All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ருதியின் "அவளே என் தோழனின் வசந்தம்" - கதை திரி

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம்-6



இடம்-மும்பை

2019




அது ஓரு மில் அந்த மில்லின் அலுவலக அறையில் ரிஷி மிகவும் கோபமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் அவனுக்கு புரியவில்லை எவ்வாறு தீ விபத்து நடந்தது என்று இத்தனைக்கும் அவன் தொழில் சம்பந்தப்பட்ட இடங்களில் எப்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக தான் செய்திருப்பான் ஏனென்றால் ஒரு உயிரின் விலை அவனுக்கு நன்றாக தெரியும் அவனுக்கு இதெல்லாம் விட பெரியது தன் மேல் உள்ள பழி வெறியில் தன்னுடைய வேலையாட்கள் பாதிக்க பட்டால் அதற்கு காரணமானவர்களை ஒரு போதும் அவனால் மன்னிக்க இயலாது காரணம் அவன் தந்தை ரகுராம்வர்மா அவர் அத்தனை பெரிய சம்ராஜ்ஜியத்தை நடத்தினாலும் அவ்வளவு பெரிய பணக்காரராய் இருந்தும் தொழிளாலிகள் தான் உண்மையான மனிதர்கள் அவர்கள் அவர்களின் கையால் உழைத்து சாப்பிடுகிறார்கள் ஆனால் நாமோ சொந்தமாக தொழில் செய்கிறோம் என்று அவர்களின் உழைப்பில் கிடைத்த வேகுமதியில் கால்பங்கை அவர்களுக்கு கொடுத்துவிட்டு மூக்கால்பங்கை நாம் எடுத்துக்கொண்டு அவர்களையும் மதிப்பது இல்லை அவர்கள் உயிரையும் தான் என்று கூறுவார் கூறுவதோடு அல்லாமல் அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் அதனால் தானோ என்னவோ அவர் இறந்த போதும் ரிஷி சிறியவனாய் இருந்தபோதும் அவர்கள் வேலையை விட்டுச் செல்லாமலும் வேலையில் எந்த தவறும் செய்யாமலும் விசுவாசமாகவும் உண்மையாகவும் ஒத்துழைப்போடும் இருந்தனரோ?.அதோடு எதிரி அவன் முதுகில் குத்த பார்ப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவனின் கோபம் கண்டு ராம் நடுங்கிக் கொண்டும் சித்திற்க்கு மனதில் அர்ச்சனை செய்து கொண்டும் இருந்தான் பின் அர்ச்சனை செய்யாமல் என்ன செய்வான் இப்போது வந்துவிடுகிறேன் என்று சொல்லிக் சென்ற சித் ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை என்றால் அவனுக்கு கோபம் வரத்தானே செய்யும் அதோடு அங்கு அவன் மட்டும் இல்லை அவனோடு மற்ற மேல்நிலைப் பணியாளர்களும் இருந்தனர் அவர்களும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தனர் அப்போது திடீரென்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு எல்லோரும் நிமிர்ந்து பார்த்தனர் அங்கு ரிஷி ருத்ர மூர்த்தியாக டேபிள் கண்ணாடியை உடைத்துவிட்டு கையில் இரத்தம் வடியகண்களில் கனலோடும் நின்று கொண்டிருந்தான் அவனால் எவ்வளவு முயன்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை சிறிது நேரம் கழித்து ரிஷி ராமை அழைத்தான் ராம் அவன் அருகில் சென்றான்

"ராம் இன்று என்னை கேள்வி கேட்ட அந்த பத்திரிகையாளர்களின் முழு தகவலும் எனக்கு இன்னும் அரைமணி நேரத்தில் என்னுடைய டேபிளில் இருக்க வேண்டும்"–ரிஷி

"பாஸ் பாதி தகவல் கிடைச்சுடுது இன்னும் கொஞ்சம் தான் கிடைத்தவுடன் உங்கள் டேபிள் மேல் இருக்கும்"- ராம்

ராம் இவ்வாறு கூறியவுடன் ரிஷிக்கு ஹரிஷின் ஞாபகம் வந்தது அவன் இங்கு இருந்திருந்தால் ராமை விட வேகமாக அவன் அதாவது ராம் ஆவது ரிஷி கேட்கும்போது தன் பாதி தகவலை திரட்டியிருந்தான் ஆனால் ஹரிஷ் இருந்தால் இதற்குள் அதாவது ரிஷி கேட்பதற்கு முன் அவன் முன்னால் அந்த தகவல் இருந்திருக்கும் அதேபோல இந்நேரம் இப்பிரச்சனையை முடிக்க ஏதாவது ஒரு வழியை கண்டு பிடித்திருப்பான் என்பதும் அவன் நினைவில் ஆடி அவனை கலங்கச் செய்தது.

சிறிது நேரத்தில் தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீள்வது என்று யோசிக்க ஆரம்பித்தான் அவனுக்கு பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல நஷ்டம் ஆனதைப்பற்றிய கவலை அவனுக்கில்லை அவனுக்கு இருந்ததெல்லாம் விபத்தில் இறந்தவர்களைப் பற்றிய கவலையும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களை பற்றிய கவலையும் தான்

இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன செய்வது என்றும் காயம் பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் என்ன செய்வது என்றும் யோசிக்க ஆரம்பித்தான்

அப்போது சரியாக சித் உள்ளே நுழைந்தான்

"இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட ஆக்சிடன்ட் யாரோ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டவற்றை குறிப்பாக அகற்றியுள்ளனர் சார்ட் சர்க்கூயூட் போல காட்ட முயற்சித்துள்ளனர் சிசிடிவி கேமராவை இன்னும் பார்க்கவில்லை அதைப் பார்த்தால் அதில் ஏதாவது தெரியலாம் ரிஷி"- சித்

"பாஸ் சிசிடிவி புட்டேஜ்செக் பண்ணிட்டேன் ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை "– ராம்

ரிஷி சிறிது நேரம் அமைதியாக இருந்தான்

ரிஷி மனதில் நம்மை சுற்றியுள்ளவர் எவரோ தான் நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றார் என்று உணர்ந்தான்

"ராம் காயம்பட்ட வேலையாட்களுக்கும் இறந்த வேலையாட்களுக்கும். அவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுத்து விடு அதோடு அவர்கள் வீட்டில் உள்ள வேலை செய்யும் வயதில் உள்ள யாருக்காவது அவர்கள் தகுதிக்குத் தகுந்த வேலையை நம் அலுவலகத்திலேயே கொடு அவர்களுக்கு அவர்கள் வேலைக்கு இருமடங்காக சம்பளம் கொடுத்துவிடு

காயம்பட்டவர்கள் வேலைக்கு வரும் வரை தான் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை என்று இல்லை அதன் பிறகும் அவர்கள் விரும்பினால் வேலை பார்க்கலாம் ஆனால் சம்பளம் அவர்கள் வேலைக்கு ஏற்ற சம்பளம்தான் என்பதை அவர்களிடம் கூறிவிடு மாலை பத்திரிகை சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடு" - ரிஷி

"சரி பாஸ்"-ராம்

ரிஷி ராமை முறைத்தான் அவன் முறைப்பதை கண்டு ராம் திடுக்கிட்டு விழித்தான்

"ராம் உன்னிடம் எத்தனை முறை கூறியுள்ளேன் என்னை பாஸ் என்றழைக்காத அண்ணா என்று அழை என்று கூறி உள்ளேன் தானே"

"பாஸ்………."-ராம்

"முறைக்காதீங்க பாஸ்"-ராம்

"பின்ன முறைக்காம உன்னை கொஞ்சனுமா பாஸ் பாஸ் என்று கொள்ளைக் கூட்டத் தலைவன் கூப்பிடுவது போல் ஏன் கூப்பிடுகிறாய் சகிக்கவில்லை"-ரிஷி

"என்ன பண்ணப் பாஸ் அப்படியே கூப்பிட்ட பழகிவிட்டது"-ராம்

"அப்போ அண்ணா என்றழைத்தது"-ரிஷி

"அது அப்போது நான் உங்களிடம் வேலை செய்யவில்லை"-ராம்

இவர்களின் இந்த பேச்சில் சித் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு தலையைபிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது

"ரிஷி இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது நீ இவ்வளவு சாதாரணமாக இவனிடம் முறை வைத்துக் கூப்பிட கெஞ்சிக்" – சித்

சித் இவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த அறையின் கதவை திறந்து கொண்டு பரபரப்பாக ஒரு மனிதர் ஓடி வந்து ரிஷியின் கால்களில் விழுந்தார் அவர் ரவிதாஸ்

ரவி தாஸ் அவர் ரிஷிக்கு நிகரானவர் தான் குணத்தில் இல்லை பணத்தில் மட்டும்

அவருக்கு முதலில் ரகுராம்வர்மா பெரும் தலைவலியாக இருந்தார் அவர் போனபின் தான் முன்னேறலாம் என்று நினைத்தால் இப்போது ரிஷி பெரிய தலைவலியாக இருந்தான் அதனால் அவன் பெயரை கெடுக்க அவர் நிறைய தில்லுமுல்லுகளை செய்தார் அதில் ஒன்றுதான் இந்த தீ விபத்து அவராவது அவனின் ஒரு டெக்ஸ்டைலை எரிக்க உதவி தான் செய்தார் ஆனால் ரிஷி அவரின் அடிமடியிலேயே கை வைத்து விட்டான்

அதாவது அவரின் தொழில்களில் 90 சதவீத பங்குகளை ரிஷி அவருக்குத் தெரியாமல் வாங்கியதோடு அவர் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தவர்களிடம் அவர்களைத் தூண்டிவிட்டு நோட்டீஸ் அனுப்ப. வைத்தான். அதனால் இப்போது அவர் நடுத்தெருவில் தான் அதோடு அவரின் குடும்பத்தையும் தூக்கி விட்டான்

"ரிஷி நான் தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிடு என் குடும்பத்தை விட்டுவிடு "என்று ரிஷியின் காலில் விழுந்து ரவி தாஸ் கதறினார்

ரிஷி அமைதியாக சென்று தன் சுழல் நாற்காலியை இழுத்து வந்து அவர் முன்னால் போட்டு அதில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அவரைப் பார்த்தான் அதோடு மற்ற மேல்நிலைப் பணியாளர்களை சைகையால் வெளியேற சொன்னான் இப்போது அந்த. அறையில் ரிஷி ராம் சித் இவர்கள் தான் இருந்தனர்

அவர் கண்களில் பயத்துடனும் நடுக்கத்துடனும் ரிஷியை கண்டு கைகூப்பினார்

ரிஷி அவரை தன் ஆள்காட்டி விரலால் எழுந்திருக்குமாறு சைகை செய்தான் பின் அவரிடம் "அனு எங்கே "என்று கேட்டான்.

அவர் திகைப்புடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தார் தன் எச்சிலை விழுங்கி கொண்டார்

ரிஷி மறுபடியும் அவரைப் பார்த்து அழுத்தமாக "அனு எங்கே "என்றான்.

"ரிஷி அனு காணாமல் சென்று 3 வருடம் ஆகிறது இப்போது இவரிடம் சென்று விசாரிக்கிறாய் இவருக்கும் அனுவிற்கும் என்ன சம்பந்தம்"– சித்

சித் அப்படி கேட்டவுடன் ரிஷி கோபமாக எழுந்து சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்தான் அதில் சித்தார்த்தே ஒரு நிமிடம் நடுங்கி விட்டான்

ரிஷி திரும்பி மூன்றாவது முறை போன முறையை விட அழுத்தமாகவும் ஆனால் அதே சமயம் அமைதியாகவும் ரவிதாஸின் முகத்தை தீனமாக பார்த்துக்கொண்டும் "அனு எங்கே" என்று கேட்டான்.

ரிஷியின் அமைதி ரவிதாஸின் வயிற்றில் புளியை கரைக்க ரிஷியிடம் சரணடைந்தார்

"ரிஷி சார் நான் எனக்கு தெரிந்தவற்றை கூறிவிடுகிறேன் ஆம் அனுவை கடத்தியவன் நான்தான் மூன்றரை வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு பிரைவேட் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அதை எடுத்து பேசிய போது ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்புவதாகவும் அவளின் பெயர் அனு என்றும் அவளை கடத்த வேண்டும் என்றும் அவளை கடத்தினால் உங்களுக்கு அது நல்லதல்ல என்றும் நீங்கள் அவள் மேல் உயிரையே வைத்திருப்பதாகவும் ஒருவன் கூறினான் நானும் உங்களை பழிவாங்க அப்பெண்ணை கடத்தினேன் கடத்தும் போது அவள் தலையில் அடித்ததில் அவள் மயங்கி விட்டாள் ஆனால் அவள் இரண்டு நாள் கழித்தும் மயக்கம் தெளியவில்லை அவளின் அருகில் சென்று பார்த்தபோது அவள் இறந்து விட்டதாக தெரிந்தது அதனால் அவளை கொண்டு சென்று எங்காவது போட்டு விடும்படி நான் ரவுடி ரமணாவிடம் கூறினேன் அவனும் அவளை எடுத்துச் சென்றான் சில நாள் கழித்து ரமணா என்னிடம் அப்பெண்ணை எங்கொ கொண்டு போட்டுவிட்டதாக கூறினான் அதே போலத்தான் இந்த. தீ விபத்தும் ஆனால் தீ விபத்தை. நான் ஏற்படுத்தவில்லை நான் அந்த பத்திரிக்கையாளர்களை மட்டும்தான் ஏவிவிட்டேன் அதுவும் அன்று போல இந்த முறையும் தொலைபேசி மூலமாக யாரோ கட்டளை இட்டார் நானும் அவர் கூறியது போலவே செய்தேன் எனக்கு வேறு ஓன்றும் தெரியாது".

இதைக் கேட்டவுடன் ராமும் சித்தார்த்தும் ரவிதாஸை தூக்கிப்போட்டு பந்தாடி விட்டனர்.

திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் அங்கு பார்த்தனர் இங்கு நான்கைந்து தடியர்கள் ஒருவனை இரத்தம் சொட்டச்சொட்ட அழைத்து வருவதை கண்டனர் ரிஷி எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தான்

இரத்தம் வடிய வந்தவன் ரவுடி ரமணா

அவன் அத்தனை வலியிலும் வேதனையிலும் மெதுவாக ஊர்ந்து வந்து ரிஷியின் கால்களை பற்றிக் கொண்டு "சாப் சாப் நீங்கள் சொன்னா நம்புவீர்களா என்று எனக்கு. தெரியாது இதோ இருக்கானே இந்த ரவிதாஸ் சொன்னான் அப்படின்னு அந்த பொண்ண நானும் என் ஆளுங்களும் எடுத்துட்டு போகும் போது எங்கள் வண்டி பாதி வழியிலேயே நின்று விட்டது என்ன பிரச்சினை அப்படின்னு இறங்கி பார்க்க போனவன் திடிரென அலறும் சத்தம் கேட்டது சாப் நாங்களும் இறங்கி பார்த்தோம் அங்க.. அங்க ..அந்த ஆள் செத்து கிடந்தான் பிறகு நானும் என்னோட ஆளுங்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக யாராவது இருக்காங்களானு தேடினோம் தேடும் போதே ஒவ்வொருத்தரும் திடிர் திடிரென அலறுரும் சத்தம் கேட்டு நாங்கள் அங்கு சென்று பார்ப்பதற்குள் எல்லோரும் இறந்திருந்தனர் இத்தனைக்கும் நாங்கள் மொத்தம் பதினைந்து இருபது பேர் அதில் மிஞ்சியது நானும் இன்னும் இரண்டு பேரும் தான் அவர்களும் அன்று நேரில் பார்த்த. ஒரு காட்சியை கண்டு பயந்து ஓடி விட்டனர் அதன் அவர்கள் என்னோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை சாப்"- ரமணா

"நீ சொல்வது உண்மை என்று நாங்கள் எப்படி நம்புவது உன் கூட்டாளிகள் பயந்து ஓடும் அளவிற்கு அங்கு அப்படி என்ன நடந்தது"- சித்

"சாப் அது வந்து அது வந்து-" ரமணா

"இப்படி இழுத்துகிட்டு இருந்தேனா உன்னை நான் நாலு. இழுஇழுத்து விடுவேன்"–ராம்(பின் அனு என்றால் அவனுக்கு அவ்வளவு பிரியமாயிற்றே)

"அது அங்க எங்க ஆளுங்க எல்லாம் செத்து செத்து விழுந்தாங்கனு சொன்னேன்ல சாப் அவங்க தானா சாகலை சாப் அவங்க எல்லோரையும் கொன்றது ஒரு பொண்ணு சாப் "-ரமணா

"என்ன"-ராம்

"ஆமாம் சாப் அதுவும் நாங்கள் தூக்கிட்டு போன பொண்ணுதான் சாப் என்னோட ஆளுங்க எல்லோரையும் கொன்னு போட்டுது"-ரமணா

"என்னடா விளையாடரையா அவ மேல கொலை பழியபோட்டுட்டு நீ தப்பிக்கலாம்னு பார்க்கரையா"– சித்

"இல்லை சாப் இல்லை சாப் நான் பார்த்தேன் சாப் அந்த பொண்ணு தான் சந்தேகம் வந்து நாங்கள் தூக்கி சென்ற பெண்ணை பார்த்து போது அந்த பொண்ணு கார்ல நாங்க படுக்க வைத்திருத்தது போல அப்படியே படுத்திருந்தா அதோட எங்கள அடிச்ச அந்த பொண்ணுக்கு கண் இருக்க வேண்டிய இடம் கருப்பா இருந்துச்சு சாப்"

இதைல கேட்ட சித் அவனை என்ன எங்க காதுல பூ சுத்துரையா என்று திரும்பவும் அவனை துவைத்து எடுத்து விட்டான்

ராம் தான் தடுத்தான்

"எதுக்காக என்னை தடுத்த" என்று சித் ராம் சீறினான்

இவ்வளவு நேரம் ரமணா கூறியதை யோசித்து கொண்டு இருந்த போது ரிஷிக்கு சிலது ஞாபகத்திற்கு வந்தது அது அவனுக்கு ரமணனின் கூற்றில் இருந்த உண்மையை உணர்த்தியது

"சித் எனக்கு அவன் சொல்வது உண்மை என்று தோன்றுகிறது "– ரிஷி

"ஆமாம் அண்ணா எனக்கும் தான்"–ராம்



சிறிது நேர அமைதிக்கு பிறகு அனு எங்க இருக்கா அப்படின்னு நாம இப்போ எப்படி தெரிந்து கொள்வோம் டிடெக்டிவ் ஏஜென்சியை அனுகலாம-ராம்

"அதற்குத் தேவை இல்லை அனு எங்கிருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது"- க்ரிஷ்வந்த்

(இவன் எப்போ உள்ள வந்தான் அப்படின்னு பாக்கிறேங்களா அந்த ரமணாவ இழுத்துட்டு வர கைய்டு பண்ணிணதே இவன்தான்பா)

அனு இருக்கும் இடம் தெரியுமா எப்போது தெரியும் எப்படி தெரியும் இப்போது எங்கிருக்கிறாள் என்று மாறி மாறி ராமும் சித்தார்த்தும் க்ரிஷ்வந்தை துளைத்து எடுத்துவிட்டனர் பின் சித் சாராவிற்கு சொல்வதற்காக தன் போனை எடுத்தான்

"ரிஷி அதை தடுத்து இப்போது இந்த அறையில் இருப்பவரை தவிர இவ்விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் நீங்கள் இருவரும் ரவிதாஸ் கூறியதை கேட்டீர்கள் தானே யாரோ ஒருவர் ரவிதாஸை தொடர்பு கொண்டு அனுவை கடத்த சொல்லி இருக்கிறார்கள் இந்த தீ விபத்து அதையும் யாரோ மறைவில் இருந்து தான் செய்திருக்கிறார்கள் என்னை அழிக்க யாரோ எதற்கோ நினைக்கிறார்கள் என்னை மட்டுமில்லை சித்
உன்னையும் தான் உனக்கு ஞாயபகம் உள்ளதா நாம் ஒருதரம் லிஃடில் செல்லும் போது கரண்ட் கட்டாகி நாம் அதில் மாட்டிக் கொண்டோமே அதில் விஷ வாயுவும் போடப்பட்டதே நம்மை அதிலிருந்து காப்பாற்றியது அனு தான் அதன்பின் ஒருமுறை கார் பிரேக் பிடிக்காமல் அனு தன் தோழியின் ஸ்கூட்டியை நம் காருக்கு குறுக்காக மோத விட்டு நிறுத்தி நம்மை காப்பாற்றிளே அனு அந்த இடத்திற்கு அதுவும் சரியான நேரத்திற்கு எப்படி வந்தாள் அதுவும் அவள் இடம் அப்படி ஒரு பதட்டம் தெரிந்ததே

அதன் பின் இதே போல் உன்னை நோக்கி மாலில் ஷூட் ஆவ்ட் நடந்த போது ஹரிஷ் உன்னை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினானே" - ரிஷி

"ஆங் ரிஷி எனக்கும் எல்லாம் ஞாயபகம் வருகிறது அந்த ஷூட் ஆவ்ட் நடந்த அன்று நீயும் முதலில் லிஃப்டில் மாட்டிக் கொண்டது போல திரும்பவும் மாட்டிக் கொண்டது அப்போது உன்னை காப்பாற்றியது அனுவின் தோழி தானே"-சித்

இதில் ஒரு தடவைதான் அம்முவிடம் நான் போகும் இடம் பற்றி கூறினேன் நீ சாராவிடம் எப்பவுமே எதுவும் கூறியது இல்லை எதுவாக இருந்தாலும் முடிந்த பின் தான் அதை பற்றி அவளிடம் கூறுவாய் அவளும் உன் மேல் முழு நம்பிக்கையும் அன்பும் இருந்ததால் நீயாக கூறினால் தவிர எதுவும் கேட்ததில்ல சரி தானே"-ரிஷி

"சரி தான் ரிஷி"-சித்

"பிறகு எப்படி நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை தாக்க முயன்றார்கள்"-ரிஷி

"இதை நான் இத்தனை நாளாக கவனிக்கவும் இல்லை யோசிக்கவும் இல்லை சாரி ரிஷி ஒரு போலீஸாக இருந்து கொண்டு நான் எப்படி இப்படி இருந்தேன்"-சித்

"அண்ணா நீங்கள் மட்டுமா அப்படி இருந்தீர்கள் எல்லோரும் தான் எல்லாம் இந்த பாழாய் போன காதலால் வந்தது"- ராம்

"டேய்…….."- சித்

"சித் அவன் கூறுவது சரிதான் நீ மட்டுமல்ல நானும் தான் இதை எல்லாம் அலட்சியப் படுத்தினேன் ஆனால்......- ரிஷி

"ஆனால் என்ன ரிஷி எப்போது உனக்கு இதேல்லாம் புரிந்தது எப்படி புரிந்தது" – சித்

சிறிது நேர அமைதிக்கு பிறகு "மூன்று மாதம் முன்பு பிரிட்டனில் இருந்து வந்த தொழில் ஒப்பந்த காரர்கள் இந்தியாவை சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறினார்கள் எனக்கும் அப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்ஸேசன் வேண்டும் போல் இருந்ததால் நானும் சென்றேன் என்னோடு இந்த குரங்கும் ஓட்டிக் கொண்டான் உனக்கு நினைவு இருக்கிறதா"– ரிஷி

"அ..ண்.ணா……….?"- ராம்

"விடுடா விடுடா இதல்லாம் நமக்கு சாதாரணம் "– க்ரிஷ்வந்து

ராம் அவனை முறைத்தான்

"அவனை விடு டா நீ சொல்லு ரிஷி என்ன நடந்தது அங்கு"- சித்

"அதை நான் காண்பிக்கிறேன் சித்தார்த் அண்ணா"-ராம்

"எதை காண்பிப்பாய்"– க்ரிஷ்

அவனை முறைத்து கொண்டே தன் போனை எடுத்து அதில் ஒரு காணொளியை ஓட விட்டான்

இவர்கள் மூவரும் காணொளியை காண ரிஷி மட்டும் ஆனால் அந்த நாள் ஞாபகத்திற்கு சென்றான்

எல்லோரும் ஹிமாலயாவை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது வெளிநாட்டவர்கள் தனியாக ஒரு பகுதிக்குச் செல்ல ரிஷியும் ராமும் தனியாக நின்றனர்

திடீரென்று ஒரு குரல்

“உன் தந்தை செய்த அதே தவறை செய்யும் மூடனே!....”

என்றது

அக்குரல் வந்த திசையை நோக்கி ரிஷி திரும்பினான்

ராமோ எதையோ தன் போனில் காணொளி எடுத்துக் கொண்டிருந்தான் அதனால் இவன் மட்டும் திரும்பி பார்த்தான் அங்கு ஒரு சிவதவசி உடல் முழுதும் சாம்பலைப் பூசிக்கொண்டு சூலத்தில் உடுக்கையோடு அவனை நோக்கி வந்தார்

வந்தவர் அவனை நோக்கி கூறியது





“நீ விரும்பியது ஒருத்தி

நீ தேடுவது ஒருத்தி

விதியின் ஆட்டத்தால்

வேறு ஒருத்தி

நீ தேடும் முகம்

கொண்டு இருக்க

உன்னைக் காக்க

உயிர் துறந்தாள் ஒருத்தி

உயிர் துறந்தவள்

நிம்மதியின்றி அலைய

உயிரோடு இருப்பவள்

உன்னை மறந்து

உன் உயிரை சுமந்து

அலைய நீ இருக்கிறாய்

கண்ணை மூடி உன்

தந்தையை அழித்த

சதி என்னும் எமன்

உன்னையும் அழிக்க

உன்னை தொடர்கிறது

சதியாகவும் மதியாகவும்

உன்னை வெல்ல அதை

தடுக்க தன்னையே

கவசமாக மாற்றிக்

கொண்டாள் ஒருவள்

உன் குலத்தையும்

உன் காதலையும் காப்பாற்ற

போராடி கொண்டிருக்கிறாள்

அவள் உன்னோடு

ஜென்ம ஜென்மமாக

தொடரும் உன்னதமான

உறவிற்காக போராடுகிறாள்

காரணம் முற்பிறவியில்

நீ ஒருத்தியின் நட்பிற்காக

போராட மற்றொருத்தி

உன் காதலுக்காக

போராடினாள் இப்பிறவியில்

உன் நட்பாக இருந்தவள்

உன் எல்லாவற்றுக்காகவும்

போராடுகிறாள் இனியாவது

விழித்துக் கொள்!

விழித்துக் கொள்!

விழித்துக் கொள் மூடனே!

இனியும் நீ கண்ணிருந்தும்

குருடனாய் இருந்தாய் ஆனால்

உன் குலத்திற்கு

வரமான நட்பை தீரா

சாபமாக மாற்றியதற்கும்

உன் குலத்தின் அழிவிற்கும்

நீயே காரணமாக

கடவாய் மூடனே! இது எம் அப்பன் ஈசனின் வாக்கு!........”





இதை கண்டும் கேட்டும் சித்தும் க்ரிஷ்வந்தும் ஒன்றும் புரியாமல் முழித்தனர்

"அவர் இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் இப்போது நீங்கள் முழிப்பதை போல்தான் நானும் ராமும் முழித்துக் கொண்டிருந்தோம் ராம் தான் முதலில் சுதாரித்து என்னை அழைத்து வந்தான் அன்று மட்டும் ராம் இல்லையென்றால் நான் என்ன செய்து இருப்பேன் என்றே தெரியாது ஆனால் அவர் சொன்ன வரிகள் மட்டும் எப்படி என் மனதில் அச்சு பிசகாமல் பதிந்தது அது எவ்வாறு இது நாள் வரை ஞாயபகம் இருக்கிறது என்பது எனக்கே புரியாத புதிர் தான்"

அப்போது தான் க்ரிஷின் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்த ரிஷி க்ரிஷை அழைத்தான்

"க்ரிஷ்"

"க்ரிஷ்"!!

"க்ரிஷ்……………!!!???"

"ஆங்..?"

