kirunisa
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11
தங்கள் உலகில் மூழ்கியிருந்த அந்தக் காதலர்கள், “ஐயோ!” என வந்த சத்தத்தில் பதறிப்போய் விலகி குரல் வந்த திசையை பயத்தோடு நோக்கியவர்கள், அங்கு தனது வாயை இரு கைகளாலும் அழுத்தமாக மூடியபடி கண்களில் பீதியோடு நின்றிருந்த அபிஷேக்கைக் கண்டு ஆசுவாசப்பட்டவர்களுக்கு அவன் நின்றிருந்த கோலம் சிரிப்பைக் கொடுத்தது...
எனினும் வந்த சிரிப்பை உதடுகளோடு நிறுத்திக்கொண்ட விஷ்ணு, அவனை நோக்கி நடந்தவாறு “இங்க என்ன பண்ணுற???” எனக் கேட்க, அவன் தன்னை நெருங்குவதைக் கண்டு பதறி பின்னால் நகர்ந்த அபிஷேக் சுவரில் மோதி நின்றவனின் கண்களில் இருந்த உணர்வுகளைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுகொண்ட விஷ்ணு,
“இப்படி காதலன் கிஸ் பண்ண துரத்திய காதலி மாதிரி போகாமல் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!” எனக் கேட்க, விஷ்ணு சொன்னதை நினைத்த அபிஷேக்கின் முகம் அஷ்டகோணலாக மாறிப்போனாலும் அவன் அதே இடத்தில் நின்றுவிட்டதனால் தைரியம் வரப்பெற்றவனாக தன் வாயிலிருந்து கைகளை எடுத்தவன்,
“நான் இந்தப்பக்கமாக போனப்போ எலி சத்தம் போடுறது கேட்டிச்சு... இந்த வீட்டுல எலி எங்க நின்னாலும் என்னைத்தானே கூப்பிடுவாங்க... சோ முன்கூட்டியே பிடிச்சுடலாம்னு வந்தேன்... வந்த இடத்தில நீங்க இரண்டு பேரும் எலி சத்தம் போடுறது மாதிரி கிஸ் பண்ணிட்டு இருந்தீங்க” எனவும் விஷ்ணு, பிரியா இருவரும் வெட்டவா, குத்தவா என அவனையே நோக்க, அவனோ அவர்களின் பார்வையை தூக்கித் தூரப்போட்டுவிட்டு,
“அதுமட்டும் இல்லை... நீங்க இருக்கிற இடம்னு தெரிஞ்சிருந்தா வந்தே இருக்கமாட்டேன், என் கெரகம் இதையெல்லாம் பார்க்கவேண்டியிருக்கு!... ச்சை... இந்த வீட்டுல அழகா இருக்கிற எனக்கு பாதுகாப்பே இல்லை... அதுவும் ஒரு ஆம்பளையால ஆபத்துன்னு நினைக்கிறப்போ என் மேலையே எனக்கு பரிதாபமா இருக்கு!” என ஏற்கனவே பிஞ்சுபோன பண்ணு மாதிரி இருக்கும் முகத்தை, குரங்கு கையில் கொடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி மாறிப்போக சிலிர்த்துக்கொண்டு புலம்பியதைக் கேட்டு, “டேய்!” என ஒருவிரலை நீட்டி விஷ்ணு எச்சரிக்க,
“சிரிப்பு பொலிஸ்லாம் காப்டன் விஜயகாந்த் மாதிரி கை நீட்டி பேசாமல் அங்கிட்டு போங்க சார்... சிப்பு சிப்பா வருது சார்” எனக் கூறிச் சிரிக்க, அதுவரை நேரமும் அவர்களின் உரையாடலைக் கேட்டு சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்த பிரியாவினால் அதற்குமேலும் சிரிப்பை அடக்கமுடியாது வாய்விட்டு நகைக்க, கொலைவெறியாகிப்போனது விஷ்ணுவுக்கு...
