All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வனிதா கண்ணனின் ‘ ஜி(எ)த்தனின் சஹியிவள்’ - கதை திரி

Status
Not open for further replies.

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 30

அடுத்த நாள் காலை அபிஜித்தை சந்தித்தவள் அவனது முகத்தை பார்க்க அவனது கண்களோ ஒரு சவாலுடன் அவளை பார்த்து கொண்டிருந்தது… அவன் அப்படி பார்ப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்… நேற்று நடந்ததை ஜீவா கூறியிருக்க சஹி தன்னிடம் கேள்வி கேட்பாளா… இல்லை அமைதியாக அதை அப்படியே விட்டுவிடுவாளா… என்ற எதிர்பார்ப்புடன் அவளை அவன் எதிர்கொள்ள அவன் நினைத்த மாதிரி தன்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிடத்தில் போய் அமர இவன் தான் குழம்பி போனான்…

' என்னடா...இவ என்னை சட்டையை பிடிச்சி கேள்வி கேட்பான்னு பார்த்தால் அமைதியா போறா...இவ ரியாக்ஷனே சரியில்லையே… அமைதியின் திருவுருவமா இவ…' அவனது மனதில் இப்படி பல சிந்தனைகள் ஓட அவனது சிந்தனையை கலைக்கும் விதமாக அவனது சட்டை இறுக்கி பிடிக்க பட அவன் அதிர்ச்சியுடன் குனிந்து பார்த்தான்.

பார்த்த மாத்திரத்தில் அவனுக்கு சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டு " எடுடி கையை...சட்டை கசங்குது" சொல்லிக்கொண்டே அவளது கையை தட்டி விட முனைய அவனால் அது முடியாமல் போனது. அவ்வளவு இறுக்கமாக சட்டையை பிடித்திருந்தால் சஹி…

" எதுவா இருந்தாலும் சட்டையிலிருந்து கையை எடுத்துட்டு பேசுடி…" அவன் கெஞ்சலான குரலில் பேச அவனது சட்டையிலிருந்து கையை எடுத்தவள் அடுத்த நொடியே அருகிலிருந்த சோபாவில் அவனை தள்ளியிருக்க அவன் தடுமாறி போய் பின்னர் சரியாக அமர்ந்தான்…

" நான் அமைதியா உன் விஷயத்துல போறாதால நீ இப்படி ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதடி…அப்பறம் என்கிட்ட ரொம்ப கஷ்டப் படுவ…" எச்சரிக்கும் குரலில் கூற அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் சஹி அவனது வாயை பட்டென்று அடித்தாள்.

" இந்த வாய் நான் எப்போ பேச சொல்றேனோ அப்ப தான் பேசனும்.. மீறி பேசுனா பேசுற வாயை கடிச்சிடுவேன்..." கோபத்தோடு கத்தினாள்.

அவனை நிதானமாக பார்த்தவள் " ஆரம்பத்துல இருந்தே நீங்க என்கிட்ட வம்பு வளர்த்துட்டே இருந்தீங்க…ஒரு கட்டத்துல இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சது… ஆனால் எவ்வளவு திருகு தாளம் பண்ண மூடியுமோ அவ்ளோ பண்ணி எங்கப்பாவை ஏமாத்தி, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க… உங்களோட டார்கெட் எங்கப்பாவை பழிவாங்கறதுன்னா என்னை நீங்க பலியாக்கிட்டிங்க… " இதை சொல்லும் போதே அவள் கண்ணில் நீர் வழிய தன் கண்களை இறுக்க மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் பின் அபிஜித்தைப் பார்த்தவள் " இதுக்கு மேலேயும் உங்களுக்கு என்ன வேண்டும்?" சற்று காட்டமாகவே கேட்டாள்.

அவன் உடனே பதிலை சொல்லவில்லை… கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் பின் தன் குரலை செருமிக் கொண்டு " நான் ஏற்கனவே உன்கிட்ட விளக்கம் கொடுத்ததா எனக்கு ஞாபகம்… ஆனால் இதுக்கு மேல நீ என்கிட்ட எதுவும் கேட்க கூடாதுன்னு நினைச்சேன்..நீ ஒன்னும் புரியாத குழந்தை இல்லை..சில விஷயத்தை லேசா கோடிட்டு காட்டுனா அதை வச்சி கெஸ் பண்ணிருப்பன்னு நினைச்சேன்டி…" குற்றம் சாட்டும் குரலில் கூறினான்.

சரி! நீங்க சொல்ற மாதிரி எனக்கு எல்லாம் புரிஞ்சுது தான்.. ஆனால் நான் ஏற்கனவே கெஸ் பண்ணி தான் இருந்தேன். ஆனால் என்னை கடத்துனதும் நீங்க இல்லைனா வேற யாரு?.. இன்னும் அந்த கேள்விக்கு பதில் தெரியலையே! " உதட்டை பிதுக்கி கூறியவள் சட்டென்று நினைவு வந்து " அது...அது… அந்த யோகேஷ் தான்.. ஒரு வேளை என்னை கடத்த சொன்னவன் அவனா தான் இருக்கணும்… " யோசித்து சரியாக சொன்னவளை மனதிற்குள் அவளது கணவன் மெச்சிக் கொண்டான்.

" நீ சொல்றது சரிதான்டி… அதுக்கு காரணம் அவன் தான்… என் மேல
அவனுக்கு உள்ள பகை தான் உன்னை கடத்துனா அது மூலமா என்னை அடிப்பணிய வைக்கலாம்னு பிளான் பண்ணிருக்கான்… அவன் ப்ளான் எனக்கு தெரியும் போது அவனால் நீ கடத்தப்பட்ட … அந்த சமயம் நான் உன்னை தேடிட்டு வரும் போது தான் உன்னைக் கண்டுப்பிடிச்சேன்" சொல்லி முடிக்க அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள் சாஹித்யா…

அவள் அடித்த அடி அவனுக்கு வலிக்க வில்லையென்றாலும் தன் கன்னத்தை தடவிக் கொண்டே " இப்ப எதுக்குடி என்னை அடிச்ச?" கோபமாக கேட்க அவள் சொன்ன பதில் அவனுக்கு குற்ற உணர்வு வந்தது.

" அதென்ன?... வீட்டு ஆம்பளை நீங்க போய் வம்பிழுத்து வருவீங்க… அதுக்கு உங்ககிட்ட மோதாம வீட்டு பெண்களை கடத்தி போய் அவங்களை டார்ச்சர் பண்றது எல்லாம் ஆம்பிளைத்தனமா?... இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்தது நீங்க தானே… அதுக்கு தான் அடிச்சேன்… இதுவரை நீங்க சொன்ன விளக்கம் எல்லாம் போதும்… நான் கிளம்பறேன்…" அவனை தள்ளிவிட்டு போக அபிஜித் " அவ்ளோ தானா... உன் கேள்விகள்? "அந்த'கள்' என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து புருவமுயர்த்த " ஏன்? இல்லை… நிறைய இருக்கு…பாக்கலாம்.. நான் நினைக்கிறதை நீங்க கண்டுபிடிக்கிறிங்களான்னு…" அவள் சவால் விட அவனுக்கு தெரியாதா? தன் மனைவியின் எண்ணம் எதுவென்று… அவள் தன்னிடம் எதிர்பார்க்கும் விஷயம் என்ன? என்று அறியாதவனா… இருந்தாலும் அவளை தன் வழிக்கு கொண்டு வர அருமையான சந்தர்ப்பம் அமைய இதை வாய்ப்பாக கருதினான்…

" சரி டி… நான் சரியா உன் மனசுல உள்ளதை சொல்லிட்டா நீ ஒரு வார்த்தை கூட கேள்வி கேட்காம என் கூட வந்துரணும்… என்ன ஓகேவா" அவளை மாதிரியே சவால் விட சஹியும் ' தான் நினைப்பதை இவன் எப்படியும் சொல்ல மாட்டான் 'என்று மனதினுள் நினைத்து விட்டு அவளும் சம்மதித்தாள்.

" நல்லா கேட்டுக்கோ டி… உன் வீட்டுல நடக்கப் போற நிச்சயத்தார்த்ததுக்கு நான் அமைச்சு தான் நீ வரணுமா? ஒரு பக்கம் உன் அண்ணன் ஒரு பக்கம் உன்னோட நாத்தனார் நிச்சயத்தார்த்ததுக்கு நீ யாரும் கூப்பிடாமலே வரணும்...இதுல வேற மேடம் கோவிச்சிக்கிட்டு இருக்காங்களாம்...போடி...இதை வேற நான் கண்டுபிடிக்கணுமாம்…" பேசிக் கொண்டே தலையில் கொட்டினான்…

தான் நினைத்ததை கூறியவனிடம் தயங்கிக் கொண்டே நின்றவள் பின் அவனிடம் " நான் அப்போ மாப்பிள்ளை வீட்டு சைடா இல்லை பொண்ணு வீட்டு சைடா வரணும்?" புருவமுயர்த்தி அவனைப் போல் கேட்க " நீ ரெண்டு வீட்டு சைடுலயும் வர வேண்டாம்டி…" என்று சாவதானமாக கூற அவனின் கூற்றில் அதிர்ந்தவள் " பின்னே?" அதிர்ச்சி குரலில் கூறியவளின் கையைப் பிடித்து இழுத்தவன் " என்னோட பொண்டாட்டி நீதானே… என் பொண்டாட்டியா வந்தா மட்டும் போதும் டி…" என்று அவளை சமாதானம் செய்தான்.

அவனது கூற்றில் அவள் எவ்வாறு உணர்ந்தாள் என்றே தெரியவில்லை… ஏனெனில் தனது தந்தை செய்த தவறுக்கு அவன் மன்னித்தாலும் அவளை குற்ற உணர்வு தாக்கியது…தன் தந்தை தண்டனையை ஏற்கவில்லை என்று மனசாட்சி அவளை குறை கூறியது… ஆனால் அவள் தனது தந்தைக்கு தண்டனை அவரால் வேதனையை அனுபவித்தவர்களே கொடுக்கட்டும் என்று நினைத்து கங்காவுடன் அமைதி காத்தாள்….

தான் இன்னொருவருக்கு செய்த பாவமும் துரோகமும் தம்மை சரியான நேரத்தில் சரியான விதத்தில் மீண்டு வர முடியாத அளவுக்கு தாக்கும்… காலம் அதற்குரிய கர்மவினை ஆற்றும்… பார்க்கலாம்… மூர்த்திக்கு தண்டனையை காலம் கொடுக்கும்…. தெய்வம் நின்று கொல்லும்… அது அன்றைய பழமொழி... ஆனால் இன்றெல்லாம் தெய்வம் நிர்க்கதியாக நிற்க வைத்து கொல்லும் என்பதே அனுபவரீதியான புதுமொழி.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று அபிஜித் நினைக்க மறுபடியும் அவனது மனையாள் இன்னும் ஒரு கேள்வி கேட்க அவன் பதில் சொல்லாமல் மழுப்ப பார்த்தான்.

"சொல்லுங்க செழியன்! அந்த யோகேஷ் என்ன ஆனான்?" அதிமுக்கிய கேள்வியை கேட்க " அவனைப் பத்தி இப்ப எதுக்கு டி கேட்குற… அவன் என்னவோ ஆகுறான்… விடுடி…" என்று அலுப்பாக கூறினான்… அதற்கு மேல் சஹியும் தூண்டி துருவவில்லை….

ஒருவேளை யோகேஷை பத்தி சொல்லியிருந்தால் சஹி கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருப்பாள்….. யோகேஷை பல்லு பிடுங்கிய பாம்பாக நினைத்திருக்க அவனோ அடிப்பட்ட சிங்கமாகவும் குள்ளநரி தனத்துடனும் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறான்.. என்று இவர்கள் அறியாது போனது தான் காலத்தின் விந்தை…

அபிஜித், தானும் சஹியும் மனம் விட்டு பேசி சமாதானம் ஆனதை போனில் தனது அம்மாவுக்கு தெரிவிக்க அங்கே அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்… சஹியின் மூலம் கங்காவுக்கு தகவல் தெரிவிக்க அது மூர்த்திக்கும் சென்றடைய அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்… ஆனால் கங்காவுக்கு தனது மகளின் வாழ்வு சீரானதை நினைத்து மகிழ்ந்தாள்.

வேலை முடிந்தவுடன் சஹியை தன் வீட்டிற்கு அழைத்து செல்ல அபிஜித் விரும்ப அதற்குள் பார்வதியும் கங்காவும் கலந்து பேசி நல்ல நேரத்தில் சஹியை வீட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். இருவரும் சொன்னதை சஹியிடம் தெரிவித்தவன் அதன்படியே நல்ல நேரம் என அவர்கள் குறித்து குடுத்த நேரத்தில் வீட்டிற்கு இருவரும் வர அவர்களை வாசலிலேயே நாச்சியார் நிற்க சொல்லவும் பின் கங்கா ஆரத்தி கரைத்து அவர்களுக்கு சுற்றிவிட்டு இருவரின் நெற்றியிலும் திலகமிட்டு உள்ளே அழைத்து சென்றாள்…

உள்ளே நுழையும் போதே சஹி கங்காவிடம் " என்னம்மா… ஆரத்தி எல்லாம் எடுக்குறீங்க… " சிறு சிரிப்புடன் கேள்வி கேட்க அவளுக்கான பதிலை நாச்சியார் சொல்ல ஆரம்பித்தார்….

" கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கிட்ட வரப் போகுது… இன்னும் இரண்டு பேரும் வாழவே ஆரம்பிக்கல… இனிமேலாச்சும் இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கத்தான் இந்த திருஷ்டி சுத்தி யார் கண்ணும் உங்க மேல படாம இருக்கணும்னு தான் சுத்துனாங்க… " பதிலளித்து கொண்டிருக்கையிலே அபிஜித் சகஜமாக நாச்சியாரின் எதிர்ப்புறம் சஹி அமர்ந்திருந்த இருக்கையில் அவளுடன் நெருக்கி பிடித்து அமர சஹி கண்களால் சுற்றி இருப்போரை காண்பிக்க அவன் தோளை குலுக்கினான்…

கங்காவும் பார்வதியும் காபி, பக்கோடா எடுத்து வர சமையலறை நோக்கி நகர நாச்சியார் " டேய்! பெர்ரி… அவகிட்ட இருந்து தள்ளி உட்காருடா… இல்லாட்டி உன் ரூமுக்கு போடா.." என்று அதட்ட " சரி…நான் போய் ஃப்ரெஷாகிட்டு வரேன்…" என்று எழுந்தவன் நாச்சியாரின் முன் சஹியின் கன்னத்தில் முத்தமிட சஹி அதிர நாச்சியார் " பெருமாளே!" என்று கண்ணை மூடிக்கொண்டு கத்த அவரது கையை பிடித்தவன் " என் பொண்டாட்டிக்கு நான் முத்தம் கொடுத்தா நீ ஏன் க்ரானி கத்துற.." என்று சிரிப்புடன் அவன் அறைக்குள் நுழைந்தான்…

சஹி அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் வானதி வந்து அமர சஹி அவளை சிறு சிரிப்புடன் நோக்க நாச்சியார் தன் பேத்தியை வாஞ்சையுடன் பார்த்தார்…

வானதியோ அவரை வம்பிழுக்க ஆரம்பிக்க சஹியும் அதை ரசித்து கொண்டிருந்தாள்.

" என்னா! கிழவி… ஆள் கிடைச்சிருச்சின்னு அவங்ககிட்ட வம்பிழுக்கிறியா?"

" போடி… நீ வேணா போய் உன் ஆளு கிட்ட வம்பிழு… யார் வேண்டாம்னு சொன்னது…"

" பாத்தீங்களா அண்ணி ! ஆச்சி சொல்றதை…" என்று அவர்களின் பேச்சில் சஹியை இழுக்க

"இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா" என்று கழண்டு கொண்டாள்…

அதைப் பார்த்த வானதி " கடைசி வரை நீங்க நாத்தனார் கொடுமையை என்கிட்ட அனுபவிக்கல… நான் ரொம்ப வருத்தப்படுறேன் அண்ணி..‌ வருத்தப்படுறேன்…" என்று நடிகர் திலகமாக வருத்தப் பட நாச்சியார் அவளது தலையில் கொட்டி " ஏட்டி என்னா வருத்தப்படுதீக…" கேலிக் குரலில் கேட்டார்..

" இதப்பாரு.. ஆச்சி! ஒன்னு நீ திருநெல்வேலி தமிழ்ல பேசு...இல்லைனா திருச்சி தமிழ்ல பேசு... இப்படி இரண்டும் கலந்து பேசாத" கோபமாக முறுக்கி கொண்டாள்...வானதி.

அவளது தாடையை பிடித்து ஆட்டியவர் " நீ உன் அண்ணிக்கு நாத்தனார்னா அவ உனக்கு நாத்தனார்… ஞாபகம் வச்சுக்கோ.." என்று அவளது தலையை கலைத்து விட அதற்குள்
காபி கொண்டு வர அனைவரும் அமர்ந்து குடிக்க அவ்வாறே நேரம் சென்றது….

அன்றிரவு, சஹி இன்னும் தங்களது அறைக்குள் வராமல் இருக்க கடிகாரத்தை பார்த்த அபிஜித் ' என்ன இவ இன்னும் கீழ் என்ன பண்ணிட்டு இருக்கா… ' என்று சலித்து கொண்டே ஹாலை எட்டிப் பார்க்க அங்கே சஹி, வானதி அறையை நோக்கி சென்று கொண்டிருந்தாள்…

அதைப் பார்த்து அதிர்ந்தவன் விறுவிறுவென அவளை நோக்கி செல்ல நாச்சியாரும் பார்வதியும் அவனது கையை இருபக்கமும் பிடித்துக் கொண்டு " பெர்ரி! கொஞ்ச நாள் சஹி வானதிக்கூட படுத்துக்கட்டும்… " என்று உத்தரவிட அவனோ " என்ன க்ரானி! இதெல்லாம் நல்லாயில்லை… பாத்துக்க…" என் ரூமுல அவப் படுத்தா நான் என்ன வேணாம்னா சொல்லப் போறேன்…" என்று என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் வாயை விட அவனது வாயில் பட்டென அடித்த நாச்சியார் சஹியிடமும் அபிஜித்திடமும் " உங்க இரண்டு பேரோட சாந்தி முகூர்த்தம் நாம எல்லோரும் முதலில் குல தெய்வக் கோயிலுக்கு போயிட்டு அங்க பொங்கல் வச்சி கும்பிட்டதுக்கு அப்பறம் நடக்கட்டும்... பெர்ரி! " தன்மையாக கூற பார்வதியும் அவரது கூற்றை ஏற்று அவர்களைப் பார்க்க இருவரும் சரியென்றனர்…

இருவாரம் கழித்து குல தெய்வ கோயிலுக்கு செல்ல முடிவெடுக்க அதன் பின்னர் அந்த இருவாரமும் நிச்சயதார்த்ததிற்கு தேவையான பட்டுச்சேலைகள், நகைகள் எடுக்க என எல்லோரும் பிஸியாக இருக்க அபிஜித்திற்கு சஹியை பார்ப்பது கூட அரிதாகி போனது…

நொந்து போய் தனது அறைக் கதவை திறந்தவனுக்கு அங்கே சஹி பெட்டில் அமர்ந்திருக்க விரைவாக அவளருகில் சென்றவன் தனது தாபத்தை எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாக அவளது உதடுகளில் காட்ட அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொண்டு அவனது முதுகை தடவினாள்…

" ஒரே வீட்டுக்குள்ள தான் இருக்கோம்... ஆனால் பார்த்தே ரொம்ப நாளாச்சு டி... உனக்கு அப்படி தோணலையா?"

" எது தோணலையா?" என்று அவனது முதுகில் அடித்தவள் " அப்படி தோணுனனால தான் தூங்காம உங்களுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… உங்களுக்கு இருக்குற ஏக்கம் எனக்கு இருக்காதா…" என்று புருவமுயர்த்த " அப்போ... அதைக் காட்டுடி… அந்த ஏக்கம் எந்தளவுக்கு இருக்குன்னு நானும் பாக்குறேன்.." என்று ஆவலாக கேட்க சஹி " அதை நம்ம பர்ஸ்ட் நைட்ல காட்டுறேன்…" என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டு ஓடி விட்டாள்…

குலத் தெய்வ கோவிலுக்கு அபிஜித் குடும்பம், கதிர் குடும்பம், கங்கா மற்றும் ஜீவா குடும்பம் என எல்லோரும் வந்திருந்தனர்…

அங்கே பொங்கலிட்டு வானதி- ஜீவாவின் நிச்சயதார்த்த உடைகள், பத்திரிகைகள் எல்லாவற்றையும் அம்மன் பாதத்தில் வைத்து ஆசி வேண்டிய பின் அபிஜித்- சாஹித்யா, ஜீவா- வானதி என ஜோடியாக அம்மனின் பாதத்தை வணங்கி வீடு திரும்பினர்…

அபிஜித் ஆவலாக எதிர்பார்த்திருந்த சாந்தி முகூர்த்தம் அன்றிரவு நடைபெற இருக்க அவன் முகத்தில் கண்ணுக்கு தெரியாத வெட்கமும் முகம் முழுவதும் வெளிச்சமாகவும் இருக்க ஜீவா தனது மச்சானை வம்பிழுக்க தொடங்கினான்.

"என்னா மச்சி! முகத்துல தௌசண்ட் வால்ட் பல்பு போட்ட போல பளிச்சுன்னு இருக்கு... ஒரே மஜா தான்…" என்று அவர்களுக்கு உரித்தான உரிமைப் பேச்சுடன் கேட்க…

" ஏன்? உனக்கு கல்யாணம் முடிஞ்சா நீ மட்டும் விரதம் இருக்க போறீயா ...என்ன? பாக்கதானே போறேன் மச்சி!" பதிலுக்கு அபிஜித்தும் கிண்டலடித்தான்.

" டேய்… போடா… உன்னை மாதிரி முகத்துல அசடு வழிய நான் காட்டிக்க மாட்டேன்… ஹனிமூன் ஷூட் ஒன்னு எடுத்து அங்க போயிடுவேன்… இதெல்லாம் எல்லாத்து முன்னாடியும் நிம்மதியாக கொண்டாட முடியுமா?" ஜீவா பெருமூச்சு விட்டபடி கூற அபிஜித் " கேட்டுக்கோ வானுக்குட்டி!" என்று ஜீவாவை தேடிவந்த வானதியிடம் கோர்த்து விட்டு கழண்டு கொண்டான்….

இருகைகளையும் தனது இடுப்பில் வைத்து ஜீவாவை முறைத்தவள் " நீங்க தான்... நீங்க தான்... என் அண்ணனை கெடுத்து விடறதா…" அங்கே சண்டை ஒன்று ஆரம்பமாக " அடியே! அவன் அப்படியே பப்பா பாரு...நீ வேற உங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணாதடி… அவன் கேடி பய… உன் மாமன் சின்ன பையன் டி…" என்று பாவமாக முகத்தை வைத்து கொள்ள அவன் கன்னத்தை பிடித்து கிள்ளியவள் " போடா...ப்ராடு…" என்று ஓடிப் போனாள்…

சஹியை கங்கா, வானதி இருவரும் அலங்கரிக்க நாச்சியாரும் பார்வதியும் ஓரமாக நின்றிருந்தனர்…

கங்கா சஹிக்கு பல அறிவுரை தர முகம் சிவக்க கேட்டுக் கொண்டவள் வானதியைப் பார்க்க " நான் எதுவும் கேட்கலப்பா…" என்று தனது காதில் இருந்த பஞ்சைக் காட்டினாள்… அவளது அந்த செய்கையில் கங்கா செல்லமாக " போடி...போக்கிரி" என்று அவளது தலையில் கொட்ட தனது தலையை தடவிக் கொண்டே" பாருங்க...மாமி! எனக்கும் இதுமாதிரி அட்வைஸ் நீங்க பண்ணனும்…" என்று முகத்தை பாவமாக வைக்க அவளது செய்கையில் சஹிக்கு சிரிப்பு பீறிட கங்கா அவளது சேட்டையை ரசித்து கொண்டே அபிஜித் ரூமிற்கு கூட்டிச் சென்றார்….

தனது ஒரு கையில் பால் சொம்புடன் நின்றிருந்தவள் மறு கையில் கதவை தட்டப் போக கதவு தானாக திறந்தது…

அபிஜித் கதவின் ஓரத்திலே நின்றிருக்க சஹிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது…

அவளைப் பார்த்து கண்களை சிமிட்டியவன் அவளது கைகளில் இருந்த சோம்பை வாங்கி மேசையில் வைத்துவிட்டு " என்னடி! தொடங்கலாமா?" என்று சிரிப்புடன் வினவ சஹி முகத்தை தனது சேலையினால் மூடிக் கொண்டாள்….

அவர்களது வாழ்க்கையும் கட்டிலில் மலரத் தொடங்கியது…

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-31

சஹி அபிஜித்திடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் எனக் கூறவும் அவனும் சரியென்றான்…. ஆனால் அவனது மனதிற்குள் ' பேச வேண்டிய நேரமாடி இது….' என்று தன்னையே நொந்து கொண்டு வெளியில் சிரித்தான்…

சிறிது நேரம் பேசியவர்கள் சஹி அவனின் குரலில் தான் பாட்டு கேட்க விரும்புவதாக சொல்ல அவனும் தன் பொண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற பாட ஆரம்பித்தான்.

"ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே…"

அவளை ரசித்துக் கொண்டே பாடியவனை இடையில் நிறுத்த சொன்னவள் " ஏங்க.. தாகம் எடுக்குதுன்னு முன்னாடியே சொல்லலாம்ல… இருங்க… இந்த பால் சொம்பிலிருக்க பாலைக் குடிங்க... தாகம் அடங்கும்…" என்று பாலை நீட்ட அதை வாங்கி பருகியவன் அவளுக்கு கொடுக்க அவள் மிச்சமில்லாமல் குடித்தாள்…

அவள் குடிக்கும் போது அவளது வாயிலிருந்து வழிந்த பாலானது அவளது கழுத்தில் வழிய அவனுக்கு தாபம் அதிகரித்தது…

அவளது தலையை நிமிர்த்தியவன் அவளது இதழ்களை கவ்விக் கொள்ள சஹி அவனது தலைமுடியை இறுக்கி பிடித்து கொண்டாள்…

முத்தம் தந்தவனின் முகத்தை விலக்கியவள் சிறிது மூச்சை விட அவளைப் பார்த்து சிரித்தவன் " என்னடி...இதுக்கே வா... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை…" என்று சொல்லி முடிக்கும் முன்பே அவனின் மேல் பாய்ந்தவள் அவனது உதட்டை கல்விக் கொண்டு உருள அவளை இறுக்கிப் பிடித்தவன் நகர்ந்தவாறே அவளது காது மடல்களை கடித்து சிறு சிறு முத்தமிட்டவாறே அவளது கழுத்துக்கு சென்றவன் அங்கே பல்படாமல் உதடுகளால் கவ்வி பின் அழுத்தமாக நச்சென்று முத்தமிட்டான்...