"கிழிஞ்சுது போ"-ராம்

ரிஷி ராமை முறைத்தான்

ராம் வாயை தன் கையால் மூடிக்கொண்டான்

"என்னாச்சு க்ரிஷ் உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் கவனம் இங்கு இல்லையே ஏன்" – ரிஷி

"அண்ணா அது வந்து அது வந்து.,…."- க்ரிஷ்

"அதான் வந்துட்டல சீக்கரம் விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு கிளம்பு" – ராம்

"இப்போது மூவரும் அவனை முறைத்தனர் சித் ஒரு படி மேலே சென்று டேபிளில் இருந்த பிளஸ் திரியை எடுத்து கொண்டு ராமை நெருங்கிச் சென்றான் இதை கண்ட ராம் பின் வாங்கி கொண்டே பேச்சு பேச்சா இருக்கனும் நோ வேப்பன்ஸ் "என்றான்

"இனி நீ சும்மா குறுக்க பேசின இத வாயில கைல காலுல கட்டி இங்கேயே ஒருவாரம் சாப்பாடு தண்ணி இல்லாம இருனு விட்டுட்டு போய்டுவோம் "என்று மிரட்டினான்

ராம் இதை கேட்டு அமைதியாகி விட்டான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு அவன் எகிறி கொண்டு சண்டையிட சென்றவன் ரிஷியின் ராம் என்ற ஒற்றை சொல்லில் அடங்கி அமைதியானான்

பின் ரிஷி க்ரிஷ் பக்கம் திரும்பினான்

தான் பதில் சொல்ல வேண்டியதை உணர்ந்த க்ரிஷ்

"அண்ணா நானும் இவர பாத்தேன்"– க்ரிஷ்

"என்ன இந்த சிவன் அடியார நீ பார்த்தைய எப்போ எப்படி. என்ன சொன்னார்" -ராம்(ஆம் ராமிற்கு இதில் எல்லாம் மிகுந்த நம்பிக்கை உண்டு)

"ஆமாம் ராம் ஒரு ஒன்றரை மாதத்திற்கு முன்பு"- க்ரிஷ்

"நான் ஒரு ஆப்ரேஷனுக்காக மதுரை போய்ருந்தேன் அப்போ என்னோட கோலீக் மதுரைக்கு வந்தது தான் வந்தோம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்விட்டு ஊருக்குத் திரும்பலாமே என்றார் நானும் சரி யென்று அவர்களுடன் இணைந்து சென்றேன்

அங்கு இவர் தீடிரென்று என் முன் வந்து ரிஷி அண்ணாவிடம் கூறியது போல் என்னிடமும் ஒன்றை கூறினார் எனக்கு அது இன்னமும் நினைவு இருக்கிறது அதை வைத்து தான் நான் அனுவை கண்டுபிடித்தேன் அது



“முக்கடல் சங்கமிக்கும் இடமாம்

எம் தாய் கன்னியாய் அவதரித்தவள்

வீற்றிருக்கும் இடமாம் அங்கு செல்

நீ தேடுவது கிடைக்கும் காலம் கடக்கும்

முன் செல் நீ தேடுவது பல உயிர்களைக்

காக்க வல்லது செல் சீக்கிரம் செல்!!!!!!!!!!!!!!!”

அவர் சொன்னது இதுதான் அண்ணா!!!"

"கொஞ்சம் நேரம் அமைதிய எதையோ யோசித்த க்ரிஷ் ரிஷி இடம் எதோ சொல்ல ஆரம்பித்தான்

(அங்கு இப்போது சினிமால வருமே யாரையாவது கவுக்க வில்லன் திட்டம் போடும் போது ஒலிய கட் பண்ணிவிட்டு காட்சிய மட்டும் போடுவாங்களே அத மாதிரி நினச்சுக்கோங்க ப்ரண்ட்ஸ்)

சரி சரி காட்சி ஆவது போடுன்னு நீங்க சொல்லறது புரியுது

காட்சி:

க்ரிஷ் வந்து ஏதோ யோசிச்சுட்டு தயங்கி தயங்கி எதையோ சொல்லறான்

அது கேட்ட மத்த மூனு பேரும் திகைச்சு போய் கொஞ்ச நேரம் நிக்கறாங்க

முதல ரிஷி திகைப்பு லேந்து வெளி வந்து க்ரிஷோட சட்டைய புடிச்சு

உலுக்கி அவன அடிக்கிறான் ராம் கண்ணிலேந்து தண்ணி வருது அவன்

அழுதுகிட்டே க்ரிஷ்கிட்ட வந்து அவனும் க்ரிஷ்ஷோட சட்டையை பிடிச்சு

ஏதோ கேக்கறான் சித் தன் தலைல கை வைச்சு திகைப்புல அப்படியே கீழ

உட்காந்துடரான் க்ரிஷ் அதை பார்த்துட்டு சித் கிட்ட வந்து ஏதோ சொல்லி

அவனும் கதறி அழறான் அவன் அழறத பார்த்து சித்தும் ராமும் அவன

சமாதான படுத்தறாங்க ரிஷி இறுக்கி நிக்கிறான்,……………………………………………………………

…………………………………………………………………………………………………………………………………………………………………

…………………………………………………………..........................................................................................................

சிறிது நேரம் கழித்து எல்லோரும் முகத்திலும் துக்கம் பொங்கி வழிந்தாலும் அதை அடக்கி கொண்டனர் பின் சிறிது நேர அமைதிக்கு பிறகு

"அவர் சொன்னது என்ன இடம் க்ரிஷ்"-சித்

"கன்னியாகுமரி"- ராம்

"என்ன சொல்லற ராம்" – சித்

ரிஷியும் ராமை கேள்வியாக பார்த்தான்

அது அண்ணா முக்கடல் சங்கமிக்கும் இடம் அப்படின்னு அந்த சிவன் அடியார் சொல்லியிருக்கிறார் அப்படி என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம் அதுவும் நம் பாரத தேசத்தில் எது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்

அதோடு அவர் கூறிய இரண்டு பாட்டையும் பாருங்கள் அதில் ரிஷி அண்ணா உங்களிடம் கூறியதில் என் அப்பன் ஈசன் என்று கூறியுள்ளார் அப்பொழுது க்ரிஷிடம் கூறிய எம் தாய் என்பதற்கு அர்த்தம் அம்மன் .

தென் முனையான முக்கடல் சங்கமிக்கும் அவ்விடத்திற்கு அப்பெயர் வந்ததே அந்த அம்மன் ஆல்தான் இதை வைத்து தான் நான் கன்னியாகுமரி என்று கூறினேன்

"ராம் கூறுவது சரி தான் ரிஷி அண்ணா அனு அங்கு தான் இருக்கிறாள்"-க்ரிஷ்

"நிஜமாகவா க்ரிஷ் "- ரிஷி

"ஆமாம் அண்ணா"- க்ரிஷ்

"அதோடு உங்கள் எல்லோருக்கும் இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கிறது"-க்ரிஷ்

"என்ன ஆச்சரியம் க்ரிஷ் அனு எங்கிருக்கிறாள் ஏன் அவள் நம்மளை தேடி வரவில்லை இப்போது எப்படி இருக்கிறாள்"- சித்

"சித் அவசரப்படாதே இப்போது நாம் இருக்கும் நிலையை முதலில் தெரிந்து கொள் முதலில் மேஜைக்கடியில் பார்" - ரிஷி

கீழே பார்த்த சித்" ரிஷி இது வாய்ஸ் டிரான்ஸ் மிட்டர் தானே இது இங்கு உள்ளது என்றால் நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள் இதைத் தவிர்த்து வேறு ஏதாவது இருக்கிறதா அப்போது இவ்வளவு நேரம் நான் பேசியதை கேட்டிருப்பார்களே இதனால் அனுவிற்கு ‌ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ"-சித்

"இல்லை சித் நான் முதலிலேயே இங்கு வந்தவுடன் ஜாமரை ஆன் செய்துவிட்டேன் இதனால் யாராலும் நாம் இவ்வளவு நேரம் பேசியதை கண்டுபிடிக்க இயலாது ஆனால் இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது யாரோ நம் கூட இருந்தே நம் முதுகில் குத்த முயல்கிறார்கள் யாரது அவர்களை கண்டுபிடித்தே ஆகவேண்டும் இனி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும் இவையெல்லாம் விஷயங்களும் நம் நாலு பேரை தவிர யாருக்கும் தெரியக் கூடாது அது யாரா இருந்தாலும் சரி நான் போய் முதலில் அனுவை அழைத்து வருகிறேன் அவளை அழைத்து வந்தால் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ஆனால் நான் அனுவை அழைத்து வருவது நான் இங்கு அவளை அழைத்து வரும் வரை யாருக்கும் தெரியக் கூடாது அதனால் நான் தொழில் சம்பந்தமாக வெளிநாடு சென்று இருப்பதாக எல்லாரையும் முதலில் நம்ப வைக்க வேண்டும் பிறகு தான் யாருக்கும் தெரியாமல் அனு இருக்கும் இடம் சென்று அவளை எப்படியாவது பாதுகாப்பாக இங்கு அழைத்து வர வேண்டும்.

"ரிஷி இன்னொரு முக்கியமான விஷயம் நீ கவனித்தாயா இந்தப் பாட்டில்



உன் தந்தையை அழித்த

சதி என்னும் எமன்

உன்னையும் அழிக்க

தொடர்கிறது அதை

தடுக்க தன்னை கவசமாக

மாற்றிக் கொண்டாள் அவள்

இந்த வரிகளை வைத்து பார்க்கும் போது உன் அப்பாவோட மரணமும் எதிர்பாராமல் நடந்த ஆக்சிடென்ட் இல்லை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று தோன்றுகிறது நீ என்ன நினைக்கிறாய்"-சித்

"ஆமாம் சித் அதோடு சில வரிகள் என்னை மிகவும் குழப்புவதாக இருக்கிறது ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு அனு இடம் தான் உள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது பார்க்கலாம் ஆங் நீங்கள் நால்வரும் இந்த நான்கு சிம்மை ஆளுக்கு ஒன்றான எடுத்துக் கொள்ளுங்கள் இனி நாம் எந்த முக்கியமான விஷயம் என்றாலும் இதில் தொடர்பு கொண்டால் போதும் அல்லது ஏதாவது ஆபத்து என்றாலோ அல்லது ஏதாவது ஒரு க்ளூ கிடைத்தாலோ இதில் ஒரு பிளாங்க் மெசேஜ் அனுப்பினால் போதும் சரியா

ஆனால் அதற்காக எப்பொழுதும் உள்ள போனில் நாம பேசாம இருக்க கூடாது அதனால் எப்போதும் போல அதிலும் சில தடவைகள் பேசிக்கொள்வோம் ஆனால் முக்கியமான விஷயம் என்றால் எக்காரணம் கொண்டும் பழைய போனிலோ அல்லது மெயிலிலோ நாம் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் அப்படியே மெயிலில் தொடர்பு கொண்டாலும் நீங்கள் தனியாக புது ஒரு மெயில் ஐடியை ஆரம்பித்து அதில் நீங்கள் கூற வேண்டியவற்றை. டீராப்ஃடாக டைப் செய்து வைத்து விடுங்கள் அந்த மெயில் ஐடி ப்ளஸ் அதன் பாஸ்வெர் டை புது எண்ணின் மூலம். நாம் நால்வரும் பகிர்ந்து கொள்ளலாம்- ரிஷி

ரிஷி என்ன செய்தாலும் நாம் சிம்மை இந்த போனில் போட்டு பேசினால் ஐ.எம்.ஈ.ஐ நம்பரை வைத்து இந்த நம்பரை டிரேஸ் செய்து விட மாட்டார்களா அதோடு இப்போது உள்ள. லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்வது. எளிது தானே " - சித்

"அது ஒன்று இருக்கிறதோ சரி அப்போது ஒன்று செய்யுங்கள் பழைய மாடல் போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் அதாவது பழைய மாடல் என்றால் பேசிக் போன் ஒன்றை வாங்கிக் கொள்வோம் அதை யாராலும் ஹேக் செய்ய முடியாது தானே அதோடு ஸீம்மையும் போனையும் நம் பெயரில் வாங்கினால் தானே டிஈரக் செய்ய முடியும்" – ரிஷி

"ஆமாம் ரிஷி இது நல்ல யோசனை தான் சரி நம் வேலையை ஆரம்பிக்கலாமா"- சித்

ரிஷி ராம் இருவரும் அன்று மாலை பத்திரக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் காதாதிருந்து இருவரும் தொழில் முறைப் பயணம் செல்வதாக எல்லோரையும் நம்ப வைத்து விட்டு அனுவை தேடி புறப்பட்டனர்

ரிஷியும் ராமும் அனுவை நோக்கி பயணப்பட ரிஷியின் நினைவுகள் பின் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.




2016

அனு கடத்த படுவதற்கு ஒரு வாரம் முன்பு

ரிஷி அம்முவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டு அனுவை நோக்கி சென்றான்

அவளிடம் சென்று அவளுக்கு எல்லாம் செய்து அவளுக்கு உணவு ஊட்டி விட்டு மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு கீழே வந்தான்

அம்மு அவனுக்காக உணவை வைத்துக் கொண்டு காத்திருந்தார்

"அதை கண்ட ரிஷி அம்மு உன் கிட்ட எத்தனை தடவ சொல்றது நேரா நேரத்துக்கு சாப்பிடுனு எனக்காக காத்திருக்காத என்று"- ரிஷி

"டேய் டேய் நான் ஒன்னும் ரொம்ப நேரம் காத்திருக்கல தினம் தினமா காத்திருக்கேன் இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டையே நானும் உன்கூட சாப்படலாம்னு பார்த்தா ரொம்ப தான் விரட்டரையே"– அம்மு

இங்கு இவர்கள் இவ்வாறு இருக்க வேறு ஒரு இடத்தில் இருவர் ரிஷியை வளைத்து வீழ்த்த சதி திட்டம் போட்டு கொண்டிருந்தனர்

அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது அங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது அந்த குரல் "ரிஷியை இன்று இராத்திரி எப்படியாவது என் பக்கம் இழுத்துடுவேன் அவன் எப்படியும் அந்த குணால் குடும்பம் கொடுக்க கூடிய விருந்துக்கு வருவான் அங்க அவன் குடிக்கப் போற கூல்டிரிங்க்ஸ்ல இந்த போதை மருந்த கலந்துட்டா போதும்

இந்த போதை மருந்த எடுத்து கிட்டா பன்னிரெண்டு– பதினைந்து மணி நேரத்திற்கு என்ன செய்றோம் ஏது செய்யறோம்னு தெரியாது"

அதே அறையில் இன்னொரு குரல் "சரி இதுனால நமக்கு என்ன பயன்"

முதல் குரல்.. "அவன் மட்டும் போதை மருந்து கலந்த ஜூஸை குடிச்சுட்டான்ன அவனுக்கு எப்படியும் ஒரு ஒரு மணி நேரத்தில அது வேலை செய்ய ஆரம்பித்து விடும் நான் அங்கேயே ஒரு ரூம் புக் பண்ணியிருக்கேன் அவன நான் அங்க அழச்சுட்டு போய் நான் அவனோட ஒன்னா கலந்துட்டா அவனால என்ன மறுக்க முடியாது அதுக்கு அவன் மனசாட்சி ஒத்துக்காது புரியுதா"

அதற்கு இரண்டாவது குரல் .. "புரியுது புரியுது"

"சரி சரி யாருக்கும் சந்தேகம் வராம நாம இந்த காரியத்தை கட்சிதமா முடிக்கனும் "இது முதல் குரல்

இவர்களை தவிர மூன்றாவதாக இவ்விருவரின் கண்களுக்கும் புலப்படாமல் இருந்த அந்த ஆன்மா இவர்களின் திட்டத்தை கேட்டு அதிர்ந்தது இது நடந்துவிட்டால் ரிஷியை அனுவை ஏன் அந்த குடும்பத்தையே இவர்கள் சர்வநாசம் செய்து விடுவர்

