All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வனிதா கண்ணனின் ‘ ஜி(எ)த்தனின் சஹியிவள்’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்புகளே! இத்தளத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஸ்ரீமாவிற்கு நன்றி! இது எனது முதல் கதை, ஆதலால் கொஞ்சம் தடுமாறி தான் எழுதுகிறேன். எபி வரும் திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்களும் பதிவு உண்டு. கதையின் டீஸர் நாளை போடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். என் தவறை திருத்தி கொள்கிறேன். நன்றி!
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு கதை எழுத ஊக்க படுத்திய ஸ்ரீமாவிற்கும், வியனி, நிலா, பானு , சிவரஞ்சனி ஆகிய நட்புகளுக்கும் நன்றிகள் பல
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோஸ்! என்னுடைய முதல் கதை ஜி(எ)த்தனின் சகியவள் கதை என்னோட காலேஜ்லல நடந்த சில சம்பவங்களை வச்சி எழுதிருக்கேன். இந்த கதையில் காதல், நட்பு, மோதல் அனைத்தும் கலந்து எழுதிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கங்க....

ஹீரோ: அபிஜித்
ஹீரோயின்: சாகித்யா
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜி(எ)த்தனின் சஹியிவள்


டீஸர் -1



அதிகாலை ஐந்து மணிக்கு பொழுது விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் இதழ் பிரித்திடும் மலர்களின் மேல் அதன் தேனை உறிந்திடும் வண்டுகளின் ரீங்காரமும், வீட்டின் முன் இருக்கும் வேப்ப மரத்தின் மீது அமர்ந்து கீச்சிடும் குருவிகளின் சத்தமும் அந்த பொழுதை ரம்மியமான சூழ்நிலையாக மாற்றி இருந்தது.


அதை ரசித்து கொண்டே வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் அவள்.அந்த ஏகாந்த வேளையில் வீசும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் தலைக்கு குளித்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டாள். பின்னர் வீட்டில் இருப்பவர்களுக்கு காஃபி கலந்து கொடுத்துவிட்டு அவனை எழுப்ப சென்றாள்.


ஒரு கையில் காஃபி டம்ளரும், மறுகையால் கதவைத் திறக்க முற்படும் போது அவனும் அதே சமயம் திறக்கவும் சரியாக இருந்தது.

இருவரும் மோதிய சமயத்தில் அவளின் கையில் இருந்த சூடான காஃபி அவன் வெற்று உடம்பை பதம் பார்க்கவும், அதன் சூட்டை தாங்காது அவனின் வலது கை அவளின் இடது கன்னத்தை பதம் பார்க்க ஆரம்பித்தன. அடித்த வேகத்தில் அவள் கதவில் மோதியதும் தலையில் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோஸ்! இன்று முதல் ஜி(எ)த்தனின் சஹியிவள் முதல் அத்தியாயம் பதிந்துள்ளேன். படித்துவிட்டு கருத்துகளை கூறவும். முதல் கதை ஆதலால் தவறுகள் ஏதேனும் இருப்பின் சுட்டி காட்டவும். நன்றி🙏

ஜி(எ)த்தனின் சஹியிவள்

அத்தியாயம் -1


அதிகாலை ஐந்து மணிக்கு பொழுது விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் இதழ் பிரித்திடும் மலர்களின் மேல் அதன் தேனை உறிந்திடும் வண்டுகளின் ரீங்காரமும், வீட்டின் முன் இருக்கும் வேப்ப மரத்தின் மீது அமர்ந்து கீச்சிடும் குருவிகளின் சத்தமும் அந்த பொழுதை ரம்மியமான சூழ்நிலையாக மாற்றி இருந்தது.

அதை ரசித்து கொண்டே வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் அவள்.அந்த ஏகாந்த வேளையில் வீசும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் தலைக்கு குளித்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டாள். பின்னர் வீட்டில் இருப்பவர்களுக்கு காஃபி கலந்து கொடுத்துவிட்டு அவனை எழுப்ப சென்றாள்.

ஒரு கையில் காஃபி டம்ளரும், மறுகையால் கதவைத் திறக்க முற்படும் போது அவனும் அதே சமயம் திறக்கவும் சரியாக இருந்தது.
இருவரும் மோதிய சமயத்தில் அவளின் கையில் இருந்த சூடான காஃபி அவன் வெற்று உடம்பை பதம் பார்க்கவும், அதன் சூட்டை தாங்காது அவனின் வலது கை அவளின் இடது கன்னத்தை பதம் பார்க்க ஆரம்பித்தன. அடித்த வேகத்தில் அவள் கதவில் மோதியதும் தலையில் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை 4.30 மணி.ஸ்ஸ் இரத்தம் வருதே அம்மா என்ற அலறலோடு எழுந்து அமர்ந்தாள் அவள். நெற்றியில் கை வைத்து தடவி பார்த்து விட்டு ச்சே! கனவா இது? அவளது கருவிழிகள் இரண்டும் பயத்தில் படபடவென அடித்து கொண்டன. விடிய காலையிலேயே ரத்தம் வர மாதிரி தான் கனவு வரணுமா பெருமாளே! எனக்கு என்ன இப்படி ஒரு சோதனை. விடியக் காலையில் கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவார்களே அப்படி எதுவும் நடக்காமல் நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

பாவம் அவளுக்கு தெரியவில்லை இந்த கனவு ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே என்று. இதை விட இன்னும் நிறைய பார்க்க போகிறாள் என்றும் கனவில் வந்ததை விட நிஜமாகவே அவளை சின்னா பின்னம் ஆக்கி அவளது வாழ்க்கையை மாற்ற வருவானென்று.

அவள் சாகித்யாஸ்ரீ, திருச்சியில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் கட்டடக்கலை (பி.ஆர்க்) முதல் வருடம் படிக்கும் மாணவி. பார்ப்பதற்கு கொள்ளை கொள்ளும் பேரழகு பெட்டகம். அவளின் நீண்ட கயல்விழி கண்களும், கூர்மையான நாசியும், உதடுகளில் தவழும் புன்னகையுடன் கூடிய கன்னக்குழி அழகிலும் மயங்காதவர் யாரும் இருக்க முடியாது .ஒரு பெண்ணுக்கு கண்களும், தலைமுடியும் சிறப்பாக அமைந்தால் அவளே அழகி என்பதற்கு உதாரணமாக திகழ்பவள்.கலகலப்பானவள் என்பதால் நட்பு வட்டாரம் அதிகம்,மிக நெருக்கமாக இருக்கும் நட்புக்கள் என்றால் பிரியா, தர்ஷினி,விஷான்.
அவளுக்கு பிடித்த விஷயங்கள் என்றால் சாப்பாடும், ஓய்வில்லாமல் பேசிக் கொண்டே இருப்பதும் தான்.

சாகித்யா வீட்டிற்கு ஒரே பெண். அவள் அப்பா மகேஸ்வர மூர்த்தி, அம்மா கங்கா. மூர்த்தி பெரிய பிஸ்னஸ்மேன், எம்.எம். கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கட்டுமான தொழில் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, அது போக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ரியல் எஸ்டேட் என்று எல்லா இடங்களிலும் தன் கால் தடத்தை வெற்றிகரமாக பதித்திருப்பவர். எல்லா இடத்திலும் முதன்மையாக இருக்க நினைப்பவர்.கங்கா ஒரு அக்மார்க் குடும்ப தலைவி.சாகித்யா தன் உழைப்பில் மட்டுமே முன்னேற வேண்டும் என்று நினைப்பவள். ஆனால் இதை மூர்த்தியிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரியுமாதலால் படித்து முடித்து விட்டு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

கண்ட கனவின் பயனாக சீக்கிரமே எழுந்து விட்ட காரணத்தால் அவளின் அறையின் கதவை திறந்து பால்கனிக்கு வந்து நின்றாள். அங்கே நின்று பார்த்தால் கோவில் கோபுரம் தெரியும் அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.தனக்கு பின்னால் அரவம் கேட்கவும் திரும்பி பார்க்க கங்கா காஃபி டம்ளருடன் வந்து கொண்டு இருந்தார்.

