All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்படிப்பட்ட தன்னை அவள் எப்படி இத்தனை தூரம் பாதிக்கின்றால் எனப் புரியாது குழம்பியவன் நீந்திய களைப்பில் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்.
அப்போதும் அவளது சிரிப்பொலியே அவனது காதுகளில் ஒலித்தது. சற்று நேரத்தின் முன்பு எரிச்சலையும் மன அமைதியையும் ஏற்படுத்திய அந்த சிரிப்பொலி இப்போது அவனுள் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
அதில் அவளை நினைத்துக் கொண்டு தன் தலையை தட்டிகொண்டு ‘க்ரேஷி கேர்ள்’ என வாய்க்குள் முனுமுனுத்தவன் என்றும் இல்லாத வகையில் புன்னகை முகத்துடனே தூக்கத்தில் ஆழ்ந்தான்.
தன் அறையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் ஜொகிந்தர் எனும் ஜொகி.
பின்னே அவளைப் பார்த்ததிலிருந்து அவன் தான் அவனாகவே இல்லையே.
அவளை மீண்டும் எப்போது பார்க்கலாம் எனும் யோசனையில் இருந்தவனை கலைத்தது அவனது நண்பன் ரெயான்ஸின் குரல்.
“இன்னும் தூங்கலையாடா நீ?” என தூக்க கலக்கத்தில் வினவினான்.
அவனோ “இல்லடா என்னமோ ஒரு மாதிரியா இருக்கு...” என்க...
ரெயானோ கவலையுடன் “என்னாச்சு டா... உடம்புக்கு ஏதாவது பண்ணுதா...” என்க....
அதை கேட்டு சிரித்துக் கொண்டே எழுந்தமர்ந்த ரெயான் “என்னடா புதுசு புதுசா பேசுற... ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருச்சா...” என கேலி செய்ய...
அவனோ மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தவன் “காத்து கருப்பில்ல... அழகான மோகினி தான் அடிச்சிருச்சு...” என்றான்.
அதில் அவனோ தன் நண்பனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு “டேய்... யார சொல்ற காலையில பார்த்த அந்த பொண்ணா...” என கூவ...
“ம்ம்... மறுபடியும் எப்போ அவள பார்க்கலாம்னு இருக்குடா??” என கண்களில் கனவு மின்ன கூறியவன் தன் நண்பன் தன்னை முறைக்கவும் ‘என்ன’ எனும் விதமாக புருவத்தை ஸ்டைலாக உயர்த்தினான்.
“மச்சான் கேக்கிறன்னு தப்பா நினைச்சிடாத... நீ அந்த பொண்ண லவ் பண்ண போறியா... இல்ல எல்லா பொண்ணுங்க கூடவும் பழகிற மாதிரி டைம் பாஸ் பண்ண நினைக்கிறாயா” என சாதரணமாய் கேட்டாலும் அதனுள்ளே பல அர்த்தங்கள் பொதிந்திருந்ததை சொன்ன அவனுக்கும் தெரியும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கும் தெரியும்.
“தெரில” என கொஞ்ச நேரம் முழித்தவன் தன் நெஞ்சை (இதயத்தை) தொட்டுக் காட்டி “ஆனா அவ எங்கூட இருந்தா நான் லைப் லாங் சந்தோஷமா இருப்பேன்னு தோணுது இது மாதிரி ஒரு பீலிங் இதுவரைக்கும் எனக்கு வந்தது கிடையாது..... ஒரு வேல இந்த டிப்ரென்ட் பீலிங் தான் காதல்னா எஸ் ஐ போல் இன் லவ் வித் ஹேர்.... அப்பிடின்னு இது சொல்லுது” என சந்தோஷமாக கூறினான். தன் இதயத்தை சுட்டிக் காட்டி.
அவனது இந்த பதிலில் அவனது காதலை உணர்ந்து கொண்டவன் அவனை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி “கங்கிராட்ஸ் டா ஐம் சோ ஹப்பி நவ்” என உற்சாகமாக கூறியவன் “சந்தோஷத்த செலேப்ரேட் பண்ண வேணாமா?” குதுகலத்துடன் கூறி யக்ஷித்தையும் மிகுந்த சிரமத்தின் பின் எழுப்பி அவனிடமும் ஜொகியின் காதலைப் பற்றி கூறி பியர் குடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மூவரும்.
பாவம் அவனுக்கு தெரியவில்லை அவள் இருக்கப் போகும் காலம் கொஞ்ச நாட்களே என்று.
காலம் முழுவதும் அவன் அவளுடன் வாழ நினைத்தான். ஆனால் விதி அவளது ஆயுளை பாதியாக குறைத்து விட்டிருந்தது. அதை அறியும் போது அவன் என்ன ஆவானோ????.......
பெர்சி வில்லேஜில் நடந்த நிகழ்வு தான் அவள் மனக்கண்ணில் ஓடி அவளது தூக்கத்தை தடை செய்தது.
ஜில்மில்லை தேடிவரும் போது தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவனையே அவள் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யாரும் அறியாமல்.
அவன் யாரைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று கூட அவளுக்கு தெரியாது. ஆனால் அவன் தன்னை மட்டுமே இனி பார்க்க வேண்டும் என ஒரு வெறி வந்தது. அவளுக்கு அது ஏனென்று புரியவில்லை.
ஆனால் அவனை தான் மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டும் எனும் பேராசை அவளுள்.
அவனது அழகா?? இல்லை அவனது கம்பீரமா?? இல்லை அவனை பார்த்தவுடனே அவனிடம் தோன்றிய பணக்காரக்களையா?? என எதுவென்று சொல்ல முடியாத ஒன்று அவளை அவனிடம் ஈர்த்துக் கொண்டிருந்தது.
அதனாலேயே அவனை கைநழுவ விடக் கூடாது எனும் முடிவை எடுத்தவள் நிம்மதியாக கண்களை மூடி உறக்கத்தை தழுவினாள்.
தன் அறையில் கண்களை மூடி தூங்க முயற்சித்தும் பின்டோவால் தூங்கவே முடியவில்லை. பூட் கோர்ட்டில் அமர்ந்து அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களை மயக்கும் விழிகளால் பார்வை இட்டுக் கொண்டிருந்தவனே அவளது மனதில் தோன்றி இம்சை செய்து கொண்டிருந்தான்.
இத்தனை நாளாய் யாரைப் பார்த்தும் தோன்றாத காதல் உணர்வு இன்று அவனைப் பார்த்ததும் மெல்லிய செடியாய் அவளது மனதில் துளிர் விட்டிருந்தது.
அது எப்படி ஒருவனை பார்த்தவுடனேயே காதல் வரும் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை.
இத்தனை நாளாய் தனக்கு கணவனாக வருபவன் தன்னை மட்டுமே பார்க்க வேண்டும் அவன் ஸ்ரீராமனாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் இவனோ எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவர்களுடன் பழக நினைக்கும் ரகம் போல் அவனைப் பார்த்தாலே தெரிகின்றது.
பார்க்கும் பெண்களிடம் எல்லாம் நூல் விடுபவன் போல் தோன்றுகின்ற இவன் மேல தனக்கு எப்படி காதல் தோன்றியது என அறியாமல் திகைத்தாள்.
பிரான்சில் பிறந்து வளர்ந்தாலும் அவளுக்கு அவளது நாட்டு கலாச்சாரத்தை சுத்தமாக பிடிக்காது. ஒருவன் எத்தனை பெண்ணுடனும் வாழலாம், ஒருத்தி பல ஆண்களுடன் சுற்றலாம் என்பதெல்லாம் அவள் வெறுக்கும் விடயங்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி என இருக்கும் இந்திய கலாச்சாரம் தான் அவளுள் சிறு வயதில் இருந்தே வேரூன்றி இருந்தது. அதற்கு அவளின் பெற்றோர்கள் கூட ஒரு காரணம்.
அதனால் தான் இத்தனை நாளாய் தன் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். தன்னுடன் வாழ்க்கை முழுவதையும் பகிர்ந்து கொள்பவனுக்கு தான் தன் மனதையும் அதிலுள்ள காதல் மொத்தத்தையும் பரிசளிக்க வேண்டும் என இத்தனை நாளாய் கனவு கண்டு கொண்டிருந்தாள்.
ஆனால் இன்றோ யாரென்றே தெரியாத ஒருவன் சத்தமில்லாமல் தன் மனதில் நுழைந்து காதல் எனும் நுண்ணிய உணர்வை தன் மனதில் பரப்பி விட்டிருக்கின்றான்.
