Surthi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம்-6
இடம்-மும்பை
2019
அது ஓரு மில் அந்த மில்லின் அலுவலக அறையில் ரிஷி மிகவும் கோபமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் அவனுக்கு புரியவில்லை எவ்வாறு தீ விபத்து நடந்தது என்று இத்தனைக்கும் அவன் தொழில் சம்பந்தப்பட்ட இடங்களில் எப்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக தான் செய்திருப்பான் ஏனென்றால் ஒரு உயிரின் விலை அவனுக்கு நன்றாக தெரியும் அவனுக்கு இதெல்லாம் விட பெரியது தன் மேல் உள்ள பழி வெறியில் தன்னுடைய வேலையாட்கள் பாதிக்க பட்டால் அதற்கு காரணமானவர்களை ஒரு போதும் அவனால் மன்னிக்க இயலாது காரணம் அவன் தந்தை ரகுராம்வர்மா அவர் அத்தனை பெரிய சம்ராஜ்ஜியத்தை நடத்தினாலும் அவ்வளவு பெரிய பணக்காரராய் இருந்தும் தொழிளாலிகள் தான் உண்மையான மனிதர்கள் அவர்கள் அவர்களின் கையால் உழைத்து சாப்பிடுகிறார்கள் ஆனால் நாமோ சொந்தமாக தொழில் செய்கிறோம் என்று அவர்களின் உழைப்பில் கிடைத்த வேகுமதியில் கால்பங்கை அவர்களுக்கு கொடுத்துவிட்டு மூக்கால்பங்கை நாம் எடுத்துக்கொண்டு அவர்களையும் மதிப்பது இல்லை அவர்கள் உயிரையும் தான் என்று கூறுவார் கூறுவதோடு அல்லாமல் அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் அதனால் தானோ என்னவோ அவர் இறந்த போதும் ரிஷி சிறியவனாய் இருந்தபோதும் அவர்கள் வேலையை விட்டுச் செல்லாமலும் வேலையில் எந்த தவறும் செய்யாமலும் விசுவாசமாகவும் உண்மையாகவும் ஒத்துழைப்போடும் இருந்தனரோ?.அதோடு எதிரி அவன் முதுகில் குத்த பார்ப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இவனின் கோபம் கண்டு ராம் நடுங்கிக் கொண்டும் சித்திற்க்கு மனதில் அர்ச்சனை செய்து கொண்டும் இருந்தான் பின் அர்ச்சனை செய்யாமல் என்ன செய்வான் இப்போது வந்துவிடுகிறேன் என்று சொல்லிக் சென்ற சித் ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை என்றால் அவனுக்கு கோபம் வரத்தானே செய்யும் அதோடு அங்கு அவன் மட்டும் இல்லை அவனோடு மற்ற மேல்நிலைப் பணியாளர்களும் இருந்தனர் அவர்களும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தனர் அப்போது திடீரென்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு எல்லோரும் நிமிர்ந்து பார்த்தனர் அங்கு ரிஷி ருத்ர மூர்த்தியாக டேபிள் கண்ணாடியை உடைத்துவிட்டு கையில் இரத்தம் வடியகண்களில் கனலோடும் நின்று கொண்டிருந்தான் அவனால் எவ்வளவு முயன்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை சிறிது நேரம் கழித்து ரிஷி ராமை அழைத்தான் ராம் அவன் அருகில் சென்றான்
"ராம் இன்று என்னை கேள்வி கேட்ட அந்த பத்திரிகையாளர்களின் முழு தகவலும் எனக்கு இன்னும் அரைமணி நேரத்தில் என்னுடைய டேபிளில் இருக்க வேண்டும்"–ரிஷி
"பாஸ் பாதி தகவல் கிடைச்சுடுது இன்னும் கொஞ்சம் தான் கிடைத்தவுடன் உங்கள் டேபிள் மேல் இருக்கும்"- ராம்
ராம் இவ்வாறு கூறியவுடன் ரிஷிக்கு ஹரிஷின் ஞாபகம் வந்தது அவன் இங்கு இருந்திருந்தால் ராமை விட வேகமாக அவன் அதாவது ராம் ஆவது ரிஷி கேட்கும்போது தன் பாதி தகவலை திரட்டியிருந்தான் ஆனால் ஹரிஷ் இருந்தால் இதற்குள் அதாவது ரிஷி கேட்பதற்கு முன் அவன் முன்னால் அந்த தகவல் இருந்திருக்கும் அதேபோல இந்நேரம் இப்பிரச்சனையை முடிக்க ஏதாவது ஒரு வழியை கண்டு பிடித்திருப்பான் என்பதும் அவன் நினைவில் ஆடி அவனை கலங்கச் செய்தது.
