All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தலக்குண்டின் ரகசியமும்!!" கதை திரி

Status
Not open for further replies.

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai friends🙏🙏
after so many months I'm back. So sry for keeping the story on hold for such long time. So please read and support me like you done before.
Thank you friends 😍😍
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 10

நிலவு ஒளி சிறிதும் இன்றி காரிருள் சூழ்ந்த அமாவாசை இருள் சூழ்ந்த நேரம். அந்த இருள் நேரத்தில் யாரும் அறியாதவாறு இரண்டு உருவங்கள் பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல நகர்ந்த அந்த உருவங்கள் சென்று நின்றது ஒரு வீட்டின் முன்னே. தவறு அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

ஆம் அவ்வளவு பெரியதாக சுற்றிலும் நல்ல இட வசதியுடன் இருந்தது. ஆனால் பராமரிப்பு ஏதும் இல்லாததால் பழைய சோக சித்திரம் போல் ஒளி இழந்து காணப்பட்டது. பகலில் இந்த மாளிகையை பார்த்தால் ஒரு வித மன அமைதி கிடைக்கும் என்றால், இப்போது இந்த இரவு வேளை ஒருவித சொல்லொணா பயத்தையே தந்து நிற்கிறது.

ஆனால் அந்த அபாயகரமான அந்தகாரம் கூட எங்களை ஒன்றும் செய்யாது என கூறும் விதமாக அந்த இரண்டு உருவங்களும் அந்த மாளிகைக்குள் நுழைந்தன.

அவர்கள் இருவரும் அந்த வீட்டினுள் பிரவேசித்த நேரம் எங்கிருந்தோ ஒரு ஆந்தையின் அலறல் கேட்க அதோடு இருட்டில் கிடந்த அந்த மாளிகை பளிச்சென்று வெளிச்சமாக மாறிட "ஆஆஆ..." என்று கத்திவிட்டான் ஒருவன்.

கத்தியவனின் வாயை தன் கைக் கொண்டு மூடிய மற்றொருவன் "டேய் பரதேசி! ஏன்டா இப்படி கத்தி தொலையிர. நாம உள்ள இருக்கிறது ஊர்ல இருக்க எல்லாருக்கும் தெரியனுமா" என திட்டினான்.

"எ... எண்ணே உனக்கு நெசமாலுமே பயமா இல்லையா. இந்த எடமே எதோ சந்திரமுகி படத்துல வார பூத் பங்களா கணக்கா இருக்கே. இதுக்கு மேலையும் நாம உள்ளார போவனுமா ண்ணே"

உடன் இருந்தவனோ உதறலுடன் கேட்டு நிறுத்த மற்றவனோ திரும்பி அவனை ஒரு முறை முறைத்து

"இந்த வியாக்கியான வெங்காயம் எல்லாம் கை நீட்டி நாம துட்டு வாங்கிறதுக்கு முன்ன யோசிச்சிருக்கனும். இப்ப இவ்ளோ தூரம் வந்துட்டு வந்த வேலையை மட்டும் முடிக்காம போன அந்த ஆளு நம்மள என்ன பண்ணுவான்னே தெரியாதுடா. அதனால ஒழுங்கா வா உள்ள போவலாம்" என மிரட்டினான்.

"ஐயோ பணம்னு சொன்ன ஒடனே ஆஆ..னு வாய திறந்திட்டு வந்துட்டனே. உசுரோட ஊடு போயி சேருவனா?"

மனதிற்குள் இருந்த பயத்தில் சற்று சத்தமாகவே அவன் புலம்பிக் கொண்டு வர "டேய் இப்ப நீ வாய மூடிட்டு வரலை, நானே உன்ன கொன்னு போட்டுட்டு போயிருவேன் பாத்துக்க" என மீண்டும் மிரட்டினான்‌.

பின்னே தன் பயத்தை வெளியே காட்டக்கூடாது என தைரியமாக வெளியே காட்டிக் கொண்டாலும் உடன் வந்தவன் அவச்சொல்லாய் பேசி இன்னும் பயத்தை கூட்டினால் அவனும் என்ன தான் செய்வான்‌.

இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே முன்னேறி சென்று ஒரு அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் அங்கே நுழைந்தது தான் தாமதம் அந்த வீட்டின் கதவு ஜன்னல் என அனைத்தும் படாரென அறைந்து சாற்றியது. அதில் பயந்த சேகர்

"ஐயோ! அண்ணாத்த இது வேலைக்கு ஆவாது. வா வா நாம இப்படியே வெளிய ஓடிறலாம்" என அலறியபடி மற்றவனின் இடுப்பிலே தாவி தொற்றிவிட்டான்.

"அட நாசமா போன நாறப்பயலே! முதல்ல என் மேல இருந்து இறங்குடா" என சத்தமாக கத்தியவன்

'துட்டுக்கு ஆசைப்பட்டு தெரியாத்தனமா வந்து தொக்கா மாட்டிட்ட போல கோவாலு' என மனதிற்குள் கலவரமாக எண்ணிக் கொண்டான். இதில் வேறு அந்த அறையே ஒரு வீட்டை பெரிது இருந்து பயம் கொள்ள செய்ய இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் இருவரையும் விட்டு தூரம் சென்று விழுந்தது.

இதற்கு மேல் இங்கிருந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை உணர்ந்த கோபால் தன்னுடன் வந்த அவன் உதவியாளன் சேகரிடம்

"சரி சரி ரொம்ப கெஞ்சாத. நீ வேற பயந்து சாவற. அதுமட்டும் இல்லாம இந்த வீடும் ஒரு மார்க்கமா தான் இருக்கு. அதனால நாம திரும்பி போயிடலாம்" என சொல்லி அந்த அறை கதவை திறக்க வந்த வழியே திரும்பினான்.

என்னே ஆச்சரியம் அவர்கள் வந்த அந்த கதவு தற்போது வெறும் செங்கல் சுவராய் இருக்க, தற்போது கோபாலும் சேகரோடு சேர்ந்து அலறி அடித்து அந்த அறைக்குள் அங்கும் இங்கும் ஓட தொடங்கினான் வேறு எங்கும் வழி இருக்குமா என பார்க்க

பாவம் அவர்கள் எங்கு சுற்றியும் சிறு துளை கூட கிடைக்காது போக பயத்தில் அந்த அறையின் நடுவில் அருகருகே அமர்ந்து அழுக தொடங்கிவிட்டனர்.

அப்போது அவர்கள் எதிரே இருந்த ஒரு பழைய மர பீரோ தானாக திறந்து ஏதோ ஒளி போல் இருவர் மேல் அடிக்க ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டதை போல் இருவரும் அந்த பீரோவை நோக்கி நகர

அவ்வளவு பெரிய பீரோவில் ஒரேயொரு மரபொம்மை மட்டும் இருந்தது. அது அவர்கள் நெருங்கியதும் இருவரையும் பார்த்து கண்ணடித்து

"வாடா செல்லங்களா! ரொம்ப நாள் காத்துட்டு இருந்ததுக்கு செம்ம விருந்தா ரெண்டு‌ பேரும் வந்திருக்கீங்க. வாங்க வாங்க!" என் ஏதோ விருந்திற்கு வந்தவர்களை வரவேற்பதை போல் அமர்க்களமாக வரவேற்றது அந்த மரபொம்மை.

ஆனால் அங்கே நின்றிருந்தவர்களுக்கு தான் அது புரியவில்லை. ஏனென்றால் அவர்களின் நினைவு தான் இங்கில்லையே.

இருவரும் அந்த மர பீரோக்குல் நுழைந்த நேரம் அந்த வீட்டின் விளக்குகள் எல்லாம் ஒன்றாக அணைந்துவிட இருவரின் உயிர் போகும் அலறல் கூட அந்த அந்தகார வேளையில் யார் காதிற்கும் கேட்காமல் போனது.

--------------------------------------

அன்று ஆபிஸ் முடித்து வந்த சித்து ஏதோ யோசனையில் அமைதியாக தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் ஒருவித மெல்லிய சோகம் ஓட அவன் முகத்தையே குறுகுறுவென பார்த்தபடி நின்றிருந்தார் அரவிந்தும்.

