All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முரண்பாடே காதலாய்

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
நம் இருவருக்குமான
முரண்களில்
மனமது உடைய துவங்க..
காதலதோ மனம் கண்டுகொண்ட முரணதையே

உடைக்க எண்ணியது !!!

அத்தியாயம் 4 :


சந்திரமதி செல்லும் பாதை :
"ஆமா நீங்க இந்த கலர் லென்ஸ் இந்த ஊர்ல , எங்க வாங்குனீங்க? இதே மாதிரி வேற வச்சிருந்தா எனக்கு தரீங்களா" என யாரென்றே தெரியாத... சில நிமிடங்களுக்கு முன் பார்த்தவனிடம் சிறிதும் பயமில்லாமல் சகஜமாய் பேசியபடி வந்தவளை வியப்பாய் பார்த்தான், சந்திராதித்யன் .

அவன் பதில் சொல்லாமால் தன்னை பார்த்து விழிப்பதை கண்டவள் , அவனின் முன் தன் கைகளை அசைக்க அதில் வியப்பை தன்னுள் மறைத்தவன் , " ஒண்ணுமில்லை....நீ இன்னும் எவ்வாறு இங்கு வந்தாய் என்று சொல்லவில்லையே" என்றான்.

"அது தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட வெட்டியா மொக்க போடப்போறேன்" என முணுமுணுத்தவள் ,

பேச்சை மாற்றுவதற்காக , " உங்க கேள்வி பதில் செஷன்-ன கொஞ்ச நேரம் கழிச்சி வச்சிக்கலாமா ?" என ஆரம்பித்தவள் அவன் கேள்வியான பார்வை கண்டு ,

"ஹீஹீ எனக்கு கொஞ்சமா பசிக்கிற மாதிரி இருக்கு அதுவுமில்லாம கடைசியா எப்போ சாப்பிட்டேன்னு கூட எனக்கு நியாபகமில்லை அதுதான்" என உதடுகளை பிதுக்கி பாவமாய் சொல்லியவளை கண்டவனின் மனம் அவளின்பால் உருகியது .

வண்டியின் வேகத்தை குறைத்தவன், அந்நெடுஞ்சாலையில் கடைகள் ஏதேனும் தென்படுகிறதா என தன் கூர்மையான விழிகளால் அலசியதில் ஒன்றும் தென்படாமல் போக ," சற்று பொறுத்துக்கொள் , இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று நினைக்கிறேன்" என்றான்.

அவன் சொல்லியதை பெரிதாய் கண்டுக்கொள்ளாமல், " ஆமா ! நீங்க என்ன ஏதோ வித்தியாசமா பேசுறீங்க?" என கேட்டவளின் குரலில் சந்தேகம் தொக்கி நின்றது.

" அது சரி! நான் வித்தியாசமாக பேசுகிறேனா ?" என கேலிபோல் வினவியவன் அதற்கு பதில் சொல்வதை தடுப்பது போல் ,

"முதலில் நான் கேட்டதற்கு பதில் சொல்!..நீ எவ்வாறு இங்கு வந்தாய் என்று கேட்டிருந்தேனே அதை சொல்ல விருப்பம் இல்லையெனில் நீ எங்கு செல்லவேண்டும் என்றாவது கூறு , நான் உன்னை கூட்டிச்செல்கிறேன்".

" அப்படினா நம்ப ... நான் முதல்ல நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து நேரா போய் வலது பக்கம் போகணும் ....அங்க ஒரு ஐந்து நிமிடம் நம்ப நடக்கணும் , அதுக்கு அப்புறம் இடது பக்கம் அதன் பின் வலது பக்கம் சென்று ஒரு அறை மணி நேரம் போகணும் அவ்வளவுதான் ...கொஞ்சம் சீக்கிரமா கூட்டிட்டு போங்க இருக்குற பசியில உங்கள சாப்பிட்டாலும் சாப்பிட்டுடுவேன் " என கடகடவென ஒப்பித்தவள் தன் இருபக்க தோள்களையும் குலுக்கிக் கொண்டாள்.

அதை கேட்ட சந்திராதித்யனுக்கு தான் ஒருநிமிடம் தலை சுற்றியது போலானது அவள் சொன்ன இடது வலதில்.

தலையை குலுக்கி கொண்டவன் சற்று கண்களை அவள்புறம் திரும்பி , "இந்த பெண் என்ன இவ்வளவு இலகுவாய் சொல்லிவிட்டாள். இவ சொன்னதில வலது , இடது இது இரண்டு மட்டும் தானே நம்மளுக்கு புரிந்தது . இதில் ஆரம்பத்தில் நான் நின்ற இடம் என்று வேறு சொன்னாளே !" என குழம்பியவன் அவளை முதலில் தான் பார்த்த நொடிகளுக்கு தன் சிந்தனையை சிறகடித்தான்.

சில மணி நேரம் முன்பு :


சிறைச்சாலையை விட்டு வெளிவந்தவன் ,தன் தோள்களில் உடல் முழுக்க ரத்தம் வழிய இறந்துகிடந்தவனை தான் வந்த வண்டியின் பின்புறம் தூக்கிபோட்டபின் , சுற்றும் முற்றும் எவருமில்லாததை உறுதி செய்துகொண்டு ஓர் நொடி ஆழமூச்செடுத்து கண்மூடினான் .

கண்மூடிய அடுத்தநொடி, இத்தனை நேரம் இருந்த காவல் அதிகாரி தோற்றம் மறைந்து சாதாரண உடையில் தன் நிஜ உருவிற்கு வந்தவன்,

ஐந்தரை அடி உயரத்தில், அரசனுக்கேற்ற கம்பீரமான உடலமைப்புடன் இருக்க, சற்று மஞ்சள் நிறத்துடன் இருந்தவனின் கண்கள் இரண்டும் பச்சை நிறத்தில் மரகதகல்லாய் ஜொலித்தது.

தான் தூக்கிப் போட்டவனை கண்டவனுக்கு , அவனை பார்க்க பார்க்க கோபம் தலைக்கேற....நாக்கு பாம்பின் இயல்பாய் வெளிவந்து "ஸ்ஸ் ஸ்ஸ்" என சத்தம் எழுப்பியது.

நேரம் கடப்பதை உணர்ந்தவன் தன் கோபத்தை கட்டுப்படுத்தி விரைவாய் அங்கிருந்து வண்டியை கிளப்ப, அவன் கிளப்பிய வேகத்தில் அது புகையை வெகுவாய் கக்கியபடி கிளம்பியது .

தன்னிருப்பிடம் நோக்கி செல்லும் பாதையில் வண்டியை செலுத்தியவன், சிறிது நேரத்திலே சாலையின் ஓரம் ஒருவர் மயங்கியிருப்பதை கண்டு புருவம் சுருக்கியபடி வண்டியை அருகில் சென்று நிறுத்தி இறங்கினான் .

அங்கு சாலையோரத்தில் , சற்று களைத்து இருந்தாலும் பார்ப்பவரை ஈர்க்கும் அப்பழுக்கற்ற முகத்துடன் , பள்ளிப்பருவ பெண்ணின் தோற்றத்தில் மயக்கத்தில் இருந்தாள் மங்கை ஒருவள்.

ஏனோ அவளை பார்த்த நொடியில் அவனின் மனம் சற்று தடம்புரள அதை அதிர்வுடன் உள்வாங்கியவன் , " சே ! என்ன இது ? சந்திரமதியினரின் வருங்கால அரசன் அவர்களின் எதிரியான மனிதர்களில் ஒருவளானவளை கண்டு அயர்வதா " என தன்னையே திட்டிக்கொள்ள அவனின் கைகளோ தானாய் மயங்கிருந்தவளை தூக்கிக் கொண்டது .

அவளை தூக்கியபடி வண்டியின் அருகில் வந்தவன் , பின் இருக்கையில் படுக்கவைக்க முடியாததால் தனது பக்கவாட்டு இருக்கையில் அமர்த்தியவாறு கிடத்தினான் .
அவளின் கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயல அவளோ சிறிதும் அசையவில்லை .

எப்படியோ வண்டியினுள் தேடி அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவன், அவளின் மயக்கத்தை தெளியவைக்கும் முன் அவன் அறிந்திருந்த விஷயங்கள் பெண்ணான அவளின் நிலையை முதலில் அறிய சொல்ல, விரைவாய் தன் பார்வையால் அவளின் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

அந்த சில நொடிகளில் அவனின் மனம் இதுவரை அறியா பயத்தை உணர , அவனின் மனம் உணர்ந்ததை மூளை ஒதுக்கித்தள்ளியது .

சிலநொடிகளிலே அவளின் பத்திரத்தை உறுதி செய்தவனின் மனம் நிம்மதி பெருமூச்சிவிட, முதலில் தண்ணீரை மெதுவாய் அவளின் முகத்தில் தெளித்து பார்த்தான்.

ஆனால் அவள் இன்னும் எழாததால் , இப்பொழுது தண்ணீரை அவளின் முகத்தில் வேகமாய் அடித்தான் .

"ஏய் ஏய் ! யாருடா அது என்னைய குளிப்பாற்றது " என கத்திக்கொண்டே கண்விழித்தவள் தன் எதிரே தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்தவனை கண்டு,

"டேய் பச்ச கண்ணா ! எதுக்குடா என் மேல தண்ணிய ஊத்துனா யூ யூ இடியட் " அவன் சற்று நெருங்கி நின்றிருந்ததில் தான் முதலில் பார்த்த அவனின் அந்த பச்சை நிற கண்களை வைத்து அவனை அழைத்தவள் தொடர்ந்து,.

அவனின் கையிலிருந்த பாட்டிலை பிடுங்கி அதில் மீதமிருந்த தண்ணீரை அவனின் மேலே ஊற்றினாள்.

அவளின் செயலில் அவன் அதிர்ந்து விலக ,

அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்தவளுக்கு ஏனோ சிரிப்பாய் வர," ஹாஹா! என்னாச்சி ...என் மேல நீ ஊத்துன பதிலுக்கு நான் உன் மேல ஊத்திட்டேன் . அதுக்கும் இதுக்கும் சரியாய் போச்சி" என இத்தனை நேரம் மயங்கிருந்தவள் , பலநாள் இவனுடன் பழகியதை போல ஒருமையில் விளித்து படபட பட்டாசாய் பேசுவதை கேட்டவன்,

"ஈசனே ! இந்த பெண்ணா இவ்வளவு நேரம் மயக்கமாக இருந்தாள் என எண்ண தோன்றுகிறதே . ஒரு வேளை இப்பெண்ணுக்கு மனநிலை ஏதேனும் சரியில்லையா " என்று யோசித்தான்.

அவனின் முகத்தை வைத்தே அவனின் யோசனை செல்லும் பாதையை அறிந்தவள், " ஏய் நான் ஒன்னும் பைத்தியம் கிடையாது ஓகே! சில் பையா ,நான் மயக்கமாகிட்டேன் அதுனால நீ தண்ணிய தெளிச்சி எழுப்ப நினைச்சிருக்க அதான. ஆனா நீ தெளிக்கிறதுக்கு பதிலா மொத்தமா என் மேல அத ஊத்தி என்னை குளிப்பாட்டிட்டல அது தான் நான் உன்மேல மீதி தண்ணிய ஊத்திட்டேன் . யூ நொவ் ஒன் திங் , நான் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு தடவை குளிக்குறதே அதிகம்பா அதுவுமில்லாம நான் காலையிலையே குளிச்சிட்டேன் இன்னிக்கு" என அவள் பாட்டிற்கு பேசிகொண்டே சென்றாள்.

அத்தனை நேரம் அவளிற்கு ஏதேனும் பிரச்சனையோ என்று படபடப்பாய் இருந்தவனுக்கு, அவளின் பேச்சில் படபடப்பு தானாய் மறைந்தது மட்டுமில்லாமல் சிரிப்பும் கூட வந்தது .

சிரிப்புடனே சத்தமாய் "நீ யார் பெண்ணே ? நீ எங்கு போகவேண்டும்? எப்படி இங்கு வந்தாய்?" என அடுத்தடுத்து கேட்டவனின் கேள்விகள் அனைத்தும் எதிரில் இருந்தவள் கண்களை உருட்டி முழித்த விதத்தில் பதிலில்லாமல் போனது.

சற்று குழப்பத்துடன் மறுபுறம் வந்து வண்டியை கிளப்பியவன்," எங்கு இறங்க வேண்டும் என்று சொல் ,போகும்வழியில் உன்னை விட்டுவிடுகிறேன் " என்றான்.

"சரி "என்பதை போல் தலையை ஆட்டியவளை கண்டவனின் மனமும் ஆட , அவள் புறம் திரும்பியவனின் பக்கவாட்டு பார்வையில் விழுந்தது பின்னிருந்த பிணம் .

அதை கண்டவன் அங்கிருந்த துணியை கொண்டு அதை போர்த்தி மறைத்தபடி, அவள் யார்? என அறிந்துகொள்ள தன் பேச்சை வளர்க்க ஆரம்பத்தான் .


இதை அனைத்தையும் நினைத்தவன், அவளுடன் கடந்த ஒரு மணி நேர பயணத்தில் இதுவரை அவளின் பெயரை கூட அவனிடம் சொல்லாததில் அவளின் அவ்வெச்சரிக்கை உணர்வை வியந்தவன் , மனிதர்களின் கொடுரப்பக்கத்தை அறிந்திருந்ததால் அதை ஆதரிக்கவே நினைத்தான் .

எப்படியோ அவளின் படபட பட்டாசு பேச்சை கேட்டுகொண்டே வந்தவன் , அவள் போகவேண்டிய இடம் பற்றி அவளே சரியாய் அறியாததுமில்லாமல் நேரமும் கடந்து இருள துவங்கியதால் அவளை தன் இருப்பிடமான சந்திரமதி இருக்கும் காட்டிற்கே அழைத்துவந்துவிட்டான் .


அதன்மூலம் பல நூற்றாண்டுகளுக்கு பின் அந்த காட்டினுள் மனித காலடி பட்டதில் அங்கிருக்கும் மரங்கள் அனைத்தும் நிகழப்போவதை அறிந்து தன் கிளைகளை வேகமாய் ஆட்ட தொடங்க , காற்று பலமாய் வீச தொடங்கியதில் தூரத்தில் மலையின் மேல் வீற்றிருக்கும் புற்றீஸ்வரரின் ஆலய மணி ஒலித்து அடங்கியது.
.

காட்டின் மறுகோடியில் இருக்கும் அவர்களை காக்கும் புற்றீஸ்வரரின் சன்னதிக்கு வலப்பக்கமாய் சற்று தொலைவில் ஓர் குகை, வீடு போலான அமைப்பில் இருக்கும் .

அவளை அங்கு கூட்டிக்கொண்டு வந்த சந்திராதித்யன், அவள் சுற்றும் முற்றும் ஒருவித ஆவல் கலந்த பயத்துடன் பார்ப்பதை அவளின் முகம் அப்பட்டமாய் காட்ட .. புருவங்கள் மேலேறியவாறு விரிந்த கண்களும், சற்று பிளந்த வாயுமாய் அவள் முகம் காட்டும் பாவனைகளை ரசனையாய் கண்டான்.

சற்றுநேரம் அவளை ரசித்திருந்தவன் , காரிலிருக்கும் உடலின் நினைவு வர அவளிடமிருந்து தன்னை மீட்டெடுத்து ," நீ இங்கு அமர்ந்திரு ..நான் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் " என சொல்லி கிளம்ப ,

"ஏய் ...நில்லு!!!சும்மா ரோட்டுல போய்ட்டிருந்தவள கடத்தி இந்த காட்டுல கூட்டிட்டு வந்து விட்டுட்டு நீ எங்க போற?" என வேகமாய் வினவியவள் அவனின் பார்வையில் ,

"என்ன ...என்ன அப்படி பாக்குற ?? சரி நடந்து போய்ட்டிருந்தவ இல்ல மயங்கிக்கிடந்தவனு வேணும்னா மாத்திக்கிறேன் ஓகே!! அதுக்காகலாம் நீ அந்த பச்சை கண்ணை அப்படி சுருக்காத... நீ எங்கையும் போக கூடாது கூட்டிட்டு வந்தல ஒழுங்கா என்கூடவே இரு " என தன் பயத்தை மறைத்தபடி அதிகாரமாய் சொன்னாள்.

அவளின் அவ்வதிகாரத்தை அவனின் மனம் விரும்பவே செய்தது. அவள் கண்களின் மூலம் அவளின் பயத்தை அறிந்து அவளுடன் விளையாடும் எண்ணத்தில் சிறுசிரிப்புடன் அவன் அங்கிருந்து நகர ,
"ஏய்ய் ! சரி சரி நான் ஒத்துகிறேன்...எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு நீங்களும் என்கூட இங்கயே இருங்களேன் ப்ளீஸ்" என்றவளுக்கு அவன் விட்டுசென்றுவிடுவானோ என்ற பயத்தில் குரல் தானாய் அழுகைக்கு மாறியது .

"ஹாஹா" என வாய்விட்டு சிரித்தவன் , " இங்கு உனக்கு எப்பயமும் வேண்டாம் பெண்ணே..!!.பசிக்கிறது என்று சொன்னாய் தானே, இப்பழங்களை சாப்பிட்டு கொண்டிரு. இவை அனைத்தையும் நீ சாப்பிடும் முன் நான் வந்துவிடுவேன் " என வழியில் மரங்களில் இருந்து பறித்த பழங்களை அவளிடம் கொடுத்து தைரியம் சொல்லி அவ்விடத்தை விட்டு வெளியில் வந்தான்.

அன்று பௌர்ணமியானததால் அவர்களின் குலத்தவர் புற்றீஸ்வரரின் ஆலயத்திற்க்கு அவர்களின் பூஜைக்காக வரஆரம்பித்தனர் .

அவர்களின் கண்களில் படாமல் வேகமாய் சென்றவன் வண்டியிலிருந்த அப்பிணத்தை தான் வழக்கமாய் செய்யும் முறையில் செய்து, வண்டியையும் அங்கிருந்த கொடிகளினுள் மறைத்தவன், மீண்டுமாய் அவளை விட்டுவந்த குகைவீடை நோக்கி நடைபோட்டான் .


நேரம் கடந்ததில் பௌர்ணமியின் முழுநிலவு நடுவானில் பிரகாசமாய் வெளிச்சத்தை கடத்தி தன்னிருப்பை காட்டத் தொடங்கியது .

தூரத்தில் ஆலயத்திலிருந்து அவர்கள் இனத்தவர் செய்யும் பூஜை ஓசைகள் மெல்லியதாய் செவியை தீண்ட தன் நடையை விரைவாக்கினான் .


இத்தனை நேரம் மரங்களின் இருட்டில் வந்துகொண்டிருந்தவன் குகை அருகே வரும்வேளையில் மரங்கள் இல்லாததில் முழுநிலவொளி அவன் தேகத்தில் சுதந்திரமாய் படர, அவனின் உடல் சிறிது சிறிதாய் பாம்பின் தோற்றத்திற்கு மாற தொடங்கியது .

இந்த நொடி வரை, தன்னுடன் சிறிதும் பயமின்றி தன்னை நம்பி வந்தவளை பற்றியே யோசித்துக்கொண்டு வந்திருந்தவன் ...தான் பாம்பின் தோற்றத்திற்கு மாறினால் விரைவாக செல்ல முடியும் என்பதை கூட மறந்திருந்தான் .

நிலவொளியில் மாறத்தொடங்கிய தன் தோற்றத்தை கண்டபிறகே அவளுக்கும் தனக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை முழுதாய் அவன் மூளை உள்வாங்க , முதல்முறையாய் ஒரு பெண்ணை ரசித்து இயல்பாய் அவளை ஏற்றுக்கொண்ட மனமோ அவ்வித்தியாசத்தில் உடைய துவங்கியது .



-காதலாகும்...


Drop ur comments in this friends


 

Thoshi

You are more powerful than you know😊❤
காதல் தான் என உரிமையாய் தோள் சாய்க்கவும் முடியாமல் ..
நட்புதான் என்னும் உறுதியுடன் கைகோர்க்கவும் முடியாமல் எத்தனையோ மனங்கள் பொம்மலாட்டம் ஆடுகின்றன வாழ்க்கை என்னும் தங்கள் பொம்மலாட்டத்தில் ...!!!



அத்தியாயம் 5:



உறங்கும் அனைவரையும் தன் கதிர்கள் என்னும் கைகளால் தட்டி எழுப்பியபடி தன் அன்றாடப் பணியை செவ்வனே தொடங்கினான் சூரியன்.


இரவு முழுக்க பரம்பொருளான பரமேஸ்வரரிடம் தங்களை ஒப்புவித்து பூஜை , நடனம் எனக் களித்திருந்த சந்திரமதியினர், சூரியனின் வரவை உணர்ந்து தங்கள் இருப்பிடம் நோக்கி நகரத் துவங்கினர்.


ஈசனே தங்கள் துணை என எண்ணி இரவு முழுக்க அவர் புகழ் பாடியவர்கள் முகம் அனைத்தும் தேஜஸுடன் பிரகாசமாய் இருக்க, ஒரே ஒருவரின் முகம் மட்டும் பொலிவிழந்து இருந்தது.


அது வேறு யாருமல்ல, சந்திரமதியின் நாகராணி சந்திரையின் முகம் தான் அது.


நேற்றிரவு பௌர்ணமி பூஜையில் ￰இறுதிவரை சந்திராதித்யன் கலந்துகொள்ளவில்லை என்பதை மற்றவர் அறியவில்லை எனினும் அவனை மட்டுமே எதிர்பார்த்திருந்த சிந்திரை அறிந்திருந்தார்.


இதற்க்கு முன்னரே பலமுறை சந்திரமதியின் விதிகளை மீறி இருந்த மகனின் மேல் சினத்துடன் இருக்கும் நாகராஜ இவ்விடயத்தில் என் செய்வாரோ ??என ஒருபுறம் பயம் இருந்தாலும்,


இது சந்திராதித்யன் பௌர்ணமி பூஜையை தவிர்ப்பது இரண்டாம் முறையாகும் . இன்னும் இருமுறை இவ்வாறு நேர்ந்துவிட்டால் ????? என அவர் தாய் மனம் மகனை பற்றி அறிந்திருந்ததால் அவ்வாறு நேர்ந்துவிடுமோ என கலங்கி தவித்தது .


இவர்கள் செல்லும் பாதையில் இருந்து பல தூரம் தள்ளி அக்குகை வீடு இருந்தாலும், தாயின் பரிதவிப்பு சேயை சென்றடையாதா??


இவரின் பரிதவிப்பு, கலக்கம் எல்லாம் சந்திராத்தித்யனை தாக்கியதாலோ என்னவோ ? அவன் உறக்கம் கலைந்து எழுந்தான்.


சந்திராத்தியனுக்கு ஏனோ தன் மனம் சற்று வருத்தத்தில் ஆழ்ந்து கனமாய் இருப்பதாய் தோன்ற , அதில் தன் தாய் தன்னைத் தேடித் தவிக்கிறார்கள் என்பதை மிகச் சரியாய் உணர்ந்துக்கொண்டான்.


ஏனெனில் அவனின் சிறுவயது முதலே சிந்திரை கலக்கமுறும் பொழுதெல்லாம் அவனின் மனம் கனமாவதை உணர்ந்திருக்கிறான்.


இப்பொழுது தன் தாயின் மனதின் கலக்கத்திற்கு காரணம் தன்னை காணாமல் தவிப்பதே ஆகும் என மிகச்சரியாய் எண்ணியவன் விரைவாய் தாயிடம் செல்லவேண்டும் என எண்ணி எழுந்தான்.


எழுந்தவனின் பார்வையில் விழுந்தாள் எதிரில் உறங்கிக்கொண்டிருந்தவள் .


ஒன்றும் தெரியாத சிறு குழந்தை போல் உறங்குபவளை கண்டவனுக்கு, நேற்று நடந்தவைகளை எண்ணி " இப்பெண்ணா அவ்வளவு பேசியது?" எனச் சந்தேகம் தோன்றியது.


"நேற்று அவள் செய்த சேட்டைகளையும் , பேசிய பேச்சையும் கேட்டவர்கள் இப்பொழுது அவளை பார்த்தார்களானால் ஒருவேளை இப்பெண்ணிற்கு சகோதரி எவரேனும் இருக்கிறார்களா என்று தான் வினவியிருப்பார்கள்" என எண்ணியவன் அவளை கண்ட நொடிமுதல் அவள் செய்த அட்டகாசம் அனைத்தும் நினைவு வர தானாய் இதழ்களில் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.


அவள் ஆழ்ந்து உறங்குவதை கண்டவன் , அவள் எழும்முன் வந்துவிடலாம் என தன் தாயை தேடிச் சென்றான்.


"நம்மை முழுதாய் நம்புவர்களை, எக்காரணம் கொண்டும் அந்த நம்பிக்கை பொய்த்துவிடாமல் காப்பது நமது கடமை என்று தாங்கள் தானே அம்மா எனக்கு சிறுவயது முதல் கூறிவந்துள்ளீர்கள் "


-என கேட்டபடி தன் முன் அமர்ந்திருந்த மகனை கண்ட சிந்திரையின் தலை , "ஆமாம் " என்று ஆட ,


" அதைத்தானே நானும் செய்தேன் அம்மா .ஒருவர் நேற்றிரவு நான் உடனிருப்பேன் என நம்பிக்கை கொண்டார் அம்மா. இத்தனைக்கும் அவருக்கு நான் யாரென்ற விடயம் தெரியாது , ஆயினும் அவரை தனியே விட்டு செல்லமாட்டேன் என என்மேல் நம்பிக்கை கொண்டார் . என்னால் அவரின் அந்நம்பிக்கையை எவ்வாறு உடைக்கமுடியும் அம்மா?? "


- என வாதிட்டவனை பார்த்தவரின் முகம் யோசனையில் ஆழ, யோசனையின் முடிவில் அது கசங்க தொடங்கியது.


அதில் அத்தனை நேரம் அவரின் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சந்திராதித்யனின் மனம் துணுக்குற்றது .


அப்படியே அவரின் காலின் அருகில் மண்டியிட்டவாறு அமர்ந்தவன்," அம்மா ! எனக்கு தெரியும் என்னால் நேற்று இரவு பௌர்ணமி பூஜையில் கலந்துகொள்ளமுடியவில்லை என்று தானே துயரம் கொல்கீறீர்கள்.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, எனது அச்செயல் தங்களை மிகவும் வருத்திவிட்டதல்லவா " என வருந்தி தாயிடம் மன்னிப்பை வேண்டினான் .


அவனை கண்ட சிந்திரைக்கு சிறுவயதில் ஏதேனும் தவறு செய்தால் தன் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டபடி
தன் முகத்தை முகத்தை பார்க்கும் சிறுவயது சந்திராத்தியன் நினைவு வர , தன் துயரத்தால் கலங்கியிருக்கும் அவன் கலக்கம் தீர்க்க புன்னகையுடன் அவனின் தலை கோதினார்.


"அதில்லை மகனே! நீ கூறும்பொழுது 'ஒருவர்' என்றாயே அது நிச்சயம் நம் குலத்தவர் அல்ல என்பதை நான் அறிவேன் . அதேபோல் அவர் மனித குலத்தவர் என்பதையும் நான் அறிவேன் " எனச் சொல்லி மகனின் முகத்தில் தோன்றும் பாவங்களை பார்ப்பதற்காக இடையில் நிறுத்தினார் .


சிந்திரையின் எண்ணத்தை பொய்யாக்குவது போல் சந்திராத்தியன் எவ்வித உணர்வையும் முகத்தில் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருக்க , அதை பார்த்த சிந்திரைக்கு தான் தன் அனுமானம் தவறோ என்ற சந்தேகம் தோன்றியது .


தனையனது முகம் போல் அல்லாமல் தாயின் முகம் தன் மன உணர்வுகளை காட்டியதில் சிரித்த சந்திராதித்யன் ,


"அம்மா! தாங்கள் சந்தேகம் கொள்ள தேவை இல்லை . தாங்கள் சொன்னது போல் அவர் மனித குலத்தவர் தான் " என்றான்.


அவனின் பேச்சில் அதிர்ந்தாலும் ஏற்கனவே தான் இதை எதிர்பார்த்திருந்ததால் நொடியில் தன்னை சமாளித்து கொண்டவர்,


" ஏன் மகனே ? உனக்கு மனிதர்களின் மேல் இத்தனை சிநேகம்? இந்த சிநேகம் இப்பொழுது அல்ல உனது சிறுவயது முதலே உன்னிடம் உள்ளது என்பதும் , அதற்க்கு காரணம் உன்னை ஓர் முறை ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஒரு சிறுமி என்றும் நான் அறிவேன் மகனே! "


" ஆனால் என் கேள்வி எல்லாம் அன்று ஒருநாள் மட்டுமே நீ மனிதர்களை கண்டாய் , பிறகு எவ்வாறு அவர்கள் மேல் உனக்கு இத்தனை சிநேகம் .அதன் காரணமாய் நேற்று நீ செய்த செயலின் தவறு நீ அறிவாய் தானே ?? ,


பல வருடங்கள் முன் இச்சாதாரிகளால் சிலபல காரணங்களால் பௌர்ணமி பூஜையில் தொடர்ந்து கலந்துகொள்ளா முடியாமல்போக, அவர்களில் அதிக நாகங்கள் தண்டனை பெறுவது தொடர்ந்தது .அதன் காரணமாய் நம்மவர்கள் ஈசனிடம் முறையிட்டு தவம் புரிய,அவரிடம் பெற்ற அருளினால் மூன்று முறை மட்டும் பூஜையை தவிர்க்க அனுமதிக்கப்பட்டது.


தொடர்ந்து நான்காம் முறை நம்மில் எவர் பௌர்ணமி பூஜையில் பரம்பொருளிடம் தங்களை சமர்பிக்க முடியாமல் போகிறதோ அவர் அந்நாளில் எவ்வுருவில் இருக்கிறாரோ அதே உருவில் , சக்திகள் அற்று தொடர்ந்து முப்பது நாட்கள் இருக்க வேண்டும் என்பது நம்மவர்களுக்கான விதி. இதை ஈசனே எண்ணினாலும் மாற்றமுடியாது . தற்பொழுது உனது இரண்டாம் முறை முடிந்துவிட்டது இன்னும் ஒரே ஒரு முறை மட்டுமே உள்ளது . உன்னைப்பற்றி நான் அறிவேன் அதுவே என் கலக்கத்தின் காரணம் மகனே! "


-என்று நீளமாய் தங்கள் குலத்தின் விதியை அக்குலத்தின் நாகராணியாகவும் ,அதை மீறினால் மகனின் நிலை என்னாகுமோ என ஒரு தாயாகவும் தன் பயத்தை விளக்கினார் .


அவர் சொல்லியது அனைத்தையும் சிரத்தையுடன் கேட்டவன் அவரின் இருகைகளையும் தன் கைகளுக்குள் வைத்து, "அம்மா! உங்களுக்கு நினைவிருக்கிறதா ... அது ...எனது சிறுவயதில் என்னை காப்பாற்றிய அச்சிறுமியை தங்களுக்கு நினைவிருக்கிறதா " என முகம் பூரிக்க கேட்டவனின் கண்கள் சில நினைவுகளில் கலங்க தொடங்கியது.


மகனின் சந்தோஷக் குரலில் தன் கவலை மறந்தவர் , " ஆம் மகனே ! அதை நான் எவ்வாறு மறப்பேன் ?? நீ எங்களுக்கு கிடைத்த வரம் ஆவாய் , நானும் உன் தந்தையும் பலநாட்களாய் கடும் விரதங்கள் இருந்து ஈசனை மகிழ்வித்ததின் பலனாய் எங்களுக்கு அவர் அருளிய வரமடா நீ . பிறக்கும்பொழுதே நாகராஜாவிற்கான சக்திகளுடன் பிறந்த உனக்கு அன்று நேர இருந்த ஆபத்தை நினைத்தால் இன்றும் ஓர்நொடி என் மனம் தன் துடிப்பை நிறுத்திவிடுகிறது " என்றவரின் கைகளின் நடுக்கத்தை தன் கைகளிள் மூலம் அறிந்து மெதுவாய் வருடினான் சந்திராதித்யன் .


--------------------------------------------------------------------------------


￰சின்னம்பாளையம்:


"என்னடி அதிசயமா வண்டில வரும் போது முழிச்சிட்டு வர ? எப்பவும் ஏறுன பத்து நிமிஷத்துல தூங்க ஆரம்பிச்சிடுவியே! அதும் அந்த ஒரே காரணத்துக்காக தான பின்னாடி நான் மட்டும் தான் உட்காருவனு அடம்பிடிச்சி இடத்த பிடிக்கிற "- என முன்புறம் அமர்ந்தவாறு நக்கலாய் கேட்ட மித்ரனின் தலையில் சற்று எக்கிக் கொட்டினாள் யஷி.


"ஏன்டா என்கிட்ட அடிவாங்கலனா உனக்கு தூக்கம் வராதா ? வான்டெட் ஆ வந்து சிக்குற " என்ற யஷி அவனின் அடக்கிய சிரிப்பில் மீண்டுமாய் அவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.


காலையில் அவளை அவன் அழைத்த விதத்தில் கனவில் வந்தவன் நினைவில் வந்து தொலைக்க அது வெறும் கனவு என விட முடியாமல் ஏதோ ஒன்று அவளை தடுமாற வைத்தது .


ஏனோ முதலில் அக்கனவு அவளை பயம்கொள்ள செய்திருந்தாலும் , அதை நினைக்க நினைக்க அவளின் மனம் அதை ரசிக்கவே தொடங்க தன் மனம் செல்லும் பாதையில் யஷி பயந்திருந்தாள்.


தன்னை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவளிடம் மித்ரன்,
"நாம் நமது நிகழ்ச்சிக்கான முதல் அடியாய் ஓர் இடம் செல்ல போகிறோம். நீ ஏற்கனவே தயாராய் தானே இருக்குற, வா போகலாம் . போகும் வழியில் சாப்டுக்கலாம் " என்று அழைத்த பொழுது எப்பொழுதும் போல் பின்புறம் ஏறியவள் தன் சிந்தனையிலே உளவியபடி இருந்ததில் இன்று உறங்கவில்லை .அதற்கானதே மேற்கூறிய மித்ரனின் நக்கல் .


அவள் கொட்டியதில், "ஏய்ய்ய் ....பாப்பா ! வலிக்குதுடி " என தன் தலையை அழுத்தி தேய்த்தவாரே திரும்பிய மித்ரன் , அங்கு யஷி மீண்டுமாய் யோசனைக்கு செல்வதை கண்டு ,


"இவ ஏன் இப்போ இருக்குற கொஞ்ச மூளையை தேவை இல்லாமல் கசக்குறா ? இவ யோசிச்சாலே அது ஆபத்தா தான முடியும் " என அவனின் மனதில் அபாய சங்கடித்தது .


அவளின் யோசனையை கலைக்க தன்னிடமிருந்த ஐ-பேடை எடுத்தவன் அவளை அழைத்து சில படங்களை காட்டினான் .


அதை கண்ட யஷி தன் யோசனை கலைந்து , " வாவ் ! இந்த வீடுலாம் செம்மையா இருக்குடா...ஒவ்வொரு வீடும் எவ்வளவு பெருசா அழகா இருக்கு . ஆனா டேய் ! ஏதோ ஒண்ணு இடிக்கல?" என்று யோசித்தவளின் கண்கள் அப்படங்களை ஆராய்வதை சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.


யஷி, "ஆங்.. கண்டுபிடிச்சிட்டேன்டா ...நான் கண்டுபிடிச்சிட்டேன்" என போட்டோ பார்க்கும் ஆர்வத்தில் சற்று முன் வந்திருந்தவள் தன் அருகிலிருந்த அவனின் தோளில் பலமாய் தட்டினாள்.


