All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 24

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன் வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 26
பாடல் நின்று விட கையிலிருந்த சாக்லேட்டை பறித்த சிறுவன் போல் விழி திறந்தான். சுற்றும் முற்றும் தேடினான் யார் பாடியது என்பது போல். காரின் அருகே அவனை போலவே பாடலை ரசித்து விட்டு யாரென்று தேடிய அஜாவை பார்த்து கேட்டான் “யார் பாடியது?”

அவனுக்குமே தெரியாமல் தானே தேடுகின்றான் “தெரியல பாஸ்” என்றான் அவன். மனம் லேசாகிவிட அதற்கு மேல் அதை பற்றி அதிகம் யோசிக்காமல் உள்ளே சென்றான்.

மேலேயிருந்து தான் பாட்டு கேட்டிச்சே என்று நிமிர்ந்து பார்க்க பல்கனியில் சிறு முறுவலுடன் நின்றாள் ஸ்ரீனிகா. அஜா “பாஸ்” என்று கத்த சட்டென உதட்டில் விரலை வைத்து வேகமாக தலையாட்டினாள் வேண்டாம் என்று. உள்ளே போன கௌதம் நின்று “என்னடா” என்றான்.

“இல்ல பாஸ் கூப்பிட்டால் நிக்கிறீங்களா என்று பார்த்தேன்” என்றான் அசடு வழிய.

இருந்த மனநிலையை கெடுக்க விரும்பாமல் லேசாய் முறைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டான். கட்டிலில் வீட்டுக்கு அணியும் ஆடைகள் அவனுக்காய் காத்திருந்தது அதுவும் அவனுக்கு பிடித்த வாசத்துடன். ஒரு குளியல் போட்டு வந்தவன் அறையில் யாரையென்று தெரியாமல் யாரையோ தேடினான்.

அன்று இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தின் பின் இந்த பதின்னான்கு நாட்களில் ஸ்ரீனிகா அவன் கண்ணிலேயே படவில்லை. வீட்டில் தான் இருகின்றாளா என்று யோசிக்கும் அளவிற்கு. அவள் அறையை திறக்க போனவன் கை சற்று தயங்கி கதவைத் தட்டியது. சத்தமின்றி போகவே திறந்து பார்த்தான். டரஸ் சென்று பார்க்க அங்கேயும் இல்லை. கீழே தோட்டத்தில்.... யோசித்தவன் வெளியே வர பக்கத்தில் குழந்தைகளின் அறையிலிருந்து சத்தம் வர ஆச்சரியத்துடன் எட்டிப் பார்த்தான். அவர்கள் தான் இங்கேயே இல்லையே. கதவிற்கு முதுகு காட்டி நிலா தீப் இருவருடனும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாள். அவர்களும் உற்சாகமாய் டிஸ்னி போய் வந்த கதைகளை கூற ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும் குரலை கேட்க அவனையறியாமல் வந்த புன்னகையுடன் கைகளை மார்புக்கு குறுக்கே கை கட்டி கதவு நிலையில் சாய்ந்து நின்று பார்த்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் “சித்தப்பா மாமா” என்று இருவரும் ஆரவாரிக்க அவளருகில் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தான் கௌதம்.

எதிர்பாராது அருகில் அமர எழப் போனவளை தோளை சுற்றிக் கையைப் போட்டு தடுத்த கௌதமை விழி வெளியே விழுந்துவிடும் போல் பார்க்க காதருகே குனிந்து “பின்னால் அம்மாவும் தங்கச்சியும்...” எச்சரித்தான்.

அதற்குள் இவர்கள் சத்தத்தில் நதியாவே வந்திருந்தாள் “ஹாய் அண்ணி”

“ஹாய் தியா” என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் கௌதம். இவளுக்கு எப்படி தெரியும்.

“ஹா என்னோட பெட் நேம் கூட சொல்லிட்டானா?” குறும்பாய் கேட்க அமைதியாய் புன்னகைத்தாள் ஸ்ரீனிகா.

“ஹாய் தியா...” கௌதம் அழைத்ததை அவள் கணக்கே எடுக்கவில்லை

“என்னோட பேச மாட்டிங்களா? இந்த இரண்டு குட்டியோட மட்டும் பேசறீங்க” அதற்கும் புன்னகைக்க “உங்கள் சிரிப்பு சூப்பர் போங்க, ப்ளீஸ் அண்ணி எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் சொல்லுங்கள்.” கெஞ்சினால் போல் கேட்டாள் நதியா.

“நீங்கள் சும்மா கேட்டாலே சொல்லுவேன் தியா சும்மா கேளுங்கள்” வியப்புடன் பதிலளித்தாள்.

“இந்த குட்டி சாத்தான் இரண்டிற்கும் என்ன மந்திரம் போட்டீர்கள். இப்படி சொல் பேச்சு கேட்கிறதுகள், அம்மா கூட சொன்னங்க நீங்க வந்த பிறகு கிண்டர் கார்டன் போறது கூட ப்ரோப்லேம் இல்லை என்று ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கும் சொல்லுங்க” நதியா கேட்க அவளருகே யசோதாவும் அமர்ந்தார். “ஹாய் அத்தை எப்ப வருவீர்கள்?” ஆவலாய் கேட்டாள் ஸ்ரீனிகா.

“எப்படிம்மா இருக்கிறாய்?” புன்னகையுடன் மகனையும் மருமகளையும் பார்க்க “நல்லாருக்கேன் அத்தை நீங்க வாங்க” மீண்டும் அழைத்தாள்.

“அப்ப நான் வர வேணாமா?” நதியா இடையிட்டு கேட்க ஸ்ரீனிகா விழித்தாள் “இல்ல அப்படியில்ல நீங்களும் வாங்க” சிறிது பயத்துடனே சொன்னாள். அவள் பயத்தை பார்த்து சட்டென சிரித்த நதியா “அம்மா சொன்னது சரிதான்” என்றாள்.

“நாங்கள் அடுத்த வாரம் வருவோம். எனக்கு என்ன செய்து தருவீர்கள்”.

“என்ன வேண்டும் சொல்லுங்கள். என்னால் முடிந்தால் செய்கின்றேன்”.

“எனக்கு உங்கள் சர்க்கரை புட்டு தான் வேணும். இருவரும் ஒரே புகழாரம் தான் போங்கள்” நதியா சர்க்கரை புட்டு என்றதும் தான் தாமதம், சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்த இருவரும் “எனக்கும் எனக்கும்” என்று ஓடி வந்தார்கள்.

புன்னகைத்த ஸ்ரீனிகா “பயணத்தால் வந்து சாப்பிட்டால் திகட்டிவிடும், வந்த பின் ஒரு நாள் செய்து தருகின்றேன்” என்றாள்.

இருந்தது தன்னை அருகே வைத்துக் கொண்டு ஏதோ பலநாள் பழக்கம் போல் அவர்கள் அளவளாவ அருகே இருந்தவன் புகைந்ததில் காது வாய் அனைத்திலும் புகை வரும் போல் இருந்தது “ஹேய் நானும் இங்கே தான் இருகின்றேன்” என்றான் மெல்லிய எரிச்சலுடன்.

“அண்ணி அவனிடம் சொல்லுங்கள். எனக்கும் அவனுக்கும் பேச்சில்லை”

“ஏன் அண்ணி வேண்டும். நான் வேண்டாமா? நான் இல்லாமல் எங்கிருந்து வந்தாள் அண்ணி”

“எனக்கும் ஆசை இருக்குமில்லை அண்ணாவின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று, சொல்லாமல் திருமணம் செய்தான் இல்ல” முகத்தை திருப்பினாள். கூம்பி விட்டிருந்த கௌதம் முகத்தைப் பார்த்த ஸ்ரீனிகா சிறிதும் யோசிக்காமல் அவன் கையை தன்னோடு அணைத்துக் கொண்டு அவன் தோளில் தலை சாய்த்தவள் “சாரி, என்னால் தான், என்னைக் காப்பற்ற போய்த்தான் இத்தனை பிரச்சனையும். எனக்காக மன்னித்து விடுங்கள்” என்றாள்.

அவளிடமிருந்து இப்படி ஒரு அணுகலை எதிர்பார்க்காத கௌதம் ஆச்சரியத்துடன் லேசாய் வாய் திறந்து அவளையே பார்த்திருக்க அங்கே நதியா கலகலவென சிரித்தாள். “அண்ணா, அண்ணி சூப்பர் செலக்க்ஷன். அம்மா சொன்னா வந்த அன்றே அப்பா உன்னை திட்டுவாறோ என்று கவலைபட்டார்கள் என்று சரியாத்தான் இருக்கு. அண்ணி நான் சும்மா தான் அவனை கலாய்த்தேன் போதுமா?”

‘சும்மாவா..’ நிமிர்ந்து கௌதமனை பார்க்க கண்ணோரம் சுருங்க சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான். அவன் செல்லத் தங்கையா அவனிடம் பேசமால் இருப்பாள். அங்கே நதியாவும் யசோதாவும் சத்தமாய் சிரிக்க எழுந்து ஓடப் போனவளை கை பிடித்து தடுக்க சட்டென அவன் முதுகில் முகத்தை மறைத்தாள். “சரி சரி போதும் அவளை கலாய்த்தது போய் மச்சானை கவனி” என்றான்.

வீடியோ காலுக்கு வந்த சுரேஷ் இருவரையும் பார்த்து விட்டு கையசைத்து விடை பெற்று சென்றுவிட அவன் முதுகின் பின்னிருந்த ஸ்ரீனிகா அவனைப் பார்க்கவே இல்லை. சுரேஷை பார்க்க அத்தனை நேரமிருந்த இதமான மனநிலை மறைந்து இன்னும் அந்த மில்லை அவனுக்கு விற்கவில்லை என்பதே நினைவில் வந்தது. அவர்களிடம் பாய் கூறி ஒரு கையால் லப்பை மூடியவன் அவளாக விலகுவாள் என்று சில கணம் காத்திருக்க அவளோ கணவனின் வாசத்தில் மதி மயங்கி போயிருந்தாள்.

இதற்கு மேல் விட்டால் எப்போதுமே அவளை விலக்க முடியாது என்று தோன்றி விட சட்டென உதறி எழுந்திருந்தான் கௌதம். அவன் உதறி எழுந்த வேகத்தில் கீழே விழுந்தவள் கண்கள் விரிய அதிர்ந்து போய் பார்த்திருந்தாள்.

“என்ன... என்னை மயக்க திட்டமா?” ஏளனமாய் கேட்டவனை பேச்சு மறந்து பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா. “அல்லது குடும்பத்தினரை மயக்கி இங்கேயே இருந்துவிடலாம் என்று திட்டமா? இது போல வசதி எங்கேயும் கிடைக்காது இல்லையா?” மீண்டும் வார்த்தைகளால் வதைத்தான்.

அடி வாங்கிய குழந்தையாய் பார்க்க அதையும் தாங்கி கொள்ள முடியாது வெளியே சென்றிருந்தான் கௌதம்.

கையூன்றி எழ முயன்றால் கால் பாதம் சுளுக்கிவிட்டிருந்தது “தொம்மகாடு” உதட்டை சுழித்து வாய்க்குள் முணுமுணுத்தாள். முழங்காலை கட்டிக் கொண்டவள் முகம் ஆழ்ந்த யோசனையை காட்டியது. வெறும் கோபம் மட்டுமே இல்லையா? வேறு எதுவுமா? இல்லை என் மீது வெறுப்பா? மூளை கேள்வி கேட்க மனமோ ‘என் மீது வெறுப்பா எப்படி வரும் என்னை தானே காதலிக்கின்றான்’ பதிலளிக்க மூளை திருப்பிக் கேட்டது ‘அவன் எப்போது சொன்னான் உன்னை காதலிப்பதாக’

🎻🎻🎻🎻🎻

நிலாவுக்கு அவள் கேட்டுக் கொண்டதன்படி கை தன் பாட்டில் ஜடை போட ஸ்ரீனிகாவின் மனமோ யோசனையில் ஆழ்ந்திருந்தது. அன்று அவன் உதறி சென்ற பின் அவனை அணுகப் பயத்தில் ஸ்ரீனிகா தயங்க, கௌதமிற்கோ புதிதாய் ஆரம்பித்த கம்பனி வேலை அவன் நேரத்தை விழுங்கிக் கொண்டது. குழந்தைகளும் அத்தை மாமாவும் யூஎஸ்சில் இருந்து வந்த பின்னரும் தேவைக்கு தவிர இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. கௌதம் வீட்டில் இருக்கும் நேரம் குறைவாக இருக்க இது யசோதாவின் கவனத்தை ஈர்க்கவும் இல்லை.

இன்று அவள் கேரளா போக வேண்டும். திருமணம் முடித்து வந்த பின் இடையில் ஒரே ஒரு தரம் அவசர அவசரமாய் சென்று பார்த்தது அதன் பின்னர் காலில் ஏற்பட்ட காயம் அது இது என்று இன்னும் அம்மாவை சென்று பார்க்க முடியவில்லை. போய் வர எப்படியும் இரண்டு நாட்கள் எடுக்கும். திடிரென வந்ததில் கேசவன் நாயரின் முடிக்காத சில வேலைகள் இருந்தன. அவற்றையும் முடித்தாக வேண்டும் மொத்தமாய் குறைந்தது ஐந்து நாட்கள். அதை அவனிடம் சொல்ல வேண்டும் எப்படி. பின்னலை போட்டு முடித்தவள் நாடியை பிடித்துக் “என்ர சுந்தர குட்டியானு” கொஞ்சி இருவர் கையிலும் பாக்கை கொடுத்து அனுப்பினாள்.

அவர்கள் முன்னே ஓட மாடியில் இறங்கி வந்த ஸ்ரீனிகா கண்ணில் விழுந்தார்கள் டைனிங் டேபிளில் இருந்த அண்ணன் தங்கை. மேஜையில் இருந்த உணவை நதியாவிற்கு ஊட்டுவது போல் போக்கு காட்ட அசோகனும் யசோதாவும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏனோ திடிரென்று அம்மாவின் வருத்தம் நிறைந்த பார்வைகள் கண்ணில் தோன்றி மறைந்தது. தனியாக இருந்து டிவி பார்த்து சிரிக்கும் போது, தனியாக இருந்து விளையாடும் போது என்று சில தருணங்களில் அம்மாவின் கண்களில் தோன்றும் வலியின் காரணமும் தான் சிறு வயதில் இழந்தது எதுவென்றும் புரிவது போலிருந்தது. அவளையும் அறியாமல் டைனிங் டேபிள் போக ஓரடி எடுத்து வைத்தவள் தயங்கி நின்றுவிட்டாள். அன்று போல் அம்மா அப்பா முன் நடந்து கொள்ள மாட்டான். ஆனால் அறைக்கு வந்த பின் என்ன சொல்வான் என்று தெரியாது. அன்று கூறியதே இதயத்தை புழுப் போல் குடைந்து கொண்டிருந்தது.

அவர்களுடன் சேர்ந்து குடும்பமாய் உணவுண்ணவும் ஆசையாய் இருந்தது. ஆனால் கௌதம் ஏதாவது சொல்லி விடுவானோ என்று பயமாயும் இருந்தது. ஆசை பயத்தின் போட்டியில் பயமே வெல்ல சிரித்து பேசி உணவுண்ணும் அவர்களை ஏக்கத்துடன் பார்த்தவாறே விலகிச் சென்றாள்.

அவள் இறங்கி வரும் போதே கவனித்து விட்ட கௌதம் வேண்டுமென்றே தான் அலட்சியமாக இருந்தான். ஆனால் அவளே விலகிச் செல்ல யோசனையுடன் நோக்கினான்.

அன்று சற்று அதிகம் பேசிவிட்டோமோ.... உடனேயே தனக்கு தானே சமாதானமும் கூறிக் கொண்டான். ஏமாற்ற வந்தவளிடம் இதை விட நல்லவிதமாய் நடக்க முடியாது தோளை குலுக்கியவன் உணவில் கவனம் செலுத்த முயன்றான் ஆனால் முடியவில்லை. அவள் பார்வை மனதை ஏதோ செய்தது. என்ன பார்வை அது....

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா

காரை நோக்கி வேகமாக நடந்தவனின் நடையை தேக்கியது காலை நேர இளங்காற்றில் மெலிதாய் ஏதோ ஓர் ஏக்கத்தை ஏந்தி வந்த அந்த ஆலாபனை.

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமை தாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா


கௌதம் வெளியே வர அவனுடன் சேர்ந்து நதியா யசோதா இருவரும் வந்தார்கள். “யார் பாடியது?” ஆவலாய் கேட்ட நதியா தோட்டத்து பக்கம் சென்றாள். கௌதம் விழிகள் தோட்டத்தை சுற்ற வெறுமையான தோட்டம் அவனைப் பார்த்து நகைத்தது. கையிலிருந்த போன் அதிர நேரம் போவதை உணர்ந்து காரில் ஏறினான்.



வருவான்…
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 26

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன் வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.


முயற்சி திருவினையாக்கும்

நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 27
இன்று எப்படியாவது அசோகனிடம் தான் ஸ்ரீமதியின் மகள் என்பதை சொல்லிவிட வேண்டும் மனதினுள் சபதமே எடுத்திருந்தாள் ஸ்ரீனிகா. இதற்கு முன்னும் இரண்டு மூன்று தடவை முயற்சித்தவளுக்கு சொல்ல முடியவில்லை. ஒரு தரம் கௌதம் வந்து அழைத்து சென்றுவிட்டான், முறைப்போடு தான். இன்னொரு தரம் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவே அவசரமாய் போய்விட்டார். எப்படியே தட்டி போய்விட்டது. சிலவேளை அம்மாவுடன் மாமா பேசினால் நினைவு திரும்பக் கூடுமோ. ஒரு மாதம் வாழ்ந்தாலும் உணர்வுகளுடன் வாழ்வது நல்லதில்லையா...