‘இத்துப்போன தகரடப்பா என்னை கிண்டல் பண்ணுது... அதை கேட்டு கேலியா சிரிக்கிறியா??? இருடி, உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்’ எனப் பார்வையால் தன் காதலியை மிரட்டிவிட்டு, அபிஷேக் பக்கம் திரும்பியவன்,
“பொலிஸ்னு பார்க்காமல் கேலி பண்ணுறியா??? இரு உன்னைக் கவனிச்சுக்குறேன்” எனப் பல்லைக் கடித்தபடி அவனை நோக்கிச் செல்ல, அபிஷேக்கிற்கோ ஈரக்குலையே நடுங்கிப்போனது...
‘அடி ஆத்தி கிட்டே வர்றாரே... இங்கயே நின்னா என் கற்பு போயிடும்போல இருக்கே... எஸ்கேப் ஆகிக்கோடா அபிஷேக்’ எனத் தனக்குத்தானே சொல்லியபடி பின்னால் நகர்ந்தவன்,
“ஐயோ... நான் அவன் இல்லை.....” என அலறியபடி ஓட்டமெடுக்க, விஷ்ணுவின் முகம் விளக்கெண்ணை குடித்ததுபோலானது... அவன் சென்ற பக்கத்தை முறைத்துவிட்டு பிரியாவை நோக்கியவன், அவள் சிரிப்பை அடக்குவதைக் கண்டதும் எரிகிற தீயில் எண்ணை வார்ப்பதுபோலாக, விரைந்து சென்று அவளின் பிடரி முடியைக் கொத்தாகப் பிடித்து தன் முகத்தை நோக்கி இழுத்தவன், தன் செயலில் அதிர்ந்து விழிவிரிய நோக்கியவளின் பார்வையை எதிர்கொண்டவாறே தனது உதடுகளை அவளின் மென்னிதழ்களில் புதைத்துக்கொண்டான்...
நேரம் செல்ல செல்ல அவனது மனதில் இருந்த கொதிப்பு அடங்கிப்போக, அவளிடமிருந்து பிரிந்து நின்றவனின் வலது கரம், அவளது முகத்தை வருட,
“சாரிடி” என மன்னிப்புக் கேட்டான்... மன்னவனின் செயலில் முதலில் அதிர்ந்தாலும் அவனது ஆலயங்கனத்தில் மெய்மறந்து போயிருந்தவளை அவனின் வருடலில் தன்னிலைக்கு கொண்டுவந்திருந்தது... அத்தோடு அவன் கேட்ட சாரியில் பதறிப்போனவளாக,
“இப்போ எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க??? அதுவும் என்கிட்ட” எனக் கேட்க,
“இல்லை... உன்கிட்ட கோபப்பட்டு இப்படி நடந்துக்கிட்டதுக்கு” எனக் குற்றவுணர்வோடு சொல்ல, அவனின் பதிலில் மனம் நெகிழ்ந்துபோனவளாக,
“உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் கொள்ளத் தோணுமாம்... சோ உங்க கோபம் என்மேல வந்ததில் எனக்கு சந்தோசம் தான்” எனக் காதலோடு சொன்னவளை இறுக அணைத்து விடுவித்த விஷ்ணு,
“நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்” எனவும்
“அதுக்கு நம்ம வீடுகள்ல இருக்கிறவங்க சம்மதிக்கணும்... சரி அண்ணா கிட்ட பேசுறேன்னு சொன்னீங்களே, பேசிட்டீங்களா???” என அவள் கேட்டதில் முகம் வாடியவனாக,
“எங்க அதுக்கான வாய்ப்பு வரலையே... அவன் கல்யாணம் நடந்ததுல இருந்து ஏதோ லிட்டர் கணக்குல கஞ்சி குடிச்சவன் போல விறைப்பா திரியுறான்... இதுல எங்கிட்டு இருந்து நம்ம விஷயம் பேச” எனக்கூறி பெருமூச்சு விட, புஷ்சென்று ஆகிப்போனது பிரியாவிற்கு... அவள் முகம்வாடி நிற்பதைப் பொறுக்கமுடியாமல்,
“கவலைப்படாதை பிரீ செல்லம்... சீக்கிரம் அவன்கிட்ட பேசிடுறேன்...” என ஆறுதல் கூறி அவள் முகம் மலர்ந்ததும் “சரி, ரொம்ப நேரம் இங்கனவே இருந்துட்டோம்... யாரும் பார்த்தால் வம்பாகிடும்... அப்புறம் பார்க்கலாம்” எனக்கூறி அவளது நெற்றியில் அவசர முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு கண்களால் அவளிடமிருந்து விடைபெற்றான்...
