All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

💖உன்னுள் தொலைந்தேனே 💖-கதை திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே💖

அத்தியாயம் : 1

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையை அடுத்து சுள்ளங்குடி என்ற அழகிய கிராமம்..

பெரும்பாலும் இவ்வூரில் உள்ள அனைவரும் சொந்த பந்தங்களே.....

இவ்வூரைச் சேர்ந்தவர்கள் ராஜவேலு மற்றும் தங்கதுரை...

இவர்கள் இருவரும் சிறுவயது தோழர்கள்,,, ஒரே பள்ளியில் தான் படித்தார்கள்..

ராஜவேலு இவருக்கு கிருஷ்ணவேணி என்ற ஒரு தங்கை உள்ளார்,,,,,, இவர்களின் தொழில் விவசாயம்......

தங்கதுரை இவரும் அதே ஊரில் விவசாயம் தான் செய்து வந்தார்...

கிருஷ்ணவேணிக்கு தங்கதுரை மீது ஒரு ஈர்ப்பு ,,,,,, ஆனாலும் வெளியே சொல்ல வில்லை,,,,,, எங்கே தன் விருப்பத்தை சொல்ல,,,,,அவர் மருத்துவிட்டால்,,,,,, அதுமட்டும் இல்லாமல் இருவரும் ஒரே இனம் என்றாலும் தங்கதுரையின் குடும்பம் கொஞ்சம் வசதி கம்மி,,,,,,,,, தன் அப்பா இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என்று அவள் அரிவாள்..... அதனால் தன் ஆசையை தன்னுள்ளேயே புதைத்து கொண்டாள்.....

ராஜாவேலுவிற்கு அதே ஊரில் உள்ள லட்சுமி என்ற பெண்ணை திருமணம் முடித்தனர்......

லட்சுமியின் ஒன்று விட்ட அண்ணன்னான கிருஷ்ணன் தன் தங்கையின் திருமணத்தில் கிருஷ்ணவேணியை பார்த்து பிடித்துபோக தன் வீட்டினர் சம்மதத்தோடு மணம் முடித்தார்.....

அவர்களும் அதே ஊரில் வசித்து வந்தனர்.....

தங்கதுரைக்கு மானாமதுரையை சேர்ந்த தமயந்தி எனும் பெண்ணை பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு மணம் முடித்தனர்...... தமயந்தி தன் வீட்டிற்கு ஒரே பெண்.....

அப்பா மானாமதுரையில் ஓரு இனிப்பு கடை வைத்துள்ளார்.....

அந்த ஊரிலே மிகவும் பிரபலமான கடை... அம்மா இல்லை......இவளின் 15 வயதிலே தவறிவிட்டார்..... அம்மாவின் மறைவுக்கு பின் தந்தையை ஒரு தாயாக பார்த்து கொண்டாள்.......

ராஜவேலு லக்ஷ்மி இவர்களின் வாரிசு : சத்யன் சக்திப்ரியா
கிருஷ்ணவேணி கிருஷ்ணன் இவர்களின் வாரிசு : நந்தினி
தங்கதுரை தமயந்தி இவர்களின் வாரிசு : அரவிந்த் மஹாலக்ஷ்மி......

லக்ஷ்மியும் தமயந்தியும் நல்ல ஒரு புரிதலோடு பழகி வந்தார்கள்.....


தமயந்தியின் அப்பா ஒருசில வருடங்களில் இறந்து விட,,,, அங்குள்ள கடையை பார்த்து கொள்ள வேண்டிய காரணத்தாலும்,,,,, ஊரில் விவசாயத்தில் நல்ல வருமானம் வரதத்தாலும்,,, தன் வயல்களை ராஜவேலுவிடம் விற்றுவிட்டு,,,, தன் வீட்டை அவர் பொறுப்பில் விட்டுவிட்டு மானாமதுரையில் குடி பெயர்ந்துவிட்டார்....

பண்டிகை மற்றும் திருவிழாவிற்கு மறக்காமல் தன் குடும்பத்தோடு சென்று தங்கி வருவார்....

தங்கத்துரை யின் குழந்தைகளுக்கு காது குத்து வைத்த சமயம் தமயந்தியின் அண்ணனாக முன் நின்று தாய்மாமன் முறை செய்தார் ராஜவேலு......

கிருஷ்ணவேணிக்கோ இது கொஞ்சமும் பிடிக்கவில்லை.....




தன் அண்ணனிடம் நீ எப்படி அந்த பிள்ளைகளுக்கு முறை செய்யலாம் என்று சண்டையிட்டாள் ....

அதற்கு ராஜவேலுவோ எனக்கு நீ வேற தமயந்தி வேற இல்லை என்று சொல்லிவிட்டார்.....


இருபது வருடங்களுக்கு பிறகு


மானாமதுரையில்........

" தமயந்தி எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கோ நாம திரும்பி வர 10 நாள் ஆகும்....... கடையை பாத்துக்க மூர்த்திக்கிட்ட சொல்லிருக்கேன் அவன் பாத்துப்பான் " என்றார் தங்கதுரை



((( மூர்த்தி சிறு வயதிலே தன் குடும்ப கஷ்டத்துக்காக இந்த கடைக்கு வேலைக்கு வந்தான்,,,,,, அவனுக்கு இந்த கடையின் எல்லாம் அத்துப்புடி...... இவன் பொறுப்பில் தான் கடையை விட்டுட்டு திருவிழாவிற்கு செல்வார்கள் தங்கதுரையின் குடும்பம். நல்ல விசுவாசியும் கூட. இவனுக்கு அகிலா என்னும் பெண்ணுடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது..... )))

" எங்க மகாலக்ஷ்மியை காணோம்".. என்றார் (( மக்களே இனி மகாலக்ஷ்மி மகா என்று குறிப்பிடுவேன் type பண்ண முடில 😥😥😥 ))

அதற்கு தமயந்தியோ "அத ஏன் கேக்குறீங்க,,,, திருவிழாக்கு போட்டுக்க ஒரு தாவணி எடுத்தா,,,, அதுக்கு ப்ளௌஸ் தைக்க கொடுத்த எடத்துல,,,, இன்னும் தச்சு கொடுக்கல,,,,,, அதுனால திருவிழாக்கு வரலன்னு அடம் பன்னிட்டு இருக்கா,,,,, நீங்களும் அரவிந்த்தும் குடுக்குற செல்லம் தான் இதுக்கெல்லாம் காரணம்...." என்றாள்

" விடுமா அவள் நம்ம வீட்டுல இருக்க வரைக்கும்தான் செல்லம் எல்லாம் போற இடத்துல எப்படி இருக்கும்னு யாருக்கு தெரியும்......" என்றார் தங்கதுரை.. .

"இதை சொல்லியே என் வாயை அடச்சுருங்க..."

சரி அரவிந்த் எங்க........


" அவன்தானே தங்கச்சி வருத்தப்பட்டா மனசு தாங்குமா உடனே அந்த டெய்லர போய் பார்த்துட்டு என்னன்னு கேட்டுட்டு வர போயிருக்கான்....." என்றாள்

" சரிமா அவன் வந்ததும் கடைக்கு வர சொல்லு கொஞ்சம் வேலை இருக்கு......" என்றுவிட்டு கடைக்கு கிளம்பினார் தங்கதுரை

சரிங்க நீங்க பாத்து ஜாக்கிரதையா போயிட்டு வாங்க.......

உள்ளே வந்த தமயந்தியோ இன்னும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் தன் மகளிடம்,,,,,,,,, அதான் அரவிந்து என்னன்னு பாத்துட்டு வர போய் இருக்கான்ல அப்புறம் ஏன் இன்னமும் மூஞ்சிய தூக்கி வச்சு இருக்கிற,,,,,, சாய்ங்காலம் ஊருக்கு போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணனும்,,,,, சமைக்கணும்,,,,,, நீ டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கலாம்ல்ல.... இப்படி ஏன் உட்கார்ந்து இருக்க....

" சரி சரி போறேன்......." என்றாள் மகா

அதை ஏண்டி முறைச்சுக்கிட்டே சொல்ற கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொல்லலாம்ல.....

ஹிஹிஹி போதுமா......


" இதுக்கு நீ சிரிக்காமவே இருந்திருக்கலாம்..... போற இடத்துல என்ன மொத்து வாங்க போறியோ....."என்று கூறிக்கொண்டே அடுப்பறைக்குள் சென்றார் தமயந்தி..........

