா வித்தை காட்டுறீங்க" என பேச வேறு செய்தார் நம் ஆள்.

அதற்கு மேலும் அங்கு நிற்க வந்த திருடனுங்களுக்கு பைத்தியமா என்ன "ஆஆஆ..... ஐயோ பேய்... பேய்... காப்பாத்துங்க" என அலறியபடி அந்த அறைக்கு வெளியே ஓடினர். ஆனால் என்ன ஒன்று அந்த வீட்டை விட்டுதான் வெளியே செல்லமுடியவில்லை.

கதவு எல்லாம் ஜாம் ஆகிவிட "ஐயோ சாமி யாராவது காப்பாத்துங்களே" வீட்டிற்குள் அவர்கள் கதறியதில் வீட்டில் இருந்த அனைவரும் எழுந்துவிட்டனர்.

இவர்கள் அலறி ஓடியதை கண்டு "உங்களுக்கு கதவை திறக்க ஹெல்ப் தானேடா பண்ணுனேன்‌‌. அதுக்கு எனக்கு தேங்க்ஸு சொல்லாமா எதுக்கு கத்திட்டு ஓடுறீங்க" என அறைலூசு அரவிந்தும் கேட்டுக்கொண்டே அவர்கள் பின்னே வந்தார்.

அந்த பெரிய ஹாலின் நடுவே பயத்தில் வேர்த்து விறுவிறுத்துப்போய் அந்த இரண்டு களவாணிகளும் உக்காந்திருக்க, அவர்களை சுற்றி மொத்த குடும்பமும் நின்றிருந்தது.

"ஏன்டா திருட்டு களவாணி ராஸ்கோல்களா எவ்ளோ தெகிரியம் இருந்தா எங்க வீட்டுக்குள்ளையே திருட வந்திருப்பீக. இன்னைக்கு இந்த கார்மேகம் யாருன்னு காட்டுறேன்டா. சித்து தம்பி இவனுங்கள ஒரு அறையில போட்டு பூட்டுக நாளைக்கு வெள்ளன போலீஸ வரச் சொல்லிப்புடுவோம்"

கார்மேகம் ஒரு கட்டையை கையில் வைத்துக் கொண்டு கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி வைக்க

"ஐயோ மச்சான் தூக்கம் வந்தா பாய போட்டு படுக்கிறதும், வீடு பெருசா இருந்தா ஆட்டைய போட வரதும் ஜகஜம் தானே விடுங்க" இடையில் அரவிந்த் வேறு கிராஸ் டாக்கால் வர, தன் தந்தையை திரும்பி பார்த்தான் சித்து.

"ஐயா சாமி எங்கள போலீசுல புடிச்சு குடுத்தாலும் சேரி, இல்ல இங்கையே கட்டிப்போட்டு அடிச்சாலும் சேரி. எதுனாலும் இந்த வீட்டுக்கு வெளிய வச்சு செய்யுங்க சாமி. இந்த வீட்டுக்குள்ள இனி ஒரு நொடி இருந்தாலும் நாங்க பயத்துலையே செத்துருவோம்"

தேம்பி தேம்பி அழுதபடி அந்த ஊத சட்டைக்காரன் கதற "டேய் மாதவா அந்த பேய்தான் எதோ பெரிய வேலையா பாத்துவிட்டுருச்சு போலடா" சங்கர் மாதவன் காதலில் மெதுவாக புலம்பினான்‌.

"செத்த நேரம் வாய மூடுடா. நானே இங்க என்ன நடக்குதுன்னு புரியாம நிக்கிறேன். எங்க அப்பன் வேற நான்தான் களவாணி பயலுவல திருட அனுப்புன மாதிரியே மொறச்சிட்டு நிக்கிறாரு. இதுல நீ வேற ஏன்டா"

மாதவனும் தன் பங்கிற்கு புலம்பி வைத்தான். அதற்கு காரணமும் இருந்தது. திருடர்களை கண்டது முதல் கார்மேகம் தான் மாதவனை வைத்த கண் வாங்காது முறைத்து தள்ளிக் கொண்டிருந்தாரே.

"மாமா இவனுக்கட்ட என்னா பேச்சு புடிங்க புடிச்சு அந்த ரூம்ல போட்டு லாக் பண்ணி வைப்போம். காலைல போலீஸ்க்கு கால் பண்ணிடலாம்‌" கார்மேகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி பேசிய சித்துவிற்கு அவன் தந்தை பேசியதை வைத்தே நடந்தது அவன் தந்தையின் சித்து விளையாட்டென புரிந்தது.

'இரவு வீட்டிற்கு வந்த திருடர்கள் இருவரும் சரியாக அவன் தந்தையின் கையில் சிக்கியிருக்க வேண்டும். அவர் தன்னால் ஆனதை அலுங்காமல் குலுங்காமல் செய்து விட்டிருப்பார். அதான் அலறுகிறார்கள்'

சரியாக கணித்து அவர்களை மீண்டும் அரவிந்தின் அறைக்குள்ளே போட்டு அடைத்துவிட்டான் சித்து 'சாவுங்கடா' என நினைத்து.

"எலேய் ஷங்கரு ஆனாலும் அந்த திருடனுங்க பாவம்லடா. காலைலக்குள்ள என்ன ஆவப்போறானுங்களோ நினைச்சா எனக்கே அல்லுவிடுதுடா" மாதவன்தான் பாவம் பார்த்தான் அவர்களுக்காய்.

"ஆஹா ரொம்ப நாளைக்கு அப்புறம் எனக்கு எண்டர்டெயின்மெண்ட்க்கு ஆள் சிக்கிடானுங்கடா" மரபொம்மை வேறு தன் வேலை வேலையை அப்போது துவங்க

"தம்பிகளா அழாதீங்கபா. இந்தாங்க சிப்ஸு சாப்புடுங்க" அரவிந்த் தன் பங்கிற்கு சிப்பை நீட்ட

"ஐயோ காப்பாத்துங்க... காப்பாத்துங்க..." என் மீண்டும் கதறினர் இருவரும்.

"ச்சே உங்களுக்கு பாவம் பாத்து எவ்ளோ பெரிய மனசு பண்ணி என் ஸ்நேக்சையே தரேன் எதுக்குடா கத்துறீங்க. இப்ப என்ன ஸ்நேக்ஸ் வேணாமா நோ புராப்ளம் நானே காலி பண்ணுறேன். இதுக்கு போய் கத்திக்கிட்டு சில்லி பெலோஸ்"

என அவர்கள் முன்னையே நின்று மேலும் சிப்ஸை அரவிந்த் தன் வாயினுள் தள்ள காலையில் போலீஸ் வரும்வரை அந்த இருவரின் கதறலும் அந்த பெரிய வீடு முழுக்க நிறைத்தது.

முடிவில் சோப்பு பவுடரில் முக்கி எடுத்து கல்லில் போட்டு அடித்து வெளுத்து எடுத்ததை போல் காலையில் வெறும் கூடாய் இருந்த இருவரையும்தான் போலீஸ் இழுத்து சென்றது.

அந்த வீட்டிற்கு திருடர்கள் வந்து சென்று ஒரு இரண்டு நாள் இருக்கும் சித்து வீட்டு வாசலில் ஊர்க்காரர்கள் இருவர் வந்து

"என்ன கார்மேகம் ஐயா உங்க மச்சானுக்கு உரிமபட்ட மலைக்குள்ள எதோ பொதையலு இருக்காம்ல உண்மையா? நம்ப ஊரு பக்கத்து ஊருன்னு எல்லா இதே பேச்சாத்தான் இருக்கு" என கேட்டு நின்றனர்.

'அடங்கொக்கமக்கா அந்த ஆளுட்ட புரளிய அவுத்து விட்டு வந்து முழுசா மூனு நாள் கூட ஆகலை அதுக்குள்ள 5ஜி மாதிரி என்னா வேகமா ஸ்பிரேட் ஆகுது' சித்துவே தலை கிறுகிறுக்கி போய் நின்றுவிட்டான் புரளி பரவும் வேகத்தை கண்டு

இதற்கெல்லாம் காரணமான வீராவை இப்போதே காண வேண்டும் அவளுக்கு ஒரு முத்தமாவது தந்து இந்த தகவலை பகிர வேண்டும் என மகிழ்ச்சியின் உச்சியில் வீராவின் அறைக்குள் ஓடினான்.

சித்து வீராவுக்கு ஒரு முத்தமாவது தந்து ரொமான்ஸ் செய்கிறானா இல்லை எப்போதும் போல் சுதப்பி முகத்தில் பல்பை தொங்கவிட்டபடி வருகிறானா என பார்ப்போம்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 30

திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.

'மெல்ல திறந்தது கதவு' என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே எட்டிப்பார்த்தான் பையன். அவன் நல்ல நேரமோ என்னவோ அவனின் காதலி முதுகை காட்டிக் கொண்டு நின்று கட்டிலில் துணி மடித்துக் கொண்டிருந்தாள்.

'ஆஹா என்னங்கடா இது உலக அதிசயமா இருக்கு என் வீரா செல்லம் ரூம்ல தனியா உக்காந்திருக்கா. சித்து அடிச்சதுடா லக்கி சான்ஸ் டிஸ்டர்ப் பண்ணுற நைனாவும் எதோ மைனாவ பாக்க கெளம்பி போயிருச்சு. மிஸ் பண்ணீடாதடா கமான் உள்ள போலாம்'

இப்படி ஒரு எண்ணம் மனதிற்குள் வந்த மறுநிமிடமே 'இல்லையே இப்படிலாம் டக்குனு நமக்கு நல்லது நடக்க வாய்ப்பு இல்லையே. எதுக்கும் யாராவது ரூம்ல இருக்காங்கலான்னு பாக்கலாம்' என உஷாரானான்.

