" இந்த வருடம் இரண்டு மாதத்திற்கு முன்பே குறை பிரவசத்தில் பிறந்துவிட்டான்... என்று நினைத்து கொள்ளட்டும் "
இப்படியெல்லாம் பேச சஞ்சய் ஒருவனால் மட்டுமே முடியும்.
அதே போல் "இரண்டு மாதம் கழித்து தானே..! அப்போது நாம் கையை பிடிச்சுக்கிட்டு டூயட் பாடிகிட்டு இருப்போம். அதனால் காதலுக்காக எவ்வளவு அழகா பொய் சொல்லியிருக்கானு என்னை பாராட்டுவாங்க " என்பதும் பின்னர் "எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது, வீணா கண்டதையும் நினைக்காதே "என இவனுக்கு அவள் சொல்லும் வார்த்தைகளையே கொண்டே அவளுக்கு திருப்பி கொடுப்பதென என சஞ்சு அசத்திவிட்டான்
சஞ்சு இல்லாமல் அனைவரும் அவன் நினைவிலே பயணம் மேற்கொள்ளுகிறார்கள். மற்றவர்களே இப்படி என்கையில் மித்துவால் மட்டும் எப்படி அவன் நினைவில்லாமல் இருக்க முடியும்.
"மற்றவர்களை விட சஞ்சயின் வருகையை வெறுத்தவளும், விரும்பியவளும் மித்ரா தான் !" இந்த வரிகள் அவள் மன போராட்டத்தை தெளிவாக விளக்கிவிட்டது.
காட்டுபகுதிக்குள் பயத்துடன் பயணித்தவர்கள், இறங்கியவுடன் சஞ்சய்யின் உற்சாக குரல் கேட்டு நிச்சயம் தங்கள் பயத்தை மறந்திருப்பார்கள். அவனை கண்டவுடன் மித்துவின் ரியாக்ஷன் என்னவென்று அறிய ஆவல்