All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான இந்நேர வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் என் காதல் தீரா அத்தியாயம் - 31 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 32
அன்று மழையில் விட்டு வந்த பின் முடிந்த அளவு அவனிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள். கௌதம் வீட்டில் இருந்தால் அவள் தோட்டத்தில் இருந்தாள். அதிகாலையே வேலைக்கு செல்பவள் இரவு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தாள். கிட்டத்தட்ட மூன்று நேர உணவும் வெளி உணவாகவே சென்றது. சற்றே வைத்திருந்த கன்னமும் இந்த ஒரு மாதத்தில் காற்றில் கரைந்திருந்தது. அவள் வரும் நேரம் அனைவரும் தத்தம் அறைக்குச் சென்று ஓய்வெடுக்கும் நேரமாக இருக்கவே இதை யாரும் கவனிக்கவும் இல்லை. அவள் மணாளனோ அவளை நினைக்க கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தான்.

அவனுக்காக செய்த அனைத்தையும் நிறுத்திவிட்டாள். அவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதை சொல்லிலும் செயல்களிலுமே காட்டிவிட்டான். இதற்கு மேல் அவனுக்கு செய்யும் எதுவுமே தொல்லையாக தான் அமையுமோ என்றே எண்ணினாள். கையெழுத்தைப் போட்டுத் தந்தால் போதுமென்றிருந்தது.

ஒரு நாளில் உறங்கும் நேரம் தவிர்த்து மீதி நேரமெல்லாம் நடித்து விரக்தியின் விளிம்பில் நின்றாள். வெளியே அம்மா அப்பாவுக்கு எதிரில் உருகி கரைவான். உள்ளே வந்து அதற்கும் சேர்த்து சாமியாடுவான்.

மாடி ஊஞ்சலில் அமர்ந்து தன் போனில் பத்தொன்பது வயது கௌதமின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே செய்வது தான் மனம் வேதனையில் துடிக்கும் போதெல்லாம் அவன் படத்தை எடுத்து வைத்து பார்ப்பாள். கனவில் கூட நினைக்கவில்லை வாழ்வின் ஒட்டு மொத்த சோகமும் அவனாய் இருப்பான் என்று.

“இப்போது திருட்டு வேலையும் தொடங்கிவிட்டாயா?” கர்ஜனையில் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தாள் ஸ்ரீனிகா. சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு தன்னைத்தான் சொல்கின்றான் எனபது புரிய கண்களை அகல விரித்து “என்ன திருட்டு” என்றாள்.

“என் கைபேசியிலிருந்து தானே இதைத் திருடினாய்?” தன் பேசியிலிருந்த படத்தை எடுத்துக் காட்டினான்.

"இந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைத்தது?" ஆச்சரியத்துடன் கேட்டாள் ஸ்ரீனிகா.

"ச்சீ வெட்கமாயில்லை உன் பொய்யை நிரூபிக்க என் போனிலிருந்தே படத்தை திருடுகின்றாயா?" எரிந்து விழுந்தவன் தன் போனை பிடுங்காத குறையாக பறித்து சென்றான். அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள் ஸ்ரீனிகா.

‘என்ன பொய், என்ன திருட்டு’

தன் போனை எடுத்து கொண்டு அந்த வீட்டுத் தோட்டத்தின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தவள் மூளை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது. என்ன நடந்தது, நான் என்ன பொய் சொன்னேன்? எதை நிரூபிக்க என் போட்டோவை நானே திருட வேண்டும். ஆனால் அவன் வைத்திருந்த போட்டோவில் என் படமில்லையே! எதையாவது மறந்துவிட்டேனா? அன்று அந்த ஷாப்பிங் மாலில் அம்மாவிற்கு அனுப்புவதற்காக ஸ்ரீநிஷா எடுத்த போட்டோ. பின் கோகுல் சர்மா வந்ததால் அனுப்பவில்லை. இவன் கையில் எப்படி கிடைத்தது. ஸ்ரீநிஷாவிடம் கெஞ்சி கொஞ்சி அந்த போட்டோவை வாங்கியிருந்தாள். ஏனெனில் அந்த போட்டோவின் பின்னணியில் முதுகு காட்டி நின்ற கௌதம் தலையை மட்டும் திருப்பி கமராவை பார்த்தது போல் நின்றிருந்தான். அதற்காகவே அந்த போட்டோவை தன் போனில் சேகரித்து வைத்திருந்தாள்.

என்னை தவிர இந்த போட்டோ இருப்பது ஸ்ரீநிஷாவிடம் மட்டுமே. நான் கௌதமிடம் கொடுக்கவில்லை. அப்படியானால்.... ஓர் சட்டத்தரணியாக அவள் மூளை சரியாகவே வேலை செய்தது.

‘ஸ்ரீநிஷாவா...? ஆனால் காதலியை கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தஸ்திற்கு தகுதியானவளை திருமணம் செய்ய போவதாக தானே’ குழம்பினாள்.

‘அவளை எங்கே எப்போது சந்தித்தார்? ஏர்போர்டிலா....? ஆனால் எனக்கும் அவளுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? அவருக்கு தெரியாவிட்டாலும் ஸ்ரீநி... அன்று தான் லண்டன் போனாள் இல்லையா? பிரச்சனையின் ஆணிவேர் நொடியில் புரிந்தது. ஆனால் ஏன்....

லேசாக தலை வலிப்பது போலிருந்தது. அவள் கிரகித்த அனைத்து விடயங்களையும் தன் போனில் வாய்ஸ் ரெக்கோர்டிங்கில் சேகரித்தாள். தலைவலியில் மீண்டும் எதையாவது மறந்து தொலைத்தால்....

இப்போதே ஸ்ரீநிஷாவை சந்தித்தே ஆகவேண்டும் போல் ஓர் தீவிரம் வர "சாரதாம்மா.. நான் ஸ்ரீனிகா. ஸ்ரீநிஷா இப்போது எங்கே இருப்பாள்?"

"அவளாம்மா இப்போது தான் அவள் தோழி ப்ரியாவின் பிறந்த நாள் பார்ட்டி என்று வெளிய சென்றாள். டிரைவருடன் தான்" என்று மாலின் பெயரை கூறினார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் கௌதம் அவளை பின் தொடர்ந்து வந்து சந்தித்த அதே மால். கசந்த முறுவல் ஒன்று அவள் இதழ்களில் நெளிந்தது. தொடங்கிய இடத்திலேயே முடிய போகிறதா?

கேட்டை நோக்கிச் சென்றவளுக்கு தலை வலிக்கவே லேசாய் தடுமாறி ரோட்டில் வந்த ஆட்டோவை மறித்துச் சென்றாள். மாடியிலிருந்து பார்த்த கௌதம் கீழே இறங்கி வந்த கௌதம் “அது ஸ்ரீனிகா தானே” சந்தேகமாய் வாட்ச்மேனைக் கேட்டான்.

அருகே நின்ற டிரைவர் “சாரி சார் நான் வராத சொன்னேன். பட் அவர்கள்தான் வேண்டாம் என்றுவிட்டார்கள்” அழாத குறையாய் விளக்கமளித்தான்.

“எஸ்ஜி மால் சார்” ஆட்டோவை பிடித்து விட்ட வாட்ச்மேன் கேட்காமலே பதிலளித்தான்.

உள்ளே போகத் திரும்பிய கௌதமிற்கு அவள் லேசாய் தள்ளாடியது நினைவில் வர ‘இம்சை’ வாய்க்குள் முனகியவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

🎻🎻🎻🎻🎻

‘எஸ்ஜி மால்’ என்ற எழுத்த்துகளைத் தாங்கி கம்பிரமாய் நின்றது அந்த மால். ஏழாவது தளத்தில் நின்றாள் ஸ்ரீனிகா. சுற்றி வர உணவு கடைகளுடன் இருந்து சாப்பிடும் வசதியுடன் இருந்தது. இந்த பத்து வருடத்தில் அதன் அழகும் மங்கி பெறுமதியும் குறைந்திருக்கும் என நினைத்திருக்க அதை இன்னும் அழாகாய் எடுத்து கட்டியிருந்தார் அதன் உரிமையாளர்.

ஸ்ரீநிஷாவும் ப்ரியாவும் தனியாகத்தான் வந்திருந்தார்கள் வேறு எவரும் வந்திருக்கவில்லை. ப்ரியாவிற்கு தெரியாமல் அவள் வாழ்வில் எதுவுமில்லை. அது நன்றாகவே தெரிந்து வைத்திருந்த ஸ்ரீனிகா அவர்கள் இருந்த மேசையில் அமர்ந்து கூர்ந்து பார்த்தவள் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள் "ஏன்...?"

ஒரு கணம் முகம் கன்றி போக தலை குனிந்தவள் சட்டெனெ நிமிர்ந்து சொன்னாள் "உன்னால் தான்.. நீதானே நான் விரும்பும் அனைவரையும் என்னிடமிருந்து பறித்து கொண்டாய் இல்லையா? அது எப்படி இருக்கும் என்று உனக்கு தெரிய வேண்டும் அதுதான்" தீவிரமாய் கூறியவளை புருவம் உயர்த்தி ஆச்சரியத்துடன் நோக்கினாள் ஸ்ரீனிகா.

"அப்படி எத்தனை பேரையம்மா உன்னிடமிருந்து பிரித்தேன்"

"நீ வந்த போது என் அப்பா பின் அம்மா, தாத்தா, பாட்டி இப்போது கே...." இடையில் நிறுத்தவே ஸ்ரீனிக்கு ஆயாசமாய் இருந்தது "முட்டாள்..." என்றவள் ஒரு கணம் தன்னை நிதானித்தாள் "உன் அப்பா எனக்கு தேவையில்லை. அவரை தள்ளி வைத்தது உன் அம்மாவும் தாத்தா பாட்டியும். அது அவர் செய்த தப்பின் தண்டனை. சாரதாம்மா என்னுடன் பழகுவது வெறும் பரிதாபம் தான்... அவர்கள் எப்போதும் உன்னுடைய அம்மாதான் ஆனால் இனிமேல் அவர்களிடமிருந்தும் ஏன் ஸ்ரீ அண்ணாவிடம் இருந்துமே விலகியே இருக்கின்றேன். உனக்கு அது போதுமா?, உண்மையில் உங்கள் குடும்பத்துடன் எந்த சம்பந்தம் வைத்து கொள்ளவும் நானோ அம்மாவோ விரும்பவில்லை விதி... அன்று உன் அம்மா எங்களை காப்பாற்றினார். அவர் முகத்திற்காகவும் தாத்தா பாட்டியின் மரியாதைக்காகவும் தான் வந்ததே இனி வரமாட்டேன். உனக்கு பிடிக்கவில்லை என்பது எனக்கு தெரியாது தெரிந்திருந்தால்..." சில கணங்கள் இடைவெளி விட்டு "பரவாயில்லை கடந்ததை பேசி பயனில்லை?" கூர்ந்து பார்த்தவள் "கடைசி நபர் யார் என்று சொல்லவில்லையே?" என்றாள்.

அந்த பெண் ப்ரியா இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள். "மகள்.." என்று ஒரு குரல் கேட்கவே மூவருமே இருக்கும் பிரச்சனையில் யாரது நான்காவதாக என்பது போல் பார்க்க அந்தப் ப்ரியாவின் முகம் சினத்தில் சிவந்தது.

"உங்களுக்கு வெட்கமேயில்லை என் அம்மாவை ஏமாற்றி விட்டு அவர்கள் இறந்த பின்னர் என்னிடம் மன்னிப்பு கேட்கின்றீங்க முடிந்தால் மேலே செல்லும் போது அவர்களிடம் கேளுங்கள். இன்னொரு தரம் என்னை தொல்லை செய்யாதீர்கள்.." அதிக சத்தமின்றி அந்த ப்ரியா அவரிடம் பொரிந்து தள்ள பார்த்து கொண்டிருந்த ஸ்ரீநிஷா "அங்கிள் உங்களுக்கு புரியவில்லையா? இத்தனை நாள் அப்பா இல்லாதவள் விட்டு போனவர் என்று அவளையும் அவள் அம்மாவையும் இந்த ஊர் எப்படி கேவலமாய் பேசியது என்று தெரியுமா? எத்தனை நாள் அழுதாள் தெரியுமா? இன்று வந்து ஒரு மன்னித்து விடு என்ற சொல்லில் அனைத்தும் மறந்துவிடுமா? தயவு செய்து அவளை இது போல் பொது இடத்தில் தொல்லை செய்யாதீர்கள்" சற்று கடுமையாகவே சொல்ல தொங்கிய முகத்துடன் அங்கிருந்து விலகி சென்றார் அவர்.

அவர் செல்லவே ஸ்ரீநிஷாவை பார்த்த ப்ரியா முறைக்க மெதுவே தலை குனிந்தாள். "ஒரு தோழியாய் என் உணர்வுகளை புரிந்த அளவு கூட ஓர் பெண்ணாய் உன் சகோதரியை புரிந்து கொள்ளவில்லை இல்லையா?" மெல்லிய வருத்ததுடன் கேட்க நிமிர்ந்து ஸ்ரீனிகாவை பார்க்கவும் கூசி அமர்ந்திருந்தாள்.

மெல்லிய முறுவலுடன் ப்ரியாவை பார்த்த ஸ்ரீனிகா "விடுங்கள் சிஸ்டர், அப்பாவின் செல்ல பெண்ணாய் இருந்தவள் தீடிரென்று இல்லை என்றதும்...." கனத்த பெருமூச்சை விட்டவள் "என் பிரச்னைக்கு அவள் மட்டுமே காரணம் இல்லை. நம்ப வேண்டியவர்கள் என்னை நம்பவில்லை, அவர்களுக்கு நான் யாரென்றும் தெரியவில்லை போகட்டும் விடுங்கள்." என்று கையிலிருந்த பார்சலை ஸ்ரீனிஷாவிடம் கொடுத்தாள் "இது உங்களுக்கு உதவியாக இருக்கும்" யாரோ போல் மரியாதையுடன் ஒலித்த அவள் குரலில் சட்டென நிமிர்ந்த ஸ்ரீநிஷாவின் கண்களில் நீர் நிரம்பிவிட்டிருந்தது.

இத்தனை காலமும் என்னதான் கோபம் இருந்த போதும் தோழிகளாய் தான் இருந்தார்கள்.

"நீ இங்கே என்ன செய்கின்றாய்? மீண்டும் அவளை மிரட்டவா? கண்களை எட்டாத முறுவலுடன் விடை பெற்று எழுந்தவள் அந்த கடுமை நிறைந்த அந்தக் குரலில் உறைந்து போய் நின்றாள்.

ஒரு கணம் கௌதம் கண்களை நேராக நோக்கினாள். வழமையாக அவனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்கும் அவள் கண்கள் இன்று வெறுமையாய் பார்க்க வாய் மட்டும் "இல்ல, என் காரணமாக சிலதை இழந்துவிட்டாள். அவற்றை ஈடு செய்ய என்னால் முடியாது. அஅதுதான்... என்னால் முடிந்ததை......" அவன் தோளை தாண்டி உயராத பார்வையுடன் கூறியவள் "வருகின்றேன்..." அனைவரிடமும் பொதுவாக விடை பெற்றாள்.

ஒரே மாதிரி இருந்த இரு பெண்களையும் மாறிமாறி பார்த்த கௌதமிற்கு குழப்பமாய் இருந்தது. ஸ்ரீநிஷாவின் கண்ணீர் நிறைந்த முகத்தை விட ஸ்ரீனிகாவின் முழுதாய் வறண்டிருந்த முகமும் வெறுமை நிறைந்த கண்களும் அவன் இதயத்தை ஏதோ செய்ய சட்டென அவள் பாதைக்கு முன் வந்து மறைத்தவன் "என்னாச்சு... ஏதாவது பிரச்சனையா?" ஏனென்றே புரியாமல் அவனையும் அறியாமல் அவள் துன்பத்தை துடைக்க துடித்தான்.

அவன் துடிப்பை பார்த்த ஸ்ரீநிஷாவிற்கு சிலது தெளிவாக புரிந்தது. ஆனாலும் அவள் மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க யாருடனும் பேசும் நிலையில் இல்லை. மௌனமாய் அங்கிருந்து செல்ல அவள் பின்னால் சென்ற ப்ரியா மேசையிலிருந்த ஸ்ரீனிகா கொடுத்த பார்சலையும் எடுத்து சென்றாள்.

ஸ்ரீநிஷா சென்றதை கூட கவனிக்கவில்லை கௌதம். மெல்ல தலையசைத்தவள் விலகி செல்ல முயல ஸ்ரீனிகாவின் கையை பிடித்து பின்புறமாக வளைத்து தன் நெஞ்சோடு முட்டி நிறுத்தியவன் அவள் கண்களையே கூர்ந்தான். இத்தனை நாள் ஆயிரம் கேள்வி கேட்ட அந்த கண்கள் இன்று அவனை வெறுமையாக பார்த்து ஒரே ஒரு கேள்வியை கேட்டது 'என்னை ஏன் உனக்கு தெரியவில்லை'. அந்த கேள்வியை படித்த அவன் கண்களுக்கு இதயம் அளித்த பதிலாய் அவள் முகம் தெரிய விதிர்விதித்து போனான் கௌதம்.

அவளை பார்க்கும் போது மட்டும் இதயத்தில் வரும் உணர்வுகள்...

அவள் அருகில் மட்டும் லயம் தப்பும் அவன் இதயம்...

அவளிடம் மட்டும் எல்லை மீறும் அவனின் ஆசைகள்....

அனைத்தையும் விட எப்போதும் அந்த பதினாறு வயது ஸ்ரீனிகாவாக அவன் மனதில் எழும் அவள் முகம்...

சட்டென அவளை விட்டவன் கைகளை குவித்து மூக்கு வாய் இரண்டையும் மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவன் தன்னை நிலைப்படுத்த கண் மூடி சில கணங்கள் யோசித்தான்.

தான் காதலித்த பெண் ஸ்ரீனிகாவா....

ஸ்ரீநிஷா இல்லையா...

இருவரையும் ஒன்றாக அருகருகே பார்த்ததில் மனம் தெளிந்துவிட்டிருந்தது.

என்னவெல்லாம் சொல்லிவிட்டான்.

ஆனால் அவளுக்கும் நான் யாரென்று தெரியாதா?

இல்லையே தெரியுமே அன்று காஃபி ஷாப்பில் வைத்து சொன்னேனே....

அன்று அவள் அவசரமாக வாஷ் ரூம் சென்றது நினைவில் நிழலாடியது.

அவளுக்கு தெரியும் மனம் மூளை இரண்டும் ஒன்று சேர்ந்து கூறியது.

பின்.... என்னை பிடிக்கவில்லையா?

ஒரு கணத்தில் உலகையே சுத்தி வரும் மனம் அதற்கு பதில் கேட்டு திரும்ப வெற்றிடம் அவனை வரவேற்றது.

வருவான்....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻33
ஒரு கணத்தில் உலகையே சுத்தி வரும் மனம் அதற்கு பதில் கேட்டு திரும்ப வெற்றிடம் அவனை வரவேற்றது. அவளை தேட லிப்ட்டினுள் சென்று கொண்டிருந்தாள். லிப்ட் நிற்கும் தளங்களை பார்த்தவாறே வேகமாமாக எஸ்கலேட்டரில் இறங்கினான். அவன் வந்து சேர்வதற்குள் வெளியே சென்றவள் வழியில் நின்ற ஆட்டோவை மறித்து ஏறி சென்றுவிட்டாள்.

பைக்கை ஸ்டார்ட் செய்து அவளை பின் தொடர முயன்றான். ஆனால் அந்த நேரத்து போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ நம்பர் கூட தெரியாமல் பின் தொடர முடியவில்லை. கண் முன்னே மற்ற வாகனங்களிடையே மறைந்துவிட்டது.

