Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,
இப்பொது amazon kindle லில் இருக்கும் " இதயம் மறவா இன்னுயிர்" கதையில் இருந்து சிறு teaser பேபீஸ்..
உங்கள் அருணா
*****************
60 வருடங்களுக்கு முன்பு ...
அதிகாலை நான்கு மணி...
மலை மேல் ஏறிக்கொண்டிருந்த அந்த பஸ்சில் முன் பக்கம் இருவர் அமரும் இருக்கையில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து கொண்டு முகம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க முகம் முழுவதும் பூரிப்புடன் அமர்ந்திருந்தனர் வரதனும் ராணியும்..
அவர்கள் ஏற்காடு மலையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்...
இருவருக்கும் முந்தைய நாள் காலை தான் திருமணம் நடந்திருந்தது...
தன் தோளில் தலை சாய்த்து நன்றாக உறங்கும் ராணியை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் வரதன்...
இவளை கை பிடிப்பதற்குள் எத்தனை பிரச்சனை வந்துவிட்டது...
' கள்ளி தூங்குவதை பார்..' என்று செல்லமாக மனதிற்குள் கடிந்துகொண்டான்...
இவர்கள் இருவரும் எதிர் எதிர் வீட்டில் குடி இருந்தனர்... விவரம் தெரிந்த வயது முதலே ஒருவரை ஒருவர் விரும்ப இருவருக்கும் திருமண வயது வந்த பொழுது இரு வீட்டில் இருந்தும் பெரிய எதிர்ப்பு கிளம்பியது... இரு வீட்டினரையும் சமாதானம் செய்து தன் ராணியை கை பிடிப்பதற்குள் அவன் பட்ட பாடு அவனுக்கு மட்டும் தான் தெரியும்...
காதலித்த காலம் தொட்டே இருவருக்கும் மலை பிரதேசம் என்றால் மிகவும் இஷ்டம் அதனால் திருமணம் முடிந்த அன்றே தங்கள் வாழ்வை தொடங்க ஒரு மலை பிரதேசத்தை தேர்ந்தேடுத்திருந்தான் வரதன்....
ஏற்காடு செல்ல போகிறோம் என்று சொன்னதும் தன் ராணியின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும் அவள் செய்த ஆர்பாட்டமும் நினைத்தவனுக்கு இப்பொழுது கூட சிரிப்பு வந்தது ....
பல வருடங்களாக உருகி உருகி காதலித்த தங்கள் இணையோடு சேர போகும் அந்த நொடியை இரு உள்ளங்களும் வெகு ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்தது...
' வரதா...' என்ற ராணியின் குரல் அவனை மீட்டெடுக்க தன் மனைவியை திரும்பி பார்த்தான்...
அங்க பாரு வரதா சூரியன் எவ்வளவு அழகா இருக்கு என்று கண்களை உருட்டி சிறு பிள்ளையாய் ஆர்ப்பரித்தாள் ராணி ...
அவள் கூறிய திசையில் வரதனும் பார்க்க அங்கு அவன் கண்ட காட்சி அத்தனை அழகாக இருந்தது ....
சூரியன் உதிக்கும் வேலையில் வானம் செவ்வானமாய் சிவந்திருக்க கதிரவன் தன் ஒளியை மெதுவாக பரப்பி கொண்டிருந்தான் ....
ராணி அவன் தோளில் சாய்ந்திருக்க இருவரும் அந்த காட்சியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த வேலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென்று பயங்கரமாக குலுங்கியது...
என்னவென்று அனைவரும் சுதாரிக்கும் முன் பக்கத்தில் இருந்த பாதாளத்தில் விழுந்து புரண்டது அந்த பேருந்து.... கீழே விழுந்த அடுத்த நொடி பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது அந்த பேருந்து....
அந்த பேருந்தில் இருந்த ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை... பேருந்தின் அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தனர் வரதனும் ராணியும்...
"நீங்கள் இருவரும் மேலே வர வேண்டிய நேரம்...." என்று ஒரு அசரீரி ஒலிக்க தங்கள் கருகிய உடலை பார்த்துக்கொண்டிருந்த வரதனின் ஆவி கோபத்துடன் நிமிர்ந்தது ...
"நாங்க வர முடியாது.. நாங்கள் இருவர் சேர்ந்து வாழ வேண்டும் என்பது எத்தனை வருட ஏக்கம்... ஒரே ஒரு நாள் சேர்ந்து வாழ்ந்திருந்தால் கூட நிம்மதியாக வந்திருப்பேன்... ஏன் இப்படி எங்களை தண்டிச்ச...." என்று ஆதங்கத்துடன் இரைந்தான்...
அவன் பக்கத்தில் அவர்களது இறந்த உடலையே வெறித்து கொண்டு நின்று கொண்டிருந்தது ராணியின் ஆவி...
அந்த தெய்வ குரலுக்கும் இவர்கள் நிலை பாவமாக தான் இருந்தது....
அதனால் "கவலை படாதே வரதா ... இந்த பிறவியில் உங்கள் ஆயுள் முடிந்திருந்தாலும் அடுத்த பிறவியில் நீங்கள் இருவரும் சேர்ந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்... அதற்கு நான் பொறுப்பு... இப்பொழுது வாருங்கள்...." என்றது ....
வேறு வழி இல்லாமல் இருவரும் அந்த குரலுக்கு அடி பணிந்து சென்றனர்....
***************
அத்தனை நேரம் தலை குனிந்து அமர்ந்திருந்தவள் தங்களது அறைக்குள் எம். டி நுழையும் காலடி ஓசையில் தலை நிமிர்ந்து பார்த்தாள்...
மனம் முழுவதும் வெறுப்புடன் நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்த ஹர்ஷவர்தனை பார்த்த அந்த நொடி அவள் மனதில் இருந்த வெறுப்பெல்லாம் துணி கொண்டு அளித்தது போல் காணாமல் போய்விட்டது...
எம். டி என்ற பெயரில் தன் முன் வந்து நின்றவனை பார்த்து நியாயத்திற்கு அவளுக்கு வெறுப்பு தான் வந்திருக்க வேண்டும்... ஆனால் சம்மந்தமே இல்லாமல் அவனை ரசித்து பார்த்து வைக்கும் தன் கண்களை என்ன செய்வது என்று தெரியாது விழித்தாள் இந்து ...
நல்ல நெடு நெடுவென்ற உயரத்தில் சிவந்த தோலுடன் அலைஅலையான கேசத்துடனும் அளவாய் வெட்டப்பட்ட மீசையுடனும் கம்பீரமாய் நின்றிருந்தவனை அவள் அனுமதி இல்லாமலேயே அவள் கண்கள் விழுங்கி கொண்டிருந்தது...
அவளது உறைந்த பார்வையை கவனித்த பூஜா அவள் வெறுப்பில் அப்படி பார்க்கிறாள் என்று நினைத்து அவளை லேசாக இடித்தாள்...
பூஜாவின் செயலில் தன் உணர்விற்கு மீண்ட இந்துவுக்கு தன்னை நினைத்தே வெட்கமாகப்போய் விட்டது ...
'என்ன செய்துகொண்டிருக்கிறேன் நான்.. இவனை போய் இப்படி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. கடவுளே... என் நிலாவிற்கு நான் துரோகம் செய்துகொண்டிருக்கிறேன்.. எனக்கு ஏன் இவன் மீது கோவம் வராமல் ஈர்ப்பு வந்து தொலைக்கிறது .' என்று தன்னயே கடிந்துகொண்டாள் ...