All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் ANAN ரீரன் - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 7


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆதி – 8

கண் மூடி சாய்ந்திருந்த தேவ்வின் நினைவு முழுவதும் மஞ்சு ஷாலினியே ஆக்கிரமித்திருக்க, அவளைப் பற்றிய எண்ணங்களோடு இந்த நாளின் தாக்கமும் சேர தாங்க முடியாத வலியையும் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருந்தான்.


சிறுவயது முதலே தன் இன்பத்தையோ துன்பத்தையோ மற்றவருக்குத் தெரியாமல் தனக்குள்ளேயே மறைத்து பழக்கப்பட்டவன், இரும்பாக இறுகி அனைத்தையும் தனக்குள் புதைத்துக் கொள்ளப் பழகியவன் இதையும் அவ்வாறே கையாண்டு இருந்த போதிலும், அவ்வப்போது எழும் இந்த நினைவுகளின் வேதனையைத் தாங்க முடியாமல் தவிப்பவனால் இன்றைய நாளின் எண்ணங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்ல.. அந்த நினைவுகளின் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தவனின் மனதின் வலி முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது.


காலையில் கண்விழித்த மதுவிற்கு இரவு நடந்தது நினைவில் வர... ஏனோ தேவ் முகத்தில் இதுவரை காணாத அந்த உணர்வே மீண்டும் மீண்டும் நினைவில் வந்து மதுவின் மனதை என்னவோ செய்தது.


இதே எண்ணங்களோடு தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவள் இன்னும் மித்து உறங்கிக் கொண்டிருக்க, அவன் எழுந்தவுடன் கொடுப்பதற்கு ஏதாவது தயார் செய்ய வேண்டும் என்பதால் இங்குச் சமையலறை எங்கிருக்கிறது... அதில் ஏதாவது செய்ய முடியுமா அதற்கான பொருட்கள் இருக்கிறதா எனப் பார்க்க கீழே இறங்கிச் சென்றாள்.


பக்கத்து அறையைக் கடக்கும் முன் அவளின் கால்கள் அங்குச் சிறிது தேங்க... அறையின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே செல்ல தைரியம் வராது சில நொடிகள் மட்டும் நின்று பார்த்துவிட்டு அமைதியாக இறங்கிச் சென்று விட்டாள்.


இரவு பார்த்ததை விட மிகப் பிரமாண்டமாக இருந்தது கீழ் தளம், அத்தனை அழகோடு கம்பீரமாகக் கலைநயத்தோடு கூடிய வடிவமைப்பில் அதன் நேர்த்தியில் கவரப்பட்டுக் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு ஒவ்வொரு பகுதியையும் ரசித்துக் கொண்டே நடந்தவளுக்குச் சமையலறை கண்ணில் பட... அதற்குள் நுழைந்தவள் அங்கு நான்கைந்து ஷாப்பிங் பைகள் சமையலறை மேடையில் வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள்.


அவற்றைத் திறந்து பார்த்தவள் அதற்குள் இரண்டு மூன்று நாட்களுக்குச் சமையலுக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களும் இருப்பது கண்டு இது நிச்சயம் தேவ்வின் வேலையாகத்தான் இருக்கும் எனப் புரிய...


எத்தனை அவசரத்திலும் கோபத்திலும் இருந்தாலும் செல்லும் இடத்திற்கும் உடன் செல்பவருக்கும் தேவைப்படுபவற்றைச் சரியாகச் செய்து முடிக்கும் அவனின் இந்தக் குணம் தேவ்வின் ஸ்பெஷல், அது மதுவை எப்போதும் போல இப்போதும் கவர... ஒரு சிறு புன்னகை மதுவின் இதழ்களில் தவழ்ந்தது.


மித்து எழுவதற்குள் அந்தப் பொருட்களை அவசர அவசரமாக எடுத்து அடுக்கி வைத்தவள் அதிலிருந்தவற்றைக் கொண்டு காலையில் குழந்தை சாப்பிடுவதற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்தாள். சமையலறையிலிருந்த ஜன்னலை காலை இளங்காற்றுக்காகத் திறந்து வைத்தவள் இன்பமாக அதிர்ந்தாள்.


அந்தப் பக்கம் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது அழகிய பூந்தோட்டம். வகை வகையான பூக்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கண்ணைக் கவரும் வகையில் இருக்க... அங்குச் சென்று அவற்றை அள்ளி அணைத்துக் கொள்ள மனம் பரபரத்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அங்குச் செல்லும் வழி புலப்படாததால் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள் மது.


புது இடம் என்பதால் குழந்தை எழுந்தவுடன் பயந்து அழ வாய்ப்பு இருப்பதால் அனைத்தையும் தயார் செய்து வைத்தவள் மித்து எழுவதற்குள் அவன் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.


சிறிது நேரத்தில் கண் விழித்த மித்துவோடு சேர்ந்து விளையாடியபடியே அவனைச் சுத்தப்படுத்தித் தயார் செய்து கீழே அழைத்துச் சென்று காலை உணவை அவனுக்கு அங்கு விளையாட்டு காட்டியபடியே ஊட்டி முடித்தாள்.


எவ்வளவு நேரம் தான் பூட்டிய வீட்டிற்குள் இருக்க முடியும், சற்று வெளியில் சென்று உலாவ மனது விரும்பினாலும் ரிமோட்டால் கதவு பூட்டப்பட்டு இருப்பதையும் அதை எப்படித் திறப்பது எனத் தெரியாததாலும் சற்று முன்பு பார்த்த தோட்டத்தின் அழகு மனதைக் கவர்ந்தாலும் அங்குச் செல்ல கால்கள் பரபரத்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த தொலைக்காட்சியில் மித்துவிற்காகக் கார்ட்டூன் ஆன் செய்துவிட்டு அமர்ந்துக் கொண்டாள்.


மித்துவும் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும் சிறிது நேரம் மதுவின் மீது ஏறி விளையாடுவதுமாகப் பொழுதைப் போக்கி கொண்டிருக்க... இடையிடையே நினைவு வரும் போதெல்லாம் “மா ஆரு டு....” எனப் புதிதாக இருக்கும் இடத்தைப் பார்த்து எழுந்தது முதல் கேட்கும் கேள்வியையே இப்பொழுதும் கேட்க...


“நம்ம ஆம் தான் டா கண்ணா...” என மதுவும் அதே பதிலையே திரும்பச் சொல்ல...


‘சரி’ என்ற தலை அசைப்போடு தொலைக்காட்சி பக்கம் பார்வையைத் திருப்பிக் கொள்பவன் மீண்டும் மதுவின் புறம் திரும்பி “மா... டாடா அங்க...?” என்று காலையில் எழுந்தவுடன் தன்னைக் கொஞ்சும் தேவ்வை காணாமல் தேட...


“டாடா ஆபிஸ் போயிருக்காறோனோ... நாழியோட வந்துருவா... வந்து மித்துக் கண்ணாவோட விளையாடுவா சரியா...” எனத் தொடர்ந்து ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பதால் அடுத்து அவன் அழ தொடங்க வாய்ப்பு இருப்பதை அறிந்து அவன் சமாதானமாகும் படியான பதில் அளித்தாள்.


மீண்டும் சமாதானமாகத் தலையசைத்தவன், சிறிது நேரத்திலேயே “மா... பாத்தி...?” என லலிதாவை கேட்க...


“அவா நம்மாத்துல இருக்கடா...” எனப் பதிலளித்தவளுக்கும் தெரியும் இன்னும் ஐந்து நிமிடத்தில் தொடர்ந்து இதே கேள்விகளை வரிசையை மாற்றிக் கேட்க போகிறான் என்று... இதைத்தான் அவன் கடந்த ஒரு மணி நேரமாகச் செய்து கொண்டிருக்கிறான் மதுவும் சலிக்காமல் பதில் அளித்துக் கொண்டிருக்கிறாள்.


தேவ் பக்கத்து அறையிலேயே இருந்தும் அதைச் சொல்ல முடியாமல் அவனைப் பால்கனிக்கு தூக்கிச் சென்றவள் அங்கு இருந்த தோட்டத்தையும் தொலைவில் தெரியும் கடல் அலைகளையும் காண்பித்து மித்துவின் கவனத்தைத் திசை திருப்பினாள்.


மதியம் ஆன பிறகும் கூட தேவ் அந்த அறையிலிருந்து வெளியில் வரவில்லை என்றதும் மதுவின் மனதை லேசாக கவலை அரிக்கத் தொடங்கியது. காலை முதல் இன்னும் எதுவும் சாப்பிடாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பவனை எண்ணி ‘அவருக்கு அப்படி என்ன துன்பம்... அவர் மனதை எது அரிக்கிறது...’ எனத் தெரியாமல் குழம்பியவள்,


இரவு அவள் பார்த்த காட்சியும் கண் முன் விரிய, இப்படி ஒரு நாள் முழுவதும் உணவு கூட இல்லாமல் மது அருந்திக் கொண்டிருந்தால் அவரின் உடல் நிலை என்னவாகும் என்று நினைத்து வருந்தினாள்.


ஆனால் அதைப் பற்றிப் பேசவோ கடிந்துக் கொள்ளவோ அவ்வளவு ஏன் உரிமையாக அந்த அறைக்குள் சென்று வற்புறுத்தி சாப்பிட வைக்கவோ கூட உரிமை இல்லாத தன் நிலையை நினைத்து கவலை எழ... மனதை திசை திருப்ப நினைத்து மித்துவின் மேல் கவனத்தைத் திருப்பினாள்.


இரவு முழுவதும் தாங்க முடியாத துயரங்களின் நினைவு ஊர்வலத்தில் மூழ்கியிருந்த தேவ் நிலையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவிற்கு இருந்தது.


வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவிற்கு அனுபவித்த இந்த நாளின் துயரம் ஒரு புறம் அவனைத் துவள செய்தது என்றால் மற்றொருபுறம் தானே அதற்குக் காரணமாக இருந்ததை நினைக்கும் போது அவன் மனமே அவனைக் கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தது.


அந்த நினைவுகளின் தாக்கத்திலிருந்து வெளிவரவும் விரும்பாமல் வெளிவரவும் முடியாமல் யாராவது தன்னை இதில் இருந்து மீட்டு விட மாட்டார்களா என எதிர்பார்க்கும் ஒருவகை நிலையில் எப்படி என்னவென்று சொல்ல முடியாத கலவையான ஒருவகை மனநிலையில் தனக்குள்ளேயே உழன்றுக் கொண்டிருந்தான் தேவ்.


தான் உயிருக்கு உயிராக நினைத்திருந்தவளின் பிரிவுத் துயரில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவன் எப்போதும் போல இந்தத் துன்பத்தையும் வெளியில் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.


மற்றவர்களுக்கு இரும்பாக இறுகி இருப்பவனின் இளகிய மனம் அவன் மட்டுமே அறிந்தது. அதற்குள் இருக்கும் இதயம் துடிக்கும் துடிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும். இப்படி ஒரு மனநிலையில் இரவு முதல் துடித்துக் கொண்டிருந்தவனின் மனதில் முதல் முதலில் தன் மனதிற்கினியவளை கண்ட நினைவுகள் மேலெழுந்தது.


அந்த இருள் சூழ்ந்த இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேவதை எனத் தன் கண்முன் வந்து நின்றவளை நோக்கி அவன் மனம் பயணித்தது. அதில் இத்தனை நேரம் இருந்த மனதின் வலி கூட குறைந்து மனம் முழுவதும் அவளின் நினைவுகளே ஆக்கிரமிக்கத் தொடங்கியது.


அவனை அறியாமலேயே அந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கண்களும் இறுகிப் போயிருந்த முகமும் அவளின் நினைவில் ஒரு மெல்லிய ரசனையான புன்னகயுமாக மாறி தேவ்வின் முகத்தில் தவழ்ந்தது.


அவளைக் கண்ட நொடி முதல் இமைக்க மறந்து நின்றிருந்தவன் அந்த இருளில் அவள் கையில் இருந்த மெழுகுவர்த்தி ஒளி அவள் முகத்தில் பட்டு ஒளிர... தேவதை எனத் தன் கண்களுக்குத் தெரிந்தவளை கண்டு நின்றிருக்க மனமோ...


ஒளியிலே தெரிவது தேவதையா...

உயிரிலே கலந்தது நீ இல்லையா...

என இசைக்க...


அசையாமல் நின்றிருந்தவனைக் கண்டு குழம்பியவள் “சார்... சார்...” என அழைக்கவும், அந்தச் சத்தத்தில் நினைவுக்கு வந்தவனுக்கு அவள் அழைத்த “சார்...” என்ற வார்த்தை நாராசமாகக் காதில் கேட்க, ‘என்னது சாரா...’ எனச் சினம் எழ, “என்ன...?” என அவள் மீது எரிந்து விழுந்தான்.


ஆனால் அவன் மனமோ ‘உன்கிட்ட வேலை செய்ற எல்லாருக்குமே மரியாதையா அப்படித்தானே ராசா கூப்பிடறாங்க...?’ எனக் கேள்வி கேட்க... ‘அவங்களும் இவளும் ஒண்ணா...’ என அதற்குக் கொஞ்சமும் யோசிக்காமல் பதிலளித்தவனை மனசாட்சியே வியப்பாகப் பார்த்தது.


அவளிடம் சிடுசிடுப்பவனைக் கண்டு பயந்த அவனின் தேவதைக்கு, ‘தன் முதலாளி தன்னை எதற்குத் திட்டுகிறார்...’ எனத் தெரியாது முகம் சுருங்கி போனது.


இப்படியாகத் தன் மனதை கவர்ந்தவளை சந்தித்த நாளிலிருந்து நடந்தவைகளை ஒன்றன் பின் ஒன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் முழுவதும் தன்னவளின் மீதான காதலே நிறைந்திருக்க... தன்னையறியாமல் காதலோடு மெல்ல அவன் இதழ்கள்


என்னவளே அடி என்னவளே

என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்....


