All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
உடம்பு கொஞ்சம் சுகம் இல்லை ஸ்ரீ மேம்.. Concentrate செய்ய முடியலை.. முடிந்த அளவு நாளைக்குள் comment செய்ய முயற்சி செய்கிறேன்.. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
 

ஶ்ரீகலா

Administrator
உடம்பு கொஞ்சம் சுகம் இல்லை ஸ்ரீ மேம்.. Concentrate செய்ய முடியலை.. முடிந்த அளவு நாளைக்குள் comment செய்ய முயற்சி செய்கிறேன்.. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
நல்லாயிருக்கேன் மா... இன்னும் ஒரு வாரம் இருக்கும். மெதுவா படிங்க. உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள். டேக் கேர்...
 

Advikasri

New member
இராதைகேற்ற ராவணன்.....
ஃபர்ஸ்ட் ஶ்ரீ மா உங்களுக்கு நாங்க ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும். இப்படி ஒரு நிலமைல டெய்லி ud கொடுத்ததுக்கு, லவ் யூ ஶ்ரீ மா😘😘😘.
நம்ம சிண்டு மச்சான் க்கு அப்பறம் நா ஓங்கோயிங் லா படிச்ச கதை இது தான். அவளோ பிடிச்சது, எப்பவும் டீ படிச்சிட்டு பைனல் எபிசோட் போடறப்ப தான் ஸ்டார்ட் பண்ணுவேன் பட் இது டீ படிச்ச உடன் ரியலி can't wait until last epi நு தான் தோணுச்சு.
கிருஷ்ணார்ஜுன், வாவ் என்ன சொல்றது இவன பத்தி அவளோ அழகான கேரக்டர். கதை முழுக்க இவன் தான் கண்ணுக்கு நிறைகிறான். நல்ல மகன், ரொம்ப நல்ல கணவன் & ரொம்ப ரொம்ப....நல்ல அப்பா. இவனோட ஒரு ஒரு ஆக்சன் நும் ப்பா... என்ன மனுசன் டா நீ அப்படி நு நினைக்கமா இருக்க முடியல. ரொம்ப பெரிய அவமானத்தை அவன் மனைவி அதுதான் அந்த ராதை இல்ல இல்ல அவனோட ராதை தேடி தந்துட்டு போனாலும் கொஞ்சம் விட்டு அவளா கட்டம் கட்டி தூகராதகட்டும், என் உணர்வுகளை மீட்டு கொடுனு சொல்லி அவளோட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவனோடதை யும் உயிற்பிக்கதாகட்டும், அவனோட ராதைக்கு தீங்கு நினைச்சவங்கள பழி வாங்கறது, எல்லாத்துக்கும் மேல அவளா ஒரு தாயுமானவன தாங்கரது ஆகட்டும் எல்லாத்துலயும் சும்மா அசத்துரான் அர்ஜுன்.
அவனோட ராதை - இவள பாதி கதை வரை பிடிக்கவே இல்ல, ஆன நாங்க விடுவோமா கட்டம் கட்டி தூக்கி அவளையும் காதலாகி கசிந்துருக வெச்சிடோம் இல்ல😍😍😍😍. ஆன இவளும் பாவம் தான் சூழ்நிலை கைதி, வேற என்ன சொல்றது. ஒரு டாக்டர் ஆஹ இருந்துட்டு கொஞ்சம் போல்ட் ஆ இருந்து இருக்கலாம்.
கண்ணன் - இவன் இல்லைனா ராதை இல்ல, அவளா கொஞ்சம் உயிரோட வெச்சி இருந்தது இவன் தான். இவனோட இராதைக்கு உண்டான நட்பு பிரைசல்ஸ்.
ராதிகா - கொஞ்சம் லேட் ஆக வந்தாலும் கண்ணன்க்கு ஏ த்த ஜோடி, அவளோ லவ் கண்ணன் மேல. இவளோட காதல் அவனா இப்ப போல வே எப்பவும் உயிரோட வெச்சி இருக்கும், பிரிசியஸ் லவ் 🤩🤩🤩🤩.
பாண்டி - ஃபர்ஸ்ட் இவன கெட்டவன்னு தான் நினைச்சேன், ஆன இவன் ரெண்டாவது ஹீரோ. அர்ஜுன் ஓட காதல் அமைதியா ஒடற நதி போல நா இவன் காதல் அருவி மாதிரி அவளோ அதிரடி.
சரிதா - காதலுக்கும் பரிதாபத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருந்துட்டு அப்பறம் பாண்டி ஓட காதலே அவளா உணர வைக்கரது எல்லாம் செம்ம😘😘😘😘.
மணிமாறன் - நந்து & உதயன் - மஞ்சரி இவங்க காதல் எல்லாம் ரசிக்க கூடியதா இருந்தது☺☺☺.
மனோ - அவன் எல்லாம் வாழவே தகுதி இல்லாதவன், அவனுக்கு சரியான தண்டனை கிடைச்சிருக்கு 👍👍👍👍.
தேவா - அபி - சித்ரா இவங்க எல்லாம் மனுசங்க தானா, இப்படியும் சிலர் இருக்க தான் செய்யரக. அவங்களுக்கு கொடுத்த தண்டனையும் ரொம்ப கரெக்ட்.