ஹாய் மா குட் மார்னிங்! என்று சொல்லவும் பதிலுக்கு வாழ்த்தி விட்டு காஃபி யை கொடுத்தார்.அதை வாங்கி கொண்டு அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.

என்னடா இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட ஏதும் ஞானோதயம் பிறந்திருச்சா? என்று கங்கா கிண்டல் அடிக்கவும் ஓ! அதுவா விடிகாலையில் சூரியன் சரியான டைம் உதிக்குதான்னு செக் பண்ண எழுந்தேன் மா என்று கூறிக் குறும்பாக கண்ணடித்தாள். லேசாக அவள் தலையில் தட்டி விட்டு சீக்கிரம் கீழே வாடா அப்பா எழுந்துட்டாரு உன்கிட்ட பேசணுமாம்.நீங்க போங்க நான் இரண்டு நிமிஷத்தில் வரேன் எனவும் கங்கா கீழே சென்று விட்டார்.

ஹாலில் உட்கார்ந்து நியூஸ் பேப்பரை வாசித்து கொண்டிருந்த மூர்த்தியிடம் குட் மார்னிங் பா எனவும் பதிலுக்கு சிரித்துவிட்டு குட் மார்னிங் சஹிமா என்று சொல்லவும் அவரிடம் இன்று கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைப்பெறும் வரவேற்பு விழா பற்றி கூறத் தொடங்கினாள்.அதை கேட்டு விட்டு கல்லூரியில் அமைதியாக இருக்கவும், யாரிடமும் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறவும் கண்டிப்பா டாடி லைப்ரரில மட்டும் அமைதி காப்பேன் என்று உளமார உறுதி அளிக்கிறேன் என்று சொல்லி விட்டு எஸ்கேப்
ஆகினாள்.

மூர்த்தி, அவள் சொன்னதை கேட்டு சிரித்து இதேபோல் என் பொண்ணு சிரிப்போடும், மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டினார். பாவம்! அவரின் வேண்டுதலை கடவுள் கேட்க வில்லை. அதே சமயம்அங்கே ஒருவன் வஞ்சம் வைத்து காத்திருக்கிறான் என்று தெரியவில்லை.
****************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோஸ்! ஜி(எ)த்தனின் சஹியிவள் அத்தியாயம் -2 பதிந்து உள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி😍

அத்தியாயம் -2



திருச்சியில் இருக்கும் புகழ் பெற்ற கல்லூரி அது. சாகித்யா காரில் இருந்து இறங்கும் போதே அங்கே ஏற்கனவே நின்றிருந்த தன் நட்புக்களை பார்த்து சிரித்துகொண்டே ஹாய் !.... சொன்னாள். பதிலுக்கு அவர்களும் ஹாய் ! ….சொல்லிவிட்டு அவர்கள் உரையாடலை தொடங்கினார்கள்.


"கைஸ், ஆடிடோரியத்தில உட்காராமல் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"..... என்று சாகித்யா கேட்க "அதுவா சஹி, நீ வந்துட்டா எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உட்காரலாம் "என்று விஷான் சொல்ல "நட்பு டா"...... என்று ஹை-ஃபை கொடுத்து, நால்வரும் ஆடிடோரியம் உள்ளே நுழைந்தனர்..


சஹி, பிரியாவிடம் …"என்ன மச்சி ? இரண்டு பேரும் அமைதியா இருக்கீங்க?

….. என்று கேட்கவும் அதற்கு பிரியாவோ….." இன்னைக்கு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடெண்ஸ்க்கு ராகிங் இருக்காம்டி "அது தான் கொஞ்சம் பயமா இருக்கு...


என்னடி தர்ஷூ! "இவள் ராகிங்க்கு போய் இப்படி பயப்படறா"…. என்று சிரித்தாள் சாகித்யா. "நீ வேற மச்சி !அவளாவது வாய் விட்டு சொல்லிட்டா... நான் சொல்லலை அவ்ளோ தான்" என்று தர்ஷினி சொல்ல என்னங்கடா... ஆளாளுக்கு பயமுறுத்திரிங்க என்று சஹி புலம்பினாள்.


பின்னர் "விஷான் இருக்க கவலை எதற்கு ? "…..என்று தம்பட்டம் அடிக்கவும் அதை கேட்டு பிரியாவும் தர்ஷினியும் " கோரஸாக எங்களை விட ராகிங் பற்றி ரொம்ப பயப்படறது விஷூ தான்டி!"... என்று கூறிவிட்டு அவனை அசிங்க படுத்தி விட்டு நக்கலாக பார்க்கவும் அவர்கள் மூவரையும் முறைத்து பார்த்து விட்டு ஆடிடோரியத்தில் நுழையும் போது அவனை முந்தி கொண்டு மூவரும் பழிப்பு காட்டி கொண்டே கடைசியாக இருந்த சேரில் அமர்ந்தனர். அவர்களின் பக்கத்திலே விஷானும் அமர்ந்தான்…( நட்புக்குள்ளே ரோஷம் பாக்க கூடாது)


முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி பின்னர் கல்லூரி முதல்வர் அவர்களின் கல்லூரியில் இருக்கும் டிபார்ட்மெண்ட் பற்றியும் , கல்லூரியின் விதி முறைகளை பற்றியும் தெளிவான ஆங்கிலத்தில் கூறிவிட்டு மாணவர்களுக்கு அவர் வாழ்த்துக் கூறி உரையை முடிக்க அத்துடன் அந்த நிகழ்ச்சி நிறைவுபெற்றது. பின் மேடையில் இருந்த சீனியர் பேராசிரியர் ஒருவர் மைக்கில்

"அனைத்து மாணவர்களும் தம்முடைய டிபார்ட்மெண்டில் வருகைப் பதிவை பதிந்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.


நிகழ்ச்சி முடிந்ததும் விஷான் தன் பக்கமாக திரும்பி பார்த்து அதிர்ந்தான். அதற்கு காரணம் தோழியர் மூவரும் அடுத்தவர் தோள் சாய்ந்து உறங்கி கொண்டிருந்தனர்.


ஹே! லூசுங்களா…. எழுந்திரிச்சி தொலைங்க! ... என்று விஷான் சொல்லவும் தர்ஷினி மலங்க மலங்க முழித்து கொண்டும் , சஹி கண்ணை கசக்கி விட்டு என்னடி!....இப்போ தானே பங்ஷன் ஆரம்பித்தது அதுக்குள்ள முடிந்துந்துருச்சா ….எனவும் அதற்கு பிரியா "ஆமாண்டி !...இப்போ தானே தூங்க ஆரம்பிச்சோம் இன்னும் கொஞ்ச நேரம் பிரின்ஸ்பால் சார் பேசி இருக்கலாம்"... என்று சொன்ன நிமிடம் மூவர் தலையிலும் விஷான்

கொட்டிருந்தான்.


அம்மா !....என்று மூவரும் அலறிக்கொண்டே தலையை தடவி விட்டு" ஏன்டா…. பிசாசே…. எங்களை அடிச்ச" என்று எகிறவும் கண்களால் ஆடிடோரியத்தை காட்ட அங்கே இவர்கள் நால்வரை தவிர வேறொருவருமில்லை. தோழிகள் விஷானை பார்த்து அசடு வழிந்தனர்.


