All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கதை திரி..

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மான்...7"

duty paid shop-ல் நுழைந்த பிரபாவின் கண்கள் அங்கிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்தாலும் அவளது எண்ணம் முழுவதும் அவன் பார்த்த அந்த பார்வையிலேயே உழன்று கொண்டிருந்தது..

'அவன் யாராக..?. இருக்க கூடும் எதற்காக..?. தன்னை அவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தான்..?. தற்செயலாக பார்த்தானா..?. அல்லது வேண்டுமென்றே பார்த்துக் கொண்டிருந்தானா..?.' இப்படி பல கேள்விகள் அவளை வண்டாய் குடைந்து கொண்டிருக்க... முன்பே குழப்பமான மனநிலையில் இருந்தவள், மீண்டும் மீண்டும் தோன்றிய அவனை பற்றிய எண்ணங்களால் சோர்ந்து போனாள்... அவள் எவ்வளவோ தவிர்க்க முயன்றும் அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை

'ம்ப்ச் நான் ஏன் அவனை பத்தி நினைக்கறேன்... இங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. அதுல அவனும் ஒருத்தன் அவ்வளவுதான். இனி அவனை பத்தி நினைக்க மாட்டேன்' என தனக்குள்ளேயே பேசிக்கொண்டு தலையை இடவலமாக ஆட்டியபடியே வெளியேறி தன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்று அமர்ந்தவள், மெதுவாக தலையை தூக்கி தனக்கு எதிரே இருந்த இருக்கையை பார்க்க அது காலியாக இருந்தது...

அதுக்குள்ளே எங்க போய்ட்டான் என யோசித்தவாறே பார்வையை சுழற்றி தேட

"ஹாய்..! என்னதான தேடற" என்று பின்னாலிருந்து குரல் குடுத்தவாறே அவள் பக்கத்தில் வந்து நெருக்கமாக அமர்ந்தான் அவ(ளை)ள் தேடிக் கொண்டிருந்தவன்

அவனின் இந்த திடீர் செய்கையில் பதறியவள்...

"ஹலோ மிஸ்டர் என்ன பண்ணறிங்க..?. மொதல்ல இங்கிருந்து போங்க யாரவது பார்த்த என்ன பத்தி என்ன நினைப்பாங்க..?." என பதறியவறே கூறியவளை கண்டு புன்னகைத்தவன்....

" ஹேய்..! ரிலாக்ஸ் பேபி..! ரிலாக்ஸ்.. இப்ப எதுக்காக இவ்வளவு கோவ படுற..." என கூலாக கூறியவனை கண்டு

"ஹலோ மிஸ்டர் மைன்ட் யுவர் வேர்ட்ஸ் நீங்க பேபின்னு கூப்பிடறதுக்கு நான் ஒன்னும் குழந்தை இல்ல எனக்கு இருபத்திமூனு வயசாகுது... எதுக்காக என்ன அப்படி முறைச்சு முறைச்சு பாக்கறிங்க.... என கோபமாக கூறியவளை பார்த்து

"ஹா ஹா ஹா ஹா ஹா" என சத்தமாக சிரித்தவன் அவள் முகம் மாறுவதை கண்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு...

" ஒகே ஒகே ரிலாக்ஸ்.... thank you for your information... and என் பேர் ஹலோ மிஸ்டர் இல்ல.. சந்திரசேகர்..." என கெத்தாக சொன்னவன்

"அப்புறம் என்ன சொன்ன..? நான் உன்ன முறைச்சு பக்கறேனா..? ஹா ஹா ஹா குட் ஜோக்.... நீதான் வந்ததுல இருந்து என்ன முறைச்சு முறைச்சு பார்த்துட்டே இருக்க" என முகத்தை ஒருமாதிரி அஷ்டகோணலாக வைத்து... அவளது முகம் பார்த்து கூறிக் கொண்டே அவளை வம்பிழுத்தான்

'அவன் சொன்ன பதிலில் பேந்த பேந்த விழித்தவள், என்னது..?. இவன் சொல்லறத பார்த்தா நாம என்னமோ இவன சைட் அடிக்கற மாதிரி பேசிட்டு இருக்கான்.. ' என மனதில் யோசித்தவாறே, விட்டு கொடுக்க மனமில்லாமல்...

"ஹலோ மிஸ்டர் நான் ஒன்னும் உங்கள பார்க்கல.. நீங்கதான் என்ன முறைச்சு பார்த்திங்க.. இல்லன்னு சும்மா பொய் சொல்லாதிங்க "

"ஒகே பேபி..! நான் உன் அழகுல..! அப்படியே மயங்கி போய் உன்ன பார்த்தேன்னு வச்சுக்குவோம்.. அது எப்படி உனக்கு தெரியும்..?."

" அ...து அது வந்து.... நீங்க என்ன பார்கிறத நான் பார்த்தேன்" என திக்கி திணறி பதில் சொன்னாள்..

"ஸோ அப்ப நீயும் என்ன பார்த்து சைட் அடிச்சுட்டு இருந்திருக்க அப்படித்தான" என நக்கலாக கேட்க...

'இது என்னடா..?. புது வம்பா இருக்கு.. என யோசித்தவள்' இல்லை என மறுப்பாய் தலையசைத்தவாறே...

"நான் ஒன்னும் உங்கள சைட் அடிக்கல... நீங்க என்ன பாக்கறிங்களானு மட்டும் தான் நான் பார்த்தேன்" என உளறிக்கொண்டிருந்தாள்....

'அவள் கட்டுப்பாடில்லாமல் உளறுவதை கண்டு தனக்குள்ளே புன்னகைத்தவன்'

"ஒகே பேபி நான் பாக்கணும்னு தான நீ நினைக்கற... அப்பறம் பார்த்தேன்னு என்கிட்ட சண்டை போட்டா எப்படி பேபி" என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனை பார்த்து அவளுக்கு ஐயோ...! என்றிருந்தது.. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்...

இவ்வளவு நேரம் பலவித முக பாவனைகளை வெளிப்படுத்தி தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவள் திடிரென அமைதியாக அமர்ந்திருந்ததை காண சகியாமல் அவளை இயல்பாக்கும் பொருட்டு...

"ஹேய்..! என்ன பேபி ஆச்சு..." என அன்பாய் விசாரித்தவனை நோக்கி தலையை திருப்பி பார்த்தவள்...

"நான் இதுவரைக்கும் இப்படி பிகேவ் பண்ணாதே இல்ல... உங்கள பார்த்ததுல இருந்துதான் எல்லாமே தப்பு தப்பா நடக்குது" என கூறியவளைக் கண்டு உடலும் உள்ளமும் இருகியவன் முகத்தில் அதை வெளிப்படுத்தாமல் உடனடியாக முகத்திற்கு புன்னகையை கொண்டுவந்து...

"ஒகே... பேபி ரிலாக்ஸ்... இந்த பேச்ச இதோட விட்டறலாம்..."

"நீ அழகா இருக்கறதுனால நான் உன்ன பார்த்தேன்" எனக் கூறியதில் முகம் மலர்ந்தவள்....

"நான் உன்னவிட அழகா இருக்கறதுனால நீ என்ன பார்த்த ஓகேவா பேபி" எனக்கூறியவனை கண்டு போலியாய் முறைத்தாள்

"ஹேய் பேபி... உண்மைய சொன்னா ஏத்துக்கணும்... இப்படி முறைக்க கூடாது" என கூறியவனை பார்த்து புன்னகைத்தவறே...

"அது என்ன பேபி நான் என்ன சின்ன குழந்தையா..?. " என அவனிடம் வினவ

"ம்ம்ம்ம்..." என பலமாக யோசித்தவன்....

"நீ இருபத்திமூனு வருஷம் வளர்ந்த பெரிய குழந்தை.."என சாதாரணமாக தான் அவன் கூறினான்

ஆனால் அதற்கே அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்...

"சரிவா... ரெண்டுபேரும் காப்பி சாப்பிடட்டு வரலாம் " என அவன் அழைக்க அவள் மறுப்பேதும் சொல்லாமல் அவனுடன் அங்கிருந்த காபி ஷாப் நோக்கிச் சென்றாள்...

இரண்டு காப்பி வாங்கி ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு தாங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வரும் பொழுது

"ஆமா நீங்க தமிழா..?. " என காப்பியை உறிஞ்சியவாறே... மிகப் பெரிய கேள்வியை அவனை பார்த்துக் கேட்டாள்..

அவள் கேட்டுகும் பொழுது அவனும் காப்பியை குடித்து விழுங்கிக் கொண்டிருந்தான்... அவள் கேட்ட கேள்வியில் சிரிப்பு வந்து அடி தொண்டையில் காப்பி சிக்கிக் கொண்டு புரை ஏற...

" லொக் லொக் " என்று இரும்பியவன்... கைகளால் தன் தலையை தட்டி தன்னை சமன்செய்து கொண்டு...

"உண்மைலேயே நீ ஒரு வளர்ந்த குழந்தை தாண்டி... இவ்வளவு நேரம் உன்கிட்ட சைனீஸ்லயும் ஜப்பானிஸ்லயுமா பேசிட்டு இருக்கேன்" என புன்னகைத்தவாறே கூறினான்...

அவன் தன்னை திடீரென்று 'டீ' போட்டு கூப்பிட்டது அதிர்ச்சியை அளித்தாலும் அதே நேரம் சந்தோஷத்தையும் சேர்த்தே அளித்தது... இருவேறு உணர்வுகளை ஒரேநேரத்தில் அனுபவித்தவாறே

" இல்ல நீங்க தமிழ்னு தெரியுது... சரி என்ன எப்படி தமிழ்னு கண்டுபிடிச்சிங்க" என அவள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கேட்க முடியாமல் உளறி கொட்டினாள்...

"ம்ம்ம்ம்... இதுக்கு ஐஞ்சு வருசம் உக்காந்தா படிக்கனும்... அதான் உன் முஞ்சில எழுதி ஒட்டிருக்கே இப்படி லூசுத்தனமா தான் கேள்வி கேப்பியா..? உருப்படியா ஏதும் கேக்க மாட்டியா..?" என புன்னகைத்தவாறே அவளை திட்டிக் கொண்டிருந்தான்

அவள் ஏதோ கேட்க வாயெடுக்கும் முன், சைகையால் அதை தடுத்தவன்

" இப்ப என்ன பத்தி தெரிஞ்சுக்கணும் சரியா..? " என கேட்டுவிட்டு அவளை பார்க்க... தன் குட்டு வெளிப்பட்டதில் நாக்கை கடித்துக் கொண்டு புன்னகைத்தவாறே இருக்க... ஒரு நிமிடம் அதை ரசித்தவன்...

"நான் சந்திரசேகர்... பிறந்தது சென்னைல , வளர்ந்தது படிச்சது எல்லாம் லண்டன்ல... அப்பா அம்மா எல்லாரும் சென்னைலதான் இருக்கறாங்க இப்ப சென்னை போறதுக்காக பிளைட்டுக்கு வெய்ட் பண்ணற நேரத்துல பேர் தெரியாத ஒரு வளர்ந்த குழந்தை கிட்ட பேசிட்டு இருக்கேன் இது போதுமா..? இல்ல புல் ஹிஸ்டரி வேணுமா..?" என கேட்டவனை பார்த்து...

" நான் பிரபாவதி ... நானும் சென்னை பொண்ணுதான் படிச்சது வளர்ந்தது எல்லாம் இங்க டெல்லிலதான் இப்ப நானும் சென்னைதான் போயிட்டு இருக்கேன்..." எனக்கூறி

அவனால் தன் வாழ்வே நிலைகுலைய போவதை அறியாமல் "பிரெண்ட்ஸ்" என அவனை நோக்கி கை நீட்டினாள் அந்த வளர்ந்த குழந்தை...

அவளை பற்றிய அனைத்துமே அவன் அறிந்ததுதான் தீர்க்க படவேண்டிய ஒரு பழைய கணக்கை தீர்க்க ஒரு புதிய கணக்கை உருவாக்கி காய் நகர்த்தியவனும் அவன்தானே... இந்த நேரம் அவள் இங்கே நின்று கொண்டிருக்க காரணமும் அவனேதான்

மனதில் வஞ்சம் தீயாய் எரிந்து கொண்டிருக்க உதட்டில் புன்னகையை தவழ விட்டவாறே

"ப்ரெண்ட்ஸ்" எனக்கூறி அவள் கையை பற்றிக் கொள்ளவும் சென்னை செல்லும் பயணிகள் அனைவரும் விமானத்தில் சென்று அமருமாறு ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரவும் சரியாய் இருந்தது.... இருவருமே வெவ்வேறான மனநிலையுடன் விமானத்தை நோக்கி தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.....

மனிதர்கள் தங்களுள் ஆடும் ஆட்டத்தை பார்த்து சிரித்த விதி... தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பொழுது அதை எதிர்த்து வாழ்வது யார்..? வீழ்வது யார்..? பொறுத்திருந்து பார்க்கலாம்....

மயக்கம் தொடரும்....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்....8

விமானத்தில் ஏறி அமர்ந்த இருவருமே வெவ்வேறான மனநிலையில் இருந்தனர்... விமானத்தில் ஆட்கள் குறைவாக இருக்க விமான பணிப்பெண்ணிடம் கேட்டுக்கொண்டு பிராபாவின் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தான் சந்திரசேகர்...

விமானம் கிளம்பி ஓடுபாதையில் பயணித்து மேலேளுகையில், புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டதன் காரணமாக... பிராபாவின் வயிற்றில் ஏதொவொரு குறுகுறுப்புத் தோன்ற, அதரவாக அருகில் அமர்ந்தவனின் கையை பற்றிக்கொண்டாள்..

சந்திரசேகரோ வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை... ஆனால் அவனது மனமோ உலைக்களமாக கொத்திதுக் கொண்டிருந்தது...

'நீ எதற்காக இத்தனை வருடங்களாக இவளை தேடினாய்...? இப்பொழுது என்ன செய்கிறாய்...?.. உன் மனவுறுதி இவ்வளவுதானா...? கொன்றுவிடு... இபொழுதே அவளது கழுத்தை நெரித்து கொன்றுவிடு...' என அவனது மனசாட்சி கேள்விகள் எழுப்பி கட்டளையிட்டுக் கொண்டிருக்க...

அவளை கொல்ல வேண்டுமென பரபரவென துடித்த தன் கைகளை சிரமப்பட்டு அடக்கியதில்... அவனது உடல் இறுகி விறைத்தது... அவனது உடல் இறுக்கத்தை அவனை பற்றியிருந்த கைகளினால் உணர்ந்து கொண்டவள்... அவனை பற்றியிருந்த தனது கைகளை விடுவித்துக் கொண்டு மெதுவாக தனது தலையை நிமிர்த்தி அவனை பார்க்க அவன் கண்களை மூடி தலையை பின்னால் சரித்தவாறு அமர்ந்திருந்தான்....

'சற்றுமுன் விமான நிலையத்தல் தன்னிடம் சகஜமாக கலகலப்பாக உரையாடியவன்... இப்பொழுது ஏன்..? இப்படி இறுகிப்போய் அமர்ந்திருக்கிறான்' என தனக்குள்ளே எண்ணியவள்... ஒருவேளை இவனுக்கும் விமானத்தில் செல்வது பயமாக இருக்குமோ...? என அவளாகவே அதற்கு ஒரு விளக்கத்தையும் சொல்லிக் கொண்டு... அவனை சீண்டும் பொருட்டு....

" என்ன பிரெண்ட்...? இப்படி இறுகிப்போய் உக்காந்துட்டு இருக்கறிங்க.... எனக்காவது பிளைட் டேகாஃப் ஆகிறப்பவும் லேண்ட் ஆகிறப்பவும்தான் பயம்... ஆனா உங்களுக்கு பிளைட்ட பார்த்தாலே பயம் போல... என சொல்லி சிரித்தவள்...

" கவலை படாதிங்க பிரெண்ட்.... உங்களுக்கு ஒன்னும் ஆகாது... அப்படியே எதாவது ஆச்சுனா...? நான் என் உயிரை குடுத்தாவது உங்கள காப்பத்தறேன்..." என அவனின் மனநிலை அறியாமல் அவனை சகஜமாக்கும் பொருட்டு சொல்லிக் கொண்டிருக்க...

அவள் பேசுவதை கண்மூடி கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் கடைசியாக சொன்ன வார்த்தை அவனது மூளையில் சென்று தாக்க...

'என்னது உயிரை குடுப்பியா...? அதை எடுக்கத்தான இத்தனை வருஷம் கழிச்சு நானே வந்துருக்கேன்... உன்ன அவ்வளவு சுலபத்துல கொல்ல மாட்டேன்...
உன்ன அணு அணுவா சித்தரவதை செய்தது கொன்னு என் இத்தனை வருஷ வெறிய திர்த்துக்கப் போறேன்... அதுதான் உன்குடும்பத்துக்கு நான் தர தண்டனை ' என மனதில் எண்ணிக் கொண்டவன்.... கொல்லப் போவது யார்...? கொல்லப் படப் போவது யார்...? என்பதை அப்போது அவன் அறியாமல், அவளை பார்த்து உதட்டில் செயற்கையாய் ஒரு புன்னகையை வழிய விட்டவரே...

" என்ன சொன்ன...? பேபி..." என புன்னகையுடனே அவளை நோக்கி திரும்பி, அவளது கண்களை கூர்ந்து பார்த்துக் கெண்டே கேட்டான்...

உருவத்தில் குமரியாக இருந்தும் உள்ளத்தில் குழந்தையாக இருந்தவள்... அவன் ஒரு விஷம் தடவிய இனிப்பு என்பதை அறியாமல்... அவனது பேபி என்ற அழைப்பில் உருகிப்போனாள்...

மெதுவாக தலையை நிமிர்த்தி பார்க்கையில், அவளை அப்படியியே விழுங்கிவிடும் அவனது பார்வையில் நாணமுற்று.. மீண்டும் தலைகவிழ்ந்து

" இல்...ல பிளைட்ல டிராவல் பண்ண என்ன மாதிரியே உங்களுக்கும் பயமோ....னு...? நினைச்சேன்..." வார்த்தைகள் திக்கி திணறி அரை குறையாக அவளுக்கே கேக்காத குரலில் வெளிவந்தது.... அதை கேட்டவனோ...?

"ஹா ஹா ஹா ஹா ஹா " என சத்தமாக சிரித்தவாறே... தனது பேன்ட் பாக்கெட்டின் பின்புறமாக கையை நுழைத்து பர்ஸ்-ஐ வெளியே எடுத்தவன், அதிலிருந்த ஒரு அட்டையை எடுத்து அவளது கையில் திணிக்க, அதை கண்டவளின் கண்கள் அகல திறந்தது...

அது இலகுரக விமானத்தை இயக்குவதற்கான உரிமம்... படிக்கும் பொழுதே spl எனப்படும் student pilot license... ppl எனப்படும் private pilot license-ஐ அங்குள்ள விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்து விமனாத்தை இயக்குவதற்கு பயிற்சி எடுத்திருந்தான்.... பைலட் ஆகவேண்டும் என்ற எண்ணம் ஏதும் அவனிடம் இல்லை ஆனால் பறப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால் அதை எடுத்து வைத்திருந்தான்... அதை பார்த்ததும் அவனிடம் இந்த கேள்வியை ஏன்...? கேட்டோம் என்றாகிவிட்டது... பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள்... அவளது முகத்தை பார்த்தே அவளது மனதினை படித்தவன்...

"இப்ப சொல்லு பேபி... எனக்கு பிளைட்ட பார்த்தா பயமா....?" என புன்னகையுடனே கேட்க...

அவள் இல்லை என்பது போல் இடமும் வலமுமாக தலையை ஆட்டிய படியே சங்கடமாய் அவனை பார்க்க... அதை புரந்து கொண்டவன்...

"ஹேய்..!! பேபி ரிலாக்ஸ்.... இப்ப எதுக்கு முஞ்சிய இபப்டி உம்ம்ம்னு வச்சுருக்க... நீ சொன்னத பத்தி நான் ஒன்னும் நினைக்க மாட்டேன் கவலை படாதே....." என அவளை சகஜ நிலைக்கு கொண்டுவந்து அவளது விருப்பு வெறுப்புகள், பிடித்தது பிடிக்காதது அவளது குடும்பம் இப்படி அனைத்தையும் கேட்டுவிட்டு, அவனை பற்றி அவளுக்கு தேவையானதை மட்டும் கவனமுடன் சொல்லிக் கொண்டு... அவளுடன் சிரித்துப் பேசிய படியே தனது பழைய எண்ணங்களை தற்காலிகமாக மறந்தான்

அவளுடன் இப்படி பேசிக் கொண்டிருப்பதை அவனும் விரும்பினான்... இருவருக்குமே இந்த பயணம் இப்படியே தொடராதா...? என்ற எண்ணம் மேலோங்க... அதற்குள் விமானம் சென்னை வந்தடைந்திருந்தது ....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்....8.1

விமானத்தில் இருந்து இறங்கிய இருவருமே தங்களது உடமைகளை சரிபார்த்து எடுத்துக் கொண்டு வெளியேறும் வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்...

பிரபாவதிக்கோ...! அவனை பிரிய வேண்டுமே...! என்ற என்ன மேலோங்க கவலை அவளது முகத்தில் வந்து குடி கொண்டது... மீண்டும் எங்கு சந்திப்பது...? எப்படி சந்திப்பது...? இந்த உறவு இங்கேயே முடிந்துவிடுமா...? அவனது பெயரையும் படிப்பு உட்பட சில விஷயங்களையும் தவிர்த்து, அவனை பற்றி எதுவும் அவள் அறிந்திருக்கவில்லை... அதை பற்றி யோசித்தவாறே... அவள் நின்று கொண்டிருக்க...

விமானம் சென்னையில் தரையிறங்கும் வரை அவனை விட்டு ஒதுங்கியிருந்த அவனது தீய எண்ணங்கள், மீண்டும் வந்து அவனை தொற்றிக்கொள்ள, அவனது மனமும் உடலும் கணக்க ஆரம்பித்தது... இந்த முறை அத்தகைய எண்ணங்களை அவனால் சுமக்க முடியவில்லை... பதிமூன்று வருடங்களாக அவளை கொல்வதை மட்டுமே தன் வாழ்வின் நோக்கமாக எண்ணியிருந்தவன், அவளை சந்தித்த முதல் நொடியிலிருந்தே தடுமாற ஆரம்பித்தான்... தான் என்ன செய்கிறோம்...? தனக்கு என்ன ஆனது...? எந்த இடத்தில் தான் தடுமாற ஆரம்பித்தோம் என அவனுக்கே புரியவில்லை... பலவித குழப்பமான மனநிலையிலே வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தவன் ஏதொவொரு உள்ளுணர்வு உந்தித்தள்ள, இடவலமாக தலையை திருப்பி பார்வை சுழற்றியவன், அவள் காணாது போகவே... அப்படியே நின்று திரும்பி பார்க்கையில், தனக்குள்ளே எதையோ யோசித்தவாறு கைகளை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருப்பவளை கண்டதும்....

" ம்ப்ச் " என சலித்தவாறே அவளை நோக்கி சென்றவன் அவளது முகத்திற்கு முன்னே தன் கைகளை ஆட்டிக் கொண்டே...

" ஹேய்...! பேபி... என்ன ஆச்சு...? ஏன் இங்கயே நின்னுட்ட...? " என கேள்வியாக வினவ... அதில் தன்னிலை உணர்ந்தவள்....

ஒன்றுமில்லை என்பதைப்போல் மறுப்பாய் தலையசைத்தாள்... வேறு என்ன அவளாள் கூற முடியும்... அவனை சந்தித்து ஒரு நான்கு மணிநேரமே கடந்திருந்த நிலையில் அவனை பிரிய முடியாமல் தவிப்பதை அவனுக்கு எவ்வாறு எடுத்துரைப்பாள்... அதைவிட இன்னும் தான் ஏன்..? இப்படி உணர்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை... தன் மனதில் என்ன உள்ளது என்பதை உணராமல், அவன் மனதில் என்ன உள்ளது என்பதை முழுதாய் அறியாமல், அவனிடம் தன் மனதில் தோன்றியதை கூறி... என்ன மாதிரியான பெண் இவள் என தன்னை இழிவாக எண்ணிவிட்டால் என்ன செய்வது என பலவாறாக யோசித்து எதுவும் கூறத் தோன்றாமல் சோக சித்திரமாய்...! அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்... அவளது எண்ணங்களை அறிந்து கொண்டவன் போல்...

