ஹாய் செல்ல குட்டிஸ்,
நான் உங்கள் அருணா..
மீண்டும் ஒரு சந்தோசமான செய்தி..
இப்போது வெளியான என் கதை "என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ" இப்போது வி கேன் shopping தளத்தில் வந்துவிட்டது பேபிஸ்..
ஆன்லைனில் வாங்குபவர்கள் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம் டியர்ஸ்..
வாய்ப்பளித்த ஸ்ரீ அக்காவிற்கும் பிரியா நிலையத்திற்கும் பெரும் நன்றிகள்..
பேபிஸ் புத்தகம் வாங்கி படிச்சுட்டு உங்கள் கருத்தை பகிர்ந்துக்கோங்க டியர்ஸ்.. காத்திருக்கிறேன் மா..
Priya Nilayam, ப்ரியா நிலையம், அருணா
www.wecanshopping.com
*****************
குட்டி teaser...
கடந்து சென்ற நிமிடங்கள் முழுவதும் பயத்திலும் பிரார்த்தனையிலும் கழிய மனதை நூறு முறை திட படுத்தி கொண்டு அவள் ஒரு காலை காற்றில் வைத்து, மறுகாலையும் தூக்கிய போது அவள் மனம் இதோ முடிந்து விட்டது என்று அனற்ற, திடீரென்று அவளை ஒரு வலிய கரம் பிடித்திழுத்து....
அவன் இழுத்த வேகத்தில் அவள் அவன் மேலே விழ அவளை தாங்கி நின்றவன் "என்ன செய்கிறாய்.." என்றான் கோப குரலில்..
பார்ப்பதற்கு சிறு பெண் போல் இருப்பவள் இப்படி ஒரு முடிவை எடுத்தது அவனுக்கு கோபத்தை விளைவித்தது...
ஒரு நொடி என்ன நடந்தது என்றே தெரியாமல் அவள் விழிக்க "ஏய் உன்னை தான்... இங்கே பார்.. என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்.. அப்படி உனக்கு என்ன பிரெச்சனை..." என்றான்...
அவன் கனல் குரலில் அவனை அவள் அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.. அவளை விட இரண்டு அடி உயரமாக இருந்தவன் கைகள் ஏதோ கட்டை போல் இருந்தது...
அதன் வலிமையில் தான் இப்படி வந்து விழுந்திருக்கிறோம் என்று
அவளுக்கு புரிய அதற்கு பிறகு தான் அவன் கேள்வி அவளுக்கு
ஞாபகம் வந்தது...
அவள் அவனையும் பயத்துடன் பார்த்து வைக்க "இப்போது சொல்ல போகிறாயா.. இல்லையா... இல்லையென்றால் நீ குதித்துக்கொள்.. நான் போகிறேன்.." என்றான் அவன் எரிச்சலுடன்..
உதவி செய்ய வந்தவனை சந்தேகமாக பார்த்தால் அவனுக்கு கோபம் வராதா...
அவனது கோபமான பேச்சில் தன் தவறை உணர்ந்து கொண்டவள் தனது பிரெச்சனைகளை பற்றி மென் குரலில் அவனிடம் கூறினாள்..
"இதற்கு சாவு தான் தீர்வென்று உனக்கு யார் சொன்னது.. வாழ்ந்து பார்க்கலாம் என்ற எண்ணமே இந்த காலத்து பெண்களுக்கு வராது போல்.." என்று சலித்துக்கொண்டான் அவன்..
"சார் நானும் சாக வேண்டும் என்று நினைக்கவில்லை.. நான் வேற என்ன செய்வது சொல்லுங்கள்.. எனக்கு எங்கே போவது, என்ன செய்வதென்று தெரியவில்லை.. ஏதேனும் முயற்சி செய்யலாம் என்றால் கூட அது வரை இப்போது என்னிடம் வம்பு செய்தது போல் ஆட்கள் சும்மா இருக்க வேண்டாமா.." என்று அவளும் சிறு கோபத்துடன் கேட்டாள்...
அவளுக்கு மட்டும் என்ன சாக வேண்டும் என்று ஆசையா.. அவள் நிலை புறியாமல் இவன் வேறு கோபப்பட்டுக்கொண்டு..