எனப் பாட துவங்கவும், அந்தப் பாடல் வரிகள் காற்றில் மிதந்து வந்து மதுவின் காதை தீண்டியது. குழந்தைக்கு மதிய சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தவளின் கைகள் அப்படியே சில நொடிகள் நின்று போனது. அந்தப் பாடல் வரிகளும் அது உயிர் உருக பாடிய விதமும் அதில் இருந்த பாவமும் அவளை நம்ப முடியாமல் திகைக்க வைக்க....


குழந்தைக்கு வாயை துடைத்து இறக்கி விளையாடவிட்டவளின் கால்கள் தானாக தேவ் இருந்த அறையை நோக்கி சென்றது. அவள் மனமோ அந்தக் குரலில் இருந்த குழைவும் அதில் இருந்த ரசிப்பு தன்மையும் ஸ்ருதி சுத்தமாகப் பாடிய முறையும்... எனச் சிறு வயதிலிருந்தே பாட்டு பாட்டு கற்றுக் கொண்டவளுக்குத் தெளிவாகப் புரிந்தது .


‘ஒரு வேளை டிவியோ...?!’ என்ற யோசனையைத் தடை செய்வதைப் போல அவன் பார்க்கும் செய்தி சேனல்களின் நினைவு வந்தது. மெல்ல கதவைத் திறந்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள் அங்குக் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து பாடிக் கொண்டிருந்தவனைக் கண்டு நம்ப முடியாமல் விழி விரித்துத் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் .


அதிலும் பாடும் போது அவன் முகத்தில் தெரிந்த இளக்கமும் அதில் வெளிபட்ட காதலும் கண்டு மலைத்து போய் நின்றிருந்தவளுக்கு. இந்த முகம் இது வரை அவள் இவனிடம் பார்க்காதது.


பாடல் வரிகளை ரசித்து உணர்ந்து அதோடு ஒன்றி ஒரு சிறு புன்னகையோடு பாடிக் கொண்டே கண்களைத் திறந்தவன் எதிரில் தன்னையே ஆச்சர்யமாகப் பார்த்தபடி நின்றிருந்தவளை கண்டதும்... அதுவரை அவனைச் சூழ்ந்திருந்த மோன நிலையும் அதில் அவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தவளின் நினைவுகளும் அறுபட....


பொங்கிய ஆத்திரத்தோடு கண்கள் சிவக்க மதுவை முறைத்தவன், "யாரை கேட்டு உள்ளே வந்தே..." எனப் போட்ட சத்தத்தில், மிரண்டவள் அடித்துப் பிடித்து வெளியில் ஓட, கண்கள் கலங்க வெளியில் செல்பவளை கண்டவனின் சினம் கட்டுக்கடங்காமல் பொங்கியது.



மதுவிற்கோ தேவ் பாடும் போது வெளிப்படுத்திய காதல் பாவமும் அவ்வபோது தன்னை மறந்த நிலையில் அவன் உருகும் அந்த ‘மாஷாவும்...’ நினைவில் வர... இருவரின் பிரிவுக்கும் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் அறைக்குள் நுழைந்து தரையில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து கதறிக் கொண்டிருந்தாள்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆதி – 9

அறைக்குள் சென்று சிறிது நேரம் அழுதுக் கொண்டிருந்த மதுவுக்கு மித்துவை ஹாலில் விளையாட விட்டு வந்தது நினைவு வர, சட்டென்று தோன்றிய பதட்டத்தோடு எழுந்து அவனைத் தேடிச் சென்றாள். அங்கு மித்துவோ சமத்தாகத் தன் டைனோ பொம்மையோடு அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.


அவனோடு அமர்ந்து மதுவும் சிறிது நேரம் விளையாடி கொண்டிருக்க... திடீரென்று மித்து அழத் தொடங்கினான். மதுவும் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லாமல் போனது.


ஒரு பக்கம் தன் டாடாவை தேடி அழுகிறான் என்று புரிந்தாலும் இன்னொருபுறம் அதற்குத் தன்னால் ஏதும் செய்ய இயலாத தன் நிலையையும் மித்துவை சமாதானப்படுத்த முடியாமல் தவித்தவள் கண்கள் கலங்க எதை எதையோ காண்பித்து அவன் மனதை மாற்ற முயன்றும் அதற்குப் பலன் இல்லாமல் போனது. அவனும் தான் பூட்டிய வீட்டிற்குள் ஒரே இடத்தில் எத்தனை நேரம் தான் இருப்பான்.


மதுவும் மித்துவை தோளில் தூக்கி பிடித்தபடி எப்படி எப்படியோ சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்க... தன் அறை கதவை திறந்துக் கொண்டு மித்துவின் அழுகை சத்தம் கேட்டு வெளியே வந்த தேவ், “ஹே... மித்துப் பாய்...” எனக் குரல் கொடுக்க...


அத்தனை நேரம் அழுது ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டு இருந்தவன் உடனே அழுகையை நிறுத்தி “டாடா...” என ஒரு செல்ல சிரிப்போடு அவனிடம் தாவினான்.


‘அவ்வளவு நேரம் தன்னிடம் செய்த கலாட்டா என்ன... இப்போது தந்தையைக் கண்டவுடன் சிரிப்பது என்ன...’ என மது பார்த்துக் கொண்டிருக்க...


“என்ன அப்படியே பாத்துட்டு நிக்கறே... குழந்தையோட டவல் இன்னேர்ஸ் எல்லாம் எடுத்துட்டுச் சீக்கிரம் வா...” என்ற தேவ்வின் குரலில் நினைவு கலைந்தவள் அப்போதே தேவ்வை சரியாகக் கவனித்தாள்.


சற்று நேரத்திற்கு முன் அறையில் பார்த்த போது இருந்த இரவு உடையில் அல்லாது முட்டிக்கு சற்றுக் கீழ் வரை வெள்ளை நிற பாத் ரோப் எனச் சொல்லப்படும் உடையை அவசரமாக அணிந்து வந்து இருந்ததால் இடையில் அதன் கயிறை சரியாகச் சுற்றாமல் விட்டு இருந்தவனின் மார்பின் அருகே அது விலகி தன் பணியைச் சரிவரச் செய்யாமல் தேவ்வின் உடற்பயிற்சியினால் திரண்டு பரந்த மார்பினை இலவச காட்சி ஆக்கிக் கொண்டிருந்தது.


தேவ்வின் மீது இருந்த கண்களை எடுக்க முடியாமல் மது பார்த்தது பார்த்தபடி நின்றிருக்க... அவள் முகத்தின் நேராகச் சொடக்கிட்டவன் “வாட்...” என ஒற்றைப் புருவத்தைத் தூக்கி இதழை ஏளனமாக வளைத்து கேட்கவும், குன்றிப் போனவள் அவசரமாக அறைக்குள் ஓடி மறைந்தாள்.


மது சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு ஒரு சிறு தோள் குலுக்களோடு மித்துவின் மேல் தன் கவனத்தைத் திருப்பினான்.


மது திரும்ப வரவும் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்க கதவின் வழியே தேவ் செல்ல... அவனைப் பின் தொடர்ந்து அங்கு இருந்த அழகிய பூந்தோட்டத்தை ரசித்தபடியே சென்றவள் அதன் பிறகு வந்த பகுதியை கண்டு விழி விரிய திறந்த வாய் மூடாமல் அப்படியே நின்று விட்டாள்.


‘நீ இங்கேயே இதையெல்லாம் வைத்துக் கொண்டு அமர்ந்து கொள்...’ எனச் சொல்ல திரும்பியவன் மது நிற்கும் கோலத்தைக் கண்டு அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல... அப்போதும் கூட மதுவிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.


இப்படி மது அதிசயித்து நிற்கும் வண்ணம் அங்கு அவள் கண்டது செயற்கை நீர்வீழ்ச்சியைத் தான். நீர்வீழ்ச்சி என்றால் வெறும் அலங்காரத்திற்காக அமைக்காமல் சிறுமலை குன்றுகள் போல அமைத்து அதிலிருந்து வரும் நீரில் விளையாடுவும் குளிக்கவும் ஏற்றார் போல அமைக்கப்பட்டிருந்தது. இயற்கை எழில் சூழ தோட்டத்திற்கு நடுவில் அமைந்திருந்ததிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீரின் அழகு பார்ப்பதற்கு அத்தனை ரம்யமாக இருந்தது.


அதற்குள் தேவ் தான் அணிந்திருந்த பாத் ரோப்பை கழட்டி விட்டு சிறு ஷார்ட்ஸோடு மித்துவையும் அதே போல் ஒரு குட்டி ஷார்ட்ஸ் மட்டும் அணிய வைத்து நீருக்குள் இறங்கி இருந்தான்.


தண்ணீர் தலையில் கொட்டும் போது சந்தோஷத்தோடு மித்துப் போட்ட கூச்சலில் மது கவனம் கலைந்து பார்வையை அவர்கள் பக்கம் திருப்ப... இருவரும் அந்த நீரில் விளையாடிக் கொண்டிருப்பது அத்தனை அழகாக இருந்தது பார்க்க.


அவர்கள் விளையாடுவதை முகத்தில் ஒரு சிறு புன்னகையோடு மது ரசித்துக் கொண்டு இருந்தாலும் ஏனோ அவள் கண்கள் அந்த நீர்வீழ்ச்சியின் மேலேயே ஒரு ஆச்சரியத்தோடும் அதிசயத்தோடும் பதிந்திருந்தது.


மீண்டும் மீண்டும் அவள் பார்வை நீர்வீழ்ச்சியின் மேல் படிந்து விலகுவதைக் கண்ட தேவ் சிறிது நேரத்திற்குப் பிறகு, “என்ன அப்படிப் பார்க்கறே...?” எனக் கேட்க...


எங்கே தான் பார்த்ததைத் தவறாக எடுத்துக் கொண்டானோ என ஒரு பயம் மனதில் எழ மெதுவான குரலில் “இல்ல... நான் இதுக்கு முன்னே நீர்வீழ்ச்சி எல்லாம் பார்த்ததில்லை...” என மது பதிலளித்தாள்.


இதைக் கேட்டு வியந்த தேவ் “வாட்... நீ பால்ஸ் பார்த்ததில்லையா...?” என நம்ப முடியாமல் மீண்டும் கேட்க, அதற்கு மது “ம்ஹும்...” எனத் தலையசைத்தாள். சிறிது நேரம் மித்துவோடு விளையாடிக் கொண்டிருந்தவன் மதுவைத் திரும்பிப் பார்க்க...


அப்போதும் அவள் கண்களில் ஆச்சரியத்தோடு பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். திடீரெனத் தன் மேல் பட்ட நீர் துளிகளால் திரும்பிப் பார்த்தவள் அங்குத் தேவ் “கம்...” என்றபடியே அவளை எழுந்து வா என்பது போல் சைகை செய்ய... எதற்கு அழைக்கிறான் எனத் தெரியாமலேயே அவசரமாக மித்துவுக்கு ஒரு டவலை எடுத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியின் அருகே சென்றாள்.


அங்குச் சென்ற பிறகே தேவ்வின் கைகளில் மித்து இல்லாததும் நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் நீர் அங்கு முன்பு சிறு குளம் போலத் தேங்கி இருக்க, அதில் சிறு டக் வடிவ ஸ்விமிங் பிலோட்டிங் டியூப் உதவியோடு விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டாள்.


அதற்குள் “இந்தப் பக்கமா கால் வைத்து உள்ளே வா...” என மதுவையும் நீருக்குள் வருமாறு அழைத்தபடியே அவள் நிற்க இடம் விட்டு ஒதுங்கி நின்றான் தேவ்.


அப்போதே தன்னை எதற்காக அழைத்தான் என்பது புரிய “நானா... வேண்டாம்...” என அவசரமாகத் தலையசைத்த மதுவை கண்டு “ஏன்...?” எனக் கேட்க...


“இல்ல வேண்டாம்...” என மீண்டும் மது மறுக்க, “இவ்வளவு நேரமா அங்க உட்காந்து ஆசையா தானே பார்த்துட்டு இருந்தே... அப்புறம் என்ன...?” எனச் சிறு சிடுசிடுப்போடு கேட்டவனைக் கண்டவள் “நேக்கு பயமா இருக்கு...” எனத் தயங்கவும்,


“ஹே... இது ஒரிஜினல் இல்ல... ஒன்னும் ஆகாது...” என்று சற்று சலிப்போடு ‘உனக்கு விருப்பம் இருந்தா இறங்கு... இல்ல உன் விருப்பம்...’ என்பது போன்ற குரலில் பதில் அளித்துவிட்டு திரும்பி நின்று கொண்டான் தேவ்.


அதுவரை கூட நீரில் இறங்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் மதுவிற்கு இல்லை. அதன் அழகையும் அதில் இவர்கள் விளையாடுவதையும் மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்பொழுது தேவ் அழைக்கவும் தான் இறங்கி நனைய வேண்டும் என ஆசை எழுந்தது.


ஆனால் மனதில் இருக்கும் பயம் அதைத் தடுக்க... சேலையைச் சற்று தூக்கி சொருகியவள் காலை ஆசையோடு நீரில் வைப்பதும் பயத்தில் எடுப்பதுமாக நடனமாடிக் கொண்டிருக்க... சற்று நேரம் பொறுத்து பார்த்தவன், மது கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு நொடியில் அவள் இடையில் கை கொடுத்து அவளைத் தூக்கிக் கொண்டு சென்று நீருக்குள் நிறுத்தியிருந்தான்.


தேவ்வின் இந்த அதிரடியை கொஞ்சமும் எதிர்பார்த்திராத மது வேகமாக விழும் நீருக்குள் கொண்டு போய் நிறுத்தவும் சரியாக நிற்க முடியாமல் முகத்தில் வேகமாக விழுந்துக் கொண்டே இருக்கும் நீரால் ஏற்பட்ட மூச்சுத் திணறலோடு தேவ்வை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.


தேவ்விற்கும் மதுவின் நிலை புரிய சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் முகத்தில் வேகமாக விழும் நீரினாலே இப்படித் தடுமாறுகிறாள் எனப் புரிந்து மதுவை திருப்பி நிற்க வைத்து அவள் பின்னால் நின்றபடி தோளை இறுக பற்றிக் கொண்டான்.