நடக்க கூடாது இவர்கள் நினைப்பது நடக்க கூடாது என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆன்மா அலைபாய்ந்தது







ஆன்மாவால் ரிஷியை காப்பாற்ற முடிந்ததா இல்லை ரிஷியை வீழ்த்த நினைப்பவர்கள் ஜெய்த்தார்களா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்









வசந்தம் பூக்கும்……………………………………………………….
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம்-7

2016

ரிஷி இல்லம்


அம்மு நான் தொழில் சம்பந்தமா குணால் குடும்பம் கொடுக்க கூடிய விருந்துக்கு போக வேண்டும் நீங்க அனுவை கொஞ்சம் பார்த்துக்கொங்க– ரிஷி

உர்ர்……-அம்மு

ரிஷி சொல்லிக் கொண்டே அம்முவை நிமிர்ந்து பார்த்தவன் தன் பேச்சை நிறுத்தி விட்டு அம்மு என்னாச்சு அம்மு ஏன் முகம் சிவந்திருக்கு–ரிஷி

டேய் கிட்ட வராத கிளம்பு-அம்மு

முகத்தை திருப்பி கொண்டார் -அம்மு

என்ன கோபம் அம்மு நீ சொன்ன தான தெரியும்-ரிஷி

உனக்கு தெரியாதா -அம்மு

என்ன அம்மு-ரிஷி

என்ன..என்ன நோன்ன அம்மு-அம்மு

………………………

பின்ன என்னடா அனுவ நான் பார்த்துக்க மாட்டேனா என்னமோ அவள் நான் அப்படியே நட்டாட்டுல விட்டுடர மாதிரி எப்போ எங்க போனாலும் போறத்துக்கு முன்ன அனுபத்திரம் அனுபத்திரம் சொல்லற-அம்மு

ஒஹ்…. சாரி அம்மு நீ என்னவிட பத்தரமா பாத்துப்ப ஆன எனக்கு தான் பய உணர்வு ஜாஸ்தியா இருக்கு என்ன செய்ய சொல்லு அம்மு அத இனி மாத்திக்கரேன் சரிய இப்போ சிரி ப்ளீஸ்…. ப்ளீஸ் என் செல்ல அம்மு இல்ல சிரியேன் என்று அம்முவின் கன்னத்தை பிடித்து கிள்ளினான் – ரிஷி

போட போக்கிரி என்று சிரித்தார்-அம்மு

சரி சரி சீக்கிரம் போய்ட்டு வா எப்படி இருந்தாலும் உன்னால் மட்டும்தான் அவள சமாளிக்க முடியும் அவ எங்க எங்க பேச்ச எல்லாம் காது கொடுத்து கேக்கறா அவளும் ரொம்ப சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கறா ரிஷி அவ சீக்கிரம் குணமான நல்லா இருக்கும் என்று அவன் முகம் பார்த்தார் -அம்மு

அது வேதனையில் சுருங்கி இருந்தது அதை கண்டு அவர் துடித்து போனார் தான் செய்த தவறை உணர்ந்து நான் ஒரு முட்டாள் நீ வெளியே போகும் போது நிறுத்தி வெச்சு நானே நேரத்த கடத்தரேன் இரு இரு ஒரு நிமிஷம்-அம்மு

அ..ம்..மு– ரிஷி



இங்க பார் கண்ணா உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை தெரியும் ஆனால் எனக்கு இருக்கே அதை உன் மேல தினிக்கறது தப்பு தான் ஆன என்னமோ இன்னிக்கு எனக்கு மனசே சரியில்லை நீ வேண்டாம் சொல்லாத கண்ணா என்னோட மன திருப்பதிக்காக என்று கூறி பூஜை அறையில் இருந்து எடுத்து வந்ததிருநீற்றை தலையில் தூவி கையில் இருந்த தாயத்தை அவன் புஜத்தில் வெளியே தெரியாதவாறு கட்டிவிட்டார் –அம்மு (இத நீங்க எதுக்கு கட்டரீங்க அம்மு தப்பு பண்ணரீங்களே இது பேய் கிட்டேந்து வேணும் நா ரிஷிய காப்பாத்தும் மனிஷ ரூபத்திலே இருக்கும் ரத்தகாட்டேரிங்க கிட்டேந்து இல்ல)

அவர் கட்டி முடித்ததும் இறுகிய முகத்துடன் வெளியேறினான் - ரிஷி

அந்த பெரிய ஹோட்டல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ( அது தேவ் ஹோட்டல் ஒட ஒரு கிளைதான் பா )

ரிஷியின் கார் ஹோட்டல் வாசலில் வந்து நிற்கவும் ஹோட்டல் வாலே ரிஷியிடம் ஓடி வந்து அவனின் கார் சாவியை வாங்கி பார்க்கிங்கில் விட எடுத்து சென்றான் அதற்கு முன் ரிஷி வந்து இறங்கிய உடன் அங்கிருந்த அனைவரும் அவனை தான் பார்த்தனர்

அதிலும் இளம் பெண்கள் அவனை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்தனர் என்றால் வயது வந்த மகளை வைத்திருந்த பெற்றோர்கள் ரிஷியை தங்கள் மருமகனாக ஆக்கிகொள்ள முடியவில்லையே என்று பெருமூச்சு விட்டனர்

(அவர்கள் விட்ட பெருமூச்சில் நானே எழுத முடியாமல் பறந்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

இது ஒரு பக்கம் இருக்க இளம் வயது ஆண்கள் சிலர் இவனை கண்டு வியந்தனர் என்றால் சிலர் பொறாமை பட்டனர் சில ஆண்கள் கூட இவனை சைட் அடித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆனால் அவன் அதை எதையும் கண்டு கொள்ளாமல் நேராக பார்ட்டி ஹாலை நோக்கி நடந்தான் அப்போது எங்கிருந்து தான் வந்ததோ அந்த உண்மையான பேய் நோ நோ நோ (அது சாரி டங்க் ஸிலிப்) அவள் தாரா

தாரா ராவ் அம்மா மாலினி ராவ் அப்பா ராஜேஷ்வர் ராவ்

(இப்போது புரிந்திருக்குமே)

பெவி குவிக் (ரத்த அட்டை என்று சொல்ல வேண்டுமோ )( கொலைகேசில் உள்ள போய்டாத அந்த ரத்த அட்டைங்க உன்ன என்ன செய்துச்சு) போட்டது போல் ரிஷியோடு ஒட்டிக் கொண்டது இல்லை இல்லை ஒட்டிக் கொண்டாள்

முதலில் ரிஷி அவளை கவனிக்கவில்லை பின் தன் பக்கம் சென்ட் வாடை தூக்கலாக தொடர்ந்து வரவும் தான் திரும்பி பார்த்தான் அவன் திருப்புவதற்காவே காத்திருந்தவள்

ரிஷிஷிஷி….. (கெஞ்சலா கூப்பிடறபா )

எ..ன்….ன…. (பல்லை கடித்து கொண்டே கேக்கறாரம்)

தாரா அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை ( அவன் கோபத்தை பார்த்தால் காரியம் ஆகாதே )

அப்போது தொழில் முறை நண்பர் ஒருவர் ரிஷியை கண்டு அங்குவர ரிஷியும் அவரிடம் பேசிக்கொண்டே அங்கிருந்து மெதுவாக நகர்ந்தான் ரிஷி நழுவுவதை பார்த்த தாரா தானும் நகர்ந்து அவனை உரசிக்கொண்டே வந்தாள் அவள் உரசுவது ரிஷிக்கு கம்பளி பூச்சி ஊருவது போல அவனுக்கு அருவெருப்பாக இருந்ததோடு பீ.பியை எகிற செய்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு இருந்தான்

அப்போது பேரர் ஒருவர் லமன் ஜூஸை தனியாக எடுத்து வந்து ரிஷியிடம் நீட்டீனான் அதை நீட்டும் போது அந்த பேரரின் பார்வையும் தாராவின் பார்வையும் ஒரு நிமிடம் சந்தித்து மீண்டது இதை ரிஷி பார்த்துவிட்டான் ஆனாலும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

ஒரு மணி நேரம் சென்றிருக்கும் ரிஷிக்கு கண்கள் மங்க ஆரம்பித்தது தலையை உலுக்கி கொண்டான்

ரிஷி தலையை உலுக்குவதை கண்ட தாராவின் முகத்தில் தன் திட்டம் வெற்றி பெற்ற கர்வம் மின்னியது ( தாராம்மா இன்னும் முழுசா உன் திட்டம் முடியல அதனால ரொம்ப துள்ளாத)

ரிஷி கண்கள் மங்கி தலை சுற்றுவது போல் உணர்ந்தவன் தான் பேசிக் கொண்டிருந்தவரிடம் விடை பெற்று ஹோட்டல் வாயிலை நோக்கி தள்ளாடி கொண்டே மெதுவாக சென்றான் அவன் ஹோட்டல் வாயிலிற்கு வரவும் அங்கு அப்போது தான் வந்திருந்த காரில் இருந்து இரண்டு கைரிஷியை பிடித்து இழுக்க அவன் உள்ளே விழவும் கார் அங்கிருந்து பறந்தது

சிறிது நேரம் முன்பு தான் வென்றதை தன் தாய் மாலினி ராவ் இடம் கூற மறைவான இடத்திற்கு சென்று விட்டு வரவும் ரிஷியை இங்கு காணவில்லை அவன் எங்கு சென்றான் எவ்வாறு சென்றான் என்பதும் புரியவில்லை ரிஷியை அந்த ஹோட்டல் முழுவதும் தேடி விட்டு அவன் கிடைக்க வில்லை என்றவுடன் தான் போட்ட திட்டம் கடைசி நிமிடத்தில் எப்படி சொதப்பியது யார் ரிஷிக்கு உதவி செய்தது என்பது புரியாததும் ரிஷிக்கு உதவி செய்பவர்களை கண்டு பிடிக்க முடியாததும் ரிஷியை அடைந்தே தீரவேண்டும் என்ற. அவளின் வெறியை குறைக்கவில்லை அது இன்னும் இன்னும் அவளும் இருந்த மிருக வெறியை மென்மேலும் கூட்டியது



அங்கு தாரா கோபத்தில் கொப்பளித்து கொண்டு இருக்க இங்கு ரிஷியின் நிலையோ வேறாக இருந்தது ரிஷியை கடத்துவது போல காரில் ஏற்றியவன் ரிஷியை நேராக கொண்டு சென்றது ரிஷியின் இல்லத்திற்கு ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த காரில் இருந்த நான்கு நபர்களில் ஒருவன் அதாவது ரிஷி மயக்கத்தில் இருக்க மற்ற இருவர் தங்கள் நிலையில் இல்லாமல் ஏதோ ஒன்றிற்கு கட்டுபட்டது போல இருந்தனர் நான்காவதாக இருந்தது அந்த ஆன்மா (புரிந்தது புரிந்தது அவ்விருவரும் எதற்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்று)

ரிஷியின் இல்லத்தை அடைந்தது அந்த கார் அந்த காரை கண்ட அவ்வீட்டின் காவலாளிகள் ஒரு நிமிடம் திடுக்கிட்டனர் பின்னர் சாமாளித்துக் கொண்டு வந்து வாயில் கதவை திறந்து விட அந்த கார் போர்டி கோவில் சென்று நின்றது

அப்போது இரவில் பாதுகாப்பிற்காக திறந்துவிட பட்டிருந்த அந்த நான்கு வேட்டை நாய்களும் காரை பார்த்து குறைக்க ஆரம்பித்தது அந்த நான்கு வேட்டை நாய்களும் தன்னை கண்டு தான் குறைக்கிறது என்பதை உணர்ந்த ஆன்மா அவற்றை நோக்கி சென்றது ஆன்மாவை கண்டு குலைத்து கொண்டிருந்த அந்த நான்கு ஜீவன்களும் ஆன்மாகிட்டே வரவர குரைப்பதை நிறுத்தியதோடு அல்லாமல் அதிசயத்திலும் அதிசயமாக இருவர் அங்கேயே படுத்துக்கொள்ள அதன் கண்களில் நீர் வழிந்தது. மற்ற இருவரும் அந்த ஆன்மாவை தங்கள் வாலை ஆட்டிக் கொண்டே சுற்றி சுற்றி வந்தன

முதலில் நாய்கள் நான்கும் சேர்ந்து குலைப்பதை கண்டு யாரேனும் எதிரிகளோ இல்லை திருடனோ உள்ளே நுழுந்து விட்டனரோ என்று பயந்த காவலாளிகள் திடிரென்று அதே நாய்களில் இரண்டு வருத்தத்துடன் அமைதியாக ஆளூக்கு எதிர் எதிர் புறமாக படுத்துக்கொள்ளவும் மற்ற இரண்டும் யாரோ தங்களுக்கு பிடித்தவர்களை சுற்றி வருவது போலவாலை குழப்பி சுற்றி வரவும் குழம்பி விட்டனர்

முதலில் அந்த நான்கு ஐந்தறிவு ஜீவன்களின் பாசத்தில் நெகிழ்ந்து இருந்த ஆன்மா காவலாளிகள் குழப்பத்தில் இருப்பதை புரிந்து கொண்ட உடன் ரிஷியை இப்போது வெளியில் எடுத்து வீட்டினுள் கொண்டு செல்வது நல்ல தல்ல அது காரில் தன் கட்டுப் பாட்டில் இருக்கும் மற்ற இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் காவலாளிகள் வேண்டும் என்று எதையும் செய்ய மாட்டார்கள் ஆனால் நாளை ரிஷியே தான் எப்படி வீட்டிற்கு வந்தோம் என்பதை தெரிந்து கொள்ள இவர்களை விசாரித்தால் நிச்சயமாக இங்கு நடந்ததை கூறி விடுவர் அதுகாரில் உள்ள இருவருக்கும் ரிஷியால் ஆபத்தை விளைவிக்காது என்றாலும் ரிஷியின் எதிரிகளால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம் சரிதானே மற்ற அனைவரையும் மயங்க வைத்து விட்டு ரிஷியை உள்ளே அழைத்து செல்லலாம் என்றால் அது இவர்கள் எல்லோரும் வேலை நேரத்தில் உறங்கியதற்காக அவர்கள் வேலை போனாலும். ஆச்சரியம் படுவதற்கு இல்லை

