All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!


இனிய தோழி,

வசியக் காரனின் வசியத்தில்
வசியமானவள் காதல் ராதை!
உரிமைக்காரனின் உரிமையில்
உரிமையானவள் காதல் ராதை!
ராவணன் அவன் பேருரிமையில்
ராகம் பாடியவள் காதல் ராதை!
ராமன் அவன் விரதத்தில்
விருந்து போற்றியவள் காதல் ராதை!
பார்த்தனவன் பகுமானத்தில்
வெகுமானம் கொண்டவள் காதல் ராதை!
அர்ஜுனன் அவன் குறியில்
வில்லாய் வளைந்தவள் காதல் ராதை!
கிருஷ்ணனவன் காருண்யத்தில்
காதலால் வென்றவள் காதல் ராதை!

பழியின் பாவத்தில் ஒன்றினைந்தாலும்
பதமாய் சுபாவத்தில் வென்றிட்ட காதல்!
விதியின் வேகத்தில் சென்றிருந்தாலும்
மதியால் விவேகத்தில் பண்பட்ட காதல்!

பேர் கெட்டுப் போனாலும்
சீர் கெட்டுப் போனாலும்
நேர் நின்று தேர் வென்ற
வேர் கொண்ட காதல்!

விவாகம் என்பது
விளையாட்டு அல்ல...
ஒற்றைச் சொல்லில்
விடுதலை தேட...!
திருமணம் என்பது
ஒப்பந்தம் அல்ல
ஒருவருக்கொருவர்
வரையறை தேட...!
வரைமுறை அற்ற உலகில்
பொறுப்பாய் காப்பது சதிபதி பந்தம்!
அர்ப்பணிப்பாய் அணைப்பது சதிபதி அந்தம்!
முத்திரை பதிப்பாய்
அன்பின் அறம் போற்றிய
அழகிய உறவில்...
பண்பில் பதம் மாற்றிய
இளகிய மரபில்...
மனங்களைக் கட்டிய
எளிமையான நடையில்
எழுத்தரசியின் எண்ணங்கள்
வண்ணம் தீட்டிய பேரழகில்...
ராதைக் கேற்ற ராவணன் - இவன்
ராதைக்கேற்ற பேருரிமைக்காரனே!
என...
வழக்கை இலக்காய் மாற்றிய
காவிய இலக்கியம் - இது
காதலின் இலக்கணம்!

படி தாண்டிய பத்தினியையும்
மடி தாங்கிய மன்னவன் நீதி!
உளி தாக்கிய சிலையென்றாலும்
வழி காட்டிய தென்னவன் வாழி!
மாணுட தர்மத்தில்
மகத்துவம் சேர்த்தால்
சமத்துவம் வாராதோ...?


மற்றுமொரு அழகிய காவியம் படைத்த எம் தோழியின் கருவில் வஞ்சிக்கப்பட்ட வஞ்சியவள், தாயாய் இருந்தாலும் தராதரம் இல்லாமல் தன் பிள்ளையை அழித்த இன்னொரு சரித்திரம் இது. இந்தக் கதையில் எத்தனை பழி பாவம் வந்தாலும் அன்பின் வழியில் மெய் வலி மறக்க முடியும் என்று எடுத்துக்காட்டிய விதம் எழுத்தரசியின் ஏற்றமான நடைக்கு மணிமகுடம் என்பதே அதன் சிறப்பு. மேலும் பல கதைகள் படைத்து அன்பின் அறம் சொல்லி அகிலம் சிறக்க, என் இனிய
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

TM Priya

Well-known member
ஒவ்வோரு நாளும் எதிர்பார்ப்பையும் ஆவலையும் உங்கள் எழுத்துகள் என்னில் தோற்றுவித்தது..வாசகர்கள் யூகிக்க முடியாமல் கதையை கொண்டு செல்வதில் தங்களுக்கு நிகர் நீங்களே மா.....