அவன் இட்ட முத்தங்களால் அவளது முகம் நாணி இமைகள் அழுத்தமாக மூடிக்கொண்டு மோன நிலையிலிருக்க அவளது உடம்பு முழுவதும் அவனது உதடு முத்தமிட்டு கொண்டிருந்தது…

கணவனாய் தம் மனைவி மீது ஆதிக்கம் செலுத்த இருவரது உடலுடன் உயிரும் இணைந்தது….
அவளது சிணுங்கல்கள் எல்லாம் அவனுக்கு போதையூட்ட அவனது முத்தமெல்லாம் அவளை கிளர்ச்சியடையச் செய்தது….

அவளை அவன் ஆட்கொள்ளும் போது வலியில் அவள் முகம் சுருங்க அவளது நிலையை கருத்தில் கொண்டு மெதுவாக கையாண்டும் அவளை முத்தமிட்டும் சமாதான படுத்த தாம்பத்தியத்தில் இருவரும் இருமுறை தேர்ச்சி பெற்று களைப்படைந்து தூங்கும் போது நடுசாமம் ஆனது…..

பெண்ணுக்குள் ஆண்மையும், ஆண்மைக்குள் பெண்மையும் அடங்கும் போது அங்கே தாம்பத்தியம் முற்றுப் பெற்றாலும் வாழ்வு ஆரம்பிக்கிறது… உரிமை, கடமை என அனைத்தும் உணர ஆரம்பிக்கிறது…

அதிகாலையில் சஹி எழுந்து சென்று குளித்து விட்டு பால்கனியில் தலைமுடியை விரிய விட்டு அமர்ந்திருந்த நேரம் அறைக்கதவை பார்வதி தட்ட கதவை திறந்தாள்…

அவளது முகம் சோர்ந்திருந்தாலும் அதையும் மீறி தேஜஸாக இருந்தது… தன் மருமகளின் முகத்தை வைத்து தன் மகனுடன் சந்தோஷமாக வாழ ஆரம்பித்துவிட்டாள் என்று மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்த பார்வதி " இந்தாடா... காபி… குடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழித்து கீழே வா… இன்னிக்கு உங்களுக்கு ஸ்பெஷலா நாங்க விருந்து வைக்கலாம்னு இருக்கோம்… அவன் எந்திரிச்ச உடனே அவனுக்கு காபி கீழே வந்து எடுத்துட்டு போ… இல்லைனா ஒரு குரல் கொடு… வானுக்குட்டியை வந்து தரச் சொல்றேன்… " என்று கூறியவர் அவள் காபி குடித்து முடித்த டம்ப்ளரை வாங்க சஹியோ மறுத்தாள்…

" இதுல என்னடா இருக்கு...தா… " என்று அவளது கையிலிருந்து டம்ப்ளரை வாங்கிக் கொண்டு கீழே சென்றார்…

இதையெல்லாம் தலைக்கு ஒரு கை முட்டு குடுத்து ஒரு பக்கமாக படுத்து கொண்டு அபிஜித் பார்க்க கீழே பார்வதி செல்வதை பார்த்திருந்த சஹி திரும்பிய நேரம் சட்டென்று அவளருகில் நின்றுக் கொண்டிருந்தவன் மேல் மோத அவளது முகத்தில் கலக்கம் வந்தது…

" சாரி!சாரி! நான் தெரியாம இடிச்சிட்டேன்… சாரி ! நான் நீங்க நின்றதை கவனிக்கல…" சற்று பதட்டத்துடன் பேசியவளை அமைதியாக பார்த்திருந்தவன் " ஹே ரிலாக்ஸ்டி… நான் ஒன்னும் சொல்லலயே… என் மேல தான் டி தப்பு…" என்று தன் மீது தவறு என ஒத்துக் கொள்ளும் கணவனை ஆச்சர்யமாக பார்க்க அவளது வியப்பை பார்த்தவன் புருவம் உயர்த்தி " என்னடி! ஏதோ அதிசயத்தை பார்க்கிற மாதிரி பார்க்குற…" என்று கேள்வி கேட்க சஹி " இல்லை.. ஒரு தடவை லைட்டா காபி கொட்டினதுக்கே என் மண்டையை உடைச்சிங்க…" தன் போக்கில் கூறிக்கொண்டே சென்றவள் அவன் முகம் மாறுவதை கண்டு தன் பேச்சை நிறுத்தினாள்.

" என்னாச்சுங்க… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.."

" ஐ ஆம் ரியலி சாரி டி… நான் அந்த சமயத்தில் கொஞ்சம் ஓவராவே உன்னை ஹேர்ட் பண்ணிட்டேன் போல…" மன வருத்தத்துடன் பேசியவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்…

அவளது கழுத்துவாக்கில் அவன் முகம் புதைத்து " நாம என்ன தப்பு செஞ்சிருக்கோம்னு நம்மால் பாதிக்கப்பட்டவங்க வந்து சொல்றவரை யாருக்கும் தெரியாது.. தெரிஞ்சும் தப்பு பண்றவங்க இருக்காங்க... தெரியாமல் தப்பு பண்றவங்களும் இருக்காங்க… ஆனால் நான் இதுல எதுலையும் சேர்த்தி இல்லைடி… நான் தப்பு செஞ்சிட்டு பின்னாடி அதுக்காக மனம் வருத்தப்படுற கேட்டகிரில இருக்கேன் டி…" என்று கூறியவன் அமைதியாக இருந்தான்….

அவனது அமைதி அவளுக்கு ஏதோ மாதிரி இருக்க அவனை சகஜமாக்கும் பொருட்டு " ஏனுங்க மாமா! இதுதான் சாக்குன்னு என் மேல சாஞ்சிக்கிட்டே நின்னா கன்ஸ்ட்ரக்ஷன் போற ஐடியா இருக்கா? இல்லையா" என்று அவனது பிடரியை பிடித்து இழுக்க அவன் இன்னும் இறுக்கமாக அவளை அணைத்து கொண்டு " இன்னிக்கு நான் லீவு… இங்கே இருந்தே நான் வேலையை பாத்துக்கிறேன்… போடி…" கூறியவனின் முகத்தை நிமிர்த்தியவள் " ஓஹோ! வொர்க் ஃப்ரம் ஹோமா...அப்ப சரி! " என்று அவனிலிருந்து பிரிந்தவள் கீழே செல்லப் போக " சீக்கிரம் காபி தாடி… வேலை நிறைய இருக்கு.." என்று விஷமமாக கூற அவனது கூற்றில் அவளுக்கு வெட்கம் வர ஓடி விட்டாள்….

அன்றைய தினம் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்…


ஜீவா- வானதி இருவரின் நிச்சயதார்த்தம் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருநெல்வேலியில் நடைபெற அங்கே சஹியிடம் கூடியிருந்த சொந்தங்கள் " நீ மாப்பிள்ளை வீடா, பொண்ணு வீடா " என்று வம்பிழுக்க அவர்களின் கேள்வியில் சுற்றியுள்ளவர்கள் மேலும் வம்பிழுக்க நினைக்க அதற்குள் இதையெல்லாம் கவனித்த அபிஜித் அவளருகில் வந்தவன் அவளது தோளின் மீது கையைப் போட்டு கொண்டு " ஹ்ம் இரண்டு வீட்டுக்கும் பொதுவானவ…" என்று கூறி சிரித்தவன் அவர்களிடமிருந்து தன் மனைவியை கையோடு கூட்டிக் கொண்டு மேடையில் ஏறினான்….

சஹி, மருமகளாக,வானதியின் அண்ணியாக, ஜீவாவின் தங்கச்சியாக என இரு வீட்டார் சைடிலும் ஓடி ஆடி வேலைப் பார்க்க அவளை கங்கா வியந்து பார்த்தார்… தன் மகள் தன் வீட்டில் சிறு துரும்பை கூட அசைக்காதவள் இங்கு நடைபெறும் எல்லாம் வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு செய்ய அவளை நினைத்து அவர் மனம் பெருமிதம் கொண்டது… மூர்த்தி இதை பொருமலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடத்த முடிவு செய்ய நாட்கள் இறக்கை கட்டி கொண்டு பறந்தது…

சஹியை வேலையிலிருந்து விடுவித்து அவளுக்கு போட்ட வேலை ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அவளிடம் அதைக் கூற அவள் "ஹ்க்கும்… இதை நீங்க முன்னாடியே செஞ்சிருக்கலாமே.." என்று நொடித்துக் கொள்ள " எல்லாம் காரணமா தான் டி…" அவளை போலவே அவனும் நொடித்து காட்ட அவளுக்கு அது அழகாக தெரிய அவனது கன்னம் பிடித்துக் கொஞ்சினாள்….

ஒரு மாலைப் பொழுதில் சஹி தன் அம்மாவிற்கு போன் செய்து நடந்ததை விவரமாக கூறிக் கொண்டே தன் கையிலிருந்த காபியை அருந்த கங்கா வெறும் 'ஹ்ம்' கொட்டிக் கொண்டே அமைதியாக கேட்டுக் கொண்டார்…

ஒரு மாதம் ஆன நிலையில் வானதி-ஜீவா திருமணம் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற முக்கிய சொந்த பந்தங்கள் மட்டும் கலந்து கொண்டனர்…

அன்று மாலையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்களது ரிஷப்ஷன் நடைபெற அபிஜித் மற்றும் கபிலன் ஒரு பக்கம் வந்தவர்களை வரவேற்க மறுபக்கம் ஈஸ்வரன் மற்றும் மூர்த்தி விருந்து நடைபெறும் இடத்தில் வந்தவர்களை உபசரிக்க எல்லாம் சுமுகமாக போய் கொண்டு இருந்தது….

சஹி, பார்வதி, நாச்சியார், கங்கா என்று அனைவரும் கீழே அமர்ந்திருக்க சஹிக்கு ப்ரைவேட் நம்பரிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது… அவள் அதை கண்டு கொள்ளாமலிருக்கவும் தொடர்ச்சியாக மெசேஜ் அந்த நம்பரிலிருந்து வர அதை திறந்து பார்க்க ' உடனே ரெஸ்ட் ரூம் வரவும்... உனக்காக ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது…' என்று மூணு தடவை அனுப்பிருக்க சஹி, பார்வதியிடம் ரெஸ்ட் ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றாள்…

அந்த இடமே கும்மிருட்டாக இருக்க சஹி யோசனையுடன் ரெஸ்ட் ரூமின் முன்னே நின்றிருக்க மாஸ்க் அணிந்திருந்த மூணு பேர் அவள் இரண்டு கைகளையும் பிடித்து கொள்ள இன்னொருவன் அவளது தலையில் கையை வைக்க போகும் நேரம் அந்த நேரத்தில் சரியாக லைட் எரிய அங்கே அபிஜித் நின்றிருந்தான்…

அவனைக் கண்டதும் சஹி ஆசுவாசமடைந்தாலும் அவளது தலையில் கை வைக்க போனவன் அவள் தலையில் இரண்டு கொட்டு விட சஹி அலற மீதிருந்த இருவரும் அவளது தலையை பதம் பார்த்திருந்தனர்.

அபிஜித் பதறிப் போய் சஹி அருகில் வர அவனை கையை நீட்டி தடுத்து நிறுத்தியவர்கள் தங்களது மாஸ்க்கை கழட்ட அங்கே சிரிப்புடன் விஷான், தாரிணி, பிரியா மூவரும் நின்றிருந்தனர்….

சஹி மூவரையும் ஆத்திரத்துடன் அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கே கொடுக்க அங்கே சிரிப்பும் சண்டையும் நடந்தது…

"ஏன் டி... எங்களை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா... இல்லை யா?... அண்ணன் எங்களை ஞாபகம் வைச்சு கூப்பிட்டதால தான் நாங்க வந்தோம்… உனக்கு எங்களை கூப்பிடனும்னு தோணல தானே… " என்று மூவரும் கோபித்துக் கொள்ள சஹி குற்ற உணர்ச்சியில் தலைக் குனிய அவளது தலையை நிமிர்த்திய அபிஜித் அவளது தோளில் கையைப் போட்டு " ஏன்… அவ கூப்பிட்டா தான் வர்ற ஐடியால இருந்தீங்களா… நானென்றால் அவள்...அவளென்றால் நான்… சோ அவ கூப்பிட்டு தான் நீங்க வந்துருக்கீங்க… " என்று அவர்களை தன் பேச்சால் மடக்கியும் தன்னவளை விட்டு கொடுக்காமல் பேசினான்….

நட்புகள் நீண்ட நாளுக்கு பின் சந்தித்து கொள்வதால் அனைவரும் கடைசி பந்தியில் உணவருந்தி விட்டு செல்ஃபி என நட்புகள் அதகளம் செய்தனர். சஹி இன்று தங்களது வீட்டில் தங்குமாறு நட்புகளை அழைப்பு விடுக்க மறுக்காமல் அவர்களும் தங்கினர்.

ஜீவா-வானதியின் சாந்தி முகூர்த்தத்திற்கு தனி வீடு ஏற்பாடு பண்ணிவிட்டு அபிஜித் வீட்டிலேயே மற்ற அனைவரும் தங்க மூர்த்தி-கங்கா மட்டும் அவர்களது வீட்டில் தங்கினர்.

நட்புகள் பன்னிரெண்டு மணி தாண்டியும் பேசிக்கொண்டும்‌ ஒருவர் மற்றவரை கேலியும் கிண்டலும் செய்துக் கொண்டிருக்க அபிஜித் தனது அறையில் லாப்டாப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தான்… சஹியின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்தவன் அவளை காணாது தேடி வந்தவன் அங்கே நட்புகள் அடிதடியுமாய் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு ' இன்னிக்கு நாம தலையணையை கட்டிப் பிடிச்சிட்டு தான் படுக்கணும் போல ' மனதினுள் எண்ணியவன் அமைதியாக தனது அறைக்கு சென்று கதவை சாத்த எண்ணி கதவில் கையை வைக்க அவனது கை மீது கை வைத்து சஹி அதை தடுத்தாள்.