இதில் ஓரளவு சமாளித்து நின்ற மதுவிற்கு அதன் பிறகு நீரின் மேலிருந்த பயமும் தயக்கமும் சுத்தமாக விலக... சிறு குழந்தையைப் போல அந்த நீரில் சந்தோஷித்து நின்றுக் கொண்டிருந்தாள்.


மது ஓரளவு நிலைப் பெற்று விட்டாள் எனத் தெரிந்த பிறகு தன் கைகளை விலக்கிக் கொண்டு தேவ் நகர முயல... தேவ் பற்றிக் கொண்டிருக்கிறான் என்ற தைரியத்தோடு இன்னும் சற்று நீருக்குள் தலையை நீட்டியவளுக்குப் பிடிமானமின்றிச் சறுக்கி விட முயல... மீண்டும் மதுவை பின்னாலிருந்து இடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்தபடி நின்று கொண்டான் தேவ்.


கால் சறுக்கியதால் எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்த மதுவும் அதைத் தடுத்து தேவ் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொள்ளவும் அவன் கைகளில் உணர்ந்த பாதுகாப்பினால் இன்னமும் தேவ்வை நெருங்கி நின்று கொண்டாள்.


இப்போது மதுவின் கவனம் முழுவதும் இதுவரை அனுபவித்திராத புது அனுபவமான இந்த நீர் வீழ்ச்சியிலும் அதோடு விளையாடுவதிலும் மட்டுமே இருக்க... ‘தன் பின்னால் நிற்பவன் யார்? தான் யார் கை அணைப்பில் இருக்கிறோம்?’ என எதுவும் அவள் நினைவில் வரவில்லை.


ஒரு சிறு குழந்தையின் குதூகலத்தோடு மீண்டும் நீரில் முகத்தை நீட்டி நீட்டி தேவ்வின் அணைப்பில் இருந்தபடியே குதூகக்களித்துக் கொண்டிருந்தாள் மது.


நேற்று முதல் தாங்க முடியாத வலியோடு தனி அறையில் தவித்துக் கொண்டிருந்தவனின் மனக்காயங்களுக்கு அவனை அறியாமலேயே மதுவின் அருகாமை மருந்தாக அமைய மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் தேவ்.


நீரில் விளையாடிக் கொண்டு இருப்பதால் சேலை அங்கங்கு விலகி உடலோடு ஒட்டி இருக்க... அதோடு இந்த இறுக்கமான அணைப்பும் சேர தன்னை அறியாமலேயே அவளின் வெற்றிடையில் அழுத்தமாகப் பதிந்து இருந்த கைகள் மேலும் முன்னேறியது.


முதலில் இதைச் சரியாகக் கவனிக்காத மதுவிற்குப் பிறகு அந்தக் கைகளின் அத்துமீறல் புரிய தொடங்கவும் அதிலிருந்து விலக மது நினைக்க... அதற்கு இம்மியளவும் வாய்ப்பு இல்லாதவாறு ஆக்டோபஸாகச் சுற்றி வளைத்திருந்தன தேவ்வின் இரு கரங்கள் மதுவை.


மதுவால் அந்த உடும்புப் பிடியிலிருந்து கொஞ்சமும் விலக முடியாமல் அவள் போராடிக் கொண்டிருக்க... மதுவின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவனின் இதழ்கள் செய்த மாயையினால் மதுவுமே அந்த மாய உலகிற்குள் இழுத்துச் செல்லப்பட்டாள்.


தேவ்வின் கைகளும் இதழ்களும் செய்த மாயங்களினால் தன்னை மறந்து நின்றிருந்த மதுவை, அவளின் காது மடலின் தன் மீசை உரச தேவ் உதிர்த்த ஒரு வார்த்தை நிகழ்காலத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தது.


“மாஷா...” என தன் கரகரப்பான குரலோடு மதுவின் காதில் உச்சரித்தபடி அழுந்த தன் முத்திரையைப் பதிக்கவும்... இதுவரை சஞ்சரித்துக் கொண்டிருந்த மாய உலகின் திரை விலகி மதுவிற்கு நிஜம் புரிய தொடங்கியது.


தேவ் தன்னை மறந்து நின்றிருந்த அந்தச் சில நொடி சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மது தன் முழுப் பலத்தையும் திரட்டி தேவ்வின் கைகளிலிருந்து விலகி அவனை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்.


வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தேவ்விற்க்கு மதுவின் இந்தச் செயலே உண்மை நிலையைப் புரிய வைக்க... தான் செய்யவிருந்த இமாலயத் தவறு கண் முன் மின்னி மறைய தன் தலையை அழுந்த கோதி தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர போராடியவன்,


தான் செய்யவிருந்த தவறை மன்னிக்க முடியாமல் “ஷி**...ஷி**...” என்றபடி அங்கிருந்த பாறைகளில் தன் கைகளை ஓங்கி குத்திக் கொண்டிருந்தான்.


அறைக்குள் ஓடி குளியலறைக்குள் புகுந்து கதவடைத்தவள் ஷவரை திறந்துவிட்டு அதனடியில் வெகு நேரம் நின்றும் தேவ் இறுக்கி அணைத்திருந்த கதகதப்பும் அவன் அருகாமையும் அவளிடம் ஒட்டிக் கொண்டது போன்ற ஓர் உணர்வில் இருந்து அவளால் வெளியில் வரவே முடியவில்லை.


சில நொடிகளே ஆனாலும் தேவ்வின் கரங்களில் நெகிழ்ந்திருந்ததை எண்ணி தன்னையே வெறுத்தவள், ஷவரில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீருக்குப் போட்டியாகத் தன் கண்களில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீரோடு வெகுநேரம் அப்படியே நின்றிருந்தாள்.


இருவருமே நடந்து முடிந்த மற்றும் நடக்கவிருந்த நிகழ்வுகளில் இருந்து வெளிவர நீருக்கடியில் நின்றிருக்க... தேவ்வின் கவனத்தைத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அவனின் அலைபேசி கலைத்தது.


முதலில் அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாதவன் தொடர்ந்து ஒலிக்கவே அதை எடுத்து காதுக்குக் கொடுத்தான் அந்தப் பக்கமிருந்து கதிர் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு கொண்டவன் அதற்கு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளாக என்னென்ன செய்ய வேண்டும் எனப் பதில் அளித்துவிட்டு மித்துவை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.


இங்கு மதுவும் வெகு நேரத்திற்குப் பிறகு தேவ்வின் மனதில் இவ்வளவு தூரம் வேறுன்றிப் போயிருக்கும் மாஷாவை அவன் பிரிவதற்குத் தானே காரணம் என எண்ணியவள், ஒருமுறை தெரியாமல் நடந்த தவறே போதும், இனி ஒரு தவறு தன்னால் நடக்கக் கூடாது என நினைத்து, அவர்கள் இருவரையும் எந்த எல்லைக்குச் சென்றாவது சேர்த்து வைக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு அங்கிருந்து வெளியேறினாள்.


ஆனால் அவளின் இந்த முடிவு தேவ்விடம் எத்தகைய எதிர்வினையை உண்டாக்கும் என யோசிக்கத் தவறினாள் மது.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 8 & 9


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 10

அவரவர் நினைவுகளில் மூழ்கி, அந்த நாள் முழுவதும் அப்படியே கழிந்தது. மறுநாள் தேவ்விற்கு நேற்று தான் நடந்துக் கொண்ட விதத்தில் மதுவின் முகத்தை பார்க்க, ஒரு வித தர்மசங்கடம் ஏற்பட அதை தவிர்க்க தொடங்கினான். ஆனால் அதற்கு கொஞ்சமும் அவசியம் ஏற்படாத வகையில் மதுவே தேவ்வின் முன் வருவதை முற்றிலும் தவிர்த்து கொண்டிருந்தாள்.


இதை மிகத் தாமதமாகவே தேவ் உணரத் தொடங்கினான். காலை முதல் எதற்காகவும் தன் முன் வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தவளை கண்டவன், தன் மனதில் எழுந்த சந்தேகம் சரிதானா என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள நினைத்து சில செயல்களைச் செய்ய தேவ்வின் சந்தேகம் நூறு சதவிகிதம் உண்மை என்பது தெரிய வந்தது.


தேவ்வினுடைய இன்றைய துன்பங்கள் அனைத்திற்கும் தானே காரணம் எனத் தன்னையே நொந்துக் கொண்வள் மீண்டும் அவன் முன் சென்று நின்று அந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் அவனின் துயரத்தையும் அதிகப்படுத்த விரும்பாமல் அவன் முன் செல்வதை தவிர்த்து தேவ்வின் மனதிற்கு அமைதி கொடுக்க நினைத்து செய்த செயல் அவளுக்கே எதிராகத் திரும்பியது.


நேற்று தான் மதுவிடம் நடந்து கொண்ட விதத்தினாலேயே அவள் இப்படி தன் முன் வருவதை தவிர்க்கிறாள் என புரிந்துக் கொண்ட தேவ்விற்கு ஏற்கனவே அவள் மேல் இருந்த கோபத்தோடு சேர்த்து தன்னுடைய அந்த செய்கைக்கும் அவளையே காரணமாக்கி குற்றம் சுமத்தியவன் இப்போது அவள் தன் கண் முன் வராமல் இருப்பதற்கும் சேர்த்து பொங்கிய கோபத்தோடு எப்போது வேணுமென்றாலும் சிதறும் எரிமலை போல் அமர்ந்திருக்க...


இது எதையும் அறியாத மதுவோ நேற்று மாலை முதல் தன் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு தானே எடுத்த ஒரு முடிவோடு எப்படிப் பேசி இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என மனதிற்குள் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டு இப்போது தனக்கு நேரம் சரியில்லை என்பதை அறியாமலேயே தேவ்வை நெருங்கினாள்.


கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேரத்துக்குப் பிறகு தன் முன் வந்து நிற்பவளை என்னவென்று கூட கேட்காமல் ஏன் ஏறிட்டும் பார்க்காமல் தன் கையிலிருந்த அலைபேசியில் கவனமாய் இருந்தவனை எப்படி அழைத்து பேச்சை துவங்குவது எனத் தெரியாமல் இரு கைகளையும் தவிப்போடு பிசைந்தபடி தேவ்வின் எதிரில் நின்று இருந்தாள் மது.


சிறிது நேரம் நின்று பார்த்தவள் தேவ் தன்னை நிமிர்ந்து பார்க்கும் வழி தெரியாமல் போக... “ம்க்கும்...” என மெல்லிய குரலில் கனைத்து தன் இருப்பை தெரியப்படுத்த முனைந்தாள்.


ஆனால் அதற்கும் தேவ்விடமிருந்து எந்த எதிரொலியும் வராது போக, ”நா... நான்... உங்களாண்ட... கொஞ்... கொஞ்சம் பேசணும்...” என திக்கி திணறி பேச... பதிலுக்கு தேவ் நிமிர்ந்து பார்த்த ஒரு கூரிய பார்வையே, ‘என்ன விஷயம்..’ என்பதை கேட்காமல் கேட்டது.


உங்க... காத... என்னால நீங்கோ... மாஷ்... அவாளோட... சேராம... பிரிஞ்சி... அதனால... நீங்க மத்தவா...” என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தான் சொல்ல வந்ததை எப்படி சொல்வது என தெரியாமல் தடுமாறியபடி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள் மது.


கண்கள் சுருங்கப் பார்த்தவன் “நாம இப்போ அன் ஸ்க்ரம்பில் விளையாடிட்டு இருக்கோமா...” என எரிச்சலும் கிண்டலுமாக கேட்க,


ஏற்கனவே அத்தனை முறை ஒத்திகை பார்த்தும் சொல்ல வந்ததை எப்படி சொல்வது எனப் புரியாமல் குழம்பி கொண்டிருந்தவளுக்கு தேவ் சொல்ல வருவது புரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.


“வளவளன்னு இழுக்காமல் பட்டன்னு சொல்ல வந்ததை சொல்லு...” என பல்லைக் கடித்தபடி தேவ் கூறவும்... எப்போதுமே தேவ்வின் முன்பு நின்று பேச பயப்படுபவள் இல்லாத தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி கொண்டு வந்து பேச முயன்று கொண்டிருக்க...


இப்போது அவனின் இந்த கோபம் மதுவிற்கு பயத்தையும் படபடப்பையும் உண்டு பண்ண வியர்த்து வழிய கைகால்கள் லேசாக நடுக்கம் எடுக்க... தேவ் சொன்னபடியே பட்டென கேட்டுவிட்டாள்.


“நீங்கோ என்ன விவாகரத்து செஞ்சிட்டு... அவாளையே கல்யாணம் கட்டிகோங்கோ...” என மது உச்சரித்து முடித்த அடுத்த நொடி, தேவ்வின் கைகள் மதுவின் கழுத்தை நெறித்து இருந்தது.


விழிகள் பிதுங்கி நிலைகுத்தியிருக்க தேவ்வின் கோபத்திலும் கழுத்து நெறி பட்டதால் ஏற்பட்ட வலியிலும் கண்கள் கலங்க பயத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளை “கம் அகெய்ன்...” என்ற தேவ்வின் கர்ஜனை குரல் உடலை நடுங்க வைத்தது.


“சொல்லு இப்போ சொல்லு என்ன சொன்னே...” என முகம் சிவக்க ஆத்திரத்தில் கொந்தளித்தவனை கண்டு பயம் எழுந்தாலும், எப்படியும் இதை பற்றி அவனிடம் பேசித் தானே ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்ற...


“நேக்கு... நேக்கு... நல்லது... செய்ய போய்... தானே... உங்களுக்கு இந்த கஷ்டம்... என்னை... காப்பாற்ற தானே... இந்த கல்யாணம்... இல்லைன்னா... உங்க மனசுக்கு பிடிச்சவாளோட சந்தோஷமா வாழ்ந்து... இருப்பேள்... இல்லையா...” என கழுத்தில் ஏற்பட்ட வலியோடு திக்கித் திணறி மது உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைக்கும் தேவ்வின் கையின் அழுத்தம் கூடி கொண்டே சென்றது.