அர்ஜுன் - அனு, பாண்டி - சரிதா, கண்ணன் - ராதி க்காக ஒரு குட்டி வீடியோ ஶ்ரீ மா🤩🤩🤩🤩
 

ஶ்ரீகலா

Administrator
கீழேயுள்ள திரியில் கதைக்கான அப்டேட் இருக்கிறது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பெண்களில் நிலையை கண்டு அதற்கு தீர்வையும் சொல்லிய பதிவு..

கிருஷ் தன் குடும்பத்தினர் ஒவ்வொருத்தரும் அருந்ததியை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டும் அடித்து கொண்டும் இருந்த போது இவன் மட்டும் பேசாமல் இருந்தது எதற்கு என்று இப்போது தான் புரிகிறது... அழகாக புரிந்து வைத்துள்ளான் தங்கையை.. இதே அவனும் அந்த நேரத்தில் ஏதாவது பேசி இருந்தால் கண்டிப்பாக அருந்ததி அவனிடம் தன் பிரச்சனையை சொல்லி இருக்க மாட்டாள்... யோசித்து செயல்பட்ட நம் கிருஷிற்கு ஒரு ஜே!

தன் குடும்பத்தில் உள்ள நபர்களை வீட்டு தலைவன் புரிந்து அவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் எந்த மாதிரி பிரச்சனை என்றாலும் உடனே வீட்டிற்கு தெரியப்படுத்துவார்கள்...

மனோ மாதிரி ஆட்களுக்கு கிருஷ் கொடுத்த தண்டனை சிறிது என்றாலும் இனி மேல் அனைத்திற்கும் இன்னொருவர் உதவியை நாட செய்த செயல் கிருஷ் சொன்னது போல் ஏன் இனிமேல் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்க வைத்தது மரண தண்டனை விட அதிகம்... மனோ நிலை கண்டு பரசுவிற்கு தண்டனை கிடைத்து விட்டது... கிழவியும் அடங்கி விட்டாள்...

இந்த மாதிரி சம்பவம் நடந்தவுடன் குடும்பத்தினர் அருந்ததிக்கு கல்யாணம் செய்து அடுத்த வீட்டிற்கு பாதுகாப்பா அனுப்பி தன் பாரத்தை கழிந்து விட்டது என்று நிம்மதி அடைவார்கள்... ஆனால் கிருஷ் போல ஒரு அண்ணன் கிடைக்க அருந்ததி கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

அருமையான உணர்ச்சி பிழம்பான அத்தியாயம் ஸ்ரீ மேம்...

ராதை இது போல் அண்ணன் தனக்கில்லையே என்றதற்கு கிருஷ். அதுதான் புருஷனா நான் இருக்கிறேனே என்பது... இருவரும் கடந்த காலத்தை நினைப்பது... ராதை கிருஷிடம் ஒரு பாதுகாப்பை உணர்கிறாளா???

ஆக்ரோஷமான அபாரமான கவிதை வரிகள்... என்றென்றும் பெண்கள் நிலை இது தான்...

"நாம் மாறினால் மட்டுமே சமுதாயம் மாறும்.. மாற்றம் கொண்ட சமுதாயமே சரித்திரம் படைக்கும்..". அற்புதம் ஸ்ரீ மேம்..
சாந்திக்கா.. எப்படியிருக்கீங்க..😍😍😍

வாவ்.. உங்க விமர்சனம் படிச்சு எவ்வளவு நாள் ஆச்சு.. செம போங்க..
 
Top