ஆச்சர்யத்துடன் தன் மீது படிந்த அவளது மிருதுவான விரல்களை பார்த்தவன் அப்படியே அவளின் முகத்தை பார்க்க அவள் கண்களில் நாணம் வந்தது… அதைக் கண்டு அவன் கண்கள் மின்னியது…

" என்னடி… ஃப்ரெண்ட்ஸை பார்த்ததும் தூக்கம் கூட தூர போயிருச்சு போல… என்னைக் கூட கண்டுக்காம அரட்டை அடிச்சிட்டு இருக்க" பேச்சில் ஏக்கமும் பொறாமையும் சரிவிகிதமாக இருக்க சஹி சிரிப்புடன் அவனைப் பார்க்க

" ஹ்ம்…இருக்காதா பின்ன? எவ்ளோ நாள் கழிச்சு பார்க்குறோம்? இப்படி எல்லாம் அரட்டை அடிச்சி எவ்ளோ நாள் ஆச்சு…" சொல்லும் போதே அவளது முகம் ஜொலித்தது…

" ஏன் டி … இதுதான் சாக்குன்னு ஃப்ரெண்ட்ஸை பாத்தீயே... இங்கே ஒரு அப்பாவி புருஷனை தனியா விட்டுட்டு போனீயே... நான் எப்படி தனியா தூங்குவேன்… எனக்கு பயமா இருக்காதா…" கண்ணை சுருக்கி விரித்தான்.

" ஹ்க்கும்… நீங்க பயந்து நடுங்கிட்டு இருப்பீங்கன்னு தான் உங்களுக்கு துணைக்கு இருக்க வந்தேன்... மாம்ஸ்" அவளும் அடக்கப்பட்ட சிரிப்புடன் கண்ணை பெரிதாக விரித்து நாக்கை வெளியே நீட்டி கூற இருவரும் சிரித்துவிட சஹி கட்டிலில் ஒரு பக்கமாக படுக்க அபிஜித் மறுபக்கம் படுத்தவன் அவளது கழுத்து வளைவில் முகம் பதித்துக் கொண்டு " இன்னிக்கு திரும்பவும் பர்ஸ்ட் நைட் கொண்டாடலாம்னு இருந்தேன் டி…" பெருமூச்சு விட்டுக்கொண்டான்…

அவனது மூச்சுக் காற்றில் சிலிர்த்தவள் " நீங்க சொல்லிருக்கலாம்ல இது மாதிரி ப்ளான்ல இருக்கேன்னு… சாரி! " மன்னிப்பு வேண்டியவளை இறுக்கி அணைத்தவன் " ச்ச...ச்ச… நான் ஒரு இன்பர்மேஷன் தான் டி சொன்னேன்… நமக்கான நேரம் நிறையவே இருக்கு... ஆனால் நட்புகளுக்கு நேரம் ஒதுக்க திருமணமான பெண்களுக்கு வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் அமையாது...கிடைக்கிறப்பவே அனுபவிக்கனும்... தூங்கு…. நாளைக்கு பார்த்துக்கலாம்... உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் தூங்கிட்டாங்களா?" என்று விசாரிக்க சஹி அதற்கு பதிலளிக்க அவனது கையணைப்பிலே இருவரும் தூங்க தொடங்கினர்….

மறுநாள் நேரம் கழித்து எழுந்த சஹி குளித்து முடித்து பூஜையறையில் விளக்கேற்றிய பின் அனைவருக்கும் காபி கலந்து கொடுத்தாள்… ஒவ்வொருவராக அறையிலிருந்து வெளிவர சஹி தன் கணவனை தேடி அறைக்கு சென்றவள் அங்கே முகம் துடைத்து கொண்டிருந்தவனின் முகத்தில் முத்தமிட விலுக்கென்று அவளது முகம் முழுவதும் முத்தமிட இருவருக்கும் மூச்சு வாங்கியது…

" என்னடி… காலையிலேயே செம்ம பார்ம்ல இருக்க போல…" கண்ணடித்து சிரிக்க " அச்சோ! நான் ஒன்னும் பண்ணல… சும்மா தான் முகத்தை வச்சேன்" என்று இழுத்தவளை இறுக்கி கட்டிக் கொண்டான்…

" சமாளிப்பு நல்லா தான் இருக்கு டி…" என்று நக்கலடிக்க அவனை இரண்டடி அடித்தவள் " சீக்கிரம் ரெடியாகி வாங்க...வானதியை பாக்க போகணும்…" என்று கட்டளையிட்டு கீழே சென்றாள்.

சஹி தனது அறையில் இருக்கும் நேரம் அபிஜித் வெளியே சென்றிருந்தான். அந்த நேரத்தில் மூர்த்தி கால் செய்ய அவர் சொன்ன விஷயத்தை காதில் வாங்கியவளுக்கு மறுபடியும் தனது அப்பா ஏதேனும் தவறு செய்யப் போகிறாரா என்று தவிப்பாக இருந்தது…

மனம் அமைதியடையாது தந்தை சொன்ன விஷயத்திலிருக்க அறைக்குள் நுழைந்த அபிஜித் தை கூட கண்டு கொள்ளாமல் சிந்தனையில் உழன்றாள்.

சிறிது நேரம் சிந்தித்தவள் எப்போதென்றாலும் தெரிந்து தான் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அபிஜித்திற்கு போன் செய்ய அவனோ போனை எடுக்காமல் பிஸி என மெசேஜ் அனுப்பினான்.

அவனது நிலையை புரிந்து கொண்டு இரவு அவனிடம் தந்தை தன்னிடம் சொன்ன விஷயத்தை எவ்வாறு சொல்வது என மனதில் ஓட்டிப் பார்த்தவள் இரவு பத்து மணிக்கு அவன் வரவும் அவனுக்கு உணவை பரிமாற அவனுடன் அவளும் உண்டு விட்டு இடத்தை சுத்தம் செய்து விட்டு வந்தாள்.

சஹி அறையின் உள்ளே நுழைய அவளைக் கண்டதும் அவளின் கையைப் பிடித்து கொண்டு " சாரி டி… நிறைய வொர்க் பெண்டிங்ல இருக்குது...அது முடியும்வரை என்னால யார்க்கிட்டேயும் பேச முடியாது… அதுதான் போனை அட்டெண்ட் பண்ண முடியல…" என்று கூறியவன் அவளது கோபத்தை எதிர்பார்த்திருக்க அங்கே அவளது முகம் குழம்பிப் போய் இருந்ததைக் கண்டவன் " என்னடி ஆச்சு… எதுவும் பிரச்சனையா…" என்று அவளது கண்களைப் பார்த்து கேட்டான்…

" அ...து...அது…" என்று சஹி இழுக்க

" எதுவா இருந்தாலும் சொல்லுடி…"

" அப்பா கால் பண்ணாரு...காலையில…" விஷயத்தை போட்டுடைக்க அவனோ நிதானமாக " என்னவாம் உன் அப்பனுக்கு…"என்று சாதாரணமாக வினவ

" அப்பா… அவரோட கன்ஸ்ட்ரக்ஷனை எல்லாம் என் பேருக்கு மாத்துறாராம்… இனி நான் தான் கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி… அதனால அவர் கூட வொர்க் பண்ண சொல்றாரு.." என்று முகத்தில் பயத்துடன் சொல்ல அவள் சொன்னதைக் கேட்டு கொண்டவன் " அதுக்கு நீ என்ன சொன்ன" கேள்வி சாதாரணமாக இருந்தாலும் அவனது விழிகள் அவளைத் துளைத்தது.

" நான் உங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேன் னு சொன்னேன்… அப்பா.. சரின்னு சொல்லிட்டு வச்சிட்டார்... இப்ப நான் என்ன பண்ண…" அவளது குழப்பத்தை அவள் தலையில் தூக்கி வைத்தாள்.

அவளுக்கு தான் இந்த விஷயத்தில் மனக் குழப்பமாய் இருந்தது...அவனுக்கோ பதில் சட்டென்று வந்தது…

" அதனால் என்ன சஹி… நான் தான் என்னோட அக்ரீமெண்ட்டை கேன்சல் பண்ணிட்டேன் ல... உனக்கு ஓகே னா நீ போ... இதுக்கு எதுக்கு என்கிட்ட திணறிக்கிட்டு சொல்ற…" இலகுவாக அவளது குழப்பத்தை விரட்டியவனை அவள் வியப்பாக பார்த்தாள்.

"வாவ்! சூப்பரு....மாம்ஸ்… நான் இதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு ரொம்ப பயத்துல குழம்பிப் போய் இருந்தேன்… நான் எங்கப்பா கன்ஸ்ட்ரக்ஷனில வேலைப் பார்க்க நீங்க ஒத்துக்குவீங்களோ...இல்லையோன்னு.." என்று குதுகலமான குரலில் கூறியவளின் தாடையைப் பிடித்தவன் " அது உன் இஷ்டம் சஹி...இதுல நான் தலையிட விரும்பல… அதுபோல உங்கப்பாவுக்கு அடுத்து அதை நிர்வாகம் பண்ணப் போனது நீதான்… உன் முடிவு ... உன் கையில் தான் எப்போவும் கொடுப்பேன்... நீயும் அதை ஃபாலோ பண்ணுடி.." கூறிக்கொண்டே அருகிலிருந்த தண்ணீரை பருகியவனை இவள் கண்களால் பருகினாள்.

" நிஜமா உங்களுக்கு கோபம் இல்லையா?" சந்தேகமாக மறுபடியும் அவள் கேட்க அபிஜித் சிரித்துக் கொண்டே " இங்கே வாடி…" என அழைத்து அவளது தோளை சுற்றி கைகளைப் போட்டவன் நேராக பார்த்து " நான் சம்பாதிக்கிறது என் பிள்ளைகளுக்கு எப்படி உரிமையான ஒன்றோ, அதே மாதிரி உங்கப்பாவும் நினைச்சிருக்கலாம்…ஓகே வா… நாளைக்கு போய் உங்கப்பா கிட்ட பேசிட்டு வா... ஆனால் இது எதுலயும் நான் தலையிட மாட்டேன்… தொழிலை பொறுத்தவரை மூர்த்தி எனக்கு எதிரி தான்… தொழிலில் சொந்த பந்தம் பற்றியெல்லாம் நான் பார்க்கமாட்டேன்… வெற்றி மட்டுமே என்னோட குறிக்கோளா இருக்கும்… சரியா?..." அவளுக்கு அமைதியாக எடுத்துரைக்க அவள் தலையாட்டி ஒத்துக் கொண்டாள்.

சஹி இப்போது மூர்த்தியின் கன்ஸ்ட்ரக்ஷனிலேயே எம்.டி ஆக இருந்தாலும் அவளுக்கு அபிஜித் வேலை சொல்லி பழக்கிய பழக்கத்தில் வேலையை விறுவிறுப்பாக முடிக்க மூர்த்தியே அவளது வேலை செய்யும் பாங்கை கண்டு வியந்து விட்டு மகிழ்ச்சியுடன் அதைக் கங்கா விடம் பெருமையாக சொன்னார்… கங்காவிற்கும் தன் மகளின் திறமையைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தாலும் அதை வெளிக் காட்டவில்லை….

சஹி மூர்த்தியின் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் சென்றிருக்கும் நிலையில் அரசாங்க சம்பந்தப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தங்களுக்கு இடையிலான டெண்டர் ஒன்றை அறிவிக்க அந்த டெண்டர் தங்களது கைக்கு கிடைக்க போட்டி போட்டு கொண்டிருந்தனர்…

டெண்டருக்கு உரிய ப்ளானை சஹியே தயாரித்து அதற்கான அமௌண்ட் முதல் கொண்டு கோட் பண்ணி பக்காவாக தயாரித்திருந்தாள்.. இது அவளது திறமையைக் காட்ட அருமையான சந்தர்ப்பமாக அமைய தன் உழைப்பை எல்லாம் இதில் இறக்கியிருந்தாள்…

மறுநாள் கலெக்டர் அலுவலகத்தில் டெண்டருக்கு அப்ளை செய்தவர்கள் அனைவரும் அமர்ந்திருக்க அபிஜித் வலதுபுறம் நடுவிலும் அவனுக்கு பக்கத்தில் கதிரும் அமர சஹி இடதுபுறமாக மூர்த்திக்கு அருகிலும் அமர்ந்திருந்தனர்.

அபிஜித் ஆவலாக அவளைக் காண சஹி டென்ஷனாக முகத்தில் வியர்வைப் பூக்க அமர்ந்திருக்க அதைக் கண்டு அவன் முகம் மாறும் தருணம் சஹி எதேச்சையாக நிமிர்ந்து பார்க்க அங்கே கணவன் தன்னை துளைக்கும் பார்வை பார்ப்பதைக் கண்டு கண் சிமிட்ட அவன் கண்கள் மின்னியது….

டெண்டரின் முடிவில் சஹி கோட் செய்த அமௌண்டுக்கே அந்த டெண்டர் கிடைத்து விட மூர்த்தி கர்வமாக அபிஜித்தை பார்க்க அதைக் கண்டு கொள்ளாமல் முகத்தில் மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த கலவையாக நின்றிருந்தவளை நோக்கி சென்றவன் " கங்கிராட்ஸ் மிஸஸ்.அபிஜித்" கையைக் குலுக்கி விட்டு திரும்பியவனை மூர்த்தி நக்கலாக பார்த்து விட்டு "சிங்கம் சிறு முயல்கிட்ட தோத்துருச்சே…அச்சோ...பாவமா ச்சே... சிங்கம் இப்ப அசிங்கப்பட்டுச்சே…" குரலில் ஏகத்துக்கும் கிண்டல் வழிந்தாலும் அவனை தோற்கடித்த நிலையில் வன்மமாய் சிரித்தார்….