இப்போது என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பியவள் மெல்ல மெல்ல தூக்கத்தில் ஆழ்ந்தாள் அவனை தன் மனதில் சுமந்து கொண்டு.
ஐவரும் ஒவ்வொரு விதமான எண்ணங்களில் மூழ்கி தூக்கத்தை தழுவ கடவுளோ ஐவரையும் பார்த்து விஷமமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
விதியின் கைகளில் நாம் அனைவரும் பொம்மைகளே அது ஆட்டுவிக்கின்றது நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம். பார்க்கலாம் விதி இவர்களின் வாழ்க்கையில் என்ன விதமாக ஆடுகின்றது என்று.
---------------------------------------------
அந்த நடு இரவில் “ஜியாஆஆ....” என அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் ஜில்மில்.
நெஞ்சுக்குழி பயத்தில் ஏறி இறங்கி உடம்பு பதட்டத்தில் தூக்கித் தூக்கி போட உடலிலிருந்து வியர்வை ஆறாய் ஓட மூச்சு விடவும் சிரமமாய் இருக்க வெகு பிராயத்தனம் பட்டு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்...
பதட்டத்தில் தண்ணீர் அவள் மேல் சிந்தியதைக் கூட அறியமுடியாமல் ‘ஜியா’... ‘ஜியா’ என அவளது பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் எதற்காகவோ வெளியே வந்த பின்டோ தற்செயலாக ஜில்மில்லின் அறைக்குள் நுழைந்து விட்டிருந்தவள் அங்கு கட்டிலில் முடி எல்லாம் முகத்தை மறைத்துக் கொண்டிருக்க தலையை குனித்து கொண்டு வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்த ஜில்மில்லை பார்த்து அதிர்ந்து போனாள்..
ஒரு நிமிடம் அவளைப் பார்த்து திகைத்த பின்டோ மறுநிமிடம் அவளருகில் வேகமாக சென்று அவளைப் பிடித்து உலுக்க ‘ஹா’ என்ற அலறலுடன் தன்னிலைக்கு திரும்பினாள் ஜில்மில்.
கட்டிலில் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்து தண்ணீர் அருந்த வைத்த பின்டோ.
அவளின் முதுகை தடிவிக் கொடுத்தபடி “ஏன் இப்பிடி இருக்க ஜில் என்ன ஆச்சு?” என ஆங்கிலத்தில் படபடவென கேட்க
“ப்...பின்..பின்ட்...பின்டோ... அந்த குட்... குட்டி பொண்ணு... இன்னைக்கு மோர்னிங் நா... நான் மீட் பண்ண ஜி.. ஜியாக்கு.. எ.. ஏதோ.. ஆயிடிச்சு... எனக்கு மனசெல்லாம் ஒரே படபடன்னு இரு...இருக்கு..நீ... நீ எங்கூட வா நாம அவ வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என திக்கித்திணறி அழுது கொண்டே கூறினாள்.
அவளை தேற்றிய பின்டோ “அப்பிடியெல்லாம் ஒன்னும் ஆகியிருக்காது சரியா... நீ இப்போ தூங்கு நாம மோர்னிங் அவங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம் ஓகேவா?....” என அவளை சமாதானம் செய்தாள்.
அவளது சமாதான பேச்சைக் கேட்க கூட மறுத்து ஜில்மில் மிகவும் அடம்பிடிக்க “சரி சரி... நாம போகலாம் நான் இப்போ உனக்கு பால் கொண்டு வாறேன் அதை குடிச்சிட்டு ரெடியாகிட்டு போகலாம் ஓகேவா ஜில்...” என அவளை சமாதானப் படுத்தியவள் பிரிட்ஜில் இருந்த பிரெஷ் மில்க்கை சூடாக்கி அதில் தூக்க மாத்திரை ஒன்றை கலந்தவள் அதை ஜில்மில்லிடம் கொடுத்து அவளை பருகவைத்தாள்.
அதைக் குடித்தவள் சிறிது நேரத்தில் “ஜியா... உனக்கு ஒன்னும் ஆகாது நான் இருக்கேன்ல நான் உன்ன பார்த்துப்பேன்” என உளறிக் கொண்டு கண்கள் சொருக உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
அதே நேரம் பாதி தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் அவன்..
எப்போதோ நடந்த சம்பவம் அவனது கனவில் இன்று கொடூரமாக தோன்றியது...
அன்று மட்டும் அவன் சரியான நேரத்திற்கு செல்லவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்...
அதை நினைத்ததும் அவனது நெஞ்சம் தன்னையும் மீறி சற்று அதிர்ந்தாலும் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டான். அந்த சம்பவத்தின் பின் அவன் அவர்களை பார்க்கவே இல்லையே.. அது மட்டுமில்லாமல் அன்றிலிருந்து அவன் சென்னை செல்வதைக் கூட விரும்புவதில்லை.
அவன் இதுவரை சென்னை சென்றதும் இல்லை அதற்கான தேவை அவனுக்கு ஏற்பட்டதுமில்லை. அது தான் முதல் தடவை.... அதுவும் அவனது தாயின் வற்புறுத்தலுக்காகத் தான் அவன் அன்று சென்னை சென்றதே.
தண்ணீரை அருந்தியவன் அந்த நிகழ்வையும் சேர்த்து விழுங்கிக் கொண்டான். இதற்கெல்லாம் பதறிப்போனால் அவன் பிசினஸ் டைகூன் இல்லையே..
ஆனால் திடீரென்று இந்த சம்பவம் ஏன் நினைவு வந்தது என்பதை மட்டும் தான் அவனால் யூகிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருப்பவனால் அதை மற்றும் யூகிக்க முடியாமல் போனது தான் விதியின் சதியோ?
ஒருவேளை அதை யூகித்திருந்தால் பின்னாளில் நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை தடுத்து இருக்கலாமோ என்னவோ......
மனதை ஒரு நிலைப்படுத்தியவன் தன் லப்டொப்பினுள் மூழ்கிப்போனான். தலைக்கு மேல் வேலை இருந்ததால் அதை முடிக்கத் துவங்கினான் அவன் வியாபார உலகின் முடிசூடா இளவரசன்.
வேலை என்று வந்துவிட்டால் அவனுக்கு மற்றதெல்லாம் பின்னுக்கு சென்றுவிடும்.
காலை வேலை.....
காலை ஒன்பது மணியளவில் எழுந்த ஜில்மில்லிற்கு தலைவலி மண்டையை பிளக்க தாங்க முடியாமல் இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்தவள் தன் அருகில் பின்டோ உறங்கிக் கொண்டிருக்கவும் அவளை ஆச்சர்யமாக பார்த்தாள்.
பின் தலைவலி அதிகரித்துக் கொண்டே செல்ல அவளை எழுப்பவும் மனமில்லாது தலையை இன்னமும் அழுத்திப் பிடித்துக் கொண்டு தாங்க முடியாத வலியில் “அம்மாஆ” என வலி தாங்காமல் முனக அந்த சிறு சத்தத்திலும் அடித்துப்பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் பின்டோ.
“என்ன பண்ணுது ஜில்? தலை வலிக்குதா? ஹோஸ்பிடல் போகலாமா? இல்ல டாக்டர் அங்கிளை வர சொல்லவா??” என பதட்டத்துடன் வினவ.
அவளைப் பார்த்து சோபையாக சிரித்தவள் “ஒன்னும் இல்ல ஜஸ்ட் தலைவலி அவ்ளோ தான்... நீ டேப்லெட் எடுத்துக் கொடு போதும்.. இதுகெதுக்கு ஹோஸ்பிடல் , டாக்டர் எல்லாம்” என அவள் மிகச் சாதாரணமாக கேட்க..
அதில் அவளை முறைத்துப் பார்த்த பின்டோ வெளியில் சென்று டாக்டறிற்கு அழைத்து என்ன செய்வது என கேட்டு அதன் பின்பே அவளது கைகளில் டேப்லேட்டை கொடுத்து அதை முழுங்கச் செய்தாள்.
பின்டோ டாக்டர் அங்கிளிற்கு அழைத்து கேட்டிருப்பாள் என்று தெரிந்தும் அதை பற்றி எதுவும் கேட்காமல் அவளை பார்த்து சிரித்த ஜில்மில்லுக்கு அப்போது தான் இரவு நடந்த நிகழ்வுகள் நினைவு வர அதில் அவசரமாய் எழுந்தவளை தாங்கிப் பிடித்து அமர வைத்த பின்டோ ‘என்ன’ எனு விதமாய் அவளை நோக்க...