உடனே சஹி, சமாளிக்கும் விதமாக "அதுவந்து…..அதுவந்து….விஷூக்குட்டி !....அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை …."இருட்டுல இங்கிலீஷ கேட்டாலே தூக்கம் தன்னாலே வந்துடுது ".....எனவும் என் கிரகம் உங்க கூட ஸ்கூல்ல இருந்து குப்பை கொட்ட சொல்லுது! என்று கடிந்து விட்டு டிபார்ட்மெண்டில் தங்களது பெயரை பதிவு செய்து விட்டு வெளியே வந்தனர்.


தர்ஷினி ..கொஞ்சம் பூசிய உடல் வாகு கொண்டவள். அவளால் பசியை பொறுக்க முடியாது... ஏதாவது வாயில் மென்று கொண்டே இருப்பவள். இன்று கல்லூரியில் முதல் நாள் எனவும் கிளம்பிய வேகத்தில் சாப்பிட ஏதும் எடுக்காமல் வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது.


அதை தாங்க மாட்டாமல் அவள் சொல்லவும் விஷான் அவர்களை கல்லூரியின் அருகே இருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு கூட்டிச் சென்றான்.


பெண்கள் மூவரும் கேள்வியாக பார்க்கவும் "கேண்டீனில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இங்கே அழைத்து வந்ததாக சொல்லவும்" நால்வரும் காலியாக இருந்த டேபிள் நோக்கி சென்றனர்.


ரெஸ்டாரண்டில் மெலிதான இசையில் பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்க ,அவரவர்க்கு தேவையானதை ஆர்டர் செய்து விட்டுஅதை

ரசித்தவாறே கல்லூரி பற்றி பொதுவான விஷயங்களை பேச ஆரம்பித்தனர்.


பிரியா, என்ன இன்னைக்கு கிளாஸ் அவ்ளோ தானா? என்று கேட்கவும் விஷான் ஃபர்ஸ்ட் டே…. என்பதால் சிறு அறிமுகம் மட்டுமே..

நாளையில் இருந்து ரெகுலரா கிளாஸ் நடக்கும்.எல்லாரும் போய் சீனியர் மாணவர்களை பார்த்து டிபார்ட்மெண்டில் நடக்கும் ஈவன்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவன் கூறிக் கொண்டு இருக்கையில் ஆர்டர் செய்தவைகளை கொண்டு வரவும் சரியாக இருந்தது.


சஹி, அவளின் கையில் இருந்த பேக், செல்போனை விஷானிடம் கொடுத்து ஓரமாக டேபிளின் மீது வைக்க சொன்னாள். ஆனால் விஷான் பேக்கை மட்டும் டேபிளில் வைத்து விட்டு செல்லை தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டதை சஹி அறியவில்லை. ஒரு வேளை அதை அவள் அறிந்திருந்தால் வரப் போகும் விபரீதத்தை தடுத்திருக்கலாமோ?


நால்வரும் சாப்பிட்டு வெளியே வருவதற்கும் அவன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.


சஹி, பிரியா, தர்ஷினி, விஷான் நால்வரும் சிறு வயதில் இருந்தே ஒரே ஏரியா அது மட்டுமல்ல ஒரே பள்ளி, ஒரே வகுப்பு தோழர், தோழிகள்.நால்வரின் பெற்றோரும் நன்கு அறிமுகமானவர்கள். ஆதலால் இவர்கள் நட்பும் விருட்சம் அடைந்து இது நாள் வரை எந்த தடங்கலுமின்றி தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருக்க அதில் கல் வீசி கலங்க வைக்க ஒருவன் வருகிறான் என யாருக்கும் தெரியவில்லை.


சஹி, விஷானிடம் டேய்! விஷுக்குட்டி …..எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பஸ்ல போலாமா? ஆசையா இருக்கு….


விஷான், ம்ம் அதுக்கு நீ கங்கா மாமிக்கிட்ட பர்மிஷன் வாங்கணுமே…. என்று கூறவும் தர்ஷினியும் பிரியாவும் அதை ஆமோதித்தனர்.

சரி நான் எங்கம்மா கிட்ட கால் பண்ணி கேட்கிறேன் என்று சொல்லி விட்டு விஷானிடம் தன் மொபைலை கேட்டாள்.


அவளது மொபைலை தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டதை மறந்த விஷான் ரெஸ்டாரெண்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று கூறவும் உடனே சஹி, நான் போய் மொபைலை எடுத்துட்டு வர்றேன் சொல்லிய படி உள்ளே நுழைய போகையில் தன் மொபைலில் பேச சொல்லி விஷான் கொடுக்கவும் அதை மறுத்து விட்டு இல்லை விஷூ அம்மா உன் மொபைலை வாங்கி பேசினால் என்ன ஏதுன்னு பதறுவாங்க... நான் போய் அதை எடுத்து வரேன் என்று உள்ளே சென்றாள்.


ரெஸ்டாரெண்டுக்குள் அவள் நுழைந்த போது …..


" அடியே என் தேகம்

முற்றும் சுற்றி கொண்ட

கொடியே உன் எண்ணம்

என்னவோ சகியே என்னை

கொஞ்சம் கொஞ்சம் கொத்தி

தின்னும் கிளியே என்னை

கொல்லும் எண்ணமோ….."


என்று பாடல் ஒலிக்கவும்

அவர்கள் அமர்ந்து இருந்த இடத்தில் ஒருவன் அதை ரசித்து கேட்டுக் கொண்டே சஹியின் மொபைலை நோண்டி கொண்டு இருந்தான்.அவனும் அவள் வைத்திருக்கும் அதே மாடலில் மொபைல் வைத்திருந்தான். ( ஆனால் இது அவளுக்கு தெரியாது அல்லவா).


இதைக் கண்ட சஹி, கோபத்தோடு அவனருகில் சென்று ஹலோ மிஸ்டர்! இப்படி தான் அடுத்தவங்க மொபைல் விட்டுட்டு போனா உடனே அதை எடுத்து பார்க்க வேண்டுமா? கொஞ்சம் கூட மேனர்ஸ்ங்கறதே இல்லையா? இடியட் …..என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.


அவள் சொல்வதை கேட்டு நடந்ததை ஓரளவு புரிந்து கொண்டவன் இல்லைங்க …. நீங்க என்று பதில் சொல்ல தொடங்க ஆரம்பிக்கையில் அவள் கோபம் கொண்டு கூறிய வார்த்தையில் அவனின் நரம்பு புடைத்தது…..


தர்ஷினி விஷானிடம், டேய் வச்சிருந்த காசு எல்லாத்தையும் ஹோட்டலுக்கு அழுதிட்டு இப்போ பஸ்ல போக காசு இருக்காடா உன்கிட்ட !....என்று கேட்கவும் இரு பார்க்கிறேன் அப்படி இல்லாட்டி சஹியிடம் தான் டிக்கெட் எடுக்க சொல்லணும் என்றான்.


விஷான் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுக்க கை வைக்க அங்கே இருந்தது சஹியின் மொபைல்…..( விதி!......)


உடனே பதறிப்போய் தர்ஷினி மற்றும் பிரியாவிடம் "சஹி... மொபைல் என்கிட்ட இருக்கு நான் போய் அவளை கூட்டி வரேன் நீங்கள் இங்கே வெயிட் பண்ணுங்க" எனவும் இருவரும் சரி என்றனர்.


விஷான் ஹோட்டலில் நுழையும் போதே சஹி யாரோ ஒருவனிடம் சத்தம் போடுவதை கேட்டு அவளிடம் விரைந்தான்.