"ஆத்தாடி! ஆஆ" என தன் தோளை தேய்த்து விட்டுக்கொண்ட மித்ரன் ,


"ஏண்டி பாப்பா! உனக்கு என்னைய அடிக்காம எதையுமே சொல்ல தெரியாதா " என்று அவள் அடித்ததில் வலித்தது போல் பொய்யாய் முகத்தை பாவமாக்கி கேட்க,


"ஹாஹா! இதுலாம் நமக்குள்ள புதுசா என்னடா ?? " என கேட்டு மீண்டுமாய் அவனின் தோளில் குத்தி , அவன் முன் செய்தது போலவே நக்கலாய் ,


"அரசியல்ல இதெல்லாம் சகஜ......மப்பா " என்று இழுத்து கண்சிமிட்டியவள் அவனின் முறைப்பில் இம்முறை சிரித்துகொண்டே எக்கி அவனின் தோளில் கைபோட்டாள்.


இப்பொழுது அவளை கண்ட அவனுக்குமே சிரிப்புவர அடுத்து அங்கு இருவரின் இணைந்த சிரிப்பே அக்காரினுள் ஒலித்தது .


அவர்கள் இருவரும் பேசிகொண்டே வந்தாலும் இருவரின் கண்களுமே அடிக்கடி வெளியே பார்த்துக்கொண்டு வர , அதில் சிறிது நேரத்திலே ஓர் சந்தேகம் இருவரின் மனதிலுமே தோன்றியது.


"மித்ரா"


"பாப்பா"


-இருவரும் ஒரே நேரத்தில் மற்றவரை அழைக்க , யஷி-யிடம் நீயே முதலில் சொல் என்பதுபோல் பார்த்தான் மித்ரன்.


அதை புரிந்துகொண்ட யஷி , " மித்ரா! நீ கவனிச்சியா அத ? இங்க நிறைய வாகனத்துல ஒரே மாதிரி பெயர் எழுதிற்காங்கடா . இது ஏதோ வித்தியாசமா இல்லை ?" என சந்தேகமாய் கேட்டாள்.


" ஆமாடி ! இது ஏதோ கோட் வர்ட் மாதிரி தான் இருக்கு .... சரி விடு முதல்ல நம்ப வந்த வேலையை நான் பார்ப்போம் " என அத்தோடு அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் மித்ரன்.


அவன் சொல்லிய அடுத்த நொடி அவர்களின் கார் பெரும் சத்தத்துடன் நின்றுவிட்டது .


கார் ஏன் நின்றது என்ற குழப்பத்துடன் கதிரேசன் இறங்கி சென்றிருக்க அவரை தொடர்ந்து மித்ரனும் இறங்கினான்.


இறங்கி முன்னாள் வந்து நின்றவனுக்கோ தன் அருகில் எவரோ நின்றிருப்பதுபோல் தோன்ற , சுற்றும் முற்றும் பார்த்தவன் எவரும் இல்லாததில் தோள்களை குலுக்கிக் கொண்டான்.


அப்பொழுது ஓர் ஒருசக்கர வாகனம் அவனை கடந்து செல்ல அதிலும் அவர்கள் மற்ற வண்டிகளில் கண்டது போல் அதே பெயர் இருந்தது.


அந்த வண்டி கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்த மித்ரனின் காதில் , " தேடிச் செல் மித்ரா ! உனது உயிரானவளுக்கான ஆபத்தை தேடிச்செல் ! அதிலிருந்து அவளை காக்க உன்னால் முடியும் " என அழுத்தமாய் உரைத்து விட்டு நொடியில் மறைந்திருந்தது .


அதில் ஒருநிமிடம் திகைத்து நின்றுவிட்ட மித்ரன் , " தான் கேட்டது என்ன? யார் இப்பொழுது பேசியது ? அது...அது என்ன சொல்லியது உயிரானவளுக்கு ஆபத்தா எனது உயிர் என்றால் யஷி.....யஷியின் உயிருக்கு ஆபத்தா ???"" என குழம்பியவனின் மனம் யஷிக்கு ஆபத்து என்றதில் ஓர் நிமிடம் தடுமாறி வேகமாய் துடிக்கஆரம்பித்தது .


அவன் முற்றுப்புள்ளி வைத்து கடந்துவிடலாம் என நினைத்த ஓர் விஷயத்துக்கு , கமா போட்டு தொடர செய்துவிட்டு மறைந்திருந்தது அம்மாயக் குரல் .




-காதலாகும்...
 

Thoshi

You are more powerful than you know😊❤
நிஜமதில் இணையமுடியாமால் போகுமோ என்னும் பயத்தினில்..
தன் பிரியத்தை நினைவில் கொண்டு கானல்நீராய் சுகம் காணும் மனங்கள் இவ்வுலகில் பலகோடி....!!!



அத்தியாயம் 6:



சின்னம்பாளையம்:


சூரியனின் கதிர்கள் பூமியழகியிடம் விடைபெற்று மேற்கில் மறையத் தொடங்க, தனது தடை கலைந்ததில் பூமி அவளைக் கண்டுக்களிக்க ஓடோடி வந்தான் சந்திரன்.


நேரம் இரவு ஏழை கடந்திருக்க இன்னும் முழுதாய் தன் கிராம ஆடையை கலையாத அவ்வூர்மக்கள் அனைவரும் இந்நேரத்திற்கே வீட்டின் கதவை அடைத்திருந்தனர்.


அவ்வூர் முழுக்க தொலைக்காட்சியின் சத்தமும் , அவ்வப்பொழுது நாய்களின் குறைப்பு ஒலியுமே கேட்டுக்கொண்டிருந்தது .


அனைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருக்க அத்தெருவின் முடிவில் ஒரு வீட்டினில் மட்டும் இன்னும் விளக்கு எரிந்தது மட்டுமில்லாமல் , பேச்சுக் குரலும் கேட்டது .


"டேய் மித்ராராரா ! " என மித்ரனை அழைத்த யஷியின் குரல் அவ்வூரின் அமைதியை கிழித்துக்கொண்டு பலமாய் கேட்டது.


" ஷ்ஷ்ஷ்....! ஏண்டி உன் கீச்சு குரல வச்சிக்கிட்டு கத்தி தொலைக்குற, பாரு நாய்லாம் பயந்து குறைக்குது . நான் இங்க தான இருக்கேன் ...கொஞ்சம் மெதுவா பேசு" என்றவனின் பேச்சின் முதல் பாதியில் குறுக்கிட்ட யஷி ,


"யாருக்குடா கீச்சு குரல் உனக்கு தான்டா காண்டாமிருகம் குரல்" என்றவள் அவனின் இரண்டாம் பாதியில் ," என்ன...என்னசொன்ன ???? ..யூ ...யூ....இடியட் ...உன்ன...." என்றவாரே
கையிலிருந்த கைபேசியை அவனை குறிபார்த்து எறிந்ததில் அது சரியாய் அவனின் தலையை தாக்கியது .


"ஆஆ....ராட்சசி என் மண்டையவா உடைக்குற . நில்லுடி! உன்னைய இந்த ப்ராஜெக்ட் முடிறதுக்குள்ள இச்சாதாரிக்கு இரை ஆக்கல என் பெயர் மித்ரன் இல்ல டி " என்றவனின் வாய் வீராவேசமாக பேசினாலும் , கை வலித்த இடத்தை தடவியது .


" ஒன்னும் பிரச்சனை இல்லடா , சோணமுத்தான்னு வேணும்னா வச்சிக்கோடா உனக்கு நல்லா பொருத்தமா இருக்கும் " என அப்பெயரை சொல்லி அவனை அழைப்பதாய் எண்ணிப்பார்த்தவளிற்கு சிரிப்பு வந்துவிட , வாய்விட்டு சிரித்தாள்.


"அடிங்.....!" என தன் முன் வாயாடி கொண்டிருந்தவளின் பின்னலை பிடித்து தன் பக்கம் இழுத்தவன், " இங்க நாகங்களோட இருப்பிடம் எங்க இருக்குனு கண்டுபிடிக்க சொன்னா.. மைக்க எடுத்துட்டு போய் மக்கள்கிட்ட வெறும் பேட்டியை மட்டும் எடுத்துட்டு வந்துட்டு பேச்சை பாரு " என இப்பொழுது அவன் அவளின் தலையில் கொட்டினான் .


அதில் அவள் முகத்தை சுருக்க, " அடியே பாப்பா ..! உடனே உர்ராங்கோட்டன் மாதிரி மூஞ்ச வைக்காத, இங்க பாரு" , என்று அங்கிருந்த யஷியின் லேப்டாப்பை எடுத்து திறக்க அது கடவுச்சொல் கேட்டதில், அதை வாங்கிய யஷி கடவுச்சொல்லை போட்டவள்அவனிடம் திறந்து கொடுத்தாள்.


அதில் தனது "பென்ட்ரைவை" இணைத்து தான் சேகரித்துவைத்த செய்திகளை அவளிடம் காண்பித்தான் .


அவற்றை பார்த்த யஷிக்கு யாரோ ஒருவரின் மூச்சுக்காற்று அருகில் தன் மேல் படுவது போல் தோன்ற தங்களை சுற்றி பார்த்தாள்.


அவளின் கவனம் தான் காமிப்பதில் இல்லாததை உணர்ந்த மித்ரன் அவளின் கையில் தட்டி ," யஷிமா..! நல்லா பாரு இந்த இடத்துல தான் இச்சாதாரிகள் வசிப்பதா நம்ப மக்களால் நம்பப்படுது . அதுமட்டுமில்லாம இந்த காட்டுல ஒரு சிவன் கோவில் இருக்குறதாகவும், அங்க ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இச்சாதாரிகள் வருவதாவும் சொல்லப்படுது . நம்ப ப்ராஜெக்ட் -டோட கடைசி பகுதி இங்க தான் , நம்ப எப்படியாவது இந்த காட்டுக்குள்ள போய்டணும்.நான் அதுக்கு சில திட்டங்கள் வச்சிருக்கேன் . அதில ஒன்னு இங்க இருக்க மக்களோட இச்சாதாரிகள் பற்றின பார்வை என்னனு தெரிஞ்சிக்கிறது சோ நீ இந்த மைக்க வச்சிக்கிட்டு மக்கள்கிட்ட தாராளமா சீன போடு" என்று தங்களின் ப்ராஜெக்ட் பத்தி பொறுப்புடன் பேசிக்கொண்டிருந்தவன் இறுதியில் கிண்டலில் நிறுத்தினான் .

இதற்க்கு யஷியிடம் இருந்து பலமான அடியை எதிர்பார்த்திருந்தவன் அவளின் அமைதியில் திரும்பி அவளை பார்க்க , அவளோ வேறோரு யோசனையில் அமர்ந்திருந்தாள் .


மித்ரன் காட்டிய புகைப்படங்களை கண்ட யஷிக்கு ஏதேதோ நியாபகங்கள் . ஏதோ ஓர் சுழலுக்குள் சிக்குவது போல் தோன்றி மூச்சு விட திணற ஓர் கரம் அவளை பிடித்து உலுக்கியது .


"ஏய் ...! என்னடி ஆச்சு?" என அவளின் அமைதியில் மித்ரன் அவளைபோட்டு உலுக்க அதில் அதிர்ந்து விழித்தவள் சட்டென்று தனக்கு தோன்றிய பிரம்மையிலிருந்து வெளிவரமுடியாமல் திணறினாள் .


என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறியவள் அவனிடம் அப்புகைப்படத்தை காட்டி , "அது ....இந்த காடு எங்க இருக்கும்னு யோசிச்சிட்டிருந்தேன் " என சமாளித்தாள் .


"ம்ம்ம்....கிட்டதட்ட கண்டுபிடிச்சிட்டேன் டி , இங்க பாரு என அதில் ஒரு வரைபடத்தை காட்டியவன் , இதோ இது தான் வடகாலத்தூர்... இந்த ஊர்ல இருந்து தான் கொஞ்ச தூரத்துல அந்த காடு இருக்கறதா சொல்லுறாங்க .அதாவது இங்க இருந்து சரியா ஆறு மணி நேரம் டிராவல் பண்ணா அந்த இடம் வந்துரும் . நம்ப மட்டும் இந்த இடத்தை கண்டுபிடிச்சிடோம்னா அது தான் நம்ப ப்ரொஜெக்-டோட வெற்றி " என சொல்லிகொண்டே வந்தவன் , யஷியின் கேள்வி பாவனையில் தன் பேச்சை நிறுத்தி என்ன ?? என்பதை போல் பார்த்தான்.


" இல்லடா இவ்ளோ தெளிவா சொல்ற இச்சாதாரிகள் இங்க தான் இருந்தாங்கனு .அப்புறம் எதுக்கு நம்ப இங்க நேரத்த வீணடிக்கணும் ?? "


"அடியே லூசு பாப்பா...! மேச் பாக்குறதுக்கு முன்னாடியே ரிசல்ட் என்னனு தெரிஞ்சுடிச்சுனா அந்த மேட்ச் ஆஹ் நம்ப அதே இன்ட்ரெஸ்டோட பார்ப்போமா ???அதே தான் டி . எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்து என்னன்னு ஒரு த்ரில் இருந்தா தான் நல்லா இருக்கும் . அடுத்து என்னனு ஆர்வத்தை தூண்டனும் அப்போ தான் மக்கள் நம்மளோட இந்த நிகழ்ச்சியை பார்ப்பாங்க . அண்ட் இந்த ஊருக்கு ஏன் வந்தோம்னு கேட்டல ? , இங்க பாரு என்று இன்னொரு செய்தியை காட்டியவன் ,


"இந்த ஊர்ல சில வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு திடிர்னு பாம்பா மாறுனத பார்த்ததாகவும் , அது இச்சாதாரி நாகம் தான்னும் மக்கள் இந்த செய்தில சொல்லி இருக்காங்க " என யஷிக்கு பொறுமையாய் விளக்கிக்கொண்டிருந்தவனை அவனின் கைப்பேசி அழைத்தது.


அழைப்பை ஏற்றவனுக்கு அப்பக்கம் பேசுவது தெளிவாக கேட்காமல் போக, வெளிவந்து வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.


அவன் பேசி முடிக்கும் தருவாயில் ஒரு நான்கு சக்கர வாகனம் அவனை கடக்க இயல்பாய் கண்டவனுக்கு , அதில் மதியம் மற்ற வாகனங்களில் இருந்த அதே வார்த்தை இருப்பதை பார்த்து மதியம் நடந்த அனைத்தும் ஞாபகம் வந்தது . அதனுடன் சேர்ந்து அக்குரலின் வார்த்தைகளை அவனின் மூளை மீண்டும் ஓர்முறை நினைவுபடுத்த சட்டென்று திரும்பி யஷியை பார்த்தான்.


மதியம் தொடர்ந்து பல வேலைகள் அவனை தன்னுள் மூழ்கடித்ததில், அவன் மதியம் நடந்த அனைத்தையும் மறந்தேவிட்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும் .இப்பொழுது அக்குரலை பற்றி யோசித்தவனுக்கு அவ்வார்த்தைகளின் அர்த்தம் யஷிக்கு இதில் ஏதும் ஆபத்து நேரிடுமோ என்பதா? அதை தான் அக்குரலில் என்னிடம் சொல்லியதா ? என யோசித்தவனின் கைகள் தானாய் வாகனங்களில் கண்ட வார்த்தையை தனது கைப்பேசியில் அழுத்தியது.


வீட்டின் உள்ளே மித்ரன் காட்டிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள் யஷி. அதை படிக்க படிக்க மீண்டுமாய் ஏதோ ஒரு மாய உலகத்திற்குள் நுழைந்தது போலவே இருந்தது .


இச்சாதாரிகள் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல் அதில் இச்சாதாரி நாகினிகள் என குறிப்பிட்டு ஒரு படமும் வரையப்பட்டிருந்தது.


அதை பார்த்தவள் காலை கனவில் வந்த நாகத்தின் நினைவில் அப்படத்தையே உற்றுப் பார்த்தாள்.


கனவின் தாக்கமோ என்னவோ அப்பக்கத்தில் இருந்த நாகத்தின் உருவம் சட்டென்று கனவில் வந்தவனின் உருவமாய் தோன்றியது .


அதை கண்டவளுக்கு, அதிர்ச்சியில் வாய் பிளக்க தன் வலக்கரத்தை வாயில் வைத்தவளின் கண்கள் இரண்டும் விரிந்தது . அவளின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அப்புகைப்படத்தில் இருந்தவன் தன் கன்னக்குழி சிரிப்புடன், அவளை கண்டு கண் சிமிட்டினான்.


அவ்வேளையில் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்ற அப்படத்தை பார்த்தவாறே " இந்த சீரியல்லலாம் பொண்ணுங்க தான இச்சாதாரியா காட்டுவாங்க , பையன் இச்சாதாரிலாம் இருக்கா என்ன ?? "என மிக தீவிரமாய் யோசிக்க ,


"ஏன் நீ நாகினி பார்ட் டூ பாக்கல ? அதுல பையன் இச்சாதாரியா வரலையா ?? அதும் அவன் முதல்ல வில்லனுகூட கண்டுக்காம நீ ஜொள்ளுவிட்டுக்கிட்டேபார்க்கல " என அவளின் மனசாட்சி காறித்துப்பியது .


அதில் அசடுவழிய அதை மறைப்பதற்காய் மித்ரனை அழைக்க , அவளின் முகத்தை கண்ட புகைப்படத்தில் இருந்த உருவம் தற்பொழுது வாய்விட்டு சிரித்தது .


அவனின் அச்சிரிப்பு அவளை பயம்கொள்ள வைப்பதிற்கு பதிலாக ஆணின் கம்பீரம் கலந்த வசீகர சிரிப்பாய் இருக்க அதை அதிர்வுடன் உள்வாங்கியவள் சட்டென்று அதை மூடிவிட்டு இன்னும் உள்வராத மித்ரனிடம் விரைந்தாள் .


இவள் அருகில் வந்ததை கூட உணராமல் அவன் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க, எதிரில் இருந்தவளுக்கு அவனின் அந்த தீவிர முகபாவனை ஆச்சரியம் அளிக்க , " அப்படி என்னத்த பார்க்கிறான்" என யோசித்தபடி அவனின் கையில் இருந்த கைப்பேசியை சற்று எக்கி பார்த்தாள்.


"PAID"
-என்ற ஆங்கில வார்த்தையின் பொருட்கள் மற்றும் அதன் விரிவாக்கம் என அப்பக்கம் முழுவதும் விரவிக் கிடக்க, யோசனையுடன் ,


"paid" என முனகியவள் ,"இது இந்த ஊர்ல நம்ப பார்த்த நிறைய வண்டியில இருந்த வார்த்தை தான ?" என சந்தேகத்துடன் கேட்டவள் அவனின் தோள் தொட்டாள்.


அதில் கலைந்த மித்ரன் அவள் வந்ததை உணர்ந்து ,"நான் இன்னும் வரலைன்னு வந்தியாடி ...அதுவந்து எனக்கு இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தமா இருக்கும்னு தெரிஞ்சிக்கணும்டி . நானும் எதுஎதிலயோ தேடிட்டேன் , சந்தேகப்படற மாதிரியோ இல்ல இது கோட் - ன்ற மாதிரியோ எந்த கிளுவும் கிடைக்கல " என்றவனின் பேச்சு அவளிடத்தில் இருந்தாலும் கண்கள் கைபேசியில் இருந்தது.


"ம்ப்ச்....ஒன்னும் புரியலடி " என பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே அவனின் கைபேசி அணைந்துவிட "ஷிட் " என அருகில் இருந்த சுவற்றில் கைகளை குத்தினான்.
.


"மித்ரா " என பதறி அவளின் கைகளை பிடித்து தடுத்த யஷி ,"என்னடா ஆச்சு உனக்கு ? முதல்ல உள்ள வா நீ " என அவன் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றவள் அவனை சோபாவில் அமரவைத்துவிட்டு அவனின் கை காயத்திற்கு மருந்தெடுக்க சென்றாள் .


மித்ரனுக்கு அவ்வார்த்தையில் தான் தெரிந்துகொள்ள வேண்டிய மிகப்பெரிய ஆபத்து இருப்பதாய் மனம் சொல்ல அதை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என நினைத்தவன் , கைப்பேசியை மின்சார இணைப்பில் பொருத்தியபடியே , அச்சொல்லின் ஒவ்வொரு பொருளையும் மீண்டும் மீண்டும் மனதுக்குள் கொண்டு வந்து பார்க்க அதில் ஏதும் தவறாக இருப்பதாக அவன் மனதிற்கு தெரியவில்லை.


இவனின் குழப்ப முகத்தை கண்ட காற்றுடன் கலந்திருந்த அவ்வுருவம் அவனுக்கு உதவ எண்ணி மிகவும் வேகமாக வீசியது.


அதில் இவன் கண்களில் ஏதோ எரிச்சல் தோன்ற சட்டென்று கைகள் கொண்டு கண்ணை கசக்கியவனின் கையில் இன்னும் சரியாய் பொறுத்தப்படாமல் பிடித்துக்கொண்டிருந்த கைப்பேசி , கீழே விழுந்தது .


காற்றின் வேகம் இன்னும் குறையாமல் இருக்க கைபேசியை எடுப்பதற்க்காக குனித்தவனுக்கு கை எட்டாமல் போக , எழுந்தவனின் கால் முன்னிருந்த மோடாவில் இடித்ததில் தடுமாறி முன் யஷி அமர்ந்திருந்த சோபாவில் விழ, அவள் மூடி வைத்து விட்டு வந்த லேப்டாப் இவன் விழுந்த அதிர்வில் கீழே விழுந்து திறந்தது .


இதற்காகவே நான் வந்தேன் என்பது போல அத்தனை நேரமாய் வேகமாய் வீசிய காற்று மீண்டும் தென்றலாய் மாறி மெதுவாக தன் வேலையை பார்த்தது.


கீழே விழுந்த லேப்டாப்பினை கண்டவன் காற்றின் வீச்சும் சட்டென்று மாறியதை உணர்ந்தான்..


அவர்கள் இவ்வூருக்கு வருவதாய் முடிவாகிய தினத்திலிருந்தே காற்று தனது ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் ஒரு விஷயத்தை தனக்கு தெரிவிப்பதை உணர்ந்திருந்தவன், தற்பொழுதும் இதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்ற சந்தேகத்துடன் அந்த லேப்டாப்பினையே பார்த்தான் .


லேப்டாப்பினை எடுத்தவன் அதை உயிர்ப்பிக்க , அதுவோ கடவுச்சொல் கேட்டது . சற்றுமுன் யஷி அழுத்தியதை பார்த்திருந்தவன் அதை அழுத்தி விட்டு காத்திருந்தான் .


ஆனால் கடவுச்சொல் தவறு என்று காட்டப்பட சற்று குழம்பியவன் ,"யஷி இதுதான போட்டா " என சந்தேகமாய் யஷியை அழைத்தான் .


மருந்தெடுத்துக்கொண்டு வந்தவளை கண்டவன் , " பாப்பா...! நீ கொஞ்ச நேரம் முன்ன போட்ட பாஸ்வேர்ட் இப்போ போட்டா தப்புனு வருதுடி" .


அவனின் அருகில் வந்தவள் ," டேய் அது எப்படி கொஞ்ச நேரத்துல தப்புனு வரும் ? நீ என்னனு போட்டடா?" எனக் கேட்டுக்கொண்டே மருந்தை தடவ துவங்கினாள்.


அவளிடம் வலது கையை கொடுத்தவன் , தான் சொல்வதை நிரூபிக்க முயலும் சிறுவனாய் , " நீயே பாரு" என்றபடி ஒவ்வொரு எழுத்தாய் சொல்லியாவாரே இடதுகையில் அழுத்தத் தொடங்கினான்.


"Y"..." A"..."S"..."H".."I"..."I". உன் பெயரை தான இழுத்து போட்டுருக்க, சரியா ? "என்றான்.


"டேய் லூசு கடைசி எழுத்து 'ஐ' இல்லடா 'சின்ன எல்' போடு ...நீதான சொல்லுவ நம்ப பீல்ட்ல (field) ஆபத்து ஜாஸ்த்தி , பாஸ்ஒர்ட லாம் ஒழுங்கா இருக்கணும்னு அதுக்காக நானே யோசிச்ச சின்ன ட்ரிக்! உன் முன்னாடி தான் அத போட்டேன் ஆனா நீ யே ஏமாந்துட்டியே , ஹாஹா எப்படி என் மூளை " என தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் .


அவள் பேசியதை முழுதாய் காதில் வாங்கிக்கொள்ளாத மித்ரனுக்கு அவள் சொல்லிய " 'ஐ' க்கு பதில் 'எல்' " என்ற வார்த்தையே மீண்டும் மீண்டும் தோன்ற ,


தானாய் அவனின் வாய், "ஆமாம் . ஏன் அப்படி இருக்க கூடாது ?? தூரத்துல இருந்து பாக்குறப்போ 'ஐ' யும் சின்ன 'எல்'-யும் ஒரே மாதிரி தானே இருக்கும் என்றவன் ,


அந்த லேப்டாபினிலே இணைய தொடர்பேற்படுத்தி , முன் முயற்சித்த " PAID" என்னும் வார்த்தையில் ஐ என்ற எழுத்திற்கு பதில் எல் (l) என்று மாற்றி அதற்குண்டான விரிவாக்கத்திற்கு காத்திருந்தான் .


இவன் இங்கு அவ்வார்த்தையின் ஆராய்ச்சியில் இறங்கி கொண்டிருந்த அதே நேரத்தில் அவ்வூரின் மற்றொரு வீட்டினில் ஒருவன் இதே வார்த்தை தாங்கிய அட்டையை தன் முன் அமர்ந்திருந்தவனிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.


வேண்டுமென்றே இருட்டில் அமர்ந்திருந்தவன் , தன்முன் நீட்டப்பட்ட அட்டையை பார்த்தவுடன் கண்கள் பளிச்சிட திரும்பி, தன் பின் நின்ருந்தவனை தலையசைத்து அருகில் அழைத்தான்.


"ஏ ஜான்.....! இத பார்த்தியா இந்த வார்த்தையை பார்த்தியா ? இதுதான்...இதுதான் இந்த ஊர்ல நமக்கான அடையாளம்" என்றவன் , ஜானின் அமைதியான முகத்தை பார்த்து ,


"ஜான் ! இதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியும்தானே "என்று விளையாட்டு சிரிப்புடன் கேட்டான்.


அவன் பதில் சொல்வதற்கு முன்பே, அவ்வட்டையை அவர்கள் முன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் அப்பாவியாய், " சார் நான் டவுன்ல காலேஜ்-லாம் முடிச்சிருக்கேன். நான் இதுக்கு பதில் சொல்லட்டுமா?" என கேட்டான் .


அவனின் கேள்வியில் ஜான் திரும்பி தன்னால் "பாஸ்" என்றழைக்கப்பட்டவனை பார்க்க அவன் சரி என்பதுபோல் தலையசைத்ததில் , அவ்விளைஞனிடம் "சரி ..! சொல்.." என்றான்.


அவனின் அனுமதியில் , தான் சரியான பதில் சொல்லி இவர்களிடம் இன்னும் பெரிய வேலையில் சேர வேண்டுமென்ற எண்ணத்தில் , நீதிபதியின் முன் வாதாடும் வக்கீலை போல நிமிர்ந்து நின்றவன்,


அதிலிருந்ததை ஒவ்வொரு எழுத்தாய், " 'பி' 'ஏ' 'ஐ' 'டி' என படித்தவன் , இதன் விரிவாக்கம் 'People Against Illegitimate Debt '
அதாவது 'நாங்கள் முறைக்கேடானவர்களுக்கு எதிரானவர்கள்' என்று அர்த்தம் "


-என தன் ஒல்லியான தேகத்தை விறைப்பாய் வைத்து சொன்னவன், தான் சொன்னது சரிதானா என்பதுபோல் எதிரில் இருந்த இருவரையும் பார்த்தான் .


"பாஸ்" என்று அழைக்கப்பட்டவன் சத்தமாய் தன் கைகளைத் தட்டியபடி "குட் ...வெரி குட்" என சொல்லியவாறு இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டான் .


இத்தனை நேரம் சற்று தள்ளி இருட்டில் அமர்ந்திருந்தவனின் முகம் இப்பொழுது வெளிச்சத்தில் தெரிய, அவனின் அழகிய ,கல்லூரி மாணவன் போன்ற தோற்றத்தில் எதிரில் இருந்தவன் மலைத்துப் பார்த்தான்.


சிரித்துக்கொண்டே அவனின் முதுகில் தட்டி சென்று வா என்பது போல பார்த்தவன் , அவன் அதே மலைப்புடனே சென்று மறைவதை பார்த்தபடி நின்றிருந்தான் .


அவன் கண்ணில் இருந்து மறைந்த அடுத்த நொடி , "ஹா ஹா ஹா" என பலமாய் சிரித்துக்கொண்டே திரும்பிய 'பாஸ்' , "எப்படி எப்படி ...??? நாங்கள் முறைகேடானவர்களுக்கு எதிரானவர்கள் "என்று அவனைப் போலவே விறைப்பாய் சொல்லி சிரித்தான்.


அவனின் சிரிப்பை கண்ட ஜானும் , சிரித்துக்கொண்டே அவ்வட்டையை எடுத்து தங்கள் முன் இருந்த சுவரின் தடுப்பில் சாய்த்துவைத்தவன் ,


அந்த " பேய்ட்" என்ற வார்த்தையில் ஒரு எழுத்தை மற்றும் மாற்றி காட்டினான் .


அதாவது அவ்வார்த்தையை , 'பி' 'ஏ' 'எல்' 'டி' என உச்சரித்தவன் இதன் அர்த்தம் என்று இழுக்க ,


அவனுடன், 'பாஸ்' எனப்பட்டவனும் இணைந்துக்கொள்ள இருவரின் குரலும் இணைந்து,


" People Against Legitimate debt" (நாங்கள் முறையானவர்களுக்கு எதிரானவர்கள் ")என சிரிப்புடன் அவ்வீடு முழுவதும் ஒலித்தது .


அவர்களின் சிரிப்பில் கோபம் கொண்ட காற்று தனது கோபத்தை சூறாவளியாய் தன்னை சுழன்றடித்து காட்ட, அவர்கள் முன் இருந்த அவ்வட்டை பறந்து அவர்களின் முகத்திற்கு நேராய் தூக்கி வீசப்பட்டதில் ....அதன் முனை இருவரின் முகத்திலும் பட்டு சதையை கிழித்தது .


-காதலாகும்......
 

Thoshi

You are more powerful than you know😊❤
வாய்மொழியாய் சொல்லித்தான் அறிய வேண்டுமென்றில்லை
காதலதை ...!!!
உரிமையாய் காதலுடன் தன்னை தழுவும் கண்களுக்கு முறைப்பை அல்லாமல் நாணமாய் தன் காதலை பரிசளித்தாள் கன்னிகை ...!
வாய்மொழியாய் சொல்லித்தான் அறிய
வேண்டுமென்றில்லை காதலதை ...!!



அத்தியாயம் 7:

சின்னம்பாளையம்
:

"முறையானவர்களுக்கு எதிரானவர்கள்"- ஆ ?? இது எப்படி சாத்தியம்?? அதுவும் நாம் பார்த்த நான்கில் இரண்டு வாகனத்தில் இவ்வார்த்தையை பார்த்தோமே... அப்படி என்றால் இத்தனை பேர் எப்படி ? முதலில் நான் கண்டுபிடித்த இந்த வார்த்தையின் அர்த்தம் சரிதானா ? சரிதான் என்றால் அதை எப்படி தெரிஞ்சுகிறது ?? "

-என பல கேள்விகள்அடுத்தடுத்து மனதில் தோன்ற என்ன செய்வதென அறியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்த மித்ரனின் கை காயத்தில் யஷி மருந்திட்டதில் ஏற்பட்ட எரிச்சலில் "ஆ ஆ " என கத்தினான்.

மருந்தை தடவி சிறு கட்டு ஒன்றை போட்டபடி "அவ்வளவுதான்டா " என சொல்லி எழுந்தவளுக்கு ,அவன் முகத்தில் குழப்பத்தையும் தாண்டி வலி தெரிய ," டேய் எரும ...! உன்னால தான் வலி தாங்கமுடியாதுனு தெரியும்ல ...அப்புறம் எதுக்கு இப்படி கோபப்பட்டு செவுத்துல கைய்ய குத்தி சீன போட்ற " என அவனை இயல்பாக்க வம்பிழுத்து சீண்டினாள்.

மித்ரனோ அவளின் சீண்டலுக்கு பதில் எதுவும் சொல்லாமல் தனக்கு விடையாய் கிடைத்த வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதை கண்ட யஷி கவலையாய், " என்னடா என்ன ஆச்சு உனக்கு ?? எதுக்கு இப்போ இப்படி இருக்க ...கை ரொம்ப வலிக்குதா ?" என கேட்க,

அவளின் கவலைக் குரலில் உணர்வுக்கு வந்த மித்ரன், தானே இன்னும் முழுதாய் அறியாத ஒன்றை சொல்லி இவளையும் குழப்பவேண்டாம் என நினைத்தவன் ,

"ஒன்றுமில்லை யஷிமா ..!! நேரமாகுது நீ போய் தூங்கு . அப்றம் நாளைக்கு நான் சீக்கிரம் கிளம்பணும்டா.. கொஞ்சம் வேலை இருக்கு . நீ இன்னிக்கி போலவே இந்த ஊர் மக்கள் கிட்ட பேட்டி மட்டும் எடுத்துடு ...வேற எங்கேயும் போயிடாதடி, பேட்டி எடுக்கும்போதும் கதிரேசன்ணாவ கூட நிறுத்திக்கோ ... நான் சீக்கிரம் வந்திடுவேன் ." என சொன்னவன் , சற்று நிறுத்தி அவள் முகத்தை கைகளில் ஏந்தியபடி , " பாப்பா ...!! காலைல நீ எழுந்துக்குறதுக்கு முன்னாடியே நான் கிளம்பிடுவேன்டா ...நீ பார்த்து இருக்கனும் சரியா " என்றான்.

அவனின் கேள்விக்கு ஏதோ கேட்க வந்த யஷி, என்ன நினைத்தாளோ எதுவும் கேட்க்காமல் சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்ட , அவனும் சிரிப்புடன் அவளின் தலையில் தட்ட , அதன்பின் தூக்கத்திலும் இருவரின் அச்சிரிப்பு மறையவில்லை .

இதுதான் அவர்கள் இருவரும் எவ்வித பயமும் இல்லாமல் சிரிப்புடன் உறங்கப் போகும் கடைசி இரவு என்பதை உணராமல் இருவரும் நிம்மதியாய் உணர ,அதை உணர்ந்திருந்த காற்றில் கலந்திருந்த உருவமோ அதில் முதல் படியாய் நாளை இரவு தான் செய்யப்போகும் செயலை எண்ணும் பொழுதே அதன் கோபம் அதிகரித்ததில் சுற்றிலும் காற்றினில் வெப்பம் கூட யஷி துக்கம் கலைந்து சிணுங்கயதில், சட்டென்று தன் உணர்வை மாற்றி அவள் மேல் மெதுவாய் தழுவி சென்றது .

--------------------------------------------------------------------------------


சந்திரமதியின் காடு :

சந்திராதித்யன் விட்டுசென்ற சில மணி நேரத்திலேயே வழக்கமாய் தன்னை எழுப்பும் தன் கைபேசியின் அழைப்பும் இல்லாமல் , கடந்த சில நாட்களாய் தன்னை எழுப்பும் குரலும் இல்லாமல் , புதிதாய் தன் காதுகளில் கேட்ட பெயர் தெரியா பறவைகளின் இன்னிசைக் காணத்தில் கண்விழித்தாள் அவள்.