" ஹேய் பேபி...! என்னமா...? இப்படி டல்லா இருக்க... மறுபடியும் என்ன எப்படி மீட் பண்ணறதுன்னு நினைச்சு கவலை படுறியா..? என கேட்க... ஆம் என்பதுபோல் தலையசைத்து தனது மனதினை வெளிப்படுத்திவிட்டு தலைகவிழ்ந்து கொண்டவளை தன் புறமாக திருப்பி தனது கைகளால் அவளது கன்னங்களை ஏந்தி கண்களை கூர்ந்து பார்த்தவன், அந்த அலைபாயும் கண்ணகளில் எதைக் கண்டானோ..!! தன் சித்தம் முழுவதும் பெண்ணவளின் பித்தம் தொற்றிக் கொள்ள

" பேபி...!.. உன்னை விட்டு உன் நிழலலை எப்படி பிரிக்க முடியாதோ..? அதே மாதிரி உன்னையும் என்னிடமிருந்து இனி யாராலும் பிரிக்க முடியாது... நீ எங்க இருந்தாலும் நானே உன்னை தேடி வருவேன்... எதையும் நினைச்சு கவலை படாதே... போலாமா...?... என கேட்டவனின் முக்கத்தை உற்று நோக்கியவள் அவன் கூறியதில் தன் மனக் குழப்பம் சற்று நீங்கியவள் போல் அவனை பார்த்து புன்னகைத்தவாறே போலாம் என தலையசைத்தாள்...

இருவரும் வெளிய வருகையில் முதலில் அவர்களை எதிர் கொண்டது பிரபாவதியின் தந்தை... ரத்தினவேல்... தன் தந்தையை கண்டதும்...

" ஹாய் டாடி..! " என ஓடிச் சென்று அவரை கட்டிக் கொண்டாள்... அவளை கட்டி தழுவி வரவேற்றவரின் முகத்திலோ தன் மகளை கண்ட மகிழ்சியை விட பதட்டமே அதிகமாக இருந்தது... அவளை உடனடியாக இங்கிருந்து கூட்டிச் செல்ல வேண்டும்... அவளுக்கு எதுவும் நேர்ந்துவிட கூடாது... அவளை பாதுகாத்திட வேண்டும் என்று சுற்றிலும் தன் பார்வையை செலுத்தியவாறு தவித்துக் கொண்டிருக்க...

பிராவதியின் தந்தையை கண்டு கொண்டவன்... தன் உடல் முழுவது தீ பற்றி எரிவதை போல் உணர, அதுவரை அணியாமல் இருந்த குளிர் கண்ணாடியை எடுத்து முகத்தில் பொருத்தி தன் மன உணர்வுகளை யாரும் அறியாவண்ணம் மறைத்து கொண்டு நிதானமாக அவர்களை நோக்கிச் சென்றான்...

பலநாள் கழித்து தன்னை கட்டித் தழுவி தன் பாசத்தையும், பிரிவின் துயரையும் எடுத்துரைக்கும் தன் மகளை கண்டதும்... பதிலுக்கு அவரின் பாசத்தை வெளிப்படுத்தாமல், முகம் இறுகி சுற்றும் முற்றும் பார்த்தவாறு ஒருவித பதட்டத்துடனே நின்று கொண்டிருந்த ரத்தினவேலை கண்டு கொண்டவன் தனக்குள் விஷமமாய் புன்னகைத்துக் கொண்டு... பிரபாவதியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அந்த நொடியே கைவிட்டான்...

மரணம்..! என்பது அதை சந்திப்பவருக்கு ஒருநொடி வேதனை... அவரை சார்ந்தவருக்கோ அது சிலநாள் வேதனை... ஆனால் தன் மகளுக்கு யாரால்..? எங்கிருந்து..? எப்பொழுது ...? எத்தகைய ஆபத்து வருமோ..? என்று தெரியாமல், பயந்து பயந்து தன் சுயத்தை தொலைத்து, நிம்மதியை இழந்து ஒவ்வொரு நொடியும் அவர்களை உயிரோடு கொன்று தன் வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள முடிவு செய்துவிட்டான்... அதற்கு அவரின் மகளையே பகடையாக பயன்படுத்த முடிவெடுத்துவிட்டான்....

எந்தவொரு துவக்கமும் முடிவை நோக்கியே செல்லும்.. ஒவ்வொரு முடிவும் மீண்டும் ஒரு துவக்கத்தை ஆரம்பிக்கும்... இது இயற்கையின் நியதி.... தவறாய் தனக்குள் திணிக்கப் பட்ட போதனைகளை வேதமாய் ஏற்றுக் கொண்டு, எண்ணங்களே செயலாய் மாறும் என்பதை அறிந்திருந்தும், அதன் எதிர் வினையை உணராமல் அவர்கள் இருவரையும் நோக்கி சென்று அவர்கள் அருகில் நின்றான்...

ஆறடி உயரத்தில், ஆஜானுபாகுவான தோற்றத்தில் தங்களையே பார்த்துக் கொண்டு தனது அருகில் நிற்பவனை கண்டதும், தனக்கு பரிச்சியமான முகம் போல் தோன்ற அப்போதைய மனநிலையில் அவனை பற்றி தனக்குள் எழுந்த எண்ணங்களை புறக்கணித்துவிட்டு... ' யார்..? நீ ' என்பதைப்போல் கேள்வியாய் அவனை நோக்கினார்... அப்பொழுதே அவனை பற்றி சற்று சிந்தித்திருந்தால் தன் மகள் பின்னாலில் அனுபவிக்கப் போகும் துயரில் இருந்து சற்றேனும் அவளை காத்திருக்க முடியும்... விதி...! அதை வென்றவர் உண்டோ...?

தனது தந்தையின் அசைவை உணர்ந்து அவரிடம் இருந்து விலகி, அவரின் பார்வை சென்ற திசையை நோக்கியவள்... அங்கு சந்திரசேகரை கண்டதும் ஒருவித நாணம் கொண்டவளாய்

" டாட்... இவர் சந்திரன் என் ப்ரெண்ட்" என அவளாகவே முந்திக் கொண்டு அவனை அறிமுகம் செய்து வைக்க

அவரிடம் எப்படி தன்னை அறிமுகம் செய்து கொள்வது என்ற குழப்பத்தில் இருந்தவன், அவளாகவே தன்னை சந்திரன் என கூறி அறிமுகம் செய்ததில் தன் வேலை மிச்சம் என மனதில் எண்ணிக் கொண்டு... செயற்கையான புன்னகையுடனே நின்று கொண்டிருந்தான்...

மகளின் வாய் மொழியால் அவனை பற்றி அறிந்து கொண்டவர், மேற்கொண்டு அவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், கடமையாய் அவனை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து தலையசைத்து அவனை வரவேற்றுவிட்டு...

" மன்னிக்கணும் தம்பி... இன்னைக்கு உங்க கூட பேச எனக்கு நேரமில்லை... நீங்க ப்ரீயா இருந்தா ஒருநாள் வீட்டுக்கு வாங்க நாம பேசலாம்... நாங்க கிளம்பறோம் தம்பி " என பதிலுரைத்துவிட்டு தனது வீட்டு விலாசம் அடங்கிய ஒரு அட்டையை அவனுது கையில் திணித்துவிட்டு, தனது ஆட்களை நோக்கி காரை கொண்டுவருமாறு சைகை செய்ய... அவர்களை நோக்கி வரிசையாக வந்த மூன்று கார்களில் நடுவிலுள்ள காரில் இருவரும் ஏறி அமர்ந்ததும் முன்னும் பின்னும் அரணாய் அவர்களின் வாகனம் விமான நிலையத்தின் வெளி வாயிலை கடந்து சென்னையின் சாலையில் நுழைந்து அவர்களது வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது....

தங்களிடம் இருந்து அவரின் மகளை பாதுகாக்க போராடும் அவரின் போராட்டத்தை பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்... ' போடா போ... இந்த உலகத்தின் கடைகோடி நீ சென்றாள் கூட என்னிடமிருந்து, என்னை பற்றிய நினைவுகளில் இருந்து உன் மகளை இனி ஒரு அங்குலம் கூட உன்னால் விளக்கி வைக்க முடியாது ' என எண்ணிக் கொண்டு அவர் தன் கையில் திணித்துவிட்டு சென்ற அவரின் விலாசத்தை பார்த்தவாறே... தன் இல்லத்திற்கு செல்ல வாடகைக்கு ஏதாவது வாகனம் கிடைக்குமா..? என்று டேக்சி ஸ்டாண்டை நோக்கி பார்வையை திருப்பியவன் அங்கே நின்றிருந்தவர்களை கண்டு ஒருகணம் உள்ளுக்குள் அதிர்ந்தான்...

அங்கே அவனது தந்தை ஈஸ்வரன் எரிமலையாக கொதித்துக் கொண்டு இவனை முறைத்துப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்... விமான நிலையத்தில் அவளுடன் தன் மகனை கண்டு அவருக்கும் அதிர்ச்சிதான்... ஏனெனில் அவன் இன்று வருவதாக எந்த தகவலையும் அவரிடம் அவன் தெரியப்படுத்தவில்லை... பிராபவதியை பலவருடங்களாக தேடி கடைசியில் அவள் டெல்லியில் இருப்பதை தெரிந்து கொண்டு அவளது புகைப்படத்தையும் அவள் யாரின் பாதுகாப்பில் இருக்கிறாள் என்ற தகவலையும் அவனுக்கு
தெரியப் படுத்தினார்...

அதை பற்றி ஆராய்ந்தவன் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இராணுவ அதிகாரியின் நேரடி பாதுகாப்பில் இருக்கும் பிரபாவதியை அங்கு வைத்து எதுவும் செய்ய முடியாது என தோன்ற, அவளை அங்கிருந்து வெளியேற செய்தால்தான் அவளை ஏதேனும் செய்ய முடியும் என்று கணித்தவன் அதற்கு ஒரு திட்டத்தை வகுத்து அதை உடனடியாக செயல் படுத்தினான்...

பிரபாவின் புகைப்படத்தையும் அவள் இருக்குமிடத்தை தான் அறிந்து கொண்டதையும் முடிந்தால் அவளை தன்னிடம் இருந்து காப்பற்றிக் கொள்ளுமாறும் கூறி அவருக்கு பெயரிடப்படாத ஒரு மொட்டை கடிதத்தையும் அனுப்பினான்... பின்பு தன் தந்தையை தொடர்பு கொண்டு தன் திட்டத்தை அவருக்கு தெரியபடுத்தி தொடர்ந்து ரத்தினவேலை கண்காணிக்குமாறு கூறியவன் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உடனே தனக்கு தெரியபடுத்துமாறு தன் தந்தையை பணித்திருந்தான்...

சந்திரசேகர் எதிர்பார்த்தது போலவே ரத்தினவேல் கலங்கித்தான் போனார்... இதுவரை யார் என்று தெரிந்த எதிரியிடமிருந்து அவர்களின் கண்ணில் கூட படாதவாறு தன் மகளை காப்பாற்றிவிட்டதாய் எண்ணிக் கொண்டிருந்தவர், அந்த முகம் தெரியாதவர்களை கண்டு அஞ்சி, இனியும் தன் மகளை தனியே வைத்திருப்பது பாதுகாப்பில்லை என்று இரண்டு நாட்களில் கிளம்பி வருமாறு தொலைபேசி மூலமாக அவளுக்கு தகவல் தெரிவித்து விட்டு அவள் கிளம்பி வருவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்...

அவருக்கு ஈஸ்வரன் மீது துளியும் சந்தேகம் வரவில்லை... அதற்கு காரணம் தொழிலில் அவரை வீழ்த்துவது தான் தனது இலட்சியம் போல் ஈஸ்வரன் காட்டிக் கொண்டார்... அதனால் ஈஸ்வரனின் மனதில் எரிந்து கொண்டிருந்த வஞ்சத்தை ரத்தினவேல் உணர தவறினார்

பிராபவதி இரண்டு நாட்களில் விமானத்தில் வருவது உறுதியானதும் அந்த தகவலை தன் மகனுக்கு தெரிய படுத்திவிட்டு அவள் வந்து இறங்கியதும்.. அன்றே அவளை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் கூலிக்கு கொலை செய்யும் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து விமான நிலையத்தில் காத்திருந்தவர்.. பிரபாவதி வெளியே வரும் பொழுது அவளை பாதுகாப்பது போன்று அவளின் பின்னே வந்த தன் மகனை கண்டு தன் ஆட்களிடம் இன்று எதுவும் செய்ய வேண்டாம் என பணித்துவிட்டு, அவர்களுடன் சகஜமாக புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த தன் மகனை கண்டு... அனல் கக்கும் பார்வையுடன் அவனை முறைத்து கொண்டிருந்தார்...

தன் தந்தையின் முகத்தை வைத்தே அவர் என்ன நினைப்பார் என்பதை யுகித்தவன் அவரை நோக்கி வந்து அவரின் முறைப்பை அலட்சியம் செய்தவன்... அங்கு ஆயுதங்களுடன் இருந்த மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, யாரிடமும் எதுவும் பேசாமல் காரிலேறி அமர்ந்து கொண்டான்...

அவனது இந்த நடவடிக்கையை கண்டு கோபம் தலைகேற... தன்னை கட்டுபடுத்திக் கொண்டு அவரும் ஏதும் பேசாமல் உர்ர்ர்ர் என்று முகத்தை வைத்துக் கொண்டு காரிலேறி அமரவும்... அவர்களின் வீட்டை நோக்கி ஒன்றின் பின் ஒன்றாக அவர்களது வாகனமும் கிளம்பியது.....

தன்னை காப்பாற்ற நினைப்பவர்களுக்கும் அழிக்கநினைப்பவர்களுக்கும் இடையே நடக்கும் பரமபதம் என்னும் விளையாட்டில் தெரிந்தோ தெரியாமலோ பகடையாக்கப்பட்டுவிட்டாள் பிரபாவதி... இவர்களுடன் விதியும் சேர்ந்து தனது ஆட்டத்தை ஆடும் பொழுது நிச்சயம் தலை உருளும்... அது யார்...? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே...

மயக்கம் தொடரும்....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மான்.... 9"

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரபாவதி காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியாக பின்னோக்கிச் செல்லும் காட்சியை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.. கண்கள்தான் சாலையை வெறித்ததோ தவிற, மனம் அந்த காட்சிகளில் ஒன்றவில்லை.. விமான நிலையத்தில் தன்னை கண்ட மகிழ்சியை விட, தன்னை பாதுகாக்க வேண்டுமென்ற பரிதவிப்பை தன் தந்தையிடம் கண்டாள்..

கடந்து சென்ற வருடங்களில் தன உயிருக்கு ஆபத்தென, தன் தந்தையின் வாய்மொழியாகவே, அல்லது அவரின் செயல்களின் மூலமாகவோ அவள் அறிந்திருந்த
போதிலும், முன்புபோல் இன்று அதை இலகுவாக எடுத்துக்கொள்ள அவளாள் இயலவில்லை...

யாரோ..? ஒரு முகம் தெரியாதவர்களின் இலக்காக தான் மாறிப் போயிருக்கிறோம் என்ற எண்ணமே அவளுள் ஒருவித அச்சத்தை விதைத்து அவளை நடுக்கம் கொள்ள
செய்தது...

'இன்னும் கொஞ்சநாள்தான் நான் இங்க இருக்கப் போறேன். அப்புறம் பழையபடி டெல்லிக்கே போய்டுவேன். அப்படியே ஏதாவது.? ஆபத்து வந்தாலும் அப்பா! பார்த்துக்குவார்..' என் மனதிற்குள் எண்ணியவாறே தனக்குதானே சமாதானமும் கூறிக் கொண்டாள்... அந்தோ பரிதாபம்! இனி அவள் டெல்லி திரும்ப போறதில்லை என்பதையும், அவள் தந்தை மட்டுமில்லை வேறு எவராலும் அவளுக்கு உதவ முடியாது என்பதையும் பாவம்! பேதையவள் அறியவில்லை...

இப்படி பலவிதமான எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவள், வீட்டின் முன் கார் சென்று நிற்கவும் அந்த எண்ணங்களை புறம் தள்ளி, உதடுகளில் புன்னகையை தவழவிட்டவாறே காரிலிருந்து இறங்கியவளின் விழிகள் பார்வையை சுழற்றி தன் அன்னையைத் தேட,அங்கே கையில் ஆரத்தியும், கண்களில் கண்ணீருமாக அவர்களின் செல்லமகள் செல்வமகளை பார்த்தவாறே நின்று கொண்டிருந்த அன்னையை கண்டவுடன்...

"ம்மா" என கதறியவாறே தாயின் மடி தேடி துள்ளி ஓடும் கன்றாக வேகமாக ஓடிச்சென்று தன் அன்னையை கட்டிக் கொண்டு கேவி அழ ஆரம்பித்தாள்...

அங்கிருந்த மற்றவர்களாலும் இருவரின் பாசபினைப்பை கண்டு கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை.. ஒற்றை மகளாக செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து, தரையில் கூட கால்படாமல் தந்தையின் தொழிலும் தாயின் மடியிலும் மாறி மாறி வளர்ந்தவள்,
அறியாமல் நிகழ்ந்த ஒரு விபத்தினால் இத்தனை வருடங்கள் அனைவரையும் பிரிந்து செல்ல வேண்டிய அவல நிலையை எண்ணி உள்ளுக்குள் நொந்து கொள்வதை தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை...

தன்னை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கும் மகளை, தானும் அழுதவாறே அணைத்துக் கொண்டிருந்தவர் முதலில் தன்னை சமாளித்துக்கொண்டு...

"ச்ச்சூ என்னமா..? என்ன இது..? இப்படி குழந்தைமாறி அழுதுட்டு இருக்க... அம்மா கிட்ட வந்துட்டல, இனி எப்பவும் அழக கூடாது. முதல்ல கண்ணை துடைச்சுக்கோ..." எனக் கூறியவாறே தன் மகளை தேற்றிக் கொண்டிருந்தார்...

வீட்டிற்குள் நுழையும் முன்னே வெளிவாயிலில் இறங்கிய ரத்தினவேல், வீட்டை சுற்றி பாதுகாப்பிற்கு ஆட்களை நிறுத்திவிட்டு அனைவரையும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தவர், தாயும் மகளும் ஆது கொண்டிருப்பதை கண்டவுடன், தாயையும் மகளையும் பிரித்து தவறு செயய்துவிட்டோமோ..? என எண்ணியவுடன் அவரது மனது கணக்க ஆரம்பித்தது...

ஓரிரு நொடிகளில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு, 'என் மகளின் பாதுகாப்பிற்காக நான் எடுத்த முடிவு சரிதான், நான் இருக்கும்வரை என் மகளை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.. அவளது சந்தோசமான பாதுகாப்பான வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று நினைத்தவருக்கு தெரியவில்லை இந்தமுறை அவரது மகளின் மீளா துயருக்கு காரணமாக போகிறவரே அவர்தான் என்று.....

"என்ன செல்லம்மா...? இப்படி புள்ளைய வாசல்லையே நிப்பாட்டி அழுதுட்டு இருக்க " என கூறியவாறே அவர்களை நோக்கி செல்ல...

ரத்தினவேலின் சத்தம் கேட்டு அழுது கொண்டிருந்தவர்கள் தங்களது கண்களை துடைத்தவாறு விலகி நிற்க.. அவர்களின் அருகில் சென்ற ரத்தினவேல், செல்லம்மாளின் கையிலிருந்த ஆரத்தி தட்டை வாங்கி.. தானே தன் மகளுக்கு ஆரத்தி சுற்றி, திஷ்டி கழித்து, நெற்றியில் திலகமிட்டு வீட்டினுள் அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தவர் தானும் அருகே அமர்ந்து கொண்டு ஆதரவாக கைகளை பற்றிக் கொண்டார்...

இவர்கள் உள்ளே வரும்பொழுது நேராக சமையற்கட்டில் நுழைந்து ஓரிரு நிமிடங்களில் கையில் பால் பாயாசத்துடன் வந்த செல்லமா, பிரபாவதியின் கையில் குடுக்க முற்பட.. அதை வாங்க மறுத்தவள் ஆ... வென வாயை திறந்து காமிக்க அதை புரிந்து கொண்டவராக புன்னகையுடனே ஊட்டிவிட ஆரம்பித்தார்...

அதை பார்த்து கொண்டிருந்தவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது... தன் கைகளில் நீர்த்துளி பட தன் தந்தையை ஏறிட்டு பார்த்தவள்.. அவர் அழுது கொண்டிருப்பதை கண்டவுடன்..." டாட் " ஏதோ கூற முற்பட சைகையால் அவளை தடுத்தவர்.. தன் மனைவியின் கையிலிருந்த கிண்ணத்தை வாங்கி அவரே ஊட்டிவிட ஆரம்பித்தார்....

ஏற்கனவே தன்னை ஆரத்தி சுற்றவிடாமல் செய்ததில் பொய்யாய் கோபம் கொண்டவர்.. இந்த முறை நிஜமாகவே கோபித்துக் கொண்டு விருட்டென அங்கிருந்து அகன்று சமயலறையில் நுழைந்தார்...

பிரபாவதி பிறந்ததிலிருந்தே அவளுக்கு அனைத்திலுமே முதலில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ரத்தினவேலுக்கு உண்டு... அவள் குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்தே தாயிடம் அடம்பிடிப்பவள் தந்தையிடம் மட்டும் சமத்தாக நடந்து கொள்வாள்... செல்லம்மாள் சில சமயங்களில் சலித்துக் கொண்டாலும் பலசமயங்களில் பல சமயங்கள் வியந்துதான் போவார்...

தந்தை ஊட்டிவிட மெதுவாக வாய் திறந்து வாங்கியவள், தந்தையின் செய்கையால் எங்கே தன் அம்மா கோபித்துக் கொள்வாறோ..? என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் முன்னால் வந்து நின்ற செல்லம்மாளின் கையில் இப்பொழுது புதிதாக ஒரு தட்டு முளைத்திருந்தது... அதில் இட்லி, பொங்கல் போன்ற காலை உணவுடன் சேர்த்து இன்னும் சில பதார்த்தங்களை அடுக்கி எடுத்து வந்திருந்தார்...

அதை கண்டதும் 'ஆஹா..! ஆரம்பிச்சுட்டாங்க இன்னைக்கு இவங்க பாசத்துல நாம தொலைந்தோம்' என எண்ணிக் கொண்டவள், இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்... தன் மனைவியின் கையிலிருந்த தட்டை வாங்க கை நீட்டிய கணவரை முறைத்துக் கொண்டிருக்க, அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து ஓட நினைத்தவளை இருவரும் சேர்ந்து அழுந்தி பிடித்துக் கொண்டு ஒரே நேரத்தில் இருவருமே ஊட்டிவிட ஆரம்பித்தனர்...

தந்தையிடம் வாங்குவதுபோல் சென்று தாயிடம் வாங்கி தந்தைக்கு அழகு காட்டிவிட்டு, தாயிடம் வாங்குவதுபோல் சென்று தந்தையிடம் வாங்கி தாய்க்கும் அழகு காட்டி சிரித்துக் கொண்டிருக்க... அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் அவளுக்கு ஊட்டுவது போல் சென்று அவர்களுக்கே ஊட்டிக்கொண்டு அவளுக்கு அழகு காட்ட... ஏமாந்து போனதில் இருவரையும் போலியாக முறைத்த பிரபாவதி... அந்த முறைப்பை தொடர முடியாமல் "ஹா ஹா ஹா " என சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்...

பலவருடங்கள் கழித்து அந்த வீட்டில் சிரிப்பொலி கேட்டது, அந்த வீட்டின் ஜீவன் திரும்பியிருந்ததே அதற்கு காரணம்... ஒருவழியாக மூவரும் சிரித்துக் கொண்டே அவள் சாப்பிட்டு முடித்ததும் அவளது அறைக்கு அழைத்து சென்றனர்....