ஆனால் அதையும் பொருட்படுத்தாது மீண்டும் “நான் உங்க வாழ்க்கையில் குறுக்கே வர விரும்பல... உங்க சந்தோஷத்துக்கு தடையா இருக்கவும் மாட்டேன்... நீங்க எனக்கு செய்தது மிகப்பெரிய உதவி... அதுவே என் வாழ்நாள் முழுமைக்கும் போதும்... என்னை விவாகரத்து செஞ்சிட்டு... உங்க மனசு பூரா நிரம்பி இருக்க உங்க மாஷாவோட எப்பவும் சந்தோஷமா இருக்கணும்...” எனவும்


அதுவரை கண்கள் சிவக்க ஆத்திரத்தின் உச்சத்தில் வெறியோடு மதுவின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த தேவ்வின் கைகள், கடைசியாக அவள் உதிர்த்த பெயரில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியது.


மதுவின் கழுத்தில் இருந்து கைகளை விலக்கிக் கொண்டவன் அவள் கண்களை சற்று நேரம் ஊடுருவிப் பார்க்க... அந்த பார்வை கண்களின் வழியே எதையோ தேடித் தெரிந்துக் கொள்ள விழைந்தது.


தேவ்வின் அந்தப் பார்வைக்கு அர்த்தம் விளங்காமல் கண்கள் நிறைய பயத்தை மட்டும் தேக்கி மது அவனைப் பார்த்துக் கொண்டிருக்க... சட்டென மதுவை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.


இரண்டு மணி நேரம் சென்ற இருக்க... மது தேவ் தன்னை உதறி விட்டுச் சென்ற இடத்திலேயே கால்களை குறுக்கிக் கொண்டு அப்படியே அமர்ந்து இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காய்ந்து தன் தடத்தை பதித்திருந்தது.


அருகிலிருந்த சோபாவில் உறங்கி கொண்டிருந்த மித்துவை விறு விறுவென வந்து தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கைகளில் சில பைகளோடு தேவ் வெளி வாசலை நோக்கி நடக்க...


அப்போதே சுற்றுப்புறம் உரைத்து வாசலை நோக்கிச் செல்லும் அவர்களை கண்டவளுக்கு தாங்கள் கொண்டு வந்த பைகளோடு தேவ் செல்வது புரிய... இங்கிருந்து கிளம்புகிறான் என்பது தெளிவாகிய நிமிடம் தன் மீது அளவில்லாத கோபத்தில் தேவ் இருக்கிறான் என்பது ஐயமின்றி தெரிந்து வைத்திருந்தவள் எங்கே விட்டு விட்டு சென்று விடுவாரோ என பயந்து பின்னாலேயே ஓடினாள்.


மது காரின் அருகில் செல்கையில் தன் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் உறக்கம் கலையாமல் இருக்க... இருக்கையை சாய்த்து மித்துவை படுக்க வைத்துவிட்டு சீட் பெல்டையும் அணிவித்து இருந்தவன் காரை ஸ்டார்ட் செய்வதற்கு வாகாக அமர்ந்திருந்தான்.


சட்டென்று மித்துவை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அமர்வதற்கு வழி இல்லாமல் போக, என்ன செய்வது என ஒரு நொடி யோசித்தவள் தேவ் காரை ஸ்டார்ட் செய்யவும் வண்டி நகர்வதற்குள் பின் கதவை திறந்து ஏறிக் கொண்டாள்.


பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அப்படி ஒரு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தன்னை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளிவிட்டு செல்வதைப் போல தேவ் நடந்து கொண்டதை அந்த மங்கையின் மனது அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள மறுத்தது.


ஏதேதோ நினைவுகளில் மூழ்கி அமர்ந்திருந்தவள் நினைவுகள் கலைந்து இவர்கள் செல்வதை கண்டு பின்னால் ஓடி வரவில்லை என்றால் இன்று இந்த நிமிடம் தன் நிலை என்ன...?! என எண்ணிப் பார்க்கக் கூட முடியாமல் பயம் மனதை அழுத்தியது.


இது எந்த இடம் எங்கு வந்திருக்கிறோம் இங்கிருந்து வீட்டிற்கு எப்படி செல்வது என எதுவுமே தெரியாத நிலையில் இந்த இரவு நேரத்தில் என்ன செய்திருப்போம் என எண்ணியவளுக்கு தன் நிலையை நினைத்து அடக்க மாட்டாமல் அழுகை பொங்கியது.


மது பின்னிருக்கையில் அழுதுக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டாலும் அவளை திரும்பிப் பார்க்கவோ இல்லை அழுகையை நிறுத்தவோ எந்த வகையிலும் முயற்சி செய்யாமல் தன் போக்கில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் மதுவை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை... அது அப்போது மட்டுமில்லாமல் தொடர்ந்து வந்த நாளிலும் தொடர்ந்தது.


பத்து நாட்களுக்கு மேல் சென்றிருக்க மதுவின் கைகளால் பரிமாறப்படும் உணவு முதற்கொண்டு தவிர்த்து விட்டு தானே எடுத்து வைத்து கொள்பவன் அவள் தனக்காக செய்யும் எந்த ஒரு செயலையும் ஏற்றுக் கொள்ளாமல் அதை ஒதுக்கி தள்ளினான்.


மதுவுமே முதல் இரண்டு மூன்று நாட்கள், தான் இங்கு வழக்கமாக தேவ்விற்கு செய்யும் பணிகளை செய்ய... அவற்றை தேவ் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் அவளும் ஒதுங்கிக் கொண்டாள்.


இந்த மௌன நாடகம் அனைத்தையும் இவர்கள் திரும்பி வந்தது முதலே கவனித்துக் கொண்டு தான் இருந்தார் லலிதா. எப்போதுமே இருவரும் அந்நியோன்னியமாக காட்டிக் கொண்டோ, ஒட்டி உரசி கொஞ்சி கொண்டோ இருந்ததில்லை என்றாலும் அவர்களின் இடையே ஒரு இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டுதான் இருந்தது.


அவற்றை அவர்கள் முயன்று இவர் முன் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது லலிதாவிற்கு தெரியாததால் இயல்பான வாழ்க்கையில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டிருந்தார்.


அன்று தேவ் கிளம்பும் போது கூட அவனின் துக்கத்தின் அளவை தெரிந்து வைத்திருந்ததாலேயே அதற்கு மருந்தாக மதுவும் மித்துவும் இருக்கக்கூடும் என எண்ணி அவர்களை உடன் அனுப்பி வைத்தார்.


ஆனால் அதுவே பிரச்சினைக்கு வழிவகுக்கும் என அவர் கொஞ்சமும் நினைக்கக் கூட இல்லை. இப்போதும் கூட என்ன பிரச்சனை நடந்தது இருவருக்குள்ளும் என்று அவருக்கு துளியும் தெரியாது...!!! இருந்தாலும் சென்ற இடத்தில் ஏதோ தவறாக நடந்து இருக்கிறது...!!! அது இருவருக்கு நடுவிலும் ஒரு பெரிய திரையாக விழுந்து விட்டது என்பதை புரிந்து வைத்திருந்தவர் அதை எப்படி சரி படுத்த என தெரியாமல் கவலையோடு அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.


இப்படியே மேலும் பத்து நாட்கள் செல்ல இன்னும் மூன்று நாட்களில் ஒரு வாரதொழில் முறை பயணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டியிருப்பதை லலிதாவிற்கு தெரியப்படுத்தியவன்,


“மா... அடுத்த வாரம் உங்களுக்கு செக் அப் இருக்கு... அப்போ நான் இங்கே இருக்க மாட்டேன்... உங்க அப்பாயின்மெண்ட் நாளைக்கு மாற்றி இருக்கேன்...” எனவும்


“ம்..” என தலை அசைத்தவரின் முகத்தில் இருந்த கவலை ரேகையை கண்டு “என்னாச்சு மா...” என்று அவர் கைகளை பற்றிக் கொண்டு கவலையோடு கேட்டவனுக்கு “ஒண்ணும் இல்லை...” என்பது போல தலையைசைத்து பதிலளித்தவரை நம்பாமல் பார்த்தவன்


“சொல்லுங்கம்மா.. உடம்பு முடியலையா என்ன பண்ணுது...?” என மேலும் அவரை நெருங்கி அமர்ந்து வினவியவனை பார்த்தவர் “உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா மனசு தான்...” என நிறுத்த,


“என்னமா... என்ன பிரச்சினை...” என பதறியவனுக்கு “மறுபடியும் ஒரு வாரம் என் மருமகளைம் குட்டி கண்ணனையும் பார்க்க முடியாது இல்லை அதுதான்...” என லலிதா பதிலளித்தார்.


“ஏன்...? ஏன் பார்க்க முடியாது...?” என புரியாமல் படபடப்பாக கேட்டவனுக்கு பின்பே அவர் சொல்ல வருவது புரியவும் மறுப்பாக தலையசைத்தபடி “இல்லை....” என ஏதோ சொல்ல தொடங்கியவனை முடிக்க விடாமல் லலிதா


“எப்படியும் பொண்டாட்டியையும் பிள்ளையும் பிரிஞ்சு உன்னால ஒரு வாரம் இருக்க முடியாது... அவங்களை கூட்டிக்கிட்டு தானே போவே...” என பதில் அளிக்க...


சில நொடிகள் எடுத்து தன்னை சரி செய்து கொண்ட தேவ் “இல்லமா... நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணும் போது அவங்க இங்கே உங்க கூடவே இருக்கட்டும்... எனக்கு பிரச்சினை இல்லை... நான் ஒரு வாரத்தில் வந்துருவேன்...” என்று சமாளிக்க பார்க்க...


லலிதாவோ “நான் வயசானவ பா... நான் இப்படித்தான் சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் நினைச்சு கவலைப்பட்டுட்டே இருப்பேன்... அதுக்காக நீ உன் குடும்பத்தை இங்கே விட்டுட்டு தனியா போனா... அதை நினைச்சு இன்னும் அதிகமாக கவலைப்படுவேன்... என்னாலே என் பையன் தனியா கஷ்டப்படுறானேன்னு... நீ எனக்காக எல்லாம் அவங்களை விட்டுட்டு போகாதே உன்கூட கூட்டிட்டு போ... உங்க சந்தோஷம் தான் விக்ரமா என்னோட சந்தோஷமும்...” என முடித்துக் கொள்ள ‘இதற்கு மேல் என்ன சொல்லி மறுப்பது...’ என தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தான் தேவ்.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 11

தேவ் தன் குடும்பத்தோடு சிங்கப்பூர் வந்து இறங்கி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. காலையில் எழுந்து தன் பணிகளைக் கவனிக்கச் சென்றுவிடுபவன் மாலையில் வந்து இருவரையும் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு இடத்திற்கு வெளியில் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.


புதிய இடம் புதிய மனிதர்கள் அங்கு இருக்கும் சிறு சிறு விஷயங்களைக் கூட மித்து வெகுவாக ரசித்துக் குதுகளித்துக் கொண்டிருக்க... மதுவோ வழக்கம் போலத் தன் எந்த உணர்வுகளையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மித்துவை கவனித்துக் கொண்டு இருந்தாள்.


இன்னும் இருவருக்கும் இடையில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல்தான் இருந்தது. அவரவர் கடமைகளை அவரவர் சரியாகச் செய்து கொண்டு இருக்க... லலிதா நினைத்தது போல் இருவருக்கும் இடையில் வெறும் திரை விழாமல் மிகப்பெரிய பள்ளமே விழத் தொடங்கியிருந்தது.


பகல் வேளைகளில் அறைக்குள்ளேயே நாள் முழுவதும் அடைந்து கிடைப்பது மதுவிற்கு ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. அதிகமாக வெளியில் எங்கும் சிறுவயது முதலே சென்று பழக்கம் இல்லாதவள் என்பதால் இவ்வளவு பெரிய நட்சத்திர ஓட்டலில் சூட் ரூமில் அதை அறை என்று சொல்வதை விட ஒரு சிறிய பங்களா எனச் சொல்வது போல இருந்த இடத்தில் தனியே இருப்பது மதுவிற்கு அத்தனை கஷ்டமாக ஒன்றுமில்லை.


அதிலும் மதுவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இங்கு வந்ததிலிருந்து என்னவென்றால் அவர்கள் தங்கியிருக்கும் பத்தாவது தளத்தின் அரைப் பால்கனியில் இருந்து கீழே குள்ள மனிதர்களைப் போல உலாவுபவர்களைப் பார்ப்பதும் அவர்களின் நடை உடை பாவனைகளைக் கவனிப்பதும் தான்.


அன்று வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமே வந்த தேவ் இருவரையும் அங்கு மிகவும் பிரபலமான இடமான லிட்டில் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றான்.


இங்கு வந்ததிலிருந்து அவர்கள் பேசும் மொழிகளும் அவர்கள் உச்சரிப்பையும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த மதுவிற்கு இங்கு அவ்வப்போது கேட்ட தமிழ் குரல்கள் மகிழ்ச்சியைத் தந்தது.


அங்கிருந்த ஒவ்வொரு கடைகளையும், அவை கண்ணைக் கவரும் நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த விதத்தையும் விழி விரிய பார்த்தபடியே தேவ்வை பின்தொடர்ந்து கொண்டிருந்தவளுக்குப் பார்ப்பது அனைத்துமே புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது .


தேவ் மித்துவை தூக்கி வைத்தபடியே ஒவ்வொரு கடையிலும் சிலவற்றைக் காண்பித்து அதைப் பற்றிப் பேசிய கொண்டே முன்னால் சென்று கொண்டிருக்க... மதுவும் ஒரு சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டபடியே அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள்.


எதிர்பாராதவிதமாக அங்கு ஒரு இந்துமதக் கோவிலை காணவும் ஆச்சரியத்தோடு மதுவின் கால்கள் அங்கேயே தயங்கி நிற்க... அந்தக் கோவிலை கடந்து சென்ற தேவ் ஏதோ தோன்ற பின்னால் திரும்பிப் பார்த்தான். மது தயக்கத்தோடு தன்னையும் கோவிலையும் மாறி மாறி பார்த்தபடி நிற்பது தெரியவும் ‘சென்று வா...’ என்பது போல் அங்கு ஒரு ஓரமாக நின்றுக் கொண்டான்.


