sivanayani
விஜயமலர்
ஆஹா ஆஹா. உங்கள் கருத்து பகிர்வு இருக்கிறதே. அது கொடுக்கும் இதம் இருக்கிறதே... எதற்கும் ஈடாகாது ஷாந்தி. உங்கள் பெயரில் மட்டுமல்ல, நீங்கள் போடும் கருத்துக்கள் கூட நம்முடைய மனதை சாந்திபடுத்துகிறது. குதூகலிக்க செய்கிறது. மேலும் மேலும் எழுத தூண்டுகிறது. நன்றி என்கிற ஒரு வார்த்தை போதுமா தெரியவில்லை. அந்தளவுக்கு மகிழ்ச்சியில் அர்ப்பணிக்கிறேன். உங்களை போன்ற வாசகர்கள் இறைவன் கொடுத்த வரம். மிக மிக மிக நன்றிப்பா.எப்படி இருக்கீங்க சிவா? ரொமான்ஸ் மற்றும் வருத்தம் கலந்த பதிவு...
அயன் அவளை திட்டிக்கொண்டே காப்பாற்றியது அழகு என்றால் உமை அவன் மேல் கோபப்பட்டு கொண்டே அவன் இழுவைக்கு வந்தது அழகோ அழகு... இருந்தாலும் ஏதோ திட்ட வேண்டும் என்று திட்டினானே தவிர அவளை காப்பாற்றுவதற்குள் அவன் இதயம் பட்ட பாடு சொல்லி தான் தெரிய வேண்டுமோ? அழகான பந்தம்...
அந்த கொட்டும் மழையையும் பலத்த காற்றையும் தாங்கள் வர்ணித்த விதம் இருக்கே சிவா chancelessடா... அதை விட அவர்கள் இதயம் பேசி கொண்ட வர்ணனை இருக்கே! ஹா! ஹா! எழுத்தில் கண்ணியமான அற்புதமான அழகான ஆத்மார்த்தமான காதலை உணர இப்படி தான் இருக்க வேண்டுமோ? திகைத்து விட்டேன் தங்கள் எழுத்து திறமையில்... அற்புதம் சிவா!
ரொமான்ஸ் இருக்கே அப்பப்பா! என்ன சொல்ல! எப்படி சொல்ல! சிவா! அழகான மனமொத்த காதலர்களின் ஆத்மார்த்தமான காதலை அந்த உணர்வுகளின் வெளிப்பாடும் அதை அனுபவிக்கும் விதமும் தங்கள் எழுத்தில் கண் முன் படமாக கொண்டு வந்து கண் சிமிட்டவும் நேரமில்லாமல் வெட்கப்பட்டு கொண்டே நாங்கள் பார்த்தும் உணர்த்தும் கொண்ட விதம் இருக்கே.. மெய் மறந்து விட்டோம்... அழகு சிவா!
அழகான காதலை உணர்த்திக் கொண்டே வந்த தாங்கள் அயன் என்ற ஒரு வார்த்தையில் அயன் தொபீர் என்று கீழே விழுந்தவுடன் எங்களையும் அந்த எண்ண அலைகளிலிருந்து வருத்தமான ஒரு சூழ்நிலைக்கு எங்களை தள்ளிய உங்களை அப்படியே என்ன செய்யலாம் சிவா?? பாவம் அயன்! அவனை நீங்க கொல்லறீங்க சிவா! ஹா! ஹா! ஆழமான காதலை தாங்கள் சொல்லிய விதம் அழகு...