ஒவ்வொருவரின் இரசனையும் ஒவ்வொருவிதம்.....ராவணன் சிறந்த சிவபக்தன் என்னும் ஒரு காரணத்திற்காகவே எனக்கு அந்த கேரக்டர் பிடிக்கும் மா பல குறைகளையும் தாண்டி..இப்போ நீங்க குறிப்பிட்ட ராவணன் என்ற பெயரிற்கு பேருரிமையுடையவன் என்பதும் ரொம்ப பிடிக்கிறது....என் காதல் பிழை நீ-விஷ்ணு பிரஹான் அடுத்து இந்த கிருஷ்ணார்ஜுனை மறக்க முடியாது மேம்..

கவியை நேசிப்பவர்களுக்கு ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அழகான வரிகள்.....மனஅழுத்தம் குறைக்க கலகலப்பான பாண்டி கேரக்டர்.....மனோ,விக்னேஷ் போன்ற கயவர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்,விதவிதமான காதல், துரோகம், நட்பு, குடும்ப பாசம், வேதனை,பழி என அனைத்து உணர்வுகளும் இடம்பெற்று மனதில் நின்ற கதை மேம்.....

கிருஷ்ணார்ஜீன்-ஒரு ஆணின் தன்மானம் சீண்டப்படும்போது கோழையாய் இருப்பவனே வீறுகொண்டு எழும்போது வீரத்தையும்,நிதானத்தையும் ஒன்றாய் பெற்று வீரமகனாய் வலம் வருபவன் ராவணணாய் மாறவில்லையென்றால்தான் ஆச்சர்யம்...கோவத்தில் அனுவைக் கொல்ல நினைத்ததற்கு வருந்துவதும்,ராதையின் மேல் கொண்ட காதலும்,நட்பிடம் காட்டிய அன்பும்,எதையும் மறைக்கா நேசமும்,தங்கையான அருந்ததி யிடம் நீ உன் விருப்பப்படி சிறகடித்து பறந்து போ....நான் உன் பாதுகாப்பிற்காகக் கூடவே இருப்பேன் என்பதும் நெகிழ்வாக இருந்தது...சரிதாவிடம் பேசி அவளுக்குப் புரிய வைப்பது சூப்பர் மா...இவன் சிறந்த மகன்,சுயநலம் பார்க்கா நண்பன்,கண்ணியமான காதலன்,கர்வமிக்க கணவன்,பாதுகாப்பான தமையன்.......

அனுராதா-அர்ஜுனை முதல் முறை பார்த்தபோதே இவள் காதல் கொண்டாள்...
யாருடைய மனதும் நோகும்படி பேசாத இவள் எப்படி தன் கணவன் மேல் அப்படி ஒரு பழியை கூறினாள் என்பதை அழகாக குறிப்பிட்டது சூப்பர் மா...
உயிர் இருக்கும் வரை காதலித்துக் கொண்டு இருக்க வேண்டும் என ஜார்ஜ் இடம் கூறியது செம..இவள் வாழ்வில் சிவசங்கரன்,கண்ணன்,கிருஷ் இவர்கள் மூவரும் தான் உன்னதமான உறவுகள்...தனக்கு தீங்கிழைத்தவர்களை கூட மன்னிக்கும் மெல்லிய மனம் படைத்தவள்...

பாண்டி-உங்களால் படைக்கப்பட்ட மற்ற கதாபாத்திரங்களை விட இவன் சற்று கூடுதலாக என்னை ஈர்த்தான்..ஆரம்பத்தில் வில்லனாய் இருப்பனோ என்ற எண்ணத்தை தலைகீழாய் மாற்றி கள்ளமற்ற பேச்சால் மனதில் நின்றான்.....பாண்டி வந்த இடங்களில் கவலைகள் மறந்து சிரித்தேன் மா...