அவள் பேசி முடித்ததும் அதில் இருந்த நியாயம் சிறிது அவனுக்கும் உரைத்தது போல் அதனால் குரலை மட்டும் தனித்து கொண்டவன் "எதற்குமே சாவு முடிவு இல்லை.. ஒரு முறை பிரெச்சனை என்றால் மறு முறை முயற்சிப்பதை விட்டுவிட்டு இது முட்டாள் தனம் தான்.." என்றான் அழுத்தமான குரலில்..
சிறிது நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு தற்கொலை அவனை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பது அவனுக்கு தானே தெரியும்..
அவன் கூறுவது சரி என்று தோன்றி அவள் பேசாமல் நிற்க "உன் பெயர் என்ன.." என்றான்.."
“மீரா.." என்று அவள் கூற
"ஐ எம் விதார்த் வருண்.. என்னுடன் வா.. உனக்கு நான் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.." என்றான் தொடர்ந்து..
மீண்டும் அவள் லேசாக சந்தேக பார்வை பார்க்க போக "ஏய் வேண்டாம் அப்பறம் பேசாமல் சென்று விடுவேன்.." அவன் எச்சரிக்கையில் பேசாமல் அவன் பின்னால் சென்று விட்டாள் மீரா.. அவளுக்கும் வேறு வழி இல்லையே...
விதார்த் சென்னையில் மிக பெரிய தொழிலதிபன்..
ஊட்டியில் தனக்கு இருக்கும் எஸ்டேட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்க தான் வந்திருந்தான்..
அன்று இரவு மீண்டும் சென்னை திரும்பும் போது தற்செயலாக வண்டியை நிறுத்திய போது தான் மீராவை பார்த்து விட்டு வந்து காப்பாற்றினான்..
இப்போது அவளை காரில் ஏற சொன்னவன் தானும் ஏறி அமர்ந்து கொண்டு "சென்னை செல்ல வேண்டும்.. எப்படியும் நாளை மதியம் ஆகி விடும்.. தூங்குவதென்றால் தூங்கு.." என்றான்...
மீராவிற்கோ எங்கே தூங்குவதென்று இருந்தது.. ஒரே நாளில் எத்தனை குழப்பங்கள், எத்தனை மன போராட்டங்கள் மற்றும் வேதனைகள்.. இதில் எங்கே உறங்குவது, பேசாமல் அமைதியாக அமர்ந்து வந்தாள் மீரா..
மலையில் இருந்து கீழே இறங்கும் போது மீராவிற்கு வெகுவாக குளிர தொடங்கியது..
அவள் அணிந்திருந்த சுடிதாரரால் வெளியில் இருந்தும் கார் ஏ.சியில் இருந்தும் வந்த குளிரை தாக்கு பிடிக்க முடியவில்லை..
அவள் குளிரில் நடுங்குவதை கவனித்த விதார்த் "பின்னால் என் கோட் இருக்கு பார்.. எடுத்து அணிந்து கொள்.. இங்கிருந்து இறங்கி விட்டால் குளிர் குறைந்து விடும்.." என்றான்..
"இல்லை பரவாயில்லை சார்." என்று மேலும் குறுகி அமர்ந்து கொண்டாள் மீரா..
அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் "உன்னால் இந்த குளிரை தாங்க முடியும் போல் தோன்றவில்லை.. உனக்கு உடம்பு ஏதாவது முடியாமல் போனால் உன்னை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு அலையைவெல்லாம் என்னால் முடியாது.. உதவி செய்த பாவத்திற்கு இன்னும் என்னை படுத்தாதே.." என்று அவன் எரிச்சல் குரலில் கூற, அவன் குரலில் இருந்த எரிச்சல் கஷ்டமாக இருந்தாலும் அவன் சொல்வது போல் அவனுக்கு மேலும் தொந்தரவாக இருக்க கூடாது என்று நினைத்தவள் பேசாமல் அவன் கூறியது போல் கோட்டை எடுத்து அணிந்து கொண்டாள்..
அது குளிருக்கு இதமாக இருந்தது.. அதில் இருந்த வந்த ப்ரெத்யேக நறுமணம் வேறு அவளை என்னவோ செய்தது..