மீண்டும் மாலுக்கே திரும்பி வந்து பைக்கை நடுவழியிலேயே நிறுத்தி செக்யூரிட்டியிடம் சாவியை எறிந்தவன், வேகமாய் எட்டாவது மாடியில் இருக்கும் கண்ட்ரோல் ரூமிறக்கு சென்றவாறே போனில் அஜாவுக்கு அழைத்தான்.

“பாஸ்”

“இமிடியாட்டா எஸ்ஜி மால் வா”

எட்டாவது தளத்திலிருந்த கண்ட்ரோல்ரூம் செல்ல, அங்கிருந்த செக்யூரிட்டியின் தலைவன் அவனை அடையாளம் கண்டு சல்யூட் வைத்தான். “இந்த மாலின் வெளிபுற வாசலில் பத்து நிமிடத்திற்கு முன் உள்ளே சிசிடிவிஃபுடேஜ் வேணும் இம்மீடியட்” விரல்களை சொடுக்கிட்டான்.

“எஸ் சார்” என்ற செக்யூரிட்டிகாரட்ஸ் அவன் வெளியே சென்ற காட்சியையும் பார்த்து விட்டு “சார் இந்த ஃபுடேஜ்ஓகேவா?” கேட்டார்கள்.

“இல்லை.. இல்ல ”ஓவ்வென்றாக தட்டிவிட்டவன் கண்ணில் தெளிவாய்பட்டது ஸ்ரீனிகா ஆட்டோவில் ஏறிப் போகும் காட்சி. “எஸ், திஸ் ஒன்” ஆட்டோ டிரைவரின் முகமும் தென்பட “எஸ், யார் இந்த ஆட்டோக்காரன், எனிவொன் நோ” கேட்கும் போதே கீழே நின்ற செக்யூரிட்டிக்கு கையாட்டி செல்லும் காட்சி தெளிவாய் விழ கட்டளையாய் ஒலித்தது கௌதம் குரல் “அந்த செக்யூரிட்டியை வரச் சொல்லு”

வாக்கியில் அழைக்கப்பட அடுத்த ஐந்தாவது நிமிடம் கௌதம் கண் முன்னே நின்றான்.

வீடியோவைக் காட்டிக் கேட்டான் “இவரை உங்களுக்கு தெரியுமா?”

“எஸ் சார் இந்த மாலின் முன்னுள்ள பார்க் தான் சார்”

“அவருடைய தொடர்பு எண் ஏதாவது”

“இருக்கு சார்” எடுத்துக் கொடுக்க “கால் ஹிம்” அவசரமாய் கூறினான்.

ரிங் போகவே “இந்தப் பெண்ணை எங்கே இறக்கிவிட்டான் என்று கேளுங்கள்” பொறுமையின்றி கேட்டான்.

விசாரித்து திரும்பியவர் “காசிமேடுராக் பீச்...” மீதியைக் காற்றிடம் தான் கூறினார். அப்போது தான் லிப்டிலிருந்து இறங்கிய அஜாவை மறுபடியும் லிப்டினுள் தள்ளியவாறே தானும் உள்ளே சென்றவன் “காசிமேடுராக் பீச் போகணும் வா” இழுத்துச் சென்றான்.

🎻🎻🎻🎻🎻

மதிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கவே பீச்சீல் அதிக அளவில் ஜனநடமாட்டமின்றி இருந்தது. நிலத்திலிருந்து கடலினுள் நீண்டு இருந்த அந்த பாதையில் ஏதோ உந்த வேகமாய் நடந்து சென்ற ஸ்ரீனிகா தொப்பென விளிம்பில் அமர்ந்தாள். அத்தனை நேரமிருந்த கட்டுபாடுகள் அனைத்தும் உடைய மெலிதாய் விசும்பல் வெளிப்பட்டது.

இத்தனை நாள் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஊசலடிக் கொண்டிருந்த அவள் கனவுகள் அனைத்தும் சில்லுசில்லாய் நொறுங்கிவிட வலி பொறுக்கமால் கண்ணில் நீர் வடிந்தது.

கௌதம் விவாகரத்து கேட்ட போதும் அதற்கு மேல் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே ஆறுதலாய் இருந்தது. இத்தனை நாளும் இன்றில்லாவிட்டால் நாளை அவன் அறிந்து கொள்வான் என்ற எண்ணமே அவளுக்கு ஜீவசக்தியாய் இருந்தது. முட்டாள்தனமாய் பட்ட போதும் நீறு பூத்தநெருப்பாய் ஏதோ ஓர் நம்பிக்கை அணையாமல் உள்ளே கனன்று கொண்டிருந்தத்து.

ஸ்ரீநிஷாவிடமிருந்து இப்படி ஒரு துரோகச் செயலை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அம்மா தெரியாது செய்த தப்பை ஸ்ரீநிஷா தெரிந்தே செய்கின்றாள். ஆனால் கௌதம்... அவனுக்கும் நான் யாரென்று கடைசி வரை தெரியவேயில்லை இல்லையா?. இன்று ஸ்ரீநிஷாவின் எண்ணம் வெளிப்பட்ட போதுதான் ஒரு உண்மை புரிந்தது. கௌதமை பொறுத்த வரை ஸ்ரீநிஷா தான் அவன் சிறு வயது காதலி. அவன் அந்தஸ்து கௌரவம் அனைத்துக்கும் தகுதியானவள். மனதின் குமுறல் கண்ணீராய் வெளியேறியது.

எவ்வளவு நேரம் கடந்ததோ, எதற்கென்று தெரியாமலே அழுதாள் ஸ்ரீனிகா. சிறிது காலமென்றாலும் தந்தை போல் தன்னை பார்த்து சிறு வயதிலேயே இறந்த தாத்தா, யாரென்று உலகிற்கு சொல்ல முடியாது தனிமையில் கழிந்த ஹாஸ்டல் வாழ்கை, அப்பா இல்லாதவள் என்று கூட இருந்தவர்களின் ஏளனம், பொற்காலம் போல் அம்மாவுடனான இரு வருட வாழ்கை, அதுவும் கண்ணிழந்தான் பெற்றிழந்தான் போல் கரைந்து போன கொடுமை. அனைத்திற்கும் மேலாய் எந்த ஒருவனின் நினைவில் அனைத்தையும் கடந்தாளோ அவனே பொய்த்து போன கணம்.

அம்மா மட்டும் இல்லையென்றால் இப்போதே இந்த கடலினுள் குதித்து உயிரை விட்டுவிடலாம் போலிருந்தது. திடீரென மூச்சடைக்க நெஞ்சை தட்டினாள். அம்மாவிற்கு அவள் இன்னும் தேவை. அம்மா இருக்கும் வரையாவது இந்த உலகில் இருக்கவேண்டும். தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும் கௌதமை ஸ்ரீநிஷாவிடம் விட்டுக் கொடுத்து வந்ததை அத்தனை இலகுவாக மனம் கடக்க மறுக்க மூளை வேலை நிறுத்தம் செய்தது. தலை பிளந்துவிடும் போல் வலிக்கவே கையில் கைப்பை கூட கொண்டு வராதது உறைக்க அவள் அமர்ந்திருந்த அந்த மூன்று கோணப் பாறையிலிருந்து மெதுவாய் மயங்கிச் சரிந்தாள்.

🎻🎻🎻🎻🎻

அஜா காரை செலுத்த முன்னிருக்கையில் கண்ணாடியை இறக்கி விட்டு முழங்கையை கார் ஜன்னலில் ஊன்றி நாடியில் கையூன்றி அமர்ந்திருந்தவன் அமைதியின்றி கோட்டைக் கழட்டி பின் சீட்டில் விசிறியடித்தான். டையை தளர்த்தி சட்டை பட்டனைக் கழட்டிவிட்டான். சினத்தில் முகம் சிவக்க “ஸ்ரீநிஷா...” தடை இறுக கடித்த பற்களிடையே வார்த்தையை துப்பியவனுக்கு அன்று ஏர்போர்ட்டில் நடந்தது நினைவு வந்தது.

🎻🎻🎻🎻🎻

“ஜிகே” அழைப்பில் திரும்பியவன் ஒரு கணம் அவள் சாயலை ஆச்சரியத்துடன் பார்த்துக் கேட்டான் “நீங்கள் ஸ்ரீனிக்கு சொந்தமா?”

“ஹ்ம்ம்..” சோகமாய் தலையாட்டினாள்.

“இதில் துக்கப்பட என்ன இருக்கிறது?” ஏனோ அவளின் துக்கம் எள்ளளவு கூட அவனை பதிக்கவே இல்லை.

“வேறு என்ன தான் செய்ய முடியும்?” போலியாய் வருத்தபட்டாள். “சட்டரீபோல் கோதியான பெண் நான்தான் ஆனாலும் எனது உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டாள். என் அம்மா அப்பாவையும் தாத்தாவையும் மிரட்டி அந்த மில்லை எழுதி வாங்கி விட்டாள்” வராத கண்ணீரைத் துடைத்தாள்.

முதலில் அலட்சியம் செய்து சென்று விட நினைத்த கௌதம் அவளின் இந்த வார்த்தையில் புருவம் சுழித்து என்ன சொல்கின்றாள் என்று கேட்கத் தொடங்கினான்.

“அவள் என் சகோதரி தான். ஆனாலும் அப்பாவின் நெறிமுறையற்ற பெண்.... அவள் அம்மாவை இரண்டாம் தரமாக மணமுடித்தார். அம்மாவும் மகளும் சேர்ந்து மீடியாவில் சொல்லி குடும்ப மானத்தை வீதிக்கு கொண்டு வந்து விடுவதாக மிரட்டி அந்த மில்லை வாங்கிக் கொண்டார்கள். அது கூட பரவாயில்லை. கடைசியில் என் காதலையும்....” போலியாய் கண்ணீர்விட்டாள்.

ஏதோ தோன்ற “யார் உன் காதலன்?” கவனாமாய் கேட்டான் கௌதம்.

பலவந்தமாய் சிரிக்க முயல்வது போல் நடித்தாள். கன்னத்தில் அழகாய் குழி விழ “பார்த்தீர்களா உங்களையே என்னை யாரென்று கேட்க வைத்துவிட்டாள்” என்றாள்

கண்கள் விரியப் பார்த்தவன் “அப் அப்படியானால் நீ..” தடுமாறினான். முன்னே இருப்பவள் தான் நீ தேடிய காதலி என்று மூளை கூறியதை மனம் ஏனோ நம்ப மறுத்தது.

சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு “நீங்களே சந்தேகப்படுகின்றீர்கள், நான் யாரிடம் சென்று சொல்வேன்” கைகளால் முகத்தை மூடி அழுதாள்.

“நீ ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை”

“அன்று சொல்லத்தான் வந்தேன். ஆனா அவளால் தான் கார் விபத்துக்குள்ளாகி...” முடிக்காமல் தலை குனிந்து அமர்ந்திருக்க கண்ணில் நீர் வழிந்தது.

சினத்தில் முகம் சிவக்க “வா என்னுடன் இப்போதே என்னவென்று விசாரிக்கின்றேன். என்ன தைரியம் இருந்தால் இந்த ஜிகேவை ஏமாற்ற முயற்சிப்பாள்” அப்போதும் அவனை ஏமாற்ற எண்ணியதை நினைத்து கோபம் வந்ததே தவிர எதிரே இருந்தவளை காயப்படுத்தியததை மனமோ மூளையோ யோசிக்க மறுத்தது.

கையை பிடித்து அழைக்க பலமாய் மறுத்தாள் ஸ்ரீநிஷா. இப்போது அம்மாவும் அங்கே நிற்கின்றார். அவள் பொய் ஒரு நிமிடம் கூட தாங்காது.

“இல்ல இப்போது வேண்டாம்”

“ஏன்?”

“அ அது நா நான் அதிகம் டென்சன் ஆக கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆப்ரேசன் செய்யனும். அந்த விபத்தால் மூளையில் கட்டி. என்னதான் அவள் தீமை செய்தாலும் அவளுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது. அதோடு இப்போது திருமணமே ஆகிவிட்டது. இனி என்ன பயன்” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

“இப்போது எங்கே போகிறாய்?”

“லண்டன் ஆபரேசன் செய்ய”

“நானும் வருகின்றேன்” முடிவாய் கூறினான்.

அவள் விழித்தாள். அம்மாவிற்கு கௌதமை நன்றாக தெரியும் கூடவே வந்தால் நிச்சயம் பிடிபட்டுவிடுவாள். அதோடு சாராதா ஒரு மாதிரி நீதி நியாயம் பார்ப்பவர் மகள் என்று கூட பார்க்கமாட்டார், விட்டு விளாசிவிடுவார்.

“இப்போது வேண்டாமே, பிறகு கல்யாணமானவர்களை பிரித்த பழியையும் என் மீதே போடுவாள்” பயந்தது போல் கூறவே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் விசிடிங் கார்டை எடுத்து அவள் கையில் வைத்து அழுத்தினான். “இது என்னோட பெர்சனல் நம்பர் அங்கே என்ன நடக்கின்றது என்று எனக்கு சொல்லணும் சரியா?” அவள் கைகளை தன் கையில் எடுத்துக் கூற தலையாட்டி வைத்தாள்.

மனமேயின்றி பிரிந்து சென்றவனை பார்த்தவள் பார்வை மெதுவே ஆணவத்தைத் தத்தெடுத்தது. ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ தோளில் விழுந்திருந்த கேசத்தை ஒரு கழுத்தசைவில் பின்னே தள்ளியவளுக்கு அம்மாவிடம் செயலாளர் கூறியது ஞாபகம் வந்தது.

“அருமையான பையன் ஒரு குற்றம் குறை சொல்வதற்கு இல்லை. குடும்பமும் நல்ல குடும்பம் ஆனால்...” என்று இழுக்கவே யோசனையுடன் பார்த்தார் சாரதா.

“ஒரு மாதிரி குணம் நல்லதா? இல்லையா? என்று சொல்லத் தெரியல” தயங்கியவாறே கூறினார் “அவரிடம் யாராவது பொய் சொல்லி ஏமாற்ற முயன்றால் ரெம்ப பொல்லாதவன். ஒருத்தன் பிசினெஸ்டீலில் பொய் சொன்னான் என்று அந்த கம்பனியையே இல்லாமல் செய்துவிட்டார். நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு ரெம்ப கெட்டவன்”

“ஹ்ம்ம் சரிதான் என்னை ஏமாற்று என்று தலையைக் கொடுத்துவிட்டு இருக்க முடியாதே”என்றவர் “வேறு எந்தப் பிரச்சனையும் இல்லைதானே” விசாரித்தார்.

“இல்ல மேடம் தங்கமான பையன். நம்ம பாப்பாவா...” இழுத்தார்.

“தங்கமான பையன், நல்ல குடும்பம், தொழில் இத்தனை இருந்தும் ஏன் இத்தனை நாள் திருமணம் செய்யவில்லை”

செயலாளர் விழித்தார்.

“டீனேஜ் லவ். உங்களுக்கு தெரியாது புரியாது விட்டுவிடுங்கள். ஹா இன்னுமொன்று ஸ்ரீனிகாவும் இந்த வீட்டுப் பெண் தான் அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” சற்றுக் கடுமையாகவே கூற அதோடு தலையாட்டி சென்றுவிட்டார்.

‘பார்ப்போம் கொளுத்திப் போட்டுருக்கின்றேன். எப்படி வெடிக்குது என்று பார்க்கலாம்’ மனதினுள் நினைத்துக் கொண்டிருக்க சாரதா வந்து அவள் தலையை வருடிக் கேட்டார் “போவோமா?”.

சற்று தூரத்தில் தள்ளி நின்று அவளறியாமல் பார்த்துக் கொண்டிருந்த கௌதமிற்கு சாரதாவை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அவனுள் இருக்கும் பிசினெஸ் மேன் ஏனோ ஸ்ரீநிஷாவை நம்பதே என்று எச்சரிக்க அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

அப்படியானால் அன்று வீட்டிலும் மாலிலும் பார்த்தது நேசித்தது ஸ்ரீநிஷாவைத்தான். முகம் இறுக மெதுவே அங்கிருந்து அகன்றான். ஆனால் அவன் மனதினுள் மூளையை எதிர்த்து எதுவோ ஒன்று கூறிக் கொண்டே இருந்தது ‘இது அவளாய் இருந்தால், அன்று போல் ஏன் எந்த உணர்வும் தோன்றவில்லை. சம்திங் மிஸ்ஸிங்’. அந்த உணர்விற்கான பழியையும் மூளை ஸ்ரீனிகா மீதே சுமத்தியது மூளை. ‘உன்னை அந்த அளவு மயக்கிவிட்டாள்’.

ஆனால் ஸ்ரீநிஷா ஒன்றை மறந்துவிட்டிருந்தாள். சாதாரணமாய் பிசினெஸ் விடயத்தில் சீட் செய்பவர்களையே ஒரு வழி செய்பவன் வேண்டுமென்றே தனிப்பட்ட அதிலும் அவன் காதலி விடயத்தில் ஏமாற்றினால் என்ன செய்யக் கூடும் என்பதை யோசிக்க மறந்திருந்தாள்.



🎻🎻🎻🎻🎻

காசிமேடு ராக் பீச்சில் கார் நிற்க வேகமாக காரை விட்டு இறங்கியவன் கண்கள் அந்த இடத்தையே அலசியது. அதிக சனநடமாட்டமில்லை. வலை பின்னுபவர்களும் போர்ட் திருத்த வேலை பார்ப்பவர்களும் என மீனவர்கள் சிலரே இருந்தார்கள்.

அங்கே இருந்தவர்களை கௌதமே விசாரித்தான் “இந்தப் பக்கம் ஒரு பெண் போனாளா?” தன் தோளை தொட்டுக் காட்டி “இந்த உயரம் இருக்கும், கருப்பு ஜீன்ஸ் ரெட்டாப்” சிறிது யோசித்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் ஒரு திசையை காட்டி “அந்த பக்கம் ஒரு பொண்ணு போச்சு” என்றார்கள்.

அவர்கள் காட்டிய திசையைப் பார்க்க கப்பல்களை பார்க் செய்யப் பயன்படுத்தும் இடம் போல் நிலம் கடலினுள் நீண்டிருந்தது. இருபக்கமும் ஆங்கில எழுத்தான ‘வை’ வடிவில் பாறை போன்ற கற்கள் “தாங்யூ” அவசரமாய் அவர்களுக்கு ஒரு நன்றி உதிர்த்து விட்டு இருவரும் செல்ல தூரத்தில் ஏதோ சிவப்பாய் தெரிந்தது.

“ஜிகே அங்கே” அஜா சுட்டிக் காட்டினான். இருவரும் வேகமாக அருகே ஓடி வரவும் ஸ்ரீனிகா மயங்கி நழுவவும் சரியாய் இருந்தது.

சட்டென எட்டிப் பிடித்த கௌதமும் சேர்ந்து விழுந்தான். அவளுக்கு அடிபடாத வண்ணம் வலது கையால் தன்னோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு இடது கையை முன்னால் ஊன்ற திடிரென ஏற்பட்ட வலியில் கை நழுவியது. அப்படியே திரும்பி பின்புறமாக கல்லில் விழுந்தான். இடது முழங்கை ஊன்றுபட்டதில் வலியில் உயிர் போய் வந்தது. அவளுக்கு சிறு காயம் கூட படாமல் தரைக்குத் தூக்கி வந்தான்.

இந்த இடத்திலிருந்து விழுவது அத்தனை அபாயமில்லை தான். ஆனால் அலைகள் உரமாய் இருக்கும் போது நினைவிழந்து விழுந்தால், அலையின் வேகத்தில் பாறையோடு தலை மோதும் சாத்தியம் இருந்தது.