சிறிது நேரத்தில் தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீள்வது என்று யோசிக்க ஆரம்பித்தான் அவனுக்கு பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல நஷ்டம் ஆனதைப்பற்றிய கவலை அவனுக்கில்லை அவனுக்கு இருந்ததெல்லாம் விபத்தில் இறந்தவர்களைப் பற்றிய கவலையும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களை பற்றிய கவலையும் தான்
இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன செய்வது என்றும் காயம் பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் என்ன செய்வது என்றும் யோசிக்க ஆரம்பித்தான்
அப்போது சரியாக சித் உள்ளே நுழைந்தான்
"இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட ஆக்சிடன்ட் யாரோ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டவற்றை குறிப்பாக அகற்றியுள்ளனர் சார்ட் சர்க்கூயூட் போல காட்ட முயற்சித்துள்ளனர் சிசிடிவி கேமராவை இன்னும் பார்க்கவில்லை அதைப் பார்த்தால் அதில் ஏதாவது தெரியலாம் ரிஷி"- சித்
"பாஸ் சிசிடிவி புட்டேஜ்செக் பண்ணிட்டேன் ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை "– ராம்
ரிஷி சிறிது நேரம் அமைதியாக இருந்தான்
ரிஷி மனதில் நம்மை சுற்றியுள்ளவர் எவரோ தான் நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றார் என்று உணர்ந்தான்
"ராம் காயம்பட்ட வேலையாட்களுக்கும் இறந்த வேலையாட்களுக்கும். அவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுத்து விடு அதோடு அவர்கள் வீட்டில் உள்ள வேலை செய்யும் வயதில் உள்ள யாருக்காவது அவர்கள் தகுதிக்குத் தகுந்த வேலையை நம் அலுவலகத்திலேயே கொடு அவர்களுக்கு அவர்கள் வேலைக்கு இருமடங்காக சம்பளம் கொடுத்துவிடு
காயம்பட்டவர்கள் வேலைக்கு வரும் வரை தான் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை என்று இல்லை அதன் பிறகும் அவர்கள் விரும்பினால் வேலை பார்க்கலாம் ஆனால் சம்பளம் அவர்கள் வேலைக்கு ஏற்ற சம்பளம்தான் என்பதை அவர்களிடம் கூறிவிடு மாலை பத்திரிகை சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடு" - ரிஷி
"சரி பாஸ்"-ராம்
ரிஷி ராமை முறைத்தான் அவன் முறைப்பதை கண்டு ராம் திடுக்கிட்டு விழித்தான்
"ராம் உன்னிடம் எத்தனை முறை கூறியுள்ளேன் என்னை பாஸ் என்றழைக்காத அண்ணா என்று அழை என்று கூறி உள்ளேன் தானே"
"பாஸ்………."-ராம்
"முறைக்காதீங்க பாஸ்"-ராம்
"பின்ன முறைக்காம உன்னை கொஞ்சனுமா பாஸ் பாஸ் என்று கொள்ளைக் கூட்டத் தலைவன் கூப்பிடுவது போல் ஏன் கூப்பிடுகிறாய் சகிக்கவில்லை"-ரிஷி
"என்ன பண்ணப் பாஸ் அப்படியே கூப்பிட்ட பழகிவிட்டது"-ராம்
"அப்போ அண்ணா என்றழைத்தது"-ரிஷி
"அது அப்போது நான் உங்களிடம் வேலை செய்யவில்லை"-ராம்
இவர்களின் இந்த பேச்சில் சித் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு தலையைபிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது
"ரிஷி இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது நீ இவ்வளவு சாதாரணமாக இவனிடம் முறை வைத்துக் கூப்பிட கெஞ்சிக்" – சித்
சித் இவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த அறையின் கதவை திறந்து கொண்டு பரபரப்பாக ஒரு மனிதர் ஓடி வந்து ரிஷியின் கால்களில் விழுந்தார் அவர் ரவிதாஸ்
ரவி தாஸ் அவர் ரிஷிக்கு நிகரானவர் தான் குணத்தில் இல்லை பணத்தில் மட்டும்
அவருக்கு முதலில் ரகுராம்வர்மா பெரும் தலைவலியாக இருந்தார் அவர் போனபின் தான் முன்னேறலாம் என்று நினைத்தால் இப்போது ரிஷி பெரிய தலைவலியாக இருந்தான் அதனால் அவன் பெயரை கெடுக்க அவர் நிறைய தில்லுமுல்லுகளை செய்தார் அதில் ஒன்றுதான் இந்த தீ விபத்து அவராவது அவனின் ஒரு டெக்ஸ்டைலை எரிக்க உதவி தான் செய்தார் ஆனால் ரிஷி அவரின் அடிமடியிலேயே கை வைத்து விட்டான்
அதாவது அவரின் தொழில்களில் 90 சதவீத பங்குகளை ரிஷி அவருக்குத் தெரியாமல் வாங்கியதோடு அவர் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தவர்களிடம் அவர்களைத் தூண்டிவிட்டு நோட்டீஸ் அனுப்ப. வைத்தான். அதனால் இப்போது அவர் நடுத்தெருவில் தான் அதோடு அவரின் குடும்பத்தையும் தூக்கி விட்டான்
"ரிஷி நான் தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிடு என் குடும்பத்தை விட்டுவிடு "என்று ரிஷியின் காலில் விழுந்து ரவி தாஸ் கதறினார்
ரிஷி அமைதியாக சென்று தன் சுழல் நாற்காலியை இழுத்து வந்து அவர் முன்னால் போட்டு அதில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அவரைப் பார்த்தான் அதோடு மற்ற மேல்நிலைப் பணியாளர்களை சைகையால் வெளியேற சொன்னான் இப்போது அந்த. அறையில் ரிஷி ராம் சித் இவர்கள் தான் இருந்தனர்
அவர் கண்களில் பயத்துடனும் நடுக்கத்துடனும் ரிஷியை கண்டு கைகூப்பினார்
ரிஷி அவரை தன் ஆள்காட்டி விரலால் எழுந்திருக்குமாறு சைகை செய்தான் பின் அவரிடம் "அனு எங்கே "என்று கேட்டான்.
அவர் திகைப்புடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தார் தன் எச்சிலை விழுங்கி கொண்டார்
ரிஷி மறுபடியும் அவரைப் பார்த்து அழுத்தமாக "அனு எங்கே "என்றான்.