கண்விழித்தவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் கண்களை கசக்கிகொண்டு அவ்விடத்தை பார்த்தவளுக்கு, நேற்று நடந்தவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்தது .

அதில் தான் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் ஒரே ஒருவனை மட்டும் நம்பி இருட்டில் , காட்டிற்கு நடுவில் இருக்கும் இவ்வீட்டிற்கு வந்ததை நினைத்து சிரித்தவள்,
எங்கே அவன் என்று சுற்றும் முற்றும் தேடினாள்.

அவன் அருகில் இல்லாததில் , " இந்த பச்சைக் கண்ணன் இவ்ளோ சீக்கிரம் எழுந்து எங்க போனான் ??? நேத்து நைட்டும் இப்படித்தான் எங்கயோ போயிட்டு ரொம்ப பதட்டமா வந்தாங்க ....என்னனு கேட்டாலும் சொல்லல . இப்போ எங்கே போனாங்க ? இந்த காட்ல இவங்களுக்கு மட்டும் அப்படி என்ன வேலை இருக்க போகுது " - என்று நேற்று தான் அவனை பார்த்தோம் என்பதையும் மறந்து பல நாளாய் பழகியது போல் சொல்லிக்கொண்டு அவனை தேடினாள்.

வெளிச்சம் இருந்ததால் பயம் இல்லாமல் அக்குகை வீட்டை விட்டு வெளியே வந்தவளின் கண்கள் தன் முன் பரந்திருந்த அழகைக் கண்டு பெரிதாய் விரிந்தது .

அக்குகைவீடு மலையின் மேல் இருக்க , அங்கிருந்து பார்க்க காடு முழுவதும் பச்சை புடவையை போற்றியதை போல் பச்சை பசேலென மரங்கள் அடர்ந்து பரவியிருந்தது .அதில் தங்கள் கூடுகளை கட்டிருந்த பல பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட பறந்துசெல்ல , கூட்டிலிருந்த குஞ்சுகளோ சத்தமிட்டபடி விளையாடிக்கொண்டிருந்தது இனிமையாய் காதை தீண்டியது . மற்றொரு புறம் சிறுபிள்ளைகள் உற்சாகமாய் சறுக்குமரம் விளையாடுவதை போல் "சோ" என்ற ஓசையுடன் அருவிநீர் மலையிலிருந்து கொட்ட குழந்தையை வாரிஅணைக்கும் அன்னையாய் பூமியவள் ஓடையாய் அதை தன்னுள் தாங்கிக்கொண்டாள்.

கண்களை இமைக்க கூட தோன்றாமல் அதன் அழகை கண்டு,"
அம்மாடியோ...!!! எவ்வளவு பெரிய காடு !!!!அதும் இவ்ளோ அழகா " என்று கைகளைக் கட்டிக்கொண்டு அதை ரசித்தாள்.

அப்பொழுது அருகினில் எதோ சத்தம் வர , "அட வந்துவிட்டாரா !!" என தனக்குள் கேட்டுகொண்டே திரும்பியவளுக்கு எதிரில் இருந்ததை கண்டு சர்வமும் நடுங்கியது.

சந்திரமதியில் தன் தாயிடம் பேசிக்கொண்டிருந்த சந்திராதித்யனுக்கு, திடீரென்று நேற்று தன்னுடன் வந்தவளின் முகம் மனதில் தோன்றி அவளிர்க்கு ஏதோ ஆபத்து என்று சொன்னது .

அதில் தாயின் முன் மண்டியிட்டபடி அமர்ந்திருந்தவன் எழுந்து , "அம்மா ...! நான் இப்பொழுது ஒரு இடத்திற்கு விரைவாக சென்றாக வேண்டும்... தாங்கள் கவலை கொள்ளாதீர்கள், நான் விரைவாக வந்து விடுவேன் " என்றவன், அவரின் பதிலை எதிர்பார்க்காமலே விரைந்து நாகத்தின் உருவிற்கு மாறி குகைவீடை நோக்கி விரைந்தான்.

மலை மேல் நின்றிருந்தவளுக்கு நேற்றிரவு தன்னந்தனியாக யாரென்று தெரியாத ஒரு ஆணுடன் காட்டுக்குள் வரும்போது இல்லாத பயம் ... தன்முன் படையெடுத்து நின்ற அந்த நாகத்தை கண்ட நொடி தோன்றியது.

என்ன செய்வது என மிரண்டபடி அவள் நின்றிருக்க எதிரில் இருந்த நாகமும் எவ்வசைவும் இல்லாமல் இருந்தது.
அதைகண்டவள் மிக மிக மெதுவாக பக்கவாட்டில் நகர அந்நாகமும் "ஸ்ஸ்.....ஸ்ஸ்" என்ற சத்தத்துடன் சீற தொடங்க அதில் பயந்து அலறியவள் மயங்கி சரிந்தாள்.

அதற்குள் அவ்விடம் வந்திருந்த சந்திராதித்யன் நொடியில் தன்னுருவுக்கு வந்து மயங்கி சரிந்தவளை தனது கைகளில் ஏந்திக் கொண்டான் .

தங்கள் எதிரிலிருந்த நாகத்தை ஆழ்ந்து பார்த்தவனின் கடின குரல் , " சந்திரமதியை விட்டு அனுமதி இல்லாமல் இங்கு எவ்வாறு வந்தாய் சந்திரிகா " என்று அதட்டியது .

அவன் கண்டுக்கொண்டதில் தன்னுருவிற்கு வந்த சந்திரிகா , "அண்ணா...!! அது ...அது... நான் ஆலயத்திற்கு செல்ல வேறேதும் வழி உள்ளதா என்று பார்க்கவே இவ்வழியில் வந்தேன். அப்பொழுது நம் இனத்தவரை தவிர வேறொருவர் இங்கு இருப்பதை உணர்ந்து எவரென அறிவதற்காக வர, அவர்கள் என்னை கண்டு பயந்துவிட்டார்கள் அண்ணா... உண்மையில் நான் அவர்களை எதுவும் செய்யவில்லை " என அவள் சந்திரமதி விட்டு வெளியே வந்ததால் அண்ணனின் கோபத்திற்கு ஆளாக நேருமோ என்ற பயத்தில் ஒப்புவிப்பதுபோல் அவள் இங்கு வந்ததை சொன்னாள்.

அவள் சொல்லிய அனைத்தையும் கேட்டவனோ அதை நம்பவில்லை என்பதை போல் ,

"வீண்பேச்சு வேண்டாம் சந்திரிகா...! அருகே இருக்கும் ஓடையில் இருந்து சிறிது நீர் கொண்டு வா , இவளின் மயக்கத்தை தெளிவிக்க வேண்டும் " என்றபடி தன் கையில் மயங்கியிருந்தவளை தூக்கிச்சென்று குகை வீட்டினுள் கிடத்தினான் .


சிறிது நேரத்தில் கண் விழித்தவள் தன் முகத்தின் வெகுஅருகில் இருந்தவனை தான் முதலில் பார்த்தாள். அந்த பச்சை கண்கள் இரண்டும் பதட்டத்தில் முழ்கி இவளுக்கு என்னாகிற்றோ என்ற கவலையை வெளிப்படுத்த , அதை விரும்பிய மனம் இது தனக்கானது என சொல்லியதில் சட்டென்று அவனை கட்டிக்கொண்டாள்.

அவளின் இச்செயலை எதிர்பார்க்காத சந்திராதித்யன் அதிர்ந்தான் என்றால், அவன் பின் நின்றிருந்த சந்திரிக்காவிற்க்கோ இப்பொழுது தான் மயங்கிவிடுவோமோ எனத் தோன்றியது.


அப்பொழுதுதான் இப்பெண் எவ்வாறு இங்கு வந்தாள் என கேள்வி உதிக்க , "அண்ணா...! யார் இவர்கள் ?? எவ்வாறு இங்கு வந்தார்கள் ?" எனக் கேட்டாள்.

அப்பொழுதுதான் அவள் அங்கிருப்பதை கண்ட அப்பெண் சந்திராதித்யனை விட்டு விலகி , இவள் யாரென்ற கேள்வியை தன் கண்களில் தாங்கி அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வையின் பொருளை படித்தவன் , "ம்ம்க்கும் ..." என தொண்டையை செறுமியபடி " இவள் என் தங்கை சந்திரிகா" என்றவன் ,...தங்கையிடம் " இவளின் பெயர் 'அனகா' , வழித்தவறிவிட்டவளை இருட்டிவிட்டதால் என்னுடன் அழைத்துவந்துவிட்டேன் " என சற்றும் தடுமாறாமல் கூறினான்.


"அனகா" என உச்சரித்த சந்திரிகா , " மிகவும் அருமையான பெயர் ...இதன் பொருள் என்ன" எனக் கேட்டாள் .


எதிரிலிருந்தவளோ , " இந்த பெயரையே இப்போதான் கேக்குறேன்... இதுல அர்த்தத்துக்கு நான் எங்க போவேன் " என மனதில் முனகியபடி என்ன சொல்வதென்று தடுமாற ,

இப்பொழுதும் சந்திராதித்யனே , " அனகா என்றாள் அப்பழுக்கற்ற சிறு பறவை என்று அர்த்தம் " என்றவனின் இதழ்கள் புன்னகைக்க துடிக்க , தன்னுடன் வந்தவளின் குறுகுறுபார்வையில் அதை உதட்டுக்குள்ளே அடக்கிக்கொண்டாள் .

( சந்திராதித்யனே அப்பெண்ணை "அனகா " என்று அறிமுகப்படுத்தியதால் நாமும் அவ்வாறே அழைப்போம்).


அனகாவை மேல் இருந்து கீழ் வரை பார்வையிட்ட சந்திரிகா தன் அண்ணனிடம் திரும்பி , "அண்ணா ...! இவர்களின் உடை மிகவும் அழகாக இருக்கிறது அல்லவா இவர்கள் போலவே " என அவளை அறிமுகப்படுத்தும் பொழுது தன் அண்ணணின் குரலில் வந்த மாற்றத்தை உணர்ந்திருந்தவள் இறுதி வரியை குறும்பாய் கேட்டாள்.

மனித குலத்தை சேர்ந்த ஒருவரை மிக அருகில் பார்ப்பது அவளிற்கு இதுவே முதல் முறை என்பதால் அவள் ஒவ்ஒன்றையும் ஆழ்ந்து பார்க்க அதில் உணர்ந்ததே அவளின் அண்ணனின் குரலில் உண்டான மென்மை.

நாவல் பழ நிறத்தில் அனகா அணிந்திருந்த சுடிதார் அவளின் பால்வண்ண நிறத்திற்கு பொருத்தமாக இருக்க, தூங்கி எழுந்ததில் அவ்வுடை கசங்கி , கலைந்த தலை, என்று சற்று சோர்வாக இருந்த போதிலும் அழகாகவே இருந்தவளை சற்றுமுன் அவள் அணைத்ததில் தைரியம் பெற்றிருந்த சந்திராதித்யனின் கண்கள் உரிமையுடன் ரசித்தது .


அண்ணன் தங்கை இருவரும் அவளையே பார்க்க கூச்சமாக உணர்ந்தாள் அனகா, அதிலும் சந்திராதித்யனின் பார்வை ஆழமாய் அவளின் உள்ஊடுருவது போல் தோன்ற ஒரு நொடி தடுமாறியவள் அதை மறைப்பதிற்காய் , ..

"நான் அப்பவே எங்க வீட்டு ஆளுங்க கிட்ட சொன்னேன் , நான் வெளியே எங்கும் போக மாட்டேன் அப்புறம் எல்லோரும் என்னையே பார்த்துட்டு அவங்க வேலைய மறந்துருவாங்கனு கேட்டாங்களா....ம்ம்ம்ம்...வாட் டு டூ ???நான் இவ்ளோ அழகா பொறந்துட்டனே. சரி சரி ரெண்டு பேரும் என்னைப் பார்த்து முடிச்சாச்சுனா கொஞ்சம் வழி விடுங்க. நான் உங்கள மாதிரி இல்ல ...எனக்கு நிறைய வேலை இருக்கு " என தன் அடாவடி பேசசை தொடங்கிவிட்டாள்.

அவளை மட்டுமில்லாமல் அவளின் பேச்சையும் அவளவன் சிறுசிரிப்புடன் ரசனையுடன் பார்க்க, அவளின் பேச்சில் பாதிக்குமேல் புரியாமல் சந்திரிகா தான் விழித்தாள் .

திரும்பி தன் அண்ணனை பார்த்தவள் அவன் இதழில் புன்னகையுடன் இருந்ததில் இடவலமாய் தலையாட்டியபடி, " அண்ணா...!!!இவர்கள் என்ன வித்தியாசமாக பேசுகிறார்கள்? மனிதர்கள் இவ்வாறுதான் பேசுவார்களா ?" என சந்தேகமாக கேட்டாள்.

அதை தவறாக புரிந்துகொண்ட அனகா , " என்ன....?? நான் வித்தியாசமா பேசுறனா?? ... சரிதான்,நீங்க அண்ணனும் தங்கையும் ஏதோ நாடக கம்பெனில இருந்து தப்பிச்சு வந்த மாதிரி பேசிட்டு என்ன சொல்றீங்களோ?? ஆமா அது என்ன என்னை பார்த்து மனிஷியானு வேற கேட்கிறீங்க இத நான் தான் உங்க கிட்ட கேக்கணும் , அரசகாலத்துல போட்ற மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு , வித்தியாசமா பேசிட்டு இந்த காட்டில் என்ன பண்றீங்க நீங்க??" என கேட்க ,

அண்ணனும் தங்கையும் அவளின் கேள்விகளுக்கு உண்மையை சொல்லமுடியாததால் அவளை சமாளிக்க முடியாமல் திணறினர்.



--------------------------------------------------------------------------------
சின்னம்பாளையம்:


இரவு மணி எட்டை கடந்திருக்க களைத்துப் போய் வந்த மித்ரனை கண்ட யஷி சமையலறை சென்று சூடாய் காபியை தயாரித்து கொண்டு வந்து அவன் கைகளில் கொடுத்தாள்.

அவன் அதை குடித்து முடிக்கும்வரை கூட பொறுக்கமுடியாதவள் அவன் குடித்தபின் கப்பை வாங்கியபடி , " மித்ரா ...! ஹீட்டர் போட்ருக்கேன் சீக்கிரம் குளிச்சிட்டு வாடா, உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள்.


மித்ரனோ பதிலேதும் சொல்லாமல் இருக்க, அவனின் முகம் பார்த்தவள் அதில் தெரிந்த வருத்தத்தில் ," என்னடா ஆச்சு ??" என கேட்டபடி அவன் தலையை கோதினாள்.

அவளை பார்த்தவன் அதற்கு மேல் தன்னால் முடியாது என்பது போல அவளின் மடியில் தலை சாய்த்தான்.

அவன் தலை சாய்த்ததும் யஷி எதுவுமே கேட்காமல் தொடர்ந்து அவன் தலையைக் கோத , கண்களை மூடி சற்று நேரம் அமைதியாய் படுத்திருந்தான் .

சிறிது நேரம் கழித்து எழுந்தவன் அவளின் கைகளை இறுக்க பிடித்தவாறு ," யஷிமா ...இன்னிக்கு ஒருநாள் இங்க ஹால்ல தூங்குறியா . நான் பெட் தூக்கிட்டு வந்து போட்றேன் நீ படுத்துக்கோ , நான் இந்த சோபாலையே படுத்துகிறேன் ப்ளீஸ்டி...!"" எனக் கேட்டான்.

அவனின் தவிப்பில் யஷியும் என்னவென்று அறியாமல் "சரி "என்று தலையாட்ட , அவளின் அறையினுள் சென்று பெட்டை எடுத்துவந்து போட்டவன் , மீண்டும் வந்து அவளின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்து அதிலே முகம் புதைத்தான் .

சிறிது நேரம் கழித்து அவனின் கண்ணீரை தன் கைகளில் உணர்ந்தவள் , " மித்ரா " என கேள்வியுடன் அழைத்தாள்.

முகத்தை நிமிர்த்தாமலே , " பாப்பா ப்ளீஸ் டா....என்னால இன்னிக்கு கேட்ட விஷயங்களை எல்லாம் தாங்க முடிலடா . இப்போ திரும்ப என்னால அதப்பத்தி உன்கிட்ட சொல்ல முடியாது . ப்ளீஸ் ....நான் நாளைக்கு உனக்கு சொல்லட்டுமா " என அவன் கேட்ட விதத்திலே அவனின் மனம் அதிகம் காயப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தவள் அமைதியாய் அவனின் தலையை தன் மடிதாங்கினாள் .

அவனின்￰ துயரத்தை கண்டவளுக்கும் வருத்தமாய் இருக்க அமைதியாய் அவனின் தலை கோதிக்கொண்டிருந்தவளை கண்ட காற்றுடன் கலந்திருந்த அவ்வுருவம் ," நீங்கள் பார்க்கவேண்டியது இன்னும் அதிகம் உள்ளது " என்றெண்ணியபடி காற்றில் கலந்து அவ்வூரின் எல்லையில் இருக்கும் அவ்வீட்டின் வாயிலிற்கு வந்துநின்றது .


பாதி எறிந்திருந்த அவ்வீட்டை கண்ட நொடி அவ்வுருவம் என்ன உணர்ந்ததோ யாம் அறியோம் .. ஆயினும் ,ஏதோ ஓர் உணர்வில் அது ஆழ்ந்தது என்பதை அங்கு வீசிய காற்றின் வேகம் உணர்த்தியது .


அவ்வீட்டிற்குள் ஓர் அறையில் இரண்டு நபர்கள் தனித்தனி நாற்காலியில் கட்டப்பட்டிருந்தனர்.

அவ்வறை முழுக்க காரிருள் பரவிப்படர்ந்திருக்க, அவர்கள் இருவருக்குமே ஒருவருக்கொருவர் அங்கிருப்பது தெரிந்திருக்கவில்லை .

கைகள் இரண்டும் நாற்காலியின் பின்புறம் கட்டப்பட்டிருக்க , கால்கள் இரண்டையும் ஒன்றாய் சேர்த்து அந்நாற்காலியில் கட்டியிருந்ததில் அசையமுடியாமல் உடல் மருத்தது. வாயிலும் பெரிதாய் துணியை கொண்டு அடைக்க பட்டிருக்க,
இருவராலும் முனங்குவதென்ன மூச்சுக்கூட சரியாய் விடமுடியவில்லை.

இதில் என்னவென்றே அறியமுடியா துர்நாற்றம் வேறு அவ்விடம் முழுதும் பரவிருந்ததில் அவர்களுக்கு குடலை புரட்டிக்கொண்டு வந்தது .

தாங்கள் இவ்விடம் எவ்வாறு வந்தோம்??எங்கிருக்கிறோம்?? எவ்வாறு இங்கிருந்து தப்பிப்பது ??? என எதையும் யோசிக்கமுடியாமல் செய்தது அவ்விடத்தின் இத்தகைய சூழல் .

பகலா இரவா என்பதைக்கூட அறியமுடியாமல் அக்காரிருளில் மரணபயத்தை கண்களில் தேக்கியபடி அமர்ந்திருந்தனர் இருவரும்.

சற்றுநேரத்தில் அவ்விடத்தில் காற்று வேகமாய் வீசத்தொடங்க சிறிதாய் வெளிச்சம் தோன்றியது .

பலமணிநேரங்களுக்கு பின்னான வெளிச்சத்தில் கண்கள் கூச சற்று பொறுத்து கண்களை திறந்த இருவரும் எதிரே இருந்த மற்றவரை கண்டு அதிர்ந்தனர் .

அவர்கள் அதிர்ச்சி விலகும் முன்பே அவர்களின் முன் தோன்றியது அவ்வுருவம் . இத்தனை நாட்கள் காற்றோடு கலந்திருந்த உருவம் இன்று தனியே பிரிந்து நிற்க அவ்வுருவத்தை கண்டவர்களின் கண்களோ பயத்தில் தெரித்துவிடுவது போல் விரிந்தது.


இருவரும் ஒருவரை ஒருவர் நம்பமுடியாமல் பார்த்துக்கொள்ள , அதற்குமேல் பொறுக்கமுடியாமல் காத்திருந்த அவ்வுருவம் வேகமாய் எதையோ தூக்கி வீச அடுத்தநொடி இருவரின் கால்களும் வெட்டப்பட்டு தனியே விழுந்தது .


இருவரும் கத்தகூடமுடியாமல் உட்கார்ந்தபடியே துடிக்க , அவர்களை பார்த்த படியே அருகினில் வந்த உருவம் தன் இடதுகையை பார்க்க இயல்பாய் இருந்த கை நொடியில் தீக்கங்காய் மாறி கனலை கக்கியது .

அதை ஒருவனின் நடுமுதுகில் அப்படியே வைக்க அதை தடுக்கமுடியாமல் மரணிக்காமலே மரணத்தின் வலியை உணர்ந்தான் அவன்.

அதை பார்த்திருந்த மற்றவனுக்கோ தன் கால்கள் வெட்டபட்டு குருதி பெருகி வழிவதுகூட உணரமுடியாமல் மரணபயத்தில் உறைந்தான் .

மரணபயத்தில் உறைந்தவனுக்கு அதை உணர்த்தவே செய்தது அவனின் மணிக்கட்டை நறுக்கென்று அறுத்த அவ்வுருவம் .


இருவரும் மரணத்தின் வலியில் துடிக்கக்கூட முடியாமல் மயக்கத்தில் ஆழப்போக அதை திருப்தியின்றி பார்த்த அவ்வுருவம் அவ்வறையின் மூலையிலிருந்து பெட்டியை கொண்டுவந்து அதிலிருந்த எலிகளை இருவரின் அருகிலும் கொட்டிவிட்டு நீண்டநாட்களுக்கு பிறகான புன்னகையுடன், திருப்தியாய் காற்றில் கலைந்து மித்ரன் மற்றும் யஷியை தேடிச் சென்றது .




- காதலாகும் ....
 

Thoshi

You are more powerful than you know😊❤
காதல் ..!!!
ஒரு சிலருக்கு மகிழ்விக்கும் அமுதமாய் ...
ஒரு சிலருக்கு கொடும்விஷமாய் ...
ஒரு சிலருக்கு அழகாய் ...
ஒரு சிலருக்கு ஆழமாய் ..
காதலது பலவகை ஆனாலும் காதலன்றி ஓர் உயிரும் வாழ்வதில்லை இவ்வுலகில்...!!



அத்தியாயம் 8:


சந்திரமதியின் காடு :



அனகா சந்திரிகாவையும் , சந்திராதித்யனையும் மாற்றி மாற்றி தன் கேள்விகளால் திணறிடித்துக் கொண்டிருந்தாள்.


அவள் மீண்டும் மீண்டும் அவர்களின் இருப்பிடம் மற்றும் உறவுகளை பற்றி கேட்க ,


"தாம் இக்காட்டில் பலதலைமுறையாய் தங்கள் இனத்தோடு மனிதர்களிடம் இருந்து தள்ளி வாழ்வதாக" சந்திராதித்யன் பாதி உண்மையே சொல்லினான்....அதை அனகாவும் புரிந்துகொண்டாள்.


இன்னும் தங்களின் பழமை மாறாமல் மற்றவர்களிடமிருந்து தங்களை மொத்தமாய் ஒதுக்கி தனியாக வாழும் எத்தனையோ மக்களை பற்றி பல செய்திகளை அவள் அறிந்திருந்தாளே. இன்றும் ஆப்பிரிக்காவின் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுடைய ஊரை தவிர வெளியில் ஓர் உலகம் இருப்பதை அறியாமல் அறிந்துகொள்ள விருப்பம் இல்லாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நினைவு தோன்றியதில் இவர்களும் ஒரு விதத்தில் அவ்வாறு தான் போல என்று எண்ணிக்கொண்டாள் அவள்.


அதன் பின் மூவரும் ஏதேதோ பேசியபடி நேரத்தைக் கடத்தி , அங்கு இருந்த பழங்களை பறித்து தங்களது பசியாறினர்.


மூவரும் பேசினார்கள் என்பதைவிட முக்கால்வாசி நேரம் அனகா பேச அதை சந்திரிகாவும் , சந்திராதித்யனும் வியப்பாய் பார்த்திருந்தனர் .


நேரம் சென்று மாலை ஆக சந்திரிகாவை தங்களிருப்பிடத்தில் விட்டு வருவதற்காக கிளம்பினான் சந்திராதித்யன் .


அதைப் பார்த்த அனகா ," ஒருநிமிஷம் ....நானும் உங்ககூட அங்க வரட்டுமா ???"என கண்களில் ஆசை மின்ன ஆவலாய் கேட்க,


அவளின் ஆசை முகத்தைக் கண்ட சந்திராதித்யனுக்கோ மனம் உருகியது.


"உன் ஒவ்வொரு ஆசையையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதற்க்கே நான் உள்ளேன் பெண்ணே !" என அவன் மனம் இயல்பாய் பதிலளித்ததில் உள்ளுக்குள் அதிர்ந்தான்.


அவனுக்கு புரிந்தது தன் மனம் தங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அவளிடம் சிக்கிக் கொண்டது என்பது. அது அவனுக்கு கோபத்தையோ வலியையோ ஏற்படுத்துவதற்கு பதில் தேகத்தை சுகமாய் சிலிர்க்க வைத்தது.


அவளின் கேள்விக்கு பதிலளிக்காமல் சந்திராதித்யன் அமைதியாக இருந்ததில் , தன்னை அழைத்துச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்து அனகாவின் முகம் சுருங்கியது.


அதை பார்த்து வருத்தப்பட்ட சந்திரிகா ஒரு வேகத்தில், "அண்ணா...!" என்று அழைத்து விட்டவள்,


அடுத்து என்ன சொல்வதென்று அறியாமல் தடுமாறினாள் ....தங்கள் இருப்பிடத்திற்கு அனகாவை அழைத்து செல்ல முடியாது என்பதை அவளும்தான் அறிந்திருந்தாள் அல்லவா.


அவளின் அழைப்பில் கலைந்த சந்திராதித்யன் , தனது மௌனத்தில் முகம் சுருங்கி நின்றிருந்தவளிற்க்கு பதில் எதுவும் சொல்லாமலே , " கிளம்பலாம் சந்திரிக்கா" என்று தங்கையிடம் சொன்னவன் திரும்பிவிட்டான்.


அவனைத் தொடர்ந்த சந்திரிகா ஏதும் செய்யமுடியா பாவத்தை முகத்தில் தாங்கி அனகாவை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அவனுடன் சென்றாள்.


அவன் பதில் சொல்லாதது மட்டுமின்றி விடைபெறும் பொழுதும் கூட தன்னைத் திரும்பிப் பார்க்காததில் மேலும் அனகாவின் மனம் கலங்கியது . அது ஏன் என்பதை யோசிக்க விரும்பாதவளாய் திரும்பிச் செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனகா.


அவளின் பார்வையைச் சந்திராதித்யன் உணர்ந்தே இருந்தான். தன் மனம் செல்லும் பாதையை அறிந்து இருந்தவன், அவள் பார்ப்பதை தவிர்த்து... அவளைப் பார்க்க அடம்பிடிக்கும் மனதின் தவிப்பை ஒதுக்கி திரும்பாமலே நடந்துகொண்டிருந்தான் .


அனகாவிற்கு தான் ஏன் அவன் பார்வைக்கு ஏங்குகிறோம் என்பது போலெல்லாம் தோன்றவில்லை . ஏதோ ஒன்று உந்த அவனின் பார்வையை பெற்றே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் மனம் ஆர்ப்பரிக்க செல்லும் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.


இதற்குள் மலையின் அடிவாரத்திற்கு சென்றிருந்த இருவரும் இவளின் பார்வையில் இருந்து மறைய சில நொடிகளே இருக்க , அவனின் பார்வை கிடைக்காமலே போய்விடுமோ என்ற ஏக்கத்தில் தானாய் ஒரு கேவல் வெளிப்பட்டது அனகாவிடம் .


அத்தனை நேரம் திரும்பாமலே மனதால் அவளை உணர்ந்தபடி நடந்து கொண்டிருந்த சந்திராதித்யன் இந்நொடி அவளின் ஏக்கத்தை போக்கவேண்டுமென தோன்ற தன் கட்டுப்பாட்டை மீறி அவனின் தலை அவளை திரும்பிப் பார்த்தது .


அவன் பார்க்கவில்லையே என கேவ தொடங்கியவள் அவன் திரும்பி பார்த்ததில் சட்டென்று அழுகை நிற்க ஆயினும் இடது கண்ணின் ஓரம் ஓர் நீர் துளி வழிந்து கன்னம் தொட... இதழில் சிறு சிரிப்புடன் அவள் நின்று கொண்டிருந்த தோற்றம் சந்திராதித்யன் மனதில் ஆழப் பதிந்தது.


சந்திரிகாவும் ,சந்திராதித்யனும் தங்களின் சந்திரமதியை நெருங்கியவேளை ,


சந்திரிகா, "அண்ணா...! மனிதர்கள் நல்லவர்களாய் தானே அண்ணா இருக்கிறார்கள்...பின்பு ஏன் நம் குலத்தவர் அவர்களை எதிரியாய் பாவிக்கிறார்கள்"- என்று அனகாவை கண்ட நொடிமுதல் அவளுக்கு தோன்றிய சந்தேகத்தை தற்பொழுது தானும் தன் அண்ணனும் மட்டும் இருக்கும் பொழுதினில் கேட்டுவிட்டாள்.


" ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதை போல் மனிதர்களை எண்ணாதே சந்திரிகா....அனகாவை வைத்து மனிதர்களை எடை போடாதே "


சந்திராதித்யன் தன் ஆசையை கண்டுகொண்டானோ என்னும் பயத்தில், " இல்லை அண்ணா...!! நான் என் மனதில் தோன்றிய சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவே தங்களை வினவினேன் மற்றபடி எனக்கு எதற்கு மனிதர்கள் பற்றிய எண்ணம் " என தன் தடுமாற்றத்தை மறைத்தாள் .


அதற்க்குள் சந்திரமதி வந்திருக்க "தப்பித்தோம் " என்றெண்ணி வேகமாய் உள்நுழைந்தாள் .


அவளை தொடர்ந்த சந்திராதித்யனோ யாருமில்லா தங்களின் அறைக்கு வந்தபின் அவளை தடுத்தவன்," சந்திரிகா ...! நீ மனித வாழ்வின் மேல் கொண்ட பற்றை நான் அறிவேன்.அவர்களை போல் நீயும் வாழ ஆசைப்படுகிறாய் அல்லவா ...ஆனால் அது உனக்கு நல்லதல்ல சந்திரிகா "என்று பொறுமையுடன் ஓர் தமையனாய் தன் தங்கைக்கு அவளிற்க்கான நல்லதை எடுத்து சொன்னான்.


அவனின்￰ பொறுமையில் அவனிடம் தன் மனஆசையை சொல்லலாம் என தைரியம் கொண்டவள் தயங்கியபடியே என்றாலும் திடமாய் , " அண்ணா ...! காட்டின் கோடியில் பெரிதாய் ஓர் மரம் இருக்கிறது அல்லவா...அம்மரத்தில் அமர்ந்து தூரத்தில் மனிதர்களைக் அடிக்கடி கண்டு இருக்கிறேன் அண்ணா. அவர்களின் வாழ்வு மிகவும் அழகானது . நினைத்த பொழுதில் நினைத்த இடம் செல்கிறார்கள்... எப்பொழுதும் சிரிப்புடன் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கிறார்கள் அண்ணா . அவர்களின் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது . நீயே சொல் அண்ணா நாம் எவ்வாறு இருக்கிறோம் ,நாமும் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கிறோம் தான் ஆனால் அவர்களிடம் இருக்கும் சுதந்திரம் நம்மிடம் இல்லை தானே அண்ணா ??? அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது போல் நமக்கு இல்லையே...நமக்கு உருமாரும் சக்தி உள்ளபோது அதை பயன்படுத்தி சிறிது காலம் மனிதர்களாய் அவர்களின் வாழ்வை வாழலாமே அண்ணா ?" என தனது ஆசையை ஏக்கமாய் தன் அண்ணனிடம் வெளிப்பூச்சு ஏதுமின்றி தைரியமாய் வெளிப்படுத்தினாள் சந்திரிகா.


"அன்பாகவா???சரிதான்...மனிதர்களிடம் தங்களுடனிருப்பவர்கள் மேல் அன்பென்பது அளப்பரிய அளவில் உள்ளது தான் . ஆனால் தான் என்னும் சுயநலம் அதைவிட அளவிட முடியாத அளவிற்கு உள்ளது .தங்களின் தேவைக்காக மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவது மட்டுமல்லாமல் சதையையும் பிய்த்து உண்ணும் பிணந்தின்னிக் கழுகுகள் அவர்கள்" என்றவனின் தாடைகள் இறுகியது கோபத்தில்.


அமைதியாய் பேசிக் கொண்டிருந்தவனின் திடீர் கோபத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் சந்திரிகா தடுமாற , அதை கண்டுகொள்ளாத சந்திராதித்யனோ மேலும் கொதித்துக்கொண்டிருந்தான்.


"மனிதர்களை சாதாரணமாக எண்ணிவிடாதே சந்திரிகா ....அவர்கள் பாவம் புண்ணியம் பற்றி கதைகள் பல சொல்லிக் கொண்டு திரிந்தாலும், பாவங்களைச் சிறுதுளி அச்சமும் இல்லாமல் செய்து முடிப்பவர்கள். தாங்கள் செய்வது தவறு என்பதை அறிந்தும் அதை பெருமையாக எண்ணும் ஈனப்பிறவிகள் " என மேலும் பற்களை கடித்தபடி ஆவேசமாய் பேசியவனின் தலையை தடவியது ஓர் மென்மையான கரம்.


"மனிதர்களைப் பற்றி இத்தனை தெளிவாய் அறிந்திருந்தும் நீ மனிதர்களுடனான உனது தொடர்பை இன்னும் தொடர்வது ஏன் மகனே ??" என கேட்டபடியே அவர்களின் அருகில் அமர்ந்த சிந்திரை தனது மகனின் ஆவேசம் குறைக்க அவன் தலை கோதினாள்.


"நீங்கள் இருவரும் மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா...நாகராஜா ராணிக்கு பிறந்த பிள்ளைகளே தங்கள் குலத்திற்கு எதிரானவர்கள் மேல் பற்றுகொண்டுள்ளீர்கள்." என்று பெருமூச்செய்தியவர் தொடர்ந்து ,


"எதையும் செய்யாதே என்றால் அதை அவசரமாய் எவர் தடுத்தாலும் அதை மீறி செய்ய முற்படுவது ஆண்களின் குணம் என்றால்... மனதின் ஆசையை சிறிதும் வெளிப்படுத்தாமல் அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பது பெண்களின் குணமாம். இது நம் முன்னோர்கள் சொன்னது. இது தங்கள் இருவருக்கும் மிகப்பொருத்தமானது தான். ஒருவழியாய் நீ அடக்கி வைத்திருந்த உன் மனதின் ஆசையை வேளிப்படுத்தி விட்டாயா" என்றபடி சிரித்தார் .


அவரின் சிரிப்பில் , " ஆம் அம்மா ...! தாங்கள் சொல்வது மிகச்சரியே... பெண்கள் அவர்களின் எண்ணங்கள் ஈடேறாமல் தங்களின் உள்ளக்கிடக்கை சொல்வதில்லை "என வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் சந்திரிகா , அவள் நினைத்தார் போலவே மனித குலத்தை சேர்ந்தவருடன் ஒருநாளை கழித்துவிட்டாளே.