*************************
அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதனால் அன்றே பத்மாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கினை செய்ய பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்... அதற்கான ஏற்பாடுகள் முதல் நாளே தொடங்கியிருந்ததனால் பெரும்பாலான வேலைகள் முடிந்து சிறு சிறு வேலைகள் மட்டுமே மீதமிருந்தன...
அதர்வா அவள் கழுத்தில் தாலி கட்டிய தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சித்ரவதையை அனுபவித்துக்கொண்டிருந்தாள் பத்மா... ஏற்கனவே பெரியவர்களின் நிம்மதிக்காக தாங்கள் சந்தோசமாக இருப்பதாகக் காட்டிவிட்டிருந்தாள்... எனவே தங்கள் அறைக்குள்ளும் சரி, அவள் தனியாக மாட்டும்போதும் சரி தேள் போல கொட்டிக்கொண்டிருந்தான் அதர்வா... அதிலும் சில நேரங்களில் அவனாகவே அவளை நெருங்கி முத்தமிட்டு விட்டு ஏதோ அவள் தான் அதுக்குக் காரணம் என்பதுபோல் வீண்பழியைச் சுமத்தி அவளின் கற்புக்கு களங்கம் விளைவிப்பான்...
அவனின் கோபம் அவ்வாறு வெளிப்பட்டதென்றால் சுமி ஒருபக்கம் தனது வெறுப்பை காட்டிக்கொண்டிருந்தாள்... அவளைத் தனியாகக் காணும்போது எல்லாம் ‘காத்திருந்தவ புருசன நேத்து வந்தவள் ஏமாத்திட்டு போய்ட்டா’ என்றும் ‘அனாதையா வந்தவளுக்குக் கிடைத்த வாழ்வைப் பாரேன்’ எனவும் சத்தமாய் பத்மாவின் காதில் விழுமாறு கூறிவிட்டு முகத்தை நொடித்துவிட்டு போவாள்... அந்த வார்த்தைகள் அவளின் உயிரை குடிக்க, ‘நான் ஒன்றும் அநாதை கிடையாது... நானும் இந்த வீட்டு பொண்ணு தான்’ என இந்த உலகத்துக்கு தெரியுமாறு கத்தி சொல்லவேண்டும் என தோன்றும்...
ஆனால் அதற்கான வாய்ப்பு தான் அவளுக்கு கிடைக்கவில்லையே... அப்படி கத்தி சொன்ன பின்னால் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எதையென்று சொல்லுவாள்... அதிலும் எதை வைத்து தான் இந்த வீட்டு பொண்ணு என்பதை நிரூபிப்பாள்... அதற்கான ஆதாரம் ஒன்று கூட அவளிடம் இல்லையே...
அதிலும் தான் திருடி என்பதை தெரிந்து வைத்திருக்கும் அதர்வா, அதை ஒரு வீதம் கூட நம்பாமல் சொத்துக்காக மட்டுமே அவள் இங்கு வந்ததாக குறை கூறுவான்... அதற்கு பிறகு அவள் வாய் திறப்பாளா என்ன???... எனவே தான் தினம் தினம் நடக்கும் இந்த மௌன போர்கள் கொடுக்கும் வலியை அவள் மனது தனக்குள்ளேயே புதைத்துக்கொள்ள வெளியில் சந்தோசம் போல காட்டிக்கொண்டாள்...
அவளின் அந்த மலர்ந்த முகம் தான் அவ்விருவருக்கும் வெறியை கிளப்பிக்கொண்டிருந்தது... தாங்கள் மட்டும் நிம்மதியை இழந்து பிடித்த வாழ்வை வாழமுடியாமல் வேதனையை அனுபவித்தபடி சுற்றிக்கொண்டிருக்க, இவள் மட்டும் எந்தவித வலியும் இல்லாமல் திரிந்துகொண்டிருப்பதைக் கண்டு எரிகிற தீயில் எண்ணை வார்ப்பதுபோல் இருக்க, அவளைக் கதறவைக்கும் நோக்கத்தோடு கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருந்தனர்...