தேவ்வின் சம்மதம் கிடைத்த உடன் முகமெங்கும் சந்தோஷம் பொங்க ஒரு குதூகலத்தோடு உள்ளே நுழைய போனவள், பின் தன் நடையை நிறுத்தி ஒரு சிறு ஓட்டத்தோடு தேவ்வின் அருகில் வந்து மித்துவை வாங்கிக் கொண்டு மீண்டும் அதே ஓட்டத்தோடு கோவிலுக்குள் நுழைந்தாள்.


மறந்தும் அவள் தேவ்வை கோவிலுக்குள் அழைக்கவில்லை.... இத்தனை நாள் பழக்கத்தில் தேவ்விற்குக் கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதது நன்கு தெரிந்திருந்தும் அந்தத் தவறை செய்ய மதுவிற்குத் தைரியம் கிடையாது.


மது உள்ளே நுழைந்தது வீரமாகாளியம்மன் கோவில் அன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும் மாலை நேரம் என்பதாலும் கணிசமாகச் சொல்லிக் கொள்ளும் அளவில் கூட்டம் இருந்தது.


ஆனால் தள்ளு முள்ளு எதுவும் இன்றி அமைதியாக அழகாக நின்று தரிசித்துக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் தானும் சென்று நின்று அம்மனை தரிசித்து முடித்தாள் மது.


ஒரு மனநிறைவோடு வெளியில் வந்தவளை கண்டவன் மீண்டும் மித்துவை தன் கைகளில் ஏந்திக் கொண்டு தேவ் முன்னே நடக்க... வழக்கம் போல அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டு இருந்தாள் மது.


ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு அங்கு மற்றும் ஒரு இந்துக் கோயில் தென்படவும், மது தேவ்வை ஒரு எதிர்பார்ப்போடு பார்க்க...


“மித்துப் பாய் நாம இங்க ஷேத்ராடனம் வரலைன்னு உங்க அம்மா கிட்ட சொல்லிடு...” என ஒரு சலிப்போடு சொன்னவன் தன் நடையைத் தொடராது நிறுத்தி மித்துவை இறக்கி விட...


அதுவே தேவ் தனக்குக் கொடுத்த சம்மதம் எனப் புரிய, மது சீனிவாச பெருமாள் கோவிலுக்குள் மித்துவை தூக்கிக் கொண்டு சிட்டாகப் பறந்து விட்டாள்.


அதன் பிறகு எந்தத் தடையும் இல்லாமல் அன்றைய நாள் கழிய... இரவு கவிழ தொடங்கிய வேளையில் நடந்து சென்று கொண்டிருந்த மதுவின் காதுகளில் கிள்ளை தமிழில் ஒரு பெண் பேசுவது கேட்கவும் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பியவள் அங்கு ஒரு சீனப்பெண் அழகிய சேலை உடுத்தி அவளின் பாப் செய்யப்பட்ட தலையில் மல்லிகை சரத்தை தொங்கவிட்டபடி ஜிமிக்கி கொலுசு கண்ணாடி வளையல்கள் அணிந்துக் கொண்டு வட்ட வடிவ பெரிய பொட்டோடு நின்று பேசிக் கொண்டிருப்பதைக் காணவும் திறந்த வாய் மூடாமல் அதிசயத்தோடு அப்படியே சில நிமிடம் நின்று விட்டாள்.


இன்று இந்தியப் பெண்களே கூட இப்படிப் பார்த்து பார்த்துத் தன்னை இந்திய முறைப்படி அலங்கரித்துக் கொள்வது அறவே தவிர்த்து வெறுக்கும் நிலையில் ஒரு வேற்று நாட்டு பெண்ணின் இந்த அலங்காரமும் முயன்று தமிழில் பேசிக் கொண்டிருந்ததையும் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.


அதை ரசித்துக் கொண்டு நின்றிருந்தவள் பின் தன் பார்வையைத் திருப்ப... தனக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த தேவ்வை அங்குக் காணவில்லை.


தேவ் கண்களில் படவில்லை எனவும் பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றியவள் தன்னை விட்டு விட்டு முன்னால் வெகுதூரம் சென்ற இருக்கக்கூடும் எனத் தோன்ற தன்னால் முடிந்த அளவு முன்னே ஓடிச் சென்று பார்த்தும் தேவ்வை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.


தெரியாத ஊரில் புரியாத மொழி பேசும் மக்களுக்கு இடையே என்ன செய்வது எங்குச் சென்று தேடுவது எப்படி மற்றவர்களிடம் கேட்பது என்று கூடத் தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல மலங்க மலங்க விழித்தபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அந்த இடங்களைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் மது.


ஆனால் மது நினைப்பது போலத் தேவ் அவளை விட்டு விட்டு வெகு தூரம் எல்லாம் செல்லவில்லை... அவள் நின்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டு இருந்த இடத்திற்கு மிக அருகில் இருந்த ஒரு கடையில் ஒரு ரோபோ பொம்மையைக் கை காட்டி மித்துக் கேட்கவும் அதை வாங்குவதற்காகக் கடைக்கு உள்ளே நுழைந்திருந்தான்.


உள்ளே நுழைவதற்கு முன்பு கூட அங்கு நின்றுக் கொண்டிருந்த மதுவை திரும்பி பார்த்துவிட்டே சென்றிருக்க... ஆனால் அவன் வெளியில் வருவதற்குள் மதுவே அங்கு இருந்து வெகுதூரம் சென்றிருந்தாள்.


கடையிலிருந்து வெளியே வந்து மதுவை அங்குக் காணாமல் தேடி எங்குப் போனாள் எனப் புரியாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்காவது இருக்கிறாளா...? எனச் சுற்றுப்புறத்தை அலசியபடியே தேவ் நடந்து கொண்டிருந்தான்.


மதுவும் அதே போல இன்னொரு பக்கம் இவர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்து இருந்தது. இரவு மணி பத்தை நெருங்கி கொண்டிருக்க, தேவ்விற்கு இவளை எங்குப் போய்த் தேடுவது எங்குச் சென்றிருப்பாள் என ஒன்றுமே புரியாமல் ஒரு இடத்தையும் விடாமல் முயன்றவரை மதுவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான்.


ஆனால் மதுவோ முதல் ஒரு மணி நேரத்திற்குத் தன் தவறாலேயே தேவ்வை தவிர விட்டதாக எண்ணி முனைப்போடு தேடியவள் அதன் பிறகு தன் மேல் உள்ள கோபத்தில் தன்னை இங்குக் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்று இருப்பானோ...?! எனத் தோன்றவும் தேடுதலின் தீவிரத்தை குறைத்துக் கொண்டு அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.


நேரம் செல்லச் செல்ல அந்த இரவு பொழுதில் தன்னைக் கடந்து செல்பவரின் பார்வைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க... பயத்தில் மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக நடுங்கியபடியே தான் போட்டிருந்த சுடிதாரின் மேல் துணியினைக் கொண்டு தன்னைப் போர்த்தியபடி நின்று கொண்டிருந்தாள் மது.


யாரிடம் சென்று உதவி கேட்பது என்னவென்று சொல்லி உதவி கேட்பது என எதுவுமே அந்த நிமிடம் அவளுக்குப் புரியவில்லை. தெரியாத நாட்டில் யாரை நம்பி உதவி கோருவது என்பதை விட என்னவென்று சொல்லி தனக்கு உதவச் சொல்வது என்றே அந்த நிமிடம் மதுவிற்குத் தெரியவில்லை.


தேவ்வை மட்டுமே நம்பி வந்திருந்தவளுக்கு அவர்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் முதற்கொண்டு எதுவுமே தெரியாமல் போக... இவ்வளவு நேரமாகியும் தன்னைத் தேடி தேவ் வராததினால் நிஜமாகவே தன்னை இங்கு விட்டுவிட்டு சென்றுவிட்டான் என எண்ணி கை கால்கள் உதறல் எடுக்கக் கண்ணீர் வழியும் கண்களோடு நின்று கொண்டிருந்தாள்.


கிட்டத்தட்ட அந்தப் பகுதி முழுவதையும் அலசி ஆராய்ந்து மதுவை காணாமல் ‘இனி எங்குச் சென்று தேடுவது...’ என்ற யோசனையோடு உறங்கும் மித்துவை தோளோடு அணைத்தபடி நின்றுக் கொண்டிருந்த தேவ்வின் கவனம் எதிர்ப்புற கடை வாசலில் பதிய...


அங்கு மலங்க மலங்க விழித்தபடி அன்னையைத் தொலைத்த குழந்தையைப் போல் நின்று கொண்டிருந்த மது கண்ணில்பட்டாள். அவளைக் கண்ட நொடி சாலையைக் கடந்து அவளை நெருங்க தேவ் முயல...


கண்களைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்த மது தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த தேவ்வை கண்டாள். அடுத்த நொடி “ஏன்னா...” என்ற அழைப்போடு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக ஒரே பாய்ச்சலில் ஓடிச் சென்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.


மதுவின் அழைப்பில் உடல் விறைத்தாலும் அவளின் இந்தச் செய்கையே எந்த அளவிற்கு அவள் பயந்து இருக்கிறாள் என்பதைத் தேவ்விற்கு உணர்த்த... உடல் வெடவெடவென நடுங்க தன்னை இறுக அணைத்து இருந்தவளின் தோளில் கையைப் போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.


வெகுநேரம் சென்ற பிறகும் மதுவின் உடலின் நடுக்கமும் அடங்கவில்லை தேவ்விடம் இருந்தும் விலகவுமில்லை. அப்படியே எத்தனை நேரம் இருந்தாள் என்று கூட அவளுக்கு உணர்வு இல்லை. சிறிது நேரம் பார்த்த தேவ் மதுவை அப்படியே அணைத்து பிடித்தபடி அங்கிருந்து நகர்த்தித் தங்கள் அறைக்குக் கொண்டு வந்து சேர்த்தான்.


தேவ்வை கண்ட அந்த நொடி ஓடிவந்து அணைத்துக் கொண்டவள் அதன்பிறகு நூலிழை அளவு கூட அவனிடமிருந்து விலகாமல் வேறு எந்த நினைவும் இல்லாமல் இருந்தவளைக் கண்டு எந்த அளவு பயந்து இருக்கிறாள் என்று புரிய மெதுவாக அவள் முதுகை தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்தவன் “ஈஸி... ஈஸி... ஒண்ணும் இல்லை...” என அவளைத் தேற்ற முயன்று கொண்டு இருந்தான்.


ஆனால் மதுவோ மேலும் மேலும் இறுக அணைத்துக் கொண்டு தேவ்வின் மார்பிலேயே புதைந்து கொண்டாள். வெகுநேரம் மதுவை சமாதானம் செய்ய எடுத்த எந்த முயற்சிகளும் பலனளிக்காமல் போக...


தன்னை இறுக அணைத்துக் கொண்டே இருந்தவளை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத தேவ் தன்னிடமிருந்து மதுவை பிரித்து அருகில் இருந்த படுக்கையில் தள்ள...


அதில் சென்று விழுந்தவள் மலங்க மலங்க எதுவும் புரியாமல் விழிக்கவும், “இப்போ என்ன... நீ பயந்துட்ட அதனாலே என்னைக் கிட்டிபிடிச்சுக்கிட்ட... இவ்வளவு நேரம் ஆகியும் உனக்குப் பயம் போகலை... உன்னைக் கட்டி பிடிச்சுச் சமாதானம் செய்தபடியே நான் அடுத்தக் கட்டத்திற்குப் போகணுமா...?” எனக் அவள் விழுந்திருந்த இடத்தைக் கண்களால் சுட்டி காட்டியபடியே சற்று நக்கலாகக் கேட்கவும்,


அதுவரை தன்னை எதற்காகப் பிடித்துத் தள்ளினான் எனப் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவள் இப்போது தேவ் சொல்ல வருவது புரியவும் கையெடுத்துக் கும்பிட்டு இப்போது இருக்கும் மனநிலையில் பேச வார்த்தைகள் வராமல் தடுமாற... அவளைச் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பால்கனி கதவை திறந்துக் கொண்டு சென்று விட்டான் தேவ்.


சில நிமிடங்கள் எடுத்துத் தன்னைச் சரி செய்து கொண்ட மது தான் அவ்வாறு சென்ற தேவ்வை அனைத்ததும் தவறு தான் எனப் புரிய... அதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்க நினைத்து பால்கனியை நோக்கிச் சென்றாள்.


எங்கோ வெறித்துக் கொண்டு பால்கனி பிடியை இறுகப் பற்றியபடி நின்று கொண்டிருந்தவனின் கவனம் இங்கு இல்லை என்பதை அறிந்தவள் எப்படி அழைத்துத் தேவ்வின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவது எனத் தெரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க...


சத்தமெழுப்பிக் கூடக் கவனத்தைக் கலைக்கும் வகையில் அங்கு எந்தப் பொருளும் இல்லாமல் போகத் தயக்கத்தோடு “தேவ்...” என மெல்லிய குரலில் அருகில் சென்று அழைத்தாள். சார் என்றோ ஏன்னா என்றோ அழைத்தால் அவனுக்கு பிடிக்காது என்பதாலேயே வெகுவாக முயன்று இப்படி அழைக்க ஆனால் பாவம் அதுவே அவளுக்கு வினையாகி போனது.


அந்தக் குரலில் திரும்பிவனின் கண்கள் கனலெனச் சிவந்திருக்க... மதுவின் முகவாயை இறுக பற்றி அருகில் இருந்த கண்ணாடி கதவில் சாய்த்தவன், “ஹௌவ் டேர் யூ... என்ன சொன்ன...? தேவ்வா...!? எங்கே இன்னொரு முறை சொல்லு பார்ப்போம்...!!! இன்னொரு முறை அந்த வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது... இந்தத் தேவ்வோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும்...” என உறுமவும் மருண்ட விழிகளில் பயத்தைத் தேக்கி தேவ்வை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதுவிற்குத் தன் தாடையை அழுத்தி கொண்டிருந்த தேவ்வின் கைகள் கொடுத்த அழுத்தம் கண்ணீரை வரவழைத்தது.