என்னதான் சித்து எவ்வளவு உஷாராக அடியெடுத்து வைத்தாலும் 'சைனா சிக்கன் வாய்க்கு வராமல் சைடு கேப்பில் புடுங்கப்படும்" என்பது அவன் விதியாய் இருந்தால் யாரால் மாற்றமுடியும்.

சித்து அப்படியே தன் லேசர் கண்களை அந்த அறை முழுக்க ஸ்கேன் செய்து பார்த்து, அங்கு வீராவை‌ தவிர யாரும் இல்லை என்பதை நன்கு உறுதி செய்தபின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டான்.

'ஹப்பாடி வீராவ தவிர யாரும் இல்லை கண்பார்ம். உள்ள போறோம் அசத்தறோம்'

புல் லவ் பாமுக்கு வந்த சித்து கோழியை சாக்கு பையில் போட்டு அமுக்க செல்வதைப்போல் மெல்ல மெல்ல சென்று வீராவை அவளின் பின்னிருந்து ஒரு கையால் அணைத்து மற்றொரு கையால் அவளின் வாயை அடைத்து விட்டான் ஒரு சேப்டிக்கு.

"வீராம்மா கத்திப்புடாதடி நான்தான் சித்து"

காதில் ஹஸ்கி வாய்சில் சித்து கூற "ம்ம்ம் ம்ம்" என்ற குரல் வீராவிடமிருந்து பதிலாக வர "என்ன செல்லம் பேசாம ம்ம் ம்ம்னு சைகை பண்ற" அவள் வாயை அவன்தான் மூடியிருக்கிறான் என்ற பேசிக் புத்திக்கூட இல்லாது அந்த பைத்தியம் கேட்டு வைத்தது.

"ம்ம்ம் ம்ஹூம் ம்ம்" மீண்டும் வீரா சத்தம் செய்து தலையை இங்கிட்டும் அங்கிட்டும் அசைத்து 'வேண்டாம்' என சித்துவிற்கு புரியவைக்க பார்க்க, அவள் என்ன சொல்லவருகிறாள் என மூளை பாதி வெந்ததும் வேகாது இருக்கும் அந்த அரை மெண்டலுக்கு புரியவில்லை.

வீராவின் முதுகில் தன் மூக்கால் உரசி அவளின் வாசத்தை உள்ளிழுத்த சித்துவிற்கு சரக்கடிக்காமலே போதை உச்சந்தலைக்கு ஏறியது.

"ம்ம் என்னா லவ்லி ஸ்மெல். வீரா அப்புடியே ஆள அசத்துறடி"

சித்து இப்போது கண்டபடி உளறும் போது கூட "ம்ஹூம்" என வீரா தலையை அசைக்க

"என்னடா என்ன ஆச்சு. ஏன் தலைய தலைய ஆட்டுற தலை எதுவும் வலிக்குதா. சூடா நான் காபி போட்டு தரேன் எல்லாம் சரியாப்போயிரும் என்னம்மா.

வீரா நான் ஒரு ரொம்ப முக்கியமான விஷயத்தை உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன்‌. அது என்ன விஷயம்னு தெரியுமா?"

காதல் போதையில் புத்தி பேதலித்தது போல் மேலும் சித்து பேசிக்கொண்டே செல்ல 'இதுவரை பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று நினைத்தாளோ என்னவோ வீரா,

சித்து அமுக்கி பிடித்திருந்த அவள் இரு கைகளையும் வெடுக்கென அவன் பிடியிலிருந்து உருவியவள் அவன் அசந்த நேரம் அவன் அணைப்பிலிருந்தும் வெளியே வந்து கும்பூ ஸ்டைலில் லஜக்கென வயிற்றிலே ஓங்கி ஒரு குத்தை வைத்தாள்.

வீரா விட்ட குத்தின் வேகத்தில் அவன் மூளையில் இருந்த காதல் மயக்கம் எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிட, இவனோ "அம்மே" என அலறிக் கொண்டு ஐந்தடி அப்பால் விழுந்தான்.

'ஏன் எப்படி எதற்கு வொய்?' வீரா தள்ளிவிட்டதில் பல கேள்விகளை கண்ணில் வைத்து பல வர்ணஜாலத்தை அவன் கண்களில் நிகழ்த்தி சித்து வீராவை பார்த்து வைத்ததில், அவன் விழுந்த நேரம் தூங்கி எழுந்து கட்டிலில் அமர்ந்து "மாமா" என குழப்பமாய் அழைத்திருந்த கதிரை கவனிக்கவில்லை.

காதல் போதையில் இருந்த அந்த தீவெட்டு தலையன் துணி மடித்து கொண்டிருந்த வீராவை மட்டுமே கண்டு வந்திருக்க, அங்கே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கதிரை பார்க்காது போனான். வழக்கம் போல் சிறு டெக்னிக்கல் பால்ட் ஆகிவிட வீராவிடம் ஒரு முத்தம்கூட வாங்காமல் இந்த முறையும் சித்து வெற்றிகரமாக தோல்வியை தழுவினான்.

"ஏன்டி?" ஒரு சட்டி சாம்பார் வடியும் முகத்தை வைத்து சித்து பாவமாய் கேட்டு வைக்க, வீரா கதிரின் புறம் தன் கண்ணை காட்டினாள்.

அந்த ஹிண்ட் புரியாத அந்த பரதேசியோ "கண்ணு வலியா வீராம்மா?" என்று வேறு கேட்டு வைக்க வீராவின் சரியான முறைப்பை பரிசாய் பெற்றான்‌. ஆனால் இன்னும் அந்த அறையில் கதிரும் இருக்கிறான் என அந்த அரைகிருக்கனுக்கு தெரியாதது ஆச்சர்யமே.

'இங்க என்ன நடக்குது. ஒன்னுமே புரியலையே?'

கதிர் இன்னும் கரண்ட் அடித்த வவ்வால் போல் கிடந்த சித்துவையும் எதையோ வேண்டாததை மிதித்தது போல் முகத்தை வைத்திருந்த வீராவையும் மாற்றி மாற்றி பார்த்து குழம்பினான்.

'இதுக்கு மேல நமக்கு பொறுமை இல்ல' என்று நினைத்த கதிர் "அக்கா மாமா" என ஷாக்கில் நின்றிருந்த இருவரையும் கத்தி அழைத்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.

'என்னடா இது புதுசா ஒரு ஆள் சத்தம் கேக்குது' லேட்டாக வந்த ஞானோதயத்தில் சத்தம் வந்த பக்கம் திரும்பி, அங்கே கட்டிலில் கதிரை பார்த்து மிக லேட்டாக அதிர்ந்தான் அரவிந்தின் அருமை புதல்வன்.

"க... க.. கதிரு நீ எப்படா வந்த?" பிட்ஸ் வந்த காக்கா போல் திக்கி திக்கி சித்து கேட்க

"நான் எப்ப வெளிய போனேன் வரதுக்கு. நான் காலைல இருந்து அக்காக்கூட ரூம்லதான் மாமா இருக்கேன்‌‌. காலைல மாத்திரை போடவும் கொஞ்ச நேரம் தூங்குனேன். எந்திரிச்சு பாத்தா நீங்க கீழ விழுந்து கிடக்குறீங்க அக்கா என்னவோ பேய பாத்த மாதிரி முழிச்சுட்டு நிக்கிறாங்க. என்னதான் ஆச்சு ரெண்டு பேருக்கும்"

கதிர் சித்துவின் கேள்விக்கு பதில் தந்து அவன் சந்தேகத்தையும் கேட்டு வைத்தான். அப்போதுதான் சித்துவின் மூளையின் டூயூப்லைட் மெல்ல மெல்ல பிரகாசமானது.

'அப்ப கதிர் இருக்கான்னு தான் என் செல்லம் என்னை தள்ளிவிட்டாளா. அடக்கொடுமையே! என் ஆளுக்கூட ஒரு டைட் ஹக்குக்கே வழியில்லாம இருக்கே அப்ப ஒரு லிப் கிஸ் மேற்படி இது எல்லாம் எப்ப நடக்கிறது ஆண்டவா ஏன்டா என்னை இந்த உலகத்தில படைச்ச படைச்ச படைச்ச'

சித்துவின் மைண்ட் வாய்ஸ் கதறி கண்ணீர் சிந்தி அவனை காரி துப்பி வைக்க, அதற்குமேல் அவனுக்கு சொல்றதுக்கு ஒன்றும் இல்லை. 'சரி ரைட்டு நாம இனிமே இங்க இருந்து ஒன்னும் ஆகப் போறது இல்ல கிளம்புவோம்'

இப்போது சட்டுபுட்டுனு ஒரு முடிவை எடுத்து அவன் வெளியே செல்லும் நேரம், வீரா என்னும் சிலைக்கு உயிர் வந்து "சித்து ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்லிட்டு இருந்தீங்க. அது என்னன்னு சொல்லீட்டு போங்க" என்றிட்டாள்.

