archanalawrence
Bronze Winner
Semma semma sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super comments nanum ipadi than panni irukanum but varthaya varala ithu than anoda feelings yum shalini mam nan unga Comments sututen hi hi sorryஅழகான தலைப்பு. மாறுபட்ட கதைகளம். கதை ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையும் மிக விறுவிறுப்பாக நகர்ந்தது. ப்ரஜோ , ரியா காதல். இயற்கையோடு வாழும் அவனது வாழ்வு. எதையும் தைரியமாக செய்யும் அவனது ஆளுமை அழகு.
வீரா தடம் மாறி போகையில் வருந்துவதும் பின் அவன் எதிரியின் கைப்பாவையாக மீறி இருப்பதை அறிந்து துடிப்பதும், அவனது உடலில் இருந்து வரும் சத்தம்
உணர்ந்து எதிரிக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக
வீராவிடம் அடி வாங்கும் இடத்தில் எம்மையும் அறியாமல் கண் கலங்கின்றது. கடைசியில் வீரா மனம் மாறும் காட்சி அருமை. வீராவின் உடலில் இருந்த சிப்பை தன் உடலில் பொருந்துவதும் வீராவிடம் தான் அகப்பட்டதாக காட்டி மகேஷின் இடத்திற்கு வந்து தன் நுண்ணறிவால் மகேஷை மடக்கி தனது இனத்தை வைத்து ஆய்வு கூடத்தை அழிப்பதும், மகேஷ் மதம் கொண்ட மிருகங்களை ஏவி விடும் அதனை அழிக்காது அதன் மத தன்மையை அடக்கி கையாளும் போது அவனது உயரிய குணம் விளங்குகின்றது. கடைசியில் கை குலுங்கும் போது தன் சிப்பை மகேஷ் உடம்பில் மாற்றுவது உச்ச கட்ட பரபரப்பு. அதற்கு அவனது அசாத்திய அறிவே காரணம். மகேஷின் இந்த மரணம் அவனது ஈன செயலிற்கான தண்டனையே . ஜாமரை அழித்து அந்த ஆய்வுகூடத்தை அரசாங்கத்தின் பார்வைக்கு தெரிய வைப்பதும். அவரகளின் எண்ணத்தை அறிந்து அதை தடுப்பதற்காக அஙர்களிற்கு கட்டுபட்டு அவ்விடம் செல்வதும் ரியாவை கண்டு கட்டி அணைக்க முடியாமல் கைவிலங்கிடப்பட்டிருப்பதை உணர்ந்து அவளிடம் உனது காதலை காட்டு என சொல்லும் சந்தர்ப்பம் உண்மையில் அருமை.
அவனது ஒவ்வொரு செயலும் அற்புதம்.
அவனது இனத்தின் உரிமைக்காக போராடி அதை இறுதியில் பெற்று எடுப்பதும், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ அவர் காட்டுவதும், விவசாயத்தை முன் நிறுத்தி செய்வது என ஒவ்வொரு செயல்கள் மூலம் மனதில் ஆழமான இடத்தை பிடிக்கின்றான். உங்களது எழுத்து நடையால் ப்ரஜோ என்ற கதாபாத்திரம் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விட்டான். என்ன சொல்ல எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஒரு வித்தியாசமான உலகில் அவர்களோடு நாமும் வாழ்ந்ந உணர்வு. அதற்கு காரணம் உங்களது எழுத்து நடையே. ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். கதை நகரும் விதம் அழகு. கதையின் முடிவு அருமையிலும் அருமை. இனி வரும் காலத்தில் சாப்பாடு விடயம் இப்படி தான் வருமோ என சிந்திக்க வைத்து விட்டீர்கள். அனைத்திலும் செயற்கை தனம் கலப்படம் கலந்து விட்டது . இயற்கையான உணவு பழக்க வழக்கங்கள் இப்பவே அழிய தொடங்கி விட்டது. இக் கருத்தை மிக அழகாக தெளிவு படுத்துயிருக்கின்றீர்கள். அற்புதமான ஒரு நாவல். வாழ்த்துக்கள் சகி