இதையெல்லாம் கூட பொறுத்துக்கொண்டவளுக்கு இந்த ரஞ்சித்தை சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது... அண்ணன் மனைவி என்று பாராமல் துகிலுரித்த பார்வை பார்த்தபடி அவளையே சுற்றிக்கொண்டிருந்தான்... அதிலும் தன்னால் தான் இவ்வளவு தூரம் நடந்தது என்பதை உணராது விழிகளால் மேய்ந்தவனின் கண்களை சுட்டு பொசுக்கினால் என்ன??? என்ற வேகம் வரும்... ஆனால் இருக்கிற பிரைச்சனை போதாதென்று இதனையும் கிளற வேண்டுமா என மூளை எடுத்துரைத்ததில் மனதில் சூழ்ந்த அருவருப்புடன் நடமாடிக்கொண்டிருந்தாள் பதமா...
அன்றைய விழாவிற்காக அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அகலக்கரை வைத்த பட்டுப்புடவை உடுத்தி, தலைவாரி கொண்டையிட்டு அதனை சுற்றி நெருக்கமாகக் கட்டிய மல்லிகை சரத்தை சூடிக்கொண்ட வைத்தீஸ்வரி, மேலதிக நகைகளுக்காக பிரத்தியேகமாக இருந்த லாக்கரை திறந்து நகை பெட்டியை எடுத்தவரின் கண்கள், நகைகளோடு இருந்த ஒரு புகைப்படத்திடம் சென்றது...
எப்பொழுதும் போல் அந்த புகைப்படம் அவர் மனதை என்னவோ செய்ய, அதனைக் கையில் எடுத்துக்கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்தவரின் மனம் கடந்த காலத்தை நோக்கி சென்றது...
**************
பல வருடங்களுக்கு முன்பு.....
தன்னே நானே தானே நானே
யம்மா தன்னே நன்னே நானே நன்னே (2)
தானே நானே தன்னே நானே
யம்மா தான்னே நன்னே தன்னே நன்னே
தான்னே நானே (2)
ஏ... சம்பா நாணத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான் வீசுதுங்க
அங்கம் பூரா (2)
ஏ... பொண்ணு வாசம் பூவு வாசம்
செண்டு பூசிக்கலாம் கட்டிக்குங்க காலம் பூரா
என்னை பூசிக்கலாம் கட்டிக்குங்க காலம் பூரா...
அது திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் கிராமம்... எங்கும் பச்சை பசேல் எனும் வகையில் வயல்கள், பூந்தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள், பெரிய பெரிய மரங்கள், ஆறு குளம் என சூழ்ந்து அந்த கிராமமே பூலோகமாக காட்சி தந்துகொண்டிருந்தது...
அங்கு குடியிருந்த பல குடும்பங்கள் அன்றாடம் கடுமையாக வேலை செய்யும் வர்க்கத்தினர்... அவர்களுக்கு மேலும் சிலர் அளவான பணம் படைத்தவர்களாக இருந்தனர்... இவர்கள் எல்லாரையும் விட பரம்பரை பணக்காரர்களாக திகழ்ந்தது என்னவோ அந்த ஊரின் பண்ணையார் குடும்பம் மட்டுமே...
சொத்திலும் சரி, அடுத்தவர்களுக்கு உதவும் குணத்திலும் சரி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்கள் பணக்காரர் என்பதை அடிக்கடி நிரூபிக்கும் அவர்களின் ஆணிவேர் அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறையான செல்லக்கண்ணுவே...
இந்த எழுபது வயதிலும் நல்ல திடகாத்திரமான தேகம், அடர்ந்து வளர்ந்த முறுக்கிய பெரிய மீசை, வெள்ளை வேட்டி, சட்டை என கம்பீரமாக திரியும் அவரின் தோற்றத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கும் அனைவரும் அடிமை...
அந்த பெரிய மீசைக்காரர் தங்கள் வயலின் ஒரு ஓரமாக கிளைகள் பல விட்டு அடர்ந்து வளர்ந்திருந்த வேம்பின் கீழ் போட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்து பாடியபடி களை எடுத்து கொண்டிருந்த பெண்களை மேற்பார்வை பார்த்தவாறே அவர்களது பாடலை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார்...