“பினு நான் ஜியாவோட வீட்டிற்கு போய் எதுக்கும் ஒரு தடவ அவள பார்த்திட்டு வாரேனே... அப்போதான் மனசு ரிலாக்ஸ் ஆகும் ஓகேவா?” என்றவள் குளித்து பிரெஷ்ஷாகி கருப்பு நிற பேண்டும் புல்ச்லிவ் சிகப்பு நிற டிஷேர்ட்டும் கருப்பு நிற ஷோலை கழுத்தில் சுற்றிக் கொண்டு பூட்ஸையும் ஸ்வெட்டரையும் அணிந்தவள் அவசர அவசரமாக பின்டோவை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ‘பாய்’ என்ற கூவலுடன் அங்கிருந்த விசிடிங் கார்டை எடுத்தவள் அந்த வீட்டை நோக்கிச் சென்றாள்.
காலையில் எழுந்ததில் இருந்து எப்போதடா தன்னவளை பார்க்கலாம் என தவித்துக் கொண்டிருந்தான் ஜொகி.
யக்ஷித் கூட அவனை ஒட்டித் தள்ளிவிட்டான்.
“என்ன மச்சான் இப்போ தானே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண அதுக்குள்ள இவ்ளோ கலாட்டா பண்ணா எப்படி மச்சான்”
அவனோ நான் அடங்குவேனா என்று மறுபடியும் எப்போது தன்னவளை பார்ப்போம் என தவித்துக் கொண்டு நண்பர்களையும் கடுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
ரெயான்சிற்கு தன் நண்பனை நினைத்து பெருமிதமாக இருந்தது. முன்பெல்லாம் பெண்களைப் பார்த்தால் அவர்களுடன் சில நாட்களை கழித்து விட்டு அவர்களை மறந்தும் விடுவான். எல்லை மீறியது கிடையாது. அப்படி ஏதாவது நடந்தால் அவனின் அன்னை அவனை தலை கீழாய் தொங்க விட்டு விடுவார்.
பணம் படைத்தவர்களது வேலையே இது தானே, நாளுக்கொரு ஒரு உடை என்பது போல நாளுக்கொரு பெண்.
ஆனால் எந்த பெண்ணிற்காகவும் அவன் இப்படி தவித்ததே இல்லை. முதன் முதலாய் ஒரு பெண்ணை பார்த்து இந்தளவு மாறி இருக்கின்றான் என்றால் அவளுடன் இவன் வாழும் வாழ்க்கை எந்தளவு வண்ணமயமாய் இருக்கும் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அந்தப் பெண் என்ன பதில் சொல்வாள். ஒருவேளை இவனை பிடிக்கவில்லை என்றால் இவனால் அதை தாங்க முடியுமா? என்ன செய்வது முதலில் தான் அவளைப் பார்த்து இவனது காதலைப் பற்றி சொல்வோமா? இல்லை...இல்லை... அவனது காதல் அவன்தான் சொல்ல வேண்டும்.
ஒருவேளை இவனை பிடிக்கவில்லை என்றுவிட்டால்.... ‘ம்ஹ்’ என தலையை உலுக்கியவன் இவனை யாருக்காவது பிடிக்காமல் போகுமா என்ன என எண்ணிக் கொண்டு ஜொகியை திரும்பிப் பார்த்தான்.
நீளமாய் வளர்ந்திருந்த முடியும் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் இளம் நீல நிறக் கண்களும் அதை மறைக்கும் விதமாய் அவன் எப்போதும் அணியும் செயின்ட் லாரன்ட் சன்க்ளாசும் கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும் முறுக்கேறிய ஜிம் பாடியும் ஆறடி உயரமும் என செதுக்கி வைத்த சிற்பம் போல் இருப்பவனை அந்த பெண் எப்படி நிராகரிப்பால் என தனக்குள் கூறிக் கொண்டவன் ஜொகியை பார்த்து புன்னகைத்தான்.
அவனோ இவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் தன்னவளை எங்கு சென்று காணலாம் என தீவிர யோசனையில் இருந்தவன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு அவளைத் தேடிச்சென்றான்.
-------------------------------------------------
அந்த மிகப் பெரிய மாளிகையில் இருந்து வெளியே வந்து தன் bugatti veyron ஸ்போர்ட்ஸ் காரை வெளியே எடுத்து அதிலேறி வேகமாக பறந்தான் அவன்.
“Sajde mein yuhin jhukta hoon
Tum pe aake hi rukta hoon
Kya yeh sabko hota hai
Humko kya lena hai sab se
Tum se hi sab baathe ab se”
என்ற ஹிந்தி பாடல் ஒலிக்க அதனுடன் சேர்ந்து தானும் படிய படி தன் அபார்ட்மென்ட் நோக்கி காரை செலுத்தினான்.
கருப்பு நிற பேண்டும் நீல நிற டி-ஷேர்டும் அணிந்திருந்தான். அந்த போர்மல் ட்ரஸிலும் கூட கம்பீரமாய் கவர்ச்சியாய் இருந்தான் அவன். ஆறரை அடிக்கும் சற்று மேலாக ஆண்களே அண்ணார்ந்து பார்க்கும் உயரமும் அவன் பிறந்த மண்ணுக்குரிய செக்கச்செவெலென்ற நிறமும் என ஆண்களே அவனைப் பார்த்தால் பொறாமை கொள்ளும் படியான தோற்றத்திற்கு சொந்தக்காரன்.
ஆண்களே அப்படியென்றால் பெண்கள் எம்மாத்திரம்? அவனது அழகில் அவன் காலடியிலேயே விழுந்துவிடுவார்கள். அழகு, பணம், திமிர், கர்வம், தலைக்கனம், அகம்பாவம் என ஒருசேர பல குணங்களைக் கொண்ட அபூர்வ பிறவி அவன்.
அனைவரும் தனக்கு தலைவணங்க வேண்டும் எனும் அகந்தை கொண்டவன்.
அப்படிப்பட்டவனின் அகந்தையையும் ஆணவத்தையும் இன்னும் சில நொடிகளில் தகர்த்தெறிய ஒருத்தி வந்து கொண்டிருக்கின்றாள் என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
இவனின் காரை கண்டதும் அங்கிருந்த வாயிற்கதவு விரிய திறக்கப்பட தன் காரை போய் பார்க் செய்தவன் தன் ரூம் அருகில் வந்து ரிமோட் சிஸ்டம் கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.
முடிக்கப்பட வேண்டிய சில முக்கியமான வேலைகள் இருந்ததால் ஒரு கையில் லப்டோப்பும் மறு கையில் போனும் என பிஸியாக இருந்தவனை “ouvre la porte s’il te plait” (please open the door) கலைத்தது காலிங் பெல் சத்தம்.
‘யார் இந்த நேரத்தில்’ என யோசித்தவன் நேரத்தைப் பார்க்க நேரம் 1௦.25 மணி எனக் காட்டியது.
இகழ்ச்சியாய் உதட்டை சுளித்தவன் ‘ஒஹ் தான் அனுப்ப சொல்லி இருந்த பெண் வந்திருக்கின்றால் போல’ கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்தவன் “எஸ் கமின்” என்க... அவனின் கம்பீரமான குரலுடன் கதவும் தானாக திறந்து கொண்டது.
தானாக திறந்த கொண்ட கதவை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வலது காலை முதலில் வைத்து மெதுவாக அடியெடுத்து அந்த வீட்டினுள் நுழைந்தாள் ஜில்மில்.
கடளவு மகிழ்ச்சியுடன் ஜியாவை பார்க்க போகிறோம் எனும் சந்தோசத்துடனும் வலது கால் வைத்து அந்த வீட்டினுள் நுழைந்தவள் அதைவிட மலையளவு கோபத்துடனும் அளவு கடந்த வெறுப்புடனும் கடுகடுத்த முகத்துடனும் வெளியில் வந்தாள்.
தன் முன் வைக்கப்பட்டிருந்த பர்கரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜில்மில்.
மனம் பற்ற வைத்த நெருப்பாய் தகதகவென
எரிந்து கொண்டிருக்க “அவன” என அவனை நினைத்துப் பல்லைக் கடித்தாள்.
சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வு மனதில் படமாய் ஓடியது.
ஜியாவின் வீட்டிற்கு செல்வதற்காக ஆயத்தமாகி ஜெஸி தந்த விசிடிங் கார்டை தேடிக்கொண்டிருக்க அதுவோ அவள் கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது.
