All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Hanza

Bronze Winner
#hanzwriteup

#ஆத்மராகம்

நாயகன்: ராம் ராகவேந்தர்
நாயகி: ஆத்மிகா

ராம்... உண்மையிலேயே இவனை பற்றி என்ன எழுதுவதென்ற குழப்பநிலையில் நான்... ஆரம்பத்திலிருந்தே இவனை எனக்கு பிடிக்கவில்லை... பழிவாங்க ஒரு பெண்ணின் மனது தான் கிடைத்ததா என்று... காதலில்லாமல் இவனே நடிச்சி கல்யாணம்வரை கொண்டுபோய்.. நீ வேறு கல்யாணம் பண்ணிக்கோ னு சத்தியம் எல்லாம் வாங்கி... அப்புறம் பொறாமையில் பொங்கி... அவளை love torture பண்ணி.... 🙄🙄🤨🤨 இல்ல தெரியாம தான் கேட்குறேன்... எங்களை பார்த்தா இப்படி தெரியுதா இல்ல அப்படி தெரியுதா..???? ஆனாலும் இறுதியில் கையில் காலில் விழுந்து தன் நாயகியை சரிக்கட்டி விட்டான்.. 😂😂😂 (எம்மாம் பெரிய உருட்டு🙊🙊🙊)
இவனது இளமைக்காலம் ரொம்பக்கொடுமையானது...😰😰😰
தன் கண்முன்னே தாயின் கோர துர்மரணம்... தங்கையின் தன்னிலையிழந்த நிலை... இது எல்லாம் பார்க்கும்போது பாவமாக இருந்தது...
குறுகிய காலத்தில் இவனது எழுச்சி பாராட்டத்தக்கது.. எதிரிகளின் weakness ஐ பார்த்து தகர்ப்பது எல்லாம்...👌🏻👌🏻👌🏻(அதுல எல்லாம் ஆளை அடிச்சிக்கவே முடியாது)
ரன்வீருடன் மல்லுக்கு நின்றது 😤😤😤 அநியாயத்துக்கு ஒரு நல்லவனுக்கு கெடுதல் செய்து அவனது முதல் காதலை செல்லாக்காசாக்கி விட்டுட்டான் மலமாடு ... 🤨🤨🤨

ஆத்மிகா... Daddy’s Little Princess.. அவரு கிணத்துல குதின்னு சொன்னாலும் கண்ணை மூடிட்டு குதிப்பா... ஆனால் அது எல்லா சந்தர்ப்பத்திலும் சரிவராது... 😒😒😒 ரன்வீருடனான நிச்சயமாக இருக்கட்டும்... ராமை திருமணம் செய்ய சம்மதித்ததாக இருக்கட்டும்... கொஞ்சம் அந்த 13g பொருளை use பண்ணிருக்கணும்... ராம் சொல்வதுபோல இவ ஒரு தத்தி தான்... ஒரு kk யை நம்பி ஒரு நல்லவன் மனதை சில்லு சில்லாக உடைத்த பாவம் சும்மா விடுமா... அதான் இறைவன் இவளை வெச்சி செஞ்சிட்டான்... 🫢🫢🫢 இவளோட அன்பு தான் ராமின் பலமும் பலவீனமும்..

ரன்வீர்... ❤‍🔥❤‍🔥❤‍🔥❤❤❤💕💕💕😍😍😍🥰🥰😘😘😘 such a lovable eligible bachelor… என்னோட sweet heart 🫰🏻❤... நல்லவனுக்கு இங்கே காலமில்லை என்பதற்கு இவன் உதாரணம்... ☹☹☹ ஒரு green sand இவன்... அதான் எல்லாரும் ஏமாத்திட்டாங்க... 😞😞😞 ஆனாலும் வரண்டு போன இவன் வாழ்வை பூப்பூக்க செய்ய வரமாய் வந்தவள் ஷப்னம்.. 😍😍😍 இவர்களது ஜோடிப்பொருத்தம்.. 🫰🏻🫰🏻🫰🏻❤❤❤

இரண்டாம் பாகத்தில் ஸ்வாதி ரன்வீர் ஷப்னம் ராம் உறவு உணர்வு உரிமை போராட்டங்கள் ரொம்ப அழகாகவும் அருமையாகவும் இருந்தது... ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்ந்ததை போல ஆத்மிகாவின் வருகை.. ❤❤❤

அர்ஜுன் ஸ்வாதி combo சூப்பர்.. 👌🏻👌🏻👌🏻 ஸ்வாதியின் மனோநிலையை அர்ஜுன் அழகாக சமாளிக்கும் இடங்கள் எல்லாம் அருமை..