உளவாளி மட்டும் பெற வேண்டிய தண்டனையை மற்றவரும் ஏன் பெற வேண்டும் அதோடு அந்த உளவாளிகளுக்கு பாடம் புகட்ட இதுவே சரியான நேரம் என்று யோசித்த ஆன்மா அதில் ரிஷிக்கு துரோகம் செய்பவரை தவிர்த்து மற்ற எட்டு காவலாளிகளின் பெயரை அந்த ஐந்தறிவு ஜீவன்களிடம் கூறி அவர்களின் கவனத்தை மட்டும் திசை திருப்ப கூறியது ஆன்மா. அந்த நன்றியுள்ள வாயில்லா பிராணிகளும் ஆன்மாவின் சொல்லை கட்டளையாக ஏற்று ஆன்மா கூறியது போல செய்தது

மற்ற காவலாளிகளை அங்கிருந்து அப்புறபடுத்தியவுடன் மீதமிருந்த உளவாலிகளை இல்லை இல்லை காவலாளிகள் இருவரை தனித்தனியாக. பயமுறச்செய்து அவர்களை மயங்க வைத்துவிட்டு அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டு தன் கட்டுப்பாட்டில் இருந்த இருவருக்கும் ரிஷியை அனுவில் அறையில் விடசொல்லி கட்டளை இட்டது ஆன்மா

அவ்விருவரும் ஆன்மாவின் சொல்ல படி ரிஷியை அனுவின் அறையில் விட்டபின் அவர்கள் நேராக தங்கள் வீட்டிற்கு நடந்தே சென்று விட்டனர் இவர்கள் இருவரையும் இவ்வாறு சிரமபடுத்துவது ஆன்மாவிற்கு வருத்தமாக இருந்தாலும் ரிஷியை காப்பதற்காக தானே என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டது

அனுவின் அறையில் ரிஷி நல்ல போதையில் இருக்க அனு தான் உட்கொள்ளும் மருந்துகளால் நல்ல தூக்கத்தில் இருக்க தூக்கத்தில் இருந்த அனு தன் கையை ரிஷியின் மேல் போட ரிஷியும் போதையில் இருந்ததாலோ இல்லை கடவுளின் செயலா இல்லை ஆன்மாவின் செயலா இல்லை விதியின் விளையாட்டா எதுவோ ஒன்று ரிஷிக்கு தன்பக்கத்தில் இருந்த அனு தன் காதலின் முகம் கொண்டு தெரிய அதன் பிறகு நடந்தது அவ்விருவரின் வாழ்வையே மாற்றி அமைத்தது

ஆம் அங்கு அவன் சுய உணர்வின்றி போதையின் தாக்கத்தில் அவன் அவளை நெருங்கியதே அவன் தவறா இல்லை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போதும் தன்னை யாரோ நெருங்குவதை உணர்ந்து கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்து அது ரிஷி தானே என்று அவள் அவன் ஆளுகைக்கு அதுவும் சிறு குழந்தையின் மனநிலையில் இருக்கும் அவள் தன் செல்ல ஷிவ்(ரிஷி) தனக்கு தீங்கு செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் இணங்கியது தான் அவள் தவறா



மறுநாள் காலை விடிந்தது நிறைய பேரின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றிய சந்தோஷத்துடன் உதித்தது சூரியன்

முதலில் விழித்தது அனு தான் விழித்தவளுக்கு வயிறு சத்தமிட ஆரம்பித்தது இரவில் நடந்த எதுவும் அவளை பாதிக்காதது போல இருந்தது அவளின் நடவடிக்கை

இரவு ரிஷி வராத கோபத்தில் இருந்த அனு அம்முவின் கெஞ்சலால் பாலை மட்டும் குடித்து விட்டு மருந்தை நீரில் போட்டு கொண்டு படுத்ததால் அவளுக்கு இப்போது மிகவும் பசித்தது சுற்றி முற்றி பார்த்தாள் அனு படுக்கைக்கு இடது புறம் சில ஆப்பிள் பழங்கள் இருந்தன அதை எடுக்க போர்வையை விலக்கிய போது தான் தன் உடைகள் கலைந்து இருப்பதை உணர்ந்த அனு தன் பக்கத்தில் இருந்த ரிஷியின் சட்டையை எடுத்து அணிந்து கொண்டாள் அந்த சட்டை அவளுக்கு மிகவும் தொள தொள வென்றும் முட்டி வரையும் இருந்தது பின் அவள் இருப்பதோ 5 அடி தான் ஆனால் ரிஷியோ 6.30 அடி உயரம் அதோடு அனு மிகவும் ஓல்லியாக இருப்பாள் ஆனால் ரிஷியோ உடற்பயிற்சி செய்து உடலை கட்டு கோப்பாக வைத்திருப்பவன் அப்போது வேறு எப்படி இருக்கும் அனுவிற்கு அது வேடிக்கையாக இருந்ததோடு. பிடித்தும் இருந்தது அச்சட்டையை அணிந்த உடன் ரிஷி தன்னுடன் இருக்கும் போது தன் மனதில் வரும் பாதுகாப்பு உணர்வு இப்போதும் இருப்பதை உணர்ந்தாள்

பின் வயிறு நான் இருக்கிறேன் என்று சத்தமிடவும்

அவள் பழகூடையை நோக்கி சென்று அதை எடுத்து கொண்டு திரும்பவும் கட்டிலில் வந்து அமர்ந்தாள்

அப்போது தான் கவனித்தாள் முழு பழத்தை எப்படி உண்பது (இதுல ஓரு ரகசியம் இருக்கு அது என்ன நா அனுவுக்கு ஆப்பிள் தோலோட சாப்பிட பிடிக்காது )என்று அவளுக்கு தெரியவில்லை அவளுக்கு பசியில் அழுகை வந்துவிட்டது

அதனால். வேறு வழியில்லாமல் ரிஷியை எழுப்ப அழுது கொண்டே அவனை உலுக்கினாள்

ஷிவ் … ஷிவ் ..ஷிவ்

அனுவின் குரலில் லேசாக கண் திறந்து பார்த்த ரிஷி அனு அழுது கொண்டிருப்பதை கண்டு தூக்கம் போதை எல்லாம் பறக்க எழுந்தவன். அப்போது தான் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தையும் கவனித்தான் பின் அந்த அறையையும் சுற்றி பார்த்தவன் தன் உடைகளும் அனுவின் உடைகளும் சிதறி இருப்பதையும் அனு தன் சட்டையை அணிந்து இருப்பதையும். அவளின் தலை கலைந்து இருப்பதையும் கண்டு அவனுக்கு. அந்த நிமிடமே தான் மறித்து விடமாட்டோமா என்று தான் தோன்றியது.

இன்னும் இவன் குற்ற உணர்ச்சியை கூட்ட வேண்டும் என்பதற்காக நடந்ததோ இல்லை எதேச்சையாக நடந்ததோ

ஷிவ் ….. ஷிவ். என்று அனு அவனை மறுபடியும் உலுக்கி. பசிக்கிது என்றாள் அவள் கண்களை பார்த்தவன் அதில் இருந்த நம்பிக்கையிலும் அன்பிலும் பிரம்மித்து போனான் அந்த கண்கள் ரிஷிக்கு வேறு ஓரு நபரை நியாபக படுத்தியது ஆனால் அவன் இருந்த நிலையில் அதை எல்லாம் அவன் கண்டு கொள்ளவில்லை அவன் அதை இப்போதே புரிந்து கொண்டிருந்தால் பின்னால் வர போகும் பிரச்சனைகள் வராது இருந்திருக்குமோ

பின் அவளை இழுத்துக் அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவன் அணைப்பில் அடங்கியவள் அவன் அணைப்பில் இருந்தவாறே அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து மீண்டும் பசிக்கிறது என்று கூறி. ஆப்பிள் கூடையை அவன் மடியில் வைத்தாள் அவளின் குழந்தை தனத்தில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அனுவை கவனிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து தன் யோசனையையும் குற்ற உணர்ச்சியையும் தள்ளி வைத்தவன் போர்வையை கொண்டே உடைகள் கலைந்து இருந்த தன்னை சரி செய்து கொண்டு அனுவிடம் சென்று அவளை தூக்கினான் அவன் தன்னை தூக்கிய உடன் அவன் கழுத்தில் கையை போட்டு கொண்டு மகிழ்ச்சியோடு அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரிஷி அவளை ரெஸ்ட் ரூமில் விட்டு காலை கடன்களை முடிக்க கூறி விட்டு மீண்டும் அறையினுள் நுழைந்து அறையை வேகமாக சுத்தம் செய்து விட்டு. குளித்த பின் அணிந்து கொள்ள மாற்றுடை தனக்கும் அனுவுக்கும் எடுத்து கொண்டு. குளியலறை நோக்கி சென்றான் அங்கு அனு அழகாக பாத்டப்பில் இருந்த தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தாள் அதை பார்த்து அவளிடம் விரைந்தவன் அவளை குளிக்க வைத்து துணி மாற்ற வைத்து அவளை அறைக்கு அழைத்து வந்தான்

பின் இண்டர்காம் மூலமாக அனுவிற்கு உணவு தயார் செய்து வைக்க உத்திரவு இட்டு விட்டு அனுவை. அமைதியாக இருக்க வைக்க டி.வி.யில் கார்டாடூன் போட்டு அனுவை அதை தான் பார்க்க கூறினான் பின் அவனும் சில நிமிடத்தில் தன் காலை கடன்களை முடித்துவிட்டும் குளித்து. தயாராகியும் வந்தான்

எல்லாம் முடித்து ரிஷி அனுவை அழைத்து கொண்டு கீழே வரவும் அம்மு பூஜையை முடித்து கொண்டு பூஜை அறையில் இருந்து பிரசாதத்துடன் வந்தார்

மாடியில் இருந்து ரிஷியின் முகத்தையே பார்த்துக் கொண்டு வந்த அனு எதேச்சையாக திரும்ப அங்கு அம்மு பிரசாத்துடன் வருவதை பார்த்தவுடன் அதாவது பிரசாரதமாக இனிப்புகளை கண்டவுடன் அனுவிற்கு அதுவரை ரிஷியின் அருகாமையில் மறந்திருந்த பசி ஞாயபகத்திற்கு வந்தது உடனே அதுவரை படியில் மெதுவாக ரிஷியுடன் இறங்கி அவனின் கைகளை பிடித்துக் கொண்டும் தோளில் தொங்கிக் கொண்டும் வந்து கொண்டிருந்தவள். துள்ளி குதித்து அம்முவை நோக்கி சென்றவள் அம்முவின் முன் நின்று கையை நீட்டினாள்

முதலில் தீடிரென்று தன் முன் துள்ளி குதித்து வந்து நின்ற அனுவின் செயலில் திகைத்து நின்றவர் பின் அனு வந்து நின்ற வேகத்தில் கையை நீட்டவும் புரியாது. விழித்தார்

அம்மு புரியாமல் இருப்பதை உணராமல் இருந்த அனு அம்மு அமைதியாக இருந்ததால். சிறு பிள்ளைகள் தான் கேட்டது கிடைக்கவில்லை என்றால் வரும் கோபத்தில் ஒன்று தான் கேட்டதை யாருக்கும் தெரியாமல் எடுக்க முயற்சிக்கும் அல்லது. தர மாட்டேன் என்பவர் கையில் இருந்து பிடுங்கும் இதில் அனு இரண்டாவதை செய்தாள் அம்முவின் கையில் இருந்த இனிப்பு பாத்திரத்தை அவர் தான் கேட்டும் தரவில்லை என்ற கோபத்தில் அவரிடம் இருந்து பிடுங்க முயற்சித்தாள்

அனு பிரசாதத்தை பிடுங்க முயற்சிக்கும் போதுதான் அவள் இனிப்புகளை கேட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த அம்மு. அதை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அவளிடம் கொடுத்துவிட்டார்

அனு அந்த இனிப்புகளை கைப்பற்றிய குஷியில் அதைபற்றி சொல்ல ரிஷியிடம் திரும்பி

ஷிவ்.... ஷிவ் ....ஷிவ்................................................என்று அழைத்தாள்

அவள் அவ்வளவு தடவை அழைத்தும் ரிஷி அதற்கு எதிர்வினை கொடுக்காததால் வந்த கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அழ ஆரம்பித்தாள்

அனுவின் அழுகை சத்தத்தில் ரிஷி மீண்டும் உணர்வுக்கு வந்தான் அதுவரை ரிஷியையே கவனித்துக் கொண்டிருந்த அம்மு அனு அழ ஆரம்பித்தவுடன். அவளிடம்சென்றுஅவளைசமாதானபடுத்தமுயன்றார்

ரிஷி தன் அருகில் வரவும் அவனிடம் முகம் திருப்பி கொண்டாள் அனு

என்ன அனும்மா எதுக்கு இப்போ இந்த அழுகை-ரிஷி

ரிஷி கேட்டதும் அனுவின் அழுகை அதிகரித்தது

அப்போது தான் அனு கைகளில் இருந்த இனிப்புகளை பார்த்தான் உடனே தான் அவனுக்கு அனுவின் பசி ஞாயபகத்திற்கு வர தலையில் அடித்து கொண்டான்

அவன் தலையில் அடித்து கொள்ளவும் அனு தன் அழுகையை நிறுத்தி விட்டு அவன் அடித்து கொண்ட இடத்தில் அழுத்தமாக தேய்த்து விட்டாள் பின்

ஷிவ் தலையில் அடிச்சுக்காத வலிக்கும் சரியா-அனு

இதை கேட்ட உடன் ரிஷிக்கு இரவு தான் சுய நினைவு இல்லாமல் எவ்வளவு வலிக்க செய்தோமோ என்றிருந்தது

அப்போது அவனை யாரோ உலுக்குவது போல் இருந்தது அது வேறு யாருமில்லை பா க்ரிஷ் தான்

அண்ணா ராத்திரி 12 மணிக்கு மேல் ஆயிடுச்சு எனக்கும் ரொம்ப கலைப்பா இருக்கு அதோட நீங்களும் ரொம்ப சோர்ந்து தெரியரீங்க அதனால இந்த ஹோட்டல்ல தங்கிட்டு நாளைக்கு இங்கிருந்து கிளம்பலாமான அண்ணா-க்ரிஷ்

சரி- ரிஷி







வசந்தம் பூக்கும்..............................................................
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry friends என்னால யூடி தொடர்ந்து தர முடியல ஏன் னா எனக்கு semester நெருங்கி வந்துடுச்சு நிறைய படிக்கனும் அதோட bank examsக்கும் try பண்ணுறேன்

ஒரே நேரத்தில மூனு கஷ்டமான வேலைய செய்யறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு அதோட எனக்கு ஒரு கெட்ட பழக்கம் கதை எழுதும் போது அதுல ஒரு கேரக்டராவே மாறி எழுதினா தான் நான் எழுதறது கொஞ்சமாவது படிக்க நல்லா இருக்கும் 😝:smiley11:இதுல ஏனோ தானோனு அவசர அவசரமா எழுதுனா நானே திரும்ப அதற்கு படிக்க மாட்டேன் அப்போ உங்கள எல்லாம் படிக்க சொன்னா நீங்க எல்லாரும் என்ன கத்தி கபடானு தூக்கிட்டு என்னைய தீத்து கட்டவே வந்துடுவீங்க :smiley56::smiley53: :smiley54:அதனால நான் சொல்ல வரது என்னனா என்னோட பரீட்சை எல்லாம் முடிஞ்சு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கிட்டு கதையோட ஜூலை மாசம் வரேன்

என்னோட பரீட்சை நான் நல்ல எழுத எனக்காக நீங்களும் கொஞ்சம் வேண்டிக்கோங்க பா :smiley57:😁😁😁

டா டா பாய் பாய்...😍😍🤪😜:smiley16:
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம்- 8


2019


நாளை அனுவை காணபோகிறோம் என்ற எண்ணமே ரிஷியை தூங்க விடவில்லை அவனின் நினைவு எல்லாம் அனு காணாமல் சென்றதும் அதன்பின் தான் அனு மேலான தன் காதலை உணர்ந்ததும் தான்.


