anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதை கேட்டு மேக்னாவின் முகம் சிறுத்து விட ,தங்கையின் முகமாறுதலை கண்ட ஹர்ஷாவின் முகம் யோசனையை தத்து எடுத்து .தங்கை வருந்துவது பிடிக்காதவனாய் பேச்சை திசை திருப்பினான்
"இப்போ எதுக்கு தேவை இல்லாம பொய் சொன்னே டெல்லியில் இருக்கோம் என்று .....உண்மையை சொல்லிட்டு செய்யலாம் தானே ...."என்றான் ஹர்ஷவர்தன் .
"நான் இருக்கும் இடம் தெரிந்தது ஹெலிகாப்டர் வாங்கியாவது என்னை தேடி வந்துடுங்க ரெண்டு லூசுங்களும் .....நல்லது செய்யறேன் என்ற built up உடன் ....வள்ளுவர் கிரண்டப்பாவே " பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்று சொல்லிட்டு போய்ட்டார் ....ரெண்டு நாள் என் குழப்பம் எல்லாம் தீரட்டும் ....நீ காரை எடு ஹர்ஷ் ."என்றாள் மதுரா .
கார் மீண்டும் ஓட ஆரம்பிக்க ,ஜன்னலின் வழியே வெளியே பார்த்தவளுக்கு தூரத்தில் தென்பட்ட திருவேங்கட மலை சிகரம் அவளையும் அறியாமல் கை குவிக்க வைத்தது .கண்கள் தானாக மூட ,மனதினுள் எழுந்து நின்ற வெங்கடேச பெருமாளிடம் தன் கோரிக்கையை வைத்தாள் .
"பாலாஜி !....திருப்பதி வந்தால் வாழ்வில் திருப்பம் வரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ....உன் சன்னிதானத்திற்கு வர முடியவில்லை ...இங்கே இருந்தே உன்னை வணங்குகிறேன் ...என் வாழ்வை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன் ....எந்த திருப்பம் வர வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ அதை ஏற்படுத்து."என்று இவள் வேண்ட ,எங்கிருந்தோ கோயில் மணி ஒலித்து இவள் கேட்ட வரத்தை கொடுக்க இறைவன் சித்தமாகி விட்டான் என்று சொல்லாமல் சொல்லியது .
மீனம்பாக்கத்தில் பிலைட் ஏறியவர்கள் திருப்பதி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து காரில் பயணம் செய்து மாலை ஆறு மணி அளவில் ,ராயலசீமாவில் அமைந்து இருந்த கதிரி ஊரினை வந்து அடைந்தனர் .மெயின் ஏரியாவை தாண்டி ஒரு மஹாப்பெறும் தோப்புக்கு நடுவே இருந்த அந்த பண்ணை வீட்டின் வாயிலின் முன் நின்றது அவர்கள் கார் .
அந்த வீட்டின் முன்புறம் பெரிய துளசி மாடம் அமைக்க பட்டு அதற்கு இரு சுமங்கலி பெண்கள் லட்சுமி அஷ்டகம் சொல்லி பூஜை செய்துகொண்டுஇருந்தனர் .ஒருவர் வயதான சுமங்கலி .பார்க்க அந்த கால நடிகை பண்டரிபாய் போல் இருந்தார் கை எடுத்து கும்பிட தோன்றும் தெய்வீக பெண் வடிவம் .மஞ்சள் பூசிய மங்களகரமான முகம் .இன்னொருவர் நாற்பது வயதில் சுகன்யா போல் இருந்தார் .
ஹர்ஷாவும் ,மேக்னாவும் காரின் அருகேயே நின்று விட ,உள்ளே சென்ற மதுராவின் கண்களுக்கு இவர்கள் தான் முதலில் பட்டர்கள் .வாயில் கதவின் மேல் சாய்ந்து நின்று தன்னை சமாளித்து கொண்ட மதுராவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கி போனது .தாரை தாரையாய் கண்ணீர் வழிய அதற்கு மேல் சமாளிக்க முடியாதவளாய் "பாட்டி "என்று கத்தி கொண்டே ஓடியவள் அந்த பெரியவரின் காலில் போய் விழுந்தாள் .
கண் மூடி பூஜையில் இருந்தவர் காலில் கண்ணீர் பட கண் விழித்து குனிந்து பார்த்தார் .பார்த்தவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது ."ஏழுகுண்டலவாடா ....வெங்கட்ரமணா .....மா பங்காரு தள்ளி ...நீ வச்சிண்டா ...."(என் தங்க மகளே ...நீ வந்துட்டியா )"என்றவர் மதுராவை இழுத்து அணைத்தார் .
