All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Ramyasridhar

Bronze Winner
சஞ்சய் யை கண்டவுடன் அவர்களின் உற்சாகமும் சந்தோஷமும் எனக்கும் தொற்றிவிட்டது🤩🤩 இடத்திற்கேற்ப திகிலான கேம் தான். எந்தவொரு கடினமான சூழலையும் இலகுவாக கையாள்வது சஞ்சய் யின் இயல்பில் ஒன்று. அனைவரும் போட்டியை நினைத்து பயம் கொள்ள, "இது தான் ரொம்ப ஈஸியான கேம், பயம் என்பது இல்யூஷன் மாதிரி " என அவர்களின் பயத்தை கொஞ்சம் தணிப்பது போலவே பேசி அவர்களை மோட்டிவேட் செய்கிறான். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கிளம்பும் போதும் அவர்கள் மனநிலைக்கு தகுந்தாற்போல் பாசிட்டிவ் வாகவே பேசி வழியனுப்புகிறான். ஒவ்வொருவரும் செல்லும்போது அவர்கள் அனுபவங்கள் அப்படியே நாம் எதிர்கொண்டது போலவே இருந்தது. அவர்களின் பயம் நம்மையும் தொற்றிக்கொண்டது. இதில் ஆன்ட்ரூ வும் சரிவினும் அங்கு ஏதோ இருப்பது போல ஒரு மாயையை தோற்றுவித்து விட்டார்கள். வசந்த் துக்கு இருட்டு மற்றும் பேய் என்றால் பயம் அதிகம் போல, அவன் வண்டியில் இருக்கும் போதே அவன் முகம் பயத்தை அப்படியே பிரதிபலித்து விட்டது. சஞ்சய் அவனுக்கு ஏற்படுத்திய உற்சாகம் எல்லாம் அவனின் பயம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அவன் பயந்து அலறி ஓடுவதை பார்த்தால் நமக்கே பாவமாகவும் கொஞ்சம் திகிலாகவும் தான் இருக்கிறது. ஒருவேளை இந்த சரண் டிஆர்பி க்காக சஞ்சுவுக்கு கூட தெரியாமல் வீட்டின் உள்ளே இவர்களை பயப்படுத்த ஆள் அனுப்பியிருப்பானோ என்று கூட ஒரு ஐயம் தோன்றுகிறது. எது எப்படியோ இப்போது வசந்த்தின் நிலை என்னவோ ஏதோ என சஞ்சய் யை போல் என் மனதும் பதறி, சஞ்சய் யை பின்தொடர்ந்து வசந்த்தை நோக்கி என் கால்களையும் ஓட வைக்கிறது. திங்கள் எப்போது வருமென்று இருக்கிறது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமாகவே வஸந்துக்கு என்னவாயிற்று என்ற அச்சம் தோன்றுகிறது. நாமும் அவர்களுடன் விளையாடுவது போன்ற உணர்வை தோன்ற வைக்கிறீர்கள் ராஜி
மிக்க நன்றி...

கதை படிக்கிறவங்களை இப்படி உணர வைப்பது கடினம்.. அதை செய்திருக்கிறேன் என்று நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna Raji ma epadi paniteengle ma😂😂 sema tensiona interestinga padich2 irunthen next yenna da nadaka pothunu partha epi mudinjiduthu😂😂😂😂
ஹா.. ஹா.. முடிக்கும் போது கொஞ்சம் ஆட்டம் காட்டினால் தானே அடுத்த யூடி படிக்க இன்டர்ஸ்ட்டா இருக்கும்..
 
Top