அப்போது மகாவின் கண்ணுக்குள் ஒரு நொடி அவன் வந்து போனான்.......

அங்கே டைலர் கடையில் நம் கதையின் நாயகன் அரவிந்தோ கடைக்காரரிடம்,,,,, அண்ணே நைட் ஊருக்கு போகணும் கொஞ்சம் பார்த்து சீக்கிரம் தட்சு கொடுங்க......

அதற்கு அந்த டெய்லரோ "நான் என்ன பண்ணட்டும் தம்பி,,,,,, கடைல வேலை பாக்குற பையன் இன்னைக்குனு பாத்து வரல,,,,,,,,,,ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க நான் முடிச்சி கொடுத்தரேன்".... என்றான்




அப்போது அங்கே வந்த அவன் நண்பன் கதிர் "என்னடா அரவிந்த் காலைல இருந்து கடை பக்கம் காணோம்" என்று கேட்டான்

அதற்கு அரவிந்த் "இன்னைக்கு ஊருக்கு போறோம்டா அதான் சொன்னேனே திருவிழானு"....

"ஆமாம்டா மறந்துட்டேன் அதுக்கு ஏன்டா இவ்ளோ சலிப்பா சொல்ற"...... என்று கேட்டான் கதிர்

" என்னவோ தெரியலடா இப்பல்லாம் ஊருக்கு போகணும்னாலே வெறுப்பா இருக்கு"..... ((இதை சொல்லும் போது அவளின் முகம் கண்ணில் தோன்றி மறைந்தது ))

"நீ வர வர சரி இல்லடா என்னனு கேட்டாலும் சொல்லமாட்ட நீ ஊருக்கு போய்ட்டு வா வந்து பேசிக்கலாம்...... "என்றான் கதிர்......

" சரி மச்சான் வரேண்டா" என்று சொல்லி கதிர் கிளம்பிவிட்டான்

அரவிந்தனுக்கோ அவன் சென்றதும் ஒரு சில நியாபகங்கள் வந்து போயின.... அதை நினைத்ததும் அவளின் மேல் கோவம் பயங்கரமாக வந்தது......

அந்த நினைவுகளை நினைக்க விரும்பாமல் தன் மொபைலிலில்
இளைய ராஜா பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருந்தான்........






ஊரில்............

கிருஷ்ணவேணியோ இந்த வருடமாவது நந்தினிக்கு சத்யனை சம்மந்தம் பேசி முடிக்க வேண்டும் என்று நினைத்தால் ......

ஆனால் சத்யனோ தன் தேவதையை நினைத்து கனவில் டூயட் பாடி கொண்டிருந்தான்......

இங்கு ராஜவேலுவின் வீட்டில் அவர் மனைவி லக்ஷ்மியோ பிரியாவிடம் "துரை அண்ணன் வீட்ல இருந்து எல்லாரும் வராங்க,,,,,,, நைட் இங்கே தான் எல்லாருக்கும் விருந்து,,,,, நான் அதுக்கு எல்லாம் ரெடி பண்ணனும்,,,,,, நீ கொஞ்சம் முத்துவோட போயி அவுங்க வீட்டை சுத்தம் பண்ணிட்டு வரியா"... என்றார்

" போமா எனக்கு எவ்ளோ வேலை இருக்கு என்னை போய் வீடு சுத்தம் பண்ண சொல்ற..." என்றாள் பிரியா

அதற்கு லக்ஷ்மியோ "ஆமாம்டி உன்னோட வேலை என்னனு எனக்கு தெரியாதா அந்த வாண்டு பிள்ளைங்களோட சேந்துக்கிட்டு ஊர் சுத்தணும் அதானே ".... என்றார்

அய்யயோ அம்மா கரெக்டா கண்டுபிடிச்சிருக்கே இனி அட்வைஸ்ங்கற பேர்ல டார்ச்சர் பண்ணுமே,,,,, இதுக்கு அதுவே பெட்டெர்,,,,, "இப்போ என்னமா மாமா வீட்டை சுத்தம் பண்ணனும் அவ்ளோ தானே இதோ போறேன்......"

" ஏய்ய்ய் இந்தாடி" லக்ஷ்மி கூப்பிட கூப்பிட காது கேக்காதவல் போல ஓடிவிட்டாள்.....

" இவள வச்சிக்கிட்டு" என்று லக்ஷ்மி அழுத்து கொன்டே உள்ளெ சென்றாள்.....
மதியம் சாப்பிட வந்த ராஜவேலு லக்ஷ்மியிடம் " நைட் துரை வீட்ல இருந்து எல்லாரும் வராங்க அங்க எல்லாம் சுத்தம் பண்ணிட்டயா "

லக்ஷ்மியோ " காலைலயே ப்ரியாவோட நம்ம முத்துவை அனுப்பி எல்லாம் சுத்தம் பண்ண அனுப்பிருக்கேன்,,,,,, அண்ணி காலைலயே போன் பண்ணி என்னனா வேணும்னு சொன்னாங்க அதையும் வாங்கி குடுத்து விட்ருக்கேன்ங்க.... "

"அவங்க வர எப்டியும் 8 மணிக்கு மேலே ஆகிடும்.... "என்றார் ராஜவேலு

"தெரியும்ங்க அதான் நைட் இங்கேயே சாப்பிட சொல்லிருக்கேன் நாளைல இருந்து அண்ணி அங்க சமைச்சிக்கட்டும்...."என்றாள்

ராஜவேலு சாப்பிட்டு முடித்ததும் திணையில் வந்து அமர்ந்தார்.... அப்போ லக்ஷ்மியோ அவருக்கு வெற்றிலை மடித்து கொடுத்துவிட்டு மெதுவாக

"ஏங்க இந்த தடவை அண்ணன் வரும் போது கேக்குறீங்களா..... "என்றாள் லக்ஷ்மி

அவர் எதை பற்றி சொல்லவருகிறாள் என்று தெரிந்த ராஜவேலுவோ யோசையோடு வயலுக்கு சென்றார்.......

லக்ஷ்மியோ இந்த வருடமாவது நல்லது நடக்கணும் என்று மாரியம்மன்னை வேண்டி கொண்டு உள்ளே சென்றார்........

தொடரும்................
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends

நான் தான் கார்த்திகா ((கை புள்ளை))

💖உன்னுள் தொலைந்தேனே💖


முதல் அத்தியாயம் கொடுத்துள்ளேன்...... படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளை என்னிடம் இரண்டு வார்த்தை பகிர்ந்து கொள்ளுங்கள்...........








உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇

 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖 உன்னுள் தொலைந்தேனே 💖



ஒரு குட்டி டீ ☕☕☕☕

குடிச்சிட்டு எப்பிடி இருக்குனு சொல்லுங்கோ 🙂🙂🙂🙂

யூ டி இப்போ இல்லை 😐😐😐😐


தன் தேவதையை தனியாக சந்திக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் அவன்....

அப்போது அவனின் தேவதை
"அத்தை அத்தை அம்மா சாய்ங்காலம் கோவிலுக்கு போறாங்களாம் நீங்களும் வரிங்களானு கேட்டுட்டு வர சொன்னாங்க" என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தாள்....

இவனோ கண்கள் மின்ன அவளை ஒரு நொடி ரசித்து விட்டு மறைவில் நின்று கொண்டான்

அவனை கடந்து செல்லும் போது அவளின் நீண்ட ஜடையை பின்னாலிருந்து இழுத்து அவளை சிறை செய்தான்......

இவளோ முதலில் பயந்தவள் பின் தன்னவனின் ஸ்பரிசம் உணர்ந்து அவன் தொடுகையில் ஒரு நிமிடம் உருகி நின்றாள்...


மற்றது யூடியில் 🏃🏃‍🏃‍🏃‍🚶
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே💖


கணவர் சென்றதும் உள்ளே வந்த லக்ஷ்மியோ தன் மகனின் விருப்பம் நிறைவேற வேண்டுமென்று மனதில் எண்ணினாள்......


ஆம் அவளுக்கு முன்னே தெரியும்..... சென்ற திருவிழாவுக்கு வந்த போது சத்யனின் விழிகள் மகாவை சுற்றி வந்ததை கண்டு கொண்டார்...... மகனின் விருப்பம் அறிந்து தன் கணவரிடம் நம்ம சத்யனுக்கு மகாலட்சுமி கேட்போமா என்றாள்...

ஆனால் ராஜவேலுவோ தன் தங்கை மகள் நந்தினி இருக்கும்போது வெளியே பெண் எடுத்தால் நல்லா இருக்காது என்று நினைத்தார்......