சிறிது நேரம் ஒரு வேக பெருமூச்சை வெளியிட்ட சித்து மெல்ல நிமிர அவன் முகத்திற்கு எதிரே இருந்த அவன் தந்தையின் கர்ண கொடூரமான முகத்தை கண்ட அதிர்வில் நெஞ்சில் ஒரு கையை வைத்து நீவியபடி சோபாவின் பின்னே சாய்ந்தான்.

சித்துவின் மூச்சு மெல்ல சீரான பின்னே ஆரம்பமானது தந்தை மகனின் சண்டை காட்சி

"யோவ் மனுஷனாய நீ? இப்படியா பேன்னு பேய் மாதிரி என் முகத்துக்கு நேரா மூஞ்ச கொண்டாந்து வைப்ப?"

"மவனே! முதல்ல உன் தகப்பன் மனுஷனே இல்ல பேய் தான். அதை நீ அடிக்கடி மறந்து போயிட்டு பேசிட்டு இருக்க. நெக்ஸ்ட் நீ என்னமோ ராக்கெட் கவுந்த போன விஞ்ஞானி மாதிரி அப்படி சோகமா யோசிட்டு இருந்தல்ல. அதான் உன் மூஞ்ச பார்த்து எதாவது தெரிஞ்சா என்னால ஆன உதவிய பெரிய மனசு பண்ணி செஞ்சு விடலாம்னு பார்த்தா நீ என்னமோ ரொம்ப தான் பிகு பண்ற. போடா வெலங்காத வேஸ்ட் பெல்லோ"

"என்னாது நான் நான் வேஸ்ட் பெல்லோவா? நீ அப்படி வாழறப்ப என்னத்த பண்ணி கிழிச்ச. என்ன வந்து வெலங்காதவன் வேஸ்ட்னு சொல்ற. நீ தான் பெரிய வேஸ்ட் நைனா"

"என்னடா உன்ன பெத்து மாருல தோலுல போட்டு வளர்த்த உன் தகப்பன பாத்து வேஸ்ட்னு சொல்ற. கொஞ்சம் கூட நன்றியே இல்லாம பேசுறியே உனக்கு எல்லாம் கடைசி காலத்துல நல்ல சோறு கிடைக்காதுடா மவனே. இது இந்த சிங்கிள் தந்தையோட சாபம்டா" என பாசமலர் படத்திற்கே டப் கொடுப்பது போல் நடிப்பை பிழிந்து கொட்ட

"யோவ் யாருக்குயா நல்ல சோறு கிடைக்காது எனக்கா எனக்கா..." என சந்திரமுகி ஜோதிகா போல் சித்து தானும் கத்திக் கொண்டு வர

"டேய் எவன்டா அது இந்த ராத்திரி நேரத்துல ஊருக்கே கேக்குற மாதிரி கத்திட்டு இருக்கவன். கம்முன்னு இருங்க இல்ல போலீஸ்ல புடிச்சு குடுத்துடுவேன் பாத்துக்கங்க" என பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குரல் கேட்கவும் தான் இருவரும் தங்கள் கேவலமான சண்டையை நிறுத்தினர்‌.

அதன்பின் சிறிது நேரம் அமைதி நிலவ "என்னாச்சு என்னடா கண்ணா பிரச்சினை சொல்லு அப்பா அதுக்கு ஒரு ஈசி சொல்யூஷன் சொல்றேன். ஏன் வந்தப்ப சோகமா இருந்த" என இப்போது எதுவுமே நடவாதது போல் அமைதியாக கேட்டு வைத்தார் அரவிந்த்.

"அது ஒன்னும் இல்ல ப்பா. ஆபிஸ்ல ஒரு சின்ன பிரச்சினை. அதை நெனச்சு தான் கொஞ்ச சோகம் ஆயிட்டேன்" என்றான் சித்து அமைதியாக அப்பனுக்கு தப்பாத நல்ல பிள்ளையாக.

இவர்களை இப்போது பார்ப்பவர்கள் சற்று முன் தான் சட்டையை பிடித்து சண்டை போட்டவர்கள் என சத்தியம் செய்து கூறினாலும் நம்ப மாட்டார்கள். அப்படி பேசிக் கொண்டிருந்தனர்.

"நீ சொல்லுப்பா அப்பா அதுக்கு கண்டிப்பா ஒரு தீர்வு சொல்றேன்" என்றார் அரவிந்த்.

"அது ப்பா. எங்க ஆபிஸ்ல இந்த வருஷம் புதுசா நிறைய ஆளுங்க எடுத்தாங்க. அவங்களுக்கு எல்லாம் நாங்க பழைய ஆளுங்க தான் டிரைனிங் குடுத்தோம். இப்ப என்னன்னா அந்த புது பசங்கல வச்சிட்டு பழைய ஆளுங்கல எல்லாம் வேலைய விட்டு தூக்க போறதா சொன்னாங்க. அதுக்கான முதல் லிஸ்ட் இன்னைக்கு வந்தும் சேந்திருச்சு." என சித்து நிறுத்த

"இதென்னடா ஒரே அநியாயமா இருக்கு. புது ஆளுங்க வந்தா பழைய ஆளுங்க இருக்க கூடாதா என்ன. இது எந்த ஊரு நியாயம்டா‌. ஏன்டா மவனே அதுல உன் பேரும் வந்திருச்சா என்ன" அரவிந்த் தன் பங்கிற்கு பேசி வைக்க

"இல்ல ப்பா என் பேர் இல்ல. ஆனா நிறைய எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆளுங்க பேர்லா இருந்தது. கேட்ட ஹையர் ஆபிஸ்ல இருந்து வந்த ஆடர்னு பிராஞ்ச் மேனேஜர் சொல்றான் ப்பா"

"இந்த அநியாயத்தை எதிர்த்து எவனும் கேள்வியே கேக்கலியா?" என சித்துவின் பதிலுக்கு அரவிந்த் கேட்டார்.

"ம்ம் என் பிரண்ட் ஒருத்தன் நரேஷ்னு அவன் கேட்டான் ப்பா. அவன் பேரும் அந்த லிஸ்ட்ல வந்திருச்சு. அவன் பெரிய சண்டையாவே ஆக்கிட்டான்" என்று சித்து சோகமாக சொல்லி முடிக்க

"அதான் சோகமா வந்து அயைதியா உக்காந்து இருந்தியா" என கேட்டார் அவன் தந்தை.

"இல்லப்பா அவன் சண்டை போட்டதுல பெரிய பிரச்சினை ஆகி ரொம்ப கலாட்டாவா ஆகிருச்சு. அதுல அவன்ட்ட வாங்கி வச்சிருந்த ஒரிஜினல் சர்ட்டிபிகேட் எதையும் திரும்ப தர கூடாதுனு கம்பெனில ஆர்டர் போட்டுட்டாங்க. பாவம்பா அவன் ரொம்ப கஷ்டப்பட்ட ஃபேமிலி. இவன் வேலைக்கு வந்த அப்புறம் தான் கொஞ்சம் முன்னேறி இருக்காங்க. இப்ப திடீர்னு வேலை போய் சர்ட்டிபிகேடும் இல்லாம ரொம்ப தினறுறான். அதான் இன்னைக்கு எனக்கு கால் பண்ணி சர்ட்டிபிகேட் மட்டும் எப்படியாவது வாங்கி தர சொல்லி கேட்டான். வேற வேலை தேட தேவைப்படுதுன்னு. நானும் ஆபிஸ்ல அவ்ளோதூரம் பேசி பாத்துட்டேன். ஆனா ஒருத்தனும் இறங்கி வர மாட்டேங்குறானுங்க. அதான்.."

ஆபிஸில் நடந்ததை சித்து நீளமாக சொல்லி முடிக்க இப்போது அந்த நரேஷை நினைத்து அரவிந்திற்கும் பாவமாக போனது. சிறிது நேரம் அந்த நரேஷுக்கு எப்படி உதவ முடியும் என யோசித்த அரவிந்திற்கு சட்டென ஒன்று தோன்ற "ஐடியா!" என குதித்தார்.

"என்ன ஐடியா ப்பா" என சித்துவும் அலறியே விட்டான் தன் தகப்பனின் திருகு தனத்தை அறிந்தவன்.

அவனுக்கு பதில் சொல்லாது தன் மகன் போனில் இருந்து யாரையோ அழைத்தார் அரவிந்த்.