வேலை நன்றாக இருக்க வேண்டும் என்று கண்டிப்போடு இருப்பாரே தவிர, அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கு வகையில் பாட்டு பாடி வேலை செய்வதை அவர் என்றும் தடுத்ததில்லை... இப்பொழுது அவ்வாறே கண்காணிப்போடு இருந்தவரின் அருகில் வந்து கை கட்டியபடி நின்ற கணக்குப்பிள்ளை,
“ஐயா!” என அழைக்க,
“என்ன கணக்கு???” என கணக்குப்பிள்ளையை நோக்கிய செல்லக்கண்ணுவின் கண்களில் கோபம் மின்னியது...
“உனக்கு எத்தனை தடவை சொல்லுறது... என் முன்னாடி கை கட்டி நிக்காதேன்னு... முதல்ல கையை இறக்கு கணக்கு!” இது தான் செல்லக்கண்ணு... தன்கீழ் வேலை பார்க்கும் கணக்குபிள்ளை முதல் கடைநிலை வேலையாள் வரை உள்ளவர்களை அவர் என்றுமே தன் முன்பு கைகட்ட விட்டதில்லை... அவர்களும் தங்களை போன்ற மனிதர்கள் தானே... இதில் என்ன ஏற்றத்தாழ்வு என்ற எண்ணம்... அதுமட்டும் அல்லாமல் மரியாதை மனதில் இருந்தால் போதும் என்ற பெரிய மனம் படைத்தவர்...
“சொல்ல வந்த விஷயத்தை சொல்லு கணக்கு!”
“லோட் எல்லாம் அனுப்பியாச்சுங்க ஐயா... அப்புறம் அந்த குளத்தடில இருக்கிற சின்னையன் பொண்ணு வயசுக்கு வந்துருச்சு ஐயா”
“ஓ... அப்படியா??? எப்பவும் போல அந்த பொண்ணுக்கு சீர் செய்திடலாம்... சாயங்காலம் வீட்டுக்கு போனதும் நினைவுபடுத்து! பெரிய மருமக கிட்ட சொல்லணும்” எனவும் தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்த கணக்குப்பிள்ளை தன்னிடத்தில் எதையோ சொல்ல தயங்குவது புரிய,
“என்ன கணக்கு... எதையோ சொல்ல வந்து தயங்குற மாதிரி இருக்கு... சும்மா சொல்லுயா” என ஊக்கப்படுத்த,
“அது வந்து... நம்ம சின்னையா அந்த பற்றை காட்டு பக்கம் ஒரு பொண்ணு கூட போனதை பார்த்தேன் ஐயா” என தலை குனிந்தபடி கூற, கேட்டிருந்த செல்லக்கண்ணுவின் முகத்தினில் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டன...
இது எப்பொழுதும் நடப்பது என்பதனால் மகன் மேல் எழுந்த கோபத்தையும் வருத்தத்தையும் மனதுக்குள் போட்டு புதைத்துக்கொண்டு,
“மதிய சாப்பாட்டை இங்கனவே கொண்டுவர சொல்லு கணக்கு... அப்புறம் உங்க சின்னையா விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்... இப்போ எனக்கு இளநீர் கொண்டுவா!” எனப் பணிக்க, பெரியவரின் கூற்றை ஏற்று வயலோடு ஒட்டியிருந்த தென்னந்தோப்பினுள் நுழைந்த கணக்குப்பிள்ளையின் மனதில் ‘எப்படிப்பட்ட உத்தமருக்கு இப்படி ஒரு பிள்ளை ச்சை’ என்பதே ஓடிக்கொண்டிருந்தது...
கணக்குப்பிள்ளை அவ்வாறு எண்ணுவதிலும் காரணம் இருக்கிறது... அந்த ஊரில் எல்லோர் வாயிலும் விழுந்து அரைபடும் ஒரே ஆள், செல்லக்கண்ணுவின் இரண்டாவது புதல்வன் ராஜேந்திரன் தான்...
