All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பள்ளியில்லையே.......

கற்க பள்ளியில்லை - ஆம்
சமூக அறிவை வளர்ப்பதற்கும்,
சுய சிந்தனையை தூண்டுவதற்கும்,
நல் வழி காட்டிச் செல்வதற்கும்,
அறம் மறம் போதிப்பதற்கும்,
அன்பும் பண்பும் கற்பிப்பதற்கும்,
சிரிக்கச் சிரிக்க பேச வைப்பதற்கும்,
ரசித்து அறிந்து புரிந்துகொள்வதற்கும்,

மாணவனை மனிதனாய் பார்க்க பழக்குவதற்கும்,
பள்ளியில்லையே .......
மானுடா......!
விழிப்பாயா....?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேரம் இல்லையே....!

அளவளாவி பொழுதுக்கும் மகிழ்கின்றனரே
கைபேசியுடனும்,
முகனூலுடனும்
தொலைக் காட்சியுடனும்,
ஆம், வீட்டில் தான் ......
மகிழ்ச்சியில்லை
ஆரவாரமில்லை,
குதூகலமில்லை,
ஒருவருக் கொருவர் நமக்குண்டு என்ற
நம்பிக்கையில்லை!
ஏன்? எதனால்?
அளவளாவ நமக்குத்தான் நேரமே இல்லையே!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்க்கையின் அருமை....

கர்வத்தை காதலிப்பவர்,
காதலில் பேதலித்தவர்,
பேதத்தில் முகம்சுழிப்பவர்,
வாதத்தில் பெருமை சேர்ப்பவர்,

வாழ்க்கையில் அருமை அறிவாரோ!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பின் வலியது உயிர் நிலையா....?

நிச்சயம் ஒரு நாள் அறிவாயடா நீ......
செயற்கை யாவும் அழியும் நேரம்
இயற்கை உன்னை தீண்டும் நேரம்

அன்பின் வலியது உயிர் நிலை என்று!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகு எது..?
தடையில்லை பெண்ணே நீ பறப்பதற்கு!
விலையில்லை பெண்ணே நீ கேட்பதற்கு!
கனவில்லை பெண்ணே நீ நினைப்பதற்கு!
உயிர்ப்பில்லை பெண்ணே நீ வாழ்வதற்கு!

ஆம், பணமும் ஆடம்பரமுமே அழகு எனில்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இயற்கையன்றோ.....

இயற்கையன்றோ பெண்ணே
உன்னை உன் தாய் சீராட்ட ஏங்குவது.....
இதுவும் இயற்கையன்றோ பெண்ணே
உன் மகவும் தன் தாய் சீராட்ட ஏங்குவது.....
தந்தை பேணும் ஒழுக்கம் தாய் தர முடியாது,
தாய் பேணும் நல்லொழுக்கமும் தந்தை தர முடியாது,
முன்னவர் சொன்னது நினைவில் ஆடுது,
சீராட்டி பாராட்டி வளர்ப்பவள் தாய்!
அடித்து திருத்தி வளர்ப்பவன் தந்தை!
இரண்டும் பெற்ற பிள்ளை
மறந்தும் தவறிலைப்பதில்லை!
இயற்கைக்கு புறமாய் வளர்க்கும் எல்லாம் பிழையே.....!

ஆறிவாயோ மானுடனே...?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்திரம் எது?

சரித்திரம் உன் வாழ்வானால்
தரித்திரம் உன் பகையானால்
பவித்திரம் உன் மொழியாகும்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேண்டும்...
வேண்டும் ஒரு நிர்மலமான வானம்
வெண்ணிலவு பவனி வருவதற்கு!
வேண்டும் ஒரு நிர்மலமான காதல்

பெண்ணிலவு மகிழ்ந்து வாழ்வதற்கு!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லை.....
வரைமுறை இல்லை வாழ்க்கையிலே,
நிறைகுறை இல்லை மனசினிலே,
வளர்பிறை இல்லை போதையிலே,
தலைமுறை இல்லை பூமியிலே!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திடீர் வருகை .....

திடீர் வருகை -
பணமென்றால் கொண்ட்டாட்டம்!
சொந்தமென்றால் குதூகலம்!
மேலாளரென்றால் பதற்றம்!
மழையென்றால் மகிழ்ச்சி!

காதலென்றால் குழப்பம்!
 
Last edited:
Top