"ரிஷி அனு காணாமல் சென்று 3 வருடம் ஆகிறது இப்போது இவரிடம் சென்று விசாரிக்கிறாய் இவருக்கும் அனுவிற்கும் என்ன சம்பந்தம்"– சித்
சித் அப்படி கேட்டவுடன் ரிஷி கோபமாக எழுந்து சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்தான் அதில் சித்தார்த்தே ஒரு நிமிடம் நடுங்கி விட்டான்
ரிஷி திரும்பி மூன்றாவது முறை போன முறையை விட அழுத்தமாகவும் ஆனால் அதே சமயம் அமைதியாகவும் ரவிதாஸின் முகத்தை தீனமாக பார்த்துக்கொண்டும் "அனு எங்கே" என்று கேட்டான்.
ரிஷியின் அமைதி ரவிதாஸின் வயிற்றில் புளியை கரைக்க ரிஷியிடம் சரணடைந்தார்
"ரிஷி சார் நான் எனக்கு தெரிந்தவற்றை கூறிவிடுகிறேன் ஆம் அனுவை கடத்தியவன் நான்தான் மூன்றரை வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு பிரைவேட் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அதை எடுத்து பேசிய போது ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்புவதாகவும் அவளின் பெயர் அனு என்றும் அவளை கடத்த வேண்டும் என்றும் அவளை கடத்தினால் உங்களுக்கு அது நல்லதல்ல என்றும் நீங்கள் அவள் மேல் உயிரையே வைத்திருப்பதாகவும் ஒருவன் கூறினான் நானும் உங்களை பழிவாங்க அப்பெண்ணை கடத்தினேன் கடத்தும் போது அவள் தலையில் அடித்ததில் அவள் மயங்கி விட்டாள் ஆனால் அவள் இரண்டு நாள் கழித்தும் மயக்கம் தெளியவில்லை அவளின் அருகில் சென்று பார்த்தபோது அவள் இறந்து விட்டதாக தெரிந்தது அதனால் அவளை கொண்டு சென்று எங்காவது போட்டு விடும்படி நான் ரவுடி ரமணாவிடம் கூறினேன் அவனும் அவளை எடுத்துச் சென்றான் சில நாள் கழித்து ரமணா என்னிடம் அப்பெண்ணை எங்கொ கொண்டு போட்டுவிட்டதாக கூறினான் அதே போலத்தான் இந்த. தீ விபத்தும் ஆனால் தீ விபத்தை. நான் ஏற்படுத்தவில்லை நான் அந்த பத்திரிக்கையாளர்களை மட்டும்தான் ஏவிவிட்டேன் அதுவும் அன்று போல இந்த முறையும் தொலைபேசி மூலமாக யாரோ கட்டளை இட்டார் நானும் அவர் கூறியது போலவே செய்தேன் எனக்கு வேறு ஓன்றும் தெரியாது".
இதைக் கேட்டவுடன் ராமும் சித்தார்த்தும் ரவிதாஸை தூக்கிப்போட்டு பந்தாடி விட்டனர்.
திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் அங்கு பார்த்தனர் இங்கு நான்கைந்து தடியர்கள் ஒருவனை இரத்தம் சொட்டச்சொட்ட அழைத்து வருவதை கண்டனர் ரிஷி எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தான்
இரத்தம் வடிய வந்தவன் ரவுடி ரமணா
அவன் அத்தனை வலியிலும் வேதனையிலும் மெதுவாக ஊர்ந்து வந்து ரிஷியின் கால்களை பற்றிக் கொண்டு "சாப் சாப் நீங்கள் சொன்னா நம்புவீர்களா என்று எனக்கு. தெரியாது இதோ இருக்கானே இந்த ரவிதாஸ் சொன்னான் அப்படின்னு அந்த பொண்ண நானும் என் ஆளுங்களும் எடுத்துட்டு போகும் போது எங்கள் வண்டி பாதி வழியிலேயே நின்று விட்டது என்ன பிரச்சினை அப்படின்னு இறங்கி பார்க்க போனவன் திடிரென அலறும் சத்தம் கேட்டது சாப் நாங்களும் இறங்கி பார்த்தோம் அங்க.. அங்க ..அந்த ஆள் செத்து கிடந்தான் பிறகு நானும் என்னோட ஆளுங்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக யாராவது இருக்காங்களானு தேடினோம் தேடும் போதே ஒவ்வொருத்தரும் திடிர் திடிரென அலறுரும் சத்தம் கேட்டு நாங்கள் அங்கு சென்று பார்ப்பதற்குள் எல்லோரும் இறந்திருந்தனர் இத்தனைக்கும் நாங்கள் மொத்தம் பதினைந்து இருபது பேர் அதில் மிஞ்சியது நானும் இன்னும் இரண்டு பேரும் தான் அவர்களும் அன்று நேரில் பார்த்த. ஒரு காட்சியை கண்டு பயந்து ஓடி விட்டனர் அதன் அவர்கள் என்னோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை சாப்"- ரமணா
"நீ சொல்வது உண்மை என்று நாங்கள் எப்படி நம்புவது உன் கூட்டாளிகள் பயந்து ஓடும் அளவிற்கு அங்கு அப்படி என்ன நடந்தது"- சித்
"சாப் அது வந்து அது வந்து-" ரமணா
"இப்படி இழுத்துகிட்டு இருந்தேனா உன்னை நான் நாலு. இழுஇழுத்து விடுவேன்"–ராம்(பின் அனு என்றால் அவனுக்கு அவ்வளவு பிரியமாயிற்றே)