தன் பார்வையைத் திருப்பியவள் மேலும் அதிர்ந்து தன் மொத்த பலத்தையும் திரட்டி தேவ்வைத் தள்ளி விட... அடுத்த நொடியே சைலன்சர் பொருத்திய துப்பாக்கி குண்டு மதுவின் நெஞ்சில் பாய்ந்தது.



திடீரென மது தன்னைத் தள்ளிவிடவும் கதவில் மோதி நின்றவன் ‘எத்தனை திமிர் இருந்தால் என்னைப் பிடித்துத் தள்ளி இருப்பே..’ என்ற ஆத்திரத்தோடு அவள் பக்கம் திரும்ப... அங்கு ரத்த வெள்ளத்தில் சரிந்துக் கொண்டிருந்தாள் மது. கீழே விழுபவளை “மாஷா...” என்று அலறலோடு தன் கைகளில் தாங்கி இருந்தான் தேவ்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 10 & 11


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 12

குண்டடிபட்டு சாய்பவளை கண்டு அதிர்ந்து தரையில் விழும் முன் மதுவைத் தன் கைகளில் தாங்கிய தேவ்விற்குத் தானே அந்தக் குண்டை நெஞ்சில் தாங்கி இருந்தால் கூட இந்த அளவு வலித்து இருக்குமோ என்னவோ ஆனால் தன் உயிரானவளின் உயிரை பறிக்கும் அளவிற்கான இந்தக் குண்டு அவள் நெஞ்சை துளைத்துக் கொண்டு சென்றதை கண்டு நெஞ்சம் வலியில் துடித்தது.


முதலில் ரத்தவெள்ளத்தில் கிடந்தவளை கண்டவனுக்கு என்ன நிகழ்ந்தது என்று கூடப் புரியவில்லை. எதற்காக மது தன்னைத் தள்ளிவிட்டாள் என்று கூடப் புரியாமலே கோபத்தோடு திரும்பியவன் கண்டது மது ரத்தவெள்ளத்தில் சரிவதை மட்டுமே...


தன் கைகளில் உணர்வின்றிக் கிடந்தவளின் நெஞ்சுப் பகுதியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ரத்தத்தைக் கண்ட பிறகே மது சுடப்பட்டு இருக்கிறாள் என அறிந்து தன் பார்வையைத் திருப்ப... பக்கத்து அறை பால்கனியிலிருந்து ஒருவன் தன்னைக் குறி வைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.


நொடியில் சுதாரித்தவன் சட்டென்று சுழன்று சென்று அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சுடுவதற்கு முன் கைகளை நோக்கி விட்டெறிந்தான்.


அதில் தேவ்விற்கு வைத்த குறி மட்டுமின்றிக் கையில் இருந்த துப்பாக்கியும் தவறி கீழே விழுந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் தவறி கீழே விழுந்த துப்பாக்கியை பிடிக்க முயன்றவனும் பால்கனியில் இருந்து விழ...


கடைசி நொடியில் பால்கனி கம்பிகளைப் பற்றிக் கொண்டு கீழே விழாமல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டவன் அங்கிருந்து ஏற முடியாமல் கம்பிகளைப் பிடித்தபடியே தொங்கிக் கொண்டிருந்தான்.


அவன் கரண் ரத்தோர்...


சிங்கப்பூரில் தொழில் சாம்ராஜ்யத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தவன், சென்ற ஆறு மாதமாகவே சில தொழில்களில் தொடர்ந்து தேவ்வினால் தொடர்ந்து தோல்விகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க...


தேவ்வின் மேல் கொலைவெறியோடு இருந்தவனுக்கு இப்பொழுது இங்கு நடந்த மிகப்பெரிய டீலிங்கிலும் தேவ்வால் தோல்வியே கிடைத்தது. தமிழ் தொழிலை கையில் எடுத்த கடந்த ஆறு வருடங்களில் தோல்வி என்பதையே சந்திக்காமல் ஏறுமுகமாகவே சென்று கொண்டிருந்தவனின் பாதையில் முதன் முதலில் தோல்வி என்பதை அறிமுகப்படுத்தியவன் தேவ் என்பதனால் அந்தக் கோபத்தோடு இருந்தவனுக்கு இன்று தேவ் கைப்பற்றிய டீலிங் மிகப்பெரிய தன்மான பிரச்சனையாக மாறியது.


ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய பிறகு இதை வைத்தே பல மனக் கோட்டைகளைக் கட்டி இருந்தவனுக்கு அத்தனையும் இடிந்து தூள் தூளானது மட்டுமின்றிக் கரணின் காதுபடவே ஒரு சிலர் பேசிய “இனி கரண் அவ்வளவுதான்... அவனால் மீண்டும் அந்த முதல் இடத்திற்கு வர முடியாது...” என்பது போன்ற வார்த்தைகள் தன்மானத்தைக் கிளறி தேவ்வை கொன்று புதைக்கும் அளவுக்கான வெறியை தூண்ட... அதை உடனே செயல்படுத்த எண்ணியே இங்கு வந்திருந்தான்.


கரண் நினைத்தது போலவே அனைத்தும் அமைந்து தேவ்வின் கவனம் இந்தப் பக்கம் இல்லாத நேரமாகப் பார்த்து அவனைச் சுடுவதற்குக் குறி வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதைக் குலைப்பது போல மது அங்கு வந்து நின்றாள்.


எங்கே மது தன்னைப் பார்த்து விட்டால் தேவ் தப்பித்து விடுவானோ என நினைத்துத் தன்னை மறைத்து கொண்டவன் சற்று நேரத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு தேவ் திரும்பி நிற்கும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கொல்ல முயல... அவனின் போதாத நேரம் எதிர்பாராத விதமாக மது அதைக் கண்டு தேவ்வை காப்பாற்றி விட்டு தன் உயிரை பணயமாக வைத்து இருந்தாள்.


மதுவை காப்பாற்ற வேண்டும் என்ற அந்த அவசர நிலையிலும் கூடக் கரணை அப்படியே விட்டுச் செல்ல மனம் இல்லாத தேவ் தனக்கு இந்தப் பக்கத்து அறையில் தங்கியிருந்த தன் அந்தரங்க உதவியாளனான கதிருக்கு அழைத்துச் சில பல உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் மித்துவையும் அவன் பொறுப்பில் விட்டுவிட்டு மதுவை அவசர உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.


மருத்துவர்களோ அவளின் இதயத்தைச் சரியாகக் குண்டு சென்று துளைத்திருப்பதாகவும் காப்பாற்றுவது என்பது அத்தனை எளிதல்ல என்றும் மது உயிர் பிழைக்க வெறும் பதினைந்து சதவிகித வாய்ப்புகளே இருப்பதாகவும் சொல்லி தேவ்விடம் கையெழுத்து வாங்கிய பிறகே சிகிச்சையைத் தொடங்கினர்.


அப்படியே மூடி இருந்த அறுவை சிகிச்சை அறையின் கதவை வெறித்தபடி இந்த உலகத்தின் நினைவுகளும், உணர்வுகளும் எதுவும் அற்று ஒரு மறுத்து போன மனநிலையில் நின்றிருந்தான் தேவ்.


அவன் உடல் தான் எந்த அசைவும் இன்றி நின்று இருந்ததே தவிர மனமோ மதுவை நினைத்து துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பத் தன்னிடம் அவள் வந்து விட வேண்டும் எனக் கதறிக் கொண்டிருந்தது.


சில மணி நேரங்கள் தொடர்ந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு குண்டு வெற்றிகரமாக மதுவின் உடலில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும் மதுவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இருப்பத்து நான்கு மணி நேரம் கடந்த பிறகே சொல்ல முடியும் எனச் சொல்லி மருத்துவர்கள் செல்ல... பயந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான் தேவ்.


அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தவளை காண ஒரு மனம் துடித்தாலும் மற்றொரு மனம் அவளை அந்த நிலையில் காண முடியாமல் தவித்தது. மது அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை அறையின் வாயிலுக்குச் செல்வதும் உள்ளே செல்ல முடியாமல் இதயத்தை இறுக்கிப் பிடித்தது போன்ற வலி எடுக்கத் திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டு வேதனையோடு துடிப்பதுமாகத் தேவ் பன்னிரெண்டு மணி நேரத்தை கடத்திக் கொண்டிருக்க... அங்கு மதுவின் உடல்நிலையிலோ சிறிதளவு முன்னேற்றம் கூட இல்லாமல் அப்படியே இருந்தது.


மேலும் நேரங்கள் கடந்ததே தவிர மதுவிடம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருந்தது. இங்குத் தேவ்விற்கு அவனை எண்ணியோ மித்துவை பற்றியோ இல்லை தொழில் வீடு என வேறு எந்த ஒரு நினைப்பும் இல்லாமல் அவன் நினைவு முழுவதும் மது... மது... மது... இல்லையில்லை... அவனின் மாஷா... மாஷா... மாஷா... என்று மட்டுமே சுழன்றுக் கொண்டிருந்தது.


இருப்பத்து மூன்று மணி நேரம் கடந்து இருந்தது... ஆனால் மது கொஞ்சமும் முன்னேற்றம் இல்லாமல் அப்படியே தான் இருந்தாள். மருத்துவர்கள் இது மிகவும் ஆபத்திற்கான அறிகுறி எனச் சொல்லி செல்ல... இதில் தன் இத்தனை மணி நேர வைராக்கியத்தைக் கைவிட்டு மதுவை காண அந்த அறைக்குள் தேவ் அடியெடுத்து வைத்தான்.


எந்த நிலையில் அவளைப் பார்க்க தைரியம் இன்றி இத்தனை நேரம் துடித்துக் கொண்டிருந்தானோ, அந்த நிலையில் மதுவை கண்டதும் தன் உயிரை வேரோடு பிடுங்கி எறிந்தது போலவே வலி ஏற்பட அருகில் சென்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அமர்ந்தவனின் உதடுகள் மெல்ல...


“இதுக்குத்தான்டி.... இதுக்குத் தான்.... நான் யாரிடமும் அன்பா இருக்கிறது இல்லை... நான் அன்பு வைக்கிற யாரும் என் கூட இருக்கிறது இல்லை... எனக்குப் பிடிச்ச எந்த உறவும் எனக்கு நிலைக்கறதும் இல்லை...” என முணுமுணுத்தது.


தன் இரு கைகளாலும் அவளின் வலது கையை இறுக பற்றி அதில் தலை சாய்த்து அமர்ந்திருந்தவன் எத்தனை நேரமாக அப்படி அமர்ந்திருந்தான் என்பது அவனுக்குமே தெரியாத ஒன்று.


மெல்ல தலை நிமிர்ந்தவனின் முகம் சொல்லொண்ணா வேதனையைச் சுமந்திருக்கக் கண்களோ அந்தக் கைகளுக்குச் சொந்தக்காரியை உணர்வுகளின்றி வெறித்துக் கொண்டிருந்தது. அவளின் வலது கையைத் தன் கன்னத்தில் வைத்து அழுத்தி கொண்டவன், வாடிய மலர் சரம் என அந்த ஐசியூவில் கண் மூடி கிடந்தவளை உள்ளம் துடிதுடிக்கப் பார்த்திருந்தான்.


அவனின் இடது கை கொண்டு அவளின் தலை முடியை ஒதுக்கிவிட்டவன், "மாஷா..." என மெல்ல அவள் பெயரை எங்கே அழுத்தி உச்சரித்தால் அவளுக்கு வலிக்குமோ என்பது போல மயிலிறகால் வருடுவது போல உச்சரித்தான்.


பின் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்த தனக்குள்ளேயே போராடியவன், அது முடியாமல் போக, கண்களைத் திறந்து அவள் முகத்தைப் பார்த்தவாறே, "மாஷா... ப்ளீஸ் வந்துடுடி... என்கிட்ட திரும்ப வந்துடுடி..." என வாய்விட்டே புலம்பினான்.


"என்னால உன்னை இப்படிப் பார்க்க முடியலை பேபி.... நீ நெருங்கி வரும் போதெல்லாம் நான் விலகி போனது, நீ எனக்குப் பொருத்தம் இல்லைன்னு இல்லைடி... எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு தான், ஆனா அதுக்காக நீ இப்படி ஒரு முடிவெடுப்பியா.. என்னை விட்டு ஒரேடியா போய்டுவியா..." என அப்போதும் தன் கோபத்தைக் கைவிட முடியாது அவளிடம் கோபத்தைக் காட்டினான்.


அவளிடம் எந்த அசைவும் இல்லாது போக, "பேபி... ப்ளீஸ்டி நான் பேசினது தப்பு தான்... அதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்டா, என்னைவிட்டுப் போயிடாதேம்மா... டாக்டர்ஸ் எல்லாம் என்னென்னவோ பேசிக்கறாங்க... எனக்கு பயமா இருக்குடி... எனக்கு நீ வேணும், எப்பவும் என் கூடவே வேணும், நீ இல்லைன்னா எனக்கு எதுவுமே இல்லை பேபி.. புரிஞ்சிக்கோ..." என அவளுக்கு எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசிக் கொண்டே சென்றான்.


நீ இல்லாம போனா நானும் உன் கூடவே வந்துடுவேன்னு சொல்ல முடியாது பேபி... எனக்கு இங்கே சில கடமைகள் இருக்கு... ஆனா என் வாழ்க்கையே திசை மாறி போயிடும் பேபி... கண்ணைத் திறந்து பாருடி.... எழுந்து வாடி..." என வாழ்க்கையிலேயே முதல் முறையாகத் தன் மனதிற்கினியவளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான் தேவ்.


அவளிடமிருந்து எந்த ஒரு முன்னேற்றமும் தெரியாது போக, அவள் முகத்தை நோக்கி குனிந்தவன், "ஐ லவ் யூ மாஷா... யூ ஆர் த சன் ஷைன் இன் மை டே அண்ட் த மூன் லைட் ஆப் மை நைட்ஸ்..." எனத் தன் ஒட்டு மொத்த காதலையும் அந்த ஒற்றை வரியில் தேக்கி, அதுவாவது தன் மனதை அவளுக்கு உணர்த்தட்டும் என்ற ஆசையில் கூறியவாறே அவளின் நெற்றியில் அழுந்த தன் இதழை பதித்தான்.