கீழே வந்தவள் அசோகனை தேட ஹாலில் போனை பார்த்துக் கொண்டு நின்றார். அருகே சென்றவளுக்கு பயத்தில் தொண்டை காய்ந்து விட மெதுவே அழைத்தாள் “மாமா...” புன்னகையுடன் திரும்பிய அசோகனின் கண்ணில்பட்டர் அவர் தர்மபத்தினி யசோதா. மகனின் எச்சரிக்கை நினைவில் வர சற்று கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு “என்ன?” கடுமையாகவே கேட்டார்.

வீட்டில் அவரை பற்றி நன்கு தெரிந்த யாருக்குமே புரியும் அவர் பச்சையாக நடிக்கின்றார் என்று. ஆனால் சும்மாவே பயந்த சுபாவம் உள்ள ஸ்ரீனிகாவிற்கு அது நடிப்பாக தெரியவில்லை. பயத்தில் ஓரடி பின் சென்றவள் “ஸ்ரீமதி பெண் நான்” வார்த்தைகள் தந்தியடித்தது.

போனில் ஏதோ மெசேஜ் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அவள் கூறியது சரியாக கேட்கவே இல்லை. நடிக்கின்றேன் என்ற பெயரில் திரும்பி முறைக்கவே பயத்தில் இன்னும் இரண்டடி பின்னே சென்றாள் ஸ்ரீனிகா. அவள் பயத்தை பார்க்க பாவமாக இருக்கவே சட்டென அங்கிருந்து சென்றுவிட்டிருந்தார் அசோகன்.

ஹாலில் தனியாக நின்ற ஸ்ரீனிகா புரிந்து கொண்டது. அசோகனுக்கு அம்மாவை பிடிக்கவில்லை. தாத்தாவிற்காக சகித்திருகின்றார். அதுதான் அம்மாவின் பெயரைக் கேட்டதுமே சினம் வருகின்றது. ஸ்ரீமதி வீட்டினுள் என்ன நடந்தது என்பதை ஓரளவு சொல்லியிருந்தார். இத்தனை காலம் மாமாவுக்கு நடந்தது தெரியாது. அதனால் தான் தங்களை தேடவில்லை என்று நினைத்திருந்தாள். ஆனால்....

குண்டு கண்களில் இருந்து நீர்மனிகள் துளியாய் உருண்டோடியது.

வெளியே சென்ற அசோகனுக்கு ஏதோ போலிருந்தது. பூனைக் குட்டி போல் ஆசையாய் பேச வந்த பெண்ணிடம் பேசாமல் கோழை போல் ஓடி வந்ததை நினைத்தால் வெட்கமாகவும் இருந்தது. அந்த நேரம் பார்த்து சரியாக கௌதமும் வர பொரிந்து தள்ளி விட்டு வெளியே சென்றுவிட்டார். “இதற்கு மேலும் அந்த குழந்தையிடம் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியாது. அழுகின்றாள், சீக்கிரம் அம்மாவை சமாதானப்படுத்தும் வழியை பார்”.

உள்ளே ஹாலில் வேலையாட்கள் முன் அழுதுவிடாமல் தன்னை கட்டுபடுத்த முயன்ற ஸ்ரீனிகாவின் தோளில் ஒரு கை விழவே திரும்பிப் பார்த்தவள் சங்கடமாய் புன்னகைத்தாள் “அத்தை....”

“உன் மாமாவிடம் நான் பேசுகின்றேன், அவருக்கு நடிக்க கூட சரியாக வரவில்லை” யசோதா அன்பாய் கூறினார். கண்ணீரை அடக்கி போலிப் புன்னகையுடன் தலையாட்டிவிட்டு மேலே சென்றுவிட்டாள். உள்ளே வந்த கௌதமிற்கு அவள் புன்னகை முகமே கண்ணில் பட படியேறிச் சென்றவளையே முறைத்தான்.

“அவளை ஏண்டா முறைக்கிறாய்? உன் அப்பாவும் நீயும் நடத்தும் நாடகம் எனக்கு தெரியாது. சும்மா மிரட்டாமல் அவளுடன் பேசும் வழியை பார்க்கச் சொல் உன் அப்பாவிடம்” கண்டிப்புடன் கூறியவர் “பெரிய சிவாஜியும் எம்ஜிஆரும்” நொடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அப்பா பொரிந்து தள்ளியதில் சூடாய் இருந்தவன் இப்போது அம்மாவின் கண்டிப்பில் கொதி நிலைக்கே சென்றுவிட்டான்.

அறைக்குள் சென்றவன் அவளைத் தேட, வெளியே ட்ரெஸில் நின்றாள். கை முட்டிக்கு மேல் பிடித்து திருப்பியவன் “உன் மனதில் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? தெரியாமல் தான் கேட்கின்றேன். இது ஒப்பந்த திருமணம் தானே தெரிந்து தானே சம்மதித்தாய்? இப்போது எதுக்கு இந்த நாடகம்?” சீறினான்.

ஸ்ரீனிகா விழித்தாள். இவனுக்கு என்ன நடந்தது.

இறுக பிடித்த கை வலிக்கவே “ஸ்.... வலிக்குது” வாய்க்குள் முனங்கினாள். அவள் கண்களையே ஆழ்ந்து பார்த்தவனுக்கு சிவந்திருந்த அந்த கண்களை பார்க்க அவள் நிஜமாகவே அழுதிருக்கின்றாள் என்பது புரிந்தது.

அவளை உதறி, தள்ளி நின்று கழுத்து பட்டியை தளர்த்திவிட்டவன் வாய் வழியே மூச்சுவிட்டு தன்னை தானே நிலைபடுத்தினான். அவனிடம் அப்பா பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவன் தள்ளிவிட்டதில் தடுமாறிய ஸ்ரீனிகா பல்கனி சுவரைப் பிடித்து தன்னை சமாளித்து நொந்து போய் பார்த்தாள். ஏன் எப்போதும் உதறித் தள்ளுகின்றான்.

“அப்பாவிடம் என்ன சொன்னாய்?”

வேகமாக தலையாட்டினாள் “எதுவும் சொல்லவில்லை. மாமா கோபமாய்....” அவள் வார்தையை முடிக்க முதல் சீறி விழுந்தான் “யாருக்கு யார் மாமா?” இரு தோள்களையும் பற்றி “மறுபடியும் சொல்கின்றேன், இது வெறும் ஒப்பந்த திருமணம், அதை நினைவில் வைத்து கொள். கேட்கும் போது விவாகரத்து கொடுத்து செல்ல வேண்டும். இந்த மாமா நோமா எல்லாம் வேண்டாம் புரிந்ததா?” கட்டளையாய் ஒலித்தது அவன் குரல்.

வேகமாய் தலையாட்டியவளை விட்டுத் திரும்பினான்.

“நான் நாளை கேரளா போகின்றேன்” மெல்லிய குரலில் கூறியவளை ஏளனமாய் நோக்கினான் “உனக்காக என்று தனியாக விமானம் எல்லாம் வாங்கி விட முடியாது”

“இல்ல, அத்தை தேடினால்.... உங்களிடம் கேட்டால்....”

“வாட்டேவேர்” வாய்க்குள் முணுமுணுத்தாவாறே சென்றுவிட்டான்.

அன்றிரவு ஏதோ வேலையாய் அறையை விட்டு வெளியே வந்து மாடி வளைவில் நின்றவள் கண்ணில்பட்டது அந்தக் காட்சி. அசோகன் அப்போதும் போனை பார்த்து கொண்டிருக்க அருகே வந்த நதியா அவர் கையிலிருந்த போனைப் பறித்தாள். யாரென்று நிமிர்ந்து பார்த்தவர் செல்ல மகளைக் கண்டதும் சிரித்தவாறே அவள் தலையைத் தடவி சோபாவில் அமர்ந்தார்.

நதியா அவர் தோளில் சாய்ந்து ஏதோ சொல்ல கவனமாய் கேட்டு தலையாட்டி, தலையை வருடி விட்டு என்று அப்பா மகள் பந்தம் பார்க்கவே பாந்தமாய் இருந்தது.

ஸ்ரீனிகாவிற்கு ‘ஏண்டா கௌதமை திருமணம் செய்தோம்’ என்றிருந்தது. இது போன்ற உறவுகளின் சங்கமங்கள் கண்ணில் படாத வரை அவளுக்கு ஒரு பொருட்டாக அமையவில்லை. இப்போதோ கண் முன்னே தென்பட அது போன்ற உறவுகளுக்காக மனம் ஏங்கியது.

பிரெஷ் ஆகி கீழே அவர்களுடன் இணைந்து கொண்ட கௌதம் அப்பா மகளையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிகாவைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான். இதில் பார்க்க என்ன இருக்கின்றது. அனைத்துக் குடும்பத்திலும் இப்படித்தானே. ஏதோ அப்பா மகளையே வாழ்வில் கண்டதே இல்லை என்பது போல் இது என்ன பார்வை. நிமிர்ந்து பார்க்க உள்ளே சென்றுவிட்டாள்.

என்ன பார்வை இது. அன்று போல் இன்றும் அவள் பார்வை அவனை ஏதோ செய்தது.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் காலை குளித்து வந்த போது அவன் அணிய வேண்டிய ஆடைகள் ஹங்கரில் தொங்கவில்லை. மெல்லிய எரிச்சலுடன் அவனே ஒரு த்ரீ பீஸ் சூட் ஒன்றினை அணிந்து தயாராகி கீழே வந்தால் காபியின் சுவை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எதை செய்தாலும் எரிச்சலாய் இருக்கவே காரணம் புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள ஈகோ மறுத்தது, பாதி உணவில் எழுந்து சென்றுவிட்டான்.

அடுத்த வந்த இரு நாட்களும் இது போலவே கழிய அவள் அறையின் கதவை தட்டினான். பதிலின்றி போக திறந்து பார்த்தான். அவளின்றி சுத்தமாய் இருந்தது. உண்மைதான் ஸ்ரீனிகா இருக்கும் போது குழந்தைகள் இருவரும் அவளுடனேயே இருக்க அறையில் ஒரு தண்ணீர் மெத்தையை போட்டு அதன் மீது தான் மூவரும் கும்மாளம் அடிப்பார்கள். சிலவேளைகளில் அவர்கள் சத்தத்தில் இவனுக்குதான் இங்கே வேலை செய்ய முடியாமல் போகும். போனை கையில் எடுத்தவனை மூளை எச்சரித்தது ‘அவள் ஏமாற்றுக்காரி’

🎻🎻🎻🎻🎻

அங்கே ஸ்ரீனிகா அம்மாவின் அருகே அமர்ந்து உலகத்தின் பொய்களை எல்லாம் அவளே குத்தகைக்கு எடுத்தது போல் அளந்து கொண்டிருந்தாள். “நேற்று அவர் அம்மா அப்பா முன்னாடியே எனக்கு ஊட்டி விட்டுட்டார். அப்புறம் எனக்கு ஒரே வெக்கமா போச்சு. எனக்கு என்று தனியாய் ஒரு கார் அங்க நிக்குது தெரியுமா? அதுக்கு டிரைவர் வேற எனக்கு மட்டுமேதான். அப்படியே ஒரே குடும்பமாய் என்னை கேயர் பண்ணுவாங்க, தங்க தட்டில் தாங்காதது தான் குறை, இங்கே வருவதற்கு கூட விமானம் தான் அரேஞ் செய்தாங்க, அச்சுவலி ஹெலி அரேஞ் பண்றதா தான் சொன்னங்க நான்தான் விமானமே போதும் எதுக்கு என்று” நதியாவிற்கு செய்வதையெல்லாம் தனக்கு செய்வதாக கூசமால் புளூகியவாறே திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.

கண் திறந்திருக்க அவளையே பார்த்திருந்தார் ஸ்ரீமதி. “அம்மா....” கதறலாய் ஒலித்தது அவள் குரல். சட்டென சுவற்றில் ஒட்டியிருந்த படத்தை காட்டி “கல்யாண படம்” என்றாள். விழிகள் மெதுவே அசைந்து படத்தை பார்த்தது. போனை எடுத்து யாருக்கோ அழைத்து “அம்மாவுடன் பேசுங்கள்” என்று சத்தம் வெளியே கேட்கும்படி போட்டாள்.

“அத்தை கவலையே வேணாம். அவளை நல்ல பார்த்துக் கொள்வேன். நீங்க எதுக்கும் யோசிக்காதீங்க, எனக்கு இங்கே ஒரு முக்கியமான வேலை இல்லாவிட்டால் நானே நேரில் வந்திருப்பேன். அவளை தனியாய் அனுப்பியிருக்க மாட்டேன்” போனில் கேட்ட குரலில் ஸ்ரீமதியின் முகத்தில் மெல்லிய அமைதி. கிரகித்துக் கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது.

உதடு லேசாய் துடிக்க கை விரலொன்று மெதுவாய் அசைந்தது. ஸ்ரீனிகா கையை கையில் கன்னத்தில் அழுத்திக் கொண்டாள். அவர் விரல்கள் மெதுவே அசைந்து கன்னத்தை வருடியது அவ்வளவுதான் மீண்டும் கோமாவிற்கு சென்றுவிட்டிருந்தார். அவரையே அசையாது சிறிது நேரம் பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா எத்தனை துன்பங்களை கடந்து வந்துவிட்டார் இனியும் துன்பப்பட வேண்டாமே. கையிலிருந்த போனை பார்த்தவள் வெளியே சென்று மீண்டும் அழைத்தாள் “தேங்க்ஸ் வசந்த், நீங்க பேசினது அம்மாவிற்கு கேட்டுது. ரெம்ப தேங்க்ஸ்” நீர் கன்னம் தாண்டி வழிய அதை துடைத்து விட்டு மருத்துவரை காண சென்றாள்.

ஆறுதலான புன்னகையுடன் எதிர் கொண்ட மருத்துவர் “சொல்லம்மா” பரிவுடன் கேட்டார்.

“அம்மா....” மெதுவே இழுத்தாள்.

“உன் கணவர்....”

கோர்த்திருந்த கரங்களை பார்த்தவள் “அவர் வர முடியாத நிலை... என்னிடமே சொல்லுங்கள்” நிமிர்ந்து பார்த்தாள். ஆழ்ந்த மூச்சைவிட்டவர் “மிஞ்சி மிஞ்சி போனால் மூன்று மாதம்....” கருணையுடன் நோக்கினார்.

“நான் சென்னை அழைத்து செல்லவா?”

“அவர் உடம்பு தாங்காது, இந்த நிலையில் இருப்பவர்களுக்கு வலியை வெளியே சொல்ல முடியாது. ஆனாலும் வலிக்கும். என்னுடைய அட்வைஸ் வேண்டாம்”

“இ இனி எப்போது நினைவு...”

“சொல்ல முடியாதம்மா, இன்று வந்ததே அதிசயம். சிலவேளை இதுவே....” அதற்கு மேல் அந்த பிஞ்சு முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை. தலையாட்டி விட்டு சோர்ந்து போய் போகும் ஸ்ரீனிகாவையே பரிவுடன் பார்த்திருந்தார் மருத்துவர்

அதன் பின் ஸ்ரீனிகாவின் வார இறுதி நாட்கள் பெரும்பாலும் கேரளாவிலேயே கழிந்தது.

🎻🎻🎻🎻🎻

குளித்து பிடரியை சிறு டவலால் துவட்டியபடி வந்தவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. வழமை போல் அவன் ஆடைகள் சிறு ஹங்கரில் தொங்க அருகே சிறு மேஜையில் மீதிப் பொருட்கள். சட்டென அவள் அறையை திறந்து பார்த்தான் வெறுமையாய் இருந்தது. வேகவேகமாக தயாராகி கீழே வந்து காபியை வாயில் வைக்க உயிர்வரை தித்திதது.

கௌதம் கிருஷ்ணா டைனிங் டேபிளில் இருந்தாலும் அவன் கண்களோ வீட்டையே வட்டமிட்டது. எங்கே போனாள். பிரிட்ஜ் கதவைத் திறந்து அதன் பின்னே நின்ற ஸ்ரீனிகாவிற்கு தெளிவாகவே தெரிந்தது அவளைத் தான் தேடுகின்றான். சிறிது நேரம் தேட விட்டு வேடிக்கை பார்த்தவள் அவனிடமிருந்து கண் எடுக்கமால் சத்தமாய் அழைத்தாள் “வள்ளியம்மா...”.

சத்தம் வந்த திசையை நோக்கியவன் கண்கள் அவன் அனுமதியின்றி மலர, மலர்ந்த கண்களால் அவனையே பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா.

கிட்டத்தட்ட ஒரு வாரத்தின் பார்த்ததில் மனகசப்பு சற்றே பின் செல்ல, இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. காபியை கையில் எடுத்துக் கொண்டு அவளருகே வந்தான். “சோ எப்படி இருந்தது கேரளா பயணம்?” விசாரித்தவாறே திரும்ப அவன் கையிலிருந்த காபி தவறி அவள் மேல் கொட்டியது.

“அடடா சுட்டுவிட்டதா?” போலியாய் அனுதபப்பட்டான்.