"அது அங்க எங்க ஆளுங்க எல்லாம் செத்து செத்து விழுந்தாங்கனு சொன்னேன்ல சாப் அவங்க தானா சாகலை சாப் அவங்க எல்லோரையும் கொன்றது ஒரு பொண்ணு சாப் "-ரமணா
"என்ன"-ராம்
"ஆமாம் சாப் அதுவும் நாங்கள் தூக்கிட்டு போன பொண்ணுதான் சாப் என்னோட ஆளுங்க எல்லோரையும் கொன்னு போட்டுது"-ரமணா
"என்னடா விளையாடரையா அவ மேல கொலை பழியபோட்டுட்டு நீ தப்பிக்கலாம்னு பார்க்கரையா"– சித்
"இல்லை சாப் இல்லை சாப் நான் பார்த்தேன் சாப் அந்த பொண்ணு தான் சந்தேகம் வந்து நாங்கள் தூக்கி சென்ற பெண்ணை பார்த்து போது அந்த பொண்ணு கார்ல நாங்க படுக்க வைத்திருத்தது போல அப்படியே படுத்திருந்தா அதோட எங்கள அடிச்ச அந்த பொண்ணுக்கு கண் இருக்க வேண்டிய இடம் கருப்பா இருந்துச்சு சாப்"
இதைல கேட்ட சித் அவனை என்ன எங்க காதுல பூ சுத்துரையா என்று திரும்பவும் அவனை துவைத்து எடுத்து விட்டான்
ராம் தான் தடுத்தான்
"எதுக்காக என்னை தடுத்த" என்று சித் ராம் சீறினான்
இவ்வளவு நேரம் ரமணா கூறியதை யோசித்து கொண்டு இருந்த போது ரிஷிக்கு சிலது ஞாபகத்திற்கு வந்தது அது அவனுக்கு ரமணனின் கூற்றில் இருந்த உண்மையை உணர்த்தியது
"சித் எனக்கு அவன் சொல்வது உண்மை என்று தோன்றுகிறது "– ரிஷி
"ஆமாம் அண்ணா எனக்கும் தான்"–ராம்
சிறிது நேர அமைதிக்கு பிறகு அனு எங்க இருக்கா அப்படின்னு நாம இப்போ எப்படி தெரிந்து கொள்வோம் டிடெக்டிவ் ஏஜென்சியை அனுகலாம-ராம்
"அதற்குத் தேவை இல்லை அனு எங்கிருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது"- க்ரிஷ்வந்த்
(இவன் எப்போ உள்ள வந்தான் அப்படின்னு பாக்கிறேங்களா அந்த ரமணாவ இழுத்துட்டு வர கைய்டு பண்ணிணதே இவன்தான்பா)
அனு இருக்கும் இடம் தெரியுமா எப்போது தெரியும் எப்படி தெரியும் இப்போது எங்கிருக்கிறாள் என்று மாறி மாறி ராமும் சித்தார்த்தும் க்ரிஷ்வந்தை துளைத்து எடுத்துவிட்டனர் பின் சித் சாராவிற்கு சொல்வதற்காக தன் போனை எடுத்தான்
"ரிஷி அதை தடுத்து இப்போது இந்த அறையில் இருப்பவரை தவிர இவ்விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் நீங்கள் இருவரும் ரவிதாஸ் கூறியதை கேட்டீர்கள் தானே யாரோ ஒருவர் ரவிதாஸை தொடர்பு கொண்டு அனுவை கடத்த சொல்லி இருக்கிறார்கள் இந்த தீ விபத்து அதையும் யாரோ மறைவில் இருந்து தான் செய்திருக்கிறார்கள் என்னை அழிக்க யாரோ எதற்கோ நினைக்கிறார்கள் என்னை மட்டுமில்லை சித்
உன்னையும் தான் உனக்கு ஞாயபகம் உள்ளதா நாம் ஒருதரம் லிஃடில் செல்லும் போது கரண்ட் கட்டாகி நாம் அதில் மாட்டிக் கொண்டோமே அதில் விஷ வாயுவும் போடப்பட்டதே நம்மை அதிலிருந்து காப்பாற்றியது அனு தான் அதன்பின் ஒருமுறை கார் பிரேக் பிடிக்காமல் அனு தன் தோழியின் ஸ்கூட்டியை நம் காருக்கு குறுக்காக மோத விட்டு நிறுத்தி நம்மை காப்பாற்றிளே அனு அந்த இடத்திற்கு அதுவும் சரியான நேரத்திற்கு எப்படி வந்தாள் அதுவும் அவள் இடம் அப்படி ஒரு பதட்டம் தெரிந்ததே
அதன் பின் இதே போல் உன்னை நோக்கி மாலில் ஷூட் ஆவ்ட் நடந்த போது ஹரிஷ் உன்னை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினானே" - ரிஷி
"ஆங் ரிஷி எனக்கும் எல்லாம் ஞாயபகம் வருகிறது அந்த ஷூட் ஆவ்ட் நடந்த அன்று நீயும் முதலில் லிஃப்டில் மாட்டிக் கொண்டது போல திரும்பவும் மாட்டிக் கொண்டது அப்போது உன்னை காப்பாற்றியது அனுவின் தோழி தானே"-சித்
இதில் ஒரு தடவைதான் அம்முவிடம் நான் போகும் இடம் பற்றி கூறினேன் நீ சாராவிடம் எப்பவுமே எதுவும் கூறியது இல்லை எதுவாக இருந்தாலும் முடிந்த பின் தான் அதை பற்றி அவளிடம் கூறுவாய் அவளும் உன் மேல் முழு நம்பிக்கையும் அன்பும் இருந்ததால் நீயாக கூறினால் தவிர எதுவும் கேட்ததில்ல சரி தானே"-ரிஷி
"சரி தான் ரிஷி"-சித்
"பிறகு எப்படி நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை தாக்க முயன்றார்கள்"-ரிஷி
"இதை நான் இத்தனை நாளாக கவனிக்கவும் இல்லை யோசிக்கவும் இல்லை சாரி ரிஷி ஒரு போலீஸாக இருந்து கொண்டு நான் எப்படி இப்படி இருந்தேன்"-சித்