அவளது சிறிய உடலுக்கு அவனது கோட் ஏதோ போர்வை போர்த்தியது அவளை முழுதாக விழுங்கி இருந்தது..
அந்த கோட் தந்த கதகதப்பிலும் அதன் நறுமணம் ஏற்படுத்திய இனம் புரியா உணர்விலும் அப்படியே கண் அயர்ந்து விட்டாள் மீரா..
தூங்கும் அவளை திரும்பி பார்த்த விதார்த்திற்கு 'இதெல்லாம் தேவை தானா' என்ற எண்ணம் எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை..
ஏற்கனவே அவன் ஒருத்திக்கு உதவி செய்கிறேன் என்று போய் அதனால் அவன் வாழ்வில் தொடர்ந்த நடந்து விட்ட நிகழ்வுகள் அவன் கண் முன் படமாய் ஓடியது..
'ஒரு முறை பட்டது பத்தாது என்று மீண்டும் தானே இழுத்து விட்டு கொண்டோமோ??' என்று தோன்றினாலும் 'இந்த வயதில் சாக துணிந்த சிறு பெண்ணை அப்படியே விட்டுவிட்டு செல்லவும் மனம் வந்து தொலைய வில்லையே' என்று நினைத்துக்கொண்டவன் தொடர்ந்து வண்டியை வேகமாக செலுத்தினான்.
காலை வேலையில் உளுந்தூர்பேட்டை வரை வந்திருந்தவன் அங்கிருந்த பிரபல உணவகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி மீராவை பார்த்தான்..
தலை ஒரு பக்கமாக ஜன்னல் புறமாக சாய்ந்திருக்க ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தாள் மீரா..
"ஏய்.." என்று அவன் அழைத்து பார்க்க அவளோ அசையவே இல்லை..
சட்டென்று அவள் பெயர் ஞாபம் வராததால் ஒற்றை விரலால் நெற்றியில் தட்டிக்கொண்டே சிறிது நேரம் யோசித்தவன் "யா.. மீரா.. மீரா.." என்று தனக்குள் கூறிக்கொண்டு
"மீரா.." என்று அவளை அழைத்தான்..
அவன் குரலில் தூக்கம் களைந்து எழுந்தவளுக்கு ஒரு நொடி தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை..
பக்கத்தில் விதார்த்தை பார்த்ததும் நடந்ததெல்லாம் நினைவு வர நேராக எழுந்து அமர்ந்தாள்..
"இறங்கி வா ஏதாவது சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.." என்று கூறி அவன் இறங்கி விட காரில் இருந்து இறங்க போனவளுக்கு அப்போது தான் தன்னை சுற்றி இருந்த கோட் ஞாபகம் வந்தது..
ஏனோ அதை கழட்டவே அவளுக்கு மனம் வரவில்லை.. அந்த கோட் மனதில் தனி ஒரு தைரியத்தை கொடுப்பதையும் அவள் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டி இருந்தது..
வேறு வழி இல்லாமல் அந்த கோட்டை கழட்டி வைத்துவிட்டு காரில் இருந்து இறங்கினாள் மீரா..
அப்போதுதான் அந்த காரையே ஒழுங்காக பார்த்தாள்.. இரவு இருளில் எதுவும் சரியாக தெரியாமல் இருக்க, இப்போது அந்த காரின் ப்ரமாண்டமே அவளை பயமுறுத்தியது..
அதன் விலையே கோடிகளில் இருக்கும் என்று தோன்றியது மீராவிற்கு..
வித்தார்த் மிகவும் பெரிய ஆளாக இருப்பாரோ என்று யோசித்துக்கொண்டே அவள் நிற்க, முன்னாள் இரண்டடி நடந்திருந்தவன் மீரா வராததை உணர்ந்து திரும்பி "வாட்.." என்றான் ஒற்றை புருவம் மட்டும் உயர்த்தி..
அவன் கேள்வியில் நினைவிற்கு மீண்டவள் "ஒ.. ஒ.. ஒன்றும் இல்லை.." என்று கூறிக்கொண்டே அவனை தொடர்ந்தாள்..