ஜீவ் பேசியதற்கு மான்வியிடம் எந்த எதிர்வினையும் இல்லை. அவளின் மனதை இவன் முழுதும் உணர்ந்திருக்கிறான். இவன் மனதையும் உணர்த்திவிட்டான். இனி முடிவு அவள் கையில் தான். ஈஸ்வர் பேசியத்திலிருந்தே அவன் மனநிலையை உணர்ந்து இவன் பயத்தை வெளிக்காட்டாமல் பேசி அவனை கோவப்படுத்தி நேரில் வர வைத்துவிட்டான். செல்லும் முன் ஈஸ்வரின் தந்தை அவனை சாடும்போது ஈஸ்வராக அவன் தொழிலில் செய்த மாற்றத்தை புரிய வைத்து, அவன் அன்னையிடமும் விடைபெற்றே செல்கிறான். அந்த சரக்கு ரயில் நிலையத்தில் ஈஸ்வர் அவனை மிகுந்த ஆக்ரோசத்துடனே தாக்குகிறான். அவனின் எண்ண போக்கிற்கு ஏற்றவாறே பேசி அவன் மனக்குமுறல்களை வெளிகொணர்கிறான். ஜீவின் இந்த பொறுமையான அணுகுமுறை ஆச்சர்யமே !! இதற்கு காரணம் மான்வி மற்றும் ஈஸ்வரின் குடும்பத்தினரோ
தோற்றத்தில் ஒற்றுமை உடைய இருவருக்கும் தங்கள் வாழ்க்கை எதிர் எதிர் அனுபவங்கள் நிறைந்ததாக அமைந்து விட்டது. ஜீவ்வின் சமாதான பேச்சுக்கள் அவனை அசைக்கவில்லை. தன் குட்டு அன்னையிடம் வெளிப்பட்ட பின்னர் தான் தன் தவறை உணர்கிறான். அவனின் கனவை நிறைவேற்ற தவறான பாதையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற மீண்டும் மீண்டும் பல தவறுகளை செய்துவிட்டான். (எந்த சூழ்நிலையிலும் தன்னிலை தவறாமல் இருப்பவனே சிறந்த மனிதன்). தன் உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளே அழுத்தி, சூழிநிலை கைதியாக வாழ்ந்து தன் குடும்பத்திடம் அவனை குறித்த நல்ல பிம்பத்தை ஏற்படுத்தி விட்டான். அது இன்று உடைந்ததும் அவர்களை எதிர்கொள்ள முடியாமல், செய்த குற்றமும் உறுத்த தன் முடிவை தேடி கொண்டான். அவனை முதலில் கொல்லும் வெறியில் இருந்த ஜீவ் கூட அவன் மனநிலை புரிந்து அவனை நல்வழி படுத்தவே விழைந்தான். ஆனால் அவன் இவ்வுலகை விட்டே செல்ல முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் விட்டான். இனி சிந்துஜா, ஈஸ்வரின் குடும்பம், மான்வி - ஜீவ் இவர்களின் நிலை?