'ஓ.. ஆமால்ல சொல்ல வந்ததை சொல்லாம போறமே' கடைசி நொடியில் உணர்ந்து அவர்கள் வீட்டு வாசல் வரை புரளி புரண்டு வந்த கதையை ஆசையாய் கூறி அதற்கு வரும் ரியாக்ஷனை தெரிந்துக் கொள்ள வீராவின் முகம் பார்க்க

"ப்ச் இவ்ளோதானா நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன். இது இப்படி பரவும்னு எனக்கு நல்லாவே தெரியும் போய் வேற வேலைவெட்டி இருந்தா பாருங்க"

ஒரே பாலில் அவனை நாக்அவுட் ஆக்கி மொத்தமாக வைத்து செய்யதாள் அவன் வீரா. 'இதுவரை வாங்குன மொக்க இன்னைக்கு போதும். நெக்ஸ்ட் டே மீட் பண்ணுவோம்' என சித்து தலையை கவுத்து அவுட்ஆப் போக்கசில் வெளியேறினான்.

"அக்கா மாமாக்கு என்ன ஆச்சு? அவரோட முகமே சரியில்லையே, நான் தூங்குரப்ப அவரோட சண்டை எதுவும் போட்டியா அக்கா" கதிர் அவன் மாமனுக்காய் கேட்க

"ஆமா அப்படியே போட்டுட்டாலும் ஏன்டா நீ வேற. உன் மாமா எதோ புத்தி கொட்டுப்போய் சுத்துறாரு. அவரை எல்லாம் கண்டுக்காம நீ படுத்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. உன் மாமா வந்து இன்னைக்கு சீக்கிரமே உன்னை எழுப்பிவிட்டுட்டு போய்ட்டாரு. பொழப்பில்லைனா இப்படிதான் எதாவது கிருக்குதனம் பண்ணத்தோணும்"

வீரா இன்னும் கொஞ்சம் சித்துவை திட்டி டேமேஜ் செய்ய, அறை வாயிலுக்கு சென்றிருந்த சித்துவிற்கு ஒருவரி மாறாது காதுகளில் எல்லாம் அப்படியே விழுந்து இன்னும் மனது பஞ்சர் ஆகியது. அந்த காயத்தை ஆற்ற வயிற்றுக்குள் எதாவதை போட்டு வைப்போம் என சோகமாக சோற்றை திங்க கிட்சனுக்குள் நுழைந்துவிட்டான்.

அவன் சென்ற பொசிஷனை பார்த்து சிரித்து விட்டாள் வீரா. அப்படி சிரிக்கும் நேரமே அங்கிருந்த சூழலில் எதுவோ ஒன்று மிஸ் ஆவது போல் வீரா உணர, அவள் மனது அது அரவிந்த் என கணநேரத்தில் நினைவுபடுத்தியது.

"அட ஆமா அங்கிளை காலைல இருந்து காணோம். எங்க போனாரு?"

சித்து இங்கு வருவது தெரிந்திருந்தால் சித்துக்கு முன்னே அரவிந்த் அங்கு தன் அட்டணன்ஸை போட்டிருப்பாரே. அப்படி இருக்கும் போது எங்கு போயிருப்பார் என இப்போது நினைத்த வீரா சரி அவரின் அறைக்கு சென்று பார்த்து வரலாம் என கிளம்பினாள்.

அரவிந்தின் அறை கதவு பெப்பெரப்பா என நன்றாக திறந்தே இருக்க 'சவுரியமா போச்சு' என தன் ரைட் லெக் எடுத்து வைத்து உள்ளே வந்தாள் வீரா. இதிலும் மாமனாரும் மருமகளும் நல்ல ஒற்றுமையை கொண்டிருப்பர் போல்‌.

இதுவரை அரவிந்தின் பரம்பரையை சேர்ந்தவர்கள் வந்த அறை அதுவும் அவர் தாய் தந்தை தாத்தா பாட்டி என ஒரு சிலரே பயன்படுத்திய அறை. வெளி ஆட்கள் என யாரும் அந்த அறைக்குள் இதுவரை காலடி எடுத்து வைத்தது இல்லை, உள்ளே வந்து உயிரோடு சென்றதும் இல்லை. இல்லை வெளியே சென்றால் உயிரை தவிர வேறெதுவும் மிச்சம் இருந்ததில்லை.

அப்படிப்பட்ட அறைக்குள் நம் வீரா காலடி எடுத்து வைத்த நிமிடம் எப்போதும் உள்ளே வரும் நபர்களுக்கு பேய் வைபை தரும் மரபொம்மைக்கே ஒரு ஸ்ட்ராங்கான வைப் வந்து பலமாக தாக்கியது.

அதுவரை காலாட்டியபடி கபோர்டின் விட்டத்தை வெறித்து பார்த்து படுத்திருந்த பொம்மை வெடுக்கென எழுந்து ஆக்டிவ் ஆகி யார் வருவது என ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தது. அந்த வைபை வைத்து வந்தது யாரென ஓரளவு யூகித்தாலும் அது சரியாய் இருக்க வேண்டுமே என மரபொம்மையின் மனம் கடவுளிடம் சட்டென ஒரு வேண்டுதலை போட்டது.

இங்கு உள்ளே நுழைந்த வீராவோ அந்த அறையை சுற்றி பார்க்க, நல்ல விசாலமான அறைதான். "ம்ம் பரவாயில்லை அங்கிள் ரூம் பர்ஸ்ட் கிளாஸ்தான். ம்ம் ஆனா இந்த அங்கிள் எங்க போனாரு... அங்கிள் அங்கிள்..."

அரவிந்தை கூப்பிட்டு பார்க்க ஒரு பதிலும் இல்லை‌‌. மனிதரின் அடையாளம் அந்த அறையில் ஒரு பர்சண்ட் கூட இல்லை என்று உணர்ந்து "சரி வெளியே எங்கையாவது இருப்பார் போய் பார்ப்போம்" என வெளியேற திரும்பிவிட்டாள்.

"ஐயையோ என் செல்லாக்குட்டி போறாளே! இப்ப என்ன பண்றது. ஐயோ எதாவது பண்ணனுமே. எப்படி என்ன பாக்க வைக்கிறது"

சில நிமிடங்களில் படபடப்பான பொம்மை எப்படியாவது வீரசுந்தரியை கவர் செய்ய "ஐயோ பாப்பா இங்க வாமா‌. ஐயோ என் செல்லாக்குட்டி போகாத போகாத என்னை பாரு இங்க பாரு" என கதறோ கதறென கதறி தீர்க்க ம்ஹும் வீராவிற்கு எதுவும் கேட்கவில்லை.

"போச்சே போச்சே! எல்லாம் போச்சே" மரபொம்மை உயிர் போவதைப் போல் கத்திவிட்டு டங்கு டங்குனென அந்த கபோர்டில் இடித்துக் கொள்ள வீரசுந்தரி வாசல் வரை சென்றுவிட்டாள்.

மரபொம்மை எதற்காக வீராவை பார்த்து இவ்வளவு மகிழ்ந்தது? எதற்கு அவளை தன்னை பார்க்க வைக்க இவ்வளவு போராடுகிறது? அதன் மைண்ட் வாய்ஸ் புரிந்து வீரா மரபொம்மையை காண்பாளா பார்ப்போம்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 31

"மச்சான் இன்னைக்கு உன் வீட்டுல என்னடா சாப்பாடா இருக்கும்? உன் மாமன் குடும்பம் வந்ததுல இருந்து உன் அம்மா நல்லா வகைத்தொகையா நாக்குக்கு ருசியா சமைக்குறாங்களே அதான் கேக்குறேன்"

நாக்கை சப்புக்கொட்டி இப்படி கேட்டபடி வந்த ஷங்கரை திரும்பி முறைத்த மாதவன் மனமோ பல குழப்பத்தில் இருக்க இருவரும் கொஞ்சம் வெளியே சுற்றி வரலாம் என வெளியே சென்றிருந்தனர்‌.

"இங்க உசுரே நடு உத்திரத்துல கைய கால ஆட்டிக்கிட்டு பப்பரப்பேன்னு தொங்கிட்டு இருக்கு, இதுல உனக்கு வகைவகையா சோறு கேக்குதாடா தவள வாயா. வாய மூடிட்டு வாரதா இருந்தா வா இல்ல நான் மட்டும் தனியா போறேன்"

மாதவன் இருந்த பயத்தை எல்லாம் கோபமாய் காட்டி முன்னே சென்றான். காலையிலே வெளியே கிளம்பி சென்றவர்கள் மதிய உணவு நேரம் பார்த்து பெரிய வீட்டிற்கு பேசியபடி வர, வீட்டிலோ அவர்களை கலவரப்படுத்த அங்கு எல்லாம் தயார் நிலையில் இருந்தது பாவம் இருவருக்கும் தெரியவில்லை.

"என்னடா மாதவா இன்னைக்கு என்ன உங்க வீடு ரொம்ப அமைதியா இருக்க மாதிரி இருக்கு. நம்ப முடியலையே? உன் அம்மா மாமன் மகன் அந்த குட்டி பையன் யாரையோட சத்தத்தையும் காணோம்"

ஷங்கர் குழப்பமாய் கேட்டு அந்த ஹாலை சுற்றி சுற்றி பார்க்க "தெரிலடா. ஒருவேளை அவங்க ரூம்ல இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்" தானும் சுற்றும் முற்றும் பார்த்து கூறி வைத்தான் மாதவன்.

