All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தொலைக்காட்சியை நோக்கியவாறு அமர்ந்திருந்த அந்த புதியவன்,புதியவன் தானா??!! அந்ததோற்றம், பக்கவாட்டு தோற்றத்தில் தெரிந்த முகம், எங்கோ பார்த்ததிருப்பது போன்ற உணர்வு.
குரல் கேட்டு, தலையை திருப்பி அவளை பார்க்க, அவளின் அடிவயிற்றில் ஏதோ இனம் தெரியா உணர்வு..பயமா பதட்டமா என்ற வரையறைக்குள் அதை அடக்க இயலவில்லை..
பார்வை குத்தீட்டி போல் தாக்குமா!!!!தாக்கியதே!! ஒரு மாமன்னன் தோரணையில் இடது கையை ,சோபாவின் முதுகு பகுதியில் படர விட்டிருந்தவன், வலது கையில் தொலை இயக்கியை வைத்திருந்தது, ஏதோ சிம்மாசனத்தில், செங்கோலுடன் அமர்ந்திருக்கும் அரச தோரணையை நினைவூட்டுவதாய்…
பார்த்த மதிவதனவின் மதி சுழல..நினைவு அடுக்குகளை புரட்டி தேடினாலும், ராணி பாட்டியின் பையன்களையோ, பேரன்களையோ ஒத்த முகத்தோற்றம் இல்லாததை கண்டு யோசித்தவாறே மெதுவாக எட்டெடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.
***********************
"குருதி வழிகிறது தேவி...", என்றவன் தன் இடையில், துணிப் பொதிக்குள் கை விட்டு ,சில காய்ந்த பச்சை இலைகளை எடுத்தவன்,
"இதை அரைத்து, பற்றாக போட்டுக்கொண்டால் , குருதி உடனே நிற்கும்.." என்றவாறு , அருகில் செல்ல விழைந்து,
இளவரசியின் கூர்ந்த பார்வையில் ,சற்றே தயங்கி நின்றான்.
"குருதி கண்டு பெண்கள் அஞ்சுவதில்லை வீரரே..... இயற்கை கற்று கொடுத்த பாடம்....என் மண்ணிற்கும், நீருக்கும் ஏன் இங்கு சுற்றிச் சுழலும் காற்றுக்கும் கூட காயத்தை ஆற்றும் சக்தி உண்டு...." என்றவள் ,மாறா புன்னகையோடு, நதிக் கரையில் இருந்த மண்ணை, வைகை ஆற்று நீர் பதத்தோடு எடுத்தவள், தன் காயத்தின் மீது அப்பிக் கொண்டாள்..
எண்னே ஆச்சர்யம்!!! பெருகி ஓடிய செங்குருதி, மண்ணால் அணைக்கட்டு போடப்பட்டார் போல் அப்படியே நின்றது..
"தங்கள் யாரென்று சொல்லவே இல்லையே..!!!",
அந்த கருப்பு புரவி வீரன்," என் பெயர் வீர .... சேனன்..நான் ஒரு நாடோடி..கண்டதும் கற்று பண்டிதனாகலாம் என்று , கலைகள் கற்க ,நாடி, தேடி சுற்றி திரிபவன்..."
"எந்த நாட்டை சேர்ந்தவரோ!!!!"
"நாடோடிக்கு..ஏது நாடு...வீடு...தேவி!!!"
என்று பணிவுடன் மொழிந்தவனை, பார்த்து புன்னகை புரிந்தாள்..
காதலர்தின spl ஆ அனுமதி வந்தே ஆகணும்னு Facebook ல சொன்ன சுதா ஹரி பேபி..மற்றும் உன்னைமட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் !!!! ஐ தொடர்ந்து வாசிக்கும் அன்புத் தோழமைகளுக்கு..
இந்த அன்பளிப்பு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"எதுக்கு திடீர்னு இங்கே...கூட்டிட்டு வந்துருக்கீங்க..."என்றவளைத் திரும்பிப் பார்த்தான்..இதழ்களில் எப்போதும் அவள் மயங்கும் புன்னகை...கண்களில் அவளைக் கவர்ந்து இழுக்கும் காந்தப் பார்வை..
அதில் அவளின் வாய் தானே அழுந்த மூடிக்கொள்ள...கண்கள் முகம் காணவியலாமல்.. அவனின் மார்பு நோக்கி தழைந்தது...கிறங்கிய பார்வையில் அவன் அழுத்தமான நடையுடன் நெருங்கி வருவது புலப்பட, இதயம் ஏதோ எதிர்பார்ப்பில் துடிப்பு கூடி ,தேகத்தை படபடப்பில் ஆழ்த்தியது..
நெருங்கி வந்தவன், இடக்கையால்,அவளின் நாடியை பற்றி உயர்த்தி , அதே முறுவலுடன்,பெண்ணவளின் கண்களை மாறிப் மாறி பார்த்தான்.