வீட்டில் நல்ல குணவதியான மனைவி இருந்தாலும் பெண் சுகத்துக்காக அலையும் ஒரு ஈனப்பிறவி... செல்லக்கண்ணுவின் சொத்துக்கள் பலவற்றை அழித்த பெருமை இவனையே சேரும்... எல்லா கெட்ட பழக்கங்களும் கொண்ட அவனால் தான் செல்லக்கண்ணுவின் நிம்மதி நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருந்தது...
இத்தனைக்கும் அவரின் மூத்தமகன் மாதேஸ்வரன், தந்தைக்கு பெருமை சேர்க்கும் சீமந்த புத்திரன்... எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அவர் பெண்கள் விஷயத்தில் ராமனாக இருந்தார்... அதிலும் சொத்துக்களை பெருக்கும் நல்ல மூளைக்காரராகவும் இருந்தார்... அதனால் தானோ என்னவோ தமையனின் மீது மனதளவில் பொறாமையை வளர்த்து வைத்திருந்தார் ராஜேந்திரன்...
இவர்களுடன் பிறந்த பெண் சகோதரியான வைத்தீஸ்வரிக்கு தங்கள் தூரத்து சொந்தத்தில் ராமமூர்த்தியை வீட்டோடு மாப்பிள்ளையாக கொண்டுவந்திருந்தனர்...
மூத்தவருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரு குழந்தைகள்... முறையே ராஜேந்திரனுக்கு ஒரு பையனும் வைத்தீஸ்வரிக்கு ஒரு பெண்ணும் சில வருட வயது வித்தியாசத்தில் பிறந்திருந்தனர்...
மாதேஸ்வரனின் மகனான அதர்வா தந்தை போல் குனவானாக இருக்க, ராஜேந்திரனின் மகன் ரஞ்சித்தோ சின்ன வயதிலேயே கெட்ட பழக்கங்களை பழகலானான்... இதனாலேயே வைதீஸ்வரியின் பெண்ணான ஆர்னா, அதர்வாவுடனும் அவனது சகோதரியான பிரியாவுடனும் விளையாடுவாளே தவிர, ரஞ்சித்தின் பக்கத்தில் நெருங்கக்கூட மாட்டார்கள்...
அதில் எப்பொழுதும் கோபம் கொண்டு அதர்வாவுடன் சண்டை போடுவான் ரஞ்சித்... சில வேளைகளில் பொறுத்து போகும் அதர்வாவும் பல சமயம் விளாசித்தள்ளிவிடுவான்... அதன் பின்பு சில நாள் அடங்கி இருப்பவன், மீண்டும் ‘பழைய குருடி கதவை திறவடி’ என ஆரம்பித்துவிடுவான்...
ரஞ்சித்தின் செயலால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவருக்கும் இந்த சின்ன வயதில் கெட்ட பழக்கங்கள் பழகுகிறான் என்ற கவலை தான்... ஆனால் அதற்கு நேர்மாறாக ராஜேந்திரன், தன்னை போல் தன் மகன் இருக்கிறான் என பெருமைப்பட்டு அவனின் செயல்களை ஊக்கப்படுத்த, அதன் பின்பு கேட்கவும் வேண்டுமா???
மலையில் வீட்டிற்கு வந்த செல்லக்கண்ணுவின் காதில் ஆர்னாவின் அழுகை சத்தம் விழ, பதறியடித்து சத்தம் வந்த இடத்திற்கு சென்றவர், அங்கு ரஞ்சித் ஆர்னாவை அடிக்கும் காட்சியை கண்டு கோபம் கொண்டவராக அவர்களின் அருகில் சென்று ரஞ்சித்திடமிருந்து பேத்தியை விலக்கி நிறுத்தி அவளை சமாதானப்படுத்திவிட்டு அலட்சியமாக நின்றிருந்த அவன் பக்கம் திரும்பி,
“இனி இந்த மாதிரி பண்ணினன்னு தெரிஞ்சுது... தொலைச்சுக்கட்டிடுவேன்” என எச்சரிக்க, அவனோ அவருக்கும் மேலாக,
“யோவ் பெருசு, என் விஷயத்தில நீ தலையிடாதை” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு செல்ல, செல்லக்கண்ணுவோ அவனின் உதாசீனத்தில் சிலையாய் சமைந்து நின்றுவிட்டார்...
தேடல் தொடரும்...