“அஜா தண்ணிர்” என்றவன் குனிந்து கையில் வாடிய கொடியாய் கிடந்தவளைப் பார்த்தவன் நடுங்கும் கரங்களால் அவள் கன்னம் தட்டினான் “ஸ்ரீனி.. ஸ்ரீனி... ப்ளீஸ்” தளும்பி கரகரத்த குரல் அவளிடம் கெஞ்சி மன்றாடியது. “சாரிடி மடையன் நான்” நெற்றியிலே அறைந்து கொண்டான்.

“ப்ளீஸ் கண்ணை திறந்து பார்” அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து கெஞ்சினான். அவள் அசைவின்றி இருக்க கழுத்தடியில் கை வைத்து நாடி பார்த்தவன் துடிப்பு இருக்கின்றதா? இல்லையா? என்று தெரியாமல் குழம்பினான்.

அப்படியே அள்ளி அணைத்தவன் கழுத்து வளைவில் முகத்தைப் புதைக்க அவன் உடல் குலுங்கியது. “ஸ்ரீனி ப்ளீஸ்” “ப்ளீஸ் ஸ்ரீனி” இதையே மாறிமாறி சொல்லிக் கொண்டிருந்தான்.

தண்ணீருடன் வந்த அஜா அவன் நிலையைப் பார்த்து அதிர்ந்து “ஜிகே தண்ணி...” தோளைத் தட்ட நிமிர்ந்தவன் கண்கள் கலங்கிச் சிவந்து இருந்தது.

“தங்கச்சிக்கு ஒன்றுமில்லை, வெறும் மயக்கம் தான்” அவனைத் தேற்ற முயன்றான் அஜா. அவன் கூடவே வந்திருந்த சில மீனவர்கள் அவன் கையைப் பார்த்து கண்களை விரித்தார்கள்.

“கை மூட்டு பிரண்டுவிட்டது” கையைப் பரிசோதித்தவன் “அவன் தோளைப் பிடி பொருத்திவிடுவோம்” என்றான் மற்றவன்.

அஜா “உங்களுக்கு தெரியும் தானே!” கவலையுடன் கேட்க “கடலுக்குப் போனால் திரும்பி வர சிலவேளை பத்து நாள் கூட ஆகும். அதனால் இதெல்லாம் சிறு வயதிலேயே எங்களுக்கு சொல்லித் தந்துவிடுவார்கள்” விளக்கமளித்தவன் தன் சகாவிற்கு கண் காட்டி விட்டு அவன் கையைப் பிடித்து வைத்து மூட்டை பொருத்த ஆயத்தமானான்.

அவர்கள் முன்னேற்பாடு அவசியமே இல்லை என்பது போல் கௌதம் அதைக் கணக்கிலேயே எடுக்கவில்லை கௌதம். அவன் எண்ணமெல்லாம் மடியில் மயங்கிக் கிடந்த மலர் மீதே இருந்தது.

“அஜா தண்ணி..” என்றவன் மேலே பேசும் முன் அஜா தண்ணீரைத் தெளித்தான்.

இடது கையை பயன்படுத்த முயன்றவன் முடியாமல் போகவே அதைப் பிடித்து வைத்திருந்தவர்களை முறைத்தான். அவர்களை மீறி அசைக்க முயல வலித்தது. “ஸ்...” என்றவன் எண்ணம் மீண்டும் ஸ்ரீனியிடம் சென்றுவிட்டது.

அஜாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. நேற்று வரை அவளை ஏனென்றும் கேட்கவில்லை. ஒப்பந்த திருமணம் செய்தான். யாரோ போல் நடத்தினான். நடு ரோட்டில் விட்டு வந்தான். இப்போதே கையின் வலியைக் கூட உணராமல் ஊரே வேடிக்கை பார்க்க அவளுக்காக அழுகின்றான்.

நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் “ஸ்ரீனி” அழைத்தான். அவன் வாசம் மெதுவே அவள் சுவாசத்தினுள் செல்ல புருவத்தை சுருக்கினாள் ஸ்ரீனிகா. “கௌதம்” மெல்லிய குரலனாலும் அவள் அழைத்தது கேட்டு விட “ஸ்ரீனி... யூ ஓகே” தன்னிடமிருந்து பிரித்து பதட்டமாய் அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

விலகி அமர்ந்தவளுக்கு மேக மூட்டம் போல் புத்தி குழம்பியிருக்க “நான் இங்கே எப்படி? என்ன நடந்தது?”

“ஆர்க்...” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் கை முட்டியை பொருத்த, வலியில் சத்தமிட்டான் கௌதம்.

“என்னாச்சு...” அவனையும் அஜாவையும் மாறிமாறிப் பார்க்க “பயப்பட ஒன்றுமில்லை மூட்டு விலகிவிட்டது அவ்வளவு தான். இப்போது சரியாகிவிட்டது. அங்கே பாருங்கள் வீக்கம் கூட குறைகின்றது” அஜாதான் ஆறுதலாய் கூறினான்.

திரும்பி கௌதமைப் பார்க்க, வலியில் துளித்துளியாய் நெற்றியில் வியர்வை. வலியை மறைத்த முறுவலுடன் “இட்ஸ் நதிங் ஐம் ஒகே நொவ்” என்றவன் அவள் நெற்றியில் விழுந்த கேசத்தை ஒதுக்கி “யு ஓகே ஹோச்பிடல் போவோமா?” உண்மையான அக்கறையுடன் விசாரித்தான்.

“எனக்கு ஒன்றுமில்லை தலைவலி மட்டும் தான் வீட்டில் மாத்திரை இருக்கு போய் போட்டால் சரி” என்றவள் எழுவதற்கு முயல தானே கை கொடுத்து எழுப்பி விட முயன்றான் கௌதம்.

அவன் கையை சரி செய்த மீனவருக்கு ஒன்று புரிந்தது. யார் சொன்னாலும் கேட்க மாட்டான். ஆனால் இந்தப் பெண் சொன்னால் கேட்டுக் கொள்வான். அவளை நோக்கி “தங்கச்சி, கை மூட்டு விலகி பொருத்தியிருகின்றேன். இப்போதைக்கு கை ஆட்டக் கூடாது. உள்ளே ஏதாவது எலும்பு உடைஞ்சிருக்க என்று டாக்டார் தான் பார்த்துச் சொல்லணும். கொஞ்சம் கையை ஆட்டாமல் வைத்திருக்க சொல்லம்மா” என்றார்.

தன்னை மறந்து அவன் கையை வருடியவள் “ரெம்ப வலிக்குதா?” கவலையுடன் கேட்டாள்.

சட்டென கலங்கிய கண்ணை மறைக்க மறுபுறம் திரும்பி சமாளித்தவன் “இல்ல” மறுத்து தலையாட்டினான்.

“கையை அசையாமல் கட்டி விடுவோமே” கெஞ்சலாய் கேட்டாள்.

“சரி இங்கே எப்படி வீட்டிற்கு போய் கட்டுவோம்” பதிலளித்தான்.

“ஒரு நிமிடம்” என்றவள் அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த ஷாலைக் கழட்டி கையை தொட்டில் போல் தொங்க விட்டுக் கழுத்தில் காட்டிவிட்டாள். “இப்போதைக்கு இப்படி இருக்கட்டும்” என்று.

அவர்களிடம் ஒரு நன்றியுடன் விடைபெற்று காரில் ஏற “ஏட்டா ஹோச்பிடல் போவோம்” என்றாள்.

கௌதமிற்கோ குறுகிய நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளில் ரோலோர் கோஸ்டரில் பயணம் செய்தது போல் உணர்வுகள் உச்சத்திற்கு ஏறி இறங்கியதில், அவளுக்கு ஒன்றுமில்லை என்பதே ஆறுதலாய் இருக்க மறுத்து எதுவும் கூறாமல் அவளையே பார்த்திருந்தான்.

🎻🎻🎻🎻🎻

யோசனையுடன் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தவாறு நின்றிருந்தாள் ஸ்ரீனிகா. வரும் வழியிலேயே பிடிவாதமாய் மருத்துவமனை சென்று பரிசோதித்து பார்த்து எலும்பு முறிவுகள் எதுவுமில்லை மூட்டு விலகியதுடன் டிஸ்ஷூ லேசாய் கிழிந்துவிட்டது. பயப்பட எதுவுமில்லை என்றதன் பின்னரே வீட்டிற்கு வர சம்மதித்தாள். மூட்டும் விலகி பொருத்தியதில் கையை குறைந்தது ஒரு இரண்டு வாரத்திற்காவது அசைக்க கூடது என்று இம்மொபலைசர் பிரேசையும் போட்டே அனுப்பியிருந்தார்கள்.

குளித்து பெர்முடா மட்டும் அணிந்து வெறும் மேலுடன் தலையை கூட துவட்டமால் வெளியே வந்தான் கௌதம். வந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள் நனைந்திருந்த இம்மொபலைசர் பிரேசை (immobilizer Brace) கழட்டி வலிக்காமல் டீஷிர்டை போட உதவினாள். புதிதாய் இன்னொன்றினை எடுத்து போட்டுவிட்டவள் தலையை துவட்டிவிட்டாள்.

அவனோ சற்றுக் குனிந்து இமைக்க மறந்து பார்த்திருந்தான். கண் முன்னேயே இருந்திருக்கின்றாள். கண்டு கொள்ளமால் விட்டுவிட்டேனே, மடையன் நான். நெஞ்சின் வலியில் ஏன் இன்னும் உயிர் போகவில்லை என்று இருந்தது. அவன் முகத்தில் தென்பட்ட வலியை பார்த்து விட்டு நுனி விரலால் மூட்டு விலகிய கையை வருடிக் கேட்டாள் “வலிக்குதா?”

வாயைத் திறந்தால் தொண்டையைத் தாண்டி சத்தம் வராது போலிருக்க மறுத்து தலையை மட்டும் ஆட்டிவைத்தான். அவள்தான் அவன் தேடிய ஸ்ரீனி இப்போது அவனுக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும். ஆனாலும் இருவருமே ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டதைக் காட்டிக் கொள்ளவில்லை.

யோசனையில் இருந்த அவன் கண் முன்னே மாத்திரையுடன் கை நீண்டது. திரும்பிப் பார்க்க, அவன் பார்வையில் தயக்கத்துடன் கையை பின்னே இழுத்துக் கொண்டவள் அருகே இருந்த டேபிளில் வைத்தாள் “பெயின்கில்லர்” மெல்லிய குரலில் கூறி தன் அறைக்குச் செல்ல திரும்பியவளைத் தடுத்தது. பாலுடன் வந்த வள்ளியின் வரவு.

வள்ளி கொண்டு வந்த பூஸ்ட் கலக்கிய பாலை இருவருமே அமைதியாய் குடித்தனர். மாலை நேரமே இன்னும் வந்திருக்கவில்லை ஆனாலும் இருவரும் குடித்த மருந்தின் தாக்கத்தில் உறக்கம் கண்ணைச் சுழற்ற கௌதம் கட்டிலிலும் ஸ்ரீனிகா சோபாவிலும் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்திருந்தார்கள்.

வீட்டிற்கு வந்ததுமே போட்ட தலைவலி மாத்திரை தன் வேலையைக் காட்ட ஸ்ரீனிகாவிற்கு எப்போதடா எங்காவது விழுந்து உறங்குவோம் என்றிருந்தது.

கௌதம் கட்டிலில் வந்து படு என்று அழைக்கவில்லை. அவன் செய்த செயல்களுக்கு அப்படி அழைக்கும் தைரியம் வரவும் இல்லை. சிறிது நேரத்தில் ஸ்ரீனிகா சோபாவிலேயே பின்புறம் சாய்ந்து உறங்கிப் போனாள்.

இமைக்காது அவளையே பார்த்திருந்தவன் அவள் உறங்கி சிறிது நேரம் கழித்து அருகே வந்து தலையாணியை தலைக்கு வைத்து விட்டு விலகிப் போகத் தான் நினைத்தான். ஆனால் முடியவில்லை, அவளருகே படுத்து வலது கையை அவள் தோளின் கீழ் கொண்டு சென்று தன்னுடன் அணைத்துக் கொண்டவன் உறங்க முயல, பாதி உறக்கத்தில் அவன் நெஞ்சில் முகத்தை புரட்டி அவன் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள் ஸ்ரீனிகா.

கண்கள் லேசாய் பனிக்க மெல்ல நகைத்து அவள் தலைமுடியை கலைத்துவிட்டான் கெளதம்.

வருவான்....


 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான இந்நேர வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் என் காதல் தீரா அத்தியாயம் - 33 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻34
மெதுவே உறக்கம் கலைந்த ஸ்ரீனிகாவிற்கு அவள் தலை வைத்துப் படுத்திருந்த இடம் பிடிக்கவே முகத்தைப் புரட்டி அழுத்தினாள். யாரோ தலையை இதமாய் வருடி விட மீண்டும் கண் மூடி உறங்கிவிட்டாள்.

அவளுக்கு முன்பே விழித்திருத்த கௌதம் நேரம் போனதே தெரியாமல் அவளையே பார்த்திருந்தான். குனிந்து நெற்றியில் இதழ் ஒற்ற, லேசாய் சிணுங்கியவாறே நெளிந்ததைப் பார்த்து தலையை வருடி விட, சிறு குழந்தை போல் மீண்டும் உறக்கத்துக்கு சென்றவளை லேசான மனதுடன் உல்லாசமாய் வேடிக்கை பார்த்தான்.

அவனுக்குப் புரிந்தது, அவள் மன்னிப்பைப் பெறுவது அத்தனை சுலபமாய் இருக்கப் போவதில்லை. இத்தனை வருடம் கடந்துவிட்டது அவள் அப்பாவையே இன்னும் மன்னிக்கவில்லை. உண்மையில் அது போன்ற உறவிற்காக ஏங்குபவளும் கூட. நதியா அப்பாவுடன் இருக்கும் போதெல்லாம் அவளின் ஏக்கப் பார்வைகளைக் கவனித்திருந்தான். அப்போது புரியவில்லை, இப்போது சற்றுக் காலம் கடந்திருந்தது.

ஆறுதலாய் மூச்சுவிட்டான் நல்லவேளை விவாகரத்துக்கு முன் கண்டு கொண்டான் இல்லாவிட்டால்... நினைக்கவே நெஞ்சுக் கூடு நடுங்க இறுக அணைத்துக் கொண்டான்.

ஆனால் அவனுக்கே தெரியாதது சில வாரங்களுக்கு முன் யாதவ் அந்த கோப்பை ஸ்ரீனிகாவிடம் கொடுத்திருந்தது.

அன்று ஆசையாய் ‘கையெழுத்து வைக்கவில்லையா?’ என்று கேட்ட போது உதறிச் சென்றதன் விளைவாய் அடுத்த சில நாட்களின் பின் அலுவலகத்திற்கு சென்ற ஸ்ரீனிகா யாதவை பிடித்து “கௌதமிடம் கொடுத்த ஒரு கோப்பு” இந்த நிறம் என விபரித்துக் கூறி “மீட்டிங் கோப்புகளுடன் கலந்துவிட்டது என்று கூறினார். எடுத்து விட்டீர்களா?” எதுவும் தெரியாதது போல் கேட்டாள்.

அவள் அவன் தலைமை அலுவலகத்தில் லீகல் போர்டில் மெம்பராய் இருக்கின்றாள். கேரளாவில் அவளுடன் வேலை செய்த மறுநாளே தன் கம்பனியின் லேகல் போர்டில் சேர்த்துக் கொள்வதற்கான வேலையை செய்துவிட்டான். திருமணத்தின் பின் அந்த நினைவு பின் தள்ளப்பட்டதில் அவள் அலுவலகம் வருகின்றாளா இல்லையா என்று பார்க்கவும் இல்லை அந்த அளவிற்கு அக்கறையும் இருக்கவில்லை.

அலுவலகத்தில் யாதவையும் அஜாவையும் தவிர வேறு யாருக்கும் அவள் கௌதமின் மனைவி என்று தெரியாது. அவளும் அஜா யாதவ் இருவரிடமும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்க இருவருக்குமே முழுவிபரமும் தெரிந்திருந்ததால் அவள் வேண்டுகோளை அப்படியே ஏற்றுக் கொண்டானர்.

யாதவை பொறுத்தவரை அந்த மில் பிரச்சனையில் இருந்து தப்ப இருவருமே ஒப்பந்த திருமணம் செய்து கொண்டவர்கள். அவள் தந்தை பற்றிய தகவல்களை அறிந்தவனாய் அவள் மீது சிறு அனுதாபமும் இருந்தது. இத்தனை நாளில் கௌதமின் சட்ட ரீதியான மனைவியாக இருந்தும் அதை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தாது ஒதுங்கி நின்ற விதம் பிடித்துக் கொள்ள அன்று அவள் உதவி என்று கேட்டதும் மறுக்கமால் செய்துவிட்டான்.

‘அது ஸ்ரீனிகாவின் கோப்பு’ என்று கௌதம் அன்று டென்சன்பட்டது நினைவு வர “ஒ அதுவா பாஸிடம் கொடுத்தேனே, ஒரு நிமிடம்” என்றவன் உள்ளே சென்று அந்தக் கோப்பை அவளிடமே கொடுத்திருந்தான். அந்த நேரம் புதியதாய் ஆரம்பிக்கும் கம்பனி தொடர்பான வேலைக்காக ஒரு வாரத்திற்கு கௌதம் வெளிநாடு சென்றிருந்தான்.

திறந்து பார்த்தவளை பார்த்துச் சிரித்தது அவன் கையெழுத்து.

அது கையில் கிடைத்ததுமே கேரளா சென்று விவாகரத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி கிட்டத்தட்ட முற்றுப் பெறும் நிலைக்கு வழக்கு வந்திருந்தது.

கை கடிகாரத்தைப் பார்த்த கௌதமின் நெற்றி சுருங்கியது. நேரம் மாலை ஏழினை நெருங்கிக் கொண்டிருக்க அவளோ இன்னும் அசைந்தபாடில்லை. யோசனையாய் பார்த்தவன் கன்னத்தை தட்டினான் “ஸ்ரீனி... என்னாச்சு”

“அது தலைவலி மாத்திரை... உறக்...”

“சரி பெட்டில் படு” ஒரு கையால் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று படுக்க வைத்தான். இன்னும் அவளுடன் இருக்கத்தான் ஆசையாய் இருந்தது. கீழே அம்மா அப்பா தேடுவார்கள். போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, அறையினுள் இருந்த இன்னொரு ஃபோன் அதிர்ந்தது. அது அவன் பொதுவாக பயன்படுத்தும் ஃபோன் வீட்டிற்க்கு வந்தால் அதிகமாய் பதிலளிக்க மாட்டான், தனிப்பட்ட இலக்கத்துடன் இன்னொரு ஃபோன் வைத்திருந்தான். அது ஒரு போதும் அவனை விட்டுப் பிரியாது. அதற்குத் தான் வீட்டில் இருப்பவர்களும் அவர்கள் தொடர்பானவர்களும் எடுப்பார்கள்.

தயக்கத்துடன் ஒலித்தது ஒரு ஆணின் குரல் “ஹலோ மிஸ்டர் கௌதம் கிருஷ்ணா”

“யெஸ்”

“நான் உங்க வைப் ஸ்ரீனிகாவின் ஜூனியர் வசந்த்”

“அஹ் சொலுங்கள்”

“மேடத்தை இன்று முழுக்க காணவில்லை, போன் அன்சர் இல்ல அதான்....”

“ஒருத்தரை காணவில்லை என்றால் இத்தனை நேரம் கழித்தா தகவல் தெரிவிப்பது” கடுமையான குரலில் கேடட்டான்.