அவளுக்கென்றே வடிவைக்கப்பட்ட பிரத்தியோக அரை அது... தோட்டத்தில் பூத்து குலுங்கும் பூக்களின் நறுமணமும், அந்த பூக்களுடன் கொஞ்சிக் குலவும் வண்டுகளின் ரீங்காரமும், சிறு பறவைகள் கிரீச்சிடும் சத்தமும், இயற்கையான காற்றும், சூரிய வெளிச்சமும் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் தன் மகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தார்

அறைக்குள் நுழைந்ததுமே அங்கே கண்ட காட்சியில் உறைந்தே போனாள் பிரபாவதி.. அவளது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது... அந்த அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும் பிரபாவதி பிறந்ததிலிருந்து பத்து வயது வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. சிறிதும் பெரிதுமாய் அந்த சுவர் முழுமையும் நிறைந்திருந்தது...

ஒரு பக்கமிருந்த அலமாரியில், அவள் அங்கிருந்த வரை பயன்படுத்திய அத்தனை விளையாட்டு பொருட்களும் மிக நேர்த்தியாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது...

அங்கிருந்த பீரோவில் அவள் முதன்முதலாக உடுத்திய ஆடையிலிருந்து இன்றுவரை உடுத்துவதற்கு ஏதுவான விதவிதமான ஆடைகள், தங்கம் வைரம் வெள்ளி என பலவிதமான அணிகலன்கள், அவளது பிறந்தநாள் பரிசாக வாங்கிகுவிக்கப்பட்ட பரிசு பொருட்கள் என அந்த அறை முவதுமே பெற்றோர்களின் அன்பு அவளை நிலைகுலைய செய்தது...

ஒவ்வொன்றையும் மெதுவாக நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தவளின் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை அவளாள் கட்டுப்படுத்த முடியவில்லை.. அவளது நாடி நரம்புகளில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் மின்சாரம் தாக்கியதைபோல் உணர்ந்தாள்.. தன் தாய் தந்தையின் பாசத்தை பற்றி அவள் நன்கு அறிவாள்.. ஆனால்..? அது எந்த அளவு என்பதை அவள் இன்றுதான் உணர்கிறாள்... தனது பிரிவு அவர்களை எந்த அளவு பாதித்து இருக்கிறது என்பதை உணர்த்தும் அவளது மேனி அதிர கால்கள் பலமிழக்க , அப்படியே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்...

பிரபாவதிக்கு தனிமை குடுத்து சற்று விலகி நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்த ரத்தினவேலும் செல்லம்மாளும்.. பிரபாவதி அழ ஆரம்பித்ததும் அவளது மனநிலையை உணர்ந்தவர்களாக ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டு அவளை ஆறுதல் படுத்தினர்....
சில நிமிடநேரங்கள், அங்கே பேச்சுகளுக்கு இடமில்லாமல் வார்த்தைகள் செயலிழந்து போக.... வார்த்தைகளை மீறிய அன்பை அங்கு நிலவிய மவுனம் உணர்த்தியது...

இந்த முறை தன் தந்தையை தவிர்த்து, தன் தாயின் அரவணைப்பை தேடி சரணடைந்தவள், தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்...

" என்னடா..? ராஜாத்தி இப்படி அழுதுட்டு இருக்க... என் மக எதுக்காகவும் அழக்கூடாது.." என ஆறுதல் படுத்திக் கொண்டிருக்க.. தாயை ஏறிட்டு பார்த்தவள்..

" ம்மா.. ப்ளீஸ்ம்மா இனி இங்கிருந்து என்ன அனுப்பாதிங்க.. நான் எங்கயும் போக மாட்டேன்.. உங்க கூடத்தான் இருப்பேன்.." என அழுது கெண்டே கூற

" வேண்டாம்டா, இனி நீ அம்மாவ விட்டு எங்கயும் போக வேண்டாம்.. அம்மா உன்ன எங்கயும் அனுப்ப மாட்டேன் " எனக் கூறி ஆறுதல் படுத்தியவர்...

"சரிம்மா... எதையும் நினைக்காம கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுடா... " என ரத்தினவேல் கூற, எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்தவள் தன் தாயை பார்க்க ... அவரும் கட்டிலில் அமர்ந்து அவளை மடியில் சாய்த்துக் கொள்ள, ரத்தினவேல் மகளின் கால் அருகே அமர்ந்து கால்களை பிடித்துவிட ஆரம்பித்தார்...

தாய் தந்தையின் அரவணைப்பில் பலவருடங்கள் கழித்து நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவிக்கொள்ள எந்தவித எண்ணங்களும் இல்லாமல் நித்திராதேவியிடம் தன்னை ஒப்புக்கொடுத்தாள்....

பிரபாவதி நன்றாக உறங்கியதை உறுதிபடுத்தி கொண்டு அவளது உறக்கம் கலையாதவாறு படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவர்களின் முகத்தில், இனி என்ன நடக்குமோ,,? என்ற பயம், தங்கள் மகளை அழிக்க நினைக்கும் அந்த முகம் தெரியாத மனிதர்கள் யார்..? என்ற விடை தெரியா கேள்விகள்... போன்ற பலவித குழப்ப ரேகைகள் குடி கொண்டிருந்தாலும்... அவள் தங்களது பாதுகாப்பில் இருப்பதால் தங்களை மீறி எதுவும் நடக்காது என அமைதி கொண்டனர்...

தன் மகளுக்கான மதிய உணவை தயார் செய்ய செல்லம்மாள் போக... மீண்டும் ஒருமுறை வேலையாட்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை செய்துவிட்டு தன் அலுவல்களை கவனிக்க ரத்தினவேல் கிளம்பி சென்றார்...

வேகமாக சென்று கொண்டிருந்த காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சந்திரசேகரின் தந்தை, ஈஸ்வரனின் உள்ளம் உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்து... சந்திரசேகர் அதை பற்றியெல்லாம் கருத்திலும் கொள்ளவில்லை, கவனத்திலும் கொள்ளவில்லை... அவனது எண்ணங்கள் முழுவதுமே பிரபாவதியின் முகமே ஆக்கிரமித்திருந்தது... இனி அடுத்ததாக தான் செய்ய வேண்டியது என்ன..? என்பதை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்

அவனது வீட்டிற்குள் கார் சென்று நின்றதும், " படார்ர்ர்ர்" என காரின் கதவை திறந்து கொண்டு செந்தணலாய் முகம் சிவந்திருக்க, மதம் கொண்ட யானையின் கோபத்தில், சினம் கொண்ட சிங்கத்தின் சீற்றத்தில் , வெறி கொண்ட வேங்கையின் பாய்ச்சலில், வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாக வீட்டினுள் நுழைந்த ஈஸ்வரனை கண்டு அங்கிருந்த வேலையாட்கள் அடுத்து என்ன நடக்குமோ..? என்ற அச்சத்தில் அவர் பார்வையிலிருந்து தப்பித்தவர்களாக தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்....

வீட்டினுள் கார் நுழையும் சத்தம் கேட்டு, பலவிதமான வேண்டுதல்களுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்ட சந்திர சேகரின் அன்னை சிவகாமி, பாட்டி வள்ளியம்மாள்... ஈஸ்வரனின் கோபத்திலிருந்தே அவர் என்ற காரியம் தோல்வியடைந்ததை அறிந்து கொண்டவர்களின் முகத்தில் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத ஒரு நிம்மதி குடி கொண்டது....

தனது இளைய மகனின் இழப்பு அவருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்பதால் சிவகாமி தன்னை தேற்றிக் கொண்டார்...

ஆனால் தன் கணவரும் தன் மகனும் அவர்களை பழிவாங்குவதற்காக, ஒன்றும் அறியா அப்பாவி பெண்னின் உயிரை பறிக்க நினைப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... தன் கணவரிடம் எவ்வளோவோ மன்றாடிப் பார்த்தும் ஈஸ்வரனை அவரால் மாற்ற முடியவில்லை ... இதை பற்றிய பேச்சு எழும் போதெல்லாம் அவருக்கு கிடைப்பதெல்லாம் தகாத வார்த்தைகளும் அடியும் உதையும்தான்...

அத்தனையும் சகித்துக் கொண்டு தன் மகனாவது தன்னை புரிந்து கொள்வான் என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு , சந்திரசேகர் வளர வளர, ஈஸ்வரனின் துர் போதனைகளால் இன்னொரு ஈஸ்வரனாகவே வளர, அவரது கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போனது.. அவரால் செய்ய முடிந்தது எங்கேயோ இருக்கும் முகம் தெரியாத பெண்ணிற்காக இறைவனிடம் வேண்டுவது மட்டுமே....

ஈஸ்வரனின் பகையுணர்வு நாளுக்குநாள் வளர்ந்ததோ தவிர சிறுதுளி கூட குறையவில்லை.. அந்த பெண்ணை கண்டு பிடிக்க அவர் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடையும் பொழுது... சிறு நிம்மதி அடைபவர்.. இன்று தந்தையும் மகனும் சேர்ந்து அந்த பெண்ணை கண்டிபிடித்துவிட்டனர் என்று தெரிந்தவுடன், முற்றிலும் நிம்மதியிழந்து போனார்.... இன்றும் அந்த பெண் இவர்களிடம் தப்பித்ததை நினைத்து பழையபடி தனது வேண்டுதலையும் நன்றியையும் வானத்தை பார்த்தபடி இறைவனை நோக்கி வைத்தார்..

இதையெல்லாம் காரிலிருந்தவாறே பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தவன், நிதானமாக காரின் கதவை திறந்து கொண்டு காரிலிருந்து கிழே இறங்கினான்.... காரின் கதவு மீண்டும் திறக்கப்படும் சத்தம் கேட்டு, சிவகாமியும் வள்ளியம்மாளும் திரும்பி பார்க்க, அங்கே நின்றிருந்த சந்திரசேகரை கண்டதும் தாங்கள் காணும் காட்சியை அவர்களால் நம்பமுடியவில்லை....

பழிவாங்கும் உணர்வு தவறானது என் எடுத்துரைக்கும் தன் தாய்யை அறவே வெறுக்க ஆரம்பித்தவன், அவருடன் பேசுவதை கூட சுத்தமாக நிறுத்தியிருந்தான்... தன் மகனை கொன்றவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக தன் தாய் பேசுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தன் தாய்யை முறைத்து பார்த்தவாறே நின்றிருந்தான்...

இத்தனை வருடங்களாக எவ்வளோ வற்புறுத்தியும் வராதவன், இன்று வந்துருக்கிறான் என்றால்...? இவனால் அந்த பெண்ணிற்கு எதவாது ஆபத்து வருமோ..? இவனால் அந்த பெண்ணிற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது... தன் மகனின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகிவிடக்கூடாது என தாயுள்ளம் துடித்தது... ஆனால் அதை உணர்ந்துகொள்ள முடியாதபடி பழியுணர்வு சந்திரசேகரின் கண்ணை மறைத்திருந்தது...

தன்னை கன்னட மகிச்சியை விட வேறு ஏதோவொன்றை..? தன் தாயின் முகத்தினில் கண்டவன், அவரை தவிர்த்துவிட்டு தன் பாட்டியை நோக்கி சென்றான்...

மகனின் ஒதுக்கம் அவருக்கு வலித்தாலும் தாயாய் தன்நிலை உணர்ந்து, பல வருடம் கழித்து வரும் மகனை ஒரு ஆரத்தி கூட இல்லமால் வெறுமனே வீட்டினுள் அழைத்து செல்ல அவர் விரும்பவில்லை ... அவனது ஒதுக்கத்தை புறந்தள்ளிவிட்டு, ஆரத்தி கலக்க விட்டினுள் நுழைந்தார்...

தன் பேரனை கண்டதும் " ய்யா.! ராசா.! இந்த கிழவி நெனைப்பு இப்பதான் உனக்கு வந்துச்சா..? உன்ன பாக்கறதுக்குத்தான் ராசா இந்த கிழவி உசுர கைல பிடிச்சுட்டு இருக்கேன்... நீ வந்து கொல்லி வைக்காம..? இந்த கட்டை வேகாது ராசா.. " அவனை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தார்....

அவனிருந்த மனநிலையில் வந்ததும் வராததுமாக, வாசலில் நிறுத்தி தன்னிடம் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் பாட்டியால் எரிச்சல் ஏற்பட, ஏதாவது பேசினால் வார்தைகள் தடித்து காயப்படுத்திவிவோம் எனகே கருதி அமைதியாகவே நின்றிருந்தான்...

வேகமாக சமலறையில் நுழைந்து, ஆரத்தி கலக்கி எடுத்துக் கொண்டு வெளியே சென்ற சிகாமியை, ஹாலில் அமர்ந்து அனல் கக்கும் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தவர்... சிவகாமி ஆரத்தி சுற்ற ஆரம்பிக்கும் முன்னே வேகமாக அவர்களை நோக்கி சென்று ஆர்த்தி தட்டை ஓங்கி உதைக்க...

"படார்" சத்தத்துடன் பறந்த தட்டு கிழே விழுந்து..."கண கண கண கணவென " பலமாக சத்தத்தை எழுப்பி சில பல ஆட்டங்களுடன் மெதுவாக அடங்கியது....

சிவகாமியும் வள்ளியம்மாளும் அதிர்ந்து போயிருக்க, ஈஸ்வரன் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்க , சந்திரசேகரோ எவ்வித சலனமும் இல்லாமல் கிழே விழுந்த தட்டை பார்த்தவாறே தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு அங்கிருந்த மூவரையும் மாறி மாறி நேர் பார்வை பார்த்தவன்.. பின்பு எதுவும் பேசாமல் அமைதியாக விட்டினுள் நுழைந்து, அங்கு எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் சித்திரமாய் மாறிப் போன தன் தம்பியின் படத்தின் முன்பு வந்து கண் மூடி நின்றான்...

அவன் பின்னாலே வீட்டினுள் நுழைந்த சிவகாமியும் வள்ளியம்மாளும் எதுவும் பேசாமல் அவனை விட்டு விலகி பதட்டத்துடன் நிற்க...

" பாருடா.. நல்லா பாரு.. உன்தம்பி என்மகன் ,இங்க போட்டோவா தொங்கறதுக்கு காரணமா இருந்த அந்த குடும்பத்துல இருக்கற எல்லாரையும் அழிக்கணும்னு நான் நினைக்கறேன்.. "

"........."

" நீ அந்த வீட்டு பெண்ணுக்கு பாதுகாப்பா கூடவே வந்துருக்க... உன் தம்பியோட ஆன்மா உன்னை என்னைக்குமே மன்னிகாதுடா.." என ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தார்...

அவரின் கத்தலை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் அவரை முறைத்து பார்த்தவன், பின்பு மீண்டும் அமைதியாகி எதுவும் பேசாமல் மாடியில் உள்ள தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டான்...

தான் பேசியதற்கு பதில் கூறாமல் அமைதியாக போகும் தன் மகனை விசித்திரமாக பார்த்தார்...எதிரில் இருப்பவர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் பேசுபவனின் இந்த மவுனம் அவருக்கு ஏதோவொன்றை உணர்த்த பிறகு பேசி கொள்ளாலாம் என அங்கிருந்து அகன்றார்

சிவகாமிக்கோ மகனின் இந்த மவுனம் அச்சத்தை உண்டாக்கியது... தன் கணவராவது கோபத்தில் சொதப்பிவிட வாய்ப்புள்ளது.. ஆனால் தன் மகனோ எடுத்த காரியத்தில் உறுதியாக இருப்பவன்... எதையும் திட்டம் போட்டு கச்சிதமாக செய்து முடிப்பவன்.. அவன் மவுனத்திற்கு பின் கிளம்பப் போகும் சூறாவளியில் யார் சிக்கி சின்னாபின்னம் ஆகப் போகிறார்களோ..? ஆனால் கண்டிப்பாக அவனது வாழ்கையும் கேள்விக்குறியாக மாறிவிடும் அதிலிருந்து அவனை காப்பாற்ற வேண்டும்... என் தாயுள்ளம் துடியாய் துடித்தது...

எதை பற்றியும் தான் அவனிடம் பேச முடியாது.. தான் கூறும் எதையும் அவன் காது கொடுத்து கேக்கப் போவதில்லை என்பது அவருக்கு தெரியும்... கணவரிடமும் இதை பற்றி பேச முடியாது... நடப்பவை அனைத்துமே தன் கைக்கு மீறிய செயலாக தோன்ற வழக்கம் போல் தன் வேண்டுதலை.. இறைவனை நோக்கிவைத்தார்... திக்கற்றோர்க்கு தெய்வம் துணை என்பார்கள்... ஆனால் இங்கு தெய்வமும் உதவ போவதில்லை...

சந்திரசேகர் இருந்த அறை, அவனுக்கும் அவனது தம்பிக்குமான அறை, அந்த அறையில் அவனது நினைவை ஞாபகப் படுத்துமாறு எந்தவொரு பொருளும் அங்கில்லை... தம்பி இறந்த பிறகு அவனால் அந்த பொருட்களை பார்க்க முடியாமல் , மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடந்து கொண்டதை இன்றுவரை அவனால் மறக்க முடியவில்லை...

தம்பியின் மரணம் எதிர்பாராத விபத்து என்று காலப்போக்கில் புரிந்தாலும்... அதற்கு காரணமானவர்களின் அன்றைய அலட்சியம் அவனை ப(லி)ழிவாங்க துண்டியது....

பிரபாவதியை நேரில் சந்திக்கும் வரை, அவளை கொல்வது ஒன்றே தன் தம்பியின் மரணத்திற்கு நியாயம் செய்வதாக கருதியவனின் முடிவில் எந்த மாற்றமும் இருக்கவில்லை... அவளது குழந்தைத்தனமான முகத்தை கண்டவுடன் அவனது உறுதி தளர ஆரம்பித்தது..
தனது இந்த மனநிலையை அவன் அறவே வெறுத்தான் .. தனது தம்பி தன்னை பார்த்து கைகொட்டி சிரிப்பது போலவும், அண்ணா என்ன காப்பாத்து என கதறுவது போலவும் , ரத்த வெள்ளத்தில் மிதப்பது போலவும்.. பிரபாவதியுடன் மாலையும் கழுத்துமாக தான் நிற்பதைக் கண்டு தன்னை கேலி செய்வது போலவும்.. மாறி மாறி அவன் கண்முன்னே பல பிம்பங்கள் தோன்றி அவனை நிலைகுலைய செய்தது.. ஒருகட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் இருகைகளால் தலையை பிடித்துக் கொண்டு விஷ்ணு என் கதறியவாறே கட்டிலில் விழுந்தான்...

மயக்கம் தொடரும்.....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்... 10

மதிய உணவை உண்ணுவதற்காக பிரபாவதியை எழுப்பிய செல்லம்மாள்
உணவை நேராக அவளது அறைக்கே எடுத்து சென்று ஊட்டி விட தாயுடன் சந்தோசமாக பேசியபடியே உணவை உண்டு விட்டு வயிறும் மனதும் நிரம்பியிருக்க மீண்டும் உறங்கிப் போனாள்...

தன் அலுவல்களை முடித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பிய ரத்தினவேல் நேராக மகளின் அறைக்கு சென்றவர் பிரபாவதி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க அவளது உறக்கம் கலையாதவாறு அருகில் அமர்ந்து தனது செல்ல மகள் தூங்கும் அழகை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்...

காரின் ஹாரன் ஒலியில் கணவர் வந்துவிட்டதை அறிந்து அவரை தேடிக்கொண்டு அவர்களின் அறைக்குள் சென்ற செல்லம்மாள் அங்கு அவர் இல்லாமல் போகவே அவரும் நேராக தனது மகளின் அறையை நோக்கி சென்றார்...

அங்கே கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்த தன் கணவரை கண்டதும் அவரது கண்களும் கலங்க ஆறுதலாக அவரை அணைத்துக் கொண்டார்...

தனது மனைவியின் தொடுகையில் தன்னிலை உணர்ந்தவர் செல்லம்மாள் ஏதோ? கூற வாய் திறக்கும் முன், பேச வேண்டாம் என உதட்டில் விரல் வைத்து சைகை செய்தவர், வெளியே சென்று பேசிக் கொள்ளலாம் எனக் கண்களால் ஜாடை காட்டி விட்டு வெளியே செல்ல, அவர் பின்னால் சென்றவர்...

"ஏங்க! யாருன்னு? எதாவது தெரிஞ்சுதா?" என கேள்வி எழுப்ப.. ரத்தினவேல் இல்லை என்பதை போல் மறுப்பாய் தலையசைத்தார்...

"ஒருவேளை அந்த ஈஸ்வரன் தான் மறுபடியும் இதையெல்லாம் செய்யறாறோ?" என தன் சந்தேகத்தை கேட்க.. பெரு மூச்சொன்றை வெளிப்படுத்தியவர்...

"இல்ல செல்லம்மா.. எனக்கு அப்படித் தோனல"

"அவர் மகன் இறந்தது எதிர்பாராத ஒரு விபத்துன்னாலும், அதுக்கு என் அப்பா தான் காரணம்.. அவரோட அலட்சியம் தான் காரணம்"

"---------"

"அந்த கோபத்துல தான் நம்ம மகளை அவர் கொல்லணும்னு நினைச்சிருப்பார்"

"----------"

"காலப்போக்கில் அவரும் அதையெல்லாம் மறந்துட்டார்.. இப்ப கூட நான் அவருக்கு எதிரிதான், ஆனால் அது தொழில் மட்டும் தான் .."

"தம்பி இறந்த சோகத்துல அவங்கள விட்டு பிரிஞ்சு போன அவங்க மூத்த மகன் , இனிமேல் இந்தியாவுக்கே வரமாட்டேன் னு பிடிவாதமா இருக்கான்னு கேள்வி பட்டேன்"

"ஒரு மகனை பறிகொடுத்துட்டு ஆதரவா இருக்க வேண்டியவனும் பிரிஞ்சு போனதுல ஈஸ்வரன் ரொம்பவும் உடைஞ்சு போயிட்டார்"

"இதுல நம்ம மகளை கொல்லறதுனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது"

"எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் ஈஸ்வரனுக்கு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்-னு தான் செய்ய தெரியும்.. இந்தளவு கச்சிதமா செய்ய தெரியாது... இது வேற யாரோ??"

"ஈஸ்வரன பார்த்து நீங்க பயப்படலனா எதுக்காக? பிரபாவ இத்தனை நாளா இங்க வரவிடாம அவள தனியாவே இருக்க வச்சிங்க " எனக் கேள்வி எழுப்ப... அவரை உற்று நோக்கியவர்...

"இந்த ஐஞ்சு வருஷத்துல எனக்கு நடந்த விபத்து எல்லாமே தற்செயல்னு நினைக்கறியா??.." எனக் கேட்டவரை செல்லம்மாள் கலக்கமாக பார்க்க...

"எல்லாமே திட்டமிட்டு என்ன மட்டுமே குறிவச்சு செஞ்சது"

"ஆரம்பத்துல நான் கூட தற்செயல்னுதான் நினைச்சேன்.. போக போக தான் எனக்கே புரிய ஆரம்பிச்சுது"

"எல்லாத்துலயும் இருந்து நான் தப்பிச்சுட்டாலும் இத செய்யறது யார்னு?? இதுவரை கண்டுபிடிக்க முடியல"

"ஆரம்பத்துல பிரபாவ டெல்லிக்கு அனுப்புனதுக்கு ஈஸ்வரன் காரணமா இருக்கலாம்.. ஆனா? அதுக்கு அப்புறமும் அவள இங்க வரவிடாம தடுத்ததுக்கு அந்த முகம் தெரியாத எதிரிதான் காரணம்"

"பிரபா இங்கிருந்தா, என்ன கொல்லறதுக்கு அவள பயன்படுத்தி, அதனால அவ உயிருக்கே ஆபத்து வந்துரும்னுதான் அவள இங்க வரவிடல" என அதுவரை அமைதியாக கூறிக் கொண்டிருந்தவர்..

இப்ப நேரடியாவே என் மகள் உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சும் எப்படி அவள தனியா விட முடியும்.. என்ன மீறி எவன் வந்து என் பொண்ணு மேல கை வைக்கறான்னு நானும் பார்க்கிறேன்" என சிங்கமாய் கர்ஜிக்க ஆரம்பித்தார்....

"ஏங்க.. நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க.. இப்ப நடக்குற எல்லாத்தையும் பிரபாகிட்ட சொல்லிடலாமா??" எனக் கலக்கமாக கேட்ட.. செல்லம்மாவை முறைத்து பார்த்தவர்...