ஆனால் அவரது பேச்சோ சிரிப்போ அவனைப் பாதிக்கவில்லை என்று காதைக் குடைந்தவன் " ஆல் இஸ் வெல் தட் எண்ட்ஸ் வெல்… பழமொழி கேள்வி பட்டது இல்லையா மாமனாரே…" என்று அழுத்தமாக கேட்க மூர்த்தி புரியாமல் " என்ன அப்படி உனக்கு நல்லதா முடிஞ்சதுனு கதையளக்கிற…" தன் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் தத்துவம் பேசியவனைக் கண்டு பல்லைக் கடிக்க அவருக்கு புரியாததை விளக்கலானான்.

" நீங்க சொன்ன மாதிரி சிறு முயல் கிட்ட தான் சிங்கம் தோத்துருச்சு… ஆனால் அந்த தோல்வியையும் இந்த அபிஜித் வெற்றியா தான் பார்ப்பான்… ஏன் என்றால் ஜெயிச்சது என்னோட பொண்டாட்டிங்கும் போது அவளோட வெற்றி எனக்கும் வெற்றி தான்...வரட்டா…" என்று கையாட்டி விட்டு சஹியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான்…

சஹிக்கு தன் தந்தை கணவனிடம் அவ்வாறு நடந்துக் கொண்டது பிடிக்காமல் போக எதுவும் பேசாமல் காரில் ஏறிக் கொண்டாள்….

அன்று மாலை சற்று சீக்கிரமாகவே தன் தந்தையிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பும் நேரம் மழைத் தூறலாக விழ அதை ரசித்து கொண்டே வீட்டிற்கு வந்தாள்… வந்தவளுக்கு பார்வதி சூடான டீ மற்றும் பக்கோடா என எடுத்து வர " தாங்க்ஸ் அத்தை…" என்று வாங்கி கொண்டு அறைக்கு சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவள் முகம் கழுவி தன்னை சுத்தப்படுத்திவிட்டு வெளியே வர ஃப்ரெஷ்ஷாக உணர்ந்தாள்…

இரவு உணவு பார்வதியுடன் தயாரித்து கொண்டிருந்தவளை அபிஜித் வீட்டினுள் நுழையும் போதே பார்த்துக்கொண்டு அறைக்குள் செல்ல ஹாலில் அமர்ந்திருந்த நாச்சியார் " பெர்ரி! வந்துட்டான்… சாப்பிட அவனைக் கூட்டிட்டு வா…" அவரின் கட்டளையில் அவனை சாப்பிட அழைக்க படிகளில் ஏற அவனோ படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தான்.

" சாரி! நீங்க வந்தப்ப கவனிக்கல... வாங்க சாப்பிடலாம்…" என்றழைக்க மறு பேச்சின்றி அனைவருடனும் சாப்பிட அமர சஹி பரிமாற அவனருகில் வர அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவின் மணம் அவன் நாசியை நிறைக்க அதன் வாசனையை உள்ளிழுத்தவன் சாப்பிட்டு விட்டு சஹிக்கு தட்டை எடுத்து பரிமாறி விட்டு மாடியேறினான்.

இன்று நடந்த களேபரத்தில் சஹிக்கு மாடியேற தயக்கமாக இருக்க தன் கணவனின் மனநிலை எவ்வாறு இருக்குமோ என்று மனம் பயத்தில் அறைக்குள் நுழைய " வாங்க மேடம்...என்னை ஜெயிச்சிட்டு இப்படி ஸ்லோவா வர்றீங்க… வாழ்த்துகள் மேடம்…" என்று அவளது கையை பிடித்து குலுக்க அவள் " உங்களை நான் ஜெயிக்கணும்னு நினைக்கல.." என்று அழாத குறையாக சொல்ல
" சரி! நீ ஜெயிச்சதுக்கு நீ ட்ரீட் கொடுடி…" சாதாரணமாக வினவ அவள் " இப்பவா.. இப்ப எப்படி ட்ரீட் கொடுக்க முடியும்.." வாயைப் பிளக்க " சரி… அப்போ நான் பரிசு தர்றேன்…." என்று கூறியவாறே அவளது வயிற்றில் அவனது வாரிசுக்கு அச்சாரமிட்டான்….

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர்

வேலைகள் எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறன என்பதை அறிய சஹி மூர்த்தியுடன் வேலை நடைபெறும் இடத்திற்கு மேற்பார்வையிட அங்கே நின்றிருந்த யோகேஷை அதிர்ச்சியுடன் பார்த்தாள். ஆனால் அவனோ கேஷூவலாக மூர்த்தியின் அருகில் வந்து நின்றுகொண்டு திமிராக அவளைப் பார்த்தான்.

அவனது திமிரான பார்வை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல சஹிக்கு எரிச்சலோடு கோபமும் வர மூர்த்தியிடம் அதைக் காட்டினாள்…

" வாட் இஸ் திஸ் டாடி.. இவன் கூட இன்னும் கான்டெக்ட்ல தான் இருக்கீங்களா? ஹவ் இஸ் திஸ் பாஸிபிள்?... " படபடவென பொரியும் கடுகு போல வெடிக்க அவளை மூர்த்தி சங்கடமாகவும் யோகேஷ் சுவாரசியமாகவும் பார்த்தனர்.

யோகேஷிடம் மூர்த்தி " எக்ஸ்கியூஸ் மீ… " என்று சொல்லிவிட்டு அவளது கையைப் பற்றி அறைக்குள் அழைத்துச் சென்றவர் பதட்டத்துடன் " இங்கே பாரு சஹி… யோகேஷை என்னால அவாய்ட் பண்ண முடியாது.. புரிஞ்சிக்க…" குரலில் கடுமையுடன் கூற சஹி " ஏன்?" சுருக்கமாக ஒற்றை வார்த்தையில் கேள்வி கேட்க பதில் சொல்லும் நிலையில் மூர்த்தி இல்லை…

" சொல்லுங்க டாடி… என்னை எம்.டி. யா ஆக்குனது எதுக்காக? அதுக்கும் இந்த யோகேஷ் தான் காரணமா?" கேள்வி மேல் கேள்வி கேட்க மூர்த்தி அவளை அதட்ட வாய் திறக்கையில் யோகேஷ் அவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு வந்து " ஹ்ம்.. நான் சொல்லட்டுமா டியர்…" என்று நக்கலாக கேட்க

" ஹே! லுக்… மைண்ட் யுவர் பிஸ்னஸ்… கால் மீ மேம்… டியர், டீரு ன்னு சொல்ற வேலையெல்லாம் வச்சிக்காத…" வார்த்தைகள் கடுமையாக வந்தது… யோகேஷூக்கு அவளது வார்த்தைகளில் முகம் கருத்தது…

" ஆங்...அது எப்படி முடியும்… நான் நினைச்சா இப்பவே இந்த டெண்டரை கேன்சல் பண்ண முடியும்… அப்பறம் அதை நினைச்சு நீ கவலைப் படுவீயே.. அதுக்காக தான் அமைதியா இருக்கேன்…" தெனாவட்டாக மூர்த்தி மற்றும் சஹியை பார்த்துக் கொண்டே கூறினான்…

" உன்னால முடிஞ்சா பாருடா… இந்த பூச்சாண்டி காட்டுற வேளையெல்லாம் என்கிட்ட வேணாம்… நீ எங்கப்பாவுக்கு தான் பெரிய ஆளா இருக்க... எனக்கு இல்லை… அதோட திறமை இருந்தால் வாய்ப்பு கண்டிப்பா அமையும்… நான் கிளம்பறேன் டாடி…"என்று அந்த இடத்தை விட்டு நகர மூர்த்தி அவளை கலக்கத்துடன் பார்க்க யோகேஷ் அவளின் அந்த திமிரை அடக்கும் வழியை யோசித்துக் கொண்டிருந்தான்.
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர்-2
" வாங்க அபிஜித்...சாஹித்யா மேடத்தை இப்ப தான் செக் பண்ணேன்… அது இந்த டைம்ல வர மயக்கம் தான்…" என்று புதிர் போட அவன் இருந்த மனநிலையில் குழம்பி போனான்.

" நீங்க உங்க வொய்ப் கிட்ட போய் கேளுங்க...அவங்களே சொல்ல வெய்ட் பண்றாங்க.. " சிரித்து கொண்டே சொல்ல அவன் மனதிலோ ' நீங்க தானே டாக்டர்...அவளை சொல்ல சொல்றீங்க…' மைண்ட் வாய்ஸில் கூறிக் கொண்டே சஹியை நோக்கி செல்ல அவள் முகம் அசதியாக இருந்தாலும் அதையும் தாண்டி மின்னியது.

அவளது அறையை திறந்தவன் உள்ளே நுழையும் போதே அவனைக் கண்டு மெதுவாக எழுந்தவள் அவனை நோக்கி கையை நீட்ட அதைப் பற்றிக் கொண்டு அவளது நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்.

" என்னடி… டாக்டர் உனக்கு என்ன ஆச்சுன்னு அவங்க சொல்லாம உன்கிட்ட கேட்க சொல்றாங்க… உடம்புக்கு எதும் பண்ணுதா…" என்றவனின் குரலில் சற்று பயம் தெரிந்தது…

" ஆமா.. ரொம்ப டையர்டா இருக்கு.."

" காலையில சாப்பிடாம கிளம்புனது தான்டி காரணம்... இன்னிக்கு நடந்த கலவரத்துல டையர்டா தான் இருக்கும்… இரு நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரேன்...அதை குடி கொஞ்சம் தெம்பா இருக்கும்…" கூறிக் கொண்டே எழுந்தவனை எழ விடாமல் இறுக்கிப் பிடித்தவள் அவனது முகத்தை பார்க்க அவன் கண்ணில் கேள்வியுடன் புருவம் உயர்த்தி பார்த்தான்.

" இந்த டையர்டுக்கு காரணம் நீங்க தான் மிஸ்டர்.செழியன்" பீடிகையுடன் விஷயத்தை சொல்ல ஆரம்பிக்க

அவன் இருந்த நிலையில் " எது நான் காரணமா?... " வாயைப் பிளந்தவன் " எப்படி?" என்று துணைக் கேள்வி கேட்க

அவனது கையை பற்றியவள் " நீங்க தானே சொன்னீங்க…. எனக்கு உயிரை தரேன்...உயிரை தரேன்னு சொல்லிட்டு குடுத்திட்டீங்களே.." மெல்ல அவனது கையை வயிற்றில் வைக்க அவனுக்கு சிறிதும் புரியவில்லை…

அவனது நிலையைக் கண்டவள் அவனது தலையில் கொட்டி " அட மக்கு மடசாம்பிராணியாடா நீ" என்று கிண்டல் பண்ணி தன் வயிற்றில் அவன் கையை அழுத்த சட்டென்று சுதாரித்தவன் " நிஜமாவா டி…" கேட்டுக் கொண்டே அவளது வயிற்றில் அழுந்த முத்தமிட்டு இதழ்களிலும் அழுத்தமாக முத்தமிட்டான்…

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ அவர்களது மகிழ்ச்சி அடங்க நீண்ட நேரமாகியது.
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-32

சஹிக்கு இப்பொதெல்லாம் நிற்க கூட நேரமில்லாமல் இருந்தது... அவள் தனித்து நின்று வெற்றி பெற தன் முழு உழைப்பையும் நேரத்தையும் வளர்ந்து வரும் பிராஜெக்ட்டுகாக செலவழிக்க அவளை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டான்.

ஏனெனில் அவளது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காக சஹி தன் நட்புகளிடம் பேசியது அவனுக்கு நன்றாக நினைவிருந்தது…

இரவுப் பொழுதிலும் சஹி தனது வேலையை தொடர்ந்து லாப்டாப்பில் செய்துக் கொண்டிருப்பவள் களைத்துப் போய் அதன் மேலேயே உறங்கிவிடுவாள்..அவளது சின்ன சின்ன அசைவுகளையும் கவனித்து கொண்டிருப்பவன் அவளை தூக்கிக்கொண்டு படுக்கையில் கிடத்தி விட்டு அவளது தலையை கோதி விடுவான்…

வேலைகள் எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறன என்பதை அறிய சஹி மூர்த்தியுடன் வேலை நடைபெறும் இடத்திற்கு மேற்பார்வையிட அங்கே நின்றிருந்த யோகேஷை அதிர்ச்சியுடன் பார்த்தாள். ஆனால் அவனோ கேஷூவலாக மூர்த்தியின் அருகில் வந்து நின்றுகொண்டு திமிராக அவளைப் பார்த்தான்.

அவனது திமிரான பார்வை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல சஹிக்கு எரிச்சலோடு கோபமும் வர மூர்த்தியிடம் அதைக் காட்டினாள்…

" வாட் இஸ் திஸ் டாடி.. இவன் கூட இன்னும் கான்டெக்ட்ல தான் இருக்கீங்களா? ஹவ் இஸ் திஸ் பாஸிபிள்?... " படபடவென பொரியும் கடுகு போல வெடிக்க அவளை மூர்த்தி சங்கடமாகவும் யோகேஷ் சுவாரசியமாகவும் பார்த்தனர்.