“இல்ல மேடம் ஸ்ட்ரிக்கா சொல்லி இருக்காங்க, ஏதாவது இனியில்லை என்ற எமேர்யன்சி என்றால் தவிர எடுக்கக் கூடாது... பட் இன்று... காலோஜும் வரல...”

“என்ன காலோஜ்” குழப்பமாய் கேட்டான்.

அதன் பெயரைச் சொல்லி “அதில் இருவரும் தான் லெக்சரராய் வேலை செய்கின்றோம்” தகவலையும் தந்தான்.

‘ஏன் மற்ற இலக்கத்தை கொடுக்காமல் இந்த ஃபோன் நம்பரை கொடுத்தாள், இப்போது நான் போயிருந்தால் இந்த போனை நாளை காலை தான் பார்த்திருப்பேன், சிலவேளை தெரியாத இலக்கம் என்று திருப்பி அழைக்கமால் இருக்கவும் வாய்ப்பு இருக்கு’ யோசனை அதுபாட்டில் ஓட வாய் பதிலளித்தது “ஓகே அவங்களுக்கு ஒன்றுமில்லை, லேசாய் தலைவலி அதுதான் லீவு, என்னுடன் தான் இருக்கிறார். உங்களுக்கு நாளை கால் எடுக்கச் சொல்கின்றேன்”. போனை வைத்தவன் மூளை நினைவு படுத்தியது ‘தனியாக நடந்து வந்த அன்று கூட இந்த போனுக்கு தான் எடுத்தாள் இல்லையா? அன்று கேரளாவில் இருந்து வரும் போது கூட இந்த இலக்கத்தில் இருந்து எடுத்த போது தான் பதிலளித்தாள்’

எல்லாவற்றையும் விட அது அவனின் காலோஜ், ‘அங்கேயா வேலை செய்கின்றாள், ஆனால் ஏன்?’ யோசித்தவனின் மூளையை மனசாட்சி குட்டியது ‘அவள் வந்த நாள் முதல் அவளின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட என்னவென்று கேட்கவில்லை. பின் அவளின் பாடு எப்படிச் செல்லும்’

கண்கள் கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளைப் பார்க்க ‘நிறைய தப்புப் பண்ணிட்ட கௌதம்’ மூளையும் சேர்ந்து கொண்டது.


🎻🎻🎻🎻🎻

கீழே இறங்கி வந்தவன் அம்மாவிடம் “ஸ்ரீனிக்கு உடல்நிலை சரியில்லை, உறங்குகின்றாள் சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றவன் தொலைபேசி அழைக்க காது கொடுத்தான். அந்தப் பக்கம் என்ன செய்தி வந்ததோ தடை இறுக “சரி நான் பார்த்துக் கொள்கின்றேன் யாதவ்” என்றான்.

அவன் முகத்தைப் பார்த்து “என்னப்பா” என்ற அம்மாவிடம் “ஒன்றுமில்லையம்மா, அலுவலகப் பிரச்சனை” என்றதுடன் முடித்துக் கொண்டான்.

‘வெளியே சற்று நேரம் போய் வருகின்றேன்” என்றவன் மீண்டும் தயங்கி “கொஞ்சம் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று விட்டே சென்றான்.


🎻🎻🎻🎻🎻

அவன் சென்று சிறிது நேரத்தில் எழுந்தவளுக்கு உடல் அடித்துப் போட்டது போலிருக்க மெலிதாய் ஒரு வெந்நீர் குளியல் போட்டு வெளியே வந்தாள். டைனிங் மேசையில் யசோதாவும் அசோகனும் இருக்க “சாப்பிட வாம்மா” அன்பாய் தான் அழைத்தார் யசோதா.

“பசிக்கல தலைவலியில் குமட்டுது, நான் பிறகு சாப்பிடுறேன்” பதிலளித்தவள் நல்லவேளை தூரத்தில் நின்றாள். இல்லையென்றால் அவள் வயிறு போட்ட சத்தம் யசோதவிற்கு கேட்டிருக்கும். தோட்டத்தினை நோக்கிச் சென்றவள் மனம் வலித்தது. ஏன் என்று யோசிக்க மீண்டும் தலைவலிக்கும் போலிருக்க மீண்டும் உள்ளே சென்று அம்மாவின் வீணையை எடுத்துக் கொண்டு தோட்டம் நோக்கிச் சென்றாள்.

வழமை போல் அந்த நான்கு புறமும் திறந்த மண்டபத்தில் அமர்ந்து இருந்தவள் விரல்கள் வீணையின் நரம்புகளில் தவழ கேட்பவர்கள் நரம்புகள் அமைதியில் தளர்ந்தது.


எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் (2)

மதுரமான குரல் காற்றில் பரவ மெலிதாய் வீணையை மீட்டி சுருதி சேர்த்தாள். உள்ளே அமர்ந்திருந்த யசோதாவும் அசோகனும் வெளியே வந்து பார்க்க வீணை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்த ஸ்ரீனிகா கண்ணில்பட்டாள். அவள் மோன நிலையை கலைக்க மனமின்றி சிட்அவுட்டில் அமர்ந்து ரசிக்க தொடங்கினார்கள்.

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்.

சத்தமின்றி வழுக்கி கொண்டு வந்த காரில் இருந்து இறங்கிய கௌதம், அம்மா அப்பாவிற்கு சிறு புன்னகையுடன் தலையாட்டி விட்டு அந்த மண்டபத்தை நோக்கி நடந்தான்.

புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி (2)
என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!

அருகே வந்து அமர்ந்தவனைக் கூடக் கவனிக்கமால் பாடலில் ஆழ்ந்திருக்க, ஒரு துளிக் கண்ணீர் கட்டுப்பாட்டை மீறிக் கன்னத்தில் வழிய, உதட்டைக் கடித்தான் கௌதம். அவள் இருந்த இடம் மெல்லிய இருளில் மூழ்கியிருக்க அவள் முகம் தெளிவின்றி இருந்தது.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா(2)
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் (2)

பாடல் முடிந்தும் அசையாது அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு அவள் குரலில் இருந்த ஏக்கத்தில் இதயம் வலித்தது. மெல்ல தலையில் கை வைத்தான். அவனை நெருக்கத்தில் பார்த்த அதிர்ச்சியில் எழ முயன்றவள் பின்னால் வந்த யசோதா அசோகனைப் பார்த்து அப்படியே அமர்ந்தாள்.

கண்கள் லேசாய் மின்ன சிறு முறுவலுடன் இன்னும் நெருங்கி அமர்ந்தான் கௌதம். அம்மா அப்பா முன்னிலையில் விலக மாட்டாள் தானே.

அவளருகே அமர்ந்த யசோதா “இத்தனை அழகாய் வாசிக்கின்றாயே யாரும்மா சொல்லித் தந்தது” கன்னம் வருடினார். விரல்கள் உணர்ந்த ஈரத்தில் மனம் துணுக்குற்றது.

“தாத்தா...” பதிலளித்தவள் குரல் கமறியது. குறைந்தது அவர் உயிருடன் இருந்திருந்தாலாவது அவர்களுக்கு இந்த நிலை வந்திருக்காதோ.

“இப்போ எங்கே”

அமைதியாய் தலை குனிய அருகே அமர்ந்திருந்த அசோகன் “வேலா இந்த லைட்டைப் போடு” சத்தமிட்டார். பயத்தில் அவள் உடல் தூக்கிவாரிப் போட்டது அருகே இருந்த கௌதமிற்கு தெரிந்தது. லேசாய் தோளோடு அணைத்து லாவகமாய் பெருவிரலால் அவள் முகத்தைத் துடைத்துவிட்டான். அதில் அமர்ந்திருத்த அனைவரும் அவள் உறவுகள் தான் ஆனாலும் மானாய் மிரண்டு நின்றாள் ஸ்ரீனிகா.

“உன் அம்மா அப்பா என்ன செய்கின்றார்கள்? அவர்களையாவது வந்து பார்க்கவாவது சொல். ஒரு வரவேற்பு மாதிரியாவது வைப்போம். இவனைக் கேட்டால் ஏதேதோ கதை சொல்கின்றான். உன் அம்மா அப்பாவையாவது கூப்பிடு. நீ இந்த வீட்டு மருமகள் என்பதே வெளியில் தெரியாது” யசோதா அலுப்பாய் கூற என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஸ்ரீனிகா விழித்தாள். விவாகரத்துக்கு விண்ணப்பம் போட்டால் இவர் வரவேற்பைப் பற்றி பேசுகின்றார்.

குனிந்திருந்த ஸ்ரீனிகாவின் முகத்தைப் பார்த்தவாறு கௌதமே பதிலளித்தான் “சீக்கிரமே கல்யாணம் செய்யாலாம் அம்மா”

அவளுக்கோ அன்று ஹோட்டலில் வைத்து கூறியது நினைவில் வந்தது.

‘நான் கால்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்’

‘என் அந்தஸ்து கௌரவத்திற்கு ஏற்ற பெண்’


மனமோ ‘அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டானா? அவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்? சொல்லியிருந்தால் எங்கள் வரவேற்ப்பை பற்றி பேசத் தேவையில்லை இல்லையா?’ என்று ஆலோசிக்க மூளையோ ‘அது அவனின் பிரச்சனை கொஞ்சம் அடங்கு என மனதை அடக்கிவிட்டது. இத்தனை நாளில் மனம் சொன்னதைக் கேட்டு பட்ட பாட்டில் லேசாய் மூளையின் பக்கம் சாய்ந்துவிட்டாள் ஸ்ரீனிகா.

“எத்தனை கல்யணமடா செய்வாய்?” விளையாட்டாய் அவன் தோளில் தட்டினார் யசோதா.

“நிச்சயமாய் செய்யத்தானம்மா வேண்டும். இன்னும் பதின்நான்கு நாட்களில் முக்கியமான லாஸ்ட் மீட்டிங் ஒன்று இருக்கு அது முடிய ஏற்பாடு செய்வோம்” என்றவன் பார்வை ஆர்வமாய் அவள் மேல் படிய அவளோ அதற்குள் விவாகரத்து வழக்கை முடிக்க முடியுமா யோசித்துக் கொண்டிருந்தாள்.

“சரி நானும் அப்பாவும் பாரிசில் ஒரு பாஷன் ஷோவுக்கு போக வேண்டும் போய் விட்டு அப்படியே நதியாவையும் வளைகாப்புக்கு அழைக்க வேண்டும் அதையும் செய்து வருகின்றோம்” என்றவர் ஸ்ரீனிகாவைப் பார்த்து “என்னம்மா சரிதானே” கேட்டார்.

தன் நினைவிலிருந்து கலைந்தவள் “அதற்குள் முடிந்து விடும்” என்றாள். கௌதம் யோசனையாய் புருவத்தை சுழித்தான் ‘என்ன முடிந்து விடும்’.

“ஏனம்மா அத்தை என்று வாய் நிறைய கூப்பிடு, இது என்ன மொட்டையாய்” கண்டிக்க, தயக்கத்துடன் கௌதமை பார்த்தவள் அவன் புருவம் சுழித்திருந்ததைப் பார்த்து விட்டு தலையை மட்டும் வேகமாய் ஆமோதிப்பது போல் ஆட்டி வலிந்து சிரித்தாள். அவளுக்கும் ஆசையாய் தான் இருந்தது. பார்த்த முதல் நாளில் இருந்தே தன்னிடம் அன்பாய் இருப்பவர். ஆனால் மகனின் சந்தோசமா மற்றவர்களா என்று வரும் போது மகன் பக்கம் தானே சாய்வார். அது சரியும் கூட. சற்றுத் தள்ளியிருப்பதே நலம், அலைபாய்ந்த மனத்தைக் கட்டி வைத்தாள்.

“போய் சாப்பிடுங்கள்” யாசோதா சொல்ல எழுந்த கௌதம் ஸ்ரீனிகாவை கேள்வியாய் நோக்கினான்.

“இந்த வீணையை வைத்து வருகின்றேன்” அங்கிருந்து தப்பிச் சென்றாள்.

கௌதம் டைனிங் டேபிளில் அமர அருகே அமர்ந்து அவனுக்கு உணவு பரிமாறியவாறே “உனக்கும் ஸ்ரீனிகாவிற்கும் ஏதாவது சண்டையா?” யசோதா யோசனையாய் கேட்டார்.

“இல்லையே ஏனம்மா?” பதிலுக்கு கேட்க “இல்ல அவள் இன்னும் சாப்பிடவில்லை” பார்வை மகனின் முகத்தை கூர்ந்தது. அவர் எல்லோர் பிரச்சனையிலும் தலைபோடுவதில்லை. ஆனாலும் வீட்டில் இருக்கும் போது அனைத்தையும் கவனித்துக் கொள்வார். நடுப்பகல் வந்தவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை இருவர் முகமும் சரியில்லை. ஏதோ பிரச்சனை ஆனால் நேரடியாக தலையிடாமல் கோடு கட்டியதோடு ஒதுங்கிக் கொண்டார்.

அதற்கு மேல் அவனுக்கு உணவு இறங்கவில்லை “நீங்கள் போய்ப் படுங்கள் நான் அவளையும் அழைத்து வந்து சாப்பிடுகின்றேன்” என்றான் கௌதம்.

“அப்படியே அப்பாவிடம் கொஞ்சம் பேசச் சொல் வந்த புதிதில் உன் சொல்லைக் கேட்டு நடித்ததில் அந்தப் பிள்ளை பூச்சியெல்லாம் பார்த்து பயபிடுறாள்” கேலியாய் அப்பா மகன் இருவரையும் வார அவன் ஒரு கண்ணை மூடி நாக்கை கடித்தான். செல்லமாய் மகன் தலையில் குட்டி விட்டுச் சென்றார்.

அவர் செல்லவும் தீவிரமான முகத்துடன் எழப் போன கௌதமின் கண்களில் தென்பட்டாள் ஸ்ரீனிகா. மாடியின் கடைசிப் படிகளில் நின்று ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

“சாப்பிடவில்லை...”

“நான் வெளியே சாப்பிட்டேன்”

“இன்று முழுதும் நீ என்னுடன் தானே இருந்தாய்?” நெற்றியை சுருக்கினான்.

சட்டென சிந்தை கலைந்து அவனை நோக்கியவள் விழித்தாள். வள்ளி அத்தையிடம் வழமையாக சொல்லும் பொய் இலகுவாக வாயில் வந்திவிட்டிருந்தது. “அ... அது தலைவலியில் சத்தி வரும் போலிருக்கு அதான்”

அவள் உடலை அளவேடுத்த அவன் கண்களை அவளின் மெலிவு உறுத்தியது.

“சரி கொஞ்சமாய் சாப்பிடு வா”

“இல்ல வேண்டாம், எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்கு, நான் கொஞ்ச நேரம் வெளியே இருக்கப் போறேன்” கிட்டத் தட்ட தப்பி ஓடினாள். ஏதோ அலுவலாய் அந்த பக்கம் வந்த வள்ளி சாப்பட்டில் இருந்து தப்பி ஓடும் அவளைப் பார்த்து விட்டு “தம்பி நான் ஓட்ஸ் மில்க் கலந்து தாரேன் குடுங்க, அது என்றால் கொஞ்சம் விரும்பிக் குடிப்பார்கள்” என்றவாறே அவர் அதை செய்ய முனைந்தார்.

எதிலிருந்தோ தப்பி ஓடுவதைப் போல சென்றவளையே யோசனையுடன் பார்த்தவன் “இருவருக்கும் சேர்த்தே செய்யுங்கள்” என்றான்.


🎻🎻🎻🎻🎻

‘டக்’ என்ற ஒலியில் சிந்தை களைந்து நிமிர்ந்தவள் எதிரில் நின்ற கணவனைப் பார்த்து விட்டு சட்டென திரும்பி கண்ணீரைத் துடைத்தவளைப் பார்த்து மெல்ல தலையசைத்து அவளருகே ஊஞ்சலில் அமார்ந்தான்.

உண்மையில் அவன் வந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அசைவின்றி அமர்ந்திருக்க கண்ணீர் மட்டும் அருவியாய் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது. அது பாட்டில் நிற்காமல் வழியவே என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தவன் கையிலிருந்த ட்ரேயை முன்னிருந்த சிறு மேஜையில் வைக்க அந்த சத்தத்தில் தான் கலைந்திருந்தாள்.

பக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்தவன் அவள் முகத்தை பற்றி தன்னை நோக்கித் திருப்பி மென்மையாய் துடைத்துவிட்டான். அவன் செய்கையில் இன்னும் கண்ணீர் பெருக்கெடுத்தது. பெருவிரலால் துடைத்தவன் வேண்டாம் என்பது போல் தலையாட்டினான்.

கைக்குட்டையை வாங்கிக் கொண்டவள் அதில் முகத்தைப் புதைக்க அதிலிருந்த அவன் வாசம் லேசாய் மனதிற்கு இதமளித்தது. அதே நேரம், நினைவில் இல்லாத போதும், இன்று அந்த டீஷர்டை தூக்கி ஸ்ரீநிஷாவிடம் கொடுத்து வந்ததில் மனம் அடங்க மறுத்து தவித்தது. அவள் முகத்திலிருந்த தவிப்பைப் கண்டவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எதற்காக இப்படித் தவிக்கின்றாள். கண் மூடி, பெருவிரலால் நெற்றி கீறி யோசித்தவனுக்கு பிரியா எடுத்துச் சென்ற பார்சல் ஞாபகம் வந்தது. அதே போலொரு பார்சலை அன்று தன்னிடம் தந்ததும் தான் விசிறி அடித்ததும், கூடவே அவள் பெட்ஷிட், ஹன்ட் பாக், பைக் கீ என்று எல்லா இடமும் இருக்கும் கரடி பொம்மை.

மூளை உணர்த்திய செய்தியில் அதிர்ந்து கண்கள் விரிய சீற்றத்துடன் முரட்டுத்தனமாய் நாடியைப் பற்றி திருப்பியவன் கேட்டான் “அப்படியே தூக்கி கொடுத்திறிவியா நீ”.

அவன் தீடிர் சீற்றத்தில் கண்ணீர் நிற்க குழப்பத்துடன் பார்த்தாள் “எ என்ன?”

அவனுக்கு வந்த ஆத்திரத்திற்கு கையில் கிடைப்பதையெல்லாம் அடித்து நொறுக்கும் வெறியில் இருந்தான். முன்னே நடுங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், மேசையில் இருந்த ஓட்ஸ் மில்கை எடுத்துக் கையில் கொடுத்தான் “குடி”.

வேண்டாம் என்று மறுக்கப் போனவள் அந்தப் பக்கம் தண்ணீர் எடுக்க வந்த யசோதா அவர்களைப் கவனிப்பதை கண்டு வாங்கிக் கொண்டாள்.

“உங்களுக்கு” கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

ஏதோ சொல்லப் போனவனை, அழுததில் சிவந்திருந்த கண்ணும் மூக்கு நுனியும் கவர அவள் நாசியை விரலால் சுண்டினான் “சிவந்திட்டு”.

அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த கோப்பை விழப் பார்க்க அதைப் பிடித்தவன் “குடி” என்று விட்டு தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டான். அம்மா வந்ததையோ இருவரையும் கவனித்து விட்டு சென்றதையோ கௌதம் கவனிக்கவில்லை.

காலையில் இருந்து பசித்திருந்த வயிற்றுக்கு அமிர்தமாய் இறங்க இரண்டாம் தரம் அவன் கொடுத்ததையும் சத்தமின்றி அமைதியாக குடித்தவள் மெதுவே ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்து அவனின் பக்கவாட்டுத் தோற்றத்தையே கண்ணில் நிரப்பினாள்.

