All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவரை கட்டி கொண்ட ஜியா “அம்ம்ம்மம்ம்மா பாஆஆஆவ்வம்...” என்று வீரிட்டு அழத்தொடங்கினாள்......
அன்று தேவிக்கு ஏதோ நடக்க போகின்றது என்பதை அறிந்து அவளை காப்பாற்ற துடித்த மலரை போல் இன்று மலருக்கு ஏதோ நடக்க போகின்றது என்பதை அறிந்து அவளை காப்பாற்ற துடித்து கொண்டிருந்தாள் ஜில்மில்லின் உயிரை சுமந்து கொண்டிருக்கும் ஜியா.
ஆனால் அவள் என்ன சொல்கின்றாள் என புரியாமல் முழித்து கொண்டிருந்தனர் அவள் சுற்றி இருந்த அனைவரும்.
அவர்கள் செய்த புண்ணியமோ என்னவோ அன்று மழை காரணமாக வீட்டிற்கு செல்ல முடியாமல் அங்கேயே தங்கிவிட்டிருந்த பின்டோ ஜியாவின் வாயசைவையே நுண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு சிறு வயதிலிருந்தே லிப் ரீடிங் தெரியும் என்பதால் அவளது இதழசைவை வைத்து அவள் என்ன சொல்கிறாள் என்பதை யூகித்த பின்டோவின் மனம் திடுக்கிட்டது.
அவசரமாக ஜியாவின் அருகில் சென்று அவளது தலையை ஆறுதலாய் வருடிக் கொடுத்தாள்.
அன்று ஜில்மில்லை தன் மகள் போல் பார்த்து கொண்ட பின்டோ இன்று ஜில்மில்லின் உயிரை சுமந்து கொண்டிருக்கும் ஜியாவையும் தன் மகள் போல் பார்க்க தொடங்கினாள்.
தன் செல்போனை எடுத்து காதில் வைத்தான் யுத்கார்ஷ்.
மறுபக்கம் காத்திருந்த ருத்ரதான்யா இவன் அழைப்பை எடுத்ததும் “த்ருவா இப்போ தான் இங்க வந்து ரீச் ஆனோம் பா....”
“ஓஹ்... எவ்ரிதிங் இஸ் ஒகே மாம்?...” (everything is okey mom?)
“யா மை டியர் சன்... எவ்ரிதிங் இஸ் ஓகே” (my dear son... everything is ok) என சிரித்து கொண்டு கூறிய அவனின் தந்தை சன்ன சிரிப்புடன் “இப்போ எங்க இருக்கீங்க ரெண்டு பெரும்” எனக் கூறியது அவனது காதில் விழவில்லை....
“ஹலோ டாட்.... மாம்.... ஹலோ” யுத்கார்ஷின் அழைப்பு அவர்களுக்கு கேட்கவில்லை. அவர்களின் அழைப்பு இவனுக்கு கேட்கவில்லை.
“ஓ... ஷெட்.. சிக்னல் ப்ரோப்ளம் போல” என்று எண்ணியவாறு அழைப்பை துண்டித்தவன் போனை அங்கிருந்த டீபாயில் வைத்து விட்டு ஜன்னல் அருகில் சென்றவன் அந்த குளிர் காற்றை இதமாக உணர துவங்கினான்.
மழையுடன் சேர்ந்து இதமாக வீசிய அந்த குளிர் காற்று அவனுக்கு எதையோ உணர்த்த துடித்ததோ? ஆனால் பாவம்... அவனால் அதை உணர முடியாமல் போய்விட்டிருந்தது.
ஜியாவை சமாதானப்படுத்திய பின்டோ அகிலாண்டேஸ்வரி தேவியை பார்த்து “பாட்டி... ஜியா என்ன சொல்றான்னு எனக்கு புரியிது” என கூரியவளின் கண்களில் கண்ணீரின் சாயல்....
“உனக்கு புரியுதா... சொல்லும்மா... ஜியா என்ன தான் சொல்றா?”... என்று அவர் தன் கட்டுப்பாட்டையும் மீறி படபடக்க...
அவரருகில் வந்து அவரது கரத்தை ஆறுதலாய் பற்றிய செலின் “சொல்லு பின்டோ ஜியா என்ன சொல்றா?”
“ஆன்டி... ஜியா. என்ன சொல்றான்னா... அம்மாவ....” என்று பாதியில் நிறுத்தி மூச்சை இழுத்து விட்டவள் “அம்மா பாவம்னு சொல்றா” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது.....
“என்னனு தெளிவா சொன்னா தானே எங்களுக்கு புரியும்” என்று வின்னி எரிச்சலுடன் மொழிய.... அவளை முறைத்த பின்டோ...
“ஜியா முதல்ல அம்மான்னு சொன்னது யார? நம்ம ஜில்ல.... ஆனா அவ இப்போ அம்மான்னு சொல்றது யார?” என்று அவள் இழுக்க...
இத்தனை நேரம் ஒன்றும் தெளிவாக புரியாது நின்றிருந்த சிவனேந்திர பூபதியின் தலை விலுக்கென நிமிர்ந்தது.
ஒவ்வொருவரது மனதிலும் ஒவ்வொரு எண்ணங்கள்.... முழுதாக என்னவென்று புரியாவிட்டாலும் ஏதோ இனம் புரியா பயமொன்று அனைவரையும் சூழ்ந்து கொண்டது.
“நீ என்னம்மா சொல்ற... தெளிவா புரியும் படி சொல்லும்மா” என குரலில் நடுக்கத்துடன் சிவனேந்திர பூபதி கேட்க....
அவரது குரல் நடுக்கம் அனைவரையும் பாதித்தது... இது வரைக்கும் எதற்கும் கலங்காதவர்... ஆனால் அவரது மகளின் இறப்பின் பின் அவரது கம்பீரம் அவரை விட்டு மொத்தமாக சென்றிருந்தது. எப்போதும் இறுக்கத்துடன் இருக்கும் அவரது மனம் கூட இப்போது இளகியிருந்தது.
அவரை பரிதாபத்துடன் பார்த்த பின்டோ மெல்ல தொண்டையை செருமிக்கொண்டு “நான் என்ன சொல்ல வாரேன்னா... அன்னைக்கு நம்ம ஜில்லுக்கு ஏதோ ஆக போகுதுன்னு எப்டி மலரோட உள்ளுணர்வு சொல்லிச்சோ அதே மாதிரி இன்னைக்கு மலருக்கு ஏதோ ஆகபோகுதுன்னு ஜியாவோட உள்ளுணர்வு சொல்லியிருக்கு... அதனால தான் ஜியா பயந்து போய் இருக்கா...” என்று தயங்கி தயங்கி கூறியவளின் பேச்சில் எல்லோரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
இப்போது தான் தங்கள் தேவியின் மரணத்தையே சற்று ஜீரணிக்க பழகி இருந்தனர்... அதற்குள் இன்னொரு மகளாய் மாறியிருந்த மலருக்கும் ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை அவர்களால் சற்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த அதிர்ச்சியில் பேச்சற்று நின்றவர்களின் மோன நிலையை தொண்டையை செருமி கலைத்த பின்டோ “இப்போ யோசித்து முடிவெடுக்கிற அளவுக்கு நம்மளுக்கு டைம் இல்ல... உடனே எதாவது பண்ணனும் இல்லன்னா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.... இந்த டைம்ல வீட்ட விட்டு போறது கூட யாருக்கும் ஸேப் இல்ல... அதனால நீங்க அண்ணனுக்கு முதல்ல போன் பண்ணுங்க” என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகளை பிரித்து கொடுத்த பின்டோ தானும் அவனுக்கு அழைப்பை மேற்கொள்ள துவங்கினாள்.
ஆனால் அனைவரது முயற்சிகளும் இறுதியில் தோற்றே போனது.
மூளையில் சுருண்டு கிடந்த மலரின் உதடுகள் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தது.
ஆனால் கடவுளோ அவளது வேண்டுதல்களை செவி சாய்க்காமல் விட்டிருந்தான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
வயிற்றை கிள்ளிய பசி, தொண்டை வறண்டு போக வைத்த தண்ணீர் தாகம், மண்டையை பிளந்த தலைவலி, இருண்ட அறையில் இருக்கின்றோம் எனும் பயம் என அனைத்தும் அவளை நிலைகுலைய வைத்திருந்தது.