சரி அவர்கள் வரும்வரை சற்று உட்காரலாம் என சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம் ஷங்கர் அவன் முன்னால் இருந்த டேபிலில் ஒரு வித்தியாசமான மரபொம்மையை பார்த்தான். சாதாரண மரப்பாச்சி பொம்மை தான் அது. ஆனால் அதன் நீல நிற கண்கள் பார்ப்போரை வசியம் செய்துவிடும் போல் அதில் அப்படி ஒரு தேஜஸ் தெரிந்தது.

'இது என்னடா இது இந்த பொம்மை ரொம்ப வித்தியாசமா இருக்கு. இதுக்கு முன்னாடி இது இங்க இல்லையே'

யோசனையாக அந்த பொம்மையையே உற்று உற்று ஷங்கர் பார்த்திருக்க படக்கென அவனை பார்த்து ஒற்றை கண் அடித்தது அந்த பொம்மை. ஒரு நிமிடம் தன் மனபிரம்மை என நினைத்து நன்றாக கண்களை தேய்த்து விட்டு ஷங்கர் பார்க்க அந்த பொம்மை மீண்டும் கண் அடித்தது‌.

அதுலே அவனுக்கு பகீரென ஆகியிருக்க அதோடு விடாது ஷங்கரை பார்த்து ஈ..என டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு வருவதைப் போல் பல்லை வேறு அந்த பொம்மை காட்டியதும், அவனுக்கு உடலில் இருக்கும் சப்த நாடியும் கிடுகிடுக்க தொடங்கியது.

இவ்வளவு நேரம் வெயிலில் அலைந்ததில் வராத வேர்வை எல்லாம் நெற்றியில் ஊற்றெடுக்க சோபாவில் மல்லாக்க படுத்து விட்டத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவன் நண்பன் மாதவனின் கையை மெல்ல சுரண்டினான் ஷங்கர்.

"ப்ச் கொஞ்ச நேரம் நிம்மதியா படுக்க விடுமாட்டானே" முணகியபடியே எழுந்த மாதவன் "என்னதாண்டா வேணும் உனக்கு" சலித்துக் கொண்டு கேட்டான்.

அதையெல்லாம் கவனிக்காது அந்த பொம்மையிடம் இருந்து தன் பார்வையை நகர்த்தாத ஷங்கர் "டேய் மாதவா இது என்னைய பார்த்து கண் அடிச்சு சிரிக்குதுடா" என வெலவெலத்த குரலில் கூறி நிறுத்த,

"எதுடா?" குழம்பிப் போய் கேட்டான் மாதவன்.

அந்த பொம்மையின் மீதிருந்து தன் பார்வையை திருப்பாது "அ.. அது அங்க பாருடா" இப்போதுதான் பேசி பழகும் பச்சைப் பிள்ளை போல் எழுத்து கூட்டி ஷங்கர் முழி பிதிங்கி போய் பேசி வைக்க

"இவன் ஒருத்தன் பேரு வச்சுட்டு சோறு வைக்காத மாதிரி எப்ப பாத்தாலும் என் உயிர வாங்குறது. இப்ப என்னத்தடா பாக்க சொல்ற" முன்னதை மெல்லமாக சொல்லிவிட்டு பின்னதை சற்று குரல் உயர்த்தி கேட்டு திரும்பிய மாதவன் ஷங்கரின் பார்வை போகும் அந்த இடத்தை காண மரப்பாச்சி பொம்மை ஒன்று மட்டும் இருந்தது.

"ம்ம் பாத்துட்டேன் இங்க என்னடா இருக்கு, எனக்கு எதுவும் தெரியலை. என் உயிர வாங்காதா" கடுப்பாய் மாதவன் கத்த,

வழியில போன சனியனை எடுத்து பனியனில் விட்ட நிலையில் இருக்கும் ஷங்கரோ

"உன் பிரண்டா இருந்ததுக்கு நான் இன்னும் என்ன கதியாக போறனோ இதுல நான் உன் உயிரை வாங்குறனா. ச்சை தடிமாடு தடிமாடு ஒழுங்கா பாத்து தொலைடா. அந்த பொம்மைதான் என்ன பாத்து கண் அடிச்சு சிரிச்சிது"

மாதவன் அவன் நண்பன் சொல்லியதில் 'இதென்னடா இது இவனோட ஒரே ரோதனையா போச்சு' என அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே திரும்பி அந்த பொம்மையை பார்க்க, அந்த கண்கள் சட்டென அவனை கவர்ந்தது.

அது மட்டும் இன்றி அந்த கண்கள் நன்கு பரீட்சையமாக வேறு இருந்தது மாதவனுக்கு. அந்த கண்களை இதற்கு முன் எங்கே பார்த்தான் என சட்டென அவனின் நினைவிற்கு வரவில்லை.

அதையே யோசித்துக் கொண்டு அந்த பொம்மை மீது அவன் பார்வையை பதித்திருக்க, இப்போது மாதவனையும் பார்த்து சிரித்தபடி கண் அடித்து அவனையும் கலவரப்படுத்தியது பொம்மை.

"என்னா செல்லாக்குட்டிகளா எப்புட்ரா இருக்கீய. ரெண்டு நாளா அந்த பய அறைல போய் படுத்து என்னுட்டுடருந்து தப்பிக்க பாத்தா நான் விட்டுப்புடுவனா, இப்ப நானே வெளிய வந்துட்டேன்ல எப்பூடி... ஹாஹாஹா...."

என்றொரு குரல் பயங்கர சிரிப்பேடு அந்த பொம்மையிலிருந்து வர திடுக்கிட்டுப் போன நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கி வைக்க, அதை ஒய்யாரமாய் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டிருந்த பொம்மை வெற்றி களிப்புடன் பார்த்தது.

அந்த குரல் மற்றும் பேசும் விதத்தை வைத்தே அது எதுவென யூகிக்க நண்பர்கள் இருவருக்கும் வெகு நேரம் எடுக்கவில்லை. ஆனால் கிடைத்த பதில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லையே. முழுதாய் இரண்டு நாட்கள் நிம்மதியாய் பொழுதை கழிக்கவிடாது நந்தியாய் வந்து நிற்கிறதே பொம்மை.

அவர்களின் இருண்ட முகத்தை கண்டு மேலும் சிரித்த பொம்மை தன்னை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த வீரா சித்துவை கண்டு அப்படியே ஆஃப் ஆகியது‌.

ஏனெனில் காலையில் அரவிந்தின் அறையிலிருந்து வெளியே கிளம்ப சென்ற வீராவின் காதுகளில் எதோ சத்தம் கேட்க அப்படியே யூ டர்ன் அடித்து சென்று அந்த அலமாரியை திறந்து பார்த்தாள் வீரா. அங்கு இந்த பொம்மையை தவிர வேறு எதுவும் இல்லாதிருக்க அதை கண்டு குழம்பினாலும் அந்த பொம்மை வீராவை நொடியில் ஈர்த்திட்டது.

"அட இது மரத்துல செஞ்ச பொம்மை. இதுமாதிரி எல்லாம் நாம பார்த்தது இல்லையே"

அந்த பொம்மையை வீரா அவள் கையில் எடுத்து இப்படி அப்படி திருப்பி பார்த்து நோட்டம் விட, அந்த நேரம் பொம்மையினுள் எதோ ஒரு வைப்ரேஷன் உருவானது. அந்த வைப் வீராவை குறித்து பொம்மை முன்பு சந்தேகித்தது இப்போது நூறு சதவீதம் உண்மை என சொல்லாமல் சொல்லியது.

அவள் அதை எடுத்து அறையில் இருந்து வெளியே வர இத்தனை நாட்களாக அந்த அறைக்குள் பொம்மையை அடைத்து வைத்திருந்த மாய மந்திரகட்டு சுக்கலாய் உடைந்து போனது. ஆனால் இது எதுவும் வீராவிற்கு தெரியவில்லை. எனவே அதை அப்படியே ஹாலில் இருந்த டேபிலின் மீது அழகுக்காய் வைத்துவிட்டாள் வீரா.

இதுவே மரபொம்மை அரவிந்த் ரூம் அலமாரி டூ ஹால் டேபில்க்கு டிராவல் பண்ணி வந்த சிறு கதை. மந்திரகட்டுக்குள் இருந்தே அனைவரையும் ஆட்டி வைத்த மரபொம்மை வெளியே வந்தபின் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ அதுக்கு தான் வெளிச்சம்!

அந்த பொம்மை அறையை விட்டு வெளியே வந்த அதே நிமிடம் ஊரின் கடைகோடியில் இருக்கும் கிணற்றிலிருந்து சூறைக் காற்று சூழன்றடித்து அங்கிருந்த மலைக்குள் சென்று சேர்ந்து அதை பார்த்தவர்களை கதிகலங்க வைத்தபின் அமைதி அடைந்தது.

"எலேய் மாப்ள சேதி கேட்டியா நம்ம எல்ல மலைல பொதையலு இருக்குன்னுட்டு பல பயலுவ அதை ஆட்டையப்போட மலைய சுத்தி அங்க இங்கன்னு தோண்டிட்டு அலையறானுவலாம்"

"அட ஆமா மாமா நானும் கேள்விபட்டேன். அதுபோவ அப்படி பொதையல தோண்டுற பயலுவல எல்லா அங்க காவகாக்கர பூதம் வந்து அடிச்சு புடுதாம். அதுல பல பேரு இன்னும் ஆசுபத்திரலதான் இருக்கானுவலாம்‌. ஆனா இதெல்லாம் நம்புர மாதிரியா மாமா இருக்கு"

"என்ன பொசுக்கானு இப்படி சொல்லிபுட்ட, நேத்து என்ன ஆச்சு தெரியுமா. நான் வயலுக்கு போய்ட்டு மதிய நேரம் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்ப அந்த பாலுங்கெணறு இருக்குல்ல அதுல இருந்து ஒரு சுழல் காத்து கிளம்பி மலைய பாத்து போச்சுலே. கூட வேற யாரும் இல்லமா நான் ஒத்தையில வந்தேன். அப்ப எனக்கு என் உசுரே கைல இல்லடே. தப்பிச்சா போதும்னு உழுந்தடிச்சு ஓடியாந்தேன். இப்ப சொல்லு இதெல்லாம் பொய்யா என்ன"

"என்ன மாமா சொல்ற நெசமாலுமே நீ பாத்தியா என்ன?"