ஆனால் அவன் காதலுக்குச் சொந்தக்காரியோ, தன் கணவனின் வாயிலிருந்து இத்தனை அன்பான அமைதியான கவலை தோய்ந்த வார்த்தைகள் தனக்காக உதிர்க்கபட்டுக் கொண்டிருப்பதும், அவன் தன்னிடம் காதலை உரைப்பதும் தெரியாமல் மீளாதுயிலை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.


மதுவின் இதயத்துடிப்பு குறைந்துக் கொண்டே செல்வதை அங்கிருந்த மானிட்டர் சத்தமிட்டு வெளிப்படுத்த... அதைக் கண்டவன் பதறி அவசரமாக மருத்துவர்களை அழைத்து எப்படியாவது அவளைக் காப்பாற்றி தன்னிடம் கொடுக்குமாறு தன் திமிர், ஆணவம், என அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு அந்த மருத்துவர்களிடம் தன் மனதை வென்றவளுக்காக மன்றாடி கொண்டிருந்தான்.



இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மதுவை உயிருடன் மீட்டுத் தேவ்விடம் அந்த மருத்துவர்கள் ஒப்படைத்துச் செல்ல... தன் இதயத்தில் குடியிருக்கும் இந்தத் தேவதை தனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டதை உண்மை என அந்த நிமிடம் நம்பக் கூட முடியாமல் தோய்ந்து போய் அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் சாய்ந்தவனின் மனம் தன் மனையாளை முதன் முதலில் சந்தித்த நிகழ்வில் நோக்கி பயணித்தது.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 13

சரியாக எட்டு மாதங்களுக்கு முன்பு...


அந்த அதிகாலை வேளையில் கையிலிருந்த செய்தித்தாளை இறுகப் பற்றியபடி தோளில் ஒரு சிறு பையுடன் செய்தித்தாளையும் எதிரிலிருந்த பிரம்மாண்ட மாளிகையையும் மாறி மாறி பய பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள் மது.


மீண்டும் ஒருமுறை தனக்குத் தானே உறுதிப்படுத்திக் கொள்ளச் செய்தித்தாளில் இருந்த விலாசத்தோடு வீட்டின் முகவரியை ஒப்பிட்டுப் பார்த்தவள் தயங்கியபடியே அந்த மாளிகையை ஏறிட்டு பார்க்க...


மது வந்ததில் இருந்து அவளின் அத்தனை செய்கைகளையும் வாயிற்காவலர் அவர் அறையில் இருந்த சிறிய திறப்பின் வழியே பார்த்துக் கொண்டிருந்தவர் “யாருமா... என்ன வேணும்..?” எனக் குரல் கொடுக்க...


திடீரெனப் பக்கவாட்டில் இருந்து இப்படி ஒரு குரல் வரும் எனக் கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள் அந்த ஓய்வு பெற்ற ராணுவத்தில் பணிபுரிந்தவரின் கட்டையும் அதட்டலுமான குரலில் தூக்கிவாரிப் போட தன் கையிலிருந்த செய்தித்தாளை தவறவிட்டாள்.


பயத்தோடு திரும்பி அவரை மருண்ட பார்வை பார்க்க... தன் குரலில் மது எந்த அளவிற்குப் பயந்திருக்கிறாள் எனப் பார்த்தவர் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தபடியே “பயந்துட்டியாமா... என் குரலே அப்படித்தான்...! என்ன வேணும் உனக்கு...?” எனச் சற்றுத் தன்மையாகப் பேச...


“நேக்கு... வேலை... பேப்பர்... இது..” எனக் கோர்வையாகப் பேசாமல் வார்த்தைகள் தந்தியடிக்கப் பதட்டத்தோடு உளறியவளை கண்டு அவள் கீழே தவற விட்ட பேப்பரை குனிந்து எடுத்து பார்த்தவர் அதில் இருந்த விளம்பரத்தைக் கண்டு “ஓ... இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இந்த வேலைக்கு வந்து இருக்கியா மா...” எனக் கேட்க “ஆம்” எனப் பூம்பூம் மாடு போல அவசரமாகத் தலையசைத்தாள்.


“அச்சச்சோ... ஐயா வேற ஊர்ல இல்லை மா... நீ ஒரு நாலு நாளுக்கு அப்புறம் வரியா...!” என அவர் எங்கே குரலை உயர்த்திப் பேசினால் பயந்து அழுது விடுவாளோ என்ற தோற்றத்தில் நின்றிருந்தவளை கண்டு ரொம்பவே முயன்று அமைதியான குரலில் கூறினார்.


“இல்ல... நேக்கு... வேற... இப்போ... வேலை...” எனக் கண்கள் கலங்க மீண்டும் அதே போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசியவளை கண்டவர், மதுவை அப்போதே முழுமையாகக் கவனத்தார்.


பழைய வெளுத்துப் போன ஒரு காட்டன் சுடிதார், பல வருடங்களாக உனக்கு உழைத்துவிட்டேன்... இதற்கு மேல் என்னைவிடேன் எனக் கெஞ்சும் அளவிற்கான தேய்ந்து போன ஒரு செருப்பும் அணிந்து, காதில் ஒரு பிளாஸ்டிக் தோடு, வெறும் கழுத்து, கைகளில் பெயருக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்ணாடி வளையல், வலது தோளில் ஒரு சிறிய நகை கடைகளில் இலவசமாகக் கொடுக்கும் பை, என்ற தோற்றத்தில் நின்றிருந்தவளை கண்டவருக்கும் பாவமாகத்தான் இருந்தது.


ஆனால் இதில் அவர் செய்வதற்கு எதுவும் இல்லையே, வேலை சம்பந்தப்பட்ட விளம்பரத்தை கொடுத்து இருப்பது முதலாளி அவர் ஊரில் இல்லாத சமயம் இவரால் மதுவிற்கு எப்படி உதவ முடியும்.


“ஐயாதான் மா எல்லாம் முடிவு செய்வார்... அவர் ஊரிலிருந்து வந்த பிறகு நீ வா...” என்று கூறியவரை கண்கள் கலங்க கண்டவள் சுற்றுமுற்றும் பார்க்க...


அந்தப் பகுதியில் அது தான் கடைசி வீடு என்பதால் அதற்கு அடுத்து இருந்த சுவரின் ஓரமாக இருந்த மர நிழலை நோக்கி நகர்ந்தவளை தடுத்து நிறுத்தியவர் “இங்கே எங்க போற மா...” எனக் கேட்டார்.


பொங்கி வரும் அழுகையை அடக்கப் போராடியதால் உதடு பிதுங்க மெல்லிய குரலில் “அவா வர வரைக்கும் இங்கே இருந்துக்கறேன்...” என மது அந்த மரத்தை சுட்டிக்காட்ட...


‘என்னது... நாலு நாளா...! இங்கேயா...?’ என மனதிற்குள் அதிர்ந்தவர் ‘ஐயோ என்னோட வேலைக்கு உலை வெச்சிடுவா போலேயே...’ எனப் பதறி “அங்கெல்லாம் உட்காரக் கூடாது... இது ரொம்பப் பெரிய மனுஷங்க இருக்கற பகுதி... இந்த மாதிரி எல்லாம் யாரும் இங்கே இருக்க விட மாட்டாங்க...” என அவளுக்குப் புரியும் வகையில் பொறுமையாக எடுத்துச் சொன்னார்.


எந்தப் பதிலும் அவருக்கு அளிக்காமல் கண்ணீர் வழியும் விழிகளோடு அவரைப் பார்த்தபடி நின்றிருந்தாள் மது.


அந்த பின் நாற்பதுகளில் இருந்த மனிதருக்கு ஏனோ மதுவின் இந்தத் தோற்றம் ஆதரவற்ற ஒரு குழந்தையின் பரிதவிப்பு போலத் தோன்ற... ‘உனக்கு என்ன பிரச்சினை மா...’ எனக் கேட்க மனது நினைத்தாலும் கேட்டுத் தெரிந்து மட்டும் தான் எந்த வகையில் உதவ முடியும் அவளுக்கு என்று அவருக்குப் புரியவில்லை.


அவருமே தன் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு அவர்களுக்காக இங்கே உழைத்துக் கொண்டிருப்பவர் தான். ஒரு இளம் பெண்ணிற்கு எத்தனையோ பிரச்சினைகள் இன்றைய சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது, அதில் இந்தப் பெண்ணிற்கு என்ன தான் பிரச்சனை, வேலையும் வருமானமும் தான் பிரச்சினை என்றால் நான்கு நாட்கள் கழித்து வரச் சொன்னபோது சரி என்று இங்கிருந்து சென்று இருப்பாளே...!!


அதையும் கடந்து ‘நாலு நாள் ஆனாலும் பரவாயில்லை, இங்கு அமர்ந்திருக்கிறேன்...’ என இத்தனை அழகான ஒரு வயது பெண் சொல்லும் போது அவளின் நிலையை எண்ணி இரு பெண்களின் தகப்பனாக அவருக்கும் மனம் பதறத்தான் செய்தது.


மதுவின் இடத்தில் சில நொடிகள் தன் பெண்ணை நிறுத்தி பார்த்தவருக்கு ‘எந்த வகையிலாவது இவளுக்கு உதவ முடியுமா...?!’ என யோசனை செல்ல, ‘கடைசி முயற்சியாக ஒரு முறை முதலாளி அம்மாவிடம் பேசிப் பார்க்கலாமா...!’ என எழுந்த எண்ணத்தைச் செயல்படுத்த நினைத்தவர் “கொஞ்சம் இரும்மா... அம்மாகிட்ட கேட்டுப் பார்க்கிறேன்...” எனச் சொல்லிவிட்டு அவருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து இன்டர்காமின் உதவியோடு அனுமதி கேட்க... சில நிமிடங்களில் மதுவை உள்ளே அனுப்புமாறு அவருக்கு அனுமதி கிடைத்தது.


“உன் நல்ல நேரம் மா... அம்மா உன்னை உள்ளே வரச் சொல்லி இருக்காங்க... போய்ப் பாரு...” எனச் சொல்லவும், இருட்டில் துழாவிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு சிறு துளி வெளிச்சம் கண்டதைப் போலத் தோன்ற, அவரை நன்றியோடு பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவள் வார்த்தைகள் வராமல் கண்ணீரோடு பார்த்தாள்.


“எனக்கும் உன் வயசில் பொண்ணுங்க இருக்குமா...! என்னால் இவ்வளவுதான் உதவ முடியும் இனி நீ தான் பார்த்துக்கனும்...” எனச் சொல்லி உள்ளே அனுப்ப, இவ்வளவு பெரிய மாளிகையை இது வரை வாழ்க்கையில் கண்டிராதவள் அந்தப் பெரிய கேட்டின் வழியே மருண்ட பார்வைகளோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மனதில் எழுந்த பயத்தோடு அந்த மாளிகையின் பிரதான வாயிலுக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.


இந்த மாளிகையும் இதிலிருந்து ஆட்சி செய்பவனும் தன் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றப் போவதை அறியாமலேயே...!!!


மது உள்ளே நுழைவதற்காகவே காத்திருந்தது போல் ஒரு பணிப்பெண் வந்து அவளை அழைத்துக் கொண்டு கீழ்தளத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான அறைக்குள் செல்ல...


அங்குக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார் லலிதா. அவரைக் கண்டு கையெடுத்து வணங்கியவளை பார்த்து “வா” என்பது போல் தலையசைத்தவர், தன் அருகில் இருந்த இருக்கையைக் கண்களால் காண்பித்து அமரும்படி சொல்லவும், “இல்ல நான் நிற்கறேன்...” எனப் பதில் அளித்த மதுவிற்கு உள்ளே நுழைந்த நொடிகளில் மனதில் இருந்த பயமும் பதட்டமும் லலிதாவின் அமைதியும் சாந்தமும் தவழும் முகத்தைக் கண்ட நொடியில் காணாமல் சென்று ஒரு அமைதி பரவியது.


“என்ன விஷயமா வந்திருக்க மா...?” என லலிதா கேட்கவும், “இந்த...” எனத் தொடங்கியவள் அப்போதே தன் கைகளில் இருந்த செய்தித்தாளை வெளியிலேயே விட்டுவிட்டு வந்தது புரிய, ”நான்... பேப்பர்... நேக்கு... வேலை...” என மீண்டும் தடுமாற,


“முதலில் அமைதியா பயப்படாமல் உட்கார்ந்து என்ன சொல்லணுமோ சொல்லு... என்ன பார்த்தா அவ்வளவு கொடுமைக்காரி போலவா இருக்கு... நீ இவ்வளவு பயபடறதுக்கு...” என லலிதா அவளின் பயத்தைக் குறைக்க எண்ணி இலகுவாகப் பேசவும்,


‘எங்கே தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ...’ என எண்ணி பதறியவள் இல்லையில்லை... நீங்க அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கறேள்...” எனப் படபடப்பாகப் பதில் அளிக்கவும் அதில் லலிதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.


தான் விளையாட்டிற்குப் பேசியது கூடப் புரியாமல் குழந்தை தனத்தோடு பதிலளித்தவளை லலிதாவிற்குப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. அடுத்து அவர் மதுவிடம் ஏதோ கேட்கத் துவங்கவும், அறை கதவை திறந்துக் கொண்டு வீட்டில் வேலை செய்யும் பெண்மணி நுழைய... அவர் தோளில் இருந்து முரண்டு பிடித்தப்படி அழுது அழுது சிவந்து போன முகமும் கத்தி கத்தி வரண்டுப் போன தொண்டையுமாக மித்து வந்து கொண்டிருந்தான்.


அவரிடம் திரும்பி என்னவென்று லலிதா கேட்பதற்குள், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாகச் செயல்பட்டு மது அவரை நெருங்கி மித்துவை கைகளில் வாங்கியிருந்தாள். அழும் குழந்தையை அணைத்துப் பிடித்துத் தோளில் கிடத்தி முதுகை தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்ய முயன்றவாரே...