"அண்ணா நீங்கள் மட்டுமா அப்படி இருந்தீர்கள் எல்லோரும் தான் எல்லாம் இந்த பாழாய் போன காதலால் வந்தது"- ராம்
"டேய்…….."- சித்
"சித் அவன் கூறுவது சரிதான் நீ மட்டுமல்ல நானும் தான் இதை எல்லாம் அலட்சியப் படுத்தினேன் ஆனால்......- ரிஷி
"ஆனால் என்ன ரிஷி எப்போது உனக்கு இதேல்லாம் புரிந்தது எப்படி புரிந்தது" – சித்
சிறிது நேர அமைதிக்கு பிறகு "மூன்று மாதம் முன்பு பிரிட்டனில் இருந்து வந்த தொழில் ஒப்பந்த காரர்கள் இந்தியாவை சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறினார்கள் எனக்கும் அப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்ஸேசன் வேண்டும் போல் இருந்ததால் நானும் சென்றேன் என்னோடு இந்த குரங்கும் ஓட்டிக் கொண்டான் உனக்கு நினைவு இருக்கிறதா"– ரிஷி
"அ..ண்.ணா……….?"- ராம்
"விடுடா விடுடா இதல்லாம் நமக்கு சாதாரணம் "– க்ரிஷ்வந்து
ராம் அவனை முறைத்தான்
"அவனை விடு டா நீ சொல்லு ரிஷி என்ன நடந்தது அங்கு"- சித்
"அதை நான் காண்பிக்கிறேன் சித்தார்த் அண்ணா"-ராம்
"எதை காண்பிப்பாய்"– க்ரிஷ்
அவனை முறைத்து கொண்டே தன் போனை எடுத்து அதில் ஒரு காணொளியை ஓட விட்டான்
இவர்கள் மூவரும் காணொளியை காண ரிஷி மட்டும் ஆனால் அந்த நாள் ஞாபகத்திற்கு சென்றான்
எல்லோரும் ஹிமாலயாவை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது வெளிநாட்டவர்கள் தனியாக ஒரு பகுதிக்குச் செல்ல ரிஷியும் ராமும் தனியாக நின்றனர்
திடீரென்று ஒரு குரல்
“உன் தந்தை செய்த அதே தவறை செய்யும் மூடனே!....”
என்றது
அக்குரல் வந்த திசையை நோக்கி ரிஷி திரும்பினான்
ராமோ எதையோ தன் போனில் காணொளி எடுத்துக் கொண்டிருந்தான் அதனால் இவன் மட்டும் திரும்பி பார்த்தான் அங்கு ஒரு சிவதவசி உடல் முழுதும் சாம்பலைப் பூசிக்கொண்டு சூலத்தில் உடுக்கையோடு அவனை நோக்கி வந்தார்
வந்தவர் அவனை நோக்கி கூறியது
“நீ விரும்பியது ஒருத்தி
நீ தேடுவது ஒருத்தி
விதியின் ஆட்டத்தால்
வேறு ஒருத்தி
நீ தேடும் முகம்
கொண்டு இருக்க
உன்னைக் காக்க
உயிர் துறந்தாள் ஒருத்தி
உயிர் துறந்தவள்
நிம்மதியின்றி அலைய
உயிரோடு இருப்பவள்
உன்னை மறந்து
உன் உயிரை சுமந்து
அலைய நீ இருக்கிறாய்
கண்ணை மூடி உன்
தந்தையை அழித்த
சதி என்னும் எமன்
உன்னையும் அழிக்க
உன்னை தொடர்கிறது
சதியாகவும் மதியாகவும்
உன்னை வெல்ல அதை
தடுக்க தன்னையே
கவசமாக மாற்றிக்
கொண்டாள் ஒருவள்
உன் குலத்தையும்
உன் காதலையும் காப்பாற்ற
போராடி கொண்டிருக்கிறாள்
அவள் உன்னோடு
ஜென்ம ஜென்மமாக
தொடரும் உன்னதமான
உறவிற்காக போராடுகிறாள்
காரணம் முற்பிறவியில்
நீ ஒருத்தியின் நட்பிற்காக
போராட மற்றொருத்தி
உன் காதலுக்காக
போராடினாள் இப்பிறவியில்
உன் நட்பாக இருந்தவள்
உன் எல்லாவற்றுக்காகவும்
போராடுகிறாள் இனியாவது
விழித்துக் கொள்!
விழித்துக் கொள்!
விழித்துக் கொள் மூடனே!
இனியும் நீ கண்ணிருந்தும்
குருடனாய் இருந்தாய் ஆனால்
உன் குலத்திற்கு
வரமான நட்பை தீரா
சாபமாக மாற்றியதற்கும்
உன் குலத்தின் அழிவிற்கும்
நீயே காரணமாக
கடவாய் மூடனே! இது எம் அப்பன் ஈசனின் வாக்கு!........”
இதை கண்டும் கேட்டும் சித்தும் க்ரிஷ்வந்தும் ஒன்றும் புரியாமல் முழித்தனர்
"அவர் இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் இப்போது நீங்கள் முழிப்பதை போல்தான் நானும் ராமும் முழித்துக் கொண்டிருந்தோம் ராம் தான் முதலில் சுதாரித்து என்னை அழைத்து வந்தான் அன்று மட்டும் ராம் இல்லையென்றால் நான் என்ன செய்து இருப்பேன் என்றே தெரியாது ஆனால் அவர் சொன்ன வரிகள் மட்டும் எப்படி என் மனதில் அச்சு பிசகாமல் பதிந்தது அது எவ்வாறு இது நாள் வரை ஞாயபகம் இருக்கிறது என்பது எனக்கே புரியாத புதிர் தான்"
அப்போது தான் க்ரிஷின் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்த ரிஷி க்ரிஷை அழைத்தான்
"க்ரிஷ்"
"க்ரிஷ்"!!