2016

ரிஷி தான் சுய நினைவில்லாமல் அனுவுடன் கலந்த அந்த நாளுக்கு பின்னர் அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை அதிலும் அனுவின் நிழலை கூட ரிஷியால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அதோடு வேறு எதிலும் கவனமும் செலுத்த முடியாமல் அவன் மனது அவன் செய்த தவறை சுட்டி காட்டி அவனை கொன்றது அப்போது ரிஷிக்கு இன்னொன்றும் நினைவிற்கு வந்தது அம்முவிடம் ஒரு நாள் அனுவை அவள் கழுத்திற்கு கீழ் பார்க்க முடியாது என்றும் அவள் குணமடைந்து தன்னிடம் கேக்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றும் கேட்ட தானா இப்போது அவளிடம் இவ்வாறு நடந்து கொண்டது அதுவும் சுய நினைவு இல்லாது இருக்கும் ஒரு பெண்ணிடம் அதை நினைத்து பார்க்கும் போது அவன் மேலேயே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.



ரிஷியின் இன்நிலையை பார்த்து அந்த ஆன்மா செய்வதறியாமல் பரிதவித்தது என்றால் விதி அந்த ஆன்மாவை பார்த்து நீ என்னையா வெல்ல நினைத்தாய் விட்டேனா பார் என்று சிரித்தது என்றால் ரிஷியை பார்த்து உன்னிடம் இப்போது தான் விளையாட ஆரம்பித்திருக்கிறேன் அதற்குள் சோர்ந்து விட்டால் எப்படி. உன்னை வைத்தும் உன்னை. சுற்றியும் உனக்காகவும் நான் இன்னும் நிறைய. வைத்திருக்கிறேன் என்று கூறி கைகொட்டி கேலி செய்வது. போல எச்சரிக்கை விடுத்ததை ரிஷியால் எவ்வாறு உணரமுடியும்.



இவன் இப்படியே உழன்று கொண்டிருந்ததால் தன்னை சுற்றி நடந்ததை. யோசிக்கவோ நடப்பதை கவனிக்கவோ நடக்க போவதை யூகிக்கவோ இல்லை இவன் இப்படி இருக்க வேண்டும் என்பது தான் விதியின் எண்ணமும் கூடவோ



இவனின் இந்த நிலை விதிக்கு மட்டும் சாதகமாகவில்லை சதி செய்பவருகளுக்கும் சாதகமாகியது அதனால் தான் அனுவை அவர்களால் வெகு சுலபமாக கடத்த முடிந்தது



ரிஷி சுயநினைவின்றி அனுவுடன் கலந்த அந்தநாளில் இருந்து இருவாரம் கழித்து அம்முவிற்கு அன்று காலையில் இருந்தே வலது கண் துடித்து கொண்டிருந்தது அதோடு மனமும் ஒரு நிலையில் இல்லை எதோ தவறு நடக்கபோவதாக அவர் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது அதற்கு அவர் எப்போதும் செய்வது போல இப்போதும் கடவுளையே சரணடைந்தார்



பின் அவர் பூஜையை எல்லாம் முடித்து அமர்ந்த போது அவரை செண்பாம்மா அவ்வீட்டின் தலைலம சமையல்காரர் அவ்வீட்டிற்கு அவரது 12. வயதில் வந்தார்





காயத்ரிம்மா இன்றைக்கு அனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனுமே போகலையா மா.

ஆமாம் செண்பாமா நான் மறந்தே போய் விட்டேன் நல்ல வேளை நீங்கள் நினைவு படுத்தினீர்கள் இல்லையெனில் ரிஷியின் கோபத்திற்கு யார் பதில் சொல்வது என் கூறி தன் செல்லை எடுத்து ரிஷிக்கு அழைத்தார் அம்மு

ரிஷியின் அறையில் ரிஷியை காணாவே எதோ போல இருந்தது முன்பே ரிஷியிடம் நெருங்குவது கஷ்டமான ஒன்று இப்போது அது அறவே முடியாத காரியமாயிற்று காரணம் வேறோன்றும். இல்லை இரண்டு வாரங்களுக்கு முன்பு அவனுக்கும் அனுவிற்கும் நடந்தது தான் அனு என்னமோ சாதாரணமாக தான் இருந்தாள் ஆனால் அவள் அவ்வாறு. இருப்பதே ரிஷியை இன்னும் இன்னும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது



இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல் அலுவலகத்தில் கண்ணில் படுவோரை எல்லாம் கடித்து குதறாத குறை தான் எல்லோரும் ரிஷியின் பெயரைக் கேட்டாலே அலறி அடித்து கொண்டு அதற்கு எதிர் திசையில் ஓடினர் ஆனால் இதிலும் மாட்டிக்கொண்டு முழி பிதுங்க நின்றது எதையும் தாங்கும் இதயம் கொண்ட நம் ராம் தான்பா எல்லாரும் கைதட்டுங்க

(ஏய்ஏய்ய… கத்து குட்டி மாட்டி விட்டதும் இல்லாம எதையும் தாங்கும் இதயம் டயலாக் வேறையா வந்தேன் வெச்சுக்க நடக்கிறதே வேற ஆமா ஏற்கனவே நீ பண்ண வேலை எல்லாம் போதாத என்அண்ணன் அதான் அந்த பொறுமையின் சிகரத்த கோமால தள்ளிட்ட சரி அவர் இல்லனா என்ன அந்த சித் இருக்கானேனு பாத்தா அவனையும் வேற வேல கொடுத்து அனுப்பிட்ட. சரி அவன் தான் இல்லனா பரவாயில்லை இந்த க்ரிஷ் வைச்சு சமாளிக்கலாம் பாத்தா அவனையும் ஒட விட்டுட்ட. இப்போ எல்லாத்திலையும் மாட்டிட்டு. முழிக்கறது நான் தான் ஒழுங்கு மாரியாதைக்கு வந்து காப்பாத்தல நீ இருக்கிற இடத்துக்கே வந்து உன்ன கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்டுவேன் பாத்துக்க

மன்னிச்சு மன்னிச்சு அண்ணா கொஞ்சம் பொறுத்துக்கோங்க எல்லாத்தையும் சரி பண்ணறேன் ப்ளீஸ் ………)

ரிஷியின் அறையில் மேஜை மேல் இருந்த தொலைபேசி நானும் இருக்கிறேன் என்று காட்டுவது போல அலறியது ஆனால் ரிஷி தான் அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை

அவனின் மனதில் எல்லாம் தன்னைப்பற்றிய வெறுப்பு மட்டுமே. இவன் தன்னைப் பற்றிய சுய சிந்தனையால். தன் உயிர் தன்னை விட்டு. சிறிது நேரத்தில் பிரிய போகிறது என்பதை உணராமல் இருந்தான். இவன் இவ்வாறு இல்லாமல் கொஞ்சம் விழிப்போடு இருந்திருந்தால். பின்னர் நடக்க போவதை தடுத்திருக்கலாமோ

இங்கோ அம்மு இரண்டு மூன்று தடவை ரிஷி தொலைபேசிக்கு முயன்றுவிட்டு அவன் எடுக்கவில்லை என்றவுடன். அவன். ஏதாவது மீட்டிங்கில் இருக்க வேண்டும் என்று நினைத்து தானே அனுவை மருத்துவமனை அழைத்து செல்ல முடிவெடுத்து அனுவின் அறை நோக்கி சென்றார்

அனுவின் அறையை பார்த்தவர்க்கு இன்று அனுவை கிளப்புவது அவ்வளவு சுலபமில்லை என்பது புரிந்தது பின் அவளிடம் போராடி அவளை ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றார்

இதை பார்த்த விதி இனி அனுவை. யாரால். காப்பாற்ற. முடியும் எனக் கூறி கை கொட்டி கொக்கலித்து சிரித்தது

ஆம் விதி முடிவு. செய்துவிட்டது. கலகத்தை உண்டு பண்ண சாதாரணமாக நாரதர் கலகம் நன்மையில் முடியும் ஆனால் இங்கு. விதியின் கலகம் நன்மையில் முடியுமா?



அம்மு. அனுவை. மருத்துவமனை அழைத்து செல்லும் வரை எல்லாம் சரியாக தான். இருந்தது ஆனால் மருத்துவமனையில் செக்கப் முடிந்து அனுவை கூட்டிக்கொண்டு. அம்மு. வெளியே வந்தார் அப்போது அனு வேடிக்கை பார்த்துக் கொண்டே வர அவள் கண்ணில் பட்டது அந்த பலுன்கள். அதை சிறு குழந்தை போல அந்த பலூன்களை நோக்கி போக முயற்சிக்கும் போது. அனுவின் கையை. பிடித்துக். கொண்டிருந்த அம்மு அசைவை உணர்ந்து அவளை திரும்பி பார்த்தார் அனுவும். அங்கிருந்து நகர முடியாததால் அம்மு தன்னைப் பார்த்ததும். அவரிடம் பலூனை கை காட்டினாள் அனு கை காட்டிய இடத்தில் அம்மு பார்ப்பதற்குள் பலூன் விற்பவர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அதனால் அம்மு பார்த்த போது யாரும் ஏதும் இல்லாததால். அனு விளையாட்டாக ஏதாவது கூறி இருப்பாள் என நினைத்து அனு அங்க யாரும் இல்லை வா நாம வீட்டுக்கு போகலாம் சரியா

ஆனால் அவளா விடுவாள் அவள் பிடிவாதமாக. நின்றாள் பின் அவளை என்னென்னமோ சொல்லி சமாளித்து காரில் ஏற்றினார் அவளும் அப்பொழுதைக்கு சமாதனம் ஆனாள் பின் சிறிது தூரம் சென்ற பின் தான் அம்முவிற்கு அனுவுக்குத் தேவையான மருந்துகள் சில வாங்க வேண்டும் என்பது ஞாபகம் வந்தது அதனால் வண்டி ஓட்டி இடம் ஒரு மருந்தக வாசலில் வண்டியை நிறுத்த கூறினார்

கார் மருந்து கடை வாசலில் நின்றவுடன் அம்மு அனுவிடம் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு அதாவது காரை விட்டு இறங்க கூடாது என்று கண்டித்து விட்டு கார் ஓட்டி இடமும் பத்திரமாக என்னை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு இறங்கி கடைக்குச் சென்றார்

ஆனால் அன்று மட்டும் காயத்ரி அனுவை‌. மருந்துகடை உள்ளே. அழைத்து சென்றிருந்தால். பின் நடந்த அசம்பாவிதங்களை ஏதோ ஒருவகையில். தடுத்திருக்கலாம் ‌



ஆமாம் இந்த. நேரத்தில் தான் அனு கடத்தபட்டாள் அதுவும் கடத்தப்பட்டாள் என்று யாரும் அறியாத வாரும் உணராத வாரும் ஒரு இடத்தில் உலகத்தின் பார்வையில். இறந்தவளாக காண்பிக்கபட்ட. அதே நேரத்தில். இன்னொரு இடத்தில். இதை உண்மை ஆக்குவதற்காக. மனித உருவில். இருந்த. எம் தூதர்களாள் காரில் மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டால்

ஆனால் தூக்கி செல்பவர்களுக்கு தெரியாது. அவளுக்கு எமன் தாங்கள் இல்லை அவள் தான் தங்களுக்கு எமன் என்று

அம்மு மருந்து கடையில் இருந்து வெளியே வந்து பார்த்த போது அங்கு காரில் யாரையும் காணவில்லை. கார் டிரைவரையும். காணவில்லை அனுவையும் காணவில்லை இருவரையும் தேட அம்மு நிமிர்ந்து கண்ணை சுழட்டவும். எதிர் திசையில் எதோ. கூட்டமாக. இருந்தது என்னவென்று சென்று பார்த்தார் அங்கு ஒரு பெண் முகம் முழுவதும் ரத்தத்தில் குளித்திருக்க ப்லஸ் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருக்க அப்பெண்ணை பார்த்ததும் அம்முவின் காலுக்கடியில். பூமி நழுவியது உலகம் தட்டாமாலை. சுற்றியது அவர் அங்கே மயங்கி விழுந்தார்

அப்போது எதேச்சையாக நைட். ஷிப்ட். முடிந்தாலும் அடுத்த ஷிப்ட் டாக்டர் தான் வரும் வரை பார்த்து கொள்ள சொல்லி கேட்டதால் இவ்வளவு நேரம் இருந்து அந்த டாக்டர் வந்த உடனே வேலை முடித்து. கொண்டு அப்போது தான் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள் சீதாஸாகரி ஜனநிகாவின். தோழி

தான் செல்லும் வழியில் கூட்டம் கூடி இருப்பதை கண்டு அங்கு என்ன பிரச்சினை என்று அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒரு இளம் பெண் ரத்தத்தில் மிதப்பதை கண்டு அவளுக்கு வலிக்க தான் செய்தது ஆனால் அதை விட. அப்பெண்ணை சுற்றி வேடிக்கை. பார்த்து கொண்டு இருந்தவர்களை கண்டு வருத்தம் கோபம் ஆங்காரம் எல்லாம் ஒருங்கிணைந்து. வந்தது. பின் நிலை உணர்ந்து தன்னை சமாளித்து கொண்டு அப்பெண்ணிற்கு. உயிர் இருக்கிறதா என்று நாடியை பார்த்தால் அவள் எப்போதோ விண்ணுலகம் அடைந்திருந்தாள் என்ன செய்வது என ஸாகரி. நிமிரும் போது. அங்கு அம்மு மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் ஓடினாள் பின் ஸாகரியே அங்கு இருந்த சூழ்நிலையை கண்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து அடிபட்டு இறந்துகிடந்த அந்த பெண்ணையும். காயத்ரியையும். கொண்டு மருத்துவமனையில் சேர்த்தாள் அதன் பின் என்ன. செய்ய என்று தெரியாமலும் புரியாமலும் அந்த மருத்துவமனை காரிடாரில் போடபட்டிருந்த நீண்ட இருக்கையில் தொய்ந்து அமர்ந்தாள்

அவளின் முகம் தான் அமைதியாக இருந்ததே தவிர மனது கடவுளிடம் சண்டை இட்டு கொண்டிருந்தது

பதி(அவளின் நண்பர் அல்ல லார்டு கணபதி அவர தான் மேடம் இப்படி செல்லமா கூப்பிடுவாங்க) நீ பண்றது. உனக்கே நல்லா இருக்கா என் கூட யார் சொந்தமா பழகினாலும் அவங்கள என்கிட்டேந்து பிரிக்கறதே உன் வேலையா போச்சு முதல்ல என் அம்மா அடுத்து அப்பா அடுத்து. என் தம்பி அடுத்து என் நிகா கடைசியாக இப்போ இந்த அனு அக்காவ பைத்தியமாக்கியாவது உயிரோட விட்டையேன் தான் நான் அவங்கள தள்ளி இருந்து பார்த்து கிட்டே என் வாழ்க்கைய வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஆனா நீ அவங்களையும் என்கிட்டேந்து மொத்தமா என் கண்முன்னாடியே பிரிச்சிட்டையே

இவள் பாதி அவளுடைய பதியிடம் சண்டை இட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்த நர்ஸ் அவளிடம் மேம் அவங்க. சொந்தங்களுக்கு சொல்லிட்டேங்களா என்று கேட்ட பிறகு தான் ஸாகரிக்கு இதை ரிஷியிடம் சொல்ல வேண்டும் என்பதும் எப்படி சொல்ல போகிறோம் என்றும் தவித்தாள்

சிறிது நேரம் யோசித்துவிட்டு. ராமிற்கு அழைத்தாள்.