அப்போது திடீரென கேட்ட காலடி ஓசையில் ஒரு பக்கம் பயமும் மறு பக்கம் சிறு நம்பிக்கையும் கொண்டு அவள் நிமிர்ந்து அமர்ந்து கொண்டிருந்த வேலை அவள் இருந்த அறைக்கதவு மெதுவாக திறக்கப்பட்டது.....
அந்த பேய் மழையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவனின் மனதில் இனம்புரியா பயமும் படபடப்பும் தோன்றி அவனை அலைகழித்தது.
ஏதோ நடக்கபோகின்றது என்று அவனது உள்மனது கூக்குரல் இடுவது ஒரு வித்தியாசமான உணர்வு தோன்றி மறைந்தது.
இதே உணர்வு அவனுக்கு ஒரு வருடத்தின் முன்பும் தோன்றியதை நினைவு கூர்ந்தவனின் மனதில் பசுமையாய் அவனது மைலுவின் நினைவுகள்.....
‘ஆனால் சம்பந்தமில்லாமல் இந்த உணர்வு இன்று ஏன் தோன்றுகின்றது’ என்பதை தன் அவனால் கொஞ்சமும் யூகிக்க முடியவில்லை.
எத்தனை முறை யோசித்தும் ஏன் தனக்கு இப்படி தோன்றுகின்றது என்பதை அறியமுடியாமல உள்ளுக்குள் தவித்தவனின் மனதில் மலரின் மலர் போன்ற முகம் தோன்றி மறைந்து அவனை திடுக்கிட செய்தது.
‘இந்த வேலைக்காரியின் முகம் ஏன் என் நினைவில் தோன்றுகிறது’ என புரியாமல் குழம்பியவனுக்கு அந்த நொடி அவன் மனையாட்டியின் நினைவு சுத்தமாக அவன் மனதில் இல்லை என்பது தான் உண்மை.
அந்த நொடி அவனது மனதில் வியாபித்திருந்தது அவனது மைலு மட்டு தான். அவளது நினைவு ஒன்று தான் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
ஜியாவின் அறையில் குழுமியிருந்த அனைவரும் என்ன செய்வது என புரியாது தவித்து கொண்டிருந்தனர்.
இத்தனை நேரம் அழுது ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்த ஜியாவோ அமைதியாய் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து வைத்தாள். அந்தநேரம் அவளது பார்வைக்கான அர்த்தத்தை யாராலும் புரிந்திருக்க முடியவில்லை.
அவளது முகத்தையே உற்று பார்த்து கொண்டிருந்த பின்டோவினால் கூட அவள் என்ன நினைக்கின்றாள் என்பதை யூகிக்க முடியவில்லை.
அறையின் மூளையில் ஒடுங்கி அமர்ந்திருந்த மலரின் காதுகளில் மெல்லிய காலடி ஓசை கேட்க சிறு பயமும் நம்பிக்கை துளியும் ஒரே சேர அவளை ஆட்கொண்டது.
மூச்சை இழுத்து பிடித்து கொண்டு அவள் அமர்ந்திருந்த நொடி அவள் இருந்த அறைகதவு மெதுவாக திறக்கப்படும் ஓசையில் அங்கிருந்த மேசையின் பின்னால் பதுங்கியவள் திறக்கப்படும் கதவையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தின் பின் கதவருகில் எந்த அசைவும் இல்லாது போகவே பயத்தில் கைகளால் வாயை பொத்திகொண்டு எச்சிலை விழுங்கி தொண்டையை ஈரபடுத்தியவள் ஒசைபாடாமல் எழுந்து நின்றாள்.
கால்கள் இரண்டும் பயத்தில் வலுவிழந்து தொய்ந்து கொண்டிருக்க நிற்க கூட திராணியின்றி அங்கிருந்த டேபிளை பிடித்து கொண்டு தன்னை ஆசுவாசபடுத்தியவள் தன் சேலை முந்தானையால் முகத்தை அழுந்த துடைத்து கொண்டாள்.
இதயத்தின் ஓசை தொண்டைக்குளிக்குள் கேட்க நெஞ்சை அழுத்தி மூச்சை இழுத்து விட்டவாறு தட்டுதடுமாறி அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தாள்.
இத்தனை நேரமாய் குறைந்திருந்த தலைவலி மண்டையை பிளக்க ஒரு கையினால் தலையை அழுந்த பிடித்தவள் அங்கிருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.
வறண்டு போயிருந்த தொண்டை தண்ணீரை கேட்டு அடம்பிடிக்க சோபாவில் தலையை சாய்த்தவளின் உதடுகள் தாகத்தில் “தண்ணீ... தண்ணீ” என முனகியது.
திடீரென ஏதோ சத்தம் கேட்டு தலை நிமிர்த்தியவளின் முன்னால் தண்ணீர் ஜக் இருக்க கடும் தாகத்திலிருந்தவளோ எதையும் யோசியாமல் அதை எடுத்து தொண்டையில் சரித்திருந்தாள்.
தாகம் தீரும் மட்டும் தண்ணீர் அருந்தியவளின் கைகள் சிறிது நேரத்தில் அந்தரத்தில் நிற்க கையை எடுத்ததால் பிடிமானமின்றி அந்த கண்ணாடி ஜக் தரையில் விழுந்து சிதறியது. அனைத்துமே ஒரு ஒரு நொடியில் நடந்து முடிந்திருந்தது.
விழுந்து சிதறிய கண்ணாடி சில்கள் அவளது காலை பதம்பார்த்து குருதி அருவியாய் வழிந்தோடியது. அது எதையும் உணராது திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தவளின் மனதில் ஒரேயொரு கேள்விதான் ‘யார் இந்த ஜக்கை இங்கு வைத்தது, நான் வரும்போது இது இங்கில்லையே... ஒரு வேல நான் தான் சரியாக கவனிக்கவில்லையோ’.
எதுவும் புரியாது உடல் சில்லிட அமர்ந்திருந்தவளின் காதில் மீண்டும் மெல்லிய காலடி ஓசை கேட்க உடல் தூக்கி போட எழுந்து நின்றவள் “ஒன்னு இல்ல மலர்... பயப்படாத...அவர் தான் வந்திருப்பார்” என தன்னை தானே சமாதானப்படுத்தியவள் மெதுவாக அந்த சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சுற்றும் முற்றும் பார்வையை அலைய விட்டவாறு சென்றாள்.
தன் முன் பயத்துடன் என்ன செய்வது ன புரியாமல் நின்று கொண்டிருந்தவர்களை ஆழ்ந்து பார்த்த ஜியாவின் பார்வையை கண்டவர்களின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.
தேவியே மறுபடியும் பிறந்து வந்துவிட்டாலோ என என்னும் படியாய் தேவியின் அதே கருணை பார்வையும் சாந்தமான முகத்துடனும் தன் முன் நின்றவர்களை புன்னகை முகத்துடன் ஏறிட்டு கொண்டிருந்தாள் ஜியா.
தன் கணவனின் அறையிலிருந்து சத்தம் வரவும் தன்னவன் வந்து விட்டான் எனும் பெரும் நிம்மதியிலும் தன் அறைபக்கமே வர கூடாது என்றிருந்தாரே என்ன செய்வது என்ற தயக்கத்திலும் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு கதவை திறந்த மறுநொடி “ஆஆஆ” என்ற அலறலுடன் தரையில் சரிந்தவளின் கை பட்டு அங்கிருந்த கண்ணாடியிலான பூஞ்சாடி கீழே சரிந்து தூள்தூளாய் சிதறியது.
“ஹாஆஆஆ..” என அனத்தியவள் பயத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.
தலைமுதல் பாதம்வரை மூடியிருக்க இடது கையில் சிறு கத்தியுடன் நின்றிருந்தான்.
மூச்சே நின்றுவிடும் போல் பயம் நெஞ்சை அழுத்த பயத்தில் தரையில் விழுந்து கிடந்தவாறே பின்னால் நகர அவனோ அவளை நோக்கி முன்னேறி கொண்டிருந்தான்.