மனதுக்குள் சலித்தவாறு “பின்னு நேற்று ஜெஸி தந்த விசிடிங் கார்ட எங்கயாவது பார்த்தியா”.....
கிட்செனில் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த பின்டோவோ “ஸ்ரேயோட கபோர்ட்ல நிறைய கார்ட்ஸ் இருந்தது அதில இருக்குமோ என்னவோ போய் பாரு”.....
“ம்ம்... சரி” என்றவாறு தன் அறைக்குள் நுழைந்து ஸ்ரேயை தேடினாள்.
பாத்ரூமிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க ‘ஓஹ் வாஷ் பண்றா போல’ என எண்ணியவள் அவளது கபோர்டை திறந்து அதற்குள் தேடினாள்.
அதற்குள் பல விசிடிங் கார்ட்ஸ் இருக்கவும் எதுவென்று தெரியாமல் குழம்பியவள் ‘ஜெஸி தந்த கார்டு என்ன கலர்.. ப்ளாக் கலரா... ம் ஆமா ப்ளாக் கலரே தான்’ என முணுமுணுத்துக் கொண்டு அங்கிருந்த ப்ளாக் கலர் கார்டை எடுத்து அதை திருப்பி திருப்பி பார்த்தவாறு அந்த வீட்டை நோக்கி சென்றாள்.
சுலபமாகவே அந்த அபார்ட்மென்டை கண்டுகொண்டவள் அங்கு சென்று காலிங் பெல்லை அழுத்த “எஸ் கமின்” என்ற கம்பீரமான குரலுடன் கதவு திறந்து கொள்ளவும் உள்ளுக்குள் அதை எண்ணி சிரித்துக் கொண்டே அந்த வீட்டினுள் நுழைந்தாள்.
வரவேற்பரையில் யாரும் இல்லாமல் போகவே “ஹலோ..” என அழைக்க அப்போதும் யாரும் வராமலிருக்கவும் “யாராவது இருக்கீங்களா” என ஆங்கிலத்தில் படபடவென்று கேட்க....
அப்போது அருகில் கேட்ட “ஐயம் ஹியர்” என்ற கணீர் குரலில் கவரப்பட்டு முகத்தில் காந்த சிரிப்புடன் குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவள் அங்கிருந்தவனைப் பார்த்து சற்று அசந்துதான் போனால்.
அவனை அண்ணார்ந்து பார்த்து “ஹாய்...ஐயம் டெஸா” என அவனை நோக்கி தன் கையை நீட்ட அவனோ அதை அலட்சியப்படுத்தியவாறு மேலிருந்து கீழாக அவளை அளவிடத் தொடங்கினான்.
தான் நீட்டிய கையை அவன் அலட்சியம் செய்யவும் தன் கையை மடக்கி சென்னை லோக்கல் பாஷையில் அவனை உள்ளுக்குள் திட்டி தீர்த்தவள் அதை வெளிக்காட்டாமல் அவனைப் பார்த்து லேசாக புன்னகைக்க அவனோ அவளை புரியாத பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்தான்.
அவளது மனசாட்சியோ ‘சே..சே.. பார்க்க ஹிந்தி பட ஹீரோவாட்டம் இருக்கான் இவனுக்கு போய் காது கேக்காம இருக்குமா வர வர நீ சரியான லூசாகிட்ட ஜில்லு’
‘நான் ஒன்னும் லூஸு கிடையாது.... ஆனா நீ வரவர எனக்கு சபோர்டே பண்ண மாட்டேங்கிற... நீ உன் மனசில என்னதான் நினைச்சிட்டு இருக்க? நீ இப்டியே பண்ணேன்னா அப்றோம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் இனிமே நீ கொஞ்சம் அடக்கியே வாசி என்ன புரிஞ்சதா’
இப்படியே அவள் மனசாட்சியுடன் வாதம் புரிந்து கொண்டிருக்க கிட்டத்தட்ட அவள் வந்து பத்து நிமிடத்திற்கும் மேலாகி இருந்தது.
ஆனால் அவனோ சற்றும் அசையாது வைத்த கண் வாங்காமல் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பார்வையை பார்த்தவள் ‘யாரு இவன் எதுக்கு இப்போ என்ன வெறிச்சு வெறிச்சு பார்த்திட்டு இருக்கான்...’
அவன் முகத்திற்கு நேராக தன் கைகளை அசைத்தவள் அப்போதும் அவன் அதே பார்வையுடன் நின்றிருக்கவும்
‘இது வேலைக்காகாது... இவன என்ன பண்ணலாம்’ என தீவிர யோசனையில் மூழ்கிப் போனவள் மேல் க்ளாஸில் இருந்த நீரை விசிறியவன் “நீ போட்டிருக்கிற ட்ரெஸ் எனக்கு சுத்தமா பிடிக்கல போய் சேஞ் பண்ணிட்டு வா” என அதிகாரக் குரலில் கூற...
அதைக் கேட்டு அவளுக்கு சுறுசுறுவென்று கோபம் மண்டைக்குள் ஏறி தகதிமிதா என தாளம் போட ‘எவ்வளவு தைரியம் இவனுக்கு... என்மேல தண்ணிய ஊத்திட்டு ட்ரெஸ் பிடிக்கல சேஞ் பண்ணிட்டு வான்னு ரொம்ப ஈஸியா சொல்றான் இவன..’ என பல்லை நறநறத்தவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நான் சொன்னது காதில விழுந்திச்சா இல்லையா போ.. போய் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வா உனக்கு 5 மினிட்ஸ் தன் டைம் தாரேன் அதுக்குள்ள ரெடியாகி வந்திடு இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
‘ஐ சேம் டயலாக்...உனக்கே நீ என்ன பண்ண போறேன்னு தெரியல அப்றோம் எதுக்குடா தேவையில்லாம அத யோசிக்கிற.... அதுவுயில்லாம இவன் மனசில என்னதான் நினச்சிட்டு இருக்கான் முன்னபின்ன பார்க்காத பொண்ணுக்கிட்ட இப்படித்தான் லூஸு மாதிரி பிஹேவ் பண்றதா... ஒருவேல உண்மையிலேயே லூஸா இருப்பானோ... ஐயையோ இப்போ என்ன பண்ணலாம்? நான் வேற எக்குத்தப்பா வந்து வாலன்றியா மாட்டிக்கிட்டேன் போலவே இப்போ என்ன பண்றது’ என மீண்டும் தீவிர யோசனைக்கு செல்ல
“உன்கிட்ட தான் சொல்றேன் காது கேக்காதா?”
‘அட சாரு கூட காது கேக்காதத பத்தியெல்லாம் பேசுறாரு.... ஹலோ பாஸ் இது நான் சொல்லியிருக்க வேண்டிய டயலாக் பட் என்னோட போதாத காலம் நீ முந்திக்கிட்ட’
“உனக்கான டைம் முடியப்போகுது சோ நானே உனக்கு ட்ரெஸ்ஸ சேஞ் பண்ணி விடலாம்னு இருக்கேன்......” என அலட்சியமாக கூறியவன் அவள் அதிர்ந்து போய் நோக்கவும் அவளைப் பார்த்து விஷமமாய் சிரித்தவன் “ஓஹ் ஒருவேல நீ கூட அதுக்காக தான் வெயிட் பண்ணியா? சரி வா நானே உனக்கு ட்ரெஸ் சேஞ் பண்ணி விட்டுறேன்....” என அவளருகில் நெருங்க..
‘omg!! என்ன சொல்றான் இவன் எனக்கு ட்ரெஸ் சேஞ் பண்ணி விடப்போறானா??? அது இந்த ஜென்மத்தில நடக்காதுடா லூஸுப் பயலே.... என்ன இவன் பொண்ணுங்க கிட்ட இப்படித்தான் பிஹேவ் பண்ணுவானோ....சரியான சைகோவா இருப்பான் போலவே’ இத்தனை நேரமாக அவன் பேசிக் கொண்டிருந்ததெற்கெல்லாம் மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல்...
“ஏய் ஏய்.... நிறுத்து.... நிறுத்து.... யார்யா நீ? எதுக்குயா என்மேல தண்ணீ ஊத்தின? நான் எதுக்குயா ட்ரெஸ் சேஞ் பண்ணனும்? அதுவும் நீ எனக்கு ட்ரெஸ் சேஞ் பண்ணி விடப்போறியா லூஸாயா நீ? ஹோஸ்பிடல்ல இருந்து தப்பிச்சுகிப்பிச்சு வந்திட்டயா?”
