All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
[Sticky] ஶ்ரீகலாவின் ‘தீயாய் தீண்டும் காதலே!’ - கதை திரி
ஹாய் பிரெண்ட்ஸ்,
கருத்துத் திரி :
ஹாய் பிரெண்ட்ஸ்,
இன்று மாலை கட்டாயம் யூடி உண்டு. முக்கால்வாசி எழுதியாகிவிட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
கதையிலிருந்து சிறு முன்னோட்டம்...
“இப்போ உனக்கு ரெண்டே சாய்ஸ் தான். நான் பெட்டரா? இல்லை அவங்க பெட்டரா?” என்று கேட்டவன் காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டு அவளையே உறுத்து விழித்தான்.
“ரெண்டுமே வேண்டாம். உங்க துப்பாக்கி வச்சு என்னைக் கொன்னுருங்க.” விழிகளில் விழிநீர் வழிய அவள் கதறினாள். அவர்கள் மூவரும் அயோக்கியர்கள் என்றால்... இவனோ அவர்களை விடக் கடைந்தெடுத்த அயோக்கியன் அல்லவா!
“நோ ரதிதேவி, நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே.” என்று சொன்னவனின் விழிகள் இரண்டும் பளபளத்தது.
“என்னைக் கொன்னுருங்க. உங்க எல்லார் கிட்டேயும் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறதுக்கு நான் உயிரை விடுறது மேல்.” அவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள்.
“ப்ச், உன் கிட்ட பேசி வேலையில்லை.” என்று அவளைப் பார்த்து சலிப்பாய் சொன்னவன், “பிரதர்ஸ், இவளை உங்களுக்கே விட்டு கொடுத்துர்றேன். டேக் இட்.” என்றவன் அவர்களிடம் அவளை நோக்கி கை காட்டி விட்டு காரிலிருந்து இறங்கினான்.
“தேங்க்ஸ் அண்ணாத்தே.” மூவரும் நன்றி கூறிக் கொண்டே அவளை நோக்கி வர...
கயவர்களைக் கண்டு பயந்து போன ரதிதேவி கிருஷ்ணபிரசாத்திடம் ஓடி வந்தவள் அவன் முதுகு பின்னே மறைந்து கொண்டாள். அவனோ விலகி நின்று, “இந்தக் கிருஷ்ணபிரசாத் சொன்னால் சொன்னது தான். எடுத்துக்கோங்க.” என்று கூற...
“நான் உங்க கூடவே வர்றேன்.” ரதிதேவி அவனது கரத்தினைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச... அவன் அவளையும், தனது கரத்தினைப் பிடித்திருக்கும் அவளது கரங்களையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“ஏனிந்த திடீர் மாற்றம்?” என்று இரு புருவங்களையும் தூக்கியபடி அவளிடம் கேட்க...
“கற்பு போறதுன்னு முடிவாகி போச்சு. அது தாலி கட்டிய பிறகு உங்களால் போய்த் தொலையட்டும்.” என்று விரக்தியாய் கூறியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. தனது இழிநிலையை எண்ணி அவளுக்கு அத்தனை கழிவிரக்கமாக இருந்தது.
“நீ பத்தினி தெய்வமே தான்.” என்றவனது வார்த்தைகளில் அத்தனை நக்கல். அவள் கண்ணீர் விழிகளோடு அவனை ஏறிட்டு பார்த்தாள்.
ஹாய் பிரெண்ட்ஸ்,
கோடு போட்டு அதைத் தாண்டாது வரைமுறையுடன் வாழ்கிறவள் நம் நாயகி. போடும் கோட்டை கோணலாகப் போடுவதோடு மட்டுமில்லாது அதைத் தாண்டி தான்தோன்றித்தனமாக, வரைமுறையில்லாது வாழ்கிறவன் நம் நாயகன். நாயகன் கிருஷ்ணபிரசாத்தும், நாயகி ரதிதேவியும் உங்களது மனதினை எந்தளவிற்குக் கவர்கிறார்கள் என்பதைக் கதையைப் படித்து உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்தக் கதையில் அதிக ரொமான்ஸ் இருக்கலாம். ரொமான்ஸ் பிடிக்காதவங்க இந்தக் கதையை ஸ்கிப் பண்ணிருங்க. ரொமான்ஸ் பிடிச்சவங்க கதையைப் படித்து உங்களது கருத்துகளைப் பகிர்ந்து ஆதரவு கொடுங்கள். நன்றி...
ஶ்ரீகலாவின் 'தீயாய் தீண்டும் காதலே!'
அத்தியாயம் : 1
அதிகாலை இரண்டு மணி... அந்த நாற்புறவழி சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்த போதும் எங்கும் கும்மிருட்டே காணப்பட்டது. இரவின் நிசப்தத்தைக் கலைக்கும் பொருட்டுப் பாதணிகள் சத்தமும், கொலுசொலியும் ஒருங்கே கேட்டது. பாதணிகளின் சத்தத்திலேயே தெரிந்தது அதை அணிந்திருப்பவர் வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கிறார் என்று... கொலுசொலி அவர் ஒரு பெண் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. மெல்லிய கொலுசொலி கூட 'ஜல்ஜல்' என்று மிகுந்த சத்தத்துடன் ஒலித்துப் பெண்ணவளுக்கு அதிகப் பயத்தைக் கொடுத்தது. அவளின் பின்னே மூன்று தடியர்கள் அவளைத் துரத்தி கொண்டு வந்தனர்.
தூணுக்கு புடவை கட்டினால் கூடக் காமம் தலைக்கேறும் ஆண் வர்க்கம் அவர்கள். இந்தப் பெண்ணவளோ செப்பு சிலை போன்று அதீத அழகுடையவள். அதிலும் அவள் அணிந்திருந்த தாவணி, பாவாடை அவளது அழகினை இன்னமும் அதிகரித்துக் காட்டியது. நீண்ட முடி, அதை நீளமாகச் சடை பின்னி, அதில் பூ வைத்திருந்தாள். பூ காய்ந்து தொங்கியது.
'முருகா, இவங்க கிட்ட இருந்து என்னை எப்படியாவது காப்பாத்திரு . உனக்கு நான் மொட்டை போடுறேன்.' என்று மனதிற்குள் வேண்டியவள் பின்பு நாக்கை கடித்துக் கொண்டு, தனது நீண்ட பின்னலை வருடி பார்த்தவள் பின்பு இருபுறமும் மறுப்பாய் தலையாட்டியபடி, "எங்கப்பன் குமாரசாமிக்கு மொட்டை போடுறேன் முருகா. எப்படியாவது என்னைக் காப்பாத்து." என்று முணுமுணுப்பாய் வேண்டினாள்.
அவளது வேண்டுதல் கடவுளின் காதுகளுக்குச் சென்றடையவில்லையோ! அந்தக் கயவர்கள் அவளை நெருங்கி விட்டனர்.
“முருகா, உனக்குக் கொஞ்சமும் இரக்கம் இல்லையா?” வாய்விட்டு அலறிக் கொண்டே ஓடியவள் எதிரே இருந்த இரும்பு தூண் மீது மோதி நின்றாள். அவள் நின்றதும் பின்னால் வந்து கொண்டிருந்த மூவரும் அப்படியே நின்றனர்.
“யாருடா அது, பாதையில் தூணை வச்சது?” என்று அவள் தூணைத் தடவி பார்த்தாள். அப்போது தான் அது தூணில்லை... ஆள் என்பதை உணர்ந்தாள்.
“சார், சார்... அந்த முருகர் தான் உங்களை இங்கே அனுப்பி வச்சிருக்காரு. நல்ல நேரத்துல இங்கே வந்தீங்க. என்னை இவங்க கிட்டயிருந்து காப்பாத்துங்க சார்.” அவள் அந்த உருவத்திடம் இறைஞ்சுதலாய் வேண்டி நின்றாள்.
“என்னம்மா ரதிதேவி, நீ எங்கே இங்கே? பேய் உலாத்துற நேரத்தில் வாக்கிங்கா?” அந்தச் சிம்மக்குரலினை அடையாளம் கண்டு கொண்ட பெண்ணவள் அச்சத்தில் நெஞ்சில் கையை வைத்தபடி அதிர்ந்து நின்றாள்.
அந்த உருவம் தனது வலக்கை கொண்டு சொடக்கிட... அடுத்த நொடி வாகனத்தின் ஒளி அந்த இடத்தினைப் பகல் போல் ஒளிர செய்தது. குரலை கண்டே அடையாளம் கண்டு குலை நடுங்கி போயிருந்த ரதிதேவிக்கு இப்போது அந்த உருவத்தை நேரில் கண்டதும் மயக்கம் வருவது போலிருந்தது.. அவள் தனது கால்களை நிலத்தில் அழுந்த ஊன்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
கயவர்களிடம் இருந்து தப்பி இப்போது அவள் அரக்கனிடம் அல்லவா மாட்டி கொண்டாள். ஒருபக்கம் சிங்கம், இன்னொரு பக்கம் ஓநாய்கள். இரண்டுக்குமே இரையாக அவள் தேவை. அவள் எந்தப் பக்கம் செல்வாள்? அவளது இதயம் பயத்தில் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது.
ரதிதேவி பயந்து நடுங்கும் அவனது நாமம் கிருஷ்ணபிரசாத். அவள் அத்தனை பயந்து நடுங்கும் அளவிற்கு அவன் ஒன்றும் கொடூரமான தோற்றம் உடையவனல்ல. அழகன், வசீகரன், பெண்கள் மனதினை கொள்ளை கொள்ளும் பேரழகன். எல்லாம் சரி தான். ஆனால் அவனது மனம், குணம் சற்று கோணலே.
இந்தக் கோணலை தான் அவளது தந்தை அவளுக்கு மணமகனாகப் பார்த்து இருக்கிறார். இந்தத் திருமணம் பிடிக்காது தான் அவள் வீட்டை விட்டு ஓடிவந்தது. மனிதர்கள் ஆழ்ந்து உறங்கும் நேரம் அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரை என்று எங்கோ படித்திருந்ததை ஞாபகத்தில் கொண்டு... அதிகாலை இரண்டு மணிக்கு அவள் வீட்டை விட்டு ஓடிவந்து விட்டாள். அடக்க ஒடுக்கமான பெண் வீட்டை விட்டு போவாள் என்று அவளது தந்தைக்குத் தெரியாதே. தெரிந்து இருந்தால் அவளது பாதுகாப்பை பலப்படுத்தி இருந்திருப்பாரோ. வந்த இடத்தில் இந்தப் போதை ஆசாமிகளின் கண்களில் அவள் பட்டு விட்டாள். அதன் விளைவு தான் இந்த ஓட்டப்பந்தயம்.
“கேட்டதுக்குப் பதிலை காணோம்.” அவன் அவளிடம் கேட்டுக் கொண்டே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
“அது வந்து...” அவள் பயத்தில் திக்கி திணறிக் கொண்டு இருந்தாள்.
“அண்ணாத்தே, பொண்ண எங்க கிட்ட ஒப்படைச்சிட்டு நீ பாட்டுக்கு போயிக்கினே இரு. இதை நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம்.” மூவரில் ஒருவன் கூற...
“அந்தப் பத்திரமா பார்த்துக்குற மயி... நாங்க பார்த்துக்க மாட்டோமாக்கும்?” அவன் அலட்சியமாகச் சிகரெட் புகையை விட்டபடி கேட்க...
‘முருகா’ அவன் பேசிய கெட்ட வார்த்தையைக் கேட்ட ரதிதேவி மானசீகமாகத் தனது காதுகளை மூடி கொண்டாள். அவனது வார்த்தைகள் மட்டுமா கெட்டது, அவனே ஒரு கேடுகெட்டவன் தானே.
“இவன் கிட்ட இப்படிப் பேசினா வேலைக்கு ஆகாது.” மூவரில் ஒருவன் அவளை நோக்கி ஒற்றைக் காலை எடுத்து வைக்க...
அடுத்த நொடி அவன் கால் முன்னே தரையில் துப்பாக்கி தோட்டா ஒன்று பாய்ந்தது. அதைக் கண்டு மூவரும் பயந்து அப்படியே நின்றுவிட்டனர். பெண்ணிடம் மட்டும் வீரத்தை காட்டும் கோழைகள் அவர்கள். துப்பாக்கி வைத்திருக்கும் ஆணவனை எதிர்க்க அவர்களுக்குத் துணிவில்லை. அவர்கள் அங்கிருந்து நழுவ பார்த்தனர்.
“வெயிட், வெயிட்... அதுக்குள்ள போனா எப்படி? மேடம் கிட்ட ஒரு கேள்வி கேட்கணும். அதுக்கு அவங்க சொல்ற பதிலை வச்சு தான்... அவங்க எனக்கா? உங்களுக்கா?ன்னு முடிவு பண்ணணும். அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” கிருஷ்ணபிரசாத் ரதிதேவியைப் பார்த்துக் கொண்டே கூற...
“அப்போ எங்களுக்கு ஒரு சான்ஸ் இருக்கா?” மூவரும் ஈயென இளித்தனர். அவர்களது இளிப்பை கண்டு ரதிதேவிக்கு அருவருப்பாக இருந்தது.
“இங்கே வாங்க மேடம்...” அவன் பெண்ணவளை அருகில் அழைக்க... அவளும் பயந்து கொண்டே அவன் அருகில் சென்றாள்.
“இப்போ உனக்கு ரெண்டே சாய்ஸ் தான். நான் பெட்டரா? இல்லை அவங்க பெட்டரா?” என்று கேட்டவன் காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டு அவளையே உறுத்து விழித்தான்.
“ரெண்டுமே வேண்டாம். உங்க துப்பாக்கி வச்சு என்னைக் கொன்னுருங்க.” விழிகளில் விழிநீர் வழிய அவள் கதறினாள். அவர்கள் மூவரும் அயோக்கியர்கள் என்றால்... இவனோ அவர்களை விடக் கடைந்தெடுத்த அயோக்கியன் அல்லவா!
“நோ ரதிதேவி, நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே.” என்று சொன்னவனின் விழிகள் இரண்டும் பளபளத்தது.
“என்னைக் கொன்னுருங்க. உங்க எல்லார் கிட்டேயும் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறதுக்கு நான் உயிரை விடுறது மேல்.” அவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள்.