-ரகசியம் தொடரும்‌
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 11

நிலவு மகள் தன் பொன் ஒளியை பரப்பி அந்த இருள்காரிகையை சற்று தள்ளி நிற்க செய்திருக்க, சில்லென்ற இளங்காற்று மெல்லமாய் சுழன்று கொண்டிருந்தது அந்த இரவு வேளையிலே.

அதற்கு மேலும் இனிமை சேர்க்கும் வண்ணம் லேசாக தூரலும் வந்து சேர்ந்தது. ஆனால் அதை துளியும் ரசிக்கும் எண்ணம் இல்லாது மூன்று உருவங்கள் அந்த பெரிய சுவற்றின் ஓரம் பதுங்கி பதுங்கி நகர்ந்தது.

'ஆண்டவா! என்ன போய் இந்த வேளை எல்லாம் பாக்க வச்சிட்டாங்களே!' என அதில் ஒரு உருவம் மட்டும் மனதிற்குள் கதறி அழுதது.

அவன் வெளியே கதறி அழுதாலே கேட்க ஒரு நாதியும் இல்லா பட்சத்தில் மைண்ட் வாயிசில் கதறியதை யார் கண்டு கொண்டது.

இப்படி மரண பீதியில் கதறியபடி வந்தது வேறும் யாரும் அல்ல. சாட்சாத் நம் அரவிந்தனின் தவப்புதல்வன் சித்து தான். அதுவும் உடன் வந்த மற்ற இருவரின் நடவடிக்கைகளை பார்த்து தான் பாவம் பையன் பயந்து நிற்கிறான்.

"வீராம்மா இந்த செவுத்த தாண்டிட்டா போதும் உள்ள இருக்கிறது தான் என் புள்ளையோட ஆபீஸ். ஆனா எப்படிம்மா உள்ள குதிக்கிறது. நான் எதாவது ஏணி இருக்கான்னு பாத்துட்டு வரட்டா?"

"ஐயோ அங்கிள்! இதென்னா சீன பெருஞ்சுவரா ஏணி போட்டு ஏற. ஆன் த வேல நான் தாண்டி குதிக்கிற குட்டி சுவரு கூட இதவிட பெருசு. வாங்க ஒரே ஜம்ப் உள்ள குதிச்சுடுலாம்"

தன் அருகில் நின்று எப்படி சுவற்றை தாண்டுவது என பேசிக் கொண்டிருந்த தன் தந்தையையும் அவர் அருகில் நின்ற வீராவையும் பார்த்து இன்னும் வயிற்றை கலக்கியது சித்துவிற்கு. 'அவசரப்பட்டு இவரிடம் கூறிவிட்டோமோ' என காலதாமதமாக நினைத்தான்.

நடந்தது இதுதான். சித்து தன் அலுவலகத்தில் நடந்த விஷயத்தை கூறியபின் சிறிது நேரம் ஹாலின் குறுக்கே நடந்த அரவிந்த் "யுரேகா!" என கத்தினார்.

அதில் என்னவோ ஏதோ என பயந்த சித்துவிடம் "சித்து கண்ணா! அவன் உன் பிரண்ட் தானே. அவனுக்கு நாம உதவி பண்ணியே ஆகனும்ல. அதான் நான் ஒரு முடிவு எடுத்திட்டேன்" என்றவர் அது என்ன ஏது என கூறாது அவசரமாக அவர் அலைப்பேசியில் இருந்து வீரசுந்தரியை அழைத்து விட்டார்.

"வீராம்மா அங்கிள்க்கு உன்னால ஒரு உதவி ஆகனுமே" என்று நடந்த விஷயம் அனைத்தையும் கூறி

"அங்க இருக்க அந்த பையனோட சர்ட்டிபிகேட் மட்டும் எடுத்துட்டு வரனும். என் புள்ளையையே நான் அனுப்பி வச்சிருப்பேன்‌. ஆனா இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் அவன் சரிபட்டு வரமாட்டான். அதான் உன்னை கூப்பிடுறேன்" என்றார்.

வீராவும் 'நான் பிறந்ததே இந்த உலகத்திற்கு உதவி செய்யதான்' என அவளும் வீரநடை போட்டு கிளம்பி வந்துவிட்டாள். இவர்கள் இருவரையும் தடுக்க நினைத்த சித்துவையும் விடாது பலியாடுபோல் கூடவே இழுத்து வந்துவிட இப்போது அவர்களை தடுக்கும் வழி அறியாது முழித்துக் கொண்டிருக்கிறான் சித்து‌.

அவன் ஃபிளாஷ் பேக்கை ஓட்டிய நேரம் ஒரு சிறிய வட்டமேசை மாநாட்டை அரவிந்தோடு முடித்து ஒருவழியாக வீரா அந்த பக்கம் தாண்டிவிட்டாள்‌. அரவிந்தை பற்றி சொல்லவே வேண்டாம். பறந்தே சென்றுவிட்டார் மனிதர். அவர் பறக்கும் போது மற்ற இருவரையும் சேர்த்தே தூக்கி சென்றிருக்கலாம்‌.

ஆனால் அந்த அளவு அறிவு இருந்திருந்தால் மனிதர் வாழும் போதே எங்கேயோ சென்றிருக்க மாட்டாரா.

"இப்ப நாம எப்படி உள்ள போறது" என புலம்பிய சித்து கஷ்டப்பட்டு சுவற்றை பிடித்து ஏறிவிட்டான்‌. பாவம் இறங்கும் போதுதான் கால் தடுக்கி கீழே மல்லாக்க விழுந்தான்‌. விழுந்ததில் இடுப்பில் வேறு நல்ல அடி.

"ஐய்யோ போச்சோ!" என அவன் அலறலில் திரும்பி பார்த்த அரவிந்த் தலையிலே அடித்து கொண்டார்.

"பொம்பள புள்ளை எவ்ளோ அழகா நேக்கா ஏறி குதிச்சிருச்சு. இவன் என் மானத்தை வாங்கன்னே வந்திருக்கான். ஒரு செவுறு ஒழுங்கா ஏற தெரியலை. இவன என் புள்ளைன்னு சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு"

கீழே விழுந்த மகனை தூக்கி விடாது பக்கம் பக்கமாக வசனம் பேசிய தன் ஆருயிர் தந்தையை பார்த்து வெறியானது சித்துவிற்கு‌.

"இப்படி நுழையும் போதே தடுக்குதே போற காரியம் என்ன ஆகப்போகுதோ" அரவிந்தும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கொளுத்தி போட கேட்ட சித்துவிற்கு பக்கென்றது.

இப்படி கலவரமாக கிளம்பிய மூவரும் யாரும் அறியா வண்ணம் அந்த பெரிய கட்டிடத்தின் உள்ளே நுழைய வழியை தேடி கொண்டிருந்தனர்‌. இதில் கூத்து என்னவென்றால் அவர்களுடன் அரவிந்தும் பதுங்கி பதுங்கி சென்றதுதான்‌.

அவர் செய்ததை கண்டு சித்துவோ தன் தலையை சுவற்றில் நிஜமாகவே டங்குடங்கென முட்ட, அந்த சத்தத்தில் மற்ற இருவரும் திரும்பி பார்த்து

'இவனுக்கு பையித்தியம் முத்திப்போச்சு' என்று நினைத்துக் கொண்டனர். இப்படி தட்டுத்தடுமாறி எப்படியோ ஒருவழியாய் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து விட்டனர் மூவரும்.

"டேய் மகனே! அந்த ரூமு எங்கடா இருக்கு. போய் எடுத்துட்டு அப்படியே எஸ் ஆகிர்லாம். சீக்கிரம் சொல்லு"

இதற்கு மேல் தான் ஒன்றும் செய்ய இல்லை என்று புரிந்த சித்துவும் முக்கிய அலுவல்கள் இருக்கும் அறையை காட்டினான். ஆனால் அது பூட்டி இருக்க

"இதென்னா பூட்டு நான் எல்லா எவ்ளோ பெரிய லாக்கரையே திறந்தவ"

அந்த லாக்கில் எதையோ விட்டு இப்படி அப்படி திருகி கதவை திறக்க சித்துவோ ஆஆவென திறந்த வாயை மூடாது பார்த்து வைத்தான்.