“அச்சோ...” நிமிர்ந்து பார்த்தவளுக்கு தெளிவாகவே புரிந்தது அவன் வேண்டுமென்றே செய்கின்றான். ‘இவனை..’ பிரிட்ஜில் இருந்து நீரை எடுத்தவாறே “இல்லை பரவல்ல” என்றவாறே திரும்ப அவள் கையிலிருந்த நீர் அவன் மேல் அபிஷேகமானது.

கையால் தட்டிவிட்டவள் “அச்சச்சோ... குளிருதா?” குறும்பாய் கேட்க முறைத்தான். அவள் குறும்பை ரசித்த அவன் கண்களே அவனை பச்சையாய் காட்டிக் கொடுத்தது.

“ஒரு நிமிடம்” போனவனை தடுத்து நிறுத்தியது அவள் குரல். கையிலிருந்த காபி கப்பை வாங்கியவள் “இது பிரிஜ்ல இருக்கிற தண்ணியை விட குளிருது, வள்ளியம்மாவிடம் சொல்லி புதுசா போடச் சொல்றேன்”

காபியையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தவன் உதட்டுக்குள் ஒளித்த புன்னகையுடன் “சரி வள்ளியம்மாவையே போடச் சொல்” போகிற போக்கில் சொல்லிச் சென்றான்.

“ஸாத்யாகரன்...” உதட்டை சுளித்தாள்.

போனவன் நின்று கேட்டான் “ஹா....”

மலையாளத்தில் “ஒன்னுமில்லா...” என்றவள் கிச்சினுக்கு ஓடிவிட்டாள். திரும்பி ஓடும் அவளைப் பார்த்தவன் முகம் ஐந்து நாட்களின் பின் புன்னகையில் நிறைந்திருந்தது.

காபியை போட்டு எடுத்ததுக் கொண்டு மேலே சென்ற போது பனியனுடன் சட்டையை எடுத்துக் கொண்டிருந்தான். கையில் காபியுடன் கதவு நிலையில் சாய்ந்து நின்று லஜ்ஜையே இன்றி அவனை சைட் அடித்தாள் ஸ்ரீனிகா.

சேர்ட்டை பட்டன் போடமால் டையை கழுத்தைச் சுற்றி போட்டு விட்டு கண்ணாடியில் அவளை பார்த்தவாறே பட்டன் போட்டு டையையும் கட்டினான். சட்டையை உள்ளே விட பெல்டில் கை வைத்து நிமிர்ந்து கண்ணாடியை பார்க்க சட்டென கன்னம் சிவக்க திரும்பி ஒரு கையால் கண்களை மூடினாள் ஸ்ரீனிகா.

அவன் மெல்லிய நகை சங்கீதமாய் அறையை நிறைத்தது.

“க்கும்” அருகே தொண்டையை கனைத்த சத்தத்தில் நிமிர கூட இல்லாமால் காபியை நீட்டினாள். அவள் முகத்தில் அப்பட்டமாய் பயத்தின் ரேகை எங்கே ஏதாவது சொல்லிவிடுவானோ.. ஏனோ அவனுக்குமே இனிமையான மனநிலையை குழப்ப மனமின்றி காபியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

அவன் எதுவும் பேசாமல் சென்றதில் மனம் மகிழ்ச்சியில் குதிக்க ட்ரெஸ்க்கு ஓடியவள் சிரித்தவாறே ஊஞ்சலில் அமர்ந்து பாடத் தொடங்கினாள்.

வருவான் காதல் தேவன் என்று - காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று - காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் - வாழ்த்து பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் - ஆசை காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது



கார் கதவைத் திறந்த கௌதம் மேலே பார்த்துக் கொண்டிருந்த அஜாவை நோக்கி கேட்டான் “என்ன யார் பாடுவது பார்த்தாகிவிட்டதா?”

“இல்ல பாஸ்”

“ஏன்!”

“பாடுறத கேட்க தானே முடியும் அதான்”

“சகிக்கல” காரை எடு என்பது போல் சைகை செய்தான்.

🎻🎻🎻🎻🎻

போகும் காரையே பார்த்திருந்த விதிதேவன் பறந்து சென்று ஸ்ரீனிகா அருகே நின்றான். அவள் போனில் சாரதம்மா என்று காலர் ஐடி விழுந்தது.

வருவான்.....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 28
நீதிமன்றின் அருகே இருக்கும் அந்த வீதி பகலில் ஜேஜே என்று இருக்கும். இரவு மணி ஒன்பது பத்தை தாண்டினால் ஒரு ஈ காக்காய் கூட தென்படாது. அன்று பார்த்து அலுவலகத்தில் வேலை இழுத்து விட வெளியே வந்து பார்த்த போதுதான் புரிந்தது நேரமாகிவிட்டிருந்தது. தெருவே ஓய்ந்து போயிருந்தது. போதாக்குறைக்கு பைக் வேறு பஞ்சர் ஆகவே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள் ஸ்ரீனிகா

கடந்த சில வாரங்களில் எதுவித பிரச்சனையுமின்றி நகர்ந்திருக்க ஸ்ரீனிகாவின் நம்பிக்கை மெதுவே மீண்டும் துளிர்விட்டிருந்தது. இருந்தும் கௌதமின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தி விட்டு அழைப்போமா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்தவள் கை வேறு வழியின்றி இப்போதோ அப்போதோ என்று பட்டறியை கோட்டில் காட்டிக் கொண்டிருந்த போனின் கால் பட்டனை அழுத்தியது.

“ஹலோ கௌதம்” தயக்கத்துடனேயே அழைத்தாள்.

“ஹலோ யாரு, அப்படியே இதிலும் ஒரு காப்பி தாருங்கள்” அங்கே யாரிடம் எதையோ கூறியவன் “ஹா யாரு” மீண்டும் போனில் கேட்க “நான் ஸ்ரீனி...”

“சொல்லு, என்ன இந்த நேரம்”

“பைக் பஞ்சர் ஆகிட்டு ப்ளீஸ் யாரையாவது அனுப்ப முடியுமா? ஒரே இருட்டா இருக்கு இங்கே” பயத்தில் நாக்கு வறண்டது.

“ஆட்டோ இல்ல டாக்ஸி பிடி”

“இல்ல இந்த தெருவுக்கு இந்த நேரம் யாரும் வர மாட்டாங்க ப்ளீஸ் நீங்க வாங்களேன், பயமா இருக்கு”

“இங்கே முக்கியமான மீட்டிங்ல இருக்கிறேன்” போனை வைத்துவிட்டான்.

போனை பார்த்தவள் கண்கள் நீரில் நிறைய சுற்றிலும் உள்ள இருள் அவளை விழுங்கும் அரக்கன் போல் தோன்றியது. வேறு வழியின்றி மீண்டும் கௌதமுக்கே அழைத்தாள்.

“என்ன” எரிச்சலுடன் கேட்டான்.

“அஜா ஏட்டா...”

“உனக்கு வேலை செய்ய நான் ஆட்களை வைத்திருக்கவில்லை புரியுதா?” சீறலாய் வந்தது பதில். போனை அங்கேயே வைத்து விட்டு மீட்டிங் ஹால் போகும் வழியில் நின்ற தன் செயலாளரிடம் “அஜாவை போகச் சொல்” என்று விட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.

வீட்டுக்கு செல்ல தயாராக நின்ற அவளோ ‘எங்கே போக சொல்ல’ விழித்தாள்.

மீண்டும் போன் அடிக்கவே அந்த பெண்ணே பதிலளித்தாள் ‘ஹலோ’ சொல்வதற்கு முன் “கௌதம் ப்ளீஸ் ஒரே இருட்டா பய....” அத்துடன் போன் கட்டாகி விட அங்கே வந்த அஜாவிடம் “ஒரு கால் வந்தது பாஸ் உன்னை போகச் சொன்னார்” இரத்தின சுருக்கமாய் கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

“என்ன போன்? யாருக்கு?” காற்றிடம் தான் கேட்டு கொண்டிருந்தான் அஜா.

அஜாவின் போன் அடிக்க பதிலளித்தான் நதியாதான் “என்னோட பிரன்ட் ஏர்போர்டில் நிற்கின்றாள். போய் அழைத்து வர முடியுமா? அருகே தான் வீடு, இன்று ஆட்டோ டாக்ஸி எல்லாமே ஸ்ட்ரைக்” என்றாள் நதியா.

“சரி மேடம்” என்றவன் நிம்மதியாய் மூச்சுவிட்டான் ‘நல்லவேளை அவளே எடுத்துவிட்டால் இல்லாவிட்டால் யாரென்று எங்கே போய் தேட’ தனக்குள் எண்ணிக் கொண்டவன் அழைத்து வர சென்றுவிட்டான்.

🎻🎻🎻🎻🎻

ஸ்ரீனிகா பைக்கை அலுவலகத்திற்கு முன் விட்டு பூட்டியவள் வழமையாக கொண்டு வரும் பாக்பாக்கை நெஞ்சோடு இறுக பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். அந்த தெருவைக் கடக்க முப்பது நிமிட நடை தேவை. ஆளரவரமின்றி ஓய்ந்து போயிருக்க பயத்தில் கால்கள் பின்னிக் கொண்டது. கூடவே சில வருடங்களுக்கு முன் இதே போல் மழை இருளில் நடந்த ஞாபகம் வர அதற்கு மேல் கால் அசைய மறுத்துவிட்டது. முழங்காலை சுற்றிக் கைகளைக் கட்டிக் கொண்டு அப்படியே குந்தி அமர்ந்துவிட்டாள்.

அழுகை வந்தது, தனியிடத்தில் இருந்து அழவும் பயமாய் இருந்தது “அம்மா.. கௌதம்... தீனமாய் அழைத்தாள். இருவருக்குமே கேட்கவுமில்லை வரும் தொலைவிலும் இல்லை. விட்டால் கைகால்கள் வெட்டி இழுக்கும் போல் இருக்கவே மனதில் எஞ்சியிருந்த தைரியத்தை கூட்டி ‘முருகா முருகா’ என்று மனம் உருப்போட எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

🎻🎻🎻🎻🎻

மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்து வந்த கௌதம் தன் மேசையிலிருந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். மனம் சந்தோசத்தில் நிறைந்திருந்தது. நிச்சயமாக வெற்றிகரமான ஒரு சந்திப்பு. போனை எடுத்து நேரத்தைப் பார்க்க மணி பன்னிரண்டை காட்டியது. நதியாவிடமிருந்து ஒரு தவறிய அழைப்பு. அவளுக்கு ஒரு குறுஞ் செய்தியை தட்டிவிட்டு அழைத்தான் “அஜா...”

சோபாவில் படுத்திருந்தவன் ஒரு அழைப்பில் எழுந்து வந்தான்.

வீட்டிற்கு வந்தவனை வாசலிலேயே வரவேற்றார் வள்ளி. “தூங்கவில்லை... நீங்கள் ஏன் இந்த நேரம்..” நெற்றி சுருக்கினான் கௌதம். அவன் காரை ஆவலுடன் பார்த்தவர் “ஸ்ரீனிகாம்மா உங்களுடனா...” அவர் குரல் தேய்ந்தது.

“இன்னும் வீட்டிற்கு வரவில்லையா?” அதிர்ந்து போய்க் கேட்டான் கௌதம்.

“அஜா... நீ அழைத்து வரவில்லை?”

“நதியா மேடம் அவர்கள் சிநேகிதி ஏர்போர்டில் காத்திருப்பதாக சொன்னார்கள் அழைத்து சென்று வீட்டில் விட்டுவிட்டேனே”

பெருவிரலால் நெற்றி கீறியவன் “அப்படியானால் நீ ஸ்ரீனி.. ஏன் ஏர்போர்ட்...”

“இன்று டாக்ஸி ஆட்டோ எல்லாம் ஸ்ட்ரைக்”

“வாட்...” தன்னையறியாமல் கத்திவிட்டான்.

🎻🎻🎻🎻🎻

ஒரு வழியாய் கேட்டினுள் நுழைந்தால் ஸ்ரீனிகா. வியர்வையில் உடம்பு தொப்பலாய் நனைந்திருக்க, நெற்றியிலிருந்து வாய்க்கால் கட்டி காதோரம் கழுத்து என்று வழிந்து கொண்டிருந்தது. வழியில் ஒரு ஆட்டோ டாக்ஸி கூட தென்படவில்லை. பயத்தில் அசைவேனா என்ற காலை சிரமபட்டு நடத்தி இத்தனை தூரம் வந்திருந்தாள். இந்த தெருவுக்குள் நுழைந்த பின்தான் சற்றே ஆசுவாசமாய் உணர்ந்தாள். வழமையாக அந்த தெருவை காவல் காக்கும் கூர்க்கா பார்க்கில் குழந்தைகளுடன் விளையாடுவதை வைத்து அவளை அடையாளம் கண்டு வாசல் வரை கூடவே வந்தான்.

கேட்டை தாண்டி உள்ளே வந்து வீட்டின் வாசலைப் பார்த்தவளுக்கு நிம்மதியாய் மூச்சு வர, ஒரே ஓர் நினைவுதான் வந்தது வீட்டிற்கு வந்துவிட்டேன், அத்துடன் பயத்தில் இறுகியிருந்த உடல் தளர நினைவிழந்து தடாலென சரிந்தாள்.

ஏதோ சத்தம் கேட்டதே என்று ஓடி வந்து பார்த்த கௌதம் அஜா இருவரும் மயங்கிக் கிடந்த ஸ்ரீனிகாவைப் பார்த்து திகைத்து போய் நின்றார்கள்.

“விசாரி” அஜாவை நோக்கி ஒற்றைச் சொல்லாய் சொன்னான்

அவளை தூக்க போன கௌதம் தீச்சுட்டால் போல் கையை பின்னுக்கு இழுத்துவிட்டான். அவள் தேகம் பிரிஜில் வைத்தது போல் சிலிட்டு போய் இருந்தது. ‘இந்த கோடை காலத்தில் எப்படி இத்தனை தூரம் சில்லிட்டது’ தனக்குள் யோசித்தவன் கோட்டை கழட்டி அவளுக்கு போர்த்தி கைகளில் ஏந்தி உள்ளே வர வள்ளி பதறினாள் “என்னாச்சு தம்பி....”

கட்டிலில் விட்டு தண்ணீர் தெளித்து கன்னத்தை தட்டினான் “ஸ்ரீனி.. ஸ்ரீனி..” ஏதோ புலம்பினாள் உற்றுக் கேட்க “இரு...ட்டு பய...” ஒரு வார்த்தையும் முழுதாக வராவிட்டாலும் இருட்டில் பயந்துவிட்டால் என்பதுவரை புரிந்தது. யோசனையுடன் உள்ளங்கை உள்ளங்ககால் என சுடு பறக்க தேய்த்துவிட்டான். அவள் முகத்தைப் பார்த்தவாறே உள்ளங்காலில் தேய்க்க லேசாய் கத்தினாள் “ஆ...”

உள்ளங்காலைப் பார்க்க அது கன்றி நீர் கட்டி போயிருந்தது. கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் நடந்தே வந்து சேர்ந்திருக்கின்றாள் என்பது புரிய உதட்டை வலிக்க கடித்தான் கௌதம்.

அதற்குள் சூடான பூஸ்ட்டுடன் வந்த வள்ளி “இதைக் குடிக்க வையுங்கள் தம்பி” என்றார்.

மழையில் நனைந்த புறாவாய் நடுங்கியவளை நெஞ்சில் சாய்த்து பருக வைத்தான்.

வள்ளி உள்ளே சென்று வெந்நீரும் ஸ்ரீனிகாவின் இரவு ஆடையையும் எடுத்து கொண்டு வர வள்ளியிடம் விட்டு வாஸ்ரூம் சென்றவன் கதவைச் சாற்றி அதன் மீதே சாய்ந்து நின்றான். மீட்டிங் வெற்றிகரமாய் முடித்த உணர்வு எங்கே தொலைந்தது என்றே தெரியவில்லை.

கைகளை முன்னே நீட்டி குனிந்து பார்க்க நடுங்கிக் கொண்டிருந்தது. அவளை இப்படிப் பார்த்தால் தன் நெஞ்சு ஏன் கட்டு மீறி துடிக்கின்றது உடல் ஏன் இப்படி நடுங்குகின்றது. அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான் ஆனால்... இத்தனை தூரமா? இதை வளரவிடுவது சரியில்லை. இத்தனை காலம் அந்த ஸ்ரீனியிடம் கொண்ட காதல் பொய்யா? ஷவரை திறந்தவன் அவள் மீது கொண்ட ஈர்ப்பையும் கரைக்க முயன்றான்.

உடை மாற்றி வெளியே வந்தவனை வள்ளியின் கலவரம் நிரம்பிய விழிகள் எதிர் கொண்டது “என்ன” என்றவன் ஸ்ரீனியை பார்க்க த்ரீ குவட்டருடன் அட்டையாய் சுருண்டிருந்தாள். கைகால்கள் எல்லாம் வெட்டி இழுப்பது போல் நடுங்கிக் கொண்டிருந்தது.

சற்று முன் குளியலறையில் எடுத்த முடிவுகள் எல்லாம் காற்றில் பறக்க நடுங்கும் கரங்களால் மருத்துவருக்கு அழைத்தான்.

🎻🎻🎻🎻🎻

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த அந்த மருத்துவர் அவளைப் பரிசோதிக்க கௌதம், வள்ளி அஜா மூவரும் கவலை நிரம்பிய கண்களால் அவரையே பார்த்திருந்தார்கள் என்ன சொல்வாரே...

“பயப்பட ஒன்றுமில்லை, பயந்துவிட்டாள் அவ்வளவுதான்” என்றார் அவர்.