கணவரிடம் இருந்து பதில் வராததால் என்னவென்று கேட்க அதற்கு அவரோ நந்தினி இருக்கையில் மகாவை பெண் கேட்டா தப்பா நினைக்க மாட்டாங்களா என்றார்........

லட்சுமிக்கோ மகனின் விருப்பத்தைச் சொல்ல பயம் எங்கே சொன்னால் தேவையில்லாத பிரச்சினைகள் வருமோ என்று.......

இதையெல்லாம் நினைத்தபடியே சமையல் செய்து கொண்டிருந்தார்........

இங்கே அவர்கள் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த பிரியாவின் கண்களில் பட்டது அவன் புகைப்படம்.... அதைப் பார்த்ததும் "போட்டோல எவ்வளவு அழகா சிரிக்கிற.... என்ன பார்த்தா மட்டும் ஏன் மொறச்சுக்கிட்டே இருக்கிற.... ஓ அப்பதான் முறைப்பையன்னு தெரியும".. என்று புகைப்படத்தை பார்த்து கேட்டாள்.... ((என்னவோ புகைப்படம் பதில் சொல்வது போல ))

முத்துவோ ஏதாவது சொன்னீங்களா அம்மணி என்றான்.....

அதற்கு பிரியாவும் "இல்ல இல்ல போட்டோ தூசியா இருக்குன்னு சொன்னேன் வேற ஒன்னும் இல்ல நான் தொடச்சிட்தான் நீ மத்த வேலையை பார் "..... என்றாள்..

இரவில் துறையின் குடும்பம் அவர்கள் ஊருக்கு செல்ல ஒரு கிலோ மீட்டர் நடந்து தான் போக வேண்டும்.....

ஊருக்குள் சென்று கொண்டிருக்கும்போது பொன்னம்மா பாட்டி "யாரு நம்ம துறையா எப்படி இருக்க ராசா" என்றார்.....

"ஆமா அப்பத்தா நான் தான்.... நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க" என்றார்...

"எனக்கு என்ன ராசா நல்லா தான் இருக்கேன் அந்த எமன் எப்ப வந்து கூப்பிட்டாலும் சந்தோஷமா போவேன்" என்றார்....

" ஏன் அப்பத்தா இப்படிலாம் பேசுற என்று வருத்தப்பட்டார் "தங்கதுரை....

"உண்மையை தானே சொன்னேன் ராசா சரி அது இருக்கட்டும் பசங்கள கூட்டிட்டு வந்தியா"...... என்றார்

" வந்திருக்காங்க அப்பத்தா முன்னாடி நடந்து போயிட்டு இருக்காங்க"..... என்றார்.....

" பசியாறிட்டீங்களா ராசா"..... என்றார்.....

" இன்னும் இல்ல அப்பத்தா.. வேலு வீட்டுக்கு வர சொன்னான் சாப்பிட..... போகலைன்னா கொச்சிக்குவான்....,"என்றார் தங்கதுரை

" ஆமா ராசா சாயந்திரம் வேலுவை பார்த்தேன் நீ வரேன்னு சொன்னான்...." என்றார்.....

"சரி ராசா பாத்து ஜாக்கிரதையா போ...." என்றார் பொன்னம்மாள் பாட்டி.......

"சரி அப்பத்தா நான் கெளம்புறேன் காலைல வீட்டுக்கு வாங்க......"என்றார்........

"சரி ராசா வாரேன்".......


இங்கு ராஜவேலுவோ வீட்டுக்கும் திண்ணைக்கு வீட்டுக்கும் திண்ணைக்கு 100வது முறையாக நடந்து கொண்டிருந்தார்........

இதைப்பார்த்த ப்ரியாவோ தன் அம்மாவிடம் அப்பா பண்றது கொஞ்சம் ஓவரா தெரியல.......





" இங்க இருக்கிற மானாமதுரையில் இதுதானே வராங்க.... என்னவோ அமெரிக்காவிலிருந்து வர மாதிரி இவ்ளோ பில்டப் பண்றாரு"...... என்றாள்.....

அதற்கு லட்சுமியும் "போடி வாலு" என்று அதட்டினார்.....

வெளியே சென்று தன் கணவரிடம் "ஏங்க எட்டு முப்பதுக்கு தானே பஸ் வரும் நடந்து வருவதற்கு அரை மணி நேரம் ஆகும் அவங்க வந்துகிட்டிருபாங்க நீங்க செத்த திண்ணையில உக்காருங்க"........ என்றார்


அதற்கு அவரோ சிரித்துக்கொண்டே "என்ன இருந்தாலும் என் பால்ய சினேகிதன் இல்லையா"........ என்றார்

இவர்கள் நட்பை பற்றி அறிந்த லட்சுமியும் ஒன்றும் கூறாமல் சிரித்துக்கொண்டே கணவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்......

அப்போது தூரத்திலேயே அவர்களைப் பார்த்து விட்ட ராஜவேலு "லட்சுமி சீக்கிரம் வா துரை வந்துட்டான்".......
என்று கூச்சலிட்டவாறு வாசலை நோக்கி ஓடினார்......

அவரைப் பார்த்த தங்கதுரையோ "மெதுவா வாடா நமக்கு வயசு ஆயிடுச்சு இன்னும் சின்ன வயசு கிடையாது" என்றார்.......
மஞ்சள்
தமயந்தியோ "எப்படி இருக்கீங்க அண்ணா" என்றார்

"நான் நல்லா இருக்கேன் நீ நல்லா இருக்கியா மா"........ " பசங்க எங்க"....... என்றார்........

வீட்டுக்கு போயிருக்காங்க "கொண்டுவந்த பையை வீட்டில் வைத்துவிட்டு நாங்கள் வரும் நீங்க முன்னாடி போங்கனு " சொன்னாங்க..... என்றாள்

இங்கு தங்கதுரையின் வீட்டில் மகாவோ " வாங்க போலாம் அம்மா தேடுவாங்க என்றாள்"..........

அரவிந்துக்கு அங்க போக பிடிக்கவில்லை என்றாலும் தன் மாமாவிற்காக சென்றான்..........







அரவிந்தனுக்கு ராஜவேலு என்றால் ரொம்ப பிடிக்கும். சிறுவயதில் வயலை ராஜவேலுவிடம் விற்றபோது அவரோ "வயலை நான் வாங்கிக் கொள்கிறேன் ஆனால் இதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கை நீங்கள் கட்டாயம் வாங்கிக்கணும் அப்பதான் வயலை வாங்கிகொள்ளவேன்'.... என்றார்.......

சொன்னதுபோலவே வருடம் ஒரு பங்கை அவர்கள் கணக்கில் போட்டுவிடுவார்

தங்கதுறையும் அந்த பணத்தை எடுக்கவில்லை அது ஒரு சேமிப்பாக இருந்துவந்தது........

அரவிந்துக்கு ராஜ வேலுவின் வீட்டில் உள்ள அனைவரையும் பிடிக்கும் ஒருவரைத் தவிர.......

அரவிந்தம் மஹாவும் வீட்டை பூட்டி விட்டு ராஜவேலு மாமா வீட்டிற்கு சென்றனர்.......

மகாவோ தன்னவனை பார்ப்பதற்காக வேகமாக சென்றாள்.......

"அரவிந்தோ இருட்டில் பொறுமையாக போ மகா ஏதாவது பூச்சி பட்டு இருக்கும்"........ என்றான்

"அதெல்லாம் என்ன ஒன்னும் செய்யாது நீ வா சீக்கிரம்" ..... என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றாள்....

இங்கு சத்தியனோ தன்னவளை பார்ப்பதற்காக மொட்டை மாடியில் நின்று அவள் வரும் பாதையை பார்த்துக் கொண்டிருந்தான்.........

தூரத்தில் தெரிந்த அவள் உருவத்தை வைத்தே கண்டுபிடித்து வேகமாக படிகள் இருந்து கீழே இறங்கி வந்தான்....

அவன் வருவதை வைத்தே லக்ஷ்மியும் பிரியாவும் மகா வந்துவிட்டால் என்பதை புரிந்துக் கொண்டார்கள்.....

இருவரும் அவர்களுக்குள் தனித்தனியே சிரித்துக் கொண்டார்கள்,,, இருவருக்குமே தெரியும் அவனின் காதலைப் பற்றி...