காலிலிருந்தும் பூஞ்சாடி விழுந்ததால் கையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்க குரலில் நடுக்கத்துடன் “ய..யாஆஆ... யார்... நீஈஈ..” என்று கேட்டு கொண்டே தரையிலிருந்து எழுந்தவள் பயத்தில் அலறிக்கொண்டே அங்கிருந்த மாடிபடி நோக்கி ஓடினாள்.
அதிலிருந்து வேகமாய் இறங்கியவளின் புடவை தடுக்கி விட “ஆஆஹ்ஹாஆஆக்கும் ஆஆ” அலறிக் கொண்டே படிகளில் விழுந்து உருண்டாள்.
படிகளில் விழுந்து உருண்டதில் உடலில் அங்கங்கே சிராய்ந்து அலங்கோலமாக தரையில் விழுந்து கிடந்தவளின் மனதில் உடல் வலியையும் மீறி கடைசிவரை மகிழ்ச்சியாய் தன்னவனுடன் வாழாமலே இறந்து விடுவோமோ எனும் பயம் அவள் மனதைரியத்தை அதிகரிக்க உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தரையில் கைகளை ஊன்றியவளின் கைகள் உயிர் போவது போல் வலிக்க அதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் எழுந்தவள் மீண்டும் பொத்தென்று தரையில் குப்புற விழுந்தாள்.
“அம்ம்ம்மாஆஆஅ” என கண்கள் சொருக கதறியவளின் கதறல் அந்த வீடு முழுவதும் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க.....
நடுங்கிய கைகளை தரையில் ஊன்றி காலை தரையில் அழுத்தி வைத்து இருந்தவாக்கிலே அங்கு திறந்திருந்த அறையை நோக்கி சென்றவளின் சேலை முந்தானையை பிடித்து இழுத்திருந்தான் அவன்.
அடுத்த நொடி பயத்தில் மார்புகூடு வேகமாய் ஏறி இறங்க ‘கடவுளே இந்த நொடி என் உயிரை எடுத்து விடு.... என்னால் இதற்குள் மேல் போராட உடலிலும் மனசிலும் தெம்பில்லை... என்னை கொன்றுவிடு...” என ஆயிரம் எண்ணங்கள் மனதில் தோன்றி மறைய ‘தன்னவன் மட்டுமே பார்க்க வேண்டிய தன் உடம்பை கேடுகெட்ட எவனோ பார்த்துவிடுவானோ’ எனும் அச்சம் அவளுள் தோன்றிய அதே கணம் ‘நீ எல்லாம் என்ன பொண்ணுடி... உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லை... சீ... அதுயெப்டிடி முன்னபின்னே தெரியாதவன் தொட்ட உடனே இப்படி வெக்கமே இல்லாம உருகி குழைற’ அவனது குரல் கன்னத்தில் அறைந்தது போல் இருக்க....
‘இல்லங்க.... நான் அப்படிப்பட்ட பொண்ணில்லங்க.... நீங்க என்ன நம்புவீங்களாங்க?.... நான் அப்படிபட்ட பொண்ணில்லையே.... இத எப்படி நான் உங்களுக்கு புரிய வைப்பேன்..... ஐயோ... உங்களுக்கு தான் என்னய பிடிக்காதே.... அப்றோம் எப்படி நீங்க என்ன நம்புவீங்க.... இல்ல நீங்க என்னை நம்பவே மாட்டீங்க.... நீங்க என்ன வார்த்தையாலேயே கொன்னுடுவீங்க... என்னால அத தாங்க முடியாதே...அப்போ நான் செத்து போய்றேன்... ஆமா... அது தான் சரி....’ அவன் தன் கண் முன்னால் நிற்பதாக நினைத்து உள்ளுக்குள் புலம்பியவளின் தலை சுற்ற தொடங்க அப்படியே மயங்கி சரிந்தாள்....
தன்னவன் தன் முன் நிற்பதாக நினைத்து உள்ளுக்குள் கதறியவளின் கண்கள் சொருக மயக்கநிலைக்கு சென்றவளின் மனதில் கடந்தகால நினைவலைகள்................
தென்காசி அருகிலுள்ள இலஞ்சி கிராமம். அதற்கு மிக அருகில் அருவிகள் ஆர்பரிக்கும் குற்றால மலைத்தொடர்கள். பசுமையும் இயற்கையும் ஒருசேர ஆட்சி புரியும் எழில் மிகுந்த விவசாய கிராமம்.
அந்த விவசாய கிராமத்தில் பிறந்து விவசாயத்தையே உயிர் மூச்சாய் கொண்டு வாழ்ந்த காளி-நாகம்மை தம்பதியினரின் செல்ல புதல்வி தான் மைலினி மலரழகி. அவளுக்கு பின் ஐந்து வருடம் கழித்து பிறந்த அவளது குட்டி தங்கை நிலவழகி.
ஏழைகள் என்றாலும் தங்களது வருமானத்திற்குள் பாந்தமாய் வாழ்ந்து வந்த அந்த குருவிகூடும் ஒரு நாள் கலைந்து போனது. அது மலரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டிருந்தது.
கோவிலுக்கு போய் வருகிறோம் என சொல்லி சென்ற அவளது பெற்றோரை குடிபோதையில் வந்த லாரிகாரன் கருணையே இன்றி இடித்து தள்ளிவிட்டு சென்றிருந்தான்.
அந்த இடத்திலேயே அவளது பெற்றோரும் அவளது மூன்றுவயது குட்டி தங்கையும் உயிரை விட்டிருந்தனர்.
பள்ளிவிட்டு வீடு வந்திருந்த மலரின் காதுகளில் இந்த செய்தி விழுந்து அவளை நிலைகுலைய செய்திருந்தது. தன் குட்டி தங்கை தன்னை விட்டு சென்றுவிட்டால் என்பதை நம்பமுடியாமல் பைத்தியம் போல் திரிந்தவளை அரவணைத்து கொண்டது அவளது உயிர்தோழி மகாலட்சுமி தான்.
அந்த ஊரில் பெரியவீட்டுகாரர்கள் என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன்-தமயந்தி தம்பதியினரின் ஒரே செல்ல மகள் தான் மகா.
எப்போதும் யாருடனும் பேசாமல் அமைதியாய் வலம் வரும் மகா மலருடன் பழக தொடங்கியதே அவளது பேச்சினால் தான்.
எப்போதும் வளவளவென பேசிகொண்டிருக்கும் மலரிடமிருந்து ஆரம்பத்தில் விலகி போனாலும் நாட்கள் போக போக அவர்களை அறியாமலே அவர்களது நட்பு விருட்சகமாய் வளர்ந்து இறுதியில் யாராலும் பிரிக்க முடியா உயிர்தோழிகளாய் மாறிபோய்னர்.
அதனால் மலரை தன் வீட்டிலேயே தங்கவைத்து அரவணைத்து கொண்டாள். மகாவின் வீட்டை பெரியவீடு என்பதை விட பெரியமனது படைத்தவர்களின் வீடு என்று சொல்வதே சாலசிறந்தது.
தன் மகளின் தோழி என மலரை தள்ளிவைக்காமல் தங்கள் மகளை போலவே அவளையும் பார்த்து கொண்டனர்.
அவர்களது அன்பில் கொஞ்சம்கொஞ்சமாய் மீண்டவள் மீண்டும் பழையபடி வாயாடியாய் மாறிவிட்டிருந்தவளை கருணையேயின்றி பார்த்த விதி அவளது தோழியின் மூலம் மீண்டும் அவளது வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடியது.
மலர் எவ்வளவு தடுத்தும் கேளாமல் பள்ளி சுற்றுலா சென்ற மகா போடிங் செய்யும் போது ஆற்றில் தவறி விழுந்து மூச்சடைத்து உயிரை விட்டிருந்தவளை மறுநாள் காலையில் தான் மீட்டேடுத்திருந்தனர்.
பார்க்கவே கோரமாய் இருந்த அவளது உருவத்தை பார்த்த மறுநொடி தலைசுழல மயங்கி சரிந்தவள் ஒருவாரத்தின் பின் தான் கண்களை திறந்தாள்.
கண்களை திறந்தவளின் கண்களில் விழுந்தது சுந்தரபாண்டியன் தமயந்தி தம்பதியினரின் உருக்குலைந்து போயிருந்த தோற்றம் தான்.