அவளை ஏதோ கேட்க திரும்பியவன் அவள் பார்வையில் புருவத்தை உயர்த்தினான். இன்னும் தலை வலிக்கு போட்ட டேப்லேட்டின் பாதிப்பு இருக்க அரைகுறை மயக்கத்தில் இருந்தவள் கையை நீட்டி நுனி விரலால் அவன் கன்னத்தை வருடினாள்.

“கௌதம்...”

“ஹ்ம்...”

“என்னை.. ஏ...ன் தெரியல”

அவள் விரல் இடைவெளிகளில் கைகோர்த்து கன்னத்தோடு அழுத்தி “மன்னிச்சிரடி ப்ளீஸ்... கன்னக்குழி... நா...நான் முட்டாள் தான்” மன்னிப்பு கேட்டவன் குரல் கரகரத்தது.

அவள் உறக்கத்தில் நழுவி விழ மடியில் ஏந்திக் கொண்டான். அடித்த ஊதல் காற்றிலோ இல்லை அவன் மடி சாய்ந்ததிலோ அவள் தேகம் லேசாய் சிலிர்த்தது. சற்று நேரம் உறங்கும் அவள் முகத்தையே பார்த்தவன் அப்படியே தூக்க போக, அவன் அசைவில் உறக்கம் கலைந்தவள் “வேண்டாம் கை வலிக்கும்” என்று நடந்தே வந்தாள். அவள் அறைக்கு செல்லப் போனவளை தடுத்து “இன்று இங்கேயே படு” பலவந்தமாய் படுக்க வைத்தான்.

“இல்ல நா..”

“ஸ்ஸ்...” உதட்டில் ஒரு விரல் வைத்து அடக்கியவன் “படு” அவள் கண்களுக்கு மேலாய் லேசாய் ஊதினான். படுத்ததும் உறக்கத்திற்கு சென்றவளை லேசாய் உலுக்கி ஆச்சரியத்துடன் கேட்டான் “உனக்கு என்ன உறங்கும் அழகி போல் உறங்கும் வியாதியா?”

“அது தலை வலி மருந்து.... இருபத்திநாலு மணித்தியலாம்.... மூளை ரெஸ்ட்” மீண்டும் உறங்கிவிட்டாள்.

மத்தியானத்தில் உறங்கி பழக்கமில்லாமல் உறங்கியதில் கௌதமுக்கு உறக்கம் வர மறுத்தது. அவள் இடது புறம் படுத்திருந்தவன் வலது கையால் அவளை தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டு தலைக்கு கீழ் கை கொடுத்து மார்பில் உறங்கியவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


வருவான்...
 
Last edited:

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான இந்நேர வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் என் காதல் தீரா அத்தியாயம் - 34 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻35
குழப்பம் நிறைந்த முகத்துடன் அந்தி சாய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம். ஸ்ரீனி பற்றிய உண்மை அறிந்த இந்த இரண்டு நாட்களில் அவள் நடவடிக்கையில் அவனைத் தான் சுற்ற விட்டுக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. அடுத்த நாள் அவன் எழுந்த போது அவள் உறக்கத்தில் இருந்தாள். நெற்றியில் மென்மையாய் இதழ் பதிக்க லேசாய் சிணுங்கியவளை தட்டிக் கொடுத்து உறங்க வைத்து விட்டு சென்றுவிட்டான்.

திரும்பி வந்து பார்த்தால் அவளோ மால் சென்றதோ இல்லை கடற்கரையில் நடந்ததே நினைவிலேயே இல்லை என்பது போல் நடந்தாள். வழமை போல் காலை நேரத்திற்கு செல்பவள் நேரமாகியே வீடு திரும்ப பிள்ளைகளை விட கௌதம் தான் தவித்துவிட்டான். இரண்டு நாட்களாய் கண்ணில் கூட படவில்லை. சனி ஞாயிறு கூட என்ன வேலை என்பது அவனுக்கு புரியவேயில்லை.

கீழே குனிந்து பார்க்க போர்டிகோவை விட்டுத் தள்ளி அவளின் ஸ்கூட்டி பார்க் செய்து இருந்தது. அவனையறியாமல் இதழில் புன்னகை கீற்று ஒன்று தோன்ற பக்கத்து அறைக்குச் சென்றவன் மெதுவாய் தட்டினான். பதிலின்றி இருக்க தள்ளிப் பார்க்க உள்ளே சிறு மேஜையில் அவள் கைபை இருந்தது அவளில்லை.

‘எங்கே’ யோசித்தவன் குழந்தைகளின் அறையை நோக்கிச் சென்றான்.

“ஸ்ரீமா சித்தப்பாவுக்கு எப்படி கை அடிபட்டது?” தீப் தான் தீவிரமாய் விசாரித்துக் கொண்டிருந்தான்.

“தெரியலையே மோனே சித்தாப்பவிடமே கேளுங்களேன்” பதிலளித்தாள்.

அவள் பதிலில் புருவம் நெற்றி மேட்டுக்கு ஏற கதவைத் திறந்து உள்ளே சென்றான். தீப் குட்டி மேஜை ஒன்றில் இருந்து படிக்க நிலா ஸ்ரீனிகாவின் பின்னாலிருந்து தோளில் நாடி பதித்து ஸ்ரீனிகா காட்டும் படங்கள் எதுவென மழலைக் குரலில் ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஆப்பில், டிராகன் ப்ரூட்”

ஸ்ரீனிகா “அடி போலி” என்றதில் குதூகலித்தாள் குழந்தை.

“உள்ளே வரலாமா?” வாசலில் நின்றவாறே கேட்க தலையாட்டி விட்டு “மீதியை நாளை பார்ப்போம்” மூடி வைத்தவாறே எழ முயன்றாள்.

அவள் எழுவதற்குள் அவளருகே அமர்ந்தவன் “இந்த பிரேஸ் கழன்டுட்டு பார். கொஞ்சம் சரியாய் பூட்டி விடு” என்றவாறு அவளருகே அமர்ந்தான் கௌதம். அவன் கையைப் பரிசோதிக்க அது சரியாக தான் இருந்தது ஆனால் இப்போது அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அவளுக்கு கையை காட்டும் சாக்கில் குறுக்கே கையை வைத்திருக்க அசைய கூட முடியவில்லை. குழப்பத்துடன் நிமிர்ந்து பார்க்க கவனிக்காதது போல் தீப்பிடம் “உங்கள் ஸ்ரீமாவை காப்பாத்த போய்த்தான் அடிபட்டது” என்றான்.

வெடுக்கென தலையை திருப்பிப் பார்த்தாள் ஸ்ரீனிகா ‘இது எந்தா அழிச்சாட்டியம்’ மூளை கேட்க மனம் திருப்பிக் கேட்டது ‘நீ எதையும் மறந்திறலையே’

“நிஜமா” தீப் கேட்க பதிலளித்தான் கௌதம் “உண்மையாகத்தான்”.

“ஸ்ரீமா உங்களுக்கு ஏதும் அடிபட்டதே” அருகே வந்து கவலையாய் விசாரிக்க “பாவம்டா கௌதம் நீ, உன்னைக் கேட்பார் யாருமில்லை” போலியாய் வருத்தப்பட்டான்.

அவன் கை குறுக்கே இருக்க அவன் தோள் அவள் முகத்தின் அருகே இருந்தது. நிமிர்ந்து பார்க்க அவன் தோளின் மேலாக தெரிந்த பக்கவாட்டு தோற்றத்தில் மனம் தெரிந்தே தொலைந்தது. அவனருகில் அவனுக்கு உரித்தான மனத்தினை நாசி ஆழ்ந்து நுகர்ந்ததில் இதயம் லயம் தப்ப மனமோ ரகசியமாய் அவன் அருகாமையை ரசிக்க மூளை எச்சரித்தது ‘தள்ளியிரு’. மெதுவாய் அவன் கையைத் தள்ள, அதை உணர்ந்தவன் வலிக்கமலே “அவுச்” என்றான்.

பதட்டத்துடன் இதமாய் வருடிவிட்டவள் கேட்டாள் “வலிக்குதா”

“ம்ம்” அப்பாவியாய் தலையாட்டினான்.

அதன் பிறகு அவனை தள்ளிவிடவில்லை. அவனோ கால் நீட்டி நிலத்தில் இருந்தவாறு குழந்தைகளுடன் விளையாடினான். கூடவே அவனுக்கு தேவையான சில தகவல்களும் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீனிகா தான் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றாள். பின்னேரமானால் அருகே உள்ள பார்க் போவார்கள். கடந்த இரண்டு மாதமாக செல்லவில்லை. நாளை போவதாக திட்டம். அவள் இல்லாத போது அவர்களை அழைத்துச் செல்ல ஆட்களை நியமித்து இருக்கிறார் யசோதா.

நீண்ட நாட்களின் பின்னர் சித்தப்பா தங்களுடன் நேரம் செலவழித்த மகிழ்ச்சியில் வீட்டுப் பாடம் மறந்து ஆட்டம் போட்டவர்கள் “ஸ்ரீமா ஊவா தித்தி விடுங்கள்” செல்லம் கொஞ்சினார்கள். “சரி” என்று எழும்ப முயன்றால் குறுக்கே நந்தியாய் நின்றது அவன் கை. கண் விரித்துப் பார்க்க “பாத்துடி இதற்கு மேல் விரித்தால் முழி வெளியே விழுந்திரும்” என்றான் கேலியாய்.

கையிலிருந்த போனில் “வள்ளியம்மா குழந்தைகளின் சாப்பட்டை மேலே அனுப்பிவிடுங்கள், அப்படியே எனக்கும் ஸ்ரீனிக்கும் சேர்த்து” என்றான்.

“எனக்கு வேண்டாம்” வாய்க்குள் முனங்கினாள்.

“ஏன் காற்றை உண்டு உயிர் வாழ போகிறாயா? இதற்கு மேல் மெலிந்தால் காற்றில் துலாவி தான் உன்னைக் கண்டு பிடிக்க வேண்டும்” அவள் மெலிந்த தேகத்தை பார்வை சுட்டிக் காட்ட கண்டிப்பாய் கூறினான் “நீயும் எங்களுடன் சாப்பிடு இல்லாவிட்டால் எங்களுக்கும் வேண்டாம்” தீப்பை சப்போர்ட்கு அழைத்தான் “என்ன தீப்”.

அவனும் குறுக்கே கை கட்டி “நீங்கள் சாப்பிடாவிட்டால் எங்களுக்கும் வேண்டாம்” முகத்தை திருப்ப நிலாவும் அவர்களுடன் சேர்ந்து கை கட்டி முகத்தை திருப்பிய அழகில் புன்னகைத்தாள் ஸ்ரீனிகா.

“சரி சரி நானும் சேர்ந்தே சாப்பிடுறேன், போதுமா” மீண்டும் எழப் போனவள் கெளதம் கையைப் பார்த்தாள். ‘கல்லுளிமங்கன்’ மனம் மணவாளனை வசை பாடியது. அவனோ அசையாது பதிலளித்தான் “அதான் வள்ளியம்மா சாப்பாடு கொண்டு வருகிறார்களே!”

“கை கழுவனும்” மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஓ” என்றவனுக்கு அசைய மனமில்லை. கைகழுவி வந்து மீண்டும் தன்னருகே இருப்பாளா என்பது சந்தேகமாகவே இருக்க மனமேயின்றி கையை எடுத்தான்.

திரும்பி வந்தவள் குழந்தைகளுக்கு நடுவில் அமர, நிலாவை தூக்கி மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அவளருகே அமர்ந்தான்.

வள்ளியிடம் “கடைசியாய் அந்த தேங்காய் பூ தோசையையும் கொண்டு வாருங்கள்” என ஆச்சரியமாய் கேட்டான் கெளதம் “அது என்ன தேங்காய் பூ தோசை?”.

“அது இவர்களுக்கு” குழந்தைகளைக் காட்டினாள்.

“ஆ…” இருவருக்கும் தோசையை பிய்த்து ஊட்டி விட்டவளிடம் தானும் வாயைத் திறந்து காட்டினான்.

“எ..என்ன…” தடுமாற “ஊட்டி விடு… உன்னைக் காப்பாற்ற போய் தானே அடிபட்டது”

முட்டை கண்ணை விரித்துப் பார்த்தவள் கேட்டாள் “இடது கை தானே”.

“நான் இடது கையால் தான் சாப்பிடுவேன்” புளுகினான்.

“கள்ளம் பரஞ்சில்லா” வாய்க்குள் முணுமுணுத்தாள்.

“ஆ… விளங்கல” காதை அவள் வாயருகே கொண்டு வர “ஒன்றுமில்லை உங்கள் அம்மா அப்பா தான் இங்கே இல்லையே...” சட்டென விலகி அவளை முறைக்க மீண்டும் வாய்க்குள் முணுமுணுத்தாள் “வந்திடருல்ல கோபகுலனாயக”.

அவள் தட்டிலிருந்த தோசையை சம்பலுடன் வில்லலாய் எடுக்க பார்த்திருந்தவளுக்கு பாவமாய் இருந்தது. மனமோ ‘ஒரு வாய் தோசை கொடுத்தால் குறைந்தா போய் விடுவாய்’ திட்டித் தீர்த்தது.

“எஎஎன்ன?” கை அவள் வாய் முன் நீள முட்டைக் கண்ணை இன்னும் விரித்தாள்.

மறு கையால் வாயை திறக்க முயல கை வலியில் முகம் சுணங்க “பார்த்து” இரண்டு கையாளும் அவன் கையைப் பிடித்தாள். லேசாய் சிரித்தவன் “வாயை திற” என்றான்.

அவனைப் பின்பற்றி குழந்தைகள் இருவரும் அவளுக்கு ஊட்ட வாயைத் திறந்து வேண்டிக் கொண்டாள். தீப் கௌதமுக்கு கொடுக்க வாயை திறக்க மறுத்தவன் “உங்களுக்கு முதலில் ஊட்டி விட்டது ஸ்ரீமா தானே எனக்கு மட்டும் இல்லையா?” முகத்தை படு சோகமாக வைத்துக் கொண்டு கேட்டான்.

தீப் திரும்பி ஸ்ரீனிகாவைப் பார்க்க, நிலா அவள் மடிக்கு தாவி கன்னம் இரண்டையும் பிடித்துக் கொண்டு “மாமா தித்து” தள்ளினாள்.

“அம்மான் குட்டியல்லோ” வாய்க்குள் முணுமுணுத்தவள் தோசையை பிய்தது அவன் வாய்க்கு அருகே கொடுக்க அசையாத பார்வையுடன் அவள் கைகளைப் பிடித்து வேண்டுமென்றே உதடு விரல்களில் படும் வண்ணம் வாங்கிக் கொள்ள அவளுக்குத் தான் அவன் பார்வையும் தொடுகையும் ஏதோதோ செய்தது.

கன்னம் லேசாய் சிவந்தது அவன் கண்களில் பட சட்டென முறுவலித்தவன் தோசையை எடுத்து அனைவருக்கும் ஊட்டினான்.

குழந்தைகளுக்கு தோசையை ஊட்டிக் கொண்டிருந்தாலும் அவள் மூளை ஒரு புறமாய் யோசித்துக் கொண்டிருந்தது. ‘என்னைக் காப்பற்ற போய்த்தான் அடி பட்டது என்றாரே உண்மையா அப்படியானால் எனக்கு ஏதும் ஞாபகமில்லையே!’ கை கழுவி வந்து அமர்ந்தவள் முகத்திலிருந்த யோசனையைப் கவனித்துக் கேட்டான் “என்ன?”

சட்டென அதிர்ந்தவள் வேகமாய் தலையாட்டினாள் “ஒன்றுமில்லை”.

“பார்த்து தலை கழன்று விழுந்திடும்” கேலியாய் கூறியவன் பிடிவாதமாய் கேட்டான் “என்ன?”

“இல்ல உண்மையிலேயே என்னை காப்பா..?” பாதியில் முழுங்கினாள்.

“வேறு யாரைக் காப்பற்ற கை முறிவதைக் கூட கவனிக்கமால் இருப்பேன்?” மெல்லிய சினத்துடன் திருப்பிக் கேட்க, வேகமாய் மறுத்து தலையாட்டி விட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல விசாரித்தான் “எங்கே?”.

“தாத்தா பாட்டியுடன் விளையாட சாப்பிட்டதும் படுத்தால் சமிக்காது”

“நானும்..” என்று ஏதோ சொல்ல எடுத்தவனை தடுத்தது அவன் போனின் அழைப்பு. அலுவலக விடயமாக யாரோ அழைத்திருந்தார்கள். அவன் போனை எடுத்துக் கொண்டு செல்ல குழந்தைகளை தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு ஸ்ரீனிகா அறைக்குச் சென்று தன் போனை தேடி எடுத்தாள்.

அதில் ரெகார்டிங் செய்து வைத்திருந்ததை மீண்டும் ஒலிக்க விட்டதில் சிலது விளங்கவே கண்களை மூடி நிகழ்ச்சியை கோர்த்து பார்க்க முற்று முழுதாக ஞாபகம் வராவிட்டாலும் நடந்தவை ஓரளவு விளங்கியது. கௌதமிற்கு தான் யாரென்பது தெரிந்துவிட்டதா என்பது விளங்காத போதும் ஏன் என் பின்னால் வந்தான் என்று கேள்வி கேட்ட மனதை மூளை ஒரு குட்டு வைத்து அடக்கியது. அதைப் பற்றி அதிகம் யோசிக்கமால் கௌதமை தேடிச் சென்றாள்.

போன் கதைத்தவாறே திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவன் “ஐ வில் கால் யூ பாக்” போனை கட் செய்து கேட்டான் “என்ன ஏதாவது சொல்ல வேண்டுமா?”

“அஅது வந்து...” அவள் தடுமாற அமைதியாய் பலகனி சுவரில் சாய்ந்தவாறு பார்த்திருந்தான்.

“சாரி என்னால தானே இப்படி....” ஆரம்பிக்க கண்கள் மின்ன இடைமறித்தான் “சரி இப்போது என்ன செய்வதாக உத்தேசம்”

“ஹா...” என்று விழித்தவளை அள்ளிக் கொள்ள கைகள் துடித்தாலும் சூழ்நிலை கருதி கட்டுப்படுத்தியவன் “ஹ்ம் உன்னால் தான் கை உடைந்தது. அதற்கு பிரதியீடாக என்ன செய்ய போகிறாய்?” அப்பாவியாய் கேட்டான்.

அவன் சாதுர்யம் புரியாமல் “எஎன்ன செய்ய வேண்டும்?” அவன் வலையில் இலகுவாய் விழுந்தாள்.

“ம்ம்ம்...” யோசிப்பது போல் பாசாங்கு செய்தவன் “என் கை உடைந்துவிட்டது சோ திரும்ப சரி வரும் வரை நீ ஹெல்ப் செய்ய வேண்டும்” வாய் கூற மனமோ என் ஆயுள் முழுவதும் என்றது.

“ஹா” விழித்தவள் “என்ன ஹெல்ப்?” கவனத்துடன் விசாரித்தாள்.

“இன்று சாப்பாடு தித்தி விட்டது போல் தான், அந்தந்த நேரத்தில் சொல்கின்றேன்” புன்னகைத்தான்.

‘பெரிய்ய்ய புன்னகை மன்னன்.... அச்சோ தேவையாடி இது உனக்கு வலன்டறிய வந்து வாய குடுத்து மாட்டியிருக்க’ மூளை காறி துப்ப தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அவள் தலையாட்டிய அழகில் அவள் தலையில் கை வைத்து ஆட்டிவிட்டவன் அவள் பின் வாங்கிய வேகத்தில் யோசனையுடன் கையை எடுத்துவிட்டான். திரும்பி திரும்பி பார்த்தவாறே உள்ளே சென்றவளை பார்த்து நின்றவன் புன்னகை மறைந்து முகம் வேதனையை தத்தெடுத்தது.