ஆச்சரியம் கலந்த பயத்துடன் இரு நபர்கள் இப்போது கரெண்ட்டில் இருக்கும் டாப்பிக்கை தன் எக்ஸ்பீரியன்ஸோடு பேசிக்கொண்டு ரோட்டில் செல்ல, அதை எல்லாம் ஊருக்குள் பறந்துபடி கேட்டுக் கொண்டிருந்தார் நம் அர்விந்த்.

இன்று மட்டும் அல்ல சில நாட்களாகவே மக்களோடு மக்களாக கலந்த நம் அரவிந்த் ஊரை நோட்டம் விட்டபடிதான் இருக்கிறார்.

"என்னடா இது நாம கிளம்பி விட்டது வெறும் புரளிதானே இவனுங்க என்னென்னமோ பேசிட்டு போறானுங்க. ஒரு வேளை மலைல புதையல் இருக்கிற கதைல எதாவது உண்மை இருந்து,

அது தெரியாம நம்ம பெத்து வச்சது ஊரு பூரா வதந்திய பரப்பி விட்டுருச்சோ. அப்படி இருந்தா என்ன பண்றது ஊரு பயலுங்க வேற புதையல் வேட்டைக்கு கிளம்பிட்டானுங்களாம் ம்ம்.." என இல்லாத மூளையை கசக்கி யோசித்த அரவிந்த்

"நோ நெவர் நான் இருக்க வரை என் சொத்த ஒருத்தனுக்கும் விடமாட்டேன்டா‌. இந்தா வரேன் என் பைனாக்குலர் கண்ணுல இருந்து எதுவும் மறையாது. உண்மை என்னன்னு இந்தா இப்ப கண்டுப்புடிக்கிறேன். ஊஊயாயா...."

சத்தம் எழுப்பியபடி பறந்து சென்ற அரவிந்த் போய் சேர்ந்த இடம் அந்த மலைதான். அப்படி அங்கு என்ன இருக்கிறது என கண்டுபிடிக்க தானே அங்கு சென்று சேர்ந்தார் மனிதர்.

மலையை வலதிலிருந்து இடமாக, இடதிலிருந்து வலமாக என அனைத்து திசைகளிலும் மாறி மாறி சுற்றி பார்க்க ஒன்றும் தெரியவில்லை.

"ஒருவேளை மலைக்கு உள்ள போய் பாத்தா எதாவது தெரியுமோ, ஆனா இதுக்குள்ள எப்படி போறது"

அவர் முன்னால் இருந்தது சிறு குண்றும் அல்லாது பெரிய மலையும் அல்லாது ஒரு சின்ன மலைதான்‌. அதற்கு உள்ளே நுழைய குகைப்போல் எதேனும் இருக்கிறதா என அரவிந்த் அந்தர் பட்டி அடித்து பார்த்தும் கூட ஒரு பொந்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. வெகு நேர சுற்று பயணத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து

"ச்ச இதுல ஊருக்கார பயலுங்க சொல்ற மாதிரி எதுவும் இல்ல போலடா அரவிந்தா. சரி நாம கிளம்புவோம் பக்கத்து தெரு மல்லிகா வேற தண்ணீ எடுக்க வர நேரம். இப்ப கிளம்புனாதான் போய் அவளை கொஞ்ச நேரம் சைட் அடிக்க முடியும்"

தனக்குள் புலம்பியபடி மனிதர் கிளம்ப புறப்பட்ட நேரம் அவர் வரும் போது இருவர் பேசியதைப் போலவே சுழல் காற்று ஒன்று மலைக்குள் போவதை கண்டு ஜெர்க்கானார்.

அவர் அதிர்விலிருந்து வெளியே வந்து நடந்ததை தன் குடும்பத்துடன் பகிர எண்ணிய நிமிடம்

"இத்தனை நாளு நான் காத்துகிடந்தது வீண் போவல. இந்தா உடனே என் வேலைய காட்டுறேன் டா" என வீராவேசமாய் தானும் தன் கடமையை செய்ய கிளம்பிவிட்டது பொம்மை.

இது எதுவும் தெரியாது வீராவின் பின்னால் நாய்க்குட்டியை போல் சுற்றியபடி இன்று எதாவது சம்பவம் செய்தே தீரவேண்டும் என்று ஒரு பயங்கரமான முயற்சியில் சித்தார்த் இருக்க,

"அந்த வீட்டுல அப்புடி என்னதான் இருக்கு, நாம என்ன பிளான் போட்டாலும் எதுவும் வெலங்கமாட்டேங்குது. இதுல அந்த பொதையல் மேப்ப எப்படி எடுக்கிறது" அந்த வீட்டிற்கு திருடர்களை அனுப்பி வைத்த அந்த கேரக்டர் இப்படி யோசனையில் மூளையை பஞ்சர் செய்துக் கொண்டிருந்தது.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 32

சூரிய தேவனவன் தன் காதலியாம் ஆழ்கடலுடன் சங்கமம் ஆகி சில மணி நேரம் கடந்திருக்க, தென்றல் காற்று சில்லென சற்று வேகத்துடனே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.

அதை வைத்து அப்போது இரவு நேரம் மணி ஒரு பத்து இருக்கும் என கூறலாம். நன்கு இருட்டியிருந்த அந்தகார வேளையில் அந்த பரந்து விரிந்த தென்னந்தோப்பின் நடுவே ஒரு கூட்டம் கூடியிருந்தது.

அதிலும் அந்த பெரிய தோப்பின் மத்தியில் ஓட்டு வீடு ஒன்று அம்சமாய் நடுவே வீற்றிக்க, சுற்றிலும் மரங்கள் என அந்த இடமே அச்சத்தை தருவதாய் இருந்தது. அந்த அச்சத்திற்கு மேலும் வலு சேர்ப்பதை போல் அங்கு இரண்டு தடியர்கள் வேறு நின்றிருந்தனர்.

அங்கே சூழ்ந்திருந்த அந்த ஆட்களுக்கும் அமானுஷ்யத்திற்கும் சற்றும் சம்மந்தமே இன்றி இரண்டு சிறிய உருவங்கள் நடுங்கியபடி மண்டியிட்டு இருந்தன. அது வேறு யாரும் இல்லை நம் அரவிந்த் வீட்டிற்கு திருட வந்த அதே இரண்டு திருடர்கள் தான்.

போலீஸுடன் கோர்ட்டுக்கு போகும் வழியில் லாவகமாக எஸ்கேப் ஆகி வெளியே வந்தவர்கள், அவர்களுக்கு அந்த வேலையை தந்திருந்த பெரிய மனிதரிடம் மாட்டியதில் முழித்தபடி நிற்கின்றனர்.

"ஐயா நீங்க எங்களை இன்னும் கதற கதற அடிச்சாலும் நடந்ததை எங்களால மாத்தி சொல்ல முடியாதுங்க. அந்த வீட்டுல எதோ பேயோ பிசாசோ இருக்குதுங்க. அதை மட்டும் எங்களால சொல்ல முடியுங்க"

அழுதபடி அதில் ஒருவன் புலம்ப, தன் நெற்றியை கோபமாக தோய்தபடி நின்றார் அந்த பெரிய மனிதர். இவரை பற்றி கூறவேண்டும் என்றால் சொல்லிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

பெயர் கேசவன், பக்கத்து ஊரில் பஞ்சாயத்து போர்டு பிரசிடென்டாக உள்ளார். நம் அரவிந்தின் பால்யவயது நண்பன். ஒரே பள்ளியில் அரவிந்துடன் ஒன்றாக படித்தவர்தான் இந்த கேசவன்.

அப்போதிருந்தே அரவிந்த் செல்வ செழிப்போட வாழ்வதை பொறாமையுடன் பார்த்து வைத்தாலும் வெளியே நல்லவர் போல் அரவிந்துடன் நட்புடன் இருந்தார் கேசவன். இன்னும் சொல்லப்போனால் அரவிந்த் சித்துவின் அம்மாவை காதலித்தபோது அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என அரவிந்தின் தந்தை இந்த காதலை ஒப்புக்கொள்ள மாட்டார் என வாண்டட்டாக அரவிந்தை அவர் காதலியுடன் வண்டியில் ஏத்தி இந்த ஊரை விட்டு பேக்கப் செய்ததே நம் கேசவன் தான்.

இதை வைத்து அவருக்கு நண்பன் மீது அவ்வளவு பாசம் என்று யாரும் தப்பாக எண்ண வேண்டாம். காதலித்த பெண்ணோடு வேறு ஊருக்கு சென்று அரவிந்த் கஷ்டப்படட்டும் என்ற நல்லெண்ணமே.