தன் குடும்பத்தை இழந்து தவித்தபோது தனக்கு தாயாவும் தந்தையாவும் மாறிய அவர்களுக்கு இப்போது மகளாய் மாறி அவர்களை அரவணைத்து கொண்டாள் மலர்.
காலம் எதையும் மாற்றும் என்பதற்கிணங்க அவர்களை ஓராளவு மாற்றியவள் அப்படியும் அவர்களால் மகாவை மறக்கமுடியாமல் தவித்து கொண்டிருப்பதை பார்க்கமுடியாமல் சென்னையில் இருக்கும் சுந்தரபாண்டியனின் ஒன்றுவிட்ட தங்கையான ருத்ரதான்யாவின் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.
அவர்கள் பலவருடங்களாக அமெரிக்காவில் இருப்பதால் அவர்களது சென்னை வீட்டிலேயே தங்கிகொண்டனர்.
அமேரிக்காவில் வசிப்பவர்கள் எப்போதாவது சென்னை வரும் போது தங்கி செல்வதற்காக வாங்கி போட்டிருந்த வீட்டில் தான் சுந்தரபாண்டியன் தம்பதியினரும் மலரும் குடியேறினர்.
மலரின் வாழ்க்கையும் அங்கிருந்து தான் ஆரம்பித்தது.
இன்றுடன் அவர்கள் சென்னை வந்து ஒரு மாதமாகி இருந்தது. சுந்தரபாண்டியன் தமயந்தி தம்பதியினர் வந்த முதல் நாள் எப்படி இருந்தார்களோ அந்த நிலை சிறிதும் மாறாது இன்று வரை அப்படியே தான் இருந்தனர்.
அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாத மலர் அவர்களை வற்புறுத்தி மெரினா பீச் அழைத்து வந்திருந்தாள்.
மலரை வேறு எந்த வகையில் தாக்கலாம் என இத்தனை நாளா காத்திருந்த விதியோ இன்று நீ வசமாய் மாட்டிகொண்டாய் எனும் ரீதியில் அவளை விஷம சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தது.
விடுமுறை நாளும் காதலர் தினமும் ஒன்றாய் வந்ததில் மெரினாவில் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது.
கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்த மக்கள் கூட்டமும் ஆரவாரமும் ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அந்த சூழலில் ஒட்டமுடியாமல் பேந்தபேந்த விழித்தவர்களை காப்பதற்காக இறைதுதனாய் வந்து சேர்ந்தான் அவன்.
அவ்வழியாய் தன் நண்பர்கள் புடை சூழ வந்த விக்ரம் இவர்கள் மூவரும் ஒன்றும் புரியாது முழித்து கொண்டிருக்கவும் அவர்கள் அருகில் வந்தான்.
இயற்கையிலேயே உதவும் குணம் உள்ளவன் என்பதால் யாருக்கு உதவி தேவை என்றாலும் தயங்காமல் செய்துவிடுவான்.
“வணக்கம் சார்... நீங்க ஊருக்கு புதுசா?” என சிறு தயக்கத்துடனும் கிராமத்து மனிதர்கள் என்பதை அவர்களது தோரணையில் உணர்ந்து கொண்டவன் சிறு மரியாதையுடனும் வினவ....
யாருடனும் சட்டென்று பழகாத சுந்தரபாண்டியனோ அவனை நோக்கி ஆராய்ச்சி பார்வை ஒன்றை பார்த்து வைக்க யாருடனும் சட்டென்று பழகும் மலரோ “அட ஆமாம்... உங்களுக்கு எப்படி தெரியும் நாங்க ஊருக்கு புதுசுன்னு” என்று அவனை பார்த்து சிரித்து கொண்டு வினவியவள் சுந்தரபாண்டியனின் கண்டிப்பு பார்வையில் சற்று பின்வாங்கி நின்றுகொண்டாள்.
மலரை பார்த்தவுடன் அவனுக்கு என்ன தோன்றியதோ அவளையே ஒருவித ரசனை பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தவனை அதே கண்டிப்பு பார்வையுடன் ஏறிட்ட சுந்தரபாண்டியன் தொண்டையை செருமியவாறு “ஆமா தம்பி... நாங்க ஊருக்கு புதுசு தான்... தம்பி இதே ஊருகாரரு தானே....” என்று கேள்வியாய் இழுக்க...
“ஆமா சார்... நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே இங்க தான்..”
“ஆஹ்... நீ யாருகூட வந்தப்பா”
“பிரெண்ட்ஸ் கூட தான் சார்... நீங்க இங்க ஒன்னும் புரியாம நின்னமாதிரி இருந்தது அதான்... எதாவது ஹெல்ப் பண்ணலாம்னு தான்.. அதுவுயில்லாம நான் டூரிஸ்ட் கைடாவும் வொர்க் பண்ணியிருக்கேன் அதனால தான்.....” என்று ஒருவாறு இழுத்து பேச்சை பாதியில் நிறுத்தினான்.
ஒருவரை பார்த்தவுடனே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள கூடிய கிராமத்து மனிதரான சுந்தரபாண்டியன் அவனது பேச்சில் இருந்த உண்மையை கண்டுகொண்டு அவனை பார்த்து லேசாக புன்னகைத்தார்.
அவரது புன்னகையில் பதிலுக்கு புன்னகைத்தவன் தன் நண்பர்களை பாதியில் கழட்டிவிட்டு விட்டு இவர்களுடன் இணைந்து கொண்டான்.
அவனை கடுப்புடன் பார்த்தவர்கள் அங்கிருந்து நகர அவர்களை கண்டுகொள்ளாதவன் இவரக்ளுடன் இணைந்து ஓரமாய் இடம் பார்த்து அமர்ந்து அவர்கள் மூவருடனும் தன்னையும் இணைத்து கொண்டான்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து கஷ்டப்பட்டு படித்து முன்னேறியவனின் கதையை கேட்ட சுந்தரபாண்டியனுக்கு அவரை அறியாமலே அவனை பிடித்து போய்விட்டிருந்தது.
மகளை இழந்து தவித்து கொண்டிருந்த தமயந்திக்கு பெற்றோரை இழந்து தவிக்கும் விக்ரமின் உணர்வுகள் புரிந்து அவனை தன் மகனாய் பாசத்துடன் பார்க்க தொடங்கினார்.
அவனது கதையை கேட்டு கவலை கொண்ட மலர் தன்னை போல் இவனும் பெற்றோரை இழந்து தவிக்கிறான் என அவன் மேல் பரிதாபம் தோன்ற அவனை தோழமையுடன் பார்த்து சிரித்து வைத்தாள்.
அவள் புன்னகையை பார்த்தவனின் மனதில் இனம்புரியா பரவசம்; இத்தனை நாளாய் யாரை பார்த்தும் தோன்றாத உணர்வு இன்று அவளை பார்த்து தோன்றியதை உணர்ந்தவனின் மனதில் காதல் மெல்லிய செடியாய் வளர துவங்கிருந்தது.
அப்படியே நேரம் நகர பலமணி நேரம் ஒரே இடத்தில் இருந்ததால் களைப்படைந்த மலர் சற்று தூரம் நடந்து வருவதாக சொல்லி சென்றிருந்தாள்.
‘தெரியாத ஊர் தெரியாத இடம் நானும் துணை வருகிறேன்’ என தடுத்த விக்ரமை சமாளித்து சாலை அருகில் வந்தவள் அந்த இடத்தை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
தெரியாத ஒன்றை பார்க்கும் போது ஏற்படும் பரவச மனநிலையில் இருந்தவள் நடுரோட்டில் ஓடிவரும் பெண்ணையும் அதே அதிசய பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
‘ஐ.. ஓடிபிடிச்சு விளையாறாங்க போல... நாமளும் அவங்க கூட போகலாம்’ என சாலையில் கால்வைக்க போனவளின் மனம் படபடக்க ஏதோ நடக்க போகின்றது என்பது போல் உணர்வு தோன்றி மறைய பரவச நிலை மறந்து அங்கு பதற்றம் குடிகொண்டது.
அப்போது தான் அந்த சாலையில் அசுர வேகத்தில் வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தவள் ‘அச்சோ...இவங்க எதுக்கு இப்படி ஓடி வாராங்க....’ என யோசித்தவள் ஒன்றும் புரியாது போகவே அவளும் அந்த பெண்ணை நோக்கி ஓடினாள்.