தங்கையும் அம்மாவும் தன்னை கேலியாக பார்ப்பதை கண்டு கொண்டவன் அமைதியாக முற்றத்தில் நின்று கொண்டான்...

உள்ளே வந்த அரவிந்த்தை பார்த்து "எப்படிடா இருக்க" என்று அணைத்துக் கொண்டான்..... அவனை அணைத்த வாரே பின்னால் நின்ற மகாவை பார்த்து கண்சிமிட்டினான்......

மாகவோ வெட்கத்தோடு தலை குனிந்துகொண்டாள்.....

தமயந்தியோ "சத்யா நாங்க வந்து அறை மணி நேரம் ஆகுது எங்களை கண்டுக்கல அரவிந்த்தை பாத்ததும் ஓடிவர்யா" என்று வம்பு செய்தார்

சத்யனோ ஒரு அசட்டு சிரிப்பை சிரித்துவிட்டு "கொஞ்சம் வேலையா இருந்தேன் அத்தை" என்றான்

ப்ரியாவோ "மகாவை உங்களோட கூட்டிட்டு வந்துருந்தா கண்டிருந்திருப்பான்" என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள்....

அரவிந்தோ எல்லாரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு ப்ரியாவின் பக்கம் திரும்பவே இல்லை.....

இதை கண்டுகொண்ட ப்ரியாவோ முதலில் கோவப்பட்டாலும் பின் இவன் இப்டி தான் என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.....

பின்பு லக்ஷ்மி அனைவரையும் சாப்பிட அழைத்து தலைவாழை இலையில் நடபத்து பறப்பது ஊர்வது அனைத்தையும் வைத்திருந்தாள்.....

இதை பார்த்ததும் அரவிந்தோ கண்கள் வெளியே தெறிக்கும் அளவுக்கு முழித்தான்....

இதை சரியாக பார்த்த ப்ரியாவோ தன் திட்டத்தை போட்டாள்.....

அதன்படி என்னையா கண்டுக்க மாற்ற இரு வரேன் என்று விட்டு அரவிந்துக்கு இவளே பரிமாறினாள் .........

ஏற்கனவே கடுப்பில் இருந்த அரவிந்தோ இவளின் திட்டத்தை அறிந்து ஒன்னும் சொல்ல முடியாமல் பல்லைக்கடித்து கொண்டு அமர்ந்தான்.....

ப்ரியாவோ வேண்டுமென்றே இலையில் நிறையா வைத்தாள் அதுமட்டும் இல்லாமல் "நல்லா சாப்பிடுங்க மாமா" என்ற உபசரிப்போடு .....


((இப்போ புரியுதா மக்களே அரவிந்துக்கு ப்ரியாவை ஏன் பிடிக்கலைனு))

அவள் மேலும் தப்பில்லை எல்லோரிடமும் பேசும் அவன் இவளிடம் மட்டும் பேசாததால் இப்படிலாம் நடத்துகிறாள் ஆனால் இவள் இப்டி நடப்பதால் தான் இவனுக்கு பிடிக்கவில்லை என்று யார் சொல்வது.....

அரவிந்தோ ஒன்றும் சொல்லமுடியாமல் சாப்பிட்டான். சத்யனும் மகாவும் ஒருவரையொருவர் பார்வையால் வருடிக்கொண்டே‌ சாப்பிட்டார்கள்.......

தமயந்தியும் "அரவிந்த் இவ்வளவு சாப்பிட மாட்டானே இந்த பொண்ணு இது தெரியாமல் கவனிக்கிறேன்னு அவனை கடுப்பு ஏத்திக்கிட்டு இருக்கே"..... என்று‌ கவலைப்பட்டார்......

அனைவரும் சாப்பிட்ட பிறகு தங்கதுரையும் ராஜவேலுவும் அந்த வருட பருவ மழை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.......

லட்சுமியும் தமயந்தியும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்..........

அரவிந்தும் சத்தியனும் பேசிக்கொண்டிருந்தார்கள் அப்போது சத்தியனோ "என் தங்கச்சி உன்னை பழி வாங்கிட்டா போல " என்று வம்பிழுத்து கொண்டிருந்தான்.......

அரவிந்தோ "பேசாம போயிரு மச்சான் நான் அவ மேல செம காண்டுல இருக்கேன்"... என்றான் அரவிந்த் .........

‌‌"அது என்னவோ உன்கிட்ட மட்டும்தான் இப்படி நடந்துக்கிறா"......என்றான் சத்யன்

அரவிந்த்தோ கடுப்பில் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான்.....

இங்கு பிரியாவோ மகாவை ஓட்டிக் கொண்டிருந்தாள்......

அப்போ தங்கதுரை "சரி வேலு எல்லோரும் கிளம்புறோம்"...என்றார்


அப்போது லஷ்மி தமயந்திக்கும் மகாவிற்கும் குங்குமம் மற்றும் பூ கொடுத்து வழியனுப்பி வைத்தார்......

மகா குங்குமம் எடுக்கும் போது சத்யனை பார்த்தாள்......

சத்யனோ தான் வைத்துவிடுவது போல் சைகை செய்தான்.......

மகாவின் முகமோ அந்த குங்குமம் நிறத்திற்கு மாறிவிட்டது.......

தங்கதுரையின் குடும்பம் கிளம்பினார்கள்.....

மறுநாள் காலை அழகாக விடிந்தது....கிராமத்துக்கே உரிய பரப்பரப்போடு பெண்கள் வயல் வேலைகளுக்கும்‌ ஆண்கள் சிலர் மாட்டை ஓட்டிக்கொண்டும் பலர் டீ கடையில் வெட்டி பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தனர்....

ராஜவேலுவும் தங்கதுரையும் அப்போது அங்கு வந்தார்கள்.......

அனைவரும் தங்கதுரையை நலம் விசாரித்தனர்......

கூட்டத்தில் ஒரு ஆசாமி. "யப்பா‌ துரை ஒம்பொன்னுக்கு வரன் எதும் பாக்குறியா"......என்று கேட்டார்

அதற்கு துரையோ "ஆமாம்‌ சித்தப்பா தெரிஞ்ச பக்கம் எல்லாம் சொல்லி வச்சிருக்கேன் நீங்களும் நல்ல இடம் இருந்தா சொல்லுங்க" ........என்றார்..

அதற்கு அவரோ‌ "என் மச்சினனோட‌ தூரத்து சொந்தத்தில ஒரு பையன் இருக்கிறதா சொன்னான் ,,,,,பையன் மதுரையில் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கானாம் ,,,,ஒரு அக்கா இருக்காம் அதையும் வெளியூர்ல கட்டி கொடுத்திருக்காங்களாம் ...... பாக்கலாமா"....என்றார்...

தங்கதுரையோ "திருவிழா முடியட்டும்‌ பாக்கலாம் சித்தப்பா".......என்றார்

ராஜவேலுவுக்கோ லஷ்மி சொன்ன விஷயம் வந்து போனது.....


கூட்டத்தில் வம்பிழுக்கும் ஒரு ஆசாமியோ‌ "ஏன் துரை வெளிய தேடுற அதான் நம்ம வேலு வீட்டுலயே பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்க வேண்டியது தானே" என்றார்......

((((மகனே இது மட்டும் அரவிந்த் கேட்டான் உன் மண்டையை ஒடச்சி பக்கோடா போற்றுப்பான்)))))

அதற்கு மற்றொருவரோ 'அதெப்படி கிருஷ்ணவேணி மக இருக்கும் போது வெளிய பொண்ணெடுத்தா சரி வருமா" என்றார்.......

தங்கதுரையும் ராஜவேலுவும் ஒன்னும் பதில் சொல்லாமல் வயலுக்கு புறப்பட்டார்கள்.....இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.....

அந்த அமைதியை தங்கதுரையே களைத்தார்....

"என்ன யோசனை வேலு ,,,,,,,அவங்களுக்கு பொழுதுபோக எத பத்தியாவது பேசனும் ,,,,,,,இன்னைக்கு நம்ம மாட்டிக்கிட்டோம்",,,,,,என்றார்.........

அதற்கு ராஜவேலுவோ "அதுக்கில்லை துரை லக்ஷ்மியும் சத்யனுக்கு நம்ம மகாவை கட்டனும்னு ஆசை"...... என்றார்

தங்கதுரையோ "நந்தினி இருக்கும் போது மகாவை கேட்டா சரிவராது" என்று சொன்னார்......

