All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீண்டும் நானே... உங்கள் ஸ்ரீநிதா...

நம் தோழி சரண்யா அவர்கள் சில கவிதைகளை மித்ரன் அண்ட் மதிக்காக எழுதி இருக்கிறார்கள். அதை நான் படித்து ரசித்தது போல நீங்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பதிவாக பதிந்துவிட்டேன். கவிதை படிக்க விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்.

என்னுள்ளே ஒரு மின்னல் ஒரு முழு கவிதை தொகுப்பு (மித்ரன் - மதி ) :


என்னவனை பிரிந்த இடத்திற்கே மீண்டும் வந்தேன் என் மகவின் உயிர் காக்க


வாழ்வின் இறுதி நாட்களை எண்ணுபவளை நீண்ட தூரம் கூட்டி செல்ல காலனிடம் மன்றாடிருக்கிறேன்

மருத்துவ ராஜாங்கத்தின் அரசன் எமனுக்கே எதிரியாய் நின்று உயிர் பிடுங்குபவனிடம் இருந்து உயிர் காப்பவன்

தன் வாழ்வின் இறுதி நொடியை விழியில் வலியின்றி இதழில் புன்னைகை ஏந்தி தன் வாய்மொழியாய் உரைத்த மழலையிடத்தில் மனம் விழுந்தான்

அவ்வரசனையும் ஆட்டிபடைத்த உணர்வை தந்தவள் அவன் உதிரம் என்று அறிந்த நொடி உள்ளம் நடுங்க அணைத்தாள்

காலங்கள் கடந்து கண்ட கண்ணாடியை கோபம் என்னும் திரை பின் நின்று கண்டவன்

தன் உதிரத்தை காக்கும் பொறுப்பை ஏற்றவன் உடையாளையும் உருதுணையாய் அரவணைத்தான்

ஓர் உதிர உயிர் முன் நிற்க தன் மறு உதிர நீரிடம் உள்ளதை உரைக்க சிறு உயிரோ உறைந்து நின்று பரிதவித்தது தந்தை எண்ணி

தந்தையவனோ தாயயை உயிரில் அணைத்து உள்ளம் உணர்த்தினான் அவள் மனம் ஏற்காததை தான் செய்யேன் என்று

சிறு திங்களே ஈன்றவன் இதயம் அறிந்து அதை தலைசாய்த்து ஏற்றது

தாயின்றி தன்னை தேடிய தன் உயிர் தேவதையின் சொல்லில் உள்ளம் வலித்தான்

நெஞ்சோடு அணைக்கும் ஏக்கதை ஏங்கி சொன்ன தன் உயிர் சூலிடம் தான் தான் தந்தை என்று உரைத்துவிட்டான்

அள்ளி நெஞ்சில் புதைத்துக்கொண்டான்

சிறு திங்களிடம் அனுமதி பெற்றவன் தன் ஞாயறிடம் உண்மை உரைத்தான்

தன் மதியிடம் நிபந்தனை விதித்து அவள் உயிரை பேண சொல்ல அதை ஏற்க முடியாமல் தவித்து நின்றாள்

தன் சரிபாதியை மாற்றாளின் பதியை காண இயலாததால்

இருப்பினும் ஏற்றாள் மன்னவன் உயிர் அவளுக்கும் உயிர் என்பதால்

உறவுகளிடம் உண்மை மறைத்து தன் மூவுயிரை காத்து நின்றான் அக்காதலன்

சிறு மதி பெரு மதியுடன் இணைய அவர்கள் தனி முழு மதியாய் உலா வர

கதிரவன் தன் சிறு கதிருக்கு உயிர் ஒளியூட்டி கொண்டிருந்தான்

அழகாய் பொருந்திய அணங்கு ஆதவனிடம் அடைந்து கிடக்க அவள் முன் நின்ற அரிவையை கண்டு அதிர்ந்து போக அரிவையும் அதிர்ந்தாள்

தன் மகவை தன்னிடமிருந்து பிரிக்கும் நண்பனை கண்டு கோபமாய் பொறிந்தால்

மித்ரனின் மித்ர உயிரை காக்க மருத்துவ மகளாய் தன் மகளின் மறுவுருவை காக்க உடன் சென்றாள்

சிறு நாடியை இருக்கும் பூமகள் வெறும் நரம்பாய் இருப்பதை கண்டு கண்ணீர் உகித்தாள் அவ்வுயிரை காக்க உறுதி எடுத்தால்

மௌன சிறையில் சிறையிருப்பவள் மன்னனை கண்டு மழலையாய் மாற மனம் சுமக்கும் வலியை விழி நீரின்றி வித்தனிடம் கூற

கேட்ட விஜயன் தன் வித்தகியை நெஞ்சியில் சுமந்தான் காதல் என்று சொல்லவில்லை நம்பிக்கை என்ற சொல் கொண்டு காதல் வளர்த்தான் உயிர் காதல் வளர்த்தான்

மறுமொழி சொல்லாதவள் தம்மானுடன் தனித்திருக்க பெண்வள் குணம் தோழனின் தோழியை பதைபதைக்க

அவளை வேண்டாம் என்று நிராகதித்தாள்
வெறுப்பை தீயை பொழிந்தாள்


இருப்பினும் அதை பெரிதாய் எண்ணாத பெதும்பை அமைதியை அனுகியது

தனிமை தவறான சொல்லில் முடிய மணம் என்னும் முடிவை ஏற்று காதலியை கண்ணாடியாய் ஏற்றான்

காதலால் வாழ்ந்தவர்கள் கடமை அறிந்து தனித்திருந்த வேலை கயமை செயலில் சிக்கினாள் காந்தவை

தன்னவனின் உயிர் நீர் அணுக்களை சுமந்தவள் அதை காக்க அக்கயவர்கள் வசப்பட அது அவள் காதல் வாழ்வை சிதைத்து நாயன் மேல் கொண்ட நம்பிகையை குலைத்தது

ஒர் உயிரை குத்துயிராய் உடையவன் ஏற்க ஓர் உயிரை உயிர்புடன் உடையாள் ஏற்றாள்

குற்றுயிரை குருத்துயிரை மாற்ற குகனவன் குலைந்து போக தோள் கொடுத்தாள் தோழியவள்

தாய்மை பெறுமுன்னே தாய்யமுதம் தந்து தனையனின் உயிருக்கு பெறாத தாயானாள்

தன் தாய்மைக்கு சிறு காயம் கொண்டு

இருமகள்களின் உயிர் காக்க மருத்துவ மன்னர்கள் முன்நிற்க உயிரை மீட்ட நொடி மீண்டும் உயிர் பெற்றனர் அவ்வுன்னத உறவுகள்

தன்னிடம் உண்மை மறைத்த மனைவியிடம் கோபம் கொண்டு அவள் விழிநீரில் இதயம் விழுந்து அவளை நெஞ்சில் சுமந்த மன்னன்

உதிரத்தை காத்து உணர்ச்சி பெருக்கில் நிற்க உணர்ச்சியலையை உரியவனின் இதயத்தில் இடம்பெயர்த்தாள் பேதை

தன் தவறை உணர்ந்து எந்நொடியிலும் நம்பிக்கை இழக்க மாயோனை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தாள் மாயோள்

அன்பிற்கு ஏங்கியே என்னுள்ளே ஒரு மின்னல்(லாய்) உன் காதல் என் வாழ்வின் முழுமை தந்தது என்னவா..
அன்பு உறவுகளால்


என்னுள்ளே ஒரு மின்னல்...
 
Top