அந்த பெண்ணோ பயத்தில் தனக்கு முன்னால் வேகமாக ஓடி கொண்டிருந்த தன் செல்ல நாய்க்குட்டியை மட்டுமே கவனத்தில் கொண்டு அதை பாரத்து கொண்டே ஓடியவள் அவளுக்கு முன்னால் வேகமாக வந்த பைக்கை கவனிக்கவில்லை.
அதை கண்டு உள்ளுக்குள் பதறிய மலர் மனதின் உந்துதலில் வரும் வாகனகள் எதையும் கண்டுகொள்ளாமல் வேகமாய் அவளை நோக்கி சென்றவள் அவளை பிடித்து தள்ளி விட்டிருந்தாள்.
யாரோ தன்னை பிடித்து தள்ளிவிடவும் பயத்தில் அலறி கொண்டு அங்கிருந்த மணல் திட்டில் போய் விழுந்தாள் தேவி.
அந்த பெண்ணை காப்பாற்றி விட்ட நிம்மதியில் ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டவள் அப்போது தான் தன்னை நோக்கி அதே அசுர வேகத்துடன் வந்து கொண்டிருந்த பைக்கை பார்த்து பயத்தில் வாயை பிளந்து கொண்டு செய்வதறியாது முழித்துக்கொண்டு நின்றாள்.
போய் இவ்வளவு நேரமாகியும் மலர் வராது போகவே உள்ளுக்குள் தவித்து போனான் விக்ரம். சுந்தரபாண்டியனும் ‘இந்த பெண் எங்கு போய் எதை வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கின்றாலோ’ என அவளது குணத்தை அறிந்து அவளை மனதுக்குள் வைதுகொண்டிருந்தார்.
தமயந்தி சுற்றும் முற்றும் மலர் தென்படுகிறாளா என பார்வையை அலைய விட்டு கொண்டிருந்தார்.
சாலையில் அதி வேகமாக வந்தவனோ நடுரோட்டில் நின்று கொண்டிருந்தவளை பார்த்து விலகுமாறு சைகை செய்ய அவளோ ‘தான் சாகபோகிறோம்’ எனு பயத்தில் மூளை மழுங்கி போய் வாயை ‘ஆ’ வென பிளந்து கொண்டு அசையாது நின்று கொண்டிருந்தாள்.
அவளை சகட்டு மேனிக்கு மனதுக்குள் திட்டியவன் அவசராமாய் பிரேக்கை அழுத்த “க்ரீச்ச்ச்ச்” என்ற சத்தத்துடன் டயரிலிருந்து நெருப்புபொரிகள் பறக்க அவளை லேசாய் தட்டிவிட்டு அமைதியாய் நின்றிவிட்டிருந்தது அந்த பைக்.
ஏற்கனவே மரண பயத்தில் நின்று கொண்டிருந்தவளோ அந்த பைக் அவளை தட்டி விடவும் பயத்தில் அலறி கொண்டு ரோட்டில் விழுந்தாள்.
அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல் சுந்தரபாண்டியனையும் தமயந்தியையும் அழைத்து கொண்டு விக்ரம் அங்கு வந்த நேரம் மலர் ரோட்டில் விழ சரியாய் இருக்க அவன் பதறி போய் நின்றிருந்தான்.
அங்கு அவளுக்கு சற்று முன்னால் நின்று கொண்டிருந்த பைக்கை கண்டவனின் மனம் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்திருக்க அவனுள் கொஞ்சம் கொஞ்சமாய் வெறி ஏற ஆரம்பித்திருந்தது.
சிறு வயதிலே பெற்றோரை இழந்தாலோ என்னவோ மனஅழுத்தத்தில் தான் விரும்பும் பொருள் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் இல்லையென்றால் அது யாருக்கும் கிடைக்கவே கூடாது எனும் இனம்புரியா வெறி சிறுவயதிலிருந்தே அவனுள் ஆழமாய் பதிந்து போயிருந்தது.
அதேபோல் தான் விரும்புபவர்களுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அதற்கு காரணமானவர்களை ஏதோவொன்று செய்யாமலும் விடமாட்டான்.
அதேபோல் இப்போது தான் பார்த்து மூன்று மணி நேரங்களே பழகிய மலர் மீது அவன் அளவுகடந்த காதலை கொண்டிருந்தான்.
அவளுக்கு ஒன்றென்றால் அவன் சும்மா விட்டுவிடுவான என்ன... அந்த பைக்காரனையே ஒருவித வெறியுடன் பார்த்து கொண்டிருந்தவன் ஒன்றும் பேசாது மலரின் அருகில் சென்று அவளை தூக்கி நிற்பாட்ட அவளோ இப்போதும் பயத்தில் கண்களை அகல விரித்து பயத்துடன் நின்றிருந்தாள்.
“மலர்” என அவளது கையை பிடித்து ஆட்ட ரோட்டில் விழுந்ததால் கையில் லேசாய் உராய்ந்திருக்க “ஆஆ” என்று அலறியவள் முழங்கையை கவலையுடன் பார்த்து வைத்தாள்.
அவளது காயத்தை பார்த்து பதறிய விக்ரம் “ஐயோ ரத்தம் வருது... வா.. நாம ஹோஸ்பிடல் போய்வரலாம்” என அவளை பிடித்து இழுக்க அவளோ அவனது நாசுக்காய் கையை தட்டிவிட்டு விட்டு கவலையுடன் நின்று கொண்டிருந்த அப்பா அம்மாவிடம் சென்றவள் “இப்போ எதுக்கு எப்படி போஸ் கொடுக்கிறீங்க? எதாவது படம் பிடிக்க போறங்களா என்ன... இல்லையே.. அதுவுயில்லாம இப்படி கவலை படுறது எனக்கு பிடிக்காது தெரியும்ல...இன்னும் எதுக்கு எப்படி நிக்கிறீங்க... இங்க பாருங்க ரொம்ப சின்ன காயம் தான்....” என்று அவர்களிடம் கை காயத்தை காட்டியவள் உள்ளுக்குள் ரத்தகண்ணீர் வடித்து கொண்டிருந்தாள்.
சிறு காயம் என்றாலே பயந்து ரகளை செய்யும் மலர் இன்று அமைதியாய் நின்று கொண்டிருக்கவும் அவளை விசித்திரமாக பார்த்து வைத்தார் தமயந்தி.
அவரது கூர்பார்வையை கண்டு அசடு வழிந்தவள் ஒன்றும் பேசாது முகத்தை அஷ்டகோணலாக்கி ஒரு சிரிப்பை உதிர்த்து கொண்டு அவரின் காதருகில் குனிந்தவள் “மத்தவங்க முன்ன நம்ம கெத்த விட்டுக் கொடுக்க கூடாதும்மா...” என கண்சிமிட்டியவள் தான் தள்ளிவிட்ட பெண்ணை நோக்கி சென்றாள்.
அந்த பெண்ணோ தன் செல்ல நாயை தடவி விட்டு கொண்டிருந்தாள் கண்களில் கோடாய் இறங்கிய கண்ணீருடன்.
இயற்கையிலே பயந்த சுபாவம் கொண்ட தேவியோ இன்று தான் சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டு தன் கையிலிருந்து திமிறி ஓடிய தன் செல்ல நாயை காப்பாற்ற அதன் பின்னே ஓடியவள் திடீரென்று யாரோ தள்ளிவிடவும் பயந்தே போய்விட்டாள்.
கீழே தள்ளிவிடப்பட்டதில் பயத்தில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தவளின் அருகில் வந்த நின்ற டோமி அவளை பார்த்து வாலைஆட்ட சந்தோசத்துடன் அதை அணைத்து கொண்டிருந்தவள் முன் வந்து நின்றாள் மலர்.
“இத பிடிக்கவா நடுரோட்டில் ஓடினீங்க... ப்ச் என்னங்க நீங்க... என்கிட்ட சொல்லியிருக்கலாமே நான் தான் எங்க ஸ்கூலு ஓட்ட போட்டியில எப்போவும் முதல்ல வருவேன்... தெரியும்ல” என்றவள்...