“வெறும் பயமா?” ஆச்சரியத்துடன் கேட்டான் கௌதம்

“எதுவுமே அதீதமானால் இப்படித்தான்” புன்னகைத்த மருத்துவர் “உறக்கத்திற்கு ஊசி போட்டிருகின்றேன் அநேகமாய் காலை எழும்பும் போது சரியாகிவிடுவாள்” என்றார்.

ஹாலில் சோபாவில் தலை சாய்த்து அமர்ந்திருந்த கௌதம் மருத்துவரை அனுப்பி விட்டு வந்த அஜாவை கேள்வியாய் பார்த்தான்.

குறுக்கே தலையாட்டிய அஜா “அலுவலகத்திலிருந்து நடந்தே வந்திருக்கின்றார்கள். வழியில் வேறு எதுவும் நடக்கவில்லை” கண்களைச் சுருக்கி கேட்டுக் கொண்டவன் “சரி நீ போ, காலை பத்து மணி கடந்து வந்தால் போதும்” அனுப்பி வைத்தான். மனமோ ‘வெறுமே நடந்து வந்ததிற்கு உடல் இத்தனை தூரம் சில்லிடுமா?’ கேள்வி கேட்டது.

மேலே அறைக்கு வர உறக்கத்திற்கு ஊசி போட்டும் பாதி உறக்கத்தில் அனத்திக் கொண்டிருந்தாள். பெருமூச்சுடன் அருகே படுத்து அவள் புறம் சரிந்து போர்வையை சரி செய்ய, இயல்பாய் அவனுடன் ஒன்றியவளை பார்த்து நெற்றி சுருக்கினாலும், விலக்கித் தள்ளவில்லை. தலைக்கு கீழ் கை கோர்த்துப் படுத்துவிட்டான். ஆச்சரியமாக படும் விதமாய் அனத்தல் குறைந்து அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

🎻🎻🎻🎻🎻

என்றுமில்லாத புத்துணர்வுடன் எழுந்திருந்த கௌதம் புன்னகையுடன் யாரையோ அருகில் தேடினான். யாரை தேடினனோ... அவனுக்கே தெரியவில்லை. அவனை தவிர அறையில் யாருமில்லை, அவள் அறையை எட்டிப் பார்த்தான் வெறுமையாய் இருந்தது. பின் தலையை அழுந்தக் கோதியவன் வெளியே ட்ரெஸ்ற்கு சென்று வானத்தைப் பார்க்க செவ்வானம் நிறம் மாறிக் கொண்டிருந்தது.

“ஹ்ம்ம்........”

மெலிதாய் பாடலின்றி ஹம்மிங் மட்டும் காற்றில் தவழ்ந்து வர கீழே குனிந்து பார்த்தான், ஸ்ரீனிகா தான் பூ கொய்து கொண்டிருந்தாள்.

“ஸ்ரீனி....” சத்தமாய் அழைத்தான் “மேலே வா”

நிமிர்ந்து பார்த்தவள் பூக்கூடையுடனே ட்ரெஸில் இருந்து தோட்டத்திற்கு போகும் மாடிப்படி வழியே மேலேறி வந்தாள். அதி காலையிலேயே தலை முழுகி கேரளா பாணியில் இரு கேசக் கற்றைகளை மட்டும் எடுத்து பின்னே சிறு கிளிப் மாட்டியிருந்தாள். மயில் தோகையாய் விரிந்த கேசத்துடன் வெள்ளை அனர்களியில் தேவதை போல் மேலேறி வந்தவளை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை கௌதமுக்கு.

எப்போதும் போல அவள் கேசத்தின் அழகில் மனம் மயங்க ஒற்றை விரலால் நெற்றியிலிருந்து அடி நுனி வரை அளைந்தான். “இதற்கு என்ன போடுகின்றாய்?”

ஸ்ரீனிகா கண்கள் விரிய பார்த்தாள் அன்று கல்யாண கூரை எடுக்கப் போனதன் பின் இன்றுதான் இத்தனை இயல்பாய் நெருங்கி வந்திருந்தான். என்னாச்சு இவனுக்கு... நேற்றுக் கூட போனில் யாரோ போல் பேசினான்.

“அ அது பரம்பரை...”

“ஒஹ்” என்றவன் “யூ ஒகே?” மூக்கில் ஒரு விரலால் தட்டினான்.

“ஹா...”

“நேற்று....”

அவன் முடிப்பதற்குள் மன்னிப்புக் கேட்டாள் “சாரி டிஸ்டப் செய்திட்டன்”

யாரோ போல் மன்னிப்பு கேட்க கௌதமிற்கு முகத்தில் அறைந்தது போலிருந்தது “இல்ல..” என்று அவன் மறுத்து ஏதோ சொல்வதற்குள் போன் திரையில் நோட்டிபிகேசன் காட்டியது. குறுஞ்செய்தி ‘இன்னும் இரண்டு நாட்களில் சென்னை வருகின்றேன்’.

கௌதமைச் சுற்றியிருந்த மாயவலை சட்டென அறுந்து விழ நெற்றியை அழுந்த பற்றினான். ‘என்னாச்சு எனக்கு, ஏன் இவளிடம் இப்படி மயங்குகின்றேன்’ திரும்பி அவளைப் பார்க்க பூக்களைப் அளைந்தபடி நின்றாள்.

சற்று நேரம் அவளையே பார்த்தவன் பெருவிரலால் நெற்றி கீறினான் “ஸ்ரீனிகா...” அழைத்த விதமே அலாதியாய் இருக்க நிமிர்ந்து “ஹ்ம்ம்” என்றாள் ஸ்ரீனிகா. அவள் முகத்தைப் பார்த்தவன் சிறிது நேரம் மௌனமாய் இருந்தான். அவளே பூக்களை அளைந்து கொண்டிருந்தாள்.

“விவாகரத்துக்கு அப்பளை பண்ணுவோம்” திடீரென்று சொன்னான்.

அவன் திடுமென விவகாரத்தைப் பற்றிப் பேசியதில் அதிர்ந்தது கையிலிருந்த பூக்கூடை கீழே விழ பூக்கள் நாற்புறமும் சிதறியது. சட்டென குனிந்து பூக்களை சேகரிக்கும் சாட்டில் கண்ணீரை மறைத்தாள். அவனறியாது கண்ணீரைத் துடைத்து விட்டு உணர்ச்சியற்ற குரலில் “கல்யாணமாகி ஒரு வருடத்தின் பின்னர் தான் இருதரப்பினர் சம்மதத்துடன் விவாகரத்துக்கு அப்பளை பண்ணலாம். இல்லையென்றால் கொடுமைபடுத்துவதாகவோ அல்லது அடல்டரி ப்ரூப் கட்டனும்” என்றாள்.

“ஏய்....” கோபத்தில் அவள் தோளைப் பிடித்துவிட்டான் “என்ன வார்த்தை இது அடல்டரி சீ...”

உணர்ச்சியற்ற முகத்துடன் “சட்டத்தில் உள்ளதைத் தான் சொன்னேன்” அவன் கையை விலக்கி விட்டு சேகரித்த பூக்களை அங்கிருந்த பேர்ட்பாத்தில் அழகாய் அடுக்கினாள்.

அருகேயிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் “ச்சு அதற்கு அடல்டரி... அதெல்லாம் வேண்டாம். வேறு வழியிருந்தால் பார் இல்லையா ஒரு வருடம் கழித்தே விவாகரத்துக்கு அப்பளை பண்ணுவோம்” சுருக்கமாய் முடித்தவன் அமைதியாய் அவள் பூக்களை அடுக்குவதைப் பார்த்திருந்தான்.

நிலவை போல் வட்ட முகம் காலை முழுகியதில் பனியில் நனைந்த ரோஜாவாய் தென்பட பாதி மூடிய விழிகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருக்க கேசம் நிலத்தில் தவழ்ந்தது. மறுபடியும் அவளிடம் அவன் மனம் தடம் மாறி தடுமாறியது.

மீண்டும் அவன் போன் சத்தத்தில் கலைந்தவன் எடுத்துப் பார்க்க இந்த முறை நதியா அழைத்திருந்தாள்.

“ஹலோ தியா சொல்லு” அருகில் இருந்ததோ இல்லை உற்சாகத்தில் பேசியதோ போனில் பேசியது தெளிவாகே கேட்டது.

“அண்ணா நேற்று அஜாவை அனுப்பியதற்கு தேங்க்ஸ் அண்ணா, உண்மையில் அது அவருடைய பிரண்டோட காதலி, பிரண்டுக்கு வர முடியாமல் போயிற்று”

பூக்களை அடுக்கிக் கொண்டிருந்த ஸ்ரீனிகாவின் கை ஒரு கணம் நின்று விட கண்ணில் இருந்து விழுந்த ஒரு துளி அந்த ரோஜாவில் பனித்துளியாய் நின்றது. மூளையோ ‘இனியாவது விழித்துக்கொள், அவன் செல்லத் தங்கையும் நீயும் ஒன்றா?’ கேள்வி கேட்டு புரிய வைக்க முயன்றது ‘அவனுக்கு உன் மீது காதலும் இல்லை ஒரு கத்தரிக்காயும் இல்லை’

கௌதமின் கை முஷ்டியாய் இறுகி போனை அழுந்தப் பற்றியதில் வெண்மையாய் மாற “சரி தியா, நான் பிறகு பேசுறன்”

ஏனோ இதயத்தில் அமைதியின்றி அவளையே பார்த்தவன் தீடிரென்று “நேற்று நான் அஜாவை அனுப்பினேன்” என்றான். எங்கே பதிலளித்தால் கண்ணீர் பொங்கிவிடுமோ என்ற பயத்தில் தலையை மட்டும் ஆட்டினாள்.

“ஸ்ரீனி...” அவன் அழைப்பில் உதட்டை வலிக்க கடித்தாள். அதைப் பார்த்தவன் அடுக்கி முடியும் வரை அமைதியாக இருந்து அடுக்கி முடியக் கேட்டான் “இங்கே அடுக்குவதற்காகவா எடுத்து வந்தாய்?”.

“இல்லை சாமிக்கு என்று எடுத்து வந்தேன் இல்லையென்று ஆகிவிட்டது” எழுந்து சென்றுவிட்டிருந்தாள்.

அழகாய் அவள் அடுக்கிச் சென்ற பூக்களில் அவள் கண்ணீர் துளியை சுமந்து நின்ற ரோஜாவையே நெற்றி சுருக்கிப் பார்த்திருந்தான் கௌதம்.

🎻🎻🎻🎻🎻

அன்று காலை ஸ்ரீனிகா உறக்கத்திலிருந்து எழும் போது கண் முன் தெரிந்தது கௌதம் முகமே. திடுக்கிட்டு எழ முயல தன்னோடு அணைத்து “படு ஸ்ரீனி” என்று உறக்கத்தில் கூறியவாறே திரும்பிப் படுத்தவனை தன் முட்டைக் கண்ணை விரித்துப் பாரத்தாள். சிறிது கோபம் கூட வந்தது. நேற்று ஏனென்று கூட கேட்கவில்லை. இன்று அசையக் கூட விடமால் கட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறான். இவனை... மனதினுள் தளித்து உதட்டைச் சுளித்தாள்.

ஒரு வழியாய் அவன் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு வாஷ்ரூம் சென்றவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இது போன்று பயந்து மயங்கி விழுந்தால், அடுத்த நாள் நிச்சயமாய் ஜுரம் இருக்கும் இன்றோ உற்சாகமாய் இருந்தது. அத்தை, மாமா இருவரும் மறுபடியும் வேலை விடயமாக எங்கோ போயிருந்தார்கள். இன்று பூஜையறை வேலை அவளுடையது. அதே உற்சாகத்துடன் தான் குளித்து தோட்டத்திற்குச் சென்று பூ கொய்தாள். ஆனால்... அத்தனையும் நொடியில் காற்றில் கரைந்து விட்டிருந்தது.

அவளை விடுத்து தங்கையின் கணவரின் நண்பரின் காதலிக்கு உதவியதைக் கூட ஒதுக்கி வைக்க முடிந்த அவளால், கௌதம் விவாகரத்துக்கு கேட்டதை ஏனோ ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அப்படியானால் இத்தனை நாளில் அவனுக்கு நான் யாரென்று தெரியவேயில்லையா? மனதை எதுவோ அரித்துக் கொண்டே இருக்க வார இறுதி வந்திருந்ததைக் கூட கவனிக்கவில்லை.

“ஹலோ ஸ்ரீனி இந்த வாரம் நீ கேரளா போகின்றாயா?” வசந்த் போன் செய்து விசாரித்த போதுதான் அவளுக்கே தெரிந்தது.

அம்மாவின் அருகிலாவது இருக்க வேண்டும் என்று மனம் ஏங்க “ஹ்ம்ம்.. போகணும் இந்த வாரம் இரண்டு நாள் கூட தங்குவேன் நீ பார்த்துக் கொள்வாய் தானே?” தயங்கியவாறே தான் கேட்டாள்.

“என்ன இது யாரோ மூன்றாம் நபரிடம் பேசுவது போல், அப்படியானால் நம் நட்புக்கு எந்த மதிப்பும் இல்லையா?”

“சாரி சாரி...”

“இதுவும் தப்பாச்சே...”

“இதோ பார் என்னால் வர முடியாது நீயே பார்த்துக் கொள் போதுமா?” சிறு சிரிப்புடன் கூற “அது” என்றவன் போனை வைத்தான்.

🎻🎻🎻🎻🎻

அடுத்தநாள் பொழுது கௌதமிற்கு மீண்டும் மங்கலாக புலர்ந்தது.

அவன் அன்றாடம் அணியும் உடைகள் சிறு ஹன்கரில் தொங்கவில்லை. அவளின் வாசம் இல்லை. காபியை வாயில் வைக்கவும் பிடிக்கவில்லை. அவள் இல்லாத வீட்டிற்கு வரவும் பிடிக்கவில்லை.

🎻🎻🎻🎻🎻

அம்மாவின் அருகே அமர்ந்து உலகின் அத்தனை பொய்களையும் கூறிக் களைத்துப் போன ஸ்ரீனிகா அவர் மடியில் தலை வைத்து நடந்தது அனைத்தையம் கூறிவிட்டாள். ஸ்ரீமதிக்கு எதுவும் புரியாது என்று தெரிந்த போதும் அம்மாவின் மடியில் படுத்து அழுதது ஆறுதலைத் தர மனம் சற்றுத் தெளிவானது. ‘என்ன செய்தாலும் சரி முதலில் உண்மையை சொல்லிவிடு விவாகரத்து எல்லாம் கொடுக்க முடியாது. வேண்டுமானால் அந்த கரடி பொம்மை டீ ஷிர்டை காட்டு அந்த பில்லுடன் இன்னமும் அப்படியே புதிதாக இருகின்றதே. நல்லவேளை அன்று ஏதோ மின்சார தடையில் கையால் தான் பில் எழுதித் தந்தார்கள். அதனால் அழியவில்லை’ சபதமே எடுத்துச் சென்றாள்.

ஆனால் கௌதம் அடுத்துச் செய்த செயலில் அவளே முன் வந்து விவகாரத்திற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தாள்.

வருவான்....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 29
வந்திருந்த வெளிநாட்டினரை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வீடு வந்தவனுக்கு ஆயாசமாய் இருந்தது. இன்று அப்பா இருந்திருந்தால் அவர் மடியில் படுத்திருப்பான் அத்தனை தூரம் களைத்திருந்தான். வீட்டில் ஸ்ரீனி இல்லை என்ற எண்ணமே உள்ளே செல்ல விடாமலிருக்க டையை லூசாக்கி கழுத்து பட்டனை கழற்றி விட்டவன் வீட்டின் சிட்அவுட்டில் போட்டிருந்த ஊஞ்சலில் இருபக்கமும் கையை விரித்து கண்மூடி சாய்ந்தான்.

கௌதமுக்கு தன் மனநிலை தெளிவாகவே புரிந்தது. ஆனாலும் பொய் சொல்லி ஏமாற்றியவளை அவன் ஈகோ ஏற்க மறுத்தது. அனைத்துக்கும் மேல் சிறுவயது முதலே அவன் மனதில் நின்ற அந்த குட்டிப் பெண். அவளை ஓரம் கட்டி இவள் எப்படி வரலாம் என்ற ஆத்திரம். அவன் மீது அவனுக்கே எரிச்சலாய் இருந்தது. ஒரு ஐந்து நாள் அவளை கண்ணில் காணாவிட்டால் அவன் மனம் நிலையில்லாமல் தவிப்பது அவனுக்கே பிடிக்கவில்லை. இதற்கு முன் இது போல் மனக்கட்டுபாடு இல்லாமல் போனதில்லை.

விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக - நான் விழுவேன்

எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக - நான் எழுவேன்

மடிந்தாலும் உன் மூச்சின் - சூட்டால் மடிவேன்

பிறந்தாலும் உனையே தான் - மீண்டும் சேர்வேன்

இனி உன் மூச்சை கடன் வாங்கி - நான் வாழுவேன்


“தவமி....” பாடியவாறே திரும்பியவள் மார்புக்கு குறுக்கே கை கட்டி டைனிங் டேபிளில் சாய்ந்து நின்றவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள். அதற்குள் வள்ளி “என்ன வேண்டும் தம்பி” முன்னே வந்தார்.

கண்கள் ஸ்ரீனிகாவையே பார்க்க, வாய் அவருக்கு பதிலளித்தது “காபி கிடைக்குமா?”