"வாய மூடுடா வாய்க்குள்ள கொசு ஏதும் போக போகுது. சீக்கிரம் வந்து அந்த சர்ட்டிபிகேட்ட எடு சோலிய முடிச்சிட்டு கெளம்பலாம்"

"வரேன் வந்து தொலைக்கிறேன்"

அரவிந்திடம் அலுத்தபடி வந்து அந்த பெரிய பைல்கள் இருந்த அலமாரியை திறந்து அதில் இருந்த அவன் நண்பனின் சர்ட்டிபிகேட்டை தேடி எடுத்தான். அதன்பின் மூவரும் ஒரு நொடி கூட அந்த இடத்தில் தாமதிக்காது வெளியேற கதவை திறக்க

அந்தோ பரிதாபம் கதவு திறக்க மாட்டேன் என்றது. சித்து வீரா இருவரும் மாறி மாறி திறந்து பார்க்க 'எந்த பயனும் இல்லை' என்றது கதவு.

சித்துவிற்கோ விட்டால் நெஞ்சே வெடித்துவிடும் என்பது போல் 'படக் படக்' என அடித்து கொள்ள, இதையெல்லாம் பார்த்த அரவிந்தோ மற்ற இருவருக்கும் தெரியாமல் "பிச்சிக்கோ" என பறந்துவிட்டார்.

வீரா சித்து இருவரும் சிறிது நேரம் முயன்று பார்த்து பின் என்ன செய்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க "சார் கதவு திறக்கமாட்டேங்குது. இது உன் ஆபிஸ் தானே வெளிய போவ எதாவது வழிய பாரேன்"

வீரா சித்துவிடம் பொறுப்பை விட அவனோ "எம்மா பொண்ணே நீதானேமா திருடி. உள்ள வரும்போது கூட நீதானே கதவை எல்லாம் திறந்த. இப்பவும் நீயே எதாவது செஞ்சு கதவை திறக்க வச்சிருமா பிளீஸ்" என கெஞ்சியேவிட்டான்.

'நானாடா திறக்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறேன். கதவை திறக்கமுடிலையே' என மனதிற்குள் நொந்து போன வீராவோ மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்க பலன் என்னவோ பூஜ்யம் தான்.

கடைசியாக "சத்தியமா என்னால முடியல சார்" என நொந்துபோய் கூறினாள். அதை கேட்ட சித்து "ஐயோ போச்சா!" என அலறிவிட்டான். அதன்பின் தான் அவனோடு வந்த தந்தையவரை பற்றி நினைவு வர

"அப்பா அப்பா" என பாசமாக அழைத்தபடி திரும்பியவன் திகைத்தான். ஏனெனில் அவன் தந்தைதான் அங்கு இல்லையே. மனிதர் வெகுநேரம் முன்பே கம்பி நீட்டி சென்றதை தாமதமாக உணர்ந்த சித்து கடுப்பாகி

"ஐயோ இவரை வேற ஆள காணோமே. போச்சே இப்ப நாம என்ன பண்றது. எப்படி வெளிய போறது. என் ஹையர் ஆபிசர்க்கு தெரிஞ்சா என் மானம் மரியாதை வேலை எல்லாம் போயிருமே. இப்ப நான் என்ன பண்ண போறேன். இந்த மனுஷன் வேற நேரம் பாத்து கம்பிய நீட்டிட்டாரே. ஜயோ... ஜயோ ஜயோ ஜயோ..." புலம்பி தள்ளினான்.

அதை அருகில் இருந்து கேட்ட வீராவிற்கு ஷப்பா என்றானது. அதே வேகத்தில் "யோவ் நிறுத்துயா" என கத்திவிட்டாள்‌.

"நானும் பாத்தேட்டே இருக்கேன் ஓவரா புலம்பிட்டே போயிட்டு இருக்க. இந்த ஆபிஸ்ல வேலை பாக்குற உனக்கு இவ்ளோ பிரச்சினை வரும்னா என் நிலைமைய யோசிச்சு பாத்தியா.

நீயாவது உன் பிரண்டுக்கு உதவி செய்ய வந்த. நான் சம்பந்தம்மே இல்லாம வந்து மாட்டிருக்கேன். என்னை பாத்துட்டு போலீஸ்க்கு போன் பண்ணிட்டா என்னயா பன்றது. இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் வாசல் பக்கம் கூட போகமா கவுரவமா வாழ்ந்துட்டு இருக்க என் வாழ்க்கை என்ன ஆவறது"

வீரா நீளமாக தன் பங்கிற்கு தானும் புலம்பி முடிக்க "எம்மா எனக்கு ஒரு டவுட்டு. நீ திருட்டு வேலை தானே பாக்குற. அப்புறம் என்னமா போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போனது இல்லைனு பொய் சொல்ற" சித்து நியாயமாக கேட்டு வைத்தான்.

"யோவ் என்ன பத்தி என்ன நினைச்ச இதுவரைக்கும் என் தொழில்ல நான் ஒரு தடவை கூட தப்பு செஞ்சு சிக்குனது இல்ல தெரியுமா" வீரா கெத்தாய் சொல்லி காலரை தூக்கி விட்டாள்.

'இதுவேரையா' என எண்ணிய சித்து "சரி அதைவிடு நாம இப்ப எப்டி வெளிய போறது?" என்க

"பேசாம ஜன்னல் வழியா வெளியே எகிறி குதிச்சிடலாமா" என அற்புதமான ஒரு யோசனையை அள்ளிவிட அவளை ஒருமாதிரியாக பார்த்த சித்துவிற்கு இப்போது புரிந்தது அவள் எப்படி தன் தந்தைக்கு தோழி ஆனால் என.

"ஏய் அறிவாளி நாம இருக்கிறது பத்தாவது மாடி. கீழா இருந்து ஏறி வந்தோமே மறந்துட்டியா. இங்கிருந்து குதிச்சோம்னு வச்சுக்க நேரா கைலாசம் தான். அங்க ஆவியா சுத்துராரே என் நைனா அவர் கூட நாமளும் ஜாயின்‌ பண்ண வேண்டிருக்கும். குதிக்கிறியா?" சற்று‌ நக்கலாகவே அவன் கேட்டு நிறுத்த

"ஆத்தி பத்தாவது மாடியா" என நெஞ்சில் கை வைத்து வாயை பிளந்த வீரா சற்றே வழிசலாக சிரிதத்தபடி "ஹிஹி அது மறந்துட்டேன். சரி வேற எதாவது டிரை பண்ணுவோம்" என்று சமாதானத்திற்கு வந்தாள்.

இப்படியே மாறிமாறி இருவரும் பேசியதில் விடிந்தே போனது. பாவம் இருவருக்கும் வெளியேறும் வழிதான் தெரியவில்லை. அந்த அறிவு ஜீவிகள் மீண்டும் கதவை நன்கு போட்டு நான்கு தட்டி இருந்தாலே துருப்பிடித்த அந்த கதவு படாரென திறந்திருக்கும். அதைவிடுத்து என்ன செய்யலாம் என பேசியதில் நேரம் சென்றுவிட இப்போது அதே கதவை வாட்ச்மேன் வந்து திறக்க திறந்துவிட்டது.

"எப்புட்ரா" என வியந்து இருவரும் பார்த்து நிற்க அந்த பக்கமிருந்த ஆளும் பயந்து விட்டார். பின்னே பேய் போல் இருட்டில் இந்த ஆபிசின்‌ நடுவே குத்தவைத்து அமர்ந்திருந்தால் அவருக்கு பயம் வராது என்ன செய்யும்.

அந்த வாட்மேனின் பின்னால் "தேங்க்ஸ் பா" என கூறியபடி உள்ளே நுழைந்த அந்த அலுவலக அதிகாரியும் இவர்களை இருவரையும் கண்டு அதிர்ந்தார்.

"போச்சு தொக்கா மாட்டிட்டோம்" என்று எண்ணிய சித்தார்த் கை கால் உதறலுடன் நின்றிருக்க

"சார் என்னை கூட்டிட்டு வந்தது இந்தா இவர்தான். அதனால எதுனாலும் இவர்ட்டையே கேட்டுக்கோங்க. நைட்‌ புல்லா இங்கையே இருந்தது‌ வேற ஒருமாதிரி இருக்கு. அதனால நான் கிளம்பறேன்" வீரசுந்தரி நேக்காக சித்துவை சிக்க வைத்துவிட்டு நைசாக நழுவி விட்டாள்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 12

வீரசுந்தரி பெண் சிங்கமென சித்தார்த்தின் அலுவகத்தில் இருந்து எடுத்த ஓட்டத்தை அவன் வீட்டிற்கு வந்து தான் நிறுத்தினாள். ஓடிய வேகத்தில் நாக்கு தள்ள தஸ்சுபுஸ்சு என மூச்சு வாங்கியபடி வந்து சேர்ந்தாள்.

