All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Serthu vaikka vendiya veerendar Binni ya pirichi vittuttu... poruthame illatha Akilan Nellam ku track ezhutha poreengale... nan ithai vanmaiyaga kandikkiren....:smiley47:
Appothan suvarasiyam koodum.. 🏃‍♀️🏃‍♀️
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#hanzwriteup

#கீரவாணி



நாயகன்: அகீரன்
நாயகி: வாணி

தென்னாட்டு financier com producer க்கும் வடநாட்டு நடிகைக்கும் இடையே நடக்கும் காதல் மோதல் பாசப்போராட்டம்...

அகீரன்... ஒருபக்கம் Rough and tough ஆன ஆண்மகன்... தாயின் தலைமகன்... சகோதரர்களுக்கு இன்னொரு தகப்பன்... சரியான கறார் party... இன்னொருபக்கம் காதலியை மட்டுமே சுற்றி வட்டமிட்டு கயவர்களிடமிருந்து காக்கும் வல்லூறு.. வாணியை தன்பக்கம் திருப்பி காதலிக்க வைக்கும் வரை தலையால் தண்ணீர் குடித்துவிட்டான்.. 😂😂😂 அந்த petromax light ஏஹ் தான் வேணுமா னு கேட்க வைக்கிறான்... காதலிக்கும் போதுதான் அப்படினு பார்த்தால் கல்யாணத்தின் பின்னும் அவனை ஒருவழி பண்ணுகிறாள் அவன் மனையாள்... 🤭🤭🤭
ஆனாலும் அவளை கண்ணின் மணி போல இவன் காப்பது அருமை.. பக்கா husband material 👌🏻👌🏻👌🏻
மனைவியின் சந்தோஷத்திற்காக இவன் செய்யும் செயல்... 👏🏻👏🏻👏🏻

வாணி... எனக்கு பிடிக்கவேயில்ல இவளை.. இப்படியுமா கோழையாக ஒரு பெண் இருப்பாள்??? அதுவும் bollywood இல் நடிக்கும் நடிகை... 🤧🤧 அம்மா அம்மா என்று அம்மா பின்னாடி போகும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கு.. காதலிக்கும் போதுதான் அவனுக்கு போக்கு காட்டினாள் என்றால் கல்யாணம் முடித்த பின்னும் அவனை நிம்மதியாக வாழ விடவில்லை.. இவளுடைய ஒரே வடிகால் அகீரனே...

ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு துர்கா.. ஒரு தாய் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு பின்னி..
இவர்கள் இருவரும் தான் இக்கதை ஆரம்பமாக காரணமானவர்கள் நாயகனும் நாயகியும் காதலிக்கவும் இவர்கள் இருவரும் தான் காரணம்..

துர்கா ஒரு நல்ல தாயாக மட்டுமல்ல நல்ல மாமியாராக மிளிர்கிறார். அகீரனின் இரட்டை சகோதரர்களான அகிலனும் அதிதியும் இக்கதைக்கு சுவாரஷ்யம் கூட்டுகிறார்கள். இவர்களது குடுமிப்பிடி சண்டையினாலும் இவர்களது கலகலப்பேச்சினாலும் எம்மை ரசிக்க வைக்கிறார்கள்..
தன் காதல் மனைவிக்காக கீரன் சில தியாகங்கள் செய்வது சாதாரணம். ஆனால் மொத்த குடும்பமுமே வாணியின் சந்தோஷத்திற்காக ஊர்விட்டு ஊர்வந்து வசிப்பது எல்லாம் அவர்களின் நல்ல மனதை வெளிக்காட்டுகிறது... பின்னியின் மனதை கரைக்க அதிதி செய்யும் அலப்பறைகள் 😂😂😂😂😂

இறுதிவரை பின்னியை எனக்குப் பிடிக்கவில்லை. அவர் எவ்வளவோ சாக்கு போக்கு சொன்னாலும் அவருடைய நிலையை எடுத்துக் கூறினாலும் எனக்கு அதில் அவர்களது பிடிவாதம் தான் முதன்மையாக தெரிந்தது. ஒரு பெண்ணாக அவரது சுய கௌரவமும் சுய முயற்சியும் என்னை கவர்ந்தது. ஆனால் ஒரு தாயாக அவர் தோற்றுவிட்டார்.

வீரேந்தரை பார்க்கும் பொழுது வருத்தமாக இருக்கின்றது. அவர் செய்த தப்பிற்கும் மேல் பல மடங்கு தண்டனை அனுபவித்து விட்டார். பின்னியும் writer உம் இவ்விஷயத்தில் கொஞ்சம் மனம் இறங்கலாம்.. 🙄🙄🙄

அழகான கதையோட்டம்.. ஆரம்பத்திலிருந்தே தொங்கு தொய்வின்றி சென்றாலும் இறுதிப்பகுதியில் கொஞ்சம் கதை slow ஆன feel... (எனக்கு கொஞ்சம் பொறுமை குறைவு.. பின்னி தன்னோட பக்கத்தை சொல்லும் இடத்தில் யம்மா போதும் நிற்பாட்டு.. எனக்கு தூக்கம் வருது என்று கூற தோன்றியது... 🫤🫤🫤) ஆனால் அதுவும் கதைக்கு தேவையானதே... இல்லாவிட்டால் dramatic ஆக போய்விடும்... (அந்த பின்னியை அவரோட அந்த வரட்டு பிடிவாதத்திலிருந்து விடுவிப்பது என்ன லேசுபட்ட காரியமா???)

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள் 💐💐💐
மிக்க நன்றி Hanza sis.. 😍😍♥♥♥♥🤩🤩♥
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow woooww maa...... Semma semma ending romba arumai ah mudichitinga.... பின்னி yum paavam thaan neriya neriya annuppa vechi இருக்காங்க maa single parent ah ..... All the very best maa.... Eagerly waiting for second part...
 
Top