"எதற்காக இவ்வளவு சந்தோஷம் சந்திரிகா ?? நீ மனிதர்களில் எவரையேனும் சந்தித்தாயா என்ன??" என்று மகளின் வெற்றிக்களிப்பில் சந்தேகம் கொண்டார் சிந்திரை.


அத்தனை நேரம் இருவரையும் பார்த்திருந்த சந்திராதித்யன், அவரின் சந்தேகத்தில் சந்திரிகா ஏதும் உளறும் முன் தடுக்க பார்க்க￰,


அதற்குள்ளாக தானாகவே சுதாரித்த சந்திரிகா, " பெண்ணிடம் குற்றம் கண்டுப்பிடிப்பதே அம்மாகளுக்கு முதல் வேலையாக போய்விட்டது. தங்களின் புத்திரனையும் சற்று பார்க்கலாம் அல்லவா .எப்பொழுதும் அம்மாக்களுக்கு கொஞ்ச மட்டும் மகன் திட்டுவதற்கு மகள் " என வம்பாய் பேச்சை மாற்றினாள்.


அதில் தன் சந்தேகம் களைந்த சிந்திரை, " போதுமடி அம்மா உனது வாய்ப்பேச்சு... என் புத்திரன் பற்றி அனைத்தும் நான் அறிவேன் ...அவனின் மனிதர்கள் மேலான பாசம் தூய்மையானது ".என்றவர் தொடர்ந்து ,


"நீ அறியமாட்டாய் இப்பொழுது நீ அடிக்கடி செல்லும் மரம்தான் சிறுவயதில் உன் அண்ணனின் இருப்பிடமாகும்.


அன்றொருநாள் உனது தந்தை உன் அண்ணனுக்கு உருமாறும் கலையை கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார்.அதை கற்றுக்கொண்டவனோ நொடிப்பொழுதினில் அவரின் கண்களில் மண்ணை தூவுவது போல் வழக்கம்போல் காட்டை விட்டு வெளிவந்துவிட்டான் .அந்நேரம் எவ்வாறு வந்தாள் எனத்தெரியாமலே ஓர் சிறுமி பாதையில் நின்றுகொண்டிருக்க , அந்நேரம் பார்த்து அதிசயமாய் ஓர் வாகனம் அதிவேகத்தில் அச்சிறுமியின் மேல் மோதுவது போல் வந்தது . அப்பொழுது உன் அண்ணன் தான் அச்சிறுமியை காப்பாற்றினான் .


அப்பொழுது அச்சிறுமியின் பெற்றோரும் அங்குவந்து இவனை கண்டவர்கள் இவனிடம் யாரென்று வினவியுள்ளார்கள் .அப்பொழுது மனிதர்களின் மொழி இவனுக்கு பரிச்சயம் இல்லை அல்லவா இவன் பதில்கூறாமல் முழித்ததில் சிறுவன் வழிதெரியாமல் வந்துவிட்டான் என எண்ணி அவனை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்"


இவ்வளவு நேரம் சுவாரஸ்யமாய் கதை கேட்டுக்கொண்டிருந்த சந்திரிகா தற்பொழுது இடையிட்டு , " என்ன ...??அண்ணனை அழைத்து சென்றுவிட்டார்களா . எனில் அண்ணன் எப்பயமும் இன்றி மனிதர்களுடன் சென்றானா ?" என வியப்பாய் கேட்டாள்.


அவளின் கேள்வியில் சிரித்த சந்திராதித்யன் , "எனக்கு எப்பயமும் தோன்றவில்லை சந்திரிகா!! அவளை பார்ப்பதற்கு எனக்கு பிடித்திருந்தது . அவளும் என் விரல்களை இறுக்கமாய் பிடித்தவள் அன்று இரவு தூங்கும் வரையிலும் விடவில்லை . அதன் பின் நாங்கள் நீண்ட தூரம் செல்லாததால் அன்றிரவே தந்தை என்னை கண்டுபிடித்து எவரும் அறியும் முன் அழைத்துவந்துவிட்டார் . எனது சிறு வயது நியாபகங்களில் அது அழிந்துவிடும் என தந்தையவர்கள் எண்ணியிருப்பார் .ஆனால் சிறுவயதில் மனதில் பதிவது என்றும் அழிவதில்லை . அதிலும் அவளின் நினைவாய் இந்த சங்கிலி என் கழுத்தினிலே எப்பொழுதும் இருக்கும் தருவாயில் "


கண்கள் மின்ன தன் சிறுவயது அனுபவத்தை சொல்லியவனின் கண்கள் தன் கழுத்திலிருந்த சங்கிலியை கண்டு கலங்கியது .


அதில் பதறிய சந்திரிகா , "என்னாகிற்று அண்ணா ??" எனக் கேட்டாள்.


அந்தத் தடிமனான சங்கிலியில் கோர்த்து இருந்த டாலரில் ஒரு சிறுவனும் சிறுமியும் கைகளை கோர்த்தவாறு இருந்தனர்.


அவளின் பேச்சில் இடையிட்ட சந்திரை , " இதைப் பார்த்தாய் அல்லவா சந்திரிகா ... அன்று உன் அண்ணண் மீண்டும் வந்தபொழுது இது அவனின் கழுத்தில் இருந்தது. அப்பொழுது ஒரு சிறுவனின் உருவம் மட்டுமே இதில் இருந்தது ."


இத்தனை நேரம் தன் தாய் சொல்லியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சந்திராதித்யன் தற்பொழுது தலையை நிமிர்த்தி தாயின் முகத்தை உற்றுப் பார்த்தான்.


அவனின் பார்வை உணர்ந்தவர் முகத்தினில் எதுவும் வெளிப்படுத்தாமல் ," மனிதர்களின் மேல் உனக்கு பற்று ஏற்பட்டிருந்தாலும் இவ்வாறு அடிக்கடி இங்கிருந்து மறைந்து செல்வது கடந்த ஓராண்டாக தான் என்பதை நான் அறிவேன் மகனே . அதுவும் அது அவர்களின் மேலான பற்றால் அல்ல ஏதோ ஓர் கோபம் உன் உள்மனதில் இருக்கிறது என்பதையும் அறிவேனடா .என் மகனைப் பற்றி என் உன்மனம் கூறும் கணிப்பு உண்மை எனில் கடந்த ஆண்டு நீ அச்சிறுமியை காணச் சென்றபோது ஏதோ பெரிதாய் மனிதர்கள் பற்றிய தாக்கம் உன் மனதில் ஏற்பட்டிருக்க வேண்டும் . அதுவே உனது தொடர் பயணத்திற்கு காரணம் ".


தாய் என்னும் உன்னத உறவின் அருமைகளில் இன்னும் என்னென்ன உள்ளனவோ . மகவுகளை தாய் அன்றி எவர் முழுதாய் அறிவர். எங்கிருந்தாலும் தாயின் மனது தனது மகவுகளை பற்றிதானே எண்ணம்கொள்ளும் . சிந்திரையும் மிகத்தெளிவாக தன் மக்கள் இருவரை பற்றியும் அறிந்திருந்தார் .


அவர் பேசப்பேச சந்திராதியனின் மனமும் கடந்த ஆண்டு தான் சென்ற இடத்தையும் ,அதன் சூழலையும் நினைவில் கொண்டு வந்ததில், அவன் முகம் பல உணர்ச்சிகளை கொட்டிக்கவிழ்க்க, கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.


மூடிய விழிகளுக்குள் அன்று கண்டதனைத்தும் காட்சியாய் ஓடியது.


மகிழ்ச்சியாய் மனம் முழுக்க ஆசையுடன் தன் சிறுவயது தோழியை காண சென்றவன் கண்டதோ , முற்றிலும் வலுவிழந்து மருந்துவ உபகாரணங்களுக்கு நடுவில் இருந்த அவ்வுருவத்தையே.


உடல் முழுக்க ஆங்காங்கே காயங்களுடன் , முகத்தில் சிராய்ப்புகளுடன் உதடுகள் கிழிந்து கசங்கிய காகிதமாய் முகம் மட்டுமே தெரிந்தது.


கண்ட நொடியில் உள்மனம் நடுங்கது அவ்வுருவத்தை நெருங்கிய தருணம், கண்களைத் திறக்க முடியாமல் உதடுகள் கிழிந்திருந்ததில் பேச்சு தெளிவில்லாமல் போக "...ஆ...வலிக்கிறது...ம்ம்ஹா வலிக்கிறதே " என வழியில் உடல் நடுங்க முனங்கிய வார்த்தை தெளிவாக கேட்டது அவனுக்கு .


அந்நிகழ்வு நடந்து ஓராண்டு கடந்த பின்பும் , இன்னும் அந்நினைவுகள் அவனின் அடிமனம் வரை சென்று உலுக்க , அம்முனங்கள் மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒலித்தது . அவ்வேதனையை தாங்க முடியாத சந்திராதித்யன் தன் இரு கைகளையும் இருக்கமாய் தன் காதுகளில் பொத்திக் கொண்டான் எப்பொழுதாவது அக்குரலிலிருந்து தப்பிக்கலாம் என்றெண்ணியபடி .


---------------------------------------------------------------------------------
சின்னம்பாளையம் :


"ஆ...வலிக்குது..கா.கா..காப்பாத்துங்க ... வலி....க்கு. து " என ஓர் குரல் தீனமாய் முனங்கியது .


மித்ரனுக்கு அக்குரல் மிக அருகில் கேட்பது போல் தோன்ற சுற்றும் முற்றும் தேடினான் . யஷியின் அறையிலிருந்து சத்தம் வர சிறு பதட்டத்துடன் சென்று பார்க்க அங்கு உடல் முழுக்க காயங்களுடன் ரத்தம் தோய்ந்தபடி ஓர் பெண் படுத்திருந்தாள் .


அதை பார்த்த மித்ரன் தடுமாறிய கால்களை சமாளித்து அருகில் சென்றவன் நடுங்கிய கைகளால் அவளை திருப்ப , அங்கிருந்தவளை கண்டு அலறினான் .


"நோஓஓஓ...." கத்திகொண்டே பின்னால் சென்றவன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான்.


" மித்ரா...டேய் மித்ரா ...என்னாச்சுடா " என யஷியின் குரல் கேட்டும் அசையாமல் அமர்ந்திருந்தவனின் கைகளை முகத்திலிருந்து விலக்கினாள் அவள்.


அதில் கண் திறந்து பார்த்தவன் , தான் சோபாவிலிருந்து கீழே விழுந்திருப்பதையும் ...யஷி தன்னை குழப்பத்துடன் பார்ப்பதையும் கண்டு நடந்தது கனவென்று அறிந்தவன் அதை உணர சற்று நேரம் தேவைப்பட்டது .




-காதலாகும்....
 

Thoshi

You are more powerful than you know😊❤
காதலாய் அணைக்கும் கரங்களுக்குள் சிறுபறவையாய் தன்னை ஒப்புவிக்கும் பெண்ணவள்...!
மாகாளியாய் மாறி
அக்னிஜுவாலையை கக்குவாள் ...
தன்னிடம் காமம் கொண்டு நெருங்குபவர்கள் மேல்..!!



அத்தியாயம் 9:



"டேய் மித்ரா ..! என்னதான்டா ஆச்சி உனக்கு ?? நேத்து நைட் என்னனா லாரில அடிப்பட்டவன் மாதிரியே வந்து நின்ன....காலையில பேய பார்த்த மாதிரி கத்தி எழுப்பிவிட்டுட்ட...இப்போ என்னனா என்ன இடம்னு கூட சொல்லாம இங்க கூட்டிட்டு வந்து உட்காரவைச்சிருக்க ..என்னதான்டா எரும ஆச்சி உனக்கு ??" - என்று யஷி தன் அருகில் ஏதோ யோசனையில் புருவம் சுருங்க அமர்ந்திருந்த மித்ரனிடம் கேட்டாள்.


￰காலையிலிருந்து எதுவும் பேசாமல் உம்மென்று இருக்கும் இந்த மித்ரன் யஷிக்கு புதியது . எப்பவும் இருவரும் ஒன்றாய் இருந்தால் அங்கு அமைதி என்பதர்க்கே இடம் இல்லாமல் போகும் . அப்படி இருக்கையில் மித்ரனின் இவ்வமைதி அவளை பயம் கொள்ள செய்தது . அதிலும் நேற்று அவன் இருந்த நிலை...எப்பொழுதும் தாயாய் அவளை மடிசாய்ப்பவன் நேற்று சேயாய் மடிசாய்ந்திருந்தானே .


அவனின் நிலை மாற்ற காலை முதல் யஷி ஏதேதோ பேச முயற்சிக்க விடையாய் கிடைத்ததோ அவனின் மௌனம் மட்டுமே . இதோ இருவரும் தற்பொழுது அவ்வூரிலிருந்து பல மைல் தூரங்களை கடந்து இந்த கட்டிடத்தின் வரவேற்பறை போன்ற இடத்தில் அமர்ந்திருக்கும் வரையிலும் அவனின் அவ்வமைதி தொடர்கிறது .


மித்ரனோ அவளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் , " யஷிமா ...! இது ஹாஸ்பிடல் கொஞ்சம் மெதுவா பேசுடா " என அடக்கினான் .


"என்னது ஹாஸ்பிடலா ??" என சுற்றும்முற்றும் பார்த்தவாறு வியப்பாய் கேட்ட யஷியின் குரல் கிசுகிசுப்பாய் வெளிவந்தது மித்ரனின் அடக்கலில்.


அந்த இடத்தின் அமைதி மற்றும் அங்காங்கே இருந்த ஒரு சில முதியவர்களை கண்டு இதை ஓர் ஆசிரமம் என்று தான் அவள் எண்ணியிருந்தாள்.


அவளின் கிசுகிசுப்பான குரலில் நீண்ட நேரத்திற்கு பிறகு மெல்லியதாய் புன்னகைத்தது மித்ரனின் இதழ்கள்.


அந்நேரம் அவர்களின் முன்வந்து நின்றார் நடுத்தர வயது பெண்மணி ஒருவர்.
சந்தனநிற காட்டன் புடவையை நேர்த்தியாய் கட்டி, நிமிர்வுடன் இருந்தவரின் முகமோ.. அமைதியை காட்ட கூர்மையான கண்களோ எதிரிலிருப்பவரை ஆராய்ச்சியாய் பார்த்தது.


அவரை கண்டு இருவரும் எழுந்துகொள்ள ...மித்ரன், " ஹலோ மேடம் !! ஐயம் மித்ரன் , நேத்து ஈவினிங் கால் பண்ணிருந்தேனே".


"ஓ அந்த தம்பியா ...!! நீங்க '￰டாமினிய' பார்க்கணும்னு சொல்லிருந்திங்கல!! என்கூட வாங்க தம்பி நான் உங்கள கூட்டிட்டு போறேன் " என்றவர் அவனின் அருகில் நின்றிருந்த யஷியை சந்தேகமாய் பார்த்தார்.


அவரின் பார்வையை புரிந்துகொண்டவன் யஷியை தன் தோள்வளைவில் கொண்டுவந்து , "என்னை எந்த அளவுக்கு நீங்க நம்புறீங்களோ அதே அளவுக்கு இவளையும் நம்பலாம் மேடம் . நாங்க இரண்டு பேரும் வேற வேற இல்ல " என்றவனின் குரல் திடமாய் வெளிவந்தது.


அவனின் திடத்தில் மெலிதாய் சிரித்துக்கொண்டவர் தன்னை தொடருமாறு தலையசைத்த படி முன் சென்றார்.


மித்ரன் ஒருவித பதட்டத்துடன் அவரை தொடர , 'டாமினி' என்ற பெயரில் ஏதோ யோசனையில் நின்றிருந்த யஷியும் அவனின் கை இழுப்பிற்குச் சென்றாள்.


இறுதியில் இருவரும் ஒரு அறையில் நின்றிருந்தனர். இவ்வளவு நேரம் இல்லாத மருந்து நெடி நாசியை தீண்டிச் சென்றதில் தன் யோசனையை கலைந்த யஷி , அவ்வறையை ஆராய்ந்தாள்.


தற்பொழுது இது மருத்துவமனை தான் என ஒத்துக்கொள்ளும்படி அனைத்து மருத்துவ உபகாரணங்களுடன் இருந்தாலும், சன்னல்கள் எல்லாம் மூடப்பட்டு இருளில் மூழ்கியிருந்த அறை திகிலை மூட்டியது.


முன் நின்றிருந்த அப்பெண்மணி , "இங்க எப்பவும் இப்படித்தான் அவ முழிச்சிட்டிருக்கும்போது வெளிச்சத்தை பார்த்தா கூட கத்த ஆரம்பிச்சிடுவா. முதல்ல கத்த மட்ட ஆரம்பிக்கிறவ கொஞ்ச நேரத்துலயே இங்க இருக்க எல்லாத்தையும் எங்க மேல தூக்கி எறிய ஆரம்பிச்சதும் இல்லாம நாங்க தடுக்கிறதுக்காக அவ கிட்ட போனா கூட தன்னை தானே அழிச்சிக்க பார்த்தா ....அதுல இருந்து இவளோட அறை சன்னல் மூடப்பட்டு அறையை இருட்டா தான் வச்சிற்ப்போம்" என்று அவ்வறையின் இருளுக்கு நீண்டதாய் ஓர் விளக்கமளித்தார் .


பேசிகொண்டே நீண்ட நாட்களுக்கு பிறகு அவ்வறையின் மின்விளக்கை அவர் எரியவிட ,


திடீரென வந்த வெளிச்சத்தில் ,"யாரை பற்றி பேசுகிறார் " என்ற கேள்வியுடன் நின்றிருந்த யஷி அவ்வெளிச்சம் கூசியதில் கண்களை கசக்கி கொள்ள, மித்ரனின் கை அவளின் மற்றொரு கையை இறுக்கமாய் பற்றியது .


அவனின் உள்ளங்கை வியர்த்திருக்க இறுக்கமாய் பற்றிருந்த கை நடுங்கியது.


அதில் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ தன் கண்களையும் இறுக்கமாய் மூடியிருந்தான். அவனின் இடது கண்
ஓரம் முத்தாய் ஓர் துளி பளபளக்க யஷியின் மற்றொரு கரம் தானாய் அதை துடைத்தது .


அப்படி என்ன நேர்ந்தது என்று அவள் முன்னால் பார்க்க, அங்கு கட்டிலில் ஒருவர் படுத்திருந்தார் .


சற்று முன்சென்று பார்க்க , பச்சை வண்ண போர்வை உடலை மறைத்திருக்க ....வெளியில் தெரிந்த இரண்டு கைகளிலும் ஆங்காங்கே ஊசி குத்திய தடயங்கள் மற்றும் சற்று பெரிதாய் கீறல்கள் போன்ற தழும்புகள் இருந்தது.


நிமிர்ந்து அவரின் முகம் பார்த்த யஷி அதிர்ந்து கண்களை இறுக்க மூடியபடி மித்ரனின் தோள்வளைவில் முகம் புதைத்தாள் .


முழுதாய் மொட்டை அடிக்கப்பட்டு ஒருபக்கம் முகம் தீயில் வெந்த தடயத்துடன் , உதடு பெயருக்காய் சிறிது ஒட்டியபடி இருக்க ஒரு கண் இருந்த இடத்தில் பஞ்சால் ஏதோ மருந்திட்டிருந்தனர் .


" மி...மித்...மித்ரா.!! யார் இது ?? என்னாச்சி இவங்களுக்கு ?"


"வெளிய போய் சொல்றேன்மா " என்று தன் கைவளைவிலே கூட்டிவந்தவன் வெளியில் நாற்காலியில் அவளை அமரவைத்துவிட்டு மீண்டும் உள்சென்று அவர்களை அழைத்து வந்தவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தான்.


தன் அருகில் வந்தவனை இறுக பற்றிக்கொண்ட யஷி, " சொல்லுடா யார் இது ?? என்னாச்சி அவங்களுக்கு ? உனக்கு எப்படி தெரியும் ?" என பதட்டத்துடன் அடுத்தடுத்து கேட்டாள்.


"என்னை அந்த வார்த்தை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சி யஷிமா....அந்த வார்த்தைல நம்ப தெரிஞ்சிக்க வேண்டிய ஏதோ ஓர் விஷயம் இருப்பதாய் என்னோட மனசு திரும்ப திரும்ப சொல்லுச்சு , அதும் அந்த குரல் உனக்கு " என ஆரம்பித்த மித்ரன் அக்குரலை பற்றி இப்பொழுது அவளிடம் சொல்ல விரும்பாமல் நிறுத்தினான்.


அவன் நிறுத்தியதில் யஷி கேள்வியாய் பார்க்க , தன் பேச்சை தொடர்ந்தவன்


" எனக்கென்னவோ அந்த வார்த்தையை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த மாதிரி நியாபகம் . அங்கிள்க்கு இத பத்தி தெரிஞ்சிருக்குமான்னு கேக்கத்தான் நான் காலையிலையே கிளம்பறதா இருந்தேன். ஆனா திடிர்னு என் ரூம்ல இருந்த உன்னோட போட்டோ காத்துல கீழ விழுந்திடுச்சு...அண்ட் அதுல தான் எனக்கான விடையும் இருந்திச்சி "


-என்றவன் அன்றைய நினைவில் அந்த படம் கீழே விழுந்ததுக்கும் தங்களை பின்தொடரும் காற்றின் உருவமே காரணம் என்பதை உணர்ந்திருந்தவன் , அது எங்க கிட்ட என்ன எதிர்பார்க்குது ?? என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் .


அவன் சொல்வதை கவனமாய் கேட்டுக்கொண்டிருந்த யஷி , அவன் பாதியில் நிறுத்தி எதையோ யோசித்ததில் அவனின் தலையில் ஓங்கி தட்டி," ஒழுங்கா நிறுத்தாம முழுசா சொல்லுடா ".


" அந்த போட்டோல நீ ஒரு நியூஸ்பேப்பர் வச்சிஇருப்ப யஷிமா அது தான் ...அதுதான் எனக்கான தடயம் .ஆம் அதுலதான் இந்த வார்த்தை இருந்திச்சி.அந்த போட்டோவை அடிக்கடி பார்த்ததுல தான் அந்த வார்த்தையை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துருக்கு. அந்த போட்டோ ஒருவருஷத்துக்கு முன்னாடி எடுத்தது தான . சோ நிச்சயம் எதுனா கண்டுபிடிக்கமுடியும் நினைச்சி
நான் அந்த பத்திரிக்கை அலுவகத்துக்கு நேத்து போனேன் யஷிமா .அங்க இருந்த மேலாளர் கிட்ட விசாரிச்சதுல தெரிஞ்சது , அந்த செய்தியை சேகரிச்சது சூர்யா -ன்ற பொண்ணுதான்னு " என்றவன் நேற்று தான் சென்ற இடத்தில் தெரிந்துகொண்ட அனைத்தையும் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.


ஓர் வருடம் முன்பு :


"சார் இங்க பாருங்க, நான் கண்டுபிடிச்ச எல்லா விஷயமும் உண்மை தானானு நூறு தடவைக்கு மேல உறுதிபடுத்திட்டு தான் இத எழுதினேன். இதுல இருக்குற ஒரு வார்த்தை ...ஒரு வார்த்தை பொய்னு நிரூபிக்க சொல்லுங்க.நான் எழுதுவது தவறானதுனு பகிரங்கமா மன்னிப்பு கேக்குறேன் " என்றபடி தன் கையிலிருந்த செய்தித்தாளை தனது மேலாளர் முன்வைத்தாள் சூர்யா.


தனது மூக்குக்கண்ணாடியை சரிசெய்துகொண்ட அம்மேலாளர் , "பாருமா சூர்யா..! எனக்கு உன்ன பத்தியும் தெரியும், ****கட்சிக்காரனுங்க பத்தியும் நல்லா தெரியும்.நான் முப்பது வருஷமா இந்த துறைல இருக்கேன்... நாங்க பத்திரிக்கை காரங்க அநியாயத்தை தட்டி கேட்போம்னுலாம் நம்பளால எதுவும் பண்ணமுடியாது . புரிஞ்சிக்கோமா இது தான் நிதர்சனம் " என்றவருக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாததால் அவளின் கண்களை பார்க்காமல் அவள் தூக்கியெறிந்த செய்தித்தாளை பார்த்தபடி உரைத்தார் .


"எது சார் ?? எது சார் நிதர்சனம் ?? பொண்ணுங்கனா இவனுங்களுக்கு கிள்ளுக்கீரையா போயிடிச்சா . பொண்ணுங்கள தங்களோட தேவைய தீர்க்குற பொருளா பார்க்குர இந்த ****** பொறுக்கிங்களுக்கு தான் சார் அந்த கடவுள் கூட துணையா இருக்காரு . சின்னப்பொண்ணு சார் அந்த பவித்ரா .இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல அவளை போய் ..." முழுதாய் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு .


"சூர்யா...! ரிலாக்ஸ் ...எனக்கு உன்னோட கோபமும் ஆதங்கமும் புரிதுமா ஆனா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது . உன்னால முடிஞ்ச காரியம் இத பத்தி வெக்கிகொண்டுவந்துட்ட ...இந்த விஷயம் சில பேருக்காவது போய்ச்சேர்ந்துர்க்கும் இனி அவனுங்க இப்படி பண்ண பயப்படுவாங்க.இதுவே உனக்கு கிடைச்ச வெற்றி தானமா".


அதற்க்குமேல் அவரிடம் வாதாட விரும்பாதவள் இவரால் வேறு என்ன செய்ய முடியும் என்ற நினைப்பில் இயலாமை பெருமூச்சை விட்டபடி வெளிவந்து தனக்குரிய இடத்தில் அமர்ந்தவள் முன்வந்தமர்ந்தான் ஹரிஷ் ."என்னாச்சி சூர்யா ! மேலாளர் என்ன சொன்னாரு இந்த விஷயத்துல அவரால எதுவும் பண்ணமுடியுமா ?" எனக் கெட்டவன் அவளின் இரண்டு வருட நண்பன் . இந்த பத்திரிகையில் சேர்ந்தநாள் முதல் ஆவலுடன் அனைத்திலும் உதவியாய் இருப்பவன் ...அவளின் நம்பிக்கைக்குரியவன்.


அவனின் கேள்விக்கு அவள் இடவலமாய் தலையசைக்க , அதில் அவளுடன் சேர்ந்து அவனின் முகமும் சோர்ந்தது .


என்ன செய்வது என தீவிரமாய் அவள் யோசிக்க ஆரம்பிக்க அதன் விளைவாய் அவளின் புருவங்கள் சுருங்க, அவளை பார்த்தவாரே இருந்த ஹரிஷ் , "என்ன யோசிக்கிற சூர்யா ?? எனக்கு தெரியும் இந்த விஷயம் ரொம்ப சென்சிடிவ் ஆனது . ஆனா நம்மளால முடிஞ்சது இத இனிமே தொடராம தடுக்குறது . அத தான் நீ பண்ணிட்டியே ...உன்னாலதான் இப்போ அவன் கம்பி எண்ணிட்டிருக்கான் கூடிய சீக்கிரம் அவனுக்கு தண்டனையும் கிடைக்க போகுது .அப்றம் என்ன ?"


அவனின் கேள்வியில் அவனை ஆழ்ந்து பார்த்தவள் அவனின் மேல் இருந்த நம்பிக்கையில் ," ஹரிஷ் ....! நீ என்ன நினைச்ச ? இந்த பவித்ரா கேஸ்க்காக தான் நான் இவ்ளோ ரிஸ்க் எடுத்தேனா ? உனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு ஹரிஷ் . இதுல இப்போ கம்பி எண்ணிட்டிருக்கானே அவன் வெறும் அம்பு மட்டும் தான் அதும் நூத்து கணக்கான அம்புல ஒருத்தன் . இந்த ஒரு அம்பை உடைக்குறதுனால எந்த பிரயோஜனமும் இல்லை "


அவள் சொல்வதை புரியாத பாவனையுடன் ஹரிஷ் பார்க்க , தனது மேஜை அலமாரியை திறந்தவள் அதில் அவள் சேமித்து வைத்திருந்த குறிப்பை எடுத்து அவன் முன் போட்டாள்.


தான் தெரிந்துகொண்டதை யஷியிடம் சொல்லிக்கொண்டிருந்த மித்ரனின் பேச்சை தடை செய்தது அவனிற்கு வந்த கைப்பேசி அழைப்பு .


"கதிரேசன்னா தான் கூப்புட்றாரு .." என்றபடி அழைப்பை ஏற்றவன் அப்பக்கம் சொன்னதை கேட்டதில் அதிர்ந்தான் .


அவன் கைபேசியை அணைக்க , "என்னடா நம்ப அவர்கிட்ட சொல்லாமலே கிளம்பி வந்துட்டோமே அத கேக்குறதுக்காக கூப்பிட்டாரா ?ஆனா அதுக்கு ஏன்டா நீ இப்டி முழிக்குற?" என தொடர் கேள்வியில் அவனை மூழ்கடித்தாள்.


"பாப்பா ...நம்ப இருக்க ஊர் எல்லைல ரெண்டு பேரோட சடலம் போலீஸ் கண்டுபிடிச்சிருகாங்க...அண்ட் அது சம்பந்தமா ஊர்ல இருக்க எல்லோரையும் போலீஸ் விசாரிச்சிட்டு இருக்கிறதா சொன்னாரு " என்றவனின் மேனியை சில்லென்ற காற்று தழுவிச்செல்ல , காதோரமாய் சன்னமான சிரிப்பொலி கேட்டது .


"அதுசரி..! ஏற்கனவே ரெண்டு கொலை நடந்த ஊர் தான இது . நீ அந்த சூர்யா பத்தி சொல்லுடா "


அக்குரலின் சிரிப்பொழியில் இந்த சடலங்களுக்கும் இந்த குரலுக்கும் சம்பந்தம் இருக்குமா என்பது போல் யோசித்தவன் , யஷியின் பேச்சில்.."ஷிட்! இத எப்படி மறந்தேன் மத்தத போல அந்த ரெண்டும் யஷி சொன்னமாதிரி ஏன் கொலையா இருக்க கூடாது . தென் இந்த குரல் இது ...." என பலவாறு யோசித்தவன் பேசிக்கொண்டிருந்த யஷியின் கைகளை பிடித்து இழுத்தபடி தாங்கள் வந்த காருக்கு கூட்டிச்சென்றான் .


"டேய் ....எங்கடா போற??அந்த சூர்யா என்னடா ஆனா ?? பவித்ரா கேஸ்னு எதோ சொன்னியே முழுசா சொல்லுடா இடியட்" என கத்த ,


"அப்ப்பா....கொஞ்சம் வாய மூட்றி...நம்ப இப்போ கிளம்பியாகணும் .நீ வண்டில ஏறு மீதிய வழில சொல்றேன்"என அதட்டி அவளை அங்கிருந்து கிளப்பினான் .


--------------------------------------------------------------------------------


சின்னம்பாளையம் :


"பாஸ்.... நம்ப அஸ்வந்த்தும் , ஹரியும் ரெண்டுநாளா காணோம் பாஸ் " என்ற ஜான் பாஸ் என்றழைக்கப்பட்டவனின் பார்வையில் ,


"எனக்கு இந்த விஷயம் நேத்து நம்ப இங்க வந்ததுக்கு அப்றம் தான் பாஸ் தெரிஞ்சிது . நான் அத வழக்கம் போல தான் நினைச்சேன் ஆனா...ஆனா" எனத் தயங்கியவன் ,


"இந்த ஊர் எல்லைல ரெண்டு சடலத்தை போலீஸ் கண்டுபிடிச்சிருக்காங்க பாஸ் அதுவும் நம்மளுக்கு சொந்தமான இடத்துல . அந்த இடம் நம்ப இரண்டு பேர தவிர அவங்களுக்கு மட்டும் தான தெரியும் " மூச்சுவிடாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒப்புவித்த ஜானின் கன்னம் சுளீரென்றது எதிரிலிருந்தவனின் கைவீச்சில் .


"யூ...***************" வாயில் வந்த கேவலமான வார்த்தைகளில் திட்டியவன்,


"யாருனே தெரியாத ஒருத்தன் நம்பாளுங்க ஒவ்வொருத்தரா கொன்னுட்டு இருக்கான். என்னோட கணக்குபடி பார்த்தா அவன் நம்மளோட இந்த தொழில்ல இருக்குறவங்கள தான் தூக்குறன்னு நான் இங்க வருவதற்கு முன்னாடியே நீ எனக்கு குடுத்த குறிப்பை வச்சி கண்டுபிடிச்சி உன்கிட்ட சொன்னேன் தானே??"


ஜான் பதில் சொல்லமுடியாமல் தலை குனிய ,


"ஷிட்....!! அப்படி இருந்தும் இத எப்படி நீ சாதாரணமா விட்ட ஜான் ....உனக்குதெரியும்ல யஸ்வந்த்தும் , ஹரியும் தான் நம்பளோட இந்த தொழிலுக்கு ஆணிவேர்னு " , அவனால் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போக குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் ,


"ஜான் ...!கமான் , வண்டிய எடு அந்த இடத்துக்கு போலாம் ...நான் பாக்கணும் " என்றான்￰.


"பாஸ் ...! அங்க நிறைய போலீஸ் இருப்பாங்க பாஸ்...இப்போ அது நம்ப இடம்னு தெரிஞ்சா ரிஸ்க் " என்ற ஜான் எதிரிலிருந்தவனின் தீப் பார்வையில் அடுத்த இரண்டு நிமிடத்தில் வண்டியை கிளப்பி இருந்தான்.


---------------------------------------------------------------------------------


சந்திரமதியின் காடு :


"ம்ம்க்கும்....என்னாச்சி ஏன் ஒரு மாத இருக்கீங்க ??" என நீண்ட நேரமாய் அமைதியாய் முகம் சுருங்கியபடி இருந்த சந்திராதித்யனிடம் கேட்டாள் அனகா.


சந்திரன் வானில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்க அவ்வறையின் சன்னலின் வழியே உள்நுழைந்த நிலவொளி அவள் மேனியை தீண்ட, இயற்கையான அழகில் மிளிர்ந்தவளை கண் இமைக்காமல் பார்த்தான் சந்திராதித்யன்.


நிலவொளி அவனை தீண்டாமல் இருக்க அங்கிருந்து தள்ளி அமர்ந்திருந்தவனின் கண்கள் இத்தனை நேரம் இருந்த தவிப்பை எல்லாம் மறந்து அவளை நிதானமாய் ஆராய்ந்தது.


அவனின் தவிப்பை அறிந்துகொள்ள கேட்டவள் அவளின் மனம் கவர்ந்தவனின் இந்த ஆராய்ச்சி பார்வையில் , தானாய் உடல் நடுங்க கன்னம் சிவந்தாள் .


அவளின் கன்னசிவப்பு நிலவொளியில் அவனுக்கு தெளிவாய் தெரிய தனக்குள் அவள் மேல் தோன்றும் விருப்பத்திற்க்கு எதிரொலி அவளிடம் இருப்பதில் அவனின் உள்ளம் குத்தாட்டம் போட்டது .


சிறிது நேரம் அவளின் கன்னசிவப்பை ரசித்தவனுக்கு திடீரென ஓர் கேள்வி தோன்றியதில் அவன் கண்களின் ரசிப்பு நீங்கி சந்தேகம் தொக்கியது.


"அனகா ...! இங்கு வருவதற்கு முன்பே அதாவது மயங்கிருந்த உன்னை நான் கண்டுகொள்ளும் முன்பே நீ என்னை அறிவாயா ???" எனக் கேட்டான்.


அத்தனை நேரம் அவனின் ரசிக்கும் பார்வையில் உருகிக்கொண்டிருந்த அனகா, இக்கேள்வியில் அவன் தன்னை கண்டுகொண்டானோ ?? என அதிர்ந்து விழித்தாள் .