அவள் வந்து கதவை தட்டியபின் கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்தார்‌ அரவிந்த்.

"ஹேய் வீராம்மா நீயா வா.. உள்ள வாடாம்மா" ஆர்ப்பாட்டமாய் வரவேற்று உள்ளே வந்து அமர்ந்தார் அரவிந்த். அவரை தொடர்ந்து வந்த வீரா பொத்தென சோஃபாவில் விழுந்தாள்.

"என்ன வீராம்மா நேத்து வேலை முடிஞ்சு அப்படியே வீட்டுக்கு போயிட்டியா. அதான் அங்கிளை பாக்க இவ்ளோ காலைலேயே வந்துட்டியாடா" அரவிந்த் ஆதூரமாய் கேட்டு வைக்க முழித்தாள் வீரா.

"என் புள்ள இருந்தா காபி போட்டு தர சொல்லிருப்பேன். எங்க இவன் காலங்காத்தாலையே ஆபீஸுக்கு போய்ட்டான் போல. அதனால நீ வந்து அங்கிளுக்கும் சேத்து ரெண்டு காபியா போடுறியா" என அரவிந்த் அப்பட்டமாய் காபிக்கு அடிப்போட்டார்.

'அப்போ நடந்த எதுவும் இன்னும் அங்கிளுக்கு தெரியலைன்னு நினைக்கிறேன்' என்று யோசித்த வீரா

"ஐயோ அங்கிள் நான் வீட்டுக்கு போயிட்டு வரலை. உங்க புள்ள ஆபிஸ்ல இருந்துதான் வரேன்" என ஆரம்பித்த வீரா நடந்த அனைத்தையும் ஒருவரி மாறாமல் அப்படியே ஒப்பித்தாள்.

"என்னம்மா சொல்ற இவ்ளோ நடந்து போச்சா. இந்த பையன் என்கிட்ட எதுவும் சொல்லலை பாரேன்" அவன் எங்கே வீட்டிற்கு வந்தான் என்ற புத்தியே இல்லாது அரவிந்த் பேச

அதை கேட்டு "ஓ அப்படியா அங்கிள்" என்று அவளும் உம் கொட்டி கேட்டு கொண்டிருந்தாள். இவர்கள் இங்கே யார் மண்டையை போட்டு உருட்டினார்களோ அந்த சித்தார்த் வீரா வந்து ஒரு மணி நேரம் கழித்து நொந்து போய் வீடு வந்து சேர்ந்தான்.

அவன் வந்தவுடன் அங்கிருந்த இரண்டு பேரையும் கண்டுக் கொள்ளாமல் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

"என்னவா இருக்கும் அங்கிள். ஒரு வேளை ரொம்ப கேவலமா திட்டி அனுப்பிட்டாங்களோ?"

சித்தார்த்துக்கு என்ன நடந்திருக்கும் என தெரிந்த கொள்ள ஆர்வமாய் கேட்டு வைத்தாள் வீரா. அதே ஆர்வத்தை கண்களில் தேக்கி வைத்த அரவிந்துக்கும் என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது‌.

"சித்து பையா" மெதுவாக அரவிந்த் ஆரம்பிக்க சித்து திரும்பவில்லை.

"ஐயோ அங்கிள் இவ்ளோ மெதுவா கூப்டா எப்புடி காதுல விழும். இன்னும் கொஞ்சம் வால்யூமை ஏத்துங்க" இடையில் வீராவும் தன் பங்கிற்கு தானும் ஒரு அட்வைஸை தந்தாள். அதை அரவிந்தும் ஏற்று

"டேய் மகனே என்னடா ஆச்சு. இந்த டைம் ஆபிஸ்ல அடி கொஞ்சம் பலமோ. என்னமோ கப்பலே கவுந்த மாதிரி உக்காந்திருக்க. என்ன ஆச்சு? வாட் ஹேப்பண்ட்?"

கேட்டுவிட்டு எப்படி என கண்ணை காட்டி வீராவிடம் ஜாடையாக கேட்க வேறு செய்தார். அவளும் சூப்பர் என்று மூன்று விரல்களை காட்டி ஒத்து ஊத இங்கோ இவர்களை பார்த்த சித்து காதில் புகை வர அமர்ந்திருந்தான்.

அதை அப்போதுதான் கவனித்த அரவிந்த் கொஞ்சமும் அசராது "என்னாடா என்னா ஆச்சு?" என்க

"என்ன ஆச்சா நாசமா போச்சு. நான் பாட்டு சிவனேன்னு தானேயா வந்து உக்காந்துட்டு இருந்தேன். நீயா வந்த என் வாய புடுங்குன. வா உன் பிரண்டுக்கு உதவலாம்னு இழுத்துட்டு போன. கடைசியில காரியம் ஆன உடனே கம்பிய நீட்டிட்ட.

இதுல என்னையும் சேத்து இழுத்துட்டு போன பத்தாததுக்கு இந்தா நிக்குதே உன்னோட சோடிகேட்டு இதையும் இழுத்துட்டு போன. ஆனா இரண்டு பேரும் சேந்து என் வாழ்க்கையில நல்லா புட்பால் விளையாடிடீங்கயா விளையாடிடீங்க"

சித்து சீரியசாக பேசி நிறுத்த அரவிந்தோ காதை குடைந்தவாறு "ப்ச் இந்த வெங்காயம் எல்லாம் நீ சொல்லாமையே எனக்கு தெரியும். புதுசா ஏதாவது நடந்துதா. அந்த மேட்டரை மட்டும் சொல்லு" என்றார் அசால்ட்டாக.

சித்து அவரை தீயாக முறைத்து தள்ள அதை கால்காசுக்கு மதிக்காத அரவிந்தோ கெத்து மாறாது அப்படியே நிற்க அதற்குமேல் என்ன தன் விதியை நொந்தவாறு சித்து தான் நடந்ததை கூறினான்.

இரண்டு மணி நேரங்களுக்கு முன்...

சித்துவின் அதிகாரி அலுவலக கதவை திறந்த நிமிடம் அவனையே நேக்காய் மாட்டிவிட்டு வீரா தப்பி சென்றுவிட அதையே அதிர்ச்சி விலகாது பார்த்து நின்றான் சித்து. அப்படி நின்றவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த அந்த மேனேஜர்

"இங்க என்ன நடக்குது சித்தார்த். என் ரூம்க்கு வாங்க இந்த விசயத்தை நாம பேசியே ஆகனும்" என கறாராக கூறி உள்ளே சென்றார்‌. சித்துவும் பலியாடு போல் பின்னாடி செல்ல

"இவ்ளோ காலை நேரத்தில ஆபிஸுல என்ன செய்றீங்க சித்தார்த். அப்புறம் உங்க கூட இருந்த அந்த பொண்ணு யாரு?" என கேட்டு நிறுத்த

என்னவென்று சொல்லுவான் பைலை திருட வந்தேன் என்றா. திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருதிருவென முழித்து நின்ற சித்துவை அந்த மேனேஜர் வித்தியாசமாய் பார்க்க அப்போது அடித்து பிடித்து அறையினுள் வந்தான் அந்த அலுவலகத்தின் உதவியாளன்.

"ஐயோ சார் திருட்டு நடந்து போச்சு சார்! திருட்டு நடந்து போச்சு. நம்ம கம்பெனிக்குள்ளையே வந்து எவனோ எடுபட்டபய திருடிட்டான்" என்று ஒரு குண்டை போட சித்துவிற்கு கபாலத்தில் கண்டபடி ரயில் ஓடியது.

"என்னையா உளறிட்டு இருக்க என்ன திருடு போச்சு?"

"அந்த பைல் ரூம்ல தான் சார். யாரோ உள்ள நுழைஞ்சு இருக்காங்க. பீரோ எல்லாம் திறந்து கிடக்கு‌. ஃபைல் எல்லாம் சிதறி கிடக்கு"

அவன் கூறி முடித்த அடுத்த நொடி பழைய இரும்பு பீரோவை போல் கரட்டு கரட்டு என தலையை திருப்பிய மேனேஜரின் கண்கள் சித்துவை பார்த்தது. அவ்வளவு தான் அவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் விட்டுப் போக இன்று வேலை போவது உறுதி என்ற முடிவிற்கே வந்துவிட்டான்.