கல்யாணமாகி சிறிது நாட்களிலேயே அடிக்கடி ஸ்ரீனிகா வெளியூர் சென்று வர அந்த நாட்களில் கௌதம் படும் பாட்டை கண் கூடாய் பார்த்தவருக்கு இப்போது அவன் பார்வை சிரிப்பை வர வைக்க “சரி கொடுத்து அனுப்புகின்றேன்” அனுபவத்தில் குறிப்பாய் கூறினார். சட்டென திரும்பி பார்த்தவன் நெற்றியை சுருக்கினான். அவருக்கு கூட அவன் மனநிலை புரிகின்றது. இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்.

தன் உணர்ச்ச்சிகளை கட்டுபடுத்த பண்ட் போக்கேட்டினுள் கைவிட்டவன் மாடிக்குச் சென்றுவிட்டான். திரும்பி ஸ்ரீனிகாவைப் பார்த்த வள்ளி “காபி தயாரா?” கேலியாய் கேட்டார்.


🎻🎻🎻🎻🎻

குளித்து வந்தவனுக்கு வீட்டில் அணியும் ஆடைகள் கட்டிலில் தயாராய் காத்திருந்தது. அருகே சிறு டேபிளில் ஆவி பறக்கும் காபியும்.

கையில் காபி மக்குடன் டரெஸ் வந்தவன் அந்தி நேரமே மழை வரும் போல் இருண்டிருந்த வானத்தைப் பார்த்தவாறே காபியை ருசித்தான். நீண்ட யோசனையின் பின் திரும்பியவன் கண்களில் விழுந்தாள் அதே மாடியின் மறுபுறத்தில் குருவிகளுக்கு தானியம் வைத்துக் கொண்டிருந்த ஸ்ரீனிகா.

“ஸ்ரீனி”

திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள் “ம் சொல்லுங்கள்”.

திடிரென அன்று ரோஜாவில் பனித்துளியாய் நின்ற அவள் கண்ணீர் நினைவு வர அவள் முகம் பார்த்து ‘விவாகரத்து கொடு’ என்று கேட்க முடியவில்லை.

எதையோ எப்படி சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் நின்றவன் அருகே வந்து புஜத்தில் கை வைத்துக் கேட்டாள் “ஆர் யு அல்ரைட்? அவள் அக்கறையில் உள்ளே உருகியவன் வெளியே அவளிடம் எரிந்து விழுந்தான் “என்னைத் தொடாதே!”

முகத்தில் அறை விழுந்தது போல் இரண்டடி பின்னால் சென்றாள் ஸ்ரீனிகா. பின்னணியில் இடி முழங்க, ஸ்ரீனிகவின் உடல் வெளிப்படையாகவே நடுங்க “உள்ளே போய் பேசுவோம்” குரல் கெஞ்சியது. சிறு ஆச்சரியத்துடன் பார்த்தவன் வேறு எதுவும் பேசமால் உள்ளே சென்றான்.

தோளைப் பிடித்து தன் எதிரில் அமரவைத்து தானும் அமர்ந்தவன் “அலனைப் பற்றிக் கவலைப் பட தேவையில்லை. அவனை நான் பார்த்துக் கொள்கின்றேன். விவாகரத்து...” என்று தொடங்குவதற்குள் “தரமுடியாது” அழுத்தம் திருத்தமாய் மறுத்தாள்.

“ஹா...” அவளை ஏறிட்டுப் பார்த்த கௌதமின் இதயம் இதம் கோபம் இரண்டையும் உணர்ந்தது. இதத்தை விட கோபத்தையே மனம் அதிகமாய் உணர “ஏன்?” கடுமையாகவே கேட்டான்.

“ஏனென்றால் எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு” பட்டென சொல்லிவிட்டாள்.

“சீ... நீயெல்லாம் ஒரு பெண் தங்கையின்..” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவன் இடையில் நிறுத்தி “ஆனால் எனக்கு உன்னை பிடிக்கல” அவளைப் போலவே முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டான்.

“ஏன் பிடிக்காது அதெல்லாம் பிடிக்கும் நான் சொல்வதைக் கேட்டால் என்னை மட்டும் தான் பிடிக்கும்” புறாவாய் தலை சரித்து கூறியவளை மயங்கிப் போய் பார்த்தான் கௌதம்.

அவள் புருவம் கேள்வியாய் உயர தெளிந்தவன் சட்டென எழுந்து திரும்பி நின்றான். அவனை மயக்க முடியும் என்று எத்தனை நம்பிக்கை இருந்தால் இப்படிப் பார்ப்பாள் கை முஷ்டியாய் இறுக “உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்?” குரல் இறுகக் கேட்டான்.

“பணம்...” குழப்பமாய் பார்த்துக் கேட்டாள் “எதற்குப் பணம்?”.

“அதுதானே விவாகரத்து தரமாட்டேன் என்கிறாய்”

“ச்சு அதில்லை... நான் ஸ்ரீனி...”

“அஹ் அதுக்கு என்ன? நீ யாராய் இருந்தால் எனக்கு என்ன? எனக்குத் தேவை விவாகரத்து, போதுமா?” அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.

“ஸ்... அதில்லை இதைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்” ஒரு பாக்கை எடுத்துக் காட்ட அதைப் கண்ணெடுத்தும் பாராமல் விசிறி அடித்தான். அது கட்டிலின் கீழே ஒரு மூலையில் போய் விழுந்தது. அதற்குள் இருந்து லேசாய் எட்டிப் பார்த்தது கரடி பொம்மை போட்ட அந்த டீஷிர்ட்.

தன் வெறும் கையையும் அவனையும் கட்டிலின் கீழே விழுந்த பாக்கையும் பார்த்தவளுக்கு யோசனை ஓடியது தவறான நேரத்தில் இந்தப் பேச்சை எடுத்துவிட்டோமோ “நீங்க ரொம்ப கோபமாய் இருக்குறீங்க போல நாம் பிறகு பேசுவோம்” தன் அறைக்குச் செல்ல திரும்பினாள்.

“எனக்கு விவாகரத்து வேண்டும் டாட். அஹ் வன்கொடுமையின் கீழும் விவாகரத்து கேட்கலாம் தானே. இப்ப உன்னை வெளியே தள்ளி கதவை சாற்றினால் கொடுமை தானே” சினத்தில் சீறியவனை விக்கித்துப் போய் பாத்தாள் ஸ்ரீனிகா.

மெதுவாய் திரும்பிப் பார்க்கப் லேசாய் தூரத் தொடங்கியிருந்த மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. தேகத்தில் நடுக்கம் ஓட “அதில்லை கௌதம்... நான்” அவனுக்கு புரிய வைக்க முயன்றாள்.

அவள் கையை பிடித்து கதவை நோக்கி இழுத்துச் சென்றான் “வேண்டாம் ப்ளீஸ் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்....” அவனிடமிருந்து விடுபட போரடியாவாறே கெஞ்சினாள். அவன் பலத்திற்கு முன் முடியவில்லை, பஞ்சைப் போல் தள்ளிவிட்டான்.

கதவின் வெளியே தள்ளிவிட்ட வேகத்தில் மூன்று தரம் சுழன்று நின்றவள் மேல் ஊசியாய் மழைத்துளிகள் விழ பயத்தில் கண்கள் விரிந்தது. கௌதம் கதவை சாத்த போக ஓடி வந்து கையை வைத்து தடுத்தாள் “ப்ளீஸ் வேண்டாம் கௌதம் ப்ளீஸ்.... எஎஎனக்கு பப.. பயம் ப்ளீஸ்” வார்த்தைகள் தந்தியடிக்க கதவை மூட விடமால் அவனுடன் போராடினாள்.

அவள் கெஞ்சலில் ஒரு கணம் தயங்கினாலும் “என் கண் முன் நிற்காதே” சீறினான்.

“சரி நா உள்.. ப்ளீஸ் நான் உள்ளே என் அறைக்கு போறேன்” தன் முழு பலத்தையும் உபயோகித்து எதிர்த்து தள்ளினாள்.

அவள் போராட்டம் அவன் சினத்தை இன்னும் துண்டி விட கதவை ஓங்கித் தள்ளிய வேகத்தில் நாலடி தள்ளிப் போய் மழைக்குள் விழுந்தவள் சுதாரித்து எழுந்து வர அவள் ஓடி வருவதை கேலி சிரிப்புடன் பார்த்தவாறே கதவைச் சாற்றினான் கௌதம்.

அவன் சிரிப்பில் திகைத்து நின்ற ஸ்ரீனிகா, இடிச் சத்தத்தில் மீண்டும் ஓடி வந்து கையெடுத்து கும்பிட்டாள் “ப்ளீஸ்... நான் விவாகரத்து தரேன். தலைகீழாக நின்றாவது விவாகரத்து தாரேன். உள்ளே விடுங்க மழை...” இடி முழங்கவே வெளிறிய முகத்துடன் திரும்பி வானத்தை பார்த்தாள்.

அவள் கெஞ்சியதைக் கணக்கே எடுக்காமல், கோபத்தில் கதவை ஓங்கிச் சாத்தியிருந்தான் கௌதம்.

அதிர்ச்சி திகைப்பு அனைத்தயும் கடந்து மூடிய கதவையே வெறித்துப் பார்த்தாள் ஸ்ரீனிகா. ஏதோ தோன்ற அவள் அறைப் பக்கம் உள்ள கதவை போய் தட்டிப் பார்க்க அதுவும் பூட்டியிருந்தது.

மீண்டும் அவன் அறைக் கதவுக்கு வந்தவள் “கௌதம் ப்ளீஸ்.... நான் வீட்டை விட்டு வேண்டுமானாலும் வெளியே போறேன் ப்ளீஸ் கதவை திறங்கள்”

“கௌதம்... கௌதம் ப்ளீஸ்” காற்றிற்கு அடை மழை சுழன்று அடிக்க கதவின் மேற்புறம் இருந்த சிறு மறைப்பு போதுமானதாக இல்லை. போன வாரம் மரம் முறிந்து விழுந்ததில் கண்ணாடிக் கூரை உடைந்து விட்டிருந்தது. அது இருந்திருந்தால் மழையாவது மேலே படமால் இருந்திருக்கும். கால்கள் நடுங்க கதவின் அருகே ஈர நிலத்தில் அமர்ந்தவளின் கண்கள் மூடிய கதவையே நம்ப முடியாமல் பார்த்தது.

கைகளை நெஞ்சுக்கு குறுக்கே வைத்து குறுகி அமர்ந்தவளுக்கு அன்று இது போல் ஒரு அடை மழை நாளில் குறுகி அமர்ந்திருக்க, தன்னை தீண்ட முயன்ற கைகள் நினைவில் வர உடல் தூக்கிப் போட்டது.

“கௌதம்...” குரல் கரகரக்க நடுங்கும் கைகளால் கதவைத் தட்டினாள். அவள் கௌதமா, யார் தன் பயங்களுக்கு எல்லாம் கேடயமாக இருப்பான் என்று நினைத்தாளே அவனா தன்னை மழையில் வெளியே விட்டுச் கதவைச் சாற்றியது. மனம் நம்ப மறுக்க கண்கள் வெந்நீரை வடித்தது.

ஏற்கனவே பயத்தில் சில்லிட்டு போயிருந்த உடலில் மழை ஈரமும் சேரவே கைகால்கள் வெட்டி இழுக்க வாயின் ஓரம் நுரை வடிய கண்கள் ஒரு பக்கமாக செருகியது.

உதடுகள் மட்டும் மெதுவே அதிர்ந்து கொண்டிருந்தது “அம்மா... கௌதம்”


🎻🎻🎻🎻🎻

கதவைச் சாற்றிய வேகத்தில் உட்புற தாழ்பாள் விழுந்ததைக் கூட கவனிக்காமல் அங்கிருந்து வேகாமாய் வெளியேறி ஜிம் அறைக்குச் சென்றான் கௌதம்.

இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தாலும், கதவைச் சாற்ற முன் அவள் முகத்தில் தென்பட்ட அந்தப் பாவனை... அது அவனை ஏதோ செய்ய மனதில் பொங்கிய ஆத்திரம் தீர பஞ்சிங் பாக்கை போட்டு குத்தியவன் அருகே இருந்த சோபாவில் அப்படியே சரிந்தான்.


🎻🎻🎻🎻🎻

ஏதோ சத்தம் கேட்டது போல தோன்றவே சட்டென எழுந்தான் கௌதம். சுற்றும் முற்றும் பார்க்க முதலில் எங்கே இருக்கின்றேன் என்ன என்பது ஒன்றும் புரியவில்லை. சற்று முன் ஸ்ரீனியை வெளியே விட்டு கதவைச் சாற்றி வந்தது நினைவில் வர ஜன்னல் வழி வெளியே பார்த்தான். மழை பெய்து ஓய்ந்த காலை அழகாய் தென்பட்டது.

ஜன்னலோரம் நின்ற பறவை ஒன்று அவனை பார்த்து கீறிசிட்டு கத்தி வெளுத்திருந்த வானம் நோக்கிப் பறந்து சென்றது. தொடர்ச்சியான வேலைக் களைப்பு, நேற்றைய வாக்குவாதத்தின் பின் மணிக்கணக்கில் போக்சிங் எல்லாம் சேர்த்து சோபாவில் சரிந்த வாக்கிலேயே உறங்கி விட்டிருந்தது புரிய எழுந்து தன் அறைக்குச் சென்றான்.

குளித்து வந்தவன் ஏதோ தோன்ற ஸ்ரீனிகாவின் அறைக் கதவின் அருகே சென்றவன் கதவைத் தட்டக் கையெடுத்து விட்டு மெதுவாய் திறந்தான். லைட் போட்டபடி இருக்க புருவம் சுருக்கி உள்ளே எட்டிப் பார்த்தவன் கண்களில் விழுந்தது உட்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவு. அப்படியானால்... திரும்பி அவன் அறையில் இருந்த கதவைப் பார்க்க அதுவும் உட்புறத் தாழ்பாள் விழுந்திருந்தது.

தூக்கிவாரிப் போட ‘இரவு முழுதும் உள்ளே வரவே இல்லையா...? மழை...?’ யோசனையுடன் நடுங்கும் கரங்களால் கதவைத் திறக்க அவன் கால்கள் மீதே சரிந்தது ஸ்ரீனிகாவின் விறைத்த உடல்.

மண்டியிட்டு கன்னத்தில் தட்ட கன்னம் ஐஸில் கை வைத்தது போல் சில்லீட்டு போய் இருக்க காகிதமாய் வெளிறிய முகத்தையும் ஊதா நிறத்தில் தென்பட்ட உதடுகளையும் பார்த்த கௌதமிற்கு மூச்சு தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமாட்டேன் என்றது.

கைகளில் தூக்கி வந்து கட்டிலில் கிடத்தியவன் தோளிலிருந்து முழங்கால் வரை போர்த்திவிட்டான். அவள் உடலை ஈரம் போக துடைத்து அவசரத்திற்கு அவன் அணியும் பெர்முடாவையும் டீ ஷிர்டையும் முடிந்த வரை பெட்ஷீட்டை விலக்காமல் போட்டுவிட்டவனுக்கு வாயோரம் நுரையுடன் ரத்தமும் வடிந்திருந்தது கண்ணில் பட அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தலையை பிடித்தவன் மறுகணமே அவளை கைகளில் அள்ளி வேகமாக மாடிப் படிகளில் இறங்கியவாறே சத்தமாய் அழைத்தான்.

“அஜா.... அஜா காரை எடு”

பதட்டமாய் உள்ளே ஓடி வந்த அஜா கௌதம் ஸ்ரீனிகாவை கைகளில் தூக்கி வருவதைப் பார்த்து உள்ளே போக வசதியாய் காரின் பின் கதவைத் திறந்து வைத்தான். ஏறியதும் கார் ஹெட் லைட்டை அனைத்து அனைத்து எரியவிட்டவன் கைகளில் கார் பறந்தது.


🎻🎻🎻🎻🎻

எமெர்ஜென்சி யுனிட்டின் வெளியே இருந்த இருக்கையில் தலையை கையில் தாங்கி அமர்ந்திருந்த கௌதமிற்கு நேற்று ஸ்ரீனிகா கதவிற்கு வெளியே நின்று அவனைப் பார்த்ததே கண்ணில் நின்றது. அவளுக்கு வலிப்பு நோய் இருக்கும் என்று தெரிந்திருந்தால் என்ன கோபமாய் இருந்தாலும் அவளை மழையில் விட்டிருக்கமாட்டனே.

கையில் தேனீருடன் வந்த அஜா திகைத்துப் போய் நின்றான். கலைந்த தலையும் ஓய்ந்து போன தோற்றமுமாய் இருந்தவன் கௌதம் தானா? அவனுக்கே சந்தேகமாய் இருந்தது. அவனுடன் படிக்கும் காலத்தில் இருந்து கூடவே சுற்றுகின்றான். இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட இது போல் உலகமே இடிந்தது போல் இருந்து பார்க்கவில்லை.

“ஜிகே...” தோளில் கை வைக்க நிமிர்ந்து பார்த்த கௌதம் சட்டென எழுந்து திரும்பி நின்றான்.

வாய் திறந்து பார்த்தான் அஜா. தான் பார்த்தது நிஜமா... அவன் கண்களில் லேசாய் பனி போல் படர்ந்திருந்தது... அஜா மேலே ஏதோ கேட்பதற்கு வாயெடுக்க மருத்துவர் வெளியே வர அவரருகே சென்றான் கௌதம்.

“ஸ்ரீனி...” அதை விட வார்தை வர மறுத்தது. கலைந்த தலையும் வெளிறிய முகமும் தவிப்புமாய் நின்றவனை பார்த்து திட்டவும் மனமின்றி “வலிப்பு வந்தால் உடனடியாக ஹோச்பிடல் வர வேண்டும் என்பதில்லை தான் ஆனால் இது போல் சிவியர் கேஸ்க்கு வர வேண்டும் என்பது கூடவா தெரியாது” கடிந்தவர் “இருபத்துநான்கு மணித்தியாலம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும். இப்போது போய் பார்பதானால் பார்க்கலாம்” வழமையான டாக்டரின் அக்மார்க் டையலக்கை சொல்லிச் சென்றார்.