சரோஜினி அரவிந்த் வைஷ்ணவி எல்லாருமே 👌🏻👌🏻👌🏻

அஸ்வத்தாமன்... பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு உதாரணம்.. 😖😖😖

அழுத்தமான கதைக்களம்... கொஞ்சம் suspense...
கொஞ்சம் romance...
நிறைய sentiments...

ஆத்மிகாவும் ராமும் (எனக்கு ரன்வீர் மட்டும்) என்றென்றும் எங்கள் ஆத்மாவில் ராகமிசைப்பார்களாக..

💐💐💐
 

sankarirathi

Well-known member
very interesting and fantastic story ma ❤❤❤❤❤ ram chance illa avanoda ovvoru nagarvugalum arumai muthala aathmiya thathinu sollitu avala alaikazhikirthu konjam vera mathiri irunthalum athmiyoda poramaiya kilari vittu athula kulir kayarathu sema... amaar, anjali, ranvir, shabanam ,arjun ellar charactersum superb:love::love::love:
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் மேம்,
போன வாரமே படித்து முடித்து விட்டேன். வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்தான் தாமதம். மன்னிக்கவும்

ஆத்ம ராகம்... அமரஞ்சலியின் தொடர்ச்சி... ஆத்மாவாகிய ஆத்மிகாவுக்கும் அவள் இராகமாகிய ராம் ராகவேந்திருக்கும் இடையில் நடக்கும் கதை.👍👍👍

ராம் ராகவேந்தர் ஆரம்ப அத்தியாயங்களில் என்னிடம் நிறைய திட்டு வாங்கினான் என்னிடம்...அதுவும் நல்ல திறமை உள்ள பெண்ணை இவன் சுயநலத்துக்காக தத்தி ஆக்கி விட்டு அதை சொல்லி சொல்லி அவளை திட்டுகிறானே என கோபம் கோபமாக வந்தது. ஆனால் இவன் முன் கதையும் திருந்திய பின் இவன் செய்யும் பிராய சித்தங்களும் இவனை மன்னிக்க வைத்து விட்டன.💕💕💕

ஆத்மிகா என்ன பெண் இவள்...இப்படி ஒருத்தியால் காதலித்து அந்த காதலே சுவாசமாக தன் வாழ்வை குறித்து கூட திட்டமிடாமல் இருக்க முடியுமா என்று தோன்றியது. ஆனால் அவள் நல்ல மனதிற்கு அவள் வாழ்க்கை அழகாகவே அமைந்து விட்டது.😍😍😍

சிவநாத் சந்தீப் இப்படி பல negative கதாபாத்திரங்கள் இருந்தாலும் மன்னிக்கவே முடியாதவன் அஸ்வத்தாமன்... இவனல்லாம் என்ன பிறவியோ...மனிதனே இல்லை இவன்...சுயநல வாதி...சந்தர்ப்ப வாதி.🤬🤬🤬

ரன்வீர் shabnam உதய் கீர்த்தி என இருவரின் காதலும் அழகு...அதற்கும் சற்றும் குறையாமல் அர்ஜுனின் காதலும் அழகாக இருந்தது.👌👌👌

மொத்தத்தில் நிறைவான ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு மேம்.👋👋👋

அழகான கதை கொடுத்தமைக்கு நன்றிகளும் இன்னும் நிறைய கதைகள் படைத்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகளும்💐💐💐💐💐

என்றும் அன்புடன்
தூரிகா
 
Top