“ப்ச், உன் கிட்ட பேசி வேலையில்லை.” என்று அவளைப் பார்த்து சலிப்பாய் சொன்னவன், “பிரதர்ஸ், இவளை உங்களுக்கே விட்டு கொடுத்துர்றேன். டேக் இட்.” என்றவன் அவர்களிடம் அவளை நோக்கி கை காட்டி விட்டு காரிலிருந்து இறங்கினான்.
“தேங்க்ஸ் அண்ணாத்தே.” மூவரும் நன்றி கூறிக் கொண்டே அவளை நோக்கி வர...
கயவர்களைக் கண்டு பயந்து போன ரதிதேவி கிருஷ்ணபிரசாத்திடம் ஓடி வந்தவள் அவனின் முதுகு பின்னே மறைந்து கொண்டாள். அவனோ விலகி நின்று, “இந்தக் கிருஷ்ணபிரசாத் சொன்னால் சொன்னது தான். எடுத்துக்கோங்க.” என்று கூற...
‘கிராதகா, இப்படி மாட்டிவிட்டுட்டு போறியே?’ என்று அவள் மனதிற்குள் அதிர்ந்து தான் போனாள்.
“நான் உங்க கூடவே வர்றேன்.” ரதிதேவி அவனது கரத்தினைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச... அவன் அவளையும், தனது கரத்தினைப் பிடித்திருக்கும் அவளது கரங்களையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“ஏனிந்த திடீர் மாற்றம்?” என்று இரு புருவங்களையும் தூக்கியபடி அவளிடம் கேட்க...
“கற்பு போறதுன்னு முடிவாகி போச்சு. அது தாலி கட்டிய பிறகு உங்களால் போய்த் தொலையட்டும்.” என்று விரக்தியாய் கூறியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. தனது இழிநிலையை எண்ணி அவளுக்கு அத்தனை கழிவிரக்கமாக இருந்தது.
“நீ பத்தினி தெய்வமே தான்.” என்றவனது வார்த்தைகளில் அத்தனை நக்கல். அவள் கண்ணீர் விழிகளோடு அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“என்ன அண்ணாத்தே, ஆசை காட்டி மோசம் பண்ணிட்டியே.” கயவர்களில் ஒருவன் தைரியமாக முன்வந்து ரதிதேவி கரத்தினைத் தொட போக... அடுத்த நொடி கிருஷ்ணபிரசாத்தின் துப்பாக்கியில் இருந்த தோட்டா அவனது உள்ளங்கையைப் பதம் பார்த்திருந்த்து.
‘ஆ’வென அவன் வலியில் அலறினான். அவனது தோழர்கள் இருவரும் பதறி போய் அவனைத் தாங்கி பிடித்துக் கொண்டனர்.
கிருஷ்ணபிரசாத் தனது பாதுகாவலர்களிடம் கண்களைக் காட்ட... அவர்கள் கயவர்கள் மூவரையும் இழுத்துக் கொண்டு சென்றனர். ரதிதேவி மூவரையும் பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்தாள்.
கிருஷ்ணபிரசாத் காரில் ஏறியமர... ரதிதேவி அவன் புறம் குனிந்து, “அவங்களை என்ன பண்ண போறீங்க? பாவம்...” என்று கயவர்களுக்காகப் பாவப்பட... சற்று நேரத்திற்கு முன் அவளது நிலையே பாவமாகத் தான் இருந்தது என்பதை அவள் மறந்து போயிருந்தாள் போலும்.
“ஒன், டூ...” கிருஷ்ணபிரசாத் அவளுக்குப் பதில் கூறாது எண்களை எண்ண தொடங்க... அவன் அவளை அழைக்கவில்லை. ஆனாலும் ரதிதேவி நாய்க்குட்டி போன்று அவனது காரில் ஏறியமர்ந்தாள். அவளுக்குத் தான் வேறு வழியில்லையே.
கார் ரதிதேவி இருக்கும் பகுதியை தாண்டி சென்றது.
“எங்க வீடு இங்கே இருக்கு.” அவள் பதறி போய் அவன் புறம் திரும்பி கூற...
கிருஷ்ணபிரசாத் பதில் கூறாது ஒற்றைக் கையால் காரை வேகமாக ஓட்டி கொண்டே... மறுகையால் சிகரெட்டை வாயில் வைத்து இழுத்து விட்டான். அவன் பதில் கூற மாட்டான் என்று தெரிந்து அவள் அமைதியாகி போனாள். அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள். அவளது கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. ஏசி காரில் சிகரெட் புகை சூழ்ந்ததின் விளைவு ரதிதேவிக்கு இருமல் வந்தது. ‘லொக் லொக்’ என்று இருமி கொண்டே அவள் அவன் புறம் திரும்பி,
“ஏசி காரில் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்க...
கிருஷ்ணபிரசாத் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான். அதிலேயே அவளுள் கிலி பிறந்தது. அவனைப் பற்றித் தெரிந்தும் வாயை விட்டிருக்கக் கூடாதோ! அடுத்த நொடி அவனது கரத்தில் இருந்த சிகரெட் அவளது வாயில் இருந்தது. அவள் அவனைத் திகைப்புடன் பார்த்தவள் சிகரெட்டை துப்ப முயல... எங்கே அவளால் முடிந்தது? அவன் தான் சிகரெட்டை அவளது வாயில் வைத்து அழுத்தி பிடித்திருந்தானே. அவள் பாவமாக அவனைப் பார்க்க...
“ஏசி காரில் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா?” அவன் நக்கலாய் அவளைக் கண்டு கேட்க... அவள் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.
அத்தனை களேபரத்திலும் அவனது கரத்தில் கார் சீரான வேகத்துடன் சென்றது.
“என் கிட்ட பேசும் போது பார்த்து பேசு.” அவனது குரலில் நக்கல் தொனி மாறி கறார் தொனி வந்தது. அவள் பயத்துடன் இருக்கையில் ஒன்றியமர்ந்து ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.
‘சண்டாளன், எங்கே கூட்டிட்டு போறான்னு தெரியலையே?’ அந்த நிலையிலும் அவள் மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தப்படி புலம்பி கொண்டே வந்தாள்.
காரின் ஹார்ன் ஒலியில் தனது சிந்தனையில் இருந்து விடுபட்ட ரதிதேவி சுற்றுப்புறத்தை கவனித்துப் பார்த்தாள். ஏதோ பெரிய கதவின் முன் கார் நின்றது. காரின் ஒலியை கேட்டதும் காவலாளி அதன் கதவினை அகல திறந்துவிட... அடுத்த நொடி கார் உள்ளே சீறிப் பாய்ந்தது. வாயிற் கதவில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வழியெங்கும் பெரிய தோட்டம் இருந்தது. பகல் பொழுதாக இருந்திருந்தால் தோட்டத்தின் அழகினை ரதிதேவி ரசித்திருக்கக் கூடும். இப்போதோ அவள் திகில் படம் பார்ப்பது போல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
அங்கிருந்த போர்ட்டிகோவில் காரை நிறுத்திய கிருஷ்ணபிரசாத் கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான். அவன் அவளை அழைக்காது செல்ல... வேறுவழியின்றி அவள் கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினாள். ஆனாலும் அவனைப் பின்தொடர்ந்து அவனின் பின்னே செல்ல அவளுக்கு மனம் துணியவில்லை. பெண் பித்தன் அவனின் பின்னே செல்ல அவளுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. அவள் அப்படியே அசையாது நின்றிருந்தாள்.
“மிஸ்டர் குமாரசுவாமி...” கிருஷ்ணபிரசாத் அலைப்பேசியைக் காதில் வைத்தபடி பேசி கொண்டிருக்க...
ரதிதேவி ஓட்ட பந்தயத்தில் ஓடி வருவது போல் கண்ணிமைக்கும் நொடியில் வீட்டினுள் ஓடி வந்து அவனது அலைப்பேசியைப் பறித்து இருந்தாள். அவள் பதட்டத்துடன் தனது கையிலிருந்த அலைப்பேசியைப் பார்க்க... அதுவோ எந்த அழைப்பையும் ஏற்காது சமத்தாக அமைதியாக இருந்தது. அவன் அவளைக் கேலியாகப் பார்த்திருந்தான். அவளுக்குக் கோபமாக வந்தது. ஆனால் அவளால் அவனை முறைக்க முடியவில்லை. முறைத்தால் அதன் விளைவு என்னவென்று அவளுக்குத் தான் தெரியுமே.
'நாசமா போறவன்... ஒரு செகண்ட்ல பதற வச்சுட்டானே.' அவள் மனதிற்குள் அவனை வைது கொண்டிருந்தாள்.
கிருஷ்ணபிரசாத் தனது வலக்கையை அவள் புறம் நீட்ட... அவள் புரிந்தார் போன்று அலைப்பேசியை அவனது கரத்தில் வைத்தாள். அவன் அலைப்பேசியை வாங்கிச் சட்டைப்பையில் போட்டு கொண்டவன், பின்பு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
“எதுக்கு வீட்டை விட்டு ஓடி வந்த?” அவன் நிதானமாகக் கேள்வி கேட்டு விட்டு அதைவிட நிதானமாக அவளைப் பார்த்தான்.
என்னவென்று அவள் பதில் கூறுவாள்!
“எங்க வீட்டுக்கு போகணும்.” அவள் மெல்லிய குரலில் கூற...
“அந்த வீடு பிடிக்காம தானே ஓடி வந்த. பின்னே எதுக்கு அங்கே போகணும்?” அவன் சிகரெட்டை இழுத்தபடி கேட்க... அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
“எனக்குப் பதில் வரணும்.” அவனது அழுத்தமான குரலில் அவளது உடல் தூக்கிவாரி போட்டது.
“ம், சொல்லு.”
“எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை.” எப்படியோ அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டாள்.
“ஏனோ?” அவன் அலட்டி கொள்ளாது கேள்வி கேட்க... அவன் சிறிதும் வருந்தாது இருப்பது கண்டு அவளுக்குக் கோபம் வந்தது.
“ஒரு பொம்பளை பொறுக்கியை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்லை.” அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது கன்னத்தில் அவனது வலக்கரம் அழுத்தமாய்ப் பதிந்து இருந்தது. ஆம், அவன் அவளை அடித்து இருந்தான். அவள் திகைத்து போனவளாய் கன்னத்தில் கை வைத்தபடி அவனைப் பார்த்தாள். அவளது இதழோரம் இரத்தம் கசிந்தது.
“வார்த்தைகள் ஒழுங்கா வரலைன்னா... கொன்னுருவேன் கொன்னு. எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம்.” என்றவனை அவள் வெறுப்புடன் பார்த்தாள்.
“இதுக்குத் தான் இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேன். எரியற வாணலியில் இருந்து தப்பிச்சு நரகத்தில் வந்து விழுந்த கதையா இருக்கு, என் நிலைமை. எங்கப்பா கிட்டயிருந்து தப்பிச்சு உங்க கிட்ட வந்து மாட்டிக்கப் போறேன். எனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை.” அவள் கண்ணீரோடு இறைஞ்ச...
“எனக்கு என்னடி குறைச்சல்?” அவன் உக்கிரமாக அவளைப் பார்த்தான்.
“எல்லாமே குறைச்சல் தான். நீங்க ஒரு பொம்...” மேலே சொல்ல போனவள் அடுத்த நொடி வேகமாகத் தனது கன்னங்களைக் கரங்களால் மறைத்து கொண்டாள். அவளது பாவனையில் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
“சோ, இது தான் காரணமா?” என்றவன் மீண்டும் சோபாவில் அமர்ந்து, “உட்கார்.” என்று அவளையும் அமர பணிக்க... அவளோ அவன் சொல் பேச்சு கேட்காது அப்படியே நின்றிருக்க...
“சொல் பேச்சு கேட்கும் பழக்கம் இல்லையோ?” அவனது குரலிலேயே அவள் சட்டென்று சோபாவில் அமர்ந்தாள்.
“நான் பொம்பளை பொறுக்கி, பெண் பித்தன்... அதனால் என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பம் இல்லை. ரைட்?” அவன் கேள்வியாக அவளைப் பார்க்க...
“ஆமாம்...” கொஞ்சமாவது தன்னைப் புரிந்து கொள்ள மாட்டானா? என்கிற நப்பாசையில் அவள் வேகமாக ஆமாம் போட்டாள்.
“இதற்கு எல்லாம் யார் காரணம்?” அவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றியிறக்க...
அவள் தானே காரணம். அவள் மௌனமாகத் தலைகுனிய...
“உங்கப்பா, அம்மாவுக்குக் கல்யாணமாகி எத்தனை வருசமாகுது?”
இதை எதற்கு இவன் கேட்கிறான் என்று யோசித்தபடி அவள், “முப்பது வருசமாகுது.” என்று சொல்ல...
“ம், குட்...” என்றவன் தனது அலைப்பேசியில் இருந்து ஒரு புகைப்படத்தைக் காட்டி,
“இது யாருன்னு உனக்குத் தெரியுதா?” என்று கேட்க...
“தெரியும். எங்கப்பாவோட பிஏ.” என்று கூறியவள் அவனைப் புரியாது பார்த்தாள்.
“நோ நோ... இது உன்னோட தம்பி.” என்று கூறி அவன் அவளுக்கு நெஞ்சுவலி வரவழைத்தான். அவளது தந்தை கண்டிப்பானவர் தான், முசுடு தான். ஆனால் பெண் பித்தன் அல்லவே. அதைவிட அந்தப் பையனுக்கு அவளை விட ஒரு வயதே குறைவு. எப்படிச் சாத்தியம்? அவளது மூளை குழம்பியது.
“இல்லை, நீங்க பொய் சொல்றீங்க. எங்கப்பா அப்படிப்பட்டவர் இல்லை.” அவள் வேகமாக மறுக்க...
அவன் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போன்று வாய்விட்டுச் சிரித்தான்.
“மாட்டி கொள்ளாமல் இருக்கும் வரை எல்லா ஆண்களும் உத்தமர்கள் தான். அதில் ஒருத்தர் உன் அப்பா.” என்றவனை அவள் திகைப்புடன் பார்த்தாள்.
“மூணாவதாக நீயும் பெண் பிள்ளையாகப் பிறந்து விட்டாய். அடுத்தக் குழந்தைக்கும் வாய்ப்பு இல்லாது உங்கம்மாவுக்குக் கர்ப்பையை எடுத்துட்டாங்க. உங்கப்பாவுக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும். அதன் விளைவு தான் இவன்.”
