சுட்டெரிக்கும் சூரியனான மித்ரனை
கதாநாயகனாக்கி அவனை குளிர்வைக்கும் குளிர்நிலவான
நம்ம மதியை கதாநாயகி ஆக்கியிருப்பாங்க நம்ம கதையின் ஆசிரியர்
கதையோட ஆரம்பம் முதலே கணமான பதிவுகள் காட்சிகள் தான்(ஆரம்பத்துல மட்டுமா இருந்துச்சு கதை முழுக்க அதானே இருந்துச்சுனு நீங்க நினைக்குறது கரெட்க்ட்டு தான் நானும் அதையவே வழிமொழிகிறேன்
)
கதையின் ஆரம்பமே கணம் தான். மதி அவள் குழந்தையான மித்ராவையும் மித்ராவிற்கு இருக்கும் கொடிய நோயையும் சுமந்துகொண்டு திக்கு தெரியாத காட்டிலிருந்து சென்னைக்கு வந்திருங்குவாள்..
வாழ்வின் மகிழ்ச்சியான நிகழ்வுகளை கொண்ட இடம் சென்னையாச்சே!!!!!!
அன்றும் வாழ்வில் அவள் இழந்த மகிழ்ச்சிகளை மீட்டெடுத்தது இந்த சென்னை.
இன்றும் மணம் நிறைய பாரமுடனும் தன் ஆருயிர் மகளை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று சஞ்சலத்துடன் வந்திறங்கியவளை அன்றைய போலவே அவளது துன்பங்களை போக்கி இன்பங்களை மீட்டெடுக்க போவதும் இதே சென்னை தான்....!!!
இந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கான காரணகர்த்தா அவள் அவளின் உயிரை விட மேலாக நேசிக்கும் அவளவன் அல்லவா!!
எப்படியோ மருத்துவமனையில் சேர்ந்து
தன்னவனிடம் தன்னுடைய மகளை மீட்டெடுக்குமாறு ஒப்படைத்துவிட்டாள்....
மித்ரன் தன்னுடைய மகளை நீண்ட வருடங்கள் இப்படி ஒரு மகள் இருக்கின்றாள் என்று அவனுக்கு தெரியாமல் இருந்தது ஒரு கொடுமை என்றால் தன் உதிரைத்தை முதல் முறையாக இப்படி ஒரு நிலமையிலா அவன் காண வேண்டும்....
எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பான் மித்ரன்....
ஒரு மருத்துவனாக தன் மகளை காப்பாற்றுவதற்கான முயற்சியை அவன் அவர்களை அறிந்த நிமிடமே தொடங்கிவிட்டான்.......
முதல்படியாக தன்னவளை பற்றியறந்தவன் அவளை மித்ராவிடமிருந்து சற்று எட்ட நிருத்தியதுதான்.அதுவும் நிலா என்னும் பொற்குவியலை அவளிடம் ஒப்படைத்துவிட்டான்.....
அவன் கூறிய காரணமோ மதி நிலாவை பாத்துகொள்ள வேண்டும் என்றுதான்.ஆனால் அது பின்னாடி அவன் உணர்த்தியதோ நிலா மதியை கவனித்துகொள்ள வேண்டும் என்பதை..
மித்ராவின் நோயின் கணத்திலிருந்து நம்மை மீட்டு இதமடைய செய்தது கண்டிப்பாக நிலாக்குட்டி தான்....
மித்ரனிடம் அவள் என்னை பிடிக்காமல் போயிருமாப்பா என்று கேக்கும் போது அப்படியே வாரி அனைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்ததுதான் உண்மை...
எவ்ளோ புரிதல் உணர்வு அவளுக்கு...
அதுவும் இந்த சிறிய வயதில்.
பூரணியின் மகளாக அவள் அறிமுகமானது .
பூரணியை அவள் மம்மி என்று அழைப்பது முன்னாடி நடந்த விஷயங்கள்னு எல்லாம் சேர்ந்து பூரணியை ஆரம்பம் முதலே கெட்டவளாக வில்லியாக நம்மிடம் காட்டிவிட்டது.....பூரணியோடவருகை
அவளுடைய மதியுடன்னான பேச்சு...
மித்ரன் வீட்டிலையே அவள் தங்கி இருப்பது அப்படி இப்படி என்ற நிகழ்வுகள் பூரணியின் கோபத்திற்கு மேலும் மேலும் தூபம் போட்டு விட்டது.....
மித்ரன் மதியின் காதல் காட்சிகள் அருமை..
இருளில் இருந்து மீட்டெடுத்த அவளை மீண்டும் புதைகுழியிலேயே விட்டுச்செல்லுமாரு விதி செய்தது கடவுளின் விந்தையோ...
பூரணியின் தியாகத்தை அவளுடைய குணங்களை நம்ம கதாசிரியர் மெல்ல மெல்ல விளக்கியவுடன் அவளை நாம் அறிந்தவுடன் .
பூரணிய வசைப்பாடிய கூட்டமாகிய நாம் எல்லோரும் ஒரே அந்தர் பல்ட்டியாக அடித்து பூரிணியின் பின் போனது ஶ்ரீநிதாவின் விந்தையோ.....