யோகேஷிடம் மூர்த்தி " எக்ஸ்கியூஸ் மீ… " என்று சொல்லிவிட்டு அவளது கையைப் பற்றி அறைக்குள் அழைத்துச் சென்றவர் பதட்டத்துடன் " இங்கே பாரு சஹி… யோகேஷை என்னால அவாய்ட் பண்ண முடியாது.. புரிஞ்சிக்க…" குரலில் கடுமையுடன் கூற சஹி " ஏன்?" சுருக்கமாக ஒற்றை வார்த்தையில் கேள்வி கேட்க பதில் சொல்லும் நிலையில் மூர்த்தி இல்லை…

" சொல்லுங்க டாடி… என்னை எம்.டி. யா ஆக்குனது எதுக்காக? அதுக்கும் இந்த யோகேஷ் தான் காரணமா?" கேள்வி மேல் கேள்வி கேட்க மூர்த்தி அவளை அதட்ட வாய் திறக்கையில் யோகேஷ் அவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு வந்து " ஹ்ம்.. நான் சொல்லட்டுமா டியர்…" என்று நக்கலாக கேட்க

" ஹே! லுக்… மைண்ட் யுவர் பிஸ்னஸ்… கால் மீ மேம்… டியர், டீரு ன்னு சொல்ற வேலையெல்லாம் வச்சிக்காத…" வார்த்தைகள் கடுமையாக வந்தது… யோகேஷூக்கு அவளது வார்த்தைகளில் முகம் கருத்தது…

" ஆங்...அது எப்படி முடியும்… நான் நினைச்சா இப்பவே இந்த டெண்டரை கேன்சல் பண்ண முடியும்… அப்பறம் அதை நினைச்சு நீ கவலைப் படுவீயே.. அதுக்காக தான் அமைதியா இருக்கேன்…" தெனாவட்டாக மூர்த்தி மற்றும் சஹியை பார்த்துக் கொண்டே கூறினான்…

" உன்னால முடிஞ்சா பாருடா… இந்த பூச்சாண்டி காட்டுற வேளையெல்லாம் என்கிட்ட வேணாம்… நீ எங்கப்பாவுக்கு தான் பெரிய ஆளா இருக்க... எனக்கு இல்லை… அதோட திறமை இருந்தால் வாய்ப்பு கண்டிப்பா அமையும்… நான் கிளம்பறேன் டாடி…"என்று அந்த இடத்தை விட்டு நகர மூர்த்தி அவளை கலக்கத்துடன் பார்க்க யோகேஷ் அவளின் அந்த திமிரை அடக்கும் வழியை யோசித்துக் கொண்டிருந்தான்.

" என்ன அங்கிள் ! உங்க பொண்ணு என் வழிக்கு அவ்ளோ சீக்கிரம் வர மாட்டா போல.." தன்னுடைய தாடையை தடவிக் கொண்டே நக்கலாக கேட்க மூர்த்தி " அவ என் பொண்ணா இருந்தா நானே அவளை உங்க வழிக்கு கொண்டு வந்துடுவேன்... இப்ப அவ அந்த அபிஜித் பொண்டாட்டி.. எனக்கு என்னவோ பிரச்சினை பெரிசா ஆகி பெயர் கெட்டு போயிடுமோன்னு இருக்கு… ஏற்கனவே நம்ம மேல அவன் கொலைவெறியா தான் இருக்கான்... இப்ப நீ சொல்ற மாதிரி செஞ்சா கண்டிப்பா நம்மளை வெட்டி பொலி அவன் போடுறானோ இல்லையோ என் பொண்ணு அதை செய்வா" கண்களில் பயத்துடன் மூர்த்தி சொல்லியது யோகேஷின் கண்களுக்கு தப்பவில்லை…

அவனின் மனம் சஹியை அபிஜித்தை விட்டு பிரிந்து தன் பக்கம் சாய அதற்கான திட்டங்களை தீட்டியது…

" ஓகே.. அங்கிள்! நீங்க நான் சொல்ற மாதிரி செய்ங்க… அந்த அபிஜித்கிட்டயிருந்து சஹியை பிரிச்சு நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று தனது திட்டத்தை சொல்ல தொடங்க மூர்த்தியும் அவனுக்கு ஒத்துழைத்தார்.

இருவரும் ஒன்றை மறந்து விட்டனர்.. பெண்ணின் கண்ணீரானது மன்னாதி மன்னர்களின் சாம்ராஜ்யங்களை அழித்தது.. அதுபோல தான் மூர்த்திக்கும் யோகேஷூக்கும் அழிவு பெண்ணால் ஏற்பட போகிறது என்பதை அறியாமல் போனது அந்தோ பரிதாபம்!...

வீட்டிற்கு சீக்கிரமே வந்துவிட்ட சஹியை நாச்சியார் " என்னட்டி… சீக்கிரம் வந்துட்ட" அவரது கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் தான் இல்லையென்றாலும் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருப்பதால் " கொஞ்சம் உடம்பு சரியில்லை பாட்டி…" என்று கூறிவிட்டு மாடி படியேற அவளை யோசனையுடன் பார்த்தவர் பார்வதியை நோக்கி சென்றார்…

" என்ன பார்வதி! சீக்கிரமா இவ வீட்டுக்கு வந்துட்டா… எதுவும் பிரச்சினையா இருக்குமோ? முகமே சரியில்லை… நீ போய் காபி அவக்கிட்ட கொடுத்துட்டு பேச்சு கொடு… பிள்ளைக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்…" என்று பார்வதியை சஹி இருக்கும் அறைக்கு அனுப்பி வைக்க அங்கே சஹி தலையில் கையை வைத்து கண்களை இறுக மூடிருந்தாள்.

" என்னடா..சஹிம்மா… எதுவும் பிரச்சினையா?" அவளது தலையைக் கோதிக் கொண்டே ஆதுரமான குரலில் வினவ சஹியின் கலங்கிய கண்களை கண்டு துணுக்குற்றவர் "ஹ்ம்" என புருவமுயர்த்திக் கேட்க சஹி " மாமி! கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன்… " மெலிதான குரலில் பார்வதியை பார்க்காமல் கீழே பார்த்தவாறு கூற " சரிடா… நீ தூங்கு... தூக்கம் எல்லா பிரச்சனைக்கும் சிறந்த மருந்தா இருக்கும்...நீ ரெஸ்ட் எடுடா…" அவளது நெற்றியினை நீவி விட்டு கீழே சென்றார்.பார்வதி இறங்கி சென்ற சில நிமிடங்களில் சஹி தூங்கி இருந்தாள்.

மணி ஆறு முப்பது ஆகிருக்க சஹி தூக்க கலக்கத்தில் கட்டிலின் விளிம்பில் இருந்து கீழே விழப்போகும் சமயம் அவளை அபிஜித் தூக்கியிருக்க தூக்கத்தில் தான் பறப்பதாக நினைத்துக் கொண்டு தனக்குள்ளே பேசுவதாக நினைத்து ' இப்படி பறக்குறது கூட ஜாலியா தான் இருக்கு… இப்படியே இருந்தா நல்லா தான் இருக்கும்' வாய்விட்டு கூற களுக் என்ற சிரிப்பு சத்தத்தில் பட்டென கண்களை திறந்தவள் முகத்துக்கு நேராக தனது கணவனின் முகம் தெரிய சற்று முன் தான் பேசியதை எண்ணி வெட்கம் கொண்டாள்.

அவளது வெட்கத்தை ரசித்தவாறே " இப்படியே இருக்க ஆசையா தான் இருக்கு… ஆனால் மேடம்…." என்று இழுக்க அவள் கேள்வியாக புருவமுயர்த்தி " ஹ்ம்... சொல்லுங்க…" அவனை மீதி வார்த்தையை சொல்லுமாறு ஊக்க அவளது கண்களை பார்த்தவன் முகம் சிரிப்புடன் " வெயிட் லாஸ் பண்ணுங்க மேடம்… செம்ம கனம் தாங்கல…" வேண்டுமென்றே வம்பிழுக்க சஹி அவனது ஆடம்ஸ் ஆப்பிளை பிடித்திழுக்க அவன் வலிப்பதாக அலற அவளுக்கு கவலை அகன்றது….

" இன்னொரு விஷயம் சஹி…"

" சொல்லுங்க செழியன்…"

" இன்னிக்கு காலையில யோகேஷ் உங்கப்பா கூட மறுபடியும் சேர்ந்தது, அவன் உன்கிட்ட பேசுனது.. எல்லாத்தையும் கேள்வி பட்டேன்.. நீ எதைப் பத்தியும் யோசிக்காம உன்னோட பிராஜெக்ட் சக்ஸஸ் புல்லா முடிக்கிற வழியை பாருடி… நான் இருக்கேன்… " சொல்லிக்கொண்டே நெற்றியில் முத்தம் பதிக்க அவளுக்கு கேட்க கேள்வி ஒன்று இருந்தது…

" இல்லை... செழியன்…அப்பாவும் அவனுக்கு சப்போர்ட் பண்றாரு… அவன்கிட்ட அப்பா ஏதோ ஒரு விஷயத்தில் லாக் ஆகி இருக்காரு போல...அவன் ஏதாவது பண்ணுவான்னு தோணுது… அதாவது எனக்கு இல்லைனா உங்களுக்கு ஏதாவது பிராப்ளம் கிரியேட் பண்ணிணானா… என்ன பண்றது?"

இருநிமிடங்கள் ஏதும் பேசாமல் அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவளது கைகளைப் பற்றி கொண்டு " என்னை மீறி அவன் உன்னை ஏதும் செய்யமாட்டான்… அப்படி ஏதாவது செஞ்சானா அன்னிக்கு தான் அவனுக்கு அது கடைசி நாள்" அவனது பேச்சு உஷ்ணத்துடன் அழுத்தம் திருத்தமாக வர சஹி அமைதியாக கேட்டுக் கொண்டாள்…

அடுத்த நாள் காலை அபிஜித் சஹியை வேலைக்கு அனுப்பி விட்டு கிளம்பிய சில நிமிடங்களில் சஹியின் காரை ஓட்டிக் கொண்டு சென்ற டிரைவர் அபிஜித்துக்கு கால் செய்ய ' இவன் எதுக்கு நம்மள கூப்பிடுறான்' சொல்லிக் கொண்டே காலை அட்டெண்ட் செய்ய அந்த பக்கம் டிரைவரின் குரல் பதற்றத்துடன் ஒலித்தது.

" சா...ர்... சார்…. இங்கே சஹி மேடத்தை முகமூடி அணிந்த நாலு பேரு கிட்நாப் பண்ணிட்டாங்க சார்… தடுக்க போன என்னையும் அடிச்சிப் போட்டுட்டாங்க சார்…" வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு கூறிய அடுத்த நிமிடமே அபிஜித் ஜீவாவிற்க்கு கால் செய்தான்.

" சொல்லுடா மச்சி… என்ன ஏதும் முக்கியமான விஷயமா?"

" ஆமாடா மச்சான்… சஹியை கிட்நாப் பண்ணிருக்காங்க… நீ எங்கே இருக்க… மூர்த்தி வீட்ல இருக்கானா இல்லையான்னு பார்த்து சொல்றீயா?…" கெஞ்சிய குரலில் கேட்க " நீ அப்படியே லைன்ல இரு மச்சி… நான் கேட்டு சொல்றேன்…" என்று சில வினாடிகள் வெயிட் பண்ண சொல்ல ஜீவா கங்காவிற்கு அழைத்து முர்த்தி வேலைக்கு கிளம்பி விட்டார் என தகவல் தெரிவிக்க " மச்சி! அவரு வீட்ல இல்லையாம் டா…" என்று தகவல் தெரிவிக்க அபிஜித் " சீக்கிரம் சென்னை ஹைவேல வந்து நில்லுடா…" என்று கட்டளையிட்டு சில நிமிடங்களில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

காரில் வரும் போதே நடந்ததை சுருக்கமாக ஜீவாவிடம் சொன்னவன் " இதுக்கெல்லாம் காரணம் மூர்த்தி தான் டா... அவன் பிரச்சினைக்கு என் பொண்டாட்டியை சிக்க வச்சிருக்கான்" கழுத்து நரம்பு புடைக்க கத்தினான்.

" மச்சி! எப்படி டா.. யோகேஷ் இவ்வளவு கேவலமா இருக்கான்… அடுத்தவன் பொண்டாட்டியை கடத்தி தான் காரியம் சாதிக்கணுமா… அதுக்கு உன் மாமனாரும் உடந்தையா? ச்சீய்… மனுசனா டா அவன்… எச்சைகளா இருக்கானுங்க…" வார்த்தைகளில் அளவுக்கடந்த கோபம் வெளிப்பட்டது ஜீவாவிற்கு.

" கடத்துற விஷயமெல்லாம் புராணக் காலத்துல இருந்தே நடக்குது டா… பெத்த மகளையே கடத்திட்டு போக சொன்னவனை என்ன பண்ணலாம்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.. இவனுங்களை இதுக்கு மேல விட்டு வச்சா நிம்மதியா நம்மளை இருக்க விட மாட்டானுங்க… இதுக்கு இன்னிக்கு முடிவு கட்டியே ஆகணும்…" சொல்லிக் கொண்டே காரைத் திருப்பியவன் யோசனையுடன் ஜீவாவிடம் கங்காவிற்கு கால் செய்து மூர்த்தி எங்கே இருக்கிறார் என கேட்டு சொல்ல சொன்னான்…

அதன் படி கங்கா, மூர்த்திக்கு கால் பண்ண மூர்த்தியின் நம்பருக்கு அழைப்பு போய் கொண்டேயிருக்க அவர் எடுக்கவில்லை… இரு அழைப்பிற்கு பிறகு கடைசி நேரத்தில் அழைப்பை ஏற்க " ஏண்டி...போனை அட்டெண்ட் பண்ணலைனா முக்கியமான வேலைல இருக்கேன்னு அர்த்தம்… இப்ப எதுக்கு கால் பண்ண" மூர்த்தி கடுகடுவென பொரிய கங்கா "எங்கே இருக்கீங்க… காலையில சாப்பிடாம கூட போயிட்டிங்க… சீக்கிரம் வருவீங்களா…" மூர்த்திக்கு சந்தேகம் வராத அளவுக்கு கங்கா பேச அவரும் சற்றும் யோசிக்காமல் " நான் இங்கே நம்ம கன்ஸ்ட்ரக்ஷனுக்கு பக்கத்தில இருக்கிற தென்னை தோப்புல இருக்கேன் டி… நீ அப்பறம் பேசு… " சொல்லிக்கொண்டிருக்கையிலே யாரும் கத்தும் சத்தம் கேட்க கங்கா அந்த குரலை இனம் கண்டு மூர்த்தியிடம் கேள்வி கேட்பதற்கு முன் அவர் அழைப்பை கட் பண்ணியிருந்தார்….