“அது எப்படி? அவன் என்னைவிட ஒரு வயது தான் சின்னவன்.” அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
“நீ பிறந்தவுடனேயே உன் அப்பா வெளியில் முயற்சித்துப் பார்த்து இருப்பாராக்கும். குழந்தை பிறக்க பத்து மாதங்கள் போதாது? அப்படிப் பார்த்தாலும் கணக்குச் சரியாகத் தான் இருக்கிறது.” கிருஷ்ணபிரசாத் எள்ளலாகச் சிரித்தான்.
ரதிதேவிக்கு அத்தனை அவமானமாக இருந்தது. அதைவிட அன்னையை நினைத்து அவளுக்கு வேதனையாக இருந்தது. ஹிட்லர் போன்று தந்தை கொடுங்கோலன் மட்டுமே என்று எண்ணி இருந்தவளுக்கு இந்த விசயம் சற்று பேரதிர்ச்சியே.
“இவன் வெறும் பிஏன்னு நீ நினைச்சிட்டு இருக்க. ஆனா அவன் வாரிசாக உங்கப்பா கிட்ட தொழில் கத்துக்கிட்டு இருக்கிறான். இன்னும் சில வருடங்களில் அவன் தொழிலை கையில் எடுத்து விடுவான்.” அவன் கூறியதை கேட்டு ரதிதேவி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
“இங்கு யாரும் ராமனும் இல்லை. ராவணனும் இல்லை. அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க நியாயம்.” என்றவன், “இப்போ சொல்லு... கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா?” என்று அவன் கேட்க...
“ஏன் உலகத்தில் உங்களைத் தவிர வேறு நல்ல ஆண்மகன்களே இல்லையா?” அவள் கோபத்தில் படபடக்க...
“இருந்தாலும் கவலை இல்லை. உனக்கு நான் தான். நான் மட்டுமே தான்.” என்றவனை அவள் வெற்று பார்வை பார்த்தாள்.
“நீ சம்மதம் சொன்னால்... நம்ம கல்யாணம் நடந்து உன் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். இல்லைன்னா?” அவன் நிறுத்திவிட்டு அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“இல்லைன்னா?” அவள் பதற்றத்துடன் அவனைக் கண்டு கேட்டாள். நிச்சயம் அவன் நல்லதாகக் கூற போவது இல்லை.
“நீ சம்மதிக்கலைன்னா... உன் வீட்டில் ஒரு இழவு விழுந்து துக்கம் ஏற்படும்.” அவன் நமட்டு சிரிப்புடன் சொன்னான்.
“எப்படி?” அவளுக்குப் பதைபதைப்பாக இருந்தது.
“எப்படின்னா? இந்த விவரங்கள் எல்லாம் உங்க அம்மா காதுக்குப் போகும். கணவனை நல்லவன், உத்தமன், ராமன்னு நினைச்சிக்கிட்டு இருக்கிற உங்கம்மாவுக்கு... புருசன் அப்படி இல்லைன்னு தெரிய வரும் போது என்ன நடக்கும்?” அவன் அவளைக் கண்டு கேள்வி கேட்க...
‘என்ன நடக்கும்?’ அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள். நிச்சயம் அவளது அன்னை உயிரை விட்டு விடுவார். அதைப் பற்றி நினைக்கும் போதே அவளுக்கு அழுகை வந்தது.
“எங்கம்மா உயிரை விடுறதுக்கு... நானே உயிரை விட்டுட்டு போறேன்.” அவள் மனத்தாங்கலுடன் மறைமுகமாகச் சம்மதம் சொல்ல...
“என்ன சொல்லுற? எனக்குப் புரியலை?” அவன் புரியாது அவளைப் பார்த்தான்.
“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்.” அவள் கோபத்துடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
“சம்மதமா?” அவன் நக்கலாகப் பார்த்தவன், “அதெல்லாம் மனமுவந்து கல்யாணம் பண்ணிக்கிறவங்க சொல்றது. நீ வேறவழி இல்லாமல் தானே சம்மதிச்சு இருக்க.”
“தெரியுதுல்ல... பின்னே எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க?”
“இவ்வளவு அழகான பெண்ணை விட்டு விட முடியுமா?” என்றவனின் குரலில் தெரிந்த பேதத்தில் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கிருஷ்ணபிரசாத்தின் விழிகள் பெண்ணவளின் மேனியை பார்வையால் வருடி கொண்டிருக்க... அவனது பார்வையில் அவளுக்குத் தேகம் எல்லாம் கூசி போனது. அவள் தான் அணிந்திருந்த தாவணியைத் திருத்தி கொண்டாள். அவளது செயலில் கோபமுற்றவன் அவளது கரத்தினைப் பிடித்துச் சுண்டி இழுத்தான். அடுத்த நொடி அவள் அவன் மடி மீது விழுந்திருந்தாள்.
“இந்த மாதிரி பண்ணினே, அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை நீ பார்ப்ப.” அவன் கர்ஜனையுடன் கூற...
“அதுக்குன்னு அவு... போட்டா காட்ட முடியும்?” அவள் கோபத்தில் இயலாமையுடன் வெடித்தாள்.
“காட்டினால் நல்லா தான் இருக்கும். எனக்கு உரிமையானதை பார்க்க எனக்கு ரைட்ஸ் இல்லையா?” அவனது கிறக்கமான வார்த்தைகளில் அவள் திடுக்கிட்டு அவனை ஏறிட்டு பார்க்க... அவன் விழிகளில் மோகத்தைத் தேக்கியபடி அவளையே பார்த்திருந்தான்.
அடுத்த நொடி ரதிதேவி அவனது மடியில் இருந்து எழ முயன்றாள். முடிந்தால் தானே... கிருஷ்ணபிரசாத்தின் ஒரு கை அவளது இடையை அழுத்தி பிடித்திருக்க, மற்றொரு கை முத்தமிடுவதற்கு ஏதுவாக அவளது பின்னந்தலையை இறுக பற்றியிருந்தது. அவளது முகம் அவனது முகத்திற்கு வெகு அருகாமையில்... அவள் விழிகள் இரண்டும் விரிய திகைப்புடன் அவனைப் பார்க்க... அதற்காகவே காத்திருந்தார் போன்று அடுத்த நொடி அவனது உதடுகள் வலுக்கட்டாயமாய் அவளது இதழ்களைக் கொய்திருந்தது.
ரதிதேவி நிராயுதபாணியாய் மறுக்க இயலாது இயந்திரம் போன்று அவனிடத்தில் தனது இதழ்களைக் கொடுத்துவிட்டுக் கண்ணீர் உகுத்தபடி அமர்ந்து இருந்தாள்.
பெண்ணவளின் கண்ணீர் ஆணவனைச் சிறிதும் அசைத்து பார்க்கவில்லை. முத்தத்திற்குச் சுவை சேர்ப்பது போல் அவளது கண்ணீர் அவனுக்குச் சுவையாய் இருந்தது போலும். கூடுதலாக அவளது குருதியின் சுவை வேறு... அவன் ஆழமாய், அழுத்தமாய் அவளது இதழ்களில் புதைந்து போயிருந்தான். அவளது இதழ்களின் மென்மையில் அவன் தொலைந்து தான் போனானோ.
அவனுக்கு அவனது மனம், அவனது எண்ணம், அவனது செயல், அவனது மகிழ்ச்சி மட்டுமே பிரதானமாய்! பெண்ணவளின் மனம் அவனுக்கு எதற்கு???
தொடரும்...!!!
கருத்துத் திரி :
அத்தியாயம் : 2
ரதிதேவியின் வீட்டின் அருகே கார் வந்ததும் அவள் கிருஷ்ணபிரசாத்தின் முகத்தைப் பாராது, “இங்கேயே காரை நிறுத்துங்க. நான் இறங்கிக்கிறேன்.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
சற்று நேரத்திற்கு முன் அவன் முத்தமிட்டதின் தாக்கம் இன்னமும் அவளுள் இருந்தது. அவன் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தில் அவளுக்கு அழுகையாக வந்தது. அவனைக் காணவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விதி அவனின் முகத்தைத் தான் காலம் முழுவதும் காணும்படி வைத்துவிட்டது.
கிருஷ்ணபிரசாத் காரை நிறுத்திய போதும் கார் கதவினை திறக்காது அழுத்தமாய் அமர்ந்திருந்தான்.
“ப்ச், லாக் எடுத்து விடுங்க. நான் இறங்கணும்.” என்று அவள் கூற... அவனோ அவளைக் காணாது நேராய் பார்த்தபடி ஸ்டியரிங் வீலில் கைவிரல்களால் தாளம் போட்டபடி அமர்ந்து இருந்தான்.
கிருஷ்ணபிரசாத்தின் எண்ணம் புரிந்தவளாய் ரதிதேவி, “கண்ணாடியை இறக்கி விடுங்க.” என்க... அதற்கு மட்டும் அவன் அவள் சொன்னதைச் செய்தான். அவள் கார் ஜன்னல் வெளியே தலையை நீட்டி அங்கிருந்த காவலாளியிடம்,
“நான் தான்ண்ணா... கதவை திறங்க.” என்று கூறவும்...
“மேடம், உங்களைக் காணோம்ன்னு சார் தேடிட்டு இருக்காங்க.” என்றவன் கதவை அகல திறந்து வைத்தான்.
“ப்ச், வேலைக்காரங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு? அதான் அவனும் உன் கிட்ட உரிமை எடுத்து பேசுறான்.” கிருஷ்ணபிரசாத் அதிருப்தியோடு சொன்னபடி காரை உள்ளே செலுத்தினான்.
“அவங்களும் மனுசங்க தான்.” அவளுக்குக் கோபத்தில் மூக்கு விடைத்துக் கொண்டு வந்தது.
“ஆனா நமக்குச் சரிக்கு சமமான மனுசங்க இல்லை.” அவன் விடாது பதில் கொடுக்க... அவளுக்குப் பதிலுக்குப் பதில் பேச முடியவில்லை. அவளுக்குத் தலைவலிப்பது போலிருந்தது.
ரதிதேவியின் குடும்பமும் கிருஷ்ணபிரசாத் குடும்பத்தின் வசதிக்கு சற்றும் குறைந்தவர்களல்ல. அவளது வீடும் பெரிய தோட்டத்துடன் பிரமாண்டமாக இருந்தது. கிருஷ்ணபிரசாத் போர்ட்டிகோவில் காரை நிறுத்தினான். ரதிதேவி வீட்டினுள் இருந்த பரபரப்பை கண்டு அவன் புறம் திரும்பி,
“நீங்க கிளம்புங்க. என்னைக் கொண்டு வந்து விட்டதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்.” என்றவள் காரை விட்டு கீழே இறங்க... அவளைத் தொடர்ந்து கிருஷ்ணபிரசாத்தும் காரை விட்டு இறங்கினான்.
“நீங்க எதுக்கு வர்றீங்க?” அவள் திகைப்பாய் அவனைப் பார்க்க...
“என்னோட மாமனார் வீட்டுக்கு நான் வர கூடாதா? இல்லை, எனக்கு அந்த உரிமை இல்லையா?” அவன் கேலியாய் கேட்டுக் கொண்டே வாசல் படியில் காலை வைத்தான். அவள் திகைத்து போய் அப்படியே நிற்க...
“உள்ளே வரும் எண்ணம் இல்லையா?” அவன் கேட்டதும் தான் சிலைக்கு உயிர் வந்தது.
“இந்நேரம் அப்பா உங்களைப் பார்த்தால் தப்பா நினைப்பார்.” அவள் கலக்கத்துடன் சொல்ல...
“உங்கப்பா என்னைப் பத்தி தப்பா நினைச்சு, எனக்கு என்னவாகப் போகுது?” அவன் அலட்சியத்துடன் சொல்லும் போதே... அவளது ஒட்டுமொத்த குடும்பமும் அங்கு வந்து நின்றது.
ரதிதேவியின் தந்தை குமாரசுவாமி, தாய் புவனா, பெரிய அக்கா கண்மணி, அவளது கணவன் மகேஷ் மற்றும் சின்ன அக்கா இளவரசி, அவளது கணவன் பரதன் என்று அனைவரும் அங்கு இருந்தனர். மூத்த அக்கா மகள் தண்மதி, இரண்டாவது அக்கா மகள் வெண்ணிலா இருவர் மட்டும் தான் மிஸ்ஸிங்.
“வாங்க மாப்பிள்ளை...” புவனா பவ்யத்துடன் கிருஷ்ணபிரசாத்தை வரவேற்றார்.
ரதிதேவியின் அக்காள்கள் மற்றும் அவர்களது கணவர்களும் கிருஷ்ணபிரசாத்தை இன்முகத்துடன் வரவேற்க... மாமனார் மட்டும் கோபத்தில் மகளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
“நீங்க தான் ரதியை கூட்டிட்டு போனதா? அவளைக் காணோம்ன்னு நாங்க எல்லாம் பதறி போயிட்டோம்.” புவனா அவனிடம் கேட்டார்.
கிருஷ்ணபிரசாத் விழிகளைச் சுருக்கி மாமியாரை பார்த்தான்.
“நான் ரதி கூடத் தான் படுப்பேன். பாத்ரூம் போக எழும் போது அவளைக் காணோம். அதான் பதறி போய் எல்லோரையும் எழுப்பி விட்டுட்டேன்.” புவனா சங்கடத்துடன் அவனைக் கண்டு சொன்னார். மருமகன் தான் மகளை அழைத்துச் சென்று இருக்கிறான் என்று தெரியாது அவர் பயந்து போய் எல்லோரையும் எழுப்பி விட்டு விட்டாரே.
ரதிதேவி பதைபதைப்புடன் கிருஷ்ணபிரசாத்தை பார்த்தாள். அவன் மாற்றி எதுவும் கூறிவிட்டால் ஜோலி முடிந்தது அல்லவா?
“க்கும்...” என்று ரதிதேவியைப் பார்த்தபடி தொண்டையைச் செருமி கொண்ட கிருஷ்ணபிரசாத், “ஆமாம், நான் தான் அவளைக் கூட்டிட்டு போயிருந்தேன்.” என்று சொல்ல... ரதிதேவி நிம்மதி பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள்.
“அதைச் சொல்லிட்டு செஞ்சிருக்கணும் மாப்பிள்ளை. உங்க ரெண்டு பேருக்கும் இன்னமும் கல்யாணமாகலை.” குமாரசுவாமி சற்று கடுமையுடன் கூற...