சந்திராதித்யனோ அவளின் பதிலுக்காய் தடதடக்கும் தன் இதயத்தை தடவியபடி அவளின் முகபாவங்களை படிக்க முற்பட்டான் .


-காதலாகும் .......
 

Thoshi

You are more powerful than you know😊❤
அத்தியாயம் 10 :


சந்திரமதியின் காடு :


நாட்கள் நதியின் சலசலப்பாய் விரைந்தோட அனகா அக்குகை வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகியது .

அன்று ஒருநாள் சந்திராதித்யன் "தன்னை தெரியுமா?" என்று கேட்டபொழுது சந்திரிகா வந்துவிட அப்பேச்சை அப்பொழுது விட்டுவிட்டான் .

அதன் பிறகு எப்பொழுது அப்பேச்சை எடுத்தாலும் அனகா அதை தவிர்த்ததில் அவளிடம் கேட்பதை அவன் விட்டுவிட்டாலும், மனதில் அவளிற்கு முன்னமே அவனை தெரியுமோ என்னும் சந்தேகம் ஓடிக்கொண்டே தான் இருந்தது .


இன்று பௌர்ணமி ஆதலால் ஆலயம் செல்ல சந்திரமதியில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதை பார்த்தபடியே தன்னவளை தேடிச் சென்றான் சந்திராதித்யன் .

அவனிற்கு அனகாவை ஆலயத்திற்கு கூட்டிச்சென்றால் என்ன ?? என்று தோன்ற , எப்பொழுதும் பகல்பொழுதில் சந்திரிகாவை அனகாவுடன் விட்டு தன் வேலையை கவனிக்க செல்பவன் ... அன்று அவளை சந்திரமதியிலே இருக்க சொல்லி , தான் மட்டும் சென்றான் .

அவளை அழைத்துக்கொண்டு போகும் வழியில் ,

" பாருடா...! சாருக்கு வந்து ஒருமாசத்துக்கு அப்றம் தான் என்னைய வெளிய கூட்டிட்டு போனும்னு தோணுது ...ரொம்பவே கஷ்டமப்பா " என அவனின் காதில் விழவேண்டும் என்பதற்காகவே சத்தமாய் சலிப்புடன் முனங்கினாள் அனகா.

அவளின் முனங்களில் முன்சென்றுக் கொண்டிருந்த சந்திராதித்யன் திரும்பி அவளை பார்க்க , பார்த்தவன் வழக்கம்போல் அவள்மேல் பித்தானான் .

அவளின் சலிப்பான குரலுக்கு முரண்பட்டு , அவள் முகம் பூவாய் மலர்ந்திருக்க... மலையின் கடினமான பாதையில் தவறிவிடாமல் இருக்க சந்திராதித்யனின் கரம் அவளின் கரத்தை இறுக பற்றிருந்ததில் ...அவர்களின் கோர்த்திருந்த கரங்களையே நொடிக்கொருமுறை பார்த்து , முகம் ரோஜா பூ வண்ணம் கொண்டிருக்க அழகு பதுமையாய் அவனை கிறங்கடித்தாள்.

சந்திராதித்யனுக்கு அவளுடன் கழிந்த முப்பது நாட்களும் , இத்தனை வருடங்களாய் அவன் பூட்டிவைத்திருந்த உணர்வுகளை திறக்கும் சாவிகளாய் தான் இருந்தது .

தான் மனிதன் அல்ல அதே போல் அவள் தங்கள் நாகஇனம் இல்லை என்பதை உணர்ந்து அவளை காணும் வேளைகளில் மட்டுமே உயிர்த்தெழும் தன் உணர்வுகள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தவனுக்கு , இந்நொடி அக்கட்டுக்கள் அனைத்தும் தளர்வதாய் தோன்றியது.

தன் கைகளிலிருக்கும் அவளின் கைகளை கண்டவனுக்கு, தங்களுக்கு இடையில் இருக்கும் முரண்கள் அனைத்தும் மறைந்து அவளுடன் இப்படியே நாட்கள் சென்றுவிடக்கூடாதா என்ற எண்ணம் விஸ்வரூபம் எடுக்க அதன் தாக்கத்தில் , கைகளில் அழுத்தம் கொடுத்தவன் சட்டென்று தலையை குலுக்கி தெளிந்தான் .

விரல்களின் அழுத்தத்தில் நிமிர்ந்த அனகா , அவன் சிரித்தபடி தலையை குலுக்கி கொள்வதை பார்த்து "என்ன " என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.

அவளின் புருவ உயர்த்தலில் அவனின் சிறு புன்னைகை , ஆழ்ந்த சிரிப்பாய் மாற அதில் அவனும் கண்ணோரத்தில் ஆசையாய் வந்தமர்ந்தது அவனின் கன்னக்குழி .


சிரிப்புடனே அவளின் கைப்பிடித்த படி அவனும் ... அவனின் கன்னக்குழியில் தடுமாறி இதுவரை முழுதாய் வெளிக்காட்டாத தன் காதலை கண்களை காட்டியபடி அவளும்... அவனின் கைகோர்த்து ஆலயத்திற்குள் தங்களது வலது காலை எடுத்து வைத்து பிரவேசித்தனர்.
"இவர் தான் எங்களின் குலம் காக்கும் "புற்றீஸ்வர்" அனகா, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இவருக்கு சிறப்பு பூஜை செய்வது எங்கள் குலத்தவரின் வழக்கம் " என தங்களின் பழக்கத்தை அவன் எடுத்துரைத்தான் .

அவன் சொன்னதை கவனமாய் கேட்ட அனகா , சுற்றும் முற்றும் பார்த்தவள் பின் சந்திராதித்யனை கேள்வியாய் பார்த்தாள்.

இந்த ஒருமாத பழக்கத்தில் அவளின் விழிமொழி இவன் வெகுவாய் விரும்பும் மொழியாய் மாறியிருக்க ....அவளின் கேள்வியை உணர்ந்துகொண்டவன் , " அது நான் சொன்ன பௌர்ணமி பூஜை சில வருடங்களுக்கு முன்பு வரை நடந்தது தற்பொழுது அல்ல " என அந்நேரத்தில் தோன்றியதை சொல்லிவைத்தான் .

அவளிடம் பொய் உரைத்ததில் அவளின் முகம் பார்க்கமுடியாமல் தடுமாறியவனின் பார்வை எதிரிலிருந்த ஈசனை பார்த்தது .

அவனின் கண்களை படிக்க முயன்ற அனகா, எதுவும் புரிந்துகொள்ள முடியாமல் அவனை தொடர்ந்து அவளும் பரம்பொருளை கண்டாள்.


மனித நடமாட்டம் இல்லாமல் எவ்வித வீண் அலட்டல்கள் இல்லாத இயற்கையின் உயிர்ப்பான அலங்காரத்தில் , அருவியின் ஓசை , காற்றின் சங்கீதம் மட்டும் கேட்க ஆனந்தத்துடன் வீற்றிருந்த பரமேஸ்வரரை கண்ட நொடி அனகாவிற்குள் ஓர் தடுமாற்றம் .


இத்தனை நாளாய் தன் மனதில் மறைத்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மேல் எழும்ப சந்திராதித்யனை பார்த்தவள் திரும்பி ஈசனை பார்க்க ,

"உனது சரணாலயம் இவனே ...தன் வாழ்நாள் முழுவதும் உன்னை மட்டுமே நினைவில் வைத்து உன்னை காக்கப்போறவனும் இவனே .அனைத்தையும் இவனிடம் ஒப்புவித்துவிடு " என உள்ளுக்குள் ஓர் உணர்வு தோன்றியது.

கடந்த நாட்களில் அவன் விதவிதமாய் கேட்டும் பதில் சொல்லாமல் நாட்களை கழித்தவள், இங்குவந்து ஒருமாதம் ஆகிவிட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும் ...இன்று சொல்லிவிடலாம் என்று எண்ணியே இங்கு வந்தாள்.


அவள் சொல்லப்போவதில் அவனுக்கு பாதகமானதாய் ஏதும் இருப்பதற்கில்லை ... அதிலும் அவனின் கண்கள் இவளை காணும் வேளையில் காட்டும் வர்ணஜாலங்களில் எத்தனையோ முறை முழ்கியவளுக்கு அவனின் காதல் புரிந்துதான் இருந்தது .

இதை எல்லாம் யோசித்தபடியே சந்திராதித்யனிடம் இருந்து நகர்ந்து ஆலயத்தின் வெளிவந்தவள்... யோசனையில் அம்மலையில் கால்களை சரியாய் வைக்காமல் போக பின்னால் சறுக்கி விழப்போனாள்.

கீழே விழப்போகிறோம் என்றதில் எழுந்த இயல்பான அச்சத்தில் கண்களை இறுக்க மூடியபடி விழுந்தவளை தாங்கிக்கொண்டது ஓர் வலக்கரம் .

தன் இடையில் பதிந்த கரத்தின் அழுத்தத்தில் கண்களை திறந்தவளின் முன் அவள் மிகவும் விரும்பும் பச்சை நிற கண்கள் காதலை பொழிந்தபடி இருந்தது.

அவள் கண்களை திறந்து தன்னை பார்த்த நொடி அவளின் இடையிலிருந்த கரத்தில் அழுத்தத்தை அவன் கூட்ட ...அவனின் கரத்தின் வெம்மை அணிந்திருந்த உடையை தாண்டி அவளை சுட்டது .

அவனால் தோன்றிய உணர்வுகளை தாங்கமுடியாத அனகா, அவனின் நெஞ்சில் தன் சிவந்த முகத்தை மறைத்துக்கொள்ள, உதடுகள் "என் அழகு குழியா " என்று கிறக்கமாக முனங்கியது.

மனம் கவர்ந்தவளின் வெட்கத்துடனான தஞ்சம் எந்த ஆண்மகனுக்கும் கர்வத்தை கொடுக்கக் கூடியதாகிற்றே .

சந்திராதித்யனும் , முகம் சிவந்தபடி தன் நெஞ்சில் சாய்ந்தவளை கண்டு தன் காதலின் கர்வத்துடன் சிரிக்க அதை சிந்தனையாய் மாற்றியது அவளின் முனங்கள்.

வேகமாய் அவளை தன்னை விட்டு விலக்கியவன் , மொத்தமாய் விலக்காமல் தன் கைவளைவிற்குள் அவளை வைத்தபடியே ,
"உனக்கு.....உனக்கு 'டாமினி'ய தெரியுமா என்ன ??" எனக் கேட்டான்.


தான் உளறிவிட்டோம் என்று உணர்ந்தவள் , எப்படியும் அனைத்தும் சொல்லத்தான் வேண்டும் என முதலே முடிவெடுத்ததில் சொல்லத் தொடங்கினாள்.

"உங்களை நான் முதல் முதல்லா பார்த்தது என்னோட பனிரெண்டாவது வயதில்....காரணம் 'டாமினி' " என ஆரம்பிக்க ,

இத்தனை நாள் அவளின் நடவடிக்கைகளில் , அன்று நான் அழைத்துவரும் முன்னரே தன்னை அவள் அறிந்திருப்பாளோ என்னும் சந்தேகம் அவள் 'டாமினி' என சொன்னதில் சற்று மாறி
இரண்டு அல்லது மூன்று வருடமாய் அறிந்திருப்பாள் என எண்ணியிருந்தவன், இவளின் பதிலில் என்ன சொல்வது என அறியாமல் அமைதியாய் விழித்திருந்தான்.


"எனக்கு தெரியும் நீங்க டாமினிய வருஷம் வருஷம் பார்க்க வருவீங்கன்னு. முதல் முறை நான் உங்களை பார்த்ததும் அப்படி நீங்க ஒருமுறை அவளை பார்க்க வந்தப்போ தான்.

என்னோட அப்பா தன்னோட தொழில்ல இருக்க ஆபத்துல... எனக்கு எதாவது ஆகிடுமோனு என்னை வெளிநாட்ல இருக்க என் அத்தை வீட்ல கூட்டிட்டு போய் விட்டுட்டார் . சின்ன வயசுல இருந்து நான் வளர்ந்தது எல்லாம் அங்க தான்.

வருஷத்துல ஒருதடவை தான் என்னை இந்தியாக்கு வரவைப்பாரு. அதுவும் 'டாமினி' - யோட வீட்ல அவங்க கூடத்தான் இருப்பேன் . அவளோட அப்பாவும் எங்க அப்பாவும் குடும்ப நண்பர்கள். அப்போதான் ஒருநாள் டாமினியும் நானும் விளையாடிட்டு இருக்கும் போது உன்களை பார்த்தேன் ".


"தூரத்துல இருந்து பார்த்தப்போ உங்க முகம் எனக்கு சரியா தெரியலானாலும் உங்களோட இந்த பச்சை கண்கள் ரெண்டும் மாறிமாறி மின்னுறத பார்த்தேன்.
நான் பார்க்குறது பார்த்து அந்த பக்கம் திரும்புன 'டாமினி' உங்களை பார்த்துட்டு சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே உங்க கிட்ட ஓடிவந்தா .அப்போ அவளை பார்த்து உங்களோட இந்த பச்சை கண்ணு இன்னும் மின்ன , கன்னத்துல ஆழமான குழியோட அழகா சிரிச்சீங்க பாருங்க.... அவ்வளவு அழகா இருந்துச்சி " என கண்களை மூடியபடி சொன்னவளின் முகம் பிரகாசிக்க , மூடிய விழிக்குள் கண்மணிகள் உருண்டோடியது .


அவளின் கண்ணின் மணிகளின் நடனத்தை கண்டபடியே ,"ம்ம்க்கும்...அப்போ உனக்கு என்ன வயசு இருக்கும் அனகா " என குறும்புடன் கேட்டவனின் குரலில் கலைந்தவள் வெட்கத்துடன் அவனின் கண்களை பார்க்காமல் குனிந்தாள் .

தன் சுட்டுவிரலால் அவளின் முகம் நிமிர்த்தியவன் அவளை பார்த்து கண்சிமிட்ட ,தன் முகத்தின் வெகு அருகே தெரிந்த அவனின் முகத்தில் அதிர்ந்து தெளிந்தவள் சற்று விலகி ,

"ஹலோ ...! உடனே கற்பனைக்கு போகவேணாம் ....எனக்கு அப்போ பனிரெண்டு வயசுதான் , தென் அப்போ நான் ஒன்னும் உங்க சிரிப்ப ரசிக்கலாம் இல்லை " என ஆரம்பித்தவள் அவனின் குறும்பு சிரிப்பில் தான் உளறியதை உணர்ந்து உதட்டை கடித்தாள்.

அவளின் செயலை கண்டவன் அவளின் இடை அனைத்து அருகில் நிறுத்தி, தன் விரல் கொண்டு அவளின் உதட்டை பிரித்தவன் , விரல்கள் உணர்ந்த அதன் மென்மையில் கரைய தொடங்க , அதில் தடுமாறி எங்கெங்கோ பார்த்த அனகாவின் விழிகள் இறுதியில் அவனின் மார்பில் உரசிக்கொண்டிருந்த டாலரை கண்டு கசங்கியது.

"இது 'டாமினி'-க்கு நான் கொடுத்தது " என்றவள் மீண்டும் தனது கடந்தகாலத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

"சின்ன வயசுல அவ அங்க எங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்ப இந்தியா வர ரொம்ப அழுதா. அப்போ நான்தான் அத குடுத்து வச்சிக்க சொன்னேன். அதுல இருந்த ஒரு பொம்மையை அவ தன்னோட அண்ணனுக்கு குடுத்துட்டதா அவங்க அம்மா சில வருஷம் கழிச்சி நான் இந்தியாக்கு வந்தப்போ சொன்னாங்க. அதுக்கு அப்றம் தான் நான் உங்களை பார்த்தது ."

" அன்னிக்கு நைட்டே நான் உங்கள பத்தி அவகிட்ட கேட்டேன் . அப்போ தான் உங்களை முதல் முறை பார்த்தது , இந்த செயின் குடுத்தது அப்றம் வருஷாவருஷம் நீங்க ரெண்டுபேரும் முதல் முதல் பார்த்த நாள்ல அவளை பார்க்க வருவதுலாம் சொன்னா . ஆனா நீங்க இதெல்லாம் யார்கிட்டையும் சொல்லகூடாதுனு சொன்னதாகவும் சொன்னா. அப்போ நானும் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டுக்கிட்டேன் . இன்னும் சொல்ல போனா நீங்க என்னிக்கு வருவீங்கன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு நானும் எல்லா வருஷமும் உங்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பிச்சிட்டேன் ."

- இதுவரை சாதாரணமாய் சொல்லிக்கொண்டிருந்தவள் தற்பொழுது அவனை ஆராய்ச்சியாய் பார்க்க , அவனும் என்ன என்பதை போல் புருவம் உயர்த்தினான் .

"இல்லை ....! சின்ன வயசுல தெரியலானாலும் கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் சில கேள்வி தோணுச்சு .....நீங்க ஏன் எப்பவும் அந்த ஒருநாள் அதுவும் வேற யாரும் பார்க்க முன்னாடி வந்து அவகிட்ட மட்டும் பேசிட்டு போறீங்க ?? அதுவுமில்லாம நீங்க தனியா தான் வருவீங்க அது நீங்க பெருசானதுகப்ரும் சரிதான் , ஆனா நான் உங்களை முதல் தடவை பார்க்கும் போதும் தனியா தான் வந்துருந்திங்க அது ஏன் ?? அண்ட் நீங்க அவளை தவிர யாரோடவும் பேசக்கூட மாட்டிங்க..... ஏன்...! அவ பக்கத்துல நிக்கும்போது ஒருதடவையாவது என்னைய பார்த்துட மாட்டிங்களானு நானே எத்தனையோ தடவ ஏங்கிருக்கேன் " என்றவளின் முகம் சுருங்கியது .


அவளின் கேள்விகளுக்கு எல்லாம் , எவ்வித உணர்வும் காட்டாமல் தனது உண்மையான வாழ்வை எண்ணி தங்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டில் இறுக்கமாய் இருந்தவன் ,அவளின் கடைசி வார்த்தையில் ...அதில் இருந்த ஏக்கத்தில் ஏதோ பெரிய தவிறிழைத்தது போல் துடித்தான் .


அதை உணர்ந்துகொண்ட அனகா , "அடடா ...! உடனே பீலிங்ஸ் ஒப் இந்தியாவா மாறக்கூடாதுப்பா . அப்போ அந்த கேள்விக்குலாம் பதில் தெரியலைனா என்ன?? அதான் இப்போ தெரிஞ்சிருச்சில " என சொல்லி சிரித்தாள் .

அவளை புரியாமல் அவன் பார்க்க , " அதான் , நீங்க சொன்னிங்களே உங்க மக்களோட இந்த காட்ல தனியா வாழ்றதா...அதுதான காரணம் " .


நிம்மதி பெருமூச்சுவிட்டவனுக்கு அவளின் முனங்கல் நியாபகம் வர ,

"ஆமா அது என்ன ' குழியா...' ??? இந்த வார்த்தை டாமினி தான் என்கிட்ட ரெண்டு மூணு தடவை சொன்னாள் . அதுவும் நான் அர்த்தம் கேட்டதற்கு சிரித்தவள் அதை கூறவேண்டியவர்கள் கூறவேண்டும் என்றிருந்தாள் " என்றபடி அவளின் தலையில் தன் தலையை முட்டி தலையை எடுக்காமல் அப்படியே இருந்தவன் அவளின் கண்களை பார்க்க ,


" நான் முதலில் உங்களின் மேலான எனது உணர்வுகளை உணரவில்லை ....சிலவருடங்களுக்கு பிறகும் உங்களுக்கான எனது தேடல் தொடர , டாமினி தான் என்னையே எனக்கு புரியவச்சா , அதுக்கு அப்பறம் எல்லாம் யோசிச்சப்போ தான் முதல் தடவை உங்களை பார்த்த அப்பவே இந்த கன்னக்குழி என்னைய ஈர்த்துடிச்சினு புரிஞ்சிது அதுதான் அந்த பேரு . டாமினி அத வச்சிதான் என்னை வம்பு பண்ணுவா "

இதுவரை உற்சாகமாய், சிறு வெட்கத்துடன் தன் இத்தனை வருட காதலை எவ்வித மேல்பூச்சும் இல்லாமல் இயல்பாய் சொல்லிக்கொண்டிருந்த அனகா , " ஆன 'டாமினி' க்கு என்னாச்சிங்க ?? என்னால சில காரணத்தால ரெண்டு வருஷமா இந்தியா வரமுடியல இந்த தடவை இந்தியா வந்தப்போ தான் நம்ப டாமினி ...டாமினி .... ஆண்ட்டி , அங்கிள் இருந்த நிலைமையை பார்த்து என்னால எதுவும் கேக்க முடியல .அவளுக்கு ஏன் ...."என சொல்லமுடியாமல் தடுமாறியவள் ,

கண்கள் சிவந்தபடி முறுக்கேறிய சந்திராதித்யனின் உடலை கண்டு பயந்து விலக , அவளின் செயலில் தன் உணர்வுக்கு வந்தவன் தனது உள்ளத்துஉணர்வுகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டான்.


அவனின் கைகளை பிடித்துக்கொண்ட அனகா , " நான் இந்தியா வந்து மூணு மாசம் ஆகுது .டாமினி அப்பாகிட்ட பொறுமையா விசாரிச்சு உங்களை அவங்க முதல்ல பார்த்த இடத்தை தேடி கண்டுபிடிக்கவே ரெண்டு மாசம் ஆகிடிச்சி . அன்னிக்கு இங்க வரணும்னு தான் கிளம்புனேன் ஆனா வழியிலே உங்களை பார்த்துட்டேன் அதே மாதிரி உங்க வண்டில இருந்த அந்த பிணத்தையும் ".


தான் சொன்னதும் அதிர்வான் என பார்க்க அவனோ இயல்பாய் நின்றிருந்தான் . இவளின் குழம்பிய முகத்தை பார்த்தவன் ,

"நீ அத பார்த்துட்டன்னு ஒருநிமிஷம் அதிர்ந்து பின் சமாளிச்ச உன்னோட கண்கள் எனக்கு அப்போவே காட்டிக்குடுத்துடுச்சி அனகா. ஆனா நீ எதுவும் கேட்காதது மட்டுமில்லாம என்னோட இயல்பா இருந்த ....அதுல உன்மேல வந்த நம்பிக்கைல தான் இந்த இடத்துக்கே உன்னை கூட்டிட்டு வந்தேன் " என தன் பக்க விளக்கத்தை சொன்னான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கடந்திருக்க ... சந்திரமதியினர் ஆலயத்தை நோக்கி வருவதை உணர்ந்துகொண்ட சந்திராதித்யன், தான் சிறிதுநேரம் சென்று வருவதாய் சொல்லி அவளை வேகமாய் அங்கிருந்து குகைக்கு போகச் சொன்னான் .


அவளோ இருட்ட தொடங்கியிருந்த வானை கண்டு கண்களில் பயத்துடன், " சீக்கிரம் வந்துடுங்க....எனக்கு அங்க இருட்டுல தனியா இருக்க பயமா இருக்கும் " என முகத்தை சுருக்கி சொல்ல ,

அந்த பாவனையில் மீண்டுமாய் அவளிடம் வீழ்ந்தவன் , சரி என்பதை போல் தன் கன்னக்குழி சிரிப்புடன் தலையசைக்க ...அதை பார்த்து ரசித்தபடியே அவள் சென்றாள்.

சரியாய் அவள் சென்றபின் சந்திரமதியினரின் வருகை அமைய, அவர்களுடன் அவனும் கலந்துக்கொண்டான் .


மகன் போன முறை போல் அல்லாமல்... முதல் ஆளாய் இம்முறை இங்கு வந்ததில், அவனின் பெற்றவர்களான நாகராஜாவும் , நாகராணியும் மகிழ்ந்து நிம்மதியாய் பூஜையை ஆரம்பித்தனர் .


சிறிது நேரம் பூஜையில் இருந்தவன் தன் தங்கை சந்திரிக்காவிற்கு கண்களை சிமிட்டி சைகை காட்டிவிட்டு அங்கிருந்து எவரும் அறியும்முன் வெளியேறினான்.


வெளியேறும் கடைசி நொடியில் அப்பொழுதுதான் உள்வந்த அவனின் நண்பன் அவனை கண்டு ,

"நண்பா சந்திராதித்யா! எங்கு போகிறாய் ? இன்று பௌர்ணமி அல்லவா இன்று நாம் வெளியில் செல்வது ஆபத்து என்று நீ அறிவாய் தானே " என நல்ல நண்பனாய் எச்சரிக்க,

அதையும் மீறி "எனக்கு அங்க இருட்டுல பயமா இருக்கும் ...சீக்கிரம் வந்துடுங்க " என முகத்தை சுருக்கியவாறு சொன்ன தன்னவளின் முகம் மனதில் தோன்றியதில் தன் கன்னம் குழிய சிரித்தான் .


அவனின் அச்சிரிப்பை எதிரில் நின்று இருந்த நண்பனும் ரசித்து பார்த்து, "ஆனாலும் தாம் இத்தனை அழகாய் இருந்திருக்க வேண்டாம்... அதிலும் ஆணாய் இருந்திருக்க வேண்டாம், ம்ம்ம்ம்.... என்னாலையே முடிய வில்லையே" என மயங்குவது போல் நடித்தவன் தொடர்ந்து,


"இந்த சிரிப்புக்கு நம்ம உலகத்தில் எந்த ராணி கொடுத்து வைத்திருக்கிறாரோ " என விளையாட்டாய் பெருமூச்சு விட்டான்.


எதிரில் இருந்த சந்திராதித்யனுக்கு தான் அது விளையாட்டாய் தோன்றாமல் போனதில் "என்னோட ராணி எந்த உலகத்தில் இருந்தாலும் எனக்கு ராணிதான்" என்றவாறு அவ்விடம் விட்டு சென்றான்

"இப்பொழுது நான் என்ன கூறிவிட்டேன்? நானுமே நம் உலகத்து ராணினுதான சொன்னேன் . ஏதோ தவறாய் சொன்னது போல் பேசிட்டு செல்கிறான் ??? ம்ம்ம்ம்ம் ....! இன்றைக்கு நேற்றா இப்படி... பலவருடங்களாகவே இவர் இப்படி முரணாய் தானே இருக்கிறார் "என புலம்பியவாறே தன் வழி சென்றான்.


குகை வீடு :

அவ்விடம் முழுக்க இருட்டாய் இருக்க, அதில் அங்கிருந்த ஒற்றை ஜன்னலும் சில நாட்களுக்கு முன் சந்திராதித்யன் அடைத்திருந்ததில் அந்த இருட்டில் அவளின் பார்வைக்கு அகப்படாமல் போனது.


அந்த இருட்டில் தோன்றிய பயத்தை கட்டுப்படுத்த தன் இரு கைகளையும் மார்போடு அணைத்தவாறு இருந்தாள் அனகா,

அவளிற்கு சிறுவயது முதலே இருட்டென்றால் பயம் . அனைவரும் அவளை தலைமேல் வைத்து தாங்கியதில் அன்பை மட்டுமே எதிர்பார்ப்பவள். துயரங்கள் என்பதை இதுவரை கண்டிராத சின்னஞ்சிறு பறவை அவள் . டாமினியின் நிலை தான் அவளின் வாழ்வில் ஏற்பட்ட முதல் ஏற்றுக்கொள்ளமுடியாத நிகழ்வு .

சுற்றுமுற்றும் எதுவும் தெரியாததில் இருட்டில் பார்வையை துளாவ விட்டபடி இருந்தவளின் காலில் எதுவோ இடற பயத்தில் கத்தபோனவளின் வாயை ஒரு கரம் பொத்த, அதில் அதிர்ந்து திரும்பினாள்.

அவளின் வாயை பொத்திய கையை விலக்காமலே, மற்றொரு கரத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அவள் முகம் தெரியுமாறு பிடித்தான் சந்திராதித்யன், தன் பெயரைப் போலவே தன் வாழ்வில் அனைத்தையும் முரண்பாடுடன் கடந்துகொண்டிருப்பவன் .

அந்தச் சிறு வெளிச்சத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களில் காதல் கசிய பார்த்தவாறு நின்றிருந்தனர்.


நேரம் நள்ளிரவிற்கு மேல் சென்றிருக்க, அங்கு தரையில் குளிர்க்கு இதமாய் அவன் கழட்டி தந்த சட்டையை இறுக்கியவாறு படுத்திருந்தாள் அனகா.

அவளின் அருகே அவளின் மேல் படாமல் சற்று நெருங்கிய நிலையில் உறக்கத்தில் இருந்தான் சந்திராதித்யன்.


உறங்கும் பொழுதும் ஒருவித கம்பீரத்துடன் உறங்கும் அவனின் முரண்பாடை பார்க்க காற்றும் ஆசை கொண்டதோ என்னவோ , வேகமாய் வீச ஆரம்பித்தது.


அதன் வேகத்தில் சரியாய் அடைக்க படாமல் இருந்த அந்த ஒற்றை ஜன்னலும் திறந்துகொள்ள, அதன் வழியில் காற்று மட்டுமின்றி ... முழு பூரண நிலவொளியும் அங்கு நுழைந்தது.


அதன் ஒளி சயனித்து இருந்தவர்களின் மேல் படர, அனகா அதை உணர்ந்ததாளோ சிறு சிரிப்புடன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

அருகிலிருந்த சந்திராதித்யன் உடலிலோ, அவ்வொளி படர்ந்ததில் சிறிது சிறிதாய் மாற்றம் ஏற்பட்டது.

அதில் காற்றும் , நிலவும் ஜோடி போட்டுக் கொண்டு அவனின் முரண்பாடான காதலை கண்டுகொண்ட மிதப்புடன் மீண்டும் பார்வையிட அங்கு இருந்தது ,

சிறு குழந்தை என சிரித்தவாறு உறங்கும் அனகாவும், அவளின் அருகில் இச்சாதாரி நாகமாய் மாறி இருந்த சந்திராதித்யனும்.


முரண்பாடுகளை கொண்டது தான் காதல்...! முரண்பாடுகளை தகர்த்தெறிவது தான் காதல் ...!
ஆக முரண்பாடே காதல்...!!!



-காதலாகும்
 

Thoshi

You are more powerful than you know😊❤
"நம்பிக்கை "
பெண்களின் வாழ்வை வழிநடத்தும்
ஐந்தெழுத்து உயிர்ப்பான மந்திரம் அது....!!!


அத்தியாயம் 11:


"என்னாச்சி யஷிமா?? கார்ல ஏறுற வரைக்கும் கேள்வியா கேட்டுட்டு இருந்த ...இப்போ எதுவும் கேக்காம, பேசாம அமைதியா வர?? " என தன் அருகில் எதையோ தீவிரமாய் யோசித்தபடி வந்தவளிடம் கேட்டான் மித்ரன்.

"அது அந்த 'டாமினி' " என்று ஆரம்பித்து பின் மாற்றி ," அந்த சூர்யா பத்தி சொல்லுடா . போற வழில சொல்றன்னு சொன்னல ..எப்போ சொல்லலாம்னு இருக்க?? " என அவனின் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டு வைத்தாள்.

"நீ எதையோ என்கிட்ட மறைக்குற மாதிரி இருக்குடா பாப்பா .ம்ம்ம்..! சரி நீ எதுவும் இப்போ சொல்ல வேணாம், நான் சூர்யா பத்தி தெரிஞ்சிகிட்ட விஷயங்கள சொல்றேன்" என்றவன் முன்பு விட்டதிலிருந்து சொல்ல தொடங்கினான்.


அன்று :

ஹரிஷின் முன் தான் திரட்டிய தகவல் அடங்கிய கோப்பை வைத்த சூர்யா , " நான் சொல்றத கவனமா கேளு ஹரிஷ். இந்த பவித்ரா மாதிரி இந்த ஊர்ல இதுவரைக்கும் பத்துக்கும் மேற்பட்ட பொண்ணுங்க இறந்துருக்காங்க .இதுல இந்த பத்து பேருக்குமே பதினஞ்சு வயசுக்கு கீழே தான் . அண்ட் இந்த ஒரு பாயிண்ட்ல தான் இத பத்தி விசாரிக்கணும்னு முடிவுபண்ணி நம்மளோட மேலாளர் என்னை அந்த ஊருக்கு அனுப்பிவைச்சாரு" என ஆரம்பப்புள்ளியை சொன்னவள் நிமிர்ந்து ஹரிஷை பார்க்க ,

"தெரியும் சூர்யா ...! நான் உன்னோட அந்த ஆர்டிகிள் பார்த்தேன். அந்த ஊர பத்தியும், இதுவரைக்கும் அந்த ஊர்ல ஏற்பட்ட இறப்புகள் , அதுல பதினஞ்சு வயசுக்கு கீழே இருக்க பொண்ணுங்க தொடர்ந்து இறந்ததுனும் ...அதுக்கு காரணம் யாரா இருக்கும்னு நீ தெளிவா எழுதிருந்தியே " என்றவன் தொடர்ந்து,

"இந்த பொண்ணுங்களோட சாவுக்கு காரணம் அந்த ஊரோட பண்ணையார் வீட்டு பசங்கனும் , அவங்க தான் இத்தனை பேரையும் மிரட்டி தங்களோட தேவையை தீர்த்துட்டு கொன்னுட்டதாவும் சொல்லி நீ ஆதாரத்தோட நிரூபிச்சி இருந்தாலும் , பண்ணையாரோட அரசியல் செல்வாக்குல இப்போ எல்லாம் அடிபட்டுபோச்சே . உன்ன இத பத்தி எழுதுறதுக்காக அனுப்புன மேலாளரே இப்போ இத விட்டுட சொல்லிட்டாரே"

-என்றவனின் முகம் சோகத்தை காட்டியது. அவள் இந்த கேசை போலீசுக்காரர்களை விட எவ்வளவு தீவிரமாய் ஆராய்ந்து குற்றவாளியை கண்டுபிடித்தாள் என்று உடனிருந்து அவனும் பார்த்திருந்தானே.

"அவர் விட்டுட சொன்னா நான் விட்டுடமுடியுமா . இத என்னால சும்மா விடமுடியாது ஹரிஷ். ஆம்பளைங்க அவங்க ஆசைப்படி வாழ மட்டும் தான் இந்த உலகம் இருக்கா ? பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக நாங்க எல்லாரும் மனசும் , உடலும் ரணப்பட்டு வாழணுமா ?? அதுவும் அந்த பொண்ணுங்களாம் இன்னும் உலகம்னா என்னனு முழுசா கூட உணராத சின்ன பறவை ஹரிஷ் . இறக்கை வளர்ந்த பிறகு வெட்டுறதே தப்புண்ணும் போது இறக்க முளைக்கும் போதே அந்த பறவையை அடிச்சி ருசிக்கிற இவனுனங்களாம் என்ன ஜென்மம் ஹரிஷ் .இதுல இந்த கேடு கெட்டவனுங்கள காப்பாத்த ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு வரானுங்க . அப்படி வரவனுங்களாம் மட்டும் ஒழுக்கமானவங்களாவா இருப்பானுங்க ?? தனக்கும் பொண்ணு இருக்கு வீட்ல மனைவி இருக்கா , தன்னை பெத்து பாதுகாத்து வளர்த்ததும் பொண்ணு தானனு யோசிக்கிற எந்த ஆம்பளையும் இந்த மாறி காரியம் பண்றவங்களுக்கு உதவமாட்டாங்க . ஆனாலும் இவனுங்களுக்கு உதவி கிடைக்குதுனா இந்த உலகத்துல எந்த ஆம்பளை தான் நல்லவன்"

-கோபத்தில் உடல் வியர்த்து ,முகம் சிவந்து வேகமூச்சுகளை விட்டபடி பெண்ணியம் என வரைக்குள் அடங்காத ... பெண்களுக்கான உண்மையான பாதுகாப்பிற்க்காக போராடி இயலாமையில் பெண்சிங்கமாய் கர்ஜிக்கும் சூர்யாவை கண்ட ஹரிஷ், தானாய் நாற்காலியிலிருந்து எழுந்து ஓர் அடி பின் வைத்திருந்தான் .