“அடடே... உங்களுக்கு தான் என்ன தெரிஞ்சிருக்காதே... நான் இப்போ தானே இந்த ஊருக்கே வந்திருக்கேன்” என்று உதட்டை பிதுக்கியவள்...
“பரவாயில்ல இப்போ தான் பார்த்திட்டோமே இனிமே என்ன ஞாபகம் வச்சுகோங்க... என்ன நான் சொல்றது...” என வளவளவென்று பேசியவள் குறும்பு புன்னகையுடன் “ஞாபகம் இருக்கும்ல”
தேவியோ பயத்தில் பூம்பூம் மாடு போல தலையை ஆட்டி வைக்க அவளது தலையாட்டலை பார்த்து சத்தமாக சிரித்தவள் பாசத்துடன் அவள் அருகில் நெருங்கி அவளது கண்ணீரை துடைத்து விட்டாள்.
சுந்தரபாண்டியனும் தமயந்தியும் இது வழக்கம் தான் என்பது போல் சாதாரணமாய் பார்த்து வைக்க விக்ரமோ அவளது செய்கையில் அவளை காதலுடன் பார்த்து வைத்தான்.
அன்று தான் தேவியினதும் மலரினதும் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதே நாளில் தான் மலருக்கான அழிவு நாளும் ஆரம்பித்தது. அன்றே தேவியின் மரணத்திற்கான நாளும் விதியால் குறிக்கப்பட்டது.
மலர் யாரிடமெல்லாம் அன்பு காட்டுகின்றாலோ அவர்கள் எல்லாம் அவளை விட்டு பிரிந்துவிடுவார்கள் என்பதை அறியாதவளோ தேவியின் மீதும் அளவுகடந்த பாசத்தை கொட்ட துவங்கினாள்.
பாவம் விதியின் கொடூரத்தை அறியாத தேவியோ மலரவளின் மலர் போன்ற சிரிப்பில் தானும் அவளை பார்த்து புன்னகை பூத்து வைத்தாள்.
அன்றே அவர்களது நட்பிற்கான அஸ்திவாரம் மெதுவாய் எழுப்பப்பட்டது......
காலம் அதன் போக்கில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒவ்வொருவரினது வாழ்க்கையிலும் விதம் விதமாய் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
மூன்று வருடம் கடந்தநிலையில்....
சுந்தரபாண்டியன் தமயந்தி தம்பதியினர் மீண்டும் தங்கள் கிராமத்திற்கே சென்று வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிகொண்டனர்.
ஆனால் அடிக்கடி தங்கள் மகளாய் மாறிபோன மலரை பார்ப்பதற்காக சென்னை வந்து செல்ல ஆரம்பித்திருந்தனர்.
மலரால் இப்போது ஒரு நொடிகூட தேவியை விட்டு நகரமுடியாமல் அவள் மேல் அளவுகடந்த பாசத்தை கொட்டதுவங்கி அவள் வீட்டிலேயே நாட்களை களிக்க துவங்கியிருந்தாள்.
பேசாமடந்தையாய் இருந்த தேவி இப்போதெல்லாம் திறந்த வாய் மூடாமல் எல்லோருடனும் கலகலப்பாய் பழக ஆரம்பித்திருந்தாள்.
வருடத்திற்கு இருமுறை அவளது சம்மதத்துடனோ இல்லை அவளது விருப்பமின்றியோ எப்படியோ அவளை சமாளித்து வெளிநாட்டு சுற்றுலாவிற்கு அனுப்பிவிடுவார்.
அந்த நாட்களில் தன் கிராமத்திற்கு சென்று விடும் மலர் தேவி வருவதற்கு ஒரு முன்பு மீண்டும் தேவியின் வீட்டிற்கு வந்துவிடுவாள்.
தேவியும் அப்படிதான், சுற்றுலா முடிந்து திரும்பி வரும் தேவி வீட்டிற்குள் மலர் இல்லையென்றல் வீட்டிற்குள் நுழையக்கூட மாட்டாள்.
ஆரம்பத்தில் அதை கண்டித்த அவளது பாட்டி அகிலாண்டேஸ்வரி தேவி கூட அவர்களுக்கிடையில் உள்ள பாசத்தை கண்டு தன் பிடிவாதத்தை சிறிது தளர்த்தியிருந்தார்.
ஆரம்பத்தில் தங்கள் மகளுடன் நேரத்தை கழிக்கமுடியாமல் வேலை வேலை என்று ஓடிகொண்டிருந்த ராஜா சிவனேந்திர பூபதி மற்றும் அவரது மனையாட்டி செலினா டெஸா தம்பதியினர் இப்போதெல்லாம் சிறிது நேரத்தை அவளுக்காக ஒதுக்கியிருந்தனர்...
ஆனால் தேவியோ அவர்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருக்க பழகியிருந்தாள்.
சிறுவயதிலிருந்து தன் அம்மா தன்னுடன் எப்போதும் இருக்கமாட்டார்களா? தன்னுடன் ஆசையாய் பேச மாட்டார்களா? என உள்ளுக்குள் தவித்து கொண்டிருந்தவள் இன்று அவர்கள் அவளுடன் பேச முயற்சித்தும் அவர்களை சிறிது கண்டுகொள்ளாமல் அவர்களை புறகணிக்க தொடங்கியிருந்தாள், காரணம் அவர்கள் எல்லோரும் கொடுக்க வேண்டிய பாசத்தை அன்பை மொத்தமாய் அவள் மேல் பொழிந்து கொண்டிருந்தாள் மலர்.
தன் தோழி மகாவை போலிருக்கும் தேவியின் மீது அவளுக்கு எப்போதுமே மதிப்பும் மரியாதையும் அதையும் விட பாசமும் அதிகம்.
விக்ரமோ மலரின் நினைவில் அவள் மேல் கொண்ட காதலில் கொஞ்சம் கொஞ்சமாய் கரைய தொடங்கியிருந்தான்.
அவளை பார்த்த நொடியிலிருந்து காதலிக்க ஆரம்பித்தவனின் காதல் இன்று விருட்சகமாய் மாறி மனம் வீச தொடங்கியிருந்தது.
ஆனால் அதை அவளிடம் இன்னமும் சொல்லத்தான் அவனால் முடியவில்லை. சொல்ல முயற்சிக்கும் போதெல்லாம் ஏதாவது தடையாய் மாறி அவனின் காதலை கடைசிவரை சொல்ல முடியாமலே போய்விட்டிருந்தது.
இப்போது வேலை விசயமாக வெளிநாடு சென்றிருந்தான் அவன்.
அதிகாலை பொழுதில் கம்பீரத்துடன் மிளிர்ந்தது அந்த மிக பிரம்மாண்டமான மாளிகை. அதை சுற்றியுள்ள அழகிய தோட்டமும் பாதுகாப்பிற்காய் எழுப்பட்ட சுற்றுசுவர் மதிலும் ஏகப்பட்ட கார்கள் வரிசையாய் வந்து நிற்க மிக பெரிய அளவில் அமைக்கபட்ட போர்டிகோவும் என பழமை வாய்ந்த அழகுடன் இருந்தது அந்த மாளிகை.
அது தேவியின் அரண்மனை. பல தலைமுறையாக அவர்களது ராஜவம்சம் வாழ்ந்து வந்த பாரம்பரிய பெருமை கொண்ட அரண்மனை. பல தளங்கள் கொண்ட அந்த அரண்மனையில் ஒதுக்குபுறமாய் இருந்த அறையில் துயில் கொண்டிருந்தாள் மலர்.
திறந்திருந்த ஜன்னல் வழியாய் கதிரோனின் மென் சுழி கதிர்கள் அவளது பட்டு மேனியில் தெறித்து அவளை மலர செய்திருந்தது.
களைப்பில் கைகளை நீட்டி சோம்பல் முறித்தவாறு கண்களை மலர்த்தியவளின் முன்பு அழகாய் வீற்றிருந்தது புன்னகை சிந்திய முகத்துடன் இருந்த தேவியில் ஆளுயர புகைப்படம்.
அவளுக்கு கையசைத்தவள் “ம்ஹ்... இன்னும் ரெண்டு நாள் இருக்கு நீங்க ஊருக்கு வாறதுக்கு...” என பெருமூச்சு விட்டவாறு எழுந்தமர்ந்து துயில் கொண்ட இடத்தை சுத்தபடுத்தியவள் குளித்து விட்டு வெளியே வந்தாள்.