" அதே தான் நானும் நினைக்கிறேன் துரை என்ன தப்பா நினைச்சிடாதடா".... என்றார்

அதற்கு தங்கதுரையும் " நீ கேட்டிருந்தாலும் இத தான் சொல்லி இருப்பேன்"......என்றார்..

பேசிக்கொண்டே இருவரும் வயலுக்கு வந்து சேர்ந்தார்கள்......

அங்கு ஏற்கனவே சத்யன் வேலைக்கு வந்தவர்களிடம் வேலையை பிரித்து கொடுத்து கொண்டிருந்தான்......

ராஜவேலுவுக்கோ தன் மகன் பொறுப்பாக நடந்து கொள்வதில் பெருமை......

அரவிந்த்தும் தன் தாத்தா காலத்து கடையை மாற்றி பக்கத்தில் இருந்த கடையையும் விளைக்கு வாங்கி பேக்கரி மற்றும் டீ போட ஒருவரை வைத்து இவன் பார்த்து கொள்கிறான்......



இங்கு வீட்டில் லஷ்மி பிரியாவிடம் "எவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன் இந்த கஞ்சியை வயலுக்கு கொண்டு போய் குடுத்துட்டு வானு,,,,,,உள்ளயே என்ன பற்றியோ". என்று கத்தி கொண்டிருந்தார்.....

பிரியாவோ "திருவிழாக்கு போட்டுக்க புது தாவணி கேட்டா வாங்கி தர மாட்டேங்கிறீங்க வேலை மட்டும் வாங்கு"...... என்று அம்மாவிடம் கோபப்பட்டு கொண்டிருந்தாள்........

அதற்கு லஷ்மியோ "போன மாசம் தானே எடுத்த அத போட்டுக்கோ" என்று விட்டார்....


பிரியா அம்மாவிடம் கோவிச்சிகிட்டு கஞ்சி இருந்த தூக்கை எடுத்து கொண்டாள்... தூக்குசட்டி கனமாக இருக்க "ஏன்மா இவ்ளோ வச்சிருக்க"....... என்று கேட்டாள்......

லஷ்மியோ " துரை அண்ணனும் அங்க தான் இருக்கும் அதான் சேத்து வச்சிருக்கேன்....... மதியம் சாப்பிட வர சொல்லிடு அப்பாகிட்ட "....... என்றார்....

அரவிந்த்தோ சத்யனை பார்க்க வயலுக்கு கிளம்பினான்.....

வயலில் பிரியாவோ தன் அண்ணனிடம் தாவணி வாங்கி தர சொல்லி வம்பிழுத்து கொண்டிருந்தாள்.......

அங்கு வந்த அரவிந்தோ இவளை பார்த்தும் இவ இருக்கும் போதா வரனும்.....நைட் இவலாள சரியா தூங்கவே இல்லை ((தப்பா எடுத்துக்காதிங்க மக்களே அவ போட்ட சாப்பாடை சாப்பிட்டு அஜூரன கோளாறால் தூங்கலை...🤣🤣🤣))

அரவிந்த்தை பார்த்தும் சத்யன் வரவேற்கும் விதமாக சிரித்தான் ....

பிரியாவோ அமைதியாக இருந்தாள்....பின்னே அவளுக்கு இப்போ தாவணி வேனுமே.... அது மட்டுமில்லாமல் நைட் சத்யன் தங்கையை கன்டிதிருந்தான் ....... நேற்று அவள் நடந்து கொண்ட விதத்திற்கு....

அரவிந்த்தோ என்ன இவ அமைதியா இருக்கா இவள் குணம் இது இல்லையே என்று யோசித்தான்.....

(( அதுக்கு அவனின் மனசாட்சியோ அவ பேசினாலும் கோவப்படுற அமைதியா இருந்தாலும் ஏன்னு கேக்குற என்றது))


அப்போ அங்கே வந்த ராஜவேலுவோ "என்னமா கஞ்சி கொண்டு வந்தியா"...... என்றார்

பிரியாவோ "ஆமாம்பா இதுல மாமாவுக்கும் கொடுத்திருக்காங்க அம்மா"....என்றுவிட்டு "அப்பா திருவிழாக்கு போட்டுக்க புதுசா தாவணி கேட்டேன் அம்மா வாங்கி தரலனு ".......வரதா கண்ணீரை துடைத்து கொண்டாள்.......

இதை பார்த்த அரவிந்த்தோ ஓஓ அதான் மேடம் அமைதியா இருந்தாங்களா என்று நினைத்தான்......


உடனே ராஜவேலு. " சத்யனிடம் நாளைக்கு பொழுதே பிரியாவ கூட்டிட்டு போயிட்டு வாயா" ......என்றார்.....

சத்யனுக்கும் "சரி" என்றான் அப்படியே அரவிந்தனிடம் "நீயும் வாடா போயிட்டு வரலாம்"......என்றான்......

அரவிந்தோ ஐய்யய்யோ இவகூடவா என்று மனதுக்குள் சொல்லி கொண்டு சத்யனிடம் " பாக்கலாம் " அப்படினு மட்டும் சொன்னான்..........

ராஜவேலு மூவரையும் வீட்டுக்கு போக சொன்னார். .......

சரி என்றுவிட்டு மூவரும் கிளம்பினார்கள்......

போகும் வழியிலும் இவள்‌அமைதியாகவே வர இவனுக்கோ அவளின் அமைதி என்னவோ போல் இருந்தது......


இங்கே மகாவோ சத்யனை எப்படி பார்ப்பது என்று இல்லாத மூளையை போட்டு உருட்டிக் கொண்டிருந்தாள்......

அதற்கு தமயந்தியே வழிசெய்தாள் ........

தமயந்தி மகாவிடம் "அண்ணன் வீட்டிற்கு போயி அண்ணியை சாய்ங்காலம் கோவிலுக்கு வராங்களானு கேட்டுட்டு வரியா"....... என்றார்...

மகாவோ கிடைத்த வாய்ப்பை பிடித்து கொண்டு சரி என்றுவிட்டு சிட்டாக பறந்து விட்டாள்..........









இங்கு சத்யனோ தன் தேவதையை தனியாக சந்திக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான்.......

அப்போது அவனின் தேவதை
"அத்தை அத்தை அம்மா சாய்ங்காலம் கோவிலுக்கு போறாங்களாம் நீங்களும் வரிங்களானு கேட்டுட்டு வர சொன்னாங்க" என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தாள்....

இவனோ கண்கள் மின்ன அவளை ஒரு நொடி ரசித்து விட்டு மறைவில் நின்று கொண்டான்.......


அவனை கடந்து செல்லும் போது அவளின் நீண்ட ஜடையை பின்னாலிருந்து இழுத்து அவளை சிறை செய்தான்......

இவளோ முதலில் பயந்தவள் பின் தன்னவனின் ஸ்பரிசம் உணர்ந்து அவன் தொடுகையில் ஒரு நிமிடம் உருகி நின்றாள்.......

பின் அவன்‌ கையை கிள்ளிவிட்டாள்‌ இவனோ "ராட்சசி ஏன்டி கிள்ளின".... என்றான்...

மகாவோ. " எத்தனை தடவ சொல்லிருக்கேன் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்‌னு'......என்றாள்....

அவனும் சிரித்தக் கொண்டே "நாளைக்கு டவுனுக்கு போறோம் நீயும் உன் அண்ணன் கூட வாடி" என்றான்....


மகாவோ "அண்ணன் கூட்டிட்டு வராது"...... என்றாள்.....

"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்......நீ வா"...... என்றான்‌......

"சரி அத்தை வந்ததும் கோவிலுக்கு வராங்களான்னு கேட்டு சொல்லுங்க நான் வரேன்" என்று கூறி சென்று விட்டாள்.......

இதை மூன்று ஜோடி கண்கள் வெவ்வேறு மனநிலையோடு பாத்து கொண்டிருந்தது...........

தொடரும்...........
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends

நான் கார்த்திகா..((கைப்பிள்ளை))


💖 உன்னுள் தொலைந்தேனே 💖


கதையின் இரண்டாம் அத்தியாயம் கொடுத்துள்ளேன்......... படித்துவிட்டு தங்களின்‌ கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.....

மக்களே இது நான் எழுதும் முதல் தொடர்கதை. கதையின் போக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா... குறை இருந்தாலும் தவறாது கூறுங்கள்....
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே💖


அத்தியாயம் 3

சத்யன் மற்றும் மகாவை பார்த்த அந்த மூன்று ஜோடி கண்கள் ராஜவேலு லஷ்மி மற்றும் கிருஷ்ணவேணி.......