.அவனின் விழிகளின் பந்தாட்டத்தில், அவளின் காதல் மனம் சுகமாய் பந்தாடப்பட..உணர்வுகளின் குவிப்பில்,அவளின் விழிகள் இமைகளுக்குள் ஒளிந்துகொண்டன..
திடீரென காற்றில் மிதப்பது போன்ற உணர்வு...தோன்ற விழித்து பார்த்தவள், அவன் கைகளில் தாங்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டு, கிறக்கப் பற்றுதலுடன், தன் கரங்களை , அவனின் கழுத்தில் சுற்றிக் கோர்த்து,பரந்த மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
சில அடிகள் நடந்ததும், அவன் காலால் ஒரு கதவை திறப்பதையும், குளிர்க் காற்று தன் உடல் தீண்டுவதையும், நின்றஅவன் அமர்வதும்,கையில் இருந்து, மடிக்கு இடமாற்றம் செய்யப்படுவதையும் உணர்ந்தவள் ,விழி திறந்து பார்க்க…. அவளின் முகத்திற்கு மிகமிக அருகில் அவனின் முகம்.. அவனின் கண்களில் வழிந்த காதலில் மூழ்கி..அவளின் மூச்சுத்திணறஆரம்பிக்க, தாள இயலாமல்,கழுத்தை சுற்றி இருந்த கரங்களை இறுக்கி, எழும்பி,அவனின் முகம் நோக்கி செல்ல, புன்சிரிப்புடன் அவன் தன் வலக்கையால் அவளின் முகத்தை பற்றி திருப்பிக் காட்டினான். அங்கு , இரவு வானில் கருமையை...பின்னணியாகக் கொண்டு வெண்ணிலவின் விதை ஒன்று விழுந்து முளைத்ததோ, என் வியக்கும் வண்ணம், பால்வண்ணத்தில், மண்மீது முளைத்த காதல் செடியென நின்றது தாஜ் மஹால்….
அந்த நேரத்தில்..அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்பாராதவளாய் திகைத்து...விழிவிரித்து அவனைப் பார்த்து மீண்டும் அந்த உலக காதலர்களின் காதல் சின்னத்தைப் பார்த்தவள்....பின்னோக்கி நகர்ந்து, மடியில் இருந்தவாறே அவனின் மீது சாய்ந்து கொண்டாள்..இரு கைகளையும் அவளின் இடையைச் சுற்றிப் படரவிட்டு,அவளின் வயிற்றில் கை வைத்து அழுத்தி, தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன்,அவளின் தோளில் முகம் பதித்து….மென்மையான குரலில்,
அதில் ..கிறங்கினாலும்..மெல்லிய குரலில் சொல்லவே செய்தாள்... “என்ன இருந்தாலும் .. மும்தாஜ்...இறந்ததும் தானே இதை கட்டினார் அவர்.. இருவரும் சேர்ந்து சந்தோஷமா இருக்குறது தானே காதல்..அது மாதிரி ஒன்னைத் தானே காதலுக்கு சின்னம்ஆ நினைக்கனும்..பார்த்து சந்தோஷப்படனும்..” எனவும்,
“ ம்ம்ம்ம்ம்.... காதலர்கள் அழிந்தாலும்...காதல் அழியாது..அது யுகம் யுகமாக தொடரும்... ங்குறதுக்கு... அடையாளமா...தன்னோட மனைவி மேல வைத்த அழிவில்லாத காதலுக்கு சின்னமா இதை விட்டுட்டு போயிருக்குறார் ஷாஜஹான்..
இன்னொன்னு…” என்று.... இடை சுற்றி இருந்த கையால் தன்னவளை பூச்செண்டாய் வளைத்து திருப்பியவன்.. கேள்வியாய் மலர்ந்த அவளின் கண்கள் பார்த்து சொன்னான்…”இன்னொன்னு...... நீ…..நீதான்...வதனி…”
என்றவனின்..உணர்வுகள் ஆர்ப்பரிக்க..பொங்கிய காதல் கரைகடக்க...."வதூ …."என்ற அழைப்புடன் அவளின் மாம்பழக் கன்னத்தில் தன் இதழ்களை அழுந்தப் பதித்து ..தன் காதலின் கொண்டாட்டத்தை தொடங்கினான்....ராஜா ஜெயவர்மன்….
காதல் அழிவதில்லை காதலர்களே அழிகிறார்கள் இருப்பினும் காதல் போற்றும் சின்னமாய் திகழ்கிறார்கள்...
காதலர்கள் அழிந்தாலும் காதல் யுக யுகமாய் காலம் காலமாய் கம்பீரமாய் நிற்கிறது தன் காதல் லீலையை தொடர்ந்தபடி.....
காதல் காவியமாம் காதல் சின்னம் உயர்ந்தது என்றால்
தன்னுள் காதலை சின்னமாய் விதைத்த தன் காதல் தேவதையும் உயர்ந்தவள் தான்......
Nice akka but story la intha scene illaiya so sad but I love it love you akka unakku enna ota valentines gift intha kavitha nalla illana adikka varatha love you akka
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.