"சஹி என்னாச்சு? ஏன்? இவரை சத்தம் போடுற…. "என்று கூறவும் "இவன் என் மொபைலை எடுத்ததும் இல்லாமல் திறந்து பார்த்துட்டு இருக்கான் டா அறிவுகெட்டவன்!!!கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாதவன்" என்று கடுப்பாக கூறவும்….


"என் பெயர் இவன் இல்லை இளஞ்செழியன்" என்று சொல்லவும் அதற்கு சஹி, "ஆமா இவர் பேரை நான் கல்வெட்டுல பொரிக்கவும் வறுக்கவும் போறேன் "அதனால தெரிஞ்சு வச்சுக்க …..என்று சொல்லவும் நிலைமை விபரீதம் ஆகும் முன் விஷான் அவளின் மொபைலை எடுத்து காட்டினான்.


அதைப் பார்த்த சஹி விஹானிடம் 'அட நாதாரி!... மொபைலை இவன் முன்னாடியேவா காட்டுவ!....இப்போ இவன்ட்ட என்னடா சொல்லுவேன்?.... 'என்று மனதுக்குள் பேசினாள்.


பின்னர் அசட்டு சிரிப்புடன் செழியனிடம் "சாரி சார் !நான் சும்மா ப்ராங்க் பண்ணேண் அங்கே பாருங்க கேமரா ….என்று சமாளிக்க(அது சிசி டிவி முருகேசா….) உடனே

விஹான், செழியனிடம்" சார்! சாரி சார் ….ஏதோ தெரியாம பேசிட்டா மொபைல் என்கிட்ட இருக்கறது அவளுக்கு தெரியவில்லை நானும் சொல்லமறந்துட்டேன் எங்களை மன்னிச்சிடுங்க சார்".


செழியன் இருவரையும் பார்த்து சரி நான் மன்னிச்சிட்டேன் என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டு சஹியை பார்த்து "உன்கிட்ட ஒன்னு சொல்லணும் "என சொல்லவும் சஹி விஷானை பார்க்க அவன் செழியனிடம் எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்கள்! சார் ...என்றான்.


நீங்க இல்லாதப்ப தானே அவங்க என்னை திட்டுனாங்க சோ நான் தனியாக தான் அவங்க கிட்ட பேசுவேன் உங்கள் ப்ரெண்ட எதுவும் செஞ்சிர மாட்டேன் என்னை நீங்கள் நம்பலாம்.(பெரிய இவரு….)


சஹி, விஷானிடம் "இவனை கண்டு எனக்கு ஒன்னும் பயமில்லை நீ இங்கே நில்லுடா! நான் போய் பேசிட்டு வரேன்... "என்று சொல்லிவிட்டு செழியனுடன் இரண்டு டேபிள் தள்ளி சென்றாள்.


"சொல்லுங்கள் மிஸ்டர்! என்ன பேசணும் என்கிட்ட?" என்று சஹி செழியனிடம் கேட்கவும் "நீ கேட்ட சாரியில் அப்படியே என் மனசு குளிர்ந்து போச்சு... அப்படியே உங்கிட்ட மேனர்ஸ பத்தி எனக்கு கற்றுதர டியூஷன் எடுப்பீங்களான்னு கேட்க தான் தனியா பேசணும்னு சொன்னேன் "என்று நக்கலாக சொல்லவும் அவன் பேச்சை கேட்டு அவளுக்கு கோபம் பெருகியது.


அவளின் முக பாவனைகளை பார்த்து விட்டு அவன் நக்கல் பேச்சை விட்டுவிட்டு முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டு கடுமையான குரலில் என்னடி கோபம் பொங்குதோ? என கேட்கவும் அவனின் பேச்சில் அவள் அதிர்ந்தாள்.
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-3


அவனது என்னடி?….என்ற சொல்லில் கோபம் கொண்டு அவள் பேச தொடங்கும் போதே செழியன் "நீதானேடி சொன்ன!.... எனக்கு மேனர்ஸ பத்தி தெரியாதுன்னு அப்பறம் எப்படி அதை என்கிட்ட நீ எதிர் பார்க்கலாம்? …...ஆமா, முதல்ல இதுக்கு பதில் சொல்லு" எனவும்

சஹி, அவனிடம் கடுப்பாக முகத்தை வைத்து கொண்டு" கேளுங்க" எனவும்….


அதற்கு செழியனோ " நான் யாருனே உனக்கு தெரியாது…. அப்படி இருக்கும் போது நீ வந்து வான்டெட் ஆஹ் என்கிட்ட பேசுறியே".... என்று கேட்க,


சஹியோ, " அதுக்கு என்ன இப்போ" என்று கேட்க… அதற்கு அவன் " இல்லடி! யாருன்னு தெரியாத என்கிட்ட... எடுத்த

எடுப்புலயே வந்து என்ன ஆச்சுன்னு கொஞ்சம் கூட யோசிக்காம வந்து என்னை திட்டுறியே…. பர்ஸ்ட் உனக்கு மேனர்ஸ் இருக்கா" என்று கேட்கவும்(கரெக்டா கேக்குறான் பய)


"ஏன்?.. என் மேனர்ஸ்க்கு என்ன குறைச்சல்" என்று எகிறவும்…. அவனும் " சரி! நானும் அதே தான் சொல்றேன்… என்னோட மேனர்ஸ்க்கு என்ன குறைக்கண்டடி" பதிலுக்கு எகிற…



சஹி, "இங்கே பாருங்க!... நாங்கள் உட்கார்ந்திருந்த டேபிளில் நீங்கள் உட்கார்ந்து இருந்தீங்க …….அதேபோல் என் மொபைல் மாதிரி நீங்களும்

வச்சிருந்தீங்க " (அட இது வடிவேல் சொல்ற மாறி நினைச்சிகங்க) என்று சொல்லும்போதே அவன் இடையிட்டு "ஹலோ மிஸ்! ஒரே மாதிரி மொபைல் தான் கம்பெனி காரன் தயாரிக்கிறான். நீங்க வேணும்னா உலகத்தில் இல்லாத மாடலில் மொபைல் வாங்கிக்கங்க " என்று கிண்டலாக கூறவும்


இவன்கிட்ட பேசுவதே வேஸ்ட்….என்று நகர நினைக்கையில் அவளின் எண்ணவோட்டத்தை கணித்து வழிமறித்து நின்றான்.



அவனின் செய்கை மேலும் அவளை கடுப்பாக்க" நான் தான் சாரி கேட்டுட்டேன்ல சார் இன்னும் என்ன வேண்டும் "என்று கேட்க அவன் அவளை பார்த்து கண்ணடித்து விட்டு" என்னை பார்த்து இதுவரை யாரும் இப்புடி திட்டிருக்க மாட்டாங்க …. மேனர்ஸ் பத்தி இனிமே உனக்கு எப்படி சொல்லித் தரேன்னு பாருடி!..... என்று சொல்லிவிட்டு அவள் ஏதும் பேசும் முன் வாசல் நோக்கி சென்றிருந்தான்.