ராஜவேலுவும் லஷ்மியும் வெளியில் சென்றுவிட்டு வந்தவர்கள் இவர்களின் பேச்சை வைத்தே ஒருவரை ஒருவர் விரும்புவதை புரிந்து கொண்டார் .....

தன் மனைவியை பார்த்த ராஜவேலு வின் பார்வை உனக்கு இது தெரிந்து தான் பெண் கேட்க சொன்னாயா என்ற கேள்வி இருந்தது.... லட்சுமி யோ குற்றவுணர்வோடு தலை குனிந்தார் அதுவே பதில் சொன்னது அவர்க்கு தெரியும் என்று......

ஆனாலும் ராஜவேலுவால் இதை ஏற்றுக்கோள்ள சில மணிநேரம் தேவைப்பட்டது.....

பின்வாசல் வழியாக போன மகாவிற்கு இவர்கள் பார்த்தது தெரியவில்லை.....

கிருஷ்ணவேணி யோ வந்த சுவடு தெரியாமல் வீட்டிற்கு சென்றாள் ......

செல்லும் அவளுக்கோ காலையில் தன் கணவரிடம் கூறியது கண்‌முன் வந்தது.......








அன்று காலை வீட்டிற்குள் வரும்போதே கிருஷ்ணன் பரபரப்பாக உள்ளே வந்தார்......

"வேணி வேணி" என்று அழைத்துக் கொண்டே வந்தார் ........

கிருஷ்ணவேணி யோ "என்னங்க காலையிலேயே ஒரே பரபரப்பா இருக்கீங்க என்ன விஷயம்" என்று கேட்டாள்.....

அதற்கு கிருஷ்ணனும் "இந்த வருஷம் திருவிழாவிற்கு அக்கா வீட்டிலிருந்து எல்லாம் வராங்க அதுமட்டுமில்லை பிரசாத்தும் வரான்".....என்றார்....

((பிரசாத் கிருஷ்ணனின் அக்கா நீலவேணி யின் மகன்,,,,,,,நீலவேணி மதுரையில் உள்ளார் ,,,,,,,,,அவரின் கணவர் ராஜேந்திரன் .....இவர்களுக்கு ஒரே பையன் பிரசாத் ..........சொந்தமாக பழக்கடை வைத்துள்ளனர் .......பிரசாத்தும் அந்த கடையை பார்த்துக்கொண்டும் பக்கத்திலே ஒரு ஜூஸ் கடை வைத்துள்ளான்....... இத்தனை வருடங்களில் அவன் திருவிழாவிற்கு வந்ததில்லை ........நீலவேணி மட்டுமே வருவாள்........ இந்த வருடம் குடும்பத்தோடு வருவதாக சொல்லியுள்ளார் ,,,,,,,,அதனால்தான் கிருஷ்ணருக்கு ஒரே மகிழ்ச்சி.......))


வேணியோ " ஓ அப்படியா சின்ன வயசுல பார்த்தது அதுக்கப்புறம் படிப்பு அது இதுன்னு வரவே இல்லை "என்றாள்......

கிருஷ்ணன்னோ "ஆமா வேணி இந்த வருஷம் அக்கா கிட்ட பேசி நம்ம நந்தினிக்கு பிரசாத்தை கேட்கலாம்னு இருக்கேன்"... என்றார்

வேணியோ " என்னங்க இப்படி சொல்றீங்க எனக்கு நந்தினியை நம்ம சத்யனுக்கு கேக்கலாம்னு
பாத்தேன் ".....என்றாள்......

கிருஷ்ணனுக்கு தன் மகளை அக்கா வீட்டுக்குதான் மருமகளாக்க ஆசை ஆனால் வேணியின் ஆசையை கேட்டதும் அமைதியாகி விட்டார்......


அமைதியாக சென்ற கணவரை பார்த்துவிட்டு தன் எண்ணத்தை அண்ணனிடம் சொல்லி பெண் கேட்டு வர சொல்லனும் என்று உடனே தன் அண்ணன் வீட்டிற்கு கிளம்பினாள்.......

அவள் சென்ற நேரம் தான்‌ சத்யன்‌ மகாவிடம் பேசிக்கொண்டிருந்த முறையே வேணிக்கு அவர்களின் காதலை எடுத்து காட்டியது....

இதையெல்லாம் நினைத்தபடி அமைதியாக வந்த மனைவியை பார்த்த கிருஷ்ணன்னோ புருவமுடிச்சுடன் வெளியே வந்தார் .........

இங்கு ராஜவேலுவின் வீட்டில் உள்ளே வந்த அப்பாவை பார்த்த சத்யனோ ஒரு நொடி பயந்து விட்டான் பின் எப்பவும் போல் இருந்தான் ....

அவனின் ஒருநிமிட பயத்தை பார்தவர் சத்யனை பார்த்து "நாளைக்கு பிரியாவுக்கு துணி எடுக்க போகும் போது நம்ம மகாவையும் கூட்டிட்டு போங்க" என்றார்....

இதை கேட்டதும் சத்யனுக்கு ஒரே யோசனை ஏன்னா அது ஒரு கிராமம்.....அங்கு வயசு பெண்கள தனியா அனுப்ப மாட்டாங்க அதும் பையனோட அப்படி இருக்கும்போது மகாவை அப்பா ஏன் கூட்டிட்டு போக சொல்றாரு என எண்ணினான்.....ஒரு வேளை அப்பாவுக்கு எங்க விஷயம் தெரிஞ்சு போச்சோ அப்படின்னு யோசித்தான்......

லட்சுமியும் அவரை பார்க்க ஆம் என்பது போல் தலையசைத்தார். சத்யனுக்கோ ஒன்றும் புரியவில்லை.....

அவனின் அதிர்ந்த நிலையை பார்ததும் ராஜவேலுவோ "நீ தானேடா வரசொன்ன இப்போ கூட்டிட்டு போக சொன்னா முழிக்குற" என்றார்......

அதுவே சொன்னது இவர்கள் பேசியது மட்டுமில்லை விரும்புவதும் தெரியுமென்று....

அப்பாவின் மறைமுக‌ சம்மதத்தில் சத்யனுக்கு பேச்சே வரவில்லை....

ராஜவேலுவோ சத்யனை பார்த்து போடா போய் சாய்ங்காலம் அம்மா கோவிலுக்கு வராங்கனு சொல்லிட்டு வா என்றார்.....










"வரேன் பா" என்று சொல்லி சென்ற மகனை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜவேலு.....

சத்யா சென்றதும் கணவரிடம் வந்த லட்சுமி "என்னங்க எல்லாம் நல்லபடியா நடக்குமா"??? .....என்று கேட்டார்

அதற்கு ராஜவேலு ஒன்றும் சொல்லாமல் யோசனையோடு வெளியே சென்றார்.......

செல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி எல்லாம் நல்லபடியாக நடக்கனும் என்று அவசர வேண்டுகோள் ஒன்றை கடவுளிடம் வைத்தார்.......

வெளிய வந்த ராஜவேலுவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை பின் ஒரு முடிவோடு கிருஷ்ணனை சந்திக்க சென்றார்..........

இங்கு சத்யனும் மகாவின் வீட்டுக்கு சென்றான்....... அவனைப் பார்த்த தமயந்தி "வா சத்யா என்ன இவ்வளவு தூரம் அம்மா எதுவும் சொல்லிவிட்டார்கள்" என்றார்.....

" ஆமா அத்த சாய்ந்திரம் அம்மா உங்களை வீட்டுக்கு வர சொன்னாங்க அப்படியே ரெண்டு பேரும் கோவிலுக்கு போகலாம்னு"........ என்றான்

" சரி சத்யா வா உள்ள மோர் கலந்து இருக்கேன் குடிச்சிட்டு போவ"என்றார் தமயந்தி......" இதோ வரேன் அத்த" என்று உள்ளே வந்தான்......

உள்ளே வந்த சத்யனின் கண்கள் மகாவை தேடியது....... அப்போ உள்ளே இருந்து வந்தான் அரவிந்த் "வா மச்சான்" என்று வரவேற்றான்....

தமயந்தி மோர் கொண்டு வந்து சத்யனிடம் கொடுத்தார்...... அங்கு நின்ற அரவிந்தை பார்த்து உனக்கு கொண்டு வரவா என்று கேட்டார் இல்லமா வேண்டாம் அப்புறமாக குடிக்கிறேன் என்று விட்டான்.....