“அடேய் உன்னைத்தான்யா கேக்கிறேன் வாயில என்ன சிக்கன் பீஸ்சையா வச்சிருக்க.... வாய தொறந்து எதையாவது சொல்லித்தொலையேன்டா.... பிடிச்சி வெச்ச பிள்ளையாராட்டம் ஒண்ணுமே தெரியாத மாதிரி இப்போ எதுக்கு இந்த லுக்கு விர்ர” என ஆத்திரத்தில் தமிழில் காச்சுமூச்சென்று கத்தியவளை உறுத்துப் பார்த்துக் கொண்டு நெருங்கினான் அவன்.
அவன் முன்னால் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகின்றானோ என்ற பயத்தில் வேகமாக பின்னால் நகர்ந்தவளை வேக எட்டுடன் அணுகியவன் கோபத்தில் அவளை உறுத்து பார்த்துக் கொண்டு அவளைப் பிடித்து தள்ள ‘ஐயோ முருகா ப்ளீஸ் சேவ் மீ’ என மனதுக்குள் ஒரு அவசர வேண்டுதலுடனும் அவன் தள்ளிய வேகத்தில் ‘ஆ’ என்ற அலறலுடனும் அங்கிருந்த கட்டிலில் போய் விழுந்தாள்.
அவன் தள்ளியதும் தலை சுற்றத் துவங்க அதை அவனறியாமல் மறைத்தவள் அவனையே மனதுக்குள் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கட்டிலின் அருகில் சென்று அவள் தலை அருகில் தன் கால்களை ஊன்றியவன் அவளது முடியை கொத்தாக பற்றி அவள் முகத்தை தன் முகத்தருகில் இழுத்து வலியில் கசங்கிய அவளது முகத்தை பார்த்து கேலியாய் சிரித்தான்.
“நான் சொன்னா அத கேள்வியே கேட்காம அப்படியே செய்றது தான் எல்லாருக்கும் நல்லது... ஏன்னா அது தான் எனக்கு பிடிக்கும்.... என்ன புரிஞ்சதா? இன்னொரு தடவ என் முன்னால நின்னு கேள்வி கேட்ட அது தான் உன்னோட கடைசி நாள் ஞாபகம் வச்சுக்கோ” என தமிழில் அழுத்தமாய் கூற அவனது தமிழில் ஆச்சர்யமானவள் அவன் முகத்தைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்தவள் அவன் தன்னை எழுப்பி நிற்பாட்டவும் அதற்காகவே காத்திருந்தவள் போல அவன் கன்னத்தில் தன் கைகளை இடியென இறக்கினாள்.
“ஏய்” என கர்ச்சித்தவன் அவளை சுவற்றில் சாய்த்து அவள் கழுத்தை தன் கைகளால் நெறித்தான். அவன் கழுத்தை நெறித்ததும் அவனது கையை விலக்க முயற்சித்தவள் முடியாமல் போகவே அவனது நெஞ்சில் பலம் கொண்ட மட்டும் குத்தினாள்.
அதுவும் பலனில்லாமல் போகவே கண்கள் கலங்க உதடுதுடிக்க இருமலை அடக்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ மெதுவாக தன் கைகளை கீழிறக்கி அவளது கழுத்தை தன்னை அறியாமல் தடவிவிடத் துவங்கினான் அவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு.
அவன் கழுத்தை தடவி விடவும் அவனை வெறுப்புடன் பார்த்தவள் அவன் கைகளை தட்டி விட்டு தன் கழுத்தை தடவிக் கொண்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று தொனடைக்குள் சரித்து தொண்டையை சரி செய்தவள்
“இதோ பாரு மிஸ்டர்..”
“யுத்கார்ஷ்” என அவன் தன் பெயரை ஆணவத்துடன் கூற...
‘ரொம்ப மொக்கையா இருக்கு’ என மனதினுள் எண்ணியவள்.....
“உன் பெயரு என்ன கார்ஷா இருந்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை சோ அத விட்டுத் தள்ளிட்டு நீ இப்போ நம்ம மேட்டருக்கு வா...” என்றவள் அவன் முறைக்கவும் ஓரடி பின்னால் நகர்ந்து முழுயுயரத்திற்கு நிமிர்ந்து நின்றவள் நக்கல் குரலில்....
“இதோ பாருடா தம்பி நீ யார்னு கூட எனக்கு தெரியாது நான் யார்னும் உனக்கு தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்... நான் இங்க வந்ததே என்னோட பிரெண்ட மீட் பண்றதுக்கு தான் பட் அதுல தான் ஏதோ மிஸ் அன்டெர்ஸ்ட்டேன்டிங் நடந்திருக்கும் போல... என்ன நான் சொல்றது உன் மரமண்டைக்கு புரிஞ்சதா....?” திமிராய் கூறியவள்
“அதுமட்டுமில்லாம நான் இங்க வந்ததும் முதல்ல என்ன பண்ணேன்? என்ன நானே இன்ட்ரோ பண்ணிக்கிட்டேன் ஆமாவா? இல்லையா? ஆனா நீ என்ன பண்ண கொஞ்ச நேரம் என்னை வெறிச்சு வெறிச்சு பார்த்திட்டு என்மேல தண்ணீய ஊத்திட்ட.... அதுக்கு நான் என்ன பண்ணேன்? ம்ஹ் எதுவுமே சொல்லாம கப்புன்னு வாய மூடிட்டு நின்னேனா இல்லையா? அப்றோம் நீ என்ன பண்ண சம்மந்தமே இல்லாம ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வான்ன... am I right ? என்றவள் சிறிது இடைவெளிவிட்டு மீண்டும்தொடர்ந்தாள்.
“பட் அதுக்கு நான் என்ன பண்ணேன் அப்பவும் ஒண்ணுமே சொல்லாம கம்முன்னு தான் நின்னிட்டிருந்தேன் என்ன நான் சொல்றது... ஆனா நீ என்ன பண்ண? ம்ஹ் என்ன பிடிச்சு கட்டில்ல தள்ளிவிட்ட அதுக்கு நான் என்ன பண்ணேன் இவ்ளோ நேரமா நீ என்ன வச்சு செஞ்சதுக்கு எல்லாம் சேர்த்து உன் கன்னத்திலே பளார்ன்னு ஒன்னு விட்டேன்.... நீ என்ன இரிடேட் பண்ண பதிலுக்கு கோபத்தில நானும் உன்ன அறைஞ்சிட்டேன் நீ பண்ணதுக்கும் நான் பண்ணதுக்கும் சரியா போச்சு சோ இத்தோட இத விட்டிடலாம்” என தன் நீண்ட உரையை முடித்தாள் மூச்சு வாங்கிக் கொண்டு....
அவனின் கோபத்திற்கு என்றுமே அளவுகோல் கிடையாது, யாருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதைக் கூட யாராலும் யூகிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; அவன் கோபத்திற்கு ஆளாகுபவர்களுக்கு அவனது அகராதியில் மரணத்திற்கான நாள் குறிக்கப்பட்டுவிடும்.
சிலரிடமிருந்து உயிரை தவிர மற்ற எல்லாவற்றையும் பறித்து விட்டு ‘நாம் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறோம்’ என அவர்களை ஏங்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களது உயிரை காவு வாங்கி விடுவான்.
வருடக்கணக்காக காத்திருக்க இவளோ சாதாரணமாக அவனுடன் பேசிக் கொண்டிருக்கின்றாள் அதுவும்
மரியாதையிலாமல். அப்படிப் பேசுபவளிடம் எந்தளவு கோவப்பட்டானோ அதேயளவு அவளது தைரியத்தை ரசிக்கவும் செய்தான்.
அவளைப் பார்த்து முறைத்தவன் அவளது கழுத்துவளைவில் முகம் புதைப்பவன் போல குனிந்து அவளது காதில் தன் இதழ்கள் உரச “உன்னோட இந்த திமிர் எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கல்ல... அதுமட்டுமில்லாம நான் யார்னு தெரியாம என்கிட்டே ரொம்பவே பேசிட்ட” என சாதாரண குரலில் ஆரம்பித்தவன் பின் அடக்கப்பட்ட கோபக் குரலில்.....
“இதோட பின் விளைவுகள் ரொம்பவே பயங்கரமா இருக்கும் உன்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாதயளவுக்கு.... இனி உன்னோட ஒவ்வொரு மூவும் நான் சொல்ற படிதான் நடக்கும் சீ யு சூன் அண்ட் கெட் அவுட் ப்ராம் மை ஹவுஸ்” என வாயிலை நோக்கி கைகாட்டினான்.