செழியன் சென்றதைக் கண்டு விஷான் சஹியிடம் வந்து "அவர்தான் போய்ட்டாரே இன்னும் அங்கே என்ன பார்வை? ஒருவேளை அவர் பார்க்க ஹண்ட்சமா இருக்காருன்னு…. அவரோட அழகுல மெய் மறந்து நின்னுடியோ…" என்று சிறு சிரிப்புடன் கேட்க " முதலில் அவன் சொன்னதை கேட்காமல் தனக்குள் உழண்டு கொண்டிருந்த சஹி பின் விஷானின் கிண்டல் உணர்ந்து கடுப்பாக " ஹ்ம்ம்… உன் தலை.. அவன் என்கிட்ட…. " என்று ஆரம்பிக்கும் போதே " சஹி….தப்பு நம்ம மேல தான். இனிமேல் அவசரப் பட்டு வார்த்தைகளை விடாதே , யோசிச்சு பேசு" என்று அறிவுரை கூறவும் தலையாட்டி விட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்து அங்கு காத்திருந்த தர்ஷினி மற்றும் பிரியாவுடன் இணைந்து கொண்டனர்.


தர்ஷினி, "இரண்டு பேரும் இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? இதோட ஐந்து பஸ் கிராஸ் பண்ணி போய்ருச்சி பக்கிங்களா!...." என்று கேட்க விஷான், சஹியிடம்.." நீ மாமிக்கு கால் பண்ணி பஸ்ல வரேன்னு சொல்லு "என்று சொல்லிவிட்டு தர்ஷினி மற்றும் பிரியாவிடம் நடந்ததை சொல்லி முடிக்கவும் சஹி தன் அம்மாவிடம் சம்மதம் கேட்கவும் சரியாக இருந்தது.


கங்கா, சஹியிடம் பார்த்து பத்திரமாக வருமாறு சொல்லிவிட்டு அவளது அழைப்பை துண்டித்தார்.


"ஏண்டி! சஹி என்று பிரியா கூப்பிடவும்..ஹ்ம்ம்! என்னடி? என்று இவள் கேட்க…


"ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே" என்று பிரியா சொல்லவும் அவள் கேக்கும் தோரணையிலே விஷான், சஹி, தர்ஷினி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு விஷான் சஹியிடம் கண்ணை காட்ட அதற்கு சஹியும் " நான் பார்த்துக்கொள்கிறேன் …. நீங்க அமைதியாயிருங்க .… என்று கண்ணால் பதில் சொல்லிவிட்டு பிரியாவை கேட்க சொன்னாள்"


"அது ஒண்ணுமில்லைடி …. ஹ்ம்ம் அது வந்து… அது வந்து… என்று இழுக்க…இப்ப மட்டும் நீ சொல்லி தொலையல உன்னை அப்படியே நீ இழுத்த இழுப்புக்கு உன்னை கொன்றுவேன்டி" என்று சஹி கத்தினாள்.


"சரிடி... சரி…" என்று சஹியை சமாதான படுத்தி விட்டு பிரியா கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.


"இப்போ! உன்கூட சண்டை போட்டாங்கல்ல.. அவங்க ரொம்ப ஹாண்ட்ஸமா இருந்தாங்கன்னு விஷான் சொன்னான்…. அப்போ நீ எங்களை ஏண்டி! கூப்பிடல…. நாங்களும் அந்த அழகை ரசிச்சிருப்போம்ல என்று ஒரு வித ஏக்க குரலில் சொல்ல ….


"அடியே! சோடபுட்டி…. உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டி" என்று சஹி, பிரியாவை துரத்த.. விஷான் மற்றும் தர்ஷினி, பிரியாவை மறைத்து கொண்டு சஹியிடம்" விடுடி! … ஏதோ தெரியாம கேட்டுட்டா.. சும்மா கலாய்க்க கேட்டுருப்பா" என்று கூறவும்..


"எது கலாய்க்க கேட்டாளா?... அவன் பேசுன பேச்சுக்கு இவ என்கிட்ட அவனை பத்தி கேட்கலாமா" என்று எகிற ,பிரியாவே அவள் கோபத்தில் பம்மிக்கொண்டு " ஐயோ! எண்ட சஹி தெய்வமே!அறியா பிள்ளை இந்த பிரியா… தெரியாமல் கேட்டுட்டேன் விட்டுறி" என்று சமாதானம் சொல்ல சஹியும் அவள் முதுகில் அடித்து விட்டு அமைதி ஆனாள்..


பின் அனைவரும் பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு சென்றனர்.

அவர்கள் பஸ் ஏறுவதை தன் காரில் அமர்ந்து செழியன் பார்த்து கொண்டு இருந்தான். அவன் மனதில் சஹியை பற்றிய எண்ணங்களே அலைக் கழிந்தன.

"என்ன! தைரியமடி… என்னை பார்த்து அறிவு கெட்டவன், மேனர்ஸ் தெரியாதவன்னு சொல்ற… உனக்கு இருக்குடி… என்கிட்ட மாட்டாமலா போவ" என்று மனதுக்குள் கூறினான்.


அன்றிரவு சஹி தன் அம்மாவிடம் அன்றைய நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டு இருந்தாள். நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தவள் ஹோட்டலில் நடந்ததை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டாள்.( எப்படி, அவள் மேல தப்பு வச்சிட்டு சொல்லுவா)


இரு வாரங்கள் கழித்து…..


டேய்… விஷுக்குட்டி! என்னடா இது?… என்று சஹி கேட்க.. எது?என்று விஷான் கேட்கவும் அவனை முறைத்து விட்டு "அடேய்! நான் கேட்டு முடிக்கறதுக்குள்ள நீ ஏதும் சொல்லாதடா… முதல்ல என்னை கேட்கவிடு என்று கூற அவனோ " சரி!கேளு…. எனவும்,


சஹி.. "நமக்கு ரெண்டு நாள் காலேஜ் லீவு விட்டதுல இங்க இருந்த மரம் எங்கடா காணோம் … ஒரு வேளை அந்த மரத்துல நெறைய பேரு ஹார்டின் விட்டதுல கோவப்பட்டு அப்படியே அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்குமோ" என்று தாடையில் விரல் வைத்து பேசிக்கொண்டே யோசிக்கவும்…

( அது, ஏன்மா! அம்மா வீடு போகப் போகுது…. உன் யோசனை பார்த்து நாங்க தான் போகணும்)


விஷானோ தன் உதடு பிதுக்கி தெரியாது…. என்று பாவனையில் சொல்ல அதற்கு தர்ஷினி" அதுவாடி சஹி! அது அம்மா வீட்டுக்கு போகலடி… மரம் இங்க இருந்தா நல்லாயிருக்காதுன்னு… பெருசா ரோடு போடுறதுக்கு தூக்கிட்டாங்கடி… " என்று சொல்ல "ச்ச! நூறு பேருக்கு நிழல் கொடுத்த மரம்டி, அது இருந்தப்ப தெரியாத நிழல்லோட அருமை… இப்போ அடிக்கிற வெயிலில் தெரியுது…" என்று சத்தமா புலம்பினாள்.( எம்மோவ்! கொஞ்சம் சவுண்ட் கம்மி பண்ணி பேசுமா, புடிச்சு உள்ளே போட போறாங்க)


விஷான், " கொஞ்ச நேரம் புலம்பாம இரு... சஹி, பஸ் இப்போ வந்துரும்… வேற எங்கையாச்சும் நிழல் இருக்கானு பாரு…." என்று சொல்லவும், தர்ஷினியோ.. " ஹே! சஹி… மாமி! காலையில உன் பேக்ல குடை வச்சாங்க பாரு.. அதை விரிடி, எல்லாம் அதுல நிக்கலாம்… கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கும்" என்று சொன்னாள்.


"ஹ்ம்ம்… குடைக்கு கீழ நின்னாலும் வெயிலின் தாக்கம் தாங்கிக்க முடியலை…." என்று கூறிக் கொண்டு இருக்கையிலேயே பிரியா , சஹியை பார்த்து " ஏண்டி! என் ஒரு ஆளுக்காக நீங்க ஏன் வீட்ல கார் இருந்தும் பஸ்ல வரணும்…. பேசாம கார்ல வரலாம்ல" என்று வெயிலில் தன் நண்பர்கள் படும் வேதனை தாளாமல் கேட்கவும்….