“அதான் நீங்களே மாப்பிள்ளைன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் கல்யாணமானால் என்ன, ஆகாவிட்டால் என்ன?” அவன் கூலாகப் பதிலளிக்க...
மகேஷூம், பரதனும் கிருஷ்ணபிரசாத்தை பிரமிப்பாய் பார்த்தனர். அவர்களுக்கு இல்லாத தைரியம் அவனுக்கு இருக்கிறதே. அவனிடம் இருக்கும் பணம் அவர்களிடம் இல்லை. அத்தோடு அவர்கள் இருவரும் வீட்டோடு மாப்பிள்ளைகள். அதனால் இருவரும் மாமனார் முன் வாயில்லா பூச்சிகள் தான்.
“இன்னமும் அவள் உங்க மனைவியாக வில்லை. இப்போது அவள் என்னுடைய மகள் மட்டுமே. இப்படி நேரங்கெட்ட நேரத்தில் பெண்ணை அழைச்சிட்டுப் போறது சரியில்லை.”
“கல்யாண பேச்சுவார்த்தை எப்போ முடிந்ததோ... அப்பவே உங்க பொண்ணு என்னுடைய மனைவியாகி விட்டாள். அவளை எப்போ, எங்கே கூட்டிட்டு போகணும், என்ன பண்ணணும்ன்னு எனக்குத் தெரியும். எனக்கு நீங்க அட்வைஸ் பண்ண வேண்டாம்.” என்று மிரட்டலாய் சொன்னவன், “எனக்கு இது தான் சரி.” என்று அழுத்தமாய்க் கூறி முடித்தான்.
“மாப்பிள்ளை, உள்ளே வாங்க. காபி குடிச்சிட்டு போங்க.” புவனா பிரச்சினையைத் தவிர்க்க எண்ணினார்.
“இல்லை, வேண்டாம். நான் கிளம்பறேன்.” என்றவன், “பை பேபி.” என்று ரதிதேவியிடம் விடைபெற...
“பேபியா?” அவள் திகைப்பாய் வாயை பிளந்தாள்.
“எஸ், பேபியே தான். ஒரு முத்தம் கூட ஒழுங்கா கொடுக்கத் தெரியலை.” அவன் அவளது காதருகில் ரகசியமாய் முணுமுணுத்தான்.
“ஆமாம், ஆமாம்... உங்களைப் போல் நான் முத்தத்தில் பிஎச்டி வாங்கியவள் இல்லை.” அவளும் ரகசிய குரலில் நொடித்துக் கொள்ள... காண்பவர்களுக்கு இருவரும் காதலர்கள் போன்றே தோன்றுவார்கள்.
“ரதி போதும். உள்ளே போ.” குமாரசுவாமி கடுகடுத்தார்.
ரதிதேவி தந்தையை முறைத்து பார்த்தாள். கிருஷ்ணபிரசாத் கூறிய செய்தியை கேட்ட பிறகு தந்தை மீது மரியாதை வர மறுத்தது. அதைவிட அவர் தனது தாயை ஏமாற்றுகிறாரே என்கிற கோபம் அவளுக்கு..
கிருஷ்ணபிரசாத் காரிலேறி சென்ற பிறகு குடும்பத்தினர் அனைவரும் வீட்டினுள் சென்றனர். உள்ளே சென்றதும் குமாரசுவாமி மகளைப் பிடித்துக் கொண்டார்.
“இந்த நேரத்தில் ஒரு ஆம்பளை கூடப் போய்க் கூத்தடிச்சிட்டு வந்திருக்க. உன்னை...?” என்று அவர் ஆத்திரத்துடன் மகளைக் கண்டு பல்லை கடித்தபடி சத்தம் போட...
“என்னங்க, அவள் நம்ம பொண்ணுங்க...” புவனா கணவனிடம் கெஞ்ச...
“நீ தள்ளி போ... நீ ஒரு வார்த்தை கூடாது.” குமாரசுவாமி மனைவியைக் கண்டு கட்டளையிட... புவனா இயலாமையுடன் மகளைப் பார்த்தபடி தள்ளி நின்றார். அதைக் கண்டதும் ரதிதேவிக்கு ஆத்திரமாக வந்தது.
“ஆம்பளை கூடப் போய்த் தான் கூத்தடிக்க முடியும். பின்னே பொம்பளை கூடப் போயா கூத்தடிக்க முடியும். அப்படிப் பொம்பளை கூடப் போனா அதுக்குப் பெயர் வேற...” ரதிதேவி தைரியமாகத் தந்தையை எதிர்த்து பேசினாள். முன்பு என்றால் ரதிதேவி தகப்பன் முன் வாயை திறக்க பயப்படுவாள். இப்போது அவரது வண்டவாளம் தெரிந்த பின் அந்தப் பயம் இல்லை.
“அடடே, என் கொழுந்தியாளுக்கு எம்புட்டுத் தைரியம். எல்லாம் என் சகலை கொடுக்கும் தைரியம் தான் போலும்.” பரதன் மனைவியின் காதினை கடித்தான்.
“பேசாம இருங்க. அப்பா காதில் விழ போகுது.” இளவரசி கணவனைக் கண்டிக்க... பரதன் வாயை மூடி கொண்டான்.
“எவ்வளவு தைரியம் உனக்கு?” குமாரசுவாமி மகளை அடிக்கக் கையை ஓங்கியவர் அவளது முகத்தைப் பார்த்துவிட்டு திகைத்து போய் அப்படியே நின்றார். ரதிதேவி அவரைப் புரியாது பார்த்தாள்.
“என்னடி இது? உதட்டோரம் ரத்தம் வந்திருக்கு.” அவர் மகளைக் கண்டு கேட்டார்.
கிருஷ்ணபிரசாத் ரதிதேவியை அடித்த அடியில் கசிந்த இரத்தம் அது. ஆனால் குமாரசுவாமி கண்களுக்கு அது வேறு மாதிரியாகத் தோன்றியது போலும்.
“ராத்திரியில் அவன் கூடப் போனது மட்டும் இல்லாமல்... கெட்டு போய் வந்திருக்க... கழிசடை, கழிசடை...” குமாரசுவாமி ஆத்திரம் தாங்காது மீண்டும் மகளை அடிக்க வந்தார்.
தந்தை கூறியது கேட்டு ரதிதேவிக்கு உடல் எல்லாம் கூசி போனது. தந்தையின் பேச்சு அவளுக்கு அத்தனை அவமானமாக இருந்தது.
அப்போது ஒரு கரம் அவரது கரத்தினைப் பிடித்துத் தடுத்தது. ‘யாரது?’ என்று அவர் கோபமாகத் திரும்பி பார்த்தார். அங்குக் கிருஷ்ணபிரசாத் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான். அவர் பேசியதை அவன் கேட்டு விட்டான் என்பது அவனது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.
“இப்படி எல்லாம் நடக்கும்ன்னு எனக்குத் தெரியும். அதனால் தான் நான் போகாமல் நின்றேன்.” என்றவன், “உங்களுக்கு இப்ப என்ன தெரியணும்? எங்களுக்குள்ள எல்லாம் முடிந்துவிட்டதா? இல்லையா? என்றா?” அவன் குமாரசுவாமியை கண்டு கேட்க...
“அதான் பார்த்தாலே தெரியுதே. என் பொண்ணைக் கூட்டிட்டு போய் எல்லாத்தையும் முடிச்சிட்டுத் திரும்பக் கொண்டு வந்து விட்டுட்டன்னு...” அவர் பொரும...
“நான் ரதியை என் மனைவின்னு சொன்ன போதே உங்களுக்குப் புரிஞ்சிருக்கணும். நீங்க ரொம்பவே லேட்.” அவன் நக்கலாகப் பதில் சொல்ல...
ரதிதேவி இருவரையும் இயலாமையுடன் பார்த்திருந்தாள். தனது பெண்மையை வெளிச்சம் போட்டுச் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் தந்தையையும், வருங்காலக் கணவனையும் அவள் அறவே வெறுத்தாள். ஆனாலும் தந்தைக்குப் பதிலடி கொடுக்கும் கிருஷ்ணபிரசாத்துக்கு எதிராக அவள் வாய் திறக்கவில்லை. தந்தையின் வாயை மூடும் சக்தி அவனுக்கு மட்டுமே இருக்கிறது என்று அவள் நம்பினாள் போலும்.
“கல்யாண சடங்கில் கன்னிகா தானம்ன்னு ஒரு சடங்கு இருக்கிறது. அது எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அதன் அருமையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இப்போது அதற்கு வழியில்லாது பண்ணிட்டீங்களே?” குமாரசுவாமி தையாதக்கா என்று ஆத்திரத்தில் குதித்தார்.
கிருஷ்ணபிரசாத்தோ காதை குடைந்தபடி, “எங்க கல்யாணத்தில் அந்தச் சடங்குக்கு எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை.” என்று எகத்தாளமாய்க் கூற...
அதைக் கேட்டு குமாரசுவாமி இரத்தம் கொதித்தது என்றால்... ரதிதேவிக்குப் பனிச்சாரல் பொழிந்தது போன்று குளுகுளுவென்று இருந்தது.
“ரதி என்னோட பொண்ணு. அவள் கல்யாணத்தில் நான் இல்லாமலா? நான் நினைத்தால் இந்தக் கல்யாணத்தை...” மேலே ஏதோ சொல்ல போன குமாரசுவாமி வாயை இறுக மூடி கொண்டார்.
“இந்தக் கல்யாணத்தை...” கிருஷ்ணபிரசாத் அவரை ஊக்குவிக்க...
குமாரசுவாமி வாயை மூடி கொண்டு கிருஷ்ணபிரசாத்தை முறைத்து பார்த்தார். பின்னே அவனைப் பகைத்துக் கொண்டு தொழிலில் இருக்க முடியுமோ! திருமணம் பேசிய போது பெருமையாக இருந்த அவனது அந்தஸ்து... இப்போது அவருக்கு இடைஞ்சலாக இருந்தது.
“எங்க கல்யாணம் நடக்கும். நீங்க இருந்தாலும், இல்லைன்னாலும் ஜாம்ஜாம்ன்னு நடக்கும். அதே மாதிரி கல்யாணத்தில் கன்னிகா தானம் என்கிற சடங்கு கிடையவே கிடையாது.” என்று அழுத்தமாய் உரைத்தவன் பின்பு அவரைக் கண்டு, “உங்களுக்கு அந்தத் தகுதி இல்லை.” என்றான் அவரின் முகத்தை நேராகப் பார்த்துக் கொண்டே...
அவன் தான் யார் என்னவென்று பார்க்க மாட்டானே. வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டு என்பது போல் தான் அவனது சொல், செயல் அனைத்தும் இருக்கும்.
குமாரசுவாமி அவமானத்தில் முகம் கருக்க நின்றிருந்தார். அதைக் கண்ட கிருஷ்ணபிரசாத் ரதிதேவியை அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டு,"நீங்க எல்லோரும் இருப்பதால்... டீசண்ட்டா முத்தம் கொடுக்கிறேன். இல்லைன்னா நான் கொடுக்கிற இடமே வேற..." அவன் அவளது இதழ்களைப் பார்த்தபடி மையலுடன் கூறி... அவரது முகத்தை இன்னமும் கருக்கச் செய்தான். அதன்பிறகு அவன் விடைபெற்று செல்ல... அவன் சென்றபிறகு புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.
குமாரசுவாமி மகளை ஒன்றும் சொல்ல முடியாதவராய் தனது அறைக்குச் சென்றுவிட... ரதிதேவியும், புவனாவும் தங்களது அறைக்குள் வந்தனர்.
“என்ன இருந்தாலும், மாப்பிள்ளை அப்பா கிட்ட இப்படிப் பேசியிருக்கக் கூடாது.” புவனா வருத்தத்துடன் சொல்ல...
“இவருக்கு அவர் தான்ம்மா சரி.” என்று மகள் சொல்ல...
“உனக்குச் சந்தோசமா இருக்கா?” அன்னை மகளைக் கூர்ந்து பார்த்தார்.
“அப்பா என்னைச் சந்தேகப்பட்டது மட்டும் சரியாம்மா?” மகள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க முடியாது அன்னை மௌனமானார்.
“நீங்களும் என்னைச் சந்தேகப்படுறீங்களா?” மகள் கேட்கும் முன்,
“என்னடி இப்படிச் சொல்ற? என் மகளைப் பத்தி எனக்குத் தெரியாதா?” அவர் பதறிப் போனார்.
“நான் இப்பவும் உங்க பொண்ணா தான் இருக்கேன்.” என்றவள் உறங்காது பால்கனி நோக்கி செல்ல... புவனா மகளை வேதனையுடன் பார்த்தபடி படுக்கையில் சாய்ந்தார்.
*******************
கிருஷ்ணபிரசாத் காரை விட்டு இறங்கியவன் தனது வீட்டிற்குள் நுழைந்தான். அவன் ரதிதேவியை அழைத்துச் சென்றது அவனது விருந்தினர் மாளிகைக்கு... இது அவனுடைய வீடு. வீட்டினுள் அவனது அன்னை சாம்பவி அமர்ந்து இருந்தார். அருகில் அவனது தந்தை கோகுல்நாத்தும் அமர்ந்து இருந்தார். அவன் அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாது தனது அறைக்குச் செல்ல வேண்டி மாடிப்படியில் காலை வைக்க...
“இந்நேரம் எங்கே போய்க் கூத்தடிச்சிட்டு வர்ற? உனக்குன்னு ஒருத்தி வர போகிறாள். இனியாவது நீ திருந்த கூடாதா?” சாம்பவி மகனை கண்டு கோபமாய்க் கேட்க...
“பவிம்மா, எதுக்கு இவ்வளவு கோபம்? அமைதிம்மா.” கோகுல்நாத் மனைவியைச் சமாதானப்படுத்தினார்.
கிருஷ்ணபிரசாத்தோ அன்னையின் கேள்விகளுக்குப் பதில் கூறாது மாடிப்படிகளில் வேகமாக ஏறினான். அன்னையின் வார்த்தைகளை அவன் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அவரையும் தான்...
“பாருங்க, ஏதாவது பதில் சொல்றானான்னு? அவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?” சாம்பவி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கத்த...
“அவன் பதில் சொல்ல மாட்டான்னு தெரிஞ்சும்... நீ எதுக்கு அவனைக் கேள்வி கேட்கிற? அவனைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே.” கோகுல்நாத் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொள்ள...