அவனது பேச்சும் அதிலிருந்த திமிரும் அவளை உசுப்பி விட எரிச்சலில் அவன் இதழ் பட்ட தன் காதை தேய்த்துவிட்டவாறு “நீ யாரா இருந்தாலும் எனக்கு எந்த கவலையுமில்லை ஏன் நீ அம்பானி பேரனா இருந்தாக்கூட ஐ டோன்ட் கேர் அபௌட் தட் அன்டெர்ஸ்டான்ட் (I don’t care about that understand) அண்ட் நீ என்ன பண்ணனும்னு நினைக்கிறீயோ அத தாராளமா பண்ணு எனக்கு அதில எந்த அப்ஜெக்சனும் இல்ல...
“அப்றோம் இன்னொரு முக்கியமான விஷயம் நீ என்ன பண்றதா இருந்தாலும் இனிமேல் என் கண்முன்னாடி வராம பண்ணு ஓகே.... இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு தான் உனக்கே நல்லா தெரியுமே.....” என்றவள் அவனை அலட்சியமாக பார்த்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளிய வந்தவள் நேரே சென்றது பூட் கோர்ட்டிற்கு தான்...
இத்தனை நேரம் அவனுடன் தொண்டை தண்ணீர் வற்ற பெரிய பெரிய பேச்செல்லாம் பேசிவிட்டு வந்ததால் பசி வயிற்றை கிள்ள பர்கரை ஆர்டர் செய்தாள். ஆனால் அவளால் அதை உண்ணத்தான் முடியவில்லை. அவனது நினைவில் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாளாய் முகம் காண துடித்தவர்கள் மனதுக்குள்ளே ஒருவரை ஒருவர் ரசித்தவர்கள் இன்று முகம் பார்த்து பேசிய பின் ஒருவரின் மேல் ஒருவர் அளவு கடந்த கோபமும் வெறுப்பும் கொள்ள துவங்கினர். இதுவும் விதியின் திருவிளையாடலோ??
சிறிது நேரம் தன் முன்னால் இருந்த பர்கரை வெறித்துப் பார்த்தவள் அதற்கு மேல் பசி தாங்க முடியாது அந்த அவனின் நினைவை ஒதுக்கித் தள்ளி விட்டு பர்கரை ஒரு கட்டு கட்ட துவங்கினாள். அவளுக்குத்தான் பசி வந்தால் பத்தும் பறந்துவிடுமே.
ஆனால் அதை உண்டும் பசியடங்காது போகவே மில்க்க்ஷேக் ஒன்றை ஆர்டர் செய்து அதைப் பருகத் துவங்கியவளைக் கலைத்தது செல்போனில் வந்த அழைப்பு.
இத்தனை நேரமாய் தான் வாசித்துக் கொண்டிருந்த டைரியை மூடி பத்திரப்படுத்தி வைத்தாள் அவள்.
மனம் சொல்லொன்னா வேதனையில் பாரமாய் கனக்க கண்களை மூடி ஆழமூச்செடுத்து தன்னை சமன் படுத்திக்கொண்டவள் அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து ‘தானா இது’ என அதிசயித்தாள் ஆனால் மறுநொடியே மனம் சுருங்க அங்கிருந்த கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
எப்போதும் துருதுருவென அலைபாய்ந்து கொண்டிருக்கும் கயல் போன்ற நயனங்களும் வில்லாய் வளைந்த புருவமும் கூர் நாசியும் அதில் எப்போதும் வீற்றிருக்கும் ஒற்றை கல் மூக்குத்தியும் சிரிக்கும் போது தோன்றி மறையும் ஒரு பக்க கன்னக்குழியும் எந்த வண்ண சாயமும் பூசாமல் இயற்கையிலேயே செக்கச்செவேலென சிவந்திருக்கும் செர்ரி பழத்தை கவிழ்த்தது போலிருக்கும் அதரங்களும் அதன் கீழ் அழகாய் வீற்றிருக்கும் சிறு மச்சமும் என பார்க்க தெய்வீகமான தோற்றத்தில் இருந்தாள் அவள்.
இன்று அவளது திருமணம். மணமகள் உடையில் பாந்தமாய் அழகான மலர்ச்செண்டு போல் இருந்தாள் அவள். ஆனால் அவள் முகத்திலோ எந்தவிதமான மகிழ்ச்சியும் இல்லை, கல்யாணக்களையும் இல்லை. பதிலாக முகத்தில் கவலையே அப்பிக்கிடந்தது.
‘த்ருவ் யுத்கார்ஷ் ராவ் அஹ்லுவாலியா வெட்ஸ் மைலினி மலரழகி’ மலர் அலங்காரங்களின் நடுவில் அழகாய் மின்னியது மணமக்களின் பெயர்கள்.
“செலின் விஷ்வா எங்க ஆளையே காணோம்... தங்கச்சியோட கல்யாணத்தில அவன் இல்லன்னா என்ன அர்த்தம்” என மணப்பெண்ணின் பாட்டி அகிலாண்டேஸ்வரி தேவி படபடக்க...
“இதோ வந்திடுவான் அத்தை யு டோன்ட் வொர்ரி..” என பவ்யமாகவும் தன் மகனை விட்டுக் கொடுக்காமலும் கூறிய செலின் அவரது கையை ஆறுதலாய் பற்றினார்.
அதை கெட்டியாய் பிடித்துக் கொண்ட அகிலாண்டேஸ்வரி தன் கலங்கிய கண்களை யாருமறியாமல் சிமிட்டி சரி செய்தவாறு “எதுக்கும் ஒரு தடவ அவனுக்கு போன் பண்ணிப் பாரு” என கட்டளை இடவும்...
“ம்.. சரி சரி.. சீக்கிரம்...” என அங்கிருந்து நகர்ந்தவர் அந்த வழியாய் வந்த ருத்ர தான்யாவைப் பார்த்து...
“ருத்ரா உன் பையன் ரெடி ஆகிட்டானா இல்ல இன்னைக்கும் ஏதாவது பிசினஸ் டீலிங் பேசிட்டு இருக்கானா” என மணமகனின் தாயிடம் சிரித்துக் கொண்டு வினவ...
“அந்த கவலை தான்மா எனக்கும்....” என இழுத்தவர் “இதோ போய் பார்த்திட்டு வந்திரேன் மா..” என்றவாறு தன் மகனின் அறை நோக்கிச் சென்றார்.
“பின்டோ நீ இன்னும் இங்க என்ன பண்ற போ... போய்... மலர் ரெடி ஆகிட்டாலான்னு பாரு...” என அங்கு ஓரமாய் நின்று கொண்டிருந்தவளை விரட்டியவர்....
அங்கிருந்த வின்னியை நோக்கி “உனக்கு வேற தனியா சொல்லனுமா... போ... போய் பொண்ண அழைச்சிட்டு வா” என அவளையும் விரட்ட...
அவளோ சற்றும் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். அவளருகில் சென்றவர் “என்னாச்சு வின்னி எதுக்கு இப்போ இப்படி நிக்கிற” என அவளை அதட்ட....
அவரின் தோளில் சாய்ந்தவள் “என்னால முடியல பாட்டி....” என கண்கலங்க கூறியவளை அணைவாக அணைத்துக் கொண்ட அகிலாண்டேஸ்வரியினது கண்களும் கலங்கித்தான் போனது.. அதை சடுதியில் மறைத்தவர் ஒரு ராணியின் தோரணையில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்று “எல்லாம் அவன் செயல்” என அவளின் தலையை வருடியவர் “நீ அழுதத பார்த்தா மலர் உடைஞ்சிடுவா... அவ முன்னால அழுதிடாத” என அவள் தோல் தட்டி அனுப்பினார்...
“அய்யரே எல்லாம் தயாராத்தானே இருக்கு... தேவையானது எல்லாம் வந்து சேர்ந்திடிச்சா...”
“எல்லாம் சரியா இருக்கும்மா... உங்க வீட்டுக் கல்யாணம் அதில் ஏதாவது குறை இருந்திடுமா என்ன?” என மரியாதையுடன் கூற அவரைப் பார்த்து புன்னகைத்தவர்...
“ஏதாவது தேவைன்னா சொல்லுங்க கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்றேன்..”
“ஒன்னும் தேவைப்படாதும்மா எல்லாம் சரியா இருக்கு... நீங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் அழைச்சிட்டு வாங்கோ முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு” என பணிவுடன் கூற...