தொலைபேசி அடித்துக்கொண்டு இருந்ததே தவிர ராம் அவ்அழைப்பை ஏற்கவில்லை இவள் இங்கு சோர்த்து போய் போனை வைக்க நினைக்கும் போது. தேன் போல ராமின் ஹலோ என்ற குரல் அவள் காதில் ஒலித்தது அவன் குரலை கேட்டவுடன் அவள் அவனுக்கு எதற்காக அழைத்தாளோ அது மறந்தே போனது.

பின் அவன் சத்தமாக அழைக்கவும் அவள் தன் சுயவினைவிற்கு வந்து நான் ஸாகரி

ஸாகரியா எந்த ஸரி– ராம் (டேய் டேய் ஆனாலும் உனக்கு இந்த லோள்ளு ஜாஸ்தி தான்டா)

அவள் பல்லை கடித்து கொண்டே நான் சீதா ஸாகரி

ஹே சீதை நீயா அதிசயமா இருக்கு நீ எனக்கு போன் பண்ணி இருக்க அதெல்லாம் சரி நீ இப்போ எங்க இருக்க

இவன் இவ்வாறு பேசியதை கேட்டவுடன் அவள் தன் மனதில் அவன் தெளிவாக தான் உள்ளான் நான் தான் அவன் மேல் அன்பை வைத்து விட்டு சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது இருக்கிறேன். என நினைத்து கொண்டு மருத்துவமனையில் இருப்பதை கூறினாள்

ராம் பதறி என்னாச்சு சீதை ஏன் ஹாஸ்பிடலில் இருக்க உனக்கு உடம்பிற்கு ஒன்றும் இல்லையே

அதெல்லாம் இல்லை ராம் நீ...நீ...நீ… உடனே ரிஷிஅ..ண்ணா… கிட்ட போன் கொடு

என்னாச்சு அப்படிங்கறத அந்த ஹிட்லர்ட்ட தான் சொல்லனுமா

அப்படி இல்லை

அப்போ என்கிட்ட சொல்லு என்ன விஷயம்

அது.. அது

ஏய் என்ன இழுத்துகிட்டு இருக்க ஒழுங்கா விஷயத்த சொல்லு மிரட்டினான்

அவளும் ராம் நம்ப அனு அக்காக்கு ஆக்சிடண்டு‌ ஆயிடுச்சு ஹக்........ஹக்.......

என்ன

ஆமாம்

விளையாடாத

நெஜமா ராம்

சரி எந்த ஹஸ்பிட்டல் சீக்கிரம் சொல்லு

………………

நான் உடனே வரேன் அண்ணாவ கூட்டிகிட்டு

சரி

ராம் உடனே ரிஷியிடம் ஓடினான்

அங்கு ரிஷி கண்மூடி அமர்ந்திருந்தான்

ராம் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அண்ணா. அனுவுக்கு ஆக்சிடண்டு சீக்கிரம் வாங்க நாம ஹஸ்பிட்டல் போகலாம்

ஒரு நிமிடம் ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை புரிந்தவுடன் ராமின் முகத்தை கூர்ந்து பார்த்தான்

பின் எழுந்து வேகமாக காரை நோக்கி சென்றான் அவன் பின்னே ராமும் ஓடினான் நேராக மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினான்

அங்கு மருத்துவமனையில் அனு இறந்து விட்டதாக கூறினர் அதை கேட்ட ராம் டாக்டரின் சட்டையை ஆவேசமாக பிடித்தான் ரிஷி தொய்ந்து போய் தன்னுடைய அலட்சியத்தால் தான் எல்லாம் என்று உணர்வின்றி. விழுந்தான் இதை கண்ட ஸாகரி. ராமை அழைத்து காண்பித்தாள் பின் ராம் தான் தன்னையும் தேற்றிக்கொண்டு மற்றவரையும் தேற்றினான்



நடக்க வேண்டிய ஈமைகாரியங்கள் நடந்தேறின அம்மு தன் நிலையிலேயே இல்லை பித்து பிடித்தது போல் இருந்தார் அவரை மீட்கவே மிகவும் சிரமபட வேண்டியதாக இருந்தது ரிஷி அதில் இருந்து ஏற்கனவே இருந்ததை விட மூம்மடங்காக ஒரு இறுகிய மனநிலைக்கு சென்றுவிட்டான் ஆனால் அதை அவன் வெளிகாட்டவில்லை. பின் அவன் காதலும் அவனுக்கு கிடைக்கவில்லை. தோழியையும் காப்பாற்றியாய்ற்று என்று நிம்மதி பெருமூச்சு விட்டு நிமிர்வதற்குள் எல்லாம் முடிந்திருந்தது எல்லோரும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்தனர் ஆனாலும் யாராலும் அனு இருந்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை நாட்கள் ஓடின மாதங்கள் கடந்தனஅனு இறந்து ஒரு வருடம் முடிந்து இருந்தது அப்போதுதான் ரிஷிக்கு சிறிதாக சந்தேகம் முளைக்க ஆரம்பித்தது

ஏனென்றால் அது வரை அவன் பாசம் பந்தம் என்ற கட்டுக்குள் இருந்ததால் அவன் மூளை சிந்திக்கும் திறனை இழுந்து இருந்ததோ என்னவோ ஆனால் இப்போது எல்லாம் சரியாகி அவன் மூளை பழையபடி தன் சிந்திக்கும் திறனை பெற்றிருந்ததோ அல்லது விதி திரும்பவும் அவனை வைத்து ஒரு ஆட்டத்தை ஆட நினைத்ததோ அவனுக்கு உண்மைகளை புலப்பட வைத்ததா அல்லது கடவுள் அவனை சோதித்தது போதுமென்று நினைத்தாரோ ஏதோ ஒன்று ரிஷிக்கு அனு உயிரோடு இருப்பது உறுதியானது ரிஷி இதைப்பற்றி யாரிடமும் மூச்சுக் கூட விடவில்லை .

அதோடு அப்பொழுதே அவனுக்கு உதவிய ஆன்மா இப்பொழுது விட்டு விடவா செய்யும் அதுவும் சரியான காலத்திற்காக காத்திருந்தது அதன்பின் அவனுக்கு அதாவது ரிஷிக்கு கனவுகள் மூலமாக நிறைய விஷயங்களை உணர்த்தியது அதன் மூலமே ரிஷி அனுவை கண்டுபிடித்தான்

(கனவு பத்தி இப்போ சொல்ல படமாட்டாது அது கடைசில தான் ஸாரி….)

இப்பொழுதும் கூட அவனுக்கு தனக்கு கனவுகள் மூலமாக அனு இருக்கும் இடத்தை உணர்த்தியது யார் என்று தெரிந்து கொள்ள ஆசைதான் ஆனால் அதற்கு அவன் எவ்வளவோ முயற்சித்தும் அவனால் முடியவில்லை அதனால் தெரியும் பொழுது தெரியட்டும் என்று விட்டு விட்டான் அதை அவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வே ஆட்டம் கண்டு விடும் என்று அவனுக்கு உணர்த்துபவர் யாரோ.

ரிஷி பழசை நினைத்துக் கொண்டு வரும்போது திடீரென்று சடன் பிரேக் போடப்பட்டது இப்போது ரிஷி தக்கலையில் உள்ளான் திருவனந்தபுரம் வரை பிளைட்டில் ட்ராவல் செய்துவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து காரில் தக்கலைக்கு வந்து கொண்டிருந்தாள் தக்கலை வந்தடைந்து அங்கு தன்னுடைய தொழிற்சாலையை நோக்கி வரும்போது திடீரென்று யாரோ குறுக்கே வந்து விழுந்ததால் அவன் கார் சடன் பிரேக் போடப்பட்டது

யார் என்று பார்க்க க்ரிஷ் கீழே இறங்கவும் ரிஷியும் கீழே இறங்கினான் அப்போது அவன் வண்டியை நோக்கி ஒரு பெண் ஓடி வருவதைக் கண்டான் அவள் நெருங்க நெருங்க அவளை கண்டு அப்படியே அசையாது நின்றான்…..








வசந்தம்பூக்கும்,…………………………………
 
Last edited:

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai freinds na ud pottuten naan ketta request ku reply kodutha chitra balaji and fathima nuhasa sis ku thanks and fathima akka intha ud unngallukkaaga mattun oora nalla ealluthi pottathu so thappu irruntha mannichu aatha chhuti kaathunga and naan ellar kitaiyum ketathu thaapppa irunthalun sollunga aapppadinu than but yaarume ithuvarai sollala paravayilla plz iinimellavathu oru vartha sollitu ponga

and kathaiya part parta koduka solliiruntheenga chitra and fathima sis ok naan part partana thani thani kathaiyaa ezhutha sollarengallanu theriyalai aathoda thani thaniya ezhutinaa romba time eedukum so oora heading keela first munjenmam second rishi amma appa story third rishi story ippadi podallamnu iruken unngalluku thonallam ithuku nee engalutta suggestions kettu irukkave vendaam aana unmaiya neenga part part kodunu sonna piraku thaan naan ippadi yosichathe


thanks ennaiyum mathichu ennaku help panninathuku pannathavangallukum thanks neenga pannathaathukku en kathailla unngalluku edho satisfaction illainu puriyuthu inimel ennalla mudincha varakum ellaru satisfy aakara mathri ezhutha muyairchi pannaren
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
lastta oru information mudhala ezhuthi vaichiruntha kathaiye vera ippo munjenmam plus rishi amma appa storyum varathunnalla naan adha kojam kathiya ezhutginathuku aapparam unnaga ellarukum ud tharen

august 11 sunday irunthu sunday sunday 2 uds condippa koddukaren and week dayslla 2to3 uds vara koukaren motham 3to 5 uds okkk
eena kathai romba lengtha irukarathunnaalla seekiram mudikkanum parunga aadutha december last 2019 kulla mudikanumnu ninakiren plus kadavullaiyum pray pannikaren neengallum kathai naallapadiyaa varanumnu pray panikonga plzz....


thank u friends and sisters
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry sorry sorry sorry very very sorry இப்போதைக்கு யூடி தர மட்டும் இல்லை எழுத கூடிய நிலையில் கூட‌ நான் இல்லை அதனால் ஜனவரி மாதம் முதல் மூடி கண்டிப்பாக தருகிறேன் ஜனவரி வருவதற்குள் இக்கதையை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது முடியவில்லை. அதோடு உங்கள் எல்லோரையும் காக்க வைப்பதற்காக. என்னை மன்னிக்கவும். நான் இப்போது உயிருடன் இருப்பதற்கு காரணமாக இருந்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார் அது நட்ந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது ஆனாலும் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை ஆதலால் எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை படுகிறது ஏன் என்று தெரியவில்லை இந்த கதையை எழுத நினைக்கும் போது எல்லாம் தள்ளி கொண்டே போவது எனக்கே வருத்தமாக தான் இருக்கிறது இனி அப்படி நடக்காமல் என்னால் முடிந்த வரை பார்த்து கொள்கிறேன் மன்னிக்கவும்
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் -9

