All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Banumathi Balachandran

Well-known member
அஞ்சலி ஆத்மிகாவை பற்றி கூறியதை கொஞ்சம் அமர் கவனமாக கேட்டிருந்தால் மகளுக்கும் ராமனுக்கும் உள்ள பிரச்சினையை கண்டு பிடித்து இருப்பானோ?
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? தொழிலை ஆத்மிகாவிடம் விட்டு சென்ற நாயகன் காரண காரியத்துடன் மறுபடியும் மந்திரி பதவியில் அமர்ந்தது போல் முதலாளி நாற்காலியில் உட்கார்ந்து அதை தடவி தன் கனவு நிஜமாகியதை கண்டு பெருமைப்பட்டு கொண்ட பதிவு...

ஆத்மிகா ராமின் தொழில் நிறுவனத்திற்கு வந்தவுடன் பூனேவிற்கு சென்று விட்ட ராமை விடுத்து ரன்வீரின் உதவி கொண்டு தொழிலில் முன்னேறி முதல் முதலில் அரசாங்க ஒப்பந்த போட்டி முடிவிற்காக காத்திருக்க... ராமின் தூண்டுதலால் ரன்வீருக்கே ஒப்பந்தம் செல்ல... ஆத்மிகாவின் ஒப்பந்தம் தோல்வியில் முடிய அவளிடம் அவள் தந்தை அமர் நேரடி வரவு...

ஸ்ரீ மேம் இந்த இடத்தில் தங்கள் எழுத்தின் வடிவம் எங்கள் முன் அப்படியே காட்சியாய்..

ஆத்மிகாவை அவள் தந்தை திட்டும் போது தானா ராம் வரணும்.. ஸ்ரீ மேம் தாங்கள் சொல்வது சரிதான் தப்பான நேரத்தில் சரியாக வரவு ராமின் வரவு... ஹா! ஹா! அதுவும் அவளை கண்டு கண்ணடித்து கொண்டே... எப்படி அழகாக சமாளித்தான் அமரை... வேறு ஒரு தனியார் ஒப்பந்தம் காட்டி அமர் காலில் ராம் விழுந்தவுடன் அவள் தந்தை அப்படியே விழுந்து விட்டான் ராமின் புறம்... இன்னும் என்ன பேச... பாவம் ஆத்மிகா... அவன் மேல் அவள் தந்தையிடம் நிஜமும் சொல்ல முடியாமல் விழுங்கி மறுபடியும் அவனுடனே வேலையை கற்று கொள் என்று சொல்லி சென்று விட்டான் அவள் தந்தை...

ஆனால் அவன் கனவு அந்த தொழில் நிறுவனம் அவனை வெளியேற்ற நினைக்கும் ஆத்மிகா.. அவளை வெளியேற்ற நினைக்கும் ராம்? ஏன் இந்த முரண்பாடு? எம்டி சீட்டில் உட்கார்ந்தவுடன் அந்த நாற்காலி தடவி பார்த்ததன் காரணம் தான் என்ன? அதுவும் ஆத்மிகா செல்லுகிறாள் என்பதை கூட கவனிக்காமல்...

பாவம் ரன்வீர் ஆத்மிகாவின் பதிலுக்காக காத்திருக்கிறான்... ஆனால் இவள் நிலை?

அற்புதமான பதிவு தங்கள் பாணியில் சுவாரஸ்யமான...
 

vijirsn1965

Bronze Winner
adenappa enna oru thimir thenavettu ramidamyaar intha ram eppadi amaridam vanthu sernthaanavanudaiya pala naal kanavu antha chairil amarvathu enral yethai ninaithu amar companyiku vanthullan aathmikavai enna seithan yean aval thannambikkai dhayiriyamizhanthu irukkiraal ethaiyo thanthai thaaiyidamirunthu maraikiraal therinthaal amar rammai summa vidamaattaan entrusollaamal irukkiraalsemma ud very very nice arumai superb mam(viji)
 

Deebha

Well-known member
Hi mam, ஆத்மியை ஹீரோயினாக பார்க்க சந்தோஷமாக உள்ளது. ஆனால் ஆத்மி சந்தோஷமாக இல்லையோ? ராம் வைத்தி, அமர், அஞ்சலி, பத்மினி பாட்டியிடம் காட்டும் பணிவு நன்றாகத்தான் இருக்கிறது. ராம் அமரை பழிவாங்க நினைகிறானா? ஆத்மி அமரிடம் ராம் பத்தி ஒரு வார்த்தை சொன்னால் ராம் காணாமல் போவானே? ரன்வீரெய் விரும்பும் ஆத்மி யை ராம் களவாடி விட்டானா?
 

Hanza

Bronze Winner
Nethe padichitten…. Comment poda kidaikkala… ippo odi vandutten…

Help na mattum intha Ranveer theva… love panna matteengalo…. 😏😏😏😏
Enna irunthalum enga aalu Gentleman than ya…. Business le idam pidikkirathu mukkiyamilla Ram bhai… ponnu manasula thadam pidikkanum…
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

இனிய தோழி,

தனி ஒருவன்
தலை நிமிரும்
சுயம்புவாய்...!
தன் வேர் தேடும் ஒருவன்
தானே வேராய் தடம் பதித்தால்
சுற்றாரும் பார்க்காமல்
உற்றாரும் பார்க்காமல்
தான் என்ற அகங்காரத்தின் முன்னால்...
தர்பாரில் மகாராஜனாய்
கோலோச்ச நினைப்பவன்...
காதல் பாதையை காணாதவன்
அன்பின் பாதையை ஆளாதவன்
நான் என்ற ஒன்றே தீர்வானவன்!

அன்பின் கூட்டில்
பண்பின் பாட்டில்
பைங்கிளியாய்...!
தன் தோள் சாயும் ஒருவள்
தானே தோளாய் வடம் பிடித்தால்
சுற்றமும் பார்த்து
உற்றமும் பார்த்து
நாம் என்ற சுகானுபவத்தின் முன்னால்...
தன்னிலையில் மகாராணியாய்
பாராள நினைப்பவள்...
காதல் பாதையில் கரை கண்டவள்
அன்பின் பாதையில் அகம் ஆழ்ந்தவள்
நாம் என்ற ஒன்றில் திடமானவள்!

நான் என்ற அவன்
நாம் என்ற அவள்
ஆத்ம பந்தத்தில்
அலைமோதும் ஆலோலம்...
நிலை மாறும் பூபாளம்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Deebha

Well-known member
அமர் ஆத்மியின் மனதை உணர தொடங்கி விட்டானா? ஆத்மி மனதை ஒருநிலை படுத்தி, company இல் பங்கேற்க வந்தது மகிழ்ச்சியே. ராமின் நிர்வாக திறமையை ஆத்மி வெற்றி கொள்வாலா?
 
Top