அதில் நிதானத்திற்கு வந்த சூர்யா, சட்டென்று தனது நாற்காலியில் அமர்ந்து குனிந்தபடி முன் நெற்றியில் இருகைகளையும் கோர்த்தபடி அமர்ந்து தன் உணர்வை கட்டுப்படுத்த முயன்றாள்.

அவளை கவனித்துக்கொண்டிருந்த ஹரிஷ் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டி , "ரிலாக்ஸ் சூர்யா ..! இந்தா முதல்ல கொஞ்சம் தண்ணி குடி " என்றான்.

அவனின் மென்மையான பேச்சில் நிமிர்ந்து அதை வாங்கி அருந்தியவள் அவன் முகத்தை பார்க்க , அவனோ ஆறுதலான புன்னைகையை பதிலளித்தான் .

அவளின் அமைதியில் அவன் , " ஓகே சூர்யா நம்ப இத பத்தி அப்றம் பேசலாம் . எனக்கு புரிது இது ரொம்பவே முக்கியமான பிரச்சனை தான் ...ஆனா, எனக்கு எல்லாத்தையும் விட நீ முக்கியம் . யூ ஆர் மை பிரின்ட் ...சோ இப்போ நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு " என்றவன் அங்கிருந்து நகர்ந்தான் .

இத்தனை நேரம் ஆவேசமாய் பேசிய பெண்சிங்கம் இப்பொழுது சிறுபெண்ணாய் தனது வலியை பகிர ஒருவரின் தோள் தேட, தற்பொழுது அது கிடைத்ததில் சந்தோஷமாய் அவனுக்கு விடை கொடுத்தவள் ,

"ஈவினிங் நம்ப எடிட்டிங் ரூம்க்கு வரமுடியுமா ஹரிஷ்..எனக்கு இந்த விஷயத்துல சில உதவி தேவைப்படுது .உன்னால எனக்கு உதவமுடியுமா" என தன் மனவுணர்வுகளை அடக்கி எப்பவும் மற்றவர்களை தள்ளி நிறுத்தும் அதே பார்வையுடன் கேட்டாள்.

நொடிநேரத்தில் அவளின் முகஉணர்வை அவள் மாற்றியிருந்தாலும் அதற்குள் அதை கவனித்திருந்ததில் , "இட்ஸ் மை பிளஷர்" என சிரிப்புடன் விடைபெற்றான் அவன்.

மணி ஏழை கடந்திருக்க அந்த பத்திரிகை அலுவகத்தில் ஓரிருவரே இருந்தனர். அப்பொழுதுதான் தனது வேலையை முடித்துக் கொண்டு அலுவகத்திற்க்குள் நுழைந்த ஹரிஷ் ,காலை சூர்யா சொல்லியது போல் எடிட்டிங் ரூமிற்க்கு சென்றான்.

பொதுவாய் அந்த அறையை பயன்படுத்துவது எடிட்டர் ஆன அவர்களின் மேலாளர் தான் . அவருக்கடுத்து சூர்யா தான் அதிகமாய் அவ்வறைக்கு செல்வாள் .

முதல்முறையாய் உள்ளே சென்றவனை யாருமில்லா அறையே வரவேற்றது. சூர்யா எங்கே என்ற யோசனையுடன் திரும்பி செல்ல நினைத்தவனை தடுத்தது அவ்வறையினிலே இருந்த மற்றோரு கதவின் அடியிலிருந்து வந்த வெளிச்சம் .

கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனை பார்த்து இயல்பாய் புன்னகைத்த சூர்யா , "வா ஹரிஷ் " என்றாள்.

ஆனால் அவ்வறையை கண்ட ஹரிஷால் தான் இயல்பாய் இருக்க முடியாமல் போனது.

அவ்வறையின் சுவர் முழுக்க ஏதேதோ காககித குறிப்புக்கள் , சில புகைப்படங்கல் இறந்த பெண்களின் புகைப்படம் , குற்றவாளிகளாய் சூர்யா கருதும் அந்த பண்ணையாரின் மகன் மற்றும் அவனின் நண்பன் புகைப்படம் , பண்ணைவீட்டின் புகைப்படம் என ஒரு பக்க சுவர் முழுதும் அடங்கப்பட்டிருந்தது.

அவளின் இந்த கேசுக்கான முயற்சிகளை அறிந்திருந்த ஹரிஷ் இதை எதிர்பார்த்தே வந்திருக்க , அவனை அதிர செய்தது சுவரின் மறுபாதி பக்கத்தை தன்னகத்தே படுத்தியிருந்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் .

"பெய்ட்" (paid) என்ற வார்த்தை பெரிதாய் நடுவில் கருப்பு எழுத்தில் இருக்க , அதில் 'ஐ' எனும் எழுத்தை வட்டமிட்டு அதன் மேல் 'எல்' என எழுந்திருந்தது .

அதை சுற்றி பல செய்தி துணுக்குகள் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்க .... ஒவ்வொரு துணுக்கிற்கு அருகிலும் ஒரு பெண்ணின் படம் இருந்தது . இவற்றை பார்த்தே அதிர்ந்து நின்றிருந்தவனை கலைத்தது சூர்யாவின் அழைப்பு .


"என்ன பாக்குற ஹரிஷ்..! இதுலாம் என்னனா ?? நீ அந்த ஆர்டிகிள் படிச்சனு சொல்லிருந்தல....அதுல நான் கடைசியா எழுதிருந்தேனே 'பெய்ட்' இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னனு தெரிஞ்சிக்க காத்திருங்கனு கவனிச்சியா ??" எனக் கேட்டாள்.

"ஆமாம்" என்பது போல் தலையசைத்தவன் , " அது நாளைக்கு நம்மளோட பேப்பர் ஓட முதல் பக்கத்துல விளம்பரமா போட சொல்லி சொல்லிருந்தாங்க ", என கூடுதல் தகவலையும் கூறினான் .

அவள் சிறிது நேரம் அமைதியா இருக்க ...தன்னை சமாளித்துக்கொண்டு ஹரிஷ் , " ஏன் சூர்யா...! இதுக்கான அர்த்தம் என்னனு கண்டுபிடிச்சிட்டியா ?? வேற என்னலாம் இந்த கேஸ்ல கண்டுபிடிச்சிருக்க ??"

அவனின் கேள்விக்கு பதிலாய் இந்த பக்கம் ஒட்டப்பட்டிருந்த பண்ணையாரின் மகன் மற்றும் அவனின் நண்பனின் புகைப்படத்தை எடுத்தவள் 'பெய்ட்' என்னும் வார்த்தையின் அருகில் ஓட்டினாள்.

அதை ஹரிஷ் கண்களை இடுக்கி யோசனையாய் பார்க்க, " நான் உன்கிட்ட காலைல ரொம்ப எமோஷனலா நடந்துக்கிட்டேன் ஹரிஷ் சாரி ...,! " என்றவளை ,அவன் குறுக்கிட அதை கண்டுகொள்ளாத சூர்யா,

"ஆனா நான் சொன்னது எதுவுமே தப்பில்லை ஹரிஷ் . நீ இன்னும் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு . இந்த பத்து பொண்ணுங்க இறந்ததை தவிர இந்த ஊர்ல இருக்க பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் உடலால மட்டுமில்லாம மனசாலையும் கற்பழிக்க பட்டிருக்காங்க ஹரிஷ். இதுல பெரிய கொடுமை என்னனா ஒவ்வொரு பொண்ணோட நிலைமைக்கும் காரணம் மத்த பொண்ணோட வீட்ல இருக்கவனா தான் இருப்பான் " என்றவளின் உதடு இடதுபுறம் வளைய ,

"மிருகம் கூட தன்னோட குடும்பத்தை பாதுகாக்க தான் நினைக்கும் ஆனா இவனுங்க ஒரு கூட்டத்தை உருவாக்கி ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு தங்களோட தோளையே அறுத்து திங்குற மனிஷமிருகங்க ஹரிஷ் " என்றபடி அந்த 'பெய்ட் ' என்ற வார்த்தை எழுதிருந்த அட்டையை பிய்த்து அவனின் முன்போட்டாள் சூர்யா.

பொண்ணுங்க எல்லோருமே தன்னோட புருஷன் , புள்ளைங்க எல்லாம் ராமரை மாதிரின்னு நினைச்சிட்டிருக்காங்க அப்போ விபச்சாரிக்கிட்ட போறதுலாம் யாருன்னுலாம் நான் கேட்கமாட்டேன் . ஏன்னா இந்த மாதிரி கேக்க கூடிய காலம் எப்பவோ மாறிடிச்சி .முன்னாடிலாம் புருஷன பத்தியும் புள்ளைங்க பத்தியும் தெரியாம பொண்ணுங்க ஏமாந்தாங்கனா ...இப்போ எல்லாம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணமுடியாம இந்த சமூகத்துக்கும், வாரிசுகளோட எதிர்காலத்துக்கும் அவங்கள சகிச்சிக்கிட்டு வாழுறாங்க.

இதுதான்... இந்த பொம்பளைங்களால என்ன பண்ணமுடியும் நம்பள சகிச்சிக்கிட்டு தான் இருக்கணும்ன்ற திமிர் குடுக்குற தைரியத்துல தான் அத்தனை ஆம்பளைங்களும் தன்னோட பொண்டாட்டிய மட்டுமில்லாம தங்களை தேவைய தீர்க்க அத்தனை பொண்ணுங்களையும் அடிமையாக்கி ஆளப் பாக்குறாங்க .

ஹரிஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் இருக்க , அவளே இதுவரை கண்டுப்பிடித்தது அனைத்தையும் அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள் .

"உனக்கு முதல்ல இருந்து சொன்னா தான் புரியும் . ஹரிஷ்..! நான் அந்த ஊருக்கு போனப்போ முதல் முதலா என்னை யோசிக்க வச்சது இந்த வார்த்தை தான் . பார்க்குற அம்பதுல முப்பது வண்டில இந்த வார்த்தை இருந்துச்சி...அது ஏன்னு தெரிஞ்சிக்கணும்னு என்னோட உள்ளுணர்வு சொல்ல விசாரிக்க ஆரம்பிச்சேன். பாதிபேர் எதுவும் சொல்லலைனாலும் சிலபேர் அதுவும் இளைஞர்கள் தங்களோட நண்பர்கள் சொல்லி இத ஓட்ட ஆரம்பிச்சதாகவும் , இது நண்பர்களுக்குள்ளான விளையாட்டு எனவும் மாற்றி மாற்றி சொன்னாங்க" என சொல்லிக்கொண்டிருந்தவள் இடையில் ,

"அவங்களே அவங்களோட குடும்பத்தோட சந்தோஷத்தை ஒட்டுமொத்தமா துடைக்குறதுக்கு குழி தோண்டுறதுதான் அந்த விளையாட்டு . அது என்ன விளையாட்டுனு உனக்கு புரிதா ஹரிஷ் " என கேட்டாள்.

அவனோ அவள் சொல்லும் அனைத்தையும் மிகவும் கவனத்துடன் கேட்டபடி "நீயே சொல்"என்பது போல் பார்த்தான் .

"அவங்க தங்களோட வீட்டு பெண்களை பகடையா ஆக்கி ஆடுற விளையாட்டு ஹரிஷ் .அதுல தோத்தவன் ஜெயிச்சவன் ரெண்டுபேரோட வீட்டு பெண்களுமே ஆட்டத்துல வெட்டப்படுறாங்க அதுவும் அவங்களுக்கே தெரியாமல் ..."

இவன் பேர் சூரஜ் , பண்ணையாரோட பையன் ....இவன் ஆதி ஒரு தொழிலதிபரோட மகன் , இவனுங்க ரெண்டு பேர் தான் இந்த ஊர்ல நடக்குற இத்தனை அநியாயத்துக்கு காரணம் ஹரிஷ் " என இருவரின் புகைப்படத்தை காட்டியவள் தொடர்ந்து,

" இவனுங்க தான் இந்த வார்த்தையை உருவாக்கி தங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு அவங்களோட திட்டத்தை சொல்லி முகநூல்ல ஒரு பக்கத்தை உருவாக்கிருகாங்க.

இவனுங்க மோசமானவனுங்க தான் ஆனா அது முகநூல்ல தெரியப்போறதில்லையே. ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு ஊர்ல இருக்க ஒவ்வொருத்தரையும் அந்த பக்கத்துல இணைய வச்சவனுங்க , ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருததர்னு தங்களோட நட்பு வட்டத்தை வச்சி அவங்க கூட பழகி எந்தவித சந்தேகமும் வராத அளவுக்கு அவங்களோட மொத்த குடும்ப விவரத்தையும் சேகரிச்சிர்க்காங்க".

"என்ன சொல்ற சூர்யா ?? இந்த அளவுக்கு எதுக்கு பண்ணனும்... அதும் ஒரு ஊர்ல இருக்க அத்தனை பேரோட விவரங்கள் எதுக்கு ?? இது தான் நீ சொன்ன விளையாட்டா " என எதுவும் அறியா அப்பாவியாாய் கேட்டுவைத்தான் .

"விளையாட்டை இதுக்கு அப்றம் தான் ஆரம்பிக்கவே செஞ்சிருக்காங்க ஹரிஷ் " ....

"இதுல பொண்ணுங்க இருக்க வீடாவும், இளம் தம்பதிகள் இருக்க வீடாகவும் பிரிச்சவன் அந்த வீட்ல இருக்கவங்கள அவங்களோட பேசுற தன்னோட ஆளுங்களை வச்சி இந்த வார்த்தையை அவங்க வண்டில ஒட்டவச்சானுங்க. அடுத்து என்ன யார்யாருக்கு எந்த எந்த வீடுன்னு சொல்லி அந்த வீட்டு ஆண்கள் கிட்ட இருந்தே அந்த பொண்ணுங்களோட போன்நம்பர்அ எடுத்து அவங்களை தன்னோட வலைல விழவைச்சி தங்களோட ஆட்டத்தை ஆராம்பிச்சிட்டானுங்க."

பேசிக் கொண்டிருந்தவள் ஒரு பென்ட்ரைவை எடுத்து அங்கிருந்த தனது லேப்டாபில் பொறுத்த , அதிலிருந்து ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது .

"அக்கா ...அக்கா...! நீங்க தான் எங்களை காப்பாத்தணும்....தயவு செஞ்சி எங்களை இந்த நரகத்துல இருந்து காப்பாத்துங்ககா.யாருனே சரியா தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி அவங்க பேச்சிலே மயங்கி காதலிச்சது தப்புதான் கா .. அதுக்காக தான் தினம் தினம் நரகத்தை அனுபவிக்கிரதையும் பொறுத்துகிட்டேன் . கொஞ்சம் கூட காதல் இல்லாம பொய்யா நடிச்சு ஏமாத்தி உடலை சூறையாடறத விட கொடுமையான நரகம் வேற என்ன ?? யாருனே தெரியாதவன் கடத்தி கற்பழிக்க படுறவளாச்சி உடலளவுல தான் கற்பழிக்கப்படுறா. ஆனா என்னை மாதிரி பொண்ணுங்க ஒருத்தன உண்மையா நம்பி நேசிச்ச பாவத்துக்கு என்னோட மனசையும் கொன்னு ஒவ்வொருநொடியும் மனசாலையும் கற்பழிச்சி ...அது நரகத்தை விட கொடுமையா இருக்குகா ...அத கூட பொறுத்துகிட்டேன் ஆனா ஒருத்தனை காதலிச்சு இத்தனை கொடுமையை அனுபவிக்கிறவளை இன்னொருத்தனை சந்தோஷப்படுத்த சொல்லும் போது சாகக்கூட முடியலைகா...! இந்த கொடுமையை நான் மட்டுமில்லாம இந்த ஊர்ல பல பொண்ணுங்க அனுபவிக்கிறாங்க கா .தப்பா படம்புடிச்சி வச்சிருக்கிறத வெளியிட்டடா கூட பரவாலைனு தைரியமா சொன்ன சில பொண்ணுங்களை கூட குடும்பத்தை எதாவது பண்ணிடுவேனு சொல்லியே தங்களுக்கு பணியவச்சிட்டாங்க கா . ப்ளீஸ் கா உங்கள கெஞ்சிக்கேட்டுகிறேன் எங்களை இந்த மிருங்கங்க கிட்ட இருந்து காப்பாத்துங்கக்கா . உடம்பெல்லாம் காயத்தோட , மனசெல்லாம் ரணமாகி கிடைக்கிறோம் கா ...ப்ளீஸ்கா...ப்ளீஸ் ....."

என அக்குரல் பேசிமுடிக்க அதை தொடர்ந்து வெறும் அழுகுரல் மட்டுமே கேட்டிருந்து பின் அதுவும் இன்றி அமைதியாகியது .

சூர்யா கண்களை மூடி அமர்ந்திருக்க அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியை அழுந்த பிடித்திருந்ததிலே அவள் உணச்சிகளை அடக்கி கொண்டிருக்கிறாள் எனத் தெரிந்தது .

எழுந்து நின்ற ஹரிஷ் தனது சட்டையை சரிசெய்தவன் வலது கையை பேண்டின் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, இடதுகையால் அந்த பென்ட்ரைவை எடுத்தான் .

அதில் கண்திறந்த சூர்யா , " சாரி ஹரிஷ்...! டைம் ரொம்ப ஆகிடுச்சா " என்றபடி அவளும் எழுந்தவள் , அவனிடம் இருந்து அதை வாங்கி தனது கழுத்தில் இருக்கும் சைனின் டாலரை திறந்து அதில் வைத்துக்கொண்டாள் .

ஹரிஷின் பார்வை அதிலே இருக்க அதை பார்த்த சூர்யா , " என்னாச்சு ஹரிஷ்..?? ஏன் அப்படி பாக்குற ?" என அவனை கலைத்தவள் ,

"இந்த பென்ட்ரைவ் எனக்கு பவியோட கேசை பத்தி விசாரிக்கும்போது என்னோட வீட்டுக்கு யாரோ அனுப்பிருந்தாங்க . இத கேட்டதுக்கு அப்றம் தான் நான் இதுல தீவிரமா இறங்கி இந்த விஷயங்களையும் , இதுக்கு அந்த இரண்டு பேரும் தான் காரணம்னு கண்டுபிடிச்சேன் . அண்ட் நான் டிஜிபி கிட்ட பேசிட்டேன் ஹரிஷ் , நாளைக்கு காலைல இந்த பென்ட்ரைவ் அண்ட் நான் சேகரிச்ச தகவல் எல்லாம் அவர்கிட்ட குடுக்கணும் " என்று பேசியப்படியே அவனை அழைத்துக்கொண்டு வெளிவந்தாள்.


அமைதியாய் அவள் சொல்வதை கேட்ட ஹரிஷ் , அவள் தனது ஸ்கூட்டியை எடுப்பதை பார்த்து அருகில் வந்து தடுத்தவன் ,
"சூர்யா ...! நீ இப்போ தனியா போகவேணாம ...என்கூட வா நான் உன்னை வீட்ல விட்டுட்டு போய்டுறேன் " என அழைத்தான் .

அவனை பார்த்து சிரித்த சூர்யா, " இல்லை ஹரிஷ்...!நான் என்னோட வண்டிலையே போய்க் கொள்கிறேன் " என மறுக்க ,

"நீ ஏன் ஆண்களை நம்பமாட்டேனும் , அதுதான் நல்லதுனும் இப்போ எனக்கு நல்லா புரிது . ஆனா...! நீயும் என்னை புரிஞ்சிக்கோ.. நீ சொன்னதை எல்லாம் கேட்டா இது ரொம்ப பெரிய ஆளுங்க எல்லாம் சம்பந்தப்பட்டதுனு தெரிது ...உனக்கு ஆபத்து அதிகம் சூர்யா ...என்னால இப்போ உன்னை தனியா விடமுடியாது "என வற்புறுத்தினான் .

அவனின் வற்புறுத்தலில் இரண்டுவருடமாய் அவனை அறிந்திருந்தவள் அவனுடன் வருவதற்கு சம்மதித்தாள்.
பேசிய விஷயங்களின் பாரம் தாங்கமுடியாமல் இருவரும் அவரவரின் யோசனையில் இருக்க , வண்டியின் இரைச்சலும்...காற்றின் ஓசையும் தவிர இருவரிடையே மவுனம் நிலவியது .

பேசிக் கொண்டிருந்ததில் நேரம் இரவு பதின்னொன்னை கடந்திருக்க , வீதிகள் இருளால் மறைக்கப்பட்டு அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றுக் கொண்டிருந்தன .

திடீரென ஏதோ ஒன்று அவர்கள் சென்றுகொண்டிருந்த வண்டியின் டயரில் எறியப்பட, ஹரிஷ் சுதாரிப்பதற்குள் இருவரும் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருந்தனர்.

விண்ணென்று வலித்த பின்தலையை தாங்கியபடியே எழுந்த சூர்யாவின் கழுத்திலிருந்த செய்னை பறிக்கபார்த்தான் ஒருவன். அவனை இதற்க்கு முன் பார்த்தது போல் இல்லாமல் போக இவன் நகையை பறிப்பவன் போல என்றெண்ணியவள் தன்னை சமாளித்து தன் அருகிலிருந்த கற்களை எடுத்து அவனை சரமாரியாக தாக்க துவங்கினாள்.

அவளின் தாக்குதலை தடுத்தபடி பதி்லுக்கு தாக்கமுற்பட்டவனை ,இயல்பாய் அவளிடம் இருக்கும் தைரியத்தில் கற்றிருந்த தற்காப்பு கலைகள் கை குடுக்க அவனை வெற்றிகரமாய் மண்ணை கவ்வவைத்தாள். அவளின் செயலில் அவன் தடுமாறி எழுவதற்குள் , ஹரிஷ் எங்கே என்பதுபோல் பார்த்தவள் அவன் எதிரில் மற்றோருபுறத்தில் மயங்கிருப்பதை கண்டு அருகில் சென்றாள்.

"ஹரிஷ்...ஹரிஷ்...!" என அழைக்க , அவன் கண் திறக்காததில் அவனின் தலையை மடியில் வத்தபடி "ஹரிஷ்..! சீக்கிரம் எழுந்துரு ஹரிஷ் ...ப்ளீஸ்...நம்ப இங்க இருந்து போயாகனும்" என அவனின் கன்னத்தை தட்டினாள்.

அதற்குள் அவளை தாக்க வந்தவன் தன்னை சுதாரித்து எழுந்துவந்து, தனது கையில் இருந்த இரும்பு ராடால் அவளின் தலையில் அடிக்க , ஏற்கனவே வண்டியிலிருந்து விழுந்தபொழுது பின்மண்டையில் அடிபட்டிருக்க , இப்பொழுது இதுவும் சேர்ந்து ரத்தம் அதிகமாய் வழிய ஆரம்பித்தது .

அவன் அடித்ததில் தலை சுத்த தடுமாறியவளின் கழுத்திலிருந்த செயினை இழுத்து அறுத்தெடுத்தான் அவளின் மடியில் இருந்த ஹரிஷ். வலியின் மயக்கத்தில் சொருகிய கண்களை விரித்து அதிர்ந்து பார்க்க , அவளின் மடியிலிருந்தபடியே அவளை கண்டு வில்லத்தனமான கண்களை சிமிட்டினான் அவன்.

"ஏய் ஹரி ..! கம் ஒன் மேன்....நம்மளுக்கு வேண்டியது கிடைச்சிடிச்சாசில ...வா இங்கயிருந்து கிளம்புவோம் " என எதிரிலிருந்தவன் நீண்ட நாட்கள் பழகியது போல் அழைக்க , அதில் மேலும் அதிர்ந்தவள் மூச்சுவிடக்கூட சிரமப்பட்டபடி நீண்ட மூச்சுகளாய் இழுத்து இழுத்து விட்டாள்.

அவளின் நிலையை பொறுமையாய் பார்த்த ஹரிஷ் , " என்ன சூர்யா..! அதிர்ச்சியா இருக்கா??? ம்ம்ம்...எனக்கும் உன்னை இப்டி பாக்குறதுக்கு மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா ?? என்ன பண்ணமுடியும் ...நீ தேவையில்லாம எங்க விஷயத்துல நுழஞ்சிட்டியே??" என்றவனை எதிரிலிருந்தவன் மீண்டும் அழைத்தான்.

"ஷ்...அஸ்வந்த் கொஞ்ச நேரம் அமைதியா இருடா..! காதலிச்சவ கிட்ட காதலை சொல்லாம இருக்குறது எவ்வளவு வலினு உனக்கு தெரியாது. நான் அத அனுபவிச்சிருக்கேன் ... ஆனா ..இவ செத்துட்டா என் ஆயுள் முழுக்க காதலை சொல்லாத இந்த வழியை என்னால அனுபவிக்க முடியாது அஸ்வந்த் ...நான் இப்போ சொல்லியாகணும் " என அவனிடம் சொல்லியவனிடம் இருந்து நகர்ந்திருந்தவள் எழுந்து ஓட பார்க்க ,


ஒரே இழுப்பில் அவளை இழுத்து தனதருகில் விழச்செய்தவன் அவள் எழாதவாறு அவளின் மேல் படர்ந்தான். உடலின் வழியை விட, முதல் முறையாய் ஒருவனை நம்பி அந்த நம்பிக்கை பொய்த்து போன வலி அதிகமாய் இருக்க , ஹரிஷின் இந்த செயல் அவளை முற்றிலும் பலவீனமாக்கி இருந்தது. சுத்தி நடப்பதை உணரமுடியாத மயக்கத்தில் அவள் ஆழ , அவனோ அவளின் முகத்தைதான் பார்த்திருந்தான் .

"நாங்க ஒருவார்த்தை சொன்னா அதை செஞ்சி முடிக்க பலபேர் இருந்தும்... உனக்காக தான்டி அந்த வேலைக்கு நானே வந்தேன். ரெண்டுவருஷதுக்கு முன்னாடி தற்செயலாய் உன்னை பார்த்தவன் தான்டி ...அந்த நிமிஷமே உன்கிட்ட விழுந்துட்டேன் . அந்த நிமிஷத்துல இருந்து உன்னைய என் உலகமா தான் பார்த்தேன் .. உன்னை அவ்வளவு நேசிச்சேன்டி...உன்னை என் கைக்குள்ளையே பொத்தி எப்பவும் என் கூடவே வச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன் " என கண்கள் முழுக்க காதல் வழிய சொன்னவன் ...அவளின் கன்னத்தை தட்டி ,

"என்னை பாரு சூர்யா ..! நான் உண்மைய தான் சொல்றேன் நீ வேணும்னா அஸ்வந்த்கிட்ட கேட்டுப்பாரேன்.நான்உன்னை என்னிக்கு பார்த்தேனோ அந்த நிமிஷத்துல இருந்தது வேற எந்த பொண்ணையும் தொட்டதே கிடையாதுடி . உன்னை எனக்கு அந்த அளவுக்கு பிடிச்சுதுடி...ஆனா நீ எங்க கூட்டத்தையே பிடிக்க பார்த்தா நான் எப்படி டி சும்மா இருப்பேன்...எப்படி சும்மா இருப்பேன்??" என வெறிபிடித்தவன் போல் கத்தியவன் ,

"ஏன்டி அப்படி பண்ண ?? ஏன்டி அப்படி பண்ண??" என கேட்டபடி மாத்தி மாத்தி அவளின் இரு கன்னங்களிலும் அறைந்து ,"இப்பவே...இந்த நிமிஷமே நீ எனக்கு வேணும்டி " என கர்ஜித்தவன் மிருகமாய் மாறி அவளின் ஆடைகளை கிழித்தெறிந்து அவளை சூராடினான் .

அவன் அறைந்ததில் சிறிதாய் மயக்கத்திலிருந்து வெளிவந்தவள் , தனது பெண்மையையாவது காக்கவேண்டுமென முயல, அவளின் முயற்சிகளை சிதறடித்தவன் அவளை ஆள தன்னால் எதுவும் செய்யமுடியாமல் புயலில் சிக்கிய படகாய் ஆனவள் உடல் முழுக்க ரணத்துடன் மீண்டும் மயக்கமானாள்.

தனது வெறி தீரும் வரை அவள் மயங்கிருப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை மீண்டும் மீண்டுமாய் ஆண்டவன் , பலமணி நேரம் கழித்தே அவளிடம் இருந்து விலகி எழுந்தான் .

அவன் பேசும்பொழுதே அங்கிருந்த தனது வண்டியை எடுத்துக்கொண்டு எவரேனும் வருகிறார்களா என சிறிது தூரம் வரை மாறி மாறி வேறுவழியில் சென்றுகொண்டிருந்த அஸ்வந்த் , ஹரிஷ் எழுந்ததை கண்டு வண்டியை அருகில் நிறுத்தி இறங்கினான் . திரும்பி மயக்கத்தில் கலைந்த ஆடையுடன் இருந்தவளை கண்டவனுக்கு எச்சில் ஊற , கண்களில் காமத்துடன் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தவனை தடுத்தது ஹரிஷின் கரம்.

இடவலமாய் தலையசைத்தவன், "உனக்கு தேவையானது கிடைச்சிடிச்சி அஸ்வந்த்...! அவளை தொடணும்னு நினைச்சி கூட பார்க்காத ... அவ எனக்கனவ . உனக்கு தெரியுமா அவ இதுவரைக்கும் யாரையும் நம்புனது இல்லை ..என்னை...என்னை மட்டும் தான் நம்புனா ...என் காதல் அந்தளவுக்கு புனிதமானது அஸ்வந்த் " என கேவலமாய் கர்வம் கொண்டவனை மிருகத்துடன் கூட ஒப்பிடமுடியாது .

பெற்ற தந்தையை கூடபெண்கள் நம்ப வாழ முடியாத இக்காலத்தில் ...ஒருவனை நம்புகிறாள் எனில் அதைவிட அவள் அவனுக்காய் என்ன செய்துவிட முடியும் . பெண்களின் நம்பிக்கையே அவர்களை களவாடும் ஆயுதமாய் பயன்படுத்தும் ஆண்கள் இவ்வுலகத்தில் வாழவே தகுதியற்ற உயிரினங்கள். அவனின் இறப்பு நிச்சயம் கொடூரமானதாகவே அமையும்.


பேசிய படி ஹரிஷ் முன் செல்ல ,அவனின் பேச்சை சட்டை செய்யாத அஸ்வந்த் அவளின் அருகில் செல்ல , திரும்பி பார்த்த ஹரிஷ் ,அஸ்வந்த் நிறுத்திவைத்திருந்த வண்டியின் சைலன்சரை பிடுங்கியவன் வேகமாய் அஷவந்தை தள்ள அவன் சிறிது தள்ளி சென்று விழுந்தான்.


"இவ அழகு தான உன்னைய தூண்டுது " என கேட்டபடியே அந்த சைலன்சரை அவளின் முகத்தில் விளாசினான். அதன் சூட்டில் ஒருபக்க முகம் வெந்து சுருங்க , அலறியபடியே மறுபக்கம் உடலை சுருட்ட , மீண்டுமாய் அந்த சைலன்சரை தன் முன் தெரிந்த அவளின் முதுகில் வீசினான்.

மித்ரன் அனைத்தையும் சொல்லி முடிக்க கண்கள் சிவந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட கேவி கேவி அழுதபடி இருந்தாள் யஷி.

"இதுல பாதி விஷயம் சூர்யாவோட மேலாளர் சொன்னது ...மீதி அவளை அந்த ஹோச்பிடல்ல டீரீட்மென்ட் குடுத்த டாக்டர்ஸ் சொன்னது....யாரோ அவளை அங்க கொண்டு போய் சேர்த்திருக்காங்க... யஷிமா! அவ அங்க இருக்கிறதே கொஞ்ச மாசத்துக்கு முன்னாடிதான் அந்த மேலாளருக்கு தெரிஞ்சிருக்கு . அவர் சூர்யாவை தன்னோட பொண்ணுமாதிரி தான் பாத்துட்டு இருந்திருக்கார் ..அவ அங்க இருக்குது வேற யாருக்கும் தெரியாது டா "

-என தொடர்ந்து அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாலும் கலங்கிய அவனின் கண்கள் வண்டியை ஓட்டமுடியாமல் தடை செய்தது.

கண்களை துடைத்துக் கொண்டவன் , கேவிக் கொண்டிருந்த யஷியை தன் தோளோடு அணைத்துக்கொண்டு வண்டியின் வேகத்தை அதிகப்படுத்திருந்தான்.



-காதலாகும் ...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
சோர்ந்துபோகும் நேரம்தனில்
தோள் சாய்ப்பவனின் சிறு பிரிவே இருவருக்கும் உயிர்போகும் வலிகொடுக்க ...!!!
இனி அவளின் நினைவு மட்டுமே அவனின் வாழ்வாயின் அது அவனை
உணர்வற்ற ஜடமாய் மாற்றிவிடுமோ

...??


அத்தியாயம் 12 :


சின்னம்பாளையம்
:

"என்னயா இது ..?? மொத்த ஊரும் இங்கதான் இருக்காங்க போல ..." என கூடியிருந்த கூட்டத்தை பார்த்து தன்னருகிலிருந்த காவலதிகாரிடம் கேட்டார், தலைமை காவல் அதிகாரி.

"ஏற்கனவே போனவாரம் தான சார் இங்க ரெண்டு பேர் செத்துப் போயிருந்தாங்க .. என்னதான் போதைல அடிச்சிக்கிட்டு செத்தாங்கனு நம்ப சொன்னாலும் பலவருஷமா அவங்க அட்டகாசத்தை பார்த்தவங்களாச்சே ...இதுல ஏதோ மர்மம் இருக்கும்னு நினைச்சி பார்க்க வந்துருக்காங்க சார்..!"

"அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்மந்தம் ?? ஆமா இந்த ரெண்டு பேரும் யாரு என்னனு தெரிஞ்சிதா ?"

"அதுதான் சொல்ல வந்தேன் சார்..! இவனுங்க ரெண்டுபேரும் இந்த ஊரே இல்ல சார், செத்துப்போன பண்ணையாரோட மகன் கூட தான் இவங்கள ரெண்டுமூணு தடவை பார்த்ததா சொல்றாங்க ..!"

"ம்ம்ம்...! சரி சரி இது யார் இடம் ??நைட் யார்லாம் இந்த பக்கம் வந்ததுனு விசாரிங்க...மொதல்ல இந்த கூட்டத்தை கலச்சிவிட்டுங்க"

- என்றவர் அவ்விடத்தில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என ஆராய ஆரம்பித்தார் .


அப்பொழுது அங்கு தங்களின் காரை நிறுத்திய ஜான்,
"பாஸ்...!போலீஸ் நிறைய பேர் இருக்காங்க பாஸ் ....! நீங்க இங்கயே இருங்க , நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று சொன்னவனுக்கு முறைப்பை பரிசளித்தவன் ,


"அவங்க ஒருநாளைக்கு பல குற்றவாளிகளை பாக்குறவங்க ஜான்...! எல்லோரையும் நியாபகம் இருக்க வாய்ப்பில்லை ...அண்ட் மோர் ஓவர் போலீஸ் ஆஹ் பொறுத்தவரை நான் ஒரு குற்றவாளியும் இல்லை " என்றபடி அவன் சடலங்களை சுற்றி நின்றுக் கொண்டிருந்த கூட்டத்தினுள் கலந்தான் .