பூரணியோட நல்ல மனச புரிஞ்சுகிட்டு அவளுக்கு மாப்பிளை பார்க்கும் படலத்தையம் நான் தொடங்கிட்டேன்...மாப்பிளையா யார போடலாம் சத்யனையா?சதிஷையா?இல்ல புதுசா யாரையாச்சும் கொண்டு வரலாமா?
இப்படி நான் யோசிச்சிட்டு இருக்கும்போது அடுத்த பதிவுல பாத்தா பூரணிக்கு கல்யாணமாகிருச்சுனு ஒரு குண்ட தூக்கி போட்டாங்களே நம்ம கதாசிரியர் அதுவும் அவள் மித்ரனின் அண்ணன் சந்திரனுடைய மனைவி மித்ரனுடைய அண்ணினு....
அது வியப்பின் உச்சக்கட்டம் !!!!!!
அய்யைய்யோ இப்படி கல்யாணமனவங்களுக்கு போய் நம்ம மாப்பிள்ளை பாத்திருக்கோமேனு அசடு வழிந்தது .இன்னும் ஞாயபகம் இருக்கு.
ஹப்பாடாஆஆஆ ஒரு வலியா பூரணி பிரச்சனை முடிஞ்சுதுனு ஒரு நிம்மதி பெருமூச்சு வாங்குனோம் ...
பொறுக்கலையே நம்ம கதாசிரியருக்கு..
நிலாவை மித்ரன் மதியோட குழந்தையா அறிமுகம் ஆக்குனாங்க ..சந்தோஷப்பட விட்டாங்களா.கூடவே அவளுக்கு இதயத்துல பிரச்சனைனு சொல்லி நம்ம இதயத்தை சுக்குநூறா ஆக்கிட்டாங்க..
ஒரு பக்கம் மித்ராவோட அபாயகரமான நிலை ஒரு பக்கம் நிலாவோட நிலைனு நம்மள அல்லாடவிட்டிருப்பாங்க நம்ம கதாசிரியர்.
கதையின் முடிவை நாம் அறிந்திருந்தாலும் அதை கதையில் நிஜமாக்கும் வரை நாமும் மித்ரன் மதியோட சேர்ந்து போராடி கடவுளை வேண்டி பிரார்த்தனைகள் செய்து விட்டால் ஐ.சி.யு க்குள் சென்று நாமே அந்த சின்னஞ்சிறிய மொட்டுக்களை காப்பாற்றியிருப்போம் அந்தளவிற்கு நாம் எல்லாருமே கதையோடு ஒன்றியிருப்போம் காரணம் நம் கதாசிரியரின் சொற்கள்!!!!!! நம்மையும் கதையோட பயணிக்க செய்தது...
எல்லாம் முடிந்தது இனி சந்தோஷம் மட்டுமேனு நினைச்சா உடனே பூரணியோட செயல்களையும் அதன் பக்கவிளைவுகளையும் கூறி நம்மள கணப்படுத்தியிருப்பாங்க.
பூரணியோட தியாகங்களையும் அவளோட செயல்களையும் பாத்து கதையின் நாயகி கண்டிப்பா பூரணிதானு தோனிச்சு..
கண்டிப்பா அவளுக்கு குழத்தைகள் கொடுனு கடவுளிடம் பிரார்த்தனை... அதையும் கடைசி பதிவில் நிறைவேற்றியிருப்பாங்க நம்ம கதாசிரியர்...
உண்மையா சொல்லனும்னா கணமான கதைக்களம்.
அதைய அவ்ளோ நேர்த்தியா மக்களிடம் சேர்த்திருப்பாங்க.
எல்லா இடத்துலையும் வாசகர்களோட மனமறிந்து அதை பூர்த்தி செஞ்சிருப்பாங்க.
வாசகர்களை ஏம்மாற்றாமல் செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் பதிவு கொடுத்திருப்பாங்க.
லாக்டவுன் நேரத்திலையும் அதிகாலையிலே பதிவு கொடுத்திருப்பாங்க.
இன்ப அதிர்ச்சி பதிவுகள்னு கொடுத்து நம்ம எல்லாரையும் சந்தோஷப்படித்தியிருப்பாங்க.
ஒவ்வொரு வாசகர்கள் பதிவிடும் ஒவ்வொரு கருத்துக்களும் மறுகருத்து கொடுத்திருப்பாங்க.
ரொம்ப ரொம்ப நன்றி கதாசிரியரே!!!!!
மூன்று குழந்தைகளுக்கு தாயமானவனாகிய மித்னும்....நட்பிற்கு இலக்கணமாகிய பூரணியும் என்றும் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்காளா ஆகிட்டாங்க..
எங்களை மகிழ்வுட்டுனதுக்கு.
விழிப்புணர்வை ஏற்படுத்தியதுக்கும்.
இந்த கதையின் மூலமா பலரோட மனுதுக்கு கண்டிப்பா நெருக்கமானவக்களா நீங்க அகிட்டிங்க...
மனதில் மின்னலாக மித்ரனும் பூரணியும்
இது மேலும் மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் டாலிங்...
அடுத்த கதையோட பயணிக்க ஆவலாக காத்திருக்கிறோம்.........