கங்கா பதறிப் போய் ஜீவாவிடம் " எனக்கு என்னவோ இவர் மேல டவுட்டா இருக்கு ஜீவா…"

" ஏன்..சித்தி…"

" அவரு பேசிக்கிட்டு இருக்கும் போதே சஹி கத்துற மாதிரி இருந்துச்சு...அது அவ குரல் தான்… "

"சித்தப்பா… எங்கே இருக்காராம்... ஏதாவது சொன்னாரா சித்தி.."

" அவர் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு பக்கத்துல இருக்கிற தென்னந் தோப்புல இருக்காராம்… ஜீவா…" குரல் கலக்கத்துடன் வந்தது…

ஜீவாவிடமிருந்து போனை வாங்கிய அபிஜித் " மாமி! நீங்க கவலைப்படாதீங்க… சஹியை பத்திரமா அழைச்சிட்டு வர வேண்டியது என் பொறுப்பு… ஆனால் அதுக்கு முன்னாடி உங்க வீட்டுக்காரருக்கு எது நடந்தாலும் அதுக்கு முழுக்க முழுக்க அவர் மட்டும் தான் காரணம்…" கடினமான குரலில் சொல்ல ஆரம்பித்தவன் பின் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு " அப்படி எதுவும் நடக்கக் கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன் மாமி! அதையும் மீறி நடந்தால் அது விதி…" கூறிக் கொண்டே பெருமூச்சு விட்டான்…

கங்காவிற்கு அபிஜித் சொன்னது நன்றாகவே புரிந்தது… இருந்தாலும் தனது தாலியைக் காப்பாற்றி கொள்ளும் எண்ணம் சிறிதும் அவரிடத்தில் இல்லை… ஏனெனில் அவர் மனம் தனது கணவனின் செயல்களை கண்டு வெறுப்படைந்து போயிருந்தது…

" அவர் முடிவை அவரே தேர்ந்தெடுத்துருக்காரு போல… அப்படின்னு நான் நினைச்சிக்குவேன்… ஆடுனது எல்லாம் அடங்கி தானே ஆகணும்…"அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் வெறுப்புடன் விரக்தியாக வந்தது…

" ஓகே...மாமி!.. நான் வைக்கிறேன்… நீங்க எதையும் நினைச்சு கவலைப் படாதீங்க… டேக் கேர்…" என்று கூறி வைக்க கங்கா மனம் கேளாமல் சாமியறையை நோக்கி சென்று வேண்ட தொடங்கினார்….

*******************************************

" யார் டா நீங்க…ஒரு பொண்ணைக் கடத்திட்டு வர்ற அளவு எந்த மானங்கெட்ட நாய்க உங்களுக்கு ஆர்டர் போட்டது…" அந்த இருட்டான அறையில் சஹியின் சத்தம் எதிரொலிக்க அவளுக்கு பதிலை அங்கிருந்து அவளை சிசிடிவியில் பார்த்துக் கொண்டிருந்த யோகேஷ், அருகேயிருந்த மூர்த்தியிடம் கண்ணைக் காட்டி விட்டு " பார்த்தீங்களா அங்கிள்… மானங்கெட்ட நாய்களா நாம " என்று நக்கலாக கேட்டுக் கொண்டே மூர்த்தியைப் பார்க்க அவர் பதில் சொல்ல முடியாமல் அவனை வெறித்துப் பார்த்தார்.

ஏனெனில் மூர்த்தியின் வாயையும் கையையும் கட்டிப் போட்டு யோகேஷ் வில்லத்தனமாக சிரிக்க மூர்த்தி கண்களால் கெஞ்சினார்.

" என்ன அங்கிள்… எதும் பேசணுமா?" நக்கலாக கேட்க

" ஆம்"...என்று கண்களை மூடி தலையை ஆட்டினார்.

" சரி… ஐந்தே ஐந்து நிமிஷம் தான் உங்களுக்கு டைம்… சீக்கிரம் பேசிடணும்… உங்க பொண்ணுக்காக இனி என்னால் காத்திருக்க முடியாது…" ஆணவத்துடன் சொல்லிக் கொண்டே வாயை மூடியிருந்த துண்டை கழட்டினான்.

" என்ன பண்ணிக்கிட்டு இருக்க யோகேஷ்… என்னை எதுக்கு கட்டிப் போட்டுருக்க…நான் தான் என் பொண்ணுக்கிட்ட பேசி அவளை நம்ம வழிக்கு கொண்டு வரேன்னு தானே சொன்னேன்…இப்ப எதுக்கு என்னைக் கட்டிப் போட்டுருக்க…" கடுப்பாக கேட்க யோகேஷ் அவரைக் கண்டு சிரித்துவிட்டு பின் அவரை கேலியாக பார்த்தான்.

" என்ன அங்கிள்… நீங்க சொல்லி உங்க பொண்ணு கேட்பான்னு இன்னும் நீங்க நம்பறீங்களா... என்ன?"

" என் பொண்ணு நான் சொன்னா கேட்பா… கண்டிப்பா கேட்பா...நம்பு யோகேஷ்.. அவகிட்ட பேசாம எதையும் சொல்ல முடியாது… நான் பேசிட்டு வரேன்…"

" ஓகே அங்கிள்… நீங்க பேசி அவ சம்மதம் தந்துட்டா பிரச்சினை இல்லை... ஆனால் அவ சம்மதம் தரலைனா அவ இங்கிருந்து போகும் போது எனக்கு இரையாகிட்டு தான் போவாள்… நான் ஏமாற இதுக்கு மேல தயாரில்லை…" என்று எச்சரித்து விட்டு மூர்த்தியை சஹியிடம் பேச அனுப்பினான்…

காட்டுக்கூச்சலிட்டு கொண்டிருந்த சஹியிடம் மூர்த்தி வர அவளோ தன் முன்னே கருப்பு உருவமாக வந்தவனை கூர்ந்து நோக்கிய கணத்தில் " சஹிம்மா…" என்ற மூர்த்தியின் குரலில் " டாடி... நீங்க வந்துட்டிங்களா…" குரலில் ஆசுவாசமடைய அவரை நெருங்கிய நேரம் அங்கிருந்த அறையில் வெளிச்சம் பரவ அவருடன் யோகேஷூம் நின்றிருந்தான்…

அவனைக் கோபத்துடன் பார்த்தவள் " டேய்.. உனக்கெல்லாம் வெட்கமா இல்லை... நீ ஆம்பளை தானே... என் புருஷன் கூட மோதி ஜெயிச்சிக்காம என்னைக் கடத்திட்டு வந்துருக்கீயே…த்தூ…" என்று யோகேஷின் மூஞ்சியில் காறித் துப்ப அவன் முகத்தில் விழுந்த எச்சிலைத் துடைத்தவன் கோபத்துடன் அவளின் தலைமுடியை பிடித்து இறுக்கியவன் " என்னடி… ஆம்பளையான்னு கேட்டு துப்பற… நான் ஆம்பளை தான்னு நிரூபிக்கும் போது அதை நீ தெரிஞ்சிக்க…" கூறிக் கொண்டே அருகிலிருந்த மூர்த்தியை பார்த்து

"அங்கிள்… நீங்க இவக்கிட்ட எதையும் புரிய வைக்க வேணாம்… நீங்க போங்க… இன்னும் ஒரு மணி நேரத்தில இவ என் சொல்படி நடப்பா…" என்று நக்கலாக கூறியவனைக் கண்டு

" வேண்டாம் யோகேஷ்… என் பொண்ணை விட்டுடு…இப்படி நீ பேசுறத முதல்ல நிறுத்து… வா... சஹி... போகலாம்…" என்று சஹியின் கையைப் பிடித்து இழுக்க யோகேஷ் " என்ன பண்றீங்க அங்கிள்… நம்ம டீல் என்னன்னு தெரியும்ல…இப்ப நீங்க இப்படி பண்றது நல்லதில்லை… இவ இனி எனக்குன்னு மட்டும் தான் இருக்கணும்… " என்று சஹியின் கையை பிடிக்க வர அவன் கையை தட்டி விட மூர்த்தியை ஆக்ரோஷமாக பார்த்தான் யோகேஷ்….

" ஹே... உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி தரேன்னு சொல்லி தான் உங்கப்பன் என் கூட டீல் பண்ணான்… அமைச்சர் பையனை கையில போட்டு நிறைய டெண்டர் எடுத்து அதனால் நிறைய சம்பாதிச்சாச்சு… அப்ப தான் உன்னை பிடிச்சிப் போய் கல்யாணம் பண்ண கேட்டதுக்கு கட்டி தரேன்னு சம்மதம் சொன்ன நேரம் உன் புருஷன் அபிஜித் வந்து உன்னை கொத்திக் கிட்டு போயிட்டான்… நான் அதைப் பார்த்து விரல் சப்பிக்கிட்டு பாக்கணுமா…எனக்கு நீ கல்யாணம் ஆகிருந்தாலும் பரவால… வாடி…" என்று ஆவேசமாக இழுக்க அவனை தள்ளி விட்டவள் மூர்த்தியின் அருகில் வந்தாள்…

" இவன் சொன்னது உண்மையா டாடி…"

" அது...அது ...அது வந்து…" எச்சிலை முழுங்கிவிட்டு " ஆமாமா… அவன் சொல்றது உண்மை தான்… இப்ப கூட நான் தான் அவனுக்கு ஓகே சொன்னேன்… அந்த அபிஜித் உனக்கு வேண்டவே வேண்டாம்…"என்று அவளது கையைப் பிடித்து கூற அவரது கையை தட்டி விட்டவள் " ச்சீ.. இவ்ளோ மட்டமான ஆளா நீங்க... அருவருப்பா இருக்கு… தள்ளிப் போங்க…" என்று மூர்த்தியைப் பிடித்து தள்ளினாள்…

" நீங்க யாரு… நீங்க யாரு என் லைஃப்ல யாரு வேணும் வேண்டாம்னு டிசைட் பண்ண? நீங்க தானே கல்யாணம் பண்ணி வச்சீங்க… என் புருஷன் கால் தூசிக்கு கூட இவன் கிட்ட வர மாட்டான்… ஒழுங்கு மரியாதையா இதோட உங்க இரண்டு பேருக்கும் வார்ன் பண்றேன்….இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கங்க... இல்லை… விளைவு வேற மாதிரி இருக்கும்…"எச்சரித்தாள்…

" சஹிம்மா… நீ கிளம்பு…" என்று மூர்த்தி உத்தரவிட யோகேஷ் " என்னாது கிளம்புவா… அவளை வழிக்கு வர வைக்கிற ஐடியா எனக்கு தெரியும்…" மூர்த்தி பார்த்து கூறிக் கொண்டே அவரின் தலையில் பலமாக அடிக்க அவர் மயங்கி விழுந்தார்…

அந்த நேரம் சஹி தப்பிக்க பார்க்க யோகேஷ் அவளை பிடித்து இழுக்க இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நேரம் சஹி அவனது தொடையில் ஓங்கி உதைக்க அவன் வலியில் அலறினான்... இருந்தாலும் சமாளித்து கொண்டு சஹியின் ஆடையை பற்றி இழுக்க அவளது சுடிதார் பின்பக்கம் கிழிய அவள் குறுகிப் போய் அமர்ந்து விட்டாள்.

அவளது நிலையை கண்ட யோகேஷ் நக்கலாக சிரித்துக்கொண்டே " இப்ப எந்திரிச்சி ஓடுடி... பாக்கலாம்… நீ தான் தைரியசாலியாச்சே.. ஓடு…" என்று அவளின் முன்னே குனிந்து கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெதுவாக சிரிக்க அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தவன் அவளைத் தொட எத்தனித்த சமயம் கவிழ்ந்து அவள் காலில் விழுந்துக் கிடந்தான்…

தன் காலில் விழுந்தவனைக் கண்டு ஏளனமாக சிரித்தவள் யோகேஷை நோக்கி த்தூ என்று துப்பினாள்… அவளது செய்கை யோகேஷிற்கு கோபத்தை உண்டாக்கியது… அவளை அறையும் நோக்கில் கையை தூக்கிய நொடி அவனின் கையை உடைத்திருந்தான் அபிஜித்…

"ஆஆஆஆஆ…அம்மா" என்ற அலறலுடன் வலியில் துடித்தவனின் முன்னே வந்து நின்ற அபிஜித் " எவ்ளோ தைரியம் இருந்தால் என் பொண்டாட்டி மேலேயே கையை வைப்ப... இனிமேல் நீ உயிரோட இருந்து எந்த வித பயனும் இல்லை… சாவுடா…" என்று மரண அடி அடித்தான்... ஜீவா சஹியை பத்திரமாக கூட்டிச் செல்ல அவளின் காலை பிடித்து அவளை பிரட்டி கீழே விழ செய்ய அபிஜித் அவளை பற்றி தன் மேல் சாய்த்து கொண்டு அவன் முகத்தில் எத்தினான்…

அவன் எத்திய வேகத்தில் அங்கிருந்த கம்பியில் மோதப் போனவனை பிடித்த அபிஜித்திடம் " டேய்! நான் மினிஸ்டர் பையன்னு தெரிஞ்சும் என் மேல கை வச்சிட்டியே… இனி இருக்கு டா உனக்கு... நான் யாருன்னு உனக்கு காட்டுறேன் டா…" என்று கத்த அபிஜித் பக்கென்று சிரித்து வைக்க ஜீவாவும் கூட சேர்ந்து சிரிக்க யோகேஷ் கடுப்பாகி கத்த ஆரம்பிக்கும் முன்பே அவனை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தான் அபிஜித்.