சடலங்கள் மேல் துணி போத்தியபடி இருக்க... முகம் தெரியாததில் அவ்விருவரும் அஸ்வந்த் மற்றும் ஹரி ஆக இருக்க கூடாதென நினைத்தபடியே போலீசார் அவர்களின் முகத்தை காட்டும் நேரத்திற்காய் காத்திருந்தான் .

சிறிது நேரத்திலே சடலங்களை அகற்ற சொல்லி மேலதிகாரி உத்தரவிட , பிணங்களை ஸ்ட்ரெச்சரில் வைத்தனர் .

"ஷிட்...! அவனுங்க தானான்னு பார்க்கமுடியலையே " என 'பாஸ்' முனங்க , ஒரு கேலியான சலசலப்புடன் காற்று வேகமாய் சுழன்றது .

காற்றின் வேகத்தில் பிடித்திருந்த பிடியை மீறி இரண்டு சடலங்களின் மேல் போத்தி இருந்த துணியும் பறந்தது.

அதில் சடலங்களை பார்த்த மக்கள் அனைவரும் அதன் அகோரத்தில் கண்களை இறுக்க மூடிக்கொள்ள , 'boss' என்றழைக்கப்பட்டவன் இமை கூட அசைக்கமுடியாமல் சிலையாய் சமைந்துவிட்டான் .

இரண்டு சடலங்களும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் , உடலின் பல இடங்களில் தோல்கள் ஆங்காங்கே பிய்க்கப் பட்டு எலிகள் பல ஒன்று சேர்ந்து குதறியதை போல் காணப்பட்ட அவ்விடங்களில் ரத்தம் காய்ந்து பச்சை நிறம் கொண்டிருந்தது .

பாஸ் மற்றும் ஜான் இருவரும் சடலத்தின் அருகிலே நின்றிருக்க , ஒரு சடலத்தின் பக்கவாட்டில் தோல் சிறிது கருகிருந்தது தெரிந்ததோடல்லாமல் ,அவர்களின் நாசியையும் கருகிய வாடை தீண்டியது.

மற்றொரு சடலத்தின் மணிக்கட்டில் கூர்மையான பொருளால் கிழித்ததை போல் ரத்தம் கோடாய் உறைந்து சுற்றிலும் பரவிஇருந்தது .

அந்த கையில் தொங்கிக் கொண்டிருந்த கை சங்கிலியை கண்ட ஜான் பயத்துடன் பாஸை பார்க்க, அவனின் முகமோ உணர்வுகளை அடக்கிக் கொண்டிருந்தது .

"ஜான் ...! நம்ப கிளம்பலாம் " என்று மட்டும் சொல்லியவன் வந்தது போலவே எவரும் கவனிக்கும் முன்பு விரைவாய் கூட்டத்தை கடந்து வெளிவந்தான் .


"பாஸ்...! அது நம்ப அஸ்வந்த் & ஹரி தான் பாஸ் ...நீங்க தான...நீங்க தான அந்த கைச்சங்கிலியை அஸ்வந்த்துக்கு போன வருஷம் கொடுத்தீங்க ??...அது அஸ்வந்த்னா கூட இருக்கிறது ஹரியா தான் இருக்கணும் ??"

"ஆமா ஜான்...! நான்தான் கொடுத்தேன் ...அத எடுத்துக்காக கொடுத்தேனும் எனக்கு நியாபகம் இருக்கு ஜான் " என்றவனின் உதடு இடதுபுறமாக வளைந்து , "சூர்யா" என முனங்கியது.

அவனின் முனங்கல் சரியாய் கேட்க, "சூர்யாவா??...பாஸ்....!என்ன சொல்றிங்க ??" என புரியாமல் கேட்டான்.

"ஜான்...! உனக்கு நியாபம் இருக்கா ஒரு வருஷத்துக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் சூர்யாவை பத்தி சொன்னது???" என கேள்விகேட்டு தொடர்ந்து அவனே பதிலும் சொல்ல ஆரம்பித்தான்,

"என்ன சொன்னானுங்க?? ஹரிஷ் அவளோட முகத்தையும் , முதுகையும் சூட்டுல பொசிக்கியும் ....அஸ்வந்த் அவளோட மணிக்கட்டுல அறுத்ததாவும் சொன்னாங்கள?? ...ஜான் ...! நீ அந்த சடலங்களை கவனிச்சியா ஒருத்தனோட கை மணிகட்டு அறுத்திருக்கு , இன்னொருத்தனோட முதுகு பொசிங்கிற்குன்னு நினைக்குறேன் ...அப்போ இதுக்கு பின்னாடி அன்னிக்கு இருந்த சூர்யாவோட நிலைமை ஏன் காரணமா இருக்கக்கூடாது "

"பாஸ்ஸ்ஸ்......! அப்போ அது அஸ்வந்த் அண்ட் ஹரி தானா ??? ஆனா...ஆனா எப்படி பாஸ் அந்த சூர்யாக்கு இவங்க பண்ண அதே இவங்களுக்கு நடந்துச்சு??" என நம்ப முடியாமல் தவித்தவன் தொடர்ந்து,

"நான் அன்னிக்கே சொன்னனே பாஸ் மறுநாள் இவங்க சொன்ன இடத்துல எந்த பிணமும் இல்லனு . அப்போ அன்னிக்கு இவங்க ரெண்டு பேரும் கிளம்புனதுக்கு பிறகு யாரோ அவளை காப்பாத்திற்க்கணும்.பாஸ்...அப்போ சூர்யா தான் இதுவரைக்கும் நடந்த எல்லாத்துக்கும் காரணம்ல " என யோசித்து யோசித்து பேசினான்.

சிறிதுநேரம் அமைதியாய் இருந்த பாஸ், "இல்ல ஜான்...! சூர்யாவா இருக்காது.... இவங்க சொன்னதை வச்சி பார்த்தா சூர்யா இந்த ஒரு வருஷத்துல சரியாகி பழிவாங்குறதுக்கு வாய்ப்பில்லை ஜான். இதுல சூர்யாக்கு சம்பந்தப்பட்ட வேற யாரோ தான் இருக்கணும் " என்றான்.


சரியாய் அவ்வேளையில் ஓர் கார் புழுதியை கிளப்பி விட்டபடி அவ்விடத்திற்கு வந்து நின்றது .

புழுதியில் கண்களில் மண்புகுந்து எரிச்சலை கிளப்ப ...கண்களை கசக்கியபடியே நிமிர்ந்தவர்களின் பார்வையில் விழுந்தாள், அப்பொழுதுதான் அந்த காரை விட்டு இறங்கிய யஷி .

மித்ரனும் , யஷியும் இவர்களை தாண்டிச் செல்ல ...அதுவரை யஷியையே பார்த்திருந்த இருவரும் "இவளா...???" என ஒரே நேரத்தில் முனங்கினர்.

கடந்து சென்ற மித்ரனின் காதில் இவர்களின் முனங்கல் விழ , திரும்பி இருவரையும் சந்தேகமாய்.. கண்களின் கேள்வியுடன் பார்த்தான்.

இருவரின் பார்வையும் யஷியின் மேல் பதிந்த விதமே தவறாய் இருக்க அவன் மனம் துணுக்குற்றதில் கைகள் தானாய் யஷியின் தோளை சுற்றி பாதுகாப்பாய் அணைத்தது .


--------------------------------------------------------------------------------


மாலை நான்கு மணி :

யோசனையுடன் அமர்ந்திருந்த மித்ரன், "அது ஏன் அந்த ஹரிஷா இருக்கக்கூடாது ??" என்ற யஷியின் கேள்வியில் அவளை புரியாமல் பார்த்தான் .

"என்னடா பாப்பா ...! என்ன சொல்ற ??"

"அதான்டா...! இன்னிக்கு பார்த்தோமே அந்த ரெண்டு சடலம் ...அது ஏன் அந்த அஸ்வந்த் அண்ட் ஹரிஷோடதா இருக்க கூடாது??"

"யஷிமா நீ என்ன பேசுற ?? ஹரிஷ் எங்க இருக்கானே யாருக்கும் தெரியாது ...சூர்யாவோட மேலாளர் கூட எந்த ஊர்க்கு அவன் போனான்னு சொல்லமுடியாது சொல்லிட்டாரு !!"

"இல்லடா ...! என்னமோ எனக்கு நீ சூர்யா பத்தி சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருந்தாலும் மனசுல எதோ ஒருமூலைல அந்த பாவிங்களுக்கு தண்டனை கிடைச்சிருக்குமுன்னு தோணுச்சு . அண்ட் அந்த எரிஞ்ச வீடு அத கூட நான் இதுக்குமுன்ன பார்த்தமாதிரி இருந்துச்சுடா " என்றாள் .

"யஷிமா...! நம்ப இந்த ஊருக்கு வந்தே முழுசா ஒருவாரம் கூட ஆகலை . நாம இங்க வரணும்னு முடிவுபண்ணி உன்கிட்ட சொன்னபோதுதான் உனக்கே இப்படி ஒரு ஊர் இருக்குனே தெரிஞ்சிருக்கும் ,அப்றம் எப்படி இந்த வீட உனக்கு தெரிஞ்சிருக்கும் ??"

"இல்லடா..! இன்னிக்கு அந்த போலிஸ்காரர் சொன்னதை கேட்டல , ரெண்டுபேரோட காலும் வெட்டப்பட்டு உடல் எல்லாம் ரொம்ப கொடூரமா தோலெல்லாம் பிஞ்சி ஒருத்தனுக்கு முதுகுகூட கருகிப்போனதா சொன்னாருல்ல . அண்ட் ...மித்...மித்ரா ..அது "என தடுமாறியவள்,

"நீ சொன்னமாதிரியே சரியா ஒருவருஷத்துல சூர்யாக்கு நியாயம் கிடைச்சிச்சிருச்சி இப்போ உனக்கு சந்தோஷமானு உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்டுச்சுடா. என்னடா !! இப்டி பார்க்குற எனக்கு தெரியும் நீ நம்பமாட்டேனு ..ஆனா எனக்கு உண்மையா அப்படி தான் இருந்திச்சிடா ...யாரோ என்கிட்ட நெருக்கமா நின்னு குரல்ல சந்தோஷத்தோட என்கிட்டையும் அந்த சந்தோஷத்தை எதிர்பார்த்து கேட்ட மாதிரி ".

முதலில் அவள் சொல்லும்பொழுது , இதற்கு முன்னர் இயல்பாய் நடந்த இறப்புகளை கொலை என்று சொல்லி குழப்பியதை போல் இதையும் சொல்கிறாள் என்று அசட்டையாய் கேட்டவனை , தடுமாற செய்தது அவள் கேட்டதாய் சொல்லிய குரல். இவன் இந்த விஷயத்தில் நுழைந்ததே அக்குரலால் தானே என யோசித்தவன், அவளின் வார்த்தையில்..

"யஷிமா என்ன சொன்ன? ஒரு வருஷத்துக்கு முன்னாடி நீ சொன்னதாவா அந்த குரல் சொல்லியது " என கேட்டவனின் விழிகளை பயம் கவ்வியது .


"ஆமாடா..! அது அப்படி தான் சொன்னமாதிரி இருக்கு ... நான் எப்போ எப்படி யார்கிட்ட சொன்னேன் ? ஆமா மித்ரா எனக்கு ஏன் எதுவும் நியாபகம் இல்ல ?? " என குழம்ப ஆரம்பித்தவளின் முகம் வியர்த்து மூச்சு வாங்க ஆரம்பித்தது .


அதில் பதறிய மித்ரன் அவளின் முகத்தை கைகளில் தாங்கி வியர்வையை துடைத்தவன் , "யஷிமா ...!ஒன்னுமில்லடா...ஒண்ணுமில்லை...என் பாப்பால ..எதையும் யோசிக்காதடா ...நான் இருக்கேன் டா உனக்கு ..நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்" என அவளின் நிலையில் இவன் தன் நிலைத்தப்பி புலம்பியபடி அவளை தாங்கிக்கொண்டான் .

"யஷிக்குட்டி ...! என்னடாமா ஆச்சி உனக்கு ?" என கேட்டபடியே வந்த யஷியின் தந்தையை பார்த்த மித்ரன்...யஷியை விலக்காமலே ,

"அங்கிள் ..! நீங்க எப்படி இங்க?" எனக் கேட்டான்.

"ஒன்னுமில்லை மித்ரா ..! எனக்கு யஷியை பார்க்கணும் போல இருந்துச்சி அதான் நேரா கிளம்பி வந்துட்டேன் " என மித்ரனைப் பார்த்து கண்ணசைத்தவர் யஷியை தன் மடியில் தாங்கிக் கொண்டார் .


சிறிதுநேரத்திலே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல.. மித்ரன் அவளை தூக்கிச்சென்று அறையினுள் படுக்கையில் கிடத்திவிட்டு நகர்ந்தான்.

நகர்ந்தவனுக்கு ஏனோ மனம் காரணமே இல்லாமல் வலித்தது . இதுதான் யஷியை கடைசியாய் பார்ப்பது என்பதாய் ஓர் எண்ணம் தோன்ற அதிர்ந்தவன் , "இல்லை என் பாப்பாக்கு எதுவும் ஆகாது ..நான் எதுவும் ஆக விடமாட்டேன் " என சொல்லியபடி அவளின் நெற்றியில் முத்தம் இட்டவனின் உதட்டின் ஈரத்துடன் அவனின் கண்ணீர் ஈரமும் கலந்தது.

தன்னை சமாளித்துக்கொண்டு அறைவிட்டு வெளிவந்தவன் ...அங்கு முகம் கசங்கி அமர்ந்திருத்தவரிடம், " இப்போ சொல்லுங்க அங்கிள்...! எதுக்காக இப்படி பதறி அடிச்சி வந்திருக்கீங்க ??" .

சந்தேகமாய் கேட்டவனை பக்கத்திலிருந்த அவனின் அறைக்கு அழைத்து சென்று கதவை சாத்தியவர் , ஒரு நாட்குறிப்பை அவனின் கைகளில் கொடுத்தார் .

"இது என்ன அங்கிள் ??" என அவரிடம் கேட்டுக்கொண்டே திறந்தவன் , அதன் முன் பக்கத்தில் "இச்சாதாரி நாகங்களின் பழக்கவழக்கங்கள் பற்றிய குறிப்பு " என எழுதபட்டிருந்ததில் ஆர்வத்துடன் பக்கங்களை புரட்டினான்.

முழுதும் பார்த்து முடித்தவன் , "வாவ்...அங்கிள்...! என்னால நம்பவேமுடியலை இதுல இச்சாதாரிகள் பற்றிய அத்தனை குறிப்பும் கூடவே படங்கள் சிலதும் வரையப் பட்டிருக்கு . அண்ட் அங்கிள் ...! இது ஒரு வருஷத்துக்கு முன்னாடி டைரி அப்போ இது எல்லாம் ஒருவருஷத்துக்கு முன்னாடி தான் எழுதப்பட்டதா ?? ஆமா...! இது யாரோடது ? இது எப்படி உங்களுக்கு கிடைச்சது அங்கிள் ?? "

-என்று தன் நீண்ட நாட்களின் தேடலுக்கான பதில் அனைத்தும் தற்பொழுது தன் கைகளிலே இருக்க ...அதை நம்பமுடியாமல் பல கேள்விகளை கேட்டவனை நிலைகுலைய செய்தது அவர் சொன்ன ஒற்றை வார்த்தை பதில்.

அவ்வீட்டின் மற்றொரு அறையில் தூக்கமா , மயக்கமா என அறியா ஒருவித மாயலோகத்தில் இருந்த யஷியின் மூளை ..விதவிதமான காட்சிகளை அவள் முன் காட்டியது .

ஆனால் அதில் எதுவுமே தெளிவாய் இல்லாமல் புகைபோல் காட்சிகள் மங்கலாய் தோன்றி, தோன்றிய வேகத்திலே மறைய அவளின் மூடிய கண்களுக்குள் கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டது .

இறுதியில் அந்த பாதி எரிந்த வீடுமட்டும் தெளிவாய் தோன்ற அங்கு ஓர் உருவம் மங்கலாய் தெரிந்தது .இவளை பார்த்தபின் அது அவ்வீட்டின் பின்புறமாய் சென்று மறைய , அதை தொடர்ந்து சென்றவள் அவ்வுருவம் மறைந்ததில் அங்கே தடுமாறி நின்றாள் .

பக்கவாட்டில் சத்தம் கேட்க திரும்பியவளின் முன் ஓர் அறை இருந்தது . அவள் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே அவ்வறையினுள் அவ்வுருவம் தெரிய அது இவளை நோக்கி கைகளை நீட்டியதில், இவளும் இதழில் சிரிப்புடனே நீட்டிய அக்கைகளுக்குள் தஞ்சம் அடைந்தாள் .

அவளை அணைத்த அவ்வுருவத்தின் குளிர்ச்சியை நிஜத்திலும் உணர்ந்த யஷி , நடுங்கியபடி எழுந்தமர்ந்தாள்.

முதலில் தன் வீட்டில் தான் இருக்கிறோமா என்பதையே நம்ப முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்த யஷிக்கு , அவள் கனவில் உணர்ந்த அவ்வணைப்பு நிஜத்திலும் வேண்டும் போல் தோன்றியது .

அவளின் நினைவில் அந்த எரிந்தவீடும் அதன் பின்புற அறையும் தோன்ற, இப்பொழுதே அங்கு செல்ல வேண்டுமென வேகமாய் எழுந்தவளை தடுத்தது கட்டிலின் முனையில் மாட்டிக்கொண்ட அவளின் நீண்ட பாவாடையின் முனை.

அதை விடுவித்து அறையை விட்டு வெளியே போனவளின் முன் விழுந்தது அவளும் மித்ரனும் இணைந்திருந்த புகைப்படம் .

காற்று அதிகமாய் வீசுவதை பார்த்தவள் அதில் விழுந்திருக்கும் என எண்ணியபடியே அதை எடுத்துவைக்கப்போனவளின் கண்களில் பட்டது அப்புகைப்படத்தில் தன்னை மடிதாங்கியபடி இருந்த மித்ரனின் புன்னகை முகம் .

ஓர் நிமிடம் ..."நாம் இல்லாமல் போனால் இவனின் இந்த சிரிப்பு என்ன ஆகும் ??"என தோன்ற,
அக்கேள்வியில் "என்ன நினைப்பு இது ??" என்றபடி தலையை உலுக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் .

அறையின் கதவின் அருகில் சென்றவள் மீண்டுமாய் திரும்பி வந்து அந்த புகைப்படத்தை பார்த்தபடி சிறிது நேரம் நின்றவள் , அதிலிருந்த மித்ரனுக்கு ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு திரும்பியும் பாராமல் அவ்வறையை மட்டுமின்றி அவ்வீட்டை விட்டும் வெளியேறினாள்.


அவளை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயன்ற காற்றில் கலந்திருந்த அவ்வுருவம் அதை செய்யமுடியாததில் வேகமாய் சென்று மித்ரனின் மேல் படர்ந்தது .

திடீரென தன்னை சுழன்றடித்த காற்றை கூட உணரமுடியாமல் யஷியின் தந்தை கூறிய பதிலில் அதிர்ந்து போய் நின்றிருந்தான் மித்ரன்.

மீண்டும்மீண்டுமாய் அவனை சுற்றி சுழன்ற காற்று அவன் தன்னுணர்வ்வுக்கு வராததில் அவ்விடத்தை விட்டு நீங்கி யஷியை தேடிச் சென்றது.

--------------------------------------------------------------------------------

மணி ஆறை கடந்திருக்க இருட்ட தொடங்கி இருந்ததில் அந்த எரிந்த வீடு இருக்கும் இடம் தெரியாமல் சிலரிடம் விசாரித்து சென்றுகொண்டிருந்த யஷிக்கு உள்ளுக்குள் பயம் அதிகரித்தது.

மூன்றுமாதம் தொடர்ந்து ஒரு வீடு பூட்டப்பட்டிருந்தாலே அதை பேய் வீடு என முத்திரை குத்திவிடும் மக்கள் ....தொடர்ந்து ஒருவருடமாய் எவரும் அங்குசெல்லாமல் பாதி எரிந்திருக்கும் வீடை பேய்களின் சொர்கமாய் சித்தரித்து வைத்திருக்க ... தற்பொழுது அங்கு இரண்டு பிணங்கள் கொடூரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது இன்னும் அவர்களின் கதை புனையும் திறனுக்கு தீனியிட்டிருந்தது

ஆக வரும் வழியில் அவ்வீட்டை பற்றி கற்பனை கலந்து பலர் சொல்லிய தகவல்கள் அவளை மிரள செய்திருக்க, அதிலும் வீட்டின் பின்புற அறையை பற்றி சொன்ன தகவல்கள் அவளின் வயிற்றில் புளியை கரைத்திருந்த்து.

ஒருவழியாய் அவ்வீட்டின் முன் வந்திருந்தவளை அவ்விருளில் அகோரமாய் தோன்றிய பாதி எரிந்திருந்த வீடு அவளின் நெஞ்சத்தை தடதடக்க செய்தது.

இச்சூழ்நிலையில் அவள் மனம் தானாய் மித்ரனை தேடி அவனின் நெஞ்சில் அடைக்கலமாக துடித்தது.

அதில் வீட்டிற்க்கு செல்ல துடித்த கால்களை தடுத்தது அவளின் நினைவில் மங்கலாய் அவ்வறையில் தோன்றிய உருவம் .

அவ்வுருவத்திடம் செல்ல வேண்டுமென அவளின் மனம் முரசொலித்தாலும் , இப்பொழுது இதனுள் சென்றால் இனி மித்ரனை என்றும் காணவே முடியாமல் போகும் என தோன்ற இரண்டுமனமாய் அல்லாடினாள்.

சற்று தள்ளி இவளின் மனப்போராட்டத்தை கண்ட காற்றுடன் கலந்திருந்த உருவம், தன்னால் இனி எதுவும் செய்யமுடியாதென உணர்ந்து அவளின் தவிப்பை போக்கமுடியாததில் தானும் தவித்தது .

இனி நேரப்போவது அனைத்தையும் அறிந்திருந்த அவ்வுருவத்தின் கண்களில் கண்ணீர் பெருகெடுக்க அது இமைத்தாண்டும் முன்னே காற்றில் கரைந்துக் கொண்டிருந்தது .


சிறிது நேரத்தில் ஓர் முடிவுடன் அவ்வீட்டினுள் நுழைந்த யஷி , எவ்வறைக்கு கதவே இல்லையென மக்கள் கதை புனைந்திருந்தனரோ அவ்வறையினுள்ளே நுழைந்திருந்தாள்.

பார்க்கும் பொழுதே பலமாதங்களாய் உபயோகத்தில் இல்லாத அறை எனத் தெரிந்தது.

அதனுள் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டே ஒருவித திகிலை அவ்வறை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.

அந்த அறையினுள் நுழைந்த அவளின் மனம் பயத்தில் படபடத்தாலும்,தனக்கு வேண்டியது அங்குதான் உள்ளது என்ற உள்ளுணர்வின் உந்துதலில் கைகளால் துலாவியபடியே அவ்வறையினுள் நுழைந்தாள் .

அவளை வரவேற்பதுபோல் மெல்லியதாய் தழுவி சென்றது எங்கிருந்தோ வந்த லேசான காற்று .

அது ஒரு நீண்ட, அகலம் குறைவான அறை... ஒருபுறம் முழுக்க ஆளுயரக் கண்ணாடிகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்க அதன் முன் ஒரு தடுப்புச்சுவர் இருந்தது.

இவை எதுவும் அவ்வறையின் இருட்டில் அவளின் கண்களுக்கு புலப்படாமல் போக, கைகளை அங்கும் இங்கும் துழாவியபடியே சென்றாள்.

தான் தேடி வந்தது தென்படாமல் போக இருட்டில் பாதை தெரியாததில் ,சுவற்றில் ஒவ்வொரு இடமாய் தடவிபார்க்க ஆரம்பித்து அவ்வறையின் பாதிதூரத்திற்கு வந்தபிறகும் அவளின் கண்கள் இருட்டில் பழகாமல் இருக்க உள்ளுக்குள் பயம் அதிகரித்ததால் நெற்றியிலிருந்து வடிந்த வியர்வை காதோரமாய் ஓடிமறைந்தது .

தான் துடைப்பதற்கு முன்பே வியர்வை மறைந்ததில் ஆச்சர்யம் கொண்டு, சுற்றும்முற்றும் பார்க்க மிகவும் மெல்லியதாய் மட்டுமே அவ்வறையினுள் காற்று ஆக்கிரமித்திருந்தது .

"இங்க காற்றே இருக்காதுன்னு சொல்லிருந்தாங்களே" என யோசித்தவள் மூளையில் தான் வந்த வழி பளிச்சிட அவ்வழியில் காற்றுவருவதாய் நினைத்துகொண்டாள்.

அவ்வறையினுள் காற்றே நுழையமுடியாது எனும்பொழுது தனக்கு எவ்வாறு வழிகிடைத்தது என்பதை யோசிக்க மறந்துதான் போனது அவளின் மூளை . ஒருவேளை எவரேனும் அதை மறக்கச்செய்தனரோ ??

என்ன செய்வது என அவள் குழம்ப இதற்க்குள் கண்கள் பழகியிருந்ததோ ? சற்றே அவ்வறையை பார்க்க முடிய, எதிரே அவ்வறையின் ஓரம் ஓர் இடம் மட்டும் இன்னும் கும்மிருட்டுக்குள் இருந்தது.

தடதடக்கும் நெஞ்சின் மேல் கை வைத்து மெதுமெதுவாய் அருகில் சென்றாள்.

அருகே செல்லச்செல்ல, அவ்வறையின் நீளம் அவளை உள்வாங்க, தனியொரு இடத்தில் அதிலும் இருட்டில் இருக்கும் வேளையில் இயல்பாய் மனதை தன்வசம் இழுக்கும் அச்சம் என்னும் கொடிய நோய் அவளையும் மெல்ல மெல்ல தன்னுள் இழுத்துக் கொண்டது.

அவ்வளவுதான் இன்னும் இரண்டு அடி வைத்தால் போதும் அந்த நீண்ட அறையின் மூலையில் அவள் இருப்பாள் .

நெற்றியில் வழியும் வியர்வையை இம்முறை வேகமாய் கரம் கொண்டு துடைத்தாலும், அருவி நீர் விடாமல் கொட்டிவது போல் வழிந்துகொண்டே இருந்தது .

அம்மூலையின் அருகில் சென்ற பின்னும் யஷிக்கு எதுவும் தெரியாமல் போக, மெதுவாய்... மெதுமெதுவாய் தன் வலது கையை தூக்கினாள் அந்த மூலையில் துலாவ.

அந்த அழகான விரல்களோ காற்றில் படபடக்கும் காகிதமாய் தடதடத்தது. தடதடக்கும் விரல்களை ஒருமுறை இறுக்க மூடியவள் ஆழமூச்செடுத்தாள் .

சற்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்.... மிக வேகமாய் கையை கொண்டு சுவற்றில் துளாவபோக , இத்தனை நேரம் மிக லேசாய் வருடி சென்ற காற்றுகூட விடுப்பு எடுத்துச் சென்றது போல் மூச்சு விட முடியாமல் திணறினாள்.

ஆனால் அடுத்த நொடியே பலமான சத்தத்துடன் காற்று அவளை புயலை போல் மோதி சென்றதில் தடுமாறியவள் கைகளை அச்சுவற்றில் ஊன்ற , அம்மூலைச் சுவரும் அவளை விழாமல் தாங்கி நின்றது .

அந்த மூலையில் எவரும் இல்லாததை உணர்ந்தவள் திடிரென வீசிய காற்றுக்கு காரணம் என்ன ? என அறிய திரும்பினாள்.

தான் நுழைந்த வழி மிக தொலைவில் தெரிய ,மிக மிக நீண்ட அவ்வறையின் இந்த கடைசி மூலையில் இருப்பவளின் கண்களோ பயத்தில் சிறிதாய் கலங்க அரம்பித்திருந்தது .

ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டாலும் இப்பொழுது மீண்டுமாய் அவ்வறையை கடக்க வேண்டும் என்றெண்ணும் போழுதே இதயம் வெடித்து விடுமோ என்பது போல் வேகம் கூடியது .இரு கைகளையும் நெஞ்சின் மேல்வைத்து இறுக்கிக்கொண்டவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க , அவளின் கவனம் முழுவதும் முன்னே இருந்ததில் பின்புறம் நடந்ததை உணராமல்போனாள்.

அவள் தடுமாறி விழுந்தநொடி , அக்கும்மிருட்டு அவளை தன்னுள் புதைத்து பின் , அவள் திரும்பிய நொடி மறைந்து அவ்விடம் மற்ற இடங்களை போலவே சாதாரணமாய் மாறியிருந்தது .

அவள் சில அடிகள் எடுத்துவைத்திருக்க ,அவளை தொடர்ந்து அக்கும்மிருட்டும் நகர்ந்து வந்தது.

அப்பொழுது ," இவ்வளவு சீக்கிரம் ஏன்டா வந்த ??" என ஒருகுரல் வருத்தத்துடன் அவளின் காதுகருகில் ஆழ்ந்து ஒலிக்க ...

பயத்துடன் சென்று கொண்டிருந்தவள் ,திடுமென கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட நெஞ்சின் மேல் இருந்த கைகள் நழுவி தட்டென்று எதன் மேலோ மோதியது.

இப்பொழுது அக்குரலின் பேச்சு சட்டென்று நிற்க காற்றும் உடன் நின்றிருந்தது .

அக்குரல் திடுமென கேட்டதில் வந்த பயத்தை விட ,
தான் விழுந்தநொடியே சட்டென்று நின்று அமைதியானதுதான் பயத்தை அதிகமாக்கியது.

தன் கை எதன் மேல் மோதியது என குனிந்து பார்ததவளுக்கு , அது அவளின் இடுப்பளவு உயரத்தில் இருக்கும் சுவர் என தெரிந்தது.

அச்சுவரை பற்றிக் கொண்டு நடப்பது சற்று இலகுவாயிருக்கும் என்ற எண்ணம் யஷிக்கு தோன்ற... அந்த சுவற்றில் ஒரு கையால் பிடித்து தடவிகொண்டே ஒவ்வொரு அடியாய் கடந்தாள்.

அறையை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தவளை பின்பற்றி வந்துகொண்டிருந்த அக்கும்மிருட்டும் நொடியில் மறைந்தது .

அவ்வளவு நேரம் இயல்பாய் இருந்த அக் குட்டி சுவற்றில் இன்னும் இரண்டடியில் , இவள் கை தழுவ போகும் இடத்தில் மெதுமெதுவாக அந்த பக்கமிருந்து ஒரு கை அச்சுவரை தழுவியது .

அவளின் கை அந்த கையின் அருகில் வந்த நொடி வேகமாய் அதனை இழுத்து தன் கைக்குள் அடக்கிக்கொண்டது. .

திடுமென ஏதோ ஒன்று இழுத்ததில் பயந்து போனவள் எதிரில் தெரிந்ததை கண்டு "ஆஆஆஆ" என்றலறியவாறு பின்புறமாய் சரிந்தாள்.

அவள் சரிந்ததில் அவளை இழுத்த அக்கரமே அவளை தாங்கிப்பிடித்தது .

கண்களை மூடுமுன் தன்னை உடலில்லாமல் ஒரே ஒரு கரம் மட்டும் தாங்குவதை கண்டவள் கண் திறக்க, எதிரிலிருந்த கண்ணாடிகளில் விழி பதிந்து அங்கிருந்ததை பார்த்ததில் மீண்டும் மயக்கமானாள்.

தொடர்ச்சியாய் அடுக்கப்பட்டிருந்த அக்கண்ணாடிகள் அனைத்திலும் விகாராமாய் தெரிந்தது அவ்வுருவம் .

ஒன்றில் உடலில் எலும்புகள் எதுவுமில்லாமல் தோல்மட்டுமாய் ,

ஒன்றில் எலும்புகள் மட்டுமாய்,

ஒன்றில் பாதி உடலுடன் ,

ஒன்றில் ரத்தத்தில் குளித்தவுடலுடன் ,

என ஒவ்வொன்றிலும் ஒருவிதமாய் இருந்த அவ்வுருவங்களின் பிம்பங்கள் எதிலும் வலக்கரம் காணாமல் இருக்க ,

அக்கரமோ அவளை அங்கு தனியாய் சுமந்திருந்தது .


"எப்பிறவியிலும் ... எச்சூழ்நிலையிலும்....எவ்வேளையிலும் ...எங்கிருப்பீனும் ...நீ தடுமாறும் வேளையில் உன்னை தாங்கிக்கொள்ள உனது சந்திராதித்யன் வருவானடி " என ஓர் குரல் அவளை சுற்றி மென்மையாய்
ஒலிக்க ,

மயக்கத்திலிருந்தவளின் ஆழ்மனம் அக்குரலை சரியாய் கண்டுகொண்டதில் .. மயக்கத்திலும் கண்கள் சிவக்க , "குழியா ...!" என அழைத்தவளின் இதழ்கள் சிரிப்பில் விரிந்திருந்தது .


-காதலாகும்.



இன்னும் இரு பகுதிகளுடன் கதை நிறைவு பெரும் நண்பர்களே!!!
 

Thoshi

You are more powerful than you know😊❤
கடலிலிருந்த நீர்த்துளி முரண்பட்டு மேகம்தனில் காதல் கொண்டு ஆவியாகி ..
மனம் நிறைய ஆசையுடன் மென்மையாய்
தன்னவளான மேக அழகியுடன் கூடிக்களிக்கும் நேரம்தனில் காற்று வேகமாய் வீசி மேக அழகியை நிலைகுலைய செய்ய ...
தன்னவளை முழுதாய் ஆளும் முன்னே நீர்த் துளி அது ..
பிரிந்து மீண்டுமாய் கடல் நோக்கி விழுந்தது மழைதுளியாய்...!!!



அத்தியாயம் 13:


மித்ரனின் அதிர்ந்த முகத்தில் அவனின் அருகில் வந்து தோள் தொட்டு கலைத்தவர் , "ஆமா மித்ரா ! இது யஷியோட நாட்குறிப்பு தான்" என்றார்.


"ஆனா அங்கிள்...! இது எப்படி..? எனக்கு புரியலை அங்கிள் ?? அவ என்கிட்ட இதுவரைக்கும் எதையும் மறைச்சதில்லையே " என தவித்தான் .


" மறைச்சதில்லை தான் மித்ரா..! ஆனா அவளுக்கே அந்த விஷயம் தெரியாதுன்ற போது அவளால உன்கிட்ட எப்படி சொல்லி இருக்க முடியும் ??" என்றவர் தொடர்ந்து ,


"உனக்கு தெரியும்ல மித்ரா ...போனவருஷத்துல யஷி இந்தியா வந்த ரெண்டு மாசத்துக்கு பிறகு காணாம போனது."


"ஒப்கோர்ஸ் அங்கிள்...! நான் உடனே இந்தியா வந்து, எவ்வளவோ தேடியும் ரெண்டு மாசம் போனதுக்கு அப்றம் தான யஷி நம்மளுக்கு கிடைச்சா ....அதும் அவளோட பாதி நினைவுகளை தொலைச்சிட்டு ..."


யஷி வெளியே சென்றதை அறியாமல் இருவரும் ஒருவருடத்திற்கு முந்தைய கதைகளை பேச , அங்கு மயங்கியவளை தன் கைகளில் ஏந்திக்கொண்ட சந்திராதித்யனின் நினைவுகள் தன்னவளுடன் கழித்த நாட்களுக்கு பயணித்தது .


ஒருவருடம் முன்பு :


நாட்கள் வேகமாய் கடந்திருக்க இப்பொழுதெல்லாம் அனகா ,சந்திராதித்யனை பார்ப்பதே அரிதாய் இருந்தது.