சஹி, பதில் கூற துவங்கும் முன் விஷான் முந்தி கொண்டு " நீங்க தான் எங்க கூட கார்ல வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க….அதுதான் நீ வராத கார்ல நாங்களும் வரலை… அதோட பஸ்ல வர ஜாலி கார்ல வராது…. என்று சொல்ல மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.


பிரியாவும், தன் நண்பர்களை நினைத்து பெருமிதம் கொண்டாள். பின் அவர்கள் செல்லும் பேருந்து வரவும் ஏறிக்கொண்டனர்...


நடந்தவை அனைத்தையும் காரில் இருந்து இரு விழிகள் சஹியின் பேச்சை கேட்டு கொண்டு அவளை ரசனையுடன் பார்த்து கொண்டு இருந்தது… அதன் மனத்திலோ ' இந்த கேரக்டர் தானடி என்னை உன் பக்கம் சுண்டி இழுக்குது…சீக்கிரம் உன்னை என்கிட்ட வர வைச்சிறனும்…. என்று பேசிக்கொண்டது..


அன்று இரவு…


சஹி, வழக்கம் போல் இன்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கங்காவிடம் சொல்லி கொண்டிருந்தாள். அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளின் கண்களும், இதழ் பிரியும் அழகில் அவளின் பற்களும் அவ்ளோ அழகாக இருக்க அதை ரசித்து பார்த்துக்கொண்டே கங்கா அவள் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டி கொண்டிருந்தார்..


அப்போது வீட்டினுள்ளே நுழைந்த மூர்த்தி, ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை பார்த்து சிரித்துவிட்டு தனதறையில் நுழைந்தார்.


அவரை இருவரும் ஆச்சரியமாக பார்த்தனர். ஏனெனில் மூர்த்தி கம்பெனி விட்டு நேரம் ரொம்ப லேட்டாக தான் இருக்கும்.பின் மனைவி மற்றும் மகள் இருவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு தான் ரூமிற்கு செல்வார்...


ஆனால் இன்று ஏதோ ஒரு நினைவில் யாரிடமும் பேசாமல் சென்றது தாய், மகள் இருவருக்கும் மனக் குழப்பத்தை தந்தது.


மூர்த்தி சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிட்டதால் அவருக்கு காஃபி கலந்து எடுத்துக்கொண்டு அவர்களின் ரூமை திறந்து உள்ளே செல்வதற்கும் மூர்த்தி, முகம் கழுவி வருவதற்கும் சரியாக இருந்தது.


"என்னங்க! என்னாச்சு? ஏதாச்சும் பிரச்சினையா?" ...என்று கங்கா கேட்க பிரச்சினையெல்லாம் ஒன்றுமில்லை…. என சமாளிக்கவும் கங்கா வேறு ஏதேனும் கேள்விகள் கேட்கும் முன் சரி! நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கீழ வரேன்… என்று அனுப்பி வைத்தார்…..



யானைக்கும் அடி சறுக்கும் என்று அவர் வாழ்க்கையில் முதல் அடியை கொடுத்திருந்தான் அவன்.


வாழ்க்கையில் நாம தெரிஞ்சோ தெரியாமலோ அல்லது விளையாட்டாக செய்த செயல்கள் நம்மை அதற்கு உண்டான நேரத்தில் சரியான சமயத்தில் சரியான முறையில் நம்மை வந்து தாக்கும்.


ஏன் எதற்கு என நாம ஆராய்ச்சி செய்து அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்யற நிமிடத்தில் நாம் செய்த வினை விநாடியில் நம்மை மீண்டு வராத அளவுக்கு அதிகமாக தாக்கி இருக்கும்.


அப்படியே மீண்டு வந்தாலும் அது திருப்பி கொடுத்ததை பார்த்தால் மனம் வலிக்கும்.


நாம் யாருக்கு தீங்கிழைத்தோமோ அவர்கள் நம்மை வஞ்சம் தீர்க்காமல் விட்டு விட்டாலும் அவர்கள் செய்த தானங்களோ இல்லை அவர்களின் விதைகளோ வஞ்சம் தீர்க்காமல் போகாது.


அதே நேரம் அங்கே கொக்கலி கொட்டி சிரித்து கொண்டிருந்தான் ஒருவன்...
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. சகோஸ் இதோ! ஜி(எ)த்தனின் சஹியிவள்... அத்தியாயம் -4 பதிந்து இருக்கிறேன்.... உங்கள் கருத்துக்களை கூறுங்கள்... கேட்க ஆவலா இருக்கேன். நன்றி!😍😍

அத்தியாயம் -4


அன்றைய நாள் அந்த அலுவலகத்தில் எல்லோரும் பரபரப்பாக பைலை எடுத்து கொண்டு மாடியில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தனர்.


மிகப்பெரிய அளவில் கட்டுமான பணிக்கான டெண்டர் விடப்பட்டு அதற்குரிய அமௌண்ட் கோட் செய்து அனுப்பி வைத்து இன்று டெண்டர் யார் கைக்கு செல்லப் போகிறது எனப் பார்க்க அனைவரும் காத்திருந்தனர்.


எம்.எம். கன்ஸ்ட்ரக்க்ஷன் சார்பில் மகேஸ்வர மூர்த்தி மற்றும் அவரது பி.ஏ. ஜீவா வந்திருந்தனர். இந்த டெண்டரானது சுமார் 300 கோடி மதிப்புள்ள பிராஜெக்ட்.மிகப்பெரிய மருத்துவ கல்லூரி, ஆய்வகம்,நூலகம் என சகல வசதிகளும் அதில் இருக்குமாறு அமைப்பதற்கு டெண்டர் அரசு சார்பில் விடப்பட்டு உள்ளது.


டெண்டர் அறிக்கை சரிபார்த்து அங்கே அதிகாரி அமர்ந்தவுடன் மூர்த்தி தன் பி.ஏ. ஜீவாவை திரும்பி பார்த்தார்.


ஏனெனில் அமெளண்ட் கோட் செய்த போது அறையில் இருவர் மட்டுமே இருந்ததால் அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. மிகக்குறைந்த அளவிலேயே அமௌண்ட் கோட் செய்யப்பட்டதால் இவர்களை தவிர வேறு யாருக்கும் டெண்டர் தர முடியாது என்று நம்பி இறுமாந்து இருந்தனர்.


ஜீவா, மகேஸ்வரமூர்த்தியின் ஒன்றுவிட்ட அண்ணன் ஈஸ்வர மூர்த்தியின் மகன்.அவனும் கட்டடக்கலை படித்துவிட்டு வேலை தேடும் சமயம் தமக்கு உதவியாக இருக்கும்படிக்கும், அத்தோடு மூர்த்தியிடம் தொழில் கற்றுக்கொண்டு அதில் இருக்கும் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறுவது சுலபம்… ஆகையால், ஈஸ்வரன் தன் மகன் ஜீவாவிடம் ,"மூர்த்தி சொல்கிறப்படி நடந்துக்கொள்… "எனவும் ஜீவா எம்.எம். கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்க ஒத்துக்கொண்டான்…


ஜீவாவிற்கு, முதலில் எம்.எம்.கன்ஸ்ட்ரக்ஷனில் வேலைக்கு போவதற்கு விருப்பமில்லை…. சாஹித்யா தான் மூர்த்தி, ஒருநாள் வீட்டில் கங்காவிடம் ஒரு நம்பிக்கையான பி.ஏ. என்கூட இருந்தால் நன்றாக இருக்கும்…. என்று சொன்னதை கேட்டுவிட்டு ஜீவாவிடம் கெஞ்சி கொஞ்சி கேட்கவும் ஜீவா வேறு வழியில்லாமல் அங்கே வேலைக்கு போக சம்மதித்தான்….