“சரி அய்யரே... இதோ அழைச்சிட்டு வாறேன்”....
“ஆத்யா இங்க வா” சற்று தள்ளி தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தன் மகள் வழி பேத்தியை அழைத்தவர் “போய் மலர கூட்டிட்டு வா”...
“சரி பாட்டி இதோ போறேன்” என்றவள் மணமகள் அறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்..
அவள் ஓடிய ஓட்டத்தை கண்டு சிரித்த அகிலாண்டேஸ்வரி அப்போது தான் அங்கு வந்திறங்கிய விஷ்வாவை அழைத்து “எங்க போன விஷ்வா...? எவ்வளவு நேரமா உன்ன தேடுறது...போ... போய்... சீக்கிரமா மாப்பிள்ளையை அழைச்சிட்டு வா முகூர்த்த நேரம் நெருங்கிடிச்சு...” அவனையும் விரட்ட...
உள்ளுக்குள் வேதனைப் பட்டவன் வெளியில் சிரித்துக் கொண்டு கலங்கிச் சிவந்திருந்த தன் கண்களை கூலிங் க்ளாஸ் அணிந்து மறைத்தவன் மணமகன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கு கண்ணாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் யுத்கார்ஷ். அவனது மனம் கொதிநிலையில் இருந்தது. இதற்கெல்லாம் காரணமானவளை நினைத்து பல்லை நறநறத்தவன் தலையை அழுந்த கோதி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான் அந்த பிசினஸ் டைகூன்.
“த்ருவா இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க... சீக்கிரம் வா அய்யர் அழைச்சிட்டு வர சொல்றார்.... முகூர்த்த நேரம் நெருங்கிடிச்சாம்” என்றவன் அவனை கட்டியணைத்து “கன்க்ராட்ஸ்” என அவன் தொலை தட்டிக் கொடுத்தவாறு “சீக்கிரமா வந்து சேரு” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறினான்...
அவனால் இன்னமும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணமானவளை மனதில் வஞ்சித்தவன் ‘என்கிட்டையே விளையாடிப் பார்த்திட்ட.... உன்ன அவ்ளோ சீக்கிரம் விட மாட்டேன்டி... ஏன்டா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு உன்ன வருத்தப்பட வைக்கல நான் யுத்கார்ஷ் இல்ல...’ என சீற்றத்துடன் சூளுரைத்தவன் அங்கிருந்த க்ளாசை எடுத்து அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியில் எறிந்தவன் கம்பீரமாய் வெளியில் சென்றான்.
மூச்சுவாங்க மலரின் அறைக்குள் நுழைந்த ஆத்யா “பாட்டி அக்காவ சீக்கிரம் அழைச்சிட்டு வர சொன்னாங்க... வின்னிக்கா மலர் அக்காவ கூட்டிட்டு வாங்க நேரம் ஆயிடிச்சு எல்லாரும் வெயிட் பண்றாங்க” என்றவள் வெளியில் ஓடிவிட்டாள்.
“மலர் வா போகலாம்” என அவளை அழைத்த பின்டோவை பார்த்து தன் கண்ணீரை கட்டுப்படுத்தியவள் “நீங்க போங்க நான் இதோ ஒரு நிமிசத்தில வந்திர்றேன்” என அவர்களை அனுபியவள் அங்கிருந்த தேவியின் புகைப்படத்தின் அருகில் சென்று கையெடுத்து கும்பிட்டாள்.
‘தேவிம்மா...’ என உள்ளுக்குள் தேம்பி தேம்பி அழுதவள் “எல்லாம் என்னால தான் தேவிம்மா... அன்னைக்கு நான் உங்ககூட வந்திருக்கணும்... நான் வராம போனதால தானே உங்களுக்கு அப்பிடியெல்லாம் நடந்திடுச்சு..எல்லாம் என்னோட தப்பு தான்.... நான் வாழவே கூடாது.... தேவிம்மா... செத்துப்போய்டலாம் போலிருக்கு....உங்களுக்கு உன்னு தெரியுமா தேவிம்மா...”
“நான் அவர ரொம்ப... ரொம்ப விரும்பிறேன் தேவிம்மா... ஆனா அவருக்கு என்ன கொஞ்சங்கூட பிடிக்கல்ல... அதுவுயில்லாம அவருக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது...” என மனதுக்குள் கதறியவள்...
“தேவிம்மா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா...ஆனா நீங்க உண்மையா மட்டும் தான் சொல்லணும்... நீங்க பொய் சொன்னீங்கன்னா நா... நா...நான்... செத்துப்போய்டுவேன் தேவிம்மா...அவரு... அவருக்கு இப்போ என்ன பிடிக்கல்லன்னாலும் அப்றமா... அப்றமாவது என்ன பிடிக்குமா தேவிம்மா... இல்ல கடைசிவரைக்கும் அவரு என்னோட காதல புரிஞ்சிக்காமலே போய்டுவாரா...” உள்ளுக்குள் கதறியவள் அதற்கு மேல் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாது வெடித்து அழுதாள்.
மலரின் கேவல் சத்தத்தில் அறைக்கு வெளியில் நின்றிருந்த பின்டோவும் வின்னியும் உள்ளே நுழைந்து அவளது தோளைப் பற்றி சமாதானப் படுத்தியவர்கள் அவளது கண்ணீரை துடைத்து முகத்தை சீராக்கி அவளை வெளியில் அழைத்துச் சென்றனர்.
வெளியில் அவளுக்காக காத்திருந்த யுத்கார்ஷ் அவளது கலங்கிய முகத்தைப் பார்த்து உள்ளுக்குள் இறுகிப்போனவன் உடல் விறைக்க முன்னால் நடக்கத் துவங்கினான். அவனுக்குப் பின்னால் அழகுப் பதுமையாய் தலைகுனிந்து நடந்து சென்றாள் மலர்.
ஒரு பக்கம் நிற்கக் கூட இடமில்லாமல் உறவினர்களும் பெரிய பெரிய தொழிலதிபர்களும் வந்த வண்ணம் இருக்க.. மறுபக்கம் பாட்டுக்கச்சேரியும் நடனமும் அரங்கேறிக் கொண்டிருந்தது.
அதையெல்லாம் வெற்றுப் பார்வை பார்த்தவாறு மணமேடையில் அமர்ந்தனர் இருவரும்.
அய்யர் மந்திரங்களை கூறத் துவங்க அவனது உடல் ஒரு நொடி அதிர்ந்து சமன்பட்டது.
“மாப்பிளையும் பொண்ணும் மலையை மாத்திக்கலாம் எழுந்து நில்லுங்க” என அய்யர் கூற சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தால் மலர்.
அவனோ ஒன்றும் பேசாது அவளது கையை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவன் அவளது கழுத்தில் மலையை அணிவிக்க அவளோ செய்வதறியாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்களில் நிறைந்த நீருடன்...
அவளது கலங்கிய கண்களைப் பார்த்து அவன் அவளை உறுத்து விழிக்க உடல் நடுங்க பயத்தில் அவனருகே நகர்ந்து அவன் கழுத்தில் மலையிட எத்தனிக்க அது அவளால் முடியாமல் போய்விட்டது.
பனைமரம் போல வளர்ந்திருந்த அவனை அண்ணார்ந்து பார்த்தவள் அவனது கூர் பார்வை உணர்ந்து சட்டென்று தலைகுனிய அவனோ அவளை தீப்பார்வை பார்த்தவாறு லேசாக தலையை குனிந்தான்.
இதுவரைக்கும் யாரிடமும் தலை வணங்காத அவன் முதல்முறையாய் அவனது சரிபாதிக்காக தலைகுனிந்தான். அவன் தலைகுனிந்து நின்றதைப் பார்த்து பதறிய மலர் சற்றும் தாமதிக்காமல் அவன் கழுத்தில் மாலையை அணிவித்தாள்.
தன்னவன் தன்னிடம் கூட தலை குனிந்து நிற்கக் கூடாது என பதறிய அவளது மனதை உணராமல் தன்னையே தலைகுனிய வைத்துவிட்டாள் என அவள் மீது கோபம் கொண்டவன் அவளை பழிதீர்ப்பதற்கான நாளைக் குறித்துக் கொண்டான்.
“ரெண்டு பேரும் அக்னிய சுத்திவாங்கோ” என மீண்டும் அய்யர் ஆரம்பிக்க... இருவரும் அக்னியை சுற்றி வலம் வந்து தங்களது திருமணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அங்கிருந்த அனைவரும் மணமக்களுக்கு பூத் தூவி தங்களது ஆசிர்வாதத்தை அளித்தனர்.