சூரியன் மறைந்து வெகு நேரத்திற்கு பின்பே குகைவீட்டிற்கு வருபவன் சிறிது நேரத்திலே உறங்க ஆரம்பித்துவிடுவான்.


மீண்டும் காலையில் இவள் கண்விழிக்கும்போதே அவன் விடைபெற தயாராய் இருப்பான். இவன் சென்ற சிறிது நேரம் கழித்து சந்திரிக்கா வந்துவிட , அந்நாள் முழுதும் அவளுடனே கழியும் .


தன் அண்ணணின் பார்வை அனகாவின் மேல் படியும் விதத்திலேயே அவனின் மனம் அறிந்த சந்திரிக்காவிற்கு , இது எவ்வாறு சாத்தியம் ஆகும் என தெரியவில்லை.


ஆனால் அண்ணனின் நடவடிக்கையில் ஓர் வேளை அவன் அனகாவுடனே சென்றுவிட நினைத்திருக்கிறானோ..? அதனால் தான் இம்முறையும் பௌர்ணமி பூஜையை தவிர்த்தானோ ?? என்ற சந்தேகம் வேறு எழுந்தது .


தொடர்ந்து நான்காம் முறை பௌர்ணமி பூஜையை தவிர்த்தால் அவர் அன்று இருக்கும் தோற்றத்திலே பதினைந்து நாட்கள் இருக்கக்கூடும் . அதில் அவர்கள் அனைத்து சக்தியும் இழந்து இருக்கும் தோற்றத்துக்கு ஏற்றபடியே வாழ்வர் . பதினைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் இச்சாதாரியாய் மாறினாலும் பழைய சக்திகள் கிடைக்காமல் போகும்.


அடுத்தமுறை அவன் பௌர்ணமி பூஜையை தவிர்த்து மனித உருவில் அவ்விரவை கழித்தான் எனில் அவன் சாதாரண மனிதனாக மாறிவிடுவான் . பின் பதினைந்து நாட்களுக்கு பிறகும் அவன் மனிதனகாவே வாழ விரும்பினால் அதை ஈசன் அன்றி எவராலும் மாற்ற முடியாது .


இவ்வாறு யோசிக்கும் பொழுதே அவளின் மனம் துக்கத்தில் ஆழ, அண்ணனின் விருப்பம் அதுதான் எனில் இவளால் எதுவும் செய்யஇயலாதே .


இவ்வாறு யோசித்த நாள்தொட்டு அண்ணணின் வாழ்விற்கு உதவும் பொருட்டு... அனகாவிடம் சந்திராதித்யனை பற்றியே அதிகம் பேசினாள், அவள் பல வருடங்களாகவே அவனை தன் மனதில் சுமப்பதை அறியாமல்.


சந்திராதித்யன் தான் அனகாவிடம் "சாப்பிட்டுவிட்டாயா , உறங்கு , நான் சென்று வருகிறேன் " என இந்த மூன்று வார்த்தைகளை தாண்டி எதுவும் பேசுவதில்லையே.


அதனால் அனகாவும் சந்திராதித்யனை பற்றிய பேச்சுகளை ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தாள்.


இவ்வாறு இருக்கையில் இரண்டு நாட்களாய் இவள் கண்விழிக்கும் வேளையில் கூட அவன் அங்கிருப்பதில்லை . இன்னும் சில நாட்களில் தான் சென்றாகவேண்டும் எனும் பொழுது ..இவன் இவ்வாறு இருப்பது அவளின் காதல் மனதை வருத்தியது .


இன்றும் அவன் சென்றிருப்பான் என்ற எண்ணத்தில் மனம் சோர விருப்பமே இல்லாமல் எழுந்தமர்ந்தவளின் கண்களில் நீண்டநாட்களுக்கு பிறகான தன்னை ரசிக்கும் பார்வையுடன் அமர்ந்திருந்த சந்திராதித்யன் விழுந்தான் .


கனவோ என தோன்ற கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தவளின் முகத்தின் அருகில் நெருக்கமாய் அவனின் முகம் இருக்க அவனின் மூச்சுக்காற்று அவளின் மேனி தீண்டியது .


அதில் இயல்பாய் அவளின் இமைகள் மூடிக்கொள்ள அவளின் மோனநிலை கண்ட சந்திராதித்யனுக்கு கன்னம் குழிந்தது.


சில நொடிகளுக்கு பின் இமைகளை திறந்த அனகா , அவனின் கன்னக்குழியில் தன் விரலால் தீண்டினாள்.


"குழியா...!" என்று கிறக்கமாக அழைத்தவள் ," இந்த பச்சை நிற கண்கள் இப்போ பாக்குற மாதிரியே இனி எப்போதும் இதே காதலோடு என்னை பார்க்குமா ??" என தான் அன்று காதலை சொன்னபிறகும் பதில்சொல்லாமல் விழிமொழியில் காதல் பேசியவனிடம் வாய்மொழியை எதிர்பார்த்தது அவளின் காதல் மனம் .


அவளின் எதிர்பார்ப்பை புரிந்து .. அவளின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல், " இன்று ஆலயம் செல்ல வேண்டும் அனகா ..! சென்று தயாராகி வா " என்றவன் ,


"அன்று மயங்கி இருந்த உன்னோடு , அருகில் இருந்த உனது பையையும் எடுத்து வந்தபொழுது உன்னை பற்றி அறிந்துகொள்ள ஏதேனும் இருக்குமா என தேடும் வேளையில் ,ஓர் நாட்குறிப்பு எழுதப்படாமல் இருப்பதை கண்டேன் ...அதை என்னிடம் தரமுடியுமா ??" எனக் கேட்டான்.


"நான் என் காதலை சொல்லி என்னையே தரேன்னு சொல்றேன்...இந்த பச்சை கண்ணன் இப்போதான் டைரிய கேக்குறான் . இதுல தூய தமிழ் வேற ...ஷப்ப்பா ...!இவனை வச்சிக்கிட்டு என்ன பண்ணபோறானோ !!" என புலம்பியபடியே அவன் கேட்டதை கொடுத்தவள் அவனை முறைத்து வைத்தாள்.


அவளின் முறைப்பில் அவனுக்கு சிரிப்பு வர அவளை இம்சிக்கும் கன்னக்குழி சிரிப்பை சிந்தியவன் ...அவளின் புலம்பலை கேட்டது போல் காட்டிக்கொள்ளாமல் ,


"நான் இங்கே அமர்ந்திருக்கிறேன் ...நீ தயாராகிய பின் நாம் ஆலயம் செல்வோம் " என்றவன் அந்த நாட்குறிப்புடன் அமர்ந்துவிட்டான்.


--------------------------------------------------------------------------------


புற்றீஸ்வரரின் ஆலயம்:


"எங்களின் குலம் காக்கும் எம்பெருமான் ஈசனாகிய உங்களை சாட்சியாய் கொண்டு இன்று இவளை நான் மணமுடிக்க போகிறேன். தங்களின் சித்தமின்றி இங்கு ஓர் அணுவும் அசையாது என்பதை நான் அறிவேன். எங்களின் பிறப்பு வேறுவேறு இனத்தாயினும் இருவரின் மனமும் இன்று ஒன்றாகியதும் தங்களின் சித்தமே. இன்று இவளின் கை பற்ற போகும் நான், எங்களின் வாழ்வின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பற்றிய இவளின் கைகளை விடாமல் இருப்பேன் என தங்களின் மேல் ஆணையிடுகிறேன் "


-என தங்களின் முன் அமைதியின் ஸ்வரூபமாய் இயற்கையின் லயிப்பில் வீற்றிருந்த புற்றீஸ்வரிடம் மேல் ஆணையிட்டவன் , கழுத்தில் இருந்த செயினை கழட்டி தன் பக்கவாட்டில் நின்றிருந்த அனகாவின் கழுத்தில் போட்டான்.


அவளின் கையை இறுக்க பற்றியவன் அவளின் முகத்தை பற்றி தன் முகம் காண செய்து ,


"நீர் , நெருப்பு , காற்று , பூமி , ஆகாயம் என இங்கு நம்மை சுற்றி இருக்கும் ஐம்பூதங்களின் சாட்சியாய் ...இந்த ஜென்மம் மட்டுமின்றி இனி நான் எடுக்கும் அத்தனை ஜென்மங்களிலும் உன் காதலை மட்டுமே தேடி , உன் ஒருவளை மட்டுமே சேர்வேன் என நாம் கொண்ட காதலின் மேல் ஆணையிட்டு கூறுகிறேன் " என்றான்.


தான் வாய்விட்டு கேட்டும் அவன் பதிலளிக்காததில் ..."தன் காதல் வெறும் கானாலோ?? அவன் என்னை காதலிக்கவில்லையோ?? அவனின் விழிகளில் தான் கண்ட காதலனைத்தும் தன் கற்பனை தானோ??" என்பதை ஏற்கமுடியாமல் மனம் முழுக்க காயத்துடன் ஆலயத்திற்கு வந்தவள் அவனின் இத்தனை நேர பேச்சில் தனது காதலுக்கான பதில் கிடைத்ததில் வாயடைத்து நின்றாள்.


எத்தனை வருடமாய் அவனை காதலிக்கிறாய் என அவளிடம் கேட்டாள் அவளின் தலை தெரியாது என்றே ஆடும் . எப்பொழுது என்றெல்லாம் வரையறுக்க முடியாமல் முதல் முதலாய் அவனை கண்ட நொடிமுதல் அவளின் வாழ்க்கையில் அவனும் ஓர் அங்கமாகி விட்டிருந்தான் .


இனி ஜென்மஜென்மமாய் இந்த பந்தம் தொடரும் என சொல்லாமல் சொல்லியவனின் மேல் அவளின் நேசம் கட்டுக்கடங்காமல் பொங்கி வழிந்தது .


தாங்கள் இருப்பது ஆலயம் என்பதையும் மறந்த அனகா, பாய்ந்து சந்திராதித்யனை கட்டிக்கொண்டாள் .


அதில் தடுமாறியவன் இருவரும் விழுமுன் காலை ஊன்றி சமன்செய்து , " அனகா...! நாம் இருப்பது பரமேஸ்வரரின் ஆலயம் " என்றவனின் குரலும் அவளின் அருகாமையை விரும்பியதில் மெதுவாகவே வெளிவந்தது .


அவன் ஐம்பூதங்களின் சாட்சியாய் என கூறும் வேளையிலே அங்கு வந்துவிட்ட சந்திரிகா , அடுத்து அவன் கூறியதில் உறைந்திருந்தவள் இப்பொழுது உணர்வு வர , "அண்ணா தாங்கள் என்ன கூறினீர்கள் ?? இவர்களை தாங்கள் மணமுடித்துவிட்டீர்களா என்ன??" என அதிர்ந்தாள் .


தங்கையின் வரவை எதிர்பார்த்திருந்த சந்திராதித்யனும் பதட்டம் எதுவும் இன்றி , "ஆம் சந்திரிக்கா..! நாங்கள் நாளை விடியலில் அனகாவின் இருப்பிடத்திற்கு செல்ல உள்ளோம். பரம்பொருள் பரமேஸ்வரரிடமே எங்களின் காதலை ஒப்புவித்து, அவரின் ஆசியுடனே இங்கிருந்து செல்ல விளைந்தேன் " என்றவன் தனது முடிவை உறுதியாய் சொன்னான்.


அவனின் முடிவை ஏற்கனவே யூகித்திருந்ததால் அண்ணனின் மகிழ்வான வாழ்வே தனது நிம்மதி என எண்ணிக்கொண்டவள் , அவனின் முடிவை ஏற்றுக்கொள்வது போல் புன்னகைத்தாள் .


அங்கு ஒருவிதமான அமைதி தவழ அதை கலைக்க விரும்பிய சந்திரிக்கா , " அண்ணா ...! இது உனது கழுத்தில் இருந்த சங்கிலி அல்லவா ?? இது வேறொருவர் உனக்கு அளித்ததுதானே ...இதை எதற்காக இவர்களுக்கு அணிவித்தாய் ??" என்று இச்சாதாரி நாகங்களின் இனத்திற்க்கே ராஜாவாக வேண்டியவன் , தனது மனைவிக்கு அடுத்தவரின் உடமையை அளிக்கும் அளவிற்கு ஒன்றும் அற்றவனாகிவிட்டானா தன் அண்ணன் எனும் ஆதங்கத்துடன் கேட்டாள்.


அப்பொழுதுதான் அவன் அணிவித்த சங்கிலியை பார்த்த அனகா , சந்திரிகா கேட்ட அதே கேள்விகளை கண்களில் தாங்கியபடி சந்திராதித்யனை நிமிர்ந்து பார்த்தாள்.


கண்கள் கலங்க தொண்டையை செருமிக் கொண்டவன், " இது ...இது என் உடன்பிறவா தங்கையின் ஆசை ....அவள் அணிந்திருந்த சங்கிலியை நான் அணிந்திருந்ததுடன் ஒன்றாய் மாற்றியவள் , என்னவள் என்னை தேடிவரும் தருணத்தில் அவளிற்கு இதை அணிவித்து மனைவியாய் ஏற்கவேண்டும் என்பது அவளது இ....இறுதி...ஆசை " என்றவனின் கரங்கள் பற்றிருந்த அனகாவின் கைகளை மேலும் இறுக்கியது .


அவனின் கரத்தின் மேல் தன் மற்றொரு கரத்தை வைத்தவள்... சிறு தயக்கத்துடன் , "டாமினி...டாமினி..க்கு என்ன ஆச்சி ??" எனக் கேட்டாள்.


அவன் தாடை இறுக பற்களை கடித்தவன் மௌனமாய் இருக்க , " எனக்கு புரியுதுங்க உங்களோட வலி ...ஆனா சின்னவயசுல இருந்து கூடவே இருந்தவ திடிர்னு ஒருநாள்ல மொத்தமா விட்டு போனதுமில்லாம , அதுக்கு காரணமும் தெரியாம நான் தவிச்சது ரொம்ப அதிகம்ங்க...சொல்லுங்க ...அவளுக்கு என்னாச்சி ப்ளீஸ் சொல்லுங்க " என கண்ணீர் ததும்ப அவனை உலுக்கினாள் .


"சொல்லு சொல்லு என்றால் என்ன சொல்வது ?" என அவளின் கைகளை உதறியபடி ஆவேசமாய் கத்தியவன் ,


"சிறுவயது தொட்டே பார்க்கும் வேளைதனில் அனைத்திலும் இதழ்களில் சிரிப்புடனே பார்த்தவளை ...அந்த சிரிக்கும் இதழ்கள் இருந்த அடையாளம் தெரியாமல் கிழிந்து , பாசத்துடன் பார்க்கும் கண்கள் இறப்பை வேண்டி யாசகத்தை சுமந்தபடி ,பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்தால் உடலின் ஒவ்வொரு அணுவும் வலியை உணர்ந்தபடி புயலில் சிக்கிய சிறு கொடியாய் என் கண்முன்னே முழுதாய் சிதைந்து போய் படுத்திருந்தவளின் நிலையை எவ்வாறு சொல்ல சொல்கிறாய் "


அவன் சொல்லியதில் அதிர்ந்து வாய்பொத்தி சிலையாய் சமைந்தவள் , "யார் ..?? யார் செய்தது ?" என தடுமாற ,


இக்கேள்வியில் அவனின் கண்களிலும் கண்ணீர் பெருகெடுக்க "யாரா?? ஆ...ஆறு பேர் .." என்றவன் "ஆஆஆ" என இயலாமையில் கத்தியபடி இடதுகையை அருகிலிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான் .


"அய்யோ... ...டாமினி...!" என இப்பொழுது வாய்விட்டே கதறிய அனகா ,


"யாருங்க....?? எப்படிங்க எப்படிங்க அவளுக்கு இப்படி நடக்கலாம்??? .ஒரே பொண்ணுன்னு வலினா என்னனு கூட அவளுக்கு தெரியாத மாதிரி அங்கிளுயும் , ஆண்டியும் அவளை பார்த்து பார்த்து வளர்த்தாங்கங்க...அவ எப்படி...எப்படி தங்கிகிட்டா...என்னால நினைச்சிக்கூட பார்க்க முடிலையே...அவளுக்காக நம்ப எத்தனையோ பேர் இருந்தும் அவளுக்கு எப்படி இப்படி நடந்துச்சு .அய்யோ...! அவ தனியா அவங்க கிட்ட மாட்டி அந்த சித்திரவதை எல்லாம் எப்படி தாங்கிகிட்டா...நரகத்தை அனுபவிச்சிருப்பாளே " என கதறித்துடித்தவளை தடுக்கமுடியாமல் சந்திராதியானும் அன்று மருத்துவமனையில் டாமினியின் நிலை கண்டதை எண்ணி புழுவாய்த் துடித்தான் .


இருவரின் நிலை கண்ட சந்திரிக்காவிற்கும் மனம் கலங்கி இதுவரை பார்த்தே அறியாத டாமினிக்காய் கண்ணீர் சிந்தினாள்.


அண்ணன் சொன்னதை கேட்டவளிற்கு , அவனின் உடன்பிறவா தங்கைக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டும் இந்த ஒருவருடமாய் அவன் அமைதியாய் இருந்தான் என்பதை நம்ப முடியாதவள் , " அண்ணா ...! அந்த ஆறு பேரோட உயிரும் துடித்துடிக்க வச்சி தான பறிச்ச??" எனக் கேட்டாள்.


அவளின் கேள்வியில், தங்கை தன் செயல்களை எப்பொழுதும் சரியாய் கணிப்பதை எண்ணி அவ்வேளையிலும் மனதில் மெச்சிக்கொண்டவன் தன் அழுகையை நிறுத்தி புருவம் சுருங்க ," அன்னிக்கு ...ந...நம்ப வந்த வண்டில இ....இரு ...இருந்தது..??" என அனகா விடை அறிந்தே கேட்க,


"ஆமாம்" என கண்களை மூடித் திறந்தவன் , சந்திரிகாவின் கேள்விக்கு பதில் சொல்வது போல் அவளின் புறம் திரும்பியவன் ,


"எப்படி சந்திரிகா ??? எப்படி என் தாயின் வயிற்றில் பிறக்காத போதிலும் "அண்ணா" என்று உரிமையுடன் அழைத்து என் வாழ்வின் வானவில்லாய் தோன்றி மறைந்தவளின் மரணத்திற்கு எவ்வாறு நான் பதில் செய்யாமல் இருப்பேன்??? என்றவன் தொடர்ந்து,


"சிறு கொடியில் பூக்கும் பூ தன்னை சுற்றிலும் மணம் பரப்பி அவ்விடத்தை ஆள்வது போல் .....சிறுபிள்ளைபோல் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு ... மென்மையாய் தன்னை சுற்றியிருப்பவர்களின் மனங்களை அன்பால் ஆண்டவளை தங்களின் அந்த நிமிட சுகத்திற்காய் கால்களில் போட்டு மிதித்து கசக்கியவர்களுக்கு மனிதர்களின் சட்டம் வழங்கிய தண்டனை வெறும் தூக்கு " என்றவனின் இதழ்கள் கேலியாய் வளைந்தது .


அவனின் கேலிக்கு பதில் எவ்வாறு அளிப்பது ??


கரு சுமக்கும் நாள் தொட்டு ஒவ்வொரு நிமிடமும் , ஆசைஆசையாய் காத்திருக்கும் பெற்றோரிடம் ..சிறு மொட்டாய் பெண்ணவள் பிறக்க, அந்நொடி தொட்டு சிறு தூசும் அவளின் மேனி தீண்டாமல் அன்னை தன் அணைப்பில் தாங்கிக்கொள்ள... பிறந்த பெண்ணவளை இரண்டாம் தாயாய் கருதும் தந்தை அவள் ஒருவளை மட்டும் தன் உலகமாய் கொண்டு பார்த்து பார்த்து அனைத்தும் செய்து ... மகள் பருவம் அடைந்தபின்பும் சிறுகுழந்தையாகவே வலி என்பதை அறியாமல் வளர்க்க ... யார் என்றே தெரியாத கேவலம் சதைக்கு நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு அலையுற ******பரதேசி நாயுங்க வெறும் உடல் சுகத்துக்காக பெத்தவங்க பொத்தி பொத்தி பாதுகாத்த பொக்கிஷத்தை களவாடி சித்திரவதை செய்ஞ்சி , வலினா என்னனே தெரியாதவளுக்கு நகரத்தையே கண்ணு முன்னாடி காட்டுவானுங்க ...ஆனா இவனுங்களுக்கு தண்டனை வெறும் தூக்கு ...அதும் ஆதாரத்தோடு நிரூபிச்சா மட்டுமே , அதும் உடனே நடக்கும்னு நம்ப கனவில்கூட தப்பா நினைச்சிடக் கூடாது .


அது போல் தான் டாமினியின் வீட்டினர் தங்களின் மகளிர்க்கான நியாயத்தை தேடி சட்டத்திடம் செல்ல அதுவோ அந்த நியாயத்தை குற்றவாளிகளிடம் விலை பேசிக்கொண்டிருந்தது .


கேலியாய் உதடுகளை வளைத்த சந்திராதித்யன் , "அந்த நாய்ங்களுக்கு அன்னிக்கு நடந்தது வெறும் அரைமணி நேர சுகமா இருக்கலாம்...ஆனா பாதி உசுரோட கிட்டத்தட்ட பதினோரு நாள் தோல் எல்லாம் கிழிஞ்சி ...வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிச்ச டாமினிக்கு அது நரகம் ...அவகூடவே இருந்தும் அவ வலிக்குதுன்னு வாய் திறந்து கூட சொல்லமுடியுமா துடிக்குற அப்போல்லாம் அவளுக்கு நரகத்தை காமிச்சவங்களுக்கு நான் நரகத்தை காட்டணும் நினைச்சேன் ..... டாமினி நம்பள விட்டு போன அடுத்த நாள்ல இருந்து அவனுங்க ஒவ்வொருத்தனையும் அடுத்தடுத்து என்னோட சக்திகளை வச்சி துடிதுடிக்க வச்சி கொன்னேன் . முதல் நாலு பேர கொன்னுட்டு அவங்களா தூக்கு போட்டுக்கிட்ட மாதிரி வெளியுலகத்துக்கு காட்டினேன் ..அன்னிக்கு உன்னை கூட்டிட்டு வந்தப்போ வண்டில இருந்தது அஞ்சாவது ஆளோட பிணம் தான். அவனை தூக்குல தொங்க வெக்கமுடியாம போனதுல மலைல இருக்க பருந்துகளுக்கு இரையாய் மாத்திட்டேன். "


- என அனைத்தும் சொன்னவன் கொலைகாரனாக தோன்றாமல் , அசுரர்களை வதம் செய்யும் கடவுளின் அவதாரமாய் தோன்றினான் அனகாவின் கண்களுக்கு .


அண்ணனின் செயலில் சந்திரிகா ஒரு பெண்ணாய் ...இப்படி ஒருவனுடன் பிறந்ததற்கு பெருமை பட , அவன் சொல்லியதில் அனகாவிற்கு ஓர் சந்தேகம் தோன்றியது.


"ஆ..ஆறு பேர்னு சொன்னிங்க ...இன்னும் ஒருத்தன் என்ன ஆ...ஆ...னா...ன் ??" எனக் கேட்டவளின் கேள்வி சந்திராதித்யனின் முகம் ரத்த சிவப்பாய் மாறி கண்கள் கனலானதில் வார்த்தைகள் தடுமாறி தந்தியடித்தது .


ஏற்கனவே அழுதழுது சோர்ந்திருந்தவள் , இவனின் திடீர் மாற்றத்தில் தடுமாறி ஓரடி பின் வைத்து சரிய போக ,அதை பார்த்த சந்திரிகா அவளை தங்குவதற்குள் அனகாவை தன் வலக்கரத்தில் வளைத்து தன்னுடன் அணைத்துக்கொண்டான் சந்திராதித்யன் .


அவளை அணைத்தபோதும் தன் கோபத்தை கொஞ்சமும் குறைத்துக் கொள்ளாதவன் ...பற்களை கடித்தபடி , " சந்திரிகா ...! நீ அடிக்கடி சொல்வாய் அல்லவா மனிதர்கள் மிகவும் அன்பானவர்கள் என்று.. ஒரு பெண்ணை கூட்டாய் சேர்ந்து தங்களின் கீழ்த்தரமான எண்ணத்திற்கு பொறியாய் ஆக்கும் பொழுது தெரியாத அந்த **** வனின் வயது ...அவன் செஞ்சதுக்கு தண்டனை குடுக்குறப்போ சட்டத்தை மதிக்கிறவங்க கண்ல பட்டு ...அன்பு பெருக்கெடுத்ததுல அவன் பால்குடிக்குற குழந்தை , அதுனால அவனுக்கு தூக்குலாம் இல்லனு மூணு வருஷம் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளில இருக்கணும்னு முதல் நாள் கேஸ் அப்போவே சொல்லிட்டாங்க "


மனிதர்களுடன் பல வருடங்களாய் தொடர்பிலிருந்த சந்திராதித்யன் கோபத்தில் பேசிய வார்த்தைகள் பாதிக்கு மேல் சந்திரிகாவிற்கு புரிந்திருக்கவில்லை .


இப்பொழுதும் அவன் சொன்னது புரியாமல், "அந்த ஆறாவது நபர் என்ன ஆனான் ??" என்ற கேள்வியுடன் அனகாவை பார்த்தாள்.


" நீ அறியமாட்டாய் சந்திரிகா..! இந்திய சட்டப்படி ஒருவன் எந்த குற்றம் செய்திருப்பினும்.. அவனின் வயது பதினெட்டின் கீழ் இருப்பின் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளி என்னும் இடத்திற்க்கே அனுப்புவார்கள் " என அவ்வேதனையிலும் சந்திரிகாவிற்கு புரியும்படி விளக்க ,


அவள் சொல்லியதில் வியந்த சந்திரிகா , " அவ்வாறெனில் அவர்களுக்கு தண்டனை என்று எதுவுமில்லையா ??இது எவ்வாறு சரி ஆகும்" எனக் கேட்டாள் .


"அது தான் மனிதர்களின் சட்டம் சந்திரிகா. இதில் இன்னும் சிறப்பானது தண்டனை பெற்றவனை ஜாமீன் என்ற பெயரில் வெளிவிடுவது " என குறுக்கிட்ட சந்திராதித்யன் ,


"ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்த அறுவருக்கும் தண்டனை ஒன்று தான். அவன் இறப்பு என்கையால் நேர வேண்டும் என்றுதான் அவனுக்கு அந்த ஜாமீன் கிடைத்திருக்கிறது .இதுவே ஈசனின் சித்தம் போலும் "என்றவனை குறுக்கிட்டு ,


"என்ன சொல்கிறீர்கள் " என அனகாவும், சந்திரிகாவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.


"இன்று இரவு அவனுக்கான இறுதிநாள் என நான் தீர்ப்பெழுதி விட்டேன். அதை செய்தும் முடிப்பேன் " என சூளுரைத்தவன், தன் கைக்குள் இருந்தவளிடம் ,


"அனகா ...! நான் உன்னிடம் முழுதாய் என்னை ஒப்படைக்கவே எண்ணுகிறேன் ..நாளை முதல் என் ஒவ்வொரு செயல்களும் உன்னை பொறுத்தே உனக்காகவே அமையுமடி ...! அதனால் தான் நான் இத்தனை நாள் உன்னை விட்டு விலகி சென்றேன் .இன்று ஒரு நாள் உன்னை பிரிந்து செல்ல எனக்கு அனுமதி அளி.. இன்று அவனுக்கு தண்டனை அளித்த மறுநொடி நான் உன்னிடம் வந்துவிடுவேன் அனகா ..! இப்பொழுது எனக்கு விடை கொடு " என தான் செய்யபோகும் காரியத்தில் மிகவும் உறுதியுடன் கேட்டான்.


காதலை சொல்லி கைப்பிடித்த நொடியில் ஆரம்பித்து அடுத்தடுத்து அறிந்துகொண்ட விஷயங்களில் மனம் நிலைகொள்ளாமல் அலைபுற , அவன் விடைகொடுக்க சொல்லி கேட்ட நொடி அவளின் மனம் தடத்தடத்தது .


அவனுடன் மீண்டும் இணைவதற்கு நெடுநாள் ஆகும் என்பதாக ஓர் எண்ணம் தோன்ற , தன்னை தன் கைவளைக்குள் வைத்திருந்தவனை தன்னால் முடிந்தவரை இறுக கட்டிக்கொண்டாள் .


**************************************************



இரவு மணி பதினொன்றை கடந்திருக்கும் வேளை :


"நாம் இவ்வாறு அண்ணனிடம் தெரிவிக்காமல் ...அவர் சம்மதம் இல்லாமல் இவ்வளவு தொலைவு வந்தது தவறாகும் அனகா." என சுற்றிலும் கவிழ்ந்திருக்கும் இருட்டு பழகியது தான் எனினும் இதுவரை வந்திடாத மனிதர்களின் உலகில் நுழைந்ததில் சந்திரிகாவின் மனதை பயம் கவ்விக்கொண்டது .


"உனக்கு சொன்னா புரியாது சந்திரிகா...! உங்க அண்ணன் கிளம்பியதுல இருந்தே என் மனசு ஏதோ தப்பு நடக்கபோறதா பதறுது ...அதுதான் உங்க அண்ணன் நம்ப கிட்ட சொன்ன ஊருக்கே கிளம்பலாம்னு பார்த்தா என்னை தனியா விட முடியாதுனு நீயும் கூட வந்துட்ட "


-என இனி நிகழப்போகும் விபரீதங்களை அறியாமல் அவர்களின் பாதுகாப்பு கவசமாய் இருந்த அக்காட்டை விட்டு வெளியேறி நீண்டதூரம் வந்திருந்தனர் .


"ஆஆ....! என்னால இனி முடியாது அனகா..! என்னால நடக்கமுடியலை " எங்கு சென்றாலும் ￰ஊர்ந்தே சென்றிருந்த சந்திரிகா ...நடந்ததே அனகாவுடன் இருந்த வேளைகளில் தான் ...அவ்வாறு இருக்கையில் இவ்வளவு தொலைவு நடந்ததில் அவள் சோர்ந்துவிட்டாள்.


அவளின் சோர்வை கண்ட அனகா , அவ்வழியில் ஏதேனும் வண்டி வருகிறதா என பார்த்தாள்.


சிறிது நேரத்திலே ஓர் மாருதி வேகமாய் வர ..பாதையின் நடுவில் சென்று நின்றவள் வண்டியை நிறுத்தும்படி கைகளை ஆட்டினாள் .


அவள் செய்வதை கண்ட சந்திரிகா , "என்ன செய்கிறாய் அனகா??" என கேட்டபடி அவளை தொடர போக... அவ்வழியில் ஓர் கீரி பாய்ந்தோட அச்சத்தில் அலறியபடி பாதையிலிருந்து ஒதுங்கி அங்கு ஓரமாய் இருந்த மரத்தின் பின் ஒழிந்தாள்.


இவளின் சத்தத்தில் திரும்பிய அனகா , இவளின் செய்கையில் புருவம் சுருங்க , " சந்திரி்கா...!" என அழைக்க போனாள்.


அதற்குள் அவளின் அருகில் அந்த மாருதி வந்திருந்த... அதன் பின்னிருக்கையிலிருந்த ஒருவனின் கரம் அவளின் வாயை பொத்தி அவளை காருக்குள் இழுத்துப்போட கார் வேகம் எடுத்தது.


கண் இமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க சந்திரி்கா செய்வதறியாது நின்றிருந்தாள் .


அதே நேரம் அதே ஊரின் மற்றோரு மூலையில் இருந்த இடத்தில் நீண்ட நேரமாய் காத்திருந்த சந்திராதித்யன் , அவன் தேடிவந்தவனின் சுவடே அங்கு இல்லாததில் ..." இப்பொழுது என்ன செய்வது " என குழம்ப ஆரம்பித்தவனின் மனம் கரணம் இல்லாமல் வேதனையில் ஆழ்ந்தது .


அனகாவிற்கு ஏதோ ஆபத்து என்று தோன்ற விரைவாய் அவளை பார்க்கவேண்டுமென நினைத்தவன்.. நொடியில் நாகத்தின் உருவிற்கு மாறி வேகவேகமாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தான் தன்னவளை தேடி.


மனம் முழுக்க அவளின் முகமும் , அவளுடன் கழித்த நொடிகளுமே மாறிமாறித் தோன்ற தவிப்புடன் விரைவாய் சென்றுக் கொண்டிருந்தவனை தடுத்து நிறுத்தியது ஒரு பெண்ணின் வலியுடன் கூடிய முனங்கல் .


தூரத்தில் இருவர் இருசக்கர வாகனத்தில் செல்வதை கண்டவன் ஓர் நொடி அவ்வண்டியையும் , அதிலிருப்பவர்களையும் ஆழமாய் பார்த்த அவனின் கண்கள் அடுத்து முனங்கல் வந்த திசையை பார்த்தது .


மனித உருவிற்கு மாறியவன் அருகில் சென்று பார்க்க , சுற்றிலும் ரத்தம் பெறுகி இருக்க... ஆடைகள் கிழிந்து... முதுகு புறத்தின் நடுவில் தோல் வெந்து உடலை குறுக்கியபடி கிடந்த பெண்ணவளை கண்ட நொடி மனதில் ஒருவருடத்திற்கு முன்பான டாமினியின் நிலை நினைவுவர விரைந்து அவளை கைகளில் ஏந்திக்கொண்டான் .


அப்பொழுதும் இவனின் தொடுகையை உணர்ந்து பெண்ணவள் உடலை சுருக்கி முனங்க , அதை கண்டவனின் கண்களில் கண்ணீர் வழிந்து அவளின் முகத்தில் விழுந்தது .


பொசுங்கிய முகத்தினில் இவனின் கண்ணீர் பட்டு எரிச்சல் தோன்ற," ஸ்ஸ்" என்ற அவளின் முனங்களில் அவளின் முகம் பார்த்தவனுக்கு அவளின் கோலம் கண்டு மனம் கொதித்தது .


பெண்ணாய் பிறக்கும் அனைவரும் ஆண்களிடம் தோற்பதுதான் விதியோ. அந்த தோல்வி அன்பால் இருந்தால் இறுதியில் வெல்வது அவளாய் இருப்பாள் . அதே அந்த தோல்வி ஆணின் அவனின் ஆண்மையின் கர்வம் கொண்டு அமைந்தால் பெண்ணவளின் கதி இதுதான் போலும்.


எப்படியோ அவளை சுமந்து சென்ற சந்திராதித்யன் , அங்கு இருந்த ஒரே ஒரு பெரிய வீட்டை அடைந்து அவர்களின் உதவியை நாடினான் .


அங்கு சென்ற பின்பே அது ஓர் மருத்துவமனை என்றறிந்தவன் தன் கைகளில் இருந்தவளை அங்கு ஒப்படைத்தான் .


அங்கு அவளின் நிலை கண்டு இவனை ஆராய்ச்சியாய் பார்த்தவர்கள் இவனின் தோற்றத்தில் ..அவனை பற்றி தவறாய் ஏதும் தோன்றாததில் அவளை பற்றி ஏதேனும் அறிவானா ?? என கேட்டனர் .


அவனோ எதையும் கவனிக்க தோன்றாமல் தன் கைகளை பற்றியபடி இருந்த அப்பெண்ணின் கைகளையே பார்த்தவனுக்கு... அவனின் டாமினியின் நினைவே மீண்டுமாய் தோன்ற , வாய் தானாய் "டாமினி" என்றது .


-காதலாகும் ....



இறுதி அத்தியாயம் சனிக்கிழமை அன்று பதிவிடபடும் ...உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே...
 
Status
Not open for further replies.
Top