இப்படிப்பட்டவர் ஊருக்கு முன்னால் மிகப்பெரிய நல்லவர் என்ற போர்வையில் தனக்கு ஆபத்து வராத வகையில் லட்சலட்சமாய் சம்பாதித்து கொண்டுதான் இருக்கிறார்.

என்னதான் இப்போது லட்சங்களில் மனிதர் புரண்டாலும் இன்னும் அரவிந்தின் கோடிக்கணக்கான சொத்துக்களின் மீதுள்ள மோகம் கேசவனுக்கு குறையவில்லை. சிறு வயதில் அரவிந்தோடு அவர் வீட்டிற்கு சென்ற போது எதேச்சையாக அவர் கண்டுப்பிடித்த ஒரு விஷயமே இப்போது அவரை பல வேலைகளை செய்ய வைக்கிறது.

இதுநாள் வரை பேய் கதையை பரப்பி அரவிந்தின் வீட்டின் பக்கம் யாரையும் அண்டவிடாது அடிக்கடி தன் ஆட்களை அங்கு அனுப்பி வைத்து, ஒரு பொருளை எடுத்துவர சுதந்திரமாய் செயல்பட்டு கொண்டிருந்தார் கேசவன். அப்படி உள்ளே போன யாரும் உயிருடன் இதுவரை வெளியே வந்ததில்லை என்பது தனிக்கதை.

ஆனால் இப்போது சித்து வந்தபின் அந்த வீட்டிற்குள் நுழைந்தவர்கள் பிடிபட்டது அவருக்கு தலை வேதனையை கொடுக்க, இதில் இந்த திருடர்கள் கூறும் கதை வேறு அவருக்கு மேலும் எரிச்சலையே கிளப்பியது.

"ஏய் என்னங்கடா கதை கதையா விடுறீங்க. ரொம்ப நாளா பூட்டி இருந்த அந்த வீட்டுல பேய் இருக்கு பூதம் இருக்குன்னு கதை கெளப்பிவிட்டதே நானுதான். என்கிட்டையே அதை திருப்பி விட பாக்ககுறீங்க. என்ன பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் எப்புடி தெரியுது?"

வந்ததில் இருந்தே பேய் கதையை மாற்றி மாற்றி இரண்டு திருடர்களும் கூற கடுப்பில் கத்திய கேசவன்,

"டேய் இவனுக்கு ரெண்டு பேரும் அங்க என்ன நடந்ததுன்னு எல்லா உண்மையையும் சொல்லாம இங்கருந்து முழுசா வெளியே போவகூடாது" என அந்த தடியண்களிடன் கட்டளை பிறப்பித்துவிட்டு, அவர் அருகே நின்றிருந்த தன் கணக்கிடம் எதோ முணுமுணுத்து சென்றார் அவர்.

அவர் அப்படி எந்த விஷயத்தை எதேச்சையாக கண்டுபிடித்தார் என பொறுத்திருந்து பார்ப்போம். இப்போ நம்ம அரவிந்த் அண்ட் கோ சித்து ரூமில் ஒரு மீட்டிங்கை போட்டு என்ன செய்கிறார்கள் என பாக்கலாம் வாங்க!

இரவின் நிசப்பத்தம் அந்த அறை முழுவதும் நிரம்பி இருக்க சித்து அண்ட் கோவும் யோசையில் திசைக்கு ஒவ்வொருவராய் ஒவ்வொரு டிசைனில் அமர்ந்திருக்க, நேரம் நடுநிசியை தொட்டுவிட்டது.

"ஒரு வேளை நாம நமக்கு தெரியாமையே பெரிய தப்ப பண்ணிட்டோமாடா மவனே?"

கட்டிலின் ஒருபுறம் இருந்த சோஃபாவில் அமர்ந்து கையில் ஒரு தட்டு மிக்சரை வைத்து கரக் முரக் என நொறுக்கியபடி அரவிந்த் கேட்க

"அதைதான் நானும் யோசிக்கிறேன் நைனா. கம்முன்னு இருந்த ஊரை கொல்லை கூட்டமா மாத்தி நமக்கு நாமே செல்ஃப் ஆப்பு வச்சுகிட்டோமோ"

கட்டிலின் மறுபுறத்தில் இருந்த சேரில் சாய்ந்தமர்ந்து விட்டத்தில் இருந்த லைட்டை பார்த்து புலம்பி கொண்டிருந்தான் சித்து. இவர்களின் நடுவே இருவர் பேசுவதையும் பார்த்துபடி கட்டிலில் வீரா அமர்ந்திருக்க கதிர் தூங்கி கொண்டிருந்தான்.

ஊருக்குள் நடந்த விஷயங்கள், அதோடு தான் பார்த்தது என அனைத்தையும் அரவிந்த் தன் மகன் மருமகளிடம் பகிர, இப்போது இதென்னடா புது பிரச்சினை என யோசனையில் இருக்கின்றனர் நம் குரங்கு கூட்டம்.

"ஷப்பா அந்த மலைய விக்க தங்கம் இருக்கு வைரம் இருக்குன்னு புரளிய கிளப்புனா, இங்க என்னென்னமோ நடக்குதே. அப்போ நான் இந்த ஜென்மத்துல சொந்த பிஸ்னஸ் பண்ண முடியாதா. ஐயோ..."

சித்துவுக்கு பணம் வருமா வராதா இல்லை மொத்தமா போயிருமா என ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சு பக்கு பக்கென அடித்தது. இருவரின் புலம்பல்களையும் பார்த்து கடுப்பாகி வீரா உட்கார்ந்திருந்தாள். அப்போது அவளுக்கும் பெரிதாய் எந்த ஐடியாவும் தோன்றாது போகவே கண்ணத்தில் கை வைத்துபடி அமைதி காக்க, கரக் முரக் என அரவிந்த் மிக்சர் திண்ணும் சத்தமே அந்த அறையில் கேட்டபடி இருந்தது‌.

'என்ன பண்ணலாம்' என வீராவின் மனம் யோசித்த அதே நேரம், படக்கென ஒரு சத்தம் அந்த வீட்டின் பின்வாசல் பக்கம் கேட்டது. அப்படியே பின்வாசல் கதவும் மெல்ல திறக்கப்பட்டது. அன்றுபோல் இன்றும் தான் தேடும் பொருளை எடுக்க கேசவனே ஒரு நான்கு தடியர்களை அனுப்பி வைத்திருந்தான்.

யாருக்கும் தெரியாமல் இந்த நால்வரும் மெல்ல சின்ன சத்தம் கூட செய்யாது நடந்து வர அதை கணநேரத்தில் கண்டுவிட்டது நம் பொம்மை.

"அடேய் திருட்டு ராஸ்கோல்வலா! திரும்ப திரும்ப வரீகளா. வாங்கடா வாங்க எத்தனை பேரு வந்தாலும் சும்மா எம்.சி.ஆரு கணக்கா நான் நின்ன எடத்துல இருந்தே தட்டி தூக்குவேன். வாங்கடா வாங்க"

அந்த தடியர்களை பார்த்து ஒரு பஞ்சை வைத்துவிட்டு அவர்கள் ஆவலாய் வரவேற்று எப்போதும் போல் சிறப்பாய் விருந்து வைத்தது நம் பொம்மை. எங்கிருந்து அடிவிழுகிறது தங்களுக்கு என்ன ஆகிறது என ஒன்றும் புரியாமல் அந்த தடியர்களும் இடியென விழுந்த பொம்மையின் அடிகளை வாங்கி தொண்டை கிளிய கத்தி வைத்தும் வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை.

நால்வரையும் அடித்து துவம்சம் செய்த பின்னர், அரவிந்தின் ரூமில் அதாவது பொம்மை இருந்த ரூமில் அவர்களை தள்ளி கதவை அடைத்து தன் தோளில் அடித்து "சபாஸ்" என தன்னை தானே பாராட்டியது பொம்மை. அதன்பின் டொக்கு டொக்கென சித்து இருந்த ரூமின் கதவை தட்டிவிட்டு அமைதியானது.

காந்தியின் மூன்று குரங்குகளை போல வீரா சித்து அரவிந்த் மூவரும் யோசனையில் அமர்ந்திருந்த நேரம் அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க,

"நைனா வீரா வெளிய எதோ சத்தம் கேக்குதுல்ல. வாங்க போய் என்னன்னு பாக்கலாம்" என சித்து மற்றவரோடு வெளியே சென்றான்.

இவர்கள் சென்ற நேரம் சரியாக அரவிந்தின் ரூமிலிருந்து சத்தம் வர "மகனே என் ரூமுல இருந்துதான்டா சத்தம் ஹெவியா வருது. சீக்கிரம் கதவை திறடா என்னான்னு பாப்போம்" பரபரப்பாகி விட்டார் அரவிந்த்.

"ஒரு நிமிஷம் இரு நைனா" சத்தத்தை கேட்டு சற்று யோசித்த சித்து வேகமாய் வீட்டினுள் தேடி ஒரு கிரிக்கெட் பேட்டை தூக்கி வந்தான்.

"உள்ள சவுண்ட் அதிகமா வருது நைனா நம்ம சேப்டி முக்கியம்ல அதான் இந்த பேட்ட வெப்பனா யூஸ் பண்ணலான்னு எடுத்துட்டு வந்தேன்" என ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தபடியே சித்து கதவை திறக்க அதிர்ந்து விட்டான்.