இப்போது விடப்படும் டெண்டர், பல கோடி ரூபாயில் இருப்பதால் அங்கே நிறைய கான்ஸ்ட்ரக்ஷனின் உரிமையாளர்கள் அனைவரும் ஆஜராகி இருந்தனர்.


மூர்த்தி, டெண்டர் விடப்படும் இடத்திற்கே வரவும் இது எவ்ளோ முக்கியமான டெண்டர் … என அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.


மூர்த்தியே,இதில் கலந்து கொண்டதால் அங்கே இருந்த கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் அனைவரும் இந்த டெண்டர் இனி தனக்கு கிடைக்காது என்ற மனநிலையில் இருந்தனர். இந்த டெண்டர் இனி மூர்த்திக்கு தான் சொந்தம்… என கிசுகிசுக்க அதை கேட்ட மூர்த்தி கர்வமாக நிமிர்ந்து அமர்ந்தார்.



அதே நேரம் , அந்த ஹாலில் அமர்ந்து இருந்த ஏ.ஜெ. கன்ஸ்ட்ரக்ஷனில் பி.ஏ. வாக இருக்கும் கதிரவன், பரபரப்போடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நொடிக்கு ஒரு தரம் போனை பார்த்துக்கொண்டு இருக்க அதனின் திரையில் அழைப்பு வந்ததிற்கு அடையாளமாக திரையில் எம்.டி. அழைக்கிறார் என எழுத்துகள் மின்னியது.


அவசரமாக, அதன் அழைப்பை ஏற்று, " குட் மார்னிங் சார் …. சொல்லுங்க.. சார்.. சரிங்க சார்…"வார்த்தைக்கு வார்த்தை பணிவுடன் சார் சொல்லி விட்டு ஒரு பெரு மூச்சுடன் போனை வைக்கவும், டெண்டரின் முடிவுகள் அறிவிக்கப்படவும் சரியாக இருந்தது….



அரசின் சார்பில் விடப்படும் இந்த டெண்டர் மிக குறைந்த அளவில் கோட் செய்த ஏ.ஜெ. கன்ஸ்ட்ரக்க்ஷனுக்கு விடப்படுகிறது என்று அறிவிக்க படுகிறது.அதன் உரிமையாளர் வந்து கையொப்பம் இட வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என அறிவிக்கவும் அவன் அந்த அரங்கில் நுழையவும் சரியாக இருந்தது.


அந்த அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் ஏ.ஜெ கன்ஸ்ட்ரக்க்ஷன் எம்.டி யை காண ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.ஏனெனில் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் அவனின் பி.ஏ. கதிரவன் மட்டும் தான் அவன் சார்பாக கலந்து கொள்வான்.அதனால் அவனை காண காத்திருந்தனர்.


பெரிய அளவில் டெண்டர் கிடைத்த மகிழ்ச்சி ஏதுமின்றி எந்த வித ஆரவாரமும் இல்லாமல் அந்த அரங்கில் நுழைந்தான் ஏ.ஜெ.கன்ஸ்ட்ரெக்ஷன் எம்.டி. அபிஜித்.


இருபத்தி ஏழு வயதான அவன், ஆறு அடி உயரத்தில் கம்பீரமான தோற்றம் கொண்ட அவன் அங்கிருந்த அனைவரையும் சிறிதாக்கி அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தான். சிறு வயதில் நீவி விடப்பட்டதால் நீள் விழிகளும் அதற்கு ஏற்றார் போல் வானவில்லின் வளைந்த புருவங்களும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தது. மிளகாயின் கூராக மூக்கும் இதுவரை புகை பிடித்ததில்லை என்பதற்கு சான்றாக இளஞ்சிவப்பு நிற உதடுகளும் அவனின் அடர்ந்த மீசைக்கு இன்னும் எடுப்பாக காட்சியளித்தது. அவன் நடந்து வரும் அசைவில் கருத்த அடர்த்தி மிகுந்த தலைமுடி அங்கும் இங்கும் அசைந்து அவன் கைகளுக்கு அடங்க மறுத்தது.



டெண்டரின் முடிவுகளை கேட்டு மூர்த்தி அதிர்ந்து போய் இருந்தார். இதுவரை அரசின் சார்பில் விடும் அனைத்து டெண்டர்களும் மூர்த்திக்கு மட்டும் தான் கிடைக்கும். இதனால் மற்ற கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் தங்கள் விதியை நொந்து கொள்வார்கள். மூர்த்திக்கு மட்டுமே கிடைக்கும் டெண்டர் என தெரிந்த பிறகு எதற்கு மூர்த்தியிடம் மோதி வீழனும்… என ஒதுங்கி கொள்வார்கள்.


ஆனால், இன்றோ நிலைமையே தலைக்கீழாக இருந்தது…..


மூர்த்தி, ' இது எப்படி சாத்தியம்' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு அவனை கண் அசையாமல் திகைத்துப் போய் பார்த்து கொண்டிருந்தார். ஏனெனில் அவர் கோட் செய்த தொகையை விட சில ஆயிரங்கள் கம்மி செய்து கொடுத்திருந்தான் அவன். இது எப்படி சாத்தியம் இப்புடி ஒரு அமௌண்ட் இந்த டெண்டர்க்கு யாருமே கோட் பண்ணிருக்க மாட்டாங்களே…. என்று இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டே இருந்தார்.


கையொப்பம் இட்டு விட்டு அபிஜித் மூர்த்தியைத் தாண்டி செல்கையில் அவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருந்தாலும் அவன் மனத்துக்குள் ' இதுக்கே இப்புடி ஷாக் ஆனா எப்புடி மூர்த்தி, இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லை' என்று நகைத்து கொண்டிருந்தான்.


அங்கிருந்தோர் அனைவரின் வாழ்த்துக்களையும் சிறு சிரிப்புடன் தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.


அப்போது அங்கிருந்த வேறொரு கன்ஸ்ட்ரக்க்ஷன் எம்.டி. ரகு அவனருகில் வந்து "கங்கிராட்ஸ் மிஸ்டர் அபிஜித்! இந்த பிராஜெக்ட் உங்களுக்கு கிடைக்கும்ன்னு நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.


உடனே அபிஜித்!.... " ஆனால் நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் ரகு! …. அப்படி சொல்லும் போது அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு

எதிர் பார்த்தீர்களா? எப்படி ? அவ்ளோ நம்பிக்கையா? என்று கேட்கவும் " ஆமாம்….. நம்பிக்கை தான்…. இந்த பிராஜெக்ட்டின் உண்மையான மதிப்பை மட்டுமே நான் அவதானித்து அனுப்பியிருந்தேன்.அதனால் எனக்கு அது கிடைக்கும் என நம்பினேன்…." என்று கூறவும்


ரகுவோ…" எனக்கு மட்டுமில்லை… இங்கிருக்க அனைவர்க்கும் ஆச்சரியம் தான்.... என்று சொல்லும் போதே, அபிஜித் தன் ஒற்றைப் புருவத்தை மேலேற்றி " ஏன் ? எதுக்கு ஆச்சரியம்? என்று கேட்க….