சத்யனோ தயங்கி தயங்கி மச்சான் நாளைக்கு டவுனுக்கு போறப்போ மகாவையும் கூட்டிட்டு வா எல்லாரும் போயிட்டு வரலாம் என்றான்.....

அரவிந்த்தோ தமயந்தியை பார்த்தான்......





தமயந்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை........

"என்ன அத்த யோசிக்கிறீங்க அப்பா தான் கூட்டிட்டு போக சொன்னாங்க"... என்றான் சத்யன்....


இதை கேட்டதும் அரவிந்தும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்தனர்......

இதை கேட்டபடி வந்த தங்கதுரையோ யோசனையில் இருந்தார்......

அரவிந்த்தோ நாமலே போக வேண்டாம் நினைச்சாலும் மகாவை கூட்டிட்டு வர சொல்றாங்களே என்ன பண்றது என்று யோசித்தான்.......

தங்கவேலுவும் " சரி சத்யா நாளைக்கு போறப்ப அரவிந்த் மகாவை கூட்டிட்டு போ" என்று சொன்னார்......

" சரி மாமா அத்தை நான் கிளம்புறேன்" என்று சொல்லி சத்யன் கிளம்பினான்.....

தங்கதுரையிடம் வந்த தமயந்தியோ "என்னங்க அண்ணன் மகாவ கூட்டிட்டு போக சொன்னாங்கனு சத்யா சொல்றான்" என்றாள்.......

"அதான் புரியல சரி நீ வேலையை பாரு சாய்ங்காலம் கோவிலுக்கு போகனும்ல" .....
என்றார்......

அரவிந்து அவளோட பேசக்கூடாது நினைச்சாலும் திரும்பத் திரும்ப பேசற மாதிரியே இருக்கே...... என்று கோவமானான்........

சத்யாவோ அரவிந்திடம் போன் பன்னி "மச்சான் ப்ளீஸ்டா நாளைக்கு மகாவ கூட்டிட்டு வாடா"..….என்றான் ...

அரவிந்திற்கு தன் நண்பன் மற்றும் தங்கையின் காதல் தெரியும் ஆகையால் அவன் " சரி" என்றான் ........

சத்யாவும்" ரொம்ப தேங்க்ஸ் மச்சி" என்று சொல்லி போனை வைத்தான்.....

இங்கு ராஜவேலு தன் தங்கையின் கணவர் கிருஷ்ணனை சந்திக்க வந்தார்......

வீட்டிற்கு சென்றால் வேணியும் இருப்பாள் என்று அவரின் தோட்டத்திற்கு வந்தார்......





ராஜவேலு கிருஷ்ணனை சந்திக்க அவரின் தோட்டத்திற்கு வந்தார்... வீட்டில் அவரின் தங்கை வேணி இருப்பதால் அவரை தனியாக சந்தித்து பேச தோட்டத்திற்கு வந்தார்.......

இவரைப் பார்த்த கிருஷ்ணனோ "வாங்க என்ன இவ்வளவு தூரம் சொல்லி அனுப்பி இருந்தா வீட்டுக்கு வந்திருப்பேனே" என்றார்.....

ராஜவேலுவோ இல்ல மச்சான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வீடுனா சரிப்பட்டு வராது அதான் தோட்டத்திற்கு பார்க்க வந்தேன் என்றார்.......

கிருஷ்ணனோ வேணி காலையில கல்யாணத்தைப் பற்றிப் பேச தான் அண்ணன் வீட்டிற்கு போனாலோ அதுபற்றி பேச வந்திருக்கிறாரோ என்று யோசித்தார்.......

ராஜவேலுவோ எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தயங்கி நின்றார்.....

கிருஷ்ணனோ "என்னன்னு சொல்லுங்க மச்சான் எதா இருந்தாலும் பரவாயில்லை".....என்றார்..........

"அது வந்து மச்சான் நம்ம நந்தினியை சந்திரனுக்கு கேக்கணுன்னு தான் ஆசைப்பட்டேன் ஆனால் எனக்கு காலையில தான் தெரியும் சத்யன் மகாவை விரும்புவது".... என்று ஒரு வழியாக அவன் சொல்லிவிட்டார்........

கிருஷ்ணனோ ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்தார் தன் மனைவிக்கு சத்தியனை தான் மாப்பிள்ளையாக கொண்டு வரணும்னு சொன்னாள்........இப்போ என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்.....

அவரின் அமைதியை பார்த்துக் கோபம் என்று ராஜவேலு நினைத்துக் கொண்டார்....

என்ன மச்சான் எங்க மேல கோவமா எனக்கு நந்தினியை தான் மருமகளாக்க ஆசை பட்டேன்!! ஆனால் சத்யன் மகாவை விரும்புவதால் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல?! வீட்டுக்கு போன தங்கச்சி என்ன சொல்லும்னு பயமா இருக்கு..... ஏற்கனவே அவங்க குடும்பம்னாலே தங்கச்சிக்கு ஆகாது".... என்றார்....

" உங்க மேல கோவம் எல்லாம் இல்ல மச்சான்.... நானும் வேணி என்ன சொல்லுவாளோனு தான் யோசிச்சிட்டு இருந்தேன்....... சொல்லப்போனா எனக்கும் நந்தினியை என் அக்கா பையன் பிரசாத்க்கு கொடுக்கணும்னு ஆசை...,..நீங்க இத நினைச்ச வருத்தப்படாதீங்க மச்சான்... பசங்க வாழ்க்கைதான் நமக்கு முக்கியம் நான் உங்க தங்கச்சி கிட்ட பேசுறேன்........ நீங்க தைரியமா போங்க"........ என்றார்.....

" ரொம்ப ரொம்ப சந்தோஷம் மச்சான் எனக்கு நீங்க எதுவும் வருத்தப்படுவீங்கனு தான் கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்ததுச்சு..... பிரசாத்தும் நல்ல பையன் நந்தினியும் பிரசாத்தும் சந்தோஷமா இருந்தாலே போதும்"........ என்றுவிட்டு கிளம்பினார்.........

மாலை தமயந்தியும் லட்சுமியும் கோவிலுக்கு சென்றனர்.......அங்கு கோவிலில் தமயந்தி லட்சுமியிடம் அண்ணன் மகாவை டவுனுக்கு கூட்டிட்டு போக சொன்னத சத்யா தம்பி வந்து சொன்னது என்று கேட்டாள்......

"லட்சுமியோ ஆமா அவரு தான் கூட்டிட்டு போக சொன்னாரு ஏன் என் பையன் கூட உன் பொண்ணு அனுப்ப மாட்டியா" என்று பொய் கோபப்பட்டார்.........

"அச்சோ அண்ணி என்ன இப்படி சொல்லிட்டீங்க .....நான் அதெல்லாம் நினைக்கவில்லை ..... சத்யா யாரு ,,,,அதுவும் எங்க வீட்டு பையன் தானே........ நான் என்ன யோசிச்சேனா என்ன இருந்தாலும் இது கிராமம் ஒரு வயசு பொண்ணு பயனை சேர்ந்து அனுப்பி வச்சா தப்பா பேசிடுவாங்களோனு" ...... என்றார்......


லட்சுமியோ "அப்போ அரவிந்தும் ப்ரியாவும் தான் கூட போறாங்க அப்போ அதையும் தப்பா பேசுவாங்களா"..... என்றார்

சரி அண்ணி நான் எதுவும் சொல்லல..... நாளைக்கு மகாவும் அரவிந்தும் டவுனுக்கு வருவாங்க....... என்றார்.....











அன்று இரவு கிருஷ்ணன் வேணியிடம் "மதியம் உங்க அண்ணன் என்னை பார்க்க தோட்டத்துக்கு வந்தார்".... என்றார்

வேணியும் "வந்து என்ன சொன்னாரு என் பையனுக்கு மகாவுக்கும் கல்யாணம் பண்ண போறேன் அதனால உங்க பொண்ணுக்கு வேற இடத்தில் கொடுங்கனு சொல்லிட்டு போனாரா" என்று கோபமாகக் கேட்டாள்.......

" வேணி இது உனக்கு எப்படி தெரியும் உங்க அண்ணன் வீட்டுக்கு வந்தாரா" என்றார்....

"அதெல்லாம் இல்லைங்க நான் காலையில அண்ணன் கிட்ட கேட்கலாம்னு போனப்பதான் நான் மகாவும் சத்யாவும் பேசிட்டு இருந்தத கேட்டேன்"....... என்றாள்...

