All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
19th Episode:

காதல் என்ற சொல் கொண்டு தொடங்கவில்லை வாழ்க்கை வாழ்ந்து காதலை காணலாம் என்றான்

நம்பிக்கை என்ற நன்உயிர் கொண்டு

நம்பிக்கை நயமான பொய்களில் நடுக்கம் காண நாயனவனை விட்டு

பிரிந்த நல்லாள் பிழை திருத்தும் நொடி சிதைந்து விட்டாள் சில்லாய் உடைத்த உதயனின் இதயத்தை எண்ணி...

மித்ரன் மதி
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்





20th Episode:

கண்ணாளன் கண்டம் தாண்டி செல்ல தவிப்பு இருந்தும் தனியே அனுப்பி வைத்தேன்

ஈன்றவன் இறப்பை காண வந்தேன் ஈனர்களின் இரக்கமற்ற குணத்தை கண்டேன்

சூழ்ச்சி கொண்ட சுழலில் சிக்கி கொண்டேன்

சுழலில் இருந்து மீட்க என் சூரியன் வருவானென காத்திருக்கிறேன்

அவன் உதிர சூலை சுமந்துக்கொண்டு

மித்ரன் மதி

என்னுள்ளே ஒரு மின்னல்....
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


21st Episode:

பொய்மை புலப்படுமிடத்தில் பூமகள் சிக்கி தவிக்க

தன்னவளை தொலைத்து தொலைதூரம் நின்ற தலைவன் தவிப்பில் தவித்து நின்றான்

தன்னிருந்தும் தன்னவளை தொலைத்ததை எண்ணி துடித்து நின்றான்

தோழர்கள் துணைக்கொண்டு துணையை தேட

கொடும் தேளின் விசமாய் வேடவன் வார்த்தைகள்

என்னுதிரம் உயிருக்காய் துடிக்க உயிரானவள் உறவு வேண்டாம் என்று உரைக்க

எதை ஏற்பான் இனியன் கண்முன் நிற்கும் பொய்யை மெய்யென ஏற்க முடியாமல்

தன் உதிரத்தை காக்க உறவு முறித்து சென்றுவிட்டான்

இதயளை இதயத்தில் சுமந்து

வஞ்சம் கொண்ட நெஞ்சம் நினைத்ததை முடிக்க

பொய்கள் வெளிப்படாமல் பேதையவள் இடம்பெயர்ந்தாள் தன்னவனின் மறுவுருவோடு

தன்னவளன் மேல் கொண்ட நம்பிக்கையை இழந்து

இன்று அணைத்து பொய்யும் விலக கானலாய் கலைந்து போன காதல் வாழ்வை எண்ணி கலங்கி போனாள்

காந்தவை...

வாசம் கொண்டே நேசத்தை உணர்ந்தவன்

அவளி போக்குமாயின் தன் வலி பெருகும் என்பதால்

தன் தாரகையவள் தன்னிடம் தஞ்சம் கொள்ளும் நாளுக்காய் தாயின் பரிவுடன் காத்து கிடந்தான்....

என்னுக்குள் ஒரு மின்னல்....


 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


22nd Episode:

மருத்துவத்தின் மணிமுடி அரசர்கள் சூழ்ந்து நிற்க

மகவுகளின் உயிரின் மீட்பை அனைவரும் பகிர்ந்தனர்

திடமாய் காட்டிய தாய்மை தன்னவன் முன் கலங்கி விழிநீர் உகிக்க

சிறு மொட்டுகளின் உயிர் பூக்க துணை புரியும் துணையாள் துடித்து அழுவதை கண்டு அவள் கண்ணாளனும் மனமிறங்க

தன் இல்லாத கணம் அவள் இழந்த தைரியத்தை இரட்டிப்பாய் மீட்டு தந்தான்

உண்மை மறைத்து உறவுகளிடம் இருந்து தள்ளி நின்றவன் இன்று தன் உதிரத்தை முன் நிறுத்தி உறவுகளிடம் உள்ளம் பகிர்ந்தான்