“இந்தாங்க இப்போ தாலிய கட்டுங்க” என அய்யர் தாலியடங்கிய தட்டை நீட்ட அதை கைகள் நடுங்க வாங்கிக் கொண்டவன் அவளது சங்குக்கழுத்தில் அணிவித்து அவளை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான்.
அவன் தாலியை அணிவித்ததும் ஒரு நொடி அவளது மனக்கண்ணில் தோன்றி மறைந்தாள் அவளது தேவிம்மா... அவளை எண்ணி அவளது கண்ணிலிருந்து ஒற்றை துளி கண்ணீர் அவனது கைகளில் பட்டுச் சிதறியது.
தன் கையில் விழுந்த சிதறிய கண்ணீரைக் கண்டவன் ‘கல்யாணத்தில் விருப்பம் இல்லாதவள் எதுக்காக இப்போ கல்யாணம் பண்ணிக்கணும் அப்படியே இருக்க வேண்டியது தானே...’ என மனதுக்குள் அவளை காய்ச்ச துவங்கினான் யுத்கார்ஷ்.
விருப்பமின்றி தாலிகாட்டினாலும் தாலிகட்டிய மறுநொடி அவனை அறியாமலேயே அவனது மனதுக்குள் மெதுவாய் அடியெடுத்து நுழைய துவங்கி இருந்தாள் மலர். அந்தோ பரிதாபம் அவனால் தான் அதை அறிய முடியாமல் போய்விட்டிருந்தது.
அய்யர் கொடுத்த குங்குமத்தை அவளது உச்சிவகிட்டில் வைத்தவன் அத்துடன் சடங்கு முடிந்தது என்பது போல் எழுந்து நின்றுவிட்டிருந்தான்.
அவளோ என்ன செய்வது என தெரியாமல் பேந்த பேந்த விழித்தபடி அமர்ந்திருக்க அவளை கருணை பார்வை பார்த்த அய்யர் “பெரியாவாளுக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோம்மா” என அவளுக்கு வழிகாட்ட...
‘சரி’ என தலை அசைத்தவாறு எழுந்து நின்றவள் ஒவ்வொருவரினதும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவள் மெதுவாக கணவனின் அருகில் போய் நின்று கொண்டாள்.
அவனோ அவளை சற்றும் கண்டுகொள்ளாது அங்குவந்திருந்த அவனது பிசினஸ் டிரைவர்களுடனும் பெரும் புள்ளிகளிடமும் உரையாடத் துவங்கினான்.
அவன் தன்னை சற்றும் கண்டுகொள்ளாததை எண்ணி உள்ளுக்குள் மருகியவளை அரவணைத்துக் கொண்டார் ருத்ரா. அவருக்குத்தான் தன் மகனைப் பற்றி நன்கு தெரியுமே.
இத்தனை நேரமாக ஒரு ஓரமாய் நின்று தங்களது மகளது திருமணத்தை பார்த்துக் கொண்டிருந்த சுந்தரபாண்டியன் தமயந்தி தம்பதியினர் தங்கள் மகளின் அருகில் வந்து அவளது தலையை ஆதரவாய் வருடிக் கொடுக்க அதைப் பார்த்து கண் கலங்கிய மலர் தாயை கட்டி அணைத்துக் கொண்டாள்.
தமயந்தியும் தன் மகளின் நிலை புரிந்து அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டார். அவரது கண்களும் கலங்கித்தான் போனது. சுந்தரபாண்டியன் தன் மகளின் தலையில் கைவைத்தவாறு நின்றுகொண்டிருந்தார். எதற்கும் கலங்காத அவரது கண்களும் இன்று கலங்கித்தான் போனது.
அந்த உடை மாற்றும் அறையில் தரையில் அமர்ந்திருந்த மலரின் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனால் அதை துடைக்கத்தான் யாருமில்லை.
முதலில் தேவியை நினைத்து அழுதவள் இப்போது தன்னிலை உணர்ந்து அதற்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
யாரை குற்றம் சொல்லுவது... அன்று உடம்பு சரியில்லாத காரணத்தால் தேவியுடன் செல்லாமல் விட்டிருந்த மலரை குற்றம் சொல்வதா... இல்லை இந்த திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து போன தேவியை குற்றம் சொல்வதா? இல்லை தன்னவளின் வார்த்தைக்காக இந்த திருமணத்தை செய்துகொண்ட அவனை குற்றம் சொல்வதா?
இதில் யாருடைய பிழையும் இல்லை எல்லாமே விதியின் திருவிளையாடல். விதி ஒவ்வொருவரினது வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமாய் விளையாடி விட்டிருந்தது.
விதியின் விளையாட்டில் சின்னாபின்னாமாகி போயிருந்தது மலரின் வாழ்க்கை. தான் காதலித்தவனே தன் கணவன் ஆகிவிட்டான் என கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மலர்.
இத்தனை நாளாய் யாரை மனதுக்குள் வைத்து பூஜித்துக் கொண்டிருந்தாளோ இன்று அவனே அவள் ஆசை கணவனாகியிருந்தான். ஆனால் அவனுக்கோ இவள் வேண்டாத மனைவி ஆகிட்டிருந்தாள்.
சற்று நேரத்தின் முன் அவன் பேசிய பேச்சுக்கள் அவள் காதில் ஒலித்து அவளை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றது.
மனம் படபடக்க கைகள் வெடவெடக்க நடை தந்தியடிக்க முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் மலர்.
அவளை அழைத்து வந்த பின்டோவும் வின்னியும் அவளது கரத்தைப் பற்றி அழுத்தி தைரியமளித்து விட்டு கீழே சென்றுவிட்டிருந்தனர்.
மெதுவாக அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மலரை வரவேற்றது சிகரெட் வாசம். அது அவள் நாசியில் நுழைந்த மறு நொடி இறும தொடங்கியவள் ஒரு கையால் மூக்கை மூடிக்கொண்டு மறுகையால் புகையை விலக்கியவாறு மெதுவாக உள்ளே சென்றாள்.
அவனது அறையே ஒரு மாளிகை அளவிற்கு இருந்தது. மிகப்பெரிய ஹாலும் அதனூடே சென்றால் இடது பக்கம் அவனது ரெஸ்ட் ரூமும் வலது பக்கம் அவனது ஜிம் ரூமும் நேரே சென்றால் பிரம்மாண்டமான படுக்கை அறையும் அதற்குள்ளேயே உடைமாற்றும் அறை; பத்துபேர் தாராளமாய் படுக்கக்கூடிய அளவிற்கு படுக்கை; படுக்கையறையின் உள்ளேயே அமைந்திருந்த அதிநவீன அட்டேச் பாத்ரூம்; ஊஞ்சளுடன் கூடிய பெல்கனி என சகல வசதியுடனும் அதிநவீனமாய் காட்சி அளித்தது அவனது அறை.
மூன்றாவது மாடி முழுவதும் அவனது அலுவலக அறை. அவன் அனுமதியின்றி அதற்குள் யாரும் நுழைய முடியாது.
வீட்டை சுற்றி எங்கிலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாதளவு நுட்பமான முறையில்.
வீட்டிற்குள்ளேயே குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து படம் பார்ப்பதற்கு வசதியாக ஹோம் தியடெரும் மாடியேறி இறங்க வேண்டிய அவசியமின்றி லிப்ட் வசதியுடனும் அட்டகாசமாய் இருந்தது அந்த அதிநவீன மாளிகை.
மலர் இந்த வீட்டை பார்த்து முதலில் மனதுக்குள் வியந்தாலும் மறுநொடியே அதை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.
அவளுக்கு எப்போதுமே பெயர், பணம், புகழ் எதிலுமே ஆசை இருந்ததில்லை. அவளது ஆசை எல்லாமே அவளைப் போலவே சின்ன சின்னதாகவே இருந்தது. அதனாலேயே அந்த வீட்டையும் கூட சாதாரணமாகவே பார்த்து வைத்தாள்.
இப்படி எதிலும் ஆசை வைக்காதவள் ஆசைப்படாதவள் முதன்முதலாக ஆசைப்பட்டது அவன் மீது மட்டும் தான். இப்போது அவனும் அவளுக்கு கிடைத்து விட்டிருந்தான் தான் ஆனால் அவள் விரும்பு காதலனாய் அல்ல... அவளை வெறுக்கும் கணவனாய்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.