🎻🎻🎻🎻🎻

ட்ரிப்ஸ் துளித்துளியாய் இறங்கிக் கொண்டிருக்க ஏசியை நன்றாக குறைத்து கம்பளி ஒன்றினால் போர்த்தி விட்டிருந்தார்கள். காகிதமாய் வெளிறிய முகத்துடன் பெட்டின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான் கௌதம். அவன் புறமிருந்த கையை தன் கைகளில் எடுத்தவனுக்கு அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதைத் தவிர மனதில் வேறு எண்ணம் எதுவுமில்லை.

“சாரிடி... வலிப்பு.... எனக்குத் தெரியாது” உதட்டில் இன்னும் இரத்தக் கறை இருக்க பெருவிரலால் துடைத்துவிட்டான். உதடு இழுபட்டதில் பற்தடம் வரிசையாய் பதிந்திருந்தது லேசான சிவப்பில் தென்பட்டது.

அவள் கையை தன் பரந்த உள்ளங்கைக்குள் பொதிந்து கொண்டவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.


🎻🎻🎻🎻🎻

லேசாய் புருவம் சுளித்தாள் ஸ்ரீனிகா. தலைவலி உயிர் போகும் போலிருந்தது. கைகளை தூக்க முயன்றால், ஒரு கை எங்கே மாட்டிக் கொண்டு வர மறுத்தது. மறு கையைப் பார்க்க ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது. குழப்பத்துடன் சுற்றிப் பார்க்க மருத்துவமனை என்பது புரிய எழுந்திருக்க முயன்றாள். தலை பாரமாய் கனக்க உடல் சொல் பேச்சுக் கேட்க மறுத்தது.

மறுகைக்கு என்ன நடந்தது நீண்ட புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவள் விழிகள் அசைய மறந்து போனது. வாய் லேசாய் திறந்திருக்க அவள் உள்ளங்கையின் மேல் கன்னம் வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கௌதம். லேசான தாடியும் கலைந்த தலையுமாய் திருமணாகி இத்தனை நாளில் ஒரு தரம் கூட இப்படிப் பார்க்கவில்லை. என்னாச்சு யோசனையுடன் எவ்வளவு நேரம் பார்த்திருந்தாளோ “எழும்பிவிட்டீர்களா...?” என்ற தாதியின் குரலில் திரும்பியவள் மறுகையை வாயில் வைத்து அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தாள்.

முடிந்து கொண்டிருந்த அவள் ட்ரிப்சை கழட்டி கன்டூலவின் மூடியை போட்டு மூடியவாறே தாழ்ந்த குரலில் “பாவம் உங்கள் ஹஸ்பன்ட் இப்படியா பயமுறுத்துவீங்க இரண்டு நாளாய் இந்த இடத்தை விட்டு அசையக் கூடவில்லை. பத்து நிமிடத்துக்கு முன் வந்த போது கூட முழித்து தான் இருந்தார்”

“இரண்டு நாளா?” அதிர்ச்சியுடன் கேட்டாள் ஸ்ரீனிகா.

தாழ்ந்த குரலில் உரையாடிய போதும் கௌதம் எழுந்துவிட்டான். தாதியைப் பார்த்து “சிஸ்டர்” மெலிதாய் தலையசைத்தவன் அவனையே விழி விரித்துப் பார்த்திருந்த ஸ்ரீனிகாவைப் திரும்பிப் பார்த்தான்.

ஆச்சரியமான ஆனந்தத்துடன் வேகமாய் எழுந்து பெட்டில் அமர்ந்து “ஸ்ரீனி யூ ஒகே?” கன்னங்களை விரல் நுனியால் வருடி “எங்காவது வலிக்குதா?” அக்கறையாய் கேட்ட அவனைப் பார்த்து இமை தட்டி விழித்தாள் ஸ்ரீனிகா.

“அதுதான் அவர்கள் எழும்பிவிட்டார்கள் இல்லை இனியாவது போய் தண்ணியாவது குடியுங்கள்” லேசாய் கடிந்தவர் ஸ்ரீனிகாவிடம் “டாக்டர் செக் செய்ய வருவார் வெயிட் பண்ணுங்க” என்று விட்டு வெளியேறினார்.

“என்னாச்சு... ஏன் இரண்டு நாள்” நீண்ட புருவத்தை சுழிக்க கௌதம் பதில் சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்தான். அவளுக்குத் தலை வெடித்துவிடும் போல் வலிக்கவே நெற்றியை கையால் பிடிக்க “ஷ்... கொஞ்சம் பொறு டாக்டர் வந்து செக் செய்யட்டும்” என்றவன் கன்னத்தில் கை வைத்து பெருவிரலால் நெற்றியை இதமாய் வருடிவிட்டான்.

அந்த வருடலில் கலக்கம் குழப்பம் அனைத்தும் மறைய அவனைப் பார்த்தவளுக்கு நடந்த அனைத்தும் நினைவில் வந்தது. கூடவே கண்ணில் நீரும் வரவே துடைத்து விட்டவன் “ப்ளீஸ் ஸ்ரீனி... நா... நான் எனக்கு வலிப்பு தெரி...”

‘வலிப்பா’ தனக்குள் யோசித்தாள் ‘எனக்கு வலிப்பு வந்ததா ஆனால் ஏன்?’ மேலே தொடர்வதற்கு முன் மருத்துவர் உள்ளே வரவே தயக்கத்துடன் வெளியேறினான் கௌதம்.

வருவான்...
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான இந்நேர வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 29, வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 30

பௌர்ணமி நிலவு வானில் வட்டமாய் ஒளிர, ஆளுயர பிரெஞ்ச் விண்டோ அருகே போட்டிருந்த ரேக்ளைனரில் அமர்ந்து லேப்பில் செய்து கொண்டிருந்த கௌதமின் கண்கள் அடிக்கடி இருண்டிருந்த ஸ்ரீனிகாவின் அறையையே பார்த்துக் கொண்டிருந்தது. வழமையாக குழந்தைகள் இருவருடன் தண்ணீர் மெத்தையை போட்டு அதன் மீது அமர்ந்து எதையாவது செய்து கொண்டிருப்பாள்.

இன்றுடன் சரியாக பதின்னான்கு நாட்கள், இரு வாரம், அன்று மருத்துவமனையிலிருந்து வந்த இரண்டாம் நாள் கேரளா போனவள்தான் இன்னும் வரவில்லை. அம்மா அப்பா இருவரும் இன்னும் வந்திருக்கவில்லை எனவே கேள்வி கேட்கவும் யாருமில்லை.

போனைக் கையில் எடுத்தவன் விரல்கள் சில கணம் தயங்கினாலும் அவள் பெயரை அழுத்தியது. முழுதாக ஒரு ரிங் போயும் பதிலில்லை. புருவ நெரிப்புடன் மீண்டும் மற்ற போனில் இருந்து அழைத்தான். இரண்டு ரிங்கின் பின்னர் சிறிது நேர தயக்கத்தின் பின் ஒலித்தது அவள் குரல் “ஹலோ...”

கண நேர இடைவெளியின் பின்னர் கேட்டான் “எங்கே....?”

அவன் குரலை அடையாளம் கண்டு “வீட்டு வாசலில்” என்றாள் சுருக்கமாய். நேரத்தை பார்த்தான் மணி பன்னிரெண்டை தாண்டியிருந்தது. வேகமாய் எழும்பி வெளியே வர வள்ளி கதவைத் திறந்து கொண்டிருந்தாள். மாடி வளைவில் கையூன்றி நின்றவாறே கீழே பார்க்க பயணப் பையுடன் உள்ளே வந்தவள் “சாரி எதிர்பாராத விதமாய் நேரமாகிவிட்டது” சிறு மன்னிப்பு வேண்டும் புன்னகையுடன் கூறினாள்.

“பரவயில்லமா உங்களுக்கு தோசை ஊற்றவா?”

“ம்ம்..” ஏதோ யோசனையில் தலையசைத்தவள் மாடியேறினாள்.

மாடி வளைவில் நின்றவனை கண்டு கேள்வியாய் ஏறிட்டாள். நேரமாகிவிட்டது இன்னும் காணவில்லை, சும்மா போன் செய்தேன் என்ற ரீதியில் அவர்கள் உறவு இல்லையே. ஏதும் அவசரமாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளுக்கு போன் செய்து இருக்க மாட்டான் இல்லையா?

“அவசரமில்லை நாளை பேசுவோம்” களைத்து சோர்ந்திருந்த முகத்தைப் பார்த்து விட்டு உள்ளே போகத் திரும்பியவனை தடுத்து நிறுத்தியது அவள் குரல். “ஒரு நிமிடம்”

அவன் கையில் ஒரு கோப்பை கொடுக்க திறந்து பார்த்தான். உள்ளே பார்க்க ஆங்கிலத்தில் ‘விவாகரத்துக்கான மனு’ என்றிருந்தது.

நிமிர்ந்து கேள்வியாய் பார்க்க “விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். அங்கே கேரளாவில் எனது சீனியர் தோழிதான் பாமிலி கோர்ட் நீதிபதி.... அங்கே இலகுவாக கிடைக்க கூடும் படித்து பார்த்து விட்டு கையெழுத்திட்டு தந்தால் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும்” பார்வையை தோளை விட்டு உயர்த்தாமல் சொல்லி முடித்தவள் அவன் பதிலுக்காய் காத்திருக்க, எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தவன் முகம் தெளிவின்றி இருந்தது.

“இன்னுமொன்று...” சிறிது தயங்கிவிட்டு கூறினாள் “இங்கே, கேரளா இரு வீடுமே வாடகைக்கு கொடுத்தபடி இருக்கு. இன்று விட சொன்னாலும் குறைந்தது முப்பது நாட்களாவது ஆகும். இருவருமே மூன்று மாதம்...” மீண்டும் தயங்கி சுடிதாரின் துப்பட்டாவை விரல்களில் வைத்துச் சுழற்றினாள். “இல்ல அவசரம் என்றால் சொல்லுங்கள். நான் லேடீஸ் ஹாஸ்டல் ஏதாவது பார்கின்றேன். அதற்கும் கொஞ்ச நாள் வேண்டும்.”

அவள் சென்னை வந்தால் வழமையாக தங்கும் மாடியையும் வசந்தனின் காதலிக்கு வேண்டும் என்று கேட்டதால் சும்மாவே கொடுத்திருந்தாள். அங்கும் இடமில்லை.

அவனிடமிருந்து பதிலின்றி போகவே நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் நெரித்த புருவமும் இறுகியிருந்த தடையும் படவே வலிந்து புன்கைத்தவள் “சீக்கிரமே ஹாஸ்டல் பார்கின்றேன்” உள்ளே சென்றுவிட்டிருந்தாள்.

கையில் உள்ள கோப்பையே வெறித்துப் பார்த்தபடி நின்றவன் இதயத்தில் முள் முளைத்த உணர்வு.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் காலை சோம்பல் முறித்து எழுந்தவன் சுற்றிப் பார்க்க ரேக்ளைனரிலேயே படுத்து உறங்கிவிட்டது புரிந்தது. முன்னிருந்த சிறு மேஜை மீது இருந்த அந்தக் கோப்பில் பார்வை விழ முகம் மீண்டும் களையிழந்தது.

நேற்று நடந்தது நினைவில் வந்தது. அதை படித்துப் பார்த்தால், இருவரும் சேர்ந்து விவாகரத்துக் கோருவது போல் அமைந்திருந்தது விண்ணப்பம். பிரிமனைப் பணமாக எதுவும் வேண்டாம் என்றிருக்க நெற்றி சுருக்கியவன் அவள் அறைக்குச் செல்ல முயல அது உட்புறமாக தாள் போடப்பட்டு இருந்தது. மீண்டும் அதே ரேக்ளைனரில் அமர்ந்துவிட்டான். வாஷ் ரூமில் குளிப்பது, தலை காயவைக்கும் சத்தம், கடைசியாய் வள்ளி சாப்பிட அழைக்க பால் மட்டும் போதும் என்றது அனைத்தையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தான் கௌதம் கடைசியாக விளக்கை அணைக்க போக கதவைத் தட்ட நினைத்தவன் கை அந்தரத்தில் நின்றது. பயணக் களைப்பு வந்து சாப்பிடவும் இல்லை. எதுவானாலும் நாளை பார்த்துக் கொள்வோம் மனதினுள் நினைத்தவன் யோசனையுடன் மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தவன் அப்படியே உறங்கிவிட்டிருந்தான்.

அடுத்த நாள் அவன் உடைகள் ஹாங்கரில் தொங்கவில்லை. முகம் இறுக தயாராகி கீழே வந்தவன் கிச்சினை எட்டிப் பார்க்க வள்ளி மட்டுமே நின்றார். அவன் வந்த சந்தடியில் திரும்பிப் பார்த்தவர் “ஸ்ரீனிகாம்மா...” ஆரம்பித்தவர் அவரே “பயணக் களைப்பாக இருக்கும். நீங்கள் இருங்கள் தம்பி” என்று அவனைக் கவனித்தார். அவர் காலை உணவை எடுத்து வைக்க பேச்சின்றி உண்டவன் கண்கள் மாடியையே வட்டமிட்டது. அவள் சோர்ந்திருந்த முகம் நினைவில் வர கூடவே நேற்றும் எதுவும் உண்ணவில்லை என்பதும் சேர்ந்தே வந்தது.

“ஒரு இரண்டு மணி நேரம் கழித்து எழுப்பி உணவு கொடுங்கள். சாப்பிட்டு விட்டு வேண்டுமானால் மீண்டும் உறங்கட்டும்” வள்ளியிடம் கூற வாய் பொத்தி சிரித்தவர் “சரி தம்பி” என்றார்.

வாசலை நோக்கிச் சென்றவன் ஏதோ தோன்ற மீண்டும் மாடிக்குச் சென்றான். அறைக் கதவை தள்ள, அது பூட்டியிருக்க படபடவென்று தட்டினான்.

🎻🎻🎻🎻🎻

அன்று மருத்துவமனையிலிருந்து வந்த ஸ்ரீனிகாவிற்கு கௌதம் தன்னை மழையில் தள்ளிவிட்டதை ஜீரணிக்கவே முடியவில்லை. மழைக்கு பயம் என்பது அவனக்கு தெரியாது என்பது அறிவுக்கு புரிந்தாலும் மனம் ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்தது. தன் மீது சிறிதளவு நேசமிருந்திருந்தாலும் அப்படி நடந்திருக்க மாட்டான் இல்லையா? அனைத்தையும் விட நான் யார் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. சரி முகம் தான் பெரிதும் மாறிவிட்டது. ஆனால் உணர்வுகள்..... இதற்கு மேல் சொல்லிப் புரிய வைக்க ஏதுமில்லை. பயம் மன உளைச்சல் என இரண்டு நாட்களாக காய்ச்சலும் விடவில்லை.

அம்மாவின் அருகே இருந்தாலாவது மனம் அமைதியடையும் என நினைத்தவள் கேரளா சென்றுவிட்டாள். கண் மூடியிருந்த ஸ்ரீமதியை பார்த்த போது அவள் மனதில் தைரியம் தானாக வந்தது. இப்போதேல்லாம் பெரும்பாலும் கோமாவில் தான். ஆனாலும் அவர் அருகாமை மனதிற்கு இதத்தை தர அவள் நினைத்தது போல் அமைதியும் தெளிவும் வந்தது. அதோடு இன்னொன்றும் தெளிவாய் புரிந்தது. என்னதான் உண்மையை சொல்ல முயன்றாலும் அதை அவன் காது கொடுத்துக் கேட்க போவதே இல்லை. எத்தனை தரம் முயன்றுவிட்டாள், அவள் சொல்வதை நம்புவதை கூட விட்டுவிடலாம். ஆனால் ஒரு தடவை அவள் பேச்சைக் கேட்க கூட தயாராக இல்லை.

இதற்கு மேலும் விரும்பாத ஒருவனை இழுத்துப் பிடித்து வைத்து என்னதான் செய்வது. யோசித்தவளுக்கு தன் சீனியர் ஓருவர் பாமிலி கோர்ட் நீதிபதியாக இருப்பது நினைவு வந்தது. காலோஜ் படிக்கும் காலத்தில் ஒரு விபத்தினால் கை முறிந்திருக்க அவளின் அசைன்மென்ட் இவள் செய்து கொடுத்ததில் இருவருக்கும் நல்ல உறவு ஒன்று அமைந்திருந்தது. தனிப்பட்ட ரீதியில் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினாள். தன்னைக் காப்பாற்ற செய்த திருமணம் அவர் வேறொரு பெண்ணைக் காதலிகின்றார். இந்த திருமணம் நடந்திருக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும், இல்லாதது பொல்லாததை எல்லாம் கூறி ஓரளவு சம்மதிக்க வைத்திருந்தாள். எப்படியும் விவாகரத்துக் கிடைக்க குறைந்தது மூன்று மாதமாவது எடுக்கும்.