அவளது ஆருயிர் தேவிம்மா அவளது சிறு வயது தோழியான ஸ்ரேயா ரதோடை பார்க்க மும்பை சென்றிருந்தாள்.
ஸ்ரேயா மும்பையிலுள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த அழகிய நங்கை. இயல்பிலேயே நற்குணம் கொண்டவள் தான். ஆனால் விதி அவளது தந்தை வழி பாட்டி மூலம் அவளது இயல்பை சுத்தமாய் மாற்றி அவளை தேவிக்கு எதிராக மாற்றியும் விட்டிருந்தது.
உள்ளுக்குள் விஷம் போல் பரவிய வன்மத்துடன் புன்னகை எனும் முகமூடி அணிந்து கொண்டு அவளுடன் பழகி கொண்டிருந்தாள் அவள்.
இதுயெதுவும் அறியாத தேவியோ அவளுடன் எப்போதும் போல் தூய நட்புடன் பழகி கொண்டிருந்தாள்.
தன் அறையிலிருந்து வந்த மலர் நேரே சென்றது அகிலாண்டேஸ்வரியிடம் தான். இன்று அவளது அப்பாவும் அம்மாவும் ஊரிலிருந்து அவளை பார்க்க வந்திருந்தனர். அதனால் தங்கள் வீட்டிற்கு செல்வதற்காக அவரிடம் அனுமதி வாங்கியவள் அவர்கள் குடியிருக்கும் வீட்டை நோக்கி தன் சைக்களில் சென்றாள்.
இந்த நாள் அவள் வாழ்நாளிலே மறக்க முடியாத நாளாய் அமைய போகின்றது என்பதை அறியாதவளாய் தன் பெற்றோரை காண போகும் மகிழ்ச்சியில் இருந்தவள் அவர்களுக்காக ஸ்வீட் வாங்கவென அங்கிருந்த ஸ்வீட் கடைக்கு சென்றவள் ஸ்வீட்டை பேக் பண்ண சொல்லிவிட்டு சாலையை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
சென்னையிலிருந்த இந்த மூன்று வருடத்திலும் அவள் சற்றும் தன் இயல்பிலிருந்து மாறியிருக்கவில்லை என்பதற்கு சாட்சியாக சென்னை வந்த புதிதில் எப்படி வேடிக்கை பார்த்தாலோ அதேபோல் இன்று அந்த சாலையை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றாள் அவள்.
அதே நேரம் தன் மெர்சிடிஸ்-பென்ஸ்ஸில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த யுத்கார்ஷை அழைத்திருந்தார் அவனது அன்னை ருத்ரதான்யா.
“ஹலோ மாம்...ஹொவ் ஆர் யு”
“என்னகென்ன கண்ணா.... நான் நல்லா தான் இருக்கேன்.... நீ எப்படி இருக்க... சென்னை ரீச் ஆகிட்டியா....”
“யெஸ்... மாம்... இங்க வந்து டூ அவர்ஸ் ஆச்சு... கொஞ்ச இம்போர்டன்ட் வொர்க்ஸ்” (important works) இருந்தது... அதையெல்லாம் முடிச்சிட்டு இப்போதான் வீட்டுக்கு போறேன்.... என்ன மாம் ஏதாவது சொல்லனுமா?”
“அதுயொன்னு இல்ல த்ருவா..... எங்க அண்ணன் ஊரிலிருந்து வந்து நம்ம வீட்டில தங்கியிருக்காரு... நீ ஒரு தடவ போய் அவரை பார்த்திட்டு வா கண்ணா...”
அலுப்பாய்,...”மாம்” என இழுத்தவன்....
“அம்மாக்காக செய்ய மாட்டியா த்ருவா...” என கெஞ்சலாய் கேட்க....
“ஒஹ் கோட்..... ஓகே..ஓகே.. போய் பார்த்திட்டு வந்திறேன்... என்னோட ஸ்வீட் மாம்காக” என சிரித்தவன்....
“ஐ லவ் யு மாம்.... பாய்” என்று அழைப்பை துண்டித்தவன் சிக்னல் விழவும் காரை நிறுத்தி விட்டிருந்தவனின் கண்ணில்பட்டது இரண்டு சிறுகுழந்தைகள்.
அவர்களது தோற்றத்தை பார்த்தவனின் மனம் சுணங்கி போனது. அழுக்கு உடையில் அதுவும் அங்காங்கே கிழிந்து தொங்கிகொண்டிருக்க அங்கிருந்த ஐஸ் கிரீம் கடையை ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தவர்களை பார்த்தவனின் மனம் லேசாய் கவலை கொண்டது.
அவனுக்கு எப்போதுமே சிறுகுழந்தைகள் மீது அவ்வளவு பாசம்... யாரென்று தெரியாத குழந்தைகளுடன் இலகுவில் பழகிவிடுவான். ஆனால் அழுக்கு தோற்றத்தில் இருந்தவர்கள் இவர்கள் மீதும் அவனுக்கு கருணை வந்தது அவனது நற்குணத்தையே பறைசாற்றுகிறது.
தன் விலையுயர்ந்த பென்ஸ் காரை ஓரமாய் நிறுத்தி ஸ்டைலாக தலை முடியை கோதி கொண்டு காரிலிருந்து இறங்கியவனை கண்கொட்டாமல் விழிவிரித்து பார்த்து கொண்டிருந்தாள் மலர்.
திடீரென்று அவள் இருக்கும் பக்கம் காற்று வேகமாய் வீச அதனுடன் சேர்ந்து அவளது தூய்மையான இதயமும் தாறுமாறாய் அவள் சொல்பேச்சு கேக்காது அவனது இதயத்துடன் கலக்க துடிக்க இமைகள் படபடக்க இதயத்தின் ஓசை தொண்டைக்குளிக்குள் வந்து காதல் இசையை மீட்ட தொடங்க கயல் விழிகளோ அவனை அங்குலம் அங்குலமாய் படம் பிடித்து இதயத்தில் சேமிக்கும் வேலையை செவ்வன செய்ய துவங்கியது.
இங்கு ஒருத்தி தன்னிலை மறந்து தன் செய்கைகளை ரசித்து கொண்டிருக்கின்றாள் என தெரியாமல் காரிலிருந்து இறங்கி அந்த ஐஸ் கிரீம் கடை நோக்கி சென்றவன் சிலபல ஐஸ் கிரீம்களை ஆர்டர் செய்து எடுத்து வருமாறு கூறியவன் தன் பாடிகார்ட்ஸ்க்கு அழைத்து தான் இருக்குமிடத்திற்கு வருமாறு பணித்தவன் அந்த குழந்தைகளை நோக்கி சென்றான்.
அந்த ஐஸ் கடையையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தவர்கள் தங்கள் முன் யாரோ நிற்கவும் பயத்தில் பின்னே நகர்ந்து கொண்டு அவனை அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.
அவர்களது அச்சத்தை கண்டு அவர்களை பார்த்து மெல்லிய சிரிப்பை சிதறவிட்டான்.
அந்த மெல்லிய சிரிப்பில் பேதையவளின் கன்னிமனம் சிக்கித்தவிக்க அதிலிருந்து மீள விரும்பாமலும் மனதில் திடீரென ஏற்பட்ட விசித்திர உணர்வு என்ன வகை என புரியாமலும் அவனையே விழியெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவளின் இதயம் “லாப் டாப்... லாப் டாப்...” என வேகமாக துடிக்க ஆரம்பிக்க பொது இடத்தில் நிற்கின்றோம் எனும் உணர்வு சற்றுமில்லாது தன் கைகளால் நெஞ்சை அழுத்தி பிடித்தாள்.
அதே நேரம் எங்கிருந்தோ வந்த காதல் அம்பு அவளது இதயத்தை பதம் பார்க்க அந்த சிறு இடைவெளியில் நுழைந்த அந்த மாயகண்ணன் அவளது இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான்.
அவனின் சிரிப்பை பார்த்து அவர்களும் அவனை பார்த்து புன்னகைக்க அந்த நேரம் அவனருகில் வந்து நின்றது இரண்டு பென்ஸ் கார்கள்.