"எத சொல்லனும்.. எத சொல்லக்கூடாதுன்னு எனக்கு தெரியும்.. அதிகபிரசங்கித்தனமா எதையும் செய்யாம நீ உன் வேலைய மட்டும் பாரு" எனக் கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ... என்பதை ரத்தினவேல் உணரத் தவறினார்...

தான் என்ற எண்ணத்தை மேலோங்கவிடாமல், தன் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்திருந்தால்.. அன்றே அவர்களின் எதிரி யார்? என்று தெரிந்திருக்கும்.. அவர்களின் இலக்கு யார்? என்பது புரிந்திருக்கும். விதி! அதை வென்றவர் உண்டோ?

இரவு ஏழு மணி வாக்கில் எழுந்த பிரபாவதி, நேராக குளியலறையில் புகுந்து குளித்து விட்டு அவளது அறையில் இருந்து வெளியே வந்தவள், ஹாலில் யாருமில்லாமல் இருக்க... தன் தாயை தேடி சமயலறைக்கு சென்றாள்...

அங்கே இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த செல்லம்மாள் பிரபாவதி வந்ததை கவனிக்க வில்லை.. மெதுவாக அடிமேல் அடி வைத்து, பதுங்கி பதுங்கி தன் அன்னையை நெருங்கிய பிரபாவதி ...

"செல்லமாஆஆஆ" என சத்தமாக அடிக்குரலில் அவரின் காதின் அருகில் சென்று கத்த..

தீடிரென ஏற்பட்ட சத்தத்தில் "ஆஆஆஆ" என அலறியவரின் கையிலிருந்த பாத்திரம் தவறி கீழே விழுந்து "கட முட கட முட" சத்தம் எழுப்ப.. செல்லம்மாள் அதிர்ச்சியில் உறைந்திருக்க..
அவரது பீதியடைந்த முகத்தை பார்த்து பிரபாவதி வயிற்றை பிடித்தவாறு சிரித்து கொண்டிருந்தாள்...

" அடிக் கழுதை! உன்ன" என செல்லம்மாள் கையை ஓங்கியவாறு பிரபாவதியை அடிக்க வர.. அவரிடம் சிக்காமல் அழகு காட்டிவிட்டு வெளியே ஓடியவள்.. வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்த ரத்தினவேலை கண்டதும் "டாடிஈஈ என்ன காப்பத்துங்க, உங்க பொண்டாட்டி அடிக்க வராங்க" என தந்தையிடம் சரணடைந்தாள்....

"இப்ப நான் உன்ன காப்பாத்தினா.. அப்பறம் என்ன காப்பாத்த யாரும் இருக்க மாட்டாங்க.. அதனால நீயாச்சு உன் அம்மாவாச்சு.." என ரத்தினவேலும் விளையாட...

"டாடி... பிளீஸ் இந்த ஒருதடவை காப்பாத்துங்க" என தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருக்க... அதற்குள் பிரபாவதியை நெருங்கிய செல்லம்மாள் அவளது காதை திருகி அவளை தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்...

" ஆஆஆ! ஐயோ! வலிக்குது.. செல்லம்மா... ஸாரி ஸாரி, இனி அப்படி பண்ண மாட்டேன்" என் கெஞ்சிக் கொண்டிருக்க.. பிரபாவதி தன்னை பெயர் சொல்லி அழைத்தத்தில் பொய் கோபம் கொண்டு "என் பேர சொல்லற அளவு நீ வளந்துட்டியா??" என அவளை அதட்டியவராக மீண்டும் காதை திருக ஆரம்பித்தார்...

" ஐயோ! எல்லாத்தையும் இப்படி தப்பாவே புரிஞ்சு கிட்டா நான் என்ன பண்ணறது.. என் செல்ல அம்மாவ, செல்லமா செல்லமான்ன்- னு கூப்பிட்டேன்... ஸாரி இனி அப்படி கூப்பிட மாட்டேன் " என மன்னிப்பு வேண்ட, அதில் மனமிரங்கி அவள் காதை விடுவித்து அவளை அணைத்து கொண்டார்...

தன் அன்னையின் அரவணைப்பில் சிறிது நேரம் அடங்கியிருந்தவள் பின் அன்னையை விடுவித்துக் கொண்டு தான் டெல்லியில் வாழ்ந்ததைப் பற்றி பலவித முகபாவங்களை! வெளிப்படுத்தி ஒரு திரைப்படத்தையே ஓட்டி காண்பிக்க, தங்களது கண்களையும் காதையும், அவள்வசம் ஒப்படைத்துவிட்டு, அவள் சிரித்தால் சிரித்து வருந்தினால் வருந்தி மெய்மறந்து அவளை ரசித்துக் கொண்டிருக்க ஒருவழியாக மூச்சுவாங்க தன் வாழ்க்கை வரலாற்றை கூறி முடித்தவள், இரவு உணவை உண்டுவிட்டு மீண்டும் தன்அறைக்கு சென்றாள்...

பகல்பொழுதில் நன்றாக உறங்கியதால் கண்களில் துளிகூட உறக்கமில்லாமல் போக, வீட்டின் பால்கனியில் வந்து நின்றவளை குளிர்ந்த காற்று, அவளது தளிர்மேனியை! தழுவி வரவேற்க, தோட்டத்தில் பூத்திருந்த பூக்களின் நறுமணம் நாசியைத் தாக்க, அந்த சுகத்தை அனுபவித்தவாறே பார்வையை சுழல விட்டவளின் விழிகள் அவர்களது வீட்டின் வெளியே காவலுக்கு நின்றிருந்தவர்களை கண்டதும் நிலைக்குத்தி நின்றது....

அவளது வீட்டிற்கு வெளியே மதில் சுவரின் அருகில் பத்துக்கும் மேற்பட்டோர், கைகளில் கத்தி அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவலுக்கு நிற்க, அதை கண்டவளது மனதில் இனபுரியாத பயம் பரவ ஆரம்பித்தது... 'அப்படியானால் டெல்லியிலும் தன் உயிருக்கு ஆபத்து இருந்திருக்கக்கூடும்.. அதனால் தான் உடனடியாக தான் இங்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறோம்' என எண்ணியவள், சரி நடப்பது நடக்கட்டும் எதுவாக இருந்தாலும் தன்தந்தை பார்த்துக் கொள்வார் என மீண்டும் தந்தையின் மேல் நம்பிக்கை வைத்தவள் அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டு வானத்திலிருந்த நிலவை வெறித்தவளின் மனக்கண்ணில் சந்திரசேகரின் பிம்பம் தோன்றி மறைந்தது...

சந்திரசேகரை பற்றி எண்ணியவுடன், அழையா..? விருந்தாளியாக நாணம் அவளை தொற்றிக் கொள்ள, தலைகவிழ்ந்தவாறே புன்னகைத்துக் கொண்டு, விமான நிலையத்தில் அவனை சந்தித்தது முதல் அவனை பிரியும் வரை நடந்த நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை மனக்கண்ணில் திரும்பிப் பார்த்தவள், அவனுக்கு தன்னை நினைவு இருக்குமா..? அவனை மீண்டும் சந்திக்க முடியுமா..? என அவனை பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனாள்... எவ்வளவு நேரம் தன்னை மறந்து நின்றாளோ..? ஒரே இடத்தில் அசையாமல் நின்றாதால் கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு கால்கள் வலியெடுக்க, கனவுலகிலிருந்து வெளியே வந்தவள், நேராக சென்று தன் படுக்கையில் விழுந்தாள்... இந்தமுறை தூக்கம் இம்மியளவுகூட அவளை அணுகவில்லை... உருண்டு புரண்டு காடிகாரமுள் போல் படுக்கையை ஒரு வட்டமடித்து ஒருவழியாக விடியும் தருணத்தில் இமைகள் கனமாக, சந்திரசேகரின் நினைவுகளுடன் சுகமாக உறங்கிப் போனாள்...

காலையில் தனது அறையில் சென்று தாளிட்டுக் கொண்ட சந்திரசேகர் மதிய உணவிற்கும் வெளியே வரவில்லை.. இரவு உணவிற்கும் வெளியே வரவில்லை.. எட்டு மணியளவில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரன், சந்திரசேகரை பற்றி வினவ, அவன் உள்ளே சென்றதோடு சரி அதன்பிறகு வெளியே வரவில்லை என்று தெரிந்தவுடன் அவனை எழுப்பும் நோக்கில் அவ்பனது அறையை நோக்கி சென்றவர், பின் என்ன நினைத்தாரோ..? அந்த எண்ணத்தை கைவிட்டவராக குழப்பமான மனநிலையுடனே சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு செல்ல, மற்றவர்களும் அவரை தொடர்ந்து தங்களது அறைக்கு செல்ல... காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் தன் கடைமையை செய்ய விடியலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது....

காலை ஏழு மணியளவில் குளித்து முடித்து நேர்த்தியாக உடையணிந்து கதவை திறந்து வெளியே வந்தவனை ஹாலில் அமர்ந்தவாறு ஈஸ்வரனும், மற்றவர்களும் பார்த்துக் கொண்டிருக்க, சந்திரசேகரோ யாரையும் சட்டை செய்யவுமில்லை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை... நேராக உணவு மேஜையை நோக்கி சென்றவன், காலை உணவு தயாராக மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தட்டை எடுத்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தான்....

சந்திரசேகருக்கு பாரிமாருமாறு சிவகாமிக்கு ஈஸ்வரன் ஜாடை செய்ய, அதை புரிந்துகொண்டு சிவகாமி சந்திரசேகரின் அருகில் செல்ல எட்டு வைத்தவரை சந்திரசேகர் ஏறிட்டு முறைக்க, ஆணியாடித்தார் போல் அங்கேயே நின்றார் சிவகாமி... அதன்பிறகு அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை யாரும் அவரவர் இடத்தைவிட்டு அசையவில்லை....

ஈஸ்வரனுக்கு சந்திரசேகர் வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட பேசாமலிருப்பது ஏதோவொன்றை ..? உணர்த்தியது... ஆனால் அது இன்னதென்று அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை... சிவகாமிக்கும் வள்ளியம்மாளுக்கும் அவனது மவுனம் பெரும் கலக்கத்தை உருவாக்கியிருந்தது... தாய் தந்தை மற்றும் பாட்டியின் முகங்களை மாறி மாறி பார்த்தவாறே சாப்பிட்டு முடித்தவன் எழுந்து கைகளை கழுவிக் கொண்டு ஈஸ்வரனை நோக்கி சென்றான்...

" டாட்! நான் இந்தியா வந்திருக்கற விசியம் நம்ம சொந்த பந்தங்களுக்கோ இல்ல உங்க தொழில் நட்பு வட்டம்னு யாருக்கும் தெரிய கூடாது .. சுருக்கமா சொல்லனும்னா நான் வந்தது இந்த வீட்ட தாண்டி வெளிய போக கூடாது..."

"வெளிய என்னை எந்த சூழ்நிலைல யார்கூட பார்த்தாலும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது..."

" முக்கியமா.. நேத்து செஞ்ச மாதிரி முட்டாள்தனமா எதையும் செய்யாதிங்க..."

" என்ன செய்யணும் ...எப்ப செய்யணும்.. எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்.. நானா சொல்லற வரை நீங்க எதுலையும் தலையிடாதிங்க..."

" உயிர்.! போனா.? அது ஒருநொடி வேதனை டாட்... விஷ்ணுவோட இழப்புக்கு அதுமட்டுமே ஈடாகாது... அதனால நான் என்ன செய்ய போறேன்னு பொறுத்திருந்து பாருங்க.." என வரிசையாக கட்டளையிட்டவன் பின் யாரிடமும் பேசாமல், யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பி வெளியே சென்றுவிட்டான்...

சந்திரசேகரின் மனதில் என்ன உள்ளது..? அவனது திட்டம் என்ன ..? என எதுவும் தெரியாமலிருந்தாலும் அவனது உறுதியான பதிலால் மனம் சமாதானம் அடைய அவரும் அவரது தொழிலை பார்க்க கிளம்பி சென்றார்... தனது மகனது முடிவால் அவன் தேர்ந்தெடுத்த பழிவாங்கும் பாதையால், அவனது அழிவும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதை உணர்ந்து தாயாக தன் மகனின் வாழ்வை எண்ணி சிவகாமியால் அழ மட்டுமே முடிந்தது....

மயக்கம் தொடரும்....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்.... 11

இரவில் நெடுநேரம் கழித்து உறங்கிய பிராபாவதி காலையில் தாமதமாகவே கண் விழித்தாள். சோம்பல் முறித்தவாறே எழுந்து மணியை பார்த்தவளுக்கு, மணி ஒன்பதை தாண்டியிருக்கவும் பரபரப்பு தொற்றிக்கொள்ள.

" ச்சோ..! இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா..? " என சலித்துக்கொண்டே வேக வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டவள், மேற்கொண்டு அரைமணி நேரம் செலவு செய்து பொறுமையாக குளித்துவிட்டு, நேர்த்தியாக உடையணிந்து அளவாக தன்னை அலங்கரித்துக்கொண்டு ஒருமுறை கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவளுக்கு நிறைவாக தோன்ற, புன்னகை சிந்தியவள், லேசாக பசி வயிற்றைக்கிள்ள,


"இன்னைக்கு என்ன செஞ்சுருப்பாங்க.. முதல்ல காப்பி குடிக்கலாமா..? இல்ல சாப்பிடலாமா..?" என மனதிற்குள் எண்ணியவாறு கதவை திறந்துகொண்டு மாடியிலிருந்து கிழே இறங்க ஆரம்பித்தவளுக்கு, கிழ் இருந்து வரும் பேச்சு சப்தமும், பெண்களின் சிரிப்பொலியும் அதிகமாக இருக்க யோசனையாய் கிழே வந்தவள் அங்கிருந்த உறவினர்களை கண்டு திகைத்தாள்...


இரவில் உறங்க செல்லும்வரை தாய் தந்தை, சில வேலையாட்களை தவிர்த்து ஒருவருமில்லாத நிலையில், இப்பொழுது அவளது வீடு உறவினர்களின் வருகையால் நிரம்பியிருந்தது.. பிரபாவதி வந்திருக்கிறாள் என்று தகவல் தெரிந்தவுடன், அவளது தாய்வழி தந்தைவழி உறவினர்கள் இரவோடு இரவாக படையெடுக்க ஆரம்பித்திருந்தனர்...


உறவினர்களை கண்டு மலங்க மலங்க விழித்தவாறே நின்றிருந்த பிரபாவதியை கண்டதும், உறவினர்கள் மொத்தமாக அவளை சூழ்ந்துகொண்டு, ஒவ்வொருவரும் அவர்களாகவே தங்களை இன்ன உறவென்று அறிமுகப்படுத்திக்கொள்ள, யாரையும் நினைவில்லாததால் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்..

அவளது தயக்கத்தை உணர்ந்தவாறு கூட்டத்திலிருந்த ரத்தினவேலின் தங்கை, பிரபாவதியின் அத்தை செண்பகம்

" முதல்ல எல்லாரும் நகருங்க புள்ள சாப்பிடட்டும் " எனக்கூற, அறிமுகப்படலத்திலிருந்து தப்பித்த சந்தோஷத்தில் முகம் மீண்டும் பிரகாசமாக மாற, புன்னகைமுகமாகவே துள்ளிக் குதித்து தன் தாயை தேடி சமயலறைக்கு ஓடினாள்...

" ம்மா யாருமா..? இவங்கெல்லாம் ..." என சமையலில் மும்முரமாக இருந்த தன் செல்லமாவை நோக்கி வினவ,

" ஏண்டி.. ஒரு வயசுப்புள்ள இவ்வளவு நேரமாவா..? தூங்குவ.." என சமையலில் கவனத்தை வைத்தவாறே அவள் புறம் திரும்பாமல் பதிலளிக்க...

" ம்மா நான் என்ன பண்ணறது ராத்திரி எனக்கு தூக்கமே வரல, ரொம்ப நேரம்கழிச்சுதான் தூங்குனேன்.. அதான் எழுந்திரிக்க முடியல... சரி அத விடுங்க யார்..? இவங்கெல்லாம். எதுக்கு..? வந்துருக்காங்க.. " என அவர்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் மீண்டும் அவர்களை பற்றி கேள்வியெழுப்ப...

" எல்லாரும் நம்ம செந்தகாரங்க தாண்டா... நீ சின்ன வயசுல பார்த்தது அதான் உனக்கு ஞாபகம் இல்ல.. சரி பசிக்குதா..? சாப்பிடறியா..? " என கேட்க

வேண்டும் என்பதை போலவும், வேண்டாம் என்பதை போலவும் இடவலமாக தலையை ஆட்ட, அவளின் தயக்கத்தை எண்ணி தனக்குள் புன்னகைத்தவாறே

" நீ தயங்கற அளவு அவங்க யாரும் அந்நியம் இல்ல பிரபா..! எல்லாரும் நம்ம ரத்த சொந்தங்கதான். போ..! போய் எல்லார் கூடையும் சகஜமா பேசிட்டு இரு... அம்மா உனக்கு சாப்பிட எடுத்துட்டு வறேன் " எனக்கூற தயங்கிக்கொண்டே மீண்டும் வரவேற்பறைக்கு வந்தவள் கூட்டத்தில் காலியாக இருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்

அங்கிருந்த பெண்கள் அனைவரும் பெரியவர்களாக இருக்க, தனக்கு தோதாக தன் வயதை ஒத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என தலையை தூக்கி மெதுவாக தேட...

" சித்திஇஈஈஈ" என கத்திக்கொண்டே இரண்டு சிறுமிகள் மாடியிலிருந்து மூச்சிரைக்க அவளிடம் ஓடிவந்து...

" நீங்கதான் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கற சித்தியா..? சொல்லுங்க.. " என கேள்வியெழுப்ப புரியாமல் முழித்தவள்

" ம்ம்ம் " என்றவாறு பொதுவாக தலையை ஆட்ட

" நீங்க நல்ல சித்தியா..? இல்ல கெட்ட சித்தியா..? " என மற்றொரு சிறுமி கேள்வியெழுப்ப, மெதுவாக புன்னகைத்தவள்

" நீயே சொல்லு... நான் நல்ல சித்தியா, இல்ல கெட்ட சித்தியானு " என அவர்களிடமே கேள்வியெழுப்பினாள்

பெரிதாக யோசிப்பதைப் போல் பாவனை செய்தவர்கள் இருவரும் ஒரே முடிவாக

" மேல இருக்கற ரூம்ல நிறையா வியாட்டுசாமான் இருக்கு.. அதை எடுத்து குடுத்தா நீங்க நல்ல சித்தி, இல்லைனா கெட்ட சித்தி... என இருவரும் கோரசாக கூற

" ஹா ஹா ஹா ஹா " என சிரித்தவள்

" சரி சரி எடுத்துக் குடுக்கறேன்... ஆனா..? என்னையும் விளையாட்டுக்கு சேத்திக்கணும்.. சரியா " எனக் கூற

" ஹய்யா ஜாலி ஜாலி... " எனக் குதுகளித்தவாறு இருவரும் பிராபாவதியை கட்டிக்கொள்ள, அந்நேரம் உணவுத் தட்டுடன் சமையலறையிலிருந்து வெளிப்பட்ட செல்லம்மாள்

" கண்ணுங்களா முதல்ல உங்க சித்தி சாப்பிடட்டும்.. அப்பறம் சித்தி கூட விளையாடுங்க.." எனக்கூற, சிறுமிகளும் சரி என எழுந்து கொள்ள, செண்பகம் செல்லம்மாளின் கையிலிருந்த தட்டை வாங்கி பிரபாவதிக்கு ஊட்டி விட ஆரம்பிக்க, தயக்கம் சற்று குறைந்திருந்ததால் மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தாள்

அப்பொழுது வெளியே சென்றிருந்த ரத்தினவேலும் செண்பகத்தின் கணவரும் வந்துவிட, தன் மனைவி பிரபாவதிக்கு ஊட்டிவிடுவதை கண்டு அவரை சீண்டும் விதமாக...

" என்ன..? செண்பகம்..! இப்பவே உன் மருமகளை காக்கா பிடிக்க ஆரம்பிச்சுட்டியா..? " எனக் கேலியாக வினவ

" என் மருமகளுக்கு நான் ஊட்டிவிடறேன்.. உங்களுக்கு என்ன..? நீ சாப்பிடுமா அவங்க கிடக்கறாங்க " எனக்கூறி விட்டு மறுபடியும் ஊட்டிவிட(காக்கா பிடிக்க) ஆரம்பித்தார்...

செண்பகத்திற்கு தன் அண்ணன் மகளை எப்படியாவது தன் மகனுக்கு மணம் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் நெடுநாட்களாக உண்டு... ஏனெனில் ரத்தினவேலின் மொத்த சொத்தும் அவள் ஒருத்திக்குத்தான் என்ற காரணம்தான்... இன்று அவளை நேரில் கண்டதும் அவளது அழகில் சொக்கி போய் உறுதியாகவே முடிவெடுத்து விட்டார்.. பிராபாவதிதான் தன் வீட்டு மருமகள் என்று...

முன்பு ரத்தினவேலிடம் இதை பற்றி பேசும் பொழுது என் மகளின் முடிவுதான் என் முடிவு. அவ முதல்ல படிச்சு முடிச்சுட்டு வீட்டுக்கு வரட்டும். அதனால இதை பத்தி இப்பொழுது பேச வேண்டாம் என அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்துவிடுவார்..

இவ்வளவு நாட்களாக பிராபாவதி எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியாமலிருந்த நிலையில், அவள் வந்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் உடனே தன் கணவனை அழைத்துக்கொண்டு கிளம்பி வந்து விட்டார்..

செண்பகத்தின் மனதில் உள்ளதை ரத்தினவேலும் மற்றவர்களும் அறியாமல் இல்லை. ரத்தினவேல் செல்லம்மாள் உறவு வகையில் மேலும் சில முறை மாமன்கள் இருந்தபோதிலும் அவர்கள் தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர்...

ஏனெனில் தனக்கு கிடைக்காததை எவ்வகையிலாவது இல்லாமல் செய்து விட கூடியவர் செண்பகம் என்பதை மற்றவர்கள் அறிந்திருந்ததால், அவர்களுக்கும் பிராபாவதி தன் வீட்டு மருமகளாக வரவேண்டும் என்று ஆசை இருந்தாலும் அதை உள்ளுக்குள்ளே மறைத்துக்கொண்டு பிராபாவதியை காண மட்டுமே வந்திருந்தனர்

எதிர்ப்புகளும் இல்லை. பிரபாவதிக்கும் விருப்பம் என்றால் அண்ணனும் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று முடிவெடுத்து பிரபாவதியை தன் வசப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்தார்...

யார் மனதில் என்ன உள்ளது ..? ... நிஜம் எது..? போலி எது..? ஒவ்வொரு விடியலும் தனக்கு என்ன வைத்திருக்கிறது..? என்று தெரியாமல், சாப்பிட்டு முடித்த பிரபாவதி, சிறுமிகளை அழைத்துக்கொண்டு தனதறைக்கு சென்று அவர்கள் விரும்பிய விளையாட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு சிறுமியாகவே மாறி விட்டின் பின்புறமாக இருந்த பூங்காவில் விளையாட சென்று விட்டாள்..

" அண்ணா இன்னைக்கே நாள் நல்லாத்தான் இருக்கு... இதுக்குமேல என் மருமகள நான் விட்டுட்டு இருக்க மாட்டேன். நீ சரின்னு ஒரு வார்த்தை சொல்லு இப்பவே தட்ட மாத்திக்கலாம்... உனக்கு எப்ப தோது படுதோ அன்னைக்கு கல்யாணத்த வச்சுக்கலாம் என்ன சொல்லற..? " என பிரபாவதி வெளியே சென்று விட்டாள் என்பதை உறுதி படுத்திக்கொண்ட செண்பகம், மெதுவாக ரத்தினவேலிடம் சபையில் எல்லோர் முன்னிலையிலும் தன் மகனின் கல்யாண பேச்சை ஆரம்பித்தார்...

ரத்தினவேல் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க

" என்னண்ணா எதுவும் சொல்லாம அமைதியா இருக்க.

என் மகனுக்கு பிரபாவதியை கட்டி கொடுக்க உனக்கு விருப்பம் இல்லையா..? பதில் சொல்லுண்ணா " எனக்கூற



" அதெல்லாம் இல்ல செண்பகம் " என ரத்தினவேல் மென்று விழுங்க..