"க்ரிஷ்……………!!!???"
"ஆங்..?"
"கிழிஞ்சுது போ"-ராம்
ரிஷி ராமை முறைத்தான்
ராம் வாயை தன் கையால் மூடிக்கொண்டான்
"என்னாச்சு க்ரிஷ் உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் கவனம் இங்கு இல்லையே ஏன்" – ரிஷி
"அண்ணா அது வந்து அது வந்து.,…."- க்ரிஷ்
"அதான் வந்துட்டல சீக்கரம் விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு கிளம்பு" – ராம்
"இப்போது மூவரும் அவனை முறைத்தனர் சித் ஒரு படி மேலே சென்று டேபிளில் இருந்த பிளஸ் திரியை எடுத்து கொண்டு ராமை நெருங்கிச் சென்றான் இதை கண்ட ராம் பின் வாங்கி கொண்டே பேச்சு பேச்சா இருக்கனும் நோ வேப்பன்ஸ் "என்றான்
"இனி நீ சும்மா குறுக்க பேசின இத வாயில கைல காலுல கட்டி இங்கேயே ஒருவாரம் சாப்பாடு தண்ணி இல்லாம இருனு விட்டுட்டு போய்டுவோம் "என்று மிரட்டினான்
ராம் இதை கேட்டு அமைதியாகி விட்டான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு அவன் எகிறி கொண்டு சண்டையிட சென்றவன் ரிஷியின் ராம் என்ற ஒற்றை சொல்லில் அடங்கி அமைதியானான்
பின் ரிஷி க்ரிஷ் பக்கம் திரும்பினான்
தான் பதில் சொல்ல வேண்டியதை உணர்ந்த க்ரிஷ்
"அண்ணா நானும் இவர பாத்தேன்"– க்ரிஷ்
"என்ன இந்த சிவன் அடியார நீ பார்த்தைய எப்போ எப்படி. என்ன சொன்னார்" -ராம்(ஆம் ராமிற்கு இதில் எல்லாம் மிகுந்த நம்பிக்கை உண்டு)
"ஆமாம் ராம் ஒரு ஒன்றரை மாதத்திற்கு முன்பு"- க்ரிஷ்
"நான் ஒரு ஆப்ரேஷனுக்காக மதுரை போய்ருந்தேன் அப்போ என்னோட கோலீக் மதுரைக்கு வந்தது தான் வந்தோம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்விட்டு ஊருக்குத் திரும்பலாமே என்றார் நானும் சரி யென்று அவர்களுடன் இணைந்து சென்றேன்
அங்கு இவர் தீடிரென்று என் முன் வந்து ரிஷி அண்ணாவிடம் கூறியது போல் என்னிடமும் ஒன்றை கூறினார் எனக்கு அது இன்னமும் நினைவு இருக்கிறது அதை வைத்து தான் நான் அனுவை கண்டுபிடித்தேன் அது
“முக்கடல் சங்கமிக்கும் இடமாம்
எம் தாய் கன்னியாய் அவதரித்தவள்
வீற்றிருக்கும் இடமாம் அங்கு செல்
நீ தேடுவது கிடைக்கும் காலம் கடக்கும்
முன் செல் நீ தேடுவது பல உயிர்களைக்
காக்க வல்லது செல் சீக்கிரம் செல்!!!!!!!!!!!!!!!”
அவர் சொன்னது இதுதான் அண்ணா!!!"
"கொஞ்சம் நேரம் அமைதிய எதையோ யோசித்த க்ரிஷ் ரிஷி இடம் எதோ சொல்ல ஆரம்பித்தான்
(அங்கு இப்போது சினிமால வருமே யாரையாவது கவுக்க வில்லன் திட்டம் போடும் போது ஒலிய கட் பண்ணிவிட்டு காட்சிய மட்டும் போடுவாங்களே அத மாதிரி நினச்சுக்கோங்க ப்ரண்ட்ஸ்)
சரி சரி காட்சி ஆவது போடுன்னு நீங்க சொல்லறது புரியுது
காட்சி:
க்ரிஷ் வந்து ஏதோ யோசிச்சுட்டு தயங்கி தயங்கி எதையோ சொல்லறான்
அது கேட்ட மத்த மூனு பேரும் திகைச்சு போய் கொஞ்ச நேரம் நிக்கறாங்க
முதல ரிஷி திகைப்பு லேந்து வெளி வந்து க்ரிஷோட சட்டைய புடிச்சு
உலுக்கி அவன அடிக்கிறான் ராம் கண்ணிலேந்து தண்ணி வருது அவன்
அழுதுகிட்டே க்ரிஷ்கிட்ட வந்து அவனும் க்ரிஷ்ஷோட சட்டையை பிடிச்சு
ஏதோ கேக்கறான் சித் தன் தலைல கை வைச்சு திகைப்புல அப்படியே கீழ
உட்காந்துடரான் க்ரிஷ் அதை பார்த்துட்டு சித் கிட்ட வந்து ஏதோ சொல்லி
அவனும் கதறி அழறான் அவன் அழறத பார்த்து சித்தும் ராமும் அவன
சமாதான படுத்தறாங்க ரிஷி இறுக்கி நிக்கிறான்,……………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………..........................................................................................................