" உஷ்ஷ்ஷ்… உங்கொப்பன் அமைச்சர் பதவி இன்னியோட காலி ஆகிரும்… அப்பறம் உங்கொப்பனை காப்பாத்தவே ஆள் இல்லையாம்... அந்த ஆளு உன்னை காப்பாத்திருவாராமா…" என்று கூறிக்கொண்டே தனது மொபைலில் யோகேஷின் வீட்டில் ரெய்டு நடந்துக் கொண்டிருப்பதை அந்த காணொளியில் காட்ட யோகேஷ் அதிர்ச்சியடைந்தான்…

" என்னடா..பாக்குற... எப்ப என் பொண்டாட்டி உன்னால கண்ணீர் விட்டாலோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் டா... உன்னை மாதிரி பிறவி எல்லாம் இனி இருக்கவே கூடாதுன்னு…உன்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் இங்கே வந்துட்டே இருக்கு… ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன் உன் வீட்டில ரெய்டு நடக்க பிள்ளையார் சுழி போட்டதே நான் தான் டா…" சொல்லிவிட்டு அவன் சஹியை தூக்கிக் கொண்டு நடக்க ஜீவாவும் அவனைப் பின் தொடர்ந்தான்.

ஜீவா " ஏன்டா... இவன் மட்டும் தான் இங்கே இருக்கான்... அடியாள் யாரையும் காணோம்…" என்று கேள்வியுடன் சுற்றும் முற்றும் பார்க்க அபிஜித் " நம்மளை எதிர்பார்த்துருக்க மாட்டான் மச்சி… பொண்ணு தானேன்னு சாதாரணமா நினைச்சிருப்பான் " என்று அந்த அறையை விட்டு வெளியேற போன சமயம் அவன் பின்னால் யோகேஷ் அவனது பெயரை கத்திக் கொண்டே எழ அபிஜித் திரும்பிய நேரம் யோகேஷ் துப்பாக்கியுடன் நின்றிருந்தான்…

அபிஜித் அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்க்க வந்த கோபத்தில் யோகேஷ் அவனை சுட அதுவோ குறி தவறி அங்கிருந்த கதவில் பதிந்தது…மறுபடியும் யோகேஷ் சுட அவன் கையிலிருந்த துப்பாக்கியை மூர்த்தி பறிக்க முயற்சி செய்ய யோகேஷ் அவரை எட்டு உதைக்க மூர்த்தியின் கையை தவறி அவனைச் சுட்டு விட வலியில் அலறிக் கொண்டு கீழே விழும் சமயம் மூர்த்தியை அங்கிருந்த படிகளில் தள்ளி விட்டான்…

மூர்த்தி நிலைதடுமாறி விழ அவருக்கு பின் மண்டையில் பலத்த அடி ஏற்பட இதை அபிஜித் அதிர்ச்சியாக பார்க்க ஜீவா அவரை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தனது காரில் மருத்துவமனை நோக்கி பறந்தனர்….

விஷயம் கேள்விப்பட்டு குடும்பத்தினர் அனைவரும் பதட்டத்துடன் மருத்துவமனைக்கு வர யோகேஷ் இறந்த செய்தி கேட்டு அவனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு கைகால் இரண்டும் செயலிழந்து போய் விட அவரது மனைவி மட்டும் கண்ணீரோடு அவரை கவனித்து கொண்டார்….

மூர்த்திக்கு அடிபட்டு கண்ணை திறக்காமல் நீண்ட நேரமாகியதால் அவரது நிலையை கங்கா டாக்டரிடம் கேட்டு அழ அதை என்னவென்று கபிலன் விசாரிக்க மூர்த்தி கோமாவுக்கு சென்று விட்டதாக டாக்டர் கூற கங்கா கதறி அழ அவரை பார்வதி சமாதானப் படுத்தினார்….

அதே நேரத்தில் சஹியை பரிசோதித்த டாக்டர் அபிஜித்தை தனது அறையினுள் அழைக்க அவன் பதற்றமடைந்தான்… அவனது நிலையை புரிந்து கொண்டு கபிலன் கண்களால் தைரியமளிக்க டாக்டரின் அறையில் நுழைந்தான்.

" வாங்க அபிஜித்...சாஹித்யா மேடத்தை இப்ப தான் செக் பண்ணேன்… அது இந்த டைம்ல வர மயக்கம் தான்…" என்று புதிர் போட அவன் இருந்த மனநிலையில் குழம்பி போனான்.

" நீங்க உங்க வொய்ப் கிட்ட போய் கேளுங்க...அவங்களே சொல்ல வெய்ட் பண்றாங்க.. " சிரித்து கொண்டே சொல்ல அவன் மனதிலோ ' நீங்க தானே டாக்டர்...அவளை சொல்ல சொல்றீங்க…' மைண்ட் வாய்ஸில் கூறிக் கொண்டே சஹியை நோக்கி செல்ல அவள் முகம் அசதியாக இருந்தாலும் அதையும் தாண்டி மின்னியது.

அவளது அறையை திறந்தவன் உள்ளே நுழையும் போதே அவனைக் கண்டு மெதுவாக எழுந்தவள் அவனை நோக்கி கையை நீட்ட அதைப் பற்றிக் கொண்டு அவளது நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்.

" என்னடி… டாக்டர் உனக்கு என்ன ஆச்சுன்னு அவங்க சொல்லாம உன்கிட்ட கேட்க சொல்றாங்க… உடம்புக்கு எதும் பண்ணுதா…" என்றவனின் குரலில் சற்று பயம் தெரிந்தது…

" ஆமா.. ரொம்ப டையர்டா இருக்கு.."

" காலையில சாப்பிடாம கிளம்புனது தான்டி காரணம்... இன்னிக்கு நடந்த கலவரத்துல டையர்டா தான் இருக்கும்… இரு நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரேன்...அதை குடி கொஞ்சம் தெம்பா இருக்கும்…" கூறிக் கொண்டே எழுந்தவனை எழ விடாமல் இறுக்கிப் பிடித்தவள் அவனது முகத்தை பார்க்க அவன் கண்ணில் கேள்வியுடன் புருவம் உயர்த்தி பார்த்தான்.

" இந்த டையர்டுக்கு காரணம் நீங்க தான் மிஸ்டர்.செழியன்" பீடிகையுடன் விஷயத்தை சொல்ல ஆரம்பிக்க

அவன் இருந்த நிலையில் " எது நான் காரணமா?... " வாயைப் பிளந்தவன் " எப்படி?" என்று துணைக் கேள்வி கேட்க

அவனது கையை பற்றியவள் " நீங்க தானே சொன்னீங்க…. எனக்கு உயிரை தரேன்...உயிரை தரேன்னு சொல்லிட்டு குடுத்திட்டீங்களே.." மெல்ல அவனது கையை வயிற்றில் வைக்க அவனுக்கு சிறிதும் புரியவில்லை…

அவனது நிலையைக் கண்டவள் அவனது தலையில் கொட்டி " அட மக்கு மடசாம்பிராணியாடா நீ" என்று கிண்டல் பண்ணி தன் வயிற்றில் அவன் கையை அழுத்த சட்டென்று சுதாரித்தவன் " நிஜமாவா டி…" கேட்டுக் கொண்டே அவளது வயிற்றில் அழுந்த முத்தமிட்டு இதழ்களிலும் அழுத்தமாக முத்தமிட்டான்…

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ அவர்களது மகிழ்ச்சி அடங்க நீண்ட நேரமாகியது.

சஹியின் நிலைமையை அறிந்து கொள்ள அவளது அறைக்கதவை தட்டிய பார்வதி மற்றும் நாச்சியாரிடம் அபிஜித் விஷயத்தைக் கூற அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்… நாச்சியார் அவளது நெற்றியில் முத்தமிட்டு அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பார்வதி அதை கண்ணீராக வெளிப்படுத்தினார்.

சஹி, அபிஜித்திடம் தனது தந்தையை பற்றி விசாரிக்க அவரது நிலையை அபிஜித் கூற ' அப்பா' என அழத் தொடங்கியவளை பார்வதி சமாதானப் படுத்த சஹி விம்மினாள்.

கங்காவை பார்க்க வேண்டும் என்று அபிஜித்திடம் சாஹித்யா கூற அவன் கங்காவை அழைத்து வர சஹி அவரை கண்டு கண்ணீர் சிந்த கங்காவும் அழுதார்…

பார்வதி அபிஜித்தை பார்க்க அழுதுகொண்டேயிருந்தவர்களை சமாதானப் படுத்த அபிஜித் சஹியை அழைக்க அவள் அதை உணராமலிருக்க அவன் அழைத்தது கங்காவிற்கு கேட்டு திரும்பி பார்த்தார்…

" என்னடி... நீயும் அழுது...மாமியையும் அழுக வைக்குற… இந்த நிலைமையில் நீ அழுக கூடாதுடி… கண்ணைத் துடைச்சுக்கோ…" சஹியின் அழுகையை நிறுத்தவும் கங்காவிற்கு அவளது நிலை என்னவென்று உணரவும் அவன் பேச அவனை ஏறிட்டு பார்த்தவள் அவன் சொன்ன செய்தியைப் புரிந்து கொண்டு " அம்மா…" என்று அழைக்க

ஏற்கனவே அவருக்கு விஷயம் புரிபட சஹியை ஆவலாக நோக்கினார்.

" அம்மா!... நீ பாட்டியாகப் போற... இன்னும் ஏழே மாசத்துல உன் கையில பேரனோ, பேத்தியோ இருப்பாங்க…" கண்களில் வெட்கத்துடன் கூற கங்காவிற்கு அளவிட முடியாத அளவுக்கு மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது….

நான்கு மாதங்கள் கழித்து

சஹிக்கு தற்போது ஏழாவது மாதம் நடைபெற கங்கா தனது மகளுக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட அதைப் பற்றி பார்வதி மற்றும் நாச்சியாருடன் கலந்துரையாட சஹிக்கு தற்சமயம் அதைக் கொண்டாட விருப்பமில்லை ஆதலால் அதை அப்படியே கூற கங்கா " ஏன்?" என்று கேட்க சஹி " அப்பாவை இந்த நிலைமையில் வச்சிக்கிட்டு எனக்கு இப்ப இது தேவையில்லை…" என்று முடிவாக கூற அபிஜித் கோபத்துடன் விறுவிறுவென தங்களது அறையை நோக்கி சென்று விட நாச்சியார் சஹியை அவனிடம் பேச அனுப்பினார்.

அறையினுள் வந்தவள் எதுவும் பேசாமல் களைப்புடன் படுக்க அவன் இன்னும் முகத்தை சுழித்து கொண்டே அமர்ந்திருந்தான்…

அவள் அறையில் நுழைந்த நொடி முதல் அவளை பார்ப்பதும் பின் ஏதோ கேட்க நினைத்து விட்டு மறுப்பாக தலையாட்டிவனை ஓரக் கண்ணால் பார்த்தவள் சிறு சிரிப்புடன் அவனை நோக்கி வந்தவள் சட்டென்று அவன் தொடையில் அமர சற்று அதிர்ந்து விட்டு அவள் விழாதவாறு பிடித்துக் கொண்டான்…

" ஏன்? இந்த கோபமாம்… என் செழியனுக்கு…" கேள்வி கேட்டவாறே அவன் முகத்தோடு முகம் வைத்து தேய்க்க அவன் முகத்தை திருப்பி விட்டு " நீ உங்கப்பா இப்படி இருக்கும் போது வளைகாப்பு வேண்டாம்னு சொல்றது நியாயமாடி? சம்பிரதாயத்தை கண்டிப்பா கடைப் பிடித்து தானே ஆகணும்…" குரலில் ஆதங்கம் வெளிப்பட கேட்டவனை ஒரு மார்க்கமாக பார்த்தாள்.

" என்னடி…"

" அப்பா...இனி கோமாவுல இருந்து மீண்டு வருவார்னு தோணல... ஆனால் அப்பா மட்டும் ரீசன் இல்லை…. இப்ப நான் வளைகாப்பு வேணாம்னு சொல்ல காரணம் நீங்க தான்" என்று அவனை குற்றம் சாட்ட

"சொல்லுடி...சொல்லு.. நான் தான் எல்லாத்துக்கும் காரணமா இருப்பேன்னு என் தலையில தூக்கி போடு… அப்படி என்ன காரணம்…"

" ஹ்ம்...ஏழு மாசத்துல அம்மா வீட்டுக்கு போனா... என் புருஷன் ரோசக்காரரு…. மாமனார் வீட்டில நுழைய மாட்டாரு… அதனால் ஒன்பது மாசம் வரைக்கும் இங்கே இருந்து அவரை பாத்துட்டு இருக்கலாம்னு நினைச்சா ரொம்பத்தான்…" என்று நொடித்து கொண்டாள்….

மனைவியின் ஏக்கத்தை அறிந்தவன் அவளை தன் நெஞ்சோடு படுக்க வைத்து அணைத்துக் கொள்ள அங்கே காதல் கரை கண்டது…..

*********************************************
 
Status
Not open for further replies.
Top