“கண்ணா எதுக்கு அழறீங்க...? குட்டிக் கண்ணாவுக்கு என்ன வேணும்...? என்னமா என்ன ஆச்சு...? எதுக்கு இந்த அழுகை...? இப்படி அழலாமா...! அப்புறம் குட்டி செல்லத்துக்குத் தொண்டை எல்லாம் வலிக்குமே...! என்ன ஆச்சு...? உம்மாச்சியா... வலிக்கிறதா கண்ணாக்கு...?” எனக் கொஞ்சலோடு கேட்டபடியே மித்துவை இடது கைகளில் திருப்பித் தன் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு வலது கையால் வயிறு கழுத்துக் கை கால்களில் தடவி ஏதாவது அடிபட்டு இருக்கிறதா...? பூச்சிகடி ஏதாவது இருக்கிறதா...? என ஆராய்ந்துக் கொண்டே பேசியவள்,


“கண்ணாக்கு மம்மு வேணுமா...? மம்மு சாப்டிங்களா... என்ன சாப்டிங்க...? இந்தக் குட்டி தொப்பையில் மம்மு இல்லையே...! மம்மு சாப்பிடுவோமா...?” எனக் கேட்டபடியே மித்துவை தூக்கி வந்தவரை நிமிர்ந்து பார்க்க...


அவரும் திரும்பி அங்கிருந்த மேஜையில் இருந்து குழந்தைக்குக் கொடுக்கும் பால் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார்.


அதை வாங்கிக் கொண்டவள் இன்னும் அழுது கொண்டிருந்தாலும் முன்பு அவர்கள் கையில் இருந்தது போல் வீறிட்டு கத்திக் கொண்டும் இறக்கிவிடச் சொல்லிக் கொண்டும் இல்லாமல் தேம்பியவாறே அழுது கொண்டிருந்தவனை மது அணைத்துப் பிடித்துக் கொஞ்சியபடியே தன் கையில் இருந்த பாலை புகட்ட முயன்றாள்.


முதலில் இரண்டு மூன்று முறை அதைத் தள்ளி விட்டு வேண்டாம் என்பது போல் கால்களால் உதைத்தவன், பிறகு அவளின் அன்பான அனுசரணையான கவனிப்பில் பாலைக் குடிக்கத் தொடங்கினான்.


அப்படியே இருக்கையில் அமர்ந்துக் கொண்டு ஒரு கையால் பாலை புகட்டியவாறே மற்றொரு கையால் மித்துவின் தலையைக் கலைத்து அன்பாக வருடிக் கொடுக்கத் தொடங்கவும், அந்த வருடலும் மதுவின் மார்பு சூடும் உள்ளே சென்ற பாலும் சேர்ந்து இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த மித்துவை உறக்கத்தில் தள்ளியது.


கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தின் பிடியில் சென்றுக் கொண்டிருந்தவன் வாயில் இருந்து விலகிய பால் பாட்டிலை மீண்டும் சரியாகப் பொருத்திப் முழுவதையும் குடிக்க வைத்த பிறகே அதை விலக்கினாள் மது.


மித்து உறங்கிவிட்டது தெரிந்தாலும் மீண்டும் உறக்கம் கலைந்து விழித்து விடாமல் இருக்க, அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும் வரை தட்டிக் கொடுத்துக் கொண்டும் தடவிக் கொடுத்துக் கொண்டும் அமர்ந்திருந்தவள் நன்றாக உறங்கி விட்டான் என்று உறுதியான பிறகே தன் தலையை நிமிர்த்தியவள் அப்போதே தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் மது.


அப்போதே மதுவிற்குத் தான் அதிகப்படியாக உரிமை எடுத்துக் கொண்ட தன் தவறு புரிந்தது. அவள் எழ முயன்றவாறே “மன்னிச்சுக்கோங்கோ குழந்தை அழறதைப் பார்த்ததும் வேறு எதுவும் நினைவில் இல்லை...” எனத் தன்னிலை விளக்கம் கொடுக்க முயல,


அவளை அமைதிப்படுத்திய லலிதா “குழந்தையை மடியில வெச்சு இருக்கும் போது எழுந்தக்காத உட்கார்...” எனச் சொல்ல, ‘எங்கே தான் எழுந்தால் பிள்ளையின் உறக்கம் கலைந்து விடுமோ...’ என எண்ணியபடியே அமர்ந்து கொண்டவள்,


பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு லலிதாவைப் பார்த்தவாறு “நான் வேணும்னு எதுவும் செய்யல...” என மீண்டும் தொடங்க, “இப்போ நீ செஞ்சது தப்புன்னு யாரு சொன்னா...?” என்ற லலிதாவின் கேள்விக்கு, தயக்கமாகத் தங்களைச் சுற்றி இருந்தவர்களை மது ஒரு பார்வை பார்க்க...


“அவர்களின் பார்வையில் இருந்தது குற்றச்சாட்டு இல்லை... ஆச்சரியம்...” என்பதை விளக்கிய லலிதா “நைட்ல இருந்து அழுது அமர்க்களம் செய்து கொண்டிருந்தான்... ஒரு சொட்டு கூடத் தூங்கலை... அத்தனை பேரும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கலை... இப்போ ஐந்து நிமிஷத்துல அவன் அழுகையை அடக்கி நீ தூங்க வச்சிருக்கே... அதைத்தான் எல்லாரும் ஆச்சரியமா பார்த்துட்டு இருக்காங்க...” என விளக்கினார்.


‘இந்தப் பார்வைக்கு அர்த்தம் அது தானா...?’ என நினைத்தவள் “அதெல்லாம் ஓண்ணும் இல்ல மாமீஈஈ...” எனத் தொடங்கி “மன்னிச்சுக்கோங்க... மேடம் பிள்ளை வயிறு காலியா இருக்கு, அதான் பிள்ளையால தூங்க முடியல...” எனத் தான் செய்தது பெரிதாக ஒன்றும் இல்லை என்று குரலில் பதில் அளித்தவளை கண்டு சிரித்தவர்,


“இத்தனை வயசாச்சு... குழந்தை பசிக்கு அழுறானா இல்லையானு கூட என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன...? அவன் அழ பசியும் ஒரு காரணம்னு நல்லாவே தெரியும்...! ஆனா அவன் தான் பாலை ஒரு வாய் கூடக் குடிக்கவில்லையே...!” எனச் சிறு பெருமூச்சோடு சொல்லவும் தான் அதற்கு மேல் என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் மது நிறுத்தினாள்.


தூங்கிக் கொண்டிருந்த மித்துவை தொட்டிலில் கிடத்துவதற்காக வாங்கிக் கொள்ள வந்த பணிப்பெண்ணைத் தடுத்தவள் “இல்ல வேண்டாம் இப்படியே இருக்கட்டும்... நீங்கோ சொல்றதை பார்த்தா பிள்ளை ராத்திரியெல்லாம் தூங்காம இருந்து இருக்கான்...! கொஞ்ச நேரம் நல்லா தூங்கட்டும்...” என மது சொல்லவும்,


அவரவர் வேலையைக் கவனிக்கக் கலைந்து சென்றனர், அனைவரும் விலகிச் சென்ற பிறகு லலிதா மதுவை பார்த்து “இப்போ சொல்லு மா... நீ என்ன விஷயமா வந்தே...? பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை பார்த்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலை கேட்டு வந்தியா...” எனக் கேட்கவும் “ஆம்” எனத் தலை அசைத்து பதிலளித்தாள்.


சற்று யோசித்த லலிதாவிற்கும் மது மித்துவை கையாண்ட விதம் மிகவும் பிடித்திருக்கவே அவளுக்கு அந்த வேலையைக் கொடுக்க எண்ணியவர் மனதில் கடுகடுவென்ற முகத்துடன் தன் மகன் வந்து போனான்.


‘நிச்சயம் அவன் அனுமதி இல்லாமல் மதுவை இந்த வேலையில் நியமித்தால் தன்னைக் கடித்துக் குதறி விடுவான்..’ எனத் தெரிந்து இருந்தாலும் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் மது போல ஒருத்தி அவனைக் கவனித்துக் கொள்ள அவசியம் தேவை...!


தேவ் திரும்பி வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும்...! அப்படி இருக்கையில் அவனும் இல்லாமல் சரியாகக் கவனித்துக் கொள்ள ஆளும் இல்லாமல் இருந்தால் மித்து அழுதழுது உடம்பிற்கு எதையாவது வரவழைத்து கொள்வான் என்ற நிதர்சனம் விளங்க, தன் மகனை சமாளித்துக் கொள்ளலாம் என மனதிற்குள் முடிவெடுத்தவர்,


“சரி சொல்லுமா... இந்த வேலைக்கு நீ என்ன எதிர்பார்க்கிற...” எனவும் மெல்ல அவரை ஏறிட்டுப் பார்த்தவள் தயக்கத்தோடு “நேக்கு தங்க இடமும் சாப்பாடும் கொடுத்தா போதும் மாம்...” எனத் தொடங்கி மீண்டும் “மேடம்...” என மாற்ற அதில் லலிதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.


“என் மகன் என்னை நல்லா வசதியாத்தான் வாழ வைக்கிறான்... ஆனா அதற்காகத் தங்க இடத்துக்கு நான் எங்க போவேன்...” எனக் கவலை குரலில் கூறியவரை புரியாமல் பார்த்தவள்,


‘இத்தனை பெரிய மாளிகையில் தான் தங்கிக் கொள்ள ஒரு ஓரமாகக் கூட வா இடமில்லை...’ என மனதில் எண்ணியவாறு திருதிருவென விழிக்க, அவளுக்கு தான் சொல்ல வந்தது புரியவில்லை என்று உணர்ந்த லலிதா “தங்க இடம் என்றால் கோல்ட் பிளேஸ் தானே மா கேட்கிற...” எனவும் தான் அவர் சொல்ல வந்தது புரிந்தது.


“அச்சச்சோ.... இல்ல மாம்... மேடம்... நான் தங்கிக்கக் கொஞ்சம் இடம் கொடுத்தா போதும்... வேறு எதுவும் நான் எதிர்பார்க்கல...” எனத் தான் என்ன சொல்ல நினைத்தோம் என்பதை விம் போட்டு விளக்கவும்,


சற்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவர், “அப்போ குளிக்கலாம் மாட்டியா...?” எனக் கேட்க, பாவமாக முழித்துக் கொண்டிருந்தாள் மது.


ஆனால் இவற்றையெல்லாம் அந்த அறையின் ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த லலிதாவின் கேர் டேக்கர் ராஜிக்கு இந்த லலிதா ரொம்பவே புதிதாகத் தெரிந்தார்.


கடந்த நான்கு மாதமாக அவர் படுக்கையில் விழுந்த பிறகு அவரை நான்கு மணி நேரமும் கூடவே இருந்து கவனித்துக் கொள்பவர் ராஜி தான். இத்தனை நாட்களில் இது போன்ற குறும்பு பேச்சை ஒருநாளும் அவர் லலிதாவிடம் இருந்து கேட்கவில்லை.


இவ்வளவு இயல்பாக இருப்பது போலப் பேசிக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் அவர். ஏனோ மதுவை உள்ளே நுழைந்த போது பார்த்த நிமிடத்திலேயே, கலைந்த தலையும் பழைய உடையுமாக இருந்தாலும் துடைத்து வைத்த குத்து விளக்கு போல் இருந்தவளை லலிதாவிற்கு ரொம்பவே பிடித்துப் போனது.


அதன் பிறகு மித்துவை கையாண்ட விதம், தன்னோடு தயங்கி தயங்கி பேசுவது, அதிலிருந்த அவள் அப்பாவித்தனம், தன்னை எப்படிக் கூப்பிடுவது எனத் தெரியாமல் ஒவ்வொரு முறையும் தடுமாறுவது, வேலைக்கு என்ன சம்பளம் வேண்டும் எனக் கேட்ட கேள்விக்குக் கூட அதைச் சரியாகக் கணித்துச் சொல்ல முடியாமல் குழந்தை தனத்தோடு பதிலளித்தது என அனைத்துமே மதுவின் விஷயத்தில் லலிதாவின் மனதை கவர,


இதற்கு முன் இந்தப் பெண் எங்கேயும் யாரிடமும் வேலை செய்யவில்லை என்பது அவருக்குத் தெளிவாக விளங்கியது. எந்தக் காரணத்திற்காகவோ இவளுக்கு இப்போது வேலை அவசியம் என்பது புரிய... கொஞ்சமும் தயங்காமல் அந்த முடிவை எடுத்தார்.


ஆனால் அவர் நினைத்தது போலவே அவரின் ஒரே செல்ல மகன் காலில் சலங்கை கட்டாத குறையாக இந்த விஷயம் கேள்விப்பட்ட நொடியில் எகிறி எகிறி குதிக்கத் தொடங்கினான்.


“அம்மா எத்தனை முறை பட்டாலும் நீங்க திருந்தவே மாட்டீங்களா...! ஏன்மா இப்படி அப்பாவியாக இருக்கீங்க...? அப்படி என்ன அவசரம் இன்னும் மூணு நாளில் நான் வந்துடுவேன் இல்லையா...! அதுக்குள்ள யார் எவர் என்றே தெரியாத யாரோ ஒருத்தியை ஏன் வீட்டுக்குள்ள சேர்த்தீங்க....? இவ என்ன திட்டத்தோட உள்ள வந்திருக்கான்னு தெரியலையே...?” என இடைவெளி விடாது பொறிந்து தள்ள...


“அவ நல்ல பொண்ணு விக்ரமா...” என லலிதா சாந்தப்படுத்த முயல, அது இன்னும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல ஆகியது அந்தப் பக்கம் இருந்தவனுக்கு... ‘வந்த அரைநாளில் இப்படி மயக்கி வைத்திருக்கிறாள் என்றால் எப்படிப்பட்டவளாக இருப்பாள்...! வந்து கவனிச்சிக்கிறேன்டி உன்னை...’ என மனதிற்குள் நினைத்தபடி அலைபேசியை அணைத்திருந்தான் தேவ்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 12 & 13


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:
Status
Not open for further replies.
Top