அவள் காலில் வேண்டுமானாலும் விழ அவன் தாயார்தான். ஆனால் அவள் அவனை நம்ப வேண்டுமே, அவளை நெருங்கும் போதெல்லாம் கண்ணில் தெரியும் பயத்தை கவனித்து விட்டானே. இப்போது கூட தலையில் கை வைக்கும் போதும் பயத்தில்தான் பின் வாங்கினாள். இந்தப் பயத்தை வைத்துக் கொண்டு தன்னை நம்ப மறுத்து வேறு முடிவு எடுத்துவிட்டால் என்ன செய்வது.

அவள் முடிவை ஏற்று ஒதுங்கப் போவதில்லை. ஆனாலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதோடு அவளை இத்தனை நாள் படுத்தியதே போதும். அவளுக்கும் தன்னை பிடிக்கும் அன்று திருமணத்தின் போதே ஆடியில் விழுந்த அவள் விம்பம் நினைவில் ஆடியது. விழுங்கி விடுவது போல் பார்த்தது நினைவில் எழ, எல்லாம் அந்தப் பார்வையினால் வந்தது. அன்றே அந்த பார்வையை அடையாளம் கண்டிருந்தால்.... உடல் முழுதும் வலிப்பது போலிருந்தது. அவனை மீறி எழுந்த பெருமூச்சை கூட விட முடியவில்லை. இதயத்திற்கு பதில் பாரங்கல்லை வைத்தது போலிருந்தது.

திரும்பி நின்று நட்சத்திரங்கள் தெரிந்த ஆகாயத்தை வெறித்தவன் மனம் சங்கல்பமே எடுத்தது ‘அவளை நிறைய கஷ்ட படுத்திட்ட இனிமேலாவது அவளிடம் கோப படாதேடா’.

ஸ்ரீனிகா அடுத்து செய்த வேலையில் அந்த சங்கல்பத்தையும் மீறி மீண்டும் கோபப்பட்டான் கௌதம்.

வருவான்...
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻36

லேசாய் நெளிந்த ஸ்ரீனிகா அருகே கதகதப்பாய் தட்டுப்பட்ட பார்த்தாவின் மார்பில் முகத்தை புரட்டி புன்னகைத்து சோம்பலுடன் நிமிர கண் முன்னே தென்பட்டது அவன் முகம். துயில் முழுமையாய் கலையாத நிலையில் அழகான புன்னகையுடன் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கி விட்டவள் ஒரு விரலால் நெற்றியிலிருந்து நாசியை நோக்கி கோடு இழுத்தாள். புருவத்தின் மேலாய் விரல்களை ஓடவிட்டவள், மூடியிருந்த நீண்ட கண்களைப் பார்த்து உதட்டை சுழித்து சிரித்தாள்.

“வல்லிய சுந்தர சேட்டனானு” விரல்களை குவித்து தன் உதடுகளில் ஒற்றி, அவன் மார்பின் மீது இரு கைகளையும் ஊன்றி அவனை ரசித்து கொண்டிருந்தாள்.

எப்போதும் காலையில் நேரத்திற்கு எழும் பழக்கமுள்ள கெளதம் இன்றும் எழுந்துவிட்டான். ஆனால் அவன் கைகளில் குழந்தையாய் துயில் கொண்டவள் எழாமலிருக்க அவள் உறக்கத்தை கலைக்க மனமின்றி அப்படியே படுத்திருந்தான். இரவு அவன் வேலை முடித்து வந்த போது ஸ்ரீனிகா சோபாவிலேயே படுத்து உறங்கிவிட்டிருந்தாள். நேரம் கழித்து வந்த அவனும் அவளருகில் சோபாவிலேயே படுத்துவிட்டான்.

உறக்கம் கலைந்து அவள் அசையவே என்ன செய்கின்றாள் என்று பார்க்கும் ஆவலில் கண்ணை மூடி உறங்குவது போல் நடிக்க அதுவே பரம சோதனையாகிப் போனது. இதற்கு மேல் நடிக்க முடியாது போல் தோன்ற லேசாய் அசைந்தான் கெளதம்.

அவன் அசைந்த அதிர்ச்சியில் முற்றாய் துயில் கலைந்தவள் எழும்ப முயன்று, முடியாமல் உருண்டு நிலத்தில் விழ “ஹேய் பார்த்து…” என்றவாறு வேகமாய் எழுந்த கெளதம் ஸ்ரீனிகாவைப் பார்க்க அவளோ குழந்தை கண்ணன் தவழ்ந்து போல் முன்னால் கையூன்றி அவனைப் பார்த்திருந்தாள்.

“நான்தான் இரவு முதலில் படுத்தேன்” அவசரமாய் கூற “ஹா...” விழித்தான் கெளதம்.

“நீங்கதானே அம்மா அப்பா இருக்கும் போது இங்... இங்க படுக்க சொன்னீர்கள்” குரல் தாழ பயத்தில் முகம் வெளிறியது. இதற்கு என்ன சொல்வானோ சும்மாவே அது நாக்கா தேள் கொடுக்கா என்று எண்ண தோன்றும் அளவு இருக்கும்.

அவள் சொன்னதை காற்றில் விட்டவன் நேராக அமர்ந்து சற்று முன்புறமாக குனிந்து பெருவிரலால் அவள் கன்னம் வருடி கூறினான் “குட் மோர்னிங்”

“ஹா…” காற்றுத் தான் வந்தது.

“குட் மோர்னிங்” திரும்பவும் கூறினான். பதிலின்றி அவள் எழ போக கையைப் பிடித்து தடுத்தவனை ‘என்ன’ என்பது போல் பார்த்தாள் ஸ்ரீனிகா.

“குட் மார்னிங் சொல்லு” என்றான் ‘இவன் என்ன பச்சை குழந்தையா?’ என்று மனம் வசை பாட இரண்டு தரம் கூறினாள் “குட் மார்னிங் குட் மார்னிங்” மீண்டும் ஓட போனவளை தடுத்து நிறுத்த ‘இப்போது என்ன’ என்பது போல் பார்த்தாள்.

“ரிமெம்பர்.... நேற்று எனக்கு உதவுவதாக கூறினாய்! இன்று வர வேண்டும்” என்றவனை பார்த்து புரியாத மொழி பேசியது போல் விழித்தாள்.

“இப்போது நேரம் ஆறரை சரியாய் ஏழரைக்கு தேநீருடன் வா” என்றான்.

அனைத்துக்கும் தலையை உருட்டி வைத்தவள் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.

பின் கழுத்தை அழுத்திவிட்டவன் சற்று முன் அவள் செய்த செய்கையில் கட்டவிழ்ந்த எண்ணங்களை அடக்க அரும்பாடுபட்டான் கெளதம். உறங்குவது போல் நடித்த போது இப்படி நடப்பாள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

உற்சாகமாய் சீட்டியடித்தபடியே குளித்து வந்து ஜீன்ஸ் பெனியனுடன் ஒரு கையால் தலை துடைத்துக் கொண்டிருக்க தேனீருடன் வந்தவள் ‘உள்ளே போகலாமா வேண்டாமா’ என்ற சிந்தனையுடன் வாசலிலேயே நின்றிருந்தாள்.

காதில் உள்ளே ப்ளுடூதில் “இ வில் கால் யு பக் யாதவ்” கட் செய்தவன் “உள்ளே வா” அழைத்தான். தேனீரை வாங்கி அவளைப் பார்த்தவாறே அருந்தியவன் கண்களை அவளின் மெலிவு உறுத்த “நீ குடிச்சியா?” கேட்கவே மையமாக தலையாட்டி வைத்தாள்.

நகத்தை கடித்து துப்பியவள் “என்ன செய்யனும்?” விசாரித்தாள்.

“அந்த சேர்ட்டை போட உதவி செய். அப்படியே டையையும் கட்டி விடு” என்றான்.

“உங்களால் போட முடியும் தானே” விட்டால் அழுது விடுவாள் போலிருந்தது.

“ச்சு ஷர்ட் பட்டன் போடணும், டையை கட்டனும் எப்படி ஒரு கையால் செய்வது” அப்பாவியாய் கேட்டான். “வேறு யாரையும் ஏற்பாடு செய்யலாம். ஆனால் அம்மாவுக்கு சந்தேகம் வருமே” விளக்கம் வேறு கொடுத்தான்.

“சரிதான்” தலையை உருட்டியவள் “சேர்ட் எங்கே?” தேடினாள்.

“அங்கே” கை காட்டினான். சுவரருகே ஹன்கரில் தொங்கிக் கொண்டிருந்தது. எடுத்துக் கொண்டு திரும்பியவள் எதிர்பாராத விதமாய் அருகே நின்ற கணவனைக் கண்டு பின்னால் நகர தடுத்து நான் இங்கே இருக்கின்றேன் என்று பல்லிளித்தது சுவர்.

நிமிர்ந்து பார்க்க ‘செய்’ என்பது போல் கண் காட்டினான். அவன் கை பிரேசை கழட்டி வலிக்காமால் சேட்டை போட்டுவிட்டவள் பட்டனை பூட்டி டையை கட்டுவதற்குள் வியர்த்து விறுவிறுத்துவிட்டாள். அவள் கட்டுவதற்கு வாகாய் ஒரு கையை சுவரில் கையூன்றி குனிந்து நின்றவன் விழிகள் அவள் முகத்தை விட்டு அசையவில்லை.

படபடத்த இமைகளினுள்ளே அலைபாய்ந்த கருவிழிகள், லேசாய் சிவந்த கன்னம், டென்சனின் சற்றே விடைத்திருந்த நாசி, லேசாய் பிரிந்து நடுங்கிய செவ்விதழ்களின் பின்னே மாதுளை முத்துகளாய் தெரிந்த பல்வரிசை, அவனருகமையில் நடுங்கிய கரங்கள் என அக்குவேறு ஆணி வேறாய் அவளை கூறு போட்டது அவன் பார்வை.

மெதுவே கையை பின்னுக்கு கொண்டு சேட்டை இன் செய்ய இருவர் பார்வையும் ஒன்றை கெளவி நின்றது. விலகி நிற்க நெற்றியில் பூத்திருந்த குறு வியர்வையைப் ஒற்றை விரலால் வழித்து பார்த்தவன் “வியர்த்திட்டு” என்றான்.

அவன் ஸ்பரிசத்தில் மூச்சு தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர மாட்டேன் என்று தவிக்க தென்றலாய் நெற்றியில் ஊதிவிட்டான். கண்கள் படபடக்க நின்றவளைப் பார்த்த அவன் மனசாட்சி திட்டியது ‘இதற்கு மேல் தாங்க மாட்டாள்’ மெதுவே விலகி நிற்க சிறு பயத்துடன் பார்த்தாள்.

கௌதம் “போ” என்றது தான் தாமதம் சிட்டாய் பறந்திருந்தாள்.

பின்னங்கழுத்தை அழுந்த வருடியவன் உதடுகளில் நிறைவான புன்னகை பூத்தது. அவள் நாசி ரகசியமாய் அவன் வாசத்தை சுவாசித்ததை அவன்தான் கண்டு கொண்டானே!

🎻🎻🎻🎻🎻

அவன் சொன்னதற்காக இரவு சோபாவிலேயே படுக்கும் ஸ்ரீனிகாவிற்கு இரவு எந்த நேரம் வீட்டிற்கு வருகின்றான் என்பதே தெரியவில்லை. காலையில் நேரத்திற்கு எழுந்தால் அவன் கைகளில் எழுந்தாள். இல்லையென்றால் அவன் எழுவதில் உறக்கம் கலைந்தாள். வேலைக்கு சென்றால் ஒட்டிக் கொண்டு வந்தான். சிலவேளை வேலை முடிந்து வருபவளை அழைக்கவும் வந்தான். அஜாவை அவள் பைக்கை எடுத்து வர சொல்லிவிட்டு அவன் டிரைவ் செய்தான். அவளுக்கு சிலவேளைகளில் ஜெகன்மோகினி படத்தில் நின்று கொண்டு ஓடும் நகைச்சுவை நடிகர் போலிருந்தது, அவனை விட்டு விலக எத்தனை முயற்சி செய்தாலும் கடைசியில் அவனருகிலேயே முடிந்தது.

அரண்டு போயிருந்தாள். அவன் திடீர் மாற்றத்தின் காரணம் புரியாமல் தவித்தவளுக்கு யாசோதா அசோகனின் உரையாடல் பதிலளித்திருந்தது. தோட்டத்தில் பெரிய செடியின் மறுபுறம் கை தவறி விழுந்த போனை தேட அவள் இருந்ததைக் கவனிக்கமால் இருவரும் உரையாடிவாறே அந்த இடத்தைக் கடந்து சென்றார்கள் “அவன் என்ன காரணத்திற்காக திருமணம் செய்திருந்தாலும் உன் மருமகளை நேசிக்கின்றான். இல்லாவிட்டால் புதிதாக ஆரம்பித்திருக்கும் கார் கம்பனி வேலைகளுக்கு நடுவிலும் ஸ்ரீனிகா பின்னால் திரிவானா?”.

விழித்துக் கொண்ட மூளை ‘அவன் அம்மா அப்பாவை நம்ப வைக்க தான் இதையெல்லாம் செய்கின்றான்’ என்று முடிவெடுக்க அதற்கு மேல் ஏன் எதற்கு என்று மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை. மீண்டும் நம்பி ஏமாறும் திடம் என்னிடமில்லை என்றிருந்தது மனம்.

அடுத்த சில நாட்களில் கௌதமுக்கு கார் கம்பனியின் ஆரம்ப கட்ட வேலை முறிக்க இருபத்து நாலு மணித்தியாலாமே போதாது போலிருந்தது. அப்படியிருந்தும் அவளுடன் நேரம் செலவழித்தான்.

ஆனால் இன்று முழுவதும் கௌதம் அவளைத் பின்தொடரவில்லை ‘என்ன இன்று ஜெகன்மோகன் யாரை பிடிக்க போனான்’ மனம் வேடிக்கையாய் கேட்க ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் அவன் அலுவலகம் வந்த ஸ்ரீனிகா தன் வேலையை ஆரம்பித்தாள். சட்டத்தரணி நீதிமன்றம் போக வேண்டியிருக்கும் என்பதால் அவளுக்கு வசதியான நேரம் வந்து வேலையை முடித்துக் கொடுத்தால் போதுமென்பது வேலைக்கான ஒப்பந்தத்தில் இருந்தது.

இன்று அவன் ஆரம்பிக்கும் தொழில் தொடர்பான ஒபந்தம் ஒன்றினை சரி பார்க்க வேண்டும் என லீகல் போர்டின் தலைவர் ரங்காசாரி அழைத்திருந்தார். ஒப்பந்தத்தை பார்த்தவளுக்கு தலை சுற்றிவிட்டது. வெற்றிகரமாக முடித்தால் பில்லியன் கணக்கில் லாபம் பார்க்க கூடிய தொழில். அவனுக்கு மட்டுமேயான தொழில். அன்று அவன் தன்னிடம் கூறியது வேண்டாத நினைவாக வந்தது ‘என்னிடம் இருக்கும் பணத்திற்காக...’

கேரளாவில் போல் கவனமாக ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து குறித்தவள் இரு நிறுவனத்திற்கும் நட்டமில்லதவாறு சில வசன அமைப்புகளை மாற்றுவதற்கான பரிந்துரைகளை நகலில் எழுதினாள். கிட்டத்தட்ட ஐந்து மணி நேர வேலை, சாப்பிடக் கூட மறந்து செய்து கொண்டிருக்க உள்ளே வந்தான் ரங்காசாரியின் உதவியாள் “மேடம், முடிந்துவிட்டதா?” என்ற கேள்வியுடன்.

உதட்டை பிதுக்கி “இல்லையே இன்னும் இரண்டு மணி நேர வேலை மிச்சம் இருக்கு அதோட டாகுமென்ட் நாளை தான் ரெடி ஆகும்” என்றாள்.

அவள் எழுதி வைத்திருந்த குறிப்புகளைப் பார்த்தவன் “இப்படியே தாங்கள், அங்கே ஜிகே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்” என்று அப்படியே அள்ளிச் செல்ல “கோபகுலனாயக” வாய்க்குள் திட்டியாவளுக்கு பசி அப்போது தான் தெரிந்தது.

அப்போது தான் சாப்பிட்டு வந்து அமர்ந்தவன் முன் வந்த பேப்பர்களை கண்ட மறுகணம் முகம் மலர “ஸ்ரீனியை வரச் சொல்லு” என்றான்.

அவனின் ‘ஸ்ரீனி’ என்ற அழைப்பில் சற்று வியப்பாய் பார்த்த உதவியாளர் அவளிடம் சென்று “மேடம் சார் வரட்டாம்” என்பதுடன் சென்றுவிட்டான்.

திருமணத்தின் பின்னர் அலுவலகத்தில் வைத்து சந்திக்கும் சந்தர்ப்பம் வரவில்லை என்பதை விட அவள் அழகாய் தவிர்த்துவிட்டாள் என்பதே சரி. இன்று என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்தவளிடம் அடுத்ததாய் வந்தான் யாதவ்.

“மேடம் சார் தேடுறார் வரட்டாம்”

“என்னையா? எதுக்கு? அலுவல் இருக்கே!” தப்பிச் செல்ல முயன்றாள்.

“அந்த கார் கம்பனியின் ஒப்பந்தம் தொடர்பாக என்று நினைக்கின்றேன்” என்றவனுடன் சேர்ந்து அவளது இண்டர்கோமும் சேர்ந்து அலறியது காதில் வைத்து “ஹலோ” என்றாள்.

“என் அறைக்கு வா”

“இல்ல நான் சா...” முழுவதாக முடிப்பதற்குள் வைத்துவிட்டான்.

‘டீங்.... டீங்....’ என்று சத்தம் வந்த ஃபோன் ரிசிவரினால் நெற்றியில் அடித்தவள் “இந்த வேலையை நீ உன் அலுவலகத்தில் இருந்தே செய்திருக்கலாம் தானே எரும எரும” தன்னைத் தானே திட்டினாள்.

அவன் அறைக்குச் சென்றவளை தடுத்தாள் அங்கிருந்த ரிசப்சன் பெண் “மாம் என்ன அலுவல் என்று சொன்னால் உள்ளே வரலாமா என்று கேட்டு சொல்கின்றேன்”.

மூளையோடு சேர்ந்து மனமும் கூறியது ‘இதுதான் சாக்கு பேசாமல் இப்படியே திரும்பிவிடு, கேட்டால் வந்தேன் ரிசப்சனில் கேட்டு சொல்வதாக சொன்னார்கள் என்று எதையாவது அடித்து விடு’. ரிசப்சன் பெண்ணிடம் மறுத்து தலையாட்டி விட்டு போகத் திரும்பியவளை தடுத்து அவனது அதிகாரமும் ஆளுமையும் நிரம்பிய குரல்.

“ஸ்ரீனி.... உள்ளே வரமால் இங்கே என்ன செய்கின்றாய்?”

‘போச்சு போ ஜெகன் மோகினி பிசாசு ச்சீ.. ஜெகன் மோகன் பிசாசு திரும்பவும் பிடிச்சிட்டு, உன் வேகம் நத்தையும் மிஞ்சி விடும் போ’ மூளையை கேலி செய்தது மனது. அவள் தயக்கத்தை பார்த்து நெற்றியை சுருக்க “உள்ளே வர அனுமதி கேட்டார்கள் சார்” இடையில் வந்தாள் ரிசப்சனிட்.