அன்று வந்த திருடர்கள் பிஞ்சு பீசு போயி எந்த நிலையில் கிடந்தார்களோ, அதற்கு சற்றும் குறையாது இன்று வந்தவர்களும் கிடந்தார்கள். ஆனால் நம் சித்து அவர்கள் இருந்த நிலையை குறித்தெல்லாம் யோசிக்கவே இல்லையே. அவர்களின் சைசை பார்த்தவுடன் பட்டென மீண்டும் கதவை அடைத்து வைத்தான்‌.

"வீரா சீக்கிரம் போலீஸ்க்கு போனை போடுடீ. நாலு பேரு தடி தடியா உள்ள கெடக்குறானுங்க" என்ற சித்துவின் அலறலில், ஏதோ ஒரு சந்தேகம் மனதில் தோன்றியதையும் ஒதுக்கி விட்டு வீரா போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டாள்.

ஆனால் அவள் மனதில் இங்கு நடக்கும் இந்த விசித்திரம் எல்லாம் ஒரு நீள ரயில்வண்டியைப் போல மனதிற்குள் வந்தபடியேதான் இருந்தது.

சித்து போட்டு சத்தத்தில் வீட்டிலிருந்த அவன் அத்தை மாமா என அனைவரும் எழுந்து வந்துவிட்டனர். அவர்களுக்கும் இப்படி மீண்டும் திருடர்கள் வீட்டிற்கு வந்தது அதிர்வை தந்தது. அந்த நேரம் போலீஸ் வர அந்த நால்வரையும் பிடித்து கொடுத்துவிட்டு வீட்டின் மத்தியில் அனைவரும் அமர்ந்துவிட்டனர்.

"என்னய்யா சித்து என்னதான் ஆச்சு" என அலமேலு பதறிப்போய் கேட்டார்.

சித்து நடந்தவற்றை அவர்களிடம் கூற கார்மேகம் அவற்றை கேட்டுவிட்டு "இனி ராத்திரிக்கு காவலுக்கு ஆளு போட வேண்டியதுதான் தம்பி. ஊருல எல்லா பயலும் அந்த மலைல பொதையலு இருக்குன்னு என்னன்னமோ பண்ணிட்டு இருக்கானுவ. அதனால நாம பாதுகாப்பா இருக்க காவலுக்கு ஆளு போட்டுப்புடுவோம் தம்பி" என்றிட்டார்.

பின்னர் கார்மேகமும் சில நாட்களாக ஊரில் நடப்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். இப்படி வீட்டிற்கு இரண்டு முறை வரும் அளவு யாருக்கோ துணிச்சல் வந்திருக்கிறது என்றால், வீட்டில் இருக்கும் நபர்களை காயப்படுத்தவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என எண்ணியே இந்த முடிவை எடுத்தார் அவர்.

சித்து கையில் இருந்த பேட்டை பார்த்து அவன்தான் அந்த தடியர்களை அடித்தது என கார்மேகமும் அலமேலுவும் நினைத்திருக்க, உண்மையை அறிந்த மாதவனும் சங்கரும் பொம்மை அவர்களை உற்று உற்று பார்ப்பதை கண்டு பயத்தில் நின்றிருந்தனர்.

இந்த லிஸ்டில் மீதமிருந்த அரவிந்தும் சித்தும் யோசிக்க மறந்தததை நம் வீரா யோசிக்க துவங்கினாள். அதாவது இப்படி வரும் திருடர்களை யார் இப்படி மரண அடி அடிப்பதென.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 33

கிழக்கே உதிக்கும் சூரியன் தன் செங்கதிர்களால் இந்த பூமித்தாயை நிரப்பி தன் கடமையை செவ்வனே செய்து நிற்க, வத்தலகுண்டின் ஊர் மக்கள் காலை எழுந்து எப்போதும் போல் பரபரப்பாக தங்கள் அன்றாட பணிகளை செவ்வனே செய்ய துவங்கினர்.

அந்த ஊரின் சலசலப்புக்கு சற்றும் சம்பந்தம் இன்றி சித்தார்த்தின் வீடு மட்டும் அமைதியாய் இருந்தது. வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் முதல் நாள் இரவு நடந்ததை எண்ணி கவலையில் இருக்க, நம் வீராவின் மனதோ எப்போதும் போல் சற்று வித்தியாசமாக சிந்தித்தது.

அங்கு நடப்பது ஒன்றும் புரியாதிருந்தாலும், அவர்களை சுற்றி எதுவோ ஒன்று நடக்கிறது. அதுவும் அது தவறாகவே நடக்கிறது என அடித்து கூறியது அவள் மனது.

'இங்க நடக்குறது எதுவும் சரியில்லையே. நம்மல சுத்தி என்னதான் நடக்குதுன்னும் ஒன்னும் புரியல. நாம தெரியாம இந்த ஊருல வந்து குடும்பத்தோட மாட்டிக்கிட்டமா'

வீராவின் மனது தன் இஷ்டத்துக்கு பயத்தை ஏற்றிவிட, சிந்தனையில் தன் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள். அந்நேரம் என பார்த்து சித்து மெதுவாக பூனை நடைப்போட்டு வந்து அவள் அருகே அமர்ந்தான்.

இன்று கதிர் அவன் அத்தை அலமேலுவுடன் தோப்பிற்கு போனது அவனுக்கு சாதகமாய் போய்விட அப்படியே வீராவின் ரூமுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டான் அரவிந்தின் அருமை புதல்வன். இப்படி நேரம் பார்த்து அவன் வந்திருக்க, அவன் வந்ததை கூட கவனியாது வீரா இன்னும் யோசனையிலே இருக்க கடுப்பாகிவிட்டான் பையன்.

"நான் வந்ததை கூட கவனிக்காம இருக்கா, வீரா! வீராம்மா! என் செல்லாக்குட்டி" என அவளை பிடித்து உலுக்கியே தன்னை பார்க்க செய்தான் சித்து.

"வீரா என்னடி இது காலையிலே கனவா, என்ன உன் கனவுல கரெக்ட்டா இந்த மாமன் என்டரி தந்தனா. அதான் நான் வந்ததை கூட கவனிக்காம உக்காந்திருக்கியா?"

எப்போதும் போல் விளையாட்டாய் சித்து கேட்டதற்குகூட எந்த பதிலும் கூறாது அவனை ஒருமாதிரி பார்த்து

"சித்து நான் விளைய்டுற மூட்ல இல்ல. பிளீஸ் என்ன வம்புக்கு இழுக்காதீங்க" என ஆரம்பத்திலே எண்ட் கார்டை போட்டுவிட்டாள் அவன் அழகு காதலி.

"என்னடி செல்லம்! என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு தான் உன் தம்பி கதிர் இல்லாம தனியா இருக்கியேன்னு ரொமான்ஸ் பண்ண வந்தா, இப்புடி மூட் ஆஃப் பண்ற"

கட்டிலில் அமர்ந்திருந்த வீராவின் கையில் தன் கையை கோர்த்து அவளை தன்மீது சாய்ந்தபடி முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு பேசிவைத்தான் சித்து.

சித்துவின் சலிப்பான பேச்சுக்கும் அவன் செய்கைக்கும் அவன் முகத்திற்கும் சற்றும் சம்மந்தமே இல்லாது இருக்க வீராவுக்கு அவனின் சிறுபிள்ளை தனத்தில் சிரிப்புதான் வந்தது. இருந்தும் இங்கு நடக்கும் நிகழ்வுகள் அவளின் நினைவிற்கு வர பெருமூச்சே வந்தது அவளுக்கு.

"ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்து. இது வேற யோசனைங்க"

பேச்சை பாதியில் நிறுத்திய வீரா எதோ யோசித்துவிட்டு "சித்து நாம ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆகப் போகுதுதானே. எப்பதான் திரும்ப சென்னை போகப்போறோம். அங்க எல்லாம் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டோம்ல. அதான் கேக்குறேன் நீங்க எதாவது அதப்பத்தி யோசிச்சீங்களா" என சுத்தி வளைக்காது நேராக விஷயத்திற்கு வந்தாள் வீரா.

இங்கு எதுவோ பெரிதாக நடக்கப் போவதாய் அவள் உள்மனம் கூற ஊரை காலி செய்து கிளம்பிவிடலாம் என்ற முடிவை வீரா எடுத்திட்டாள். அதற்காக சித்துவிடம் வீரா கேட்டு வைக்க

"என்னடி எதுவும் தெரியாத மாதிரியே கேக்குற. நான் பிசுனஸ் தொடங்க ஊருல இருக்க சொத்தை பளட்ஜ் பண்ண உன் மாமனார் விடமாட்டேன்னு அலும்பு பண்றாரு. அதனால தானே இவ்ளோ தூரம் வந்தோம். இப்ப எல்லாம் நடக்கப்போற நேரத்தில போலாமான்னு கேக்குறியே செல்லம் என்ன ஆச்சு உனக்கு"

சித்து லைட்டாக தன் சோக கதையை அவிழ்த்து விட "ப்ச் உங்க கதை எல்லாம் புரியுது சித்து. ஆனா நாம அந்த மலைய விட்டுட்டு வேற லேண்ட சேல் பண்ணிட்டு சட்டுப்புட்டுன்னு இந்த ஊரை காலிப்பண்ணிட்டு கிளம்பிடலாமா.

இல்ல ஊருக்கு போய் அங்க இருக்க லேண்ட் புரோக்கர் வச்சு நாம இந்த லேண்ட சேல் பண்ணலாமா. எனக்கு என்னவோ இங்க நடக்கிறது எதுவும் சரியாவே படலப்பா. நீங்களும் வந்ததுல இருந்து பாக்குறீங்கல வீட்டுக்கு திருடன் வரது ஊரே பொதையல் எடுக்க போறதுன்னு என்னன்னமோ நடக்குது. இதனால நம்ம உயிருக்கு எதுவும் பிரச்சினை வந்துட்டா என்ன பண்றது. எனக்கு உண்மையாவே பயமா இருக்குங்க"

வீரா தன் மனதில் இருந்த பயத்தையும் கூறிவிட்டாள்‌. அவள் சொன்னதை கேட்டு சித்து யோசித்து பார்க்க, அவனுக்கு வீரா சொன்னதில் இருந்த உண்மை புரிய தான் செய்தது.

பெரிய புதையல் இருக்கிறது, அதுவும் இவர்கள் இடத்தில் என இவர்கள் கிளப்பி விட்ட புரளியில் சிக்கி இப்போது முழித்து கொண்டிருப்பதும் நம் சித்து அண்ட் கோ தான்.

"நீ சொல்றதும் சரி தான்டி பணத்துக்காக எவனாச்சும் நம்மல எதாவது பண்ணிட்டா என்ன பண்றது. இவ்ளோ சொத்து இருந்தும் அப்புறம் நம்மால அனுபவிக்க முடியாம போயிருமே. அப்புறம் என் அப்பங்கூட சேர்ந்து நாமளும் கம்பெனி குடுக்குற மாதிரி ஆகிடும். சரி யோசிக்கிறேன்"

இப்படி கூறி சற்று யோசித்த சித்து "வீரா செல்லம் நாம வேணா இப்படி பண்ணலாம்டா. இப்ப முடிஞ்ச அளவு எதாவது பணத்தை தேத்திட்டு ஊரை காலிப்பண்ணிடலாம். சென்னை போய்ட்டு அங்க இருக்க ஆட்கள புடிச்சுகூட கொஞ்ச நிலத்தை மட்டும் வித்துட வேண்டியதுதான். அதை வச்சு நான் என்னோட பிசினஸ ஸ்டார்ட் பண்ணிக்கிறேன்"

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்த சித்து இன்னும் இரண்டு நாளில் ஊரை விட்டு ஓடிவிடலாம் என்ற முடிவிற்கு இறுதியாக வந்துவிட்டான் அவன் தந்தையிடம்கூட கேட்காமல். குழம்பி போயிருந்த வீராவின் முகம் இப்போதுதான் தெளிவானது.

"இப்பதான்பா என் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் சித்து" என்ற வீரா தானாகவே சித்துவை அணைத்துக் கொண்டாள்‌.

காதலி கூறுவதை கேட்டால் இப்படி கேட்காமல் எல்லாம் கிடைக்கும் என தற்போது உணர்ந்த சித்து மனதிற்குள் ஒரு குத்தாட்டம் போட்டபடி இதுதான் சாக்கென்று தானும் வீராவை நன்கு அணைத்துக் கொண்டான். இப்படி இவர்கள் இங்கு பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்க, இதையெல்லாம் ஒட்டுக் கேட்டு வைத்த பொம்மைக்கு பகீர் என்றது.

"ஐயையோ என்ன இந்த பைத்தியக்காரன் ஊரை விட்டு போற முடிவுக்கு வந்துட்டான். இதுக்குமேல தாமதிச்சா நாம இவ்ளோ நாள் கஷ்டபட்டது எல்லாம் வீணாப்போயிருமே" புலம்பியது பொம்மை.

"ம்ம்ம்... போறபோக்கு ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. இதுல நாம வேலைய இன்னும் இழுக்கப்போட்டா அவ்ளோதான் என் ஆயுசு இந்த பூமியாலையே முடிஞ்சு போயிரும். நாளைக்கு நல்ல நெறஞ்ச பவுர்ணமி நாளு. நம்ம வேலைக்கு ஏத்த நாளு. இன்னைக்கு நைட்டே வேலைய ஆரம்பிச்சா நாளைக்கு எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சிடலாம்"

தனக்குள் அவசர அவசரமாக கணக்கை போட்ட பொம்மை ஒரு முடிவை எடுத்தவுடன் மெல்ல தலையை திருப்பி தன் கண்களை கூர்மையாக்கி நோட்டம் விட்டபடி

"இந்த இத்துப்போன பக்கிக ரெண்டு எங்க போச்சுதுங்க. இந்த வெலங்காதவனுங்க வச்சு என்னத்த செய்ய. இருந்தாலும் இவனுங்கள விட்டாலும் நமக்கு இப்ப வேற ஆளு இல்லையே. என்ன பண்ணி தொலைக்க" என மாதவனையும் சங்கரையும் கழுவி ஊற்றியது.

அப்படியே ஊருக்குள் சிவனே என ஒரு மரத்தடியில் தங்கள் தலைவிதியை நொந்த படி அமர்ந்திருந்த அந்த இருவரையும் அலேக்காக தூக்கி ஏரில் பறக்கவிட்டு படாரென வீட்டுற்குள் இழுத்துப்போட்டது பொம்மை தன் வேலையை ஆரம்பிக்க.

இங்கு இப்படி நடக்க, அங்கு கேசவனோ இரவு நடந்த நிகழ்வுகளை முழுதாக அறியாமல் தன் ஆட்களை மீண்டும் போலீஸ் பிடித்து சென்ற கடுப்பில் பீபி ஏறிப்போய் சுற்றிக் கொண்டிருந்தார்.

"யோவ் கணக்கு, அங்க என்னதான்யா ஆச்சு? போற பயலுவ பூரா ஒன்னு செத்து போறானுவ, இல்ல போலீஸ்க்கு போறானுவ. அவனுங்ககிட்ட பேசுனியா? அங்க என்னதான் நடந்து தொலச்சுதான்"

ஆக்ரோசமாக கத்திய கேசவனை பார்த்து தயங்கிய கணக்கு, "ஐயா அது வந்துங்க..." என்று இழுக்க

"இந்தா அந்தான்னு இழுக்காம சட்டுனு சொல்லுயா"

"ஐயா போலீஸு ஸ்டேஷன்ல இருக்க நம்ம ஆளுங்க பேய் அடிச்சிது அது இதுன்னு அந்த ரெண்டு திருடனுங்க சொன்னதையே தானுங்க சொல்லுறாங்க"

கேசவனுக்கு தயங்கியபடி அவரின் கணக்கு பதில் கூறி வைக்க, இன்னும் வெறியானார் கேசவன்.

"ஐயா! நான் ஒன்னு சொல்லுவேன். நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது" ஒரு முன்னறிவிப்போடு கணக்கு ஆரம்பிக்க அவர் என்ன சொல்லப் போகிறார் என கேசவனும் கவனித்தார்.

"ஐயா அது வந்துங்க அந்த வீடு ஒருமாதிரின்னு ஊரே பேசுது. அதுமட்டும் இல்லாமங்க நம்ம ஆளுகளே இத்தினி பேரு இவ்ளோ சொல்றப்ப எனக்கும் அதுதான் உண்மையா இருக்குமோன்னு தோனுதுங்க. அந்த வீட்டுல பேய் இருக்குமோன்னு எனக்கும் தோனுங்கய்யா"

சற்று பயத்துடனே கணக்கு கூறி நிறுத்த அவரை கொலை வெறியோடு முறைத்து பார்த்த கேசவன்

"யோவ் கணக்கு வாய மூடுயா. அவனுங்க தான் ஏதோ புத்திக் கெட்டுப் போய் பேசுறானுங்கனா நீயும் அதையே பேசாதையா" கணக்கிடம் கத்தி விட்டவர்

'இதுக்குமேல இவனுகல நம்புனா ஒன்னு நான் தெருவுக்கு போவனும், இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு போவனும்‌. நாமளே நேரா கோதாவுல எறங்க வேண்டியதுதான். இன்னைக்கு ராவுக்கு நானே அந்த வீட்டுக்குள்ள போறேன். என்னதான் நடக்குதுன்னு பாத்துப்புடுவோம்'

இதற்கு மேல் அமைதியாய் இருந்தால் அவர் நினைத்த காரியம் கெட்டுவிடும் என்று உணர்ந்து, தானே ஸ்ரைட்டாக அந்த வீட்டிற்குள் போக முடிவெடுத்து விட்டார், அங்கு ஒளிந்திருக்கும் மர்மத்தை அறியாது.

"கணக்கு இதுக்கு மேல அந்த ஒன்னுத்துக்கும் ஒதவாத பயலுவ நம்பி புரயோஜனம் இல்ல. நீ ஒரு பத்து ஆளுங்கல மட்டும் தயார் பண்ணி வை. இன்னைக்கு ராத்திரி நானே அந்த வீட்டுக்குள்ள போறேன். அந்த பத்து ஆளுங்கல கூட்டிட்டு நீயும் வந்துரு அங்க என்னதான் இருக்குன்னு ஒரு கை பாத்துப்புடலாம்"

கேசவன் வீரமாய் வசனம் பேசி வைத்து முன்னே செல்ல 'இந்தாலு வேற என்னையும் வர சொல்லுறாரே. அங்க போனவன் எவனும் முழுசா வந்ததில்லையே. ஐயோ கருப்பா இந்தாலுட்ட இருந்து மொதல்ல என்ன காப்பாததுப்பா' என கணக்கு தன் மைண்ட் வாய்சில் அலறியபடி பின்னால் சென்றார்.

- ரகசியம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top