சிறிது நேரம் கழித்து எல்லோரும் முகத்திலும் துக்கம் பொங்கி வழிந்தாலும் அதை அடக்கி கொண்டனர் பின் சிறிது நேர அமைதிக்கு பிறகு
"அவர் சொன்னது என்ன இடம் க்ரிஷ்"-சித்
"கன்னியாகுமரி"- ராம்
"என்ன சொல்லற ராம்" – சித்
ரிஷியும் ராமை கேள்வியாக பார்த்தான்
அது அண்ணா முக்கடல் சங்கமிக்கும் இடம் அப்படின்னு அந்த சிவன் அடியார் சொல்லியிருக்கிறார் அப்படி என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம் அதுவும் நம் பாரத தேசத்தில் எது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்
அதோடு அவர் கூறிய இரண்டு பாட்டையும் பாருங்கள் அதில் ரிஷி அண்ணா உங்களிடம் கூறியதில் என் அப்பன் ஈசன் என்று கூறியுள்ளார் அப்பொழுது க்ரிஷிடம் கூறிய எம் தாய் என்பதற்கு அர்த்தம் அம்மன் .
தென் முனையான முக்கடல் சங்கமிக்கும் அவ்விடத்திற்கு அப்பெயர் வந்ததே அந்த அம்மன் ஆல்தான் இதை வைத்து தான் நான் கன்னியாகுமரி என்று கூறினேன்
"ராம் கூறுவது சரி தான் ரிஷி அண்ணா அனு அங்கு தான் இருக்கிறாள்"-க்ரிஷ்
"நிஜமாகவா க்ரிஷ் "- ரிஷி
"ஆமாம் அண்ணா"- க்ரிஷ்
"அதோடு உங்கள் எல்லோருக்கும் இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கிறது"-க்ரிஷ்
"என்ன ஆச்சரியம் க்ரிஷ் அனு எங்கிருக்கிறாள் ஏன் அவள் நம்மளை தேடி வரவில்லை இப்போது எப்படி இருக்கிறாள்"- சித்
"சித் அவசரப்படாதே இப்போது நாம் இருக்கும் நிலையை முதலில் தெரிந்து கொள் முதலில் மேஜைக்கடியில் பார்" - ரிஷி
கீழே பார்த்த சித்" ரிஷி இது வாய்ஸ் டிரான்ஸ் மிட்டர் தானே இது இங்கு உள்ளது என்றால் நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள் இதைத் தவிர்த்து வேறு ஏதாவது இருக்கிறதா அப்போது இவ்வளவு நேரம் நான் பேசியதை கேட்டிருப்பார்களே இதனால் அனுவிற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ"-சித்
"இல்லை சித் நான் முதலிலேயே இங்கு வந்தவுடன் ஜாமரை ஆன் செய்துவிட்டேன் இதனால் யாராலும் நாம் இவ்வளவு நேரம் பேசியதை கண்டுபிடிக்க இயலாது ஆனால் இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது யாரோ நம் கூட இருந்தே நம் முதுகில் குத்த முயல்கிறார்கள் யாரது அவர்களை கண்டுபிடித்தே ஆகவேண்டும் இனி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும் இவையெல்லாம் விஷயங்களும் நம் நாலு பேரை தவிர யாருக்கும் தெரியக் கூடாது அது யாரா இருந்தாலும் சரி நான் போய் முதலில் அனுவை அழைத்து வருகிறேன் அவளை அழைத்து வந்தால் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ஆனால் நான் அனுவை அழைத்து வருவது நான் இங்கு அவளை அழைத்து வரும் வரை யாருக்கும் தெரியக் கூடாது அதனால் நான் தொழில் சம்பந்தமாக வெளிநாடு சென்று இருப்பதாக எல்லாரையும் முதலில் நம்ப வைக்க வேண்டும் பிறகு தான் யாருக்கும் தெரியாமல் அனு இருக்கும் இடம் சென்று அவளை எப்படியாவது பாதுகாப்பாக இங்கு அழைத்து வர வேண்டும்.
"ரிஷி இன்னொரு முக்கியமான விஷயம் நீ கவனித்தாயா இந்தப் பாட்டில்
உன் தந்தையை அழித்த
சதி என்னும் எமன்
உன்னையும் அழிக்க
தொடர்கிறது அதை
தடுக்க தன்னை கவசமாக
மாற்றிக் கொண்டாள் அவள்
இந்த வரிகளை வைத்து பார்க்கும் போது உன் அப்பாவோட மரணமும் எதிர்பாராமல் நடந்த ஆக்சிடென்ட் இல்லை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று தோன்றுகிறது நீ என்ன நினைக்கிறாய்"-சித்
"ஆமாம் சித் அதோடு சில வரிகள் என்னை மிகவும் குழப்புவதாக இருக்கிறது ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு அனு இடம் தான் உள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது பார்க்கலாம் ஆங் நீங்கள் நால்வரும் இந்த நான்கு சிம்மை ஆளுக்கு ஒன்றான எடுத்துக் கொள்ளுங்கள் இனி நாம் எந்த முக்கியமான விஷயம் என்றாலும் இதில் தொடர்பு கொண்டால் போதும் அல்லது ஏதாவது ஆபத்து என்றாலோ அல்லது ஏதாவது ஒரு க்ளூ கிடைத்தாலோ இதில் ஒரு பிளாங்க் மெசேஜ் அனுப்பினால் போதும் சரியா