“நீ ஏன் அனுமதி கேட்க வேண்டும் நேரடியாக வருவது தானே” கேட்டவன் “உள்ளே வா” என்றவன் அவள் வரும் வரை கதவை திறந்து வேறு பிடித்திருந்தான். அதற்கு மேல் மறுக்க முடியமால் உள்ளே சென்றாள் ஸ்ரீனிகா.

அவன் அறையை சுற்றிக் கண்களை ஓடவிட்டாள். இதற்கு முன் ஒரே ஒரு தடவை வந்திருந்தாள். ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடி பதிக்கப்பட்டு நகரத்தை பார்க்க கூடியதாக இருந்தது. தளபாடங்கள் அனைத்தும் கறுப்பு நிறத்திலும் பெயிண்ட் மெல்லிய பட்டர் கலரிலும் இருக்க மனதிற்கு இனிமையாக அதே நேரம் ஒருவித கவர்ச்சியாய் இருந்தது. அறையினுள் இருந்த நீண்ட மேசையை ஆச்சரியத்துடன் பார்த்தாள். டேபிள் டென்னிஸ் விளையாடலாம் போலிருந்தது. அதன் பின்னே சுழல் கதிரை, ஒரு பக்கம் புக் ஸெல்ப் அதனுள் புத்தகங்களும் கோப்புகளும் நிரம்பியிருந்தது. ஒரு பக்கமாய் கதவும் அதை தாண்டி உள்ளே பெட்ரூம் குளியலறை வசதியுடன் இருந்தது. குட்டி பிளட் வீடு போல் அத்தனை வசதியும் இருந்தது.

அவளையுமறியாமல் கண்ணாடி அருகே சென்று வெளியே பார்க்க விளிம்பில் நிற்பது தலை கிறுகிறுத்தாலும் வெளிப்புற கட்டிடங்களுக்குகிடையில் சூரியன் அஸ்தமிக்க தயாராகிக் கொண்டிருந்தது அழகாய் தென்பட்டது.

“அழகாய் இருக்கு” புன்னகைக்க கௌதமின் இதயம் லயம் தப்பியது. அவள் புன்னகையை வைத்த கண் வாங்கமால் பார்க்க போன் சத்தமிட்டு தன் இருப்பை காட்டியது. திடுக்கிட்டு திரும்பியவள் “ஏதோ வேலை என்று....” இழுத்தாள்.

‘நீயெல்லாம் சாகும் வரை சிங்கிள் தான்டா’ போன் செய்த அஜாவை மனமார திட்டியவன் “ம் அந்த ஒப்பந்தம் தொடர்பாய் இன்றே பார்த்துவிட்டால் நாளை நடக்கும் மீடிங்கில் பேச வசதியாய் இருக்கும் அதுதான்” என்றவன் கண்ணாடி சுவரின் அருகே போடப்பட்டிருந்த சோபாவை காட்டினான்.

மேசையிலிருந் கோப்பை எடுத்து வந்த போதுதான் கவனித்தாள் அவன் இடது கையில் பிரெஸ் இல்லை. சட்டென அருகே வந்தவள் “பிரேஸ் போடல, இப்ப கை ஓகேவா?” அவன் கையைப் பிடித்தவாறே நிமிர்ந்து பார்த்த தூய முகத்தைப் பார்த்து பொய் கூற அவனால் முடியவில்லை.

உண்மையில் மூன்று நாட்களுக்கு முதலே அவனுக்கு கை சரியாகிவிட்டது. ஒரு சில பயிற்சிகளை மட்டும் செய்ய சொல்லியிருக்க அவளை அருகே பிடித்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் மட்டும் பிரேஸ் அணிந்து நடித்துக் கொண்டிருந்தான். இன்று அலுவலகத்தில் அவளை எதிர்பாராது சந்தித்ததில் மறந்துவிட்டான்.

“ம்...”

“பெயின் எதுவும் இல்லைத்தானே” கவலை நிறைந்த முகத்துடன் கேட்டவளை அள்ளிக் கொள்ள தோன்ற கட்டுப் படுத்திக் கொண்டு தலையை ஆட்டினான் இல்லையென்று.

வன் அருகே அமர்ந்து வேலையைத் தொடங்க வழமை போல் அவள் கெட்டிகாரதனத்தை அவனால் வியக்கமால் இருக்க முடியவில்லை. மேலும் ஒரூ மணிநேரம் கடக்க பசியில் சோர்ந்துவிட்டாள் ஸ்ரீனிகா. சோர்ந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தவன் அவளை வேலை செய்ய விட்டு எழுந்து சென்று பூஸ்ட் கலந்து எடுத்து வந்தான்.

தனக்கு எடுத்து வந்த ப்ளக் காஃபியை வாயில் வைப்பதற்குள் அவள் பூஸ்டை குடித்த வேகத்தைப் பார்த்தவன் நெற்றி சுருங்கியது. காபி கப்பை கீழே வைத்தவன் “சாப்பிட்டயா?” கேட்டான்.

திடிரெனக் கேட்டதில் இல்லையென தலையாட்டியவள் சட்டென சுதாரித்து “சாப்பிட்டேன் சாப்பிட்டேன்” ஒன்றுக்கு இரண்டு தரமாய் பதிலளித்து “இது” என்று எதையோ கூற வர அவன் போன் அடித்தது.

நம்பரைப் பார்த்து விட்டுடு முகம் இறுக “ஹலோ” என்றான்.

மறுபுறம் ஏதோ சொல்ல அவளிடம் ஒரு பார்வையை செலுத்தியவன் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவள் காதில் அரைகுறையாய் “ஸ்ரீநிஷா...” என்று போனில் கூறியது விழுந்தது.

முகத்தில் அடித்தது போல் பேசிக் கொண்டிருந்தவளிடமிருந்து எழுந்து சென்றவனை திகைத்துப் போய்ப் பார்த்தவள் தன் வேலையை தொடர்ந்தாள். ஒரு புறம் மூளை மனதை கேலி செய்தது ‘அவன் உன்னை இங்கே வர சொன்னது அவன் வேலையை இலகுவாக்க உன்னுடன் வேலை செய்யும் விருப்பத்தில் இல்லை’

கௌதம் மீண்டும் உள்ளே வந்த போது கண் மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. அருகே அமர்ந்தவன் “ஸ்ரீனி” மென்மையாய் அழைத்தான்.

கண் திறந்து பார்த்தவள் கண்களில் இருந்த உணர்ச்சியைப் படித்தவன் அவள் கையிலிருந்த போனைப் பார்த்தான். போன் டிஸ்பிளேயில் சாரதம்மா கோலிங் என்று விழுந்தது. அவள் போனை எடுத்து பதிலளிக்க வெறுமையாய் பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா.

“ஹெலோ நான் கௌதம் கிருஷ்ணா, அவள் இன்னும் சாப்பிடவில்லை சாப்பிட்டதும் உங்களுக்கு எடுப்பாள்” போனை கட் செய்து தன் போக்கேடினுள் போட்டவன் சாப்பாட்டுத் தட்டை அவள் கையில் கொடுத்தான் “எதை கேட்பதாய் இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கேள்”.

முதல் தடவையாய் அவனைக் கோபமாய் முறைத்தவள் கையை மார்புக்கு குறுக்கே கட்டி முகத்தைத் திருப்பினாள்.

அவள் குழந்தைத்தனத்தில் புன்னகைத்த கௌதம் “எனக்கு எந்த அவசரமும் இல்லை” தோளைக் குலுக்கினான். ஏதோ சொல்ல வாயைத் திறந்தவள் வாயில் தட்டிலிருந்த இட்டலியை பிய்தது வைத்து “நீ இதை முடிக்கமால் என்னிடமிருந்து ஒரு வார்தை வராது”. என்றவன் குரலில் இருந்த கடினத்திலும் உறுதியிலும் திகைத்துப் போய் பார்த்தாள் ஸ்ரீனிகா. இந்த கௌதமை அவள் பார்த்ததே இல்லை. அந்தக் குரலில் தான் எத்தனை தீர்க்கம்.

எரிச்சலுடன் தட்டிலிருந்த மூன்று இட்டலியையும் காலி செய்தாள். உண்மையில் சிறுகுடலை பெருங்குடல் தின்று கொண்டிருந்தது. எங்கே கை கழுவுவது என்பது போல் அவனைப் பார்க்க உள்ளே இருந்த அறையை கண்ணால் காட்டினான்.

முழங்காலில் முழங்கையை ஊன்றி சற்று முன்புறமாக சரிந்து ஏதோ யோசனையில் இருந்தவன் அருகே மீண்டும் வந்து அமர்ந்தவளைப் பார்த்து விட்டு தன் பொக்கெட்டில் இருந்த அவள் போனை எடுத்துக் கொடுத்தான்.

“ஸ்ரீநிஷாவை பார்க்க வேண்டும்” கண்டிப்பான குரலில் கூற அவனுக்கோ அவள் நிலாவைக் கண்டிப்பது போலிருந்தது. சன்னமாய் சிரித்தவன் “சரி வா” என்றான். அவள் முன் இருந்த கோப்புகளை எடுத்து தன் மேசையில் வைத்து விட்டு இருவருமாய் லிஃடில் இறங்கினார்கள்.

அவள் முகத்தையே அடிக்கடி பார்த்த கௌதம் ஏனோ டென்சனாக தென்பட்டான். கைகளை மூடி திறந்தவன் “ஸ்ரீனி...” அழைக்க அவனை முறைத்தாள் அவள். கையை தொடையில் குத்தியவன் முகம் எதையோ நினைத்து இறுகியது.

கௌதம் அழைத்துச் சென்று ஸ்ரீநிஷாவைக் காட்ட அவள் நிலையைப் பார்த்த ஸ்ரீனிகா ஓங்கி கௌதமின் கன்னத்தில் அடித்திருந்தாள்.

வருவான்.....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻37

சென்னை நகரை விட்டு ஐந்து மணித்தியால தொலைவில் இருந்த அந்த பழைய பில்டிங்கின் முன் காரை நிறுத்தினான் கௌதம். கீழே இறங்கிய ஸ்ரீனிகாவிற்கு அந்த இடத்தைப் பார்க்கவே அடி வயிற்றில் பயபந்து மேல் கீழாக இல்லமால் கன்னா பின்னாவென்று உருண்டது. முகம் வெளிற நின்றவளை “ஷ்... நானிருகின்றேன்” என்று தோளோடு அணைத்துக் கொண்டான்.

உள்ளே செல்ல காலெடுத்தவளை தடுத்த கௌதம் தோளில் கை வைத்து அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து “ஸ்ரீனி....” என்றவன் ஒரு கணம் தயங்கி ஆழ்ந்த மூச்சு எடுத்து “எனக்கு ஏமாற்றினால் பிடிக்காது. கண்மண் தெரியாத கோபம் வரும்” விளக்கமளித்தவனை குழப்பத்துடன் பார்க்க “இதை மட்டும் நீ ஞாபகம் வைத்துக் கொள். உனது சகோதரி என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த அளவில் விட்டிருக்கின்றேன்”.

அதிர்ந்து போய் கண்களை விரித்தவள் கண்களில் நேரகாலமின்றி விழுந்தது தொலைந்து கௌதமின் மனது. லேசாய் கன்னத்தில் தட்டியவன் “வா” ஒற்றைச் சொல்லுடன் முன்னே சென்றான்.

உள்ளே சோபாவில் அமர்ந்திருந்த அஜாவைப் பார்த்த ஸ்ரீனிகாவிற்கு கடந்த பத்து நாளாய் அவனைக் காணாததன் மர்மம் விளங்க இருளடைந்து பேய் வீடு போலிருந்த அந்த இடத்தைப் பார்த்தவள் சற்று மிரண்டு தன்னையறியமாலே கௌதமை நெருங்கி நின்றாள். குனிந்து புன்னகைத்தவன் கையை நீட்ட இயல்பாய் புஜத்தைப் பற்றிக் கொண்டாள்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இங்கே நிஷா... எப்படி...” குழப்பத்துடன் கேட்க ஸ்ரீனிகாவை அங்கே எதிர்பாராது கண்ட அதிர்ச்சியில் நின்ற அஜா இப்போது விழித்தான். அவனுக்கு சந்தேகம் கூட வந்தது ஜிகே மனநிலை சரியான ஸ்திதியில் இருக்கின்றாதா என்று. பின் சும்மாவே அவனைக் கண்டால் காத தூரம் விலகுகின்றாள். இந்த லட்சணத்தில் அவள் சகோதரியின் நிலையை இப்பொழுது பார்த்தாள் வேறு வினையே தேவையேயில்லை.

மாலில் இருந்து வந்த அன்றிரவு அவசர வேலை என்று வெளியே சென்றதே ஸ்ரீநிஷாவை சந்திக்க தான். அவனுக்கு தெரிய வேண்டியிருந்தது. ஏன் பொய் சொல்லி அனைவரையும் குழப்பிவிட்டாள். அவளிடம் பேசித்தான் பார்த்தான் மசிவதாக தெரியவில்லை, கடத்திவிட்டான். ஸ்ரீநிஷாவை கடத்தும் போதே கௌதம் நடந்தது அனைத்தையும் அஜாவிடம் சொல்லி அஜாவின் காவலிலேயே அவளை ஒப்படைத்தான். உண்மையில் ஸ்கூல் படிக்கும் நாளில் இருந்தே அஜாவும் கௌதமும் நண்பர்கள். ஒரு ரயில் விபத்தில் குடும்பம் மொத்தத்தையும் இழந்து பைத்தியம் பிடிக்காத குறையாய் நின்றவனை தன்னுடனே வைத்துக் கொண்டான் கௌதம்.

அதனால் கௌதமின் குணம் அனைத்தும் அஜாவிற்கு அத்துபடி. ஜிகேயாய் அவனது குணம் அறிந்த அஜாவிற்கு ஸ்ரீநிஷாவை தன் பொறுப்பில் விட்டதும் அழுத்தம் கொடுக்கததிற்கும் காரணம் ஸ்ரீனிகா மீதான காதல் மட்டுமே காரணம் என்பதும் புரிந்தே இருந்தது. ஆனால் அது அவன் தங்கச்சி மேடத்திற்கு விளங்க வேண்டுமே!

“ஜிகே....” அஜா இழுத்தான்.

கேள்வியாய் நோக்கியவனுக்கு பதிலாய் “இன்று காலை தான் டார்க்...” பாதியில் வசனத்தை நிறுத்த உதட்டை கடித்து ஒற்றைக் கண்ணை மூடிய கௌதம் ஸ்ரீனிகாவிடம் திரும்பி “அவள் இங்கு இல்லை வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். அங்கே போவோம்” என்றான்.

ஏனெனில் இரண்டு நாட்களுக்கு முன் வந்திருந்து கேட்டதற்கு பதிலின்றி அமைதியாக இருக்கவே அவன் பொறுமை பறந்திருந்தது. டார்க் ரூமில் போடச் சொல்லி சென்றுவிட்டான். இன்று காலை தான் வெளியேவிட்டான்.

சராசரி மனிதர்களை இது போல் இருட்டறையில் அடைத்து வைத்தால் பதினெட்டு மணி நேரத்தினுள் தனியே சிரிக்கவும் அழவும் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் சோகங்கள் எல்லாம் வெளியே வரத் தொடங்கி விடும். சூரிய வெளிச்சம் இல்லாததால் மூளை நேரத்தை கணக்கிட மறந்துவிடும். எத்தனை நேரம் உள்ளே இருந்தோம் என்று தெரியாமல் பதறத் தொடங்கிவிடுவார்கள். ஒரு நாளே ஒரு மாதம் போல் தெரியும். தொடர்ந்து இப்படி அடைத்து வைத்தால் நிச்சயம் மனிதன் மன நோயளி ஆவதற்கான சாத்தியகூறு அதிகம். ஒரு நாள் மட்டும் அடைத்து வைத்தால் நிச்சயமாய் மனோரீதியாக பலவீனம் ஆகிவிடுவார்கள். ஆனால் அடுத்த நாள் வெளியே வரும் போது பேசும் நிலையில் இருக்க மாட்டார்கள். சிறிது நேரம் கழித்து எதைக் கேட்டாலும் இலகுவாய் கூறி விடுவார்கள். உண்மையில் கேட்கவே தேவையில்லை மனதில் உள்ளதெல்லாம் உளறிக் கொண்டே இருப்பார்கள்.

குழப்பமாய் பார்த்தவள் “பின்னே இவ்வளவு நேரம் பயணம் செய்து ஏன் இங்கு வந்தோம்?” என கேட்ட அதே நேரம் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் ஒன்றும் கேட்டது. அருகே இருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த ஸ்ரீனிகா அதிர்ந்து போய் நின்றாள்.

பைத்தியகாரி போல் தனியே அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிஷா.

“ஏட்டா கதவைத் திறவுங்கள்” அவசரமாய் சொல்ல இனி மறைத்து பிரஜோசனமில்லை என்று புரிய கண்ணைக் காட்டினான் கெளதம். ஓடிச் சென்று அருகே அமர்ந்து அவள் கன்னம் தட்ட பயந்து போய் வேகமாய் விலகினால் ஸ்ரீநிஷா, மீறி அருகே செல்லப் போக அவளையே அடித்தாள்.

சட்டென குறுக்கே வந்த கௌதம் அடியை தான் வாங்கிக் கொண்டான்.

“ஸ்ரீனி... இப்ப அவள் மைன்ட் ஒரு நிலையில் இல்லை எதுவாய் இருந்தாலும் காலையில் பேசிக் கொள்வோம்”. அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றான்.

“ஆனா ஆ.. ஆனா கடைசியாய் யான் நோக்கி... அவள் நல்லாத்தானே இருந்தாள் பின் என்ன நடந்தது”

“அது...” என்று உதட்டைக் கடித்தவன் “இன்று காலையில் தான் டார்க் ரூமிலிருந்து வெளியே வந்தாள்” சட்டென சொல்லிவிட்டான். அப்போதும் புரியாமல் நிற்க “அவளை இருட்டறைக்குள் பூட்டி வைத்திருந்து இன்று காலை தான் வெளியே வந்தாள்” விளக்கிக் கூறினான்.

திடிரென அழுகையை நிறுத்தி சிரித்து புலம்பினாள் “ஸ்ரீனிகா.... அதெப்படி கௌதமும் உன்னைத்தான் காதலிப்பான், அலனுக்கும் உன்னைத்தான் திருமணம் செய்யனும். லண்டனில் வைத்து எனக்குத்தானே ப்ரொபோஸ் செய்தான். பிறகு எப்படி உன்னை கல்யாணம் செய்யக் கேட்பான். நீ வந்ததும் அம்மா என்னை ஹோஸ்டல் அனுப்பிட்டாங்க. பிறகு நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல லண்டன் அங்கே அங்கே ” சுவற்றைப் பார்த்து பேசியவளின் வாய் மொழியில் இத்தனை நாட்கள் விளங்காத சில விடயங்கள் விளங்க அலன் ஏன் தன்னை மில்லை வைத்து மடக்கினான் என்பது புரிந்தாலும் சில விடயங்களில் இன்னம் தெளிவு தேவைப்பட்டது. அதை தரக் கூடியவளே பைத்தியக்காரி போல் சிரிக்கின்றாள் அழுகின்றாள்.

“இப்படி யார் செய்தது?” கண்கள் கலங்க கேட்டாள். இத்தனை காலத்தில் அம்மாவைத் தவிர்த்து மனம் விட்டுப் பேசிய ஒரே ஒரு உறவு, இப்படி பைத்தியக்காரி போல் புலம்பித் தவிப்பதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவளால்.

“யார் இப்படி செய்தது? கேட்கிறேன் இல்ல” இத்தனை நாளில் இன்றுதான் அவள் கோபப்பட்டு பார்க்கின்றான் கௌதம்.