உடன் இருந்த அந்த பெண்மணியும் மதுராவை அணைத்து கொள்ள அங்கு ஒரு பாச மழை அருவியாக பாய்ந்து ஓடியது .தன் வயதையும் பொருட்படுத்தாமல் மதுராவை இழுத்து கொண்டு உள்ளே ஓடினார் அந்த முதியவர் .
"(தெலுங்கு பாஷை உரையாடல்கள் தமிழில் கொடுக்க பட்டு உள்ளது .)
"என்னங்க ...யார் வந்து இருக்காங்க பாருங்க ..நம்ம வேண்டுதல் வீண் போகலைங்க .....நம்ம பேத்தி நமக்கு திருப்பி கிடைச்சிட்டாங்க ...டேய் ஸ்ரீநிவாஸா வந்து பாருடா உன் மக திரும்ப வந்துட்டடா "என்று தன் வயதிற்கு மீறிய குரலில் சத்தம் போட்டு கத்தி கொண்டே மதுராவை இழுத்து கொண்டு உள்ளே ஓடினார் srilakshmi
"யாரு ?"என்று கேட்டவாறே எழுந்து வந்தார் அந்த முதியவர் .கை எடுத்து கும்பிட தோன்றும் தெய்வீகம் அவரிடமும் .பார்க்க கே.விஸ்வநாத் போல் இருந்தார் .
தன் கண்ணாடியை துடைத்து மீண்டும் மாட்டி பார்த்தவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .
"வந்துட்டியா மதுரா ....இந்த பாவியின் உயிர் போகும் முன்பே வந்துட்டியா என் குலம் காத்த தெய்வமே ..."என்று மதுராவை அணைத்து கதறினார் அந்த பெரியவர் நரசிம்ம ரெட்டி
" இப்போ மழை பெஞ்சு ஊரே வெள்ளத்தில் மிதந்தது ..நீங்க வேற ஆரம்பிக்காதீங்க ...சுப்பா முடியலை இவங்க பாச மழை ...."என்றவாறு வந்தான் ஹர்ஷா .
அவன் கிண்டல் அடித்தாலும் அவன் கண்களும் கலங்கி தான் இருந்தது .அதற்குள் குரல் கேட்டு மேல் இருந்து வந்தார் நரசிம்ம ரெட்டியின் மகன் முகேஷ் ரெட்டி .ஹர்ஷா .மேக்னாவின் தந்தை ,நரசிம்ம ரெட்டி ,ஸ்ரீலக்ஷ்மியின் மகன் .பிரபல தொழிலதிபர் ,கோடீஸ்வரர் .
"மா தள்ளி ...."என்று ஓடிவந்தவரை சென்று அனைத்து கொண்டாள் மதுரா ,"அப்பா "என்ற கூவலுடன் .
"எப்படிடா ஹர்ஷா இவளை கண்டு பிடித்தே ?"என்றார் அவர் அன்னை கஜலக்ஷ்மி .
"என்ன பண்றது ...எல்லாம் தலைவிதி ....ஒரு சொலவடை சொல்வார்களே ---கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை ஜங்கு ஜங்குன்னு ஆடிட்டு வந்ததா மாதிரி ,இந்த ராட்ஷசியை பார்த்தோம் ....ஆவி தான் வந்துடுச்சோன்னு பயந்தா இந்த பாவி தான் உயிரோடு இருக்கு ."என்றவனை ஓட ஓட விரட்டினாள் மதுரா .
இவன் முன்னாள் ஓட மதுரா துரத்த என்று அந்த வீடு பல வருடங்களுக்கு பின்னர் கலகலத்து இருந்தது .
"மாம்மய்யா கோல்போயினா .....(மாமா தோத்துப்போயிட்டாரு )என்ற ரெண்டு இளம் குரல் கேட்டு மதுரா சடன் பிரேக் போட்டு நின்றாள் .
அவர்கள் ஓடி கொண்டு இருந்த ஹாலின் அருகே இருந்த மாடிப்படியில் நின்று இருந்தனர் ரெட்டையர் இருவர் .இருவரும் ஆறு ஆறு வயது இருக்கலாம் .ஒரு ஆண் ,ஒரு பெண் .பார்ப்பதற்கு மாஸ்டர் ராகவன் ,பேபி நைனிகாவை போலெ இருந்தார்கள் ....
'யார் இந்த ரெண்டு அழகான மான் குட்டிங்க ?அடப்பாவி ஹர்ஷா உன்னை ஆறு வருஷம் பார்க்கலை ஒத்துக்கறேன் ...அதற்குள் டூயல் ரிலீசா ?????சார் செம்ம பாஸ்ட் தான் போல் இருக்கே 'என்று ஹர்ஷாவின் பக்கம் ஒரு கோப லுக் விட்டவள் ,அந்த குழந்தைகளின் அருகே சென்று அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தாள் .
PENANCE WILL CONTINUE....