“என்னை ஒரு அம்மாவா கூட மதிக்க மாட்டேங்கிறான். இவன் ஏன் இப்படி இருக்கிறான்? நான் என்ன தப்பு செஞ்சேன்?” சாம்பவி மனம் மருகி அழுக... கணவர் அவரைச் சமாதானப்படுத்தினார்.
தனது அறைக்கு வந்த கிருஷ்ணபிரசாத் நேரே குளியலறைக்குச் சென்று குளித்து முடித்தவன் இரவு உடையை அணிந்த பிறகு பால்கனியில் வந்து நின்றான்.
வானில் பவனி வந்த நிலவினை காணும் போது அவனுக்கு ரதிதேவியின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது.
“என்னைக் கல்யாணம் பண்ண பிடிக்காம வீட்டை விட்டு ஓடுறியா? இருடி, உன்னைக் கல்யாணம் பண்ணி ஓட ஓட விரட்டுறேன்.” என்று கோபமாய் முணுமுணுத்தவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
கிருஷ்ணபிரசாத்தின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
அங்கே தனது அறையின் பால்கனியில் நின்றிருந்த ரதிதேவியின் நினைவுகளும் பின்னோக்கி சென்றது.
********************************
சில மாதங்களுக்கு முன்னால்...
கோவாவில் இருந்த நட்சத்திர விடுதிக்கு ரதிதேவியின் குடும்பத்தினர் வந்திருந்தனர். குமாரசுவாமியின் தம்பியின் மகள் திருமணத்திற்குத் தான் அவர்கள் அனைவரும் வருகை புரிந்திருந்தனர். அதனால் தான் வேறுவழியின்றிக் குமாரசுவாமி தனது குடும்பத்தைக் கோவாவிற்கு அழைத்து வந்திருந்தார். இல்லை என்றால் கோவாவிற்கு எல்லாம் குடும்பத்தை அழைத்து வரும் ஆளா அவர்!
‘டெஸ்டினேசன் வெட்டிங்’ என்பது இப்போது பிரபலமாக இருக்கும் ஒன்று. இந்தத் திருமணமும் அது போன்று கடற்கரையில் நடக்கவிருக்கிறது.
ரதிதேவியின் அக்காள்கள் இருவரும் அழகு நிலையத்திற்குச் செல்ல விருப்பம் கொள்ள... புவனா கணவருக்குத் தெரியாது மகள்களை அனுப்பி வைத்தார். இருவரும் தங்கையையும் தங்களுடன் இழுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
ரதிதேவியின் முகத்திற்குப் பேசியல் செய்யப்பட்டது. அவளது முகத்தில் பேக் போடப்பட்டு அவளை அமர வைத்திருந்தனர். அவளும் விழிகளை மூடி ரிலாக்சாக அமர்ந்து இருந்தாள். அப்போது ஒரு பெண்ணின் குரல் சிணுங்கலாகக் கேட்டது.
“டார்லிங், இதை எங்கே போடணும்? இயர்ல போடவா? இல்லை நோஸ்ல போடவா?” என்று அந்தப் பெண்ணின் குரல் மழலை போல் மிழற்றியது.
‘யார்டா அந்த ஜெனிலியா?’ என்று ரதிதேவி தனது கண்களின் மீது வைத்திருந்த வெள்ளரிக்காய் துண்டின் கீழே இருந்த இடைவெளியில் தனக்கு முன்னிருந்த கண்ணாடியை பார்த்தாள்.
“இங்கே குத்திக்கோ ஹனி.” ஒரு ஆடவனின் குரல் கிறக்கத்துடன் ஒலித்தது. அத்தோடு அவனது கைவிரல்கள் அந்தப் பெண்ணின் நாபியை சுற்றி மென்மையாய் வருடியது.
"உங்க ரசனையே தனித் தான் டார்லிங்." அந்தப் பெண் மீண்டும் சிணுங்கினாள்.
ரதிதேவி திகைத்து விழித்தவளாய் வேகமாக வெள்ளரிக்காய் துண்டுகளைக் கண்களில் இருந்து எடுத்து விட்டுப் பின்னால் திரும்பி பார்த்தாள். அங்கு நின்றிருந்த ஆண் வேறுயாருமில்லை... சாட்சாத் கிருஷ்ணபிரசாத்தே.
“பொறுக்கிப்பய...” ரதிதேவி அவனைக் கண்டு அருவருப்பாய் முகத்தைச் சுளித்தாள்.
அவனோ அவளைக் கவனிக்காது அந்தப் பெண்ணிடம் சிரித்துப் பேசி கொண்டிருக்க... ரதிதேவி தனது விழிகளால் அவனைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்...!!!
கருத்துத் திரி :
அத்தியாயம் : 3
“என்ன மாமா, மனைவியைக் கண்டு மயங்கி நின்னுட்டீங்களா?” ரதிதேவி பரதனிடம் கலகலத்து கொண்டிருந்தாள்.
“ஐய்யே, கோவா வந்து பொண்டாட்டியை எவனாவது பார்ப்பானா? அதோ போகுது பார். அந்த நச் ஃபிகரை பார்த்துட்டு இருந்தேன்.” பரதன் பதிலுக்கு நகைச்சுவையாய் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.
“அவள் பின்னாடியே போங்களேன். யார் வேண்டாம்ன்னது...” இளவரசியும் புன்னகையுடன் பதில் கொடுத்தாள். அவள் முகத்தில் சிறிதும் கோபம் இல்லை. பொறாமை இல்லை.
“அக்கா, இப்போ உனக்குக் கோபம் வந்திருக்கணும். ஆனா நீ சிரிச்சிட்டு இருக்க. முகத்தை உர்ன்னு டெரரா வச்சுக்கிட்டு நீ கோபப்படு.” ரதிதேவி எடுத்து கொடுக்க...
“ஏம்மா, அவளே சும்மா இருந்தாலும், நீ எடுத்து கொடுப்ப போலிருக்கே.” பரதன் மச்சினியின் தலையில் போலியாய்க் கொட்டினான்.
"ஆ..." என்று ரதிதேவியும் போலியாக அலறியவள், "அக்கா, கோபப்படு..." என்று இளவரசியைத் தூண்டிவிட...
“உங்க மாமா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்.” இளவரசி கணவனை மேலிருந்து கீழாகப் பார்த்தபடி கூற...
“ஒத்த வார்த்தையில சாய்ச்சு புட்டாளே.” பரதன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு போலியாக வருத்தப்பட்டான். அதைக் கண்டு ரதிதேவி கலகலவெனச் சிரித்தாள்.
ரதிதேவி சிரித்தது கண்டு எப்படியோ அவளது தந்தைக்கு மூக்கில் வியர்த்து விட்டது போலும். குமாரசுவாமி உடனே அங்கே ஆஜராகி விட்டார். வந்ததும் முதல் வேலையாக மருமகனிடம்,
“வயசு பொண்ணைத் தொட்டுப் பேசுறது தப்பு மாப்பிள்ளை.” என்று பரதனை கடிந்தார். அதைக் கேட்டு அவனது முகம் இருண்டு போனது.
பெண்கள் இருவரின் முகமும் அவமானத்தில் கருத்துப் போனது.
“அப்பா...” இளவரசி ஏதோ சொல்ல போக... மனைவியின் கையைப் பிடித்துத் தடுத்த பரதன்,
“ரதி எனக்குத் தங்கை மாதிரி மாமா.” என்று விளக்கம் கொடுக்க...
“தங்கை மாதிரி தான். தங்கை இல்லையே மாப்பிள்ளை.” என்று பரதனுக்கு வார்த்தைகளால் கொட்டு வைத்த குமாரசுவாமி ரதிதேவியை அழைத்துக் கொண்டு சென்றுவிட...
“சாரி...” இளவரசி தந்தைக்காகக் கணவனிடம் வருத்தம் தெரிவிக்க...
“ப்ச் விடு... அவரைப் பத்தி தான் தெரியுமே.” பரதன் சாதாரணமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
குமாரசுவாமி ரதிதேவியை அழைத்துக் கொண்டு தனியே வந்தவர்... அவளது தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க... அதில் அவள் கதிகலங்கி போனாள். அவள் கண்களில் கண்ணீர் திரள தந்தையைப் பார்த்து,
“அப்பா...” என்க...
“ஆம்பளைங்க கூட என்ன பேச்சு? அதுவும் மொத்த பல்லையும் காட்டிட்டு.” அவர் கோபத்தில் உறும...
“அவர் எனக்கு அண்ணா மாதிரி.” அவள் தேம்பலுடன் சொல்ல...
“மாப்பிள்ளைக்குச் சொன்னது தான் உனக்கும். அண்ணா மாதிரி தான்... ஆனா அண்ணா இல்லை.” என்றவரை கண்டு அவளுக்கு 'ச்சீ' என்றாகி விட்டது. அவளால் தந்தையிடம் கோபத்தைக் காட்ட இயலாது. அதனால் அவள் தனது துக்கத்தைக் கண்ணீரில் கரைத்தாள்.
“ஒழுங்கு மரியாதையா ரூமில் போய் இரு. உன்னை ஊர் மேய வச்சிட்டு உன் அம்மாக்காரி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? எங்கே அவள்?” என்று குமாரசுவாமி மனைவியைத் தேடி செல்ல முயல...
“அம்மா கீதா கூட இருக்காங்க.” மணமகளான சித்தப்பா பெண்ணின் பெயரை சொல்லி ரதிதேவி அன்னையைக் காப்பாற்றி விட்டாள்.
“ம்...” என்ற உறுமலுடன் குமாரசுவாமி அங்கிருந்து சென்றுவிட...
ரதிதேவி அறையில் சென்று அடைந்து கொண்டாள். தந்தை பேசிய வார்த்தைகள் அவளை மிகவும் காயப்படுத்தி இருக்க... அவள் அழுது கொண்டே படுத்து கொண்டாள்.
மாலையில் எல்லோரும் வெளியில் செல்ல... ரதிதேவியோ வெளியில் செல்ல மறுத்து அறைக்குள் முடங்கிக் கொண்டாள். எவ்வளவு நேரம் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியும்? கண்ணாடி கதவுகளுக்கு அப்பால் இருந்த கடலின் அழகு அவளை வாவாவென்று அழைத்ததில்... அவள் கட்டிலில் இருந்து எழுந்து குளியலறை சென்று முகத்தைக் கழுவி கொண்டு வந்தவள், தலைமுடியை சீராக்கி கொண்டு வெளியில் வந்தாள். அறையில் இருந்து சில அடி தூரம் நடந்தால் கடல் வந்துவிடும்.
ரதிதேவி மெல்ல நடக்க ஆரம்பிக்க... மாலை நேர கடற்காற்று அவளது மனதினை சிறிது அமைதிப்படுத்தியது. ‘அப்பா என்ன புதுசாவா திட்டுறாரு? அதையே நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்க. சியர்அப் ரதி’ அவள் தனக்குத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டாள்.
ரதிதேவியின் தந்தை ஒரு ஆணாதிக்கவாதி. அவருக்குக் கீழே தான் வீட்டுப் பெண்கள் இருக்க வேண்டும். அதுவும் ஒரு அடிமை போன்று. புவனா வாய் பேச தெரியாத அப்பாவி. அதனால் அவரை வழிக்குக் கொண்டு வருவது எளிது. ஆனால் இந்தக் காலப் பெண்களான கண்மணி, இளவரசி, ரதிதேவி எப்படி அவருக்கு அடங்கிப் போனார்கள்? அங்கே தான் குமாரசுவாமி சாமர்த்தியமாகச் செயல்பட்டார். தன்னுடைய மகள்கள் என்றும் பாராது அவரது நா மகள்களிடம் நஞ்சை கக்கும்.
அதுவும் ஒரு பெண்ணை வீட்டோடு முடக்க ஆண் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் அவளது ஒழுக்கம். அதையே தான் குமாரசுவாமி பின்பற்றி மகள்களை அடக்கி வைத்தார். பெண்களும் தங்களது ஒழுக்கத்தைத் தந்தை கேள்விக்குறியாக்கவும் அதில் பயந்தே போனார்கள். போதாக்குறைக்கு ‘என்ன பெண்களை வளர்த்து வச்சிருக்க? ஒருவேளை நீயும் அப்படித்தானோ?’ என்று சொல்லி சொல்லியே அவர் புவனாவை வறுத்தெடுத்து விடுவார். தங்களால் அன்னைக்குத் தலைக்குனிவு என்று எண்ணிய பெண்கள் வேறுவழியின்றித் தந்தைக்கு அடிப்பணிந்து போகத் தொடங்கினர்.
கண்மணி, இளவரசிக்கு திருமண வயது வந்ததும் குமாரசுவாமி அவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். வரும் மாப்பிள்ளை தனது சொல் பேச்சு கேட்டு, தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று எண்ணிய குமாரசுவாமி வசதி குறைந்த இடத்தில் இருந்து மகேஷ், பரதனை தேர்ந்தெடுத்தார். கண்மணி, இளவரசி இருவரும் மனதால் கூடத் தந்தைக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் தந்தை சொல் கேட்டு, அவர் பார்த்த மணமகன்களுக்குச் சரியென்று சம்மதம் கூறினர்.
நல்லவேளை இருவருக்கும் வாய்த்த கணவன்மார்கள் மிகவும் நல்லவர்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இருந்தாலும் குமாரசுவாமிக்கு ஒரே ஒரு குறை. இரண்டுமே பேத்திகளாய்ப் போனது தான்.
ரதிதேவியும் எம்பிஏ படித்து முடித்து விட்டாள். இனி குமாரசுவாமி அவளுக்கும் மணமகனை தேட தொடங்கி விடுவார். அதற்குப் பயந்தே ரதிதேவி வேலைக்குச் சேர்ந்து விட்டாள். அவளுக்கு அத்தனை வசதி இருந்தும் அவள் வேறு நிறுவனத்தில் இப்போது தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அதற்கே குமாரசுவாமி சத்தம் போட தான் செய்தார். ஆனால் ரதிதேவி வேலைக்குச் செல்வதில் உறுதியாக இருந்தாள்.
“வரன் தகைந்தால்... கல்யாணம் பண்ணிக்கணும். போகிற இடத்தில் காதல் அது இதுன்னு எதையாவது இழுத்துட்டு வந்த... என்னோட இன்னொரு முகத்தைப் பார்ப்ப.” குமாரசுவாமி கட்டளையும், மிரட்டலுமாய்த் தான் அவளை வேலைக்கு அனுப்பி வைத்தார்.