" அப்பறம் என்ன..? பிரபாவதி என்ன சொல்லுவான்னு நினைக்கிறியா..? அவ குழந்தை அவளுக்கு என்ன தெரியும். நாம சொன்ன மறுத்தா பேசப்போறா.. அப்படியே ஏதாவது சொன்னாலும் பெரியவங்க நாமதான் எடுத்து சொல்லி புரிய வைக்கணும். என மருமகள சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு. அதை பத்தி நீ கவலை படாத

எனக்கு உன் முடிவுதான் தெரியனும் " என ரத்தினவேலிடம் எப்படியும் இன்று சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்

ரத்தினவேலுக்கோ என்ன சொல்வது..?, எதை சொல்வது..?, எப்படி சொல்வது..? என்று மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருக்க, இறுதியாக இனி மறைக்க முடியாது என்று முடிவெடுத்து

பெரு மூச்சொன்றை வெளிப்படுத்தியவாறு,

இதுவரையிலும் நடந்ததையும், பிரபாவதியை இவ்வளவுநாள் பிரிந்திருந்த காரணத்தையும், இன்று அவளது உயிருக்கு நேரடியாக வந்திருக்கும் ஆபத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார்

ரத்தினவேல் கூறியதை கேட்ட செண்பகத்திற்கும் மற்றவர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது... இதுநாள் வரையில் பிராபாவதி வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் அனைவருக்கும் தெரியும். ரத்தினவேல் உண்மையை கூறியதும் சிலநிமிடம் அங்கு நிசப்தம் நிலவ அதை கலைக்கும் விதமாக

" ஏண்ணா உனக்கு புத்தி கித்தி கேட்டு போச்சா..? எவனோ நம்ம புள்ளைய கொலை பண்ணுவேன்னு சொன்னா.? அவன் தலைய வெட்டி வீசறத விட்டுட்டு அவனுக்கு பயந்து நம்ம புள்ளைய இத்தனை வருஷம் பிரிச்சு வச்சுருக்கிங்க . உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லையா..? " என கோபமாக கூறிவிட்டு

" எப்படிண்ணா..? ஒரு வார்த்தை கூட எங்க கிட்ட இதை சொல்லனும்னு தோணலையா..? என்ன மீறி என மருமக மேல எவன் கைய வைக்கிறானு பார்க்கிறேன்.." என கொதிக்க ஆரம்பித்தார். ரத்தினவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க நிலைமை தனக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்து கொண்டு

" அண்ணா நாளைக்கே நாம நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய் ஒரு பூஜை பண்ணிட்டு அப்படியே சாமிகிட்ட பூகேட்டுட்டு வந்திரலாம் என்ன சொல்லற..?" என செண்பகமாகவே முடிவெடுத்து கேள்வி எழுப்ப ரத்தினவேலால் எதையும் மறுக்க முடியவில்லை

ரத்தினவேலின் அமைதியையே சம்மதமாக கருதி தன் கணவரிடம்

" ஏங்க சூரியாவுக்கு விசியத்தை சொல்லி நாளைக்கே வர சொல்லுங்க. எல்லாரும் நம்ம குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்திரலாம்" என தன் கணவருக்கு கட்டளையிட

" எல்லாம் சரி செண்பகம்... ஆனா கல்யாணத்த உடனே செய்ய முடியாது... முதல்ல இதுக்கு காரணமானவங்க யாருனு..? கண்டு பிடிக்கணும். அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு தெரிஞ்ச பின்னாடிதான் நான் என் பொண்ண கல்யாணம் பண்ணிக் குடுப்பேன். பிரபாக்கு சூரியானு இருந்தா நான் தடை சொல்ல போறது இல்ல. ஒருவேளை பிரபாவுக்கு இதுல விருப்பம் இல்லைனா, இந்த பேச்ச அதோட நீ மறந்திடணும். அதுவரை நாம பேசற எதுவும் பிரபாவுக்கு தெரிய வேண்டாம். இதுல உனக்கு சம்மதமா..? " என ரத்தினவேல் கூற

" உன் சம்மதம் போதும் அண்ணா. எனக்கு முழு சம்மதம் சூரியாவ கட்டிக்க பிரபாவுக்கு கசக்குமா என்ன..? அதில்லாம போலிஸ்காரனுக்கு பொண்டாட்டியா வரவ மேல எவனாவது கைய வைக்க முடியுமா..? பிரபாவ சமாதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீ மத்த வேலைகளை பாரு. என மருமகள நான் பார்த்துக்கறேன்" என ரத்தினவேலின் சம்மதம் கிடைத்ததால் வாயெல்லாம் பல்லாக செண்பகம் கூற, ரத்தினவேலும் அந்த பேச்சை முடித்துக் கொண்டு மற்ற வேலைகளை கவனிக்க செல்ல, வயதானவர்கள் ஓரமாக உட்கார்ந்து கொண்டு கதையளக்க, ஆண்கள் சிலர் ஆடு கோழிகளை மதிய உணவிற்காக உயிர் பலியிட செல்ல, பெண்கள் சிலர் ஆளுக்கொரு வேலையாக கையிலெடுக்க, ரத்தினவேலின் இல்லம் பரபரக்க ஆரம்பித்தது...

ஒருபக்கம் சந்திரனும், மறுபக்கம் சூரியனுமாய்

தன்னை சுற்றி பின்னப்படும் எந்த சூழ்ச்சியையும் அறியாமல்

சிறுமிகளோடு சிறுமியாக.!

பூக்களோடு பூக்களாக.!

வண்ணத்துப்பூசிகளோடு வண்ணத்துப்பூச்சியாக.!

மாறிச் சிறகடிக்கும் இந்த மண்ணுலக தேவதைக்கு

விண்ணுலகம் எழுதிவைத்த கேள்விக்கு

விடை தான் என்னவோ..?




மயக்கம் தொடரும்
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மான்...12

ஈஸ்வரனிடம் எச்சரிக்கை செய்துவிட்டு வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய சந்திரசேகரின் எண்ணம் முழுவதும் பிராபாவதியைச் சுற்றியே இருக்க, தன் கட்டுப்பாட்டையும் மீறி, பிரபாவதியைக் காண செல்லுமாறு மூளை கட்டளை இட, அனிச்சையாகவே அவளது விட்டின் வாயில் வரை வந்து விட்டவன், அங்கு கூடியிருந்த உறவினர்களைக் கண்டு ஒரு கணம் சுதாரித்து வந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து அகன்று, அவளது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவு தள்ளிச் சென்று காரை நிறுத்தினான்..

அவசரபட்டு எந்த செயலை செய்தாலும் அது தனக்கு எதிர்வினையாக அமையக்கூடும். அதே சமயம் காலம் தாழ்த்துவதும் அவளை நெருங்கும் வழிகளை இன்னும் சிக்கலாக்கிவிடும். அவளது வீட்டிலும் இப்பொழுது என்ன நிலைமை என்றும் தெரியவில்லை. என்ன செய்வது என பலவாறாக யோசித்தவன், குழம்பிப் போனான்.. பிரபாவதியை காணவேண்டும் என்று பேயாட்டம் போட்ட மனதை எவ்வாறு அடக்குவதென்று சுத்தமாக அவனுக்கு புரிபடவில்லை..

அவளை காணத் துடிப்பதற்கு காரணம் அவள்மேல் கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியா..? இல்லை தன்னையும், தன் பழிவாங்கும் உணர்வையும் மீறி அவள்மேல் வந்திருக்கும் காதலா..?. காதல் என்ற எண்ணம் வந்தவுடன் பிரபாவதியின் புகைப்படத்தை பார்த்ததிலிருந்து தன் மனதினை அரிக்கும் கேள்வி மீண்டும் எழ... அதற்கு பதில் அவனிடத்தில் இல்லை

ஒருவரை நேரடியாக பார்க்காமல் புகைப்படத்தை பார்த்து காதல் கொள்ள முடியுமா..? என்று அவளை காணும் வரை தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன்... அவளை விமானநிலையத்தில் கண்ட நொடிமுதல் அவள் உன்னவள் உனக்கானவள் என்று மனம் கூக்குரலிட, பழிவாங்கும் மனது ஒருபுறம், காதல்வயப்பட்ட மனது மறுபுறமென இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்க ஆரம்பித்தான்..

பிரபாவதியை திருமணம் செய்துகொள்ள தன் தந்தை ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை. தான் யார் என்றும், எதற்காக அவளை தேடினோம் என்று தெரிந்தால் பிரபாவதியின் முடிவு என்னவாக இருக்கும் என்றும் தெரியவில்லை. எல்லாவற்றையும் விட பிரபாவதிக்கு தன்னை நினைவு இருக்குமா..? என்ற கேள்வி எழுந்தவுடன்.. ஒருவித பதற்றம் அவனை ஆட்கொள்ள


‘ இல்லை நிச்சயமாக என்னை மறந்திருக்க மாட்டாள். இதுவெறும் வழிப்பயண உறவு கிடையாது ‘ என்று தனக்குதானே சமாதானம் சொல்லிக்கொள்ள..

‘அதை எப்படி நீ... உறுதியாக சொல்ல முடியும். ஒருவேளை உன்னை பற்றிய நினைவு அவளுக்கு இல்லாமல் போனால், உன்னால் என்ன செய்ய முடியும் ‘ என மனது அவனிடம் கேள்வி எழுப்ப, அதற்கான விடையை தெரிந்து கொள்ள ஒரேவழி, எதற்கும் தயங்காமல் நேரடியாகவே அவளை தேடி செல்வது என முடிவெடுத்து காரை அங்கேயே நிறுத்திவிட்டு அவளது வீட்டை நோக்கி நடை போட ஆரம்பித்தான்...

மதிய உணவு தாயாரானதும் பிரபாவதியை சாப்பிட அழைக்க தேடிக்கொண்டே ரத்தினவேல் தோட்டத்திற்கு வர, தோட்டத்தில் சிறுமிகளோடு சிறுமியாக மாறி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த தன் மகளைக் கண்டதும், அவளை நோக்கி முன்னேற, தந்தையை கண்டதும் ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்திவிட்டு சிறுமிகளை அழைத்துக் கொண்டு தந்தையை நோக்கி வந்தவள், அவரை கட்டிக்கொண்டு என்ன என்பதைப்போல் ஏறிட்டுப் பார்க்க

“ இப்படியே விளையாடிட்டே இருந்தா போதுமா..? என் செல்லத்துக்கு பசிக்கலையா..?” என வாஞ்சையாக தலையை தடவியபடியே அவளிடம் வினவ

“ டாடி அதுக்குள்ள மதியம் ஆகிடுச்சா..? இவங்க கூட விளையாடிட்டே இருந்தேனா நேரம் போனதே தெரியல. ரெண்டுமே சரியான வாலுங்க... இவங்களை சமாளிச்சு ஒத்துமையா விளையாட வைக்கறதுக்குள்ள எனக்கு போதும்னு ஆகிடுச்சு” என தந்தையிடம் புன்னகையுடனே கூறி கொண்டிருக்கையில், வீட்டின் வாயிலில் காரின் ஹாரன் ஒலி கேட்க, இருவரும் திரும்பி பார்த்தனர்

தான் வந்த காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கி கம்பீரமாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் சூரியா

ரத்தினவேலின் சம்மதம் கிடைத்தவுடன் தன் கணவன் மூலமாக தன் மகனுக்கு தகவலை தெரியப்படுத்தி உடனடியாக கிளம்பிவர பணித்திருந்தார் செண்பகம்.

எந்த காரியத்திலும் காலம் தாழ்த்துவது அவருக்கு பிடிக்காது எதையும் சூட்டோடு சூடாக முடித்துவிட வேண்டும் என்று எண்ணுபவர்

ஆனால் சூரியாவிற்கோ தாயின் விருப்பத்தில் துளிக்கூட விருப்பம் இல்லை. இருந்தாலும் இதுவரை அவரை மீறி ஏதும் செய்ததில்லை. அதனால் மேற்கொண்டு மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பி வந்திருந்தான்

தனது வீட்டிற்கு ஒரு காவலர் வருவதைக் கண்டு, ஒருவேளை தன் பாதுகாப்பு சம்பந்தமாக தன் தந்தை காவல்துறையை அணுகியிருப்பார் என்று பிரபாவதி எண்ணிக்கொண்டிருக்க,

“ வா சூரியா, மாமா வீட்டுக்கு வரதுனாலும் போலிஸ் ட்ரெஸ்- ல தா வரணுமா..? “ என புன்னகைத்துக் கொண்டே ரத்தினவேல் வினவ

“ அப்படிலாம் இல்ல மாமா.. பக்கத்துல கேஸ் விசியமா வந்தேன். வந்த வேளை முடிஞ்சுது. அதான் அப்படியே கிளம்பி வந்துட்டேன்” என கூறிக் கொண்டிருக்க, இருவரையும் மாறி மாறி பார்த்தவள்.. தன் தந்தையின் கைகளை இழுக்க, அதை புரிந்து கொண்டவர்

“ பிரபா..! இவர் சூரியா உன் அத்தை செண்பகத்தோட பையன்.. உன் முறை மாமன் ” என அறிமுகப்படுத்த எதுவும் பேசாமல் தந்தையை இறுக்கி அணைத்தவாறு தந்தையின் பின்புறம் பதுங்க, அவளின் மனநிலையை உணர்ந்து கொண்டவர்

“ சூரியா..! இவ என் பொண்ணு பிரபாவதி. உனக்கு தெரிஞ்சிருக்கும். எல்லாரும் சின்னதுல பார்த்தது அதனால அவளுக்கு யாரையும் நினைவில்ல. போகப் போக தெரிஞ்சுக்குவா “ என ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்பொழுதே

“ வா சூரியா “ என அழைத்துக் கொண்டே செண்பகமும் மற்ற உறவினர்களும் வெளியே வந்துவிட

பொதுவாக எல்லோரையும் பார்த்து தலையசைத்து வணக்கத்தை வைத்துவிட்டு அனைவரும் வீட்டினுள்ளே செல்ல முற்படுகையில், மீண்டும் வாயிற்கதவு திறக்கும் சத்தம் கேட்டு அனைவரும் வாயிற் கதவை நோக்கி திரும்ப, மிடுக்காக உடையணிந்து அங்கிருந்த காவலாளியிடம் பேசிக்கொண்டிருந்த சந்திரசேகரை கண்டதும் பிரபாவதியின் கால்கள் தரையில் நில்லாமல் அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது...

அவனுக்கு தன்னை நினைவிருக்குமா..? தாங்கள் மீண்டும் சந்திப்போமா..? என்றெல்லாம் பிரபாவதி நினைத்துக்கொண்டிருக்கையில் அவளை தேடி அடுத்தநாளே சந்திரசேகர் வந்து நிப்பான் என்று பிரபாவதி கனவிலும் நினைக்கவில்லை

தன் தந்தையை விடுத்து சந்திரசேகரை நோக்கி ஓட்டமாக சென்ற பிரபாவதி, அவனை நேர்கொண்டு பார்க்க அவனின் கண்களில் இருந்த வசீகரத்தை கண்டு பாகாக உருகிப் போனாள். பிரபாவதி அவனது கையை பற்றி அழைத்து வருவதை கண்டதும் செண்பகத்திற்கு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது.. உள்ளம் எரிமலையாக குமுறினாலும் இருந்தும் வெளியே எதையும் காட்டிகொள்ளாமல், வறட்சியான புன்னகையை உதட்டில் சிந்தியவாறு நின்று கொண்டிருந்தார்

சந்திரசேகருக்கோ அவனது மனதினை அலைக்கழித்துக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்த நிம்மதியில் குழப்பங்கள் நீங்கியவனாக அவர்களை நோக்கி வந்தவன்

அங்கிருந்தவர்களையும் ரத்தினவேலையும் பார்த்து பொதுவாக வணக்கம் வைக்க, சந்திரசேகரை சில நிமடங்கள் மட்டுமே பார்த்திருந்தாலும் அவனை கண்டு கொண்டு

“ இவர் சந்திரன்... பிரபாவதியோட பிரெண்ட்” என அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்த, ரத்தினவேலுக்கும் தெரிந்திருந்ததால் சந்திரசேகரை பற்றி யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவனையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்...

வீட்டின் உள்ளே வந்த சந்திரசேகர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னை பற்றிய கேள்வியை முதலில் யார் எழுப்புவார்கள்..? இந்த வீட்டில் தனது வருகை யாருக்கு..? இடைஞ்சலாக இருக்கும் என்று தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்தவாறு முடிவெடுக்கலாம் என்று ஒவ்வொருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த பிரபாவதியின் உறவினர்கள் ஒவ்வொருவரும் அவனை ஏறிட்டு பார்த்தார்களோ தவிர, ஒருவரும் அவனிடம் பேச முற்படவில்லை

ஏதோ ஒரு வேகத்தில் பிரபாவை தேடிக் கொண்டு அவளது வீட்டிற்கே வந்து விட்டாலும் அங்கிருப்பவர்களை எப்படி எதிர்கொள்வது என்று சந்திரசேகருக்கு புரியவில்லை. நடப்பது நடக்கட்டும் என அமைதியாகவே அமர்ந்திருந்தான் 'பிரபாவதியின் நண்பன் என்று கூறி அறிமுகமாகி வீட்டிற்குள் வந்துவிட்டாலும், இனி அடுத்து தன்னையும் தன் குடும்பத்தையும், பிராபவதியுடன் எப்படி பழக்கம் என்பதை பற்றியும் எழும் கேள்விகளுக்கும், யாருக்கும் தன் மீது சந்தேகம் வராதவாறு பதிலளிக்க வேண்டும். இதுல பிரபாவதியின் முறைப்பையன் வேற போலிஸ்ல இருக்கான் அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா பதில் சொல்லணும் மாத்தி சொன்ன ஒருவேளை கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு' என மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்கையில்

" ம்ம்ம்.. சொல்லுங்க தம்பி உங்க பேர் என்ன சொன்னிங்க ..? " என்ற கேள்வியோடு, உள்ளம் உலைக்களமாக கொதிக்க, உதட்டில் செயற்கையான புன்னகையை தவழவிட்டவாறு செண்பகம் சந்திரசேகரின் அருகில் வந்து அமர, யாருக்கு தனது வரவு இடைஞ்சலாக இருக்கும் என்பதை, செண்பகத்தின் முகத்தையும், உதடுகளில் வழியும் அமிலம் கலந்த புன்னகையையும் வைத்தே கண்டு கொண்டவன் புன்னகை முகமாகவே அவர் புறம் திரும்பி பதிலளிக்கும் முன்,

" என்ன செண்பகம்..? இப்ப அவர பத்தி தெரிஞ்சுக்கறதா..? முக்கியம். முதல்ல எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடு.. மணி என்ன ஆச்சுன்னு பார்த்தியா. பொம்பளைங்க எல்லாரும் எழுந்திரிங்க, ஆம்பளைங்க முதல்ல சாப்பிடட்டும்... வேகமா பரிமாறர வேலைய கவனிங்க " என செண்பகத்தின் கணவர் அங்கிருப்பவர்கள் முன்னிலையில் தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதற்காக கட்டளையிட, தன் கணவர் மேல் வந்த கட்டுக்கடங்காத கோபத்தை சபை நாகரிகம் கருதி தனக்குள் அடக்கிக் கொண்டு, தன் கணவரை பார்த்து முறைத்தவாறே..

" வாங்க தம்பி சாப்பிடலாம். நான் உங்களை பத்தி அப்பறம் தெரிஞ்சுக்கறேன்.." என உன்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் நான் விடப்போவதில்லை என்ற உறுதியுடன் செண்பகம் கூற

" கவலையே படாதிங்க. நீங்களே மறந்தாக்கூட நானே என்னை பத்தி உங்க கிட்ட கண்டிப்பா சொல்லறேன் போதுமா..? " என புன்னகையுடனே அவருக்கு பதிலளித்துவிட்டு, உனக்கு நானும் சளைத்தவன் அல்ல என்பதைப்போல ஏறிட்டு செண்பகத்தை நேர் பார்வை பார்க்க, அந்த நொடியே அவர்கள் இருவருக்குமிடையில் உறுதி செய்யப்படாத பனிப்போர் துவங்கியிருந்தது. செண்பகத்தின் மனநிலையை உணராத அவரின் கணவர்

" அதான் தம்பியே சொல்லிட்டார்ல. போ, போய் எல்லாரும் சாப்பிடறதுக்கு எல்லாத்தையும் எடுத்து வை. சும்மா மச மசன்னு நிக்காத " என மீண்டும் கட்டளையிட, இதற்குமேல் இங்கிருந்தால் வார்த்தை முற்றி ஏதாவது பேசிவிடுவோம் என்று கருதி இருவரையும் முறைத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்...

அங்கிருந்த நாற்காலிகளை ஓரமாக நகர்த்திவிட்டு, வரவேற்பறையிலே பந்தி பரிமாறுவதற்கான ஏற்பாடுகளை அங்கிருந்த உறவுக்கார பெண்கள் செய்து கொண்டிருக்க, அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி வெளியே வந்தவன் சாப்பிடுவதற்கு தேவையான இலைகளை வெட்ட கையில் கத்தியுடன் வெளிப்பட்ட சூர்யாவுடன் சேர்ந்து கொண்டு இலை வெட்ட தோட்டத்துக்கு சென்றவன், ஒவ்வொரு இலையாக இழுத்து சூரியா இலையை வெட்டுவதற்கு ஏதுவாக பிடித்துக்கொண்டு நின்றான்...

தான் கூப்பிடாமலே தன்னுடன் வந்து உதவும் சந்திரசேகரை சூரியாவுக்கும் உடனே பிடித்துப் போனது. இருவரும் சேர்ந்து இலையை வெட்டிக் கொண்டிருப்பதை ரத்தினவேலும் பிரபாவதியும் ஆச்சர்யமாக.! பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால், செண்பகமோ அனல் கக்கும் பார்வையுடன் தனது மகனை மனதிற்குள் வசைபாடியபடியே பார்த்துக் கொண்டிருந்தார்.. இருவரும் இலையை வெட்டிக் கொண்டு வருவதற்குள் மற்றவர்கள் சமைத்த உணவுகளை தனித்தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்து அந்த அறையில் கடை பரப்பியிருந்தனர்... ஆண்கள் அனைவரும் அமர்ந்து, இலைப்போட்டு தண்ணிர் தெளித்த பின்னரும் சந்திரசேகர் அமராமல் தயங்கியவாறு நின்றிருக்க

" சந்திரன் ஏன் தயங்குறீங்க உங்க வீடுமாதிரி நினைச்சுக்கோங்க.. கூச்சப்படாம உக்காந்து சாப்பிடுங்க " என ரத்தினவேல் கூற

" அது இல்லைங்க... சொல்லறேன்னு யாரும் தப்பா நினைச்சுக்க வேண்டாம். முதல்ல வயசானவங்க உக்காந்து சாப்பிடட்டும். இப்பவே மணி மூணுக்கு பக்கம் ஆகுது. நாம எல்லாரும் சாப்பிடதுக்கு அப்பறம் அவங்க எப்ப சாப்பிடுவாங்க..? அதனால தாத்தா பாட்டி எல்லாரும் முதல்ல சாப்பிடட்டும். அப்பறம் நமக்காக தினமமும் சமைச்சு போட்டுட்டு வீட்டு பொம்பளைங்க கடைசியாதான சாப்பிடறாங்க. இன்னைக்கு ஒருநாளாவது அவங்க நமக்கு முன்னாடி சாப்பிடட்டும். நாம பரிமாறிட்டு அப்பறம் சாப்பிடலாம் " எனக்கூற சந்திரசேகரின் கருத்தை ஆமோதிப்பது போல சூரியாவும் ரத்தினவேலும் ஓரளவு இள வயதினரும் எழுந்து கொள்ள, சூரியாவின் அப்பா எழுந்திரிக்க மாட்டேன் என்பதைப்போல எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.. சூரியா அவரையே முறைத்துக் பார்த்துக் கொண்டிருக்க, தன்மகன் தன்னை கண்டுக்காமல் சென்றுவிடுவான் என்று எதிர்பார்த்தவர் அவன் செல்லும் வழி தெரியாமல் போகவே, வேறு வழியில்லாமல் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு

' ஏன்டா புதுசு புதுசா ரூல்ஸ போட்டு என் வயித்துல அடிக்கிறிங்க. வந்ததுதான் அப்படினா, நான் பெத்ததும் அப்படிதான் இருக்கு.