இரு உயிர்கள் தனித்து உயிரின் தவத்தில் இருக்க தந்தைமார்கள்

தவத்தின் பயனாய் சின்னஞ்சிறு சிட்டுகளின் உயிரை வரமாய் தந்தனர்

விழியில் உவர்நீர் சுமந்து தன் சுமந்த உயிரை மீட்க போராடிய உயிரானவனுக்கு

காத்து இருந்த காரிகை காந்தனை கண்டு கலங்கி நிற்க

கண்விழி கொண்டே காதலால் அழைக்க அடுத்த நொடி

இதயனின் நெஞ்சதை மஞ்சமென சாய்ந்து கண்ணீரால் கரைய

தன் வெற்றி கொண்டு தன்னவள் அழுகை இதயத்தில் ஈட்டி ஏற்ற

விழியாலே மொழி சொன்னான் கலங்கதே கண்மணியே என்று
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23rd Episode:

வலிகள் வற்றிப்போக வசந்தம் வந்த நொடியும்

வாடியே நின்றாள் வஞ்சி

உள்ளம் மகிழ்வில் திழைக்க மன்னவனை காணும் கணத்தை தவிர்த்து வர

முன்பு தடையாய் இருந்தவள் இன்று தடை உடைக்க முயற்ச்சிக்க

தாரிகையவளை தங்கையென ஏற்றவள் தலைவனிடம் சேரும் மார்கம் தந்து சென்றாள்

தலைவனை அடைந்தும் தள்ளி நின்றவளை தன்னுள் அடக்கியது தாய்மை பொழிந்த தாயுமானவன் உள்ளம்

பெண்ணவள் வலிக்கு மருந்தானவன் வலியின் காரணமானவர்களுக்கு எமனான்

பாசத்தை பலி கேட்ட பணத்தை பாவையவள் நிராகரிக்க

தன் நிராதரவான நிலை எண்ணி வருந்த பெண்ணவள் வலி வேந்தனையும்

அந்நிலையிலும் தன்னை தேடா தன்னவளை எண்ணி உள்ளம் வலித்தான்

தன் மனதை மனைவியிடம் உரைக்க உறைந்து நின்றாள் உடையாள்

தன் தவறின் நிலை நினைந்து யாசகமாய் மன்னிப்பை விழியில் வேண்டி

மித்ரன் மதி

என்னுள்ளே ஒரு மின்னல்
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

24th Episode:

மகவின் உயிர் காக்க மன்னவன் இருகிறான் என்று எண்ணிய மங்கை நீயடி

உன்னையும் காப்பேன் என்று உணராமல் போனதேனடி..

தன் தவறுகளின் தாற்பிகம் உணர்ந்தவள் தன்னவனிடம் தன்னிலை உரைக்க

உணர்ந்த உன்னதனோ உணர்வால் உயிரானவளை உயிருடன் அணைத்தான்

விழி சிந்தும் உவர்நீரே உள்ளத்தின் வலியை உணர்த்த வாற்றமால் வடிந்து கொண்டிருக்க

இதயாளின் இதய நீர் நெஞ்சை அருக்க அதை தாங்க தம்மான் ஆருதல் மொழி பொழிந்து அரவணைத்தான்

தோள் கொடுக்கும் தோழமை உயிர் துடிக்கும் நொடி உயிர் துணையாய் நிற்க

தோழமை தாண்டிய உருதுணையானாள்

உதிரத்தை பேணும் தாய் தனித்திருக்க
தாரிகையவள் உதிரம் சுமக்கா தாயானாள்


தாய்மையடையா தையலவள் தாய் அமுதம் தந்து தனையனின் உயிர் நீர் உயிரை காத்து நின்றாள்

பெதும்பையின் பெரும் தியாகம் கேட்டவள் பெதும்பி நின்றாள் பேதை பெண்

மீண்டும் விழி நாயண நதியை பொழிய நாயனவன் நெஞ்சம் என்னும் மஞ்சத்தில் மரவேலுக்கு தஞ்சம் தந்தான்

இதழ் அழுதம் என்னும் அருமருந்திட்டு அக காயத்தின் ரணம் குறைத்தான்... காதல் கண்ணாளன்..

தன்னை மன்னிக்கும் மாதவனை ஏன் என்உ கேட்ட பெண்மைக்கு

நீயே என் முதல் உயிர் என்று கூறிய அவளாண்மையை எண்ணி உயிர் கரைந்தாள்
 
Top