அதன் பிறகு கேரளாவில் இருக்கவும் விருப்பமில்லை, ஆனால் அம்மா... அதற்கு மேல் சிந்திக்க பிடிக்கமால் அதைத் தள்ளிப் போட்டவள் இந்த மூன்று மாதத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தாள். சும்மா ஏதோ ஒர் இடத்தை எடுத்து விட்டு போவது புத்திசாலித்தனமாய் படவில்லை. அதோடு எப்படியும் இந்த மூன்று மாதமும் சென்னையில் இருந்தே ஆக வேண்டும். ஒன்று காலோஜில் செமஸ்டர் முடியும் வரை லெக்சர் முடிக்க வேண்டும். அடுத்தது கௌதமின் கம்பனியில் ஆரம்பித்த வேலைகளை இன்னொருவருக்கு பாரமளிக்க வேண்டும். விவாகரத்து முடியும் வரை அங்கே இருப்பது தான் சரிவரும். அவார்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததே நிறைய பேருக்குத் தெரியாது. உண்மையில் குடும்பத்தினரை விட சொந்த பந்தங்களுக்கே தெரியாது. தெரியாமலே போகட்டும் தெரிந்து தான் என்ன ஆகப் போகுது.

இருட்டுப் பயத்தில் அங்கிருந்து நேரமாய் தான் கிளம்பினாள் வழியில் பஸ் பிரேக் டௌன் ஆகி விட வீடு வந்து சேர மணி பன்னிரண்டை தாண்டிவிட்டது. பயணத்தால் வந்தால் அவளுக்கு குளிக்க வேண்டும். குளித்து வந்த பின்னும் மனதில் ஏதோ பயம் சூழ்ந்திருக்க, பரந்த உலகில் தனித்து விட்டது போல் உணர உறக்கம் வர மறுத்துவிட்டது. லைட்டை அனைத்துவிட்டு சுருட்டி வைத்திருந்த மெத்தையை விரித்து போட்டு படுத்தவள் காலை வானம் வெளுத்த பின்னர் தான் உறங்கினாள்.

தொடர்ந்து கதவைத் தட்டிய சத்தத்தில் எழுந்தவள் போர்வையை போர்த்தியபடியே பாதி உறக்கத்தில் கதவைத் திறந்தாள்.

மசுக்குட்டி போல் உடல் முழுதும் போர்த்தி தலையை மட்டும் வெளியே நீட்டியிருந்த அவளைப் பார்த்ததும் கௌதமின் உதடுகள் லேசாய் பிரிந்து புன்னகைத்தது. கதவு நிலையில் தலை சாய்த்து நின்ற விதத்திலேயே அவளிடம் இப்போது எது பேசினாலும் பயன் இல்லை என்பது புரிய கட்டிலைக் கை காட்டி “அங்கே படு, வள்ளி வந்து எழுப்புவாள்” என்றான்.

கிட்டத் தட்ட இரு வாரத்தின் பின், ஒரு முடிவு என்று எடுத்த பின் வந்த உறக்கம் அவளை விட்டுப் போக மாட்டேன் என அடம் பிடிக்க பாதி உறக்கத்திலேயே போய் மெத்தையில் விழுந்து உறங்கிவிட்டாள். தலையை தூக்கி தலையணையில் வைத்தவன் அவள் பெட்ஷீட்டை பார்க்க குட்டிக் குட்டியாய் கரடி பொம்மை.

சட்டென அன்று கடையில் கரடி பொம்மை போட்ட டீ ஷர்ட்டுடன் நின்ற சிறு பெண் நினைவில் வர முகம் இறுகியது. அவள் இடத்தை எடுக்க அல்லவா முயற்சிக்கின்றாள். அதை எப்படி அனுமதிக்க முடியும், கோப்பைக் கையில் எடுத்தவன் வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.

🎻🎻🎻🎻🎻

கௌதம் மீண்டும் வீட்டிற்கு வந்த போது நேரம் ஒன்றைத் தொட்டிருந்தது. காலையில் போகும் போது கோபத்தில் ஈவ்னிங் மீட்டிங் பைலுக்கு பதிலாய் விவாகரத்து பைலை கொண்டு சென்றுவிட்டான்.

அதை எடுக்க அறையினுள் வந்தவன் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீனிகாவை ஆச்சரியத்துடன் பார்த்தான். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லையா? அருகே வந்தவன் நெற்றியை தொட்டுப் பார்க்க லேசாய் சுட்டது. சிலவேளை உறக்கத்தினால் கூட இருக்கலாம். லேசாய் வைத்திருந்த கன்னத்தைப் பார்த்தவன் இன்னும் கொஞ்சம் கன்னம் வைத்தால் இருவரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பதை ஒரு ஆச்சரியத்துடன் உணர்ந்தான்.

அவன் தொடுகையில் மெதுவாய் அசைந்தவள் கண் திறந்தாள். நேர் எதிரில் தென்பட்டவனைக் கண்டு சட்டென எழுந்து அமர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க அவன் அறை தலையை சொரிந்தாள். இங்கே எப்போது எப்படி வந்தேன்.

அவளின் அளப்பறைகளை கை கட்டி வேடிக்கை பார்த்திருந்தான் கௌதம்.

போர்வைக்குள் கைவிட்டு ஆடைகளை சரி செய்தவள் எழுந்து நின்றவள் மீண்டும் சுற்றிப் பார்த்து “சாரி நான் எப்ப.... இங்கே... எப்படி?” குழப்பமான முகத்துடன் நின்றவளை அள்ளிக் கொள்ள துடித்த மனதைக் கண்டு கொண்டு அதிர்ந்தவன் “உன்னிடம் சற்றுப் பேச வேண்டும்” கடுமையாகவே சொன்னான்.

“நிஜமாகவே எனக்குத் தெரியாது” அழாக் குறையாக கூறினாள்.

அதற்குப் பதிலளிக்காமல் சோபாவில் அமர்ந்தவன் அவளுக்கும் கை காட்டினான். இன்னும் குழப்பம் தீராத முகத்துடன் எதிரே இருந்த சோபாவில் இருந்தாள்.

“முதலாவது நீ இப்போதைக்கு ஹொஸ்டல் போகத் தேவையில்லை”

நிம்மதியாய் மூச்சுவிட்டாள். வீடு தேடத் தேவையில்லை. அதோடு தனியாய் இருப்பது என்றாலே பயம். அப்ப இரண்டாவது... யோசனையாய் முகம் பார்த்தாள்.

“ஏன் பிரிமனைப் பணம் வேண்டாம்” வினாவினான். அவன் பார்த்த வரையில் அவள் ஒன்றும் பணத்தில் புரளவில்லை. எப்படியிருந்தாலும் இருபது மில்லியன் என்பது சிறு தொகை இல்லையே.

“மில்லை விற்பதில் ஒரு தொகை வரும் தானே” விட்டேத்தியாய் கூறினாள். அந்த மில் அவனுடையாதாக இருந்தால் ஒரு வியாபாரியாக அந்த மில்லை விற்பது நஷ்டம் என்றே கூறுவான். பொன் முட்டையிடும் வாத்து. ஆண்டுக்கு கோடிகளுக்கு மேல் லாபம் மட்டுமே கொடுக்கும். இன்னும் கவனமெடுத்துப் பார்த்தால் அதிகரிக்கவும் கூடும். அந்த மில்லை விற்பதற்கே எதவாது ஈடு கொடுக்க வேண்டும்.

“சரி ஐம்பது மில்லியன் ஒகேவா? கேள்வி கேட்டவனை விநோதமாய் பார்த்தாள். இவனுக்கு எல்லாமே பணம் தான் கணக்கா?

“அவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்ய?”

“வாட்....?” சத்தமாகவே கேட்டான் “பணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்ணை இன்றுதான் பார்க்கின்றேன்”

“எல்லோரும் பணத்தையே பிரதானமாக நினைப்பதில்லை. பணத்தால் வரும் பாதுகாப்பை விட அது இருப்பதால் வரும் பிரச்சனையே அதிகம்” வெறுமை நிறைந்த முகத்துடன் கூறியவளையே பேச்சிழந்து பார்த்தான் கௌதம்.

“ஒஹ்...” என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை அவனால். அவள் முகத்தில் அத்தனை கசப்புணர்வு.

“வேறு ஏதாவது...”

“அம்மா அப்பாவிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம். அஹ் இன்னுமொன்று நாளை அம்மா அப்பா வாறங்க அடுத்த ஐந்தாறு மாதத்திற்கு இங்கே தான் இருப்பாங்க சோ இந்த அறையிலேயே எங்காவது படுத்துக்கொள்” என்றான்.

ஆமோதிப்பாய் தலையாட்டியவள் மீண்டும் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

வருவான்...
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான இந்நேர வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் என் காதல் தீரா அத்தியாயம் - 30 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 31
கண் மூடி திறப்பதற்குள் ஒரு மாதம் போயிருந்தது. ஸ்ரீனிகாவிற்கு கௌதமை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை இன்னும் விவாகரத்துப் பத்திரத்தில் கௌதம் கையெழுத்து வைத்து தந்திருக்கவில்லை. இரண்டு தரம் கேட்டும் விட்டாள். இதுவரை பதிலில்லை. பின் ஏன் அன்று அப்படி நடந்து கொண்டான்.

இன்று ஸ்ரீநிஷா சரதாம்மா என்று அனைவரும் ஸ்ரீநிஷாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து லண்டனில் இருந்து திரும்பி வந்திருந்தார்கள். அவர்களிடமும் போக வேண்டும் என்று தோன்றவே கிளம்பிவிட்டாள்.

வீட்டிற்குச் சென்றால் அங்கே ஸ்ரீநிஷா இல்லை. வந்து ஒரு வாரமாகியிருக்க நண்பியை பார்க்க போவதாக கூறி சென்றுவிட்டாள். மருத்துவரும் அன்றாட நடவடிக்கைகளுக்கு பழக்கப்படுத்தச் சொல்லியிருக்க சாரதாவும் நம்பிக்கையான டரைவருடன் அனுப்பி வைத்திருந்தார்.

“இல்ல நான் கேரளா போகனும்” தயங்கியவாறே கூற அவள் நிலையை உணர்ந்தவராய் “ஒரு நிமிடம் பொறும்மா, நான் அவள் எங்கே என்று கேட்டுச் சொல்கின்றேன்” என்று போனை டயல் செய்தார்.

“அம்மா” உற்சாகமாய் அழைத்தாள்.

“எங்கேம்மா இங்கே ஸ்ரீனிகா உன்னைப் பார்க்க வேண்டுமாம்”

பிரபலமான ஒரு ரெஸ்டாரன்ட் பெயரைச் சொல்லி “அங்கே வரச் சொல்லுங்கள் அம்மா, அவளுக்கும் அறிமுகபடுத்தி வைக்கின்றேன்” உற்சாகமாய் கூறினாள்.

புன்னகையுடன் போனை வைத்தவர் “ஸ்ரீனிகா எனக்கு ஒரு உதவி வேண்டுமே” அவள் கையைப் பிடித்துக் கேட்க ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“சொல்லுங்கள் சாரதாம்மா”

“நம் ஸ்ரீநிஷாவை ஒருவனுக்குப் பிடித்திருக்காம், அந்தப் பையன் இன்று அவளுடன் பேச வேண்டும் என்று கேட்டானாம். போயிருக்கின்றாள் நீயும் சென்று பார்த்து வருகின்றாயா என்ன மாதிரி என்று” ஆவலுடன் கேட்க புன்னகையுடன் சம்மதித்தாள்.

🎻🎻🎻🎻🎻

அந்த நட்சத்திர ஹோட்டலின் அலங்காரங்களை ரசித்தவாறே மெதுவே உள்ளே நடந்தாள் ஸ்ரீனிகா. ஸ்ரீநிஷா சொன்ன இடத்தை அலசியவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அவளுடன் அந்த மேசையில் அமர்ந்திருந்தது கௌதம்.

போவோமா வேண்டாமா என்ற யோசனையில் தயங்கி நிற்க இருவருமே திரும்பி அவளைப் பார்த்தனர். கௌதமே எழுந்து வந்து அவளை அழைத்துச் சென்றான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்த அவள் கண்களில் இருந்த கேள்வி கௌதமிற்கு புரியவேயில்லை.

“நான் சொல்லல நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண் ஸ்ரீநிஷா, தொழிலதிபர் ராஜாராமின் சட்டரீதியான மகள்” சட்டரீதியான என்பதில் அவன் கொடுத்த அழுத்தம் புரியவே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் இதயத்தில் ரத்தம் வடிந்தது அவள் கண்களில் தெரிந்தது.

அவள் கண்களில் தென்பட்ட வலியைப் பார்த்தவனுக்கு ஏனென்று புரியவில்லை, ஆனால் அவள் வலியை சகிக்கவும் முடியவில்லை “இருவரும் பேசிக் கொண்டிருங்கள் இதோ வருகின்றேன்” என்று சென்றுவிட்டான்.

“சாரதாம்மாவிடம் சொல்லிவிட்டாயா?”

“இன்னும் இல்லை இன்றைக்குப் பின் சொல்லாம் என்று பிளான்”

“இரண்டு மாதத்தின் பின்னர் சொல்”

“ஏன்?” திருப்பிக் கேட்டவளை ஆயாசத்துடன் பார்த்தாள் “கேள்வி கேட்காதே ப்ளீஸ் சொல்வதை மட்டும் செய்”

“நீ சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும்”

“இன்று வரும் போது சாராதாம்மா பையன் எப்படி என்று பார்த்து வர சொன்னார்கள். சரி வராது என்று சொல்லிவிடவா?” அலட்சியமாய் கேட்டாள் ஸ்ரீனிகா.

“சரிஈ... இரண்டு மாதம் கழித்தே சொல்கின்றேன்” எரிச்சலுடன் பதிலளித்தாள். ஸ்ரீநிஷாவிற்கு தெரியும் அவள் அம்மா ஸ்ரீனிகாவின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றார். அது உண்மையும்தான் அவளின் பயம் மட்டும் இல்லாவிட்டால் அண்ணாவுக்கு அடுத்ததாய் கம்பனியை தூக்கிக் கொடுத்து விடுவார், அத்தனை கெட்டிகாரி.

சற்று நேரம் அமைதியில் கழிய “நான் வருகின்றேன்” ஸ்ரீனிகா எழுந்திருக்கவும் கௌதம் திரும்பி வரவும் சரியாய் இருந்தது.

“நானும் தான்” என்று எழுந்தாள் ஸ்ரீநிஷா. கேள்வியாய் நோக்கிய ஸ்ரீனிகாவின் கண்களுக்கு “சாப்பிட்டு முடிந்துவிட்டது” உற்சாகமாய் கூறியவள் கௌதமை நோக்கி “நான் அம்மாவிடம் பேசி விட்டு உங்களிடம் சொல்கின்றேன்” என்று விடை பெற்றாள்.

அவள் போவதை வெவ்வேறு உணர்ச்சிகளுடன் இருவருமே பார்த்திருக்க பின்னாலிருந்து குரல் கேட்டது “கிருஷ்ணா ஸ்ரீனிகா, நீங்கள் இருவரும் இங்கே” அசோகனும் யசோதாவும் நின்றிருந்தார்கள்.

எதிர்பாராத விதமாக அவர்களை அங்கே பார்த்ததில் கௌதம் திகைத்து போய் நின்றுவிட்டான். ஸ்ரீநிஷாவுடன் உணவருந்தியதை பார்த்திருப்பார்களோ... ஸ்ரீனிகா சட்டென சமாளித்தாள் “சும்மா சாப்பிட வந்தோம் பிரன்ட் ஒருத்தியை பார்த்தேன். அதுதான் பேசிவிட்டு...”

“ஒ அப்படியா?” என்றவர்கள் “எங்கே வீட்டிற்கா இல்லை அலுவலகமா?” அசோகன் கேட்கவே திரும்பி கௌதமைப் பார்த்தாள். “வீட்டிற்குதான், ஸ்ரீனியை விட்டு வருகின்றேன்” பதிலளித்தான்.

“சரி, அலுவலக விடயமாக சிலது பேச வேண்டும் எத்தனை மணிக்கு வருவாய்?” கேட்ட அசோகனுக்கு பதிலாய் “வீட்டில் விட்டுவிட்டு நேராய் அலுவலகம் தான்” என்றவன் அவளிடம் திரும்பி “போவோமா?” கேட்டான்.

யோசனையுடனேயே காரில் ஏறினாள். அஜா டிரைவர் சீட்டில் இருக்க பின் சீட்டில் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

“என்ன இங்கு” தீடிரென்று கௌதம் கேட்க தூக்கி வாரிப் போட்டவள் “நான்தான் சொன்னே அன்று விபத்து நடந்தது என்று, அது இவர்கள்தான்” தயக்கத்துடனே கூறினாள்.

“விபத்து ம்...” நக்கலாய் கேட்டவன் இறுகினான்.

வெளியே வானம் இருட்டவே ஸ்ரீனிகாவின் தேகத்தில் மெல்லிய நடுக்கம் ஓட, பயத்தில் அவன் கையை இறுக்கமாய் பிடித்துக் கொள்ள சட்டென உதறிவிட்டான். அடி வாங்கிய குழந்தையாய் காரில் ஓர் ஓரமாய் ஒடுங்கி அமர்ந்திருந்தவள் “இறங்கு” என்ற கடுமையான குரலில் தூக்கிவாரிப் போட வீடு வந்துவிட்டது என்று நினைத்து வேகமாய் இறங்கியவள் திகைத்து நின்றது முன் பின் தெரியாத ரோட்டில்.

இடி வேறு முழங்க பயத்துடன் திரும்பிப் பார்த்தாள் கார் போய்விட்டிருந்தது.

ரியர் மிரரில் மானாய் மிரண்டு நின்றதைப் பார்த்த அஜா “பாஸ்...” தயக்கமாய் அழைக்க “சீக்கிரம் போ” என்றான் இறுகிப் போயிருந்த கௌதம்.