இவளுங்க சாப்பிட்டதுக்கு அப்பறம் குழம்பாவது மிச்சமிருக்குமா..? இவளுங்க எல்லாம் சமைக்கறப்பவே சாப்பிட்டுருப்பாங்க. புதுசா வந்தவன் தான் அது தெரியாம பேசறான்னா... இந்த போலீஸ்காரனும் கூட்டு சேர்ந்துட்டு முறைக்கிறான். காரணம் இல்லாமையா ஆம்பளைங்க முதல்ல சாப்பிடனும்னு பெரியவங்க சொல்லி வச்சுருக்காங்க.. என்ன பண்ணறது இன்னைக்கு நமக்கு ரச சோறுதான் போல ' என தனக்குள் புலம்பியவாறு எழுந்துகொள்ள

வயதான ஆண்கள் மட்டுமே பந்தியில் அமர்ந்திருக்க, வயதான பெண்மனிகளை சாப்பிட அழைத்தும் வர மறுத்தனர்.. தங்கள் வீட்டு ஆண்களாகவே இருந்தாலும் இந்த மாதிரி பந்தியில் அவர்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிட மறுத்தனர் சந்திரசேகர் எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டும் ஒருவர் கூட வரமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்க, இனி பேசி பயனில்லை என்று உணர்ந்தவன் ஒவ்வொரு பாட்டியாக தூக்கிக் கொண்டுவந்து பந்தியில் உட்கார வைக்க , சூரியாவும் சந்திரசேகருடன் சேர்ந்துகொள்ள அதுவரை ஏனோதானோ என்றிருந்த ரத்தினவேலின் இல்லம் சிரிப்பொலியில் அதிர்ந்து திருவிழாபோல கலகலப்பாக மாறியது... அங்கிருந்த வயதான பெண்களை சந்திரசேகருடன் சூரியாவும் சேர்ந்துகொண்டு தூக்கிக் கொண்டு வந்து பந்தியில் அமர வைக்கும் அந்த கண்கொள்ளா காட்சியை காதுகளில் புகைவர, கண்களில் ரத்தம்வர பார்த்துக் கொண்டிருந்தவர்

' அடேய் உன் அப்பன் கூட வயசானவன்தாண்டா... என்ன தூக்கி உக்கார வைக்கனும்னு உனக்கு தோனலையா..? அது சரி உனக்கு எப்படி தோனும்... என்ன கிளப்பிவிட்டவனே நீதான... சாப்பிடனும்னு உக்காந்தவன எந்திரிக்க சொல்லிட்டு... வரமாட்டேன்னு அடம்பிடிக்கிற கிழவிகள தூக்கிட்டு திரியுற.. உன்ன பெத்து வளத்து போலிஸ் ஆக்குனத நினைச்சு நான் ரொம்ப பெருமைபடறேன் ' என மனதில் நினைத்துக் கொண்டு பந்தி பரிமாற தயாரானார்..

அனைவரையும் சாப்பிட அமரவைத்ததும் பரிமாறுவதற்கு வந்த பெண்களை சைகையால் தடுத்து நிறுத்திய சந்திரசேகர், யாரும் அசைய கூடாது என்று கட்டளையிட்டுவிட்டு தானே பரிமாற ஆரம்பிக்கவும், மற்ற ஆண்களும் ஆளுக்கொன்றாக உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு பரிமாற்ற ஆரம்பித்தனர்... சூரியாவின் அப்பாவோ ஆட்டுக்கறி இருக்கும் பாத்திரத்தை தன்வசம் வைத்துக் கொண்டார்.. ஏனெனில் அதை இவர்களிடம் குடுத்து அதிகமாக பரிமாறி கடைசியில் தனக்கு இல்லாமல் போவிட்டால் என்ன செய்வதென்ற முன்யோசனைதான்...

" என்ன மாமா வாயில பல்லே இல்ல... எலும்பு வச்சா கடிப்பியா..? இல்ல பதமான கறியா பொருக்கி வைக்கட்டுமா..? " என மாமனார் உறவு முறையுள்ள பெரியவரிடம் கேலியாக வினவ

" அட போடா போக்கத்தவனே.. யாருக்குடா பல்லு இல்ல நீ எலும்பா பொருக்கி வைடா மாமன் எப்படி சாப்பிடறேன்னு வேடிக்கைய மட்டு பாரு.." எனக்கூற சூரியாவின் தந்தையும் சத்தமில்லாமல் எலும்பாக எடுத்து வைக்க அந்த முதியவர் " கடார் முடார் " என்று எலும்புகளை ராஜ்கிரண் ஸ்டைலில் கடித்து விழுங்க அதை கண்டதும்

" ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா " என சத்தமாக சிரித்தவர்

' ரைட்டு நான் கடைசி பந்திக்குதான் எதுவும் இருக்காதுன்னு நினைச்சேன்... இதே வேகத்துல்ல போனா அடுத்த பந்திக்கே எதுவும் இருக்காது போல என்று மனதில் நினைத்தவர், அங்கிருந்த மற்றவர்களை ஒருபார்வை பார்த்து உங்களுக்கும் ரச சோறுதான் ' என மனதில் எண்ணி மனதை தேற்றிக்கொண்டு பரிமாறுவதில் கவனத்தை வைக்க ஆரம்பித்தார்

முதல் பந்தியில் அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் இலையை எடுக்க பெண்கள் வர அதை தடுத்த சந்திரசேகர் இலையையும் தாங்களே எடுத்துக் கொள்வதாக கூற பெண்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாமல்.. இதையெல்லாம் நீங்க செய்யக் கூடாது என்று கூற " கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் என் கையால பரிமாறின இலைதான்.. இப்ப இத எடுக்கிறதுனால ஆறடி உயரத்தில இருந்து மூனடியா நான் ஒன்னும் குறைய போறதில்லை.. இல்ல இதை செய்யறதுனால நீங்க என்ன தீண்டதாகதவனு ஒதுக்கி வச்சாலும் பரவாயில்ல " என்று ஒரே முடிவாக கூற அவர்களும் வேறு வழியில்லாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க' இவன் வந்ததுல இருந்து நமக்கு நேரமே சரியில்லையே ... கறி கஞ்சியும் குடிக்க விடாம பண்ணிப்புட்டான்.. இப்ப எச்சிலையும் எடுக்க வச்சுட்டான் போற போக்க பார்த்தா கடைசில இருக்கற பாத்திரத்தையும் கழுவனும்னு சொல்லுவானோ..? ஏதோ வயிறார கறிக் கஞ்சி குடிச்சிருந்தாலும் போனா போகுதுன்னு செய்யாலாம். நீங்க போட போற ரச சோறுக்கு இந்த வேலையே அதிகம்டா ' என மனதிற்குள் புலம்ப... அவரின் மனதை படித்தவன் போலவே பின்புறமாக இருந்து

" அப்பா..! நம்ம வீடுதான.. ஒருநாள் செஞ்சா ஒன்னும் ஆகிடாது.. பாத்திரமெல்லாம் நாம சாப்பிட்டுட்டு அப்பறமா கழுவிக்கலாம்... சீக்கிரம் வாங்க அடுத்த பந்தி போடணும் " என பின்புறமாக இருந்து கூறிவிட்டு சந்திர சேகர் செல்ல

" ஞே " என முழித்தவர்... பின்னால் வந்த தன்மகனை பார்த்து

" டேய் சூரியா இவன் ஆகாதுடா... இவன் ஏதோ பெருசா பிளான் பண்ணறான்.. இவங்கிட்ட இருந்து உங்கொப்பன காப்பாத்துடா..? என சூரியாவிடம் கெஞ்ச

" உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதானா..? சிக்கிரம்வாங்க... அங்க எல்லாரும் பசியோட சாப்பிட உக்காந்திருக்காங்க " என புன்னகைத்துக்கொண்டே கூறிவிட்டு செல்ல.. கோபத்தில்

" நற நற " என பல்லை கடித்தவர்..

" ஏண்டா நான் பசில காதடைக்க கத்திட்டு இருக்கேன்.. உனக்கு விளையாட்டா இருக்கா..? உங்கிட்ட எனக்கு என்னடா விளையாட்டு வேண்டி கிடக்கு... இல்ல இல்ல அவன் உன்னையும் ஏதோ பண்ணிட்டான்..? " என தன் நிலைமையை நொந்தவாறு அவன் சென்ற பின்னரும் கத்திக் கொண்டிருந்தவர்...

' இன்னைக்கு அவன் சொன்னத செய்யலைனா கடைசில ரசசோறு கூட தரமாட்டேன்னு சொன்னாலும் சொல்லுவான்... வேலை செஞ்சுருக்கேன் நீ தர மாட்டேன்னு சொன்ன விட்டுருவேனா..? ' என மனதில் நினைத்துக் கொண்டு வேக வேகமாக உள்ளே சென்றார்...

பெண்கள் அனைவரும் பந்தியில் அமர்ந்ததும் அனைவருக்கும் இலை போட்டு பரிமாற ஆரம்பித்ததும் மற்றவர்களிடம் கலகலப்பாக பேசியபடியே பரிமாறியவன், பிரபாவதியிடம் வந்ததும் வார்த்தைகளை விடுத்து கண்களாலையே எப்படி என்று கேள்வியெழுப்ப, வெட்கப் புன்னகை சிந்தியவள் யாரும் அறியாதவாறு தலையை ஆட்டினாள்

பிரபாவதியால் இன்னும்கூட நடப்பது எதையும் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ஒருமணி நேரத்திற்குள்ளாகவே அங்கிருந்த அனைவரையும் சந்திரசேகர் தன்வசப்படுத்தியிருந்தான்.. ஒரு பிரமிப்போடு சந்திரசேகரை பற்றி எண்ணிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்...

பிரபாவதி எண்ணியதைப் போலவே எல்லாரையும் தன்வழிக்கு கொண்டு வந்திருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து ஒரே எதிரியாக செண்பகத்தை உருவாகியிருந்தான்... செண்பகத்தை சந்திரசேகர் குறைவாக மதிப்பிட்டுவிட்டன்... அதனால் அவனது வாழ்வு எந்த அளவு நிலைகுலைய போகிறது என்று முன்பே தெரிந்திருந்தால், அவர் விசியத்தில் பிழை செய்திருக்க மாட்டான், அல்லது சுதாரித்து இருந்திருப்பான். அனைத்தையும் திட்டம் போட்டு சரியாக செய்தவன் செண்பகத்திடம் கோட்டை விட்டுவிட்டான்

செண்பகம் உள்ளுக்குள் அடங்கமாட்டாத புகைச்சலுடன் அமர்ந்திருந்தார்.. எங்கிருந்தோ வந்தவன் தாளம் போட அவனின் தாளத்திற்கு ஆடும் ஆட்டு மந்தைகளாக ஒட்டு மொத்த குடும்பமும் மாறியிருந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை... அதிலும் தன் அண்ணனும் மகனும் கணவரும் அவனுடன் சேர்ந்து ஆட்டம் போடுவதை ஜீரணிக்கவே முடியாமல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாததை எண்ணி மனம் குமுறினார்...

ஒவ்வொருவராக பரிமாறிவிட்டு செண்பகத்திடம் வந்தவன் செண்பகத்துக்கு பரிமாறும் பொழுது அவரை பார்த்து புன்னகைத்துக் கொண்டே பரிமாற, அவரது வன்மம் கூடிக் கொண்டே சென்றது.. இவன் கையால நான் சாப்பிடனுமா ..? என்று எண்ணியவர் வேண்டாவெறுப்பாக அவனை பார்த்து போதும் என்று சொல்ல...

" அம்மா நம்ம வீடுதான் கூச்சப்படாம சாப்பிடுங்க " என்று புன்னகையுடன் கூற

சிலவினாடிகள் அவனையே உற்று பார்த்தவர்... ' ஒருநாள் உன் சிரிப்பை மட்டுமில்லை உன்னையே இந்த உலகத்திலிருந்து இல்லாமல் பண்ணுவேன்... அப்படி செயலனா..? நான் செண்பகம் இல்லடா..' என மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டு சந்திரசேகரை பார்த்து புன்முறுவல் புரிந்துவிட்டு உணவருந்த தொடங்கினார்...

அவர்களும் சாப்பிட்டு முடித்தவுடன் மீதமிருந்தவர்கள் கடைசியாக உணவருந்த உட்கார சந்திரசேகரும் தயங்காமல் உட்கார்ந்து கொள்ள... என்றுமில்லாத திருநாளாய் தங்கள் கணவன்மார்கள் தங்களை உட்கார வைத்து பரிமாறியதில் பூரித்துப் போயிருந்த பெண்கள் பம்பரமாய் சுழன்று சுழன்று பரிமாற ஆரம்பித்தனர்

அவ்வளவு நேரம் பரிமாறியதில் உணவு முகத்திலடித்ததை போலிருந்ததால் பசியிருந்தும் ஒருவருக்கும் உணவு தொண்டைக் குழியை தாண்டி வயிற்றில் இறங்கவில்லை

அவ்வளவு ஆசையாக சாப்பிட அமர்ந்த சூரியாவின் அப்பாவினால் கூட இரண்டு கறித் துண்டுகளை தாண்டி சாப்பிட முடியவில்லை.. அனைவருமே சாப்பிட முடியாமல் பிசைந்து கொண்டிருக்க,

" பரிமாறினதுக்கே சாப்பாடு நம்ம முகத்துல அடிச்சுடுச்சு... நம்மளால சாப்பிட முடியல.. ஒருநாளுக்கே நமக்கு இப்படி இருக்கும் போது, ஒவ்வொருநாளும் நம்ம வீட்டுல இருக்கற பொம்பளைங்க எப்படி எல்லாத்தையும் செஞ்சுட்டு கடைசில சாப்பிடுவாங்கனு நாம யாரவது யோசிச்சுருக்கமா..? " என கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்க்க, சந்திரசேகரின் கேள்வியிலிருந்த உண்மை ஒவ்வொருவரையும் சுட, அவரவர் தன் மனைவியை ஏறிட்டு பார்க்க...

" நாம சாப்பிடற ஒவ்வொரு பருக்கையிலையும் நம்ம வீட்டு பெண்களோட உழைப்பையும் சேர்த்து பாசமும் கலந்திருக்குன்னு நினைச்சு சாப்பிடுங்க நல்லா சாப்பிடமுடியும் " என்று கூற அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு வயிறார உண்ண ஆரம்பித்தனர்...

முதலில் கலகலப்பாக ஆரம்பித்த பந்தியை இறுதியில் உணர்சிமயமாக மாற்றியிருந்தான் சந்திரசேகர்... ஒவ்வொருவருக்குள்ளும் யார் இவன்..? என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது... செண்பகத்தை தவிர்த்து ரத்தினவேல் செல்லம்மாள் உட்பட அனைவரது மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தான் சந்திரசேகர்...

இப்பொழுது அங்கிருந்த அனைவருமே அவனை பற்றி தெரிந்துகொள்ள ஆவல் கொண்டனர்... அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சந்திரசேகரை சூந்துகொண்டு அவனை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க..

"இன்னொருநாள் வரும்பொழுது கண்டிப்பா சொல்லறேன்.. இப்ப எனக்கு நேரமில்லை, ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்று கூறிவிட்டு விடை பெற அவனை அங்கிருந்து அனுப்ப எவருக்கும் மனமில்லை... இருந்தாலும் உறுதியாக சந்திரசேகர் செல்ல வேண்டும் என்று கூறியதால் மனமில்லாமல் நாளைக்கு செல்லப்போகும் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு அவனையும் வருமாறு அழைத்துவிட்டு அவனுக்கு விடை கொடுத்தனர்...

எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது பிரபாவதியை காணாது தேட, அவள் தோட்டத்திலிருப்பது தெரிய அவளை காண சென்றான்... சந்திரசேகர் வருவதை கண்டதும் எங்கே அவனை கண்டால் அழுதுவிடுவோமோ ..? என்றெண்ணிய பிரபாவதி சந்திரசேகரை நேராக பார்ப்பதை தவிர்த்து திரும்பிக் கொண்டாள்

" பேபி " சந்திரசேகர் அழைக்கவும் அந்த ஒற்றை அழைப்பிலேயே அவளால் தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள முடியவில்லை. திரும்பி சந்திரசேகரின் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தவளை, முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்தவன், கண்களாலே அவளுக்கு சமாதானம் சொன்னவன், அவளிடம் விடை பெற பிரபாவதியும் கண்களாலே அவனுக்கு விடை குடுக்க வார்த்தைகளை மீறிய புரிதல் இவருக்குமே இருந்தது...



வாழ்க்கை என்னும் பயணத்தில் விதி என்னும் வட்டத்தில் நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் வட்டத்தை மீறி எங்கும் செல்ல முடியாது என்பதை புரிந்து கொள்ளாமல் சந்திரசேகரும் அனைத்தையுமே திட்டம் போட்டு கச்சிதமாக செய்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறான்... இதுவரை மற்றவர்கள் மூலமாக சந்திரசேகருடன் விளையாடிக் கொண்டிருந்த விதி நேரடியாக அவனுடன் விளையாடலாமா..? என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டது... ஒருவேளை விதி நேரடியாக விளையாட ஆரம்பித்தால் வெல்லப்போவது

விதியா ..? அல்லது விதியையும் வெல்லும் மதியா..?