ரதிதேவி தனது படிப்பு, வேலை விசயத்தில் மட்டும் தந்தையிடம் அமைதியாக, அழுத்தமாக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டாள். இது இரண்டும் பெண்களுக்கு அவசியம் என்று அவள் உணர்ந்தே இருந்தாள். அதிலும் அக்காக்களின் சலுகை வேறு. அதனால் குமாரசுவாமியால் கடைசிப் பெண்ணிடம் தனது ஏகாதிபத்தியத்தைக் காட்ட முடியவில்லை.
எல்லாவற்றையும் எண்ணியபடி ரதிதேவி கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது... ஆணும், பெண்ணும் கலகலவெனச் சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பி பார்க்க... அங்கு அழகு நிலையத்தில் பார்த்த ஆணும், பெண்ணும் கடற்கரை மணலில் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தனர். அதைவிட அவர்கள் உடுத்தி இருந்த உடை காண்போர் கண்களைக் கூச செய்தது. ஆண் கீழாடை மட்டும் உடுத்தியிருக்க, பெண் நீச்சல் உடை என்ற பெயரில் உள்ளாடைகளை உடுத்தி இருந்தாள். அதைக் கண்டு அவளுக்கு எரிச்சலாக வந்தது.
ரதிதேவி எரிச்சலுடன் விழிகளை மூடியபடி ஒரு நிமிடம் அப்படியே நின்றாள். பிறகு அவள் தோள்களைக் குலுக்கிக் கொண்டு மேலே நடக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவளது விழிகள் பிடிவாதமாய் அவர்கள் பக்கம் பார்த்தது.
அந்தப் பெண்ணவளை கடற்கரை மணலில் சாய்த்த ஆண் அவள் மேல் படர்ந்து முத்தமழை பொழிந்தான். ரதிதேவி அதைப் பார்த்தபடி திகைத்திருக்க... அடுத்து அந்த ஆண் பெண்ணவளின் நாபியில் மாட்டியிருந்த வளையத்தைக் கடித்து முத்தமிட்டு அங்கேயே தேங்க... இங்கே இவளுக்குத் தூக்கிவாரி போட்டது.
“நாகரீகமற்ற ஆதிவாசிகள்...” ரதிதேவி கோபமாய் முணுமுணுத்துக் கொண்டு தனது அறையை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
நிம்மதியாக நடக்க முடிகிறதா? என்று அவளுக்கு உள்ளுக்குள் முணுமுணுப்பு வேறு. அங்கு முக்கால்வாசி பேர் அப்படித்தான் இருந்தார்கள். அது எல்லாம் அவளது கண்களுக்குப் புலப்படவில்லையோ? கோவாவிற்கு வந்துவிட்டுக் கோவிலில் பூஜையா செய்ய முடியும்? சிறு பெண்ணுக்கு அந்த அறிவு இல்லையோ!
*******************************
கிருஷ்ணபிரசாத் தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதி அறையில் செயலாளர் மதுரனுடன் எதைப் பற்றியோ தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது அலைப்பேசி அழைத்தது. யாரென்று விழிகளைத் திருப்பிப் பார்த்தவன், அதில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணை கண்டதும் அவன் அழைப்பை எடுக்கவே இல்லை. அவர் இதுவரை அவனுக்கு எண்ணிலடங்கா அழைப்புகளை எடுத்திருந்தார். அவன் எதையும் எடுத்து பேசவில்லை. அவன் அமைதியாகத் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மகன் அழைப்பு எடுக்கவில்லை என்றதும் சாம்பவி மதுரனுக்கு அழைத்திருந்தார். மதுரன் தனது அலைப்பேசியைப் பார்த்தபடி கிருஷ்ணபிரசாத்தை கேள்வியாகப் பார்த்தான். முதலாளி சொன்னால் மட்டுமே அவனால் அழைப்பை எடுக்க முடியும்.
“நான் ஃபோன் எடுக்கலைன்னதும்... உனக்கு ஃபோன் போட்டுட்டாங்களா?” கிருஷ்ணபிரசாத் கேலியாய் கேட்க...
“ஆமாம் சார்...” மதுரன் தலையைச் சொறிந்தான்.
“ம், எடுத்து பேசு. அவங்க பிபியை கொஞ்சம் ஏத்துவோம்.” கிருஷ்ணபிரசாத் எள்ளலாய் சொன்னபடி வேடிக்கை பார்ப்பதற்கு ஏதுவாகச் சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
மதுரன் சாம்பவி அழைப்பினை உயிர்ப்பிக்க... கிருஷ்ணபிரசாத் ‘ஸ்பீக்கரில் போடு’ என்று சத்தம் இல்லாது வாயசைத்தான். மதுரன் அவன் சொன்னதைச் செய்தான்.
“ரெண்டு பேரும் எங்கடா இருக்கீங்க?” சாம்பவி எடுத்தவுடன் கோபக்குரலில் கேட்க...
மதுரன் கேள்வியாகக் கிருஷ்ணபிரசாத்தை பார்த்தான். அவன் ‘சொல்லு’ என்பது போல் தலையசைக்க...
“கோவா மேடம்.” மதுரன் பவ்யமாகப் பதிலளிக்க...
“இங்கே அத்தனை வேலைகள் மலை போல் குவிந்து காத்துக்கிட்டு இருக்கு. அங்கே கோவாவில் போய்க் கூத்தடிச்சிட்டு இருக்கீங்களா?” சாம்பவி எகிற தொடங்க...
“ஐயோ மேடம், அப்படி எல்லாம் இல்லை.” மதுரன் அலறினான்.
“நீ அப்படி இல்லைன்னு தெரியும். நீ தங்கம்ன்னு எனக்குத் தெரியும். ஆனா நான் ஒண்ணு பெத்து வச்சிருக்கேனே. அவனைத் தான் சொல்றேன். கோவா போய்ப் பெண்களோடு கூத்தடிச்சிட்டு இருக்கானா?” சாம்பவி வார்த்தைகளில் மதுரன் கிருஷ்ணபிரசாத்தை பாவமாகப் பார்த்தான். அவனோ கூலாக ‘ஆமாம்’ என்று சொல்லும்படி வாயசைக்க... மதுரனோ மறுப்பாய் தலையசைத்துவிட்டு,
“அப்படி எல்லாம் இல்லை மேடம். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்து இருக்கோம். அத்தோடு ஒரு பிசினஸ் டீல் ஒண்ணு பேசி முடிக்கப் போறோம்.” என்று அவசரமாகக் கூற...
“கோவாவில் பிசினஸ் டீல்? அது என்ன டீல்ன்னு எனக்குத் தெரியாதா?” அதற்கும் சாம்பவி அடங்காது ஆட...
“மும்பையில் முடிக்க வேண்டிய பிசினஸ் டீல் மேடம். அதைச் சார் இங்கே...” மதுரன் சொல்லி முடிக்கும் முன் கிருஷ்ணபிரசாத் மதுரனின் அழைப்பேசியைப் பிடுங்கி அதை அணைத்து இருந்தான்.
“சார்...” மதுரன் திகைத்து போய் அவனைப் பார்க்க...
“நீ போகலாம் மது. மார்னிங் மேரேஜ் முடிச்சிட்டுப் பிசினஸ் டீல் பேச போகணும். நீ ரெடியா இரு.” கிருஷ்ணபிரசாத் அவனுக்குக் கட்டளை பிறப்பிக்க...
“எஸ் சார்...” என்ற மதுரன் போகாது நின்று அவனையே பார்த்திருந்தான். அன்னையின் பேச்சினால் அவனது முகம் சுணங்கி இருக்கிறதா? என்று...
“என்னடா?” கிருஷ்ணபிரசாத் சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க...
“நத்திங் சார்.”
“அப்போ கிளம்பு.” என்றவன் சிகரெட்டை வாயில் வைத்து ஆழ புகைத்தான்.
கிருஷ்ணபிரசாத் அன்னையின் பேச்சிற்கு ஒன்றும் பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை. ஒன்று கோபம் கொள்ள வேண்டும். அல்லது வருத்தம் கொள்ள வேண்டும். இரண்டுமே அவனுக்கு இல்லை. அனைத்தையும் அவன் சாதாரணமாகக் கடந்திருந்தான்.
மறுநாள் திருமண நடக்கும் இடம் பரபரப்பாக இருந்தது. ரதிதேவி அங்குமிங்கும் பரபரப்பாக ஓடி கொண்டிருந்தாள். அவள் இப்படி அலைந்து கொண்டிருப்பது குமாரசுவாமிக்கு பிடிக்கவில்லை தான். ஆனாலும் அவர் தம்பியின் முகத்திற்காக அமைதி காத்தார்.
மணமகன் கிருஷ்ணபிரசாத்தின் நண்பன். அதனால் அவர்களது நண்பர்கள் குழாம் அனைத்தும் அங்கு வந்திருந்தது. எல்லாமே பெரிய இடத்துப் பிள்ளைகள். அதில் ஆண், பெண் இருபாலரும் அடக்கம். அதில் இருந்த ஒருவன் ரதிதேவியின் பின்னே தனது கண்களை அலைய விட்டான். இந்தக் காலத்தில் இவ்வளவு நீண்ட கூந்தலுடன் ஒரு பெண் இருப்பாளா? என்று அவனுக்கு அதிசயமாக இருந்தது. அதிலும் அவள் பட்டுப்புடவையை உடுத்திருந்த பாங்கு அத்தனை பாந்தம். சிறிதும் கவர்ச்சி இல்லாது அவள் ஆடை உடுத்தியிருந்த நேர்த்தி அவனை மிகவும் கவர்ந்தது.
“டேய், அந்தப் பொண்ணைப் பாரேன்.” அவன் கிருஷ்ணபிரசாத்தின் காதை கடிக்க...
மணமேடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணபிரசாத் நண்பன் அழைத்ததைக் கண்டு திரும்பி, “யார்?” என்று கேட்டான்.
“அந்த லைட் பிங்க் சேரி.” நண்பன் சொன்னது கேட்டு கிருஷ்ணபிரசாத் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவன் கண்ட போது ரதிதேவியின் பின்பக்கமே தெரிந்தது. அவளது நீண்ட கூந்தலே அவனுக்கு முதலில் தரிசனம் தந்தது.
“அந்தப் பொண்ணுக்கு என்னடா?” கிருஷ்ணபிரசாத் ரதிதேவியைப் பார்த்தபடி கேட்டான்.
“ரொம்ப ஹோம்லியா இருக்கிறாள்ல்ல.” நண்பன் ஜொள்ளு விட்டுக் கொண்டே கூற...
“ஹோம்லி கேர்ள் எல்லாம் நமக்கு எதுக்கு?” கிருஷ்ணபிரசாத் கிண்டலாய் நண்பனை பார்த்தான்.
“ம், அதுவும் சரி தான். பார்த்து ரசிக்க மட்டுமே அவங்க லாயக்கு. மத்தபடி நோ யூஸ்.”
“பிறகு என்ன? அவளைப் பார்க்கிறதை விட்டுட்டு வந்த வேலையைப் பார்.” என்ற கிருஷ்ணபிரசாத் மீண்டும் ரதிதேவியைப் பார்த்தான்.
ரதிதேவி ஏதோ மன உந்துதலில் திரும்பி பார்த்தாள். அங்குக் கிருஷ்ணபிரசாத் தன்னைப் பார்த்து கொண்டிருப்பதைக் கண்டு அவள் திடுக்கிட்டு போனாள். அவளது மனக்கண்ணில் நேற்றைய சம்பவங்கள் வலம் வந்தது. அதன் விளைவு அவள் அவனை முறைத்து பார்த்தாள். திடுமென அந்தப் பெண் முறைத்ததும் கிருஷ்ணபிரசாத் புரியாது அவளைப் பார்த்தான். அவளோ உதட்டை சுளித்துக் கொண்டு வெடுக்கென்று திரும்பி கொண்டாள். அவளது செயலில் அவனையும் அறியாது அவனது உதடுகளில் புன்னகை தோன்றியது. அவன் புன்னகையுடன் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
சில நொடிகளில் கிருஷ்ணபிரசாத் ஏதோ தோன்ற மீண்டும் ரதிதேவி நின்ற திசையைப் பார்க்க... அப்போதும் ரதிதேவி அவனைத் தான் முறைத்துக் கொண்டு இருந்தாள். அவனுக்கு அவளது முறைப்புச் சுவாரஸ்யத்தைக் கொடுக்க... அவன் தனது இரு புருவங்களையும் தூக்கி ‘என்ன?’ என்பது போல் அவளைக் கண்டு கேட்க... அவள் பயந்து போய் அவசரமாகத் திரும்பி நின்று கொண்டாள். அவளது செயலில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் அதை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான்.
“ரதி, நீ போய்க் கீதா பக்கத்தில் நில்லு.” புவனா மகளிடம் கூற... ரதிதேவியும் மணமகள் பக்கத்தில் சென்று நின்றாள்.
அப்போது தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. முக்கியமானவர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்து இருந்தனர். அதனால் வந்தவர்கள் மணமக்களை வாழ்த்துவதற்காக வந்தனர். கிருஷ்ணபிரசாத்தும் அவனது நண்பர்களும் மணமேடைக்கு வந்தனர். எல்லோரும் மணமக்களை வாழ்த்தி, பரிசுகளைக் கொடுத்து விட்டுப் புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தனர். எல்லோரும் மணமகன் பக்கம் நின்றிருக்க... புகைப்படக்காரர் சிலரை மணமகள் பக்கம் சென்று நிற்க சொன்னார். கிருஷ்ணபிரசாத்தும், சிலரும் மணமகள் பக்கம் சென்றனர். அதில் எதிர்பாராத விதமாகக் கிருஷ்ணபிரசாத் மணமகளுக்கு அடுத்து நின்றிருந்த ரதிதேவி அருகில் சென்று நிற்க வேண்டியதாய் போயிற்று.
கிருஷ்ணபிரசாத் கூலாக அவள் அருகில் நின்றிருந்தான். அவளுக்குத் தான் நெருப்பின் மீது நிற்பது போலிருந்தது. அவனது அருகாமையில் அவள் நெளிந்தபடி நின்றிருந்தாள்.
“கொஞ்சம் இந்தப் பக்கம் நெருங்கி வாங்க.” புகைப்படக்காரர் மணமகள் பக்கம் இருந்தவர்களை நெருங்கி நிற்க சொல்ல...