தன்னை நோக்கி வரும் உருவத்தை கண்டு அதிர்ந்து நின்ற ரிஷி க்ரிஷ் ன் அலறல் சத்தத்தில் நினைவுக்கு வந்தான் காரணம் அங்கு காருக்கு முன் விழுந்த அந்த உருவத்தின் மேல் மேலும் இரண்டு சிறிய உருவங்கள் எங்கிருந்தோ பாய்ந்து விழுந்து முதுகில் அமர்ந்து சண்டை இட்டு கொண்டிருந்தது இல்லை இல்லை அவர்களுக்குள் சண்டை இட்டு கொண்டும் கீழிருந்த உருவத்தை மொத்திக் கொண்டும் இருந்தது இவர்கள் சண்டையை உணர்ந்த கீழ் இருந்த அந்த பெரிய உருவம் தலையில் கை வைத்து இருந்தது .
அந்த சிறிய உருவங்கள் வேறு யாரும் இல்லப்பா கிரிஷ்டோபர் அடுத்தது மாதவ் தான் பெரிய உருவம் ஜோசப்
க்ரிஷ் ன் அலறல் சத்தத்தில் நினைவுக்கு வந்த ரிஷி தன் காருக்கு முன் பரிதாபமாக விழுந்திருந்தத ஜோசப் இடம் சென்றான்
யாருடா இது நம்ம கிட்ட வருது சரி அது யாருனு கொஞ்சம் தலையை நிமிர்ந்து தான் பார்ப்போமே
தலையை நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஐய்ஐய் யோ நடு ரோட்டில ஒரு காருக்கு முன்னாடியா விழுந்து கிடக்கோம் நல்ல வேளை நமக்கும் பசங்களுக்கும் ஒன்னும் ஆகல என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே வெளியே ஒன்றும் நடவாதது போல டேய் பசங்களா வாங்கடா வீட்டுல போய் மிச்ச மீதி சண்டையை கண்டினுயூ பண்ணலாம் என்றானே பார்க்கலாம் கார் ஓட்டி ஜோ வை மேலும் கீழும் பார்த்தார் என்றால் ஜாலி பேர் வழியான க்ரிஷ்ற்கே இரத்த அழுத்தம் ஹை யில் எகிறியது
இதில் அதிசயமாக ரிஷி கோபப்படாமல் இருந்ததோடு மீல்லி மீட்டர் அளவு அவன் முகத்தில் புன்னகையும் தோன்றியது
ரிஷி சிரிப்பதற்கும் அநாமிகா அவர்களை நெருக்குவதற்கும் சரியாக இருந்தது
அநி அவர்களை நெருங்கியவுடன் அவ்விருவரையும் முறைத்த முறைப்பில் இருவரும் தலையை குனிந்து கொண்டு ஜோசப்பின் பின் அவன் கால்களை இருக்கி கட்டி கொண்டனர்
இதில் இன்னும் ஆத்திரம் கொண்ட அநி டேய் இவ்வளவு நேரம் அண்ணன நடு ரோட்டுல தள்ளி அவர் மேல ஏறி உட்கார்ந்து சண்டை போடும் போது எங்க போச்சு இந்த பயம் இப்போ நான் வந்த உடனே அவர் பின்னேயே போய் ஒளியரரேங்களா உங்கள என்று அவள் கையை ஓங்கி கொண்டு போகவும் அதுவரை அமைதியாக அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரிஷி அவள் கையையை பிடித்து தடுத்தான்
ரிஷி அநாமிகாவின் கையை பிடித்தது தான் தாமதம் அநாமிகாவிற்கு உடல் முழுவதும் ஷாக் அடித்தது போல் இருந்தது தலையில் பாரம் ஏறியது போலும் கண்ணுக்குள் எதேதேதோ காட்சிகள் வந்து வந்து போய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது இதில் தன்னை அடக்கி கொண்டு அநாமிகா திரும்பி ரிஷியை பார்த்தால் அவனை நேர்கொண்டு பார்த்தவுடன் அவளுக்கு எண்ண தோன்றியதோ ஷிவ் என்று அலறிக்கொண்டே ‌‌அவன் கழுத்தை கைகளால் இருக்கி அவனிடம் அடைக்கலம் ஆனாள் அப்படியே அவன் நெஞ்சில் தோய்ந்து அரை மயக்க நிலைக்கு சென்றாள் முதலில் அவளின் அழைப்பில் கோபமும் சந்தோஷமும் வருத்தமும் கொண்டிருந்த ரிஷி அவள் பாய்ந்து தன்னை அணைத்து கொண்ட உடன் நெகிழ்ந்தே விட்டான் ஆனால் விதி அவனை பார்த்து நீ. வேண்டிய அளவு இப்போதே சந்தோஷ பட்டுக்கொள் இன்னும் சிறிது நேரத்தில் உன் சந்தோஷம் எல்லாம் ஒட்டு மொத்தமாக வருத்தமாக மாற போகிறது பார் என்று நினைத்து முடிக்கவில்லை அதற்குள் அநாமிகா (அனுரிதா) ரிஷியின் கைகளில் அரை மயக்க நிலையில் தோய்ந்து விழுந்தாள்.
அவள் சரிவதை உணர்ந்த ரிஷி அனு அனு என்று கூப்பிட்டு கொண்டே அவள் கன்னத்தை தட்டினான் ரிஷியின் பதட்டத்தை கண்ட க்ரிஷ் ஓடி வந்து அனுவின் கையை பிடித்து பார்த்தான்
அண்ணா ஒன்னும் இல்ல அதிர்ச்சி மயக்கம் தான் கொஞ்சம் தூங்கின சரியாகிடும் ணா என்று க்ரிஷ் கூறும் போதே அனுவை சோதித்திருந்த ஜோசப்பும் அதை உறுதி படுத்தினான்

சார் அநாமிகாவிற்கு சாதாரண அதிர்ச்சி மயக்கம் தான் அவ இப்படி மயங்கி விழறது ஒன்னும் புதுசில்லை அவ இங்க வந்ததில் இருந்தே அவளுக்கு டீரிட்மேண்டு பாக்கறது நானும் என் மனைவி மேரியும் தான் அதனால பயப்படற மாதிரி அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அதோட எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கிறது இங்க ஆள் நடமாட்டம் நிறைய இருக்காது அதனால தான் கூட்டம் கூடல யாராவது இங்க வரத்துக்குள்ள வாங்க இங்கேயிருந்து போயிடலாம்
அதுவும். சரி தான் உங்க வீடு இங்க பக்கத்திலயா இருக்கு மிஸ்டர்….
ஜோசப் என் பெயர்
ஓ.. தேங்க்ஸ் ஜோசப்
இட்ஸ் ஓகே டாக்டர். க்ரிஷ் இங்க பக்கத்தில வீடு எதுவும் இல்லை ஒரு 15 – 20 நிமிஷம் நடந்தா நாங்க இருக்கிற இடத்துக்கே போய்டலாம்
கார்ல போன பத்து நிமிஷம் தான் நீங்க கார்ல நேரா போய் மரியம் வீடு எது அப்படினு கேளுங்க அங்க உள்ளவங்க சொல்வாங்க நான் பசங்கள கூட்டிகிட்டு நடந்து வரேன்
சரி அப்ப நாங்க அனுவை கார்ல கூட்டிட்டு போறோம்
ம்ம்ம்
இதில் எதுவும் தலையிடாது ரிஷி அனுவையே பார்த்து கொண்டு இருந்தான்

இங்கு ஜோசப் வீட்டில் மரியம் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்தபடியே பைபிளை படிப்பதும் மணியை பார்ப்பதும் பின் வாசலை பார்ப்பதுமாக இருந்தார்

இதை கிச்சனில் வேலை செய்து கொண்டே இவரை கவனித்து இருந்த மேரி என்ன அம்மா எதுக்கு இப்போ வீட்டு வாசலையும் மணியையும் மாறி மாறி பார்த்துட்டு இருக்கிங்க
ஏன் உனக்கு தெரியாதாமா எல்லாம் குழந்தைகளும். ஜோசஃப்பும் இன்னும் காணலையே ன் தான்
மேரியும் மரியமும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டின் வாயிலில் ஏதோ ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது அதை கேட்டவுடன் மரியம் அவசர அவசரமாக எழுந்து வாயிலை நோக்கி சென்றார் என்றால் மேரி மனதில் யோசித்து கொண்டே சென்றால் காரணம் மேரிக்கு நிச்சயமாக தெரியும் இப்போது வந்திருப்பது ஜோசப்பும் குழந்தைகளும் இல்லை என்று வேறு யாராவதுதாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டே வாயிலை நெருங்கவும் ரிஷி காரில் இருந்து இறங்கி அனுவை தூக்கி கொண்டு உள்நுழைந்தான் அதை பார்த்து மரியத்திற்கும் மேரிக்கும் உள்ளூர பதட்டம் ஏற்பட்டாலும் அதை மறைத்து கொண்டு அனுவை நோக்கி விரைந்தனர்
அனுவை பக்கத்தில் இருந்த அறையின் கட்டிலில் விட சொன்ன மேரி அவளை பரிசோதிக்க தொடங்கவும் மேரி மரியம் ரிஷியையும் க்ரிஷையும் ஹாலிற்கு அழைத்து வந்து தன் கேள்வி அம்புகளை வீச ஆரம்பித்தார்
அனுக்கு என்னாச்சு தம்பி ? நீங்க யாரு? அனு உங்ககிட்ட எப்படி கிடைச்சா ? என்ன தம்பி நான் கேட்டுகிட்டே இருக்கேன் பதில் சொல்ல மாட்டேங்கிறேங்க என்று பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென்று பேச்சை நிறுத்தி ரிஷியை கூர்ந்து கவனித்தார் பின் என்ன நினைத்தாரோ வேகமாக எழுந்து நின்று ஐயா மன்னிச்சுடுங்க நீங்கனு தெரியாம நான் ஏதேதோ பேசிகிட்டே இருந்துட்டேன் என்று அவர் முடிக்கவில்ல ரிஷி எழுந்து அவரிடம் நான் மன்னிக்கற அளவுக்குத் நீங்க எந்த ஒரு பெரிய தப்பையும் பண்ணல மாயா அம்மா
மாயா அம்மா என்ற வார்த்தையை கேட்டு மரியம் கண்கலங்க ரிஷியை நிமிர்ந்து பார்த்து கண்களில் கருணை அன்பு பாசம் நிறைய அவன் முகத்தை தடவி மகிழ்ந்தார் என்றால் அவ்வார்த்தையை கேட்டு இன்னொரு ஜீவனும் உள்ளம் உடல் உயிர் அனைத்தும் அதிர நின்றது
அப்போது அனுவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து வெளியே வந்த மேரி ஜோசப் வாசலில் சிலை போல நிற்பதை கண்டு அவனிடம் சென்றாள் ஆனால் ஜோசஃப் தன்னிடம் நெருங்கிய மேரியை தவிர்த்து ரிஷியை நோக்கி சென்றான் அப்போது மேரி அறையில் இருந்து வெளி வந்து வீட்டின் வாயிலை நோக்கி செல்வதை கண்ட மரியம் தன் பார்வையை வீட்டு வாயில் பக்கம் திருப்பினார் அவரின் பார்வையை தொடர்ந்து ரிஷியும் திரும்பி பார்த்தான் அங்கு ஜோசஃப் தன்னை நோக்கி வருவதை கண்டு ஜோசஃப்பை கூர்ந்து பார்த்தான் ரிஷியின் பார்வை தன்னை உடூவூருவுவதை உணர்ந்தவன் தன் தலையை தாழ்த்தி கொண்டான் அதுவும் ஒரு நிமிடம் தான் பின் என்ன நினைத்தானோ நிமிர்ந்து ரிஷியை மேலிருந்து கீழாக தவிப்புடன் பார்த்தான்
இவ்வளவு நேரம் ஜோசஃப்பை கூர்ந்து பார்த்து கொண்டிருந்த ரிஷியின் புருவமோ ஜோசஃப்பின் தவிப்பை பார்த்து உயர்ந்தது என்றால் மனமோ கோபத்தில் கொதித்தது அதை. அடக்க வழி தெரியாமல் ரிஷி ஜோசஃப்பை இருகன்னத்திலும் இரு அறை விட்டு அவனை இழுத்து அணைத்து கொண்டான் இதை பார்த்து க்ரிஷ் ஆச்சரியத்துடன் ரிஷியை பார்த்தான் என்றால் மற்றும் மேரி அதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்தாள் ஆனால் ஏற்கனவே ரிஷியை பார்த்தவுடன் அநி மயங்கியதில் கோபமாக இருந்த மாதவ் ரிஷி இப்போது தனக்கு மிகவும் பிரியமான தானும் க்ரிஸ்டோபரும் குறும்பு செய்தால் தங்களை திட்டாமல் தங்களுடன் இணைந்து குறும்பு செய்வது அப்படி செய்து யாரிடமாவது மாட்டிக்கொண்டால் அவர்களிடம் இருந்து தங்களை தப்பிக்க வைத்து விட்டு அதற்கும் சேர்த்து திட்டு வாங்குவது என்று எல்லோர் மீதும் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் தன் ஜோவை ரிஷி அடித்தது மாதவ் ஆல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் கோபத்தில் ரிஷி நெருங்கினான் ஆனால் ரிஷி. தன்னை விட உயரமாக இருந்தது இன்னும் கோபத்தைக் கொடுக்க என்ன செய்கிறோம் என்று உணராமல் ஜோவ விடு ஜோவ விடு என்று கூறிக்கொண்டே மாதவ் ஆல் எவ்வளவு உயரம் எம்ப முடியுமோ அவ்வளவு எம்பி நின்று அவன் பிஞ்சு கைகளால் ரிஷியை அடிக்க ஆரம்பித்த விட்டான் இதை எதிர்பாராத அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து அவனை தடுப்பதற்குள் மரியம் மாதவின் முதுகில் அடிக்க கை ஓங்கவும் ஜோசஃப்யிடம் இருந்து பிரிந்து அவரை கை நீட்டி தடுத்தான் ரிஷி மரியத்தை தடுத்த ரிஷி மாதவின் உயரத்திற்கு சம்மணம் இட்டு தரையில் அமர்ந்தான் அதை பார்த்து ஜோசஃப் மரியம் க்ரிஷ் மூவரும் பதற இதை எல்லாம் ஒன்றும் புரியாமல் வெறும் பார்வையாளர் ஆக மட்டும் பார்த்து கொண்டிருந்தனர் மேரியும் க்றிஸ்டோபரும்.
இவ்வளவு நேரம் ரிஷியை அடித்துக்கொண்டு இருந்த மாதவ் மரியமே தன்னை அடிக்க கை ஒங்கியதில் பயந்திருந்தாலும் ரிஷி தன் எதிரில் அமரவும் அவனை முறைத்து வைத்தான் மாதவ் தன்னை முறைப்பது ரிஷிக்கு சிரிப்பை வரவழைத்தது

இங்கு அனைவரும் இவ்வாறு இருக்க அங்கு அறையில் அநிக்கு மெது மெதுவாக முழிப்பு வந்தது அநி முழிப்பு வந்தவுடன் அவளுக்கு என்ன தோன்றியதோ விழுக்கென்று எழுந்தமர்ந்தாள் அவள் வாய் தானாக எதையோ முனுமுனுத்து கொண்டே அறையை சுற்றி முற்றி பார்த்தாள் முதலில் அவளுக்கு ஓன்றுமே புரியவில்லை தலைவேறு சிறிது பாரமாக இருப்பதாக தோன்றியது அதனால் தலையில் கையை சிறிது கண்களை மூடினாள் அப்பொழுது அவளின் மூடிய அவளது இமைக்குள் அவள் பிறந்தது முதல் தற்போது வரை நடந்தவை எல்லாம் படமாக ஓடியது பட்டென்று கண்களை திறந்தாள் அப்பொது தன் எதிரில் இருந்த உருவத்தையும் தன் பக்க வாட்டில் இருந்த டிரேஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும் கண்டு அவளின் இதயம் அதிர்ச்சியில் வாய் வழியே வந்து விடும் அளவுக்கு துடித்ததோடு அநியின் மனம் தான் இழக்க கூடாத சிலவற்றை இழந்துவிட்டதாக கூப்பாடு போட்டது என்றால் புத்தியோ மிக பெரிய தவறு நடந்துள்ளதை உணர்த்தியது

அநியின் யோசனையை முற்றும் முழுதாக உணர்ந்தது போல அநியின் எதிரில் இருந்த உருவம் அநி மனதில் நினைத்தவற்றுக்கு எல்லாம் பதில் சொல்ல துடங்கவும் அநி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்..



வசந்தம் பூக்கும்.......................................
 
Top