All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எதற்காக இருவருக்கும் இவ்வளவு கஷ்டம் சகோ
சாரு மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டாள் ஆரியன் மன்னிக்கவில்லை என்றாலும் அதற்காக காரணத்தை கேட்கலாம் சகோ
☹☹☹☹☹☹
kekalaam. ava solrathai kettu unmainnu avan eppadi nambuvan. athu avalukuthane avamanam. athuthan thavirkiraan. :love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? வருத்தங்கள் மட்டுமே நிறைந்த பதிவு..

அயன் உமையை ஏற்கவும் முடியாமல் அவளை கண்டால் மட்டுமே பொங்கும் உணர்ச்சிகளை அடங்கவும் முடியாமல் அவன் படும் பாடு நிச்சயமாக சித்ரவதை தான்... ஆனால் அவன் படும் நிலைமையை புரிந்து உமை படும் வேதனையும் வருத்தத்திற்குரியதே... அதனால் தான் அவள் மனம் தாங்காமல் அவனுக்கு உணவு கொண்டு செல்கிறாள் கண்டிப்பாக அவனிடம் சொல்லம்புகள் கதிர் வீச்சாய் வரும் என்று தெரிந்தே... இருந்தாலும் அயன் இவள் மேல் வரையறையற்ற காதலையும் நம்பிக்கையும் வைத்ததால் அவளின் ஏமாற்றம் அவனால் ஜீரணிக்க முடியாமல் கடுமையான சொற்களை வீசி அவளை காயப்படுத்துவதும் அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் தன்னையும் மீறி அவளை காப்பதும் பாவம் இருதலை கொள்ளி எறும்பு போல் அவன் தவிக்கும் தவிப்பு இருக்கே அப்பப்பா! சொல்லிலடங்காதது... அருமை சிவா! அவள் கண்ணில் காணும் காதலையும் அவள் அணைப்பையும் கூட அவனால் நம்ப மறுக்கிறதே அவள் செய்த நம்பிக்கை துரோகம்...

அவர்கள் இருவரின் தவிப்பையும் வருத்தத்தையும் தங்களின் உணர்வுப்பூரணமான வார்த்தை வடிவில் எங்கள் எதிரில் அவர்கள் நிஜங்களாய்... அற்புதம்டா கண்ணா...

உமை சொல்ல வந்த நிஜங்களை கேட்க மறுக்கும் அயன்... அயன் சொன்ன அனைத்து நிஜங்களும் மறுக்க முடியாமல் உமை...

அவளின் வாழ்க்கையை உடைந்த பாத்திரம் என்பது.. ஆனால் அதை அவன் பாதையிலிருந்து அகற்றலாம் என்பது அழகான உதாரணம் உமை யின் வாய்மொழியிலிருந்து... இருந்தும் அயன் வருத்தம் கடலளவு... முடிவில் அயன் என் முன்னிலையிலிருந்து விலகி விடு என்பது வருத்தத்தின் வெளிப்பாடே மட்டுமன்றி மனதறிந்து அவன் சொல்வது அல்ல... உமை உடனே வந்த வேகத்தில் கனடாவிற்கு கிளம்ப ஏற்பாடு செய்வது இன்னும் அயனை புரிந்து கொள்ளவில்லை என்பதாலா?

ஒரு குழந்தையை தாய் வலிக்க அடித்துவிட்டால் அக்குழந்தையே அத்தாயிடம் வர எவ்வளவு முரண்டு பிடிக்கும் இருந்தாலும் அத்தாய் தன்னை கண்காணிக்கிறாளா என்று அழுது கொண்டே கவனிக்கும் அக்குழந்தை தூக்கி சமாதானப்படுத்த முயற்சிக்கிறாளா என்று.. நாம் தூக்கியதும் நம்மை கிள்ளும் அடிக்கும்.. குழந்தையே இப்படி எனும் போது அயனைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ? உணர்வுகளின் கொந்தளிப்பு இப்பதிவு... அபாரம் சிவா... வாழ்த்துக்கள்...
 
wow wow wow wow
ஷாந்தி அப்படியே உள்ளம் கொள்ளைபோக செய்கிறீர்கள். உங்கள் எழுத்து உணர்வை தொட்டு தீண்டி செல்கிறது. நீங்களும் எழுதுவீர்கள் போல இருக்கிறதே. எழுதுவீர்களோ. இன்னொரு புது எழுத்தாளரை நாம் சந்திக்கும் காலம் மிக அருகில் வந்துகொண்டிருக்கிறது? அப்படியானால் நான் முதல் வாசகியாவேன்.

மிக மிக மிக அழகு ஆடம்பர கருத்துப்பகிர்வு. மிக மிக நன்றி. அதுவும் இறுதியாக நீங்கள் கூறிய குழந்தையின் உவமை. ஆஹா ஆஹா... அது அற்புதம்.

மிக மிக மிக நன்றி ஷாந்தி... மனம் நெகிழ்ந்திருக்கிறது. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top