கிருஷ்ணபிரசாத் ரதிதேவி அருகில் நெருங்கி நிற்க... ரதிதேவி மனம் ஒவ்வாது பின்னால் செல்ல முயன்றாள். அப்போது அங்கிருந்த வயர் தடுக்கி அவள் கீழே விழ போக... அவன் அவளது கரத்தினைப் பிடித்து அவளை விழாது தடுத்தான். அடுத்த நொடி அவள் முகத்தில் அருவருப்பைத் தேக்கியபடி அவனது கரத்தினை உதறிக் கொண்டு மணமேடையை விட்டு கீழே இறங்கி சென்றாள். அவன் புரியாது அவளைப் பார்த்தாலும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.
கிருஷ்ணபிரசாத் மணமேடையை விட்டு கீழே இறங்கும் போது தான் ரதிதேவியைக் கவனித்தான். அவளோ அவனைக் கவனிக்காது சானிடைசர் கொண்டு தனது கரத்தினைத் துடைத்து கொண்டிருந்தாள். சரியாகச் சொல்வது என்றால் அவன் தொட்ட அவளது கரத்தினை. அதைக் கண்டதும் அவனுக்குப் புரிந்து போனது, அவளது செயலுக்கான காரணம்...
அடுத்த நொடி கிருஷ்ணபிரசாத்தின் உதடுகள் கேலியாய் வளைந்தது.
தொடரும்...!!!
கருத்துத் திரி :
அத்தியாயம் : 4
ரதிதேவி கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொண்டிருந்தாள். ஒப்பனை என்றால் முகத்திற்கு அரிதாரம் பூசுவதல்ல. தலைமுடியை பின்னி, நெற்றியில் சிறு ஒட்டு பொட்டு மட்டும் வைப்பது தான் அவளது எளிமையான ஒப்பனை. நெற்றியில் பொட்டை ஒட்டி விட்டுத் தன்னைக் கண்ணாடியில் பார்த்தவள் உடுத்திருந்த பருத்தி புடவையின் மடிப்பினை ஒழுங்காக நீவி விட்டு கொண்டாள்.
அவளுக்குப் புடவை உடுத்துவதில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. ஆனால் அவளது தந்தை உடை விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடு உடையவர். வெளியில் செல்லும் போது புடவை, வீட்டில் பாவாடை, தாவணி என்று கலாச்சார உடைகளை மட்டுமே அணிய கட்டாயப்படுத்துவார். சுடிதார் கூட அவருக்கு நவநாகரீக உடை. குமாரசுவாமி கற்காலத்தில் பிறந்திருக்க வேண்டியவர். தந்தையை மனதில் தாளித்தபடி ரதிதேவி அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.
அறையை விட்டு வெளியில் வந்த ரதிதேவி உணவு உண்பதற்காக மேசையில் வந்தமர்ந்தாள். அங்கே குடும்பமே அமர்ந்து இருந்தது.
“குட்மார்னிங் சித்தி..” தண்மதியும், வெண்ணிலாவும் ஒன்று போல் அவளுக்குக் காலை வணக்கம் சொன்னார்கள். தண்மதிக்கு பதினோரு வயது. வெண்ணிலாவுக்கு ஐந்து வயது. அவளும் பதிலுக்குப் புன்னகையுடன் காலை வணக்கம் கூறியவள் உணவு உண்ண அமர்ந்தாள்.
புவனா அவளுக்குப் பரிமாற வந்தார். “வேண்டாம்மா... நானே போட்டுக்கிறேன்.” என்று மறுத்துவிட்டு அவளே இட்லியை எடுத்து தனது தட்டில் வைத்து கொண்டாள். அதுவும் சரியாக இரண்டு மட்டுமே.
அதை விடக் கூடுதலாக ஒரு இட்லி சாப்பிட்டாலும் குமாரசுவாமி சத்தம் போடுவார். 'உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு' என்று... ஔவையார் எதை நினைத்து இதைச் சொன்னாரோ! ஆனால் ஆண்கள் தங்களுக்குச் சாதகமாக இந்த வரிகளை மாற்றிக் கொண்டனர். சில வீடுகளில் இன்னமும் உணவில் ஆண்களுக்குத் தனிக் கவனிப்பு, பெண்ணுக்குத் தனிக் கவனிப்பு என்று தான் இருக்கிறது. அவரில் ஒருவர் இந்தக் குமாரசுவாமி.
தந்தையின் முன்னே ரதிதேவி பவ்யமாய் இரண்டு இட்லிகளை உண்டுவிட்டு தனது தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள். அங்குப் புவனா சுடச்சுட நெய் தோசை, அதுவும் முறுகலாக வார்த்துக் கொண்டிருந்தார். அவர் சூடாகத் தோசையை எடுத்துத் தட்டில் வைக்கவும்... ரதிதேவி அதை எடுத்து தனது தட்டில் வைத்து கொண்டாள்.
“ஏய், இது அப்பாவுக்குடி...” புவனா பதற...
“அவருக்கு அடுத்தத் தோசை ஊத்தி கொடுங்கம்மா.” என்ற ரதிதேவி நிதானமாகத் தோசை மீது தக்காளி சட்னியை ஊற்றி உண்ண ஆரம்பித்தாள்.
தந்தை சொன்னால் அவள் கேட்டு விடுவாளா? வாழ்வதே உண்பதற்காகத் தானே. உணவில் என்ன கஞ்சத்தனம் வேண்டி கிடக்கிறது?
புவனா அடுத்தத் தோசையைக் கல்லில் இருந்து எடுக்கவும்...
“ம்மா, பொடி தோசை ஒண்ணு... அப்படியே நெய் கொஞ்சம் தூக்கலா...” என்று ரதிதேவி ஆர்டர் போட...
“அம்மா பாவம்டி. இரு, நான் உனக்குத் தோசை ஊத்துறேன்.” கண்மணி தங்கைக்காக வேறு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசையை ஊற்ற தொடங்கினாள்.
குமாரசுவாமி பற்றிப் பெண்களுக்கு நன்கு தெரியுமாதலால்... அவர் கண்முன்னாடி மட்டுமே அவரது சட்டத்தை மதிப்பவர்கள்... அவருக்குப் பின்னே இப்படித்தான் தஙகளது விருப்பத்துடன் இருப்பர்.
பொடி தோசை, வெங்காயத் தோசை என்று எல்லாவற்றையும் உண்டு விட்டே ரதிதேவி இடத்தைக் காலி செய்தாள்.
ரதிதேவி வரவேற்பறைக்கு வரவும்... குமாரசுவாமியும் அங்கே வந்தார்.
“அப்பவே சாப்பிட்டுட்டியே. இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருந்த?” என்று அவர் மகளைச் சந்தேகத்துடன் பார்த்தார்.
“வயிறு கலக்குச்சுப்பா.” அவள் பாவமாய் வயிற்றைத் தடவ...
“வயசு தான் இருபத்திமூணாச்சு. ஆனா இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி. ச்சு, போ...” என்று முகத்தைச் சுளித்து விட்டு அவர் செல்ல...
‘ஹப்பாடி’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். ரதிதேவி தனது ஸ்கூட்டியில் ஏறி அலுவலகத்திற்குப் பறந்தாள்.
‘அப்பா கிட்ட சொன்ன பொய் உண்மையாகிரும் போலிருக்கே. இன்னைக்குக் கொஞ்சம் அதிகமா தான் சாப்பிட்டுட்டோம் போலிருக்கு.’ அவள் மனதிற்குள் நினைத்தபடி வண்டியை ஓட்டினாள்.
ரதிதேவி அலுவலகத்திற்குள் நுழைந்த போது... அலுவலகமே பரபரப்பாக இருந்தது. நேற்று அந்தச் செய்தி வந்ததில் இருந்து அலுவலகம் இப்படித்தான் பரபரப்பாக இருக்கிறது. அதாவது என்றுமே இந்தப் பக்கம் எட்டிப்பார்க்காத அவர்களது முதலாளி இன்று இங்கு வருகை தரவிருக்கிறாராம். அதற்குத் தான் இந்தப் பரபரப்பு.
ரதிதேவி கொஞ்சமும் அலட்டி கொள்ளாது தனது வேலையைப் பார்க்க தொடங்கினாள். சரியாகப் பத்து மணிக்கு எல்லோரும் அட்டென்சில் எழுந்து நிற்க... ரதிதேவியும் புரியாது எழுந்து நின்றாள். அங்கு அவர்களது புது முதலாளி வேக நடையுடன் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
சாட்சாத் கிருஷ்ணபிரசாத் தான் அவளது முதலாளியாக நடந்து வந்து கொண்டிருந்தான். அன்று திருமணத்தில் பார்த்த கிருஷ்ணபிரசாத் போன்று இலகுவான தோற்றத்தில் அவன் இல்லை. இன்று அவன் கடுமையுடன் கண்டிப்பும், கறாருமாய் இருந்தான். எல்லோரும் அவனுக்கு வணக்கம் வைக்க... அவனோ சிறு தலையசைப்பு கூட இல்லாது கம்பீரமாய் நடந்து வந்தான்.
அவனைக் கண்டதும் ரதிதேவி அசையாது சிலை போல் நின்றிருக்க... வேக நடையுடன் வந்தவனின் நடை அவள் அருகே வந்ததும் தேங்கி நின்றது. அவன் பக்கவாட்டாய் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான். ரதிதேவி பக்கத்தில் இருந்த பெண் அவளது தோளை இடித்து,
“குட்மார்னிங் சொல்லுடி.” என்று கூற...
“குட்... குட்மார்னிங் சார்.” ரதிதேவி தனது மடத்தனத்தை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டு அவனுக்குக் காலை வணக்கம் சொன்னாள்.
“உன்னால் தேர்ட்டி செகண்ட்ஸ் வேஸ்ட்.” அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி சொன்னவன் அங்கிருந்து சென்று விட்டான்.
“என்னம்மா ரதி, முதல் நாளே இப்படிப் பண்ணிட்டியே.” அவளது மேலாளர் வருத்தத்துடன் சொல்லிவிட்டு சென்றார்.
‘என்ன செய்து விடுவானாம்? தலையைக் கொய்து விடுவானா? அடப்போடா...’ அவள் அலட்சியமாக மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
ரதிதேவி நினைத்தற்கு மாறாக அன்று முழுவதும் அவள் கிருஷ்ணபிரசாத்தை சந்திக்கவில்லை. அதனால் அவள் நிம்மதியாகத் தனது வேலையைப் பார்த்தாள். அவளுடைய வேலையும் அவனுக்கு நேர் கீழே வரவில்லை. அதனால் அவள் தப்பித்தாள்.
வீட்டிற்குக் கிளம்ப வேண்டிய நேரம் வந்ததும் ரதிதேவி வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானாள். அப்போது மேலாளர் வந்து,
“இந்த ஃபைலை சார் கேட்டார். கொடுத்துட்டுக் கொஞ்சம் விளக்கமா அவருக்கு எடுத்து சொல்லிட்டு போம்மா.” என்றுவிட்டு அவளது பதிலை எதிர்பாராது சென்றுவிட்டார்.
“சார்...” அவளது அழைப்பு காற்றோடு கரைந்து போனது.
அலுவலக நேரம் முடிந்தாலும் பலர் அங்கே வேலை செய்து கொண்டு தான் இருந்தனர். அதனால் பயம் இல்லை. இருந்தாலும் அவனை நேரில் சந்திக்க அவளுக்கு வெறுப்பாக இருந்தது. வேறுவழியின்றி அவள் கோப்பை எடுத்துக் கொண்டு அவனது அறையை நோக்கி சென்றாள்.
கிருஷ்ணபிரசாத் அறையின் முன்னே வந்து நின்ற ரதிதேவி வேண்டாவெறுப்பாய் கதவை தட்டினாள். உள்ளே இருந்து எந்த அரவமும் கேட்கவில்லை. அவள் மீண்டும் தட்ட... பதிலில்லை. அதனால் அவள் கதவை திறந்து கொண்டு உள்ளே போனாள். உள்ளே சென்றவள் அங்கே கண்ட காட்சியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.
கிருஷ்ணபிரசாத் நாற்காலியில் அமர்ந்திருக்க... அவன் முன்னே இருந்த மேசை மீது ஒரு இளம்பெண் அமர்ந்து இருந்தாள். அது கூடப் பரவாயில்லை. அந்தப் பெண் அவன் புறமாய்க் குனிந்திருக்க... இருவரும் இதழ் முத்தம் பரிமாறி கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் அவளுக்கு அருவருப்பில் குமட்டி கொண்டு வந்தது.
கதவு திறக்கும் ஒலியில் இருவரும் விலகினர். அதுவும் பதறாது, நிதானமாக... ரதிதேவி அப்போது தான் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அன்று திருமணத்தின் போது அழகு நிலையம் மற்றும் கடற்கரையில் பார்த்த பெண் இவளில்லை. இவள் வேறு... அப்படி என்றால் நேரத்திற்குப் பெண்களை மாற்றும் இவன் பெண் பித்தன் தானோ! அவளுக்கு மீண்டும் குமட்டி கொண்டு வந்தது.
கிருஷ்ணபிரசாத் ரதிதேவியின் முகபாவனைகளை வைத்தே அவளது மனதினை தெரிந்து கொண்டான். தனக்குக் கீழே வேலை பார்ப்பவள் தன்னைக் கண்டு அருவருப்பாய் பார்ப்பதா? அவனுக்குக் கோபம் வந்தது.
அன்று திருமணத்திற்குச் சென்றுவிட்டு வந்த பிறகு கிருஷ்ணபிரசாத் ரதிதேவியின் முழுவிபரங்களையும் ஒரே நாளில் கண்டுப்பிடித்திருந்தான். அவள் அவனிடம் வேலை பார்ப்பது அவனுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. அதனால் தான் அவன் இந்த அலுவலகத்திற்கு வருகை தந்தது.
“கதவை தட்டிட்டு வரணும்ங்கிற மேனர்ஸ் தெரியாதா?.” கிருஷ்ணபிரசாத்தின் கர்ஜனையில் ரதிதேவியின் உடல் தூக்கிவாரி போட்டது.
“மேனர்ஸ் தெரியாத பட்டிக்காடு.” அவனது விழிகள் அவளது உடலில் சுற்றியிருந்த புடவையை ஏளனமாய்ப் பார்த்தது.