அஜாவுக்கு ஸ்ரீனியை பார்க்கவே பாவமாய் இருந்தது. கல்யாணமாகி அந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து கௌதம் இப்படித்தான் நடத்துகின்றான். அது அவன் இயல்பும் இல்லை ஒரு தடவை சந்தித்தவர்கள் ரோட்டில் காத்திருந்தாலே காரில் ஏற்றிச் செல்பவன் இன்று மனைவியை நாடு ரோட்டில் விட்டு வந்திருக்கின்றான். அதிகம் வேண்டாம் வள்ளிக்கு ஒரு போன் செய்து கூறினாலே அங்கு வெட்டியாய் காத்திருக்கும் இரண்டு டிரைவர்களில் ஒருவரை அனுப்பி வைப்பாள்.

‘மறுபடியும் மழைக்குள் விட்டுச் சென்றுவிட்டான்’ மூளை எடுத்துக் கூற ஸ்ரீனிகா மனம் கசந்து போய் நின்றாள். நடு ரோட்டில் விட்டுப் போனால் கூட பரவாயில்லை, ஆனால் இந்த மழை... பயத்தில் சுற்றும் முற்றும் பார்க்க அவளின் ஆறுதலுக்காய் தென்பட்டது ஆட்டோ ஸ்டன்ட்.

கண்ணைப் பறிக்கும் மின்னல் மின்ன ஏதோ யோசனையில் இறுகிப் போயிருந்த கௌதம் சட்டென விழித்தான். “அஜா என்ன சொன்னாய்?” என்று முன்னே பார்க்கவே “இல்ல பாஸ் அடை மழையாய் இருக்கு முன்னுக்கு பாதையே தெரியல” என்றான். அன்று மழையில் நனைந்து வலிப்பு வந்தது நினைவு வரவே “அஜ்...” அவசரமாய் அழைத்தவன் பாதியில் நிறுத்தினான்.

சிக்னலில் அவன் காரின் அருகே நின்ற ஆட்டோவில் பயத்தில் குறுகிப் போய் அமர்ந்திருந்த ஸ்ரீனிகாவின் தேகம் நடுங்குவது அடை மலையிலும் தெளிவாகவே தெரிந்தது.

எப்படியோ வீடு வந்து சேர்ந்தவளுக்கு மழையிலும் பயத்திலும் நன்றாக காய்ச்சல் பிடித்துக் கொள்ள “சாப்பாடு கொண்டு வரவா?” கேட்ட வள்ளியிடம் “இல்ல வள்ளிம்மா, இன்று நானும் அவருமாய் ஹோட்டலில் சாப்பிட்டோம். மழை ஒத்து வரவில்லை லேசாய் காய்ச்சல், பெரியவர்கள் இருவரும் வந்தால் ஒரு மிஸ்ட் கால் போடுங்கள். இல்லாவிட்டால் எனக்கு என்ன ஆனதோ என்று வருத்தப்படுவார்கள்” என்றவள் தன் அறையில் அடைந்து கொண்டாள்.

அவர்களை அத்தை மாமா என்று அழைப்பதையும் நிறுத்திவிட்டிருந்தாள். சில நாட்களுக்கு முன் நடந்தது வேண்டாத நினைவாக வந்தது.

🎻🎻🎻🎻🎻

அன்று குழந்தைகளுடனும் நதியாவுடனும் சிட் அவுட்டில் விளையாடி கொண்டிருந்தாள். “தியா கட்ச்” என்று ரப்பர் பந்தை ஏறிய கண்ணோரம் பட்டுவிட்டது.

“அடிபட்டுவிட்டதா?” அருகே போய்ப் பார்ப்பதற்குள் எங்கிருந்தோ வந்த கௌதம் சிவந்திருந்த கண்ணைப் பார்த்து திட்டித் திர்த்துவிட்டான். “அறிவில்லை, நீயும் குழந்தைகள் போல் விளையாடுகிறாய், முட்டாள் முட்டாள்”

ஸ்ரீனிகா விக்கித்து நிற்க, நதியாவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது “அண்ணா பந்து படல என்னுடய விரல் நகம்தான் பட்டது” என்றவளை கூர்ந்து பார்க்க கண்ணுக்கு மிக அருகே பிறைவடிவில் நக அடையாளம்.

பேச்சின்றி உள்ளே சென்ற ஸ்ரீனிகாவை உதட்டை கடித்தவாறே பார்த்தான்.

பொறுக்க கூடிய இளஞ்சூட்டில் ஹாட் பாக்கை எடுத்து வந்து ஒத்தடம் கொடுத்தவள் “சாரி நான் எதிர் பார்க்கல” தயக்கத்துடன் மன்னிப்பு கேட்க “ஸ்.. ஓகே அண்ணி, நானும் சேர்ந்து தானே விளையாடினேன்” என்றவள் அண்ணனின் கையைப் பிடித்து இழுத்து கண் காட்டினாள் ‘சாரி கேள்’.

அதற்குள் ஸ்ரீனிகா ஹாட்பாக்கை நதியாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தாள். பின்னாலேயே வந்தவன் சாரி கேட்பதற்குப் பதிலாய் தன் பாட்டில் அமர்ந்து வேலையை பார்க்க அவள்தான் அவனிடம் சாரி கேட்டாள் “சாரி நான் வேண்டுமென்று செய்யவில்லை”.

நிமிர்ந்து பார்த்தவன் பேச்சின்றி மீண்டும் லாப்பில் பார்வையை பதித்தான். அவனுக்கே ஓர் மாதிரி இருந்தது. உண்மையில் தவறு அவன் மீதுதான் என்றாலும் சாரி கேட்க ஈகோ இடம் கொடுக்கவில்லை. கூடவே ஏமாற்றுக்காரி என்ற எண்ணமும்.

சட்டென அருகே அமர்ந்து அவன் அரைக்கை டீஷிர்டின் கையை சுட்டு விரலில் வைத்துச் சுற்றியவள் மூளையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து கேட்டாள் “நீங்கள் ஏன் இன்னும் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வைக்கவில்லை?” கிள்ளையாய் கேட்டவளை அள்ளிக் கொஞ்ச தோன்றிய எண்ணத்தின் உத்வேகத்தில் எழ, கீழே கையூன்றி சமாளித்தாள் தடுமாறி விழுந்த ஸ்ரீனிகா.

“அந்த பைல் அன்று நடந்த மீட்டிங் பைல்களுடன் ஒன்றாகிவிட்டது. யாதவிடம் தேடித் தரச் சொன்னால் மறந்துவிட்டான். கிடைத்ததும் கையெழுத்து வைத்துத் தருகின்றேன்” அவளுக்கு முதுகு காட்டி நின்று புளுகினான்.

யாதவ் எப்போதோ அந்த பைலை தேடித் பிடித்துக் கொடுத்துவிட்டான். உண்மையில் அன்றே அந்த பைலில் கையெழுத்தும் வைத்துவிட்டான். ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் இருந்து வரும் முன் அந்த கோப்பை எடுப்பதும் பின் அதை அப்படியே மேஜை ட்ராயரில் போட்டு வருவதும் கடந்த ஒரு மாதமாய் நடக்கும் நிகழ்வு. அவனுக்கே புரியவில்லை அதில் இருவரின் கையெழுத்துகளையும் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சில் ஏதோ ஓர் மெல்லிய வலி, அமைதியின்மை அதை மீறி அந்த கோப்பைக் கொண்டு வந்து அவளிடம் கொடுக்க அவனால் முடியவில்லை.

அதற்கும் சேர்த்து அவளையே குற்றம் சுமத்தியவன் அவளிடமே சீறினான் “என்ன அனைவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு இங்கேயே இருந்துவிட திட்டமா? அத்தை மாமா தியா ரெம்பத்தான் உறவு கொண்டாடுகின்றாய்? இங்கிருந்து போகும் எண்ணம் இருக்கா? இல்லையா?” வார்த்தைகள் கத்தியாய் விழுந்தது .

கீழே விழுந்திருந்த ஸ்ரீனிகாவின் மூளை அவளைப் பார்த்து நகைத்தது. ‘எப்போது அருகே சென்றாலும் இப்படித்தான் உதறி விடுகின்றான் இன்னும் நீ நம்பிக் கொண்டு இருக்கின்றாயா அவன் உன்னைக் காதலிக்கின்றான் என்று’ பிரமை பிடித்தவள் போல் அங்கிருந்து அகன்றாள்.

மூளை எடுத்துச் சொல்லியது ‘அவன் சொல்வது சரிதானே... இங்கிருந்து செல்லும் போது நீதான் கஷ்டப்படுவாய். அதற்கு இப்போதிருந்தே ஒதுங்கி இருப்பது நல்லது இல்லையா?’

மூளையின் கேள்விக்கு ‘சிறு வயதிலிருந்தே எதிர்பார்த்து ஏங்கிய சொந்தங்கள் கிடைக்கும் வரை அனுபவிக்கலாம் இல்லையா?’ மனம் பதிலளிக்க மூளை எச்சரித்தது ‘கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என்பது போல் உனக்குத்தான் வலிக்கும் பரவாயில்லையா?’

கௌதம் திரும்பிப் பார்க்க வெற்றிடம் அவனை வரவேற்க, எங்கே என்று தேட அவள் அறைக் கதவைத் திறந்து கொண்டிருந்தாள். “நான் பேசிக்....” சினத்துடன் அருகே சென்று புஜத்தைப் பிடித்து திருப்பியவனுக்கு பிரமை பிடித்தது போல் ஏதோ யோசனையில் மங்கியிருந்த கண்களைப் பார்க்க சினம் சென்ற வழி தெரியவில்லை.

“நான்... சா...” ஏதோ சொல்ல வர அவன் உலுக்கியதில் தன்னுணர்வு அடைந்தவள் “சாரி நீங்கள் சொல்வது சரிதான். ஐ வில் கீப் டிஸ்டன் ப்ரோம் தேம்” வாய் தன்பாட்டில் கூற உள்ளே சென்றுவிட்டாள்.

காற்றில் கைகளை முஷ்டியாக்கியவன் என்னவென்று புரியாத உணர்வுடன், இரு கைகளையும் கோர்த்து முழங்காலில் கையூன்றி ரேக்ளைனரில் அமர்ந்தான்.

அதன் பின் இன்னும் ஒதுங்கிப் போனாள் ஸ்ரீனிகா.

🎻🎻🎻🎻🎻

வீட்டிற்கு வந்தவன் கண்கள் அவளைத் தேடி வட்டமிட்டது.

இன்னும் மழை பெய்து கொண்டிருக்க உள்ளே உடலைக் குறுக்கி அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. ஹோட்டலில் வைத்து கௌதம் கூறியது இன்னும் காதில் எதிரொலித்தது. ‘தொழிலதிபர் ராஜாராமின் சட்டரீதியான மகள்’. வெறுப்புடன் உதட்டைக் கடிக்க கோடாய் ரத்தம் கசிந்தது. அந்த மனிதரால் அவளும் அம்மாவும் பட்ட துன்பம் கொஞ்சம் நஞ்சமா?

போன் அதிரவே எடுத்துப் பார்த்தால் வள்ளி. வாஷ் ரூம் சென்று நன்றாக முகத்தைக் கழுவி அழுந்தத் துடைத்து விட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள்.

உள்ளே வந்த யசோதா சிரித்துவிட்டார். பின்னேயே வந்த கௌதம் இதழ்கள் அவனறியாமல் ரசனையாய் சிறு புன்னகையில் பிரிந்ததது. உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் சுற்றி மூக்கும் கண்ணும் மட்டுமே வெளியே தெரிந்தது. அப்போதும் சிவந்திருந்த கண்ணையும் மூக்கையும் பார்த்து “என்னம்மா ஜுரமா?” நெற்றியில் கை வைக்க மெலிதாய் சுட்டது.

“அது மழையில் நனைந்துவிட்டேன். ஜலதோஷம்” என்று சமாளித்துவிட்டாள்.

“சாப்பிட்டாயா?”

அழகாய் தலையாட்டினாள்.

“சரி ரெஸ்ட் எடும்மா அதிகம் கண் விழிக்காதே” என்பதுடன் சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் எழுந்து தன் அறைக்குச் செல்ல முயன்றவள் நெற்றியில் கௌதம் கை வைக்க வர சட்டென அவன் கை படாத வண்ணம் விலகினாள். இவன் அருகே செல்லவும் வேண்டாம் பின் நினைத்து ஏங்கவும் வேண்டாம்.

அந்தரத்தில் கை நிற்க, தடை இறுக அவளைப் பார்த்தான் ‘இண்டரஸ்டிங்’

“அத்...” அத்தை என்று சொல்ல வந்து “உங்கள் அம்மா எப்படியும் வருவார்கள் அதுதான் இங்கே இருந்தேன்” அவனுக்கு விளக்கம் போல் கூறியவள் தயங்கியவாறே கேட்டாள் “அந்தப் பெண்தான் நீங்கள் தேடிய காதலியா?” உயிரை கண்ணில் வைத்துக் கேட்டாள்.

“அவளை கண்டுபிடிக்க முடியும் போல் தோன்றவில்லை. என் தகுதி அந்தஸ்திற்கு தகுந்த யாரவது ஒருத்தரை மணக்க தானே வேண்டும் அதுதான்” என்றான். ஈகோ அவளிடம் ‘அவள்தான் என் காதலி என்று கூறு’ என்று கொக்கலித்த போதும் ஏனோ அவள்தான் நான் தேடிய காதலி என்று அவளின் கண்ணைப் பார்த்துக் கூற முடியவில்லை.

“ஒ..” என்றவள் முகத்தில் கசந்த புன்னகை வழிந்தது. தகுதி அந்தஸ்தில் அவளும் குறைந்தவள் இல்லைதான். அவளால் அதை நிருபிக்கவும் முடியும். ஆனாலும் ஏற்கனவே திருமணம் முடிந்தவரை கல்யாணம் செய்ததாக அம்மாவை குறை கூறமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். நிச்சயமே தான் அதுதானே சட்டரீதியான மகள் என்றானே. தன் அப்பா யார் என்பது கூட தெரியாமலா தன்னை மணமுடித்தான்.

“நீங்கள் முதலே இந்த முடிவை எடுத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்” அவளின் உணர்வு மரத்த குரல் அவன் இதயத்தை கீறியது.

“ஏன், பிறகு உன் மில் பிரச்சனை என்னவாயிருக்கும்?”

“அதை சாட்டாக வைத்தே ரிக்வளிஷ்மென்ட் எழுதியிருப்பேன். ஸ்ரீ அண்ணாவிற்கும் அந்த மில்லில் நாட்டமில்லை. உரியவருக்கே போய்ச் சேர்ந்திருக்கும்”

“ஏன் அதை அவள் திருமணமின்றி கூட செய்திருக்கலாம் தானே”

“ஒரு சின்ன நப்பாசை... அந்தக் குழந்தைகளின்....” தனக்குள் பேசுவதாக நினைத்து அவனிடம் பேசிக் கொண்டிருக்கின்றேன் என்ற உண்மை உறைக்க நிறுத்தியவள் “சைன் பண்ணிட்டிங்களா?” வினாவினாள்.

“என்ன சைன்”

“விவாகரத்து மனு, இருவரும் கையெழுத்து வைத்தால் தான் இலகுவாகக் கிடைக்கும்” ஆயாசமாய் கூறினாள். இன்னொருத்தியை மணமுடிக்கப் போவதாக அவளிடமே கூறுகின்றான். ஆனால் ஒரு கையெழுத்துப் போட முடியவில்லை, வேடிக்கைதான். தன் அறைக்குச் செல்ல திரும்பியவள் நின்று “சாராதம்மாவிற்கு உங்களை நன்றாகத் தெரியும், நம் திருமணத்திற்கு முன் உங்களை சந்திக்க முயன்றார் முடியவில்லை”

“சாரதாம்மா...”

“ஸ்ரீநிஷாவின் அம்மா”

அவள் போய்விட திகைத்துப் போய் நின்றான் கௌதம். உண்மையில் ஸ்ரீனி விடயத்தில் அவன் மனம் என்ன நினைக்கின்றது என்று அவனுக்கே புரியவில்லை. ஏதோ தோன்ற யாதவிற்கு அழைத்தவன் “அந்த மில்லில் இருந்து வரும் வருமானம் யாருக்கு எப்படி போகிறது என்ற விபரம் வேண்டும்” உத்தரவிட்டான்.

அன்று திருமனத்திற்கு முன் ஸ்ரீனியைப் பற்றிய குழப்பத்தில் அவளைப் பற்றி மேற்கொண்டு யாதவை விசாரிக்கச் சொன்னான். யாதவ் விசாரித்ததில் ஸ்ரீனிகா நெறிமுறையற்ற (சட்டப்படி செல்லுபடியான திருமண உறவின்றி பிறந்த) குழந்தை என்பதும், சாரதா அவளை பதினாறு வயதிலிருந்து எடுத்து வளர்த்ததாகவும் தெரிய வந்தது. அதைக் கண்டு பிடிப்பதற்குள்ளே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனால் அவள் அம்மாவைப் பற்றி என்ன முயன்றும் எந்த தகவல்களையும் திரட்ட முடியவில்லை. அதோடு விட்டுவிட்டான். சாரதாவை நேரில் சந்திக்கவும் இல்லை.

ஆனால் சாராதவிற்கு தன்னைப் பற்றி தெரியும் என்றால் நேரில் சந்திக்க விரும்பினார் என்றால் ஏன் குழப்பமாய் இருந்தது.

வருவான்...
 
Status
Not open for further replies.
Top