அதற்கு ரகு" மூர்த்தியை டெண்டரில் ஜெயிக்க யாராலையும் முடியாதுன்னு நினைச்சப்ப நீங்க முதன் முதலா ஜெயிச்சு காட்டிருக்கிங்க…. வாழ்த்துக்கள்… மிஸ்டர். அபிஜித்… எனவும்


அபிஜித்தோ, ரகுவிடம்…." உங்க வாழ்க்கையில நீங்க யாரை பார்த்தும் வியக்காதிங்க ரகு… மற்றவங்களை விட ஆற்றலிலும் அதிகாரத்திலும் சிறந்து இருப்பதை விட அறிவில் சிறந்து இருக்கணும்னு அரிஸ்டாட்டில் சொல்லிருக்காரு …. அதை நீங்க முயற்சி பண்ணி பாருங்க…. ஜெய்ப்பிங்க...


அத்தோடு பேச்சு முடிந்தது என தன் பி.ஏ.வோடு கிளம்பி விட்டான் அபிஜித்.


******************************************


கல்லூரி தொடங்கிய ஒரு வாரத்திற்கு பின்னர் சஹியும் அவள் நட்புக்களும் நோட்ஸ் எடுப்பதற்கு லைப்ரரி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.


"ஹோய்! "என குரல் கேட்கவும் யாரோ யாரையோ கூப்பிடுறாங்க என கடந்து போக நினைக்கவும்


"ஹே! ஆரஞ்சு கலர் அலமேலு உன்னை தான் அப்படியே கூட்டத்தோடு இங்க வாங்க!..... "என்று அங்கே போடப்பட்டு இருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சீனியர் மாணவர்கள் அழைத்தனர்.அதில் மாணவிகளும் அடக்கம்.


சஹி, விஷானிடம் "இங்கே பாருடா …. மஞ்ச சட்டை மட்டிக்கு உள்ள கொழுப்பை என்னை பார்த்து அலமேலுங்கறான்"... என்று காதில் மெல்ல கிசு கிசுக்க விஷான் அவளை "ஸ்ஸ்ஸ் சஹி பேசாமல் இரு" என்று அவளை அடக்கி அவர்கள் முன் சென்று நின்றனர்.


கூட்டத்தில் இருந்த சீனியர் பெண்ணொருத்தி "ஹோய்! உங்கள் நேமை ஃபர்ஸ்ட் சொல்லுங்கள்…." என்று கூற பிரியா தன் பெயரை கூறத் தொடங்கும் முன்பே சஹி , அவளிடம்" சீனியர்!.... எங்க பெயர் சாஹித்ய தர்ஷினி பிரியா விஷானு"….என்று நீட்டி முழக்க அந்த சீனியர் பெண்" ஹே ! என்ன கிண்டலா……"என்று சீறவும் உடனே சஹி, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை…. சீனியர் ! நாங்கள் நான்கு பேரும் ஒவ்வொருத்தவங்க நேம் சொல்லிட்டு இருந்தா ரொம்பவும் லேட்டாகும்ல…. அப்படி ஆக கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் தான் சீனியர் "......என்று வெளியில் பம்மியபடி சொன்னாலும் மனத்துக்குள் இனிமேல் எங்களை கூப்பிட்டு வச்சு நேமை கேட்கவே கூடாது என்று நக்கலாக நினைத்து கொண்டாள்.


இவளின் நக்கல் பேச்சை பற்றி நட்புகள் அறிந்திருந்ததால் அவர்களும் தங்களின் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர்.

சஹியின் நக்கல் பேச்சை சீனியர்களும் கண்டு கொண்டனர்.


அதில் கடுப்பான அந்த சீனியர் பெண், நாலு பேரோட பேக்கை தன்னிடம் தருமாறு கேட்கவும் நட்புகள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அவளிடம் தந்தனர்.


உடனே விஷான், அப்பெண்ணிடம் "சீனியர் நீங்கள் நினைக்கற அளவுக்கு எங்கள் பேக்கில் ஒன்றும் இருக்காது…" என்று சொல்லும்போதே அந்த பெண் தர்ஷினி வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து விட்டாள்.


அதை கண்டு தர்ஷினி, "சீனியர் !.....ப்ளீஸ்... ப்ளீஸ்…. டிபன் பாக்ஸை மட்டும் எடுக்காதீங்க "என்று கெஞ்சவும் அப்பெண் சிரித்து கொண்டே அதை தன் சகாக்களிடம் தந்துவிட்டு தர்ஷினியிடம் …" இன்னிக்கு ஒருநாள் வீட்டு சாப்பாடு சாப்பிடாம இரு... அப்போதாவது உன் குண்டு உடம்பு குறையட்டும்" என்று கிண்டலாக கூற அங்கிருந்தோர் அனைவரும் கொல் என்று சிரித்தனர்.( இதெல்லாம் இப்போ ஜோக்கு…)


சஹி மற்றும் விஷானுக்கு அவளின் பேச்சை கேட்டு கோபம் வந்தாலும் சீனியர்களை பகைத்து கொண்டு இருந்தால் தங்களுக்கு கிடைக்கும் செமினார், அசைன்மெண்ட் எல்லாவற்றிக்கும் ரெப்பாக சீனியர் தயவு வேண்டும் என்பதால் அப்போது அமைதி காத்தனர்.


அவர்கள் நால்வரின் அமைதி கண்டு சீனியர் மாணவர்கள் "இனிமேல் அடிக்கடி எங்க கிட்ட வந்து உங்கள் டிபன் பாக்ஸை கொடுத்துட்டு போகணும் சரியா? …. என்று அனுப்பி வைத்தனர். ஏனெனில் சஹியின் கேங்கை சும்மா கூப்பிட்டு வம்பிழுத்து விட்டு விட தான் சீனியர் மாணவர்கள் நினைத்திருந்தனர். ( ராக்கிங் எல்லாம் அங்கே இல்ல)


ஆனால் சஹியின் நக்கலை கண்டு தர்ஷினி டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கெத்து காட்டினர்.( ஸப்பா என்ன ஒரு கெத்து?)


சீனியர் செய்த செயலால் தர்ஷினி முகம் கசங்க வருவதைக் கண்டு பிரியா ,விஷான் மற்றும் சஹியிடம் கண்ணைக் காட்ட….. மூவரும் தர்ஷினி யை சமாதானம் படுத்த ஆரம்பித்தனர்.


பிரியா, "விடு தர்ஷினி டிபன் பாக்ஸ் தானேடி!...... நாம் கேண்டீனில் சாப்பிட்டுக்கலாம் டோண்ட் ஃபீல் …." என்று சமாதானம் படுத்த" நான் அதுக்கு ஒன்னும் ஃபீல் பண்ணல" என்று தர்ஷினி கூற…. விஷான்" பின்னே எதுக்குடி ஃபீல் பண்ண?" என்று கேட்கவும் அவள் சொன்னதை கேட்டு மூவருக்கும் மயக்கம் வந்தது.


"என்னடி…. சொல்றே … உண்மையாவா? என்று சஹி கேட்க விஷானும், பிரியாவும் கடவுளுக்கு நன்றி என்று வானத்தை நோக்கி கும்பிட்டுக் கொண்டனர். அவர்களின் செயலால்

தர்ஷினி கேள்வியாக பார்க்க அவர்கள் சொன்ன பதிலில் அவர்களை துரத்த ஆரம்பித்தாள்.


அது வேற ஒன்றுமில்லை தர்ஷினி யூடியூப் பார்த்து தன் நட்புக்களுக்காக அன்று சமைத்து கொண்டு வந்திருந்தாள்.(நல்ல விஷயம் தானே)


சமைத்து கொண்டு வந்தது நல்ல விஷயம் தான்.ஆனால் என்ன சமைச்சு கொண்டு வந்தா என்பதே இங்கு பீதியை கிளப்பியது....
 
Status
Not open for further replies.
Top