அவ்வளவு தான் தன்மான சிங்கத்திற்குத் தன்மானம் பொத்துக் கொண்டு வந்தது. அதிலும் அவனுடன் இருந்த பெண்ணும் அவளை ஏளனமாகப் பார்ப்பது போல் தோன்றியதும், அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“நான் கதவை தட்டிட்டு தான் வந்தேன். அப்புறம்... நான் ஒண்ணும் பட்டுக்காடு இல்லை. நானும் சென்னை தான்.” என்று அவள் அவனை முறைத்துக் கொண்டு பதில் கூறினாள். இவனுக்கு எல்லாம் எதற்கு மரியாதை? அவளுக்கு அத்தனை கோபம் வந்தது.
“சென்னையா? உன்னை மாதிரியான ஆளுங்க எல்லாம் சென்னையில் காலாவதியாகி ரொம்ப நாளாச்சு.” அவனும் எகத்தாளமாகவே பதில் கொடுத்தான்.
ரதிதேவி பதிலுக்குப் பதில் பேச பிடிக்காதவளாய் மேசையை நோக்கி நடந்து வந்தவள் கையிலிருந்த கோப்பை மேசை மீது வைத்துவிட்டு செல்ல முயல... கிருஷ்ணபிரசாத் நாற்காலியில் இருந்து எழுந்து அவள் முன்னே வந்து நின்றான். அவன் குறுக்கே நிற்பது தெரிந்தும் அவள் அவனைப் பார்க்காது வேறு எங்கோ பார்த்தபடி நின்றிருக்க... அவன் சொடக்கிட்டு அவளை அழைத்தவன்,
“உனக்கு வேணும்ன்னா கேளும்மா. அதுக்கு எதுக்கு முகத்தைத் தூக்கி வச்சிருக்க?” என்று நக்கலாய் கேட்க... அவனது வார்த்தைகள் புரியாது அவள் சரேலென அவனை நோக்கி திரும்பியவள்,
“எனக்கு என்ன வேணும்?” என்று புரியாது கேட்க...
“அதான்ம்மா முத்தம், முத்தம். மாமா உனக்கு முத்தம் கொடுக்கவா? இல்லை மொத்தமா எடுத்துக்கவா?” அவன் சரசத்துடன் கேட்டான். அவனது அநாகரீக பேச்சில் பிள்ளைப்பூச்சிக்கும் கோபம் வந்த்து.
“நீங்க முத்தம் கொடுக்கும் வரை என் கை என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா?” அவள் கோபமாய்ப் படபடக்க...
"இப்போ நான் உனக்கு முத்தம் கொடுக்கிறேன். உன் கைகள் என்ன பண்ணுதுன்னு பார்ப்போமா?” என்றபடி அவன் இன்னமும் அவள் அருகில் நெருங்கி வர...
ரதிதேவி அவனது அருகாமையில் முதலில் பயந்தாலும் பிறகு தைரியமாகத் தனது கையை அவனை நோக்கி ஓங்கி இருந்தாள். கிருஷ்ணபிரசாத் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவளது கையைத் தனது ஒற்றைக் கையால் பிடித்துத் தடுத்திருந்தான். அத்தோடு இல்லாமல் இன்னொரு கையால் அவளது மற்றொரு கரத்தையும் வலுவாகப் பிடித்திருந்தான். அவள் உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் தைரியமாகக் காட்டி கொண்டு அவனது பிடியில் இருந்து திமிறினாள்.
ரதிதேவி இயலாத நிலையைக் கண்டு கிருஷ்ணபிரசாத் வாய்விட்டுச் சிரித்தான். உடனிருந்த அந்தப் பெண்ணும் கேலியாய் சிரித்தாள். இருவரையும் பார்த்து ரதிதேவிக்கு அத்தனை அவமானமாக இருந்தது. அவள் கண்ணீரோடு அவனை முறைத்து பார்த்தபடி திமிறி கொண்டிருந்தாள்.
கிருஷ்ணபிரசாத் ரதிதேவியின் முகம் நோக்கி குனிய... ரதிதேவி வாயில் எச்சிலை திரட்டி அவனது முகத்தில் உமிழ போனாள். யாரின் நல்ல நேரமோ! மதுரன் கதவை திறந்து கொண்டு உள்ளே வர... கிருஷ்ணபிரசாத் ரதிதேவியைப் பிடித்திருந்த தனது கரங்களை விலக்கி கொண்டான். அவள் அவனை முறைத்துக் கொண்டே அவன் பிடித்திருந்ததால் கன்றிச் சிவந்திருந்த மணிக்கட்டு பகுதியை தடவி விட்டு கொண்டாள்.
“சார், மீட்டிங்குக்கு லேட்டாச்சு.” மதுரன் அறிவுறுத்தவும் தான் கிருஷ்ணபிரசாத்துக்கு ஞாபகம் வந்தது.
“நீ காருக்கு போ. நான் வர்றேன்.” மதுரனுக்கு உத்தரவிட்டவன், அங்கிருந்த பெண்ணிடம், “ரச்சி, இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்று அவளையும் அனுப்பி வைத்தவன், பிறகு ரதிதேவி பக்கம் திரும்பினான்.
ரதிதேவி அங்கிருக்கப் பிடிக்காது அங்கிருந்து செல்ல நினைத்தாள். அவளைச் சொடக்கிட்டு நிறுத்தியவன்,
“மேடம், நான் தொட்ட இடத்தைச் சானிடைசர் போட்டு கழுவலையா?” என்று நக்கலாய் கேட்க...
'இவனுக்கு எப்படித் தெரியும்?' அவள் திகைப்பாய் அவனைப் பார்த்தாள். அவன் அவளது திகைத்த பார்வையை ரசித்தபடி தனது மேசை மீதிருந்த சானிடைசர் பாட்டிலை கையில் எடுத்தான். அவள் யோசனையாய் அவனைப் பார்த்தாள். அவன் அவளைப் பார்த்துக் கொண்டே சானிடைசர் பாட்டிலின் மூடியை கழற்றியவன், அடுத்த நொடி சானிடைசர் திரவியத்தை அவளது தலைவழியே ஊற்றி இருந்தான்.
“என்ன பண்றீங்க?” அவள் திணறலுடன் கேட்டபடி முகத்தில் வழிந்த சானிடைசரை வழித்து எடுத்தபடி அவனைக் கண்டு கோபமாய்க் கேட்டாள்.
“நான் தொட்டு நீ கெட்டு போயிட்டல்ல... அதனால் உன்னைப் பதிவிரதை ஆக்குகிறேன்.” என்றவன் கோணல் சிரிப்புடன் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தான்.
ரதிதேவி விழிகளைச் சுருக்கி அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
“இந்தச் சிகரெட்டை உன் மீது எறிந்தால்... நீ எரிந்தால்... மீண்டும் சீதை போல் நீ உயிர்த்து வந்தால்... பதிவிரதையே தான்.” என்றவன் சிகரெட் தணலை அவளை நோக்கி கொண்டு வர...
ரதிதேவி சிறிதும் பயம் இல்லாது அசையாது சிலையென அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அதைக் கண்டு அவனது கரம் அசையாது அப்படியே நின்றது.
“உனக்குக் கொஞ்சம் கூடப் பயம் இல்லை.” அவன் கேட்டதும்... அவனை ஒரு பார்வை பார்த்தவள் பதில் கூறாது அங்கிருந்து சென்று விட்டாள்.
அன்று முழுவதும் ரதிதேவியின் ஒற்றைப் பார்வை கிருஷ்ணபிரசாத்தின் நினைவில் நின்று அவனை வதைத்தது என்றால் மிகையில்லை.
*************************
கிருஷ்ணபிரசாத் இரவு வீடு திரும்பிய போது எல்லோரும் உணவு மேசையில் உணவு உண்ண அமர்ந்து இருந்தனர். எல்லோரும் என்றால் அவனது பெற்றோர், அவனது இரட்டை தங்கைகள் நித்யா, வித்யா இவர்கள் நால்வரும். தங்கைகள் இருவரும் கல்லூரியில் படிக்கின்றனர்.
“கிருஷ், சாப்பிட வாப்பா.” கோகுல்நாத் மகனை உணவு உண்ண அழைக்க...
“அவனுக்கு வீட்டு சாப்பாடு எல்லாம் தொண்டையில் இறங்குமா? அவனை எதுக்குக் கூப்பிடுறீங்க?” சாம்பவி மகனை சிடுசிடுப்புடன் பார்க்க...
அன்னை சொன்னதை உடைத்தெறிய வேண்டி வேண்டுமென்றே கிருஷ்ணபிரசாத் உணவு மேசையை நோக்கி நடந்தான். அவனது வரவினை கண்டு அவனது தங்கைகள் இருவரும் முகத்தைச் சுளித்தனர். அவன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது நித்யா அருகில் சென்று அமர்ந்தான். உடனே நித்யா அமராது எழுந்து கொண்டாள்.
“நித்யா, உட்கார்.” சாம்பவி கண்டிப்புடன் கூற...
“இந்தப் பொம்பளை பொறுக்கி கூட எல்லாம் என்னால் உட்கார முடியாது.” நித்யா அங்கிருந்து செல்ல முயல... உடன் வித்யாவும் எழுந்து செல்ல...
அடுத்த நொடி அங்கிருந்த பீங்கான் தட்டு ஒன்று பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. இருவரும் திகைப்புடன் திரும்பி பார்த்தனர். கிருஷ்ணபிரசாத் தான் பீங்கான் தட்டை தரையில் ஓங்கி அடித்து உடைத்து விட்டு தனது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
தங்கைகள் இருவரும் அண்ணனின் செயலில் முதலில் திகைத்தாலும் பின்பு தோள்களைக் குலுக்கியபடி உணவு உண்ண வந்தமர்ந்தனர்.
“நித்யா, நீ பேசியது ரொம்பத் தப்பு.” கோகுல்நாத் மகள்களைக் கண்டிக்க...
“அவள் பேசினதில் என்ன தப்பு? அவன் பொறுக்கியா இருந்தால்... இவங்க என்ன, எல்லோரும் பேசத்தான் செய்வாங்க.” சாம்பவி ஆத்திரத்தில் கத்த...
“சரி, சாப்பிடுங்க.” கோகுல்நாத் அத்துடன் அந்தப் பேச்சை முடித்துக் கொண்டார்.
எல்லோரும் உணவு அருந்தி விட்டு வரவேற்பறையில் அமர்ந்து இருந்தனர். அதற்குள் கிருஷ்ணபிரசாத் வெளியில் கிளம்பி சென்றிருந்தான். கோகுல்நாத் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தது.
“பவிம்மா, கிருஷ் நல்லவனா? கெட்டவனா? என்கிற ஆராய்ச்சிக்கே நான் வரலை. ஆனால் அவனை இப்படிப் பேசாது இருக்கலாமே. நீ பேச, பேச தான்... அவன் நம்மை விட்டு ரொம்பத் தூரம் விலகி போயிட்ட மாதிரி எனக்குத் தோணுது.”
“இதில் என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கு? அவனைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அம்மான்னா மகன் தப்புச் செஞ்சா தட்டி கேட்கணும். அதைத் தான் நான் செஞ்சிக்கிட்டு இருக்கேன்.” சாம்பவி தனது தவறை ஒத்து கொள்ளவில்லை.
“அம்மான்னா கொஞ்சம் அரவணைத்தும் போகலாம்.” கோகுல்நாத் எடுத்து கூற...
அவ்வளவு தான் சாம்பவி கோபித்துக் கொண்டார். அப்பாவும், மகள்களும் அவரைப் பெரும்பாடு பட்டுச் சமாதானம் செய்தனர். அதன் பிறகே சாம்பவி இறங்கி வந்தார். பிறகு எல்லோரும் குடும்பமாய் அமர்ந்து திரைப்படம் பார்த்துச் சிரித்துப் பேசி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு பனிரெண்டு மணிக்குத் திரைப்படம் முடிந்ததும் எல்லோரும் படுக்க ஆயத்தமான போது... கிருஷ்ணபிரசாத் வீட்டிற்குள் நுழைந்தான். அவனது நடையிலேயே தெரிந்தது, அவன் போதையில் இருப்பது... அவனைக் கண்டு பெண்கள் மூவரும் முகத்தைச் சுளித்தனர். கோகுல்நாத் மகனை வேதனையுடன் பார்த்திருந்தார்.
கிருஷ்ணபிரசாத் யாரையும் கண்டு கொள்ளாது தனது அறையை நோக்கி சென்றான்.
“அதோ பாருங்க... அவன் சட்டையில் லிப்ஸ்ட்டிக் கறை. இவன் திருந்த மாட்டான்ங்க.” சாம்பவி பெருங்குரலெடுத்து கத்த தொடங்க...
கிருஷ்ணபிரசாத் அலட்சியமாகக் காதை குடைந்து விட்டுச் சென்றான். அவன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிடும் வரை அன்னையின் சத்தம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அறைக்குள் வந்ததும் அவன் அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து மது பாட்டிலை எடுத்தான். பின்பு அவன் அதை எடுத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் வந்தமர்ந்தான்.
மதுவை சிறிய கண்ணாடி குவளையில் ஊற்றியவன் அதைக் குடிக்காது அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது காதில் அவனது தங்கை நித்யா கூறிய ‘பொம்பளை பொறுக்கி’ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்தது. அதை இப்போதும் உணர்ந்தார் போன்று அவனது முகம் இறுகியது. அதே போன்றே மது குவளையைப் பிடித்திருந்த அவனது பிடியும் இறுகியது. கண்ணாடி குவளை எத்தனை நேரம் அழுத்தத்தைத் தாக்கு பிடிக்கும். இறுதியில் அது விரிசல் விழுந்து உடைந்து போனது.
உடைந்த கண்ணாடி குவளை அவனது கரத்தினைப் பதம் பார்த்தது. அடுத்த நொடி அவனது கரத்தில் இருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அவன் அதைக் கண்டு கொள்ளாது விழிகளை மூடி சோபாவில் சாய்ந்தமர்ந்து கொண்டான்.
அவனது கரத்தில் இருந்து வடிந்த இரத்தம் மெல்ல தரையில் தேங்கலானது.
தொடரும்...!!
Currently viewing this topic 11 guests.
Recently viewed by users: Annam Meyyappan 30 minutes ago, ahilla 50 minutes ago, Bhuvana 19 minutes ago, zasar 28 minutes ago.
Our newest member: Dhanalaxmi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed