All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 48)

ஆஹா... சாகித்யாவை பார்த்தவுனே பொறாமை அடிவயித்துல இருந்து பொங்குதோ...? ஆக மொத்தம்,
சக்தி சாகித்யாவை வைச்சு தான் சக்குவோட பொஸஸீவ்நெஸ்ஸை தூண்டிவிட்டு கேம் ப்ளே பண்ணப் போறானோ...?
சூப்பரு...!

எதுக்கு இந்த சக்குக்கு இத்தனை அவஸ்தை.....?
ஒரு நாளை கூட இவளால தாக்குப்பிடிக்க முடியலை.
தோத்தாலும் தன்னோட சக்தி கிட்டத்தான், ஜெயித்தாலும் தன்னோட சக்தி கிட்டத்தானே...?
இதுல எதுக்கு ஜம்பமா இல்லாத வீம்பு...?

இதுக்குத்தான் சொல்றது...
பேசறச்ச நிதானமா யோசிச்சு நிதானமா வார்த்தையை விட்டுடாம பேசணும். ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வாரத்தை கொல்லும்.
பாரு நானா, நீ விட்ட வார்த்தை
ஆறு மாசமாகியும் இன்னும் அவளை கொல்லுது. இது தேவையா உனக்கு...?

விக்ரம் சொன்னதை தான் சக்தியும் சொல்றான். பாப்பா திரும்ப கிடைக்கும்ன்னு....
ஆனா, இவ தான் வீம்பு பிடிச்சு
செவிடன் காதுல ஊதின சங்கா இருக்குறா...!

சக்தி கிட்டயே சவாலா...? பார்க்கத்தானே போற... இந்த சக்தி ஆடப்போற ஆட்டத்தை..!

😀😀😀
CRVS (or) CRVS 2797
 

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 49)

அச்சோ..! இந்த சக்கு எதைப் பண்ணாலும் ஓவர் ஆக்ட் பண்ணி சொதப்பி வைக்குறாளே. இதுக்குத்தான் சொல்றது ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு.

அதானே...இந்த சக்கு லூசுத்தனமா எல்லாத்தையும் பண்ணிட்டிருந்தா... விட்டுத்தான் பிடிக்கணும்... வேற வழி...?

அவனே போட்டு கொடுத்துட்டு போறான், இவ கூமுட்டை கணக்கா கோபத்துல குதிக்குறா பாருங்களேன்.. இவளை என்ன பண்ண...? நாம எதுக்கு பண்றது ? அதான் சக்தியே அவளை வைச்சு செய்றான் தானே..?

அடிப்பாவி...! இன்னுமா இவ சக்தீஷ்வரனை புரிஞ்சுக்கலை.
அவளையே அவன் இதுவரைக்கும் விட்டுத் தரலை. இதுல நீச்சல் உடையில மத்தவங்க பார்க்கிற அளவுக்கா விட்டுடுவான்...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
😍😍😍

இவன் செய்யுற அடாவடியில அவளே, தான் அவன் மேல வச்சு இருக்குற காதலையும், அவன் தன் மேல வச்சு இருக்குற காதலையும் புரிஞ்சுக்குவா போல... அதுவரைக்கும் அவனோட காதல் அடாவடியை தாங்கிக்க தான் வேணும்..

 
Top