ஆனால் அதற்காக எப்பொழுதும் உள்ள போனில் நாம பேசாம இருக்க கூடாது அதனால் எப்போதும் போல அதிலும் சில தடவைகள் பேசிக்கொள்வோம் ஆனால் முக்கியமான விஷயம் என்றால் எக்காரணம் கொண்டும் பழைய போனிலோ அல்லது மெயிலிலோ நாம் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் அப்படியே மெயிலில் தொடர்பு கொண்டாலும் நீங்கள் தனியாக புது ஒரு மெயில் ஐடியை ஆரம்பித்து அதில் நீங்கள் கூற வேண்டியவற்றை. டீராப்ஃடாக டைப் செய்து வைத்து விடுங்கள் அந்த மெயில் ஐடி ப்ளஸ் அதன் பாஸ்வெர் டை புது எண்ணின் மூலம். நாம் நால்வரும் பகிர்ந்து கொள்ளலாம்- ரிஷி
ரிஷி என்ன செய்தாலும் நாம் சிம்மை இந்த போனில் போட்டு பேசினால் ஐ.எம்.ஈ.ஐ நம்பரை வைத்து இந்த நம்பரை டிரேஸ் செய்து விட மாட்டார்களா அதோடு இப்போது உள்ள. லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்வது. எளிது தானே " - சித்
"அது ஒன்று இருக்கிறதோ சரி அப்போது ஒன்று செய்யுங்கள் பழைய மாடல் போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் அதாவது பழைய மாடல் என்றால் பேசிக் போன் ஒன்றை வாங்கிக் கொள்வோம் அதை யாராலும் ஹேக் செய்ய முடியாது தானே அதோடு ஸீம்மையும் போனையும் நம் பெயரில் வாங்கினால் தானே டிஈரக் செய்ய முடியும்" – ரிஷி
"ஆமாம் ரிஷி இது நல்ல யோசனை தான் சரி நம் வேலையை ஆரம்பிக்கலாமா"- சித்
ரிஷி ராம் இருவரும் அன்று மாலை பத்திரக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் காதாதிருந்து இருவரும் தொழில் முறைப் பயணம் செல்வதாக எல்லோரையும் நம்ப வைத்து விட்டு அனுவை தேடி புறப்பட்டனர்
ரிஷியும் ராமும் அனுவை நோக்கி பயணப்பட ரிஷியின் நினைவுகள் பின் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
2016
அனு கடத்த படுவதற்கு ஒரு வாரம் முன்பு
ரிஷி அம்முவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டு அனுவை நோக்கி சென்றான்
அவளிடம் சென்று அவளுக்கு எல்லாம் செய்து அவளுக்கு உணவு ஊட்டி விட்டு மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு கீழே வந்தான்
அம்மு அவனுக்காக உணவை வைத்துக் கொண்டு காத்திருந்தார்
"அதை கண்ட ரிஷி அம்மு உன் கிட்ட எத்தனை தடவ சொல்றது நேரா நேரத்துக்கு சாப்பிடுனு எனக்காக காத்திருக்காத என்று"- ரிஷி
"டேய் டேய் நான் ஒன்னும் ரொம்ப நேரம் காத்திருக்கல தினம் தினமா காத்திருக்கேன் இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டையே நானும் உன்கூட சாப்படலாம்னு பார்த்தா ரொம்ப தான் விரட்டரையே"– அம்மு
இங்கு இவர்கள் இவ்வாறு இருக்க வேறு ஒரு இடத்தில் இருவர் ரிஷியை வளைத்து வீழ்த்த சதி திட்டம் போட்டு கொண்டிருந்தனர்
அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது அங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது அந்த குரல் "ரிஷியை இன்று இராத்திரி எப்படியாவது என் பக்கம் இழுத்துடுவேன் அவன் எப்படியும் அந்த குணால் குடும்பம் கொடுக்க கூடிய விருந்துக்கு வருவான் அங்க அவன் குடிக்கப் போற கூல்டிரிங்க்ஸ்ல இந்த போதை மருந்த கலந்துட்டா போதும்
இந்த போதை மருந்த எடுத்து கிட்டா பன்னிரெண்டு– பதினைந்து மணி நேரத்திற்கு என்ன செய்றோம் ஏது செய்யறோம்னு தெரியாது"
அதே அறையில் இன்னொரு குரல் "சரி இதுனால நமக்கு என்ன பயன்"
முதல் குரல்.. "அவன் மட்டும் போதை மருந்து கலந்த ஜூஸை குடிச்சுட்டான்ன அவனுக்கு எப்படியும் ஒரு ஒரு மணி நேரத்தில அது வேலை செய்ய ஆரம்பித்து விடும் நான் அங்கேயே ஒரு ரூம் புக் பண்ணியிருக்கேன் அவன நான் அங்க அழச்சுட்டு போய் நான் அவனோட ஒன்னா கலந்துட்டா அவனால என்ன மறுக்க முடியாது அதுக்கு அவன் மனசாட்சி ஒத்துக்காது புரியுதா"
அதற்கு இரண்டாவது குரல் .. "புரியுது புரியுது"
"சரி சரி யாருக்கும் சந்தேகம் வராம நாம இந்த காரியத்தை கட்சிதமா முடிக்கனும் "இது முதல் குரல்
இவர்களை தவிர மூன்றாவதாக இவ்விருவரின் கண்களுக்கும் புலப்படாமல் இருந்த அந்த ஆன்மா இவர்களின் திட்டத்தை கேட்டு அதிர்ந்தது இது நடந்துவிட்டால் ரிஷியை அனுவை ஏன் அந்த குடும்பத்தையே இவர்கள் சர்வநாசம் செய்து விடுவர்
நடக்க கூடாது இவர்கள் நினைப்பது நடக்க கூடாது என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆன்மா அலைபாய்ந்தது
ஆன்மாவால் ரிஷியை காப்பாற்ற முடிந்ததா இல்லை ரிஷியை வீழ்த்த நினைப்பவர்கள் ஜெய்த்தார்களா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்
வசந்தம் பூக்கும்……………………………………………………….