அதிலிருந்து இறங்கிய அவனது சீப் செக்யூரிட்டி அவனது கண்ணசைவை புரிந்து கொண்டு அந்த குழந்தைகள் இருவரையும் கொண்டு வரப்பட்ட ஐஸ் கிரீம்களையும் எடுத்து கொண்டு அவர்களை அவனது சிறுவர் காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.
அந்த சின்ன வாண்டுகளுக்கு என்ன புரிந்தது அவனை பார்த்து நன்றி கூறியவர்கள் அவனுக்கு கையாட்டிவிட்டு செல்ல அவனும் தன் காரை எடுத்து கொண்டு சுந்தரபாண்டியன் தங்கியிருக்கும் தங்கள் வீடுகளில் ஒன்றிற்கு சென்றான்.
“என்னம்மா எவ்வளவு நேரமா கூப்பிடுறது... என்ன பட்டப்பகலிலே கனவா... போம்மா... சீக்கிரம் வீடு போய் சேர வழிய பாரு...” என்ற கடைகாரரின் அதட்டலில் தன்னிலை அடைந்தவள் அவரை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை வெளியிட்டவாறு அவரது கையிலிருந்த பார்சலை வாங்கி கொண்டு அவன் நின்ற இடத்தை ஆவலுடன் திரும்பி பார்க்க அந்த இடமோ அவனில்லாமல் வெறிச்சோடி வெறுமையாய் காட்சியளித்தது அவளது காதல் கொண்ட கண்களுக்கு.
சிறிது நேரம் அவன் தென்படுகின்றானா என அங்குமிங்கும் பார்வையை அலைய விட்டவள் அவன் அங்கில்லாது போக தன் சைக்கிளை எடுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி சென்றாள்.
ஜிபிஎஸ் மூலம் தங்கள் வீட்டை அடைந்ததும் வாட்ச்மேன் கதவை திறந்து விட போர்டிகோவில் காரை நிறுத்தி இறங்கியவன் காலிங் பெல்லை அழுத்த அவசரமாய் வந்து கதவை திறந்தார் சுந்தரபாண்டியன்.
“வாங்க மாப்பிள்ளை... நீங்க வருவீங்கன்னு உங்க அம்மா போன் பண்ணி சொல்லிச்சு.... வாங்க உள்ள வாங்க.... உங்க வீடு நான் சொல்லனுமா என்ன...” என முதன்முறையாய் தன் ஒன்று விட்ட தங்கையின் மகனை பார்த்த மகிழ்ச்சியில் வாய் நிறைய சிரிப்புடன் அவனை வரவேற்றவர்...
சமையல் அறையை நோக்கி,.. “தமு மாப்பிள்ளை வந்திட்டார் நீ இன்னும் அங்க என்ன பண்ற.. வா... வா...” என தன் மனைவியை கூக்குரலிட்டு அழைத்தவர் தன் மாப்பிள்ளையுடன் உரையாட துவங்கினார்.
அவரது பேச்சை கேட்டு கொண்டிருந்தவனுக்கு பாதி புரிந்ததென்றால் மீதி சுத்தமாக புரியவில்லை. அவரது கிராமத்து பாசை அவனுக்கு சத்தியமாய் புரியவில்லை... ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவரது பேச்சுக்கெல்லாம் தலையசைத்து கொண்டிருந்தவனை காப்பாற்றியது அவனுக்கு வந்த இம்போர்டன்ட் போன் கால் ஒன்று.
அழைப்பை ஏற்றவன் “ஒன் மினிட்” (one minute) என்றவாறு வெளியே சென்றுவிட்டிருந்தான் அவன்.
சமையலறையிலிருந்து வெளியே வந்த தமயந்தி “மாப்பிள்ளை எங்க கிளம்பிட்டாரா?” என கவலையுடன் கேட்க.... “இல்ல...இல்ல... முக்கியமான போன் வந்திடிச்சு போல வெளிப்பக்கம் போயிருக்காரு வந்திடுவாரு நீ போய் சமையல் வேலையை பாரு” என விரட்டி கொண்டிருக்கும் வேளையில் கலைத்து போன தோற்றத்துடன் உள்ளே நுழைந்தாள் மலர்.
“என்னம்மா.... என்னாச்சு... ஏன் ஒரு மாதியா இருக்க.... உடம்புக்கு ஏதாவது பண்ணுதா..... ஹோஸ்பிடல் போகலாமா” என்று ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு துளைத்து கொண்டிருந்தார் தமயந்தி.
அவரது கவலையை உணர்ந்து கொண்டவள் “அச்சோ...அம்மா...என்னம்மா நீங்க... நான் எத்தன தடவ சொல்லியிருக்கேன் இப்படியெல்லாம் பதற கூடாதுன்னு.... நான் சொல்றத கேக்க கூடாதுன்னு முடிவு பண்ணியிருகீங்களா என்ன...” என்று அதற்கு மேல் அவள் அவரை பதில் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க....
“சரி..சரி... இனிமே அதெல்லாம் பண்ணல... இப்போ சொல்லு ஏன் முகமெல்லாம் வாடி வதங்கி போயிருக்கு?” என்று கவலையுடன் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க....
“அப்பா... பாருங்கப்பா.... இந்த அம்மா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்க...” என்று அலுப்பாய் கூறவும்...
“என்ன தமு இது... இந்த வெயிலுக்குள்ள இருந்து நம்ம பொண்ணே வாடி வதங்கி வந்திருக்கா... நீ என்னடான்னா அவள கேள்விகேட்டிட்டு இருக்க போ... போய்... சீக்கிரம் எதாவது வாய்க்கு ருசியா செஞ்சி கொடு....” என அவரை விரட்ட...
“சரி..சரி... மலரு... வா வந்து முதல்ல காபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழும்பு.... அப்றோம் எல்லாம் சரியாயிடும்” என்றவாறு அவர் சமையலறைக்குள் நுழைய போக அவசரமாய் தன் கையிலிருந்த ஸ்வீட்டை கொடுத்தவள் “என்னப்பா வெளியில ரொம்ப பெரிய காரெல்லாம் நிக்குது... யாரவது வந்திருக்கன்களா என்ன” என தன் அறைக்குள் நுழைந்தவாறே கேட்க....
“ஆமான்டா நம்ம ருத்ராவோட பையன்... அதாண்டா உங்க அத்தையோட பையன் வந்திருக்கார்...” என அவனின் புகழ் பாட துவங்க அதற்கு மேல் அதை கேட்க முடியாமல்
“ஆஆ... போதும் பா உங்க மாப்பிள்ளை புராணம்... நான் போய் கொஞ்ச நேரமாச்சும் தூங்குறேன்.... நீங்க உங்க மாப்பிள்ளை பின்னாலேயே அலையாம வேளாவேளைக்கு சாப்பிட்டு மாத்திரைய போட்டுகோங்க...” என்றாவாறு அறைக்குள் நுழைந்து கதவை மூடும் நேரம் தன் அழைப்பை முடித்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் யுத்கார்ஷ்.
“யாரவது வந்திருக்காங்களா வெளியில சவுண்ட் கேட்டது” என்று அவன் சாதாரணமாய் கேட்க...
“ஆமா மாப்பிள்ளை.. என் பொண்ணுதான்... வெளியில போய்ட்டு வந்திருக்கா... வெயில்ல இருந்து வந்ததில அலுப்பா இருக்குதுன்னு தூங்க போறா”
“ஓஹ்....”
சிறிது நேரம் அவர்களுடன் உரையாடியவன் முக்கியமான வேலை இருப்பாதால் அவசரமாய் அங்கிருந்து வந்திருந்தான்.
தன் மாயகண்ணனின் நினைவில் மூழ்கியாவாறு உறங்கி போனால் மலர்.
மும்பையிலுள்ள புகழ்பெற்ற ஷாப்பிங் காம்ப்ளெக்சில் ஆடைகலுள்ள பிரிவில் இன்னும் இரு நாட்களில் வரவிருக்கும் தங்கள் தோழியின் பிறந்த நாளுக்காக தங்களுக்கு அவளுக்கும் சேர்த்து ஆடைகளை வாங்கி குவித்து கொண்டிருந்தனர் தேவியும் ஸ்ரேயாவும்.
இவர்கள் நால்வரையும் விசித்திர புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தது விதி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.