Hi sis, இமயவர்மன், வருண், ப்ரியன், அன்றில், துவன்யா, விருஷா,மாலா & அஞ்சலி என்ற கதாபாத்திரங்களை கொண்டு கதையை அழகாக கொடுத்து இருக்கிங்க, சூப்பர்..
வருண் ஒரு விபத்தில் நினைவை இழந்தவனாக அறிமுகம் ஆவதும் அவனின் மீது நாட்டின் பிரதமர் விபத்தில் இறந்ததற்கு அவனும் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளதும் சுவாரஸ்யம்..
ப்ரியன் வருணை வெறுக்கிறான் என நினைத்தால் மறைமுகமாக வருணுடைய மருத்துவத்துக்கு உதவி புரிகிறான்..வருண் அன்றில் குழந்தை போல அஞ்சலியை காட்டி பின்னர் துவன்யா வருண் குழந்தை என மாத்திடீன்க...
ப்ரியன் எல்லாவற்றிலும் சமயோசித்தமாகவும் அதிரடியாகவும் முடிவு செய்தான், superb...ப்ரியன் விருஷா காதலும் புரிதலும் sema...
வருண் Harbour ship பில் bomb இருந்ததை detect செய்ததது, flight high jack ஐ retired military pilot உதவியுடன் முறியடித்தது சூப்பர். அன்றில் முடிவுக்கு காரணமானவர்களை அழித்தது சூப்பர்..
வருண், ப்ரியன், துவா இமயவர்மனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி துவா மருத்துவ துறையில் பல சாதனைகளை இந்தியன் ஆர்மிகாக புரிவதும், ப்ரியன் scientists ஆக indian ஆர்மியின் உடையிலும் அவர்களின் பாதுகாப்பிலும் புதுமை புகுத்துவதும் சூப்பர்...வருண் எல்லை பாதுகாப்பில் கவனம் செலுத்தி நாட்டை பாதுகாப்பதும் அருமை...
அன்றில் ஒருதலையாக வருணை காதலிப்பதும், அஞ்சலியை தன் உயிராக பாதுகாத்ததும் , அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு துவாவை காக்கும் முயற்சியில் தன்னுயிரை விட்டதும் என்னவென்று சொல்வது .. அன்றிலின் பிரிவு வேதனை.
மாலா அம்மா ரொம்ப great..கணவன், மகள் இழப்பையும் தாண்டி வருணுக்கு உறுதுணையாக இருப்பதும், ப்ரியனையும் வருணையும் motivate செய்வதும் செம...
வித்தியாசமான கதைக்களம், super sis... drawing is really very nice..congrats to the cutie....
நம் நாட்டின் கடும் தட்பவெப்ப மாற்றதிலும் எல்லையை காவல் காக்கும் வீரர்களுக்கும் , நாட்டின் ரகசியத்தையும் பாதுகாப்பையும் காக்க போராடும் உண்மையான வீரர்களுக்கும் வீர வணக்கம்..