 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்.... 13
பிரபாவதியின் வீட்டிலிருந்து கிளம்பிய சந்திரசேகர்... நேராக தனது வீட்டிற்குச் செல்லாமல், மனம் போன போக்கில் காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவனது மனம் ஒருநிலையில் நில்லாமல்.. சுழலில் சிக்கிய படகைப் போல தத்தளித்துக் கொண்டிருந்தது. பழிவாங்கும் உணர்ச்சியால், அமைதி அவனைவிட்டு வெகுதொலைவு சென்றுவிட்டதைப் போல.. உணர ஆரம்பித்தான். ரத்தினவேலின் வீட்டிலிருந்து கிளம்பி.. பல கிலோமீட்டர் கடந்து வந்து, ஆள் அரவமற்ற சாலையை கண்டதும், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரிலிருந்து இறங்கி.. மெதுவாக நடக்க ஆரம்பித்தான்...
தனது இன்றைய அலுவல்களை முடித்துக் கொண்ட கதிரவன் மேற்கு நோக்கி பயணப்பட, லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. இரைதேடி வெளியே சென்ற பறவைகள், கூட்டம் கூட்டமாக தனது கூட்டை நோக்கி பறந்து கொண்டிருக்க, வெள்ளை வெளேர் என அப்பழுக்கில்லாத மேகக்கூட்டங்கள், தென்றலின் உதவியோடு ஒன்றையொன்று துரத்தியபடியே.. மெதுவாக வானவீதியில் உலா சென்று கொண்டிருந்தது. சிறிது நேரம் அவனுள் எந்த சிந்தனையுமில்லை. சுற்றும் முற்றும் வெறிக்க வெறிக்க.. இலக்கில்லாமல் பார்வையை செலுத்தியவனின் பழைய எண்ணங்கள்.. அவன் கடந்து வந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக அவனது கண்முன்னே காட்சிப்படுத்தி, சிந்தையை சிதறடித்தது. தனக்குள் தோன்றிய எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு அடக்கியவாறு, மீண்டும் காருக்குத் திரும்பி தன் வீட்டை நோக்கிக் கிளம்பினான்...
சந்திரசேகர் தனது வீட்டிற்கு வந்து சேரும்பொழுது மணி பத்தை கடந்திருந்தது. காரை நிறுத்தியவன்; தன்னை எதிர்பார்த்து காத்திருந்த தாய், தந்தை மற்றும் பாட்டியிடம் எதுவும் பேசாமல், யாரையும் ஏறிட்டும்கூட பார்க்காமல்; நேராக தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டான். பின்பு ஒரு பத்து நிமிடங்களை காலிசெய்து குளித்துவிட்டு உணவருந்த கிழே வந்தவன், உணவு மேஜையின் முன்பு அமர்ந்து; சிலவினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு...
" அம்மா...! வந்து சாப்பிட எடுத்து வைங்க " என்று சிவகாமியை பார்த்துக் கூற...
சந்திரசேகரின்... அம்மா..! என்ற அழைப்பில் கண்களில் கண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து கன்னங்களை நனைக்கஆரம்பித்தது. உடம்பில் உள்ள சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டு.. கால்கள் இரண்டும் வேர் பிடித்துக் கொண்டு, இருந்த இடத்தைவிட்டு அசையாமல் சந்திரசேகரையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்...
" அம்மா...! உங்களை தான் கூப்பிடறேன். வந்து சாப்பிட எடுத்து வைங்க பசிக்குது " என்று மீண்டும் கூறியதுதான் தாமதம்; முந்தானை தலைப்பில் தன் கண்களை ஒற்றிக் கொண்டு வேகமாக தன் மகனை நெருங்கி, அவன் சாப்பிடுவதற்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தார். பலவருடங்கள் கழித்து அன்னையின் கைகளில் சாப்பிட்டதால், வயிறார உண்டவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்ததும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே கைகளை கழுவிக் கொண்டு தனதறைக்கு செல்ல கிளம்பியவன், தந்தையிடம் திரும்பி
" டாட்...! நாளைக்கு காலைல சீக்கிரமா கிளம்பிடுவேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு... திரும்பி எப்ப வருவேன்னு தெரியாது. என்ன எதிர் பார்க்க வேண்டாம்... " என்று கூறி விட்டு, சிவகாமியிடம் திரும்பி...
" அழாம போய் தூங்குங்க. எல்லாம் சரியாகும்..." என்று மட்டும் கூறி விட்டு உறங்க சென்று விட்டான்...
சந்திரசேகரின் இந்த மாற்றத்தை, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எண்ணிக் கொண்டு அவர்களது அறைக்குச் செல்ல... இரவும் விடியலை தேடி இடம்பெயர ஆரம்பித்தது..
அதிகாலையில் மூன்று மணியளவில் எழுந்த சந்திரசேகர்; விரைவாக தயாராகி காரை எடுத்துக் கொண்டு, பிரபாவதியை காண தஞ்சாவூரை நோக்கி கிளம்பினான். பிரபாவதி குடும்பத்தினரின் பூர்வீகம் முழுவதும் தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்தான். வசதி வாய்ப்பிலும் சரி.. உறவுகளின் தலை கட்டிலும் சரி.. அங்கும் கூட ரத்தினவேலின் குடும்பமே பெரிய குடும்பம். சென்னையிலிருந்து மாலையிலேயே ரத்தினவேலின் மொத்த குடும்பமும், தஞ்சாவூருக்கு கிளம்பியிருந்தனர்...
தனது வாழ்க்கை செல்லும் பாதையை சந்திரசேகரால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், செண்பகத்தை நினைத்து காலம் தாழ்த்துவது.. சரியாக இருக்காது என்று தோன்ற, எதை செய்வதாக இருந்தாலும் உடனே செய்துவிடுவது என்று உறுதியாக முடிவெடுத்து சென்று கொண்டிருந்தான். எப்படியும் இன்று பிரபாவதிக்கும் சூரியாவிற்குமான திருமண பேச்சை செண்பகம் நிச்சயமாக ஆரம்பிப்பார். கிராமத்தில் உறவுகள் முன்நிலையில் வாக்கு தந்துவிட்டால்; பிறகு ரத்தினவேல், பிரபாவதி உட்பட யாருக்கு விருப்பமில்லை என்றாலும்.. திருமணம் நடந்தே தீரும். அந்த நம்பிக்கையில் தான் பூகேட்டுக்கும் நிகழ்வை.. ஒரு சாக்காக வைத்துக் கொண்டு செண்பகம் அழைத்து சென்றிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். இதை எப்படி தடுப்பது..? என்று ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தான்.
பிரபாவதியை பற்றி சந்திரசேகர் கவலை கொள்ளவில்லை. அவள் தன்னை விரும்புகிறேன் என்று வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும்கூட.. அவளது வீட்டில் தன்னை கண்டவுடனே சிந்திய புன்னகையும், அவளை பிரிந்து செல்கையில் சிந்திய கண்ணீருமே, பிரபாவதி தன்னை மனதார விரும்புகிறாள் என்பதற்கு சாட்சி. தான் எதிர் கொள்ள வேண்டியது இருவர் மட்டுமே. காலமும் நேரமும் கைகூடி வந்தால்; சூரியாவிடம் கூட எடுத்து சொல்லி புரிய வைத்துவிடலாம். ஆனால், ஜென்மமே நிறைவடைந்தாலும் செண்பகத்தை மட்டும் மாற்றவே முடியாது. என்ன செய்வது..? என்று புரியாமல் ஒருவித தடுமாற்றத்துடனே காரை செலுத்திக் கொண்டிருந்தான்...
தஞ்சாவூரை நோக்கிச் செல்ல செல்ல மெதுவாக இருள் விலகி, கிழக்கு வானில் புதிதாக உதயம் ஆரம்பித்திருந்தது. இந்த உதயம் தனது வாழ்வை அழகாக்குமா...? அல்லது, இன்றோடு தன்னையே அஸ்தமனம் ஆக்குமா..? என்று கவலை கொண்டாலும், என்ன நடந்தாலும் சரி பிரபாவதி இல்லாமல் இங்கிருத்து செல்லப் போவதில்லை என்று உள்ளத்தில் உறுதி கொண்டு, ஐந்தரை மணி நேரப்பயணத்தில் தஞ்சாவூரை அடைந்திருந்தான்...
காலையில் உழவு வேலைக்கு செல்ல ஒருகையில் மேய்ச்சல் மாட்டையும், மற்றொரு கையில் மதிய உணவிற்கான தூக்குசட்டியையும், சுமந்தவாறு சென்று கொண்டிருந்த விவசாயி ஒருவரை பார்த்து... ரத்தினவேலை பற்றி விசாரிக்க, அவர் புரியாமல் குழம்பினார். அவர் பின்னால் வந்த மற்றொருவரும் அவருடன் வந்து இணைந்து கொண்டு...
"என்னலே ராமு...! தம்பி யாரு...? உனக்கு உறவா..?" என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க
" ஏலேய்...! உனக்கு கண்ணு என்ன பிடரிலையா இருக்கு...? தம்பி ராசா கணக்கா ஜம்முனு இருக்காக... எங்க மொத்தத்த சாதி சனத்துலையும்; தம்பி ஒசரத்துல கூட ஒருத்தரும் கிடையாது.." என பதிலளித்தார்...
" பொறவு... தம்பிக்கு என்ன வேணுமா...?"
" யாரோ ரத்தினவேலுனு பேர சொல்லி விசாரிக்கறாவ, எனக்கு வெளங்கல. யாருன்னு..? நீ கேட்டு சொல்லு..." என்று கூற
" தம்பி... என்ன பேர் சென்னிய... ரத்தினவேலா...?" என்று மண்டையை சொரிந்தவர்...
" ஏலே... பட்டணத்துல இருந்து வந்துருக்காங்கிள்ள... நம்ம பெரிய வூட்டு காரங்க... அவியல தான் தம்பி விசாரிக்கராப்ல " என்று கூறிவிட்டு...
"தம்பி இங்க கண்ணுக்கு தெரியரதுல பாதி நிலம் அவியளுதுதான். இப்படியே மேக்கால கொஞ்ச தொலைவு போனாக்கா, பெரிரிரிய மச்சு வீடு வரும். அதான் அவுக வீடு..."
" ஆனா...? இப்ப அங்க யாரும் இருக்க மாட்டாகளே... எல்லாரும் குலதெய்வ கோயிலுக்கில்ல போயிருக்காவ.." என்று கூடுதல் தகவலையும் கூற...
" நானும் அந்த குலதெய்வ கோவிலுக்கு போறதுக்குதான் வந்திருக்கேன். அங்க எப்படி போகணும்" என்று அங்கு செல்லும் வழியை விசாரித்து... அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சிறிது தூரத்திற்குமேல் காரில் செல்ல முடியாமல் போக, காரை அங்கேயே ஓரமாக நிறுத்திவிட்டு.. நடக்கத் துவங்கினான்...
கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பச்சை பசேலென்று வயல் வரப்புகள் காட்சியளிக்க, அதை ரசித்தபடியே சென்று கொண்டிருந்த சந்திரசேகர்
" சந்திரன் "என்ற அழைப்பை கேட்டதும் ஆணியடித்தது போல நின்று கொண்டு திரும்பி பார்த்தான். அங்கே உதட்டில் புன்னகையுடன் பட்டுவேட்டி பட்டுசட்டை சகிதமாய், சந்திரசேகரை நோக்கி.. கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் சூரியா.
சூரியா கிட்டத்தட்ட மாப்பிளைக்கான தோற்றத்தில் இருந்ததால் உள்ளுக்குள் கலக்கமடைந்தாலும்... வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல், உதடுகளில் புன்னகையை தவழவிட்டவாறே...
" ஹாய் சூரியா... எப்படியிருக்கீங்க" என்று சம்பிரதாயமாக வினவ...
"ஹா ஹா ஹா ஹா "
" நேத்து பார்த்த மாதிரி அப்படியேதான் இருக்கேன். ம்ம்ம்ம் ஒரே ஒரு சின்ன சேஞ்... நேத்து காக்கி டெரஸ்ல இருந்தேன். இப்ப பட்டு வேட்டி, பட்டு சட்டைல இருக்கேன்... அவ்வளவுதான் " என்று புன்னகையுடனே கூற அவனுடன் சேர்ந்து சந்திரசேகர் சிரித்தாலும், அந்த சிரிப்பில் சிறிதுகூட ஜீவன் இல்லை....
" உங்களுக்கும் பிரபாவதிக்கும்.. கல்யாணம் பண்ண பூ கேக்கறதுக்குதான, இங்க வந்துருக்கீங்க. அதுக்கு கூட பட்டுவேட்டி சட்டைதானா...?" என்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள சுற்றி வளைத்து கேள்வி எழுப்பிய சந்திரசேகரை பார்த்து
" ஹா ஹா ஹா ஹா..." மீண்டும் புன்னகைத்த சூரியா..
" பூ கேக்கற சம்பிரதாயம் எல்லாம் காலைல ஐஞ்சு மணிக்கே முடிஞ்சுடுச்சு சந்திரன். இப்ப மாப்பிளையும் ரெடி. மணப்பெண்ணும் ரெடி. மணவறையும் ரெடி... நாம போகவேண்டியதுதான்.. மேளம் கொட்ட வேண்டியதுதான்.. பிரபாவதி கழுத்தை நீட்ட வேண்டியதுதான்... தாலி கட்ட வேண்டியதுதான்..." என்று கூற சந்திரசேகருக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது..
" என்ன சந்திரன்...! அப்படியே திகைச்சு போய் நிக்கறீங்க. வாங்க போலாம் " என்று கூற... சூரியாவையே சிலநொடிகள் உற்று நோக்கியவன்....
" எப்படி ஒரு நைட்ல எல்லாத்தையும் செஞ்சிங்க..." என்று தயங்கியவாறே வினவ
" பக்கத்துல வந்துட்டோம் சந்திரன். இன்னும் கொஞ்ச தூரம்தான்... அங்க வந்து பார்த்தா.. உங்களுக்கே தெரிய போகுது.. " என்று தோளின் மீது கை போட்டு அழைத்து செல்ல... சந்திரசேகரின் இதயத்துடிப்பை கூட சூரியாவல் உணர்ந்து கொள்ள முடிந்தது. இடத்தை நெருங்க நெருங்க ஆங்காங்கே ஒன்றிரண்டு தலைகளாக தென்பட ஆரம்பித்த உறவுகள், கோவிலை நெருங்கியவுடன் மொத்தமாக அனைவரையும் கண்டதும், சந்திரசேகரை இன்னும் பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அலைப்புறும் கண்களுடனே நாலாபுறமும் பார்வையை வீசி... பிரபாவதியை தேடினான்...
கிளிப்பச்சை நிறத்தில் பாவாடை ரவிக்கையும், அதற்கு பொருத்தமாக சிகப்பு கலரில் தாவனியும், வெண்பஞ்சு கைகளில் வளையல்கள் குலுங்க, பொன்னிற பாதங்களில் கொலுசுகள் சிணுங்க, அழகாக பின்னப்பட்ட கூந்தல் இடுப்புவரை படர, அதற்கு மேலும் மகுடம் சூட்டியதைப்போல் மல்லிகை பூச்சரம் தொடர, வட்டவடிவ மதிமுகத்தில் சிறிய மின்னல் கீற்றாய் திருநீறும், அதற்கு கிழே சிறு புள்ளியாய் ஒட்டிக் கொண்ட ஸ்டிக்கர் பொட்டும்... மை இட்டுக்கொள்ளாமலே கருமை நிறத்தில் வில்லாக வளைந்திருந்த புருவங்களும், தேர்ந்தெடுத்த கூர்நாசியும், வானத்து நட்சத்திரமாய் மின்னிய வைர மூக்குத்தியும், கோவைப்பழ உதடுகளும், வெண்சங்கு கழுத்தும், அதை மேலும் அலங்கரித்த பொன் நகையுமாய், கோவிலுக்கு கொண்டு செல்லும் அர்ச்சனை தட்டை கைகளில் ஏந்தியபடி.. விண்ணுலகிலிருந்து இறங்கி வந்த தேவதையைப் போல், மண்ணுலகில் மிதந்து வந்து கொண்டிருந்தாள் பிராவதி.
பிரபாவதியை கண்டதும்; கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சந்திர சேகரை...
" ஹலோ...! மிஸ்டர் சந்திரன்...! உங்க இந்நாள் காதலிய இப்பவே ரசிச்சு முடிச்சிடாதிங்க. கல்யாணத்துக்கு அப்பறம் ரசிக்க ஒன்னும் இருக்காது. அதனால, பிற்காலத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க சார்..."
என்று கிண்டலாக கூற.. சூரியா கூறியது செவிகளில் விழுந்தாலும் சிறிது வினாடிகளுக்குப் பிறகே புத்தியில் உறைத்தது. அவனது காதுகள் கேட்ட செய்தியை நம்ப முடியாமல்... மீண்டும் சூரியாவை ஏறிட்டு பார்க்க... சூரியாவோ, புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். இவ்வளவு நேரம் வேண்டுமென்றே சூரியா தன்னை கலவரப் படுத்தியிருக்கிறான் என்று தெரிந்ததும் " சூரியா.. " என்று கூறியவாறே கைகளை நீட்டி அவனை பிடிக்க முற்பட, சந்திரசேகரிடம் சிக்காமல், அவனிடமிருந்து தப்பித்து ஓட... சந்திரசேகரும் துரத்திக் கொண்டே ஓடினான்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திடீரென்று, கூட்டத்தில் சலசலப்பு உருவாக.. என்னவென்று அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே சற்று தொலைவில்.. சந்திரசேகர் சூரியாவை துரத்துவதும், அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் சூரியா தப்பித்து ஓடுவதும் தெரிந்தது. அங்கிருந்த பெருபாலானவர்களுக்கு சந்திரசேகரை தெரிந்திருக்கவில்லை. வேற்று ஆள் ஒருவன், சூரியாவிடம் ரகளை செய்வதாக நினைத்து.. அங்கிருந்தவர்கள் ஒன்று கூடினர்...
கோவிலுக்கு பின்புறமாக பேசிக்கொண்டிருந்த ரத்தினவேலும், உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட சலசலப்பை கேட்டு முன்னே வந்தார். அதற்குள் சந்திரசேகரை அடிப்பதிற்காக; கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் தயாராக நின்றிந்த இளவட்டங்களை.. மேலும் கீழும் பார்த்தவாறே, 'யாரை அடிப்பதற்காக இவர்கள் தயாராக நிற்கிறார்கள்' என்று பார்வையை வீச, சந்திரசேகரும் சூரியாவும் பார்வைக்குக் கிடைத்தனர்...
" ஏப்பா..! எல்லாரும் முதல்ல கைல இருக்கற கட்டைய கிழ போடுங்க...
அவர் பிரபாவுக்கு தெரிஞ்சவர்..." என்று கூறிவிட்டு, பிரபாவதியை அழைத்தார்.. தந்தை அழைத்ததும் கோவிலுக்குள் இருந்து வெளியே வந்தவள், ஒன்றுகூடியிருந்த உறவினர்களை மிரட்சியாக பார்த்தவாறே ரத்தினவேலிடம் சென்றாள்..
" பிரபா..! சந்திரன் தம்பி வந்துருக்கார்... முதல்ல அவர சாப்பிட கூட்டிட்டு போம்மா..." என்று கூறியதும், அவசர அவசரமாக தலையைத் திருப்பி, விழியை சுழற்றியவளின் விழியில், சந்திரசேகரின் உருவம் பதிய.. இறக்கையில்லாமலே பறக்க ஆரம்பித்தாள். கூடியிருந்த உறவினர்களும், சந்திரசேகர், வேற்று ஆள் கிடையாது என்று உணர்ந்ததும் களைந்து செல்லத் துவங்கின. சூரியாவின் தோள்மீது கை போட்டு, மிடுக்காக நடந்துவரும் சந்திரசேகரை பார்த்தவாறே சிலையாக சமைந்திருந்தாள்... பிரபாவதி..!
தன்னையே பார்த்துக் கொண்டு நின்றிப்பதை கவனித்தவாறே
பிராவதியின் அருகில் வந்த சந்திரசேகர், அவளது முகத்திற்கு முன்னே கைகளை அசைத்து அவளை உயிர்ப்பிக்க, வெட்கப் புன்னகை சிந்தியவள்..
" எப்ப வந்தீங்க " என்று விசாரித்துவிட்டு, ஒரே பார்வையில் தன் உள்ளத்தை வென்ற கள்வனை, நேர் கொண்டு காண முடியாமல், நாணத்தினால் தலை கவிழ்ந்தவாறே நின்றாள்..
" இப்பதான் பேபி..." என்று சந்திரசேகர் கூறியதும்
" ஓ...! சாருக்கு நீதான் பேபியா...?. அப்ப கல்யாணத்துக்கப்பறம் ஒரு பேபி வருமே, அத எப்படி சார் கூப்பிடுவீங்க..." என்று சந்திரசேகரை வம்பிழுக்க..
" சூர்யா...! உன்ன அங்க யாரோ...? கூப்பிடற மாதிரி இருக்கு... போய் என்னன்னு பாரு... நாங்கதான் சின்னஞ்சிறுசுங்க... பேசிட்டு இருக்கோம்..
எங்களையே பார்த்துட்டு இருக்காம, போய் வந்திருக்கறவங்கள கவனி.." என்று கட்டளையிட...
" எல்லாம் உன் நேரம்டா..." என்று தலையில் அடித்துக் கொண்டவன்...
" சார்...! நீங்க ரெண்டு பேரும் காதலிக்கணும்னாலும் சரி.. கல்யாணம் பண்ணிக்கணும்னாலும் சரி... இந்த சூரியா மனசு வைக்கணும். அவ்வளவு ஏன்..? நீங்க தனியா பேசணும்னாலும்கூட, நான் உங்ககூட இருந்தாதான் அது நடக்கும். இப்ப எப்படி சார்...? நான் போய்... என் வேலைய பாக்கட்டுமா..? " என்று கிண்டலாக கூறிவிட்டு ஒரு எட்டு வைத்தவனை, அவசரமாக கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள் பிரபாவதி...
சூரியா கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே... சூரியா இல்லாமல் அவர்கள் இருவரும் எங்கும் தனித்திருக்க முடியாது... அவன் ஒருவனால் மட்டுமே, செண்பகத்தை ஓரளவேணும் சமாளிக்கக் முடியும். அதை உணர்ந்து கொண்ட சந்திரசேகர் பாவம்போல் முகத்தை வைத்துக் கொண்டு ஏறிட்டு பார்த்தான்.
" இங்கிருந்து நீங்க போற வரைக்கும், இப்படியே தான் இருக்கணும்" என்று போலியாக மிரட்ட, நிஜமாவே உன் நேரம்தாண்டா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, இருவருமே சம்மதமாக தலையாட்டினர்...
" சரி இங்கயே நிக்க வேண்டாம்.. பெருசுங்க லுக் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கோவிலுக்கு போயி மத்தவங்களையும் பார்த்துட்டு, அப்படியே சாப்பிட்டுட்டு, கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வரலாம்..." என்று கூறி சூரியா முன்னே செல்ல, அதையேற்று இருவரும் பின்தொடர்ந்தனர்...
கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டதும், சமையல் வேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். அங்கே ரத்தினவேல் மற்றும் செண்பகத்தை தவிர்த்து, செல்லம்மாள் உட்பட நேற்று பிரபாவதியின் வீட்டில் கூடியிருந்த உறவினர்கள் ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருக்க, அனைவரையும் பார்வையாலே விசாரித்துவிட்டு... மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.. பந்தியில் இலை போட்டுக் கொண்டிருந்த சூரியாவின் தந்தை, சந்திரசேகரை கண்டதும் திகைத்தார்... இவன் எப்ப இங்க வந்தான் என்று மனதிற்குள் எண்ணியவாறு சந்திரசேகரையே பார்த்துக் கொண்டிருக்க...
" என்னப்பா...! அப்படி பாக்கறீங்க... அதுக்குள்ள என்ன மறந்துட்டீங்களா..?"
'அடேய்...! நான் பொண்ணெடுத்த வீட்டுலயே, என்ன சாப்பிட்ட இலைய எடுக்க வச்சவன் நீ.. உன்ன மறக்க முடியுமா..?' என மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சந்திரசேகரின் புறம் குனிந்தவாறு...
" தம்பி சந்திரசேகரு... நேத்து பண்ணின மாதிரி, இன்னைக்கும் எதையாவது செஞ்சராத. நான் வயசானவன்... கொஞ்சம் கருணை காட்டுப்பா..." என்று கெஞ்சலாக கூறினார்...
" அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம். இப்ப இலைய போடுங்க பசிக்குது" என்று கூறிவிட்டு, அவரிடமிருந்து இலையை வாங்கி தண்ணீர் தெளிக்க, இன்னும் என்னசெய்ய காத்திருக்கானோ...? என்ற அச்சத்தில் அவ்விடத்தைவிட்டு விட்டு அகன்றார்..
மூவரும் சாப்பிட்டு முடித்தபின், வெளியே வரும்பொழுது ரத்தினவேலும் எதிர்பட, அவரிடமும் பொதுவான சிலவிசயங்களை பேசிவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்க ரத்தினவேல் சென்றதும், சூரியாவிடம் செண்பகத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். சிலவினாடிகள் இருவரையும் உற்று நோக்கிய சூரியா...
" இங்க எதுவும் பேச வேண்டாம்... என் பின்னாடி வாங்க" என்று கூறிவிட்டு முன்னே செல்ல, இருவரும் பின் தொடர்ந்தனர்.. மற்றவர்கள் பார்வையிலிருந்து மறையாமல், அதே சமயம் தாங்கள் என்ன பேசுகிறோம் என்று மற்றவர்களுக்கு கேட்காத தொலைவில் சென்றதும்...
" சொல்லு சந்திரன்... என்ன முடிவு பண்ணிருக்க.." என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்...
" இன்னைக்கு ராத்திரியே பிராபாவ கூட்டி நான் கிளம்பறேன்... எங்கையாவது போய்... கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சநாள் கழிச்சு திரும்பிவறோம்..." என்று தீர்க்கமாக கூற
" கரெக்ட்... நானும் அதையேதான் யோசிச்சேன்... " என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் இடைமறித்த பிரபாவதி...
" நான்.. எங்கப்பா, அம்மாவவிட்டுட்டு எங்கயும் வரமாட்டேன்" என்று கூறினாள்...
" இப்ப இருக்கிற நிலமைய புரிஞ்சுக்காம பேசாத பிரபா... சந்திரசேகர நீ கல்யாணம் பண்ணிக்கணுமா..? வேண்டாமா..?" என்று கேள்வியெழுப்ப, வேண்டும் என்பதைப்போல தலையசைத்தாள்...
" அப்ப... ஒழுங்கா நீ அவர் சொல்லற மாதிரி செய்..." என்று கூறினான்
" சந்திரன்... நீங்க உங்க வீட்டுல இருக்கறவங்க கிட்ட சொல்லி, என்ன பொண்ணு கேட்டு வாங்க. நான் உங்கள விரும்பறேனு தெரிஞ்சாலே போதும். அப்பா நிச்சயம் சம்மதிப்பார்... என் விருப்பத்துக்கு எதிரா எதையுமே செய்யமாட்டார்..." என்று தாய் தந்தையை மறுபடியும் பிரிய மனமில்லாமல் கூற...
" எங்கம்மாவ பத்தி உனக்கு தெரியாது பிரபா... அவங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்தது, உனக்கும் எனக்கும் பொருத்தம் பாக்கறதுக்கு இல்ல. இன்னைக்கு சாயந்திரம் நமக்கு கல்யாணம் நிச்சியம் பண்ண போறாங்க... இப்பகூட நிச்சிய புடவை எடுக்கத்தான் போயிருக்காங்க...
அவங்க ஒரு முடிவு எடுத்தா யாராலையும் மாத்த முடியாது... உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு, நானும் எவ்வளவோ சொல்லிட்டேன். எங்கம்மா பிடிவாதமா இருக்காங்க... நீ இங்க இருந்தா நம்ம ரெண்டு பேருக்கும், கல்யாணம் நடந்தே தீரும்... அதுலயும் சந்திரன பார்த்தா நாளைக்கே கூட கல்யாணம் நடந்தாலும் ஆச்சிரிய பட முடியாது... முடிவு உன்கைலதான்..." என்று கூறி முடித்தான்...
சூரியா கூறியதை கேட்டு செய்வதறியாது திகைத்த பிரபாவதி, சந்திரசேகரை ஏறிட்டு பார்க்க..
" என் மேல நம்பிக்கையில்லையா..? பேபி..." என்று சந்திரசேகர் ஏக்கமாக கூறியதும், அதுவரை குளமாக தேங்கியிருந்த கண்களில் இருந்து, கண்ணீர்.. வெள்ளமாக கரைபுரள... அதை துடைத்தவாறே
" எத்தனை மணிக்கு நான் ரெடியா இருக்கணும் சந்திரன்..." என்று பொட்டு தெரித்தார் போல் கேட்டாள்..
" அப்படி போடு... நான் பக்கம் பக்கமா வசனம் பேசியும் வாயே திறக்காதவ, நீ ஒத்த வார்த்தை சொன்னதும்... சரின்னு சொல்லிட்டாளே... எங்கப்பா இந்த வித்தையெல்லாம் கத்துக்கறீங்க... நானும் ஒருத்தி பின்னாடி நாயா அலையுறேன். மனுசன திரும்பி கூட பாக்க மாட்டேங்குறா...?" என்று தன் மனதில் இருப்பவளை எண்ணி சூரியா சலித்துக் கொண்டான்...
" ஹேய்...! கங்ராட்ஸ்... சூரியா. இப்ப தெரியுது, நீ எதுக்கு எங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்னு.. உன்னையே சுத்தல்ல விடற அந்த பொண்ணு யாரு..? " என்று நக்கலாக வினவ...
" எனக்கொண்ணும் பிரச்சனை இல்ல சந்திரன்... நீ இடத்தை காலி பண்ணினா, மாப்பிளையா உட்காந்து பிரபா கழுத்துல தாலிகட்ட நான் தயார்தான்..."
" ஏதோ... என் மாமான் பொண்ணு நல்லா இருக்கனுமேங்கிற நல்ல எண்ணத்துலதான், நான் உங்களுக்கு உதவறேன்..." என்று கடுப்படித்தான்...
" வேண்டாம்ப்பா... நீ இடைல புகுந்து ஆட்டத்த கலைக்காத... எங்க வாழ்க்கைய நாங்களே பார்த்துக்கறோம்.. எங்கள இங்கிருந்து பத்திரமா வழியனுப்பற வேலைய மட்டும் செஞ்சா போதும்... நீ வழக்கம் போல உன் ஆளையே பாலோ பண்ணு.." என்று கூறிவிட்டு
" சரி பேபி ரொம்ப நேரம்.. நீ இங்க இருக்க வேண்டாம்.. இன்னைக்கு நைட், நாம கண்டிப்பா கிளம்பறோம்... எதையும் நினைச்சு கவலை படாதே.. எல்லாமே நல்லதா நடக்கும்..." என்று கூறி முடிக்க, தலையசைத்து தனது சம்மதத்தை தெரிவித்துவிட்டு, சூர்யாவுடன் கோவிலை நோக்கி கிளம்பினாள்...
 