வேணிக்கோ சொல்ல முடியாத ஒரு வலி அவளை இம்சித்தது.... அதை புரிந்து கொண்ட கிருஷ்ணனோ அவளின் கையை பிடித்து "வேணி இப்பவும் நம்ம நந்தினியை சத்யனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தா நாளைக்கு நம்ம பொண்ணு சந்தோஷமா இருப்பானு என்ன நிட்சியம் ......அதனால பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுட்டு நம்ம நந்தினியை மட்டும் நினைச்சு ஒரு முடிவை எடு ......எனக்கு பிரசாத்துக்கு கொடுக்கணும்னு இஷ்டம்.., ஆனால் இதுல உன் சம்பந்தம் ரொம்ப முக்கியம்..... எதுவா இருந்தாலும் யோசிச்சு நல்ல முடிவா எடு.....இல்ல வேண்டாம்,,, வேற மாப்பிள்ளை பாருங்கனு சொன்னாலும் நான் பார்க்கிறேன் ,,,,,,ஆனால் இனிமே சத்யனுக்கு கல்யாணம் பண்ணித்தர மட்டும் நினைக்காதே......நான் இத கோவமா சொல்லல..... நம்ம பொண்ணோட வாழ்க்கையை மட்டும் யோசிச்சு முடிவெடு" ....... என்றார்.....

வேணிக்கு மதியமே இந்த முடிவு வந்துவிட்டது பிடிக்காத கல்யாணத்தை பண்ணி நாளைக்கு சந்தோஷமா இல்லனா ரொம்ப கஷ்டம்..... அவளும் வயதில் தங்கதுரையை விரும்பியவள் தானே.....கொஞ்சம் வருத்தம் ஏற்கனவே தமயந்தி மேல் கொஞ்சம் பொறாமை இருந்தது இப்போது கொஞ்சம் கூட வந்துருச்சு.........

மறுநாள் சத்யனின் ஜீப்பில் மகா பிரியா அரவிந்த் மற்றும் சத்யன் நால்வரும் சத்தியன் வண்டி ஓட்ட இவர்கள் அமர்ந்து மதுரையை நோக்கி பயணித்தனர்......

ஊர் எல்லையை கடந்ததும் சத்யன் வண்டியை நிப்பாற்ற பிரியாவோ உன் லொள்ளுக்கு அளவே இல்லை என்று போலியாக அலுத்துக்கொண்டு வாம்மா மஹா நீ வந்து முன்னாடி உட்காருமா அப்பதான் என் அண்ணே வண்டி போகுமாம்.... என்று கிண்டல் அடித்த படி அவளை முன்னே விட்டு அவள் பின்னே சென்று அமர்ந்தாள்.....

இவளைப் பார்த்ததும் அரவிந்த்தோ ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்தான்.....இவளும் அரவிந்தனிடம் ஒன்றும் பேசவில்லை ....

ஏற்கனவே தன் அண்ணனிடம் வாங்கிய திட்டு....அதுமட்டுமில்லாம் சத்யன் வீட்டிலேயே சொல்லி இருந்தான் "மகாவை முதன் முதலாக வெளியே போறேன்.... அதனால அவங்க கிட்ட வம்பு எதுவும் பன்னிறாத"....என்றிருந்தான்....

சத்யன் அப்பா தன் காதலுக்கு சம்மதம் சொன்னதை பிரியாவிடம் சொல்லி மகிழ்ந்தான்..... இவளுக்கும் மகிழ்ச்சி....... ஏனென்றால் நந்தினியை தான் சத்யனுக்கு திருமணம் செய்ய அப்பாவின் விருப்பம்..... இவ காதல் சேருமா சேராதா என்ற குழப்பத்தில் இருந்தாள் பிரியா இப்போ அப்பாவே சம்மதம் சொன்னது அவளுக்கு மகிழ்ச்சி........

இவர்கள் செல்ல வேண்டிய கடை வந்தது...... நால்வரும் கடைக்குள் சென்றனர்...

சத்யன் ப்ரியாவிடம்‌" உனக்கு பிடிச்ச மாதிரி எடு பணத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாத உனக்கு பிடிச்சது எடு" என்றான்......

சரி என்று பிரியாவும் புடவைகளை பார்க்க சென்றுவிட்டாள்... சத்தியனும் மகாவும் வேறு பக்கம் சென்று புடவையை பார்த்துக்கொண்டிருந்தனர்..... அரவிந்தும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்......

சத்தியன் மகாவிற்கு அரக்கு நிறத்தில் ஒரு புடவை எடுத்துக் கொடுத்தான்.....
மகா வேண்டாம் என்றாலும் விடவில்லை....

ப்ரியாவும் அதே அரக்கு நிறத்தில் சிறிய கறை வைத்து ஒரு புடவையை தேர்ந்தெடுத்தாள்.....

அந்தப் புடவை எடுத்ததும் ஒரு ஊதா நிற புடவை பிரியாவிற்கு மிகவும் பிடித்தது.... அதை பார்த்துக் கொண்டிருந்தால் ....அதுவும் கரை வைத்த புடவை கட்டம் கட்டமாக போட்டு அழகாக இருந்தது.... ஆனால் அது விலை அதிகம் அதனால் அவள் எடுக்கவில்லை......

அங்கே நின்று கொண்டிருந்த அரவிந்த்க்கும் அந்த புடவை அவன் கண்ணை பறித்தது.....

இவள் புடவையை எடுத்துவிட்டு தன் அண்ணனிடம் சென்று புடவையை காட்டி புடிச்சிருக்கானு சத்யன் மற்றும் மகாவிடம் காட்டினாள்......

மகாவும் "ரொம்ப நல்லா இருக்கு ப்ரியா உங்க அண்ணன் இந்த புடவையை எடுத்து கொடுத்தாங்க.....வேணாம்னு சொன்னாலும் கேட்கலை".... என்று சத்யன் எடுத்துக் கொடுத்த புடவையை காட்டினாள்.....

ப்ரியாவும் "அண்ணா நீ கலக்கு கலக்கு" ......." நல்லா இருக்கு மகா புடவை ஏன் வேண்டாம்னு சொல்ற முதன்முறையாக அண்ணன் வாங்கிக் கொடுத்திருக்கு வச்சுக்கோ" என்றாள்.....

வாங்கிய புடவைக்கு பணத்தை கொடுத்துவிட்டு நான்கு பேரும் வெளியே வந்தனர் வெளியே வரும்போது அந்த நீல நிற புடவையை பார்த்தால் ப்ரியா ஆனால் அது அங்கு இல்லை யாரோ வாங்கிட்டாங்க போல என்றென்னிளாள்......

அரவிந்து "சரி வாங்க நாலு பேரும் ஏதாவது சாப்பிட்டு போலாம் ரொம்ப நேரம் ஆச்சு".... என்றான்......

வெளியே வரும்போது அரவிந்த் கையில் ஒரு பை இருந்தது ..அதை பார்த்ததும் மகாவோ என்னதுனா அது என்றாள்...



ஒரு சட்டை எடுத்தேன்..... என்றான்


மகாவிற்கு ஒரே ஆச்சரியம்...
ஏனென்றால் அரவிந்த் அனாவசிய செலவு செய்ய மாட்டான் ....அப்படி இருக்கும்போது சட்ட எடுத்தானா என்று யோசித்தாள்......

காமினா நான் பார்க்கிறேன் சட்ட நல்லா இருக்கானு என்று கேட்டாள்....

வீட்டுக்கு போய் பார்க்கலாம் மகா..... ஏற்கனவே நேரமாயிடுச்சு ..... சீக்கிரம் வீட்டுக்கு போகணும் கிலம்பலாம்.....

அவன் சொல்வதும் சரி என்பதால் நால்வரும் ஹோட்டலை நோக்கி சென்றனர்.....

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நால்வரும் ஊருக்கு திரும்பினர்..... வீட்டிற்கு வந்த நால்வருக்கும் அதிர்ச்சி.....

அது இன்ப அதிர்ச்சியா துன்ப அதிர்ச்சியா என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.........


தொடரும்……….
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends

நான் கார்த்திகா. (கைப்புள்ள🤣🤣🤣)

💖 உன்னுள் தொலைந்தேன💖

அத்தியாயம் 3 கொடுத்துள்ளேன்....ரொம்ப நாள் கேப் விட்டுட்டேன்... கதையின் நடை பிடிச்சிருக்கானு ஒரு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போனால் ரொம்ப சந்தோஷம் படுவேன்....


தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇
 
Top