அதன்பின் அந்த அறையின் சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு பார்த்த மேனேஜர் "என்ன சித்தார்த் நீங்க தான் நைட் பைல் ரூம்ல ஏதோ பைல் எடுத்து இருக்கீங்க. சொல்லுங்க என்ன செஞ்சீங்க" என்று கேட்டு வைக்க

முழுதாய் நனைந்த பின் முக்காட்ட போட்டு என்ன செய்ய என்று உணர்ந்த சித்து அங்கு எதற்கு அவன் வந்தான் என்று எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அதை கேட்டு கொதித்து போன மேனேஜர்

"என்ன பெரிய சமூக சேவை செய்றதா நினைப்பா‌. சர்ட்டிபிகேட் எடுக்க வந்ததும் இல்லாம உங்க கேர்ல் பிரண்டையும் கூட்டிட்டு வந்து கூத்தடிச்சிட்டு இருந்திருக்கீங்க சித்தார்த். நான் காலைல பாக்குறேன் எவ்ளோ குளோசா உக்காந்து இருக்கீங்க" என்று கேட்க

'இது எப்போடா நடந்தது?' என எண்ணிய சித்தார்த் எதோ பேச வர "எதுவும் பேசக்கூடாது. இல்ல கேக்குறேன் இது ஆபீஸா இல்ல வேற எதுவுமா? உங்க பிரண்டு சர்ட்டிபிகேட்காக தானே வந்தீங்க. அதை எடுத்துட்டும் போயிட்டீங்க சந்தோஷம்.

இப்ப நான் ஒன்னு பண்ணப்போறேன். உங்களையும் வேலைல இருந்து தூக்கிடறேன். ஆனா உங்க சர்ட்டிபிகேட்ட தர முடியாது ஆனத பாத்துக்கோங்க" என்று முடித்தார்.

"அவ்ளோதானே எல்லாம் முடிஞ்சிதுள்ள. நான் போலாமா?" போலீஸ் கேஸ் என்று போகாது இத்தோடு விட்டாரே மனிதர் என சித்து கேட்க "கெட் லாஸ்ட்" என அவர் கத்தியதில் காது இரண்டும் கொய் என்றது‌.

அவர் இவ்வளவு பேசியது கூட அவனுக்கு வலிக்கவில்லை. வீரசுந்தரியை கேர்ல் பிரண்டு என்றாரே மனிதர் அதில் தான் நொந்துவிட்டான். இப்போது அந்த எபக்ட் மாறாது வீடு வந்து சேர்ந்துள்ளான் சித்து‌.

அவன் கூறிய கதையை கேட்டு சோபாவில் விழுந்து விழுந்து சிரித்த அரவிந்தை விஷஜந்துவை போல் பார்த்த சித்து அருகில் கிடந்த தலையனை கொண்டு தாக்க அது அவருக்குள் புகுந்து அந்த பக்கம் விழுந்தது.

"நோ யூஸ்டா மகனே" என இன்னும் இன்னும் சிரித்து அவனை வெறியேற்றினார் அவன் தந்தை.

--------------------------------------

"எய்யா பாண்டி எங்க இவ்ளோ வேகமா ஓடுற" ரோட்டில் வேகமாக ஓடிய ஒரு நபரை நிறுத்தி வைத்தது திண்ணையில் அமர்ந்து வெத்தலை இடித்துக் கொண்டிருந்த ஒரு வயதான கிழவி.

"ஏய் கிழவி உனக்கு விஷயமே தெரியாதா. நம்ம ஊருக்கு வெளியில இருக்க அந்த பாழுங் கெணத்துக்குள்ள ரெண்டு பொணம் கெடக்காம் கிழவி. ஊர் தலைவரு போலீஸுன்னு நெறைய ஆளுவ அங்க வந்திருக்காங்களாம்.

இந்நேரம் நீ அங்க இல்ல இருப்பன்னு நான் நெனச்சேன். வாவா ஒரு எட்டு போய் என்ன ஏதுன்னு பாத்துட்டு வரலாம். இதெல்லாம் நெதமுமா நடக்குது எப்பயாவது தானே நடக்குது. அதை பாக்குலன்னா எப்படி"

என அங்கே ஏதோ சர்க்கஸ் நடப்பதை வேடிக்கை பார்க்க செல்வது போல் அந்த பாண்டி என்பவன் பேசிச் செல்ல

இன்னும் ஒரு மாதத்திற்கு அக்கம் பக்கம் புரளி பேச கண்டென்ட் கிடைத்த மகிழ்ச்சியில் முகத்தில் ஆயிரம்‌ வாட்ஸ் பல்ப்பை மாட்டிக்கொண்டு கிளம்பியது கிழவி. அடித்து பிடித்து ஐந்து நிமிடத்துக்குள் எல்லாம் அங்கே சென்று சேர்ந்தனர் இருவரும்.

"காண்ஸ்டபுல்ஸ் அங்க இருக்க கும்பலை கிளியர் பண்ணுங்க. ப்ச் என்னய்யா இது வித்தையா காட்டுறாங்க இப்படி கும்பல் கூடி இருக்காங்க"

"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. அப்புறம் போலீஸ் நாங்க எப்படி எங்க வேலைய பாக்குறது"

போலீஸ் ஒருபக்கம் கத்தியபடி இருக்க மக்களோ அந்த கிழவியை போல் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கிணற்றை எட்டி பார்க்க முயன்று கொண்டிருந்தனர்‌.

அந்த நேரம் "ஏய் விலகுப்பா‌! தள்ளுங்கையா" என்றபடி வந்தார் அந்த ஊரின் தலைவர் கார்மேகம் அவர் மகன் மாதவனுடன்.

"ஐயா வந்துட்டீங்களா நீங்களே சொல்லுங்க. உங்க ஊர்காரங்க எங்கள எங்க வேலைய பாக்க விட மாட்டேங்குறாங்க" போலீஸ் கார்மேகத்திடம் முறையிட

"ஏய் என்னலே போலீஸ அவங்க வேலைய பாக்க விடாம பண்றீங்களா. ஒதுங்கி நின்று அவங்கல அவங்க வேலைய பாக்கவிடுங்கலே. இல்ல நீங்கதான் கொன்னு போட்டீங்கனு போலீஸ் புடிச்சிட்டு போயிரும்" கார்மேகம் கத்தி கூற அனைவரும் போலீஸ் வேலை செய்ய வழிவிட்டு நின்றனர்‌.

அதன்பின்னரே அந்த இரு உடல்களையும் மேலே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

"ஐயா இந்த ஊர் தலைவர் நீங்கதான். இறந்துபோன ரெண்டு பேரும் யாரு என்னன்னு உங்களுக்கு தெரியுமா?"

"எனக்கு இந்த ஊர்ல இருக்க எல்லாரையும் நல்லாவே தெரியுங்க. ஆனா இவங்க ரெண்டு பேரும் புதுசா இருக்காங்க. ஒருவேலை அசலூர் ஆளுங்களா இருக்கலாங்க. இப்பதான் கொலை பண்ணா சம்மந்தமே இல்லாத ஊர்ல பொணத்தை போட்டுட்டு போறாங்களே. எத்தனை செய்தி பாக்குறோம். அப்படி எதாவது இருக்கப்போவுது. ஆனா செத்தவங்க பாவங்கையா அவங்கள கொலை பண்ணுனது யாருன்னு சீக்கிரம் கண்டுப்பிடங்க ஐயா"

போலீஸ் கேள்விக்கு கார்மேகம் பதில் பேசி முடிக்க "ம்ம் சரிங்க ஐயா. உங்க உதவிக்கு நன்றிங்க. இல்லன்னா உங்க ஊர் மக்களை எங்களால் சாமாளிச்சு இருக்க முடியாதுங்க. அப்ப நாங்க கிளம்பறோம்" என சொல்லி சென்றுவிட்டனர் போலீஸ்.

இதையெல்லாம் பார்த்த மாதவனோ முதல்நாள் இரவு அவன் பார்த்த காட்சியை வைத்து என்ன நடந்திருக்கும் என ஊகித்து பார்த்தவன் பேய் அடித்தது போல் அப்படியே நின்றுவிட்டான்.

-ரகசியம் தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 13

ஏதையோ பார்த்து பயந்தவன் போல் அமர்ந்திருந்த மாதவனை குழப்பமாக பார்த்த அவன் நண்பன் ஷங்கர் கேட்டான்.

"என்ன மாதவா என்ன ஆச்சு? ஏன் எதையோ பாத்து பயந்தவன் மாதிரி உக்காந்துட்டு இருக்க?"

எதுவும் பேசாத மாதவனோ எதோ பெரிய விஷயத்தை யோசிக்கிறான் என அவன் சிந்தனை முகமே காட்டி கொடுத்தது‌.

"அப்படி என்னத்த போட்டு யோசிக்கிறான்னு ஒன்னும் புரியலையே. சொன்னா நானும் எனக்கு தெரிஞ்சத சொல்லுவேன்" என சத்தமாகவே யோசித்த ஷங்கர் மாதவனின் முகத்தையே பார்த்திருக்க சடாரென திரும்பி பார்த்து கேட்டான் மாதவன்.

"இந்த பேய் பிசாசு இந்த மாதிரி விசியத்தில எல்லா உனக்கு நம்பிக்கை இருக்கா ஷங்கரு"

மாதவன் விதிசித்திரமாய் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைக்க பதில் சொல்ல தெரியாமல் முழித்த ஷங்கர் "என்ன மாதவா திடீர்னு பேய் இருக்கா இல்லையான்னு கேட்டுட்டு இருக்க. என்னதான் ஆச்சு முழுசா சொல்லுடா" என்றான்‌.

தங்களை சுற்றி யாரேனும் இருக்கிறார்களா என்று நன்கு பார்த்த மாதவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தபின் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்.

"ஷங்கரு நான் உன்கிட்ட இப்ப சொல்லப்போறத நீ யார்கிட்டேயும் சொல்லக்கூடாது. விஷயம் கொஞ்சம் பெருசுடா நீ முதல்ல சத்தியம் செஞ்சுதா சொல்றேன்" என்று இழுக்க

"நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் இது என் அம்மா மேல சத்தியம்டா. போதுமா இப்ப சொல்லு" என்றான் அவன் பதிலுக்கு‌. இப்போதும் எச்சிலை கூட்டி விழுங்கிய மாதவன் மீண்டும் தங்களை சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு தொடர்ந்தான்.

"நோத்து அந்த வீட்டபத்தி நீ சொன்னல்லடா. எதோ தங்கம் இருக்கு புதையல் இருக்குன்னு ஊருகாரங்க பேசுறதா‌. நீவேற எதாவது செய்யு அது இதுன்னு ஏத்திவிட்டியா. அதான் அதுல அப்படி என்ன பெருசா இருக்குன்னு தெரிஞ்சுக்க நைட்டு அந்த வீட்டுக்கு போலாம்னு முடிவு பண்ணுனேன்டா‌.

அதேமாதிரி நேத்தி நைட்டு அந்த வீட்டுக்கும் போனேன். அங்க வச்சு நான் ரெண்டு பேரை பாத்தேன்டா‌. அதுவேற யாரும் இல்லை. இன்னைக்கு பாழுங்கெணத்துல இருந்து போலீஸ் ரெண்டு பொணத்தை எடுத்தாங்கல அவனுங்க தான்டா"

மாதவன் சொல்லி முடிக்கக் கூடவில்லை "ஐயோ அப்ப நீதான் அவனுங்க ரெண்டு பேரையும் கொலை பண்ணிட்டியா" என அலறிட "எடுபட்ட பயலே கத்தி போலீஸ்ல மாட்டி விட்டு தொலைச்சிராதடா" என அவன் வாயை கைக்கொண்டு மூடிவிட்டான்.

"நான் அவனுங்கல கொலை பண்ணலை. சத்தியமா நான் பண்ணலை" என விட்டால் அழுதுவிடுவேன் என்பதை போல் முகத்தை வைத்து கூறினான் மாதவன்.

"அப்போ என்னதான்டா நடந்துச்சு பிட்டுபிட்டா சொல்லாம முழுசா சொல்லித்தொலடா" ஷங்கர் தன் பங்கிற்கு கத்த "இருடா சொல்றேன்" என்று தொடர்ந்தான்.

முதல் நாள் இரவு அந்த வீட்டிற்கு வந்த மாதவன் அவன் முன்னால் சென்ற இருவரையும் கண்டு அவர்கள் யார் இங்கு என்ன செய்கிறார்கள் என்று குழம்பிப் போனான். பின் அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என பார்த்தபடி அவர்களை தொடர்ந்தான்.

அந்த இரண்டு பேரும் உள்ளே சென்று கதவு மூடியபின் மாதவன் சென்று கதவை திறக்க முயற்சித்தான். ஆனால் கம்போட்டு ஒட்டியது போல் இருந்த அந்த பூட்டிய கதவை அவனால் திறக்க முடியவில்லை.

"என்னடா இது இப்பதானே கதவு திறந்து உள்ள போனானுங்க‌. அதுக்குள்ள கதவு எப்படி பூட்டுச்சு" என மேலும் குழம்பிப் போனான் மாதவன். அதன்பின் இவன் வீட்டை சுற்றியபடி ஏதேனும் தெரிகிறதா என்று நோட்டம் விட்டான்.

அப்போது உள்ளே இருந்து அலறல் சத்தம் பயங்கரமாக கேட்க பயந்து போன மாதவன் சத்தம் வரும் திசை நோக்கி ஓடினான்‌. அங்கு ஒரு ஜன்னல் இருக்க அதன் வழியாக எட்டிப்பார்த்தான்.

பார்த்தவன் அதிர்ந்து போனான். ஏனெனில் உள்ளே இருந்த இரண்டு நபர்களும் அந்த அறைக்குள் அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தனர். அதுவும் அங்கே அவர்கள் முன்னையே கதவு இருக்க கதவை காணோம் என்று தேடிக் கொண்டருந்தனர்.

வெளியே இருந்து இவனும் அவர்களை அழைத்தான். ஆனால் உள்ளே இருப்பவர்களின் காதுகளுக்கு இவன் குரல் எட்டவில்லை. அங்கே நின்ற மாதவனுக்கு அதன்பின் நடந்ததை கண்டுதான் கை கால் எல்லாம் ஆட்டம் கண்டது.

ஆம் அந்த இருவரும் சிறிது நேரத்தில் அலமாரியினுள் உள்ளே சென்றதே அவனுக்கு பயம் தந்து என்றால், அதன்பின் அவர்களின் அலறல்கள் கேட்டதும் மாதவன் எடுத்தான் ஓட்டம் பின்னங்கால் பிடறியில் அடிக்க அப்படி ஒரு ஓட்டம்.

"இதுதான் ஷங்கரு நடத்தது‌. நேத்து நைட்டு நடந்ததுலையே எனக்கு பாதி உசுரு போன மாதிரி ஆயிப்போச்சுடா. அதுல இன்னைக்கு காலைல அவனுக்க பொணத்தை அந்த கெணத்துக்குள்ள பார்த்ததுல இருந்து என் உசுரே என் கைல இல்லடா"

மாதவன் கூறியதை கேட்டு ஷங்கரும் பயந்து போய் அமரந்துவிட்டான். "சரி இனி என்ன பண்ண போற. அந்த வீட்ட அப்படியே விடப்போறியா?"

ஷங்கர் கேட்டதுக்கு "பின்ன வேற என்ன செய்ய சொல்ற. என் அப்பன் அன்னைக்கே சொன்னாரு. நமக்கு இருக்க சொத்தே போதும்னு கேட்டேனா நானு. அதான் நானும் இன்னைக்கு என் அப்பா சொன்ன முடிவுக்கு வந்துட்டேன் டா. என் மாமன் வீடு சொத்து எதுவும் வேண்டாம்டா" என நொந்து போய் கூறி முடித்தான் அவன்.

"ஆனா ஒன்னுடா அந்த வீட்டுக்கு யாராவது வந்தா அவங்க தலையெழுத்து என்ன ஆகுமோ" ஒருவித பயத்துடனே இனி இதைப்பற்றி பேசவேக்ககூடாது என மாதவன் சொல்ல ஷங்கரும் சரி என்றான்.

அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படும் எண்ணத்தையும் குழித்தோண்டி அங்கேயே புதைத்துவிட்டு சென்றான் மாதவன்.

----------------------------------------

சித்து அவன் முன்னால் சிரித்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு மூச்சு வாங்க அமரந்திருந்தான்.

"ஏன் நைனா உன் புள்ளைக்கு வேலை போயிருச்சேன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா. இப்படி வயறு வலிக்க சிரிக்கிற" சித்து கோபமாக கேட்க

"பின்ன என்னடா செய்ய சொல்ற. என் பையனுக்கு வேலை போயிருச்சுன்னு மூலைல உக்காந்து மூக்க சிந்த சொல்றியா. அப்படி செஞ்சா இந்த அரவிந்து கெத்து என்ன ஆகறது. போடா போக்கத்தவனே" என கிண்டல் செய்த அரவிந்த் சிரிக்க

இருவரையும் பார்த்த வீரா அவள் மறைத்து வைத்திருந்த எதையோ எடுத்து சித்தார்த்தின் முன்னிருந்த டேபிளில் போட்டாள். முன்னே கேட்ட சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த சித்து தன் முன்னால் ஒரு பைல் இருப்பதை கண்டு குழப்பினான்.

"என்ன இது" வீராவிடம் அவன் கேட்க "எடுத்து பார்த்தா தெரிய போவுது இதுல ஆயிரத்தெட்டு கேள்வி" என இடைப்புகுந்த அரவிந்த் அதை கையில் எடுக்கும் முன் வெடுக்கென தான் எடுத்தான் சித்து.

அதை பார்த்தவன் "இதை எப்ப எடுத்த" என வீராவிடம் கேட்க

"அது வந்துங்க நாம உள்ள மாட்டிக்கிட்டோமா. எப்படியும் பைல் எடுத்ததுக்கு நீங்க மாட்டுவீங்கனு தோனுச்சு. என் உள் மனசும் அதையே சொல்லிட்டே இருந்துதா. அதான் ஒரு சேப்டிக்கு.." என்றாள்.

இருவரும் பேசுவதை புரியாது பார்த்த அரவிந்த் எழுந்து சென்று சித்துவின் கையில் இருப்பது என்னவென்று சென்று பார்க்க அவன் கையில் இருந்ததோ சித்துவின் சர்ட்டிபிகேட்.

"வீராம்மா சூப்பர்டா உனக்கு இருக்க மூளை என் புள்ளைக்கு இருந்திருந்தா அவன் எதாவது பொய் சொல்லியாவது வேலைய விடாம கப்புனு புடிச்சிருக்கமாட்டான்"

சித்துவிற்கு சர்ட்டிபிகேட் கிடைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் அவன் தந்தை பேசுவதை தான் கேட்கமுடியவில்லை கடுப்பாக வந்தது மகனுக்கு.

"வீராம்மா என் பையனுக்கு வேலை போயிருச்சுல்ல வா நாம போய் இத செலிபரேட் பண்ணுவோம். டேய் மகனே நீயும் வரியாடா" என்று வேறு கேட்டு வைக்க பல்லை கடித்தான் சித்து.

"ஏன் நைனா பையனுக்கு வேலை போயிருச்சேன்னு கொஞ்சம் கூட உனக்கு கவலை இல்லைல. பார்ட்டி பண்ண கூப்பிடுற"

"நான் வேலைய விட்டு வந்தப்ப நீ பங்சன் பார்ட்டினு வச்சு ஊருக்கே விருந்து போட்டல்ல. இப்ப உன் வேலை போனதுக்கு ஒரு சின்ன பார்ட்டி கூட செய்லைனா எப்படிடா என் மனசு ஆறும்"

"நைனா அது உன் ரிட்டையர்மென்ட் பங்சன்யா. வயசாகிபோச்சுன்னு ஆபிஸ்லையே உன்னை அனுப்பி வச்சதும் பாதியில வேலை போய் நான் வந்ததும் ஒன்னாயா"

நியாயமாகதான் கேட்டு நின்றான் சித்து. அதற்கு கொஞ்சமும் அசராத அரவிந்த் "வீராம்மா சிக்கனா மட்டனா உனக்கு எது புடிக்கும்னு சொல்லு. நான் எல்லாத்தையும் போன்ல ஆர்டர் போடறேன் இத கொண்டாடுறோம் மஜா பண்றோம்" என்றார்.

அதற்கு எதையோ யோசித்து தயங்கி நின்றாள் வீரசுந்தரி.

"என்னம்மா என்ன யோசிக்கிற?"

"அது வந்து அங்கிள் நான் என் தம்பியை விட்டு இந்தமாதிரி எல்லாம் சாப்பிட்டது இல்ல. அதுனால நீங்க மட்டும் சாப்பிடுங்க அங்கிள் நான் கிளம்புறேன்"

வீரா கூறியதை கேட்டு சித்துவிற்கே வியப்புதான். எப்போதும் வம்பு செய்துக் கொண்டு அரவிந்துடன் சுற்றும் வீராவா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வைத்தான். அரவிந்துக்கும் அதே எண்ணமே‌. அவளை ஒருநிமிடம் வியந்து பார்த்தவர்

"அப்போ உன் தம்பியையும் கூட்டிட்டு வாம்மா‌. இதெல்லாமா கேக்கனும். அவனும் இனி உன்னை மாதிரி எங்க வீட்டு பையன்தான்"

அரவிந்த் கூறியதை கேட்டு வீராவிற்கு கண்கள் கூட கலங்கும் போல் இருந்தது‌. தாய் தந்தை இறந்த போது எங்கே இவர்களிடம் நன்றாக பேசிவிட்டால் தங்களுடன் வந்தவிடுவார்களோ என்று அஞ்சி ஓடிய சொந்தங்களை கண்டவள் இவரை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு போனாள். அதை வார்த்தையாய் சொல்லவும் செய்தாள்‌.

"இந்த மாதிரி யாரும் இதுவரை ஆதரவாக்கூட எங்ககிட்ட பேசுனது இல்ல அங்கிள். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்"

வீராவின் வார்த்தைகளில் சித்துவின் நெஞ்சமே உருகிவிட்டது. இந்த வீரா சற்று சித்துவை ஈர்த்து விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று மாலை அரவிந்த் சொன்னது போல் வீரா அவள் தம்பி கதிரையும் அங்கே அழைத்துவந்து விட்டாள்.

சித்துவின் வீட்டிற்கு வந்த கதிரோ முதலில் அரவிந்தை பற்றி அறிந்து பயந்து போனான். ஆனால் அரவிந்தின் குணத்தால் சிறிது நேரத்திலே அவருடன் ஒன்றி விட்டான்.

ஆனால் அதைவிட சித்துவை கதிருக்கு மிகவும் பிடித்துப்போனது‌. "சார் சார்" என்று அவனோடே பேசியபடி இருக்க

"கதிர் என்னை நீ சார்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்"

"அப்புறம் எப்படி கூப்பிடுறது" கதிர் கேட்டான். இவர்கள் சம்பாஷனையை கேட்டிருந்த அரவிந்த் இப்போது இடைப்புகுந்தார்.

"கதிர் குட்டி. அவனை நீ சார்னு கூப்பிடாம இனி அழகா தமிழ்ல மாமான்னு கூப்பிடு என்ன" என்க வீராவும் அரவிந்த் கூறியதால் "அப்படியே கூப்பிடு" என்றாள் அவர் உள்குத்து அறியாமல். ஆனால் அதை அறிந்த சித்துவோ சிரித்தபடி ஒன்றும் பேசாமல் இருந்து விட்டான்.

அன்று இரவு வீராவுக்கும் கதிருக்கும் பிடித்த உணவுகளையே சித்து ஆர்ட்ர் செய்ய இருவரும் மகிழ்ச்சியாக உண்டு சென்றனர். அன்றுதான் சித்துவும் வீராவின் மற்றுமொரு முகத்தை கண்டான். வெளியே அவள் காட்டும் முகமும் கதிரிடம் அவள் காட்டும் முகமும் அப்படியே வெவ்வேறானாது என்பதை புரிந்துக் கொண்டான்.

இதை எல்லாம் அரவிந்தும் கவனித்தே இருந்தார்‌. ஆனால் வழக்கமாக சித்துவை வம்பிழுப்பதை போல் இப்போது ஒன்றும் பேசவில்லை தந்தை. அன்றைய இரவு அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் புதியதாய் அமைந்துதான் போனது.

-ரகசியம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top