சரிதா-கோமாளியாய்,காமுகனாய் தெரிந்த கணவனை பிரிவின் பின்னே புரிந்து ஏற்றுக் கொள்வதும் அவன் விரும்பிய இடத்தில் வாழ்க்கையை ஆரம்பிப்பதும் சூப்பர் மா..

மணிமாறன்-நட்பின் இலக்கணமான கலியுகக் கர்ணன் இவன்..தந்தை ஆக போவதை முதலில் நண்பனிடம் பகிர்ந்தது செம....
நந்தினி-இவளின் காதலும்,உறுதியும் பாராட்டவேண்டிய ஒன்று..

கண்ணன்-இவன் அனுவிடம் காட்டிய பாசம் தாய் சேய் உறவு போல தூய்மையானது..குட்டிம்மா என்ற அழைப்பும்,அனுவிடம் மட்டுமல்ல மற்ற பெண்களிடம் இவன் காட்டிய கண்ணியம் சூப்பர் மா...அனுவிற்கு கண்டிப்பில்,தலைமுடியினைத் துவட்டியதில் தாயாகவும்,ஊர்சுற்றிக் காட்டியதில் தோழனாகவும்,தலைகோதியபோது அன்புத் தந்தையாகவும் தெரிந்தான்...ராதிகாவிற்குச் சிறந்த காதலனும் கூட....

ராதிகா-கண்ணன் அனுவிடம் காட்டிய அன்பே இவள் காதலின் ஆரம்பப் புள்ளி..இவள் பெற்றோரின் காதல் சூப்பர்..கடைசியில் சின்ன பாண்டிய ஆனது சூப்பரு..

உதய் மஞ்சரி காதலும் அருமை மா.....
சாய்ராதா இவளைப் பற்றி பேச விரும்பவில்லை மா...

சிவசங்கரன்-அதிகமான இடங்களில் இல்லையென்றாலும் அதிகமாய் மனதில் நின்ற கதாபாத்திரம்.....

சிவகடாட்சம்-மாதவி இவர்கள் காதலினால் ராவணன் என்ற பேருரிமையுடையவனின காதல் ஆரமபமானதோ..

காஞ்சனா-எடுத்தெறிந்து இளக்காரமாய் பேசும் கேரக்டர்..
சித்ரா தன் அக்காவின் மகன் முகத்தில் கரியைப் பூச நினைப்பது எல்லாம் ஏற்புடையது அல்ல..

அபிராமி-இவளெல்லாம் ஒரு தாயா.....அபிராமி,வேதாச்சலம்,விக்னேஷ் இவங்க எல்லாருக்கும் நியாயமான தண்டனை மா.....ஒரு கருவில் உதித்த விக்னேஷ் கண்ணன் இவர்களுக்குள் எவ்வளவு முரண்பாடு.....மனோ,கிழவி,பரசுக்கு சரியான தண்டனை....குமாரி நைஸ் கேரக்டர்......ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதி வரிகளை ரொம்ப ரசித்து படித்தேன் மா.....அமரஞ்சலி கதைக்கு வெய்ட்டிங் மா
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஶ்ரீமா ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கதையை யுடி பை யுடியா படிச்சுருக்கேன்... வழக்கம் போல உங்க ஸ்டைல்ல கலக்கிட்டீங்க , கிருஷ்ணாவை அறிமுகம் படுத்தும் போது வில்லன் ரேஞ்சுக்கு காட்டி காதல் மன்னனா மனசுல நிக்க வச்சிட்டீங்க... அர்ஜீன் அவன் காதல் வேற லெவல் , அனுவ அவன் தாங்கிற தாங்கள் ❤️❤️❤️...கண்ணன் பாண்டி ஹீரோக்கு ஈவுவலா ஸகோர் பண்ணிட்டாங்க... அழகான கதை கொடுத்ததுக்கு நன்றிகள் ஶ்ரீமா . அடுத்து அமருக்கு வைட்டிங்❤️❤️❤️
 
Top