கௌதம் உதட்டைக் கடித்து வேறுபுறம் தலையை திருப்ப அவன் உள்ளே வருமுன் கூறியது நினைவில் வர “உங்களை ஏமாற்றினாளா?” நேரடியாகவே கேட்டாள். அப்போதும் அமைதியாய் வேறுபுறம் பார்க்க நாடியைப் பற்றி திருப்பி “என்ன நடந்தது?” என் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற தொனி அவள் குரலில்.

கௌதம் ஏர்போர்ட் தொடங்கி கடைசியாய் மால் வரை நடந்தது அனைத்தையும் சொல்லி முடிக்க ஸ்ரீனிகாவின் கை கௌதம் கன்னத்தில் இறங்கியிருந்தது.

“முழுப் பிழையையும் உங்களில் வைத்துக் கொண்டு ஒரு சின்னப் பெண்ணை இப்படி பைத்தியம் ஆக்கி இருக்றீங்களே, மனசாட்சி இல்லை உங்களுக்கு” சீறினாள்.

‘என்னா அடி’ அஜா மனதினுள் நினைத்துக் கொண்டான். வெளியே சொன்னால் தனக்கும் பங்கு வரும் என்பது தெளிவாகவே புரிய நல்ல பிள்ளையாய் அமைதியாகவே இருந்தான்.

அடி வாங்கிய வேகத்தில் சினத்துடன் திரும்பியவன் கண்களை மூடி தன்னை சமப்படுத்தினான். அவனுக்கும் புரிந்தே இருந்தது. முழுப் பிழையும் அவளில் இல்லை. தான் சரியாக ஆராய்ந்திருந்தால்...

மூச்சை எடுத்து விட்டவன் “அன்று மட்டும் என்னை குழப்பமால் இருந்திருந்தால்...”

“இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

கௌதம் அமைதியாக பார்த்திருந்தான். இவளை கையாளுவது அத்தனை இலகுவானது இல்லை என்பது அவனுக்கு என்றோ புரிந்துவிட்டது. அதிலும் இப்போது நிஷாவை இப்படி பார்த்ததில் எதை சொன்னாலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டாள்.

அவனிடமிருந்து திரும்பி “ஷ் நிஷா இங்கிருந்து போவோமா?” அவள் கன்னம் பற்றிக் கேட்க தலையாட்டினாள். இருவரையும் பார்த்தவன் “காருக்குகூட்டி வா” என்றான்.

முறைத்தவள் “நான் சாராதம்மாவிற்கு என்ன பதில் சொல்லுவேன்?” தனக்கு தானே கேள்வி கேட்டவள் “அவர்கள் எப்படி தேடமால் இருந்தார்கள்?” புருவத்தை சுருக்கினாள்.

“அவர்களுக்கு தெரியும்” என்றான் சுருக்கமாக.

“என்ன தெரியும்?”

“அவள் என் கஸ்டடியில் தான் இருக்கின்றாள் என்று தெரியும்”

“தெரிந்தும் ஒன்றும் செய்யவில்லையா?” புருவன் சுழித்துக் கேட்டவளுக்கு சட்டெனப் புரிந்தது. “அவள் உங்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியது அவருக்கு எப்படி தெரியும்?” குழப்பத்துடன் கேட்டவளுக்கு பதிலளித்தான் கௌதம் “நான் தெரிய வைத்தேன்”.

ஸ்ரீனிகாவிற்கு சாரதாவை நன்றாகவே தெரியும் அவர் ஒரு மாதிரி நியாய அநியாயம் பார்ப்பவர். தங்களைத் தேடி அவர் அசாம் வரை வந்ததே அதற்கு சான்று. அந்த குணம் அறிந்துதான் விவாகரத்துக்கு முன்னர் கௌதம் பற்றி சாராதவிடம் கூற வேண்டாம் என்று ஸ்ரீநிஷாவை மிரட்டி வைத்திருந்தாள்.

“உங்களை யார் அவரிடம் போய் இதையெல்லாம் சொல்ல சொன்னது?” அதட்டினாள் “இவளை முதலில் மருத்துவமனை கூட்டி செல்ல வேண்டும்” ஆயாசமாய் கூறினாள்.

“சரி கொஞ்சம் பொறு” என்றவன் நிஷாவை கதிரையில் இருக்க வைத்து தண்ணீர் குடிக்க கொடுத்து “அலன் எப்போது உன்னை ப்ரொபோஸ் செய்தான்?” விசாரித்தான்.

“லண்டனில் படிக்கும் போது”

“லண்டனில் உனக்கு என்ன நடந்தது?”

“....”

“மீண்டும் இருட்டு அறைக்குள் போகிறாயா?”

“ல்ல... வேண்டாம்”

“பதில் சொல்லு”

“அ அங்கே உள்ள சி.. சிலர் எனக்கு போதை மருந்து தந்து...”

“உன்னை ஏதாவது செய்தார்களா? நீ ஏன் ஸ்ரீ ஏட்டவிடம் சொல்லவில்லை?” அவசரமாய் கேட்டாள் ஸ்ரீனிகா.

“இல்ல ஆடைகளை கழட்டி போ... போட்டோ எடுத்து மிரட்டினார்கள். நான் மாட்டேன் என்று வீட்டிற்கு வந்தால்... அம்மா இங்கே இருக்க முடியாது போ என்றுவிட்டார்கள்” புறங் கையால் கண்ணை துடைத்தாள். “ஒரு நாள் டூர் போயிருந்த போது மலை விளிம்பில் வைத்து என்னை மிரட்டினான். நா நான் தள்ளி விட்டு வந்துட்டேன் அதுக்கு பிறகு அவனைப் பார்க்கல. செத்துட்டான் என்று நினைக்கிறேன். கடைசி கொலையும் பண்ணிட்டேன் இல்ல...” நிமிர்ந்து பார்க்க கௌதமுக்கே ஒரு மாதிரி இருந்தது.

“அது எப்போது நடந்தது?” கௌதம் தான் கேட்டான்.

“ஏப்ரல் இருபத்தி மூன்று”

நெற்றி சுருக்கி ஏதோ யோசித்த கௌதம் “செவென் சிஸ்டர் கிளிஃப் போயிருந்தாயா?” கேட்க ஆச்சரியத்துடன் பார்த்தாள் நிஷா.

“அவன் சாகல. நீ கொலைகாரி இல்லை” என்றான் கௌதம்.

நம்பிக்கையுடன் பார்க்க “செயின்ட் ஜோர்ஜ் தினத்தின் போது நான் அங்கே தான் இருந்தேன். அந்தப் பக்கம் போகும் போது நான்தான் ஹோச்பிடல் கூட்டிட்டு போனேன். அவனுக்கு முகத்தில் இடது நாடியில் மரு இருக்கும் இல்லையா? அதோட கையில் ஆறு விரல்” சரியாய் அடையாளம் சொன்னவனை கண்ணை விரித்துப் பார்த்தாள்.

“சரி அதுக்கும் என்னிடம் பொய் சொன்னதுக்கும் என்ன தொடர்பு? நீ என்னை காதலிக்கவும் இல்லையே” விசாரித்தான் கௌதம்.

“அது... ஸ்ரீனிகா இங்கே வந்ததால் தானே என்னை அம்மா ஹோஸ்டல் அனுப்பினாங்க, அப்பாவையும் வீட்டை விட்டு துரத்தினார்கள். அப்பாவுடன் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்று.... பிறகு அலன் என்னை ப்ரொபோஸ் செய்திட்டு ஸ்ரீனிகாவை திருமணம் செய்ய முயன்றான். எல்லா கோபமும் சேர்ந்து.... ஆனாலும் அன்று உங்களிடம் எல்லா உண்மையும் சொல்லி விட வேண்டும் என்று தான் அன்று ஹோட்டலுக்கு வந்தேன் அங்கே வந்து ஸ்ரீனிகா மிரட்டவும் அப்படியே திரும்பிவிட்டேன்...” என்றவள் முழங்காலைக் கட்டிக் கொண்டு மீண்டும் சுவற்றை வெறித்தாள்.

“நீ என்ன மிரட்டினாய்? கௌதம் ஸ்ரீனிகாவைக் கேட்டான்.

“சாரதா அம்மா என்னிடம் அவளை விரும்பும் பையன் எப்படி என்று பார்த்து வரக் கேட்டார்கள்” என்றவள் முகம் வெளுத்தது. அன்று அவள் பட்ட பாடு மறக்குமா?

“நீ என்ன சொன்னாய்?” குறுகுறுப்புடன் கேட்க மனசாட்சி காறி துப்பியது ‘இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குது’

ஏதோ சிந்தனையில் மறுத்து தலையாடியவள் “அவர்கள் ஒரூ மாதிரி நியாய அநியாயம் பார்ப்பார்கள் அதனால் இன்னும் பதில் சொல்லவில்லை” என்றாள்.

அவள் பதில் அவனுக்கு ஏமாற்றமாய் இருந்தாலும் “சரி வராது என்று சொல்லி விடு” என்றான் கௌதம். தன் யோசனையில் உழன்றவள் அதைக் கவனிக்கவில்லை.

சற்று நேரம் நிசப்தம் நிலவியது. அவள் கஷ்டப்பட்டிருந்தாலும் கூட அதற்காக கூறும் காரணங்கள் அபத்தமாய் தான் பட்டது. உண்மை சொல்ல வந்தவளை மிரட்டி அனுப்ப வேண்டி வந்தது விதியின்றி வேறென்ன! ஆனால் அன்று மாலில் ஸ்ரீனிகா அவளை நேரில் சந்தித்து பேச முன்னரே தன் தவற்றை உணர்ந்திருந்தாள். என்ன அதை மீண்டும் பேசி கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை. இன்றே பேசும் நிலையில் இல்லை.

“இவளை சாராதாம்மாவிடம் அழைத்துச் செல்ல வேண்டும்” அவளுக்கு எல்லாமே பாரமாய் இருப்பது போல் பட்டது. சிலவேளை தாங்கள் இருவரும் இங்கு வரமால் இருந்திருந்தால் நிஷா வீட்டை விட்டு பிரிந்து இருக்க நேர்ந்திராது. இது போல் ஒரு கசப்பான சம்பவமும் வாழ்கையில் ஏற்பட்டு இருக்காது.

கார் மீண்டும் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அஜா காரைச் செலுத்த முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. எப்போதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அவள் முகம் உணர்ச்சியற்று இருக்க கௌதம் சீட்டில் சாய்ந்து கண் மூடியிருந்தான். திரும்பி நிஷாவைப் பார்க்க வெளியுலகை பார்த்தது அவளைக் கொஞ்சம் சமப்படுத்தியிருந்தது போல் அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையை தட்டி தண்ணீர் போத்தலைக் கொடுக்க அமைதியாய் வாங்கிக் கொண்டாள்.

சாரதாவின் வீட்டினுள் நுழைந்த கார் அதற்கென்று அமைத்த பாதையில் வழுக்கிச் சென்று போர்டிகோவில் நின்றது. வெளியே இறங்கிய ஸ்ரீனிகா மறுபுறம் வந்து நிஷாவையும் இறக்கி அழைத்துச் சென்றாள்.

திரும்பிக் கூட பார்க்காமல் செல்வதைப் பார்த்த அஜா “பேசமால் காலில் விழுந்து விடு ஜிகே, தப்பே இல்லை” என்றான்.

சீட்டில் தலை சாய்த்து செல்லும் அவளையே திரும்பிப் பார்த்தவன் “அத்தனை சுலபம் இல்லை, பிடிவாதக்காரி சில பெண்களிடம் மன்னிப்பு கேட்பதால் மட்டும் சமாதானம் செய்ய முடியாது” என்றவன் அடைத்திருந்த காற்றை வாய் வழி ஊதி முகத்தை அழுந்த தேய்த்து விட்டு இறங்கி உள்ளே சென்றான்.

மணி இரண்டைத் தொட்ட போதும் உள்ளே ஹால் சோபாவில் அமர்ந்திருந்தனர் சாரதாவும் ராஜாராமும். மகளைப் பார்த்ததும் அடிக்கப் கை ஓங்கியவரின் குறுக்கே வந்தாள் ஸ்ரீனிகா. “வேண்டாம் இன்று நிறைய கஷ்டப்பட்டுவிட்டாள், பாவம்” என்றவள் நிஷாவை இழுத்து “போ போய்ப் படு” என்று அனுப்பி வைத்தாள்.

சாராதாவுக்குமே அவள் தோற்றம் அதிர்ச்சியாக தான் இருந்தது. கேள்வியாய் நோக்க “பயப்படும் படி எதுவுமில்லை....” மீதியை எப்படிச் சொல்ல என்று தெரியாமல் மென்று முழுங்கினாள். அவளின் பின்னே உள்ளே வந்திருந்த கௌதம் இதுவரை அமைதியாய் நடப்பதை கவனித்தவாறே நின்றவன் இடையிட்டான் “எனக்கும் என் மனைவிக்கும் இடையில் வர முயன்றாள், இனி வரமாட்டாள். நன்றாக உறங்கி எழுந்தால் இரண்டே நாளில் சரியாகி விடுவாள்.”

ஸ்ரீனியின் தோளை சுற்றிக் கை போட வெடுகென்று தலையைத் திருப்பிப் பார்த்தாள். “நேரமாகிவிட்டது நாளை மாலை வந்து பார்க்கின்றோம்” ஏதோ அவளை மீட்டு வந்ததே தான்தான் என்பது போல் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை ஸ்ரீனிகாவினால். அப்படியானால் உண்மையில் இத்தனை நாளில் இவனைப் பற்றி எதுவும் தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த பத்து மணி நேரத்தில் பத்து விதவிதமான அவதாரமாய் தென்பட்டான் அவளின் மணாளன்.

“அவளை எதுவும் கேட்காதீர்கள். நான் நாளை வந்து பேசுகின்றேன்” என்றவளின் களைத்திருந்த முகத்தைப் பார்த்த சாரதா “இன்று இங்கேயே தங்கி நாளை போகலாமே” கேட்க கௌதம் மனைவியைப் பார்த்தான். “பரவாயில்லை நாளை மாலையே வருகின்றேன்” என்று திரும்பியவள் எதிரில் வந்தான் ஸ்ரீராம்.

ஏர்போர்டில் இருந்து நேரே வந்தது போல் ஓரு கையில் ஜெர்கின் மறு கையில் ஹன்ட் லக்கேஜ் உடன் நின்றவன் புன்னகைக்க கௌதமிற்கு சரியாய் அன்று ஏர்போர்ட்டில் ஸ்ரீனியை அழைத்துச் சென்றது நினைவில் வந்தது.

“ஹாய்... வீட்டு மாப்பிள்ளை சரியாய் வரவேற்க முடியவில்லை மன்னித்துக் கொள்ளுங்கள்” மென்மையாய் மன்னிப்பு வேண்டியவன் களைத்திருந்த ஸ்ரீனிகாவைப் பார்த்து விட்டு “இன்று தங்கிப் போகலாமே” கேட்டான்.

“பரவாயில்லை இரவு நேரம் ட்ராபிக் இல்லை. இன்னொரு நாள் வருகின்றோம்” என்று வெளியே நடந்தான். அவன் கை வளைவில் இருந்தவள் ஸ்ரீராமின் முகத்தைப் பார்த்தவாறே அவனுடன் வெளியேறினாள்.

அவளுடன் காரில் ஏறியவன் திடீரென கேட்டான் “ஸ்ரீராமுக்கு உன் மேல் ஏதாவது கோபமா?” விசாரித்தவனை கேள்வியாய் ஏறிட “இல்ல என்னிடம் பேசினான். ஆனா உன்னோட கதைக்க கூட இல்லை. அன்று ஏர்போர்டில் உன்னுடன் நல்ல மாதிரிதான் நடந்தான். இன்று ஏனோ வித்தியாசமாய் படுது, அதுதான் கேட்டேன்” என்றான்.

“திருமணம் செய்தது பிடிக்கவில்லை” இரத்தின சுருக்கமாய் பதிலளித்தாள்.

“என்னை திருமணம் செய்தது பிடிக்கவில்லையா? திருப்பிக் கேட்டான் கௌதம்.

“சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்தது பிடிக்கவில்லை” என்றவள் கண் மூடி சீட்டில் சாய்ந்து கொள்ள அருகில் நெருங்கி தன் மீது சாய்த்துக் கொண்டான் கௌதம். ஏற்றுக் கொண்டு சாயவும் இல்லாமல் மறுக்க உடலில் தெம்பும் இன்றி அமைதியாய் இருந்தாள் ஸ்ரீனிகா. அவளைப் பொறுத்த மட்டில் நிஷா கௌதமை ஏமாற்றினாள். அதனால் அவளைத் தண்டித்தான். அதை மீறி யோசனையை கொண்டு செல்ல மனதை அனுமதிக்கவில்லை. அவன் செய்தது சரியா பிழையா என்று ஆராயும் நிலையிலும் இல்லை. மீண்டும் தலைவலிக்கவே அவனுள் புதைந்தாள். அவளிடம் அசைவை உணர்ந்தவன் மென்மையாய் கேட்டான் “என்னடாம்மா”.

“தலை வலிக்குது” தன் கைபையை எடுக்க முயல “என்ன வேண்டும்” என்றவனுக்கு பதிலாய் “தலைவலி டேப்லட், போன் ரெக்கோடி...” வலியில் முழுதாய் முடிக்க முடியவில்லை.

“இப்போது போன் வேண்டாம்” கண்டிப்பாய் கூறியவன் தலைவலி டேப்லெட்டை தேட வெறும் கவர் வெளியே வந்தது. “அஜா பார்மசி” சொல்லி முடிப்பதற்குள் சைட் எடுத்து பார்மசி அருகே நிறுத்தியிருந்தான்.

அஜா கவரை வாங்கிக் கொண்டு செல்ல “ரெம்ப வலிக்குதா?” மென்மையாய் நெற்றிப் பொட்டுகளை அழுத்திவிட்டான். இதமாக இருக்க அவன் கையை எடுத்து தலையில் வைத்தாள். அங்கே தான் வலிக்குது என்பது போல். மென்னனகை புரிந்தவன் “உனக்கு ஏன் அடிக்கடி தலைவலி வருது” மென்மையாக விரல்களால் அழுத்தி விட்டவாறே, அவள் தலைவலியை அவதனித்தவனாய் கேட்டான்.

“டென்சன்...” என்றவள் அவன் மார்பில் இன்னும் புதைந்தாள்.

🎻🎻🎻🎻🎻

கையில் குழந்தையாய் உறங்கிய மனைவியைப் பார்த்தவாறே விழித்து கிடந்தான் கௌதம். கொஞ்ச நேரத்தில் தலைவலியில் துடித்துவிட்டாள். அவளை விட அவன் துடித்துவிட்டான். இன்று கையில் தூக்கி வரும் போது தான் புரிந்தது அவள் உடல் எடை என்பதே இன்றி இருந்தது. தூக்கி வந்ததில் உறக்கம் கலைந்தவள் பிடிவாதமாய் குளிக்க போக எழவே அதட்டினான் “எங்கே பேசாமல் படு”.

“குளிக்கனும் கசகச என்று இருக்கு”

“தலைக்கு ஊத்தாதே” எச்சரித்து அனுப்பியவன் அவனும் பிரெஷ் ஆகி வந்ததும் தன்னுடனேயே பெட்டில் படுக்க வைத்திருந்தான். ஆனால் டப்லேட் போட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தலைவலியில் அவதிப்பட்டு சற்று நேரத்திற்கு முன்தான் கண்னயர்ந்திருந்தாள். ஏதோதோ யோசனைகள் அலையலையாய் எழ களைத்துச் சோர்ந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தவாறே உறக்கமின்றி படுத்திருந்தான் கெளதம்.

வாருவான்....
 
Status
Not open for further replies.
Top