அன்பு வணக்கங்களுக்குரிய ஸ்ரீஷா அவர்களுக்கு…
முதலாவதாக உங்கள் படைப்புக்கு என் பாராட்டுக்களை சொல்லிடுறேன்!
அருமையான வசனங்கள்…. எதார்த்தத்தை அடக்கியதாக
இந்த உங்கள் படைப்பை தவறவிட்டிருப்பேன் …. எடுத்துக்கொடுத்து படிக்க சொன்னபோது சரி பார்ப்போமே என்று தான் தொட்டேன்…
உங்கள் யதார்த்தம் பதார்த்தமாய் பார்க்க நினைத்த என்னை ஆத்மார்த்தமாய் ஒன்ற வைத்தது…
நட்ட நடு இராத்திரியில் நடு நிசியில் செலவிட்ட நேரத்திற்கு தக்கதாய்….
பெண் --- என்பது சாபமாய் நினைக்க தூண்டியது சமூகமே
ஆயினும் சிறை பட்டிருப்பது என்னவோ அவளாய் (பெண்ணாய்) மனம் உவந்தே…
கட்டுப்பாடுகள் நல்லதே! நல்லதல்ல என்று சொல்ல மாட்டேன்… ஆனாலும் அவளாய் கட்டுப்பாடு என்னும் சமூகதின் மூடநம்பிக்கையில் சிக்கி மீளும் நிலை மாறி புதைவதை தான் ஜீரணிக்க முடியாமல் வருந்துவது….
ஆதியும் அவளே
அந்தமும் அவளே
ஈன்றதும் அவளே
இடுவதும் அவளே
ஊன்றவும் அவளே
உறைவிடம் அவளே
ஏனைய முடிவும் அவளே
எண்ணும் அவளே
ஐயமும் அவளே
ஓரங்கமும் அவளே
ஒலி(ளி)யும் அவளே
ஔஷதமும் அவளே
ஃதரியா ஆ(பெ)ணினமே!
ஆணினமே--- மார்தட்டாதீர் அடக்கி ஆண்டோம் என்று……
பெணினமே --- மண்டியிடாதீர் அடங்கினோம் என்று .......
அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….
உங்கள் நல்ல முயற்சி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு வணக்கங்களுடன்.
// அருமையான வசனங்கள்…. எதார்த்தத்தை அடக்கியதாக
இந்த உங்கள் படைப்பை தவறவிட்டிருப்பேன் …. எடுத்துக்கொடுத்து படிக்க சொன்னபோது சரி பார்ப்போமே என்று தான் தொட்டேன்…
உங்கள் யதார்த்தம் பதார்த்தமாய் பார்க்க நினைத்த என்னை ஆத்மார்த்தமாய் ஒன்ற வைத்தது…
நட்ட நடு இராத்திரியில் நடு நிசியில் செலவிட்ட நேரத்திற்கு தக்கதாய்….//
என்ன ஒரு மனம் நிறைந்த பாராட்டு.மிக்க நன்றி sis
//
பெண் --- என்பது சாபமாய் நினைக்க தூண்டியது சமூகமே
ஆயினும் சிறை பட்டிருப்பது என்னவோ அவளாய் (பெண்ணாய்) மனம் உவந்தே…//
Exactly , பெண்ணிற்கான முதல் தடை,அவளது மனமே.
//கட்டுப்பாடுகள் நல்லதே! நல்லதல்ல என்று சொல்ல மாட்டேன்… ஆனாலும் அவளாய் கட்டுப்பாடு என்னும் சமூகதின் மூடநம்பிக்கையில் சிக்கி மீளும் நிலை மாறி புதைவதை தான் ஜீரணிக்க முடியாமல் வருந்துவது….//
எஸ் கட்டுப்பாடுகள் நல்லதே.ஆனால்,' இவ்வளவு தான் நாம், நம் வாழ்க்கை இவ்வளவு தான்', என முடங்கி கொள்ளும் பெண்களின் கட்டுப்பாடு தான் என்னை பெரிதும் வருத்துகிறது உங்களை போலவே.
//ஆதியும் அவளே
அந்தமும் அவளே
ஈன்றதும் அவளே
இடுவதும் அவளே
ஊன்றவும் அவளே
உறைவிடம் அவளே
ஏனைய முடிவும் அவளே
எண்ணும் அவளே
ஐயமும் அவளே
ஓரங்கமும் அவளே
ஒலி(ளி)யும் அவளே
ஔஷதமும் அவளே
ஃதரியா ஆ(பெ)ணினமே!//
Chanceless sis
//
அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….
//ஆணினமே--- மார்தட்டாதீர் அடக்கி ஆண்டோம் என்று……
பெணினமே --- மண்டியிடாதீர் அடங்கினோம் என்று .......//
இது ultimate. அதே நேரம் அர்த்தமான வார்த்தைகள்.
//அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….//
உங்களது தமிழ் வளமும் ,வார்த்தை அமைப்பும் ,கருத்தின் நேர்த்தியும் மிக மிக அருமை. நான் இன்னும் சிறப்பாக எழுதிட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடித்தளமாக அமைகிறது.நன்றி.
//உங்கள் நல்ல முயற்சி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு வணக்கங்களுடன்.//
மிக்க நன்றி sis
..I thoroughly enjoyed your comment
.made my day.