Last edited:

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிச்சியத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக்கொண்டு, பதினோரு மணியளவில்.. செண்பகம் வந்து சேர்ந்தார். பதினொன்றரை மணியிலிருந்து, பனிரெண்டு மணிக்குள் நல்ல நேரம் முடிந்துவிடுவதால், செண்பகம் வந்ததும் அனைவரும் கூடிவிட, அங்கிருந்த கோவில் பூசாரி.. சிகப்பு நிறத்தில் இருந்த அரளிப் பூவையும், வெள்ளை நிறத்திலிருந்த மற்றொரு பூவையும் தனித்தனியாக, பல காகிதங்களில் சுற்றி வைத்துவிட்டு, பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்...
செண்பகம் வரும்வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடந்த உறவினர்கள், செண்பகத்தைக் கண்டவுடன்... முதல்வரிசையில் வந்து நின்றனர்.. ரத்தினவேலும், செல்லம்மாளும்.. வலது புறமாக நின்றுகொள்ள, செண்பகமும், அவரது கணவரும் எதிர்ப்புறமாக நின்று, சூரியாவையும், பிரபாவதியையும்.. நடுவில் கிழக்கு முகமாக நிற்க வைத்திருந்தனர்.. தூரத்திலிருந்தவாறே அங்கு நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சந்திரசேகர். பூஜைக்கான ஏற்பாட்டை முடித்துக்கொண்டு வெளியே வந்த பூசாரி...
" ஐயா..! எல்லாரும் வந்துட்டாகளா..? பூஜைய பண்ணிடலாமா...?" என்று ரத்தினவேலிடம் வினவ, சம்மதமாய் தலையசைத்தார். சிறிய அளவில் பூஜை முடிந்ததும், காகிதங்காளால் சுற்றப்பட்ட பூக்களை, ஒரு பெரிய தாம்பூல தட்டில் எடுத்துவந்து, சபையினரின் முன் வைத்துவிட்டு,
" தாயி..! பூ கேக்கறவுக யாரு...?" என்று செண்பகத்திடம் வினவினார்...
" நான் தான் சாமி... என் பையன் சூரியாவுக்கும், எங்கண்ண பொண்ணு பிராவதிக்கும், கல்யாணம் செஞ்சு வைக்கறதா முடிவு பண்ணியிருக்கோம். அதுக்கு ஆத்தா உத்தரவு குக்கணும்னு சாமி.."
" ஆத்தா மகமாயி... வாழப்போற இந்த இளங்குருத்துக்களுக்கு, ஒரு வழிய காட்டாத்தா.. பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி குலம் தழைக்க அருள் குடாத்தா.. உன் பாதம் தேடிவந்த குழந்தைகளுக்கு, மனம்போல மாங்கல்யம் தந்து, நெறஞ்ச செல்வத்த தந்து, நோய்நொடியில்லாத ஆயுள தந்து என்னைக்கும் பக்கத்துணையா நில்லாத்தா." என்று கைகளை கூப்பித் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு, சாந்தசொரூபியாய் வீற்றிருந்த அம்மனிடம் பூசாரி வேண்டிக் கொண்டிருக்க, பிரபாவதியோ கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, சந்திரசேகரை கரம்பிடிக்க அருள் புரியுமாறு, மனதிற்குள் மன்றாடிக் கொண்டிருந்தாள்...
" என்ன பூகேக்கற தாயி..."
" சாமி... வெள்ள பூகேக்கறேன் " என்று செண்பகம் கூற, அங்கிருந்த சிறுமியை அழைத்து, தட்டிலிருந்து ஒரு காகித முடிப்பை எடுக்கச் சொல்லி, அதை திறந்து பார்த்தனர். செண்பகம் வேண்டிக் கொண்டபடியே
வெள்ளைப் பூவே.. வந்திருந்தது..
செண்பகத்தின் முகம், ஆயிரம்வாட்ஸ் மின்விளக்காக ஜொலிக்க ஆரம்பித்தது. தன் மருமகளுக்கு பொட்டுவைத்து, பூச்சூடி உச்சி முகர்ந்தவர், சூரியாவிற்கும் பொட்டு வைத்துவிட்டார். முதலில் இருவரும் அம்மன் சன்னதியில் ஜோடியாக விழுந்து வணங்கியவர்கள்... அடுத்ததாக, குடும்பத்தின் மூத்தவர்களின் காலில் விழுந்துவிட்டு, இறுதியாக, அவரவர் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்...
" உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணே, உன் மனைவியா வர்ரதுக்கு, என்னோட வாழ்த்துக்கள் சூரியா.." என்று அவர்களை வாழ்த்தியபடியே வந்தான் சந்திரசேகர்..
சந்திரசேகரை கண்டதும்.. அவ்வளவு நேரம் இருந்த புன்னகையும், உற்சாகமும்.. செண்பகத்தைவிட்டு சிட்டாகப் பறந்தது. இவன் எப்படி இங்கு வந்தான்..? இப்பொழுதுதான் வந்தானா...? அல்லது முன்பே வந்துவிட்டானா..? என்று கேள்விகள் குடைய, மற்றவர்கள் முன்னிலையில்.. எதையும் காட்டிக்கொள்ள விருப்பமில்லாமல்,தன்னை சாமாளித்துக் கொண்டு...
" வாங்க தம்பி.." என்று ஊருக்காக உதட்டளவில் அழைத்தார்..
தலையசைத்து செண்பகத்தின் அழைப்பை ஏற்றவன்...
" சூரியா...! ஆசை பட்டபடியே எல்லாம் முடிஞ்சுது. அப்பறம்.. எப்ப கல்யாணம்..?"
" உங்களுக்கு ஓகேனா.. இப்பகூட தாலி கட்டலாம்" என்று புன்னகையுடனே கூற
" இல்ல சூரியா... நான் கல்யாணத்துக்கு தயாரா வரல.. அதனால, ஒரு ரெண்டுநாள் கழிச்சு கல்யாணத்த வச்சுக்கலாமா...? "
" எப்படினாலும் எனக்கு ஒகே..." என்று கூறியவன், பிரபாவிடம் திரும்பி
" உனக்கும் ஓகேதான பிரபா..?" என்று கேட்க, அவளும் தலைகுனிந்தவாறே.. சம்மதமாய் தலையசைத்தாள்.
அவர்கள் பேசிக்கொள்வது ரத்தினவேலை தவிர்த்து, செண்பகம் உட்பட ஒருவருக்கும் புரியவில்லை. சூரியாவும் அவர்களுடன் சேர்ந்து பேசியது, அங்கிருந்தவர்களை மொத்தமாக குழப்பிவிட்டிருந்தது. விளையாட்டாக பேசுகிறார்கள் என்றெண்ணி.. மற்றவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட, செண்பகமும், ரத்தினவேலும் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினர்...
செண்பகத்திற்கு, மூவரும் சேர்ந்து ஏதோ..?, திட்டம் போடுகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை. காலையில் சந்திரசேகர் வந்தது முதல், இப்பொழுது காலில் விழுந்து ஆசிவாங்கும் பொழுது, யாரும் அறியாவண்ணம் பிரபாவதி அழுதது வரை, பிரபாவதியின் நடவடிக்கைகளை வைத்து, தன் மகள் சந்திரசேகருடன் கிளம்பி செல்லப் முடிவெடுத்துவிட்டாள்.. என்று ரத்தினவேல் புரிந்துகொண்டார்.
இங்கே, செண்பகத்தின் தூண்டுதலால் உறவுகள் ஒன்றுகூடிவிட, தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், மகளின் விருப்பம்போல்.. அவளது வாழ்க்கை அமைந்தால் போதும் என்று, சந்திரசேகரின் மீது நம்பிக்கை வைத்து, அமைதியாக இருக்க முடிவு செய்துவிட்டார். பூஜை முடிந்ததும் உறவுகள் மெதுவாக கலைய ஆரம்பித்தனர்... ஒரே குரலில் அனைவரையும் தடுத்து நிறுத்திய செண்பகம்...
" அண்ணா... இன்னைக்கே நிச்சியம் வச்சுக்கலாமா...? " என்று மெதுவாக ஆரம்பித்தார்..
சிலவினாடிகள், தனது தங்கையையே உற்றுநோக்கிய ரத்தினவேல், புன்னகை முகமாகவே தனது சம்மதத்தை தெரிவித்தார். ஏனெனில், செண்பகத்தின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தால்; அவளது பார்வை பிரபாவதியின் மீது பதியக்கூடும். அதனால் பிரபாவதி இங்கிருந்து கிளம்பி செல்லும் வரை, செண்பகத்தின் போக்கிலேயே செல்ல நினைத்தார்.. அண்ணன்னின் சம்மதம் கிடைத்தாகிவிட்டது.. எந்த எதிர்ப்பும் இல்லை. யார்...? என்ன...? திட்டம் போட்டாலும், தன்னை வெல்ல முடியாது என்று இறுமாப்பு கொண்டு... சந்திரசேகரை வெற்று பார்வை பார்த்தார். அவரது அத்தனை திட்டமும் இன்று இரவோடு இரவாக, தவிடுபொடியாகப் போவதை.. அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை தானே.
பெரியவர்கள் அனைவரும் கூடிப்பேசி, பிரபாவதியை, மாலையில் நிச்சியம் செய்வது என்றும். நாளையே, திருமணத்தை நடத்துவது என்றும், செண்பகம் கூறியபடியே முடிவு செய்ய, அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு, மதிய உணவிற்கு செல்ல ஆரம்பித்தனர்.. சந்திரசேகரும், சூரியாவும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பிரபாவதிக்கோ உள்ளுக்குள் நடுக்கம் பரவ ஆரம்பித்தது.. எப்படி இவர்களையெல்லாம் மீறி, சந்திரசேகரின் கரம் பற்றப் போகிறோமென்ற ஏக்கம் ஒருபுறமும், பலவருடங்கள் கழித்து தாய் தந்தையுடன் இருக்கலாம் என்றெண்ணினால், வந்த இருநாட்களிலே மறுபடியும் அவர்களை பிரிய வேண்டிய தனது துர்பாக்கியம் மறுபுறமென, திக்கற்ற காட்டில் மாட்டிக்கொண்ட, சிறகொடிந்த பறவையாக துடிக்க ஆரம்பித்தாள்..
பிரபாவதியின் மனதினை புரிந்து கொண்டவர் போல,
"பிராபாம்ம்மா..." என்று வாஞ்சையுடன் அழைத்தார் ரத்தினவேல்...
தன் தந்தையின் குரல் கேட்டதும், நிமிர்ந்து பார்த்தவளை, தோளோடு அனைத்துக் கொண்டார்...
" என்னடா...? உன்கிட்ட சம்மதம் கேக்காமலே, எல்லாமுடிவும் எடுக்கறோம்னு, அப்பாமேல கோவமா...?" என்று வினவ, இல்லை என்பதைப்போல மறுப்பாய் தலையசைத்தாள்..
" எதுக்கும் கவலை படதாடா... உன் மனசு போல, எல்லாம் நடக்கும் " என்று மட்டும் கூறிவிட்டு.. தன் மகளை அணைத்தவாறே உணவருந்த அழைத்துச் சென்றார்...
அனைவரும் உணவருந்திய பின், பிரபாவதி உட்பட, ஒவ்வொருவராக கிளம்பிச் செல்ல, சூரியாவும் சந்திரசேகரும், அப்படியே காலாற நடக்க ஆரம்பித்தனர்..
" உன்ன பத்தி சொல்லு சந்திரன்.." என்று கேட்ட சூரியாவை நேர்கொண்டு, பார்த்த சந்திரசேகர்...
" என்மேல, எந்த அளவு உனக்கு நம்பிக்கையிருக்கு சூரியா...? " என்று எதிர் கேள்வி கேட்டான்...
" உண்மைய சொல்லணும்னா... உன் பேர தவிர, எங்க யாருக்கும்.. எதுவும் தெரியாது. ஆனா பார்த்த முதல் பார்வையிலே எனக்கும்கூட உன்ன பிடிச்சுடுச்சு. எனக்கு மட்டுமில்ல.. எங்க குடும்பத்துலயும், என் அம்மா ஒருத்தரை தவிர, எல்லாருக்கும் உன்ன ரொம்பவே பிடிச்சிருக்கு. நேத்து நீ கிளம்பினதுக்கு அப்பறமும், உன்ன பத்திதான், நாங்க ரொம்பநேரம் பேசிட்டு இருந்தோம்.."
"............"
" நேத்து உன்ன பார்த்ததும், பிரபா நடந்துகிட்ட விதத்த வச்சு, அவ உன்ன விரும்பறான்னு தெரிஞ்சுது. அவகிட்ட உன்ன பத்தி விசாரிச்சேன். டெல்லி ஏர்போர்ட்ல.. நீங்க சந்திச்சதுல இருந்து, சென்னை வரவரைக்கும் நடந்த எல்லாத்தையும் பிரபா சொன்னா. அவளுக்கு வேணும்னா.. நீங்க சந்திச்சது தற்செயல்னு தோணலாம். ஆனா, என் உள்ளுணர்வு சொல்லுது சந்திரன், அவளுக்காக தான்.. நீ ஏர்போர்ட்ல காத்திருந்தனு. நான் சொல்லறது சரியா.." என்று கூறி கூர்மையாக பார்க்க.. சந்திரசேகர் 'ஆம்' என்பதைப்போல தலையசைத்தான்...
" இன்னைக்கு நீ .. கண்டிப்பா வருவன்னு நான் எதிர் பார்த்தேன். நான் போலீஸ்காரன் சந்திரன். பெரும்பாலும் எங்க கணிப்பு தப்பாது.. எதோ..? ஒருவகைல பிரபாவதிக்காக, நீ தவம் கிடக்கறனு புரியுது. நீ பிரபாவதிய கல்யாணம் பண்ணிக்கறதுக்கு தடையா, நானே இருந்திருந்தாலும் என்ன ஒண்ணுமில்லாம பண்ணிட்டு, பிரபாவதிய நீ கூட்டிட்டு போயிடுவனு எனக்குத் தெரியும்.."
" என்னோட சந்தேகமெல்லாம் ஒன்னே ஒன்னுதான் சந்திரன்.. நீ வெளிநாட்டுல வளர்ந்தவன். பிரபாவதி டெல்லில வளர்ந்தவ.. உனக்கு எப்படி பிரபாவ தெரியும்...?. இவ்வளவு தீவிரமா, பிரபாவதிய அடையணும்னு துடிக்கறதுக்கு காரணம், அவ மேல இருக்கற காதலா..? இல்ல வேற ஏதாவது காரணமா...?"
" இதுக்கு, நான் பதில் சொல்லறதுக்கு முன்னாடி.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு சூரியா...?"
" என்மேல எனக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையிருக்கோ.. அதே அளவுக்கான நம்பிக்கை, உன்மேலையும் இருக்கு சந்திரன்..." என்று சூரியா கூறியதும் கலங்கியிருந்த கண்களை துடைத்தபடி..
" இது போதும் சூரியா. இதே நம்பிக்கைய கடைசிவரைக்கும் என்மேல வச்சிரு. எந்த சூழ்நிலையிலும், என்மேல இருக்கற நம்பிக்கைய மட்டும் இழந்திடாத. என்ன பத்தின எல்லாமே, நான் இங்கிருந்து கிளம்புனதும் உங்களுக்கு தெரியவரும். அதே மாதிரி, இப்ப நாம பேசிட்டு இருக்கிறது விஷயம் கூட, நானே வந்து சொல்லற வரைக்கும், யார் கிட்டயும் நீ சொல்லக் கூடாது..." என்று கூறி சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டை நோக்கி கிளம்பினர்...
பெரிய வீட்டுக்காரங்க என்ற பெயருக்கு ஏற்றபடியே, மிக பிரம்மாண்டமாய் இருந்தது... ரத்தினவேலின் பூர்வீக வீடு. வீட்டை சுற்றிப் பார்த்தவண்ணம்.. எவருக்கும் தெரியாமல் இங்கிருந்து பிரபாவதியை அழைத்துச் செல்ல ஏதாவது வழியிருக்கிறதா...? என்று நோட்டமிட்டவாறே, சந்திரசேகர் நடந்து கொண்டிருந்தான்... கிட்டத்தட்ட இருபது ஏக்கருக்குமேல், வரிசையாக தென்னை மரங்கள் வளர்ந்திருக்க, அதன் மத்தியில் கம்பீரமாக காட்சியளித்தது அந்த வீடு.. வீட்டின் முன்புறவாயிலில் வாழை மரப் பந்தலும், அங்கிருந்து உள்ளே நுழைந்து.. வலதுபுறமாக திரும்பியதும், தற்காலிகமாக சமையல் செய்ய, பந்தி பரிமாற, தென்னை ஓலைகளால் ஆனா கொட்டகையையும் அமைத்துக் கொண்டிருந்தனர்.. எப்படியும் இங்கு இரவு முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். பிரபாவதியை இந்த வழியாக அழைத்துச் செல்லவது இயலாத காரியம் என்று தோன்ற... வீட்டின் பின்புறமாக சென்றான்...
சிறிதுதூரம் நடந்து சென்றதும், ஒற்றையடி பாதை குறுக்கிட, அதை பின்பற்றி.. மேற்கொண்டு சிறிதுதூரம் சென்றதும், தஞ்சாவூரின் பிரதான சாலை தென்பட்டது... அவ்வழியில் வீடுகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்ததால், அந்த வழியையே தேர்ந்தெடுத்துவிட்டு,
அதை சூரியாவிடம் தெரியப்படுத்த.. அவனை தேடிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
வீட்டின் ஒவ்வொரு வாயிலிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.வீட்டின் நடுவில் பெரிய போர்வையை விரித்து, சிறியதும், பெரியதுமாய்... பல தட்டுக்களை பரப்பி.. நிச்சியதார்த்தத்திற்கு தேவையானவற்றை அதில் அடுக்கியிருந்தனர்... அவைகளையெல்லாம் ஒரு பார்வை பார்த்தவாறே, சூரியாவைத் தேடிக் கொண்டிருக்க, சந்திரசேகரை தேடியவாறே சூரியாவும் அங்கு வந்து சேர்ந்தான்...
தனது திட்டத்தை பற்றியும், பிராபாவதியை அழைத்துச் செல்லும் வழியைப் பற்றியும் சந்திரசேகர் கூறினான். சூரியாவிற்கும் அதுவே சரியெனத் தோன்ற, அதையே செயல்படுத்த முடிவெடுத்தனர்..
ஆறு மணியளவில் ஆரம்பித்த, நிச்சியதார்த்த சடங்குகள் ஒருவழியாக ஒருமணிநேரத்தில் முடிவடைய, மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்தவர்களிடம் கடைத்தெருவுக்கு போய் வருவதாக கூறி விடைபெற்று, நேராக தனது காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து, காரை எடுத்துக்கொண்டுபோய்... காத்திருப்பதாக சொன்ன இடத்தில்.. மறைவாக காரை நிறுத்திவிட்டு, பிரபாவதியின் வரவை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தான்..
பிரபாவதிக்காக காத்திருந்த ஒவ்வொரு மணித்துளிகளும், பல யுகங்களாய் கழிய, அங்குமிங்கும் நடந்தவாறே.. மனம் ஒருநிலையில் நில்லாமல் தவித்துப்போனான்.. மணி பதினொன்றை கடந்திருந்தது.. அதற்குமேலும் பொறுத்திருக்க முடியாமல், தான் தேர்ந்தெடுத்த வழியில் செல்லத் துவங்கினான். விட்டின் பின்புறத்தை அடையும் வரை, பிரபாவதி வருவதிற்கான எந்த அறிகுறியும் தென்படாமல் போகவே, சந்திரசேகரை பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது...
பிரபாவதிக்கும் அதே நிலைதான். சூரியா கூறியபடியே, தூக்கம் வருவதாக கூறிவிட்டு,விரைவாக உறங்க சென்றவளை, அங்கிருந்த பெண்கள்.. மருதாணி வைக்கும் சாக்கில் பிடித்து வைத்துக்கொள்ள,
அவர்களையெல்லாம் சமாளித்து கிளம்புவதற்குள், தனது வேலைகளை முடித்துவிட்டு செண்பகமும் வந்துவிட்டார்.. பிரபாவதியை அழைத்துக் கொண்டு படுக்கையறைக்கு சென்றவர், அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு கதவை பூட்டிக் கொண்டு தரையில் பாயை விரித்து படுத்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தவள், சந்திரசேகரை நினைத்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். ஒருநிலைக்குமேல் அடக்கமுடியாமல், நடப்பது நடக்கட்டும் என்று, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பூனைப்போல் அடிமேல் அடி எடுத்து வைத்தவளை..
" பிரபா.." என்ற செண்பகத்தின் அழைப்பு, இழுத்து பிடித்து நிறுத்தியது மெதுவாக தலையை திருப்பிப் பார்க்க, செண்பகம் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். பிரபாவதியின் இதயத் துடிப்பு, அவளது தளிர்மேனியையும் மீறி, அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.. கைகளால் வாயை பொத்திக் கொண்டு, சத்தம் வராமல் சுவாசித்து, தனது துடிப்பை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு.. மெதுவாக கதவை திறந்து கொண்டு ஓசையின்றி வெளியேறினாள்..
வீட்டின் விளக்குகள் அனைத்து வைக்கப் பட்டிருக்க, சுற்றிலும் பரவியிருந்த கும்மிருட்டை கண்டு உள்ளம் நடுங்கியவள், சந்திரசேகரை மனதிற்குள் எண்ணி, வீட்டின் பின்புறத்தை நோக்கி முன்னேறினாள். திடிரென பின்னாலிருந்து ஒரு கை அவளது கைகளை பற்ற, உடல் பதறியவளை..
" பேபி... நான்தான் பயப்படாத..." என்று காதில் மெதுவாக கேட்ட வார்த்தைகளில், சந்திரசேகர் என்று தெரிந்ததுமே, அவனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். பிரபாவதியை அணைத்து ஆறுதல் படுத்தியவன்.. அவளை அழைத்துக் கொண்டு, கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு விரைவாக சென்றான்..
காரை அடைந்ததும், சூரியாவை எதிர்பார்த்து சிலநிமிடங்கள் காத்திருந்தான். சூரியா வராமல் போகவே.. காரிலேறி அமர்ந்து பிரபாவதியை பார்த்து போலாமா.. என்று கண்களாலே வினவ... பிரபாவதியும் கண்களில் கண்ணீரோடு தலையசைத்து சம்மதத்தை தெரிவித்துவிட்டு, சந்திரசேகரின் தோள்களில் சாய்ந்து கொள்ள.. காரும் முன்னோக்கி சென்றது... அவர்களை காலனும் பின்தொடர்ந்து சென்றான்...




நடந்ததோர் விதியென்று,
மதிகொண்டு அறிந்தபோதிலும்..
ப(லி)ழிகொண்ட பிஞ்சுமனம்
பாழ்பட்டு போனதேனோ..


மங்கையவள் மான்விழியில்
மயங்கிய சிங்கமாக,
கழுத்தறுக்க வந்தவன்- தானே
அவள் கரம் பற்றி -செல்கிறானே


திட்டங்கள் பல தீட்டி- உன்னை
கவர்ந்திட்ட போதிலும்
காதல் கொண்ட என்னவளை- நித்தம்மும்

காத்திடவே துடிக்கின்றேன்...

காலங்கள் சென்றபின்னே
காவியமாகும் நம்- காதல்
காலனின் காலடி அறிந்தால்- உன்
காலடியில் எனதுயிர் பிரியும்.


காவு வாங்க.. காத்திருந்தவன்..!
காதல் கொண்டு, கவர்ந்து சென்றான்


நேசம் கொண்ட பேதை மனது...!
நெருடாமல் நெருங்கியது...


எழுதப்பட்ட தீர்ப்பு ஒன்று...!
ஏட்டில் ஏறும், நாளும்வரும்..


காலன் என்ன நினைக்கிறான்...!
காத்திருந்து காண்போம் நாமும்.


காதல் வெல்லுமா..? காலன் வெல்வானா...?


மயக்கம் தொடரும்...
 
Status
Not open for further replies.
Top