All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ மேம், :love:

எப்படி இருக்கீங்க? :smiley15:வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் கதையுடன் தொடர்ந்து பயணித்தது சந்தோசம். வெகு நிறைவான கதை. ரசித்து, மகிழ்ச்சியாக படித்த கதை.

சர்வேஸ்வரன் எப்போதும் உங்கள் நாயகர்களை போல காதலை அள்ளி அள்ளி தந்து திகட்ட வைக்கும் நாயகன். உண்மையில் அவன் காதல் தீவிரவாதி தான். எல்லா பெண்களின் ஏக்கங்களின் எதிர்பார்ப்புகளின் பிரதிபலிப்பு அவன். பணம் எவ்வளவு இருந்தாலும் குடும்ப அமைப்பு என்பது அன்பால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து அதை உணர்த்தியும் விட்டான். உதிக்கு ஒரு நல்ல கணவனாக இருந்து அவளின் நிலையை அப்படியே புரட்டி போட்டு விட்டான். ஒரு பெண்ணின் முதல் பாதி நன்றாக அமைவது அவளின் பெற்றோரை பொறுத்து, மீதி பாதி அவளுக்கு கிடைக்கும் கணவனின் குடும்பத்தை பொறுத்து. அப்படி அவளுக்கு என்று எல்லாவற்றையும் நன்றாக மாற்றி கொடுத்து அவளை ஒரு தேவதையாக உணரவைத்து விட்டான். சர்வமும் அவன் தான். சர்வேஸ்வரன் பெயரும் மிக பொருத்தம். ஆக மொத்தம் மனதை களவாடிய வேட்டைக்காரன் இந்த சர்வேஸ்வரன்.

உதயரேகா அன்புக்காக மட்டுமே எல்லாரையும் சூறையாடி விட்டான் இவளின் சர்வா. பணம் படிப்பு பகட்டு இப்படி எதுவும் இல்லாமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று இவள் மீதான காதலை மட்டுமே ஆணி வேறாக கொண்டு இவளை கரம் பிடித்தவன். அவள் செய்த நிறைய அசட்டு தனங்களை பொறுத்து, மீண்டும் மீண்டும் அவளை காதலால் ஆராதிக்கிறான். இவளின் காதலுக்காக தன் காதலை விட்டு கொடுத்து, மறுபடியும் அவன் காதல் தான் உயர்ந்தது என்று காட்டி விட்டான். பரணி தாரிகா இருவரும் சாதாரண மனிதர்கள் அவர்கள் செய்த செயல்களும் அப்படி தான். ஆனால் சர்வாவுக்கு உதி என்று வரும்போது எந்த நியாங்களும் எந்த தர்மங்களும் தெரியாது போல. உதி உதி என்று உருகி அவனை போலவே ஒரு மகனையும் கொடுத்து விட்டான். இனி அவன் மகனை காண காத்திருக்கிறோம்.
 

vijirsn1965

Bronze Winner
Arumaiyaana story inimaiyaana niraivaana makizhvaana mudivu Saktheeswaranukum oru pen avanai theadi varukiraalo Sakthium kaadhali thanthaiyai kondu iruppaano aduththa story ku aavaludan waiting mam kadhai arputhamaana pramaadhamaama irunthathu superb mam viji
 

CRVS2797

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -30 & 31)

அப்படின்னா... ராகவி விஷயத்துலேயும் எல்லாத்தையும் மாத்தி அமைச்சுட்டானா...? தன்னோட காதல் மனைவியின் மனச்சங்கடத்திற்காக... சூப்பர் !
குட் கீப் இட் அப்...!

அது சரி, அந்த குழந்தை உதியோட குழந்தை மட்டுமா..?
உதியோட குழந்தைன்னா..
அதுல சர்வாக்கும் பங்கிருக்கு தானே..? அதுக்காக அவனை கேட்காமலே.. குழந்தை பாரமாயிடும்ன்னு நினைச்சு..
என்ன முடிவுன்னாலும் எடுத்துடுவாளோ...?
என்னென்னவோ நினைச்சு ஏதேதோ வேண்டாத வேலையெல்லாம் பண்ணப் போயிருக்கா பாருங்களேன்... சரியான கிறுக்குப் புடிச்சவ

இதையேத்தான்ம்மா நாட்களும் சொன்னோம். இந்த சர்வா முதல்லயே தன் காதலை உணர்ந்திருக்கலாம். இப்ப பாருங்க பரமேஸ்வரனோட இளைய மகன் முருகன் கோலமயிலேறி உலகத்தையே சுத்தி வந்து நிருபிக்கிறதுக்குள்ள, அவங்கண்ணன் கணேசன்
அம்மையப்பனையே சுத்தி வந்து இவங்க தான் உலகமேன்னு ஷார்ட் & ஸூவீட்டா சொல்லி ஞானப்பழம் பெற்ற
கதையெல்லாம் இந்த சர்வேஸ்வரனுக்கு ஞாபகம் இல்லை போலேயிருக்கு..! ததான், இந்த சர்வா தலையைச் சுத்தி மூக்கை தொட்ட கதையா... இவன் சுத்தினதும் இல்லாம, மத்தவங்களையும் சுத்தல்ல விட்டு, பொண்டாட்டியையும்
சுத்தி விட்டு, கடைசியில எங்களையும் சுத்த வைச்சிட்டான் இந்த காதல் கிறுக்கன்...!

அவனது அனைத்து தவறுகளுக்கும் அவளே காரணமாக இருக்கும்போது..
அவனை தண்டித்து மன்னிப்பதை விட....
அவனின் தவறுகளை மன்னித்து... அவன் காதலை முழுமையுடன் ஏற்பது தானே
முறை...!

உண்மை தான்..! புற அழகை கண்டு ஈர்க்கப்படும் காதல் கடைசிவரை நிலைக்காது, நீடித்திருப்பதும் அபூர்வமே...!
ஆனால், அகஅழகைக் கண்டு அன்பு கொள்ளும் காதல் என்றென்றும் நிலைத்திருக்கும்
நீடித்தும் இருக்கும் என்பதற்கு
சர்வா & உதயரேகாவே சிறந்த உதாரணம்.

அப்படின்னா... அடுத்தது சக்தீஸ்வரனின் தேவதை பெண் கதையோ...!!!???
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top